Search This Blog

4.5.13

பக்தி நம்பிக்கை பூஜை அறைக்குள் இருக்கட்டும்! முதல் அமைச்சர் எந்த பக்கம்?

முதல் அமைச்சர் எந்த பக்கம்?

2005 ஜூலை 2ஆம் தேதி மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கான கால்கோள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் செய்யப்பட்டது.

ரூ.2427.40 கோடி மதிப்பீட்டில் .உருவாக் கப்பட்ட இந்தத் திட்டம் இந்துத்துவாவாதி களால் உச்சநீதிமன்றத் தில் முட்டுக்கட்டை போடாமலிருந்தால் 2008இல் 3000 கப்பல்களும், 2025-இல் 8000 கப்பல்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். 2017இல் போட்ட  முதல் வட்டி யோடு சேர்த்து எடுக்கப்பட்டும் இருக்கும். சுப்பிரமணியசாமி என்ற பார்ப்பனப் பேர் வழி ஒருவர் உச்சநீதிமன்றத்திலே தொடுத்த வழக்கால் இடைக்காலத் தடைப்பட்டு தரை தட்டி நிற்கிறது (31.7.2007).

போதும் போதாதற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சரும் சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்று கூறி வழக்குத் தொடுத் துள்ளார் உச்சநீதிமன்றத்தில். தொடக்கத்தில் ராமன் பாலம் இடிக்கப்படக் கூடாது என்று ஆரம்பித்தவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று கூற ஆரம்பித்து விட்டார்.

2001 சட்டப் பேரவைத் தேர்தலிலும், 2004 மக்களவைத் தேர்தலிலும் இந்தத் திட்டம் தேவை என்று தேர்தல் அறிக்கைகளிலேயே திட்டவட்ட மாகத் தெரிவித்தவர்தான் - இப் பொழுது ராமன் என்னும் இந்துமதக் கற்பனைப் பாத்திரத்தின் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று, திட்டமே கூடாது என்று ராமபாணம் தொடுக்கிறார்.

ராமன் பாலம் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறார். ராமன் பாலத்தை இடிப்பது இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் என்றும் புலம்புகிறார். அது சரி, இராமன் வரலாற்றுப் பாத்திரமா? இதிகாசக் கற்பனையா? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இராமாயணம் என்பது கற்பனைக் கதை என்று நேரு அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள் ளதை தி.மு.க. தலைவர் கலைஞர் எடுத்துச் சொன்னால், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான Dr. நமது எம்.ஜி.ஆர் ஏடு நாலு கால் பாய்ச்சல் பாய்கிறது.

பக்தர்களைப் புண்படுத்துகிறார் கருணாநிதி என்று புழுதிவாரி தூற்றுகிறது.
கலைஞர் சொல்லுவது இருக்கட்டும்; தந்தை பெரியார் சொல்லவில்லையா? அறிஞர் அண்ணா கண்டனக் கணைகளை இராமாயணத்தின் மீது வீசவில்லையா?

இராமாயணத்தின்மீதும், புராணங்கள் மீதும் தீ பரவட்டும் என்று தீப்பொறி பறக்கப் பேசவில்லையா? எழுதவில்லையா? உண்மையில் கலைஞரைத் திட்டவில்லை அண்ணா திமுக _- அவர் சாக்கில் தந்தை பெரியார் அவர்களையும் அறிஞர் அண்ணா அவர்களையும் திட்டித் தீர்க் கிறார்கள் _ கேவலமான முறையில் அர்ச்சனை செய்கிறார்கள். இராமன் மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து வாலியைக் கொன்ற கோழைத்தனம் போல அ.இ.அ.தி.மு.க.வும், அதன் பொதுச் செயலாளரான முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் தந்தை பெரியார் அவர்களையும், அறிஞர் அண்ணா அவர்களையும், அவதூறு செய்கிறார். கேவலப்படுத்துகிறார். அக்கட்சியில் தப்பித் தவறி யாராவது திராவிடர் இயக்க உணர்வு உள்ளவர்கள் இருந்தால் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்! ஆம் இதுவே தான் அந்தத் தருணம்!
இன்னும் சொல்லப் போனால் அம்மை யாரை அரசியலுக்குக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரையும் அவமானப்படுத்து கிறார்; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் _ முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். (10.5.1986).

2001 மே மாதம் நடைபெற்ற தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்கூட எம்.ஜி. ஆர். எடுத்துக்காட்டப்பட்டுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சி யில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் களின் அரசுதான் கொடுத்தது. இருந் தும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு இத்திட்டத்திற்கான உரிய கவனத்தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்கவில்லை (அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 2001 மே _ - பக்கம் 84)
ஏற்றிவிட்ட ஏணியை எத்தி விடவும் தயங்கவில்லை ஜெயலலிதா அம்மையார்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது தி.மு.க.வுக்கு அரசியல் லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என்ற அழுக்காற்றுப் புயலால் அடித்துச் செல்லப்பட்டவரின் செயல்பாடுதான் இது.

அறிவியலின்படிதான் எதிர் நிற்க முடியவில்லை. அவர்கள் நம்பும் ஆன்மீகக் கண்ணோட்டப்படியே கேட்கிறோம். பதில் சொல்லத் தயார்தானா?
இராமன் கட்டிய பாலத்தை அந்த ராமனே தகர்த்து விட்டான் என்று கம்பரா மாயணமே கூறுகிறதே -_ சேது புராணமே விண்டுரைக்கிறதே - _ அதற்கு என்ன பதில்?

சேது புராணம் என்ன சொல்லுகிறது?

இராவண வதம் முடிந்து அப்பாலத்தின் வழியாக இலங்கையிலிருந்து ராமனும் அவனைச் சேர்ந்தவர்களும், விபீஷணனும் அந்தப் பாலம் வழியாக இராமேசுவரம் வந்து சேர்கின்றனர்.

அப்பொழுது இராவணனின் உடன் பிறந்து கொல்லும் வியாதியான விபீஷணன் ராமனைப் பார்த்துச் சொல்கிறான் _ இந்தப் பாலத்தை இப்படியே நீங்கள் விட்டு விட்டுச் சென்றீர்களேயானால், இலங்கையில் உள்ள கொடிய மனிதர்கள் அவ்வழியே வந்து, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொடுமைகளைச் செய்வார்கள் _ எனவே இந்தப் பாலத்தை நீங்களே அழித்து விடுவது நல்லது என்று சொல்ல, இராமனும் அவ்வாறே செய்தான் என்று சேது புராணம் சொல்லுகிறதே! பாம்பைக் கீரியானது எப்படிக் குதறி எடுக்குமோ அதுபோலவே ராமன் தன் வில்லாலே அந்தப் பாலத்தைத் தகர்த்தெறிந்தான் என்கிறதே சேது புராணம்.

இதற்கு சுப்பிரமணியசாமியும், செல்வி ஜெயலலிதாவும் என்ன பதில் சொல்லு வார்கள்? பிஜேபியும் சங்பரிவார்க் கும்பலும் இதற்குத் தங்கள் கை வசம் வைத்திருக்கும் பதில் தான் என்ன?

மத நம்பிக்கை என்று வந்துவிட்டால் அதன் அடிப்படையில் எழுப்பப்படக் கூடிய கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டாமா?

கம்ப இராமாயணம் யுத்த காண்டம் மீட்சிப் படலம்
மரக்கல மியங்க வேண்டி வரிசிலைக் குதையாற் கீறித்
தருக்கிய விடத்துப் பஞ்ச பாதக ரேனுஞ் சாரிற்
பெருக்கிய வேழூ மூன்று பிறவியும் பிணிக ணீங்கி
நெருக்கிய வமரர்க் கெல்லா நீணிதி  யாவரன்றே

(இ-_ள்). மரக்கலங்கள் (கடலில் இங்குத் தடையின்றிச்) செல்ல விரும்பிக் கட்டமைந்த வில்லின் நுனியினாற் கீறி (நான்) உடைத்துத் தள்ளிய இவ்விடத்திற் பஞ்ச மகாபாதகர்கள் வந்து  மூழ்கினாலும், (அவர்கள்) ஏழு என்னும் எண்ணினாற் பெருக்கின மூன்று (இருபத்தொரு) பிறப் புக்களிலும் வியாதிக ளில்லாமல் கூட்டமான எல்லாத் தேவர்கட்கும் பெருஞ் செல்வம் போலப் பாராட்டத்தக்கவராவர் (எ--_று).

இராமன் புஷ்பகத்தின்மீது ஏறிச் செல்லுகையில் கடலில் அவ்விடத்து மரக் கலங்கள் இடையே இனிது செல்லுதற் பொருட்டுத் தனது வில்லின் நுனியாற் சேதுவைக்கீறி யுடைத்து வழிவிட்ட வரலாற்றை விதிமுகத்தாற் கூறாது அநுவாதமுகத்தாற்கூறிப் பெற வைத்தார். இக்காரணத்தால், இவ்விடம் தனுஷ்கோடி யெனப்படும். தருக்கிய சிதைத்த பஞ்சமகா பாதகர் - _ கொலை, பொய் சொல்லுதல், களவு, குடித்தல், குரு நிந்தை என்ற அய்ந்து பெரும் பாவங்களைப் போக்கும் இடம் என்று கூறப்பட்டுள்ளதே!  இவ்வளவு தெளிவாக பாலம் இராமனால் அழிக்கப் பட்டது என்று கம்பர் கூறியபிறகு, ராமன் பாலம் எங்கே இருந்து குதித்ததாம்?.

சு.சாமியின் மனைவி திருமதி ரோக்ஸ்னா என்பவர் குமுதம் வார இதழுக்குப் (23.5.2007) பேட்டி ஒன்று அளித்தார் _- அவர் ஒரு வழக்கறிஞரும் கூட!
நம் புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் இல்லை; - அவற்றில் சொல்லப் படுகிற பலவற்றிற்கு உறுதியான அடிப்படை இருக்கிறது. வலுவான ஆதாரங்கள் இல்லாமல் இவ்வளவுப் பரம்பரையான செய்திகள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என்று குறிப்பிட்டார்.

நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதற்கு இந்தக் கூற்று ஒன்று போதாதா? சு.சாமியின் மனைவியாயிற்றே! வேறு எந்த நாக்கால் பேசுவார்?

இவ்வளவையும் கூறிவிட்டு, இராமனால் தான் பாலம் கட்டப்பட்டது என்பதற்குத் தன்னிடம் எந்தவித ஆதாரமும் இல்லை என்று சொன்னதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவை!

பாரதியார் ஒன்றும் நாத்திகவாதியல்ல -_- இந்து மத எதிர்ப்பாளரும் அல்ல.
அவர் என்ன சொல்லுகிறார்? 

கடலினைத் தாவும் குரங்கும்
வெங்கனலிற் பிறந்ததோர்
செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததாலே
தெற்கில் வந்து சமன் செய்யும்
குட்டை முனியும்
நதியில் மூழ்கிப்போய்
அந்த நாகர் உலகினிலோர்
விதியுறவே பாம்பின் மகளை
மணம் செய்த திறல் வீமனும்
கற்பனை என்பது கண்டோம்
கவிதைமிக நல்லதெனினும்
அக்கதைகள் பொய்யென்று
தெளிவுறக் கண்டோம்

என்று பாரதி கடலினைத் தாண்டிய குரங்கின் கதையை நையாண்டி செய்துள் ளாரே _- பதில் என்ன? அமெரிக்காவின் நாஸா விண்வெளி மய்யம் ராமன் பாலம்பற்றி படங்களை வெளியிட்டதாக இண்டோ லிங்க்காம் - வைஷ்ணவ நிறுவன நெட் ஒர்க் எனும் இணையதளம் வெளியிட்டது. (சு.சாமி போல பலரும் இருக்கத்தானே செய் வார்கள்?).

இதுகுறித்து சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி சென்னையில் அளித்த பேட்டியில் (28.7.2007) ஒரு தகவலை வெளியிட்டார்.
நாஸா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டார்
நீங்கள் வெளியிட்ட படத்தால் இங்கு பிரச்சினை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப்பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? அல்லது இந்தியப் பெருங்கடல் முழுவதும் நிலப்பரப்பாக இருந்து கடலில் மூழ்கி மிச்சமிருக்கும் மலைப் பகுதியா? என்று கேட்டு 28.7.2007 அன்று நாஸாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

அன்று மாலையே நாஸாவிலிருந்து பதிலும் வந்தது. இந்தியா _- இலங்கையி டையே உள்ள ஆதாம் பாலம் இயற்கை யான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டு தான் என்று தெரிவித்து விட்டனரே!

கெட்டிக்காரன் புளுகுக்கே எட்டுநாள் தான் என்றால் இவர்களின் புளுகு எம்மாத்திரம்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் இரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்த வழக்கு நடைபெற்றது.

நீதிபதி இரவீந்திரன் ஒரு வினாவை எழுப்பினார்: நாம் பூமியைத் தாயாக வணங்குகிறோம். அதனால் அதனைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல; இமயமலையை நாம் வணங்குகிறோம். அதனால் இமாலயத்தைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல; கோவர்த்தன மலையை நாம் வணங்குகிறோம். அதனால் கோவர்த்தன மலையில் எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. சேது பாலத்தை தேசியப் பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வையுங்கள் _ மேலும் ஒரு வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. நீளத்திற்கு இருக்க முடியுமா? என்ற வினாவை எழுப்பினாரே! (6.5.2008)

இவர் என்ன விடுதலை ஏட்டின் ஆசிரியரா? கடுகளவு புத்தியுள்ள எவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள். சு.சாமிகள் சிந்திப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

சென்னை அய்.அய்.டி.யின் கடல்சார் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஆர். சுந்தரவடிவேலு, பேராசிரியர் எஸ்.பி. சுப்பிர மணியன் கூறிய அறிவியல் தகவல்களை வெளியிட்டது விடுதலையல்ல அவாளின் கல்கி (17.6.2007) ஏடு தான் விலாவாரியாக வெளியிட்டது.

கடல் என்பது பல ஆச்சரியங்களை தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கிறது. மலைகள் பள்ளத்தாக்குகள், ஓடைகள் என்று பல உள்ளன. கடலுள்ளும், கரையை ஒட்டிய பகுதிகளிலும் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை குறிப்பிடத்தக்க இரண்டு மாற்றங்கள், மேடு தட்டுவதும், அரிப்பு ஏற்படுவதும் இவை நடைபெறுவதற்குக் காரணம் காற்றோட்டம் அவற்றின் வேகம் மற்றும் நீரோட்டம், கடல் பகுதியில் இவையெல்லாம் தொடர் நிகழ்வு கள் ஒரு காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் என்கிற நகரம் இருந்தது. ஆனால் அரிப்புக் காரணமாக உள் வாங்கியதில் நகரம் மூழ்கிப் போனது. இப்போது நிலத்தில் மிக உள்வாங்கியிருக்கும் அரியலூர் பகுதியில் கடல் இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கடல் வாழ் உயிரினங்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. அதேபோல துவாரகா பகுதியில் கடலுக்குக் கீழே பல கட்டடங்கள் இருப்பது அகழ்வாரய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மேடுகள் ஏற்படுவதன் காரணமாக வங்கதேசத்தின் தெற்குப் பகுதியில் புதிதாக ஒரு தீவே உருவாகியிருக்கிறது அரிப்பின் காரணமாக நமது தரங்கம்பாடி கடலையொட்டி நிலப்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடலுக்கு அடியில் உள்ள பூமித் தட்டுகள் மோதிக் கொள்ளும்போது பூகம் பம் ஏற்படுவதுடன், கடலும் கொந்தளித்து விடுகிறது. அப்போது புதிதாக சில நிலப் பகுதிகள் கடலுக்குள் உருவாகின்றன. நீண்ட கோடாக காட்சியளிக்கும் அந்த மான் தீவுகூட இப்படிப்பட்ட நிகழ்வுகளால் உருவாகியிருக்க வேண்டும். சில இடங்களில் கடல் மட்டம் குறையும்போது நீருக்குள் இருக்கும் மலைகள் வெளிப்பட்டு கால போக்கில் அவை நிலப்பகுதிகளாகி விடுகின்றன. வங்காள விரிகுடா கடலில் முதலில் மணற்பகுதியும், அதன் பிறகு களிமண் பகுதியும், அதற்கடியில் பாறைகளும் இருக்கின்றன. நமது தமிழகத்தின் தென் பகுதியையும், இலங்கையையும் ஒன்றோடு ஒன்று இணைத்து வைத்துப் பார்த்தால் மிகச் சரியாகவே பொருந்தி வரும். ஒரு காலத்தில் இரண்டு பகுதிகளும் ஒன்றா கவே இருந்திருக்கக் கூடும். காலப் போக் கில் கடல் இரு நிலப் பகுதிகளாக அந்தப் பகுதியைப் பிரித்திருக்கலாம்.

இப்போது இராமன் பாலம் என்று சொல் லப்படும் நீண்ட மேட்டுப் பகுதி அப்போது தான் உருவாகியிருக்க வேண்டும். இந்த மேட்டுப் பகுதியானது தனுஷ்கோடியி லிருந்து இலங்கையில் உள்ள மன்னார் தீவு பகுதி வரை இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல கடலுக்குள் ஏற்பட்ட மாற்றங்களால் இயற்கையாகவே உருவான மேட்டுப் பகுதிதான் இது. செயற்கையான மனிதர்களால் உருவாக் கப்பட்டது என்றால், கடலுக்குள் நீண்ட காலம் சேதம் அடையாமல் இருக்க முடி யாது. அது இயற்கையா, செயற்கையா என்பதை அந்தப் பகுதி மண் பரிசோதனை மூலமாகவே சுலபமாகக் கண்டறியலாம்.

சுற்றுச்சூழல், திட்டச் செலவு ஆகிய வற்றை கணக்கில் எடுத்துக் கொண்டே சேது சமுத்திரத்தில் கால்வாய் வெட்டப்படு கிறது. இப்போது அதன் போக்கை மாற்ற வேண்டும் என்பது சரியல்ல. ஏற்கெனவே அந்தப் பகுதியில் உள்ள பவள பாறைகள் பாதிக்கப்படக் கூடாது என்று கால்வாயின் பாதை சிறிது மாற்றி அமைக்கப்பட்டிருக் கிறது. சுற்றுச்சூழல் நிறுவனங்கள் திட்டத் துக்கு அனுமதி கொடுத்திருக்கின்றன. உலக அளவில் சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பா.ஜ.க. அரசாங்கம் இருந்தபோதே அனுமதி கொடுக்கப்பட்ட திட்டம். இது நிறைவேற்றப் பட்டால் தென் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் சிறங்தோங்கும்

இவ்வாறு சொல்பவர்கள் மீது என்ன முத்திரை குத்த உத்தேசம்?
பி.ஜே.பி. ஆட்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி அம்மையாரின் ஏற்பாட்டின்படி புவியியல் துறையினரால்(Geological Survey)  ராமன் பாலம் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது அந்த மணல்மேடு மனிதனால் கட்டப்பட்டதல்ல. மனிதனால் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது (Hindu 19.9.2007) என்று தெரிவிக்கப்பட்டதே!

உமாபாரதியையும் எந்தப் பட்டியலில் சேர்க்கப் போகிறார்கள்? வெறும் மணல் மேடு _ மனிதனால் கட்டப்பட்ட பாலம் அல்ல என்று அறுதியிட்டுச் சொன்ன புவியியல் பொறியாளர்களையும் பழி கூறப் போகிறார்களா?

முதல் அமைச்சர் ஒன்றை நினைக்க வேண்டும். அண்ணா பெயரையும், திராவிட என்ற இனச்சுட்டு பண்பாட்டுப் பெயரையும் கட்சியில் அதிகாரப் பூர்வமாக வைத்துக் கொண்டு, அதற்கு முரண்பாடாகவும், அண்ணாவைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதற்கு செல்வி ஜெயலலிதாவுக்கு உரிமை கிடையவே கிடையாது! ராமன் பாலத்தை இடிப்பது குற்ற மல்ல; ராமன் பெயரால் பாலம் இருப்பது தான் மகா குற்றம்.
காரணம் இராமாயணம் என்பது ஆரியர் -_ திராவிடர் போராட்டம் பற்றிச் சித்தரிக்கக் கூடிய காவியம்; சம்பூகன் என்பவன் சூத்திரன் தவம் செய்ததால் _- அது வருணா சிரமத்துக்கு விரோதம் என்று கூறி ராமன் அவனை வாளால் வெட்டிக் கொன்றான்.

இந்த இடத்தைத்தான் பெரியாரும், அண்ணாவும் மிக அழுத்தமாகச் சுட்டிக் காட்டி நமக்கு விளக்கம் தந்தார்கள்.

இந்த வரலாறு எல்லாம் ஜெயலலிதா அம்மையா ருக்குத் தெரியுமா?
கடைசியாக ஒரு கேள்வி; செல்வி  ஜெயலலிதா இராமாயணப்படி ஆரியர் _ திராவிடர் போராட்டத்தில் எந்தப் பக்கம்? அண்ணா பக்கம் என்றால் அந்த இராமன் பாலத்தை இடிக்கச் சொல்லுங்கள் -_  இல்லை என்றால் திராவிடர் இனத்தவர்கள் உங்களை எப்படி தீர்மானிப்பார்கள்? சிந்திக்கவும்.
******************************************************************
 
பக்தி நம்பிக்கை பூஜை அறைக்குள் இருக்கட்டும்! 

இராமாயணம் எழுதப் பட்டதே கி.மு. 400 என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது 17 லட்சத்து 25,000 ஆண்டுகளுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் என்பது அண்டப்புளுகு அல்லவா!

மனிதன் தோன்றியது எப்பொழுது? பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண் டென்றாலும் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றவில்லை என்பது மட்டும் நிஜம். மனிதப் புல் பூண்டு முளைக்காத காலத்திலேயே ராமன் மனித அவதாரம் எடுத்துப் பாலம் கட்டினானா?

இலங்கைத் தீவு பிளவுபட்டது 9000 ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்படும் நிலையில், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டும் கேள்வியே எழவில்லையே!

பக்திக் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் அதனை நம்பும் மூடமக்கள் இருக்கக் கூடும். இது பகுத்தறிவு உலகமாயிற்றே. எதற்கும் நிரூபணம் கேட்கும் காலமாயிற்றே!

மதுரையிலே ராமசேது பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரால் கூட்டம் போட்டு விசுவ ஹிந்து பரிசத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியாவும், இந்து முன்னணி  மாநில அமைப்பாளர் ராம. கோபாலனும் என்ன பேசினார்கள் (22.7.2007)?

ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை, அதைப் பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று பேசினார்களே!

நம்பிக்கை என்பதை எல்லாம் வீட்டுப் பூஜை அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர  பொதுவுக்குக் கொண்டு வந்தால் ஏற்க முடியுமா?

காஞ்சி சங்கர மடம்கூட காத்தவராயனின் தாத்தாவுக்குச் சொந்தமானதுதான்; தாத்தா என் கனவில் வந்து சொன்னார் என்று காத்தவராயன் சொன்னால், காஞ்சி மடம் ஏற்றுக் கொள்ளுமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் _- மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துக் கடலில் குதித்தான் என்ற கதையை உங்கள் புராணத்துக்குள் பூட்டி வைத்துக் கூத்தடிக்கலாம்; அதுதான் உண்மை -_ பாடத் திட்டத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் வாயால் சிரிக்க முடியுமா?

ஏழு குதிரைகளைப் பூட்டி சூரியன் பூமியைச் சுற்றி வந்தான் என்பீர்கள் சூரியனைப் பழம் என்று கருதி அனுமான் விழுங்கினான் என்று கதை அளப்பீர்கள் _ குந்திதேவி சூரியனைப் புணர்ந்து பிள்ளை பெற்றாள் என்று எழுதி வைப்பீர்கள் இது எப்படி என்று கேட்டால் எங்கள் நம்பிக்கை _ - கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லுவீர்கள் _ பகுத்தறிவுள்ள மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

பகுத்தறிவா? கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் எப்படியோ நம்பித் தொலையட்டும்; அதனைப் பொதுக் கருத்தாகத் தீர்மானிக்க முண்டா தட்ட வேண்டாம் என்பதே நமது நிலைப்பாடு!

 ------------------------------------------------------- மின்சாரம் அவர்கள் 04-05-2013 “விடுதலை”ஞாயிறுமலரில்  எழுதிய கட்டுரை

24 comments:

தமிழ் ஓவியா said...


நடுவண் அரசு கவனிக்குமாவணக்கம், டில்லியில் உள்ள நடுவண் அரசு தனது 50 லட்சம் ஊழியர்களுக்கும் 30 இலட்சம் ஓய்வு ஊதியர்களுக்கும் பஞ்சப்படியை 72 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயர்த்தியுள்ளது. (நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் 19.4.13)

பொருள்களின் விலைகள் உயரும் போதெல்லாம் நடுவண் அரசு தன் ஊழியர்களுக்கு பஞ்சப்படியை உயர்த்தி ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 120 கோடி மக்கள் வாழ்கிறார்கள். நடுவண் அரசின் ஊழியர்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் சராசரி 5 நபர்கள் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 4 கோடி பேர் நடுவண் அரசு ஊழியர் களின் குடும்பங்களில் வாழ்கிறார்கள். மீதமுள்ள 116 கோடி பேருக்கு நடுவண் அரசு விலை ஏற்றத்தைச் சமாளிக்க என்ன உதவி செய்யப்போகிறது?

இந்தியாவில் விவசாயத்தை நம்பி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வாழ்கின்றனர். விவசாயம் பருவ மழையை நம்பி செய்யப்படும் தொழில். இந்த ஆண்டு தமிழகத்தின் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல் லாததால் தஞ்சை, திருச்சி மாவட்டங் களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாவியாகி உழவர் களுக்குப் பல்லாயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 15-_க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆயிரக்கணக்கில் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு நடுவண் அரசோ, மாநில அரசோ என்ன உதவித் தொகை கொடுக்கப் போகிறது?

உலக வங்கி (World Bank) தனது அறிக்கையில் உலகில் 120 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்வதாக கூறி யுள்ளது. (நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - பக்கம் 9 - 19.4.13). நாள் ஒன்றுக்கு 120 கோடி பேர் 3.65 சதவீதத்திற்கும் குறைவான வருவாயில் வாழ்கிறார்கள். இந்த 120 கோடி பேரில் இந்தியாவில் மட்டும் 40 கோடி மக்கள் ஏழ்மையில் வாடு பவர்கள் என்று தனது அறிக்கையில் கூறுகிறது.

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இலட்சக் கணக்கான மக்கள் பச்சிளம் குழந்தை களோடு நடை பாதைகளில் வாழ்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இம்மக்களுக்கு இந்தியா போன்ற பொதுநல அரசு (Welfare State) உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, கல்வி போன்ற அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இந்திய அரசால் இந்தப் புனிதமான இலட்சியத்தை இன்னும் நிறைவேற்ற இயலவில்லை.

1930 ஆம் ஆண்டு மே 10, 11 நாட் களில் ஈரோட்டில் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் 2ஆவது மாநில மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட் டில் அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ. 1000-_-க்கும் மேல் மாத ஊதியம் கொடுக்கக்கூடாது என்று சமதர்ம தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! தற்போதுள்ள சமூக, பொருளாதார சூழ்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ. 50,000-_க்கும் மேல் மாத ஊதியம் வழங்கக்கூடாது என்று சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

பண்டித நேரு சமதர்மக் கொள் கையை வலியுறுத்தி தனி நபருக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்துரிமை இருக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார். நடுவண் அரசும், மாநில அரசுகளும் விலை ஏற்றத்தின் போது தங்கள் ஊழியர்களுக்கு பஞ்சப்படியை உயர்த்திக் கொடுப்பது போல் மற்ற மக்களுக்கும் விலை யேற்றத்தின் போது தக்க பரிகாரம் அளிக்க வேண்டும்.

- இர.செங்கல்வராயன், முன்னாள் துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு.

தமிழ் ஓவியா said...


சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!


சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.

அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.

அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
பிற்காலச் சோழர் சரித்திரம்
பகுதி பக்கம் 79-_80

தமிழ் ஓவியா said...


அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


கர்ப்பக்கிருகப் போர்ப்படையில் 18.10.69 - முதல் பதிவு செய்து கொண்டார்கள். சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் தொடங்குவது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும். 17.1.70 -முதல்வர் கலைஞர் அறிக்கை 19.1.70 - போரின் வெற்றி. 12.3.70 - கர்ப்பக் கிருகக் கிளர்ச்சி வெற்றி. 30.11.70 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது. கிளர்ச்சியை ஒரு சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்தல். 1974 சனவரி 26ஆம் தேதிக்குள் பதில் எதிர்பார்த்தல். 3.3.74 இழிவு ஒழிப்புக்கிளர்ச்சி முதல் கட்ட தேதி அறிவிப்பு. 15.3.74 போராட்ட வீரர் பட்டியல். 3.4.74 தந்தைக்குப் பின் முதல் போராட்டம். 8.4.74 சட்டமன்றத்தில் நமது போராட்ட எதிரொலி. 15.4.74 சட்டமன்றத்தில் அர்ச்சகர் சட்ட தீர்மானம். 2.5.74 டில்லியில் நமது குரல். 20.8.74 டில்லி அரசு பரிசீலனை. 4.5.75 கோயில் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. 2.8.75 கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி அம்மா அறிக்கை. 18.9.77 அ.தி.மு.க. வைத்த அய்யா சிலை. 4.6.78 திருச்சியில் மத்திய கமிட்டி பிறவி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே எப்போதும் குறியாக இருக்கும். பார்ப்பனர்கள் பன்னிரெண்டு பேர் உச்சநீதிமன்றத்திற்கு படையெடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அர்ச்சகர் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் ஒரு தீர்ப்பினைப் பெற்று விட்டனர்.

நீதிபதி மகராசன் குழு

14.8.82 தஞ்சையில் மாநாடு. 24.8.82 வேண்டுகோள் அறப்போர் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் குழு. 17.9.91 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. 16.5.98 ஈரோட்டுத் தீர்மானம். 24.4.1999 போராட்ட அறிவிப்பு ஆபரேஷன் வெற்றி ஆனால் நோயாளி செத்தார்.

டாக்டர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்

அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும் அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப் பட்டார்!
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை ஜாதிக் கலவரமும் வரக் கூடாது மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி
மதுரை, மே 4- தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை, ஜாதிக் கலவரமும் வரக்கூடாது என மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி யளித்தார்.

இதுகுறித்து நேற்று (3.5.2013) மதுரையில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது: மரக்காணம் கலவரம், திட்டமிட்டு ஜாதி வெறியை முன்னிலைப்படுத்தி அரசியலில் வாக்கு வங்கியை பலப்படுத்த சில தலைவர்கள் எடுத்த தவறான நிலை. இது தவிர்க்கப்பட வேண்டும். ஜாதியை இட ஒதுக்கீட்டில் மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை இடஒதுக்கீட்டு படிக்கட்டாகப் பார்க்காமல், காவடியாகத் தூக்கி பெருமை அடையக் கூடாது. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. தொடர்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழ தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் இங்கு மதவெறி மாய்க்கப்பட்டது, அதன் பின்னர் ஜாதி அரசியலை கொண்டு வந்தனர், அது தேவையில்லை. இங்கு மதக்கலவரம் வருவதில்லை. அதேபோல் ஜாதிக்கலவரமும் வரக் கூடாது.

வன்முறை வேண்டாம்!

வன்முறையால் எதையும் சாதித்து விடமுடியாது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களைத்தான் பாதிக்கும். அதில் அப்பாவி மக்களை பலியிடக்கூடாது. தமிழகத்தில் எப்போதும் ஜாதி அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. இந்தக் கருத்துகளை தெளிவாக மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நாட்டை விட்டே...


நாட்டில் பார்ப்பனர்கள் களைச் செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவை இல்லாத களைச் செடிகள் இருப்பதால் பயிருக்குச் சேதம் என்று கருதிக் களைச் செடியை அகற்று கிறோமோ அதுபோல் நாட்டிற்குச் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டைவிட்டே அகற்றிவிட வேண்டும்.
(விடுதலை, 10.7.1961)

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. காட்டில் பண மழை!


குஜராத் மாநிலம் ஜீனகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கோசாலை அமைத்துள்ளது. பசுக்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பு கடந்த சனியன்று (27.4.2013) விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவில் குஜராத் மாநில அமைச்சர்கள், மாநில பா.ஜ.க. தலைவர் கட்சியின் முன்னணியினர், பெரும் பணக் காரர்கள் எல்லாம் பங்கு கொண்டனர்.

அமைச்சர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் பிஜேபி தொண்டர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசிப் பண மழை பொழிந்தனராம். அதனைக் கண்டு அமைச் சர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்களாம்.

கோசாலைக்கும் நிறைய நன்கொடைகளை அமைச்சர்களும், பிரமுகர்களும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து என்.டி. டி.வி. தெரிவித்துள்ள செய்தி மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள கிராமங்கள் கடுமையான வறட்சிக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பகுதியில் இயற்கை மழை பொழியவில்லை என்பதற்காகப் பண மழையைப் பொழிய வைத்துள்ளனர் போலும்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிஜேபி ஆட்சி யும், அமைச்சர்களும், பிஜேபி பிரமுகர்களும் எத்தகைய மனப்பான்மையில் குளிர் காய்கின் றனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி மேல் தட்டு மக்களுக்கான ஆட்சி, நகர்ப்புற மக்களுக்கான ஆட்சி என்ற விமர்சனம் உண்டு.

பார்ப்பன மற்றும் இந்துத்துவா ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து - இந்தியா விலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலம் தான் என்று விளம்பரக் காற்றை ஊதி ஊதி ஆகாயத்தில் பறக்க வைக்கின்றனர். உலகம் விளம்பரத்துக்குக் கட்டுப்பட்டது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத் துள்ளவர் நரேந்திரமோடி.

சவுராஷ்டிரா மாநிலத்தில் சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் கோதாவரி முதலிய கிராமங்கள் வறட்சியின் உச்சக் கட்டத்தில் உள்ளன.

ஊருக்குப் பொதுவான தண்ணீர்த் தொட்டி யில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கொளுத்தும் கொடிய வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரைச் சுமந்து வரும் அவலநிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் குஜராத்தின் உண்மையான நிலை. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் இருக்கிறது என்று வக்கணையாகச் சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

கிராமத்தின் உண்மை நிலையோ இந்தப் பரிதாப நிலையில்தான் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு சோமாலியா என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த நிலையைப்பற்றி செய்தி வருகிறது.

என்ன கொடுமை இது! தனது மாநிலத்தில் உண்மையான நிலையை மறைத்து, பொய்யாக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கக் கூடிய ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் துணிவு எங்கிருந்து குதித்தது?

பொய்ப் பேசுவதிலும், பொய்யைப் பரப்புவ திலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களை வெல்ல உலகில் யார் தான் இருக்க முடியும்?

பண மழை பொழியும் அளவுக்கு பா.ஜ.க. வினர் அங்கே இருக்கிறார்கள் என்றால் ஆட்சி அதிகாரம் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

தமிழ் ஓவியா said...


பதிப்பாளர்களின் பார்வையில் சென்னை புத்தகச் சங்கமம்!

- வி.சி.வில்வம்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ஏப்ரல் 18 தொடங்கி 27 முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சென்னை புத்தகச் சங்கமம் எனும் அந்நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. அறுபதுக்கும் மேற் பட்ட பதிப்பாளர்கள் பங்கு பெற்றுச் சிறப்பாக்கினர். தினமும் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடி சிந்தனைச் சுகம் கண்டனர். இந்தச் சென்னை புத்தகச் சங்கமத்தின் முதல் ஏற் பாட்டை பதிப்பாளர்கள் எப்படி பார்க் கிறார்கள்? புத்தக உலகில் பேராற்றல் கொண்டவர்களின் எண்ணங்களாக இந்தப் பதிவு அமைகிறது. பங்கேற்ற அனைவர் சார்பாக நால்வர் பேசியதின் தொகுப்பு.

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன் புகழேந்தி!

எனது தந்தை வே.சுப்பையா அவர்கள் 1968 - இல் பூங்கொடி பதிப்பகத்தைச் சென்னையில் தொடங்கினார்கள். அப்போது என் வயது 13. படித்துக் கொண்டே பதிப்புத் துறையிலும் வேலை செய்தேன். அன்றி லிருந்து 40 ஆண்டுகளைக் கடந்து விட்டேன். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பை 2000-த்தில் தொடங்கினேன். எங் களின் முதல் வெளியீடு "இனியெல் லாம் இன்டர்நெட்". அதைத் தொடர்ந்து 200 - க்கும் மேலான நூல்கள் வரப் பெற்றன. வெளியீடுகளின் எண்ணிக் கையில் எனக்கு உடன்பாடில்லை. புத்தகங்கள் கனமான விசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். தரம் பேணுவதில் எப்போதும் நான் உறுதி யாய் இருந்திருக்கிறேன். அவ்வகையில் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் வெளியீட்டுக்கான முதல் பரிசை, பத்து முறைக்கு மேல் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டின் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் நாங்கள் இடம் பெறு வோம். எங்களின் மொத்த விற்பனை யில் 25 விழுக்காடு கண்காட்சி மூலம் கிடைக்கிறது. பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி என்றதும் முதலில் சந்தேகம் வந்தது. காரணம் கட்சி சார்ந்து காணப்படுமோ என்கிற தயக்கம். ஆனால் நான் நினைத்ததில் ஒரு விழுக்காடும் உண்மையில்லை.

பொறுப்பேற்ற நோக்கத்தை மிகச் சிறப்பாக முடிக்கிறார்கள் பெரியார் தோழர்கள்.

வேறுபாடுகள் இல்லாமல் பழகுகிறார்கள். திணிப்பு என்பதை எங்கும் காண முடியவில்லை. கண்காட் சியில் நவீன தொழில்நுட்ப அறிவு என்னை அசர வைத்தது. நாம் ஏதாவது கோரிக்கைகள் வைத்தால் பணிவுடன் ஏற்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, முடிவும் அறிவிக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக் குறைவு. உலகப் புத்தக நாளை முன்னிட்டு இதைச் செய்தது புத்தகங் களுக்கான மரியாதை. கண்காட்சி களில் பதிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்றது இதுவே முதன்முறை ஆகும். கண்காட்சி விளம்பரங்களில் வித்தியாசமான கவனம் தெரிந்தது. பதிப்பாளர்களின் மேம்பாடு குறித்த பயிற்சிப் பட்டறை பலரையும் சிலிர்க்க வைத்தது. சமூக நோக்கம் என்பதில் இவையெல்லாம் அடங்கும். கண்காட்சிகளின் ஒரு சில சிறு குறைகள் இருந்தாலும், முதல் ஏற்பாடே மனதில் பதிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா மதன்ராஜ்!

தமிழ் ஓவியா said...


புத்தகத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா முழுவதும் கண்காட் சிகளை ஊக்குவிப் பதுதான் நேஷனல் புக் டிரஸ்ட் நோக் கம்.

ஆண்டுக்கு 15 முதல் 20 கண் காட்சிகள் நடத்துவோம். தமிழ்நாட்டில் இதுவரை கண்காட்சி நடத்தியதில்லை. முதன் முறையாக பெரியார் புத்தக நிலையத்தோடு இணைந்திருக்கிறோம். தொடக்கமே நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. எங்கள் நிறுவனம் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டின் கீழ் வருகிறது. இந்தக் கண்காட்சியில் எண்ணற்ற நூல்களையும், வித்தியாச மான பார்வையாளர்களையும் காண முடிந்தது. சில கண்காட்சிகள் திருவிழா மாதிரி இருக்கும். விற்பனை இருக்காது. இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. எனினும் வந்தவர்கள் எல்லோரும் வாங்கினார்கள் என்பது புது அனுபவம். எங்களுக்குத் தினமும் 15 ஆயிரம் விற்றதில் மகிழ்ச்சி ! காரணம் சிறு இடம், புது இடம். அதுவும் இவ்வளவு குறைந்த வாடகையில் அரங்கு கிடைப்பது எளிதல்ல.

தமிழ் ஓவியா said...

சின்ன விசயங்களும் நேர்த்தியாக இருந்தன. நுழைவாயிலில் இரு இளம் பெண்கள் எல்லோரையும் வரவேற்றதை நெகிழ்வாகக் கருதுகிறோம். சக மனிதர் களைப் பெருமைப்படுத்துகிற செயல்கள் அவை. புத்தக விற்பனை என்பதையும் கடந்து குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறை, கண் பரிசோதனை போன்றவை சமூகச் சிந்தனையை வெளிப் படுத்தின. பதிப்புத் துறையில் பல ஆண்டுகள் இருப்போரே பயிற்சிப் பட் டறை கண்டு அசந்துதான் போனார்கள். அதேபோல மாலை நேரக் கூட்டங்களில் "புகழ்பெற்ற" மனிதர்களை அழைக்கா மல், புத்தகம் அறிந்த மனிதர்களைப் பேச வைத்து நிகழ்ச்சிக்குப் பொருள் கூட்டி னார்கள். பொதுவாக மாலை நேர நிகழ்ச்சி களில் ஒரு மினுமினுப்புக் காட்டுவார்கள்.

அம்மினுப்பில் நோக்கம் சிதைந்து விடும். இங்கு அதுபோன்ற சிதைவுகள் இல்லை. இன்னும் அழகாகச் சொல்வ தென்றால், ஏற்பாடுகள் முழுவதிலுமே ஒரு இயல்பு தெரிந்தது. இயல்பான செயல்களும், அதே மாதிரியான மனிதர் களுமே இவ்வெற்றிக்கான ஆதாரம். கண்காட்சியில் லாபம் இல்லாவிட்டாலும், நட்டம் ஏற்படக் கூடாது. அப்போதுதான் தொடர்ந்து செய்ய முடியும். நுழை வாயிலில் வளைவு ஒன்று வைத்திருக்க லாம். புத்தக வங்கித் திட்டத்தில் புத்தகம் கொடுப்பவர்களுக்கு மாற்றாக வேறு புத்தகம் கொடுக்கலாம். அதன் மூலம் ஈடுபாடுகள் அதிகமாகலாம். மொத்தத் தில் புத்தகக் கண்காட்சிகளின் முன் னோடியாக நிகழ்ச்சிகள் அமைந்திருந் தன. எல்லா விசயமும் இருப்பது மாதிரி பார்த்துக் கொண்டார்கள். மகிழவும், நெகிழவும் நிறைய இருந்தன. எமரால்ட் பதிப்பகம் ஒளிவண்ணன்!

எனது 12 வயதில் மெய்ப்பு திருத்தத் தொடங்கினேன். 1982 - இல் பதிப் பகம் தோற்று வித்தேன். புத்தகங்களோடு 28 ஆண்டுகள் முடிந்தி ருக்கிறது.

தமிழ்நாட்டின் பல இடங்களிலும், இந்தியாவின் சில இடங்களிலும் கண் காட்சியில் பங்கேற்றுள்ளோம். உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் பிராங்பர்ட் கண் காட்சியில் பார்வையாளனாக போய் வந்தேன். உலகின் அனைத்து நூல்களை யும் அங்கு பார்க்கலாம். புத்தகங்களோடு எழுத்தாளர்களும் இருப்பார்கள். வாசகர் கள் அவர்களைச் சந்தித்து ஆரோக்கிய மாய் பேசிக் கொள்வார்கள். சென்னை புத்தகச் சங்கமம் மூலம் கல்வியாளர்கள் - பதிப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்குமான தேவைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நல்ல தொடக்கமாக அது அமைந்தது. கண்காட்சியில் விற் பனை மட்டுமே வெற்றி அல்ல. அதைக் கடந்து நிறைய இருக்கிறது. புத்தக வாசிப்பை உருவாக்குவதும், அதனைத் தூண்டிவிடுவதும் அவசியத் தேவையாகும். ஏப்ரல் 21 இல் கடற் கரையில் நடைபெற்ற புத்தக நடைபயணம் அதற்கான அடையாளம். சென்னை புத்தகச் சங்கமம் எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதித்துள்ளது. ஒரு விற்பனைக் கண்காட்சியை எல்லோரும் செய்து விடலாம். ஆனால் இவர்கள் போன்று செய்வது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தன்னார்வலர்.

ஒவ்வொரு அரங்கிலும் அவர்களின் கைப்பேசி எண். அதுவும் மழை பெய்த ஒரு நாளில் அவர்கள் ஆற்றிய பணிகள் கண்டு பதிப்பகத்தார்கள் மெய்சிலிர்த் துப் போனார்கள். வாழ்வில் மறந்து போய்விடாத நிகழ்வுகள் அவை. "ஒன்றாய் சேர்வது நல்ல தொடக்கம். பிறகு ஒன்றிணைவது வளர்ச்சி. பின்னர் சேர்ந்து உழைப்பது வெற்றி," என்பார் ஹென்றி போர்டு. சென்னை புத்தகச் சங்கமம் ஒரே தளத்தில் எல்லோரையும் கொண்டு சேர்த்துள் ளது. தொடர்ந்து சேர்ந்திருந்தால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். விழிகள் பதிப்பகம் வேணுகோபால்!

விழிகள் பதிப்பகத்தை 2000 ஆம் ஆண் டில் தொடங் கினேன். ஆனால் பதிப்புத் துறை அனுபவம் 43 ஆண்டுகள். தமிழ் நாடு முழுக்கவும் சுற்றி வந்தாயிற்று.

பதிப்பாளர்கள் கண்காட்சி இதுவே முதன்முறையாகும். இதுபோன்ற திட்டங்கள் ஆங்காங்கே இருந்தன. ஆனால் இங்கு தான் அது சாத்தியா மானது. கண்காட்சி முழு வெற்றி! பதிப்பாளர்களும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். காரணம் பதிப்பாளர் களின் நேரடி விற்பனை இது. ஒரே இடத்தில் பதிப்பக விலைப் பட்டியல் கிடைக்கும். மிகச் சமீபத்திய வெளி யீடுகளும் பார்வைக்கு வைக்கப்படும். நிறுவனங்கள்,கல்லூரிகளுக்கு நேரடி விற்பனை செய்ய இயலும்.

அரங்கு ஒதுக்கீடு தொடங்கி சிறந்த ஏற்பாடுகள். போக்குவரத்துக்கு ஏற்ற இடம். கண்காட்சியின் எல்லா நாட்களிலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை இங்குதான் கண்டேன். மாலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்ததால் விற்பனையும் சிறப்பு. தலைப்பைத் தேர்ந்தெடுத்து நூல்கள் வாங்கினார்கள். எதிர் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வர ஏற்பாடு செய்தால் மேலும் சிறப்பாகும்.

பதிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை வெகு சிறப்பு. இது தொடர் பான ஆங்கில நூல் ஒன்றும் நான் வாசித்துள்ளேன். எனினும் இந்த பட்டறை அருமை. சிறு சிறு மாற்றங்கள் வரும் காலத்தில் செய்ய வேண்டும் என்றாலும், இக்கண்காட்சி மிகப் பெரிய சாதனை புரிந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, மே 4- தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்களின் ஒற்றுமை அவசியம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று (3.5.2013) அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை கடலூர் மாவட்டத்திலும், மதுரை மாவட்டத் திலும் நுழையக் கூடாது என்ற போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவன் நான். அதற்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அவர்களும், அவரைச் சார்ந்த நண்பர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கே இடமில்லை, திராவிடக் கட்சிகளே இருக்கக் கூடாது என்ற அளவில் தங்கள் பிரச் சாரத்தை முடுக்கிவிட்டு, அந்தச் சூழ்நிலையிலே நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் வன்முறைப் பேச்சுகள் தலை தூக்கிய காரணத்தால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், சிறை யிலே அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியும் போது உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். பா.ம.க. வினரும் இது போல கடுமையாக, நாகரிகமற்ற முறையிலும், நாவடக்கம் இல்லாமல் எதிர்க்கட்சிகளை, மற்றக் கட்சிகளைத் தாக்கிப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒரு சுமூகமான சூழ்நிலையை இந்தப் பிரச்சினையிலே உருவாக்குவதற்கு அது வழி வகுக்கும். வழக்குக்கு மேல் வழக்கு போடுவதும், எப்போதோ பேசினார் என்பதற்காக தற்போது அன்புமணி மீது வழக்கு போட்டுக் கைது செய்வதும் சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு டாக்டர் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒற்றுமை அவசியம்

பொதுவாக ஜாதிக் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள், மதக் கலவரங்கள் - இவை எல்லாம் தலையெடுக்காத வகையில், தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், குடிமக்கள் என்போரும் எல்லோருமே ஒன்றாக வாழ்வது தான் சமதர்மம். அந்தச் சம தர்மத்தை நோக்கி எல் லோரும் செயல்பட வேண்டும். எல்லா கட்சிகளும் பயணம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஜாதி வேறுபாடுகளை, சண்டைகளை, போராட்டங் களை ஊக்குவிப்பது, அதற்குப் பக்க பலமாக இருப்பது சரியாகத் தோன்றவில்லை. நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது பொன் மொழி. எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், கடிதோச்சினாலும் கூட, அணுகும்போதும், நெருங் கும் போதும் மெல்ல எறிக என்ற வாக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அந்த மொழிக்கேற்ப அரசு நடந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கையால் விளைந்த பலன் தோஷம் நீங்க பரிகாரமாம் - நகையுடன் ஓடிய புரோகிதர்


ஈரோடு, மே 4- ஈரோடு மாவட் டம், பவானி பக்கமுள்ள குட்டகாடு, ஆலாம்பாளை யத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் சுந்தரம் (55). இவருடைய மனைவி பார்வதி (50). இவர்கள், தங்களுடைய மகனுக்கு நாக தோசம் இருப்பதாகவும், நாக தோசம் உள்ளவர்களுக்கு திரு மணம் நடக்காது என்றும் மீறி திருமணம் செய்தால் பாம்பு கடித்து சாவார்கள் என்று ஜோசியர் கூறியுள்ளார். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி பவானிக்கு வந்துள்ள னர். கூடுதுறைக்கு இவர்கள் இருவரும் வரும்போதே, வாங்க நான்தான் நாகதோசத்துக்கு பரிகாரம் செய்யற புரோகிதர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஒருவர் நாரா யணனை வரவேற்றுள்ளார். கணவன் மனைவி இருவரும் தங்கள் மகனுக்கு நாகதோஷம் நீங்க வேண்டும் என்று பரிகாரம் செய்தனர். 60 வயது மதிக்கத் தக்க அந்த புரோகிதர் பரிகாரம் செய்தார். பரிகார முடிவில் பார்வதி கழுத்தில் அணிந்திருந்த நான் கரை பவுன் தாலி கொடியை கழட்டி, பால் செம்பில் போட்டு விட்டு, சில சொற்களை முணு முணுத்துவிட்டு, நீங்கள் அப் படியே எழுந்து திரும்பி பாக் காம போயி ஆத்துல குளிச்சுட்டு வாங்கோ என்று கூறினார் அந்தப் புரோகிதர். நாராயண னும், பார்வதியும் காவேரியில் சென்று குளித்துவிட்டு திரும்பி வந்தபோது, நாகதோஷம் போக பரிகாரம் செய்த புரோகிதர் அந்த இடத்திலிருந்து காணா மல் போய்விட்டார்.

மனைவி யின் தாலியை புரோகிதனிடம் பறிகொடுத்த நாராயணன் இது குறித்து பவானி காவல்துறை ஆய்வாளர் சண்முகத்திடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பார்வதியின் தாலியை எடுத்துச் சென்ற புரோகிதரின் மொபைல் போன் நம்பரை கண்டுபிடித் தனர். பின்னர். தாங்களும் நாக தோஷ பரிகாரத்துக்காக பவா னிக்கு வந்திருப்பதாகவும் நீங் களே வந்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து அந்த புரோகிதரை மீண்டும் காவேரி ஆற்றின் படித்துறைக்கு காவல்துறை யினர் வரவழைத்தனர். அங்கு வந்த புரோகிதரை காவல்துறை யினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர் ஒவ் வொரு ஊருக்கு செல்லும் போதும், தனது பெயரை மாற்றி மாற்றி தெரிவிப்பார். இவரிடம் ஜாதகம் பார்க்க வரும் பெண் களிடம், தோஷ பரிகாரம் செய்தால் நன்மை எனக்கூறி, பவானி கூடுதுறைக்கு கூட்டி வந்து பால் செம்பில் நகையை போட வைத்து, திருடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். துறையூர், முசிறி, கரூர் போன்ற இடங்களில், திருமண தகவல் மய்யங்களை தொடங்கி, அங்கு பெண்களை வேலைக்கு அமர்த்தி ஜாதகம் பார்த்து வந்தார். இவர் திருடும் நகை களை, தான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் கொடுத்து, அடகுக் கடைகள் மூலம், அடகு வைத்து பணம் பெற்று கொண்டு வந்துள்ளார். இதுபோல, இவரிடம் இருந்து கோவை, சோமனூர், கரூர் போன்ற பகுதியில் உள்ள அடகுக் கடைகளில் இருந்து, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பி லான, 35 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்னர். இவர் மீது,பவானி, ஈரோடு, வீரப்பன் சத்திரம் போன்ற பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது, என்று காவல்துறை யினர் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


எங்கும் இராமசாமி நாயக்கர்


பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு:

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் வகுப்புத் துவேஷமும் ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங்களைக் கற்பித்து பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் - பேசும் சிப்பந்தி கோடிகளும், அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய தொண்டை கிழிய எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹா ராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகா நாடுகள் என்றும் வகுப்புத் துவேஷங்கள் வளர்ந்து வருகிறது.பஞ்சாபிலும் கல்கத்தா விலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லா விட்டால் அங்கும் பிராமணர்-பிராமணரல் லாதார் வகுப்புத் துவேஷங்கள் வளரும்.

ஆதலால் இராமசாமி நாயக்கர் சென்னையில் மாத்திரம் இல்லை; இந்தியாவெங்கும் இராமசாமி நாயக்கர் மயமாய்த்தான் இருக்கிறது. சென்னையில் 4 பேர் கூலிக்கு மாரடிப்பதால் இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன் இவர்கள் சென்னையில் சில காலிகளை ஏவிவிட்டு ஸ்ரீமான் சர். தியாகராயச் செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் முதலியவற்றையும் உடைத்தார்கள். அதிலும் இந்த இயக்கம் அழிந்து விடவில்லை.

அதற்குப் பிறகு ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் அடிக்கும்படி செய்தார்கள். அதனாலும் இவர்களுக்குப் பயந்துகொண்டு இயக்கம் போய்விடவில்லை. சமீபத்தில் பேரார் மாகாணத்தைச் சேர்ந்த அமராவதியில் 2ஆவது அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸின் காரிய தரிசியாயும், பிராமணரல்லாதாரின் பேருழைப் பாளராகவுமிருக்கும் ஸ்ரீமான் அமிர்த்காரை சில காலிகளைக் கொண்டு பலமாய் அடித்து விட்டார்கள்.

இதனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் ஒழிந்து விடவில்லை. இவர்கள் கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத் தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல் இயக்கம் இந்தியாவெங்கும் கிளம்பி பரவிக்கொண்டு தான் வருகிறது.

- குடிஅரசு - அறிக்கை - 9.5.1926

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

குடிஅரசு - வேண்டுகோள் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு - விமர்சனம் - 6.6.1926

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு 1 - சிறை நிரப்பும் போராட்டம்!இராஜபாளையம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

தமிழர் தலைவர் அறிவித்த ஆகஸ்டு -1 சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கு பெறும் இளைஞரணி தோழர்களின் ரத்த கையொப்பமிட்ட முதல் பட்டியலை மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் கு. தென்னரசு ஆகியோர் உள்ளனர் (4.5.2013).

இராஜபாளையம், மே 5- வரும் ஆகஸ்டு முதல் தேதி அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமைக் கான சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

இராஜபாளையத்தில் கடல் இல்லை. ஆனால் இங்கே கருஞ்சட்டைக் கடல் பொங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கூடி யுள்ளீர்கள். எல்லா வயதி னரும் வந்துள்ளீர்கள்.
யார் இளைஞர்?

இளைஞர் என்பது வயதைப் பொறுத்ததல்ல உணர்வைப் பொறுத்தது - உணர்ச்சியைப் பொறுத்தது - இலட்சியத்தில் கொண்டி ருக்கும் பிடிப்பைப் பொறுத் தது.

முதியவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள்

எனக்குப் பின்னால் நமது தளபதி ஸ்டாலின் உரையாற்றிட உள்ளார். இளைஞர்களுக்குப் பின் னால் முதியோர் இருக் கிறார்கள் என்பதைவிட முதியவர்களுக்குப் பின் னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனக் குப் பின்னால் தளபதி உரையாற்ற இருக்கிறார்.

இராஜபாளையம் என்று வருகிறபோது 1982-க்கு என் நினைவு செல்லுகிறது.

தமிழ் ஓவியா said...


அந்த மம்சாபுரம்

மம்சாபுரத்திற்கு மருத் துவமனையைத் திறப்பதற்கு நான் காரில் சென்றபோது தி.மு.க. கொடியைக் காட்டி, மாலையைக் கையில் வைத் துக் கொண்டு என்னை வரவேற்பது போல பாசாங்கு காட்டி என்னைத் தாக்கி னார்கள். ரத்தம் கொட்டியது. உடம்பெல்லாம் காரின் கண்ணாடித் தூள்கள், ஓட்டுநரின் சாமர்த்தியத் தால் தப்பினேன். ஆனாலும் ஒப்புக் கொண்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு முடித்த பிறகு தான் திருச்சிக்குச் சென் றேன் என்ற தகவலை கழ கத் தலைவர் குறிப்பிட்டார். 31 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற வன்முறை அது (மேலும் மூன்று முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப் பட்டதுண்டு)

ஆயிரம் ஆயிரம் எதிர்ப் புகள், அடக்கு முறைகள் சிறைச் சாலைகளைச் சந் திக்க நேரிட்டாலும் தந்தை பெரியார் அவர்களும் சரி, அவர்கள் கண்ட இந்த இயக்கமும் சரி இலட்சியப் பாதையை விட்டு விலகாது என்பதைக் குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

போராட்ட அறிவிப்பு! இந்த மாநாட்டில் போராட்டத் திட்டம் அறி விக்கப்படும் என்று கூறி யிருந்தேன். தீர்மானமும் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும். மனிதன் சந்திர மண்டலத்துக்குள் கூடப் போய்த் திரும்பும் கால கட்டம் இது. இத்தகைய கால கட்டத்தில் தமிழன் கட்டிய கோயிலுக்குத் தமிழன் அர்ச்சகனாகப் போக முடியாது. கோயில் கருவறை என்பது பார்ப்பனர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடமாக இருக்கிறது. இது மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையாகும்.

இதனை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளோடு அய்யாவைப் புதைத்து விட்டோமே என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார்.

கழகம் தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றாலும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கி வருகின்றனர். சுமுகத் தீர்வு என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்திலே தமிழ்நாடு அரசு சார்பிலே மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அந்தச் சுமுகம் என்றால் என்ன? விளக்கம் தேவை கிராமக் கோயில் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதார் இருப்பார்கள். ஆகமவிதிகளுக்கு உட்பட்ட பெரிய பெரிய கோயில்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்று சுமுகமாக தீர்வு காணலாம் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால் அதனை ஏற்க மாட்டோம் - கடுமையாக எதிர்ப்போம்! போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இரண்டு மாதங்கள் இதுபற்றி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம், இலட்சியம் நிறைவேறும் வரை ஓய்ந்திட மாட்டோம்.

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு 1 சிறை நிரப்பும் போராட்டம்!

ஆகஸ்டு முதல் தேதி என்பது - தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம், போராட்டத்தை நடத்தும் வரலாற்றுக் குறிப்பாகும்.

அதே போல வரும் ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் (பலத்த கைதட்டல்).
ரத்தக் கையொப்பம்

நான் இதனை அறிவிப்பதற்கு முன்னதாகவே எனது அறிக்கையின் அடிப்படையில் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களின் பட்டியலோடு தயாராக இருக்கிறார்கள். ரத்தக் கையொப்பம் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் நாம் ரத்தம் சிந்தக் கூடாது. அந்த ரத்தம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது இயக்கம் மனிதாபிமான இயக்கம். எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்படுவதாக அமைய வேண்டும்.

வன்முறைக்கு இடம் இல்லை

நாம் நடத்தும் போராட்டத்தில் எப்பொழுதுமே வன்முறைக்கு இடம் இருக்காது. பேருந்துகளுக்குச் சேதம் ஏற்படாது - பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இருக்காது.
சுதந்திரப் போராட்டம் என்று கூறி காங்கிரஸ்காரர்கள் தண்டவாளத்தைப் பெயர்த்த போதும், போஸ்டாபீஸைக் கொளுத்திய போதும்கூட அப்பொழுதே தந்தை பெரியார் அதனைக் கண்டித்துள்ளார்.

எந்த ஒரு இலட்சியத்தை அடைவதாக இருந்தாலும் அதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

தோழர்களே தயாராகுங்கள் - இங்கே நமது அழைப்பை ஏற்று தி.மு.க. பொருளாளர் தளபதி கலந்து கொண்டு இருக்கிறார்.

மிசா கைதியாக...

1976 நெருக்கடி காலத்தின்போது மிசா கைதிகளாக சென்னை மத்திய சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப் பட்டபோது ஒரு நாள் இரவு - தளபதி ஸ்டாலினை அடித்துத் துவைத்து நாங்கள் இருந்த அறையில் தான் போட்டார்கள். என்மீது தான் விழுந்தார். அப்பொழுது அவரைத் தூக்கி நிறுத்தி - பொது வாழ்வில் இவை எல்லாம் சகஜம்தான் அதற்கொரு பயிற்சிதான், தளராதீர்கள் என்று அன்று சொன்னேன்.

தளரவில்லை தளபதி

அவர் தளர்ந்து விடவில்லை - வளர்ந்திருக்கிறார் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிருகிறார். அவரை வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.போராட்ட வீரர் பட்டியல் ரத்தக் கையொப்பத்துடன்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க போராட்ட வீரர்களின் பட்டியல் முதல் பட்டியல் கழகத் தலைவரிடம் இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாட்டில் அளிக்கப்பட்டது.

1081 பேர் அதில் கையொப்பமிட்டி ருந்தனர். பலர் ரத்தக் கையொப்பமும் போட்டிருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலை தமிழர் தலைவரிடம் வழங்கியபோது கடல் அலை ஓசையாக கையொலி எழுந்தது.

தமிழ் ஓவியா said...


நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் - தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சியுரை


இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் (4.5.2013)

இராஜபாளையம் மே 5- நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.

இராஜபாளையத்தில் நேற்று (4.5.2013) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்று தி.மு.க. பொருளாளர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது: திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான் சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.

தி.க. இளைஞரணியின் குறிக்கோள்கள் உன்னதமானவை

திராவிடர் கழக இளைஞரணியினரின் குறிக்கோள்கள் மிகவும் உயர்ந்தவை.

பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் விதவைத் திருமணங்கள் வரதட்சணையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்.

கலைஞரின் அறிவுரை

தி.மு.க. இளைஞரணியினருக்காக ஒரு சின்னம் (Emblem) ஒன்றைத் தயாரித்து தலைவர் கலைஞரிடம் அளித்தோம். அதில் அண்ணா, கலைஞர் உருவம் இடம் பெற்றிருந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் அதில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கம் சொன்னதுதான் முக்கியம்.

பதவிக்கு ஆசைப்படாதே - கொள்கைக்கு முன்னுரிமை கொடு என்பதற்காகத்தான் அய்யா படம் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னது நமது இளைஞர்களுக்கு முக்கியமான, தேவையான வழிகாட்டுதல் ஆகும். நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறு வயதிலேயே மேடை ஏற்றப்பட்டு உரையாற்றப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அண்ணா அவர்களே அந்த சிறுவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்தச் சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்திருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்றிடு வார்கள். ஆனால் இவர் அருந்திய ஞானப்பால் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு ஈரோட்டுப்பால் என்று 1943ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டவர் தான் நமது ஆசிரியர் பெருந்தகை.

வழிகாட்டுகிறார் ஆசிரியர்

அவரின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடியவை.
இதே ராஜபாளையத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதற்குமுன் நான் கலந்து கொண்டு இருந்தாலும் தாய்க் கழகத்தில் மாநில இளைஞரணி மாநாட்டில், நான் பங்கு பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மாநில இளைஞரணி மாநாடு தோழர்கள் முழக்கம்


4.5.2013 சனி மாலை 7 மணிக்கு ஜவகர் திடலில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவரங்கில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினரின் திக்கெட்டும் பரவட்டும் திராவிடம் எனும் வீதி நாட கங்களுடன் தொடங்கப்பட்டது. பெரும் வரவேற்பு மக்கள் கடலில் கிடைத்தது. பேரணி திடலில் நுழைந்தபோதே மக்கள் கடல் நிரம்பி வழிந்தது. இரா. திருப்பதி,

மாநாட்டுத் தலைவர்

மாநாட்டுக்கு இளைஞரணி மாநில செயலாளர் இரா. திருப்பதி தலைமை வகித்தார். மாநில மாணவரணி செய லாளர் த.சீ. இளந்திரையன் அனைவரை யும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் தலைவரை முன்மொழிந்தார். விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. கோவிந் தன், விருதுநகர் கழக மாவட்ட இளை ஞரணி செயலாளர் இரா. அழகர் ஆகியோர் தலைவரை வழி மொழிந்தனர்.

மதுரை மண்டலக் கழகத் தலைவர் வே. செல்வம், விருதுநகர் கழக மாவட்ட தலைவர் வானவில் வ. மணி, மாவட்ட செயலாளர் தி. ஆதவன் ஆகியோர் முன் னிலை வைத்தனர்.

பழனி மாவட்ட மாணவரணி செய லாளர் சே.மெ. காவியா கழகத் தோழர் களின் முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சை இரா. செயக்குமார்

மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் உரையாற்றினார்.

தீர்மானங்கள் - டாக்டர் துரை. சந்திரசேகரன்

காலத்தை வெல்லும் 20 தீர்மானங் களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் முன்மொ ழிந்தார். பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரையாற் றுகையில், ஜாதியைக் காப்பாற்றத் துடிக் கும் சக்திகளை எதிர்த்து இதோ இளைஞர் பட்டாளம் தயாராகி விட்டது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தமது உரையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நம் பிரச்சாரம் நடைபெற வேண்டும். நமது இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் தமது உரையில் கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் கூடாதா? இந்தி யாவுக்கு இரண்டு அரசியல் சட்டங்கள் இருக்கின்றனவா? என்ற வினாவை எழுப்பினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

2400 கோடி ரூபாய் செலவில் தொடங் கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனை ராமனைக் காட்டி முடக்குவது என்ன நியாயம்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் செயலவைத் தலைவர்.

ச.அமுதன்

தி.மு.க. இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் திருவல்லிபுத்தூர் ச. அமுதன் தன் உரையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் தலைமையில் திரா விடர் கழகப் பணிகள் எழுச்சியுடன் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

பார்ப்பனர் எதிர்ப்பு தான் தன்னை நாத்திகவாதியாக ஆக்கியது என்றார் தந்தை பெரியார். அந்த உணர்ச்சிதான் நம் மக்களுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது - உத்தியோக உரிமையைப் பெற்று தந்தது. அதனைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது பார்ப்பனர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடோ தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்து பவர்களை தமிழின இளைஞர்கள் புறக் கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தங்கம் கு. தென்னரசு

முன்னாள் கல்வி அமைச்சரும், தி.மு.க. நெசவாளர் அணியின் தலைவருமான தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில், இம்மாநாடு தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது உண்மையே என்பதை நிரூபித்துக் காட்டும் மாநாடு என்று குறிப்பிட்டார் கோடையிலே இளைப்பாறக் கிடைத்த குளிர் தருவதாக ஆசிரியர் அவர்கள் கழகத் தலைவர் கலைஞருக்கு இருக் கிறார் என்றார். இந்தியா டுடே என்ற இதழ் தி.மு.க. வில் இளைஞரணியினை வலுவாக்கி அதன் மூலம் நல்ல தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் வளர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டதை எடுத்துக்காட் டினார்.

நன்றியுரை

இதையடுத்து மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளர் பூ. சிவக்குமார் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.

தமிழ் ஓவியா said...

சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ.75,000 பரிசு: இமாச்சல பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு


சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சாதி பேதத்தை ஒழிக்க சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ. 75,000 பரிசு அளிக்கப்படும் என்று வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சாதி விட்டு சாதியோ, மதம் விட்டு மதமோ திருமணம் செய்தால் காப் பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சாதி பிரச்சனையை போக்க வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் ஜோடிக்கு ரூ.75,000 பரிசு அளிக்கப்பட்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு திருமணம் செய்யும் ஜோடியில் ஒருவர் எஸ்.சி.யாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த வகை திருமணத்திற்கு ரூ.25,000 பரிசு அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் எம்.பி. சூத் கூறுகையில்,

சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 25,000 பரிசுத் தொகை ஊக்கமளிப்பதாக இல்லை. அதனால் தான் அந்த தொகையை அதிகரிக்க முடிவு செய்தோம். இந்த புதிய அறிவிப்பை அடுத்து ஏராளமான இளம் ஜோடிகள் அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

புதிதாக திருமணம் செய்துள்ள சிம்லாவை சேர்ந்த அனீஷ் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா கூறுகையில், திருமணம் அவரவர் விருப்பம் என்றனர். வங்கியில் பணிபுரியும் அனீஷ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தார். அவரது மனைவி ஸ்வேதா பிராமணர்.
--------------http://tamil.oneindia.in/news/2013/05/05/india-marry-outside-caste-himachal-get-rs-75000-174680.html

தமிழ் ஓவியா said...


ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தும் பாராட்டத்தக்க இமாச்சல் அரசு


சிம்லா, மே, 6 - ஜாதி ஒழிப்புக்கு வித் திடும் கலப்புத் திரு மணத்தை ஊக்கப்படுத் தும் வகையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்க ளுக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப் படும் என இமாச்சல் அரசு பாராட்டத்தக்க திட்டத்தை அறிவித் துள்ளது.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என, இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித் துள்ளது, அரியானா மாநிலத் தில் உள்ள, ஜாதி பஞ் சாயத்துகள் எல்லாம், கலப்புத் திருமணங்க ளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, கீழ் ஜாதி யைச் சேர்ந்த பெண் ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்பவர்களுக்குக் கடும் தண்டனையும் விதிக்கிறது.

இந்த நிலையில், அண்டை மாநிலமான, இமாச்சல பிரதேசத்தில் உள்ள, முதல்வர் வீர்பத் திர சிங் தலைமையி லான, காங்கிரஸ் அரசு, கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு, இதுவரை, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட் டது. தற்போது அந்த பரிசுத் தொகை, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் பரிசுத் தொகையைப் பெற, கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடி களில் ஒருவர், தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சலில், கடந்த 2009-10ல், 232; 2010-11ல் 300; 2011-12ல், 304, 2012-13ல், 277 என, நான்கு ஆண்டுகளில், 1,113 கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன.

ஜாதி என்ற தடையை மீறி, இளம் பெண்களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வதை ஊக்கப்படுத்துவதற்காக, இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக, அம்மாநில, சமூக நீதித் துறை சிறப்புச் செயலர், சூட் தெரிவித்து உள் ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை, 68.50 லட்சம். இவர்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 25 சதவீதம் பேர். கலப்புத் திருமணங் களை ஊக்கப்படுத்தும் போது, ஜாதி முறைகள் வரும் காலங்களில் ஒழிந்து விடும் என்ப தால், இந்தப் பரிசுத் திட்டத்தை, இமாச்சல பிரதேச அரசு அமல் படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
06-05-2013

தமிழ் ஓவியா said...


இராஜபாளையம் மாநாடு4.5.2013 சனியன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கழக வரலாற்றில் முத்திரை பொறித்த ஒன்றாக அமைந்து விட்டது!

தன்மான இயக்கக் காலந்தொடங்கி, திராவிடர் கழகம் என்ற வகையில் இவ்வூரில் பொதுக் கூட்டங்கள் பல நடைபெற்றதுண்டு, மாநாடு என்னும் வகையில் இந்த மாநாடுதான் அந்த மண்ணில் மிகப் பெரியது - எழுச்சி மிக்கது!

கடந்த இரு மாதங்களாக மாநில இளைஞரணி செயலாளர் மானமிகு இல. திருப்பதி அவர்களுடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு தஞ்சை இரா. செயக்குமார் - அவருடன் பத்துத் தோழர்கள், இராஜபாளையம் தோழர்கள் மானமிகு சிவக்குமார், மானமிகு கோவிந்தன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாண்டி முருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு சிகரத்தை எட்டியது என்றே கூற வேண்டும். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வானவில் வ. மணி அவர்களின் துணை அருந் துணையாக இருந்தது.

எத்தனைப் பேர் இருந்து நடத்தினார்கள் என்பதைவிட இருப்பவர்கள் எப்படி திட்டமிட்டுப் பணியாற்றினார்கள் என்பதுதான் முக்கியம்! இதற்கொரு எடுத்துக்காட்டுதான் இராஜபாளையம் மாநாடு!

ஆன்மிகம் நிரம்பி வழியும் இராஜபாளையத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கும் உரிய இடம் தந்தனர் என்றே கூற வேண்டும். கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, கழகத் தின் சமுதாயப் பணியால் ஏற்பட்ட பலன்களை அன் றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களால், எப்படி அவற்றைப் புறந்தள்ள முடியும்? அதன் வீச்சைக் காண அங்கு முடிந்தது.

கொளுத்தும் வெயில் கால மன்றோ! மாலை நேரத்தில் பேரணி என்றாலும் தாகத்திற்குத் தவிக்காதவர்கள் இருக்க முடியாதே! அதுவும் தொண்டை வற்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு வந்த நிலையில், தாகத்திற்குக் கேட்கவா வேண்டும்?

ஆங்காங்கே தாய்மார்கள் குடும்பத் தலைவர்கள் குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, தண்ணீரை வழங்கிய அந்தத் தன்மையை என்ன சொல்லுவது!

பக்தியைத் தாண்டி இந்தப் பகுத்தறிவு இயக்கத் தின்பால் தமிழர்கள் வைத்துள்ள அந்தப் பாசம், அன்பு மெய்ச் சிலிர்க்கக் கூடியதே!

பல கட்சிக்காரர்களின் மாநாட்டையும், பேரணி யையும் அவ்வூர் மக்கள் பார்த்தவர்கள்தான்; திரா விடர் கழக மாநாட்டில் ஊர்வலத்தில் பல வித்தியாச மான காட்சிகளை அவர்கள் கண்டதுதான் அவர்களின் ஆச்சரியத்துக்குக் காரணம்.

கழகத்தின் எந்த ஒரு செயலும் வீணானதல்லவே! மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகள் பெண்கள் உட்பட பங்கேற்று நடத்திக் காட்டியது அவர்களின் ஆச்சரியத்துக்கான வித்தியாசமான பார்வைக்கான காரணம் ஆகும். அங்கு நடைபெற்ற எந்த ஊர்வலத்திலும் காணப்படாதவை அவை.

மானாவாரியாக முழக்கங்களை முழங்கிச் செல்லாமல் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஒலி பெருக்கிமூலம் குறிப்பிட்ட இளைஞரணி தோழர்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட முழக்கங்களை எடுத்துச் சொன்னதும், பேரணியிலே பங்கு கொண்ட தோழர்கள் அவற்றைத் தொடுத்துச் சொன்னதும் நம் கொள்கைகளைப் பொது மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பு (இருபால் இளைஞர்கள்) தமிழில் கட்டளைச் சொற்கள் காவல்துறையினர் உட்பட அனைவரையும் பெரிதும் ஈர்த்தன.

இளைஞரணியினரின் சீருடையுடன் கூடிய அணி வகுப்பின் நேர்த்தி பெரியார் பிஞ்சுகள் முதல் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை கையில் கழகக் கொடியை ஏந்தி முழக்கமிட்டு வந்த அந்தக் கட்டுப்பாடு பலே பலே என்று பாராட்ட வைத்தது.

பல அரசியல் கட்சிகளின் நண்பர்கள்கூட ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களை நடத்துங்கள் என்று தாங்களாகவே முன்வந்து தெரிவித்ததையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் எங்கே இருக்கப் போகிறது என்று சொன்னவர்கள் உண்டு.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்கிறது. பலமாக இருக்கிறது - இளைஞர்களின் கோட்டமாக இருக்கிறது என்று மக்களுக்கு உணர்த்திய மாபெரும் மாநாட்டினை நடத்திக் காட்டிய தோழர் களுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்களுக் கும், ஆதரவுக்கரம் நீட்டிய தமிழர்களுக்கும் பாராட் டையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

தமிழ் ஓவியா said...


நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்..!


சென்னையின் மக்கள் நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட் டுக்கு தேவையான பொருட் களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். பகலெல் லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட் டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொது கழிப்பறைகள் எதுவும் கிடை யாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும் போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட் டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார். அதன் பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்த போது ஆத்திரமாக விவரித்தார். அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான். ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத் தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமான கரமாக உணர்ந்திருப்பார்.

சென்னையில் மக்கள் நெருக் கடியான பகுதிகளுக்குள் சுற்றும் போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ?

பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத் திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொது கழிப்பறைகளை திறந்து வைக்க வில்லை. அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான். ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? பள்ளி கல்லூரிகளில் பெண் பிள்ளைகளின் நிலை இன்னும் பரிதாபம்.

மேலோட்டமாக பார்த் தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க கழிப்பறையை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மன நிலை எவ்வளவு மோசமானது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவை யான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்சினை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை. மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு கழிப்பறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக, சாக்குதான் இருக்கும். அதே மும்பை யில் பணக்கொழுப்பெடுத்த அம் பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் கழிப்பறையும் (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !)

இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக் களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுங் கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்..

எப்போதாவது செல்லும் இறை வழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவ சியமான கழிவறைகளுக்கு இட மில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்க முமில்லை.. - கார்ட்டூனிஸ்ட் பாலா

தமிழ் ஓவியா said...


அறிவுப் பிரச்சாரம்


மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)