Search This Blog

7.5.13

பெரியாரிடம் அடி வாங்கிய பெரியார் தொண்டரின் பெருமிதம்!


திராவிடர் கழகத்தின் முதுபெரும் பெரியார் தொண்டர்களில் ஒருவர், புதுக்கோட்டை விடுதி என்ற (ஆலங்குடி அருகில் உள்ள ஊர்) அவரது ஊரில் அனைத்துக் கட்சியினர், ஜாதி, மத வித்தியாசமின்றி அனைவரது ஆதரவுடன் தந்தை பெரியார் சிலை மிகப் பெரிய குளக்கரை அருகில் நிறுவி, ஊரே மகிழ்ந்து கொண்டாடிய திருவிழாவை நடத்தினர்.

அவர் நடத்திய கழகப் பொதுக் கூட்டத்திற்கு அவ்வூருக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்துச் சென்றேன். ஊரே திரண்டு பெரியார் விழாவை திரு விழா - பெரு விழாவாக நடத்தியது.

அப்போது (சுமார் 80 வயதை நெருங்கும்) இராவணன் அவர்கள் வழியில் வரவேற்று, தந்தை பெரியாரை அழைத்து பலமுறை பல ஊர்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டம் நடத்தியது பற்றிக் கூறியதோடு, அப்போது வேறு எவரும் பெறாத ஒரு பெருமை எனக்குக் கிடைத்தது என்றார். என்ன தெரியுமா?

வழிச் செலவு சரியாகத் தர வில்லை என்பதற்காக ஒருமுறை அய்யா வேகமாக என்னை ஓங்கி ஆத்திரத்துடன் அடிக்கவே செய்தார்; எனக்கு இதைவிட பெரிய வாய்ப்பு மகிழ்ச்சி வேறு என்ன? வேறு எவருக்கு இது கிட்டும் என்றார்!  அடித்தார் என்றால் செல்லக் கோபம்தான் என்றார்.

காரணம் நான் ஒவ்வொரு முறையும் அய்யாவை அழைத்துக் கூட்டம் நடத்தி விட்டு, வழிச் செலவுக்குரிய தொகையைச் சரியாகக் கொடுக்காமல், ஆங்காங்கே அப்போது வசூலித்து குறைந்த தொகையை வேறு வழியின்றி மூன்று தடவை குறைத்துக் கொடுத்து அய்யாவின் கோபத்திற்கு ஆளானாலும்; என் பணியை அய்யா  அவர்கள் பாராட்டி உடனே வண்டியில் ஏற்றி, ஊரில் விட்டுத்தான் செல்வார்கள்.

அது நாலாவது தடவை என்பதால் அவருக்கு அளவு கடந்த கோபம்! பணத்தை என்மீது வீசியெறிந்துவிட்டு, நீங்க எப்போதும் இப்படித்தான் ஏமாற்றுகிறீர்கள் - இது எத்தனையாவது தடவை என்றுதான் ஓங்கி வீசியபோது அவர் கை என்மீதுபட்ட அடிபோல் இருந்தது என்று மெத்த மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

இப்படியும் அற்புத தொண்டர்கள் அயராது பணியாற்றும் அய்யாவின் அன்பர்கள்! இதுபற்றி நான் - சில ஊர்களில் இப்படி ஒழுங்காகப் பணம்  - வழிச் செலவுக்கு - கூட்டம் முடிந்து தராமல் விட்டவர்களைக் கடிந்து கொள்ளும் காட்சிகளை நேரில் கண்டுள்ளதால் - அதனை ஏன் அப்படி அய்யா கண்டிப்பு காட்டினார் என்பதை அவ்வூர் பொதுக் கூட்டத்தில்கூட நன்கு விளக்கினேன்.

அய்யாவைப் பொறுத்தவரை இயக்கத்தினையே அவர் சொந்த செலவில் - துவக்க காலத்தில் நடத்தியவர் -இரயில்வே கம்பெனிகளின் கூப்பன்களை மொத்தமாக வாங்கி, பிரச்சாரகர் களுக்குக் கொடுத்து கூட்டம் போடும் ஊர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்யச் சொன்னவர்.

பல்லாயிரம் ரூபாய்கள் பொருள் நட்டத்தில் குடிஅரசு, விடுதலை, பகுத் தறிவு போன்ற ஏடுகளை நடத்தியவர்.

அவர் ஏன் இப்படி கடுமையாகத் தொண்டர்களிடம் நடந்து கொண்டார் என்பது சிலருக்குப் புரியாததாக இருக்கும்.

அய்யா சொல்வார்; முன்கூட்டியே வழிச் செலவு எங்களால் தர இயலாது அய்யா. கூட்டம் மட்டும்தான் நடத்த முடியும் என்று கூறி அவரது ஒப்புதலைப் பெற்று நடத்தினால் மகிழ்ச்சியுடன்  விடை பெறுவார்.

தான் ஏமாற்றத்திற்கு ஆளாகக் கூடாது; அதோடு கட்டுப்பாடான ஒருமுறை தேவை; எதையும் திட்டமிட்டு வசூலித்து மேடை, நோட்டீஸ், ஒலி பெருக்கி, விளம்பரம், வழிச் செலவு என்று பட்ஜெட் போட்டு நடத்திடும் பயிற்சி நடத்துபவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதுதான் அதன் தத்துவம்.

இந்தப் பணம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை; என்றாலும் முன் கூட்டிக் கூறி பெற்ற அனுமதி இன்றி, கடைசி நேரத்தில் காரில் ஏறியபின் குறைத்துக் கொடுத்து அனுப்புவது ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் என்பது கண் டிப்புக்கு  பேர் போன தந்தை பெரியார்தம் இயக்க நடைமுறைகளில் ஒன்று ஆகும்!

பல நேரங்களில் கழகப் பேச்சாளர் கள்கூட இப்படிப்பட்ட ஏமாற்றங்களுக் கும், திண்டாட்டத்திற்கும் திரும்பிடும் வழிச் செலவு கூட இன்றி சங்கடப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

உங்கள் அனுபவம் எப்படி? என்பது தானே நீங்கள் அடுத்துக் கேட்கத் தயாராகும் கேள்வி.

பெரியார் தந்த புத்திதான் எனக்கு எல்லாவற்றிலும்; சொந்த புத்தி கிடையாதே!
என்னைப் பார்த்து வெளியூரில் அய்யா அவர்கள் கேட்டார்கள். நீங்கள் என்ன பல ஊர்களுக்குச் செல்லும் போது வழிச் செலவுப் பணத்தைக்கூட சரியாகத் தருகிறார்களா என்று கவனித்ததில்லை என்று கேள்விப்பட்டேன்.
இப்போதுதான் தெரிகிறது உங்களை ஏன் அதிகமாகக் கூட்டங் களுக்கு கூப்பிடுகிறார்கள் என்ற ரகசியம் இப்போதுதான் புரிந்தது என்று ஒரு ஜோக் அடித்தார்; அம்மா உட்பட அருகில் இருந்த அனைவரும் சிரித்தனர் - அய்யாவின் கிண்டலை ரசித்து! எதிலும் கட்டுப்பாடு தேவை என் பதே பெரியார் நெறி!
                  -----------------------------------  கி.வீரமணி அவர்கள் 07-05-2013 “விடுதலை” யில் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...


உலகில் வளர்ந்த நாடு என்பதற்கு எது சரியான அளவுகோல்?


- ஊசி மிளகாய்

உலக அரங்கில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர வேண்டிய நாடுகள் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர்.

மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் - இவற்றையே, உலக வல்லுநர்கள் அளவுகோல்களாகக் கொண்டு, மேற்காட்டிய மூவகை களைப் பிரித்து வகைப்படுத்து கின்றனர்.

பொருளாதாரத்தில், தொழில் முன்னேற்றத்தில் வாழ்க்கைத் தரத் தில் மட்டும் வளர்ந்தால் போதுமா?

பகுத்தறிவுத் துறையில் வளர்ந் தால் தானே அவற்றை உண்மை யாகவே வளர்ந்த நாடுகள் என்று அழைக்க முடியும்?

அவ்வகையில் நமது நாட்டின் தென் பகுதியில் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், மக்கள் மத்தியில் செய்த அறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகள், மதவெறியை எதிர்த்து மனிதநேயத்தைப் பரப்பிய தன் விளைவாக, - மற்ற வழிகளில் பிற்போக்காக இருந்தாலும் கூட இந்தியா - சில விஷயங்களில் இந்த வளர்ந்த நாடுகள் என்று அழைக் கப்படும் நாடுகளைவிட கூடுதலாக வளர்ந்துள்ள நாடாகவே காட்சி யளிக்கின்றது!

எடுத்துக்காட்டாக, கொடிய நோயான புற்று நோய்க்கு Cancer) நவீன மருத்துவத்துறை சிகிச்சை யான மரபு அணுக்கள் மூலம் ‘Stem Cell’ சிகிச்சைக்கு இங்கே வரு கிறார்கள் அமெரிக்காவிலிருந்து புற்று நோய்க்கு ஆளான நோயாளி கள். காரணம் கத்தோலிக்க மத நம்பிக்கை, கிறித்துவ மத நம்பிக் கைக் காரணமாக இந்த சிகிச் சையை இவ்வளவு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ந்த அமெரிக்காவில் அனுமதிக்க வில்லை. அந்நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதன் விளைவு அதனைத் திறம்படச் செய்யும் நமது நாட்டுத் தனியார் மருத்துவமனைகளுக்கு அல்லவா வருகின்றனர்!

நம் நாட்டு கரன்சிநோட்டில் மத நம்பிக்கைக்கோ, கடவுள் நம்பிக் கைக்கோ இடமில்லை. ஆனால் அமெரிக்காவில் அதன் ஆரம்ப கால அரசியல் சட்ட வரைவாளர்கள், எண்ணத்திற்கு எதிரிடையாகவே ‘In the God we trust’ என்று அச்சிடப்பட்டி ருக்கிறதே!

கடவுளை நம்பாதவர்கள் அங்கும் ஏராளம் உண்டே! இங்கர்சால் களின் பிரச்சாரம் உண்டு. கருத்துச் சுதந்தரம் - மதச் சார்பின்மை பற்றிக் கூறிவிட்டு இப்படி அரசின் கரன்சி நோட்டுகளில் போடலாமா?

அது மட்டுமா? அறிவியல், புவியியல் தத்துவங்களுக்கும், உண்மைகளுக்கும் விரோதமாக சில மாநிலங்களில் வகுப்புகளில் Creationism பூமியைக் கடவுள் ஆறு நாள்களில் படைத்தார்; என்றும் பாடத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து போதிப்பதைவிட அசல் பிற்போக்குத்தனம் வேறு உண்டா?

இதை எதில் வளர்ந்த நாடு என்று கூறுவது?

அதுபோலவே மிகவும் சுதந்திரக் காற்று வீசிய, இங்கிலாந்து நாட்டை யொட்டிய அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க மதவெறி கருச் சிதைவை ஏற்றுக் கொள்ள - சட்ட பூர்வ அனுமதியின்றி சட்ட திட் டங்கள் உள்ள நிலை காரணமாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு தாய் - அதைச் செய்ய மருத்துவ மனைகளும் டாக்டர்களும் மறுத்த தால் உயிர்விட நேர்ந்தது, மிகப் பெரிய மனிதாபிமானத்திற்கு நேர் எதிரிடையானதல்லவா?

அது கிளப்பிய எதிர்ப்பினை - சுவர் எழுத்துப் படிப்பினையாகப் பெற்ற அந்நாட்டு ஆட்சியாளர் அண் மையில் ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே கருச்சிதைவை (Abortion) நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

அதற்கு அந்நாட்டு கத்தோலிக்க மதக் குருக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மதவெறி கொண்ட அவர் களுக்கு மனித உயிர்கள் காப் பாற்றப்படுவது முக்கியமல்ல; மதம் தான் காப்பாற்றப்பட வேண்டுமாம்! என்னே அறிவர்களின் அறியாமை - மதவெறி!

ஆனால் நாம் பல மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களின் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பே MTP Medical Termination of Pregrency) Act சட்டம் கருச்சிதைவு சட்டபூர்வம் என்று வந்துவிட்டதே!

அதன்படி நாம் முன்னேறிய அளவு அயர்லாந்து - முன்னேற வில்லையே!

இப்படி எத்தனையோ பிற்போக் குத்தனங்கள் - அறிவியல் தொழில் நுட்பவியல் வளர்ந்த நாடுகளில் இன்னமும்!

காரணம் அங்கு பெரியார்கள் தோன்றி, மக்கள் இயக்கங்களை நடத்தி ஆட்சிகளுக்கு முன்னோடி யாக வழிகாட்ட வரவில்லை என்பதே!

தமிழ் ஓவியா said...

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி!
போராட்டத்தை அறிவித்த ராஜபாட்டை மாநாடு!
வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு - நன்றி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ராஜபாளையம் மாநாடு போராட்ட அறிவிப்பு கொடுத்த ராஜபாட்டை மாநாடு என்றும், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக் கும் பாராட்டு, நன்றி என்றும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ராஜபாளையத்தில் 4.5.2013 சனிக்கிழமையன்று கூடிய திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு உண்மையிலேயே ஒரு வரலாறு படைத்த மாநாடாகும்!

ராஜபாளையத்தில் கழக கருஞ்சட்டை இளைஞர் பட்டாளம் ஏராளம் திரண்டு வந்திருந்தனர். இயக்கக் குடும்பத்தவர்களும் கூடி பல்லாயிரக்கணக்கில் உணர்ச்சி கொப்பளிக்க, உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!

ராஜபாளையத்தில் கழக மாநாடா? அதுவும் இளைஞர் மாநாடா? என்று சற்று சந்தேகம் கலந்த அச்சத்துடன் கேள்வி கேட்ட அப்பகுதி மக்களில் சிலர் திகைத்து விட்டனர்; காரணம் கூடிய மக்கள் கடலால் திண்டாடியது அந்நகரம்!

தென் திசையில் ஏற்பட்ட புத்துணர்ச்சி வெள்ளம் எங்களை எல்லாம் பூரிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று, புளகாங்கிதம் அடையச் செய்தது!

கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள...

தாகமுற்ற மக்கள் தண்ணீர் பந்தலை நோக்கி தணியாத தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக கூடி திராவிடப் பெருங்குடி மக்கள், கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அன்று காலை முதலே அந்நகரில் திரண்டனர்!

மக்கள் கடலும் கருங்கடலும் இணைந்த காட்சியைக் கண்டவர் வியந்தனர்!

தந்தை பெரியார் என்பவர் வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதி;

தலைவர் பெரியார் திராவிடர் சமுதாயம் திணறும் போதெல்லாம் அதன் (மூச்சுத்) திணறலை மாற்றி வாழ வைக்கும் மூச்சுக் காற்று என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு ராஜபாளையம் ஓர் சான்று! இயக்கக் குடும்பங்களுக்கோ இது ஓர் இன்பமயமான கொள்கைச் சங்கம கோலாகலத் திருவிழா - பெருவிழா.

விடுத்த வேண்டுகோள் கண்டு விரைந்தோடி வந்து எங்களை உற்சாக மூட்டிய எங்களின் ஈடு இணையற்ற கழகக் குடும்பத்தினர்களே, உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி - கூறுவது தெரியாமல் திகைக்கிறோம்!

தமிழ் ஓவியா said...

மிகப் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல எம் கழகக் குடும்பத்தினர். என்றாலும் அறிக்கை வந்துவிட்டதே ராஜபாளையம் செல்லாமல் இருப்போமா? என்று கேட்டு, உற்சாகத்துடன் அவ்வூர் காணாத காட்சியின் மாட்சியை உருவாக்கினார்கள்!

ராஜபாளையம் மாநாடு குறித்து முன்கூட்டியே நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், மதுரை மண்டலத் தலைவர், செயலாளர், தென் மாவட்டப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அனைவருமே, மாவட்டப் பொறுப்பாளர்க ளுடன், பொதுச் செயலாளர், மாநில இளைஞரணிச் செயலாளர் ஆகிய அனைவரும் கலந்துரையாடி சிறப்பான திட்டங்களைத் தீட்டினர்.

கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான மானமிகு தோழர் ஜெயக்குமார்; அவருடன் 10 இளைஞர்கள் மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் இல. திருப்பதி, மாவட்டத் தலைவர் சிவகாசி வ. மணி, ராஜபாளையம் தோழர் சிவக்குமார், தோழர் கோவிந்தன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பாண்டிமுருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் சுமார் இரண்டு திங்களாக, தேனீக்களாகச் சுற்றிச் சுற்றிப் பறந்து பணியாற்றி இந்த மாபெரும் வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற நமது இலக்குச் சொல்லுக்கேற்ப இச்சாதனை சிறப்பாக வாகை சூடியதாக சாதாரண மக்கள், நடுத்தர மக்களை கடைகடையாக, வீதி வீதியாக அந்நகரத்திலும், சுற்று வட்டாரத்திலும் சென்று மாநாட்டுத் துண்டறிக்கைகளைக் கொடுத்து, எளிய தொகைகளை அன்பு பொங்க அவர்கள் தர, இவர்கள் பெற்றே இம்மாபெரும் மாநாட்டை நடத்தி, இளைஞர்கள் வரலாறு படைத்தனர்!

நல்ல இளம் போத்துக்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் பெரியார் சமூகக் காப்பணி புது முறுக்குடன் வீர நடை போட்டது.

அதன் பயிற்சியாளர்களான மானமிகு தோழர்கள் இரா. பெரியார்செல்வன் (இயக்குநர்), துணை இயக்குநர்கள்: சித. வீரமணி, தே. பொய்யாமொழி, ப. நாத்திக செழியன், பயிற்றுநர்கள்: அண்ணாசரவணன், கி. கார்வண்ணன், ச. விஜய்யோகானந்த், ம. திராவிடராசன், வ. ஆறுமுகம், அ. சித்தார்த்தன், இராம. சகாதேவன், அ. திருநாவுக்கரசு, விசுவநாதன், சி. அம்பேத்கர், கி. முரளி அனைவருமே குறுகிய காலப் பயிற்சியில் மிக அருமையான பணியைச் செய்து கட்டுப்பாட்டுக்குரியதே கருஞ்சட்டைப் படை என்பதைக் காட்டினர். அதிலும் குறிப்பாக திராவிடர் மகளிர் அதில் தனி அணியாகப் பங்கு பெற்று அணி வகுத்த காட்சி கண்டோரை மெய் சிலிர்க்க வைத்தது!

நமது உளப்பூர்வ நன்றி!

அந்நகரம் இதுவரை காணாத மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை பல்லாயிரம் மக்கள் இரு மருங்கிலும் திரண்டு நின்று வியந்து பார்த்து பக்தி மோசடிபற்றிச் சிந்திக்கத் துவங்கினர்!

விருதுநகர் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மிகவும் திறமையுடனும், பொது உணர்வுடனும் தங்கள் கடமையாற்றினர். அவர்களுக்கு நமது உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மிகப் பிரமாண்டமான அந்த மாநாட்டுக் கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்போ, அசம்பாவிதமோ எதுவும் நிகழவில்லை என்பதும் பேரணி வந்தபோதும் கடைகள் எல்லாம் திறந்தே இருந்ததோடு, மகிழ்ந்து பார்த்தனர்! இதையே ஊரில் உள்ள பல மக்கள் பேசி வியந்தனராம்!

அழகுக்கு அழகு சேர்த்த தளபதி மு.க. ஸ்டாலின் உரை

ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தினை செயல்பட வைக்க - அரசினை வற்புறுத்தும் வகையில் அறவழிப் போராட்டம் என்பதை அறிவித்த ராஜபாளையம் மாநாடு, கழகத்தின் பாட்டை ராஜபாட்டை என்பதை உணர்த்தும் மாநாடாக அமைந்தது.

சிறப்புரையாற்றிட்ட நம் இனமானத் தளபதி மு.க. ஸ்டாலின் அரியதோர் உரையாற்றி அழகுக்கு அழகு சேர்த்தார். அவர்களுக்கும் நமது தாய்க் கழகத்தின் சார்பில் நன்றி.

பணிகள் தொடரட்டும்; பிரச்சாரம் பெருகட்டும்!

சென்னை
7.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


இன இழிவை ஒழிக்கும் போராட்டத்துக்குத் தயாராவீர்!


இராஜபாளையம் மாநாட்டின் சிறப்பு அம்சங்களுள், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடியவையாகும்.

முதல் தீர்மானம் முதல் 20 ஆம் தீர்மானம் வரை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கப்பட வேண்டியவை!

அனேகமாக நம் சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகள் மீதும், ஊடுருவியும், கவனம் செலுத்தியும், கருத்தூன்றியும், தொலைநோக்கோடும், நடைமுறைக் கண்ணோட்டத்தோடும் தீட்டப்பட்டவை அவையாகும்.

ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டம் - தீண்டாமை ஒழிப்பு நோக்கம் இவற்றின் அடிப்படையிலும், இன இழிவைத் துடைத்தெறியும் ஓர் இனத்தின் சுயமரியாதைக் கண்ணோட்டத்திலும், தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

கடவுளே இல்லை என்று சொல்லும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்தான் இதற்காகவும் பாடுபட வேண்டிய - போராட வேண்டிய கடமையை முன்னிறுத்தியுள்ளது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

காரணம் கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை என்றாலும் அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை யாகும்.

கல்வி உரிமைக்காகவோ, வேலை வாய்ப்பு உரிமைக் காகவோ திராவிடர் கழகம் போராடும் போது இதனால் பலன் பெறுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகளா? பக்திமான்களா? என்று கழகம் பார்ப்பதில்லை.

எங்கள் இனத்தைச் சேர்ந்த பக்தியுள்ள தமிழன் அதற்குரிய பயிற்சியைப் பெற்றாலும்கூட அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி இல்லை என்று வெளியிலே பிடித்துத் தள்ளுவது - எந்த அடிப்படையில்? தமிழன் - இந்துமத அடிப்படையில் நாலாம் ஜாதி - சூத்திரன் - பிறவி அடிமை - பார்ப்பனர்களின் வேசி மக்கள் - அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி கிடையாது.

அவன் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுப் போய்விடும். அதற்காக பிராயச் சித்தம் செய்யப்பட வேண்டும் - சுத்திகரிக்க வேண்டும். 108 கலசங்களைச் செய்து வைக்க வேண்டும், பிராமண போஜனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அடுக் கடுக்காக நிபந்தனைகளை விதிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் தமிழர்கள் தங்கள் சூத்திரத் தன்மையை ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்? இந்தப் போராட்டத்தை பக்திமான்களாக இருக்கக் கூடிய தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்டிருந்தால் கருப்புச்சட்டைக்காரர்களுக்கு வேலை இருந்திருக்காதே!

தமிழர்களுடைய மான உணர்வைக் காப்பாற்றும் கடமை திராவிடர் கழகத்திற்கென்று ஆன நிலையில், அதற்கான களத்தில் நிற்க வேண்டியவர்களாகி விட்டோமே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை உண்டு என சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட, பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அதனை முடக்குகிறார்கள் என்றால் இதன் நிலையைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இந்த 2013 ஆம் ஆண்டிலும் தமிழர்களைச் சூத்திரர்களாக நிலை நிறுத்துவதிலும், பார்ப்பனர்கள் தங்களைப் பிராமணர் என்ற பிறவி ஆதிக்கத் திமிரி லிருந்து சற்றும் இறங்கி வரத் தயாராக இல்லை என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார்கள் என்பது விளங்கிடவில்லையா?

பார்ப்பனர்கள் எவ்வளவோ திருந்தி விட்டார்கள். இனி மேலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் தேவை தானா என்று அதிமேதாவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் பார்ப் பனர்கள் நடந்து கொள்ளும் தன்மையையும், போக்கையும் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் போதுமே, அந்தத் தருணத்திலேயே பார்ப்பனர்கள் பற்றி திராவிடர் கழகம் முன்னிறுத்தும் கருத்து நூற்றுக்கு நூறு மிக மிகத் துல்லியமாகவே சூரிய வெளிச்சம் போல உண்மை - உண்மையிலும் உண்மை என்பது விளங்கி விடுமே!

இந்த நிலையில் இராஜபாளையம் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு தீர்மானத்திலும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் மாநாட்டு உரையிலும் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த இரு மாதங்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இதுகுறித்து விளக்கமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று (தந்தை பெரியார் பெரும்பாலும் போராட்டம் நடத்திடத் தேர்வு செய்யும் நாளிது) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் பங்கேற்கும் போராட்டத்தை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக்க உள்ளார்.

கழகத் தோழர்களே தயாராக இருங்கள்! இருங்கள்!! போராட்ட வீரர்களின் பட்டியல் தயாராகட்டும்! தயாரா கட்டும்!

இன இழிவை ஒழிக்கும் போரிலே இன்னுயிரையும் இழக்கத் தயாராவோம்! தயாராவோம்!! வாழ்க பெரியார்!

வளர்க இன உணர்வு!!

தமிழ் ஓவியா said...


மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகுமுகாமின் குதூகலமான முதல் நாள்: நாம் தமிழர்கள்; தமிழில்தான் பெயர் வைக்கவேண்டும் துணைத் தலைவர் குழந்தைகளோடு குழந்தையாக மாறி கருத்துரை

தஞ்சை, மே 7- தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். ஆகவே, தமிழர்களாகிய நாம், நமது பிள்ளை களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்கவேண்டும் என்று துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பழகு முகாமின் முதல் நாளில், விடுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகளோடு இப்படி ஒரு கருத்தையும் குழந்தை களிடம் வைத்தார்.

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இணைந்து வழங்கும் பழகு முகாமின் முதல் நாளில் (6.5.2013) தொடக்க விழாவுக்குப் பிறகு, குழந்தைகள், தங்களைத் தாங்களே அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது.

ஒவ்வொரு குழந்தையுமே தனித் தனித் தன்மைகளோடு சுய அறிமுகத்தைத் தொடர்ந் தனர். ஒருவர், அவர்களுடைய ஊருக்கே கேட்பது போல வும், மற்றொருவர், புதிதாக ஒரு பாடலுக்கு மெட்டமைப்பது போலவும், கையை ஒருவர் ஆட்டிக் கொண்டேயும், வலது காலையோ, இடதுகாலையோ விரல்களை மடக்கி மடக்கிக்கொண்டும், தானாகவே சொல்வதும், சிலர் கேள்வி கேட்டால்தான் சொல்வதும் அப்பப்பா... ஒவ் வொரு குழந்தையுமே தனித்தனி குதூகலம்தான்.

அது மட்டுமல்ல, இந்த சுய அறிமுகம் குழந்தைகளுக்கே - அதாவது குதூகலங்களுக்கே குதூகலங்களாக இருந் தது குறிப்பிடத்தக்கது.

பெரியார் பிஞ்சுகள் ஒவ்வொருவரும் சுய அறிமுகம் செய்து முடித்த பின், மற்ற பிஞ்சுகள் அதை வரவேற்று கைதட்டி ஆரவாரம் செய்தது. அறிமுகம் செய்து கொள் கின்றவருக்கு அளவு கடந்த உற்சாகத்தைக் கொடுத்தது என்பதை அவரவர்களின் முகங்களே காட்டிக் கொடுத்தன.

தமிழ் ஓவியா said...

படீர்.... என்று பலூன் வெடித்தது கொல்லென்ற சிரிப்போடு....

சுய அறிமுகங்களின் ஊடேயே, ஒவ்வொரு குழுக்களிலும் சிலர் பங்கேற்கும் ஊதி ஊதி, பலூனை வெடிக்கச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேரம் இறக்கை கட்டிப் பறந்ததைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பலூன் வெடிக்கும்போதும், அதன் ஓசையையும் தாண்டி சிரிப்பொலி எழுந்து அய்ன்ஸ்டீன் அரங்கை நிறைத்தது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் பர்வீன், முனைவர் அதிரடி அன்பழகன், புதுவை வீரமணி, பேராசிரியர் ச.அருணாச் சலம் ஆகியோர் உடனிருந்து இந்த நிகழ்ச்சியை சுவைத்தனர். இந்த நிகழ்ச்சியை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சமூக கலைகள் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஹேமலதா சிறப்பாக ஒழுங்கு செய்தார்.

பூனையை எந்தப் பள்ளிக்கூடத்தில் அதிகமாக வளர்ப்பார்கள்

சுய அறிமுகம் நிகழ்ச்சி முடிந்த பிறகு, குழந்தைகள் அனைவரும் குழு வாரியாக ஒழுங்கு செய்யப்பட்டு, வரிசையாக பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர் களின் வழிகாட்டுதலோடு மதிய உணவுக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு விருப்பமான உணவு பரிமாறப்பட்டது. கவிஞர் உள்பட, ஒருங் கிணைப்பாளர்கள் அனைவரும், குழந்தைகளை நன்றாக உண்ணும்படி ஊக்கினர். அப்போது, கவிஞர் பூனையை எந்தப் பள்ளிக்கூடத்தில் அதிகமாக வளர்ப்பார்கள் என்றொரு விடுகதையை விடுத்து, குழந்தைகளுக்குள் விடை தேடும் பரபரப்பை உண்டாக்கி விட்டார். விடையை மாலை நிகழ்ச்சியில் சொல்கிறேன் என்று சொன்னதும், அவர்களின் பரபரப்பு இன்னமும் கூடிவிட்டது.

கற்பனைத் திறன் வளர்க்கும் கலைகள்

மதிய உணவினைத் தொடர்ந்து, அறிவியல் மய்ய (Knowledge Centre) அரங்கில், கணினியில் அவர் களுக்குப் பிடித்த விளையாட்டுகள், கோளரங்கத்தில், டைனோசர்கள் எப்படி அழிந்தது, விண்கோள்களின் தன்மைகள், மனிதர்கள்பற்றிய அரிய தகவல்கள், ஒலி - ஒளி காட்சியாகவும் - விளையாடியும், கண்டும் களித்த பிறகு, ஓவியப் பயிற்சி உள் விளையாட்டரங்கில் தொடங்கியது. தாளும், பென்சிலும் கொடுக்கப்பட்ட உடனேயே அந்தப் பென்சில் பெட்டியில் இருந்த இரட்டைக் குருவிகளை வரையத் தொடங்கிவிட்டனர்.

பிறகு அவர்களுக்கு, ஓவியக் கலையில் டாக்டரேட் பயின்று கொண்டும், ஓவிய ஆசிரியராக பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே.செந்தில்நாதன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கட்டடக் கலைத்துறை கலைப் பயிற்றுநர் சு.திருநாவுக்கரசு ஆகி யோர் குழந்தைகளை வழி நடத்தினர். மிகுந்த ஆர்வத் துடன் இயற்கைக் காட்சிகளை வரைந்து அசத்தினர்.

ஓடி விளையாடு பெரியார் பிஞ்சுகளே!

கலைப் பயிற்சிகளைத் தொடர்ந்து, வட்டமாக நின்றபடி, பந்தை அடுத்தவரிடம் வேக வேகமாக கொடுத்தல், பந்தைப் பிடித்துப் பழகுதல், ஆள்மீது பந்தை அடித்தல், கால்பந்தை கோல் அடிக்காமல் தடுத்தல், இப்படி வெட்டவெளி விளையாட்டரங்கில், சுற்றி சுற்றி எங்கு பார்த்தாலும் உற்சாக உருவங்களாய் ஹேய் என்றும், ஓவென்றும் கவனத்தை ஈர்க்கும் ஓசைகளோடு ஆரவார விளையாட்டுகள் மாலை வரையிலும் தொடர்ந்தன. பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்களும் குழந்தைகளா கவே மாறி விளையாடி, குழந்தைகளையும் விளையாட வைத்தனர். அங்கேயே அனைவருக்கும் சூடான, சுவையான சிற்றுண்டி கொடுக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


பறவைகள் நம் உறவுகள்

ஓடி ஆடி விளையாடி இருந்தாலும், களைப்பே இல்லாமல், பயிற்சி ஆசிரியர்களிடம் நாடகம் எப்பொழுது... எப்பொழுது... என்று குழந்தைகள் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த நாடகமும் வந்தது. வேலு மாமா என்று குழந்தைகளால் அன்போடு அழைக்கப்படும் புதுவைக் கல்லூரியின் நாடகத் துறைப் பேராசிரியர் வேலு சரவணனின் நாடகம் முத்தமிழ் அரங்கத்தில் தொடங்கியது. பறவைகளை வேட்டையாடக் கூடாது. அது சுற்றுச்சூழலுக்குக் கேடு என்ற கருத்தில், மூச்சை நிறுத்தும் ஆரவாரத்தோடு நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் பர்வீன், புதுவை வீரமணி ஆகியோர் உடனிருந்து குழந்தைகளின் உற்சாகத்தில் பங்கெடுத்தனர்.

மதியம் விடுகதை- மாலையில் விடை

பொழுதுபோக்கும், நல்ல கருத்துமாக அமைந்த நாடகம் நடைபெற்றது. முடிந்த பிறகு, குழந்தைகள் அனை வரும் பங்கேற்கும் கதை, விடுகதை, பாடல், உரைகள் என்று தயக்கத்தை விடுத்து, தானாக மேடைக்கு ஏற்றும் விந்தை நிகழ்ச்சி தொட ங்கியது.

இந்நிகழ்ச்சியை துணைத் தலைவர் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில்தான், மதிய உணவின்போது சொன்ன, பூனையை எந்தப் பள்ளிக்கூடத்தில் அதிகமாக வளர்ப்பார்கள் என்ற விடு கதைக்கு விடை கிடைத்தது. முதலில், குழந்தைகள் தங்க ளின் ஊகங்களாக எதை எதையோ சொல்லிப் பார்த் தனர்.

இறுதியில், விடுகதை யைச் சொன்னவரே விடை யையும் சொன்னார். பூனையை எந்தப் பள்ளிக்கூடத்தில் அதிகமாக வளர்ப்பார்கள் என்று விடுகதையை மீண்டும் ஒருமுறை சொல்லி, எலி மென்ட்ரி பள்ளியில்தான் என்று விடையைச் சொன்னதும், பார்க்கவேண்டுமே, அனைவரின் உற்சாகத்தை!

தங்களுக்குத் தெரிந்த இதுபோன்ற விடுகதைகளை பீறிட்டெழுந்த நீரூற்றுபோல, போட்டி போட்டுக்கொண்டு, மேடைக்கு வந்து, அறிவுபூர்வமாகவும், நகைச்சுவையா கவும் கலந்து சொல்லி அசத்திவிட்டனர் பிஞ்சுகள்.

இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில்தான் கவிஞர், சரியாக விடைசொன்னவர்களை மேடைக்கு அழைத்துப் பாராட்டும் விதமாக அவர்களது பெயரைக் கேட்டும், பல பெயர்கள் வடமொழிப் பெயர்களாக இருந்ததைக் கண்டுதான், தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். நாம் தமிழர்கள். நமது பெயர்களும் இனிமையாக இருக்கவேண்டாமா? ஆகவே, தமிழில் பெயர் வைத்துக் கொள்ளவேண்டும்.

தமிழ் ஓவியா said...

வாய்ப்புள்ளவர்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, சவுரிராஜன் போன்ற சில பெயர்களுக்கு தமிழில் விளக்கம் கூறி பிஞ்சுகளுக்கு விழிப்பூட்டினார்.

இதற்கிடையில், நிலவன் என்ற பெரியார் பிஞ்சு, தோழா வா தோழா, நீ தறிகெட்ட கூட்டமல்ல, வீரமணி கூட்டமடா, தன்மானமுள்ள கூட்டமடா என்ற பாட்டைப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். புதுவை வீரமணி, பேராசிரியர் பர்வீன் ஆகியோர் உடனிருந்து உற்சாகப்படுத்தினர்.

குஞ்சுகள் கூடுகளுக்குள் அடங்கின

இரவு உணவைத் தொடர்ந்து, குஞ்சுக் குளுவான்கள் அனைவரும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்றனர். ஒவ்வொரு அறையிலும் பெரியார் பிஞ்சுகளை கவனிக்கவும், பராமரிக்கவும் ஒருவர் உண்டென்றாலும், பிரின்சு போன்றவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு அறைகளுக்கும் சென்று, பிஞ்சுகளுடன் உரையாடி அவர்களை உறங்கச் செய்து வந்தனர்.

இப்படியாக பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திற்கு அனைத்துவித சட்ட உதவிகள் செய்யப்படும் கழக வழக்கறிஞரணி கலந்துரையாடலில் முடிவு

மதுரை, மே 7- மதுரை யில் திராவிடர் கழக வழக்கறிஞரணி கலந்து ரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மதுரையில் திரா விடர் கழக வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் 3.5.2013 மாலை 6 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மதுரை ஆர்த்தி வீடுதி யில் நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக் கைக்காக போராடும் திராவிடர் கழக தோழர் களுக்கு அனைத்துவித சட்ட உதவிகளை செய் வதென தீர்மானிக்கப் பட்டது.

2. திராவிடர் கழக வழக்கறிஞரணி தோழர்கள் அனைவருக்கும் கணினி பயிற்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

3. பெரியார் மணி யம்மையார் பல்கலைக் கழகத்தில் Faculty of Law அல்லது Law School of Excellance அமைக்க வேண்டுமென்று கோரிக்கை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

4. பெரியார் இலவச சட்ட ஆலோசனை முகா மினை 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டு மென தீர்மானிக்கப்பட் டது.

5. அந்தந்த பகுதிகளி லுள்ள திராவிடர் கழக வழக்கறிஞரணியினர் மாதம் ஒரு முறை சட் டங்கள் பற்றிய கலந்து ரையாடல் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

6. திராவிடர் கழக வழக்கறிஞரணி கலந்து ரையாடல் கூட்டங்களின் போது அதனையொட்டி சிறப்பு சட்ட கருத்தரங்கு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

வழக்கறிஞரணி கலந் துரையாடல் கூட்டத் தில் கலந்து கொண்ட வர்கள். ச.இன்பலாதன் வழக்கறிஞரணி, மாநில செயலாளர் நீதிபதி பொ.நடராஜன் (பணி நிறைவு), மாநில துணைத் தலைவர், வழக்கறிஞ ரணி, பி.கே.இராஜேந்தி ரன், மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞ ரணி, மு.க.இராஜ சேகரன், பொருளாளர் மாநில வழக்கறிஞரணி, வழக்கறிஞர் ஆ.பாண்டி யன், வழக்கறிஞர் ந. இளங்கோ, வழக்கறிஞர் ஜே.தம்பி பிரபாகரன், மாநில துணைச்செய லாளர், வழக்கறிஞர் அணி, வழக்கறிஞர் ம. திராவிட எழில், வழக் கறிஞர் ஆர்.உத்திரகுமா ரன், வழக்கறிஞர் ந. தமிழ்மணி, வழக்கறிஞர் பெ.மகேந்திரவர்மா, வழக்கறிஞர் கு.கிரிபிர சாத், வழக்கறிஞர் நா. கணேசன், வழக்கறிஞர் கி.சண்முகராசா, வழக் கறிஞர் க.கருப்பசாமி, வழக்கறிஞர் பா.சந்திர மோகன், வழக்கறிஞர் ந.செல்வராஜ், வழக்கறி ஞர் இரா. சரவணக் குமார், வழக்கறிஞர் வி.அருளரசன், வழக் கறிஞர் கு.பா.சாக்ரடிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் டும்! டும்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை யடுத்த கோழிக்கால் நத்தம் பகுதியில் நடந்துள்ள ஒரு நிகழ்வு - மக்கள் இன்னும் கற்காலத்தில்தான் உழலுகிறார்களோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்துகிறது.

மழை பொழியவில்லையாம் - கடும் வறட்சி ஏற்பட்டுவிட்டதாம் - விவசாயம் செய்ய முடிய வில்லையாம்.

என்ன செய்தார்கள் தெரியுமா? கழுதைக் கும், கழுதைக்கும் கல்யாண ஏற்பாடாம்.

சாதாரணமாக அல்ல - கல்யாணப் பத்திரிகை அடித்து அழைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. நாள் நட்சத்திரம் பார்க்கப்பட் டுள்ளது (ஒரு சந்தேகம் கழுதைக்குத் தாலி கட்டிய அந்தவூர் பிரமுகருக்கும், அந்தக் கழுதைக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் பட்டதா என்ற விவரம் தெரியவில்லை).

அய்தீக முறைப்படி சடங்குகள் நடந்தன வாம்! ஆண் கழுதைக்கு ஸ்ரீஹரி என்றும், பெண் கழுதைக்கு ஸ்ரீயோக லட்சுமி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்னிகுண்டம் இடம்பெற்றதாம் (அய்யர் வந்து மந்திரம் சொன்னதுபற்றித் தகவல் இல்லை).

அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பெண் கழுதைக்குத் தாலி கட்டியுள் ளார்.

நீ முதலில் ஸோமனுக்கு மனைவியாக இருந்தாய்; இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாய்; மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்தாய்; நான் காவதாகத்தான் எனக்கு மனைவியாக வந்துள்ளாய் என்ற கல்யாண மந்திரத்தை பெண் கழுதையை நோக்கி சொன்னார்களா என்பதும் தெரியவில்லை.

இன்னொரு தகவல் சாந்தி முகூர்த்தம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

மனிதன் பகுத்தறிவு பெறவில்லையென் றால் கழுதைக்குக் கூடக் கல்யாணம் செய்வான் என்பதைப் புரிய வைக்கவேண்டும். மற்ற எந்தப் பிரச்சாரத்தையும்விட பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் முதன்மையானது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் எத்தகைய முக்கியத் துவம் வாய்ந்தது என்பதும் தெரியவில்லையா?

மதம் மனிதனைக் கழுதையாக்கும் - பகுத்தறிவு மனிதனை செழுமையாக்கும் புரிகிறதோ! (ஆமாம், கழுதைக்கும் கழுதைக் கும் கல்யாணம் ஆகிவிட்டதே - மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்டதோ!)

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டங்கி என்ற ஊரைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். எதற்கு?

எந்த வாகனத்தில் வந்தனர்? சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியில் ஏறி வந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சிங்கராய கொண்டா அருகே லாரி வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்தது - கவிழ்ந்தது! சிமெண்டு மூட்டைகளுக்குள் சிக்கி அந்த பத்துப் பக்தர்களும் பரிதாபகரமாக மடிந்தனர் என்பது ஏடுகளில் வெளிவந்த செய்தி!

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் கடவுளைக் கும்பிட வந்தபோது விபத்தில் சிக்கிச் செத்துப் போய்விட்டனரே!

ஒருகணம் பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? கடவுளைத் தேடி வந்தவர்களை குறைந்தபட்சம் அந்தக் கோவில், அந்தக் கடவுள் பக்தர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கவேண்டாமா?

ஏன் காப்பாற்றவில்லை? கடவுள் என்ற ஒன்று இல்லை - எனவே, காப்பாற்றவில்லை.

திருப்பதி கோவில், அய்யப்பன் கோவில் என்று சொல்லி சாமி கும்பிடச் செல்லும் பக்தர்கள் மரணம்பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

அப்பொழுதுகூடப் பக்தர்கள் புத்தி கொள்முதல் பெறவில்லையே - ஆம், பக்தி வந்தால் புத்தி போயே போகுதே!

கூடுதல் தகவல்: (Tail Piece) திருச்சி அருகே சிறுகனூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட நான்கு பேர் சாவு!

எந்த மதக் கடவுளுக்கும் சக்தி இல்லவே யில்லை - போதுமா?

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரர் துறவறம் பூண்டவரா?

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி துறவறம் பூண்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்! அதை முன்னிட்டு 60 தம்பதிகளைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் ஒரு மண்டபத்தில் நடைபெற்றதாம்.

அந்த நிகழ்ச்சியில் அந்த சாட்சாத் ஜெயேந்திரரும், அவரின் சீடர் விஜயேந் திரரும் கலந்துகொண்டனராம்.

60 ஜோடிகளுக்கும், பக்தர்களுக்கும் ஜெயேந்திர சரஸ்வதி அருளாசி வழங்கினா ராம். இந்த விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப் பட்டதாம்.

பார்ப்பனர்களின் இனப்பற்றுக்கு இது ஒரு சான்று. ஜெயேந்திர சரஸ்வதி அனைத்தையும் துறந்தவரா? அவர் 60 ஆண்டுகாலமாகத் துறவியாகத்தான் வாழ்ந்து வருகிறாரா?

இந்தப் பத்திரிகை செய்தியைப் படித்தவர் கள் யாராவது வாயால்தான் சிரிக்க முடியுமா?

ஊருக்கு ஊர் காதலிகள், காமகோடியின் சங்கர மடமே காமக்கோட்டமாக, ஆபாசச் சேட்டையின் பஞ்சு மெத்தையாக இருந்து வந்துள்ளதை பார்ப்பன எழுத்தாளரான அனுராதா ரமணன் ஊர் சிரிக்க வைத்தாரே! நக்கீரன் வார இதழ் தோரணம் கட்டி தொங்கவிட்டதே!

இவ்வளவுக்குப் பிறகும் இந்தப் பார்ப் பனர்கள் அந்த வெட்கம் கெட்ட மனிதரை ஜெகத்குரு என்பதும், முற்றும் துறந்தவர் என்பதும் அவாளிடத்தில் உள்ள இனப் பற்றைத்தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...


திராவிட மாணவர், இளைஞரணி கழகத் தோழர், தோழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண்டும். அதனடிப்படையில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச்சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ‘The Modern Rationalist’ ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும்,

நமது இயக்க நடவடிக்கைகள், முக்கிய உரைகள், தீர்மானங்கள்பற்றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுதுவது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல் படுவது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம்.

திராவிடர் மாணவர் மாநில கழகச் செயலாளர் பிரின்ஸ் அவர்கள் தலைமையில் இதற்கென ஒரு சிறப்புக்

குழு விரைவில் அமைக்கப்பட விருக்கிறது.


சென்னை
7.5.2013

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சமூகநீதியாளர்கள் ஓரணியில் திரளட்டும்!

இராஜபாளையம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமுமே அதனதன் தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமூகநீதி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எட்டில் ஒன்பது உள்தலைப்புகள் கொண்டவை.

இந்திய பணியாளர்த் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுதிடும் வாய்ப்பு, தாழ்த் தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) ஒட்டுமொத்தமாக அகற்றுதல், மத்திய தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுத் தொகுதியில் (Open Competition) இடம்பெறவேண்டிய பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் இட ஒதுக்கீடு பிரிவில் கொண்டு போய் வைப்பதும், அதனால் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றவர்களை வெளியேற்றுவது என்னும் சதி அரங்கேற்றப்படுவதைத் தடுத்தல், பத்தாண்டு களுக்கு ஒருமுறை தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைக்கவேண்டிய நிலையில், பல பத்தாண்டுகள் பறந்துபோன நிலையிலும், அத்தகைய ஆணையங் களை நியமனம் செய்யாமை - மண்டல் குழுப் பரிந்துரையில் கல்வி, வேலை வாய்ப்பு மட்டுமன்றி பொருளாதாரத் துறையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அளிக்கப்படவேண்டிய வாய்ப்புகள்பற்றி அரசு சிந்திக்காமல் இருக்கும் போக்கு உள்ளிட்ட பல்வேறு சமூகநீதித் தொடர்பான, நியாயமான சட்ட ரீதியான பிரச்சினைகளை இராஜபாளையம் மாநாடு மிகவும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டி குறிப்பாக மத்திய அரசினை வலியுறுத்தியுள்ளது தீர்மானம்.
குறிப்பாக இட ஒதுக்கீட்டின் அளவுகோல் என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னடைந் துள்ள நிலையைச் சுட்டிக்காட்டுவதாகும். சமூக ரீதியாக என்பதில் ஜாதிதான் முக்கிய இடம் பெறுகிறது.

ஜாதியின் காரணமாகத்தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, ஜாதியின் அளவுகோல் என்பது முற்றிலும் சரியானதே! இதில் பொருளாதார அளவுகோல் எங்கிருந்து குதித்தது? அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கோ, குழு உறுப்பினர்களுக்கோ தெரியாத விடயமா?

அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலாவது பொருளாதார அளவுகோல் பற்றிப் பேசப்பட்டுள் ளதா? இட ஒதுக்கீடு இத்தனை சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தானடித்த மூப்பாக இவற்றைத் திணித்தது சட்டப்படி சரியானதுதானா?

இவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவேண்டும். இதனை இந்தியத் துணைக் கண்டத்திலேயே முழுமையாக மிகவும் துல்லியமாகச் செய்யக்கூடிய ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்பட வைத்ததற்கும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு) ஒழிக்கப்பட்டதற்கும், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு நிலை பெறச் செய்வதற்கான வழிமுறை களைச் சொல்லி அ.இ.அ.தி.மு.க. அரசைச் செயல்பட வைத்ததற்கும் முழு முதற்காரணம் திராவிடர் கழகம் அல்லவா!

அந்த நிலையில்தான் சமூக நீதியில் இன்னும் எட்டப்படவேண்டியவை குறித்து துறை வாரியாகச் சுட்டிக்காட்டி மாநில - மத்திய அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட இராஜபாளையம் மாநில இளை ஞரணி மாநாட்டுத் தீர்மானங்கள் என்றென்றும் பேசப்படக்கூடியவை.

தீர்மானத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை களை நிறைவேற்ற, சமூகநீதி சக்திகளை இந்திய அளவில் ஒன்று திரட்டித் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செயல்படுவார். சமூகநீதியாளர்கள் கட்சிகளை மறந்து அணி திரளட்டும்!

தமிழ் ஓவியா said...


புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு!


அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!

உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.

எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!

கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.

அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.

உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!

நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா!

தமிழ் ஓவியா said...


புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு!


அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!

உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.

எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!

கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.

அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.

உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!

நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா!

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள் களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, 22.6.191973

தமிழ் ஓவியா said...


கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க ஆட்சியே!
+2 தேர்வில் பெருவாரியாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் - வாய்ப்புத் தந்தால் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெறுவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

ஜாதிக் கலவரத்தில் ஈடுபடாமல் வட மாவட்ட மாணவர்கள் தென் மாவட்டங்களைப் பார்த்து சாதனை படைக்க வேண்டும்! தமிழர் தலைவரின் அறிக்கை

+2 தேர்வில் வெளிவந்த முடிவுகளை ஒப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக் கையில், தென் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்; வட மாவட்டத்தில் உள்ளவர்கள் ஜாதிக் கலவரங்களில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

சுமார் எட்டரை லட்சம் மாணவ - மாணவிகள் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மிகச் சிறப்பான வகையில் மதிப்பெண்களை எடுத்து, தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சி தொடக்கிய கல்விப் புரட்சி, தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் ஏற்றமிகு வீச்சின் காரணமாக காமராசர் ஆட்சி, தொடங்கி அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, இன்றைய அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா ஆட்சி வரை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது!

குலக்கல்வித் திட்ட ஒழிப்பு?

1952-53 ராஜாகோபாலாச்சாரியாரின் குலதர்மக் கல்வித் திட்டம் தந்தை பெரியார் இயக்கத்தின் பேரெதிர்ப்பால் ஒழித்துக் கட்டப்பட்டு, புதரின் புற்றரவங்களை அழித்து, பூங்காக்களை உருவாக் கியதுபோல, இன்று நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து ஓடிய வண்ணம் உள்ளது!

சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகக் கொண்ட மதத்தினர் பெரும்பாலோர் உள்ள நாட்டில், பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளாக சரஸ்வதி மூடநம் பிக்கை - வாழும் சரஸ்வதிகளைக் கூட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக ஆக்காத நிலையில், திராவிடர் இயக்கம் தான் குறுகிய 85 ஆண்டு காலங்களில் வாதாடியும், போராடியும், புதிய அரசுகளின் இடஒதுக்கீடுகள், சமூக நீதிக்கான ஆணைகள், சட்டங்கள் மூலம் இந்த கல்விப் புரட்சியை அறிவுப் புரட்சியாக, அமைதிப் புரட்சியாக மலரச் செய்து மகத்தான சரித்திரம் படைத்துள்ளது.

கல்வி வளர்ச்சி!

பஞ்சாயத்து யூனியன்கள் சுமார் 455; ஆனால் அந்த எண்ணிக்கையையும் தாண்டி பொறியியல் கல்லூரிகள் 556 முதல் புதியவை இணைந்தால் 575 உள்ளன!

பல ஆயிரம் காலி இடங்கள். (பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்குத் தயாராக அடிக்கட்டுமான வசதிகளுடன்!)

ஏறத்தாழ மாவட்டந்தோறும் தி.மு.க. - கலைஞர் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் - இப்படிப் பல.

விவசாயத் தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள், கால்நடைக்கான பல்கலைக் கழகங்கள் - எல்லாத்துறைகளிலும் வளர்ச்சி. தனிச் சிறப்போடு இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் நாட்டில் 2500 பல்கலைக் கழகங்களே தேவை என்பது அறிவு சார் குழுவின் கருத்து.

இத்தகைய கல்விப் புரட்சி. ஏராளமான பள்ளிகள் - தனியார் துறைக்குப் பதிலாக அரசே நடத்த வேண்டும் என்பது சமதர்மம் முழுமையாக அமலானால் தான் சாத்தியமாகும். அதுவரை தனியார் பங்களிப்பு இன்றேல், இவ்வளவு பெரும் வளர்ச்சியைக் காண முடியாது. கல்வித்துறை முன்புபோல பற்றாக் குறையில்தான் இருக்க வேண்டியிருந்திருக்கும்! தேர்வு முடிவுகள் வந்துள்ளதில் ஒரு புதுமை - புரட்சி!

உள் மாவட்ட மாணவர்களின் சாதனைகள்!

பெரும் நகர்ப்புறப் பள்ளிகளிலிருந்து முதலாவது, இரண்டாவது (மாநில அளவில்) மாணவ, மாணவிகள் வரவில்லை.

நாமக்கல், ஓசூர் போன்ற உள் மாவட்டங்கள் கிராமாந்திரப் பள்ளிகள் தான் சாதித்துள்ளன!

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்!

சென்னை - மேட்டிமை வகுப்பு Elite - பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வழக்கம்போல் பெண்கள் - மாணவிகள் 91 விழுக்காடு தாண்டி விட்டனர்!

ஆண்கள் - மாணவர்கள் 84 விழுக்காடுதான் வெற்றி பெற்றுள்ளனர்!

பெண் கல்வி பரவுவதையும், வாய்ப்புத் தந்தால் நமது மகளிரின் ஆற்றல் ஆண்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதையும் காட்டியுள்ளது!

தென் மாவட்டங்களைப் பாரீர்!

தென் மாவட்டங்கள் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்கின்றன; வட மாவட்டங்களின் பெயர்கள் ஜாதிக் கலவரங்களில் அடிபடாமல், இப்படியாக ஆரோக்கிய போட்டியில் இனியாவது கவனம் செலுத்தினால் அது மிகவும் சிறப்பாக அமையும்.

சென்னை
10.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் சேமிப்பு வங்கி - மனித குல தொண்டறத்தில் புதிய பரிமாணம்!


நேற்று (9.5.2013) மாலை கலைஞர் தொலைக்காட்சி, செய்தியில் ஒரு புதுமையான அறிவியல் - மருத்துவ இயல் சாதனை சீனாவில் நிகழ்ந்துள் ளதைக் கூறினார்கள்.

மனித குலத்தின் வருங்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட வேண்டிய அற்புதமான சாதனை - அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற கற்பனைக் கதைகளைத்தான் நாம் இதுவரைக் கேட்டு வந்தோம்!

அறிவியல் தொழில்நுட்பம் - மருத் துவத் துறையில் மிக அற்புதமான, வளர்ச்சிக்குரிய புதுயுக சாதனை களைச் செய்து நாளும் புதுமை சேர்த்து வருகிறது!

ஆதி மனிதனுக்கு வேட்டையாடத் தான் தெரியும்; மிருகங்கள் தாக்கிய போது அவன் ரத்தம் சிந்தி மரண மடையும் நிலைதான் - துவக்கத்தில்.

ஆனால் மனித ரத்தம் இப்படி, பயனற்று சிந்தப்படுவதும் உண்டு. (இன்றும் வன்முறை வெறியாட்டங் களில் சிந்தும் ரத்தமும் - ஜாதிக் கலவரம், மதக் கலவரம் - ஜாதிக்கலவரங்கள், பயங் கரவாதக் கலகங்கள் மூலம் சிந்தப்படும் ரத்தமும் - மிக அதிகம் தான்).

என்றாலும் மருத்துவத் துறையில் தொழில் நுட்பம் புகுந்ததின் விளைவாக, ரத்ததானம், ரத்த சேமிப்பு வங்கி கண்டுபிடிக்கப்பட்டு, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்ததானம் - குருதிக் கொடை - மூலம் தரப்படுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றும் அரிய தொண்டறம் அல்லவா இது!

அதன்பிறகு மனித உறுப்புக்களைக் கொடையாக வழங்கும் - கண்தானம் பரவலாக ஏற்பட்டு வருகிறது!
செத்தவர் இதன்மூலம் வாழுபவராக வாழ்கிறார் என்பதில்தான் எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

இதற்கென கண்கள் சேமிப்பு வங்கிகள் (Eye-Bank) உருவாக்கப்பட் டுள்ளன.

சிறிய மருத்துவமனைகளில் இவை போன்றவைகளைச் சேகரித்து வைக்க முடியா விட்டாலும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் ரத்த வங்கி, கண் வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுகின் றனர்.

உடலுறுப்புக் கொடையும் அண்மை யில் தாராளமாக, ஏராளமாக மக்களின் இதயங்களில் அன்பு நதிகள் ஓடுகின்ற காரணத்தில், மகிழ்ச்சியும் அளித்து மன நிறைவு கொள்ளுகின்றனர்!

தந்தை பெரியார் அவர்களின் கடைசிப் பொதுக் கூட்டம் 19.12.1973 சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. அப்போது வேனில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அய்யா அவர்களின் அந்நாளில் வந்த Illustrated Weekly of India-வில் ஒரு புதுமையான செய்தியை படித்துக் காட்டினேன்.

மனிதனின் விந்துவைச் சேகரித்துப் பிறகு பயன்படுத்தும் வகையில் (Seman Bank) விந்து வங்கியை ஏற்படுத்தி, பாதுகாப்பாக வைக்கும் முறை செயல்படத் துவங்கியுள்ளது - அறிவியலின் மற் றொரு அற்புதமான மருத்துவ தொழில் நுட்பச் சாதனை என்பதைக் கேட்ட தந்தை பெரியார் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்!

ஒருவன் விபத்துக்குள்ளான போதி லும் கூட மரணமுற்றாலும்கூட - அவ னது விந்துவை இன்செக்ஷன் செய்து, அவனுக்கே குழந்தை அவன் மனைவி மூலமோ, அல்லது வாடகைத் தாய் மூலமோ பிறக்க வைக்க முடியும்; இதை 10 ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம் என்ற குறிப்பும் இருந்தது!

இதைப்பற்றி அவரது தியாகராயர் நகர் பேருரையில் குறிப்பிட்டு மகிழ்ந் தார்கள்!

தாய்ப்பால் தான் குழந்தைகளின் ஊட்டத்திற்கு மிகவும் அவசியம். பல குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து இல்லாததால் நலிவுற்ற நிலையில் சீனாவில் இருப்பதை அறிந்து அங் குள்ள அரசு - சுமார் 2000 கோடி அமெரிக்க டாலர் செலவில், தாய்ப் பால் சேகரிப்பு வங்கி ஒன்றை நிறுவியுள்ளார்களாம்!

ஒரு தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு போத்தலில் தூய்மையாக லாவகமாக கைபடாமல் கறந்து சேமித்து பாதுகாத்து, ஊட்டமில்லாத குழந்தைகளுக்குத் தரும் ஏற்பாடாம்!

என்னே அறிவியலின் விந்தை - மனித குல வரலாற்றில் இது மாபெரும் கண்டுபிடிப்பு, ஏற்பாடு மட்டுமல்ல - தலைசிறந்த தொண்டறமும் ஆகும்!

சுரந்த பாலை வீணாக்காமல், தாயும் நலத்துடன் வாழ இது உதவிடக் கூடும். இம்முயற்சியின் மூலம் மற்ற நாடுகளுக்கு சீனா வழிகாட்டியுள்ளது!

கறந்த பால் முலைபுகா
கடைந்தவெண்ணெய் மோர்புகா

- என்று சித்தர்கள் பாடினார்கள்.

தாயின் முலைப்பால் பல குழந்தை களைக் காப்பாற்றிடப் பயன்படும்போது தாய்மையே தனிச் சிறப்பல்லவா பெறுகிறது?
--கி.வீரமணி -10-5-13

தமிழ் ஓவியா said...

மாநாடு நடத்துவது எளிது! புதிய சாதனை! - புதிய வரலாறு!


- வி.சி.வில்வம்

இந்தத் தலைப்பைப் படித்தவுடன் எழுதுவது எளிது என்று நீங்கள் எண்ணக் கூடும். எண்ணிய பிறகும் கூறுகிறோம், மாநாடு நடத்துவது எளிது. உதாரணம் இராஜபாளையம்!

வாய்ப்பு, வசதிகள் குறைந்த ஊரில், ஜாதி, மதம். ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டிகள் நிறைந்த ஊரில் சாதனைப் படைப்பது கூட, நம் தோழர்களுக்கு எளிதுதான்! அதனால் தான் ஆசிரியர் அவர்கள் 07.05.2013 நாளிட்ட தம் அறிக்கையில், இராஜபாளையம் மாநாடு உண்மையி லேயே ஒரு வரலாறு படைத்த மாநாடாகும்.

தென்திசையில் ஏற்பட்ட புத்து ணர்ச்சி வெள்ளத்தில் பூரிப்பின் உச் சிக்கே சென்றேன், என எழுதி இருக் கிறார்கள். அந்தளவிற்கு இது திட்டமிடப்பட்ட மாநாடாக அமைந்துவிட்டது. எதிர் காலங்களில் இம்மாநாட்டின் செயல் முறைகள் நமக்கு வழிகாட்டும் திசைக் கருவியாக விளங்கிடும். தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 19 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

அன்றுதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இம் மாநாட்டை அறிவிக்கிறார்கள். அறிவிப்பு வெளியான அக்கணமே, தோழர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். மாநாட் டுச் சீருடை அணிவகுப்பில் மூவாயிரம் தோழர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும் , குறைந்தது - 15 இலட்சம் ரூபாய் நன்கொடைத் திரட்டுவது என்றும் தீர்மானிக்கிறார்கள்.

அதற்கு முன்னோடியாக 24.02.2013 அன்று 12 மாவட்டங்கள் பங்கேற்ற, மதுரை - திருநெல்வேலி மண்டலக் கூட்டம் இராஜபாளையத்தில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் பங்கேற்ற அக்கூட்டத்தில் நன் கொடையாக 1,48,000 அறிவிக்கப்பட்டது.

இதில் இளைஞரணியின் அறிவிப்பு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் ஆகும். அறிவிப்பு மட்டுமல்ல, 50 ஆயிரம் ரூபாய் அங்கேயே வசூலாகி, சாதனையானது. அதன் மூலம் சுவரெழுத்துகள் முடுக்கிவிடப்பட்டன. தெற்கின் 12 மாவட்டத்திற்கும், மாநாட்டின் சார்பாகவே எழுதப்பட்டன. அவைகளின் எண்ணிக்கை 50, 100 இல்லை, 300 க்கும் மேற்பட்ட சுவரெழுத்துகள்.

தென்மாவட் டங்களை அழகுறச் செய்து, அதிரச் செய்த பணிகள் அவை. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுவ ரெழுத்துகள் பரவத் தொடங்கின. தஞ்சாவூர் நகரில் மட்டும் 22 இடங்களில் இராஜபாளையம் பெருமைப் பேசப்பட்டது.

இவை ஒருபுறமிருக்க மானமிகு கலி.பூங்குன்றன், வீ.அன்பு ராஜ், இரா.செயக்குமார் உள்ளிட்ட 10 பேர் ஒருங்கிணைப்புப் பணி ஏற்கிறார்கள். தென்மாவட்டப் பொறுப்பாளர்கள் 8 பேர் வரவேற்புக் குழுவில் இடம் பெறுகிறார் கள். இதன் உறுப்பினர்களாக 12 மாவட் டத்தைச் சார்ந்த 67 பேரும், விளம்பரக் குழுவிற்குத் தனியாக 20 பேரும் நியமிக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் வேகமெடுக்கத் தொடங்குகின்றன.

கலந்துரையாடல் கூட்டம் நடத்த வலியுறுத்தியும், சமூகக் காப்பணி, சீருடை அணிவகுப்புக்கு இளைஞர்களைத் தயார் செய்திடக் கோரியும், விளம்பரங்களை வேகப்படுத்தத் தூண்டியும் தமிழகம் முழுவதும் கடிதங்கள் பறக்கின்றன, பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்கள் மூலம். இதில் ஏற்கனவே மாநாட்டின் சமூகக் காப்பணியில் பங்கேற்ற 80 தோழர்களுக்கும் கடிதங்கள் செல் கின்றன.

அதனைத் தொடர்ந்து 24.03.2013 அன்று மாநில இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.

அங்கு இரு அணிகளும் பட்டைத் தீட்டப்பட்டு, கூராக்கப்படுகின்றன. இதற்கிடையில் 06.07.2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டு அணி வகுப்புப் புகைப்படத்தை விடுதலையில் வெளியிட்டு, இதுபோல தோழர்கள் ஆயத்தமாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இப்பெரு முயற்சி யினால் 105 தோழர்கள் சமூகக் காப்பணியில் பங்கேற்கின்றனர்.

திருச்சி புத்தூர் மாளிகையில் நடைபெற்ற இப் பயிற்சியை, பல்வேறு பணிகளுக்கிடையே யும் தமிழர் தலைவர் அவர்கள் பார்வை யிட்டுப் பாராட்டிச் செல்கிறார்கள். தொடர்ந்து சமூகக் காப்பணித் தோழர்களுக்குப் பெரியாரியல் வகுப்பு 25.04.2013 தொடங்கி 03.05.2013 வரை நிகழ்த்திப் புத்துயிர் ஊட்டப்படுகிறது.
இராஜபாளையத்தை விட்டு எல்லோரும் ஊருக்குப் போய் விட்டார்கள். ஆனாலும் இராஜபாளை யத்தை விட்டு வெளிவர முடியவில்லை. திட்டமிட்டு செய்தால் எல்லாமே சாத்தியம்தான்! இப்போது சொல்லுங்கள், மாநாடு நடத்துவது எளிதா இல்லையா ?

தமிழ் ஓவியா said...


பிறகு மாநாட்டை பெரு வெற்றியாக்கிட 3 மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக் கிய சென்னை மண்டலம், 5 மாவட்டங் களை உள்ளடக்கிய வேலூர் மண்டலம், 3 மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக் கிய கோவை மண்டலம் மற்றும் திருவா ரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களிலும் தோழர்கள் கலந்து பேசி, மாநாட்டைச் சிறப்பாக்க முடிவு செய்கின்றனர்.

கண்ணைக் கவரும் அழகிய சுவ ரொட்டிகள் ஆறாயிரம் தயார் செய்யப் பட்டு, மாநாட்டிற்குப் பத்து நாள்களுக்கு முன்னரே தமிழகம் முழுக்க வழங்கப் படுகிறது. அழைப்பிதழ்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவரணி, வழக்கறி ஞரணி, விவசாய அணி, தொழிலாள ரணி, பொதுக்குழு உறுப்பினர்கள் என எந்த ஒருவரும் விடுபடாதவாறு 1500 -க்கும் மேல் அனுப்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி மாநாட்டுப் பொறுப் பாளர்கள் தமிழ்நாட்டின் 60 கழக மாவட்டங்களோடும் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்கள். மாநாடு நெருங்கி வரும் வேளை. ஏப்ரல் 15 ஆம் தேதி இராஜபாளையத்தில் நன்கொடை பணியைத் தொடங்குகிறார்கள். அவர் களுக்குத் தேவைப்பட்டது 20 நாட்கள் மட்டுமே.

சிவகாசி, விருதுநகர், திருத் தங்கல், அருப்புக்கோட்டை, சாத்தூர், சங்கரன்கோயில், ராயகிரி, வாசுதேவ நல்லூர், சேத்தூர், வத்திராயிருப்பு, தளவாய்புரம், திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் பொறுப் பாளர்கள் வேகமெடுத்தும், இதே பகுதி களின் கடைத் தெருக்களில் தோழர்கள் திரண்டு சென்றும் நன்கொடை பணி களை முடிக்கிறார்கள். இதுவன்றி, சில முக்கியஸ்தர்கள் தனியே பெருந்தொகைகளையும் வசூ லித்து மாநாட்டின் மிச்சமாக அறிவிக்கத் திட்டமிட்டனர்.

இதனிடையே தமிழகம் முழுக்கவுள்ள நம் தோழர்களுக்கு இராஜபாளையம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. நினைவூட்டும் அந்தப் பணியை விடுதலை விடாமல் செய்தது. குறிப்பாக 29.04.2013 அன்று, சிறைக்கு அனுப்பிட தீர்மானிக் கும் மாநாடு! ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊத இராஜபாளையம் நோக்கி வாரீர்! வாரீர்! தோழர்களே!!, என்கிற ஆசிரியரின் அறிக்கை எவரையும் அவரின் சொந்த ஊரில் இருக்கவிடவில்லை.

இவ்வளவு சிறப்போடு ஏற்பாடுகள் முடிந்தன. பொழுது விடிந்தால் மாநாடு. அந்திசாய்ந்த அந்த நேரத்தில் காவல் துறை அழைக்கிறது. பேரணிக்கு அனுமதி இல்லை. கூட்டம் நடத்தி விட்டுப் போங்கள், என்கிறார்கள். எந்த ஒன் றுக்கும் பதறுவதும், சிதறுவதும் தோழர் களுக்குப் பழக்கமில்லையே! எங்குமே காணக் கிடைக்காத நம் கழக அணுகு முறைக்குத் தோல்வியும் ஏற்படுமோ? வெற்றி தான் கிடைத்தது.

பொழுது விடிந்தது! மாநாடு பிறந்தது! அது எப்படியெல்லாம் மலர்ந்தது என்பதைக் கண்டு இரசித்தோம்.

தமிழ் ஓவியா said...


மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து பேராவூரணி - சேதுபாவாசத்திரத்தில் இணையதளம் வலைப்பூ தொடக்கம்


பேராவூரணி, மே 10- திராவிடர் கழக இளை ஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவ ரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண் டும். அதனடிப்படை யில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச் சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும், நமது இயக்க நடவடிக் கைகள், முக்கிய உரை கள், தீர்மானங்கள் பற் றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுது வது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல்படு வது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம் என்று ஆசிரியர் 7.5.2013 விடு தலையில் இறுதிப் பக் கத்தில் அறிவிப்பு விடுத் துள்ளார்.

5 ஆகஸ்ட் 2012 அன்று பேராவூரணி-சேதுபா வாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பாக இணையதளம் தொடங்கபட்டு செயல் பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.

இணையதள முகவரி: http://dkperavurani. blogspot.in/

டிவிட்டர் முகவரி : https://twitter.com/dkperavurani

இரண்டு ஒன்றியங்க ளின் சார்பாக நடை பெறும் பிரச்சாரங்கள், தோழர்கள் கலந்து கொள் ளும் பிரச்சாரங்கள், புதி யவர்களுக்கான விஷயங் கள் என நிறைய தகவல் களைக் கொடுத்துள் ளோம். தொடர்ந்து இணையதளம் சிறப் பாக செயல்படும் என்று பட்டுக்கோட்டை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீல கண்டன் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜவகர்லால் நேரு

வடநாட்டுப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த - மறைவெய்திய ஜவகர்லால் நேரு தமது புகழ்பெற்ற இந்தியாவைக் கண்டுணர்தல் எனும் நூலில், இந்து மதம் என்பது யாது? எனத் தாமே கேள்வி எழுப்பிக் கொண்டு தந்துள்ள விடை அருமையானது.

இந்து எனும் சொல் நமது பழைமையான இலக்கியங் களில் காணப்பெறவேயில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது; ஒழுங்கான உருவமைப்புப் பெறாதது; பல்வகைத் தோற்றக் கூறுகள் உடையது;

எல்லா மக்களுக்கும் எல்லாச் செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது - வழக்கிலுள்ள கருத்தின் படி - ஒரு மதமா, இல்லையா என மெய்யாகவே உறுதிமொழிவதோ இயலும் செயலன்று.

“what is Hinduism? The word Hindu does not occur in all our ancient literature...Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. It is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word” (Discovery of India : page 108).

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே?

ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார். நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப் படுகிறது - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆதாரம்:

(வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்)

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்துமதம் என்ற ஒன்று கிடையாது!


(கல்கியில் 5.11.1972 காஞ்சி காமகோடி பீட சங்கராச் சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதாவது:)

இப்போது ஹிந்துமதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்து என்று சொல்லுகிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல் நாட்டுக்காரர் சிந்து நதியை கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் சிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை ஹிந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்தில் உள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவ நாடு என்பதும் கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர்.

இந்த முறையில்தான் சிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர் களும் பாரத தேசம் முழுமையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர். தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே... அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

ஜெயேந்திர சரஸ்வதி

சென்னை மார்ச் 6 (1976) வேதமதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது என்றும்; ஆரம்ப காலத்தில் இதற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது என்றும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி பேசுகையில் கூறியதாவது:

இந்து மத மாநாடு என்ற பெயரில் இந்த மாநாட்டைக் கூட்டாமல், வேத மாநாடு அல்லது சனாதன மாநாடு என்றே கூட்ட வேண்டும். எனக்கு பலர் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்து என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு.

நமது மதத்துக்கு இந்து மதம் என்று பெயரில்லை; மதத்திற்கு ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்து மதம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேதமதம்தான் நமது மதம். இந்த வேதம் என்ற சொல்லைத்தான் மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொண்டனர். - இவ்வாறு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


இந்துமதம் என்ற ஒன்று கிடையாது!


(கல்கியில் 5.11.1972 காஞ்சி காமகோடி பீட சங்கராச் சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதாவது:)

இப்போது ஹிந்துமதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்து என்று சொல்லுகிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல் நாட்டுக்காரர் சிந்து நதியை கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் சிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை ஹிந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்தில் உள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவ நாடு என்பதும் கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர்.

இந்த முறையில்தான் சிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர் களும் பாரத தேசம் முழுமையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர். தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே... அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

ஜெயேந்திர சரஸ்வதி

சென்னை மார்ச் 6 (1976) வேதமதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது என்றும்; ஆரம்ப காலத்தில் இதற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது என்றும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி பேசுகையில் கூறியதாவது:

இந்து மத மாநாடு என்ற பெயரில் இந்த மாநாட்டைக் கூட்டாமல், வேத மாநாடு அல்லது சனாதன மாநாடு என்றே கூட்ட வேண்டும். எனக்கு பலர் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்து என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு.

நமது மதத்துக்கு இந்து மதம் என்று பெயரில்லை; மதத்திற்கு ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்து மதம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேதமதம்தான் நமது மதம். இந்த வேதம் என்ற சொல்லைத்தான் மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொண்டனர். - இவ்வாறு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


தீர்மானம்


அடுத்தாற்போல் வரும் மக்கள் எண் ணிக்கைக் கணக் கெடுக்கும் சென் ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திரா விடர்கள் என்றே சொல்ல வேண்டு மென்றும், இந்துக் கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக் காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.

(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)