Search This Blog

21.5.13

ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?


ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது.

விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்றித் திருநாள் கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது (18.5.2013).
அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே மிகவும் நீட்டி முழங்கியுள்ளார்.  ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் அமைதியுடன் வாழ விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் எல்லாம் நீண்ட வரிசையில் நின்று இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் மனு கொடுத்திருப்பார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

பேரழிவுக்குப்பிறகு அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு, மறு சிந்தனை கொள் வதற்கு  உகந்த வகையில் அதிபர் ராஜபக்சே அப்படி என்ன என்னவெல்லாம் தமிழர்களின் அமைதிக்கும், சுதந்திரமான வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் செய்துள்ளார் என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டியிருந்தால்கூட, ஏதோ தம் பக்கம் நியாயம் இருப்பதாகக் கருதி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்றுகூட நினைக்கத் தோன்றும்.

மூன்றே மாதங்களில் முள்வேலி முகாமி லிருந்து, ஈழத் தமிழர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி, சொந்த வீடுகளில் குடியமர்த்தம் செய்வோம் என்றாரே - அதன்படி ஏதாவது நடந்திருக்கிறதா? தமிழர்களுக்குரிய பூர்வீக வீடுகளை எல்லாம், நிலங்களை யெல்லாம் சிங்களக் காடையர்கள் அல்லவா ஆக்கிரமித்துள்ளனர்.

அதைவிடப் பெரிய கொடுமை - தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களமயமாக்கப் பட்டு விட்டதே - இன்னும் அந்தப் பகுதிகள் எல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன.

பத்திரிக்கை சுதந்திரம் உண்டா? வெளியுலக ஊடகக்காரர்களை அனுமதிக்காதது - ஏன்?

சண்டே லீடர் ஆசிரியர் வசந்த் பட்டப் பகலில் நடுவீதியில் சுடப்பட்டது எந்த நோக்கத்துக்காக? இந்த வரிசையில் பாசிச ஆட்சிக்கே உரித்தான போக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நீண்ட பட்டியல் உண்டே!

எத்தனை ஆயிரம் ஈழத் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர்? அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? யாருக்குத் தெரியும்?

எத்தனை எத்தனை ஆண்டுகளாக அவசர நிலைப் பிரகடனம்? உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிட, 2011 ஆகஸ்டில் அவசர நிலையை ரத்துச் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அவசர நிலைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை அதிகாரங்களும் இதற்குள்ளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். மறுக்க முடியுமா? போர்க் குற்றங்கள்பற்றி இலங்கை அரசே விசாரிக்கும் என்று மனித உரிமை ஆணையம் கூறியதைத் தொடர்ந்து, எந்தவித உரிமை மீறலும் இலங்கையில் நடைபெறவில்லை என்று இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிவித்து விடவில்லையா?

அதே போன்றதுதான் இப்பொழுது ராஜபக்சே வெளிப்படுத்தியிருக்கும் கூற்றும்.

அவர் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம்.

சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கத் தயார் தானா?

இலங்கை அதிபராக சிங்கள மொழி பேசும் - பவுத்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர்தான் அதிபராக முடியும் என்பதை விலக்கிக் கொள்ளத் தயாரா?

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று முன்பு கொடுத்த உத்தரவாதத்தைச் செயல்படுத்த முன்வருவாரா?

குறைந்த பட்சம் இந்த மூன்று அம்சங்களுக் காவது பச்சைக் கொடி காட்டட்டும்; அதற்குப் பிறகு - ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ  விரும்புகிறார்கள் என்பதைப் பேச முயற்சிக்கட்டும்!

                    ----------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

43 comments:

தமிழ் ஓவியா said...


குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?


ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார்.

பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு.

அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர்.

பலர் அரசுப் பணிகளில் அமர்ந்து அணி செய்கின்றனர்; இயக்க நோக்கிற்காக மட்டுமல்ல; இந்தப் பட்டறை வாழ்வில் புதிய திருப்பத்துக்கான ஒளிமிக்க பாதையைத் தரக்கூடியது.

மாணவர்களும், இருபால் இளைஞர்களும் கலந்துகொள்ளலாம் - நல்ல பலன்களைத் தரும்.

கழகப் பொறுப்பாளர்களே, கழகத்தின் இந்த மிக முக்கியப் பணியில் ஆர்வம் காட்டுவீர்! மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பீர்!

சென்னை மண்டலத் தலைவரும், செயலாளரும், மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர்களும், இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் கலந்துகொண்ட கூட்டத்தில் 20 தோழர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து இருபால் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.

மே 29, 30, 31 ஜூன் 1 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் திருமண மண்டபத்தில் நடைபெறும். வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம்

குறிப்பு: கழகப் பொறுப்பாளர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம்

தமிழ் ஓவியா said...


கோவில் தோன்றியது இப்படித்தான்!

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.

- தினமலர் செய்தி

ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் தையற் கலைஞர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா என்ற, இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த, 2007 ஆம் ஆண்டு டிசம்பர், 23 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பழனிச்சாமி தன் மனைவி மற்றும் இரு குழந் தைகளையும் இருசக்கர வாகனத்தில் மணப்பாறை யில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பன்னாங்கொம்பு அருகே சென்ற போது, பால்வேன் இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தனுஜாவின் இறுதி நிகழ்வு முடிந்து, ஒன்பதாம் நாள் சிறீரங்கம் அம்மா மண்டபத்தில், சிறுமிக்கு ஈமக்கிரியைகளை செய்து கொண்டி ருந்தனர்.

அப்போது, வேதமந்திரங்கள் கூறிக்கொண்டி ருந்தவர், தனக்கு ஈமகாரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்றாண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் என்று தனுஜா போல பேசி, அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதேபோல், மூன்றாண்டுக்குப்பின் பழனிச்சாமி யின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி, தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பின், தனுஜாவின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே, தனுஜா வுக்கு, ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி நடந்து வருகிறது. இந்தாண்டும் பால்குட விழா, மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வந்து, கோவில் முன் இருந்த பூக்குழியில் இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலபிஷேகம் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, ஊர் நாட்டாண்மைகள் பின்னத்தூர் ரெங்கநாதசுவாமி, அழககவுண்டர் மற்றும் வெள்ளையம்பட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா


ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:

சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ கம் பெரும் வளர்ச்சி அடையும். இலங்கை யைச் சுற்றி செல்லும் கப்பல்கள் சேது சமுத் திரக் கால்வாய் வழி யாகச் செல்லும்போது 424 கடல் மைல்கள் தூரம் குறையும் என்ப தால் ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவு மிச்ச மாகும்.

நீர்வளம் பெருகி, சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளின் கப்பல்கள் எளிதில் தென் தமிழகத் தின் துறை முகங்களுக்கு வந்து செல்வதன்மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். இத்திட்டத்தை நிறை வேற்றக் கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத் தப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து 9 முறை ஆய்வு நடத்தப்பட்டு முடிவில் 1955 ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பயனுள்ள திட் டம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

1957 இல் குளித் தலை எம்.எல்.ஏ.,வாக இருந்த தலைவர் கலை ஞர் சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதன் முதலாக சட்டமன்றத் தில் பேசினார். 1960 இல் தி.மு.க. உருவான போதும் இத்திட்டத்தை அண்ணா வலியுறுத்தி னார். அதன் பிறகு ஒவ் வொரு முறை தி.மு.க. மாநாடு நடந்தபோதும் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வைகோ, கம்யூ னிஸ்ட தலைவர்கள் வர தராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டவர்களால் கூட சேது சமுத்திரத் திட்டம் வரவேற்கப்பட் டது. 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

தேர்தல் நேரத் தில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கும் ஜெய லலிதா, எம்.ஜி.ஆரால் வரவேற்கப்பட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்டத் திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பது மதவாதிகளுக்கு துணை போகும் செயல் இல் லையா?

இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.850 கோடி வரை செலவு செய்யப் பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் கருத்துக்கு முரண்படும் வகையில் இத்திட்டத்தை ஜெய லலிதா முடக்க நினைப் பது சரியா? கடந்த 22.8.1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்போ தைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற் றக் கோரி கடிதம் எழு தியது நினைவில்லையா? 2001, 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வோம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இக் கருத்திலிருந்து முரண் பட காரணம் இத்திட் டத்தால் கலைஞருக்குப் பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் திட் டத்திற்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட நினைக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக் கக்கோரி உச்சநீதிமன்றத் தில் தொடர்ந்துள்ள வழக்கை ஜெயலலிதா திரும்பப் பெறவேண் டும்.

- இவ்வாறு முன் னாள் அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!


சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை

திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!

மே 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்!

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல - பொதுவாகக் கிரிக்கெட்(டு) விளையாட்டில் தொடர்ந்து சூதாட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனை ஒழிக்கும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பது தானே பொருள்?

தமிழ் ஓவியா said...

அய்.பி.எல். மட்டுமல்ல

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச் சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

முன்னாள் மத்திய அமைச்சருக்கும் தொடர்பாம்!

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு - தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கிய புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம் விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்து விட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் - நெருக்கடி அவப் பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை - நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

திசை திருப்பலா?

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

ஏலம் போகும் விளையாட்டுக்காரர்கள்!

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு - மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

வழக்கில் ஓட்டை கூடாது!

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிக்கை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தவிருக்கிறது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)
அதற்கு ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஈடுபட முன் வர வேண்டும்.

கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை நமது போராட்டம்

நமது கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது;

அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் - அறப் போர் - தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21.5.2013

தமிழ் ஓவியா said...


கழக முயற்சிக்குக் கைமேல் பலன் வட்டாட்சியர் அலுவலகப் பிள்ளையார் அகற்றப்பட்டார்கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு சிலர் திடீரென பீடம் அமைத்து ஒரு விநாயகன் சிலையை வைத்து விட்டனர். அரசு விதி முறையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.க. மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் த. சுரேஷ் ஆகியோர் 10.05.2013 அன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடமும் அந்த மனுவின் நகலை கொடுத்தனர்.

மேலும் விடுதலை ஏட்டில் (14.5.2013 விடுதலை) வேலியே பயிரை மேய்கிறது என்ற தலைப்பில் செய்தியும் வெளியாகியது. உடனடியாக திராவிடர் கழக தோழர்களின் வலியுறுத்தலின் பெயரில் வருவாய்துறை அதிகாரிகள் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த விநாயகன் சிலையை பீடத்துடன் அகற்றினர்.
மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து 9 நாட்களுக்குள் விநாயகன் சிலை பீடத்துடன் அகற்றப்பட்டது. இது விடுதலை ஏட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் முயற்சிக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...


கல் முதலாளியின் சொத்து!


திருப்பதி, மே 21-திருப்பதி ஏழுமலையா னுக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலம் இதுவரை ரூ. ஒரு லட்சம் கோடி மதிப் புள்ள நிலம் உள்ளது. இவற்றைப் பாதுகாக்க புதிதாக டிரஸ்ட் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலை யான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண் டுதல் நிறைவேறியதும் பணம், நகை, நிலம் ஆகியவற்றை காணிக் கையாக செலுத்தி வரு கின்றனர். இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயில் எஸ்டேட் அதிகாரியாக இருந்த ராமச்சந்திரா ரெட்டி, ஆந்திரா மற் றும் வெளி மாநிலங் களில் உள்ள இடங்கள், வெளிநாடுகளான நேபாளம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள தேவஸ்தான சொத்துகளை ஓராண்டு காலம் காலக்கெடுப்பு செய்தார். அதன்படி பக்தர்கள் வழங்கிய நிலங்கள் 4,143 ஏக்கர் இருப்பது தெரியவந்தது. இந்த நிலங்களுக்கு 2010ஆம் ஆண்டு நில வரப்படி அரசு மதிப் பீட்டில் ரூ.33,447 கோடியாக இருந்தது. இதில் ஆந்திராவில் மட் டும் ரூ.33,149 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.299 கோடியும் இருந் தது.

அதன்பிறகு இது வரை பக்தர்கள் நூறு ஏக்கர் மதிப்புள்ள நிலங்களை தேவஸ்தா னத்துக்கு வழங்கியுள் ளனர். நிலங்களின் மொத்த மதிப்பு தற் போதைய சந்தை நில வரப்படி ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக் கும் என தேவஸ்தான நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவஸ்தானத்தில் தற்போது செயல்பட்டு வரும் பிராண தானம், அன்னதானம், கோ சம் ரக்ஷனா ஆகிய டிரஸ்ட் டுகள் உள்ளன.
அதேபோல் அசையா சொத்துகளை பெறுவதற்கு தனி டிரஸ்ட் அமைத்தால் மேலும், பல பக்தர்கள் நிலங்களை தர அதி களவில் முன் வருவார் கள் என தேவஸ்தான தலைமை செயல் அலு வலர் எல்.வி.சுப்பிர மணியம் அறிவித்துள் ளார். இதையொட்டி, பூதேவி, பிருத்வி, சப்த கிரி ஆகிய 3 பெயர் களில் ஏதாவது ஒரு பெயரில் டிரஸ்ட் தொடங்க முடிவு செய் யப்பட்டுள்ளதாம்.

தமிழ் ஓவியா said...

தெரியுமா சேதி?

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்கின் (அய்.பி.எல்.) முத லாளியாவார். கவர்னரே கலெக்டராகவும் இருக்கிறார் எப்படி?

####

ஒவ்வொரு முறையும் நடக்கும் அய்.பி.எல். கிரிக் கெட்டில் மட்டும் சூதாட்டத்தில் புரளும் தொகை ரூ. மூன்று லட்சம் கோடியாம்!

தமிழ் ஓவியா said...

உருண்ட பக்த கே()டிகள்!


கரூர் மாவட்டம், தெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் 99ஆவது ஆண்டு ஆராதனையில் எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டனர். குறிப்பு: மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும் கலந்து கொண்டார். அவர் எச்சில் இலை மேல் உருண்டாரா என்பது பற்றி தகவல் இல்லை.

தமிழ் ஓவியா said...


குழவிக் கல்லை வெளியேற்றினால் மழை பெய்யுமா?


ஆர்.கே.பேட்டை, மே 21- பயன்பாட்டில் இல்லாத குழவிக்கல்லை ஊரை விட்டு வெளி யேற்றினால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராம மக்களி டம் நிலவுகிறது. கடுமையான வறட்சியால் தண்ணீர் பஞ்சத்தை போக்க, மழை வேண்டி, ஆர்.கே. பேட்டை பகுதியில் கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத அம்மிக்கல், குழவிக்கல் போன்றவை ஊருக்கு வெளியே கொட்டப்பட்டு வருகின்றன.

திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள் ளிட்ட பகுதிகளில் குடி நீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏரி, கிணறுகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டம், 200 அடிக்கும் கீழே சென்று விட்டது. குடிநீரின் நிலையே மோசமாக உள்ள நிலையில், விவசாயத்தின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வறட்சியை போக்க, மழையை எதிர் பார்த்து காத்திருக்கின்ற னர். அதே நேரம், வீடுகளில் பயன்பாட்டில் இல்லாத அம்மிக்கல், குழவிக்கல் போன்றவற்றை ஊரை விட்டு அப்புறப்படுத்தினால், மழை பொழியும் என்ற மூடநம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. இதன் அடிப்படையில், திருத்தணி-ஆர்.கே. பேட்டை நெடுஞ்சாலையில் குமரகுப்பம் அருகே, குழவிக் கற்கள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளனவாம்.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


இலங்கை மீது நடுநிலையான பன்னாட்டு விசாரணை தேவை


கருத்து மாறுபடுவோர் மீது இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை

அம்பலமாக்கும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை

இலங்கை அரசு, தன்னை விமர்சிப் பவர்கள் மீது அச்சுறுத்தல், தொல்லைப் படுத்துதல், சிறைவாசம் முதலிய கொடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அண்மையில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மாற்றுக்கருத்துக் கொண்டவர் மீது தாக்குதல் என்று அந்த ஆணவம், அதிபர் ராஜபக்சேயினால் நடத்தப்படும். இலங்கை ஆட்சி எப்படி விமர்சனங்களை, ராஜத்துரோகம் என்ற அதன் அசுரப் பிடியில் வேகப்படுத்தி வருகிறது, என்பது பற்றி விளக்குகிறது.

பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் குறிவைக் கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் அடிக்கடி பாதுகாப்புத் துறை யினராலும், அவர்களுடைய பதிலி களாலும் தாக்கப்படுகின்றனர். ஆம் னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஆசிய பசிபிக் பகுதியின் துணை ஆணையர் பாலி டிரஸ்காட் என்பவர் இலங்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொடுமையான அடக்குமுறைக்கு ஆட்படுத்துவதிலும், அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதிலும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது என்று கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங் களுக்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. இலங்கையில் உண்மை யிலேயே அச்சமான சூழ்நிலை பரவி வரு கிறது. அரசுக்கு எதிராக துணிச்சலாக பேசக்கூடியவர்கள் மோசமான வேத னைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மே 29இல் விடுதலைப் புலிகளுட னான ஆயுதப் போர் முடிவுக்கு வந்த வுடனேயே அரசாங்கம் தனது சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டது.

2010 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் பட்ட 18ஆவது அரசியல் திருத்தம், அரசினால் கொண்டு வரப்பட்டவுடனேயே அரசு நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது; கொடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளுக்கு அளவில்லாத அதிகாரங்களை குவித்தது. அதே நேரத்தில், அரசுத்தரப்பு, விமர்ச கர்களுக்கு எதிரான தனது பேச்சுக்களை அதிக எதிர்ப்புணர்ச்சியுடன் வெளிப் படுத்திற்று. துரோகிகள் போன்ற வார்த்தைகள் அரசு நடத்தும் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி, மாற்றமில்லாமல் வெளிவந்தன.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், வசைமாரிகளுக்கும் வன் கொடுமை களுக்கும் ஆளானார்கள். சிலர் தாக்கப் பட்டும், சிலர் கொல்லப்பட்டும் போயினர். 2009-க்கு முன்னும் பின்னும், டஜன் கணக்கான அம்மாதிரியான விவரங்களை அந்த அறிக்கை விளக்குகிறது.

நீதித்துறை அடக்குமுறையின் முக்கிய குறியாயிற்று. அரசு தனது சுதந்திரத்தைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் மனித உரிமை மீறல்களுக்காளானவர் களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

ஜனவரி 2013இல் தலைமை நீதிபதி ஷீராணி பண்டார நாயகேயின் தவறான நடத்தை காரணமாக பதவி நீக்கம் செய் யப்பட்டபோது, எதிர்ப்புணர்ச்சி உச்சத்திற் குப் போயிற்று. இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஷீராணி பண்டார நாயகேயின் பதவி பறிப்பு முறையற்றது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறது.

ஊடகங்களின் பெரும்பான்மை உறுதி யாக அரசு வசப்பட்டிருந்தாலும் சற்று சுதந்திரமாக உள்ள போரின் போது அரசின் செயல் முறைகள் பற்றியும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விமர்சனம் செய்தும் வரும் மற்ற ஊடகங்கள் மீது அரசாங்கம் குறிவைத்துள்ளது.

தமிழ் ஓவியா said...


ஊடக வியலாளர்கள் அரசாங்கத்தின் போக்கு பற்றி விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார் கள், தாக்கவும்படுகிறார்கள். 2006ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 15 இதழாளர் களாவது கொல்லப்பட்டிருக்கிறார்கள், மற்ற பலர் நாட்டை விட்டு ஓடும்படி துரத்தப் பட்டுள்ளனர்.

அண்மையில் நிகழ்ந்த, உதாரணமாக சண்டே லீடர் என்ற பத்திரிகையைச் சார்ந்த பஃராஸ் செனகத்தலி என்ற இதழாளர், சில மனிதர்களால் பிப்ரவரி 2013இல் துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கடுமையான காயம் எற்படுத்தப் பட்டுள்ளார்.

2009இல் கைது செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே போன்ற பழைய உயர் மட்டக் கொலைகள் கூட இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.

அரசாங்கத்தைப் பற்றி விமரிசித்துக் கட்டுரைகள் வெளியிடும் இணையங்கள் (website) அடிக்கடி சைபர் அட்டாக் முறைக்கு ஆளாக்கப்படுகின்றன; அவர் களது அலுவலகங்கள் காவல் துறையின ரால் சோதனைகளுக்கு ஆளாக்கப்படு கின்றன; சில நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. அரசாங்கம் கூட சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதன் படி அளவுக்கதிகமான பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் இவை விமர்சிக்கும் ஆன்லைன் வெளியீடுகளை மூடப்படுவதற்கான முயற்சிகளாகும்.

டிரஸ்காட், அரசாங்கத்தின் பத்திரிகை களை கட்டுப்படுத்துவது அல்லது சுதந்திர மானவற்றை ஒழிப்பது ஆகிய தொடர்ந்த முயற்சிகள், பத்திரிகை சுதந்திரத்தின் முகத்தில் விழும் பூச்சிகளாகும்; மேலும் உள் நாட்டினராலும் பன்னாட்டினராலும் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தினை கூட சிதைப்பதாகும் என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும், போரின் இறுதிநிலைகளில் பல்லாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்ட விவரங்களை வெளியிடும் ஊடகங்கள் மீது குறிப்பாக அவற்றை ஒழித்து விடும் பணியில் அரசு இருக்கிறது. முக்கியமான பன்னாட்டு நிகழ்வுகளின் போது விமர்சகர் மீதான அழுத்தங்கள் அதிகப்படுத்தப் படுகின்றன.

உதாரணமாக அண்மையில் நிகழ்ந்த அய்.நா. மனித உரிமை மீறல்கள் பற்றிய குழுவின் 2012, 2013இல் நிகழ்ந்த கூட்டங்களைச் சொல் லலாம்; மனித உரிமைக்கவுன்சில், இலங் கையின் ஆயுதம் கொண்டு நடத்தப்பட்ட போரில், பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டதை ஆராயும் வகையில் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி வெளியிடுவதைத் தடுக்கும் பல தடை தந்திரங்கள் கையாளப்பட்டன.

அய்.நா. கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்களும், அந்நிகழ்ச்சிகளை செய்திப்படுத்த விரும்பிய இலங்கைப் பத்திரிகையாளர்களும், திரும்பத் திரும்ப இலங்கை அரசினரால் ஊடகங்கள் தாக்கப்பட்டன. சில நிகழ்வுகளால் உடல் வன்மை கூட்டியும் தாக்கப்பட்டனர்.

இலங்கை அரசால் குறிவைக்கப் பட்டுள்ள மற்ற பலருள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் அதுவும் குறிப்பாக தமிழர் மிகுந்த பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் முதலியோர்.

2013 நவம்பர் மாதத்தில் அடுத்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு (CGIGM) கொழும்புவில் நடக்க இருக் கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக இலங்கை பங்கு பெறும்.

டிரஸ்காட், இலங்கையில் அச்சுறுத் தும் முறையில் வளர்ந்துவரும் மனித உரிமை மீறலை சரி செய்யச் சொல்லி, இலங்கை அரசிற்கு, நவம்பர் மாதத்திற்கு முன்பு காமன் வெல்த் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யுள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய விதி மீறல்கள் படிப்படியாக இலங்கை அரசு நிறுத்தி விட்டது என்பதை தனது செயல் பாடுகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் மீதான தாக்குதல்கள் உடனடியாக வேறு பாடுகள் இல்லாமல் தகுதியான முறையில் ஆரா யப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவையெல்லாம் இலங்கை அரசால் நிருபிக்கப்படும் வரையில் இலங்கையின் கொழும்பு நகரில், காமன்வெல்த் நாட்டுத்தலைவர்களின் மாநாடு நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது.

இவை தவிர மேலும் நடந்து வரும் விதி மீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது; அவை களை நிறுத்துவதற்கான வாக்குறுதி களை அடிக்கடி அளிக்கிறது; ஒரு பயனுள்ள ஆய்வின் மூலம் பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்கள், ராணுவத்தின ராலும், விடுதலைப்புலிகளாலும் ஆயுதப் போரின்போது நடத்தப்பட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏராளமான வெளிப்படையான நிகழ்வு கள் மூலம் இலங்கை அரசு ஒரு நம்பிக் கையான ஆய்வை, பன்னாட்டுச் சட்டப் படியான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உட்பட விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு விரும்பவில்லை. போரின் போது நடந்த குற்றங்கள், குற்ற நிகழ் வுகள் பற்றிய சுதந்திரமான, நடு நிலைமையான, பன்னாட்டுச் சமூகத் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது என்பது தான் இன்றைய அவ சியம் என்று டிரஸ்காட் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?


கலைஞர் கடிதம்

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

உடன்பிறப்பே,

இன்றைய இந்து நாளிதழில் நுஒயீசநளளறயல : “Expressway : Contractor demands Rs. 103.95 Crores” என்ற தலைப்பில் புகைப்படத் துடன் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :-

“Soma Constructions Ltd., the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project, has sought Rs. 103.95 crore from the National Highways Authority of India. The latest claim from the company, for the four-month period from January 1, 2013 is towards idling and loss of turnover profit. The Rs. 1815 crore project that will allow residents of Poonamallee and Vanagaram to commute to the City quicker, has been on hold for over 13 months after the Water Resources Department issued stop notice in March 2012 citing a deviation from the original alignment. The issue is in Court. Around Rs. 500 crore has already been spent on the project and 20 percent of the work com pleted. In February, it had sought Rs. 668.8 crore as compensation for the delay in executing the project. In a recent letter to the NHAI, Soma has also sought an interest of Rs. 14 crore for March and April for non-payment of compensation within 30 days”

(மதுரவாயல் - சென்னை துறைமுக உயர் நிலை பறக்கும் சாலைத் திட் டத்தை எடுத்து செயல்படுத்திவரும் சோமா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் என்ற நிறுவனம், இந்தியத் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திடமிருந்து 103.95 கோடி ரூபாய் தர வேண்டுமென்று கேட்டிருக்கிறது. 2013 ஜனவரி 1ஆம் தேதி முதல் நான்கு மாதங்களாக வேலை எதுவும் நடைபெறாமல் இருந்ததற்காகவும், இலாபத்தில் ஏற்பட்டி ருக்கும் இழப்புக்காகவும் இந்தத் தொகையை அந்த நிறுவனம் கோரியிருக்கிறது. அடிப்படையான திட்ட வரைவி லிருந்து மாற்றம் செய்யப்பட்டு விட் டதாக காரணத்தைச் சொல்லி தமிழக அரசின் நீராதாரத் துறை 2012 மார்ச் மாதத்தில் நோட்டீஸ் கொடுத்ததன் விளைவாக கடந்த 13 மாதங்களாக வேலை எதுவும் நடைபெறாமல் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 1815 கோடி ரூபாயாகும். திட்டம் நிறை வேற்றப்பட்டால் பூவிருந்தவல்லி, வானகரம் பகுதியிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வருவோர் மிக விரைவில் வந்து சேர முடியும். மாநில அரசு கொடுத்த நோட்டீஸ் சம்பந்த மான பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. திட்டத்தை நிறை வேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற் கான இழப்பீட்டுத் தொகையாக 668.8 கோடி ரூபாயை சோமா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனம் பெப்ரவரி மாதத் திலேயே கேட்டிருந்தது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அந்த நிறுவனம் அண்மையில் அனுப் பிய கடிதத்தில் 14 கோடி ரூபாய் வட்டியாகத் தர வேண்டுமென்றும் கேட்டிருக்கிறது. முப்பது நாட் களுக்குள் அவர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை செலுத்தாததால் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான வட்டித் தொகையாகும் இது.)

தமிழ் ஓவியா said...

இவ்வாறு 20-5-2013 தேதிய இந்து நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

2006 தமிழக சட்டசபைத் தேர்தலை யொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக் கையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகி யுள்ள பகுதிகளில் பறக்கும் சாலைத் திட்டத்தை (Elevated Higway) செயல் படுத்துவோம் என்று வெளியிட்டிருந் ததை அடுத்து, தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்திற்கு உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனு மதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டேன். தம்பி டி.ஆர். பாலு போன்றவர்கள் தொடர்ந்து முயற்சி யெடுத்து, சென்னைத் துறைமுகத் தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் மேம்பாலச்சாலைத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது, இந்தியாவிலே மிக நீள மான உயர்மட்ட சாலையாக அமையும் என்றும் அப்போதே அறிவிக்கப் பட்டது..

சென்னைத் துறைமுகத்தி லிருந்து தங்கு தடையற்ற சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காக கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாக பறக்கும் விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு 22-6-2007 அன்று கொள் கை அளவில் அனுமதி வழங்கியது. இந்த மேம்பாலச் சாலை அமைப் பதற்குத் தேவைப்படும் நில எடுப்புக் கான செலவுத் தொகையையும் மற்றும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மறுவாழ்வு அளித்தல், மறு குடிஅமர்வுக்கு வகை செய்தல் ஆகியவற்றுக்காக ஏற்படும் செல வினத்தையும் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகமும், தமிழ்நாடு அரசும் 50க்கு 50 என்கிற விகிதாச்சார அடிப்படையில் ஏற்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத னால் தமிழக அரசுக்கு 130 கோடி ரூபாய் செலவாகும். இதைத் தவிர, இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைப்பதையொட்டி இப்பகுதி களில் மாசுக் கட்டுப்பாட்டு சட்டத் தின்கீழ் அனுமதி பெறுதல், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றை இடமாற்றம் செய்தல் போன்ற பணி களுக்காக இந்தியத் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட இதுபோன்ற மிகப் பெரிய திட்டங்கள் என்றால், இன் றைய தமிழக முதல் அமைச்சருக்கு எப்படித்தான் இருக்குமோ, அவற் றுக்கு மூடு விழா நடத்துவதற்கு என்ன வழி என்றுதானே பார்ப்பார்!

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு உதாரணம் போதாதா? தமிழகத்தின் 150 ஆண்டுக்காலக் கனவான அந்தத் திட்டத்தை கழக ஆட்சியில் அரும் பாடுபட்டு மத்திய அரசில் வாதாடி, போராடி ஒப்புதலும் பெற்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமரும், சோனியா காந்தியும், நானும் மற்றும் தமிழகத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு மதுரை மாநகரிலே மிகச் சிறப்பாக நடைபெற்று - அதன் பிறகு 800 கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப் பணம் செலவிடப்பட்ட பிறகு, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அந்தத் திட்டத்தை பல மாதங்களாக முடக்கி போட்டிருக்கின்ற அ.தி.மு.க. அரசின் செயல்பாடு தமிழகம் அறியா ததா என்ன? இவ்வளவுக்கும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். ஏன் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்பட வேண்டுமென்று கோரிய திட்டம் அது. அந்தத் திட்டமே கூடாது என்று இப்போது அவர்களே உச்ச நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றால், எப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்திலே நடைபெறு கிறது என்பதற்கு வேறு சான்றுகளா வேண்டும்?

இந்த சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் திட்டத்திற்கான பணிகள் பற்றி இந்து, டைம்ஸ் ஆப் இந் தியா, தினத்தந்தி நாளேடுகள் ஏற் கெனவே விரிவாகச் செய்திகள் வெளி யிட்டுள்ளன. அவற்றில் வந்துள்ள தகவல்படி, கடந்த ஓராண்டாக மீண்டும் தொடங்குவதற்கான அறி குறிகூடத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தைத் தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்து விட்ட காரணத் தால்தான், இந்தப் பணிகளை மேற் கொண்டு வந்த சோமா நிறுவனம், தனக்கு நஷ்டஈடாக 668 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று ஏற்கெனவே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியிருந்ததோடு, தற்போது மேலும் 103.95 கோடி ரூபாய் இந்த நான்கு மாத கால தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டு மென்று கோரியிருப்பதாக இந்து நாளிதழ் எழுதியிருக்கின்றது.

இந்தக் காலதாமதம் மேலும் நீடிக்குமேயானால் இந்த இழப்பீட்டுத் தொகை மேலும் உயர்ந்து கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இந் தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் அணுகு முறையால் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற மிகப் பெரும் கட்ட மைப்புக்கான திட்டங்கள் மற்ற மாநிலங்களில் எவ்விதத் தடையுமின்றி மாநில அரசுகளின் மனப்பூர்வ மான ஒத்துழைப்போடும், உதவியோடும் வேகமாக நிறைவேறி வருகின்ற நிலையில் தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசின் எதிர் மறை அணுகு முறையின் காரணமாக திட்டம் தாமதமாகி வருவதோடு, இழப்பீட்டுத் தொகையை ஒப்பந்தக்காரர்கள் கேட் கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சருக்கு கடந்த ஒரு வார காலமாகத்தான் 110ஆவது விதியின் கீழ் அறிக்கை படிப்பதி லிருந்து சற்று ஓய்வு கிடைத்துள்ளது. எனவே இனியாவது காழ்ப் புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, கழக ஆட்சி யிலே தீட்டப்பட்ட திட்டங்கள் என் பதற்காக கிடப்பிலே போட ஏற்பாடு களைச் செய்து அதனால் கெட்ட பெயரைச் சம்பாதிப்பதை விட்டுவிட்டு, கிடப்பிலே போடப்பட்டுள்ள இந்தத் திட்டங் களையெல்லாம் உடனடியாகத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 21.5.2013)

தமிழ் ஓவியா said...


பெட்டிக்கடைகளும் - நடைபாதை கோவில்களும்!


சென்னையில் சாலையோரங்களிலும், நடை பாதைகளிலும் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னையில் பெட்டிக்கடைகளால் போக்கு வரத்து இடையூறு என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அத்தகைய பெட்டிக்கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் திங்களில் ஆணையிட்ட தன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பெட்டிக்கடைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளதாம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62, அண்ணாநகர் மண்டலத்தில் 36, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 8, திரு.வி.க. நகரில் 22, தண்டையார்ப்பேட்டையில் 18, ஆலந்தூரில் 6 கடைகளும் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.

உண்மையைச் சொல்லப்போனால், சென் னையில் பெட்டிக்கடைகளைவிட, போக்குவரத் துக்குப் பெரும் இடையூறாக இருப்பது நடைபாதைக் கோவில்கள்தான்.

போக்குவரத்தைக் காரணம் காட்டி இடிக்கப் படவேண்டுமானால், முதலில் அகற்றப்படவேண் டியது நடைபாதைக் கோவில்களும், அனுமதி யின்றிக் கட்டப்பட்டுள்ள கோவில்களும்தான்.

உயர்நீதிமன்றத்தின் ஆணையின் காரண மாகத்தான் பெட்டிக் கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டது என்று சமாதானம் சொல்லப்படுமானால், உயர்நீதிமன்றத்தைவிட பெரும் அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்தானே!

அந்த உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் பிறப்பித்த ஆணையின்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டு இருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் கூறவேண்டும் என்று 2010 செப்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்ததே!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதி யற்ற வழிபாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். 77,450 கோவில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்களாகும்.

இன்னும் சொல்லப்போனால், 2009 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆணை யைப் பிறப்பித்தது. கடைசியாகப் பிறப்பித்த ஆணைதான் 2010 செப்டம்பர் 14 அன்று பிறப்பிக்கப்பட்டதாகும்.

இதன்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்திட முனைந்துள்ள தமிழ்நாடு அரசு - உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கிடப்பில் போட்டுள்ளதே - இது சரியானதுதானா?

உயர்நீதிமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் அற்றது என்று ஒருக்கால் தமிழ்நாடு அரசு கருதுகிறதோ!

சிறுசிறு பெட்டிக் கடைகளை வைத்து அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாடு கிறார்கள். அவர்கள்மீது காட்டும் வேகத்தை - நடைபாதையில் அத்து மீறிக் கோவில்களை எழுப்பி, உண்டியல் மூலம் வசூல் வேட்டை நடத்தி, ஒவ்வொரு நாள் இரவிலும் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தின்மூலம் போதை ஸ்நானம் - தீர்த்தம் - செய்யும் பேர்வழிகளிடம் காட்ட வேண்டியதுதானே!

கல்லு சாமிகளிடம் காட்டும் கருணை, மனிதர்களிடத்தில் காட்டப்படுவதில்லையே, ஏன்?

முதலில் இந்த நடைபாதைக் கோவில்களில் கை வைக்கட்டும் - அடுத்ததை அடுத்துப் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முக்கியம் பெறுகிறது!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பி.சி.சி.அய்.) தலைவர் சீனிவாசன் - அய்.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது. தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது - என்று அடித்துக் கூறியுள்ளார்.

வீரர்களை காவல்துறை போல், எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சூதாட்டம் குறித்த தகவல்கள் வருகின்றன. இதனைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லாமையால் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் கலந்து பேசி சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம், இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொள்ளைப் போதை - இவை குறித்து திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 16.5.2013).

அய்.பி.எல். கிரிக்கெட் என்பது பெரும் முதலாளிகளின் கருப்புச் சந்தைக் களமாக உள்ளது. வீரர்களை ஏலம் எடுப்பது என்பது கேவலமானது. பல நூறு கோடி ரூபாய் போட்டு இந்தக் களத்தில் இறங்கி உள்ளவர்கள், தாங்கள் வெற்றி பெற குறுக்கு வழியைத் தானே தேர்வு செய்வார்கள். தரகர்களையும் ஏற்பாடு செய்வார்கள்?

ஒரு விளையாட்டில் இவ்வளவுப் பெருந்தொகை நுழைவதுதான் குற்றங்களுக்கெல்லாம் முதற்படி.

கிரிக்கெட் என்றால் பணம் காய்ச்சி மரமாக அல்லவா இருக்கிறது? கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ஒரு புறம் - ஒவ்வொரு நாளும் விளையாடுவதற்குச் சம்பளம் - நான்கு ஓட்டம் எடுத்தால் அதற்கொரு வெகுமதி, ஆறு ஓட்டம் எடுத்தால் அதற்கென்று தனித் தொகை இவையன்றி அரசாங்கத்தின் சலுகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் - ஒரே ஒரு முறை கூட அவைக்கு அவர் சென்றதாகத் தெரியவில்லை.

இந்த வசீகரம்தான் அந்த விளையாட்டின்மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுவதற்கே காரணமாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல விளையாட்டு என்றால் அதில் திறமை - அர்ப்பணிப்பு இவையல்லவா குடிகொண்டு இருக்க வேண்டும்? அதனை விலை பேசுகிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!

ஒவ்வொரு முறை பந்தை வீசும் பொழுது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதென்ன - கழுத்தில் மாட்டியுள்ள தாயத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வதென்ன? என்ன....

சாயிபாபா இருந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு வருவ துண்டு. அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு விளையாடுவதுண்டு. ஆனாலும் சாதனைக்கு அவை துணை நிற்கவில்லை என்பது தெரிந்த சேதியே!

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பணம் மட்டுமல்ல - பெண்கள் வரை அனுப்பி வைக்கப்படு கின்றனர் என்றால் நாடே தலைகுனிய வேண்டாமா?

இதில் எந்தவித அரசியல் செல்வாக்குக்கும் கட்டுப்படாமல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்காரர் களையும், சூதாட்டத் தரகர்களையும், அவர்களை இயக்கும் பணத் திமிங்கலங்களையும் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து, சட்டத்தின் கடமையைத் தங்குத் தடையின்றி செயல்படுத்திட வேண்டும்.

பி.சி.சி.அய். தலைவர் சீனிவாசன் அளித்துள்ள பதில் பொறுப்பற்றதாக உள்ளது. இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் எந்த அளவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்; வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து திரளாகப் பங்கேற்கவும் அனைவரையும் அழைக் கிறோம்.

-------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

தமிழ் ஓவியா said...


நம் பழைய சூதாட்டத்தைப் பரப்பும் சிகாமணிகளுக்கு பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தரலாமே!
- ஊசி மிளகாய்

நெறிகெட்ட கிரிக்கெட் சூதாட்டம்!

சூதாட்டத்தின்மூலம் கிரிக்கெட்டின் மீது - அய்.பி.எல். என்ற ஒரு வாய்ப்பின் மூலம் - திடீர்க் குபேரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!

கிரிக்கெட் தரகர் ஒருவர் தினமும் ரூபாய் ஒரு கோடி வீதம் சம்பாதித் துள்ளார். எந்தாடா ஆச்சர்யம்!

இது எவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - அதுமட்டுமா?

ஏற்கெனவே ஆட்டம் ஆடியவர் களுடன் செய்த ஏற்பாட்டின்படி, பந்தயம் கட்டிய (சூதாட்ட பேரத்தில்) வெறும் ஏழு நிமிடங்களில் இரண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி இன்று வெளியாகியது! எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் இது!

மது, மாது என்பதைவிட இந்தக் கிரிக்கெட் சூது எப்படிப்பட்ட லாபகர மான தொழிலாக பலருடைய ஆதரவின் பேரில் செழித்தோங்கி நடைபெறுகிறது பார்த்தீர்களா? இதைத் தடை செய்ய இதற்குமேலும் காரணங்கள் தேவையா?

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியாரின் பொருள்களை இங்கிலாந்து நாட்டில் ஏலம் விட்டுள்ளனர்.

காந்தி சீடர்களான ஆட்சியாளர் அதை ஏலம் எடுத்து, காந்தி மியூசியத்தில் வைக்கவேண்டும் அல்லது காந்தி சமாதிக்கு அருகில் அவர் பயன்படுத்திய பொருள் கொண்ட ஒரு காட்சியகத்தை அமைக்கவேண்டுமென்ற எண்ணம்கூட இல்லை. எவர் எவரோ ஏலம் எடுத்துள் ளனர்!

இன்று காந்தி என்றாலே எந்த காந்தி என்று கேட்கும் நிலையில், இதற்காக முக்கியத்துவம் வரும்? அது கிடக்கட்டும்!

காந்தி பயன்படுத்திய சில பொருள் களின் மதிப்பு ஏலத்தில் விடப்பட்டு எடுக் கப்பட்டதின்மீது வந்த தொகை 2 கோடியே 30 லட்சம் ரூபாய்தான்.

ஆனால், 7 நிமிட கிரிக்கெட் சூதாட் டத்தின்மீது சம்பாதிக்கப்பட்ட பணம் ரூபாய் இரண்டரை கோடி (2 கோடியே 50 லட்சம்) ஆகும்!

இரண்டு தராசு தட்டுகளில், காந்தி தட்டு வெயிட் இல்லாதது; மேலே நிற்கும்!

கிரிக்கெட் என்ற விளையாட்டு, வெளிநாட்டு விதேசி, (அது சுதேசி விளையாட்டு அல்லவே) என்றாலும், நம் நாட்டில் ஆண்டியை அரசனுக்குமேல் ஆக்கும் நவீன அலாவுதீனின் அற்புத விளக்காக அல்லவா கிடைத்துள்ளது!

ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தைத் தடுப்பது என்பதன்கீழ் வராது என்பது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கணக்கோ!

அதுமட்டுமா? கொலைகளுக்கும்கூட இந்த அய்.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் காரணமாக அமைந்துள்ளது என்பது மகாராஷ்டிரத்தில் எம்.பி.ஏ., படித்தவன் 30 லட்சம் ரூபாயை இழந்ததைச் சரி கட்ட, ஆள் கடத்தி கொலை செய்த கதை போலவே ஆந்திராவிலிருந்து மற்றொரு வேதனையான செய்தி!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி, பல் வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என பெற்றோர் கவலை ஒருபுறம், கணவரும், குழந்தை களும் அய்.பி.எல். போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று சண்டை ஆரம்பித்து, ரிமோட்டை வைத்து ஆரம்பித்து - இதனால் அடிவாங்கிய மனைவி, (சீரியல் பார்க்க அவர் விரும்பினார்;

அய்.பி.எல். பார்க்க கணவர் விரும்பினார்) இதனால் மனமுடைந்த மனைவி, மண் ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்துச் சாகும் நிலையில் உள்ளாராம்! என்னே கொடுமை! பரிதாபம்! (நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இது நடந்தது).
இவ்வளவு ஒழுக்கக்கேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மக்களாட்சியின் கடமை அல்லவா?

சூதாட்டத்தில் பங்கு வாங்கி மகிழ்வதா ஆட்சியின் கடமை என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

இது ஞானபூமியாம்! நம்ம பாரத கலாச்சாரமே சூதாட்டம்தானே!

மஹாபாரதத்தில், தருமன் உள்பட பஞ்சபாண்டவர்கள் தம் பொது மனைவியை (துரோபதையை) பந்தயமாக வைத்து ஆடித் தோற்றதும்,
அதற்குமுன் வேத காலங்களி லும்கூட ஆரியர் சூதாட்டத்தில் ஈடு பட்டு, ஓய்வு அதிகம் (வேறு விளை யாட்டுத் தெரியாத காலமோ!) என்ப தால் ஆடினார்கள் என்பது உண்மை.

பழைய நம் பாரத கலாச்சாரத்தை நம் கிரிக்கெட் என்ற நவீன விளையாட்டின்மூலம் பரப்புவதற்காக சூதாட்ட வீரர்களுக்கும் பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தந்து கவுரவிக்கலாமே! 22-5-2013

தமிழ் ஓவியா said...


இலங்கையில் மனித உரிமைக்கு இடமில்லை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குழு குற்றச்சாற்றுகொழும்பு, மே 22- இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந் நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந் திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்து கொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங் களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை அரசாங்கம் எடுக்க வில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. யுத்த காலத்திலேயே பல கஷ்டங் களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள்.

ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ், தொடர்புடைய விடயங்கள், மனித உரிமை தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்ற வர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப் படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்சே அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவ கார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என அய்.நா. தலைமைச் செயலாளருக்கு ராஜபக்சே வழங்கியிருந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப் பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரை களும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.

பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக் கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண் மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழி தேடுவார்கள் என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?

நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.

இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?

ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?

தமிழ் ஓவியா said...


இதுதான் மதம் என்பதோ! கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானதாம் சொல்கிறார் சவுதி மத குரு


வாஷிங்டன், மே 23- வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத் துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்து உள்ளார். சவுதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி.யை பயன்படுத்துவது அவர்கள் வீட் டில் இருப்பதை பிறர் கவனிக்கக் கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூ டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் சன்னி முஸ்லிம் மற் றும் முஸ்லிம் அல்லாத பெண் கள் பாலியல் வன்முறை செய் யப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்டைத் தடை செய்க! தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!


இளைஞர்களே, மாணவர்களே, போதை தெளிவீர்!

சூதாட்டப் பொருளாகி விட்ட கிரிக்கெட்டைத் தடை செய்க!

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 24- சூதாட்ட மாகி விட்ட கிரிக்கெட் விளை யாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக் களிடத்திலும், மாணவர்களி டையே விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் இன்று (24.5.2013) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் இளைஞரணி, மாண வரணி, மகளிரணி சார்பில் மாவட் டத் தலை நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில் சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளி வரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள் ளது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மதுவைவிட அதிகம் போதையூட்டக் கூடி யதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப்பதைக் கண் டித்து மக்களிடத்தில் விழிப் புணர்வை ஊட்டும் வகையில் 24.5.2013 அன்று தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பல்லாயிரணக் கணக்கான கழகத் தோழர் - தோழியர்கள் பங்கேற்றனர்.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் மாளிகை அருகில் இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் அய்.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்:

சூதாட்டம் சூதாட்டம் கிரிக்கெட் சூதாட்டம்!
மத்திய அரசே! அனுமதிக்காதே; சூதாட்ட விளையாட்டை அனுமதிக்காதே
கிரிக்கெட் விளையாட்டா சூதாட்ட விளை யாட்டா வெற்றி பெறுவது யார்? சூதாட்டக்காரர்களா? விளையாட்டுக்காரர்களா?
அய்.பி.எல். கிரிக்கெட்டா? கறுப்புப் பண சந்தையா?
வெட்கம்! வெட்கம்! விளையாட்டின் பேராலே வர்த்தகச் சூதாட்டமா?
விளையாட்டின் சிறப்பை கொச்சைப்படுத்தும் கிரிக் கெட்டை தடை செய்!
இளைஞர்களே, மாண வர்களே, பலியாகாதீர்! கிரிக்கெட் போதைக்கு!
மத்திய அரசே நடவ டிக்கை எடு! கிரிக்கெட் பேராலே மோசடி செய்யும் பெரிய மனிதர் கள் மீது நடவடிக்கை எடு!
மத்திய அரசே ஆதரவு கொடு சடுகுடு ஆட்டத்துக்கு, ஹாக்கி ஆட்டத்துக்கு ஆதரவு கொடு
வெட்கக் கேடு விளை யாட்டுக்காரர்கள் ஏலம் போவது வெட்கக் கேடு!
தடை செய் - தடை செய்! சூதாட்டக் கிரிக்கெட்டை சூதாட்டக் கிரிக்கெட்டை தடை செய்! தடை செய்!

என்ற ஒலி முழுக்கங்கள் ஆர்ப் பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில மாணவரணிச் செய லாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை தாங்கினார். சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ், சென்னை மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் பா. மணி யம்மை, ஜோதி ராமலிங்கம், மங் களாபுரம் பாஸ்கர், கலைச் செல்வன், செல்வேந்திரன், சண் முகப்பிரியன், சூதன்லீ, விஜய குமார், சிவசாமி, கார்வேந்தன், அன்பு, இளமதி, கலைவேந்தன், ரமேஷ், ரவி, எழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும்!

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன் றன், ஆர்ப்பாட்ட விளக்க கண் டன உரையில்:-

திராவிடர் கழகம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் மோசடியை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக் கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களை புரோக்கர்கள் விலை பேசி, கிரிக்கெட்டை சூதாட்டக் களமாக்கி விட்டார்கள். இந்த கிரிக்கெட் பித்தலாட்டத்தில் சூதாட் டக்காரர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட்டை நடத்துகிறவர்களுமே பங்கு பெற்றிருக்கிறார்கள். இதை காசு கொடுத்து இன்றைய மாண வர்களும், இளைஞர்களும் பார்த்து தங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டக் களமாகி விட்ட சூழலில் இன்றைய மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்த அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக் குழு உறுப்பினர் மனோரஞ்சிதம், சி. வெற்றிச்செல்வி, கு. தங்கமணி குணசீலன், இ. இறைவி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாரா யணன், பகுத்தறிவாளர் கழக வட மணப்பாக்கம் வி. வெங்கட்ராமன், விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால், சென்னை மண்டலத் தலைவர் நெய்வேலி வெ. ஞான சேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், செயலாளர் எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் கந்தசாமி, செயலாளர் தென்னரசு, கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் செ. உதயகுமார் மற்றும் திரளான கழக இளைஞரணி, மாணவரணி, தோழர் - தோழியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தை விளக்கும் வீதி நாடகம்

முன்னதாக இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் கிரிக்கெட் சூதாட் டத்தை விளக்கும் வகையிலும், மாணவர்கள் - இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழக மாணவரணி தோழர்கள் விமல், சந்தீப், பிரபாகரன், காரல் மார்க்ஸ், ஆனந்த், சைதை செல்வம், வை. கலையரசன், புரூனோ என்னாரெசு, ஆகியோர் பங்கேற்ற வீதி நாடகம் நடைபெற்றது. இதை சாலையில் சென்ற பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்.

கறுப்புப் பண மழை கொட்டும் விளையாட்டாக கிரிக்கெட் இருப் பதை எடுத்துக்காட்டியும், பன் னாட்டு முதலாளித்துவ நிறுவனங் களின் விளம்பரக் கூலியாக கிரிக் கெட் ஆட்டக்காரர்கள் இருப்பதைப் பற்றியும், விளையாட்டு என்பதைத் தாண்டி சூதாட்டக் கூடாரமாக கிரிக்கெட் திகழ்வதை விளக்கியும், பொருள்களைப் போல மனிதர் களையும் சந்தையில் ஏலம் எடுக்கும் அடிமை முறையைக் கண்டித்தும், இப்படிப்பட்ட மோசமான கிரிக் கெட்டுக்கு ஆதரவு வழங்கும் இந்திய அரசும், நிறுவனங்களும் உண்மை யான விளையாட்டுகளான சடுகுடு ஹாக்கி, கால் பந்து, தடகளம் போன்றவற்றை புறக்கணிப்பதையும் எடுத்துக்காட்டி திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் இந்த வீதி நாடகத்தை நடத்திக் காட் டினர்.

தமிழ் ஓவியா said...


மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி ஏதும் கிடையாது!

மருத்துவம் என்பதே மனிதநேயம் தான்; (சில நேரங்களில் சிலரின் பணப் பேராசை அதைப் பொய்யாக்கு கிறது என்பது உண்மையேயாயினும்; தத்துவப்படி அப்படி அல்ல)

சென்னையில் ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும், அவரது அறுவை சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் குழுவி னரும் சிறந்த மனித நேயச் சாதனையைச் செய்துள்ளனர்!

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மவுலானா முகம்மது ஜுபேர் ஆஸ்மி. இவர் டைலேட்டர் கார்டியோ மயோபதி என்ற ஒரு வகை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.

இதன் காரணமாக இவரது இதயத்தின் செயல்பாடுகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் பாகிஸ் தான் மருத்துவமனைகள் இவருக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கின.

இதையடுத்து இந்த உயர் சிகிச் சைக்காக இவர் பாகிஸ்தான் லாகூரி லிருந்து சென்னைக்கு வந்தார்.

அவரைப் பரிசோதித்தில் அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பலவீன மாக இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன் இவ ருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயின் காரணமாக, இவரது கல்லீரல், சிறுநீரகங்களின் செய ல்பாடுகள் குறைந்திருந்தன.
இதைத் தவிர இவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் கூட இருந்தன.

இவரின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி பாசிட்டிவ் ஆகும்!

இவற்றின் காரணமாக இவருக்குச் சிகிச்சை அளிப்பது டாக்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது!

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 37 வயதான கோயில் அர்ச்ச கருக்கு மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட நிலையில் அர்ச்சகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன் வந்தனர்.

இந்த மூளைச் சாவு ஏற்பட்டவரின் இதயத்தின் செயல்பாடு குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

இவரது - அர்ச்சகரது - இதயத்தை எடுத்து பாகிஸ்தான் நோயாளிக்கு பொருத்திட வேண்டிய சிகிச்சை ஏற்பாடு களை நமது டாக்டர்கள் செய்தனர்!

இன்னொரு சிக்கலும்கூட. இந்த இரு வரது ரத்த வகையும் வெவ்வேறானவை என்பது மற்றொரு பெரிய சவால் - சிகிச்சை அளிக்க முன்வந்த டாக்டர்கள் குழுவுக்கு.

இதையும் தாண்டி அந்த பாகிஸ்தான் ஆசிரியருக்கு, இந்த அர்ச்சகரின் இதயம் மாற்று இதயமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்தில் இந்த மருத்துவ மனிதநேய அற்புதம்! நிகழ்த் தப்பட்டுள்ளது!

தற்போது அவர் நலமாக உள்ளாராம்!

ஒரு சில வாரங்கள் கழித்து மருத் துவக் கண்காணிப்புக்குப் பிறகு - அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்ட இஸ்லாமிய ஆசிரியர் பாகிஸ் தான் - சொந்த நாட்டிற்குத் திரும்ப இருக்கிறாராம்!

இந்த சாதனையை நிகழ்த்திய டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது குழுவினர், அம்மருத்துவ மனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ், எல்லா வற்றிற்கும் மூலா தாரமான Fortus Malar மருத்துவமனை யின் நிர்வாகத் தினர் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

1. மேலை நாடுகளுக்குச் சென்றால் தான் முடியும் என்பதை மாற்றி அதை முறியடித்துள்ளனர் நமது டாக்டர்கள் தங்கள் அறிவு, ஆற்றல், அனுபவம் மூலம்.

2. மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி, தொழில் வேறுபாடு எதுவும் கிடையாது. அவற்றை மனிதர்கள் செயற்கையாக அறிவியலுக்கு எதிராக தூக்கிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அலை கின்றனர் என்பதை இந்த நிகழ்வு தெளிவாக்கியிருக்கிறது!

3. மூளைச் சாவு ஏற்பட்டு விட்டதை அறிந்து உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த அந்த அர்ச்சகர் குடும்பத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.

எனவே ஜாதி, மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டியது மனித நேயம் - மானிடப்பற்று என்று காட்டி யுள்ள இம்மாதிரி நிகழ்வுகள் மேலும் தொடரட்டும்! --கி. வீரமணி 24-5-2013

தமிழ் ஓவியா said...


வாழ்க்கையால்...ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமையவேண்டும்.
----பெரியார்(விடுதலை, 20.03.1956)

தமிழ் ஓவியா said...

சென்னையில் பேச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி


* கணினி - இணையதள பயிற்சியும் உண்டு

தஞ்சை வல்லத்தில் நடந்த கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

வல்லம், மே 24- திராவிடர் கழக சொற்பொழி வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.5.2013 வியாழன் பகல் 12 மணி முதல் 2.15 மணி வரை தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி கடவுள் மறுப்புக் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக சொற்பொழிவாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், சிவகங்கை சுப்பையா, என்னாரெசு பிராட்லா, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கழக சொற்பொழிவாளர்கள் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப கணினி - இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் அதிகமான செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், பயன்படுத்திட பழகிக் கொள்ள வேண்டும் எனவும், நூல்கள் வாசிப்பு, மீள் வாசிப்பு தேவை எனவும், தலைப்பு வாரியாக குறிப்பெடுத்து வைத்திருப்பது அவசியம் எனவும், பேச்சாளர்கள் என்போர் பேச்சாளர்களாக மட்டுமின்றி - களப்பணியாளர்களாகவும் இருக்க வேண்டும், நூல்கள் பரப்பிடுவோராகவும் திகழ வேண்டும் என்று தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

வழக்குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் புலிகேசி, முத்து.கதிரவன், யாழ்திலீபன், ஆரூர் முனியாண்டி, தஞ்சை இரா.பெரியார் செல்வன், சிவகங்கை சுப்பையா, காஞ்சி கதிர வன், முனைவர் அதிரடி அன்பழகன், வழக்குரை ஞர் அ.அருள்மொழி, முனைவர் துரை.சந்திர சேகரன், கழக செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு, என்னாரெசு பிராட் லா, வழக்குரைஞர் சிங்கார வேலு உள்ளிட்ட கழக சொற் பொழிவாளர்கள் மற்றும் பொதுச் செயலா ளர் இரா.செயக்குமார், அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன் ஆகி யோர் பங்கேற்றனர். தஞ்சை இரா. பெரியார் செல்வன் நன்றி கூறினார்.

சொற்பொழிவாளர்களுக்கு தமிழர் தலைவர்...

* வாழ்க்கை முழுவதும் பெரியாரின் மாணவன் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அதுபோல சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவரும் அதே எண்ணத்துடன் திகழ வேண்டும். பெரியாரை, பெரியாரின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். வயது ஏற ஏற நாம் படிக்கும் பெரியாரின் கருத்துகளுக்கான விளக் கங்கள், சிந்தனைகள், நம் மை வியக்க வைப்பதாய மையும்.

* பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட் சமுதாயத்துக்கு தேவையான முன்னேற்றத் துக்கு, விடுதலைக்கு தேவை யான அனைத்துக் கருத்து களும் கிடைக்கும் இடம் அது. மீள் வாசிப்பு அவசியம்.

* நூல்கள் வாசிப்பும், அதையொட்டி தலைப்பு வாரியான குறிப்புகளை தொகுத்து குறிப்பேட்டில் எழுதுவதும் அவசியம். குறிப்புகளுடன் தான் பேச வேண்டும். வானொலி உரைக்கு எப்படி தயார் செய்வோமோ அப்படி குறிப்புகள் இருக்க வேண்டும்.

* விரைவில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்படும். கணினி - இணைய தள பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

* திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புறப்பட்டிருக்கும் தமிழ் தேசிய வாதிகளுக்கு திராவிடத்தால் தான் எழுந்தோம் என்பதை புரிய வைக்கும்படியான கருத்துகளை தெளிவாக பேச வேண்டும்.

* நமது அறக்கட்டளை சார்பில் நடைபெறும் அறப்பணிகள், கல்விப்பணிகள் பற்றி கூட்டங்களில் பேசும் போது எடுத்துக் கூற வேண்டும்.

* நிறைய படிக்க வேண்டும், அய்யாவின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். படிக்கும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்து பழக வேண்டும். பேச்சில் பயன்படுத்த அவை துணை செய்யும்.

* பேச்சாளர்களாக மட்டுமின்றி, நமது தோழர்கள் சீரிய களப்பணியாளர்களாகவும் திகழ வேண்டும். நூல்கள் விற்பனை, பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல், அமைப்பு பணிகள் என அனைத்திலும் திறன்மிக்கவர்களாக திகழ வேண்டும்.

மேற்கண்ட கருத்துகளை தமிழர் தலைவர் தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


சிந்தனைப் பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

##############

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

##############

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

##############

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

##############

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


அரசும் - அமைச்சும்


அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அரு வருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம் தான் நமக்குத் தேவை என்று கூறுகிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!

இது முறையன்று. நமது நிலைமை சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு-தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.

அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:

ஜாதிமாத்ரோபஜீ வீவா காமம்ஸ்யாத்
ப்ராஹ் மணப்ருவ;
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன

(மனு)

பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினா லேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒரு போதும் அரச சபைக்கு உரியவனாக மாட்டான்.

இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயி ருந்தால், அந்நாடு சீர்கெடுமெனபதற்கு மனு கூறியதாவது:-

யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம்
நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்

பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கிறானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர் களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும்.

கல்வியை விரும்புகிற சூத் திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத் தக்கவனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லி லேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமையில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கியிருக்கின்றன.

(ஞானசூரியன்

தமிழ் ஓவியா said...


உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும். கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

பயந்த மனிதனும் - பரிகாரமும்!

பயந்த மக்கள் பரிகாரம் காண முற்படுகிற போது அந்த இடத்திற்கு வந்து விடுகிறது சோதிடம்! சோதிடர்கள் பிழைப்பாக்கிக் கொள்கிறார்கள்!

திருமணத்தை நடத்தி வைக்க, புதுக்கணக்கு எழுத, கடையை தொழிற்சாலையை திறந்து வைக்க, அடிக்கல் நாட்ட என்று நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள்! குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி கூறும் வாக்கையும், சோவி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும், கிளி ஜோசியத்தையும் நம்புகிற நம் மக்களிடத்தில் ஜோதிடமும் இடம் பெற்றுவிட்டது.

மதவாதிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் ஜோதிடம் பரப்பப்பட்டது. அவர்கள் சொல்வதை நம்ப வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.

தமிழ் ஓவியா said...


சோதிட அறியாமை


சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது? அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை (சோதிடத்தை) ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப்படைக் கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.

விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து இட்டுக் கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
(அக்கினிச் சிறகுகள் நூலில்)

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா போற்றி வணங்கும் இராம கிருஷ்ண பரமஹம்சரின் கதை


மூளைக் குழப்ப வியாதியால் பைத்தியமாகிவிட்ட கடாதரின் பூர்வாசிரப் பெயர் மாற்றப்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று நாமம் சூட்டப்பட்டு உச்சாணிக் கொம் பில் ஏற்றி வைக்கப்பட்டார். அவரே கூறுகிறார். இறுதியில் தேவியின் ஆணை எனக்கு அருளப்பட்டு விட்டது.

மானுடம் பயன் பெறுவதற்காக உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள் என்று மதப்பைத்தியம் பிடித்த மக்கள் கடாதரரை வேடிக்கை பார்ப்பதற்குக் கூட்டங் கூட்டமாகத் தானேஸ்வரம் தேடிச் சென்றார்கள். படித்த இளைஞர்கள்கூட விவேகானந்தராக ஆகப் போகும் நரேந்திர தத்தா உட்பட அனைவரும் குருவின் காலடியில் அமர்ந்து ஆத்ம தரிசனம் அடைந்தார்கள். நான் படிப்பற்றவன் இருந்தும் என்னைக் காண்பதற்கு மக்கள் இங்கே அலை மோதுகிறார்கள் என்னே விந்தை?

நிரஞ்சன்தர் தனது ஆய்வின் முடிவில் கூறுகிறார் தன்னளவில் ராமகிருஷ்ணர் நேர்மையானவர்தான் ஆனால் அவரது மூளை ஏணல் கோணலாக செயல்பட்டது. அவரது வாழ்க்கை முழுதும் இயற்கைக்கு மாறான நெறிபிறழ்ந்த செயல்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன. அவரது இயற்கைக்கு மாறான நெறி பிறழ்ந்த செயல்களின் கட்டுமீறிய வெளிப்பாடுகள்தான் அவர் அவ்வப் பொழுது கிறுக்குப் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவது.

அவர் வாழ்ந்த காலத்தில் நவீன நோயாளியான அவரது செயல்களுக்குத் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டு விட்டது. வாய்ப்பை வளமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் அவரை வைத்து ஆதாயம் அடைந்தது கடாதரர் கடவுளாக்கப்பட்டார். இதில் அவலம் என்னவென்றால் கடாதரரும் தன்னைக் கடவுள் என்று நம்பும் அளவுக்கு நரம்பியல் நோய் தீவிரமாக இருந்தது.

நரம்பியல் நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனுக்குத் தனது உண்மையான நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. புற்று நோயால் அவதிப்பட்ட ராமகிருஷ்ணர் மரணப் படுக்கையில் கிடந்தார். தனது யோக சக்தியைப் பயன்படுத்தி நோயின் பிடியிலிருந்து மீண்டு கொள்ளுமாறு நரேந்திர விவேகானந்தர் உட்பட அவரது சீடர்கள் அவரை வேண்டினர்.

இராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பொழிப்புரை ஒன்றை எரிச்சலுடன் எடுத்தோதினார். நான் இவ்வாறு வேதனையில் அவதியுறுவது தலைவிதியா என்ன? நோயில் இருந்து விடுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

ஆனால் தேவியின் திருவுளம்பற்றி னாலன்றோ எனது நோய் தீர முடியும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று இராமகிருஷ்ணர் தணியாத தாகம் கொண்டிருந்தார். ஆனால் புற்றுநோயின் கொடுமையால் நீண்ட காலமாக இழுபறியில் தத்தளித்த அவர் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று இறந்தார். மிகுதியான யோக சக்திகள் கொண்டிருப்பதாக நம்பப்பட்ட அவரது விருப்பத்தை நிறைவேற்ற யோக சக்திகள் கை கொடுக்கவில்லை.

(இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர் பிரேம் நாத் பசாஸ்)

தகவல்: பரமத்தி சண்முகம், கரூர்

தமிழ் ஓவியா said...


குருபார்வையும் குருபெயர்ச்சியும்...!கோபுர தரிசனம்..
கோடி புண்ணியமாம்...?
குரு பார்க்க...
கோடி நன்மையாம்...?
பக்தர்களுக்கு...!
குரு பெயர்ச்சி
கோடி வருமானம்
கோயில்களுக்கு!
கோடி கோடியாய்
குவியுது உண்டியலில்!!
புது பழமொழி
நாதியற்ற நாடாக இருந்தாலும்
நதியற்ற நாடா இருக்கக் கூடாது!
-_ கோ. கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...

தீர்மானம்

1920ஆம் வருடம் திருநெல்வேலி யில் நடந்த 26ஆவது ராஜீவ் மாகாண கான்பிரன்சின்போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில், ஈ.வெ. ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ்ப் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடிச் சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு ஜன சங்கைக்குத் தகுந்தபடி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண் டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


பூனை கெட்ட சகுனமா?


மனிதர்கள் எந்த காரியத்தை செய்ய வெளியே கிளம்பி னாலும் பாதையின் குறுக்கே ஒரு பூனை கடந்து போனால் உடனே அதை கெட்ட சகுனமாக நினைத்து நின்று விடு வார்கள். உண்மையில் பூனை கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் மனித சமூகத்தோடு சேர்ந்து வாழ்பவை. மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும் படைகள் மனித நடமாட்டமே இல்லாத நீண்ட காடுகளையும், பாலைவனப் பகுதிகளையும் கடந்து செல்லும். அப்படி போகும் போது தங்கள் பாதையின் குறுக்கே பூனை போவதைப் பார்த்தால் உடனே நின்று விடுவார்கள். காரணம், அருகில் குடியிருப்புகள் இருப்பதை பூனைகள் காட்டுகின்றன. அருகில் உள்ள அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தம்மை எதிரியாக கருதி தாக்குதல் நடத்தலாம். எனவே படை வீரர்கள் சிறிது நேரம் கழித்து, தங்களை தயார் செய்து கொள்வார்கள். எனவே பூனைகள் எதிரியை அடையாளம் காட்டுவதாக மாறின.

இதுவே நாளடைவில் பூனையைப் பார்த்தாலே படை வீரர்களுக்கு எதிரி நினைவு வரும் நிலையை ஏற்படுத்தியது. படை வீரர்கள், பூனையை எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சம் காலம் போகப் போக பூனையைப் பார்த்தால் தங்களுக்கு கெட்டதாக, அதாவது தாக்குதல் நடக்கப் போகிறது என்று எண்ணத் தொடங்கினார்கள்.

இந்த எண்ணம் படை வீரர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவர்கள் நாட்டிற்கு வந்த பின்னும் தங்கள் பாதையில் பூனை சென்றால் போருக்கு செல்வது போலவே கெட்ட நிகழ்வாக பார்க்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் பூனை ஒரு கெட்ட சகுனமாக மாறத் தொடங்கியது.

இன்றைக்கு மன்னர்கள் ஆட்சி செய்யவில்லை. மக்கள் போருக்கு குதிரை மேல் அமர்ந்து போகவில்லை. எல்லாம் மாறி விட்டது. ஆனால் அன்று உருவான பூனை மீதான பயம் மட்டும் இன்னும் தொடர்கிறது. பூனை ஒரு கெட்ட சகுனமாகவே மக்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்து விட்டது. இன்றைய காலத்துக்கு ஒத்துவராத மூடநம்பிக்கை தான் இது.

தினத்தந்தி 29.4.2013
தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

தமிழ் ஓவியா said...


மழைக்கு வழி தொழுகையா?


கடும் வறட்சி பருவத்தில் மட்டுமல்ல; மக்களின் அறிவிலும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் ஜாடையாம் பட்டி என்னும் குக்கிராமம். 300 குடும்பத்தினர் அவ்வூர் மக்கள். என்ன செய்தார்கள்?

தத்தம் வீடுகளைப் பூட்டி விட்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர் (23.5.2013).

எதற்காக அப்படிச் சென்றார்களாம்? ஊரைக் காலி செய்துவிட்டு வெளியே சென் றால் மழை கொட்டுமாம் - வறட்சி நீங்குமாம். அப்படி ஒரு மூடநம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு.

மூடநம்பிக்கைகளில் உள்ள பலப்பல ரகங்களை நினைத்துப் பார்த்தால் நகைச்சுவை மட்டுமல்ல; பாழும் மூடநம்பிக்கையால் இந்த 2013ஆம் ஆண்டிலும்கூட நம் மக்கள் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்ற பரிதாப உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. பெரம்பலூரில் நூற்றுக்கணக்கான முசுலிம் மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளனர். மழை வேண்டி. (குடையை எடுத்துக் கொண்டு போகவில்லை).

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம். கல்யாணப் பத்திரிக்கை அடித்து - பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து முறைப்படி கல்யாண மந்திரங்களை ஓதி நடைபெறுகிறது.

அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையாம். ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் செல்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாவது மழை பொழிந்ததா - வெப்பம் குறைந்ததா? குடிநீர் கிடைத்ததா?

இன்னும் சில இடங்களில் வருண பகவானை வேண்டி யாகம் நடத்துகிறார்கள். அமிர்த வர்ஷினி ராகத்தை இசைக்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் புழல் ஏரியில் நின்று கொண்டும் சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளத்திலும் குன்னக்குடி வைத்தியநாதய்யர் அம்ச வர்த்தினி ராகத்தில் வயலின் வாசித்த துண்டு; விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை.
இந்த ராகத்தில் பாடினால், பிரார்த்தனை தொழுகை நடத்தினால் வருண பகவான் மனமிரங்கி மழையைக் கொட்டுவார் என்ற நம்பிக்கையாம்.

ஒரு கேள்விக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். கருணையே வடிவானவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் மதவாதிகள், பக்தர்கள் கூறுகிறார்கள். அது உண்மையானால், பிரார்த்தனை செய்தால்தான் மழையைக் கொடுப்பாரா? தொழுகை செய்தால் தான் கடவுளின் கருணைக் கண்கள் திறக்குமா?

மாடுகூட பால் நினைந்தூட்டும் என்று சொல்கிறார்கள் - பகவானுக்கு அந்த ஈர நெஞ்சம் இல்லாது போனது ஏன்?

காரணம் தெளிவானது - கடவுள் என்ற ஒன்று இல்லை - அதனால் மழையைக் கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை!

மழை எப்படி பொழிகிறது? அதற்கான அறிவியல் காரணம் என்ன? என்பதை நான் காம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனையோ, சிறுமியையோ கேட்டால் பட்டென்று பதில் சொல்லி விடுவார்கள்.

மதப்பாசி ஏறிய மதியுடையோர் அறிவைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மவுடீகத்தைப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய மூடநம்பிக்கை வழிகளைப் பின்பற்றுகின்றனர்.

யாகம் நடத்தி நெருப்பை வளர்க்க மரங் களை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக, மரங்களை வளர்த்தால், ஏரி, குளங்களைத் தூர் செய்து வைத்திருந்தால், நிலத்தடி நீரைக் காப்பாற்றி வைத்தால், தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இடம் இருக்காதே!

மரங்களைக் கும்பிடுவதைவிட்டு மரங்களை வளர்க்க முனையுங்கள். அதுதான் மழையைக் கொடுக்கும் - மறவாதீர்கள்! 25-5-2013

தமிழ் ஓவியா said...


காவிரி கண்காணிப்பு தற்காலிகக் குழு அமைப்பு காவிரி மேலாண்மைக் குழு எப்பொழுது?


புதுடில்லி, மே 25- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படு வதற்கு முன்னோடியாக, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காவிரி நதிநீர் பங்கீட் டில் சம்பந்தப்பட்ட தமி ழகம், கருநாடகா உட் பட 4 மாநிலங்களின் தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப் பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணை யத்தையும் உடனடியாக அமைக்க மத்திய அர சுக்கு உத்தரவிட வேண் டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் மாதத்தில் பயிர் சாகுபடி தொடங்க இருப்பதால், இந்த 2 குழுக்களையும் மத்திய அரசு எப்போது அமைக்கும் என்பதை யும், எவ்வளவு அவகா சம் தேவை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை தற்காலிக மாக காவிரி கண்காணிப்பு குழு அமைக்க வேண் டும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கரு நாடகாவைச் சேர்ந்த தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவுக்கு மத்திய நீர் வளத் துறை செயலாளர் தலைமை ஏற்க வேண் டும் என்று உத்தர விட் டனர்.

அதன்படி, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. இக் குழு வில் தமிழகம், கரு நாடகா உட்பட 4 மாநி லங்களின் தலைமை செயலாளர்கள் உறுப் பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியாளர், இந்த குழுவின் உறுப்பினர்- செயலாளராக இருப்பார்.

கண்காணிப்பு குழு வின் தலைமையகம், டில்லியில் செயல்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, இது முற்றி லும் ஒரு தற்காலிக நட வடிக்கை என்று மத்திய அரசு கூறி உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல் படுத்தும் பொறுப்பை இந்த கண்காணிப்பு குழு கவனிக்கும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட் டால், மேற்பார்வை குழுவின் தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களோ உச்ச நீதிமன்றத்தில் அணுக லாம். மற்ற மாநிலங் களுக்கு எதிராக உத் தரவை பெறலாம்.

புதிதாக அமைக் கப்பட்ட காவிரி நீர் கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம், ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவித்து உள்ளன.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் பணியில், இது ஒரு மிகப்பெரிய நடவடிக் கையாக கருதப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


நமது பணி...


மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கை களைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக் குவதே நமது முக்கிய வேலை.

(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...


தமிழ் சுயராஜ்யா


பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளைப்போல் பார்ப்பனரல்லா தாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பனரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல்லாதாரின் க்ஷீணத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வருவதை உலகமறியும்.

சின்னாட்களுக்குமுன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. சுயராஜ்யா பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சுயராஜ்யா பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமியிருந்த பார்ப்பனரல்லாதவர் களன்று. இதைப்பற்றி திராவிடன் கூறியுள்ள முத்து போன்ற எழுத்துக்களைக் கவனிப்போம்.

தமிழ் சுயராஜ்யா அற்பத்தனமாயும் அயோக்கியத் தனமாயும் எழுதத் துவங்கிவிட்டது மிகவும் வருந்ததக் கதாகும். உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சௌந் தரிய மகாலில் பெருந்திரளாய்க் கூடியிருந்தவர்கள் அனைவருமாம். வீடுதோறும் பிறப்புக்கும், கலி யாணத்துக்கும், இழவுக்கும் அழையா விட்டாலும் நாய்போல் வந்து பல்லைக் காட்டி அரையணா, ஒரு அணா பெற்றுப் பொறுக்கித் தின்பவர்கள் பார்ப்பனர் களே, நிருவாகசபை உத்தியோ கங்கள் முதல், கேவலம் செருப்புத் துடைத்தல், கும்ப கோணம் வேலையில் ஈடுபடல் ஆகிய இழிதொழில்கள் செய்து கால்களை நக்கிப் பொறுக்கித் தின்று வயிறு பிழைப்பவர்கள் பார்ப்பன மாக்களேயன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.

இதைப்பார்த்த பின்னும்- இவ்வாறு அந்த பார்ப்பனப் பத்திரிகையால் பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும் மறையாத மாசுடையோராய் இழித் துரையாடப் பெற்ற நக்கிப் பொறுக்கிகள் என்ற வார்த்தையைக் கேட்டபிறகும் - தன் நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின் சுத்த ரத்தம் ஓடப் பெறும் எவராவது - பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்த எந்த ஆண்மையுடையோராவது இனி சுயராஜ்யாப் பத்திரி கையை கையில் தொடுவாரா? கண்ணில் பார்ப்பாரா? மானம், வெட்கம், ரோஷம், சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும் இனி அப்பத்திரிகையைப் பார்க்கவும் தொடவுமாட்டார்களென்றே நம்புகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 18.07.1926

தமிழ் ஓவியா said...

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி

தமிழ்நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர்கள் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசி யில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலா சாலை ஏற்படுத்த வேண்டு மென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.

இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக் கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணிவேர் நுனி வரை நுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழி யெனக்கொண்டு, தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார்,, ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா.பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும், தமிழுக்கும் உள்ள பேதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 01.08.1926