Search This Blog

2.5.13

இராமன் பாலம் - ஆதாரம் உண்டா? பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கும் துரோகம்!


மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டுவோம் - வாரீர்!

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை சேது  சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவோம் - ஆதரவு திரட்டுவோம். அனைவரும் வாரீர் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பாக அமையும், தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற திட்டத்தினை வேண்டாத தமிழ்நாட்டுத் தலைவர்களே இல்லை என்றே சொல்லலாம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், எம்.ஜி.ஆர். என்ற மறைந்த அத்தனைத் தலைவர்களும், கட்சி வேறுபாடு இன்றி இதனை பற்பல கால கட்டங்களிலும் வலியுறுத்தி, செயலில் கொண்டு வர வேண்டுமெனக் கோரியுள்ளனர் - தத்தம் கட்சிகள் சார்பில்.

ரூ.2400 கோடி திட்டம்

இத்திட்டம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை 2004இல் அமைத்த வாய்ப்பின் காரணமாக, 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் (U.P.A.) அடுத்து 2007இல் துவக்கப் பட்டது. அதற்கு முன்பே தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதே (NDA)   வாஜ்பேயி பிரதமராக இருந்த காலந்தொட்டே இது தமிழ்நாட்டுக் கட்சிகளால் வற்புறுத்தி, ஆராயும் படியான ஒரு நிலையையும் ஏற்படுத்தின.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்...

அதன்படி - பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இதற்கான ஆய்வுகளை - நாகபுரியில் உள்ள நீரி (Neeri)   என்ற புவியியல் ஆய்வுக் கூடத்தின் மூலம் சரியான வழித் தடம் பற்றி ஆய்வு செய்து, ஆறாம் வழித்தடமே வாய்ப்பானது என்று கூறப்பட்டது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனை ரூ.2400 கோடி திட்டமாக செயல்படுத்த முனைந்தது!

இன்னும் 22 கிலோ மீட்டரே!

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இடையறாத திட்டமிட்ட சீரிய முயற்சி - தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் கப்பல்துறை அமைச்சராகவே பொறுப் பேற்று மிக வேகமாகச் செய்ய முனைந்து இன்னும் ஒரு சிறு பகுதிதான் (22 கி.மீட்டர்தான்) முடிக்க வேண்டிய பாக்கி பகுதி என்ற நிலை இருந்தது.
இந்தக் கால கட்டத்தில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி என்ற பார்ப்பனரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வழக்குப் போட்டனர்.

அரசியல் நோக்கமே!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்துவிட்டால் அதன் பெருமை - அதன் அரசியல் லாபம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு - தி.மு.க.வுக்கு அல்லவா சென்றுவிடும் என்ற அரசியல் நோக்கில் (பிஜேபி ஆட்சியிலேயே தேர்வு செய்த தடம்தான் என்ற போதிலும்) ஆதாம் பாலம் போன்ற மணற் திட்டுகளை, இராமன் பாலம் என்று கயிறு திரித்து, பார்ப்பன ஊடகங்கள் ஆதிக்கம் காரணமாக இதை ஊதிப் பெரிதுபடுத்தி, முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஒரு ஆய்வுக் குழு புதிதாக போடப்பட்டு (கால தாமதம் செய்து கட்டை போடுவதுதான் அதன் நோக்கம் என்பது அரசியல் பார்வையாளர் அறியாததா?) அதன் அறிக்கைக்காக என்று, காங்கிரசு சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வடநாட்டில் இந்த இராமன் பாலப்  பிரச்சாரம் தங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்று கருதியோ என்னவோ, இந்த முட்டுக்கட்டை போட்டவர்களுக்கு மறைமுக உதவி செய்வது போல நடந்து கொண்டு கிணற்றில் போட்டனர்!

வெறும் நம்பிக்கை போதுமானதா?

மக்கள் வரிப் பணம் ரூ.2000 கோடி செலவழிக்கப்பட்டு, பல வகையில் கப்பல்களின் பயண தூரம் இலங்கையைச் சுற்றாமல் சுருங்கியுள்ளதனால் எரி பொருள் சிக்கனம், இலங்கை அரசுக்குச் செல்லும் பண வருவாய் தமிழ் நாட்டிற்கு, இந்திய அரசுக்கு வரும் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவைபற்றி சிறிதும் எண்ணா மல், வெறும் மூடநம்பிக்கை அடிப்படையில் அறிவிய லுக்கும் ஆதாரங்களுக்கும் முரணாக இப்படி ஒரு செயற்கைத் தடையை ஏற்படுத்தி, 4 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய திட்டத்தைக் கிடப்பில் போட, இவ்வாறு பல நிலைப்பாடுகளை உருவாக்கி விட்டனர்.

இராமன் பாலம் - ஆதாரம் உண்டா?

1. இராமன் கட்டிய பாலம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆதாம் பாலம் - மணல் திட்டுக்கள் என்றே அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வாசகங்களிலேயே கூறப்பட்டுள்ளன.

2. அய்.மு. கூட்டணி அரசு (U.P.A.) இந்த ஆறாம் வழித்தடத்தை (ஆதாம்பாலம் உள்ள தடத்தை) தேர்வு செய்யவில்லை; நீரி என்ற ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் ஆறு தடங்களில் இதுவே சிறந்தது என அறிக்கை தந்து தேர்வு செய்து  பணிகளும் நடந்தன. தி.மு.க.வோ மற்ற அய்க்கிய முற்போக்குக் கட்சிகளோ முடிவு செய்த இடம் அல்ல அது! பா.ஜ.க. அமைச்சர்களே அப்போது கையொப் பமிட்டு முடிவு செய்யப்பட்ட தடம் (அருண்ஜேட்லி, எஸ். திருநாவுக்கரசர், வேத்பிரகாஷ்கோயல், உமாபாரதி ஆகிய பிஜேபி அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டமிது - பிரதமர் வாஜ்பேயியாலும் அறிவிக்கப் பட்டதும்கூட).

3. தனது இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை ஏன் அப்போதைய மத்திய ஆட்சிகள் செயல்படுத்தவில்லை என்பதை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வே வற்புறுத்தி விட்டு, இப்போது இப்படி தலை குப்புற பல்டி நிலைப்பாடு எடுப்பது எதனால்?  அரசியல் தவிர வேறு எந்த நியாயமான காரணமும் இல்லை. அது தி.மு.க.வின் சாதனையாகி விடக் கூடாதே என்பதுதானே உள் நோக்கம்?
இதைவிட தமிழ்நாட்டு வளர்ச்சிக்குக் கேடு செய்யும் கொடுமை வேறு உண்டா?
வேலை வாய்ப்பு, பொருளாதார செழுமைபற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையே விளக்கமாக விவரித்த நிலையிலா இப்படி ஒரு முரண்பட்ட அரசியல் நிலைப்பாடு?
நண்பர் வைகோவும், இடதுசாரிகளும் கண்டிக்க வேண்டாமா?

4. நண்பர் வைகோ இதை செயல்படுத்த தான் எடுத்த முயற்சிகள் அதிகம்; எனவே தனக்கும் தன் கட்சிக்குமே முதல் பெருமை கிடைக்க வேண்டும் என்று மார்தட்டியவர்.

இடதுசாரிக் கட்சித்  தோழர்களும் இடையறாது வற்புறுத்தியதோடு, பல மேடைகளில் தி.மு.க.வோடு இணைந்து சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பற்றியும், இராமன் பாலம் என்பது கற்பனை என்றும் முழங்க வில்லையா?
தமிழக அரசின் நிலைப்பாடாகவே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, கட்சியாடி முடக்க நினைப்பதை - மதிமுக பொதுச் செயலாளரும், இடது சாரிகளும்  எதிர்க்க வேண்டாமா?

ஓட்டுக் கண்ணோட்டமா?

இதில் நாட்டுக் கண்ணோட்டம் முக்கியமல்லவா? ஓட்டுக் கண்ணோட்டம் அல்லது கூட்டணி உத்தேசக் கண்ணோட்டத்திற்காக மவுனம் சாதிக்கலாமா? உடனே குரல் கொடுக்க வேண்டாமா?

தி.மு.க. -கருமத்திற்குரியவர்கள் கடைசி வரை இருப்பர் - என்பதற்கேற்ப வரும் மே 15ஆம் நாள் - எழுச்சி நாள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி, மக்களின் ஆதரவைத் திரட்டுவது என்பது வரவேற்கத்தக்கது!

இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டு வளர்ச்சியோடு இணைந்த - இன்றியமையாத திட்டம். எனவே இதனை மத்திய அரசு செயல்படுத்திட அனை வரும் ஒத்தக் கருத்துள்ளவர்கள். ஓரணியில் நிற்க மனமில்லா விட்டாலும் - முரண்பாடு இல்லாமல் தனித்தனியாகவேனும் குரல் கொடுக்க - செயல்படுத்த முன் வாருங்கள்!

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கும் துரோகம்!

தமிழ்நாடு அரசின் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை இராமனைக் காட்டி முடக்குவது அண் ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும்கூட அது செய்யும் துரோகம் -  மக்கள் விரோதம்! இதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று மக்கள் ஆதரவைத் திரட்டிட அனைவரும் முன் வருவார்களாக!

-----------------------  கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -”விடுதலை” 2-5-2013

36 comments:

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவும் - சுயமரியாதையும்


மே தினத்தில் திமுக தொழிற்சங்கத் தலைவர் மானமிகு செ. குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் சுயமரியாதையும், பகுத்தறிவுமே அடிப்படை என்ற அழகான, ஆழமான கருத்தினைக் கூறியுள்ளார்.

இதனை திராவிடர் இயக்கத் தோழர்கள் மட்டுமல்லர், (முக்கியமாக அழுத்தமாகக் கடைபிடிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றாலும்) தமிழர்கள் அனைவரும் உணரவும், கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து உலக மானுடத்திற்கே கூடத் தேவையானதுதான்.

திருவள்ளுவரின் திருக்குறளில்கூட ஏழு சொற்கள் இடம் பெறும்; தந்தை பெரியார் அவர்கள் வடித்துக் கூறியதோ நான்கே நான்கு சொற்கள்.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு - இந்தக் கருத்தின் கருவைத் தான் கலைஞர் அவர்கள் வேறு சொற்களில் சுயமரியாதையும், பகுத்தறிவும் அடிப்படை என்று கூறியுள்ளார்.

மறைந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஒரு கருத்தை அடிக்கடி கூறுவார். ஒரு இயந் திரத்தின்மீது மனிதன் எச்சிலை உமிழ்ந்தால் அதற்குக் கோபம் வரப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படியல்லவே.

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பெறாத உள்ளம்
என்பார் புரட்சிக் கவிஞர்.

தமிழர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்குக் காரணமே இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனீயம் செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டில், பக்தி எனும் போதை மருந்துக்குப் பலியாகி, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பறி கொடுத்திருப்பதை மறுக்க முடியுமா?

உலகத்தில் எந்த நாட்டிலாவது கேள்விப்பட்ட துண்டா? கடவுள் தனது முக்கிய நான்கு உறுப்புகளிலிருந்து மனிதர்களை பிறவிப் பேதத்தை அடிப்படையாக வைத்துப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளதா?

அர்த்தமுள்ள இந்துமதம் என்று சொல்லும் இந்தப் பாழும் மதத்தில்தானே பிர்மா எனும் படைத்தல் கடவுள், தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத் தார், தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தார், இடுப்பிலிருந்து வைசியனைப் படைத்தார், பாதங்களிலிருந்து சூத்திரர்களைப் படைத்தாராம்.

இந்த நான்காம் ஜாதியான சூத்திரர்கள் அடிமைத் தொண்டு செய்ய வேண்டியவர்கள், பார்ப்பனர்களின் வேசிப் புத்திரர்கள் என்று எழுதி வைத்துள்ளனர் என்பதோடு இன்று வரை இதன் அடிப்படையில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது - தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று எழுதியதை இன்றைய உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் நாம் 2013ஆம் ஆண்டில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி, நம் உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதே!

இன்னும் தமிழன் பக்தியின் பெயரால் செருப்படித் திருவிழா நடத்திக் கொண்டு கிடக்கின்றானே! ஒருவனுக்கொருவன் விளக்கமாற்றால் அடித்துக் கொண்டு கிடக்கிறானே!

வெட்கப்பட வேண்டாமா? விஞ்ஞானி எனும் நிலையை அடைந்தவன்கூட மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம்) குடிக்கிறானே! கோயிலுக்குள் சென்று பார்ப்பானைப் பார்த்து சாமி என்று கூறிக் கைகட்டி நிற்கிறானே!

பார்ப்பானை உயர் ஜாதியான் என்று ஒப்புக் கொண்டு தன் வீட்டு நிகழ்ச்சிகளை அவனை அழைத்து நடத்தி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தானே செய்கிறது!

சுயமரியாதையும், பகுத்தறிவும் இல்லாததால் தானே - பல உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பொழுது பொங்கி எழும் உணர்ச்சிக்கு ஆளாவ தில்லை.
நிஜம் எது, நிழல் எது என்று தெரியாமல் எதிரிகள் விரிக்கும் வலையில் தமிழன் விட்டில் பூச்சியாக விழுவதற்குக் காரணம் - தந்தை பெரியார் எடுத்துச் சொன்ன - கலைஞர் தொடுத்துச் சொன்ன அந்தவுணர்வு இல்லாது போனதுதானே!
தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தையும் இணைத்துக் கொள்வீர் தமிழர்களே! 2-5-2013

தமிழ் ஓவியா said...

ஒரு நாள் பயணம்


- உடன் சென்று பார்த்தவன்

செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். ஆனால் வயிற்றிலே ஏதும் இல்லாத போது கொண்ட கொள்கையை, மனித நேயத்தை, செவிக்குணவாக கோடை வெயிலிலும் மனித மனங்களில் விதைக்கின்ற மனிதநேய மாண்பாளர் தமிழர் தலைவர் அவர்களின் ஒரு நாள் பயணத்தின் நிகழ்வுகளை உடனிருந் தவன் என்ற வகையில் உண்மையை எழுதுகிறேன்.

தந்தை பெரியாரை உலகமெங்கும் எடுத்துச் செல்லுகின்ற உன்னத பணியினை நாள்தோறும் செய்து வருபவர் நம் தமிழர் தலைவர் அவர்கள். பன்னாட்டு அறிஞர் பெரு மக்களிடம் அய்யா பெரியாரை எடுத்துச் செல்வது மட்டுமல்ல பாமர மக்களிடமும் பெரியாரை தொடர்ந்து விதைத்து வருகிறார்.

ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மக்கள் பல்கலைக் கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பல மாநிலங்களை, பல நாட்டினைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களோடு தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில் நுட்ப திருவிழாவில் பன்னாட்டு மொழியான ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்கள்.

அன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராவணன் அவர் களுடைய கிராமத்தில் தந்தை பெரி யாரின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார். ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டிருந்த அக்கிரா மத்தில் ஒரு மணி நேரம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து இரவு இராவணன் இல்லத்திலேயே உணவருந்தி இரவு பதினொன்றரை மணி அளவில் திருச்சி வந்து தூங்கச் செல்கிறார் நம் தமிழர் தலைவர் அவர்கள்.

ஒவ்வொரு நாளும் 107க்ஷ்ஊ, 106க்ஷ்ஊ, என தமிழகத்திலேயே மிக அதிகமாக வெப்பம் தாக்குகின்ற திருச்சியில் 25ஆம் தேதி இரவு பதினொன்றை மணிக்கு வந்து தூங்குகிறார். அங்கு மின்சாரம் பாதி நேரம் இருப்பதில்லை. இருக்கும் நேரத்தில் குளிர்சாதனமும் வேலை செய்யவில்லை. கடுமையான வெப்பத்தின் விளைவாக 26ஆம் தேதி காலையிலேயே தமிழர் தலைவருக்கு வயிற்று உபாதை இருந்தாலும் ஒப்புக் கொண்டபடி வாழ்மானபாளையத்தில் திருமண நிகழ்விற்கும், பெருவளப்பூரில் படத்திறப்பிற்கும் செல்ல வேண்டும். எனக்கு சொந்த புத்தி கிடையாது எல் லாம் தந்தை பெரியார் தந்த புத்திதான் என்று சொல்லுவது மட்டுமல்ல செயலிலும் காட்டுகின்ற நம் தமிழர் தலைவர் அவர்கள் வயிற்று உபாதையையும் பொருட்படுத்தாமல் காலையில் தயிரைக் கலந்து இரண்டு இட்லியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, காலை 9.30 மணி அளவில் போகலாமா! என்று தயாராகி விட்டார்கள். எனக்கோ பயம் போகிற வழியில் வயிறு சரியில்லை என்றால் என்ன செய்வது என்ற பயத்தோடு வழக்க மாக செல்லும் இரண்டு வாகனங்களோடு திருச்சி மாவட்டத் தலைவர் மானமிகு சேகர் அவர்களையும், மண்டலத் தலைவர் மானமிகு ஆரோக்கியராஜ் அவர்களை யும் வேறு ஒரு காரில் எங்களை தொடர்ந்து வரச் சொன்னேன். நிலைமை அறிந்து பெரியார் மாளிகை திருமதி தங்காத்தாள் அவர்கள் ஒரு பாட்டில் மோரையும் கொடுத்தனுப்பினார்கள். வழியில் கைபேசியில் தமிழர் தலைவர் அவர்கள் சென்னையில் உள்ள அம்மா அவர்களிடம் தனது உடல் நிலை குறித்து உரையாடுகிறார்கள். அவர்கள் சொல்லும் செய்ய வேண்டிய நடைமுறைகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

மண்ணச்சநல்லூர் செல்வதற்குள் ஒரு முறை வேனில் உள்ள கழிவறை சென்று வருகிறார்கள் தமிழர் தலைவர் அவர்கள்.

மண்ணச்சநல்லூரில் நூற்றுக்கணக் கான கருப்புச் சட்டை தோழர்கள் லால்குடி மாவட்டத் தலைவர் மானமிகு. வால்டேர், செயலாளர் செயல்வீரர் மானமிகு ஆல்பர்ட் ஆகியோர் தலைமை யில் அய்யா அவர்களை வரவேற் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


அய்யா நீங்கள் வண்டியை விட்டு இறங்க வேண்டாம் - நான் இல்லை இல்லை இத்தனை தோழர்கள் வெயிலில் நிற்கிறார்கள் என்று வண்டியின் பின் படிக்கட்டில் இறங்கி நிற்கிறார்கள். மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி என 30-க்கும் மேற்பட்டோர் அய்யா அவர்களுக்கு சால்வைகள், பயனாடைகள் ஆகியவற்றை அணிவிக்கிறார்கள். பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என வாழ்த்து முழக்கம் ஒலித்துக் கொண்டேயிருக் கிறது. அங்கு நின்று கொண்டிருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு. வனத்தான் அவர்களின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு 90 வயது இருக்கும். அவரை திருமணத்திற்கு அழைத்து வாருங்கள். அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என மாவட்ட தலைவருக்கு அன்பு கட்டளை இடு கிறார்கள்.

கொஞ்சம் தள்ளி நின்று பெருமை யோடு பார்த்துக் கொண்டிருந்த முன் னாள் லால்குடி மாவட்ட செயலாளர் சிவசங்கரன் அவர்களை அழைத்து என்ன நன்றாக இருக்கிறீர்களா அரிசி கடை எல்லாம் நன்றாக போகிறதா? என்று நலம் விசாரிக்க நின்று கொண் டிருந்த மக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர்.

ஒரு திறந்த வேனில் 10 பேர் கொண்ட குழு பேண்டு வாத்தியம் ஒலிக்க நூற்றுக் கணக்கான தோழர்கள் இரு சக்கர வாகனத்திலும், கார்களிலும் முன்செல்ல ஊர்வலம் திருபஞ்சீலியை நோக்கி ஊர்ந்து செல்கிறது.

மண்ணச்சநல்லூரில் தானே திருமணம் என்று சொன்னார்கள் - என தமிழர் தலைவர் கேட்க இல்லை அய்யா பக்கத்து ஊரில் திருபஞ்சீலி பக்கம் வாழ்மானப் பாளையத்தில் தான் திருமணம் என்றேன்.

தமிழ் ஓவியா said...

வாழ்மானபாளையத்தை சார்ந்த மறைந்த செயல்வீரர் வீரமணி அவர்களை நினைவு கூர்கிறார்கள். இதே ஊரில் உடல் நலம் குன்றியிருந்த தோழர் ராசப்பா அவர்களைப் பற்றி கூறு கிறார்கள். திருபஞ்சீலி கோயிலின் வரலாற்றை பற்றிக் கூறுகிறார்கள். இடையில் அய்யாவை கொஞ்சம் மோர் குடிக்க வைக்கிறேன்.

எமனுக்கு என்று கோயில் உலகில் ஒன்றுதான் உள்ளதாம். அதுவும் திருபஞ்சீலியில் தான் உள்ளதாம். அந்த கோயிலின் வாயிலில் நூற்றுக்கணக் கான கருஞ்சட்டை தோழர்கள் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என முழக்கமிட அய்யா அவர்கள் கல்வெட்டைத் திறந்து, திராவிடர் கழக கொடியை ஏற்றி வைக்கிறார்கள். பலமுறை எமனை ஏமாற வைத்த தமிழர் தலைவர் அவர்கள் அந்த எமன் கோயிலுக்கு முன்பே பெரியாரின் திராவிடர் கழக கொடியை ஏற்றி வைத்தது மெய்சிலிர்க்க வைத்தது.

அங்கிருந்து ஊர்வலமாக வாழ் மானபாளையத்தில் நம்முடைய இயக்க இடத்தில் நமது தோழர்களால் கட்டப் பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டடத்தை பார்க்க அழைக்கிறார்கள். நான் வண்டியிலேயே இருந்து பார்க்கலாம் என்கிறேன்.

இல்லை நம் தோழர்கள் பணம் வசூல் செய்து கடும் முயற்சி எடுத்து ஒரு மண்டபத்தை கட்டுகிறார்கள். நாம் உள்ளே சென்றுதான் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறி வேனை விட்டு இறங்கி கட்டடத்திற்குள் செல் கிறார்கள் 11 மணிக்கு கடுமையான வெயில், நூற்றுக்கணக்கான தோழர் கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம்கூட காற்று வீசவில்லை. அய்யா கட்டடத்தின் உள்ளே சென்று ஒவ்வொன்றாக கேட்கிறார்கள். உங்களுக்கு மேலும் என்ன உதவி வேண்டுமென அந்த கட்டடத்தை பெரும் முயற்சி எடுத்து கட்டிவரும் மறைந்த செயல்வீரர் வீரமணி அவர்களின் மருமகன் மானமிகு ஆசைத்தம்பி அவர்களிடம் கேட்கிறார்.

200 மூட்டை சிமெண்ட் மட்டும் இருந்தால் போதும் கட்டடத்தை விரை வில் முடித்துவிடலாம் என்கிறார். தமிழர் தலைவர்கள் அவர்கள் உடனே 200 மூட்டை சிமெண்ட் ஓரிரு தினங் களில் வந்து சேரும். கட்டட வேலை விரைந்து செய்யுங்கள் என்று உற்சாக மூட்டினார். 150 மூட்டை இயக்கத்தின் சார்பிலும், 50 முட்டை மாவட்டத் தலைவர் மானமிகு. வால்டேர் அவர்கள் சார்பிலும் வழங்கப்படும் என்றார்கள். வால்டேர் அவர்களும் சிமெண்ட் கொடுக்க அய்யா அவர்கள் சொன்னதும் மிக்க மகிழ்ச்சியோடு நான் ஏற்கெனவே ரூ.10000 கொடுத் துள்ளேன். இந்த 50 மூட்டை சிமெண்ட் டையும் மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன் என்று ஒப்புதல் கொடுத்தார்கள்.

மானமிகு ஆசைத்தம்பி அவர்கள், மண்டபத்தில் எங்கு பெரியார் சிலை, எங்கெங்கு என்னென்ன அறைகள் என்பதை விளக்கினார்கள்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது காழ்ப்புணர்வின் உச்சக் கட்டம்! தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்


Image - தொழிலாளர்களின் நலம் நாடும் உன்னதத் திருநாள் மே நாள்! தி.மு.க. தலைவர் கலைஞர் விடுக்கும் மே தின

சென்னை, மே 2- சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது, அரசியல் காழ்ப்புணர்வே என்று எழுதியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர், முர சொலியில் (30.4.2013) அவர் எழுதிய கடிதம் வருமாறு:-

15-9-2007 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழவில் கலந்து கொண்ட நான் என் பேச்சின் இறுதியாக ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து, அந்தக் கூட்டத்தில் அது நிறை வேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் வருமாறு :-

ஏறத்தாழ நூறாண்டு காலக் கனவாகவும், திரா விட இயக்கத்தின் தனிப் பெரும் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வந்த சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் பேருதவி புரிந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன் வந்துள்ள நிலையில், அதனைக் கெடுத்து, தென்னக மக்களுடைய பொருளாதார வளம் பெருகிட இய லாமல், ராமர் பாலம் என்ற மதவாத மிரட்டலைச் செய்திட ஒரு சில மதவாத அமைப்புகள் குறுக்கே நிற்பதற்கு; மத்திய அரசு அஞ்சி அதற்கு இடம் தரக் கூடாது என்றும், மதவாத மூட நம்பிக்கைகளை வேரோடு களையப் போரிட்ட ஈரோடு தந்த வள்ளல் பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாக தென்னக மக்களின் சார்பில் குரல் கொடுக்கிறோம்

இது கழகப் பொதுக் கூட்டத்தில் 2007இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆனால் இதற்கு எதிர்ப்பாக இன்னொரு தீர்மானம்; அது என்ன தெரியுமா?

சேது சமுத்திரத் திட்டத்தின் பெயரால் ராமர் பாலத்துக்குச் சேதம் விளைவிக்க மத்திய அரசு முயற்சித்தால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும். ராமர் பாலத்தைச் சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. ஏற்காது. ராமர் பாலம் இல்லாமல் ராமாயணம் கிடையாது. இந்தியாவின் அடையாளமும் முழுமையாகாது என்று பா.ஜ.க. வின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் 3-3-2013 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்தக் கூட்டத்தில், ராமர் பாலத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கத் தமிழக அ.தி.மு.க. அரசு அளித்து வரும் ஒத்துழைப்பை பா.ஜ.க. பாராட்டுகிறது என்றும் தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களின் எத்தனை ஆண்டுக் காலக் கனவு? அய்க் கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி மத்தியிலே அமைந்து, அதிலே தி.மு.க.வும் இடம் பெற்றபோது, சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது குறைந்த பட்சத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டோம். அதனை யொட்டி, 27-5-2004 அன்று அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வைக்கப்பட்ட குறைந்த பட்ச செயல் திட்டத்தில், , “Long Pending Schemes in specific States that have national significance, like the Sethu Samuthiram Project....will be completed expeditiously” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் அது சேர்க்கப்பட்டு, மதுரையில் நடந்த சேது சமுத்திரத் திட்டத்தின் பிரமாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டோம். சேது சமுத்திரத் திட்டத்திற்காக அந்தக் காலத்தில் நாம் மட்டுமே குரல் கொடுக்க வில்லை.

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்த லுக்காக, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டு மொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்து ஆண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும்.

இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட் டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்'' என்று சொல்லியிருந்தார்கள்.

இப்படி சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்ட ஜெயலலிதா தலைமையிலே உள்ள தமிழக அரசுதான், நேற்றைய தினம் சேது சமுத்திரத் திட்டத்தை கை விட உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது என்றால், இதற்குப் பெயர்தானே இரட்டை வேடமும், கபட நாடகமும் ஆகும்.

1955ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடத்தப் பட்ட எல்லா ஆய்வுகளும் தொழில் நுட்ப ரீதியாக இந்தத் திட்டம் சாத்தியமானதுதான் என்றே நிரூபித்திருக்கின்றன.

இதில் எள்ளளவு அய்யமும் யாருக்கும் இருந்தது இல்லை.

புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், பா.ஜ.க. வைச் சேர்ந்த திரு. அருண் ஜேட்லி, 9-3-2001 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆய்வுப் பொறுப்பு, 2001 அக்டோபரில் நீரி' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் (NEERI) `நீரி என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதனை ஆய்வு செய்து, எந்தக் கேடும் வராத- குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற - சிறந்த தடம் ஆறாம் வழித்தடமான, ஆதாம் பாலம் பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது.

இறுதியாக 31.3.2005 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் தனது முறை யான நடைமுறைகளுக்கும், விரிவான ஆய்வுகளுக் கும் பிறகு, இத்திட்டத்திற்கான சுற்றுச் சூழல் ஒப்புதலை வழங்கியது. இதுவரை மேற்கொள்ளப் பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள் ஆகிய வற்றின் மூலம் இந்த ஆதாம் பாலம் கடல் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்டுமான அமைப்பும் இருப்பதற்கான உருப்படியான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாகி யிருக்கிறது.


தமிழ் ஓவியா said...

உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத காரணத்தால்தான், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உட்பட அடுத்தடுத்து வந்த எந்த ஒரு அரசும் இத்திட்டப் பகுதியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் இல்லை; அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவும் இல்லை. 9.3.2001 இல் அமைச்சர் அருண்ஜேட்லி; 25.10.2002இல் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர்; 29.10.2002 இல் அமைச்சர் வி.வி. கோயல்; அதற்கு முன் அமைச்சர் சத்ருகன் சின்கா ஆகியோர் ஆதாம் பாலம் வழியிலான 6ஆவது எண் வழித்தடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்ன சொல்லுகிறது?

நேற்றையதினம் (29-4-2013) தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சேது சமுத்திரத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தவோ, உடைக்கவோ கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்று கூறி, அ.தி.மு.க. அரசு இப்போது இத் திட்டத்தை எதிர்க்கிறது. ஆனால் 2001 தேர்தல் அறிக்கையில் பக்கம் 83-84இல் ஜெயலலிதா கூறியுள்ளது என்ன:-

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்லவேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன் னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்

தமிழ் ஓவியா said...

- என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை யில் ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும், மணல் மேடுகள் என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று ராமர் பாலம் எனக் கூறுவது எப்படி? ஏன்?

பண்டிதநேரு இந்தியாவுக்கு எழுதிய கடிதம்

ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்குப் பொருந்தாத பல கதைகளைப் புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று பண்டித நேரு அவர்கள் இந்திரா காந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங் களில் ( டிஸ்கவரி ஆப் இண்டியா என்ற நூலில்) குறிப்பிட்டுள்ளார். ‘The Ramayana is not history or biograpy. It is a part of Hindu mythology’ என்று ஆழ்ந்த ராமபக்தரான மூதறிஞர் இராஜாஜி அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

10-5-1986 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டது. 2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுவரை 829 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு, இவ்வளவு பணமும் செலவழிக்கப்படும் வரை வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு தற்போது திடீரென்று இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட ஜெயலலிதா நினைப்பது சரிதானா? சேதுத் திட்டம் நிறைவேற்றப்படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத் தின்கீழ் மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதால் கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின் பொருளா தாரம், வாழ்க்கைத் தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்; இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத் திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்;

ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் துறை முகங்கள் மேம்படுத்தப்படுவதன் வாயிலாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புக் கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை பயன்படுத் துவதன் மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்கு வரத்து தூரம் சுமார் 424 மைல் அளவுக்குக் குறையும். இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்குக் குறையும் வாய்ப்புள்ளது. கணிசமான எரி பொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகைக் கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங் களை மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்கு களைக் கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங் கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறைமுகம் பெருமளவில் வளர்ச்சி அடையும்; கடற்படை மற்றும் கடலோரப் படைக் கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதி களுக்கு அதி விரைவில் செல்ல இயலும். இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.

தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர். பாலுவின் நல்ல முயற்சியின் காரணமாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தத் திட்டம் பூர்த்தியடைந்து விட்டால் தி.மு. கழகத்திற்கு பெரும் பெயர் வந்து விடுமே என்ற காரணத்தால், இந்தத் திட்டத்திற் காக 829 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கும் மூடு விழா நடத்த அ.தி.மு.க. அரசு காழ்ப்புணர்வோடு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பதுதான் உண்மை!

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...

இராஜபாளையம் தயார்! - தோழர்களே! நீங்கள் தயாரா?


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இராஜபாளையம் - மாநில இளைஞரணி மாநாடு. ஆம். இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ் இனத்தின் வரலாற்றிலும் இடம் பிடிக்கப் போகிறது. ஜாதித் தீயை வளர்த்து குளிர் காய சிலர் நினைக்கையில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிட, அக்கிரகார அக் கிராமத்தை தவிடு பொடியாக்கிட தமிழகத்தின் தென் பகுதியான விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் காலக் கல்வெட்டாய் நிலைத்து நிற்க இருக்கிறது.

கடந்த ஒரு மாதகாலமாகவே இராஜபாளையம் உள்ளிட்ட விருதுநகர் மாவட்டம் முழுவதும் மாநாட்டு ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கிவிட்டன. எங்கு நோக்கினும் சுவரெழுத் துகள் பளிச்சிடுகின்றன. வண்ண வண்ணப் பதாகைகள் வானுயர தந்தை பெரியாரின் தத்துவத்தைப் போல உயர்ந்து நிற்கின்றன. வழிநெடுகிலும் கழகக் காளையர்களை வரவேற்க கழகத்தின் இலட்சியக் கொடியினை ஆயிரக்கணக்கில் அணி அணியாய் உயர்த்தி வைக்க, ஆவன செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநாடா என மாற்றுக் கட்சியினர் வியக்கும் வண்ணம் மாநாட்டுப் பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் கழகத் தோழர்கள். ஆம், எங்கு நோக்கினாலும் மாநாட்டு விளம் பரங்கள் மின்னுகின்றன.

தேநீர்க் கடைகளில் தொடங்கி அனைத்துத் தரப்பிலும் மாநாடு பற்றித்தான் பரபரப்புப் பேச்சு. மாநாட்டு வெற்றிக்காக இரவு பகலாக தோழர்கள் பணியாற்றுகின்றனர். திரு வில்லிப்புத்தூரில் வணிகர் சங்க பிரமுகர் ஒருவர் தந்தை பெரியாரின் பேச்சினை (உரையினை) பல முறை இப்பகுதியில் அடிக்கடி கேட்டுள்ளேன். ஆனால், இடையில் திராவிடர் கழக மாநாடுகள் அவ்வளவாக நடைபெறவில்லை. அக்குறையைப் போக்கும் வண்ணம் தற்போது ஏற்பாடு செய்யப்படும் மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிப் புத்தூர், இராஜபாளையம், திருத்தங்கல், சாத்தூர் உள்ளிட்ட நகராட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டத்தில் கடைத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கான மாநாட்டு விளக்கத் துண்டறிக்கைகளை மக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டும் பணியும் வேகமாய் நடைபெற்று வருகிறது. பட்டாசு சத்தமும், அச்சகத் தொழிலும் நிறைந்து காணப்படும் மாவட்டத்தில் பெரிய பெரிய தொழிற்சாலைகளும், சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய தொழிற்சாலைகளும் நிரம்ப உள்ள மாவட்டத்தில் கழகத்தின் இளைஞரணி மாநாடு, காலையில் தொடங்கி இரவு வரை அடுக்கடுக்காய் நிகழ்ச்சிகள், கருத்தாழம் மிக்க கருத்தரங்கம், உணர்ச்சியூட்டும் இசை நிகழ்ச்சி, எழுச்சியூட்டும் பேரணி, தெளிவூட்டும் பட்டிமன்றம், அறி வூட்டும் உரைவீச்சு என மாநாடு சிறக்கப் போகிறது.

மேடை அமைக்கும் பணி, கொடிகளை அழகுற கட்டும் பணி, நன்கொடை திரட்டும் பணி, சுவரொட்டிகளை ஒட்டும் பணி, பதாகைகளை கட்டும் பணி, உரை கேட்க ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாட்டுப் பணிகளில் கழகத் தோழர்கள் நேரடியாக ஈடுபட்டு பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இராஜபாளையம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடைத் தெருக்களில் கணிசமான அளவு நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தோழர்கள் உற்சாகமாக உள்ளனர். காரணம், பொதுமக்கள் காட்டி வரும் ஆதரவுதான்.

கடந்து இருபது நாட்களுக்கும் மேலாக இராஜ பாளையத்தில் முகாமிட்டு மாநாட்டுப் பணிகளை மேற் கொண்டு வருகிறார். கழகப்பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார். அவருடன் கழக இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, மதுரை மண்டலத் தலைவர் வே.செல்வம், மாவட்டத் தலைவர் வானவில் மணி, சிவகாசி மு.ஓவியர் மணியம், மாவட்ட செயலாளர் தி.ஆதவன், திருத்தங்கல் நல்லவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் சென்னியப்பன், மாவட்ட இளைஞரணி தலைவர் கோவிந்தன் உள்ளிட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

கடைத் தெருக்களில் கருப்புச் சட்டையுடன் கழகத் தோழர்கள் களத்தில் இறங்கியுள்ளனர் நன்கொடை திரட்ட. அதில் இராஜபாளையம் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட ப.க. செயலாளர் பாண்டி முருகன், நகர தி.க. தலைவர் முருகன், சிவகாசி நகர தி.க. தலைவர் நரசிம்மன், நகர அமைப்பாளர் ஆறுமுகம், உரத்தநாடு தோழர்கள் இர.தர்மசீலன், இரா.ராஜ்கிரன், இர.குணசீலன், வே.தமிழ்ச் செல்வன், தஞ்சை ஆ.மதன்ராஜ், நாகை நா.பொன்முடி, நாகை சி.அருண்குமார், பேராவூரணி வோ.ஆதவன், மாவட்ட துணைத்தலைவர் தங்கசாமி, பட்டாம்புதூர் சண்முகசுந்தரம், அருப்புக்கோட்டை முரளி, திருவள்ளுவன், அரிராம்சேட் உள்ளிட்ட தோழர்கள் வலம் வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் கழக இளைஞரணி தோழர்கள் சீருடையுடன் கூடிய அணிவகுப்பும், பெரியார் சமூக காப்பு அணியின் வீரம் மிகுந்த அணிவகுப்பும் மாநாட்டை மேலும் பொலிவு உள்ளதாக ஆக்கி வருகின்றன. தாய்க் கழகத்தின் இளைஞர் சேனையின் மாநாட்டு மாட்சியினைக் காண தி.மு. கழக இளைஞரணி செயலாளரும், பொருளாளருமான தளபதி மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக மாநாட்டு நிறைவுரையாற்றிட தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வருகை தர இருக்கிறார். பொது மக்கள் அவர்களின் உரை கேட்க எதிர்பார்த்து இருக்கின்றனர். இராஜபாளையம் தயாராகி விட்டது. தோழர்களே தென்திசை நோக்கித் தமிழகமே திரண்டு வந்தது எனும் நிலையை அடைய ஆயத்தமாகி விட்டீர்களா?

- இராஜபாளையத்திலிருந்து நம்பியூர் மு.சென்னியப்பன்

தமிழ் ஓவியா said...


ராஜபாளையம் அழைக்கிறது, தோள்தட்டி வருக!


கழகக் குடும்பங்களே,

கடமையாற்றிட களம் காணத் துடிக்கும் இளைஞர் பட்டாளமே!

கருஞ்சிறுத்தைகளே ராஜபாளையத்திற்கு புறப்பட

ஆயத்தமாகி விட்டீர்களா?

பெரியார் பணி முடிக்க

கட்டுப்பாட்டுடன் நம் இனத்தின் இழந்த மானத்தை மீட்க, ஈரோட்டு வேந்தர் விரும்பிய புதியதோர் ஜாதியற்ற சமூகத்தைப் படைக்க சங்கநாதம் செய்ய வருக!

தோழர்களே! தோள் தட்டி, தொடை தட்டி, மார்தட்டி களங் காண வாருங்கள்!

புதிய வரலாற்றைப் படைப்போம்....!

தமிழ் ஓவியா said...


மானங்கெட்ட கோயில் விழா விளக்கு மாற்று அடி பரிமாற்றம்


ஆண்டிபட்டி, மே 2- ஆண்டிபட்டி அருகே கோயில் விழாவில் மாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலை வில் மறவப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூறாண்டுகள்

தமிழ் ஓவியா said...


ஜனநாயகமா - காலி நாயகமா?


ஜனநாயகமா - காலி நாயகமா?

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 681 கோடீசுவரர்களும், 220 குற்றவாளிகளும் (13 பேர் கொலைக் குற்றவாளிகள்) போட்டியிடுகின்றனர்.

இது என்ன ஜனநாயகமா - காலி நாயகமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

#####

செவ்வாய்க்கிரகத்தில்
குடியேற விருப்பமா?

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விளம்பரம் செய்திருந்தது. மூன்றே நாளில் 20 ஆயிரம் விண்ணப்பம் குவிந்தது. இதற்குப் பிறகாவது செவ்வாய்த்தோஷம் பற்றிப் பேசுவதை இந்துத்துவாவாதிகள் கை விடுவார்களா?

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் - நாணயமும்!



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


நாக தேவதையை வணங்கினால்...


உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி என்னும் கிராமத்தில், படமெடுத்து நின்ற பாம்பை அன்புக்கொடி என்ற சிறுமி மண்டியிட்டு வணங் கினாள். அச்சிறுமியை அந்நாகம் மூன்றுமுறை தீண்டி அவளை மாய்த்தது. - இது தினமணி நாளிதழில் 25.11.1982 அன்று வெளியான கட்டச் செய்தியின் சுருக்கம்.

நாக தேவதை என்ற தெய்வம் நம் நாட்டில் உலவுகிறதே; அப்பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்த அத் தெய்வ பக்தி - அவர்கள் மொழியில் சொல்வதனால் - அன்புக் கொடிக்கு எமனாகி விட்டது. ஆத்திகப் பெருமக்களே ஆத்திரங் கொள் ளாமல் மூடக் கொள்கையால் விளைந்த விபரீதத்தை எண்ணிப் பாருங்கள்.

- பி.இரத்தினசபாபதி, சென்னை-24.

தமிழ் ஓவியா said...

கிரக சேர்க்கை பற்றி நேருவின் கருத்து



இந்த எட்டு கிரக சேர்க்கை என்னை ஒன்றும் செய்யாது. இதனால் ஆபத்து ஏற்படுமென்று சில சோதிடர் கூறுவதைக் கேட்டு பீதி அடையாதீர்கள். நம்முடைய தலைவிதியை ஆக்குவதோ, அழிப்பதோ இந்தக் கிரகங்களின் வேலையல்ல நம் தலைவிதியை நிர்ணயிப்பது நம் கையில் தான் இருக்கிறது.

- பண்டித நேரு, (விடுதலை - 8.1.1962 அலகாபாத்தில் பேச்சு, 11.1.1962

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். ger Font Smaller Font

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர். நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர். நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்கள்.

ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள்.

ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர். நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர். நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர். நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.

நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே! உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள் முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான். (உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

தமிழ் ஓவியா said...

நாயுறங்கும்



எவன் படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை எவன் காத்தான்?
காக்கிறான்? காப்பான்? கேளீர்!
தவழ்ந்தெழுந்து நடந்து வளர்குழந்தைபோலும்
தனி, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்த தலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணி நாட்டைப் பெற்றவர்கள் கண்ணுறங்கிக்
கவிழ்ந்திட ஓர் ஈச்சம்பாய் இல்லை - தங்க
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்

- புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


ஈச்ச மர(த்திலும்) கடவுள்


இந்தியாவில் பரித்பூர் என்றோர் ஊருள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்கருகில் ஓர் ஈச்சமரம் இருக்கின்றது. அக்கோயிலில் வழக்கமாக காலையிலும் மாலையிலும் கடவுள் வழிபாட்டின் போது மணியடிப்பதுண்டு. மாலையில் மணி யடிக்கும் போது அவ்வீச்சமரம் சாய்ந்து விடுவதுண்டு. மறுநாட்காலையில் மணியடிக்கும் போது அம்மரம் நிமிர்ந்து விடும். அம்மரத் தினுடைய செயல் கடவுள் வழிபாட்டின் போது வணங்குவது போன்றிருக்கும்.

இதனைக் கண்ட மக்கள் அம்மரம் மாலையில் கடவுளை வழிபடத் தொடங்கி, இரவு முழுவதும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு காலையில் எழுந்திருப்பதாகக் கருதி அஃது தெய்வத்தன்மை உள்ளது என்று கடவுளுக்கு வழிபாடு நடத்துவது போல் வழிபாடு நடத்தி வந்தனர்.

நம் நாட்டு விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீச சந்திரபோஸ் இம்மரத்தை கண்டபோது, இம்மரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினர். பல நாட்கள் வரை ஆராய்ந்து அதன் உண்மையை கண்டு பிடித்தார். இம்மரம் பகலில் உண்டாகிற சூரிய வெப்பத்தால் மாலையில் சாய்ந்து விடுகிறது. இரவில் அவ்வெப்பம் நீங்கி விடுவதால் காலையில் இது நிமிர்ந்து கொள்கிறது.

இம்மரம் மட்டும் இவ்வாறு சாய்ந்து நிமிருவதற்கு காரணம் இதனுடைய சூழ்நிலைதான் என்று மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

- உலக அதிசயங்கள் நூலிலிருந்து
ரவிராஜ், அத்திமலைப்பட்டு - 632315

தமிழ் ஓவியா said...


பிக்பாக்கெட் கடவுள்

சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஒரு மணி நேரத்திற்கு, 12,500க்கு மேற்பட்டோர் கடந்து செல்வதால் பிக்பாக்கெட் திருடர்கள் சென்ட்ரல் பகுதியில் பணியாற்று வர். இருட்டும் நேரத்தில், அவர்கள் பாடிகாட் முனீஸ்வரனுக்கு, சுருட் டையும், குவார்ட்டரையும் காணிக்கை செலுத்திய பின்னரே தொழிலுக்குச் செல்வர் என்கின்றனர் கோவில் பணியாளர்கள் - தினமலர் 17.4.2013

கடவுள், பக்தி என்பது எப்படி இருக்கிறது என்ப தற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், ஆன்மிக மொழியில் எந்த பாதகங் களைச் செய்தாலும் பிரார்த்தனை செய்தால், கடவுளுக்கு நேர்த்திக் கடன் கழித்து விட்டால், பிராயச்சித்தம் செய்து விட்டால் பாவங்களிலி ருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருக்கு மட்டும் இது போன்ற குற்றவாளி கள் பெருகத்தானே செய்வார்கள்.

விஷ ஊசி போட்டுக் கொன்றவர்கள் கொள் ளையடித்த பணத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக் குப் போட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வில்லையா?
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே!

கள்ளக் கையொப் பக்காரன் கரம் கூப்பு கிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக் கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய் கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்ப வர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? (அறிஞர் அண்ணா வின் நூல்: தீண்டாமை வானொலி உரையிலிருந்து)

பிக்பாக்கெட்காரர்கள் முனீஸ்வரனைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து விட்டு, தங்களின் பிக் பாக்கெட் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு வருகின்றனர்.

கீழ் மட்டக் கடவுளிடம் தான் இது நடப்பதாக யாரும் நினைக்க வேண் டாம். திருப்பதி கோயி லிலே இது சர்வசாதார ணம்.

திருப்பதி ஏழுமலை யான் உருவம் பொறித்த டாலர் விற்பனையில் மோசடி செய்து பெரும் பணம் குவித்த டாலர் சேஷாத்திரிகள் இன்னும் அந்தக் கோயில் நிரு வாகத்திற்குள் இருக்கத் தானே செய்கிறார்கள்?

ஏழுமலையானுக்கு ஒரு நமஸ்காரம் போட் டால் போகிறது!

- மயிலாடன் 03-05-2013

தமிழ் ஓவியா said...

ஜெயங்கொண்டம், மே 3- தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஈட்ட ஜாதி மதங்களை மறந்து ஒன்றுபட்ட தமிழர் களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில், அரிய லூர் மாவட்டம் செயல் வீரர்கள் நிறைந்த மாவட்டம். எந்தப் பணிகளை தலைமைக் கழகம் இட்டாலும் விரைந்து முடிக்கக் கூடியவர்கள் அந்த வகையில் குறுகிய கால இடைவெளியில் இந்த மாநாடு அறிவிக்கப் பட்டாலும் சிறப்பாக நடைபெறுகிறது.

யாருக்கோ பதில் சொல் வதற்காக கூட்டப்பட்ட மாநாடு அல்ல. மாறாக நமது கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு. சேது சமுத்திர திட்டம் கிடப்பில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் உரிமை ஆகியவற்றுக்காக போராட வேண்டிய நாம் தரக் குறைவாக பேசும் சிலருக்கு பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டிய தில்லை.

தந்தை பெரி யாரின் கட்டளை ஏற்று ஜாதி ஒழிப்பிற்காக ஏராளமானோர் சிறை சென்ற மாவட்டம் அரி யலூர் மாவட்டம் கலைஞரோ, நாங்களோ சந்திக்காத எதிர்ப்பா? எங்கள் அனுபவத்தைக் கூட வயதாகக் கொள் ளாதவர்கள் சீசனல் வாக்கு வங்கிக்காக ஜாதியைப் பயன்படுத்தி தமிழர்களை கூறு போடலாமா? நாங்கள் உயிரை துச்சமெனக் கருதுபவர்கள் என் உயிருக்கு மம்சாபுரம் சென்னை உட்பட நான்கு இடங்களில் குறி வைக்கப்பட்டது. அதை யும் தாண்டி பணியாற் றுபவர்கள் நாங்கள். பார்ப்பனர்களால் விளம்பரம் செய்யப்படு வதால் எதை வேண்டு மானாலும் பேசுவதா? நாம் அடித்துக் கொள் வதைப் பார்த்து அவர் கள் மகிழ்ச்சியடைகி றார்கள். ஏணியின் சுபாவம் ஏற்றி விடும். தோணியின் சுபாவம் கரை சேர்க்கும். ஆனால் ஏறி வந்த ஏணியையும் கரை சேர்த்த தோணி யையும் எட்டி உதைக் கலாமா? சிந்திக்க வேண் டும்.

50 சதவீதம் வந்தது திராவிட இயக்கத்தால் தானே?

50 சதவீத இட ஒதுக் கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு கிடைக்க காரணமானவர்கள் யார்? சிந்திக்க வேண் டாமா? திராவிட இயக் கத்தலைவர்கள் அல் லவா? 18 சதவீத திமிர் என்று தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து பேசலாமா?

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை விட ஆபத் தானது பதவிக்காய்ச்சல். பதவிக்காக எதையும் செய்ய முனைவதா? அனைவருக்கும் அனைத்தும் என்பதே எங்கள் கொள்கை.

கருவறைக்குள் ஜாதியை ஒழிக்க போராடிய தலைவர் பெரியார். இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக முடியவில்லை. ஏராளமான தடைகள் தடைகளை தகர்த்து உரிமைகளை வென் றெடுப்போம். பெரியார் என்ற மூச்சுக்காற்று இல்லையென்றால் தமிழினத்திற்கு எழுச்சி இல்லை. ஜாதி, மதம், கட்சிகளால் பிரியாமல் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தாழ்த்தப்பட் டவர்கள் உள்பட யாரை யும் எதிரிகளாக பா.ம.க. கருதக்கூடாது. தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம்! உரி மைகளை வென்றெடுப் போம் என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி னார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா-?

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

தமிழ் ஓவியா said...


சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!


சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.

அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.

அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
பிற்காலச் சோழர் சரித்திரம்
பகுதி பக்கம் 79-_80

தமிழ் ஓவியா said...


அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


கர்ப்பக்கிருகப் போர்ப்படையில் 18.10.69 - முதல் பதிவு செய்து கொண்டார்கள். சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் தொடங்குவது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும். 17.1.70 -முதல்வர் கலைஞர் அறிக்கை 19.1.70 - போரின் வெற்றி. 12.3.70 - கர்ப்பக் கிருகக் கிளர்ச்சி வெற்றி. 30.11.70 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது. கிளர்ச்சியை ஒரு சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்தல். 1974 சனவரி 26ஆம் தேதிக்குள் பதில் எதிர்பார்த்தல். 3.3.74 இழிவு ஒழிப்புக்கிளர்ச்சி முதல் கட்ட தேதி அறிவிப்பு. 15.3.74 போராட்ட வீரர் பட்டியல். 3.4.74 தந்தைக்குப் பின் முதல் போராட்டம். 8.4.74 சட்டமன்றத்தில் நமது போராட்ட எதிரொலி. 15.4.74 சட்டமன்றத்தில் அர்ச்சகர் சட்ட தீர்மானம். 2.5.74 டில்லியில் நமது குரல். 20.8.74 டில்லி அரசு பரிசீலனை. 4.5.75 கோயில் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. 2.8.75 கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி அம்மா அறிக்கை. 18.9.77 அ.தி.மு.க. வைத்த அய்யா சிலை. 4.6.78 திருச்சியில் மத்திய கமிட்டி பிறவி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே எப்போதும் குறியாக இருக்கும். பார்ப்பனர்கள் பன்னிரெண்டு பேர் உச்சநீதிமன்றத்திற்கு படையெடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அர்ச்சகர் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் ஒரு தீர்ப்பினைப் பெற்று விட்டனர்.

நீதிபதி மகராசன் குழு

14.8.82 தஞ்சையில் மாநாடு. 24.8.82 வேண்டுகோள் அறப்போர் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் குழு. 17.9.91 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. 16.5.98 ஈரோட்டுத் தீர்மானம். 24.4.1999 போராட்ட அறிவிப்பு ஆபரேஷன் வெற்றி ஆனால் நோயாளி செத்தார்.

டாக்டர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்

அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும் அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப் பட்டார்!
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை ஜாதிக் கலவரமும் வரக் கூடாது மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி




மதுரை, மே 4- தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை, ஜாதிக் கலவரமும் வரக்கூடாது என மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி யளித்தார்.

இதுகுறித்து நேற்று (3.5.2013) மதுரையில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது: மரக்காணம் கலவரம், திட்டமிட்டு ஜாதி வெறியை முன்னிலைப்படுத்தி அரசியலில் வாக்கு வங்கியை பலப்படுத்த சில தலைவர்கள் எடுத்த தவறான நிலை. இது தவிர்க்கப்பட வேண்டும். ஜாதியை இட ஒதுக்கீட்டில் மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை இடஒதுக்கீட்டு படிக்கட்டாகப் பார்க்காமல், காவடியாகத் தூக்கி பெருமை அடையக் கூடாது. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. தொடர்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழ தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் இங்கு மதவெறி மாய்க்கப்பட்டது, அதன் பின்னர் ஜாதி அரசியலை கொண்டு வந்தனர், அது தேவையில்லை. இங்கு மதக்கலவரம் வருவதில்லை. அதேபோல் ஜாதிக்கலவரமும் வரக் கூடாது.

வன்முறை வேண்டாம்!

வன்முறையால் எதையும் சாதித்து விடமுடியாது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களைத்தான் பாதிக்கும். அதில் அப்பாவி மக்களை பலியிடக்கூடாது. தமிழகத்தில் எப்போதும் ஜாதி அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. இந்தக் கருத்துகளை தெளிவாக மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நாட்டை விட்டே...


நாட்டில் பார்ப்பனர்கள் களைச் செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவை இல்லாத களைச் செடிகள் இருப்பதால் பயிருக்குச் சேதம் என்று கருதிக் களைச் செடியை அகற்று கிறோமோ அதுபோல் நாட்டிற்குச் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டைவிட்டே அகற்றிவிட வேண்டும்.
(விடுதலை, 10.7.1961)

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. காட்டில் பண மழை!


குஜராத் மாநிலம் ஜீனகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கோசாலை அமைத்துள்ளது. பசுக்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பு கடந்த சனியன்று (27.4.2013) விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவில் குஜராத் மாநில அமைச்சர்கள், மாநில பா.ஜ.க. தலைவர் கட்சியின் முன்னணியினர், பெரும் பணக் காரர்கள் எல்லாம் பங்கு கொண்டனர்.

அமைச்சர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் பிஜேபி தொண்டர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசிப் பண மழை பொழிந்தனராம். அதனைக் கண்டு அமைச் சர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்களாம்.

கோசாலைக்கும் நிறைய நன்கொடைகளை அமைச்சர்களும், பிரமுகர்களும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து என்.டி. டி.வி. தெரிவித்துள்ள செய்தி மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள கிராமங்கள் கடுமையான வறட்சிக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பகுதியில் இயற்கை மழை பொழியவில்லை என்பதற்காகப் பண மழையைப் பொழிய வைத்துள்ளனர் போலும்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிஜேபி ஆட்சி யும், அமைச்சர்களும், பிஜேபி பிரமுகர்களும் எத்தகைய மனப்பான்மையில் குளிர் காய்கின் றனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி மேல் தட்டு மக்களுக்கான ஆட்சி, நகர்ப்புற மக்களுக்கான ஆட்சி என்ற விமர்சனம் உண்டு.

பார்ப்பன மற்றும் இந்துத்துவா ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து - இந்தியா விலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலம் தான் என்று விளம்பரக் காற்றை ஊதி ஊதி ஆகாயத்தில் பறக்க வைக்கின்றனர். உலகம் விளம்பரத்துக்குக் கட்டுப்பட்டது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத் துள்ளவர் நரேந்திரமோடி.

சவுராஷ்டிரா மாநிலத்தில் சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் கோதாவரி முதலிய கிராமங்கள் வறட்சியின் உச்சக் கட்டத்தில் உள்ளன.

ஊருக்குப் பொதுவான தண்ணீர்த் தொட்டி யில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கொளுத்தும் கொடிய வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரைச் சுமந்து வரும் அவலநிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் குஜராத்தின் உண்மையான நிலை. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் இருக்கிறது என்று வக்கணையாகச் சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

கிராமத்தின் உண்மை நிலையோ இந்தப் பரிதாப நிலையில்தான் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு சோமாலியா என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த நிலையைப்பற்றி செய்தி வருகிறது.

என்ன கொடுமை இது! தனது மாநிலத்தில் உண்மையான நிலையை மறைத்து, பொய்யாக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கக் கூடிய ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் துணிவு எங்கிருந்து குதித்தது?

பொய்ப் பேசுவதிலும், பொய்யைப் பரப்புவ திலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களை வெல்ல உலகில் யார் தான் இருக்க முடியும்?

பண மழை பொழியும் அளவுக்கு பா.ஜ.க. வினர் அங்கே இருக்கிறார்கள் என்றால் ஆட்சி அதிகாரம் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, மே 4- தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்களின் ஒற்றுமை அவசியம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று (3.5.2013) அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை கடலூர் மாவட்டத்திலும், மதுரை மாவட்டத் திலும் நுழையக் கூடாது என்ற போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவன் நான். அதற்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அவர்களும், அவரைச் சார்ந்த நண்பர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கே இடமில்லை, திராவிடக் கட்சிகளே இருக்கக் கூடாது என்ற அளவில் தங்கள் பிரச் சாரத்தை முடுக்கிவிட்டு, அந்தச் சூழ்நிலையிலே நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் வன்முறைப் பேச்சுகள் தலை தூக்கிய காரணத்தால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், சிறை யிலே அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியும் போது உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். பா.ம.க. வினரும் இது போல கடுமையாக, நாகரிகமற்ற முறையிலும், நாவடக்கம் இல்லாமல் எதிர்க்கட்சிகளை, மற்றக் கட்சிகளைத் தாக்கிப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒரு சுமூகமான சூழ்நிலையை இந்தப் பிரச்சினையிலே உருவாக்குவதற்கு அது வழி வகுக்கும். வழக்குக்கு மேல் வழக்கு போடுவதும், எப்போதோ பேசினார் என்பதற்காக தற்போது அன்புமணி மீது வழக்கு போட்டுக் கைது செய்வதும் சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு டாக்டர் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒற்றுமை அவசியம்

பொதுவாக ஜாதிக் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள், மதக் கலவரங்கள் - இவை எல்லாம் தலையெடுக்காத வகையில், தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், குடிமக்கள் என்போரும் எல்லோருமே ஒன்றாக வாழ்வது தான் சமதர்மம். அந்தச் சம தர்மத்தை நோக்கி எல் லோரும் செயல்பட வேண்டும். எல்லா கட்சிகளும் பயணம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஜாதி வேறுபாடுகளை, சண்டைகளை, போராட்டங் களை ஊக்குவிப்பது, அதற்குப் பக்க பலமாக இருப்பது சரியாகத் தோன்றவில்லை. நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது பொன் மொழி. எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், கடிதோச்சினாலும் கூட, அணுகும்போதும், நெருங் கும் போதும் மெல்ல எறிக என்ற வாக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அந்த மொழிக்கேற்ப அரசு நடந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பா.ம.க.வினருக்கு....

அரசும் தன்னுடைய அடக்குமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறையிலே உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். பா.ம.க. வினரும் இனியாவது கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய கருத்து.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் :- அரசு சார்பில் என்ன சொல் கிறார்கள் என்றால், தாங்கள் கொடுத்த எந்த விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை, அதனால் தான் இந்த நடவடிக்கை எடுத்திருக் கிறோம், ராமதாஸ் அவர்களிடமே போராட்டத் திற்கு வந்தால் கைது செய்வோம் என்று சொல் லியிருந்தும் அவர் மீறி வந்து கைதாகியிருக்கிறார் என்று கூறுகிறார்களே?

கலைஞர் :- இந்தக் கருத்துகளையெல்லாம் படித்து விட்டுத் தான் நான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அதனால் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் நுற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக்கணக் கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிற சூழ் நிலையைத் தவிர்ப்பதும், நாள்தோறும் அங்கே பஸ் எரிந்தது, இங்கே பஸ் எரிந்தது, அங்கே வீடு எரிந்தது, கடை எரிந்தது என்ற இந்தப் பேச்சுக்கள் எங்குமே வராமலும், பொதுவாக அமைதியாக தமிழகத்தை அனைவரும் காண வேண்டும் என்ற ஆசையோடு இந்தக் கருத்துகளை நான் சொல்லுகிறேன்.

சட்டம் ஒழுங்கு படும்பாடு

செய்தியாளர் :- வட மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா? சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பது உங்கள் கருத்தா?

கலைஞர் :- சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது என்னுடைய நீண்ட நாள் வாதம். நான் அதை பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். அந்தச் சட்டம், ஒழுங்கு சரியில்லாத இந்தச் சூழ்நிலையிலே தான் இந்தக் காரியங்கள் மேலும் அவைகளை அதிகப்படுத்தும் வகையிலே நடைபெற்றிருக் கின்றன. அதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அது சரியில்லாமலே இருக்க வேண்டும் என்ற கருத்தோடு இருக்கக் கூடாது. நாமாவது சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்த தமிழ்நாட்டில் அமைதியைக் காத்திட, உருவாக்கிடப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதைச் சொல்கிறேன். சட்டம், ஒழுங்கு தமிழ்நாட்டில் ஒழுங்காக இருக்கிறது, சரியாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் அதற் கிடையே இந்தக் கருத்துகளைச் சொல்வது, நண்பர் டாக்டர் ராமதாஸ் அவர்களையும், அன்புமணி அவர்களையும் சிறையிலே போட்டு தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாக்க வேண்டாம் என்ற இந்தக் கருத்தை நான் இந்த அரசுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கச்சத்தீவு

செய்தியாளர் :- தமிழகச் சட்டப் பேரவையில் கச்சத் தீவினை மீண்டும் பெற வேண்டுமென்று அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்திருப் பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதிலே என்னுடைய பொதுவான கருத்து, கச்சத் தீவினை திரும்பப் பெற வேண்டும் என்பது ஏற்கத் தக்க கருத்து. நாங்களும் உச்ச நீதி மன்றத்திலே டெசோ சார்பிலே வழக்கு தொடர் வோம் என்று கூறி, அதற்கான ஆதாரங் களையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறோம்.

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை சிறையிலே சென்று தி.மு.க. வினர் யாராவது சந்திப்பார்களா?

கலைஞர் :- அவர் எங்களைச் சந்திக்க விரும்ப மாட்டாரே? அவருக்குத்தான் தி.மு.க. வினரையே பிடிக்காதே?

தமிழ் ஓவியா said...


எங்கும் இராமசாமி நாயக்கர்


பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு:

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் வகுப்புத் துவேஷமும் ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங்களைக் கற்பித்து பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் - பேசும் சிப்பந்தி கோடிகளும், அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய தொண்டை கிழிய எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹா ராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகா நாடுகள் என்றும் வகுப்புத் துவேஷங்கள் வளர்ந்து வருகிறது.பஞ்சாபிலும் கல்கத்தா விலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லா விட்டால் அங்கும் பிராமணர்-பிராமணரல் லாதார் வகுப்புத் துவேஷங்கள் வளரும்.

ஆதலால் இராமசாமி நாயக்கர் சென்னையில் மாத்திரம் இல்லை; இந்தியாவெங்கும் இராமசாமி நாயக்கர் மயமாய்த்தான் இருக்கிறது. சென்னையில் 4 பேர் கூலிக்கு மாரடிப்பதால் இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன் இவர்கள் சென்னையில் சில காலிகளை ஏவிவிட்டு ஸ்ரீமான் சர். தியாகராயச் செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் முதலியவற்றையும் உடைத்தார்கள். அதிலும் இந்த இயக்கம் அழிந்து விடவில்லை.

அதற்குப் பிறகு ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் அடிக்கும்படி செய்தார்கள். அதனாலும் இவர்களுக்குப் பயந்துகொண்டு இயக்கம் போய்விடவில்லை. சமீபத்தில் பேரார் மாகாணத்தைச் சேர்ந்த அமராவதியில் 2ஆவது அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸின் காரிய தரிசியாயும், பிராமணரல்லாதாரின் பேருழைப் பாளராகவுமிருக்கும் ஸ்ரீமான் அமிர்த்காரை சில காலிகளைக் கொண்டு பலமாய் அடித்து விட்டார்கள்.

இதனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் ஒழிந்து விடவில்லை. இவர்கள் கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத் தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல் இயக்கம் இந்தியாவெங்கும் கிளம்பி பரவிக்கொண்டு தான் வருகிறது.

- குடிஅரசு - அறிக்கை - 9.5.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் காங்கிரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அறிவிக்கிறார் என்று சுதேசமித்திரனில் குறிப்பிட்டிருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித்தார்கள்? ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் நியமித்தார், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்.

யாருடைய பணம்? ஊரார் பொதுப்பணம். என்ன பிரச்சாரம்? பிராமணத் தேர்தல் பிரச்சாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம்ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது;

பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள், மகாபுத்தி சாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி அய்யங்காரும், எஸ்.சீனி வாசய் யங்காரும் சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரும், எம்.கே.ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள் தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம் செய்தவர்கள்; கதர், மது விலக்கு, தீண்டாமை முதலிய வைகளில் அதிக நம்பிக் கையுடையவர்கள்; காரியத்திலும் நடத்து கிறவர்கள்;

அதனால் தான் தமிழ்நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் போன்றவர்கள் எங்கள் அய்வர்களையே தமிழ்நாட்டிற்குத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்; நாங்கள்தான் தமிழ் நாட்டுக்குத் தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள்.

எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தேசத் துரோகிகளும் வகுப்பு நலன் நாடுபவர் களுமான குறுகிய புத்தியுடையவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் எல்லா இந்தியத் தலைவராவார்கள். மற்றபடி வேறு என்ன பிரச்சாரம் செய்யக் கூடும்? தமிழ்நாடே! உன் தலைவிதிதான் என்ன? உன்னை இத்தலைவர் களுக்குக் காட்டிக் கொடுத்த தர்மசீலர்களுக்கு ஆயுள்தான் எவ்வளவோ?

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 16.5.1926

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

குடிஅரசு - வேண்டுகோள் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்


இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு - விமர்சனம் - 6.6.1926

தமிழ் ஓவியா said...


தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு - விமர்சனம் - 6.6.1926