Search This Blog

3.5.13

ரத்தத்தில் தாழ்த்தப்பட்டோர் ரத்தம்,வன்னியர் ரத்தம் என்ற பிரிவுகள் உண்டா?




திராவிடர் கழகத்தின் சார்பில் ஜெயங்கொண்டத்தில் நேற்று (2.5.2013) வட்டார திராவிடர் கழக மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.

மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு அரியதோர் உரையினை நிகழ்த்தியுள்ளார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக  தூண்டப்பட்டு வரும் ஜாதிக் கலவரம் குறித்துக் கவலையைத் தெரிவித்த தலைவர் அவர்கள் முக்கிய மாக சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

1) தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்ட வர்களானாலும் தமிழர்கள்தானே!  நாம்  - தமிழர்களின் ஒற்றுமையைக் கட்டமைக்கப் போகிறோமா? அல்லது ஜாதியின் பெயரால் இன ஒற்றுமையைச் சிதைக்கப் போகிறோமா?

2) தாழ்த்தப்பட்டவர் ரத்தம் சிந்தினாலும், சரி பிற்படுத்தப்பட்டவர் ரத்தம் சிந்தினாலும் சரி நாம் அவர்களை மனிதர்களாகக் கருதி - அந்த நிலைக்கு யாரும் ஆளாகக் கூடாது என்பது தான்  நம் நிலையாக இருக்க வேண்டுமே தவிர, வேறு ஜாதிக் கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்கக் கூடாது.

3) ஜாதி என்பதற்கு ஏதாவது அடையாளம் உண்டா? யார் எந்த ஜாதி என்பதை எதை வைத்து அடையாளம் காட்ட முடியும். இதே இடத்தில் கூட்டம் போட்டு விளக்கட்டுமே பார்க்கலாம்.

4) ரத்தத்தில் நாடார் ரத்தம், வன்னியர் ரத்தம், முதலியார் ரத்தம், தாழ்த்தப்பட்டோர் ரத்தம் என்ற பிரிவுகள் உண்டா?
ஆபத்து நேரத்தில் ரத்தம் தேவைப்படும் போது ஜாதி ரத்தம் வேண்டுமென்றா கேட்கிறோம்?

இப்பொழுது ஒருபடி மேலே சென்று சிறு நீரக தானம், கண் கொடை, மூளைக் கொடை, இருதயக் கொடை என்கிற அளவுக்கு ஜாதி, மதங்களைக் கடந்த மனிதநேயம் மேலே உயர்ந்து வருகிறதே - பண்பட்டு வளர்கிறதே மனிதப் பண்பு! இப்பொழுது போய் ஜாதி அடையாளர் பேசுவதா?

5) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு கொண்டு வந்தது நான்தான் என்று ஒரு டாக்டர் சொல்லுகிறார்.

அந்த 20 சதவிகிதம் எதிலிருந்து பிரித்துக் கொடுக்கப்பட்டது? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் என்று ஆனதற்குப் பிறகுதானே அதில் 20 விழுக்காட்டைப் பிரித்துக் கொடுக்க முடிந்தது?

அந்த 50 சதவிகிதம் வளர்ந்ததற்கு யார் காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9000 ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்தவர்கள் யார்?

திராவிடர் கழகம் முன்னிலையில் நின்று போராடவில்லையா? தி.மு.க. குரல் கொடுக்கவில்லையா?

மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். கடும் தோல்வி கண்ட நிலையில் ஒன்பதாயிரம் உத்தரவை விலக்கியதோடு அல்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இருந்து வந்த 31 சதவிகிதத்தை 50 ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தாரே!

அந்த 50இல் தான் 20 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

ஆக 50 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கம். அதில் 20 சதவிகிதத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க ஆணை பிறப்பித்ததும் கலைஞர் தலைமையிலான திராவிடர் இயக்கம்தானே.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தடையை எதிர்த்து எழுதியவர் தந்தை பெரியார் அல்லவா! அதன்படி அந்தத் தடையை நீக்கியதும் திராவிடர் இயக்க ஆட்சியான பனகல் அரசர் பிரதம மந்திரியாக இருந்தபோது தானே?

திராவிடர் இயக்கத்தாலே எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாமா? பாலுண்ட மார்பை அறுக்கலாமா என்ற அறிவார்ந்த சமூகநீதிக் குரலைக் கொடுத்திருக்கிறார்
தமிழர் தலைவர் கி.வீரமணி  அவர்கள் ஜெயங்கொண்டத்தில்.

சமூக நீதிக் களத்தில் நாம் ஈட்ட வேண்டிய உரிமைகள் ஏராளம் உண்டு. தமிழ்நாட்டு உரிமை மீட்புக்காக போராட வேண்டிய நிலையில்தான் உள்ளோம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராட வேண்டாமா?

இந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, ஜாதியை முன்னிறுத்தி, தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து தமிழர்களைப் பின்னுக்குத் தள்ளும் நிலை தேவைதானா?

ஜெயங்கொண்டத்துக்கு மட்டுமல்ல, தமிழ் ஜெகத்துக்கே தேவையான கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் உதிர்த்த கருத்துக்களை தமிழர்களே, கவனியுங்கள்! கவனியுங்கள்!!

தமிழா! தமிழா! ஒன்றுபடு! தமிழன்பகையை வென்று விடு!!

                     ------------------------”விடுதலை” தலையங்கம் 03-05-2013

34 comments:

தமிழ் ஓவியா said...


ஒரு நாள் பயணம் (2)


- உடன் சென்று பார்த்தவன்

வேனிற்கு வந்ததும் மோர் குடித் தார்கள். அதுவும் மிகவும் குறைவாக தொண்டை வறண்டுவிடாமலிருக்க அங்கிருந்து செல்வார்கள். பாவேந்தர் - சிந்தாமணி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடைபெறும் இடத் திற்கு வந்தோம். ஊரெங்கும் நம் முடைய இயக்க கொடி, தோரணங்கள் மணமகளின் வீட்டின் அருகிலேயே பெரிய பந்தல், மேடை அமைத்திருந் தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருந்தார்கள். இருக்கை இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் நின்று கொண்டிருந்தார்கள்.

பெரும் பகுதி மகளிர் அமர்ந்திருந்தார்கள். ஊரே திரண்டு வந்து தமிழர் தலைவர் அவர்களை வரவேற்கிறது. கடுமை யான வெயிலில் வெளிக்காற்று கொஞ் சம்கூட இல்லை. அய்யா அவர்களுக்கு பக்கத்தில் இரண்டு மின்விசிறிகளை நகர்த்தி வைக்கிறோம். வேறு யாரும் பேசவில்லை. வரவேற்புரை முடிந்ததும் அய்யாவே பேச ஆரம்பிக்கிறார்கள். அந்த ஊரில் வாழ்ந்து மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களை எல்லாம் நினைவு கூறுகிறார்கள். 20, 30 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலம் குன்றி மறைந்த டி.எம். ராசப்பா அவர்களைப் பற்றியும், அவர்களின் மறைவிற்குப்பின் அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக கொடுத்ததையும் பெருமையோடு நினைவு கூறுகிறார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த தோழர் வீரமணி அவர்களையும், அவர்களது தொண் டுள்ளத்தையும் பாராட்டுகிறார்கள். தொடர்ந்து மூட பழக்க வழக்கத்தை கைவிடவும் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் அனைவருக் கும் குறிப்பாக குழுமியிருந்த மகளிர்க்கு எடுத்துரைக்கிறார்கள். மகளிர் அனைவரும் கைதட்டி, சிரித்து வரவேற்கிறார்கள். சீக்கிரமாக முடிக்க வேண்டும் என என்னை போன்றவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பேசி வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைக்கிறார்கள். மணமக்களின் பெற் றோர்கள், உறவினர்கள் என அனை வரையும் வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

12 மணி வெயிலில் வாழ்மான பாளையத்திலிருந்து 30 கி.மீ தொலை வில் உள்ள பெருவளப்பூர் என்ற ஊருக்கு பயணம் வழியில் நுங்கு, வெள்ளரி பிஞ்சு, இளநீர் விற்பதை பார்த்து பின்னால் வருகின்ற மாவட் டத் தலைவர் சேகர் அவர்களிடம் அவற்றை வாங்கி வரச் சொல்லு கிறேன்.

இடையில் அவர்கள் வேக வேக மாக இளநீரையும், நுங்கையும் கொண்டு வந்து நாங்கள் வந்த வேனை நிறுத்தி கொடுக்கிறார்கள்.

ஏங்க நாம அடுத்த நிகழ்ச்சிக்கு போக வேண்டும். நேரமாகிவிட்டது ஏன் வண்டியை நிறுத்துறீங்க என கேட்டு 100 மில்லி அளவிற்கு மட்டும் இளநீரை பருகுகிறார்கள். மற்றதை சாப்பிட்டால் வயிறு உபாதை வந்து விடும். எனவே இப்போது வேண்டாம் திரும்பும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...


போகும் வழியிலேயே ஏங்க 200 மூட்டை சிமெண்ட் எவ்வளவு ஆகும்? என்றார்கள் நான் சுமாராக ரூ.60,000 ஆகும் என்றேன். உடனே பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தரை தொடர்பு கொண்டு அவர் ஓய்வாக இருந்தால் என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்றார்கள். அவரும் கைபேசியில் பேசினார். அவரிடம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில் நுட்ப திருவிழாவினை பற்றி கேட்டு விட்டு சலுகை விலையில் சிமெண்ட் வாங்கினால் எவ்வளவு ஆகும் என்பதை எல்லாம் விசாரித்து 200 மூட்டை வாங்க ஏற்பாடுகள் செய்யச் சொல்லி பணத்தை தலைமையில் வாங்கிக் கொள்ளவும் சொன்னார்கள். வாழ்மானபாளையத்தில் சொன்னதை நினைவில் வைத்து 30 மணித்துளிகளுக் குள் செய்து முடித்து
சொல்வதைத்தான் செய்வோம்
செய்வதைத்தான் சொல்வோம்
என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.

முதன் முறையாக பெருவளப்பூருக்கு தமிழர் தலைவர் வருகிறார். 12.30 மணிக்கு நல்ல வெயில். ஊரெங்கும் கொடிகள், தோரணங்கள், ஒலி பெருக் கியில் இயக்கப் பாடல்கள், இங்கேயும் இயக்க கட்டடம் ஒன்று. அதில் அய்யா தந்தை பெரியார் அவர்கள் சிறிய அளவில் நின்று கொண்டிருக்கின்ற சிலை ஒன்று. அதற்கு தமிழர் தலைவர் அவர் களை மாலை அணிவிக்க அழைக் கிறார்கள். 105º வெயிலிலும் தமிழர் தலைவர் அவர்கள் வேனை விட்டு இறங்கி செல்கிறார்கள். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், பெருவளப்பூர் சாமிநாதன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், 50 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவருமான சிதம்பரம் போன்றவர் களும் மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்களையும் ஒலி முழக்கங்களோடு தமிழர் தலைவர் அவர்களை வரவேற் கிறார்கள். பின்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கட்டடத்தை சுற்றிப் பார்க்கிறார்கள்.

அங்கிருந்து படத்திறப்பு நடைபெறும் இடத்திற்கு வேனில் செல்கிறார்கள். திருச்சி பெரியார் மாளிகையில் பெரியா ரால் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனமான பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல் ஆண்டு படித்து அண்மையில் இயற்கை எய்திய மானமிகு ஆத்திநாட்டார் அவர்களின் படத்திறப்பு, நினைவு போற்றும் நாள். ஆத்திநாட்டார் அவர்களின் மகளும், பேத்தியும் நமது ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து சிறப்பாக பணிபுரிவர்கள் ஆக மூன்று தலைமுறையாக நம்முடைய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள். ஆத்தி நாட்டார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அவருடைய வாழ்வி ணையர் அவர்களும், அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த மகளிர் பலரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து வரவேற்றார்கள்.

தமிழ் ஓவியா said...

வழக்கமாக படத்திறப்பு நிகழ்வுகள் காலையில் அல்லது மாலையில் நடை பெறும். ஆனால் இங்கு ஏப்ரல் மாத கடும் வெயிலில் நண்பகலில் நடைபெற்றது. ஏராளமான பொது மக்களும், உறவி னர்களும், ஆசிரியப் பெருமக்களும் திரளாக வந்திருந்தார்கள்.

ஆத்தி நாட்டார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள். ஆத்தி நாட்டார் அவர்களின் சிறப்பு களையும், அவரது தொண்டுள்ளத்தையும் திராவிடர் கழக கூட்டங்கள் இந்த பகுதியில் எங்கு நடந்தாலும் வந்து விடுதலை சந்தாக்களை கொடுத்து அய்யா அவர்களை சந்திப்பது பற்றியும் நினைவு கூர்ந்தார்கள். பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன் னாள் மாணவர் கழகத்தின் தலைவராக அவர்கள் இருந்ததையும், சின்ன குத்தூசியோடு அவர்கள் படித்ததையும் நினைவு கூர்ந்தார்கள். பெருவளப்பூரில் வாழ்ந்து மறைந்த சாதி மறுப்பு வீரர் களையும் பெரியார் பெருந்தொண் டர்களையும் நினைவு கூர்ந்தார்கள். அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த முதுபெரும் பெரியார் பெரந்தொண்டர்கள்

மானமிகு வெங்கடாசலம் மானமிகு சிதம்பரம்
மானமிகு அழகப்பன்
மானமிகு முத்துசாமி

ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

திரு. ஆத்திநாட்டார் அவர்களின பெயர் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள வகுப்பறை ஒன்றிற்கு வைக்கப்படும் என அறிவித்தார்கள். அனைத்து மக்களும் அதை கைதட்டி வரவேற்றார்கள். ஆத்தி நாட்டார் அவர்கள் வாழ்விணையர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.

இறுதியாக ஆத்தி நாட்டார் அவர்களின் பெயரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அனைவரிடமும் விடை பெற்று வேனிற்கு வந்த தமிழர் தலைவர் அவர்கள் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் அவர்களால் சுத்தம் செய்து வைக்கப் பட்டிருந்த 3 நுங்கு துண்டுகளை மட்டும் சாப்பிட்டு பெரியார் மாளி கைக்கு 3½ மணி அளவில் வந்து மதிய உணவாக தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு ஓய்வெடுத்தார்கள்.

மாலை 5 மணியளவில் தயாராகி வந்திருந்த தோழர்களை சந்தித் தார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பாக விடையளித்த நமது பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவியரை பாராட்டினார்கள்.

தமிழ் ஓவியா said...

பெரியார் மாளிகை வளாகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெரியார் சமூக பாதுகாப்பு அணியினை சந்தித்து அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டு கூ.னு. வீரப்பா மன்றத்திலும் நடைபெற்ற மாநில பகுத் தறிவாளர்கள் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பகுத் தறிவாளர்களுக்கான பணிகள் குறித்து விரிவாக உரையாற்றி னார்கள்.

தொடர்ந்து பெரியார் மாளிகைக்கு அருகில் உள்ள வெக்காளி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மதவாத எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள். கருத்தரங்கில் பெரியார் விருது பெற்ற நந்தலாலா அவர்கள் இலக்கியத்தில் மதவாதம் என்ற தலைப்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தில் செயலாளர் மானமிகு குமரேசன் அவர்கள் நடைமுறை வாழ்வில் மதவாதம் என்ற தலைப் பிலும், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நேரு அவர்கள் நிர்வாகத்தில் - மதவாதம் என்ற தலைப்பிலும் உரை யாற்றினர். அதன்பின் தமிழர் தலைவர் அவர்கள் 45 நிமிடங்கள் உரையாற் றினார்கள்.

வேனில் திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து வேனிலேயே அமர்ந்து பெரியார் தங்காத்தாள் கொண்டு வந்திருந்த உணவை உண்டு 10.30 மணிக்கு மலைக் கோட்டை தொடர்வண்டியில் சென்னை சென்றார்கள்.

இடையில் நான் தமிழர் தலைவர் அவர்களிடம் அய்யா நாங்கள் ஓரிரு முறை வயிற்று போக்கு ஏற்பட்டாலேயே சோர்ந்து விடுகிறோம். நிற்க, நடக்க முடிவதில்லை. படுக்கைக்கு சென்று விடுகிறோம். நீங்கள் எப்படி அய்யா இத்தனை உடல் உபாதைகளிலும் தொடர்ந்து பயணம் செய்கிறீர்கள்? பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அடுத்தடுத்து நமக்கு இருக்கிற வேலைகளில் உடல் உபாதைகளை நினைத்துப் பார்க்க கூட நேரம் ஏது என சுருக்கமாக விடை யளிக்கிறார்கள். பசி நோக்காது கண் துஞ்சாது பன்னாட்டு அறிஞர் பெரு மக்களோடும், பாமர மக்களோடும் பணி யாற்றுகின்ற தமிழர் தலைவர் அவர்கள்

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் - நாணயமும்!



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்



Image - தொழிலாளர்களின் நலம் நாடும் உன்னதத் திருநாள் மே நாள்! தி.மு.க. தலைவர் கலைஞர் விடுக்கும் மே தின

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக் களின் எத்தனை ஆண்டு காலக் கனவு? 150 ஆண்டுக் காலமாக தமிழ்மக்கள் கண்ட கனவு தான் சேது சமுத்திரத் திட்டம். பேரறிஞர் அண்ணா அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆட்சியிலே இருந்த போதே எழுச்சி நாள் கடைப்பிடித்தார். தி.மு. கழகம் மாத்திரமல்ல; அ.தி.மு.க.வும் 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை யிலும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கோரிக்கை வைத்ததை மக்கள் மறந்து விடவில்லை. மத்தியிலே அமை கின்ற ஆட்சியிடம் சேது திட்டத்தை வலியுறுத்திக் கேட்டுப் பெறுவோம் என்றார்கள்.

அவர்களே தற்போது சேது சமுத்திரத் திட்டம் வேண்டாமென்று உச்சநீதி மன்றத்திலே 29-4-2013 அன்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். ஏன்?

எம்.ஜி.ஆர். நிறைவேற்றிய தீர்மானம்

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராக இருந்த போதே 10-5-1986 அன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டது. சேது சமுத்திரத் திட்டப் பணிகளின் துவக்க விழா 2005ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 2ஆம் நாள் மதுரை மாநகரமே குலுங்குகின்ற வண்ணம் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டிருந்து நடத்திய காட்சிதான் தற்போது என் கண்ணுக்குத் தெரிகிறது. மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுதான் மதுரை விழாவுக்குத் தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சேது சமுத்திரத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். திருமதி சோனியா காந்தி அம்மையாரும், நானும் விழா விற்கு முன்னிலை வகித்தோம். தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழக அரசின் ஒரே பிரதிநிதியாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், தயாநிதி மாறன், ஆ.இராசா, அன்புமணி ராமதாஸ், மணி சங்கர அய்யர், கே.எச். முனியப்பா ஆகியோரும், தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., டாக்டர் ராமதாஸ், வைகோ, என்.வரதராசன், தா.பாண் டியன், கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. ஆகியோரும் விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றினர்.

அந்த விழாவில் அவர்கள் உரையாற்றியதை தற்போது நினைவுபடுத்துவதும் என் கடமை. பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பேசும்போது, மதுரையில் இன்று சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டச் செயல்பாடுகளைத் துவக்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்நாள் இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்க ளுக்கு தேசிய குறைந்தபட்ச செயல் திட்டத்தில் எங்களது அரசு கொடுத்த புனித வாக்குறுதியை நிறைவேற்றும் நன்னாள். சேது சமுத்திரத் திட்டம்; கடல் பொருளாதார வருவாயைப் பெருக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். 150 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கனவு இன்று நிகழ்வுக்கு வந்திருக்கிறது. இக்கனவை நனவாக்கிய நமது மதிப்புமிகு தலைவர்களான திரு.கருணாநிதி அவர்களையும், திருமதி. சோனியா காந்தி அவர்களையும் பாராட்டுகிறேன். சேது சமுத்திரத் திட்டம் இந்தியத் துறைமுகத் துறையில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாபெரும் திட்டமாகும். இது பயண நேரத்தைக் குறைக் கிறது. அத்துடன் மீனவர்களுக்கு உதவக்கூடிய வகை யில் அமையக்கூடியது. இந்தத் திட்டம் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மேம்பாட்டினையும் தமிழக மற்றும் சோழ மண்டல கடற்கரைப் பகுதிக்குக் கொண்டுவரும் என்பதில் எனக்கு எவ்வித அய்யமும் இல்லை. இந்தப் புதிய முயற்சி மற்றும் தொழில் முனை செயல்பாடுகளில் சேது சமுத்திரத் திட்டம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். இந்தத் திட்டம் நமது நாட்டின் தலைசிறந்த கடல் வாணிக மரபை மீண்டும் புதுப்பிக்கும் என்று நான் நம்புகிறேன். சிறிது நேரத்துக்கு முன், கலைஞர் கருணாநிதி அவர்கள் இங்கே பேசும் போது, சென்னையில் உலகத் தரம் வாய்ந்த வாகன சோதனை மய்யம் அமைக்க வேண்டுமென்று குறிப் பிட்டார். உலகத் தரம் வாய்ந்த வாகன சோதனை மையத்தை சென்னை அருகே ஒரகடத்தில் அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதை இங்கே நான் அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

தமிழ் ஓவியா said...


சோனியா கூறியது

திருமதி சோனியா காந்தி அவர்கள் பேசும்போது, இன்று ஒரு 150 ஆண்டுக் கனவு நனவாகின்றது. இத்தனை ஆண்டுக் காலமாக சேது சமுத்திரத் திட்டம் பேசப்பட்டு வந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த எதுவும் செய்யப்படவில்லை. இன்று அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு தொழில்நுட்ப சவாலான, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, இந்தத் திட்டத்தை நனவாக்க உறுதியுடன் காலடி எடுத்து வைத்திருக் கின்றது. இம்மாபெரும் திட்டம் இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு தொடர்ச்சியான கடல் வழிப் பாதை அமைப்பதால், தேசிய அளவிலும், மண்டல அளவிலும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு, குறிப்பாக தென் மாவட்டங்கள் இத்திட்டத்தால் பெரும் பயனடையும். தமிழகத்தின் கடலோரப் பகுதியின் பொருளாதாரமும், கடல் வணிகமும் பெரும் வளர்ச்சி பெறும் என்றார். மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம் உரையாற்றும் போது, 2004 மே மாதம் 22ஆம் நாள் மத்தியிலே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. சரியாக ஆறு வார காலத்திலே பிரதமர் ஒப்புதல் அளித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து, 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதியன்று, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற் றும் என்று முதல் நிதி நிலை அறிக்கையிலே அரசு அறிவித்தது. அறிவித்து ஓராண்டு கூட முடியவில்லை. இதோ 2005ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இந்த மகத் தான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறோம். 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய்ச் செலவிலே இத்திட்டம் நிறைவேறப் போகிறது. இந்தத் திட்டத்திற்கு வாங்கப் போகிற கடன் தொகைக்கு மத்திய அரசு தன் உறுதியை அளித்திருக் கின்றது. ஆகவே நிச்சயமாக இந்தத் திட்டம் குறித்த காலத்திலே குறித்த செலவுத் தொகையிலே நிறை வேறும் என்றார்.

வைகோ பேசியது..

சேதுசமுத்திரத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ, 1967ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள், சேதுக் கால்வாய் அமையட்டும், செந்தமிழ் நாடு செழிக்கட்டும் என்று எழுச்சி நாள் கொண்டாடிய அதே ஜூலை மாதத்தில் இந்தத் திருவிழா நடைபெறுவது சாலப் பொருத்தம். இந்தச் சேது சமுத்திரத் திட்டம் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரும், காங்கிரசின் கே.டி. கோசல்ராமும் குரல் கொடுத்த திட்டம். என் ஆரு யிர் அண்ணன் கலைஞர் அவர்கள், 1958ஆம் ஆண்டி லேயே சட்டமன்றத்திலே முரசு கொட்டிய திட்டம். டாக்டர் ராமசாமி முதலியார் கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற ஏன் இன்னும் தாமதம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், அதே சட்டமன்றத்தில் சங்கநாதம் எழுப்பிய திட்டம். பெருந்தலைவர் காமராஜர் அவர் களுடைய வற்புறுத்தலால் பண்டித நேரு அவர்கள் 1963 செப்டம்பர் 12இல் அறிவித்த திட்டம். 1998இல் செப்டம்பர் 15இல் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த தின விழா மறுமலர்ச்சிப் பேரணியில் சேதுக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம்.

24 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் என் சக்திக் கேற்ற வகையில் எல்லாம் குரல் கொடுத்தும், 2004ல் எனது ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்கள் முயற்சியில்; மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக் குகின்ற பொறுப்பை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் ஏற்றிருந்த நேரத்திலே அவர்கள் இடத்திலே சென்று சேதுக் கால்வாய்த் திட்டத்தை குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேருங்கள் என்று சொன்னதை ஏற்று அவர்கள் சேர்த்துக் கொடுத்த திட்டம். இது தொடங்குகிற நாள் மகிழ்ச்சிக்குரியது. பனாமா கால்வாயைப்போல் - சூயஸ் கால்வாயைப் போல புகழ் பெறப் போகும் இந்தத் தமிழன் கால்வாய்க்கு 2427 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தந்துள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே உங்கள் பெயரும் உங்கள் அரசின் பெயரும் காலக் கல்வெட்டிலே பதிக்கப்படும் என்றெல்லாம் தெரிவித்தார்.

மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் பேசும்போது, அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும், இந்த நாளுக்குத்தான் ஏங்கிக் கொண்டிருந்தோம். இந்த நாள் மிக முக்கிய நாள். வரலாற்றில் இந்த நாள் அனைத்துத் தமிழர்களுக்கும் மிக முக்கிய நாள். அதை விட இங்கே நம்முடைய தமிழகத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் பல ஆண்டு காலமாக இந்தத் திட்டம் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று மிகவும் பாடுபட்டு, அந்தக் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு பல சாதனை களை தமிழகத்திற்குச் செய்து கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கிய சாதனை இந்த சேது சமுத்திரத் திட்டம் என்றார்.

தமிழ் ஓவியா said...

ஜி.கே.வாசன் கூறியது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த இன்றைய மத்திய அமைச்சர் தம்பி ஜி.கே.வாசன் பேசும்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தமிழக மக்களுடைய நீண்ட நாள் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை இன்றைக்கு நிறை வேற்றியிருக்கின்றது. இது தமிழகத்திற்குக் கிடைத்த பெருமை. சேது சமுத்திரத் திட்டம் வரும் வருடங்களிலே தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டுவரக்கூடிய அடித்தளமான திட்டம். அத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்திற்குப் பின்னால் மிகச் சிறந்த முறையிலே குரல் கொடுத்த அய்யா கலைஞர் அவர் களுக்கும், பிரத மருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த என். வரதராசன் உரையாற்றும் போது, சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் வறுமைக்கு எதிராகப் போராடிக் கொண்டி ருக்கக் கூடிய காலம் இது. அத்தகைய போராட்டத்திற்கு சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகள் பயன்பட வேண்டும். வேலைவாய்ப்பை நல்குகிற திட்டமாக இது வளர்க்கப்பட வேண்டும். ஒரு நல்ல திட்டத்தை நிறை வேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய தா. பாண்டியன், இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், இன்னொரு வகையிலே இந்திய நாடு முழுமைக்கும் நல்ல ஒரு திருநாள். தேங்கிக் கிடந்த ஒரு திட்டத்தை இன்று துவங்குகிற நல்ல நாள். 145 ஆண்டுகளாக கருக் கொண்டிருந்த ஒரு குழந்தை அவதரித்திருக்கிற நாள். இந்நாள் வெட்டப்படுவது கால்வாய் என்றாலும், அது தூண்டிவிடப் போவது இந்தத் தமிழ்நாட்டின் பொருளா தார மாற்றத்தை, வளர்ச்சியை. அது இந்திய நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும். சுற்றி வரும் கப்பல்களின் கால அளவைக் குறைக்கும். எனவே இது நாட்டுக்கு நல்ல செய்தி. அண்ணா எழுச்சிநாள் கொண்டாடியது ஏன்? சிலர் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கே சிறப்பாக விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார். அந்த விழாவிலே நான் பேசும்போது, இன்று இனிய நாள். எழுச்சி நாள் எழுச்சி வெற்றி பெற்ற நாள். 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத் தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது உரிமைகளை எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தக் காரணத் திற்காகவும் விட்டுத் தர மாட்டோம், அந்த உரிமை களுக்காக அதை வழங்கக் கூடியவர்கள் இடத்திலே வாதாடுவோம், போராடுவோம் என்பதற்கேற்ப எழுச்சி நாள் கொண்டாடி, தூத்துக்குடி துறைமுகம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகியவை களோடு இணைத்து சேது சமுத்திரத் திட்ட மும் வேண்டும் என்று வாதாடியபோது அந்த எழுச்சி நாள் கூட்டங்களிலே அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண் ணா உரையாற்றிய போது, இந்தத் திட்டம் நிறைவேறுமா என்பது உள்ளபடியே கேள்விக் குறியாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

தொழில்வளம் பெருகும்

பல கட்சிகளை ஒன்றாகச் சேர்த்து, இந்தக் கூட்டணி யால் கட்சிகளை மாத்திரமல்ல, கடல்களையும் இணைக்க முடியும் என்பதற்கு அடையாளமாக அந்த இணைப்பின் வடிவமாக - சின்னமாக - சேது சமுத் திரத் திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்குகின்றோம். இந்தத் திட்டத்தினால் ஏற்படக் கூடிய பயன்கள் எவை எவை என்பதை நம்முடைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்பது மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைத்து ஆதம் பாலம் வழியாக இந்தியக் கடற்பரப்பில் ஒரு கடல் வழித் தடத்தை உருவாக்குவது ஆகும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்தக் கால்வாய் இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மாத்திரமல்லாமல், இந்த நாட்டிற்கே தொழில் வளத்தைப் பெருக்கக் கூடிய ஆதார சுருதியாக விளங்குகின்ற திட்டமாகும் என்றெல்லாம் எடுத் துரைத்தேன்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது என்ன?

அந்தத் தொடக்க விழாவினையே தடுத்து நிறுத்திட வேண்டுமென்று அப்போது சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக் கொடுத்தார்கள். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச், தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத் திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத் துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல் கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடாக் கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத் தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவு களை ஏற்படுத்தும். ஆகவே விழா வுக்குத் தடை கிடையாது" என்று கூறி தீர்ப்பளித்தது.

மே 15 எழுச்சிநாள் கூட்டங்கள்

இவ்வளவையும் மீறி மக்களின் வரிப்பணம் 829 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காகச் செலவிட்ட பிறகு தற்போது மதம் சம்பந்தமான காரணங்களைத் தெரிவித்து எப்படியாவது இந்தத் திட்டத்திற்கு மூடு விழா செய்திட நினைப்பதைத் தமிழகம் புரிந்து கொள்ள வேண்டாமா? இந்தத் திட்டத்தினால் தென் தமிழகம் பெரும் பயன்பெறும், குறிப்பாக லட்சக்கணக் கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்த பிறகும், இந்தத் திட்டம் வரக் கூடாது என்று நினைப்பது முறைதானா? மாநிலத்திலே ஆட்சியிலே இருப்போர், இதுபோன்ற திட்டங்களை எப்படியாவது பெற்று, அதனை நிறை வேற்றி மாநில மக்கள் பயன் பெற நினைப்பார்களே தவிர, மிகுந்த முயற்சியெடுத்துப் பெற்ற திட்டம் தேவையில்லை என்று அரசின் சார்பிலேயே நீதி மன்றத்திற்குச் சென்று தெரிவிப்பார்களா? தமிழ்நாட்டு மக்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்க வேண்டிய கடப்பாடு தி.மு.கழகத்திற்கு உண்டு. அதை நிறைவேற்று வதற்காகத்தான் தலைமைக் கழகத்தின் சார்பில் 15-5-2013 புதன்கிழமை அன்று தமிழகமெங்கும் சேது சமுத்திரத் திட்டம் தொடரப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல, இந்தக் கூட்டங்களையும் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக நடத்திட வேண்டுமென்று சேது சமுத்திரத் திட்டத்திற்காகப் பெரிதும் பாடுபட்டவர்களில் ஒருவன் என்ற முறையில் உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...


நாக தேவதையை வணங்கினால்...


உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி என்னும் கிராமத்தில், படமெடுத்து நின்ற பாம்பை அன்புக்கொடி என்ற சிறுமி மண்டியிட்டு வணங் கினாள். அச்சிறுமியை அந்நாகம் மூன்றுமுறை தீண்டி அவளை மாய்த்தது. - இது தினமணி நாளிதழில் 25.11.1982 அன்று வெளியான கட்டச் செய்தியின் சுருக்கம்.

நாக தேவதை என்ற தெய்வம் நம் நாட்டில் உலவுகிறதே; அப்பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்த அத் தெய்வ பக்தி - அவர்கள் மொழியில் சொல்வதனால் - அன்புக் கொடிக்கு எமனாகி விட்டது. ஆத்திகப் பெருமக்களே ஆத்திரங் கொள் ளாமல் மூடக் கொள்கையால் விளைந்த விபரீதத்தை எண்ணிப் பாருங்கள்.

- பி.இரத்தினசபாபதி, சென்னை-24.

தமிழ் ஓவியா said...

கிரக சேர்க்கை பற்றி நேருவின் கருத்து



இந்த எட்டு கிரக சேர்க்கை என்னை ஒன்றும் செய்யாது. இதனால் ஆபத்து ஏற்படுமென்று சில சோதிடர் கூறுவதைக் கேட்டு பீதி அடையாதீர்கள். நம்முடைய தலைவிதியை ஆக்குவதோ, அழிப்பதோ இந்தக் கிரகங்களின் வேலையல்ல நம் தலைவிதியை நிர்ணயிப்பது நம் கையில் தான் இருக்கிறது.

- பண்டித நேரு, (விடுதலை - 8.1.1962 அலகாபாத்தில் பேச்சு, 11.1.1962

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். ger Font Smaller Font

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர். நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர். நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்கள்.

ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள்.

ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர். நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர். நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர். நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.

நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே! உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள் முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான். (உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

தமிழ் ஓவியா said...

நாயுறங்கும்



எவன் படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை எவன் காத்தான்?
காக்கிறான்? காப்பான்? கேளீர்!
தவழ்ந்தெழுந்து நடந்து வளர்குழந்தைபோலும்
தனி, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்த தலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணி நாட்டைப் பெற்றவர்கள் கண்ணுறங்கிக்
கவிழ்ந்திட ஓர் ஈச்சம்பாய் இல்லை - தங்க
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்

- புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


ஈச்ச மர(த்திலும்) கடவுள்


இந்தியாவில் பரித்பூர் என்றோர் ஊருள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்கருகில் ஓர் ஈச்சமரம் இருக்கின்றது. அக்கோயிலில் வழக்கமாக காலையிலும் மாலையிலும் கடவுள் வழிபாட்டின் போது மணியடிப்பதுண்டு. மாலையில் மணி யடிக்கும் போது அவ்வீச்சமரம் சாய்ந்து விடுவதுண்டு. மறுநாட்காலையில் மணியடிக்கும் போது அம்மரம் நிமிர்ந்து விடும். அம்மரத் தினுடைய செயல் கடவுள் வழிபாட்டின் போது வணங்குவது போன்றிருக்கும்.

இதனைக் கண்ட மக்கள் அம்மரம் மாலையில் கடவுளை வழிபடத் தொடங்கி, இரவு முழுவதும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு காலையில் எழுந்திருப்பதாகக் கருதி அஃது தெய்வத்தன்மை உள்ளது என்று கடவுளுக்கு வழிபாடு நடத்துவது போல் வழிபாடு நடத்தி வந்தனர்.

நம் நாட்டு விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீச சந்திரபோஸ் இம்மரத்தை கண்டபோது, இம்மரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினர். பல நாட்கள் வரை ஆராய்ந்து அதன் உண்மையை கண்டு பிடித்தார். இம்மரம் பகலில் உண்டாகிற சூரிய வெப்பத்தால் மாலையில் சாய்ந்து விடுகிறது. இரவில் அவ்வெப்பம் நீங்கி விடுவதால் காலையில் இது நிமிர்ந்து கொள்கிறது.

இம்மரம் மட்டும் இவ்வாறு சாய்ந்து நிமிருவதற்கு காரணம் இதனுடைய சூழ்நிலைதான் என்று மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

- உலக அதிசயங்கள் நூலிலிருந்து
ரவிராஜ், அத்திமலைப்பட்டு - 632315

தமிழ் ஓவியா said...


பிக்பாக்கெட் கடவுள்

சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஒரு மணி நேரத்திற்கு, 12,500க்கு மேற்பட்டோர் கடந்து செல்வதால் பிக்பாக்கெட் திருடர்கள் சென்ட்ரல் பகுதியில் பணியாற்று வர். இருட்டும் நேரத்தில், அவர்கள் பாடிகாட் முனீஸ்வரனுக்கு, சுருட் டையும், குவார்ட்டரையும் காணிக்கை செலுத்திய பின்னரே தொழிலுக்குச் செல்வர் என்கின்றனர் கோவில் பணியாளர்கள் - தினமலர் 17.4.2013

கடவுள், பக்தி என்பது எப்படி இருக்கிறது என்ப தற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், ஆன்மிக மொழியில் எந்த பாதகங் களைச் செய்தாலும் பிரார்த்தனை செய்தால், கடவுளுக்கு நேர்த்திக் கடன் கழித்து விட்டால், பிராயச்சித்தம் செய்து விட்டால் பாவங்களிலி ருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருக்கு மட்டும் இது போன்ற குற்றவாளி கள் பெருகத்தானே செய்வார்கள்.

விஷ ஊசி போட்டுக் கொன்றவர்கள் கொள் ளையடித்த பணத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக் குப் போட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வில்லையா?
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே!

கள்ளக் கையொப் பக்காரன் கரம் கூப்பு கிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக் கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய் கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்ப வர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? (அறிஞர் அண்ணா வின் நூல்: தீண்டாமை வானொலி உரையிலிருந்து)

பிக்பாக்கெட்காரர்கள் முனீஸ்வரனைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து விட்டு, தங்களின் பிக் பாக்கெட் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு வருகின்றனர்.

கீழ் மட்டக் கடவுளிடம் தான் இது நடப்பதாக யாரும் நினைக்க வேண் டாம். திருப்பதி கோயி லிலே இது சர்வசாதார ணம்.

திருப்பதி ஏழுமலை யான் உருவம் பொறித்த டாலர் விற்பனையில் மோசடி செய்து பெரும் பணம் குவித்த டாலர் சேஷாத்திரிகள் இன்னும் அந்தக் கோயில் நிரு வாகத்திற்குள் இருக்கத் தானே செய்கிறார்கள்?

ஏழுமலையானுக்கு ஒரு நமஸ்காரம் போட் டால் போகிறது!

- மயிலாடன் 03-05-2013

தமிழ் ஓவியா said...

ஓ, குடுமி வைக்கலாமே!

திருப்பூர் ராமபஜனை மடம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல ஆன்மிகச் சொற்பொழி வாளர் அனந்தபத்மநாபாச் சாரியார் பேசி இருக்கிறார்.

இராமாயணத்தில் ராமன் குடுமி வைத்திருந்தான். அதனால் அழகாக இருந்தான்; எனவே சீதை ராமனைக் காதலித்தாள் என்று பிரசங்கம் செய்துள்ளார்.

இனி ராம பக்தர்கள் குடுமி வைத்துக் கொண்டால் அழகாக இருக்குமே! செய்வார்களா?

தமிழ் ஓவியா said...

ஜெயங்கொண்டம், மே 3- தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஈட்ட ஜாதி மதங்களை மறந்து ஒன்றுபட்ட தமிழர் களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில், அரிய லூர் மாவட்டம் செயல் வீரர்கள் நிறைந்த மாவட்டம். எந்தப் பணிகளை தலைமைக் கழகம் இட்டாலும் விரைந்து முடிக்கக் கூடியவர்கள் அந்த வகையில் குறுகிய கால இடைவெளியில் இந்த மாநாடு அறிவிக்கப் பட்டாலும் சிறப்பாக நடைபெறுகிறது.

யாருக்கோ பதில் சொல் வதற்காக கூட்டப்பட்ட மாநாடு அல்ல. மாறாக நமது கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு. சேது சமுத்திர திட்டம் கிடப்பில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் உரிமை ஆகியவற்றுக்காக போராட வேண்டிய நாம் தரக் குறைவாக பேசும் சிலருக்கு பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டிய தில்லை.

தந்தை பெரி யாரின் கட்டளை ஏற்று ஜாதி ஒழிப்பிற்காக ஏராளமானோர் சிறை சென்ற மாவட்டம் அரி யலூர் மாவட்டம் கலைஞரோ, நாங்களோ சந்திக்காத எதிர்ப்பா? எங்கள் அனுபவத்தைக் கூட வயதாகக் கொள் ளாதவர்கள் சீசனல் வாக்கு வங்கிக்காக ஜாதியைப் பயன்படுத்தி தமிழர்களை கூறு போடலாமா? நாங்கள் உயிரை துச்சமெனக் கருதுபவர்கள் என் உயிருக்கு மம்சாபுரம் சென்னை உட்பட நான்கு இடங்களில் குறி வைக்கப்பட்டது. அதை யும் தாண்டி பணியாற் றுபவர்கள் நாங்கள். பார்ப்பனர்களால் விளம்பரம் செய்யப்படு வதால் எதை வேண்டு மானாலும் பேசுவதா? நாம் அடித்துக் கொள் வதைப் பார்த்து அவர் கள் மகிழ்ச்சியடைகி றார்கள். ஏணியின் சுபாவம் ஏற்றி விடும். தோணியின் சுபாவம் கரை சேர்க்கும். ஆனால் ஏறி வந்த ஏணியையும் கரை சேர்த்த தோணி யையும் எட்டி உதைக் கலாமா? சிந்திக்க வேண் டும்.

50 சதவீதம் வந்தது திராவிட இயக்கத்தால் தானே?

50 சதவீத இட ஒதுக் கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு கிடைக்க காரணமானவர்கள் யார்? சிந்திக்க வேண் டாமா? திராவிட இயக் கத்தலைவர்கள் அல் லவா? 18 சதவீத திமிர் என்று தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து பேசலாமா?

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை விட ஆபத் தானது பதவிக்காய்ச்சல். பதவிக்காக எதையும் செய்ய முனைவதா? அனைவருக்கும் அனைத்தும் என்பதே எங்கள் கொள்கை.

கருவறைக்குள் ஜாதியை ஒழிக்க போராடிய தலைவர் பெரியார். இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக முடியவில்லை. ஏராளமான தடைகள் தடைகளை தகர்த்து உரிமைகளை வென் றெடுப்போம். பெரியார் என்ற மூச்சுக்காற்று இல்லையென்றால் தமிழினத்திற்கு எழுச்சி இல்லை. ஜாதி, மதம், கட்சிகளால் பிரியாமல் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தாழ்த்தப்பட் டவர்கள் உள்பட யாரை யும் எதிரிகளாக பா.ம.க. கருதக்கூடாது. தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம்! உரி மைகளை வென்றெடுப் போம் என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி னார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா-?

தமிழ் ஓவியா said...


சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!


சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.

அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.

அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
பிற்காலச் சோழர் சரித்திரம்
பகுதி பக்கம் 79-_80

தமிழ் ஓவியா said...


அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


கர்ப்பக்கிருகப் போர்ப்படையில் 18.10.69 - முதல் பதிவு செய்து கொண்டார்கள். சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் தொடங்குவது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும். 17.1.70 -முதல்வர் கலைஞர் அறிக்கை 19.1.70 - போரின் வெற்றி. 12.3.70 - கர்ப்பக் கிருகக் கிளர்ச்சி வெற்றி. 30.11.70 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது. கிளர்ச்சியை ஒரு சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்தல். 1974 சனவரி 26ஆம் தேதிக்குள் பதில் எதிர்பார்த்தல். 3.3.74 இழிவு ஒழிப்புக்கிளர்ச்சி முதல் கட்ட தேதி அறிவிப்பு. 15.3.74 போராட்ட வீரர் பட்டியல். 3.4.74 தந்தைக்குப் பின் முதல் போராட்டம். 8.4.74 சட்டமன்றத்தில் நமது போராட்ட எதிரொலி. 15.4.74 சட்டமன்றத்தில் அர்ச்சகர் சட்ட தீர்மானம். 2.5.74 டில்லியில் நமது குரல். 20.8.74 டில்லி அரசு பரிசீலனை. 4.5.75 கோயில் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. 2.8.75 கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி அம்மா அறிக்கை. 18.9.77 அ.தி.மு.க. வைத்த அய்யா சிலை. 4.6.78 திருச்சியில் மத்திய கமிட்டி பிறவி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே எப்போதும் குறியாக இருக்கும். பார்ப்பனர்கள் பன்னிரெண்டு பேர் உச்சநீதிமன்றத்திற்கு படையெடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அர்ச்சகர் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் ஒரு தீர்ப்பினைப் பெற்று விட்டனர்.

நீதிபதி மகராசன் குழு

14.8.82 தஞ்சையில் மாநாடு. 24.8.82 வேண்டுகோள் அறப்போர் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் குழு. 17.9.91 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. 16.5.98 ஈரோட்டுத் தீர்மானம். 24.4.1999 போராட்ட அறிவிப்பு ஆபரேஷன் வெற்றி ஆனால் நோயாளி செத்தார்.

டாக்டர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்

அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும் அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப் பட்டார்!
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை ஜாதிக் கலவரமும் வரக் கூடாது மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி




மதுரை, மே 4- தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை, ஜாதிக் கலவரமும் வரக்கூடாது என மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி யளித்தார்.

இதுகுறித்து நேற்று (3.5.2013) மதுரையில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது: மரக்காணம் கலவரம், திட்டமிட்டு ஜாதி வெறியை முன்னிலைப்படுத்தி அரசியலில் வாக்கு வங்கியை பலப்படுத்த சில தலைவர்கள் எடுத்த தவறான நிலை. இது தவிர்க்கப்பட வேண்டும். ஜாதியை இட ஒதுக்கீட்டில் மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை இடஒதுக்கீட்டு படிக்கட்டாகப் பார்க்காமல், காவடியாகத் தூக்கி பெருமை அடையக் கூடாது. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. தொடர்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழ தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் இங்கு மதவெறி மாய்க்கப்பட்டது, அதன் பின்னர் ஜாதி அரசியலை கொண்டு வந்தனர், அது தேவையில்லை. இங்கு மதக்கலவரம் வருவதில்லை. அதேபோல் ஜாதிக்கலவரமும் வரக் கூடாது.

வன்முறை வேண்டாம்!

வன்முறையால் எதையும் சாதித்து விடமுடியாது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களைத்தான் பாதிக்கும். அதில் அப்பாவி மக்களை பலியிடக்கூடாது. தமிழகத்தில் எப்போதும் ஜாதி அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. இந்தக் கருத்துகளை தெளிவாக மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நாட்டை விட்டே...


நாட்டில் பார்ப்பனர்கள் களைச் செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவை இல்லாத களைச் செடிகள் இருப்பதால் பயிருக்குச் சேதம் என்று கருதிக் களைச் செடியை அகற்று கிறோமோ அதுபோல் நாட்டிற்குச் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டைவிட்டே அகற்றிவிட வேண்டும்.
(விடுதலை, 10.7.1961)

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. காட்டில் பண மழை!


குஜராத் மாநிலம் ஜீனகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கோசாலை அமைத்துள்ளது. பசுக்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பு கடந்த சனியன்று (27.4.2013) விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவில் குஜராத் மாநில அமைச்சர்கள், மாநில பா.ஜ.க. தலைவர் கட்சியின் முன்னணியினர், பெரும் பணக் காரர்கள் எல்லாம் பங்கு கொண்டனர்.

அமைச்சர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் பிஜேபி தொண்டர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசிப் பண மழை பொழிந்தனராம். அதனைக் கண்டு அமைச் சர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்களாம்.

கோசாலைக்கும் நிறைய நன்கொடைகளை அமைச்சர்களும், பிரமுகர்களும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து என்.டி. டி.வி. தெரிவித்துள்ள செய்தி மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள கிராமங்கள் கடுமையான வறட்சிக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பகுதியில் இயற்கை மழை பொழியவில்லை என்பதற்காகப் பண மழையைப் பொழிய வைத்துள்ளனர் போலும்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிஜேபி ஆட்சி யும், அமைச்சர்களும், பிஜேபி பிரமுகர்களும் எத்தகைய மனப்பான்மையில் குளிர் காய்கின் றனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி மேல் தட்டு மக்களுக்கான ஆட்சி, நகர்ப்புற மக்களுக்கான ஆட்சி என்ற விமர்சனம் உண்டு.

பார்ப்பன மற்றும் இந்துத்துவா ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து - இந்தியா விலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலம் தான் என்று விளம்பரக் காற்றை ஊதி ஊதி ஆகாயத்தில் பறக்க வைக்கின்றனர். உலகம் விளம்பரத்துக்குக் கட்டுப்பட்டது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத் துள்ளவர் நரேந்திரமோடி.

சவுராஷ்டிரா மாநிலத்தில் சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் கோதாவரி முதலிய கிராமங்கள் வறட்சியின் உச்சக் கட்டத்தில் உள்ளன.

ஊருக்குப் பொதுவான தண்ணீர்த் தொட்டி யில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கொளுத்தும் கொடிய வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரைச் சுமந்து வரும் அவலநிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் குஜராத்தின் உண்மையான நிலை. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் இருக்கிறது என்று வக்கணையாகச் சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

கிராமத்தின் உண்மை நிலையோ இந்தப் பரிதாப நிலையில்தான் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு சோமாலியா என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த நிலையைப்பற்றி செய்தி வருகிறது.

என்ன கொடுமை இது! தனது மாநிலத்தில் உண்மையான நிலையை மறைத்து, பொய்யாக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கக் கூடிய ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் துணிவு எங்கிருந்து குதித்தது?

பொய்ப் பேசுவதிலும், பொய்யைப் பரப்புவ திலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களை வெல்ல உலகில் யார் தான் இருக்க முடியும்?

பண மழை பொழியும் அளவுக்கு பா.ஜ.க. வினர் அங்கே இருக்கிறார்கள் என்றால் ஆட்சி அதிகாரம் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, மே 4- தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்களின் ஒற்றுமை அவசியம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று (3.5.2013) அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை கடலூர் மாவட்டத்திலும், மதுரை மாவட்டத் திலும் நுழையக் கூடாது என்ற போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவன் நான். அதற்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அவர்களும், அவரைச் சார்ந்த நண்பர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கே இடமில்லை, திராவிடக் கட்சிகளே இருக்கக் கூடாது என்ற அளவில் தங்கள் பிரச் சாரத்தை முடுக்கிவிட்டு, அந்தச் சூழ்நிலையிலே நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் வன்முறைப் பேச்சுகள் தலை தூக்கிய காரணத்தால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், சிறை யிலே அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியும் போது உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். பா.ம.க. வினரும் இது போல கடுமையாக, நாகரிகமற்ற முறையிலும், நாவடக்கம் இல்லாமல் எதிர்க்கட்சிகளை, மற்றக் கட்சிகளைத் தாக்கிப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒரு சுமூகமான சூழ்நிலையை இந்தப் பிரச்சினையிலே உருவாக்குவதற்கு அது வழி வகுக்கும். வழக்குக்கு மேல் வழக்கு போடுவதும், எப்போதோ பேசினார் என்பதற்காக தற்போது அன்புமணி மீது வழக்கு போட்டுக் கைது செய்வதும் சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு டாக்டர் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒற்றுமை அவசியம்

பொதுவாக ஜாதிக் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள், மதக் கலவரங்கள் - இவை எல்லாம் தலையெடுக்காத வகையில், தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், குடிமக்கள் என்போரும் எல்லோருமே ஒன்றாக வாழ்வது தான் சமதர்மம். அந்தச் சம தர்மத்தை நோக்கி எல் லோரும் செயல்பட வேண்டும். எல்லா கட்சிகளும் பயணம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஜாதி வேறுபாடுகளை, சண்டைகளை, போராட்டங் களை ஊக்குவிப்பது, அதற்குப் பக்க பலமாக இருப்பது சரியாகத் தோன்றவில்லை. நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது பொன் மொழி. எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், கடிதோச்சினாலும் கூட, அணுகும்போதும், நெருங் கும் போதும் மெல்ல எறிக என்ற வாக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அந்த மொழிக்கேற்ப அரசு நடந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பா.ம.க.வினருக்கு....

அரசும் தன்னுடைய அடக்குமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறையிலே உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். பா.ம.க. வினரும் இனியாவது கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய கருத்து.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர் :- அரசு சார்பில் என்ன சொல் கிறார்கள் என்றால், தாங்கள் கொடுத்த எந்த விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை, அதனால் தான் இந்த நடவடிக்கை எடுத்திருக் கிறோம், ராமதாஸ் அவர்களிடமே போராட்டத் திற்கு வந்தால் கைது செய்வோம் என்று சொல் லியிருந்தும் அவர் மீறி வந்து கைதாகியிருக்கிறார் என்று கூறுகிறார்களே?

கலைஞர் :- இந்தக் கருத்துகளையெல்லாம் படித்து விட்டுத் தான் நான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அதனால் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் நுற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக்கணக் கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிற சூழ் நிலையைத் தவிர்ப்பதும், நாள்தோறும் அங்கே பஸ் எரிந்தது, இங்கே பஸ் எரிந்தது, அங்கே வீடு எரிந்தது, கடை எரிந்தது என்ற இந்தப் பேச்சுக்கள் எங்குமே வராமலும், பொதுவாக அமைதியாக தமிழகத்தை அனைவரும் காண வேண்டும் என்ற ஆசையோடு இந்தக் கருத்துகளை நான் சொல்லுகிறேன்.

சட்டம் ஒழுங்கு படும்பாடு

செய்தியாளர் :- வட மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா? சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பது உங்கள் கருத்தா?

கலைஞர் :- சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது என்னுடைய நீண்ட நாள் வாதம். நான் அதை பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். அந்தச் சட்டம், ஒழுங்கு சரியில்லாத இந்தச் சூழ்நிலையிலே தான் இந்தக் காரியங்கள் மேலும் அவைகளை அதிகப்படுத்தும் வகையிலே நடைபெற்றிருக் கின்றன. அதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அது சரியில்லாமலே இருக்க வேண்டும் என்ற கருத்தோடு இருக்கக் கூடாது. நாமாவது சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்த தமிழ்நாட்டில் அமைதியைக் காத்திட, உருவாக்கிடப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதைச் சொல்கிறேன். சட்டம், ஒழுங்கு தமிழ்நாட்டில் ஒழுங்காக இருக்கிறது, சரியாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் அதற் கிடையே இந்தக் கருத்துகளைச் சொல்வது, நண்பர் டாக்டர் ராமதாஸ் அவர்களையும், அன்புமணி அவர்களையும் சிறையிலே போட்டு தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாக்க வேண்டாம் என்ற இந்தக் கருத்தை நான் இந்த அரசுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கச்சத்தீவு

செய்தியாளர் :- தமிழகச் சட்டப் பேரவையில் கச்சத் தீவினை மீண்டும் பெற வேண்டுமென்று அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்திருப் பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதிலே என்னுடைய பொதுவான கருத்து, கச்சத் தீவினை திரும்பப் பெற வேண்டும் என்பது ஏற்கத் தக்க கருத்து. நாங்களும் உச்ச நீதி மன்றத்திலே டெசோ சார்பிலே வழக்கு தொடர் வோம் என்று கூறி, அதற்கான ஆதாரங் களையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறோம்.

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை சிறையிலே சென்று தி.மு.க. வினர் யாராவது சந்திப்பார்களா?

கலைஞர் :- அவர் எங்களைச் சந்திக்க விரும்ப மாட்டாரே? அவருக்குத்தான் தி.மு.க. வினரையே பிடிக்காதே?

தமிழ் ஓவியா said...


எங்கும் இராமசாமி நாயக்கர்


பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு:

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் வகுப்புத் துவேஷமும் ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங்களைக் கற்பித்து பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் - பேசும் சிப்பந்தி கோடிகளும், அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய தொண்டை கிழிய எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹா ராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகா நாடுகள் என்றும் வகுப்புத் துவேஷங்கள் வளர்ந்து வருகிறது.பஞ்சாபிலும் கல்கத்தா விலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லா விட்டால் அங்கும் பிராமணர்-பிராமணரல் லாதார் வகுப்புத் துவேஷங்கள் வளரும்.

ஆதலால் இராமசாமி நாயக்கர் சென்னையில் மாத்திரம் இல்லை; இந்தியாவெங்கும் இராமசாமி நாயக்கர் மயமாய்த்தான் இருக்கிறது. சென்னையில் 4 பேர் கூலிக்கு மாரடிப்பதால் இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன் இவர்கள் சென்னையில் சில காலிகளை ஏவிவிட்டு ஸ்ரீமான் சர். தியாகராயச் செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் முதலியவற்றையும் உடைத்தார்கள். அதிலும் இந்த இயக்கம் அழிந்து விடவில்லை.

அதற்குப் பிறகு ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் அடிக்கும்படி செய்தார்கள். அதனாலும் இவர்களுக்குப் பயந்துகொண்டு இயக்கம் போய்விடவில்லை. சமீபத்தில் பேரார் மாகாணத்தைச் சேர்ந்த அமராவதியில் 2ஆவது அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸின் காரிய தரிசியாயும், பிராமணரல்லாதாரின் பேருழைப் பாளராகவுமிருக்கும் ஸ்ரீமான் அமிர்த்காரை சில காலிகளைக் கொண்டு பலமாய் அடித்து விட்டார்கள்.

இதனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் ஒழிந்து விடவில்லை. இவர்கள் கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத் தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல் இயக்கம் இந்தியாவெங்கும் கிளம்பி பரவிக்கொண்டு தான் வருகிறது.

- குடிஅரசு - அறிக்கை - 9.5.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் காங்கிரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அறிவிக்கிறார் என்று சுதேசமித்திரனில் குறிப்பிட்டிருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித்தார்கள்? ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் நியமித்தார், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்.

யாருடைய பணம்? ஊரார் பொதுப்பணம். என்ன பிரச்சாரம்? பிராமணத் தேர்தல் பிரச்சாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம்ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது;

பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள், மகாபுத்தி சாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி அய்யங்காரும், எஸ்.சீனி வாசய் யங்காரும் சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரும், எம்.கே.ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள் தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம் செய்தவர்கள்; கதர், மது விலக்கு, தீண்டாமை முதலிய வைகளில் அதிக நம்பிக் கையுடையவர்கள்; காரியத்திலும் நடத்து கிறவர்கள்;

அதனால் தான் தமிழ்நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் போன்றவர்கள் எங்கள் அய்வர்களையே தமிழ்நாட்டிற்குத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்; நாங்கள்தான் தமிழ் நாட்டுக்குத் தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள்.

எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தேசத் துரோகிகளும் வகுப்பு நலன் நாடுபவர் களுமான குறுகிய புத்தியுடையவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் எல்லா இந்தியத் தலைவராவார்கள். மற்றபடி வேறு என்ன பிரச்சாரம் செய்யக் கூடும்? தமிழ்நாடே! உன் தலைவிதிதான் என்ன? உன்னை இத்தலைவர் களுக்குக் காட்டிக் கொடுத்த தர்மசீலர்களுக்கு ஆயுள்தான் எவ்வளவோ?

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 16.5.1926

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

குடிஅரசு - வேண்டுகோள் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு - விமர்சனம் - 6.6.1926

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு 1 - சிறை நிரப்பும் போராட்டம்!



இராஜபாளையம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

தமிழர் தலைவர் அறிவித்த ஆகஸ்டு -1 சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கு பெறும் இளைஞரணி தோழர்களின் ரத்த கையொப்பமிட்ட முதல் பட்டியலை மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் கு. தென்னரசு ஆகியோர் உள்ளனர் (4.5.2013).

இராஜபாளையம், மே 5- வரும் ஆகஸ்டு முதல் தேதி அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமைக் கான சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

இராஜபாளையத்தில் கடல் இல்லை. ஆனால் இங்கே கருஞ்சட்டைக் கடல் பொங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கூடி யுள்ளீர்கள். எல்லா வயதி னரும் வந்துள்ளீர்கள்.
யார் இளைஞர்?

இளைஞர் என்பது வயதைப் பொறுத்ததல்ல உணர்வைப் பொறுத்தது - உணர்ச்சியைப் பொறுத்தது - இலட்சியத்தில் கொண்டி ருக்கும் பிடிப்பைப் பொறுத் தது.

முதியவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள்

எனக்குப் பின்னால் நமது தளபதி ஸ்டாலின் உரையாற்றிட உள்ளார். இளைஞர்களுக்குப் பின் னால் முதியோர் இருக் கிறார்கள் என்பதைவிட முதியவர்களுக்குப் பின் னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனக் குப் பின்னால் தளபதி உரையாற்ற இருக்கிறார்.

இராஜபாளையம் என்று வருகிறபோது 1982-க்கு என் நினைவு செல்லுகிறது.

அந்த மம்சாபுரம்

மம்சாபுரத்திற்கு மருத் துவமனையைத் திறப்பதற்கு நான் காரில் சென்றபோது தி.மு.க. கொடியைக் காட்டி, மாலையைக் கையில் வைத் துக் கொண்டு என்னை வரவேற்பது போல பாசாங்கு காட்டி என்னைத் தாக்கி னார்கள். ரத்தம் கொட்டியது. உடம்பெல்லாம் காரின் கண்ணாடித் தூள்கள், ஓட்டுநரின் சாமர்த்தியத் தால் தப்பினேன். ஆனாலும் ஒப்புக் கொண்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு முடித்த பிறகு தான் திருச்சிக்குச் சென் றேன் என்ற தகவலை கழ கத் தலைவர் குறிப்பிட்டார். 31 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற வன்முறை அது (மேலும் மூன்று முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப் பட்டதுண்டு)

ஆயிரம் ஆயிரம் எதிர்ப் புகள், அடக்கு முறைகள் சிறைச் சாலைகளைச் சந் திக்க நேரிட்டாலும் தந்தை பெரியார் அவர்களும் சரி, அவர்கள் கண்ட இந்த இயக்கமும் சரி இலட்சியப் பாதையை விட்டு விலகாது என்பதைக் குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

போராட்ட அறிவிப்பு! இந்த மாநாட்டில் போராட்டத் திட்டம் அறி விக்கப்படும் என்று கூறி யிருந்தேன். தீர்மானமும் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும். மனிதன் சந்திர மண்டலத்துக்குள் கூடப் போய்த் திரும்பும் கால கட்டம் இது. இத்தகைய கால கட்டத்தில் தமிழன் கட்டிய கோயிலுக்குத் தமிழன் அர்ச்சகனாகப் போக முடியாது. கோயில் கருவறை என்பது பார்ப்பனர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடமாக இருக்கிறது. இது மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையாகும்.

இதனை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளோடு அய்யாவைப் புதைத்து விட்டோமே என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார்.

தமிழ் ஓவியா said...

கழகம் தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றாலும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கி வருகின்றனர். சுமுகத் தீர்வு என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்திலே தமிழ்நாடு அரசு சார்பிலே மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அந்தச் சுமுகம் என்றால் என்ன? விளக்கம் தேவை கிராமக் கோயில் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதார் இருப்பார்கள். ஆகமவிதிகளுக்கு உட்பட்ட பெரிய பெரிய கோயில்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்று சுமுகமாக தீர்வு காணலாம் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால் அதனை ஏற்க மாட்டோம் - கடுமையாக எதிர்ப்போம்! போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இரண்டு மாதங்கள் இதுபற்றி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம், இலட்சியம் நிறைவேறும் வரை ஓய்ந்திட மாட்டோம்.

ஆகஸ்டு 1 சிறை நிரப்பும் போராட்டம்!

ஆகஸ்டு முதல் தேதி என்பது - தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம், போராட்டத்தை நடத்தும் வரலாற்றுக் குறிப்பாகும்.

அதே போல வரும் ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் (பலத்த கைதட்டல்).
ரத்தக் கையொப்பம்

நான் இதனை அறிவிப்பதற்கு முன்னதாகவே எனது அறிக்கையின் அடிப்படையில் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களின் பட்டியலோடு தயாராக இருக்கிறார்கள். ரத்தக் கையொப்பம் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் நாம் ரத்தம் சிந்தக் கூடாது. அந்த ரத்தம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது இயக்கம் மனிதாபிமான இயக்கம். எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்படுவதாக அமைய வேண்டும்.

வன்முறைக்கு இடம் இல்லை

நாம் நடத்தும் போராட்டத்தில் எப்பொழுதுமே வன்முறைக்கு இடம் இருக்காது. பேருந்துகளுக்குச் சேதம் ஏற்படாது - பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இருக்காது.
சுதந்திரப் போராட்டம் என்று கூறி காங்கிரஸ்காரர்கள் தண்டவாளத்தைப் பெயர்த்த போதும், போஸ்டாபீஸைக் கொளுத்திய போதும்கூட அப்பொழுதே தந்தை பெரியார் அதனைக் கண்டித்துள்ளார்.

எந்த ஒரு இலட்சியத்தை அடைவதாக இருந்தாலும் அதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

தோழர்களே தயாராகுங்கள் - இங்கே நமது அழைப்பை ஏற்று தி.மு.க. பொருளாளர் தளபதி கலந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

மிசா கைதியாக...

1976 நெருக்கடி காலத்தின்போது மிசா கைதிகளாக சென்னை மத்திய சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப் பட்டபோது ஒரு நாள் இரவு - தளபதி ஸ்டாலினை அடித்துத் துவைத்து நாங்கள் இருந்த அறையில் தான் போட்டார்கள். என்மீது தான் விழுந்தார். அப்பொழுது அவரைத் தூக்கி நிறுத்தி - பொது வாழ்வில் இவை எல்லாம் சகஜம்தான் அதற்கொரு பயிற்சிதான், தளராதீர்கள் என்று அன்று சொன்னேன்.

தளரவில்லை தளபதி

அவர் தளர்ந்து விடவில்லை - வளர்ந்திருக்கிறார் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிருகிறார். அவரை வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.



போராட்ட வீரர் பட்டியல் ரத்தக் கையொப்பத்துடன்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க போராட்ட வீரர்களின் பட்டியல் முதல் பட்டியல் கழகத் தலைவரிடம் இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாட்டில் அளிக்கப்பட்டது.

1081 பேர் அதில் கையொப்பமிட்டி ருந்தனர். பலர் ரத்தக் கையொப்பமும் போட்டிருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலை தமிழர் தலைவரிடம் வழங்கியபோது கடல் அலை ஓசையாக கையொலி எழுந்தது.

தமிழ் ஓவியா said...


நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் - தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சியுரை


இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் (4.5.2013)

இராஜபாளையம் மே 5- நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.

இராஜபாளையத்தில் நேற்று (4.5.2013) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்று தி.மு.க. பொருளாளர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது: திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான் சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.

தி.க. இளைஞரணியின் குறிக்கோள்கள் உன்னதமானவை

திராவிடர் கழக இளைஞரணியினரின் குறிக்கோள்கள் மிகவும் உயர்ந்தவை.

பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் விதவைத் திருமணங்கள் வரதட்சணையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்.

கலைஞரின் அறிவுரை

தி.மு.க. இளைஞரணியினருக்காக ஒரு சின்னம் (Emblem) ஒன்றைத் தயாரித்து தலைவர் கலைஞரிடம் அளித்தோம். அதில் அண்ணா, கலைஞர் உருவம் இடம் பெற்றிருந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் அதில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கம் சொன்னதுதான் முக்கியம்.

பதவிக்கு ஆசைப்படாதே - கொள்கைக்கு முன்னுரிமை கொடு என்பதற்காகத்தான் அய்யா படம் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னது நமது இளைஞர்களுக்கு முக்கியமான, தேவையான வழிகாட்டுதல் ஆகும். நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறு வயதிலேயே மேடை ஏற்றப்பட்டு உரையாற்றப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அண்ணா அவர்களே அந்த சிறுவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்தச் சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்திருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்றிடு வார்கள். ஆனால் இவர் அருந்திய ஞானப்பால் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு ஈரோட்டுப்பால் என்று 1943ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டவர் தான் நமது ஆசிரியர் பெருந்தகை.

வழிகாட்டுகிறார் ஆசிரியர்

அவரின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடியவை.
இதே ராஜபாளையத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதற்குமுன் நான் கலந்து கொண்டு இருந்தாலும் தாய்க் கழகத்தில் மாநில இளைஞரணி மாநாட்டில், நான் பங்கு பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மாநில இளைஞரணி மாநாடு தோழர்கள் முழக்கம்


4.5.2013 சனி மாலை 7 மணிக்கு ஜவகர் திடலில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவரங்கில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினரின் திக்கெட்டும் பரவட்டும் திராவிடம் எனும் வீதி நாட கங்களுடன் தொடங்கப்பட்டது. பெரும் வரவேற்பு மக்கள் கடலில் கிடைத்தது. பேரணி திடலில் நுழைந்தபோதே மக்கள் கடல் நிரம்பி வழிந்தது. இரா. திருப்பதி,

மாநாட்டுத் தலைவர்

மாநாட்டுக்கு இளைஞரணி மாநில செயலாளர் இரா. திருப்பதி தலைமை வகித்தார். மாநில மாணவரணி செய லாளர் த.சீ. இளந்திரையன் அனைவரை யும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் தலைவரை முன்மொழிந்தார். விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. கோவிந் தன், விருதுநகர் கழக மாவட்ட இளை ஞரணி செயலாளர் இரா. அழகர் ஆகியோர் தலைவரை வழி மொழிந்தனர்.

மதுரை மண்டலக் கழகத் தலைவர் வே. செல்வம், விருதுநகர் கழக மாவட்ட தலைவர் வானவில் வ. மணி, மாவட்ட செயலாளர் தி. ஆதவன் ஆகியோர் முன் னிலை வைத்தனர்.

பழனி மாவட்ட மாணவரணி செய லாளர் சே.மெ. காவியா கழகத் தோழர் களின் முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சை இரா. செயக்குமார்

மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் உரையாற்றினார்.

தீர்மானங்கள் - டாக்டர் துரை. சந்திரசேகரன்

காலத்தை வெல்லும் 20 தீர்மானங் களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் முன்மொ ழிந்தார். பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரையாற் றுகையில், ஜாதியைக் காப்பாற்றத் துடிக் கும் சக்திகளை எதிர்த்து இதோ இளைஞர் பட்டாளம் தயாராகி விட்டது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தமது உரையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நம் பிரச்சாரம் நடைபெற வேண்டும். நமது இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் தமது உரையில் கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் கூடாதா? இந்தி யாவுக்கு இரண்டு அரசியல் சட்டங்கள் இருக்கின்றனவா? என்ற வினாவை எழுப்பினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

2400 கோடி ரூபாய் செலவில் தொடங் கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனை ராமனைக் காட்டி முடக்குவது என்ன நியாயம்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் செயலவைத் தலைவர்.

ச.அமுதன்

தி.மு.க. இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் திருவல்லிபுத்தூர் ச. அமுதன் தன் உரையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் தலைமையில் திரா விடர் கழகப் பணிகள் எழுச்சியுடன் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

பார்ப்பனர் எதிர்ப்பு தான் தன்னை நாத்திகவாதியாக ஆக்கியது என்றார் தந்தை பெரியார். அந்த உணர்ச்சிதான் நம் மக்களுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது - உத்தியோக உரிமையைப் பெற்று தந்தது. அதனைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது பார்ப்பனர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடோ தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்து பவர்களை தமிழின இளைஞர்கள் புறக் கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தங்கம் கு. தென்னரசு

முன்னாள் கல்வி அமைச்சரும், தி.மு.க. நெசவாளர் அணியின் தலைவருமான தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில், இம்மாநாடு தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது உண்மையே என்பதை நிரூபித்துக் காட்டும் மாநாடு என்று குறிப்பிட்டார் கோடையிலே இளைப்பாறக் கிடைத்த குளிர் தருவதாக ஆசிரியர் அவர்கள் கழகத் தலைவர் கலைஞருக்கு இருக் கிறார் என்றார். இந்தியா டுடே என்ற இதழ் தி.மு.க. வில் இளைஞரணியினை வலுவாக்கி அதன் மூலம் நல்ல தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் வளர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டதை எடுத்துக்காட் டினார்.

நன்றியுரை

இதையடுத்து மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளர் பூ. சிவக்குமார் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.