Search This Blog

2.5.13

மே தினம் பற்றி பெரியார்



மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால் யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.

சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள் தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.

1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.

பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம் மேதினமாகும்.

ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும் மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.

சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.

நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.

உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர் களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக வில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார் லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.

------------------------தந்தைபெரியார் -”புரட்சி”  தலையங்கம் 29.04.1934

14 comments:

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவும் - சுயமரியாதையும்


மே தினத்தில் திமுக தொழிற்சங்கத் தலைவர் மானமிகு செ. குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் சுயமரியாதையும், பகுத்தறிவுமே அடிப்படை என்ற அழகான, ஆழமான கருத்தினைக் கூறியுள்ளார்.

இதனை திராவிடர் இயக்கத் தோழர்கள் மட்டுமல்லர், (முக்கியமாக அழுத்தமாகக் கடைபிடிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றாலும்) தமிழர்கள் அனைவரும் உணரவும், கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து உலக மானுடத்திற்கே கூடத் தேவையானதுதான்.

திருவள்ளுவரின் திருக்குறளில்கூட ஏழு சொற்கள் இடம் பெறும்; தந்தை பெரியார் அவர்கள் வடித்துக் கூறியதோ நான்கே நான்கு சொற்கள்.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு - இந்தக் கருத்தின் கருவைத் தான் கலைஞர் அவர்கள் வேறு சொற்களில் சுயமரியாதையும், பகுத்தறிவும் அடிப்படை என்று கூறியுள்ளார்.

மறைந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஒரு கருத்தை அடிக்கடி கூறுவார். ஒரு இயந் திரத்தின்மீது மனிதன் எச்சிலை உமிழ்ந்தால் அதற்குக் கோபம் வரப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படியல்லவே.

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பெறாத உள்ளம்
என்பார் புரட்சிக் கவிஞர்.

தமிழர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்குக் காரணமே இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனீயம் செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டில், பக்தி எனும் போதை மருந்துக்குப் பலியாகி, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பறி கொடுத்திருப்பதை மறுக்க முடியுமா?

உலகத்தில் எந்த நாட்டிலாவது கேள்விப்பட்ட துண்டா? கடவுள் தனது முக்கிய நான்கு உறுப்புகளிலிருந்து மனிதர்களை பிறவிப் பேதத்தை அடிப்படையாக வைத்துப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளதா?

அர்த்தமுள்ள இந்துமதம் என்று சொல்லும் இந்தப் பாழும் மதத்தில்தானே பிர்மா எனும் படைத்தல் கடவுள், தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத் தார், தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தார், இடுப்பிலிருந்து வைசியனைப் படைத்தார், பாதங்களிலிருந்து சூத்திரர்களைப் படைத்தாராம்.

இந்த நான்காம் ஜாதியான சூத்திரர்கள் அடிமைத் தொண்டு செய்ய வேண்டியவர்கள், பார்ப்பனர்களின் வேசிப் புத்திரர்கள் என்று எழுதி வைத்துள்ளனர் என்பதோடு இன்று வரை இதன் அடிப்படையில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது - தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று எழுதியதை இன்றைய உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் நாம் 2013ஆம் ஆண்டில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி, நம் உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதே!

இன்னும் தமிழன் பக்தியின் பெயரால் செருப்படித் திருவிழா நடத்திக் கொண்டு கிடக்கின்றானே! ஒருவனுக்கொருவன் விளக்கமாற்றால் அடித்துக் கொண்டு கிடக்கிறானே!

வெட்கப்பட வேண்டாமா? விஞ்ஞானி எனும் நிலையை அடைந்தவன்கூட மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம்) குடிக்கிறானே! கோயிலுக்குள் சென்று பார்ப்பானைப் பார்த்து சாமி என்று கூறிக் கைகட்டி நிற்கிறானே!

பார்ப்பானை உயர் ஜாதியான் என்று ஒப்புக் கொண்டு தன் வீட்டு நிகழ்ச்சிகளை அவனை அழைத்து நடத்தி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தானே செய்கிறது!

சுயமரியாதையும், பகுத்தறிவும் இல்லாததால் தானே - பல உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பொழுது பொங்கி எழும் உணர்ச்சிக்கு ஆளாவ தில்லை.
நிஜம் எது, நிழல் எது என்று தெரியாமல் எதிரிகள் விரிக்கும் வலையில் தமிழன் விட்டில் பூச்சியாக விழுவதற்குக் காரணம் - தந்தை பெரியார் எடுத்துச் சொன்ன - கலைஞர் தொடுத்துச் சொன்ன அந்தவுணர்வு இல்லாது போனதுதானே!
தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தையும் இணைத்துக் கொள்வீர் தமிழர்களே! 2-5-2013

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

தமிழ் ஓவியா said...


மானங்கெட்ட கோயில் விழா விளக்கு மாற்று அடி பரிமாற்றம்


ஆண்டிபட்டி, மே 2- ஆண்டிபட்டி அருகே கோயில் விழாவில் மாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலை வில் மறவப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூறாண்டுகள்

தமிழ் ஓவியா said...


ஜனநாயகமா - காலி நாயகமா?


ஜனநாயகமா - காலி நாயகமா?

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 681 கோடீசுவரர்களும், 220 குற்றவாளிகளும் (13 பேர் கொலைக் குற்றவாளிகள்) போட்டியிடுகின்றனர்.

இது என்ன ஜனநாயகமா - காலி நாயகமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

#####

செவ்வாய்க்கிரகத்தில்
குடியேற விருப்பமா?

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விளம்பரம் செய்திருந்தது. மூன்றே நாளில் 20 ஆயிரம் விண்ணப்பம் குவிந்தது. இதற்குப் பிறகாவது செவ்வாய்த்தோஷம் பற்றிப் பேசுவதை இந்துத்துவாவாதிகள் கை விடுவார்களா?

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் - நாணயமும்!



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


நாக தேவதையை வணங்கினால்...


உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி என்னும் கிராமத்தில், படமெடுத்து நின்ற பாம்பை அன்புக்கொடி என்ற சிறுமி மண்டியிட்டு வணங் கினாள். அச்சிறுமியை அந்நாகம் மூன்றுமுறை தீண்டி அவளை மாய்த்தது. - இது தினமணி நாளிதழில் 25.11.1982 அன்று வெளியான கட்டச் செய்தியின் சுருக்கம்.

நாக தேவதை என்ற தெய்வம் நம் நாட்டில் உலவுகிறதே; அப்பிஞ்சு உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்த அத் தெய்வ பக்தி - அவர்கள் மொழியில் சொல்வதனால் - அன்புக் கொடிக்கு எமனாகி விட்டது. ஆத்திகப் பெருமக்களே ஆத்திரங் கொள் ளாமல் மூடக் கொள்கையால் விளைந்த விபரீதத்தை எண்ணிப் பாருங்கள்.

- பி.இரத்தினசபாபதி, சென்னை-24.

தமிழ் ஓவியா said...

கிரக சேர்க்கை பற்றி நேருவின் கருத்து



இந்த எட்டு கிரக சேர்க்கை என்னை ஒன்றும் செய்யாது. இதனால் ஆபத்து ஏற்படுமென்று சில சோதிடர் கூறுவதைக் கேட்டு பீதி அடையாதீர்கள். நம்முடைய தலைவிதியை ஆக்குவதோ, அழிப்பதோ இந்தக் கிரகங்களின் வேலையல்ல நம் தலைவிதியை நிர்ணயிப்பது நம் கையில் தான் இருக்கிறது.

- பண்டித நேரு, (விடுதலை - 8.1.1962 அலகாபாத்தில் பேச்சு, 11.1.1962

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். ger Font Smaller Font

நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென் ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர். நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர். நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்கள்.

ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். நீங்கள் வானொ லியை கேட்காதீர்கள்.

ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர். நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர். நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.

பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர். நீங்கள் டயரை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர். நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.

நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடு களுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே! உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள் முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டுபிடித் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான். (உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

தமிழ் ஓவியா said...

நாயுறங்கும்



எவன் படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை எவன் காத்தான்?
காக்கிறான்? காப்பான்? கேளீர்!
தவழ்ந்தெழுந்து நடந்து வளர்குழந்தைபோலும்
தனி, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்த தலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணி நாட்டைப் பெற்றவர்கள் கண்ணுறங்கிக்
கவிழ்ந்திட ஓர் ஈச்சம்பாய் இல்லை - தங்க
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்

- புரட்சிக் கவிஞர்

தமிழ் ஓவியா said...


ஈச்ச மர(த்திலும்) கடவுள்


இந்தியாவில் பரித்பூர் என்றோர் ஊருள்ளது. அங்குள்ள ஒரு கோயிலுக்கருகில் ஓர் ஈச்சமரம் இருக்கின்றது. அக்கோயிலில் வழக்கமாக காலையிலும் மாலையிலும் கடவுள் வழிபாட்டின் போது மணியடிப்பதுண்டு. மாலையில் மணி யடிக்கும் போது அவ்வீச்சமரம் சாய்ந்து விடுவதுண்டு. மறுநாட்காலையில் மணியடிக்கும் போது அம்மரம் நிமிர்ந்து விடும். அம்மரத் தினுடைய செயல் கடவுள் வழிபாட்டின் போது வணங்குவது போன்றிருக்கும்.

இதனைக் கண்ட மக்கள் அம்மரம் மாலையில் கடவுளை வழிபடத் தொடங்கி, இரவு முழுவதும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு காலையில் எழுந்திருப்பதாகக் கருதி அஃது தெய்வத்தன்மை உள்ளது என்று கடவுளுக்கு வழிபாடு நடத்துவது போல் வழிபாடு நடத்தி வந்தனர்.

நம் நாட்டு விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீச சந்திரபோஸ் இம்மரத்தை கண்டபோது, இம்மரத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினர். பல நாட்கள் வரை ஆராய்ந்து அதன் உண்மையை கண்டு பிடித்தார். இம்மரம் பகலில் உண்டாகிற சூரிய வெப்பத்தால் மாலையில் சாய்ந்து விடுகிறது. இரவில் அவ்வெப்பம் நீங்கி விடுவதால் காலையில் இது நிமிர்ந்து கொள்கிறது.

இம்மரம் மட்டும் இவ்வாறு சாய்ந்து நிமிருவதற்கு காரணம் இதனுடைய சூழ்நிலைதான் என்று மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

- உலக அதிசயங்கள் நூலிலிருந்து
ரவிராஜ், அத்திமலைப்பட்டு - 632315

தமிழ் ஓவியா said...


பிக்பாக்கெட் கடவுள்

சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஒரு மணி நேரத்திற்கு, 12,500க்கு மேற்பட்டோர் கடந்து செல்வதால் பிக்பாக்கெட் திருடர்கள் சென்ட்ரல் பகுதியில் பணியாற்று வர். இருட்டும் நேரத்தில், அவர்கள் பாடிகாட் முனீஸ்வரனுக்கு, சுருட் டையும், குவார்ட்டரையும் காணிக்கை செலுத்திய பின்னரே தொழிலுக்குச் செல்வர் என்கின்றனர் கோவில் பணியாளர்கள் - தினமலர் 17.4.2013

கடவுள், பக்தி என்பது எப்படி இருக்கிறது என்ப தற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், ஆன்மிக மொழியில் எந்த பாதகங் களைச் செய்தாலும் பிரார்த்தனை செய்தால், கடவுளுக்கு நேர்த்திக் கடன் கழித்து விட்டால், பிராயச்சித்தம் செய்து விட்டால் பாவங்களிலி ருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருக்கு மட்டும் இது போன்ற குற்றவாளி கள் பெருகத்தானே செய்வார்கள்.

விஷ ஊசி போட்டுக் கொன்றவர்கள் கொள் ளையடித்த பணத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக் குப் போட்டதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வில்லையா?
அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே!

கள்ளக் கையொப் பக்காரன் கரம் கூப்பு கிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக் கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய் கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்ப வர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? (அறிஞர் அண்ணா வின் நூல்: தீண்டாமை வானொலி உரையிலிருந்து)

பிக்பாக்கெட்காரர்கள் முனீஸ்வரனைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்து விட்டு, தங்களின் பிக் பாக்கெட் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு வருகின்றனர்.

கீழ் மட்டக் கடவுளிடம் தான் இது நடப்பதாக யாரும் நினைக்க வேண் டாம். திருப்பதி கோயி லிலே இது சர்வசாதார ணம்.

திருப்பதி ஏழுமலை யான் உருவம் பொறித்த டாலர் விற்பனையில் மோசடி செய்து பெரும் பணம் குவித்த டாலர் சேஷாத்திரிகள் இன்னும் அந்தக் கோயில் நிரு வாகத்திற்குள் இருக்கத் தானே செய்கிறார்கள்?

ஏழுமலையானுக்கு ஒரு நமஸ்காரம் போட் டால் போகிறது!

- மயிலாடன் 03-05-2013

தமிழ் ஓவியா said...

ஜெயங்கொண்டம், மே 3- தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஈட்ட ஜாதி மதங்களை மறந்து ஒன்றுபட்ட தமிழர் களாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில், அரிய லூர் மாவட்டம் செயல் வீரர்கள் நிறைந்த மாவட்டம். எந்தப் பணிகளை தலைமைக் கழகம் இட்டாலும் விரைந்து முடிக்கக் கூடியவர்கள் அந்த வகையில் குறுகிய கால இடைவெளியில் இந்த மாநாடு அறிவிக்கப் பட்டாலும் சிறப்பாக நடைபெறுகிறது.

யாருக்கோ பதில் சொல் வதற்காக கூட்டப்பட்ட மாநாடு அல்ல. மாறாக நமது கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு. சேது சமுத்திர திட்டம் கிடப்பில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் உரிமை ஆகியவற்றுக்காக போராட வேண்டிய நாம் தரக் குறைவாக பேசும் சிலருக்கு பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டிய தில்லை.

தந்தை பெரி யாரின் கட்டளை ஏற்று ஜாதி ஒழிப்பிற்காக ஏராளமானோர் சிறை சென்ற மாவட்டம் அரி யலூர் மாவட்டம் கலைஞரோ, நாங்களோ சந்திக்காத எதிர்ப்பா? எங்கள் அனுபவத்தைக் கூட வயதாகக் கொள் ளாதவர்கள் சீசனல் வாக்கு வங்கிக்காக ஜாதியைப் பயன்படுத்தி தமிழர்களை கூறு போடலாமா? நாங்கள் உயிரை துச்சமெனக் கருதுபவர்கள் என் உயிருக்கு மம்சாபுரம் சென்னை உட்பட நான்கு இடங்களில் குறி வைக்கப்பட்டது. அதை யும் தாண்டி பணியாற் றுபவர்கள் நாங்கள். பார்ப்பனர்களால் விளம்பரம் செய்யப்படு வதால் எதை வேண்டு மானாலும் பேசுவதா? நாம் அடித்துக் கொள் வதைப் பார்த்து அவர் கள் மகிழ்ச்சியடைகி றார்கள். ஏணியின் சுபாவம் ஏற்றி விடும். தோணியின் சுபாவம் கரை சேர்க்கும். ஆனால் ஏறி வந்த ஏணியையும் கரை சேர்த்த தோணி யையும் எட்டி உதைக் கலாமா? சிந்திக்க வேண் டும்.

50 சதவீதம் வந்தது திராவிட இயக்கத்தால் தானே?

50 சதவீத இட ஒதுக் கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு கிடைக்க காரணமானவர்கள் யார்? சிந்திக்க வேண் டாமா? திராவிட இயக் கத்தலைவர்கள் அல் லவா? 18 சதவீத திமிர் என்று தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து பேசலாமா?

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை விட ஆபத் தானது பதவிக்காய்ச்சல். பதவிக்காக எதையும் செய்ய முனைவதா? அனைவருக்கும் அனைத்தும் என்பதே எங்கள் கொள்கை.

கருவறைக்குள் ஜாதியை ஒழிக்க போராடிய தலைவர் பெரியார். இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக முடியவில்லை. ஏராளமான தடைகள் தடைகளை தகர்த்து உரிமைகளை வென் றெடுப்போம். பெரியார் என்ற மூச்சுக்காற்று இல்லையென்றால் தமிழினத்திற்கு எழுச்சி இல்லை. ஜாதி, மதம், கட்சிகளால் பிரியாமல் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தாழ்த்தப்பட் டவர்கள் உள்பட யாரை யும் எதிரிகளாக பா.ம.க. கருதக்கூடாது. தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம்! உரி மைகளை வென்றெடுப் போம் என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி னார்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா-?

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.