Search This Blog

12.5.13

கடவுளின் பெயரால் ஏமாற்றலாமா? கடவுள் என்பதே அசல் ஏமாற்று வேலை தானே?

கடவுளின் பெயரால் ஏமா(ற்)றலாமா? 


கடவுளின் பெயரில் ஏமாற்றலாமா? எனும் தலைப்பில் லலிதா ஜுவல்லரி என்ற நிறுவனம் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை ஏடுகளில் கொடுத்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் வருமாறு:

கிராமுக்கு ரூ.52 தள்ளுபடி!... சவரனுக்கு ரூ.520 தள்ளுபடி!... இலவசப் பரிசு! என்று அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு, பல நகைக் கடைகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் சலுகைகளை நீங்கள் காணலாம். தீர விசாரிக்கும் பொழுதுதான் இதில் உள்ள தந்திரம் தெரியும்! கிராமுக்கும், சவரனுக்கும் தள்ளுபடி அளிக்கும் இக்கடைகள், நகைகளின் சேதாரத் தொகையை அளவிற்கு அதிகமாக வசூலித்து இதுபோன்ற தள்ளுபடியில் அதை மறைக்கிறார்கள் என்பதுதான் உண்மை மேலும் பல சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

எனவே, இதுபோன்ற அட்சயதிருதியை ஆஃபர்களைக் கண்டு மயங்காமல், நீங்கள் கொடுக்கும் தொகை என்ன, அதற்கு உங்களுக்கு எவ்வளவு கிராம் தங்கம் கிடைக்கிறது என்பதைக் கணக் கிடுங்கள் என்று விளம்பரம் செய்துள்ள அந்த நிறுவனம் தனது நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து விவரிக்கிறது.
பம்படியில் வம்படி என்பார்களே, அது போல வியாபாரத்தில் போட்டி என்று வந்துவிட்டால் இதுபோன்ற மோசடிகள் வெளி வருகின்றன என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அட்சய திரிதியை என்ற வியாபாரக் கரடி கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிரபல்யம் அடைந்து வருகிறது.

இந்த நாட்டில் தான் எதற்கும் ஒரு புராணக் கதை இருக்குமே. அதுபோலவே இந்த அட்சய திரிதியைக்கும் அளப்புகள் உண்டு.

இந்த நாள் என்பது சாதாரண நாள் அல்லாமல் இது பரசுராமனின் ஜனன நாள் என்பது மட்டுமல்ல; லட்சுமி கடாட்சம் தரும் நாள், இந்நாளில் மகாலட்சுமியையும், மகா விஷ்ணுவையும் வணங்கி, அருள் பெற்று செய்யும் செயல்கள் எல்லாம் சிறப்பினைக் கொடுக்குமாம்.

அட்சயம் என்ற சொல்லுக்கு வளரக் கூடியது என்று பொருளாம்.
மணிமேகலைக் காவியத்தில் எடுக்க எடுக்கக் குறையாத அன்னம் வரும் பாத்திரம் என்று கூறப்படுவதில்லையா?

இந்த நாளில் ஒரு குன்றி மணி அளவாவது, கடன் வாங்கியாவது தங்கம் வாங்கினால், அது வளரும் என்று கதை அளக்கிறார்கள்.

இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் நகை வாங்கியவர்கள் வீட்டில் எல்லாம் தங்கம் குட்டிப் போட்டுள்ளதா மக்கள் மத்தியில்  ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அதன் மூலம் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதுதான் இதில் உள்ள தந்திரம்.
வியாபாரியான ஒருவரே அட்சய திரியை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நகை வியாபாரிகள் குறித்து அம்பலப்படுத்தியுள்ளாரே!

எந்தெந்த வகையில் ஏமாற்றுகிறார்கள் என்பதையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே! அதுவும் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்து (எத்தனை ஆயிரம் ரூபாயோ!) அம்பலப்படுத்தியுள்ளாரே!

விளம்பரத்தின் தலைப்பை இன்னொரு தரம் கவனத்தில் கொள்ளுங்கள்.
கடவுளின் பெயரால் ஏமாற்றலாமா? இதன் பொருள் என்ன? கடவுளின் பெயரைச் சொல்லி நகைக் கடைக்காரர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இதனை திராவிடர் கழகமோ, விடுதலை ஏடோ எடுத்துக் கூறினால் முகம் சுளிக்கும் மக்கள், பக்தி நம்பிக்கையுள்ள ஒரு வியாபாரியே, பக்தியை பரப்பும் ஒரு பார்ப்பன ஏட்டில்  கடவுளின் பெயரால் ஏமாற்றும் வேலை நடக்கிறது என்று முழுப் பக்கம் விளம்பரமாக வெளிப்படுத்தியுள்ளாரே!

இப்பொழுதாவது சிந்தித்துப் பார்க்க வேண் டாமா? கடவுள் பெயரால் ஏமாறலாமா? ஏமாற்றலாமா என்ற கேள்வியைக் கேட்போருக்கு ஒரு கேள்வி, கடவுள் என்பதே அசல் ஏமாற்று வேலை தானே?

மோசடிமீது இன்னொரு மோசடி அவ்வளவுதான் எங்குச் சுற்றினாலும் தந்தை பெரியார் கருத்தின் வட்டத்திற்குள் வந்துதான் தீர வேண்டும். சிந்தியுங்கள்!

               ----------------------"விடுதலை” தலையங்கம் 11-5-2013

61 comments:

தமிழ் ஓவியா said...


கருநாடகம் கற்பிக்கும் பாடம்!


கருநாடக மாநில சட்டப் பேரவையில் மீண்டும் பிஜேபி ஆட்சி தான் என்று பீரங்கி சத்தம் போட்டார்கள். அதுவும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி கருநாடக மாநிலத்தில் காலடி எடுத்து வைத்துத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில் நிலைமை அப்படியே தலைகீழாகப் போய் விட்டது என்று; அடேயப்பா பிஜேபி தலைவர்களும் அதுவும் அதன் செய்தித் தொடர் பாளர்களும், பார்ப்பன ஊடகங்களும் கிளப்பி விட்ட புயல் இருக்கிறதே -_ அது சாதாரணமல்ல.

மத்தியில் காங்கிரஸ் மீது படிந்திருந்த ஊழல் கறை மத்திய நிர்வாகத்தின்மீதான அதிருப்தி, காங்கிரஸ் ஜெயித்தால் யார் முதல்வர் என்ற குழப்பம் போன்ற விஷயங்கள் காங்கிரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என்று துக்ளக் கொஞ்சம் மூக்கைச் சொறிந்து பார்த்தது. (துக்ளக் 8.5.2013 -_ பக்கம் 5).

தேர்தல் முடிவு என்ன? அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர் தலில் -_ பிஜேபி தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற மிதப்பில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த பிஜேபியின் மூக்கு இழுத்து வைத்து வெட்டப்பட்டுள்ளது.

ஊழல் பேரிகை முழங்கி, நாடாளுமன்றத்தை முடக்கி, கருநாடகத் தேர்தல் நேரத்தில் தங்கள் பக்கம் மக்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்ற நப்பாசையின்மீது கருநாடக மக்கள் நல்ல அளவு மண்ணடித்து விட் டார்கள்.

பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ருடி, கருநாடகத் தேர்தல் முடிவு _ அதிருப்தியும், சோக மும் அளிப்பதாக உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

பிஜேபியின் அகில இந்திய முன்னாள் தலைவர் திருவாளர் வெங்கையா நாயுடு கருநாடக சட்டமன்ற தேர்தல் முடிவு நாடு தழுவிய மனநிலையை பிரதிபலிக்க வில்லை என்று கூறி தமக்குத் தாமே ஆறுதல் ஒத்தடத்தைக் கொடுத் துள்ளார்.

2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இத்தேர்தலில் 121 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற் றுள்ளது. 2008இல் 110 இடங்களைப் பெற்றிருந்த பிஜேபி இப்பொழுது 40 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தத் தேர்தல் முடிவு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக தமது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் மீண்டும் மதச் சார்பின்மைக்கு - _ காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாய்ப்புக் கிடைத்ததன் மூலம் -_ வெற்றி கிடைத்துள்ளது.

5 ஆண்டு கால ஊழலுக்கு மேல் ஊழல் -_ சுரங்கமாக இருந்த பா.ஜ.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்க வில்லை.

அத்வானி, மோடி முதலிய பல பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம் _ எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை என்ற நிலைதான்!

மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி என்பது வெறும் பகற் கனவே என்பதற்கு முன்னோடி சாட்சியமே கருநாடகத் தேர்தல் முடிவு.

யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக் கூடாது என்பதன் விளைவே இம்முடிவுகள் என்று திராவிடர் கழகத் தலைவர் சில வரிகளிலேயே உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் (விடுதலை 8.5.2013, பக்கம்1)

காங்கிரஸின்மீது ஊழல் குற்றத்தைச் சுமத்தும் தகுதி பிஜேபிக்குக் கிஞ்சிற்றும் கிடையாது. கருநாடக மாநிலத்தில் ரெட்டி சகோதரர்கள் சட்டசபைத் தேர்தலில் வாரி இறைத்த பண வெள்ளத்தில் மஞ்சள் குளித்து வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்த நிலையில், அந்த ரெட்டி சகோதரர்கள் இருவருக்குமே அமைச்சர் பதவியை அளித்து, அவர்கள் கைகளில் கோலினைக் கொடுத்து, பிஜேபி ஆட்சி குரங்காட்டம் போட்டது.

எடியூரப்பாவோ ஊழலைப் பஞ்சு மெத்தையாக்கிப் படுத்துப் புரண்டார்.

பிஜேபி மேலிடம் முதுகெலும்பு சிறிதுமின்றி என்னென்ன வகைகளில் எல்லாம் தாஜா செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்து பார்த்தும் எடியூரப்பாவை தம் வழிக்குக் கொண்டு வர முடியாத கையறு நிலைக்கு ஆளாகி விட்டது.

ஒரு மாநிலத்தில் உள்ள தன் கட்சியை, தன் கட்சி ஆட்சியை நிருவகிக்கத் துப்பு இல்லாத சோப்பலங்கித் தலைமைக்குப் பெயர்தான் பி.ஜே.பி. என்பது மக்கள் மத்தியில் நிரூபணமாகிக் கிழிந்து தொங்கியது.

தமிழ் ஓவியா said...

ஸ்ரீராம் சேனை என்ற இந்துத்துவா காலிப்படை போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல! போட்டி அரசாங் கமாகவே தறி கெட்டு ஆடியது.

மதக் கலவரத்தை உண்டாக்க இவ்வளவுத் தொகை என்று அதன் தலைவர் நிர்ணயம் செய்தார் என்றால் தெரிந்து கொள்ளலாமே!

ஊழல் பெருச்சாளியான பி.எஸ். எடியூரப்பா கோயில் கோயிலாகத் திரிந்தார்; ஜோதிடர் பேச்சைக் கேட்டு நிர்வாணமாகவே படுத்துக் கிடந்தார். (பிள்ளை பிழைக்கவில்லை என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்தது இதற்கும்கூடப் பொருந்தக் கூடியதே!)

திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் இரண்டாவது கருத்தும் மிக மிக முக்கியமானது. அத்வானி, மோடி முதலிய பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம் எடுபட வில்லை என்பதாகும்.

மூன்று முறை குஜராத் மாநிலத்தில் மோடி பிஜேபி ஆட்சியை நிறுவி விட்டார்; குஜராத் மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் இடத்திற்குக் கொண்டு வந்துவிட்டார். இவரிடம் இந்தியாவை ஒப்படைத்தால் - அதாவது பிரதமராக ஆக்கினால் இந்தியா வையும் முதலிடத்தில் முறுக்கேற்றி உயர்த்துவார் என்று குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள பார்ப்பன சக்திகளும், அவாளின் ஊடகங்களும் ஊதி ஊதி விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டன.

இராமச்சந்திர குகா போன்ற சிந்தனையாளர்களும் இந்தியாவின் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு போன்றோர் மோடியின் முகமூடியைக் கிழித் தெறிந்துவிட்டனர்.

இந்தியா முழுமையும் உள்ள சிறுபான்மையினரின் ஒட்டு மொத்தமான வாக்குகள் மோடியைப் பிரதமராக்கத் துடிக்கும் பிஜேபிக்கு எதிராகவே திரும்பும் (கருநாடகத்தில் இப்பொழுது பார்த்து விட்டோமே!)

பி.ஜே.பி.யில் பெரிய மகானாகத் தூக்கி நிறுத்தப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயியின் கணிப்பு மோடியைப் பற்றி என்ன? ராஜதர்மத்தைக் கடைபிடிக்கத் தவறியவர் மோடி என்பதுதானே!

குஜராத் படுகொலையின் கதாநா யகன் மோடி! ஆயிரக்கணக்கான முசுலிம்களை மூர்க்கத்தனமாகக் கொன்று குவிக்க மூலகர்த்தாவாக இருந்தவர்? முதல் அமைச்சர் மோடி; அந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்ல முடியும்? என்று முகத்தைக் கைகளால் புதைத்துக் கொண்டு வெட்கப்பட்டவர் வாஜ்பேயி அல்லவா!

முதலாளிகளின் செல்(வ)லப் பிள்ளையான மோடிக்கு முதலாளித் துவ நாடான அமெரிக்க விசா கொடுக்க மறுத்து விட்டதே!

இந்தியாவுக்குச் சுற்றுலா செய்ய வந்த சில அமெரிக்கத் தொழி லதிபர்களை பயன்படுத்தி, மோடியை அமெரிக்காவுக்கு அழைத்ததாக ஜோடனை செய்ததெல்லாம் எவ்வளவு கேவலம்!

இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழி தான் இந்தியாவுக்குப் பிரதமராக வர வேண்டுமாம்.

மோடியின் டுவிட்டர் சமூக வலை தளத்தில் 10 லட்சம் பேர் இணைத்துக் கொண்டுள்ளனர் என்ற ஒரு தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது.

இலண்டனைச் சேர்ந்த ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளத்தில் பொறியாளர்கள் அதில் உள்ள மோசடியை நொறுக்கித் தள்ளிவிட்டனர். 50 சதவிகிதம் அதில் போலி என்பதை நிரூபித்துக் காட்டி விட்டனரே!

எத்தகைய அற்ப மனிதர் இவர் என்பதற்கு இன்னமுமா எடுத்துக் காட்டுகள் தேவை?

ஊழல் அற்றவராம் மோடி! பரிசுத்த யோவானாம் அப்பப்பா! எப்படி யெல்லாம் அய்ஸ் மழையில் குளிப்பாட்டுகிறார்கள்.

இவருக்குத்தான் மடியில் கனமில்லையே -_ லோக் அயுக்தாவை செயல்பட வைப்பதில் ஏன் தயக்கம்? இவரும் நீதிபதியை நியமனம் செய்ய மாட்டார். ஆளுநர் நியமனம் செய்தாலும் ஏற்க மாட்டார் என்றால் இதன் பொருள் என்ன?

மடியில் கனமிருக்கிறது. அதனால்தான் அச்சப்படுகிறார் என்பது வெளிப்படை அவ்வளவுதானே!

இப்பொழுது உப்பு சப்பில்லாத ஓர் அமைப்பை உருவாக்கி, உத்தமப் புத்திரன் என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டிட முயன்றுள்ளார்.

தலைமைத் தணிக்கையாளர் (CAG) 2ஜி பற்றியும், சுரங்கத் தொழில் தொடர்பாக அறிக்கை கொடுத்தார். அவற்றை வைத்து அண்டத்தையே புரட்டும் இந்த பிஜேபி வகையறாக்கள், பார்ப்பன ஊடகங்கள் -இதே முதல் அமைச்சர் மோடியின் ஆட்சியின் அலங்கோலத்தை அம்பலப் படுத்தியதே - மூச்சு விட்டதுண்டா?

2009_-2010, 2010-_-2011 ஆண்டுக்கான தலைமைகணக்கு அதிகாரியின் அறிக்கை என்ன கூறுகிறது?

மோடி அரசின் நிருவாக அலங் கோலங்கள் காரணமாக 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற் பட்டுள்ளது என்று கூறி இருக்கிறதே.

இதைப்பற்றிய நிலை என்ன? இந்த விவரம் 3.4.2013 அன்று குஜராத் சட்டப் பேரவையிலும் தாக்கல் செய்யப் பட்டுள்ளதே! உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வது ஏன்?

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளானதில் இன்னொரு சோமாலியா குஜராத் மாநிலம் என்ற குற்றச் சாற்றுக்குப் பதில் என்ன?

மோடியின் முகவரியை குஜ ராத்தைத் தாண்டியும் வாக்காளர்கள் மிகச் சரியாகவே துல்லியமாகவே தெரிந்து வைத்துள்ளனர் என்பதற்கு சரியான அளவுகோல்தான் கருநாடக மாநிலத் தேர்தல் முடிவுகள்.

பா.ஜ.க., பகற்கனவு காணட்டும்! அதில் நமக்கென்ன நோக்காடு!

தமிழ் ஓவியா said...


கலய் உரய்த்த கற்பனை

பேராசிரியர்
கொண்டல் சு.மகாதேவன், பி.எசி.,எம்ஏ.

கற்பனயய் உண்மயொடு பொருத் திப் பார்த்துச் சுவய்த்து மகிழ வேண்டும். அவ்வளவே! உண்மை யொடு குழப்பிக் கொள்ளுதல் நாட்டுக்கோ மொழிக்கோ நன்மய் பயப்பது ஆகாது பால் போல் நுரய்த்துப் பொங்கும் கடலய்ப் பாற்கடல் என்று அழய்ப்பது கற்பனய் அதனய்ப பாலால் ஆன கடல் என்றே பல்கலய்க் கழக அகராதி நமக்கு இன்று அறிவிப்பது அறிவு வளர்ச்சிக்கு ஆக்கம் தராது!

பாலால் ஆன கடல் இருந்தால், அதயொட்டித் தயிராலான கடலும், நெய்யாலான கடலும் இருக்க வேண்டுமன்றோ? அறுபதாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அறுபதாயிரம் மனய்வியரய்த் தசரதன் மணந்தான் என்பது கற்பனய்! அப்படியே அதனய் ஏற்க ஏன் கூடாது என இந்திய நாட்டின் வரலாறாகப் பாட நூல்களில் கொள்வது கண்மூடித்தனம்.

ஆங்கி லமும் அறிவியலும், கணிதமும் எம் நாட்டார்க்கு வேண்டா; கலயுரய்த்த கற்பனயே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த மூளய்ச்சலவய் செய்யப்பட்ட நம் முன்னோர்களய்ப்பார்த்து அறுபதினாயிரம் மனய்வியரய் மணந்து அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்ட அரசர்கள் பற்றியும், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல் பற்றியும் இந்திய குழந்தய்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதால் என்ன பயன் கிட்டும்? என்று கேட்ட கல்வியாளன் மெக்காலேயின் கேள்விக்கு இன்றும் நம் மெய்யறிவாளர்களால் விடய் காண முடியவில்லயே!

ஆனாலும் காலம் விடய் கண்டது. அன்று நம் மதகுருக்கள் ஆள் சுமக்கும் பல்லக்கில் போனார்கள்; இன்று பெட்ரோல் உருட்டும் சீருந்தில் செல்கிறார்கள்! வாழ்க மெக்காலே!

மெய்ஞானப் பொருள்களா? அஞ்ஞானப் பொருள்களா?

நம் முன்னோர் என்பாரும் குரங்கிலிருந்து வளர்ச்சிப் பெற்ற அந்நாள் மனிதர்களே! நாமறிந்த சுற்றுச் சூழலய்ப் பயன்படுத்தி இன்று நாம் வாழ்வது போல் தாமறிந்த சுற்றுச் சூழலய் மய்யமாகக் கொண்டு அன்று அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனா லும், அறிவும் அனுபவமும் அந்நாள் தொட்டு இந்நாள் வரய் வளர்ந்து கொண்டே வந்திருக்கின்றன.

அன்று அவர்கள் கண்ட உண்மய்கள் பல இன்றய நம் அறிவொளி முன் பொரு ளிழந்து போனதய் நம் பள்ளிச் சிறார்களும் உணரும் அளவுக்குப் பக்குவம் பெற்றிருக்கிறார்கள்! அண்டத்தய்த் தாங்கும் ஆதிசேடன், சூரிய சந்திரன்களய் விழுங்கும் தெய்வீகப் பாம்புகள், பேய், பிசாசு, குட்டிச்சாத்தான் போன்ற மெய்ஞானப் பொருள்களெல்லாம் இன்று பெரியார் ஊழியில் அஞ்ஞானப் பொருள்களாகி அகன்று போயின!

ஒன்பதாம் நூற்றாண்டில் வான ஊர்தியா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து அணுக்குண்டு தோன் றிய இக்காலம் வரையில் நிகழ்ச்சிகள் யாவும் வரலாறு என்ற சங்கிலியால் வரிசயாகப் பின்னப்பட்டுள்ளன. நம் வடவேங்கடம் தென்குமரி ஆயிடய் தமிழ் கூறும் நல்லுலகத்தில், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னால் எவரும் ஒரு பிள்ளயாரயும் கூடப்பிடித்து வய்த்து விட முடியாது!

உண்மய் இவ்வாறு இருக்க, வந்தியிட்ட பிட்டய் வாங்கி, வாயில் போட்டுக் கொண்ட சிவபெரு மான் டிரான்சிஸ்டர் டேப் ரிகார்டரய்க் காதில் மாட்டிக்கொண்டு-ஆகா, ஊகூ என்ற இரு கந்தர்வர்களய்க் கடுக்கன் களாகக் காதில் அமர்த்திக் கொண்டு-சுவய்த்தார் என்றால் நம் பல்கலய்க் கழகங்களில் வரலாற்றுப் பிரிவயே இழுத்து மூட வேண்டியதுதான்! கந்தர் வர்களய்க் காதில் பிடித்துப் போட்டுக் கொண்டால் பாட்டுக்கேட்கலாம் என்ற கற்பனையாய்ச் சுவய்ப்பதோடு அமய வேண்டும்- ஆம்.

தமிழ் ஓவியா said...


இலந்தய்க் கொட்டயய் விழுங்கிவிட்ட சிறுவர்கள் அது கொப்பூழ் வழியே மரமாக முளய்த்து வரும்போது இலந்தய்ப் பழங்களய் பறித்துப் பறித்துச் சாப்பிடலாம் என்று சொல்லி மகிழ்வது போல! அதனய் விடுத்து, ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்க தேவரின் சிந்தாமணிக் காப்பியத்தில் வரும் மயில் பொறி, அதன் திருகாணியினய் வல மாகத் திருகப் பொங்கி விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடய்ச் செல் வதயும் இடமாகத் திருகக் கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருப்பதயும் கண்டு விசயாலய சோழன் காலத் திலேயே தமிழர்கள் வான ஊர்தியில் பறந்து கொண்டிருந்தார்கள் என்று பேசுவது நம்மய் எங்கே அழய்த்துச் செல்லும்?

அறிவியல் உள்ளத்தோடு, காற்றினும் கனமான பறவய்கள் எழுந்து, பறந்து மீண்டும் தரய் இறங்குவதய், தம் உடல் எடயினயே துணயாகக்கொண்டு வீழ்ந்து தாழ்ந்து கால் குவித்து நிலத்தில் இறங்குதல்-ஆகிய செயல்களய்க் காப்பிய ஆசிரியர் காட்சித்திறனோடு நுட்ப மாகக் கண்டிருக்கிறார் என்று பேசுவ தன்றோ ஆசிரியரின் பெருமய்யும், குழந் தய்களின் அறிவயும் வளர்ப்பதாக அமயும்?

திரிசங்கு சொர்க்கமா? தென் சிலுவய் மீன் கூட்டமா?

பழங்காலத்து கிரேக்க மக்கள் தம் புராணங்களில் வரும் மாந்தர்கள் அனய்வரயும் வான் வெளியில் நிலயாகக் குடியேற்றி விட்டார்கள் என்பது வானநூல் படிப்போருக்குத் தெரியும்! இன்றும், எர்க்குலிஸ், பெர்சியஸ், ஆண்ட்ரோ மீடியா, ஓரியன் போன்ற பெயர் கொண்ட விண்மீன் கூட்டங் களயும், மெர்க்குரி, வீனஸ், ஜபிடர் போன்ற கோள்களயும் வானத்திரயில் ஓவியமாகத் திகழ்வது கண்டு சுவய்க்கின்றோம்!

அவ்வாறே நம் முன்னோரும் தம் புராணப் பாத்தி ரங்களின் பெயர் கொண்டு அகத்தியர், வசிட்டர், அருந்ததி, புதன், சுக்கிரன், குரு என்றெல்லாம் விண் பொருள்களப் அழய்த்தனர். நம் தெற்கு வானத்தில் இருகய்களயும் விரித்தப்படி தலய்கீழாக வீழும் மனிதன் போல் காட்சி தரும் திரிசங்கு விண்மீன் கூட்டத்தின் வரலாறும் அவ்வளவே!

அதனயே வேறு கதயும், காரணமும் கூறித் தென் சிலுவய் என்று மேல்நாட்டு மக்கள் பெயரிட்டு அழய்க்கின்றனர்! இன்றய புராணப் பிரசங்கிகள் கூறுவது போல் உண்மயிலேயே புராணக் காலத்தில் ஒரு வான்வெளி நிலயத்தில் திரிசங்கு இருந்திருப்பானானால், பூமியில் தன் மகன் அரிசந்திரனய் விசுவாமித்திரன் படாதபாடு படுத்தியபோது ஒரு வானொலிச் செய்தியாவது அனுப்பி யிருப்பானே?

இராமன் அம்பு ஒரு பூமராங்?

இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் வீசி எறியும் பூமராங் என்ற கருவி அதன் இலக்கய்த் தாக்கிவிட்டுப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவதய்க் காண்கிறோம். சர்க்கஸ் கொட்டகய்களிலும் 'ட' வடிவில் கத்தரித்து எடுத்து வீசும் அடடய்த் துண்டுகள் காற்றில் சறுக்கியபடியே சென்று மீண்டும் கய்க்கு வந்து சேர்வதய்க் காண்கிறோம்!

துப்பாக்கி, பீரங்கி நடய்முறய்கு வாராத அந்நாளில் ஆஸ்திரேலிய பழங்குடியினர் போன்று பூமராங் பாணியில் இராமன் இராவணன் மீது ஏவி விட்ட அம்பும் அவனய்க் கொன்று மீண்டும் இராமனது அம்பு அறாத் தூணிக்குத் திரும்பியது என்பதய்க் கம்பர், ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும் ஆசி கூறத் தூர்க்கின்ற மலர்மாரித் தொடரப் போய்ப் பாற்கடலில் தூய் நீராடித் தேர்க்குன்றம் அனயரன் தன் செழும் குருதிப் பெரும் பரவய்த் தரய் மேல் சென்று, கார்க்குன்றம் அனயரன் தன் கடுங்கணய்ப் புட்டில் நடுவில் கரந்ததம்மா? என்று கூறும்போது பாற்கடல், குருதிக்கடல் என்ற கற்பனய்ச் சொற்களயும், ஆளுவதய்க் காண்கிறோம்;

தமிழ் ஓவியா said...

இந்தக் கடல்களய்த் தாண்டிய இராமனின் கணயய், அட்லாண்டிக் பெருங்கடலயும், பசிபிக்பெருங்கடலயும் கடந்து கண்டம் விட்டுக் கண்டம் தாவிச்சென்று தாக்கும் இன்றைய ஏவுகணய்களுடன் நாம் ஒப்பிட்டுப் பேசுவதும் நல்லதொரு நகய்ச்சுவயே! கண்டம் விட்டுக்கண்டம் தாவும் ஒரு கணய், வாலியின் மார்பில் தய்த்து ஓய்ந்து நின்று விடுமா? இப்படி ஓய வய்ப்பதற்கும் ஒரு பார்முலா அல்லது மந்திரம் இருந்து, அது வாலிக்கு தெரிந்திருக்கும் போலும்!

நளன் அரண்மனயில் டெலிவிஷன் இல்லய்!

அன்னத்தய்த் தன் காதலி தமயந்தி யின் பால் தூதுபோகச் செய்து, தொலய்க்காட்சி வசதி அந்நாளில் இல்லாத காரணத்தால் தன் இ,டத்தில் இருந்தபடி இவ்வளவிற் செல்லுங்கடல் இவ்வளவிற் காணுங்கொல், இவ்வளவிற் காதல் இயம்பும் கொல், என்று தன் சித்த சக்தியால் தூரதர்சனம் செய்து கொண்டிருந்த நளனயும் நாம் அறிவோம்! அதே நிலயில் தான், குருச்சேத்திரத்தில் பாரதப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்திலும் அதன நிகழ்ச்சிகளய்த் தன் அறிவுக் கண்ணால் கண்டு சஞ்சயனும் கண் தெரியாத திருதராட்டிரனுக்கு நேர்முகமாக இருந்து வர்ணனய் செய்து கொண்டிருந்தான்!

இந்த அடிப்படய் புரியாமல், இன்றுள்ள தொலய்க் காட்சிப் பெட்டிக்கு அருகில் அனுபவத்தால் முதிர்ந்த, தாடி நரய்த்த தாத்தாவய் உட்காரவய்த்துக்கொண்டு மகாபாரத காலத்திலேயே தொலய்க்காட்சிப் பெட்டி இருந்தது என்று பேசும் அரய்வேக்காட்டுப் பேரனய் உடனடியாக மனநோய் மருத்துவமனய்க்கு அனுப்பிவய்க்க எந்தத் தாத்தாவும் தயங்க மாட்டார்!

மின்சாரம் இல்லாத மகாபாரதக் காலத்துத் தொலய்க்காட்சிப் பெட்டி இன்றய நம் அடுக்களயில் உள்ள அஞ்சறய்ப் பெட்டியாகத் தான் செயல்படும்! உப்பு, புளி, மிளகாய் போட்டு வய்த்துக் கொள்ளலாம். பீஷ்மரோ, துரோணரோ மின்சாரம் பற்றிப் பேச்சொடு பேச்சாக ஏதேனும் நழுவவிட்டிருந்தால் கூட, அரக்கு மாளிகய் கட்டிய நம் புராணக்காலப் பொறியியிலார் தொலய்க்காட்சி பெட்டியயும் செய்து அங்காடிக் கடய்களில் அடக்க விலய்க்கு நகர்த்தி விட்டிருப்பார்களே!

தட்டய் உலகத்தில் சாட்டிலயட்!

இன்று நம் பூமி உருண்டையாக இருப்பதால் விஞ்ஞானிகள் விட்ட சாட்டிலயட்டுகளும் அதனய்ச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கின்றன. அதனால் கடல் கடந்தால் சாதிப்பிரஷ்டம் என்ற நம் சாஸ்திரத்தயும் மீறி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் வீராங்கனய் ஒருத்தி, இந்தியாவில் தன் வீட்டிலிருக்கும் கணவனுடன் மிகத்தெளிவாகப் பேச முடிகிறது. ஆனால், புராணக்கால நடய்முறயில் ஆதிசேடனால் தாங்கப் பட்ட தட்டய் உலகமே இருந்தது என்பதய் மறுக்க எந்த மெய்ஞானிகளும் வீரத்துடன் முன்வர மாட்டார்!

தமிழ் ஓவியா said...

எல்லயற்ற தட்டய் உலகத்தய்ச் சுற்றி, யார் தாம் சாட்டிலயட் விடமுடியும்? எனவே, முதலய் வாய் அகப்பட்டுக் கொண்ட கஜேந்திரனின் ஆதிமூலமே என்ற குரலய் வய்குந்தத்திற்கு எடுத்துச் செல்லவோ, துர்ச்சாதனன் கய்யில் சிக்கிக் கொண்ட துரோபதயின் இதயகமலவாசா என்ற குரலய்த் துவாரகய்க்கு எடுத்துச் செல்லவோ சாட்டிலயட் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது! இருந்தாலும், திருமால் உடன செயல்பட்டு முதலயய்க் கொன்று ஆனயய்க் காத்தார்;

கண்ணன் செயல்பட்டுத் துர்ச்சாதனனய்ச் சோர்ந்து விழச் செய்து துரோபதயய்க் காத்தான் என்ற புராணம் கூறுவது கடவுள் எந்நேரத்திலும் பக்தர்களின் பக்கத்திலேயே இருப்பார் என்ற கருத்தய் வற்புறுத்தவே! கடவுள் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறய்ந்திருக்க வேண்டு மன்றோ? எங்கோ துவாரகயில் கண்ணன் இருந்தான் என்று சொல்லி அஸ்தி னாபுரத்திலும் அமரிக்காவிலும் அவன் இல்லய் என்ற கடவுள் தத்துவத்துக்கு மாறான கருத்தய் யாரும் உண்டாக்கி விடாமல் இருப்பாராக! பக்கத்திலிருப் பவருக்குச் செய்தி தெரிவிப்பதற்குச் சாட்டிலயட் விடுவது விஞ்ஞானமா குமா? மெய்ஞ்ஞானம் தான் ஆகுமா?

வட திசய்ச் செலவா? வான் வெளிச் செலவா?

நம் பூமியுருண்டயின் நடுக்கோட்டுப் பகுதியில் இருப்போருக்கு ஆண்டு முழுவதும் இரவும், பகலும் சம நீளங் கொண்டனவாக இருக்கும். சுழலுகின்ற நம் பூமி தன் துருவங்களய்ச் சாய்த்தபடி சூரியனய்ச் சுற்றி வருவதால், ஆண்டில் ஆறுமாதம் சூரியன் வட திசையிலும், ஆறுமாதம் தென் திசையிலும் இருப் பதாக நமக்குத் தோன்றுகிறது.

சூரியன் வடதிசையில் இருக்கும் காலத்தில், வடக்கே நாம் செல்லச்செல்ல பகற்காலம் நீண்டு இரவுக்காலம் குறய்ந்து கொண்டு போவதய்க் காண லாம். வட கோடிக்கே சென்றுவிட்டால் இரவே இல்லாது ஆறுமாத காலம், பகலாகவே இருக்கும்! பின்னர் சூரியன் தென் திசய்க்குத் திரும்பும்போது, நிலமய்கள் முற்றிலும் தலய் கீழாக மாறிவிடும்!

ஆறு மாதம் பகல் இருந்த கோடியில் ஆறுமாதம் இரவும், ஆறுமாதம் இரவு இருந்த கோடியில் ஆறுமாதம் பகலும் வந்து விடும். ஆம், பகல் நீண்ட பகுதிகளில் இரவு நீளும்! இதய் அறிய எவரும் வான மண்டலத் திற்குச் செல்ல வேண்டுவதில்லய்; பூமியில் சற்று வடக்காகவோ, தெற் காகவோ சென்றாலே போதும்!

திபெத்தியரே நம் தேவ கணங்கள்!

இமயா நாட்டத்து மங்கோலிய இனத்தைச்சார்ந்த பழுப்பு நிற மக்களய்த் தேவகணங்கள் என நம் முன்னோர்கள் அழய்த்தனர். அவ்வினத்துப் பெண் களின் நடனத்தய், அரம்பய் ஊர்வசி, திலோத்தமய், மேனகயரின் நாட்டியம் எனப்பாராட்டி அரங்கேற்றியும் மகிழ்ந்தனர்! மலய் மகளய் மணந்த முழுமுதற் கடவுள் அமர்ந்த கயிலாயத்தயும் திபெத்தில் கண்டனர்.

திபெத்துக்கும் வடக்கே மேலும் மேலும் ஊடுருவித் தேவர்களின் நாட்டில் தொடர்ந்து சென்றால், ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு கொண்ட உண்மயான தேவர் உலகம் (வட துருவம்) இருக்கும் என்றும் ஊகித்து உணர்ந்தனர்! இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லய்!! பூமியின் நடுப்பகுதி மனிதர்களின் 365 நாள் காலம் கோடிப்பகுதி தேவர்களுக்கு-இன்றய எஸ்கிமோக்களுக்கு ஒரு நாள்! இப்பொழுது தென் துருவத்திற்கும் நாம் சென்று திரும்பிவிட்டோம்; நம் தேவர்களில் ஒரு பகுதியினரய் இனி அண்டார்ட்டிகாவிலும் குடியேற்றி மகிழலாம்!

வடலூர் வள்ளலார் வழி காட்டுகிறார்!

கலயுரய்த்த கற்பனயய் நிலயெனப் பேசிக் குழப்புவது பள்ளியிலும், கல்லூரிகளிலும் நம் இளய்ஞர்கள் படிக்கும் பாடங்களய்ப் பயனற்றதாக்கும் ஒரு முயற்சியாகும்! சமுதாயத்தின் அடித்தளத்தில் முளய்த்து உருவான இராமலிங்க அடிகளாரும், அம்முயற்சி அடியோடு கிள்ளி எறியப்பட வேண்டியதாகும் என்பதய்க் கலய் உரய்த்த கற்பனையே நிலயெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப்போக! என கடிந்துரய்க்கின்றார்!

ஆம், சதுர்மறய் ஆகம சாத்திரம் எல்லாம் சந்தய்ப் படிப்பு! நம் சொந்தப் படிப்போ? என்ன செய்வது? தந்தய் பெரியார் கூறுவது போல் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் பாலும் சுற்றுச்சார்பு தான் காரணம். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தய்களில் ஒன்றய் இந்நாட்டிலும், ஒன்றய் இங்கிலாந்திலும் வளர்த்துப் பார்த்தால்;

இங்கு வளர்ந்த மகனய் விட இங்கிலாந்தில் வளர்ந்த மகன் பல மடங்கு அறிவு விசாலம் அடய்ந்த வனாக இருப்பான்! அவன் எதயும் அறிவியல் கண் கொண்டு காண்பான்; இவன் எதயும் மதக்கண் கொண்டு பார்ப்பான்! ரோகிணி விண்வெளியில் ஏவப்படும் நேரத்தில் இன்று ரோகிணி நட்சத்திரம் என்று பேசுவது தான் நேர்முக வர்ணனயா? இதற்குத்தானா நம் எம்.எஸ்.சி பி.எச்.டி படிப்பும்?

வாழ்க அறிவியல்!
வளர்க அறிவியல்!!

தமிழ் ஓவியா said...


சிவன்கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!


சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல் லிக்கொள்ளும் சுமார்த்தப் பிரா மணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால் நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவ தாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் ஜாதி அடிப்படையில் அல்லாமல், பிரம் மத்தை உணர்ந்தவன் என்ற அடிப் படையில் தான் வழங்கப்பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி, தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சப்தகல்பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டு ஜீவிப்போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப் பட்டுள்ளது. வாழ்க் அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் ஜாதியின் பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து.

பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பரங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தீங்கு உலகுக்காம் என்றதேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும், சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப்பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமானுடைய அய்ந்து முகங் களிலிருந்து தோன்றி, சிவபிரானையே வழிபடுகிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களிலிருந்து தோன்றிய பிர மத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவசிருஷ்டியின் பாற்பட்ட சிவப் பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன்றி சுமார்த்தப் பிராமணர் சிவாலயங்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே, சிவாலயங்களில் பரார்த்த பூசை ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக்கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக்கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதிசைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதிசைவர். ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர்.

இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம் மணோத்தமர் சர்வ காரியங்களிலும் சிவயாகத்திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதிசைவர்களே அதிகாரமுடையவர். ஏனையோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு பக்கம் 31-32)

- மகராசன் குழு அறிக்கை, பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்!


1. அடோப் (ADOBE)

இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவ ரான ஜான் வார்நாக் அமெரிக் காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE):

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! "Bite into an Apple" என்பதுதான். இது தான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே.

எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய் திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம்.

அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE):

சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண் ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்படவில்லை.


தமிழ் ஓவியா said...

ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒருமுதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google" எனத் தவறாக எழுதப்போய், தானம்கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL):

இந்த நிறுவ னத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழி யாக இமெயில் களைப் பெறும் வழி குறித்து முத லில் யோசித் துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார்.

ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப்பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம்.

HOTMAILஎன்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL)

இந்த நிறு வனத்தை நிறுவிய வர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர் களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது.

அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங் கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT):

பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம்.

அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறு வனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக் கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப் போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக் களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO):

தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார்.

இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந் தெடுத்தனர்.!!!

- இணையத்திலிருந்து ஆதவன்

தமிழ் ஓவியா said...


மனிதனும் மகேஸ்வரனும் ஒண்ணு...!

மனிதர்கள்

பிறப்பிலேயே

அய்ந்து வர்ணமாம்...?

பிராமணன்

சத்திரியன்

வைசியன்

சூத்திரன்

பஞ்சமன்

என்று..!

மகேஸ்வரனும்

பிறப்பிலேயே

அய்ந்து வர்ணமே!

பஞ்சலோகம்

வெண்கலம்

செம்பு

கடுங்கல்லு

களிமண்ணுயெனும்

சிலைகளாய்!!

கோ. கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார்

நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார் சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் திருக் கண்டேசுவரத்தைச் சேர்ந்தவர் ஜம்புலிங்க முதலியார். இவர் கடலூர் நகராட்சித் தலைவர், ரெயில்வே வாரியத் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது சிறப்பு மிக்க பொது நலப்பணிகளைப் பாராட்டி அப்போதைய ஆங்கில அரசு, ராவ் பகதூர் என்ற சிறப்புமிக்க விருதினை வழங்கிக் கவுரவித்தது.

மிகப்பெரிய நிலக்கிழாரான இவர், தனக்கு சொந்தமான வயலில், 1934ஆம் ஆண்டு ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது கறுப்பு நிற பொருள் தண்ணீருடன் கலந்து வெளியேறு வதைக் கண்டறிந்து அத்தகவலை அப்போதைய ஆங்கில அரசின் மண்ணியல் துறைக்கு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அப்போதைய ஆங்கில அரசு, சுரங்கப் பொறியாளர் களையும், மண்ணியல் நிபுணர்களையும் நெய்வேலிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அப்பகுதியின் அடியில் இருக்கும் தனிமம் நிலக்கரி குடும்பத்தின் ஒரு வகையைச் சேர்ந்த பழுப்பு நிலக்கரி என்று கண்டறியப்பட்டது.

ஜம்புலிங்க முதலியார் சுரங்கம் வெட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக தனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கிய துடன் அவரது சீரிய முயற்சியின் மூலம் அப்போதைய சென்னை மாகாண முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் மூலம், 1953ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசின் தொழிற் துறையால் நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன் கொண்டது.

பின்னர் இந்த நிறுவனத்தை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொணர்ந்து, 14.11.1956ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனம் உதயமானது. பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வால் 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

இன்று, என்.எல்.சி. நிறுவனம் ஆண்டிற்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்து, ஒரு மணி நேரத்தில் சுமார் 27லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு பன்மடங்காக வளர்ச்சி பெற்றுள்ளது. நவரத்னா தகுதி பெற்றுள்ள இந்த நிறுவனம் உருவாக வித்திட்ட ஜம்புலிங்க முதலியாரை கவுரவப்படுத்தும் வகையில் நெய்வேலி நகரியத்தில் உள்ள ஒரு பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.

அவருக்கு மேலும் புகழாரம் செலுத் தும் வகையில் நெய்வேலி நகரியத்தில், நான்கு வட்டங்கள் சந்திக்கும் மிக முக்கிய பகுதியான இரட்டை பால சதுக்கத்தில் ஜம்புலிங்க முதலியாரின் முழு உருவ வெண்கலச் சிலை ரூ. 9 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ளது. அவரது சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலி யாரின் பேரன் அமரன், பேத்தி ரஞ்சிதம் மற்றும் அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நெய்வேலி நகரியத்தின் 22-ஆவது வட்டத்தில், ரூ. 1 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ள நவ ரத்னா பூங்காவை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்பட்டுள்ள இப்பூங்காவில் சிறுவர் களுக்கான விளையாட்டு வசதிகள் மட்டுமல்லாது 54 வகை அறிவியல் உபகரணங்கள் அடங்கிய அறிவியல் பூங்காவும் இங்கு விரைவில் அமைக் கப்பட உள்ளது. 54 வகை அரிய வகை மூலிகைப் பண்ணை இங்கு அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சிகளில் என்.எல்.சி.இயக்குநர்கள் உயர் அதி காரிகள், தொழிற்சங்கம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். எல்லாம் சரிதான்; அவர் நீதிக்கட்சிப் பிரமுகர் என்பதை இருட்டடித்தது - ஏன்?

தமிழ் ஓவியா said...


மாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊற வைக்கும் சுவை கொண்டது மட்டு மல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸி டென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சி கரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக் கொள் கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கருவுற்ற பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத் துடன் ரத்த சோகை உள்ளவர் களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப் பிடலாம் என்பது குறித்து மருத் துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர் களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத் திற்கும் உதவுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டை யிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு!


நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கிலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஸ்டீபன்சன் என்ற கிருத்தவர் நீங்கள் மோட்டார் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஹென்றிபோர்டு என்ற கிருத்தவர்.

நீங்கள் கேமிராவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். அதனால் திரைப் படம் பார்க்காதீர்கள் நீங்கள் கிராமபோனை பயன்படுத்தாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். நீங்கள் வானொலியைக் கேட்காதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிருத்தவர்.

நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிருத்தவர். நீங்கள் அச்சுப்பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக்ஸடன் என்ற கிருத்ததவர். நீங்கள் பவுண்டன் பேனாவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மென் என்னும் கிருத்தவர்.

நீங்கள் டயரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிருத்தவர். நீங்கள் டெலிபோனைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிருத்தவர் நீங்கள் தையல் மிஷன் என்ற கருவியைப் பயன் படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தின்மானியர் என்ற கிருத்தவர்.

நீங்கள் டைப்ரைட்டரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிருத்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி யாகிறது. இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில், அது முஸ்லீம் நாடு இந்துக்களே! உங்கள் கால் கை உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள் ளாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிருத்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தைச் சேர்ந்த கிருத்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டு பிடித்ததும், கடைப்பிடிப்பதும் இந்து மதம்தான்.

தமிழ் ஓவியா said...


நற்றமிழர் நலிந்து கெட்டது ஏன்?


சென்றபழங் காலத்தில் தமிழ ரெல்லாம்
சேரசோழ பாண்டியரென் றெண்ணிக் கெட்டார்;
பின்புவந்த சாதிமதம் போற்றும் நாளில்
பிறப்பாலே உயர்வுதாழ்வு பேசிக் கெட்டார்;
இன்றைக்கு அரசியலால் பிளவு பட்டு
எண்ணற்ற கட்சிகளாய்ப் பிரிந்து கெட்டார்;
மின்னுகின்ற திரையுலக நடிகர் கட்கு
மண்டியிடும் விசிறிகளாய் மேலும் கெட்டார்.

பிழைக்க வந்த பார்ப்பனர்கள் மேலோ ரென்றும்
பிறவியில்தாம் இழிவென்றும் பணிந்து கெட்டார்;
உழைப்பையெலாம் வஞ்சகர்கள் சுரண்டக் கண்டும்
ஊழ்வினையின் பயனிதென்றே எண்ணிக் கெட்டார்;
தழைத்திருந்த தமதுஇனம் காலப் போக்கில்
தாழ்வுற்றுப் போனதறி யாது கெட்டார்;
குழைப்பவனின் காலடிமண் கிடத்தல் போல
கொடுமையினைத் தடுக்காமல் குனிந்தே கெட்டார்.

கண்டகண்ட கோயிலெலாம் அலைந்தும் எங்கும்
கடவுளையே காணாமல் வருந்திக் கெட்டார்;
தெண்டமாக நாடுஎங்கும் கோயில் கட்டி
தெய்வமேதும் வராதபெருந் துயரில் கெட்டார்;
பெண் பக்தைக் கற்பதனைத் திருடி யங்கே
பெருங்கொடுமை நடப்பதறி யாமல் கெட்டார்;
அண்டமுட்டும் ஆலயங்கள் உயிராய்க் காப்போர்
அறிவைமட்டும் காவாமல் தவறிக் கெட்டார்.

தன்மானம் தமிழருக்கு உயிரின் மூச்சு;
சமத்துவமும் சுதந்திரமும் இரண்டு கண்கள்;
அன்பான உடன்பிறப்பு உலகோ ரெல்லாம்;
அனைவருமே ஒருகுலமே, மேல்கீழ் இல்லை;
இன்பமெலாம் பகுத்தறிவோ டியைந்த வாழ்வு;
இவைதானே தமிழரது இதய கீதம்!
நன்மைஇதைப் போற்றாமல் நடந்த தாலே
நற்றமிழர் இவ்வுலகில் நலிந்தே கெட்டார்!

பாவலர் வீ. இரத்தினம், பெங்களூரு

தமிழ் ஓவியா said...


பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்


பதிப்பாசிரியர் : முனைவர் இராதா செல்லப்பன்
தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சிராப்பள்ளி -_ 620 024
பதிப்பு ஆண்டு: 2008
76ஆம் பக்கத்தில் இருப்பது:

நல்வாழ்வின் புள்ளி விவர அளவுகோல்கள்

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் (infant Mortality Rate, IMR) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (Under Five Mortality Rate, UMR) என்பவை ஒரு நாட்டின் சுகாதாரப் பணிகளின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

50 வருடங்களுக்கு முன்பு, பிறந்த 1000 குழந்தைகளில் 200 முதல் 250 குழந்தைகள் ஒரு வயதிற்குள் இறந்து போயின.

வயிற்றுப்போக்கு, சத்துணவுக் குறைபாடு, நுரையீரல் தொற்று (Diarrohea, Malnutrition, Respiratory Infection)
ஆகியவை குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணங்கள்.

ஆனால், தற்போது பல அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த இறப்புகள் மிகவும் குறைந்துவிட்டன.

தற்போது இந்தியாவில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு (IMR) 1000-க்கு 67.

தமிழ்நாட்டில் 1000-க்கு 53, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 1000-க்கு 14,
உத்தரபிரதேசத்தில் 1000க்கு 110, இந்தியாவில் 1IMR 1000க்கு 30க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிக்கோள்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1960-இல் 1000-க்கு 242 ஆக இருந்தது.

இது மிகவும் குறைந்து தற்போது 91ஆக குறைந்துள்ளது.

இவை நமது தற்போதைய மருத்துவ வளர்ச்சியின் வெற்றிப்படிகள்.

தொற்று நோய்கள் (Infectious Diseases), வயிற்றுப்போக்கு நோய்கள் மூலம் இறப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

கொள்ளை நோய் என்று அழைக்கப்பட்ட பெரியம்மை (Small Pox), 1977ல் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

அம்மை நோய் தடுப்பு ஊசியின் மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

தகவல்: க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


சூத்திரமேட்டுத் தெரு!


ஆபரேட்டர் கோவிந்த ராசன் என்று கழகத் தோழர்களாலும், பொது மக்களாலும் அன்பொழுக அழைக்கப்பட்ட பெரியார் பெருந் தொண்டர் திருவை யாறு நகர திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் விளம் பரப் பிரிவில் ஆப்ரேட்டராகப் பணியாற்றியவர்.

அரசு பணியில் இருந்த போதும், கருஞ்சட்டை அணிந்து இயக்கப் பணி களில் தீவிரமாக ஈடுபட்ட அழுத்தமான பகுத்தறிவுக் கொள்கைக்குச் சொந்தக் காரர்!

அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு நேரடியாகக் கழகப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு சிறைச் சாலைக்கும் சென்றவர்.

தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்களையும் உடலையும் (தஞ்சை மருத் துவக் கல்லூரிக்கு) கொடை யாக அளிக்க முறைப்படி ஏற்பாடுகளைச் செய்து வைத் திருந்தார். அதன் படியே கொடையும் அளிக்கப்பட்டது.

தான், வாழ்ந்தபோது மாத்திரம் அல்ல; மரணத் திற்குப் பிறகும், தாம் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைக்குச் சேதாரம் எந்த வகையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் செயல்படுத்தும் இந்தத் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு உலகத் தில் ஈடு இணை ஏது?

நேற்று திருவையாற்றில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி - பொதுக் கூட்டமாக - பிரச்சார நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரி வித்த தகவலும் - கருத்தும் புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

மானமிகு ஆப்ரேட்டர் ப. கோவிந்தராசன் அவர்கள் வாழ்ந்து வந்த அந்தத் தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா? சூத்திர மேட்டுத் தெரு என்பதாகும்.

சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று பொருள். இப்படி ஒரு பெயர் பச்சையாக வைக்கப்பட்டு இருந்தது.

பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் கோவிந்த ராசன் போன்ற பெரியார் தொண்டர்கள் போராடி ஊராட்சி மன்றத்தில் தீர் மானம் நிறைவேறச் செய்து அதனைத் தமிழர் மேட்டுத் தெரு என்று மாற்றினார்கள் என்பது சாதாரண தகவலா?

திராவிடர் கழகம் என்ன செய்தது என்று கேட்கும் செவிட்டுத் தமிழர்களுக்கு இதனைக் காணிக்கையாக் குகிறோம். திருவையாறில் இன்னொரு தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா?

பிராமண மேட்டுத் தெரு என்பதாகும் - இன்றும் அதே பெயர்தான்! பார்ப்பனர் அல்லாதாரே, தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்


சென்னை, மே 11- இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தி.மு.க. தலைவர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப் பதாவது:

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர் களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன் வெல்த் மாநாட்டினை இலங்கை யிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டு மென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரிய வில்லை. டெசோ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற் கான விளக்கத்தையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அதற்கு முன்பே, 25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங் கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக் காரணம் கொண்டும் அங்கு நடத் திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் காமன்வெல்த் மாநாட் டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடு கள் நடைபெற்ற வருகின்றனவாம். ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

பல்வேறு மனித உரிமை அமைப் புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்தி ரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட மைப்பு என்று ஒன்று உருவாக்கப் பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக் கணித்திருப்பது என்பது முக்கிய மான தகவலாகும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலி யாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்தி ரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காமல்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப் பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடைபெற்றபோது; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண் டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மா னத்தில். காமன் வெல்த் அமைப் பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்;

தொடர்ந்து இலங்கையில் நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத் துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ் ஓவியா said...


இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று அய்.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவின் அறிக் கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன் றாகவே உள்ளது. இனப் படு கொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி யுள்ள ராஜபக்சேயை, நம்பிக்கை யுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென டெசோ தொடர்ந்து கோரி வருகிறது.

காமன்வெல்த் மாநாடு இலங்கை யில் நடைபெற்றால், அதன் காரண மாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூடுமென்றும்; வலிமை யான கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன. இந்த நிலையில் இலங் கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயா னால், அங்கே நடைபெற்ற இனப் படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும்.

எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத் தோடு ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு;

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கை


மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

(விடுதலை, 16.10.1960)

தமிழ் ஓவியா said...


தேவை விழிப்பு!


19.4.2013 விடுதலை வெளியூர் இதழில் மயிலாடன் அவர்கள். ஒற்றைப்பத்தி பகுதியில் எழுதிய பலே விவாஹம் என்ற செய்தியினைப் படித்துப் பார்த்தேன்.

என் நினைவு 65 ஆண்டுகட்கு முன்பு - அன்றைய விடுதலை இதழில் படித்த செய்தியை நோக்கிப்பறந்தது. அன்றும் இதே கூத்து - அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விவாகம் செய்து வைக்கப் பட்ட - பத்திரிகையை அப்படியே வெளி யிடப்பட்டிருந்தது. அரசப்பனுக்கும் - வேம்பு அம்மனுக்கும் என்ற பெயருடன் பத் திரிகைச் செய்தி - அதைப்பற்றிய குத் தூசியில் பலமான கிண்டலுடன் கூடிய கண்டனம்.

பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றவர்களின் அற்புத பணியும் ஆசிரியர் போன்றவரின் கடுமையான உழைப்பும் இந்த தமிழ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தும் இது போன்ற மடமை நிகழ்வுகள் நடப்பது கேலிக் கூத்தாகவே உள்ளது. நம் அனைவரின் உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. ஒரு பக்கத்தில் நம்முடைய படை செல்லும் - பயணமும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் திட்டமிட்டே இது போன்ற மூட செயல்களை ஊதிப் பெருக்கும் ஊடகங்களும் இருப்பது குறித்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பதை திருமண அழைப்பிதழ் - மன்றல் அழைப்பிதழ். வாழ்விணையர் அழைப்பிதழ் என்றெல்லாம் - வளர்ந்து வருகின்ற கால கட்டம். நம்பிக்கையோடு இருக்கும் வேளையில் - பத்தாம் பசலியும் - புறம் தாங்கி வீடணர்களும் செய்யும் சேட் டைகள் குறித்தும் விழிப்பாக செயல்வட வேண்டும் என்ற எச்சரிக்கையும் இதன் மூலம் நமக்கு ஏற்படுகிறது.

காரிருளால் கதிரவனை மறைக்கபோமோ?

கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ?

என்று மனதை தேற்றித் கொள்வதேன்

- வேலை பொற்கோவன்
வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில்
தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை சட்டமன்றத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் சுபா குற்றச்சாட்டு

சென்னை, மே 11- தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் - அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும், இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு பின்பற்றாததால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சட்டமன்றத்தில் நேற்று (10.5.2013) பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் ஆர்.சுபா குற்றச்சாட்டை கூறினார்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-

தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது. அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் பேசியது:-

பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.

ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.

அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கு வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழ் ஓவியா said...

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்
புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியை சரியாய்ச் சொன்ன பெரியார் பிஞ்சுகளுக்குத் தமிழர் தலைவர் பரிசு!


புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியைச் பிழையில்லாமல் சொல்லும் பெரியார் பிஞ்சுவை பார்க்கும் தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் (10.5.2013)

தஞ்சை, மே 11- பெரியார் பிஞ்சுகளை ஊக்குவிக் கும் வகையில், புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச் சூடியை பிழையில்லாமல் சொல்லுகின்ற பெரியார் பிஞ்சுகளுக்குப் பரிசு என்று தமிழர் தலைவர் அறிவித்தார்.

பெரியார் பிஞ்சு வழங்கும், பழகு முகாம் கடந்த அய்ந்து நாளில், குழந்தைகளைத் தன்னம்பிக் கையின் சிகரங்களாக செதுக்கியிருந்தது. நேற்று (10.5.2013) தமிழர் தலைவர் வருகை தந்தது பழகு முகாமுக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத் திருந்தது. குழந்தைகள் ஆசிரியர் தாத்தாவை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடி

அய்ன்ஸ்டீன் அரங்கத்தினுள் நுழைந்த தமிழர் தலைவருக்குப் பெரியார் பிஞ்சுகள் அனைவரும் சேர்ந்தாற்போல, பழகு முகாமுக்கே உரிய முறை ஓ... என்ற ஓசையை எழுப்பி வரவேற்பு நல்கினர். தமிழர் தலைவரும் மிகுந்த உற்சாகத்துடன், பிஞ்சுகளை எதிர்கொண்டார். அவர் தமதுரையில், புதிது புதிதாக நல்ல கருத்துகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடங்கினார். பிறகு, புரட்சிக் கவிஞரின் புதிய ஆத்திச்சூடியில் அய்ந்தைக் கூறி, அதற்கு விளக்கங்களையும், மாணவர்களிடமிருந்தே பெற்றார்.

அனைவரும் உறவினர், ஆட்சியை பொதுமை செய், இசை மொழி மேலதே, ஈதல் இன்பம், உடைமை பொதுவே என்ற புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடிக்கு, சித்தார்த், தமிழ்நிலா, சத்யபாரதி, நந்தினி, கிஷோர், அஸ்வின் ஆகியோர் முறையே பதில்களைக் கூறி பாராட்டுப் பெற்றனர்.

அதில், சித்தார்த், சத்யபாரதி, அஸ்வின் ஆகியோர் நூற்றுக்கு நூற்றிருபது மதிப்பெண்களை தமிழர் தலைவரிடமிருந்து பெற்று மகிழ்ச்சியில் திளைத் தனர். அதன்பிறகு, இந்த அய்ந்தையும் பிழையில் லாமல் சொல்பவர்களுக்குப் பரிசு என்று அறிவிக் கப்பட்டது. நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மேடையேறிய பெரியார் பிஞ்சுகளில் 18 பேர் சரியாகச் சொல்லி அசத்தினர். அவர்களுக்கு நிறைவு நாளில் இனிவரும் உலகம் புத்தகம் பரிசாகத் தரப்படும் என்று தமிழர் தலைவர் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பதிவாளர் மு.அய்யாவு, பேரா. பர்வீன், பேரா.தவமணி, புதுவை பா.வீரமணி
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மல்லிகா, பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் இளந்திரையன், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, தளிர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கயிறும் கட்ட மாட்டோம், கயிறும் திரிக்கவும் மாட்டோம்

தமிழ் ஓவியா said...

மிழர் தலைவரின் கருத்தைக் கேட்ட பெரியார் பிஞ்சு ஹரிஹரன் கையில் கட்டியிருந்த கயிற்றை அகற்றச் சொன்னார்.

மாலை, முத்தமிழ் அரங்கத்தில் பெரியார் பிஞ்சு கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது தமிழர் தலைவர் குழந்தைகளைய் பார்த்து கயிறு கட்டுதல், நகத்தில் உள்ள அழுக்கு ஆகியவைகளைப் பற்றி சில கருத்துகளைச் சொன்னார்.

பிறகு, தான் சொல்வதை அப்படியே திருப்பிக் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு கயிறு கட்ட மாட்டோம், மூடத் தனத்தின் விளைவாக கட்டும் கயிறு விஞ்ஞானத்திற்கு விரோதமானது. அழுக்கின் மூலம் நோய்க் கிருமிகள் கயிற்றில் தங்கியுள்ளன. ஆகவே கயிறு கட்டமாட்டோம் கையை சுத்தமாக வைத்துக் கொள்வோம். நோய்க்கு ஆளாக மாட்டோம். கயிறும் கட்டமாட்டோம், கயிறும் திரிக்க மாட்டோம் என்று ஓர் உறுதிமொழி எடுப் பது போல சொல்ல குழந்தைகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பெரியார் பிஞ்சுகள் குதிரைமேல் சவாரி செய்து மகிழும் காட்சி. எரியும் நெருப்பு ஓட்டினை தனது கரங்களால் உடைக்கும் பெரியார் பிஞ்சு

முன்வரிசையில் இருந்த ஹரிஹரசுதனை மேலே அழைத்து அவன் கையிலிருந்த கயிற்றைச் சுட்டிக் காட்டி, பிள்ளையார் கதையையும் நினைவூட்டி - பிள்ளையார் = அழுக்கு என்று விளக்கமும் கொடுத்து, உடல் அழுக்கைப் போக்க குளிக்க வேண்டும். மன அழுக்கை போக்க இது போன்ற பழகு முகாம்களில் கலந்து கொண்டு தெளிவு பெற வேண்டும் என்று சொன்னவுடன் ஹரிஹரசுதன், தானே தன் கையிலிருக்கும் கயிற்றை அறுத்துக் கொள்வதாக அறிவித்து பலத்த கைத்தட்டல்களுக் கிடையே மேடையிலேயே கயிற்றை அறுத்துக் கொண்டான்.

பெரியார் பிஞ்சுவிடம் உரையாடும் தமிழர் தலைவர். உடன் பேராசிரியர் தவமணி, பேராசிரியர் பர்வீன் ஆகியோர் உள்ளனர்

இந்நிகழ்ச்சியில் எல்.ஜெயந்தி, என்.விஜி, பூமொழி, விஜயலட்சுமி, ஹேமலதா, ச.அருணாசலம், பேரா.பர்வின், பேரா.தவமணி, அழகிரி, பிரின்சு, முனைவர் அதிரடி அன்பழகன். கவிஞர் கலி.பூங்குன்றன். பா.வீரமணி, டாக்டர் ஹேமலதா, ராசகிரி கோ.தங்கராசு மற்றும் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் பிஞ்சுகளின் ப(கு)ட்டி மன்றம்

முன்னதாக இன்று காலையில் பெரியார் பிஞ்சுகளே கலந்து கொள் ளும் பட்டி மன்றத்திற்கு குழந்தைகளின் முன் னேற்றத்திற்கு பெரிதும் உறுதுணையாய் இருப் பவர் பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற தலைப்பு கொடுக்கப் பட்டு யஷ்வந்த் தலை வராகவும், பிரியதர்சினி, துரை.சக்கரவர்த்தி. ஹரிஹரசுதன், பாவேந் தன், ரமணிக் கண்ணன். பெரியார் செல்வின். சத்யபாரதி, தமிழ்நிலா, எழிலரசன் ஆகியோர் கொண்ட பத்து பேர், பெற்றோர்களே என்ற தலைப்பில் கிஷோர் தலைமையிலும், அஸ் வின், பிரகதீஸ், அதிய மான், முகிலன், நிஷாந்த், தமிழரசி, பகுத்தறிவு, ஹரிணி, பாலாஜி ஆகி யோர் கொண்ட பத்து பேர் ஆசிரியர்களே என்ற தலைப்பிலும் பட்டி மன்றத்திற்கு பெயர் கொடுத்திருந்தனர். நடு வராக முனைவர் அதி ரடி அன்பழகன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

உலக சாதனை படைத்த பட்டிமன்றம்

நடுவர் அனைவரை யும் அறிமுகம் செய்து வைத்து பட்டிமன் றத்தை தொடங்கி வைத் தார். முதலில் அவர், ஒரு அணிக்கு இரண்டு அல் லது மூன்று பேர்தான் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு இரண்டு அணியில் தலா பத்து பேராக இருபது பேர் இருக்கின்றனர். இது உலக சாதனை என்று பலத்த கைத்தட்டல்க ளுக்கிடையே கூறி முத லில் இரண்டு அணித் தலைவர்களையும் பேச அழைத்தார்.

ரோபோ அஸ்ரப் அவர்கள் உடல் தசைகளை மட்டும் பாடலுக்கு ஏற்ப நடனமாடிய நிகழ்ச்சி பெரியார் பிஞ்சுகளிடையே வரவேற்பைப் பெற்றது.

தொடக்கத்தில் இது வெறும் கலகலப்பான பட்டிமன்றமாகத்தான் இருக்கப் போகிறது என்று தான் தோன்றி யது. ஆனால் இரண்டு தரப்பிலும் எதார்த்த மான, உண்மையான வலுவான காரணங் களை எடுத்து வைத்து இரண்டு அணியினரும் கைதட்டல்களை அள் ளினர்.

இறுதியில் நடுவர், இது புரட்சிகரமான பட்டிமன்றம். மூன்று பேர் இருந்தாலும் மூன் றாவது நபருக்குப் பேசு வதற்கு கருத்துகள் இருக் காது. ஏதோ தலைப்புக் காக பேசுபவர்கள். ஆனால் இங்கே 10 பேரும் வெவ்வேறு கருத் துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்திருக்கின் றனர் என்று பாராட்டு மழை பொழிந்தது, தொடர்ந்து அரசாங்கம் கல்வித்துறை தொடர் பான ஆலோசனைகளை அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மற்ற அறிஞர்கள் ஆகி யோரை அழைத்து கேட் பதைவிட இந்த பிள்ளை களை அழைத்துக் கேட் டால் எல்லா பிரச்சினை களும் காணாமல் போய் விடும் என்று அந்த இரு பது இளம் அறிஞர் களையும் இன்னும் ஒரு படி மேலே சென்று பாராட்டினார்.

தீர்ப்பு

அனைவரையும் பாராட்டிப் பேசிவிட்டு, தீர்ப்பு சொல்ல வந்த நடுவர், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உறுதுணை யாக இருப்பவர்கள். ஆசி ரியர்களே! என்று தீர்ப்பு சொல்லி பட்டிமன் றத்தை நிறைவு செய்தார். மாலை முத்தமிழ் அரங் கத்தில், சன் தொலை காட்சி புகழ் கோவை முத்துக்குமரனின் நகைச் சுவை நிகழ்ச்சி, கலை வாணனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி ரோபோ அஸ்ரப்பின் உடல் தசைகளை மட் டும் பாடலுக்கு ஏற்ப நடனமாட வைத்த நிகழ்ச்சி என்று பெரி யார் பிஞ்சுகளின் ஆர் வத்திற்கும் அங்கேயே பயிற்சியும் விருந்தும் கிடைத்தது.

பிறகு அனைவரும் நாளையுடன் பிரியப் போகின்றோமே என்ற கவலையுடன் அவரவர் பெற்றோர்களின் எண் களை பரிமாறிக் கொண்டே உறங்கச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்


திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).

திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்:

1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன?

மானமிகு கோவிந்தராசன் பெரும் பதவியில் இருந்தவரா? பெரும் பணம் படைத்தவரா?

இல்லை, பின் ஏன் இவ்வளவுப் பெரிய மரியாதை கடைசி மூச்சு அடங்கும்வரை கொள்கையில் விடாப்பிடியாக வாழ்ந்து காட்டிய இலட்சிய வீரர் - கருப்புச் சட்டைக்காரர் என்பதுதான் இந்த மரியாதைக்கு முக்கிய காரணம்.

2. தனது மரணத்துக்குப் பிறகும் தமது கண்களைக் கொடையாக அளித்தவர்; மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தமது உடலையே கொடையாக அளித்த மனிதநேயர்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குச் சோதனைக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. நம் நாட்டு மதச் சம்பிரதாயம் மரணத்திற்குப் பின் உடலை எரிக்கவேண்டும்; சாம்பலைக் கரைக்கவேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதால், மருத்துவக் கல்லூரிக்கு உடல்கள் கிடைப்பதில்லை. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் போன்ற பெரியார் பெருந்தொண்டர்கள் செத்த பிறகும் கூட தமது உடல் பிறருக்குப் பயன்படவேண்டும் என்று நினைப்பது எத்தகைய சிறப்பு!

திராவிடர் கழகம் உடற்கொடைக் கழகம் என்ற பிரிவையே வைத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

3. மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று வருகிறான். இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஜாதிபற்றிப் பேசும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது வெட்கக் கேடு!

ஜாதிக்காக ரத்தம் சிந்துகிறான் வீதிகளிலே - இன்னொரு மனிதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்த ரத்தத்தைக் கொடையாக அளிக்கக்கூடாதா?
ரத்தத்தில் ஜாதிப் பிரிவு உண்டா? நாடார் ரத்தம், நாயக்கர் ரத்தம், அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், வன்னியர் ரத்தம் என்று இருக்கிறதா?

மனிதர்களை ஒன்றுபடுத்த நாம் இருக்கிறோம். சிலர் ஜாதியைக் காட்டிப் பிளவுபடுத்தத் துடிக்கிறார்கள். ஜாதிக்காக அரிவாளைத் தூக்குகிறார்கள். தந்தை பெரியார் தொண்டர்களோ ஜாதியை ஒழிக்க அறிவாயு தத்தைத் தூக்குகிறோம்.

4. இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஆப்ரேட்டர் கோவிந்தராசன் குடும்பம் தாழ்ந்து போய்விட்டதா? இந்த அழைப்பிதழைப் பாருங்கள்
எம்.ஏ.,

பி.ஏ.,எல்.எல்.பி.,

எம்.ஏ.,எம்.எல். (மாவட்ட முன்ஷிப்),

எம்.ஏ., பி.எட்., எம்.ஈ.,

ஒரு குடும்பத்தில் இவ்வளவு பட்டதாரிகள்.

பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்ன சாதித்தனர் என்பதற்கு இந்தப் பட்டியல் போதாதா? நூறு ஆண்டு களுக்குமுன் இது சாத்தியமா?

அய்.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 96 பேர் வெற்றி பெற்றது எப்படி? சத்திய சாயிபாபா கையசைப்பிலா வந்தது?

சரஸ்வதி பூஜை கொண்டாடி வந்தோமே - எத்தனை எத்தனை ஆண்டுகளாக? நமது பாட்டி சரஸ்வதிக்கே, சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியாதே!

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியாரும் - அவரின் இயக்கமும்தானே கல்வி உரிமையை உத்தியோ வாய்ப்பைப் பெற்றுத் தந்தது மறுக்க முடியுமா?

5. இவற்றை வன்முறையாலா பெரியார் சாதித்தார்? போராட்டத்திலும்கூட பொது ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த தலைவர் அல்லவா தந்தை பெரியார். பேருந்தை உடைப்பது - எரிப்பது என்றால் - அவை யார் வீட்டுப் பணம்; மக்கள் வரிப்பணம்தானே பாழாகிறது?

கலவரத்தைத் தூண்டி விடுவது சுலபம் - அதனை அடக்க முடியாதவர்கள் போராட்டம் நடத்திடத் தகுதி யில்லாதவர்கள்.

தமிழ் ஓவியா said...

1942 இல் காந்தியார் நடத்திய போராட்டத்தின்போது தந்திக் கம்பிகளை அறுத்தபோதும், தண்டவாளத்தைப் பெயர்த்தபோதும் காந்தியாரையே கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தின் கீழா வெள்ளைக்காரன் சுதந்திரத்தைப் புதைத்து வைத்துள்ளான் என்று கேட்ட தலைவர் பெரியார்.

6. அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அறிவியலுக்கு முன் ஜாதி எடுபடுமா? ஜாதி என்பது புரட்டு - மூளையில் மாட்டப்பட்ட விலங்கு.

வைதிகர்களாக இருந்தால் இந்த நிகழ்ச்சிபற்றி எப்படி பத்திரிகை அடித்திருப்பார்கள் - உத்திரகிரியைப் பத்திரிகை என்று போட்டு அட்டையின் ஓரத்தில் கறுப்பு இருக்கும்.

படிப்பறிவு இல்லாத காலத்தில் துக்க காரியம் என்பதற்காக பார்த்தவுடனேயே தெரிந்துகொள்வதற்காக அப்படி செய்தார்கள்.

இப்பொழுதுதான் கல்வி அறிவு வந்துவிட்டதே இன்றைக்கும் எதற்கு பத்திரிகையில் கருப்பு அடையாளம்?

செத்தவர் சைவராக இருந்தால் சிவலோக பதவி அடைந்தார் என்றும், வைணவராக இருந்தால் வைகுந்த பதவி அடைந்தார் என்றும் போடுவார்கள்.

செத்த பிறகும்கூட பதவி ஆசை மனிதனை விட்டுப் போகவில்லை என்பதுதானே இதன் பொருள்.

இன்னும் சில பேர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் என்று சொல்லுவார்கள்.

ஆத்மா என்றால் என்ன?

அது எங்கு இருக்கிறது?

இது கீதையின் பித்தலாட்டம்.

ஜாதியைப் பாதுகாக்கும் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்தக் காலத்திலே தீப்பெட்டி இல்லை. சிக்கிமுக்கிக் காலம். சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லும்போது, பிணத்தை எரிக்கவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்தே தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவார்கள். இப்பொழுது என்ன வந்தது?

மின்சார சுடுக்காட்டுக்குச் செல்லும்பொழுதுகூட தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவது - எத்தகைய முட்டாள்தனம்?

தமிழ் ஓவியா said...

காரண காரியம் தெரிவதில்லை. ஆட்டு மந்தை மாதிரி முன்னோர்கள் செய்தார்கள். அது தொடர்கிறது- அவ்வளவுதானே!

7. அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே. இப்பொழுது ஆண்களுக்கு 68; பெண்களுக்கு 71 என்று வளர்ந்தது எப்படி? அறிவு வளர்ச்சியால் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சிதானே - இந்த வளர்ச்சிக்குக் காரணம்?

மரபணு ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால், பிறந்த மனிதன் இறக்கமாட்டான் என்ற காலம் வரப் போவதாக மருத்துவ உலகம் கூறுகிறதே! ஆயுள் நீண்டால் மட்டும் போதாது; முதுமை தடுக்கப்படவேண்டும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8. படிப்பு ஒரு பக்கம் வளர்ந்தாலும், பகுத்தறிவு வளரவில்லை என்பது வெட்கக்கேடு.

மறைந்த கருஞ்சட்டை வீரர் கோவிந்தராசன் பட்டதாரி அல்ல. ஆனால், அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் பட்டதாரிகள் முன்வந்தாலும் பதில் சொல்ல முடியாதே! காரணம் அவர் பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளிக் கூடத்தில் படித்துத் தேர்ந்தவர்.

9. நெருக்கடியான நேரத்தில் மெய்க்காப்பாளர் போல செயல்படுபவர். ஓர் இயக்கத்தில் கட்டுப்பாட்டுடன் கொள்கை உரத்துடன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசு ஒரு முன்னுதாரணம்.

உலகில் முதல் பகுத்தறிவுவாதி கவுதம புத்தர். (அதனால்தான் தன் மகனுக்குக் கவுதமன் என்று பெயர் சூட்டியுள்ளார் ஆப்ரேட்டர்).

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்றார் புத்தர்.

அதற்கு விளக்கம் சொன்னவர் பெரியார்.

உன் தலைவனுக்குக் கட்டுப்பட்டு இரு. ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இரு. ஸ்தாபனத்திற்கு உண்மையாக இரு என்பதுதான் இதன் தத்துவம் என்றார் தந்தை பெரியார்.

இதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெரியார் பெருந்தொண்டர்தான் நமது கோவிந்தராசன்.

இவரின் நினைவைப் போற்றும் வண்ணம், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பூங்காவிற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசன் பெயர் சூட்டப்படும் (பலத்த கரவொலி!).

10. இவ்வளவு கருத்துகளையும், தகவல்களையும் எடுத்துக்கூறிய தமிழர் தலைவர், இந்த வட்டாரத்தில் அரும்பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவு கூர்ந்தார். (இது எப்பொழுதுமே தமிழர் தலைவருக்கே உரிய தனித்தன்மை!).

தமிழ் ஓவியா said...

திருவையாறு ஒன்றிய தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் கோதண்டபாணி (எப்பொழுது வந்தா லும் திருவையாறு அல்வாவை மறக்காமல் கொடுப்பவர்) புலவர் சுபாஷ்சந்திரன், புலவர் முருகானந்தம், தஞ்சை இரா.இராசகோபால், வரகூர் நடராசன், தங்கையா, கண் டியூர் கணபதி, கந்தசாமி என்று நீண்ட பட்டியல் உண்டே!

11. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்களின் துணை வியாரைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கைக்கு ஈடுகொடுத்து அருந்துணையாக இருந்த அம்மையாரைப் பாராட்டவேண்டும். வீட்டுக்கு விருந்தினர் திடீரென்று வந்தால், தன் சாப்பாட்டைத் தியாகம் செய்து வந்தவர் களை உபசரிப்பது நம் வீட்டுப் பெண்கள்தானே!

பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராசன் மறைந் தார் என்றாலும், அவர்தம் தொண்டால் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அவரது மகன் கவுதமன், தம் தந்தையாரைத் தொடர்ந்து இயக்கப் பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன் என்று கூறி முடித்தார்.

45 நிமிட நேர உரையில் இந்த ஆழமான விலை மதிக்க முடியாத கருத்து முத்துகளை வாரி இறைத்தார் தமிழர் தலைவர்.

கூட்ட நிகழ்ச்சி

10.5.2013 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு திருவையாறு தேரடி திடலில் பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் அவர்களின் படத்திறப்பு விழா - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது. தொடக்கத்தில் தோழியர் ஜெயமணிகுமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவருக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்!

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் ஸ்டாலின், தஞ்சை இரா.இரத்தினகிரி, மதுரை மாநகர் வாசகர் வட்ட தலைவர் அ.முருகானந்தம், தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ.செயராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றிய பிறகு, கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். கோ.ரமேஷ் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டம் முடிந்து ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்கள் இல்லத்தில் கழகத் தலைவர் மற்றும் பொறுப் பாளர்களுக்கு உணவளித்து உபசரிக்கப்பட்டது.

புலவர் முருகானந்தம் இல்லத்தில்...

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவர் முருகானந்தம் அவர்களின் இல்லத்திற்குக் கழகத் தலைவர் சென்று விசாரித்தார். விடுதலை சந்தாவினை புலவர் முருகானந்தம் அவர்களின் இணையர் அளித்தார்.

நல்லாசிரியர் அப்பாசாமி இல்லத்தில்...

காந்தி நடுநிலைப்பள்ளி நிறுவனர், நல்லாசிரியர் அப்பாசாமி (மறைவு) அவர்கள் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்


ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் செங்கல்பட்டு ஜில்லாவில் பிராமணர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகையில் பல்லா வரத்தில் ஒரு பிராமணர் அக்கிராசனத் தின் கீழ் பிராமணர்களின் நற்சாட்சிப் பத்திரமான வரவேற்புப் பத்திரம் பெற்றுக் கொண்டு தனது திருவாக்கால் மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட் டாருக்கு வயது 22;

நமது நாட்டில் பஞ்சம் அதிகம்; ஆதலால் ஸ்ரீமான் எ.இராமசாமி முதலி யாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள். அவர் அடாத செயல்கள் செய்வதால்தான் அவருக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறேன்., ஸ்ரீமான்கள் எம்.கே. ஆச்சாரியார் வகையறாக் களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்ற பேசினாராம்.

இவருக்கு ஆத்மா இருக்கிறதா என்பதே நமது சந்தேகம். அய்யோ! நமது முதலியாரின் புத்தி இப்படியும் சபலமாய்ப் போகுமென்று நாம் எந்தக் காலத்திலும் எதிர்பார்த்ததேயில்லை. ஸ்ரீமான்கள் எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, ஏ.ரெங்கசாமி அய்யங்கார் வகையறாக்களைவிட - இவர்களது நாணயத்தைவிட - ஸ்ரீமான் எ.இராமசாமி முதலியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? நமது முதலியாருக்கு என்ன கெடுதி செய்தார்; என்ன அடாத செய்கை செய்து விட்டார்? அல்லது அவர்கள் கட்சிக்கும் இவர்கள் கட்சிக்கும் வித்தியாசம்தான் என்ன?

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சீனிவாசய்யங் கார் கோயமுத்தூரில் பேசிக் கொண்டிருக்கும்போது தனது முழு வேலையும் செங்கல்பட்டு ஜில்லா விலேயே இருப்பதாகவும், தன்னுடைய கணங் களை யெல்லாம் அங்கேயே அனுப்பி எப்படியாவது ஸ்ரீமான் எ.இராமசாமி முதலியாரை ஒழித்துவிடப் போவதாயும் உறுதி சொன்னாராம். அவரது திருவாக்கைப் பரிபாலிக்க நமது முதலியார் மர உரி தரித்துக்கொண்டு செங்கல்பட்டு ஜில்லாவுக்குப் புறப்பட்டு விட்டார் போலும்.

அல்லது பிராமண அக்கிராசனமும் பிராமண நற்சாட்சிப் பத்திரமும் நமது முதலியாரைமயக்கிவிட்டது போலும் இந்தப் பிராமணர்களே நமது முதலியாருக்கு வரவேற்புப் படித்துக் கொடுத்தாலும் உண்மை அந்தணர் என்று வெளியில் சொன்னாலும் இவரைப் பற்றி இந்த பிராமணர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களென்பதை ஒரு சிறிதாவது ஞாபகப்படுத்திப் பார்த்தாரா? இப்படி ஒரு ஆசாமியை தங்கள் வசப்படுத்திக் கொண்டு, அவர் வகுப்பார் மீதே வசைமொழிப் புராணம் பாடும்படி செய்து நமது காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகிறோம் என்றுதான் நினைப் பார்கள்.

அவர்கள் வேலை முடிந்த பிறகு திரு.முதலி யாரைக் கண்ணெடுத்துப் பார்ப்பார்களா? சுயராஜ்யக் கட்சியின் அயோக்கியத்தனத்தை ஒரு நாள் வெளியில் எடுத்துச் சொன்ன தற்குத்தானே சாது முதலியார், உண்மை அந்தண முதலியார், மாரீச முதலியாராக மாற்றப்பட்டார்?

மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட்டாருக்கு வயது 22; ஆதலால் எம்.கே.ஆச்சாரியாருக்கு ஓட்டுக் கொடுங்கள், எ.இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? எம்.கே. ஆச்சாரியார் என்ன பிரம்மாவா? எல்லோர் தலையிலும் நூறு, நூறு வயது என்று எழுதி விடுவாரா? அல்லது எ.இராமசாமி முதலியார் எமனா?

22 வயதிலேயே எல்லோரையும் கொண்டுபோய் விடுகிறாரா? அய்யோ! பாவம்! திரு.வி.கலியணசுந்தர முதலியாரின் கல்வியும் - பாண்டித்தியமும் பிராமணரல்லாதார் பிறவியும் செங்கல்பட்டு ஜில்லா பாமர ஜனங்களிடம் போய் மேல் நாட்டாருக்கு 42- வயது, கீழ் நாட்டாருக்கு 22- வயது. ஆதலால் இராமசாமி முதலியாருக்கு ஓட்டுப் போடாதீர்கள்; எம்.கே.,ஆச்சாரியாருக்குப் போடுங்கள் என்று சொல்லுவதற்குத் தானா பிரயோஜனப்படவேண்டும்.

இவையனைத்தையும் பாமர ஜனங்கள் அறியும் நாள் எதுவோ அதுதான் விடுதலை நாள். அதுவரை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றோர்கள் நாள்தான்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


மவுலானா முகமதலியின் மத பக்தி


மவுலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டுமென்றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிற தென்றும் சொல்லி வருகையில் நாம் இந்துக் களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்க முடியும்.

நமது நபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதியர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல என்று சொன்னாராம். இதை சுதேசமித்திரன் இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி மௌலானா முகமதலியின் முழக்கம் என்கிற தலைப்பின் கீழ் எழுதி யிருக்கிறது. மவுலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. மௌலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ் லிம்கள் தேவையில்லை.

இதே 21 கோடி இந்துக்கள் என்போர் களை முக்கால் கோடிக்கும் குறைவான பிராமணர்கள் ஆயிரக் கணக்கான வருஷங்களாய் தலையெடுக்க வொட்டாமல் பணிய வைத்திருக்க வில்லையா? விபசாரத் தரகில் ஜீவிக்கும் பிராமணனைக் கூட ஜமீன்தாரரான பிராமணரல்லாத இந்து தூதுக் கடிதம் வாங்கும் போதும் சுவாமி என்று கூப்பிடவும், தலைவணங்கி கும்பிடவும் அவன் ஆசீர்வாதம் சொல்லி கடிதம் கொடுக்கவும் தானே நடந்து வருகிறது.

ஒரு சமூகம் எவ்வளவு பெரிய எண்ணிக்கை உள்ளதானாலும் தங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தீண்டாதவராய், பார்க்கக் கூடாதவராய் மதித்துக்கொண்டு மக்களைப் பிரித்து வைத்துஒருவர் உழைப்பில் ஒருவர் பிழைக்க நினைத்துக் கொண்டு இருப்பவர்களை உள்ளே வைத்திருக்கும் வரையில் மிகச் சிலரால் பணிய வைத்து விடலாம்.

இதற்கனுகூலமாக நமது நாட்டில் பிராமணியம் இருக்கும் வரை நம்மை யார் வேண்டு மானாலும், எப்படி வேண்டுமானாலும் சுலபமாய் பணிய வைக்கமுடியும். ஆதலால் மௌலானா சொல்லு வதில் கணக்குத் தவறு இருக்கிறதே தவிர அதிசயம் ஒன்றும் இல்லை. அவரும் நாம் மகமதியர்களோடு சண்டை போட நினைத் தால்தான் தன்னால் இந்துக்களைப் பணிய வைக்க முடியும் என்கிறாரே தவிர மற்றபடி பிராமணர்கள் தங்களுக்கு அன்னமளிப்பவர்களைப் பணிய வைத்திருப்பதைப்போல் அல்ல. ஆதலால் மௌலானா சொன்னதில் யாரும் குற்றங் கருத மாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


ஒரு சேதி


(திருவாரூர் திருத்தியாகராஜனின் திருத்தேர் தீக்கிரையாயிற்று)

தியாகராஜ பெருமானின் தேரானது 09.06.1926ந் தேதி தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக் கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப்பெரியது திருவாரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்களும், 5000த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்களும் வேண்டும். இவர்கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம்.

தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப் பாட்டம் எதற்கு? இதை நினைக்கும் போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது,
ஒரு குருவுக்கு நான்குசிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குருவானவர் கடையில் ஊசி வாங்கிக் கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர்களிடம் கட்டளை யிட்டார்.

அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளை யிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப்போனால் கோபித்துக் கொள் ளுவார் என்று ஒரு நீண்ட பனைமரத் துண்டில் ஊசியைக் குத்தி நால்வரும் வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்து சென்று குருவை அடைந்ததும் அவர் அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத்தேடி காணாமல் போகவே நடந்ததைச் சொன்னார்கள்.

குரு கோபித்துக் கொண்டு, உங்களுக் குள்ள பக்திக்குத் தகுந்த புத்தியில்லை யென்று சொல்லி வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி தூக்கி வரும்படி கட்டளையிட்டார். உடனே அவர்கள் இதனால் ஒரு நல்ல புத்தி கற்றுக் கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும் ஊசி வாங்க கடைக்குப் போகும் போது, ஒருவன் குரு ஊசிக்கு மாத்திரம் காசு கொடுத்தாரே யல்லாமல் கயிறு வாங்க காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள் தோஷம், தோஷம் இதெல்லாம் நினைக்கவே கூடாது; நினைப்பது குருத் துரோகமாகும் என்று சொல்லி நினைத் ததற்குப் பிராயச்சித்தம் செய்து கொண் டார்கள்.

அதே போலிருக்கிறது திருவாரூர் தேரில் சுவாமியை வைத்து இழுக்கும் கதை.தேசம் வறுமைப் பிணியால் வதையுற்று கல்வியற்று சிறுமைச் செயலால் சீரழிந்து இருக்கும் இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின் உற்சவத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தொழி லாலயங்களும் கல்லூரிகளும் அமைத்து வறுமைப் பிணியால் வாடும் மக்களுக்கு வேலை கொடுத்து போஷித்தும், கல்வி போதித்து சன்மார்க்க பேதம் புரிந்துவர பிரயோஜனப்படுத்த லாகாதோ? - குடிஅரசு துணைத் தலையங்கம் - 13.06.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் துகளா? கண்டுபிடித்தவரின் மறுப்பு


பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் ஒரு நாத்திக அறிவியலாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 83 வயதான அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் செர்ன் நகரில் சென்ற ஆண்டு அணுக்களை உடைத்து ஆராயும் போது, அணுக்களின் துணைத் துகள்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.

அந்தச் செய்தியை அவர் வெளியிட்டபோது பத்திரிகைகளும் ஊடகங்களும் அதற்குக் கடவுள் துகள் என்று தாங்களாகவே பெயர் வைத்துவிட்டார்கள். அச்செய்தி முதன் முதலில் வெளிவரும் போதே அப்படி எழுதிவிட்டதால் உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் கடவுள் துகள் என்றே இன்னமும் எழுதுகின்றன. ஆனால், இந்தச் சொல்லை அத்துகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பேராசிரியர் ஹிக்ஸ் மறுத்துள்ளார்.

கடவுளின் துகள்கள் என்று குறிப்பிடப்-படுவதை நிறுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஹிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். காரணம், அவர் ஒரு நாத்திகர்!

பேராசிரியர் ஹிக்ஸ், உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் துணை அணுத்துகள்கள் தான் காரணம் என்ற ஆய்வு முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால், 83 வயதான அந்த அறிவிய-லாளருக்கு -_ அவரது கண்டுபிடிப்பிற்கு கடவுளின் துகள்கள் என்ற பட்டப்பெயர் பிடிக்கவில்லை; ஏனென்றால், எல்லா-வற்றையும் படைப்பிக்கவல்ல ஒரு கடவுளின் கண்டு-பிடிப்பாக தனது ஆராய்ச்சி இல்லை என்பது அவர் முடிவு.

அந்தப் பெயர் வேடிக்கையாக, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிவியலாளரான லியோன் லெடர்மேன் என்பவரால் குறிப்பிடப்பட்டது. அது ஒரு நல்ல பெயரும் இல்லை என ஹிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

1993இல் லெடர்மேன் ஒரு புத்தகத்தில், கடவுளின் அணுத்துகள் என்ற பெயர் எப்படி வந்தது? உதாசீனம் செய்யப்பட்ட(God damn) துகள் என்று பெயரிட புத்தக வெளி-யீட்டாளர்கள் அனுமதிக்க-மாட்டார்கள். அதனால்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். எடின்பர்க் நகரைச் சேர்ந்த ஹிக்ஸ், முதலில் நான் ஒரு நாத்திகன். இரண்டாவது, அந்தப் பெயர் ஒரு விதமான வேடிக்கைதான்; நல்ல பெயர் இல்லை. நான் அதற்கு இடமளித்து இருக்கக்கூடாது. அது தவறானவற்றிற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னார்.

சென்ற ஆண்டு Hadron Collider என்ற பெரிய கருவியில் அணுவை உடைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவரது கருத்து உறுதி செய்யப்பட்டது.

அறிவியல் உலகம் அந்தத் துகளை ஹிக்ஸ் போசான் துகள் (higgs boson particle) என்றுதான் அழைக்கிறது.

ஆனால், புத்தக வெளியீட்டாளர்களும், ஊடகத்தினரும் தங்களின் வியாபாரத்திற்காக இப்படி செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் ராமாயணம் என்ற நாடகத்தை நடத்தினார். அது அச்சு அசல் வால்மீகி ராமாயணம். அதில் உள்ள் உண்மைகளைத்தான் அவர் எடுத்துக்காட்டினார். ஆனால், அந்த உண்மைகளைப் பொறுக்கமுடியாத ஆத்திகர்கள், எம்.ஆர்.ராதா நடிப்பது ராமாயணம் அல்ல: அது கீமாயணம் என்று தமது இயலாமையை வெளிப்படுத்தினர். அதையே சில பத்திரிகைகளும் வெளியிட கீமாயணம் என்றே அந்நாடகம் பரப்பப்பட்டது.

பகுத்தறிவை எதிர்கொள்ள முடியாத அறியாமையும் பிற்போக்கு மதங்களும் பந்தை அடிக்க முடியாமல் காலை அடிக்கும் வேலையை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை செய்துகொண்டிருக்கின்றன. அறிவுக்கு இன்னும் எத்தனை நாள்தான் திரைபோட்டு மறைக்கமுடியும்? அண்ட சராசரங்களையும் அகழ்ந்து ஆய்ந்து உண்மையைக் காட்டுவதல்லவா அறிவு. அதன் முன் கடவுள் எம்மாத்திரம்!

- பெரியாரிடி, ஆர்.ராமதாஸ் உதவியுடன்
நன்றி : சந்திரன், வீராசாமி

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

தமிழ் ஓவியா said...


அன்னையர் நாள்!


இன்று அன்னையர் நாள் - உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மாசு மருவற்ற அன்பு என்பது தாயிடத்தில் தான்குடி கொண்டு இருக்க முடியும் - எதையும் எதிர்பாராத இயற்கை அன்பு என்று இதனைக் கூறலாம்.

ஒரு குழந்தைக்குத் தன்பாலை ஊட்டி உயிரூட்டம் செய்கிறார் - குழந்தையின் முதல் ஆசிரியராகவும் அந்தத் தாயே அமைகிறார்.

தாய்ப்பால் என்பது தான் கலப்படத்திற்கும் இடம் இல்லாதது - ஊட் டச் சத்தும் நிறைந்தது.

இன்றைய தினம் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை 2000 கோடி அமெரிக்கன் டாலரை செலவு செய்து சீனா உருவாக்கி - புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்துவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை 44 விழுக்காடு குழந் தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் அவதிப்படு கின்றன. தென்னாப் பிரிக்காவில்கூட 25 சதவிகிதம்தான்; இந்தி யாவின் அவல நிலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

இந்தியாவிலேயே பொருளாதாரம் கொழிக்கும் மாநிலம் மோடி ஆளும் குஜராத் மாநிலம் என்று ஊதிப் பெருக்கிப் பலூன் விடுகிறார்களே - அந்த மாநிலத்தைப்பற்றிய கணிப்பு என்ன தெரி யுமா? இந்தியாவின் சோமாலியா என்பதே!

உலக அன்னையர் நாளில் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தாயின் நிலை இன் றைய நிலையில் எத் தகையது?

வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம்; ஆனால் அந்த அன்னையார் இருப்பதோ முதியோர் இல்லம் - இதுசரிதானா?

வருமானம் பெருகிய அளவிற்கு மனிதநேயம் பெருகவில்லையே! வெறும் பணமும் நுகர் வும்தான் வாழ்க் கையா?

மாதா, பிதா, குரு என்ற வரிசையில்கூட தாய் தானே முதலிடத் தில்; ஒவ்வொருவரும் தமக்குள் எடை போட் டுப் பார்க்கட்டும் - இந் நாளில்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


குடமுழுக்கும் - அர்ச்சகர் பிரச்சினையும்

2011-2012ஆம் ஆண்டில் 1006 கோயில்களுக்கும், 2012-2013ஆம் ஆண்டில் 1096 கோயில்களுக்கும் குட முழுக்குச் செய்யப்பட்டது. நடப்பாண்டில் 1006 கோயில்களுக்குத் திருப்பணி செய்யப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110ஆவது விதியின் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தினால் மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்குச் செய்யப்படும் நிரந்தரமான ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்?

படித்த மற்றும் படிக்காத பாமர மக்கள் காலத்தையும், பொருளையும், உழைப்பையும் வீணடிக்கப் பயன்படக் கூடிய திட்டம்தான்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. நடைபாதையில் வாழும் மக்கள் தொகை குறையவில்லை.

தலைநகரமான சென்னையிலேயே இந்த அவல நிலை! இரவு உணவு இல்லாமல் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு பசியால் தூக்கம் இல்லாமல் துடிக்கும் மக்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கரும் பலகைகூட இல்லாத பள்ளிகள் உண்டு; போதிய கட்டட வசதியில்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பது ஏடுகளில் படத்துடன் வெளி யிடப்படுவதும் உண்டு. உயர்நிலைப்பள்ளியில் கல்வியை முடிக்காமல் இடையில் நிறுத்தப்படும் (Dropouts) நிலையும் உண்டு.

விவசாயம் பாதிக்கப்பட்டு கிராமப்புற மக்கள் வறுமையின் வன்பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் சொல்லும் தரமன்று; நோயாளிகளுக்குப் படுக்க வசதியில்லாமல் தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். போதிய மருந்துகளும் அரசு மருத்துவமனையில் இருப்பதில்லை.

இவ்வளவுக் கொடுமைகளும், இல்லாமையும் வறுமையும் குவிந்து கிடக்கும் நாட்டில், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்ததாகக் கூறப்படும் கடவுள்களுக்குக் கோயில் புனருத்தாரணம்தான் முக்கியமா?

உயிருள்ள ஜீவனுக்குக் குந்தக் குடிசை இல்லை; குழவிக் கற்களுக்குக் கூடக் கோபுரங்கள் கேட்கிறதா?

சிறிதும் மனிதாபிமானமற்ற செயல்பாடு இது. அரசின் செயல் திட்டங்கள் வளர்ச்சிப் போக்கில் இருக்க வேண்டுமே தவிர. உற்பத்தி நாசத்திற்கு எந்த வகையிலும் பயன்படக் கூடாது.

கோயில் என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் நடைபெறுவது உற்பத்தி நாசம்தான் - பால், தயிர், வெண்ணெய், எண்ணெய், தேங்காய் என்று அழிக்கப்படுகின்றன. மக்களுக்குப் பயன்படக் கூடிய இந்தப் பொருள்கள் கடவுளுக்கு அபிஷேகம் என்ற பெயரால், கற்சிலைகளின் தலைகளில் கொட்டி குளிப்பாட்டி சாலவத்தின் வழியாக வெளியேற்றப் படுவது - உற்பத்தி நாசமல்லாமல் வேறு என்னவாம்?

இவை எல்லாம் இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று எந்த கடவுள் முதல் அமைச்சரின் கனவில் வந்து சொல்லியதாம்? சொல்ல முடியுமா?

காணிக்கைகளால் வருமானம் அர்ச்சகப் பார்ப்பானுக்கு கிடைக்கிறது. புரோகிதச் சுரண்டல் ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது; கோயில் என்பது சுரண்டலின் மறுபெயர். இதற்கு அரசுப் பணம் எதற்காக செலவழிக்கப்பட வேண்டும்?

கோடிக்கணக்கில் கோயிலுக்காக குடமுழுக்குக் காக மக்கள் பணம் அரசு சார்பில் கொட்டப்படுகிறதே - அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன?

குறைந்த பட்சம் பருவ மழையாவது பெய்ததா? நியாயப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைத்து விட்டதா - முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முடிவுதான் எட்டப்பட்டதா?

தற்கொலைகள் குறைந்தனவா? படுகொலை பட்டியல் அடைபட்டு விட்டதா? (கோயில் சிலைகளே கடத்தப்படுகின்றன - இந்த லட்சணத்தில் அவற்றிற்குக் குட முழுக்காம்!)

இன்னொன்று மிக முக்கியமானது. விதி 110 இன்கீழ் கோயில் குட முழுக்குகளின் பட்டியலை வெளியிட்ட முதல் அமைச்சர், இந்தத் துறைக்குச் சம்பந்தப்பட்ட, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினைபற்றி மூச்சு விடாததே ஏன்?

206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்று ஆண்டுகள் பல ஓடிய நிலையில், இதற்கானஅறிவிப்புகள் இதுவரை வராதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் நிலைப்பாடு குறித்து முதல் அமைச்சர் சட்டப் பேரவையில் தெரிவித்திருக்க வேண்டாமா?

முதல் அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் பக்தியை மக்கள் சமுதாயத்தின் தலையின்மீது ஏற்றிச் சுமக்க வைக்கக் கூடாது; காரணம், அரசு என்பது சட்டப்படி மதச் சார்பற்றத் தன்மை கொண்டதாகும்.16-5-2013

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

(விடுதலை, 24.2.1954

தமிழ் ஓவியா said...


கடவுளர் சக்தி இப்படியா சந்தி சிரிப்பது?


- ஊசி மிளகாய்

வழக்கம்போலவே நேற்றும் தமிழக சட்டமன்றத்தில் நமது முதலமைச்சர் அவர்கள், விதி 110 இன்கீழ் வாசித்த ஓர் அறிக்கையில் கூறியுள்ள சில கருத்துகள்பற்றி:-

கோவில்களில் உண்டியல் கொள்ளை, நகைகள் மற்றும் உடை மைகள் திருட்டு; எல்லாவற்றையும் விட கடவுள், கடவுளச்சிகளையே பெயர்த்துக் கடத்திக் கொண்டு போகும் கள்ள பக்த கேடிகள் ஆகியோரைக் கண்டுபிடிக்க, முன் னெச்சரிக்கையாக எச்சரிக்கை மணி - அபாய மணி போன்று ஒலிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மேலும் கடவுளைத் திருடும் - கடத்தும் பக்த கேடிகளைக் கண்டுபிடிக்கவும் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தவும் இனி இந்து அறநிலையத் துறையினரால் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிப்புச் செய்துள்ளார்!

பலே, பலே, கடவுள் சக்தி எப்படிப்பட்டது என்பதை நிரூபிக்க இதைவிடச் சிறந்த பிரச்சாரம் - எடுத்துக்காட்டு வேறு என்னதான் இருக்க முடியும்?
கோவிலுக்குச் செல்லும் பக்தர் களை எதற்காகக் கோவிலுக்குப் போகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் நம்மைக் கடவுள் காக்க வேண்டும்;

உலகத்தைக் காக்க வேண்டும் என்று பிரார்த்தனை - வேண்டுகோளை வைக்கவே செல் கிறோம்; ஏனெனில் கடவுள் சர்வ சக்தி - சர்வ வல்லமை - சர்வ வியாபி - சர்வதயாபரன் - கரு ணையே வடிவானவன் என்பதால் தான் என்றுதானே கூறுகிறார்கள்?

சர்வசக்தி வாய்ந்த சாமிக்கு - அதன் இருப்பிடமான கோவிலைப் பாதுகாக்க மனிதர்களும், மின்னணு இயந்திரங்களுமா தேவை? கண் காணிப்புக் கேமிராவில் எல்லாம் தெரியுமோ; ஆண் சாமியைக் குளிப் பாட்டினதோடு, பெண் கடவுளையும், பிறந்த மேனியாக்கிக் கழுவிக் குளிப்பாட்டுவது வரை படம் பதிவா குமோ? அர்ச்சகரையும் அப்படியே கண்காணித்தால் நல்லதுதானே!

அதிலும் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் நடத்திய சொர்க்க லோகக் காட்சிகளும் பதிவாகு மானால், அதைவிட பக்தி ரசம் சொட்டும் அருமையான சரித்திரம் தான் யாருக்குக் கிடைக்கும்?

சர்வசக்தி கடவுளுக்கு இல்லை; அதை வைத்துப் பிழைக்கும் மனிதர் களுக்கும், அரசுக்கும்தான் இருக் கிறது என்பதை இந்த முறையின் மூலம் நாட்டுக்குணர்த்திட்ட முதல மைச்சரின் ஏற்பாடு விசித்திரமானது என்றால், கடவுள் மறுப்புப் பிரச் சாரத்தை வேறு மாதிரி செய்கின்ற முயற்சி அல்லாமல் வேறு என்ன?

ஏற்கெனவே பல முக்கிய பெரிய கோவில்களின் சாமி சிலைகள்கூட ஒரிஜினல்கள் எல்லாம் பாதுகாப்புப் பெட்டகங்களில் டெபாசிட் செய்து வைக்கப்பட்டு, முக்கிய திருவிழா வின்போது மட்டும் அந்த ஒரிஜினல் சாமி, பரோலில் ஓரிரு நாள்கள் வெளியே வந்து சிறைக்கு மீண்டும் திரும்பும் கைதிபோல, ஊர்ப் பொதுத் திருவிழா முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்புப் பெட்டகத்திற்கே (Safe Deposit Vault) திரும்பி விடுவார்.

மற்ற நாள்களில் மாற்று நகல் கடவுள்தான் - counterfeit Coin போல பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறாராம்!

பெரியார் கேட்டார்: ஏம்பா, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத கடவுள், எப்படியப்பா உன்னைக் காப்பாற்றுவார்? என்று.

நியாயமான கேள்விதானே அது?

அதனால்தான் பதில் தர முடியாத சிக்கலான கேள்வியாகவே அது எப்போதும் இருக்கிறது!

வருஷாவருஷம் கடவுள் - கடவுளச்சியர் திருக்கல்யாணம் செய்து வைப்பவர்களைப் பார்த்தும் கேள்வி கேட்டார்!

போன வருசம் பண்ண கல்யாணம் என்ன ஆச்சு? டைவர்சா? ரத்தா? இல்லை, ஓடிப் போயாச்சா? - அறிவுள்ளவர்கள் கேட்கமாட் டார்களா? என்பார்!

அதுமட்டுமா?

சாமிகளுக்குப் பள்ளியறை கட்டி பெரியவர்கள் பிள்ளை விளையாட்டு நடத்துகின்றனரே!

எங்காவது பிரசவம் பார்க்க மருத்துவமனை, மகப்பேறு மருத் துவமனை உண்டா? கட்டப்பட்டுள் ளதா? நடிகவேள் எம்.ஆர். ராதா கேட்பார் தனது நாடகத்தில்,

ஏண்டா, சாமி ஆறு வேளை சாப்பிடுதுங்கிறியே, சரி படைக்கிறே; அதற்கு டாய்லட் (கழிப்பறை) கட்டி வச்சியா? உண்மையிலேயே அது சாப்பிடறதாயிருந்தா அதுவும் இல்ல கட்டி வைச்சிருப்பே என்று கேட்பார்.

பக்தர்களும், பாமரர்களும், படித்தமேதை முட்டாள்களும் சேர்ந்தே கைதட்டிச் சிரித்து விட்டு வருவர்!

எல்லாம் வல்ல

எங்கும் நிறைந்த

கடவுள்களின் சக்தி

இப்படியா சந்தி

சிரிப்பது?

அரே, ராம், ராம் ஓம்! ஓம்! ஆம்! ஆம்!15-5-2013

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.

(விடுதலை, 28.8.1963

தமிழ் ஓவியா said...


நுழைவுத் தேர்வு அறவே வேண்டாம்


நுழைவுத் தேர்வு என்றாலே - அதன் பொருள் கிராமப்புற மக்கள், ஆண்டாண்டுக்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் முட்டுக்கட்டை என்று பொருள்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வந்தபோதே அதனைக் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகமே. சமூக நீதித் திசையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெளிவு கிடையாது - அதன் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல பாடமும் கற்றுக்கொண்டார்.

5 ஆம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக வந்த மானமிகு கலைஞர் அவர்கள் நுழைவுத் தேர்வைத் தடை செய்து சட்டம் இயற்றினார். உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்வரை சென்று மோதி முட்டிப் பார்த்தனர் - விளக்கெண் ணெய்க்குத்தான் கேடானதே தவிர பிள்ளை பிழைத்திடவில்லை.

மாநில அரசின் இந்தக் கொள்கை முடிவினை - கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன்மூலம் முட்டித் தள்ளுகிறது.

அதுவும் கபில்சிபல் என்ற மேல்தட்டு மனிதர் மனித வள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்ச ராக வந்த நாள் முதற்கொண்டு நுழைவுத் தேர்வைத் திணித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் எலும்பு உடைய உடைய ஊசி முனையில் தவம் இருக்கிறார்.

பி.ஏ., பி.எஸ்ஸி., என்ற பட்டப் படிப்பில்கூட அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைத் துத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்.

அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப்படும் என்கிறார்.

முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வினை மருத்துவக் கவுன்சில் வைக்க அடம்பிடிக்கிறது.

அதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கியது கலைஞர் தலைமையிலிருந்த தி.மு.க. அரசு.

உச்சநீதிமன்றம் மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இது என்ன கொடுமை!

தமிழ்நாடு அரசும், ஆந்திர மாநில அரசும் மருத்துவக் கவுன்சிலின் முடிவினை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், இவ் வாண்டு நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத் துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இது தற்காலிக வெற்றியே! ஆனாலும், நிரந்தரமாக நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

பிளஸ் டூ தேர்வு என்பதே எழுத்துத் தேர்வு; அதற்குப் பிறகு எதற்கு இன்னொரு எழுத்துத் தேர்வு? அப்படி என்றால், பிளஸ் டூ தேர்வுக்குத் தான் என்ன மரியாதை?

போட்டித் தேர்வும், நுழைவுத் தேர்வும் ஒன்றல்லவே! இரண்டையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்ளவேண்டும்?

சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் கள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கின்போது சொன்ன கருத்துரை என்ன?

நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான்! ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கின்றனர்?

இட ஒதுக்கீட்டின் காரணமாக, தட்டுத் தடுமாறி தொழிற்கல்லூரிகளில் நுழைபவர்களைக் கொல் லைப்புறம் வழியாக நுழைந்து வெளியே தள்ளும் பார்ப்பன சூழ்ச்சிதான் நுழைவுத் தேர்வு என்பது.

தற்காலிகமாக அல்ல - நிரந்தரமாகவே நுழைவுத் தேர்வை தடை செய்யவேண்டும் என்பதுதான் சமூகநீதியாளர்களின் அழுத்தமான வேண்டுகோள்! 15-3-2013

தமிழ் ஓவியா said...


இந்தியா டுடே பார்வையில்... ராஜபாளையம்


சாதிக்கு சவுக்கடி

சாதிவெறி சக்திகளை ஒடுக்கக் கோரியது திராவிடர் கழக மாநாடு

தி.க. தொண்டர்கள் அணிவகுப்பு

தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி யாக செயல்படும் என்று என்றோ சொல்லப்பட்டது இன்று ஞாபகத்திற்கு வருகிறது. ராஜபாளையத்தில் மே 4 அன்று நடந்த தி.க.இளைஞர் அணி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண் டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது. ஆகஸ்ட் 1 அன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமைக்கான சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவதாகும்.

இந்தப் போராட்டத் தில் பங்கு கொள்ள உறுதி தெரிவித்தவர்களில் சிலர் ரத்தத்தில் கையொப்பமிட்டிருந்தனர். இதற்கெல்லாம் ரத்தம் சிந்தக்கூடாது. ரத்தம் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டியது எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்பட வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார் தி.க. தலைவர் கி.வீரமணி.

பெண்களை விளம்பரப் பொருளாகவும் கலையின் பெயரால் ஆபாச வடிவமாகவும் காட்டுவது கூடாது; பாலியல் தொடர்பான கல்வியை கல்லூரி பாடத்திட்டத்திலாவது இருபால் மாணவர்களுக்கும் போதிப்பது அவசியம்; சாதி வெறியைத் தூண்டும் சக்திகள் மீது மத்திய; மாநில அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; காதல் திருமணங்கள் சாதி ஒழிப்புக்கு ஆக்கம் தருவதால் அதனை ஆதரிக்க வேண்டும்;

காதல் திருமணம் என்றால் கெட்ட வார்த்தை என்ற பிரச்சாரத்தை முறியடிக்க, அதுவே மனம் ஒத்த, உண்மையான இணையைத் தேடிக்கொள்ளும் வழிமுறையாகும் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் போன்ற தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

(நன்றி: இந்தியா டுடே மே 22, 2013)

தமிழ் ஓவியா said...


நல்ல தீர்ப்பு தந்த நீதியரசர்களை நாடே வாழ்த்தட்டும்!

- கி.வீரமணி

அண்மையில் ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற நீதியரசர்களில் மிகவும் மனிதநேயத்தோடு, சமூக நலத்தையே பிரதானமாகவும் கொண்ட இருவர் ஜஸ்டீஸ் திரு கே. வெங்கட்ராமன், ஜஸ்டீஸ் திரு.கே.என். பாஷா ஆகியோர் ஆவார்கள்.

எந்த வழக்கிலும் ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து நீதித் தீர்ப்பு வழங்குவதில், அச்சமோ, சலுகையோ இன்றி, நியாயத் தராசு எப்பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாது தீர்ப்புகளை - மனித நேயக் கண் ணோட்டத்தோடு அளிப்பதில் உயர்நீதிமன் றத்தில் வரலாறு படைத்தவர்கள் அவ்விரு பெருமை மிகு மாண்பமை நீதியரசர்கள்.

அவர்களில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு. கே.என். பாஷா அவர்களும், ஜஸ்டீஸ் திரு. நாகமுத்து அவர்களும் இணைந்த அமர்வு ஒன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்மையை, தாய்மையைச் சிறுமைப்படுத்தாத ஒரு தீர்ப்பை, (மேல் முறையீடு) ஒரு கொலைக் குற்ற வழக்கில் தந்துள்ளனர்.

ஒரு நிறுவனத்தின் காவலாளியான ஆண் ஒருவரும், அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் துணைவியும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் ஒழுக்கக் கேடான - பாலுறவில் ஈடுபட்டிருக்கக் கூடும். ஏனெனில் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் அவர்களுக்குள் உடலுறவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அந்த சந்தேகத்தின் மீதுதான் இந்த குற்றவாளி அந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடும்;

எனவே அவருக்கு மறைமுக சாட்சிய ஆதாரங்களின் அடிப்படையில் (குறிப்பாக அனுமானத்தின் - யூகத்தின்) ஆயுள் தண்டனை வழங்கு கிறேன் என்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி யவர்கள் கூறியதை, ஏற்க மறுத்து, அவ் வழக்கில் குற்றவாளியின்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை; மறைமுக (Cricumstantial Evidence ) சாட்சியங் களுக்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை; மாறாக, ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தாலே அவர்கள் உடலுறவு கொள்வார்கள் என்று நீதிபதி முடிவுக்கு வருவது ஏற்கத்தக்கதல்ல என்று நன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்!

பெண்களைப் பற்றிய இப்படிப்பட்ட தவறான கருத்துகளுக்கு - முன்னோடி மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம் போன்ற தர்மங்களும், இதிகாசப் புராணங்களும்தான்.

அதில் இதே கருத்துள்ள வாசகங்கள், ஏராளம் நீதி வாக்கியங்கள்பேரில் உபதேசிக் கப்பட்ட கருத்துக்களாகக் கூறப்பட்டதின் விளைவு....? இன்று நீதிபதிகளின் மண்டைக்குள்கூட அது புகுந்து குடைந்து, நீதியின் போக்கையே மாற்றி, மனித தர்ம ஆளுமைக்குப் பதில் மனுதர்ம ஆளுமை நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது!

பெண்களை - மனிதர்களாகவே இதிகாசங்களும், புராணங்களும் பார்க்க விடாமல், அவர்களை வெறும் பாலியல் இயந்திரங்களாகப் (Sex Machines) பார்க்கும் வெட்கப்படத்தக்க நிலையை உருவாக்கி நாட்டில் பரவச் செய்ததின் விளைவுதான்.

6-7 வயது பெண் குழந்தையிடம் கூட வயதான ஆண்கள் பலர் சமூக வக்கிரங்களின் வாலாட்டங்களாக ஆகி கொடுமைக்குட்படுத்தி, அவமானத்தின் அதல பாதாளத்தில் வீழ்கின்றனர்!

சிறு வயதிலிருந்தே அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளை - பாலியல் அடிப்படையில் வைக்காமல் - மரியாதைக்குரியவர்கள் நம் தாய், தமக்கை, தங்கை, வாழ்க்கைத் துணைவிகள் - வாழ்விணையர்கள் என்ற வாழ்க்கைக் கல்வியை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரம்பப் பாடத் திட்டங்களில் துவங்கி, பல்கலைக் கழக பாடங்கள் வரை பயிற்று விக்கப்படல் வேண்டும்.

ஓர் ஆணும் ஆணும் பழகும் போது ஏற்படாத சந்தேகம், அசூயை, அருவருப்பு - ஓர் ஆண் - பெண் சந்தித்தால், பேசினால், பழகினால் மட்டும் ஏன் ஏற்பட வேண்டும்?

அது பார்வைக் கோளாறும், அதன் விளைவும்தானே!

திரைப்படங்கள், சின்னத் திரையில் சிறு இளம் வயது பள்ளி மாணவப் பருவத்திலேயே காதல் என்ற காம உணர்வு அரும்பி, நட்பே (காதலைத்) தவிர வேறு இல்லை என்று ஆவதா?

பெண்களை அடிமைகளாக்கியிருக்கிற சமூகப் பார்வையும் மாறி, அவர்களைச் சுதந்தரம் பெற்றவர்களாக ஆக்கிட தந்தை பெரியார்தம் பகுத்தறிவு, சுயமரியாதைப் பார்வை - அணுகுமுறை தேவை!

நல்ல தீர்ப்பு தந்த நீதியரசர்களை நாடே வாழ்த்தட்டும்!

தமிழ் ஓவியா said...


மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!


புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது.

+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மாணவ - மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளா கின்றனர் என்பதுதான் நுழைவுத் தேர்வு ரத் துக்கு அடிப்படையான காரணமாகும்.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப் புக்கும் மற்றும் எம்.டி, எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கை நடை பெறும் என்று, மத்திய அரசின் கட்டுப்பாட் டில் உள்ள இந்திய மருத் துவ கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்து இருந் தது.

தமிழக அரசு மட் டுமின்றி, ஆந்திரா உள் ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த மொத்தம் உள்ள 23 வழக்குகளும் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றப் பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருக் காது என்றும், தற்போது உள்ள நிலையே தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

என்றாலும், இதில் இறுதி தீர்ப்பை, வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஒரு வேளை இந்த தீர்ப்பில் மாற்றம் எதுவும் வந் தாலும், மாணவர்கள் நலன் கருதி அடுத்த கல்வி ஆண்டுக்குத்தான் அந்த தீர்ப்பு பொருந் தும். இதற்கிடையில், இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதத்தில் உத் தரவு ஒன்றை உச்சநீதி மன்றம் பிறப்பித்து இருந்தது.

இந்திய மருத் துவ கவுன்சில், மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை ஏற்கெனவே நடத்தி இருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு உள் ளிட்ட நுழைவுத் தேர் வின் முடிவுகளை வெளி யிட அந்த உத்தரவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய இடைக்கால தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி அந்த தடையும் நீக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அ.தி.மு.க. அரசின் மிக மோசமான கொள்கை முடிவு!


ஆசிரியர் தகுதித் தேர்வில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசு - அ.இ.அ.தி.மு.க. அரசு இடஒதுக்கீடு முறையில் அடிப்படையான தவறினைச் செய்திருக்கிறது. 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் செய்யப் பட்டுள்ள மிகப் பெரிய தவறினைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை; நம் நாட்டு அரசியல் கட்சிகளும் தலைவர்களும்கூட சமுதாய அமைப்புகள் கூட இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கோட்டை விட்டது ஆச்சரியம்தான்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து மிகவும் விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார் (விடுதலை 2.4.2013).

அதற்குப் பிறகுதான் இந்தப் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. இடதுசாரிகள் சட்டப் பேரவையில் பிரச்சினையைக் கிளப்பினார்கள். முதல் அமைச்சரின் கவனத்தில் இருப்பதாகக் கல்வி அமைச்சர் கூறினார்.

கல்வி மானியக் கோரிக்கையின் போது திருத்தத் துடன் முதல் அமைச்சரோ அல்லது கல்வி அமைச் சரோ புதிய அறிவிப்பினை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி தருவதாக உள்ளது.

தகுதித் தேர்வு எழுதிய உயர் ஜாதியினர், தாழ்த் தப்பட்டோர், மலை வாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) தமிழ் வழியில் படித்தோர் என்னும் வகையில் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு தனித்தனியே உள்ளது.

ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு மதிப் பெண்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக இதே தேர்வில் ஆந்திர மாநிலத்தை எடுத்துக் கொண்டால் உயர் ஜாதி யினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் என்று தனித்தனியே மதிப்பெண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

அ.இ.அ.தி.மு.க. அரசு தேசிய ஆசிரியர் கழகம் (சூஊகூநு) அறிவுறுத்தியதற்கு மாறாக உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அனை வருக்குமே ஒரே அளவுகோலாக 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கூறி தேர்வையும் நடத்தி பணி நியமனமும் செய்துள்ளது!

இது அடிப்படையில் தவறானது - இடஒதுக்கீடு வழி முறைகளுக்கு முரணானது. தாழ்த்தப்பட்ட வர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்குவது என்று சட்டப் பேரவையில் சுட்டிக் காட்டினால், கல்வி அமைச்சர் சொல்லுகிறார் இது அரசின், கொள்கை முடிவு என்று. தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சம அளவில் பாவித்துத் தேர்வு நடத்துவதுதான் அரசின் கொள்கை முடிவா?

அப்படி என்றால் அ.இ.அ.தி.மு.க. அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் எதிரான அரசு என்று பிரகடனப்படுத்தப் பட்டதாகப் பொருள். இது இடஒதுக்கீட்டின் தத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தான பார்ப்பனத்தனமாகும். மதிப்பெண்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பலன் பெற்றிருப்பார்களே.

இந்தச் சந்தர்ப்பத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசின் இன்னொரு செயல்பாட்டை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு சமூக வாரியாக அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு 40 சதவிகித மதிப்பெண்களை அது நிர்ணயித்து இருந்தது. 35 சதவிகிதம் இருந்தாலே போதும் என்பது தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு சென்றது. அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த அணுகுமுறை ஆசிரியர்கள் தேர்வில் ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை? அதிமுக அரசுக்கு ஏனிந்த தடுமாற்றம்? தவறு நடந்து விட்டது. நாகரிக மாக ஒப்புக் கொண்டு மறு தேர்வு நடத்துவதற்குப் பதிலாக முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற தன்மையில் நடந்து கொள்ளலாமா? இது பெரியார் மண் - சமூகநீதியில் கை வைத்தால் விளைவைச் சந்தித்தே தீர வேண்டும் - எச்சரிக்கை!
14-5-2013

தமிழ் ஓவியா said...


மயக்கம் தெளியட்டும்!


தமிழர்களில் சிலரை மயக்கி மடக்கப் பார்க்கின்றது பார்ப்பனீயம் !

ஒவ்வொரு மயக்கத்தையும் பயன் படுத்துவதே அவர்களது வழக்கம்.தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் கெட்டுப் போக வேண்டுமா? அரசியலுக் குச் செல்! என்று.இன்று அதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.தமிழக மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு முதலமைச்சர் என்றால் கூட எல்லோரை யும் மகிழ்விக்க இன்னும் பல மாவட் டங்கள் தேவைப்படும் !

பதவியைப் போன்றதே இன்னும் பெரிய மயக்க மருந்து, பெரிய போதை தருவது புகழ் என்ற மமதை! இன்று கூட்டம் சேர்க்க முடியாதவர்களுக் கென்று பார்ப்பனீயம் கண்டு பிடித்துள்ள புதிய மயக்கம் பத்திரிகை மயக்கம்,

சிலரைக் குறி வைத்து ஏதோ அவர்கள் சொல்லுங் கருத்துக்கு மதிப்பளிப்பது போன்ற மாயையை உண்டாக்கி, அவர் களை எழுதச் சொல்லி அதை வெளி யிடுவது. நாம் எழுதுவது பத்திரிகையில் வந்தால் மகிழ்ச்சியடையாதவர் எவர்? அந்த உணர்வையே மயக்க மருந்தாக்கி நன்கு பயன் படுத்துகின்றனர் இன்று.

பார்ப்பன ஊடகங்களுக்கு எழுதுவ தற்கென்று வரிசையில் நிற்கும் மானங்கெட்ட தமிழர்கள் மயக்கத்தில் அலைகின்றனர்; அதற்காக எதையும் எழுதத் தயாராக உள்ளனர்.பெரியாரைப் பற்றி ஒரு வரிகூட இல்லாத திராவிட வரலாற்றையே எழுதுகின்றனர்.தமிழினத் தலைவர்கள் பற்றி எழுதாத தமிழர் வரலாறு.

இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு தமிழரை விட்டு இன்னொரு தமிழரைத் தாக்க வைக்க வேண்டியது.அதைப் படித்து ரசிக்கத்தான் நம்மில் பெருங் கூட்டம் உள்ளதே! இந்தப் புகழுக்கு மயங்கும் பெரிய மனிதர்கள் காஞ்சி சங்கரனைப் பற்றியோ, பார்ப்பன அநியா யங்கள் பற்றியோ, மதத்தால் நடக்கும் மூடத்தனம் பற்றியோ எழுதச் சொல்லி வெளியிட்டுள்ளதைப் பார்த்துள்ளீர்களா?

தலைப்பு நமக்கு வேண்டியதாக, விரும்பிப் படிக்கக் கூடியதாக இருக்கும். உடனே உள்ளே சென்று படிக்க ஆவலைத் தூண்டும். உள்ளே சென்று படித்தால் இன்னொரு தமிழரை எதிர்த்து, கிண்டல் செய்து இருக்கும். ஈழத்தின் மீது திடீர்க்காதல் வந்துள்ளது சில பார்ப் பனர்களுக்கு!

பிரபாகரனை வைத்துப் பணம் சம் பாதித்தது ஒரு பார்ப்பன வெளியீடு என்றால் நம்பமுடிகின்றதா?

உலகத்திலேயே தம்மைப் பற்றியும், தமது தலைவர்களைப் பற்றியும் வாழைப் பழத்தில் நஞ்சை வைத்துத் தருவதை ஆதரித்துக் காசு போட்டு வாங்கி அவர் களை ஆதரித்து,தம்மையே இழிவுபடுத் திக் கொள்ளும் இனம் தமிழினந்தான்.

பார்ப்பனப் பத்திரிக்கைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழர்கள் தாங்கள் நடத்தும் பத்திரிகைகளிலும் இந்தக் கோமாளித்தனத்தை நடத்துவது வேடிக்கையல்ல, வேதனை !

அண்மையில் பார்த்தால் சில தமிழர்களைப் பயன் படுத்தி அவர்களை எழுத வைப்பதும், அவர்களுக்கு விழா எடுப்பதும் எதற்காக என்பதைப் "புகழுக்காக" மயங்கும் பெரிய மனிதர்கள் புரிந்து கொள்வார்களா? அப்படிப் புரிந்து கொள்ளாதவர்களைத் தமிழர்கள் ஓரங்கட்ட வேண்டும்.

பெரியார் திடல் பலருக்கும் அறிமுக மேடை. வளர்த்து விடும் பள்ளிக் கூடம்.வளர்ந்துவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டதும் அவர்கள் தங்கள் தலைகளிலேயே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது வழக்கம். எத் துணைப் பேர் இந்த மயக்கத்தில் தங் களையே அழித்துக் கொண்டுவிட் டார்கள் என்று பார்க்கும் போது வருந்துபவர்கள் பெரியார் தொண்டர்கள் தான்.

மயக்கம் தெளியட்டும் !

வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவும், தன் மானமும்!

- சோம.இளங்கோவன், அமெரிக்கா

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


அட்சயதிருதியை பித்தலாட்டத்தைப் புரிந்து கொள்வீர்களா?


இன்று தங்கம் (நகைகள்) வாங்கினால் அது பெருகுமாம்! காரணம் அட்சயதிருதியை என்ற ஒரு மூடநம்பிக்கையை யாரோ (ஒரு வேளை தங்கம் விற்பனையாளர்களே அவர்களது வியாபாரத்தைப் பெருக்குவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்) கிளப்பி விட்டிருக்கும் புரட்டு - மூடநம்பிக்கை. இது முற்றும் புரட்டானது.

பகுத்தறிவுள்ள எவராவது இதனை நம்ப முடியுமா?

நாட்டில் நகைகள் பறிப்பு, திருட்டுகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறதே! அதைத் தடுக்க ஏதாவது அட்சயதிருதியையினால் முடியுமா?

அட மூடத்தின் முடை நாற்றங்களே, உங் களுக்கு எப்போதுதான் புத்தி வருமோ? இன்னும் எத்தனை பெரியார்கள் தேவையோ?

தமிழ் ஓவியா said...


அத்வானியின் ஒப்புதல் வாக்குமூலம்


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எனக்கு வியப்பை அளிக்கவில்லை. அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. அங்கு பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்தால்தான் வியப்பு அடைந்திருப்பேன்; பொது மக்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர் லால்கிஷன் அத்வானி கூறியுள்ளார்.

தென் மாநிலத்தில் கருநாடக மாநிலத்தில் 2008இல் தன் அரசியல் கணக்கைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது பி.ஜே.பி.. அந்த ஆட்சி மக்கள் வளர்ச்சிக்கு உகந்ததல்ல; சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்றதல்ல; நேர்மை என்பது கிஞ்சிற்றும் கிடையாது; ஊழல் என்பது ஒரு பொருட்டேயல்ல பி.ஜே.பி. ஆட்சியில் என்பதை யெல்லாம் முடிவு செய்து நடந்து முடிந்த தேர்தலில் பி.ஜே.பி.யை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

இதில் இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாநிலத்தில் உள்ள தனது கட்சியை ஒழுங்கு படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பாரதிய ஜனதாவின் தலைமைக்குப் போதுமான திறமையும், ஆளுமையும் கிடையாது என்பதும் தெள்ளத் தெளிவாகி விட்டது.

பி.ஜே.பி.தான் நல்லாட்சியைக் கொடுக்க முடியும் என்று சொல்லி வந்தவர்கள் கருநாடகத் தேர்தலின் முடிவு அது உண்மையல்ல; நல்லாட்சியைக் கொடுக்க பி.ஜே.பி.க்குத் திறனில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது.

மற்றொன்று; பிஜேபி இந்து மதத்தைக் காப்பாற்றக் கூடியது. இந்துக் கலாச்சாரம் பி.ஜே.பி.யால் காப்பாற்றப்பட முடியும் என்பதையும் கருநாடக மக்கள் உதறித் தள்ளி விட்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் நடைபெற்றுள்ள கருநாடக மாநிலத் தேர்தல் - சில அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறது.

மதத்தை முன்னிறுத்தும் எந்த அமைப்புக்கும் இங்கு இடமில்லை. மதச் சார்பின்மை தான் இந்தியா வுக்கு உகந்தது என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

மக்கள் வளர்ச்சிமீது அக்கறை கொண்டு செயல்படாமல், மதத்தை முன்னிறுத்திப் பேசுவ தெல்லாம் ஏமாற்று வேலையே! ஓர் ஆட்சியின் கடமை மக்கள் வளர்ச்சியே தவிர மதவாதம் அல்ல; மதம், நம்பிக்கை என்பதெல்லாம் குடி மக்களின் தனிப்பட்ட பிரச்சினை - அதனை அரசியல்படுத்தக் கூடாது என்பதும்தான் வாக்காளர்களின் எண்ண மாக இருக்கிறது.

காங்கிரஸ்மீது ஊழல் குற்றச்சாற்று எனும் குற்றப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் பிஜேபியின் யோக்கியதை என்ன? ஊழலின் ஒட்டு மொத்த குத்தகையை ஏகபோகமாக அது எடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதையும் வாக்காளர்கள் சரியாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே ஊழலை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவது போன்ற நாடகத்தை மக்கள் ரசிக்கவில்லை; வைத் தியரே! முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று பொது மக்கள் முகத்தில் அறைந்து கூறி விட்டனர்.

காங்கிரசாகட்டும், வேறு எந்தக் கட்சியாகட்டும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 65 ஆண்டு காலம் சுதந்திரத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டோம். இன்னும் வறுமைக் கோட்டைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் என்ற சுணக்கில் 77விழுக்காடு மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக விவசாயத்தைச் செய்து கொண்டிருந்த விவசாய நாடான இந்தியாவில் அம்மக்கள் விவசாயத் தொழிலை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

அடிப்படைத் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. சீனாவும் இந்தியாவும் ஒரே கால கட்டத்தில் சுதந்திரம் பெற்றன என்றாலும், இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்டு இருந்தபோதிலும் சீனாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் - கற்கவும் வேண்டும். மக்கள் வளர்ச்சி! மக்கள் வளர்ச்சி!! ஆட்சியின் கவனம் இதில் தானிருக்க வேண்டும். 13-5-2013

தமிழ் ஓவியா said...


மதங்கள்


மதங்கள் பிரிவினைக்கும், பேதத் திற்கும் காரணமாய் இருப்பது மாத்திர மல்லாமல், மடமைக்கும், மூட நம்பிக் கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை மடமை என்கின்ற அஸ்தி வாரத்தின்மீதே மதங்கள் இருக்கின்றன.

(குடிஅரசு, 27.7.1946)

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால் சில சிந்தனைகள் கிரிக்கெட்(டு) எனும் போதை

கிரிக்கெட் போதையை - சூதாட்டத்தை எதிர்த்து, வரும் 24ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது.

வேறு யாரும் கிரிக்கெட்மீதான திமிரும் போதையை எதிர்த்துக் கருத்துக்களைக் கூற முன் வராத நிலையில், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் போராட்டத்தையே அறிவித்துள்ளார்.

சூதாட்டம் எப்படியெல்லாம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதற்கு அடுக்கடுக்காக ஆதாரப் பூர்வமான செய்திகள் நாளேடுகளில் வெளி வந்துள்ளன.

மூன்று முன்னணி கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கைதும் செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப் பட்டுள்ளனர்.

எத்தனையாவது ஓவரில் எந்தப் பந்தை எப்படி வீச வேண்டும் என்பதற்குத் தரகர்களுக்கும், விளையாட்டுக்காரர்களுக்கும் சில சைகைகள் காட்டப்படுமாம். அதன டிப்படையில் பந்து வீசுவார்களாம். இதற்காகப் பேசப்படும் பணம் ரூ.70 லட்சமாம்.

விளையாட்டு என்பது வீரத்தை வெளிப்படுத்தக் கூடியது - ஒழுங்கு நெறிகளை ஊட்டும் உன்னதத் துறை விளையாட்டுத்துறை என்ற எண்ணத்தின்மீது இந்தப் பாழாய்ப் போன கிரிக்கெட் வந்து மண்ணை அடித்து விட்டது.

அதுவும் அய்.பி.எல். கிரிக்கெட் (20 ஓவர்) அறிமுகமானபின் பண முதலைகள் இந்தக் களத்தில் இறங்கி (கறுப்புப் பணம்தான் மண்டிக் கிடக்கிறதே!) கிரிக்கெட் காட்டில் பண மழை கொட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள்.

வீட்டில் துருப்பிடித்துக் கிடந்த கிரிக்கெட்காரர்களுக் கெல்லாம் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது.

என்ன வெட்கக் கேடு தெரியுமா? இவர்கள் பெரு முதலாளிகளால் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.

அடிமைகளைத் தான் அல்லது பொருள்களைத்தான் ஏலம் எடுப்பார்கள்; இங்கு என்னடா என்றால் கிரிக்கெட் வீரர்களை (?) ஏலம் எடுக்கிறார்களாம்.

பணத்துக்காக தன்மானத்தை - விளையாட்டின் வீரியத்தை அடகு வைப்பவர்கள் எப்படி விளையாட்டு வீரர்களாக இருக்க முடியும்?

அதுவும் இந்தியாவில் கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களின் பல்லாங்குழி விளையாட்டாகி விட்டது. இந்திய மண்ணுக்குரிய ஹாக்கி, சடுகுடு போன்ற உழைக்கும் விளையாட்டு களில் இவர்கள் கால் பதிக்க மாட்டார்கள்.

சொகுசானதாக இருக்க வேண் டும்; பணத்தையும் இலாவகமாகச் சுண்டி இழுக்க வேண்டும் - அதற்கு பொருத்தமானது கிரிக்கெட் தானே!

பார்ப்பனர்களின் விளையாட்டாகக் கிரிக்கெட் ஆன பிறகு பார்ப்பன ஊடகங்களும் காற்றடித்து ஊதிப் பெருக்கி விளம்பர வானத்தில் வண்ண வண்ணப் பலூன்களாகப் பறக்க விடுகின்றன.

விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர்கள் வீழ்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட்டைப் பார்ப்பதற்கு டிக்கட் வாங்கிட மணிக்கணக்கில் வேகாத வெயிலில் நிற்கிறார்கள்.

சூதாட்டம் கொலை வரை சென்று விட்டது! மாணவர்கள் தேர்வுகளைக்கூடத் தூக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் மைதானத்தை நோக்கி ஓடுகிறார்கள். விளையாட்டின்போது அரைகுறை உடையணிந்த ஆரணங்குகளின் அசிங்கமான நெளிவு, சுளிவுகள் நிறைந்த ஆட்ட பாட்டம்; இளைஞர்கள் நடந்து கொள்ளும் போக்கோ அருவருப்பின் உச்சக் கட்டம்!

இவர்களைக் காப்பாற்ற வேண்டாமா?

விளையாட்டின் மூலம் விபரீதம் என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்து!

நாட்டு நலனில், இளைஞர்கள் நலனில், பொது ஒழுக்கத்தில் அக்கறை கொண்ட ஒவ்வோருவரும் திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க முன் வரட்டும்!

மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பதில் என்ன பயன்?

கழகத்தின் முயற்சிக்கு கை கொடுங்கள் - கைலாகு கொடுங்கள்!

கழகத் தோழர்களே களை கட்டட்டும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! 17-5-2013

தமிழ் ஓவியா said...


இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிரீமிலேயர் அளவுகோல் ரூ.6 லட்சம் மத்திய அமைச்சரவை முடிவு


புதுடில்லி, மே.17- மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறு வதற்கான வருவாய் உச்ச வரம்பை ரூ.6 லட்சமாக மத்திய அமைச்சரவை உயர்த்தி உள்ளது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறிய வர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண் டுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப் புறங்களில் ரூ.9 லட்ச மாகவும் உயர்த்த வேண் டும் என்று இதர பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் சிபாரிசு செய்தது. ஆனால், இது சாத்தியம் இல்லை என் றும், ஒரே மாதிரியாக ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு சிபாரிசு செய்தது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடை பெற்ற மத்திய அமைச் சரவை கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வரு வாய் உச்சவரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நுகர்வோர் விலை குறி யீட்டு எண்ணை கருத் தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இதர பிற் படுத்தப்பட்டோரில் இன்னும் அதிகமானோர் பலன் அடைவார்கள்.

இதுதொடர்பாக, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகமும், மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகமும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று மத் திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் சில முடிவுகள்

குடியரசு தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற தேசிய தலை வர்கள் மறையும்போது, அவர்களுக்கு டில்லியில் தனித்தனி நினைவி டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்படி கட்டுவதன் மூலம், டில் லியில் யமுனை ஆற்றங் கரையில் 245 ஏக்கர் நிலம் போய்விட்டது. இதனால் நிலத்துக்கு பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், இனிமேல் தேசிய தலை வர்கள் மறைந்தால், அவர்களுக்கு தனித்தனி நினைவிடம் கட்டுவது இல்லை என்று மத்திய அமைச்சரவை கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது.

அதற்கு பதிலாக, பொதுவான ஒரே வளா கத்தில் அத்தலைவர் களின் நினைவிடங் களுக்கு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, யமுனை ஆற் றங்கரையில், ஜெயில்சிங் நினைவிடம் அமைந் துள்ள ஏக்தா ஸ்தலத் துக்கு அருகே ராஷ்ட்ரீய ஸ்மிரிதி என்ற வளாகம் அமைக்கப்படும். வருங்காலத்தில் தேசிய தலைவர்கள் மறையும் போது, அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கும், நினை விடம் அமைப்பதற்கும், இரங்கல் கூட்டம் நடத் துவதற்கும் அங்கு இடம் ஒதுக்கப்படும்.

வறுமை கோட்டுக்கு...

வறுமைக் கோட் டுக்கு மேலே உள்ள 10 கோடியே 50 லட்சம் குடும்பங்களுக்கு மானிய விலையில் கூடுதலாக 41 லட்சத்து 80 ஆயிரம் டன் கோதுமையும், 19 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியும் ஒதுக்கு வது என்று பொருளா தார விவகாரங்களுக் கான அமைச்சரவை கமிட்டி முடிவு செய்துள் ளது. கடந்த சில ஆண்டுகளாக தானிய உற்பத்தி அதிகரித்து, கையிருப்பு உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.9 ஆயிரத்து 500 கோடி மானியம் கூடுத லாக செலவாகும்.

இந்திய மருத்துவ கவுன்சில்...

இந்திய மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க மத்திய அரசு நியமித்த ஆட்சி மன்ற குழுவின் பதவிக்காலம் முடிவ டைந்து விட்டது. எனவே, புதிய நிருவாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக, அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்தை குடியரசு தலைவர் விரைவில் பிறப்பிப்பார். காந்தியாருடன் தொடர் புடைய 2 ஆயிரம் பாரம்பரிய இடங்களை பாதுகாக்கவும், புனர மைக்கவும் ஒரு புதிய திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தமிழ் ஓவியா said...


அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்


செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா?

கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மரபு. அந்த மரபை தங்களுக்குச் சாதகமான கருவியாக வைத்துக் கொண்டு, யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு - அதனால் யாரும் கேள்வி கேட்காமல் பஜனை பாடுகின்றவர்களைத் தவிர வேறு யாரும் வாய் திறக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் 110ஆவது விதியின்கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகிறார்கள்.

இதிலே விஷயம் அறிந்த - அரசியல் தெரிந்த நண்பர்கள் சட்டமன்றத்திலே இருக்கிறார்கள். அவர்கள்கூட இதுபற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

(முரசொலி 17.5.2013 முதல் பக்கம்)

தமிழ் ஓவியா said...


சபாஷ்!


தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கையான குணவதி என்பவருக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் பாதுகாப்புப் பணி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாதம் ரூ.4000 பெறும் தற்காலிகப் பணிதான் இது என்றாலும் விரைவில் சம்பள உயர்வும், பணி உயர்வும் கிடைக்கும் என்று மருத்துவ இணை இயக்குநர் கூறியுள்ளார். கோவை சுந்தராபுரம் புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திராவிடர் கழகம் வைத்த கோரிக்கைக்கு இது முதல் வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே, பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.

(விடுதலை, 11.9.1953)

தமிழ் ஓவியா said...


கடவுள் ஒரு பொய் நம்பிக்கை

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று பகுத்தறிவு. 1926இல் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது, அது ஒரு சமூக நீதி-சமத்துவ இயக்கமாகத்தான் உருவெடுத்தது. நீதிக்கட்சியின் வரலா றும் அத்தகையதே. ஆனால் காலப் போக்கில் தன்மான இயக்கமாகவும், அறிவியக்கமாகவும் அது மலர்ந்தது. அறிஞர் அண்ணாவின் தலைமையில், தேசிய இன இயக்க மாகவும் அது வலுப்பெற்றது.

அறிவியக்கங்கள் உலகம் முழு வதும் காணப்படுகின்றன. சாக்ரடீஸ், எபிகூரஸ் தொடங்கி, அறிஞர்கள் பலர் பகுத்தறிவுக் கருத்துகளை முன்வைத் துள்ளனர். இன்று வரை, உலகின் பல பகுதிகளிலும், பகுத்தறிவுச் சிந்தனை யாளர் களையும், அவர்களின் படைப்பு களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கூந படின னுநடரளடி என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே, கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை.

ரிச்சர்டு டாகின்ஸ், இங்கிலாந்தின் காலனி நாடாக அன்று இருந்த கென்யாவின், நைரோபி நகரில் பிறந்தவர். எனினும் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போதே இங்கி லாந்து வந்துவிட்டார். லண்டனுக்கு அருகில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், அமெரிக் காவில் உள்ள கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும் தன் படிப்பையும், ஆய்வையும் நிகழ்த்தியர். இப்போது அவருக்கு வயது 72. தன்னுடைய 65ஆம் அகவையில், 2006ஆம் ஆண்டு அவர் எழுதிய நூல்தான் கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்பது.

31 மொழிகளில் பெயர்க்கப்பட் டுள்ள இந்நூலின் ஆங்கிலப் படிகள் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகி உள்ளன. ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்நூலை, மறைந்த கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசானின் அழகிய மொழிநடை, மொழிபெயர்ப்பு நூலைப் போலன்றி, ஒரு தமிழ் நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற் படுத்துகின்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் பதிப்புரை, படிப்போரின் சிந் தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது.

நூலாசிரியர் டாகின்ஸ், ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதால், அறிவியல் சான்றுகளுடன் இந்நூலுள் பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன. வெறுமனே வாதம் செய்யும் நூலாக அல்லாமல், அரிய அறிவியல் ஆய்வு நூலாக இந்நூல் நமக்குக் கிடைத்துள்ளது. பத்து இயல் களைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்நூல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், கடவுள் மறுப்பையும் பல்வேறு கோணங் களில் முன்வைக்கின்றது.

கடவுள் என்னும் கருதுகோள் எப்படி உருவாயிற்று என்னும் வரலாற்றுச் செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை உடையவர்களின் வாதங்களும், மூன்றாவது இயலில் முழுமையாக இடம் பெற்றுள்ளன. உலக இருப்பு சார்ந்தும், தங்களின் சொந்த அனுபவங்கள் சார்ந்தும், மதங்களின் புனித நூல்கள் சார்ந்தும், மத அறிவிய லாளர்களின் கூற்றுகளைச் சார்ந்தும் கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாகக் கூறப்படும் பல்வேறு கருத்துகள், மிக நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடவுள் இல்லை என்பதற்கு நெருக்க மான நிலையாக, இன்று மேலைநாடுகள் பலவற்றில் கிட்டத்தட்டப் பெரும்பாலும் கடவுள் இல்லை என்னும் வாதம் எழுந் துள்ளது. அது குறித்தும் நூலுள், பல செய்திகள் தரப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்த, இருக்கின்ற கடவுள் நம்பிக்கை, மறுப்பு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையிலான, சுவையான பல வாதங்களை டாகின்ஸ் முன்வைத் துள்ளார். பொதுவாக, ஸ்டாலினும், ஹிட்லரும் நாத்திகர்கள் என்று சொல்லப் படுவதுண்டு.

இவ்விரு நாத்திகர்களும் தான், இரண்டாம் உலகப் போருக்கும், இலட்சக்கணக்கான மக்களின் அழி விற்கும் காரணமாக இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாற்று வைக்கப் படுவதுண்டு. அது குறித்த மிகச் சிறந்த வாதங்களை இந்நூலுள் காண முடிகிறது.

முதலில் இருவரும் நாத்திகர்கள் என்பதே தவறு என்று கூறும் டாகின்ஸ், நாத்திகர்கள் போருக்கும், தீமைகளுக் கும், காரணியர்களாக இருப்பார்கள் என்பது அதைவிடத் தவறு என்கிறார். சோவியத் நாட்டின் அதிபராக இருந்த ஸ்டாலின் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதில் அய்யமில்லை என்று கூறும் நூலாசிரியர், இட்லரைப் பற்றிய செய்தி உண்மையில்லை என்பதைச் சான்று களுடன் மறுக்கிறார்.

தமிழ் ஓவியா said...

இட்லர் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஆண்டவருக்கு மண்டியிட்டு நன்றி செலுத்தினேன் என்று எழுதியுள்ள இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். 1933ஆம் ஆண்டு, அவர் பெர்லினில் நிகழ்த்திய உரையிலும், நாங்கள் நாத்திக இயக்கத்திற்கு எதிரான போரில் ஈடு பட்டோம். அதனை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று பேசியிருப் பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.

நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டதாகக் கூறும் ஒருவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும் என்று கேட்கிறார் டாகின்ஸ்.
அதனைவிட முதன்மையானது - ஒரு வேளை அவர் நாத்திகராகவே இருந் திருந்தாலும், அவருடைய தீய செயல் களுக்கும், நாத்திகச் சிந்தனைக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்னும் அவருடைய கேள்விதான்.

உலகில் இறைநம்பிக்கை உடையவர்கள் அனைவரும், ஒரு குற்றச் செயலில் கூட ஈடுபடவில்லை என்றோ, நாத்திகர்கள் அனைவரும் குற்றப்பரம்பரையினர் என்றோ கூற முடியுமா என்னும் அவர் வினாவிற்கு எங்கே விடை இருக்கிறது.

தந்தை பெரியார், குற்றம் புரிந்து, அதற்கான தண்டனையை ஏற்று, சிறைச் சாலைகளில் உள்ளவர்களில் எத்தனை பேர் நாத்திகர்கள்? என்று கேட்பார். சமூகத்தின் இன்றை நிலைதான் சிறைச்சாலைகளிலும் உள்ளது. அங்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவே. கடவுள் நம்பிக்கை கொண்ட குற்றவாளிகளே எண்ணிக் கையில் மிகுதி.

அடுத்ததாக, அறிவாளிகள் அனை வரையும் இறைநம்பிக்கை கொண்ட வர்கள் என்று எளிதில் கூறிவிடும் ஒரு போக்கும் இங்கு உள்ளது. அப்படித்தான், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான அய்ன்ஸ்டைன், மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்னும் செய்தி இங்கே பரப்பப்படு கின்றது. அதனைச் சான்றுகளுடன் தகர்த்துப் போடுகிறது, ஆசிரியர் வீரமணி அவர்களின் பதிப்புரை.

1954 சனவரி 3ஆம் நாள், அய்ன்ஸ் டைன் தன் நண்பர் எரிக் குட்கிண்ட் டிற்கு எழுதியுள்ள மடலொன்றில், மனித உள்ளத்தின் வலிமை இன்மை யின் வெளிப்பாடாகவும், விளைவாக வும் இருக்கிறது என்பதற்கு மேலாக எதையும் கடவுள் என்ற சொல் சுட்டுவதாக எனக்குப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மிகச் சிறந்த அறிவாளிகள் பலர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்துள் ளனர் என்பது தெளிவாகின்றது.

நூலாசிரியர், விலங்கியல் துறை ஆய்வாளர் என்பதால், தன் கருத்து களுக்கு அறிவியல் ஆய்வுகளையே சான்றுகளாகத் தந்துள்ளார். அதுவே இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு என்று கூறலாம்.

மதம், கடவுள் என்பனவெல்லாம், மற்றொன்றின் உடன் விளையு என்று கூறும் அவர், அதற்குப் பொருத்தமான அறிவியல் செய்தி ஒன்றைத் தருகின் றார். இரவுநேரத்தின் செயற்கை ஒளி, அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாகும். முன்பு நிலவு மற்றும் விண்மீன்களின் ஒளி மட்டுமே இரவில் இருந்தது.

அந்த ஒளியைப் பின்பற்றி விட்டில் பூச்சிகள் பறந்தன. இன்றைய கால மாற்றத்தில் நெருப்பு விளக்குகளும், மின் விளக் குகளும் வந்துவிட்டன. இம்மாற் றத்தைப் பகுத்தறிவுடைய மனிதர்கள் உணர்வது போல, விட்டில் பூச்சிகள் உணர முடிவதில்லை. அதனால்தான் அவை, நெருப்பின் ஒளியை, நிலவின் ஒளி என்று கருதி, அதனை நோக்கிப் பறந்து தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றன.

நடைமுறையில், பகுத்தறிவுடைய மனிதர்களும் கூட, தங்களின் ஆறா வது அறிவைப் பயன்படுத்திக் கால மாற்றங்களைப் புரிந்து, அதற்கேற்பத் தங்களின் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளாமல், பழைய பாதையிலேயே பயணம் செய்கின்றனர். எனவே அறிவியல் பூர்வமாக உண்மைகளை உணர்ந்து வாழ்தலே பகுத்தறிவு என்கிறது இந்நூல்.

கடவுள் என்னும் கருதுகோளைப் பல்வேறு வகைகளில் அணுகி, அத னுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், பகுத்தறிவு வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் உதவும்!

கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை
வெளியீடு: திராவிடர் கழகம்
பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை - 7
நன்கொடை: ரூ.350/
நன்றி: கருஞ்சட்டை தமிழர் இதழ்

தமிழ் ஓவியா said...


சோதிடம் சொல்லி இராஜகுரு ஆனார்கள்!

தமிழகத்தை ஆண்ட மன்னர் களிடமும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். பார்ப்பனர்களை இராஜ குருவாக மன்னார்கள் ஏற்றிருந்தனர். இராஜகுருவின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது அவர்கள் இட்டதே கட்டளை!

இந்நிலையில் மன்னரை பயமுறுத்தி சோதிடத்தைக் காட்டி மன்னருக்கு தோஷம் இருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறி பெரும் பொருளை பார்ப்பனர்களுக்குக் கொ டுத்து பரிகாரம் செய்தனர். இவ்விதம் செய்யாவிட்டால் மன்னருக்கு ஆபத்து வரும், கேடு விளையும் என்றெல்லாம் கூறி பயம்காட்டி சுகபோக வாழ்வை அன்றைக்குப் பெற்று வந்தனர்.

700, 800 ஆண்டுகளுக்கு முன் செய்த அதே காரியத்தை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். 22.4.05 தினமணியில் காலம் உங்கள் கையில் பகுதியில் திண்டிவனத்து நண்பர் ஒருவர் திதி கொடுக்க புரோகிதர் கிடைக்க வில்லை. எப்படிச் செய்ய வேண்டு மென்று கேள்வி கேட் கிறார்! அதற்கு, புரோகி தர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு தானியம் உணவுப் பொருட்களைத் தானமாக அளிக்க வேண்டும்.

கோயிலுக்குச் சென்று அங்குள்ள அந்தணரை வணங்கி தானியப் பொருட்களை கொடுத்து வரவும் என்று பதில் அளித்திருக்கிறார். யாராவது நான்கு ஏழைகட்கு உணவுப் பொருள் கொடுத்து உதவுங்கள் என்று எழுத அவர்களுக்கு மனம் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு உதவுங்கள் என்று இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், தமிழர்களே சிந்தி யுங்கள்.

தமிழன் எக்காலமும் முட்டா ளாக இருக்க வேண்டும், அதன் மூலம் பார்ப்பன இனம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது தானே அவர்கள் எண்ணம்! அந்த சூழ்ச்சி எண்ணத்தில் ஒன்றுதான் சோதிடமும் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனர்களைப் பொறுத்த வரை தான் வாழ தன் இனம் சிறப்புப் பெற எதையும் செய்வார்கள் என்பதே வர லாறு! தமிழ்மொழியின் அறிவுப் பெட்ட கங்களையெல்லாம் வடமொழியில் எழுதி தனதாக்கிக் கொண்டார்கள்! அகத் தியர் திருவள்ளுவரை ஆரிய இனம் என்று கூறிப்பார்த்தார்கள்.

திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் நெல்லை மாவட்டத்தில் பிறந்து தூத்துக்குடி மாவட்டம் கீழஈராலில் அடக்கமானவர். அவர் பரம்பரை (நாடார் இனம்) இன்றும் இருக்கிறார்கள். அந்தப் பரிமேலழகரை ஆரிய இனம் என்று துணிந்து பொய்யு ரைத்தனர்.

திடீரென்று பிள்ளையாரை நடுத் தெருவில் தோன்ற வைத்துதண்ணீர் கொட்டுவதாக கதை கட்டுவார்கள். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்து லாபம் பெறுவார்கள். இவர்கள்தான் சோதிடத் திலேயும் அறிவியல் இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்து லாபம் பெறு வதற்கு வழி வகுத்து விட்டனர்.

மக்களின் பலவீனத்தை சோதி டர்கள் பிழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்!

தமிழ் ஓவியா said...


திருமணப் பொருத்தம்!


திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்! முதலில் அந்தக் குடும்பம், அவர்கள் பூர்வீகம், கல்வி மற்றைய விவரம், மணமகனாக இருந்தால் நிலையான வருமானமுள்ள நிரந்தரப்பணியா, ஒழுக்க முடையவனா, அவன் பழகும் நண்பர்கள் பழக்க வழக்கங்கள், பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் திறனுடையவனா என்றும், மணமகளாய் இருந்தால் குடும்பத்திற்கு ஏற்ற குணநலம் கொண்டவளா, பண்புடையவளா, அனுசரித்துப் போகும் இயல்புடையவளா என்றெல்லாம் பார்த்து விட்டு பேச்சுவார்த்தை தொடங்குவதுதான் முறையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

இப்போது பெற்றோர்கள் எடுத்த எடுப்பில் ஜாதகப் பொருத்தம் என்று பார்க்கிறார்கள். ஜாதகம் முதலிடம் பெறுகிறது. சில நேரங்கில் நல்ல வரனைக் கூட ஜாதகம் பொருந்தவில்லை என்று கைவிட்டு விடுகிறார்கள். சிலர் நல்ல வரை எல்லாம் கழித்து விட்டு பொருந்தக் கூடிய ஜாதகத்தைத் தேடி ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு கஷ்டம் நஷ்டம் ஏற்படவில்லையா? நோய் நொடி வந்ததில்லையா? குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இல்லையா? ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் சிறப்போடு வாழத்தானே செய்கிறார்கள்! ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் வாழ்ந்து விடவில்லை! ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் தாழ்ந்து விடவும் இல்லை.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தமல்ல! இரத்தப் பொருத்தம். இரத்தப் பரிசோதனை!

ஏனெனில் கணவன் இரத்த குரூப் Rh +ve ஆகவும் மனைவியின் இரத்த குரூப் Rh- ve ஆகவும் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. எனவே, மணமக்களின் இரத்தப் பொருத்தம் பார்ப்பதே சிறந்தது. அதை விட்டு விட்டு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது பயனற்றது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

போலந்தும் - லெனினும்!

நமது கல்விப்புரட்சி வேலைகளில் மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும்.

தொழிலாளருடைய ஆதிக் கத்தில் கோவிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது. பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு எதிராக செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்கவும் வேண்டும். - லெனின்