Search This Blog

25.5.13

டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரியாரின் நண்பர் இல்லையா? தினமணி அய்யர்வாளுக்கு பதிலடி


டாக்டர் வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளனர்.

அதன் இணையதளத் தொடக்க விழாவில் பங்கேற்க போயும் போயும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களை அழைத்துள்ளனர் - அந்த நிகழ்ச்சியில் பெரியாரின் நண்பர் என்று டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்களை அழைக்கக் கூடாது என்று புலம்பியிருக்கிறார்.

சென்னை வானொலியில் பணியாற்றும் தோழர் பழ. அதியமான் அவர்கள் பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு எனும் அரிய நூலை (479 பக்கங்கள்) ஆவணமாகத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். அதனை மனதிற் கொண்டுதான் திருவாளர் கே. வைத்தியநாதய்யர் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்க!

தேசியத்தையும், சுதந்திரத்தை, பண்பாடுகளையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரிதும் போற்றினார் அவரை பெரியார் ஈ.வெ.ரா.வின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. அவர் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந்திருக்க மாட்டார். நீதிக் கட்சியின் தீவிரமான விமர்சகராக இருந்தவர் வரதராஜுலு நாயுடு. அவர் பெரியாரின் இறை மறுப்புக் கொள்கையிலும் உடன்பாடு இல்லாதவர். அவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.; தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோரின் நண்பர் என்பது தான் நிஜம்! (தினமணி 12.5.2013 பக்கம் 6)

_ -இவ்வாறு பேசி இருப்பவர் தினமணியின் ஆசிரியர் திருவாளர் கே. வைத்தியநாதய்யர்.

தந்தை பெரியாரின் நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் அவர் கொள் கைகளை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டவர்கள் தானா?

ராஜாஜி அவர்கள் தந்தை பெரியாரைக் குறிப்பிடும் பொழுதுகூட எனது அன்பார்ந்த எதிரி என்கிறார்.

ராஜாஜி அவர்கள் மறைந்தபோது கூட தந்தை பெரியார் அவர்கள் நட்பின் மேலீட்டால் எப்படி துக்க முற்றார் என்பதை திரு. வைத்திய நாதன் அவர்களின் பத்திரிகைக் குருவான திருவாளர் சோ ராமசாமியே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார் (துக்ளக் 15.1.1973).

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர் களிடமிருந்து தந்தை பெரியார் மாறு பட்டு நின்றதுண்டு; கடும் விமர்சனக் கணைகளை ஏவியதும் உண்டு.

அதே நேரத்தில் இருவரும் ஒத்திசைந்து பார்ப்பனர் எதிர்ப்பினைத் துவம்சம் செய்ததும் ஏராளம்.

தந்தை பெரியார் இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று விரும்பினார்; அது குறித்த தகவல் ஒன்று இங்கே.

பத்திரிகை தொடங்குவது பற்றி முதலில் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன் னேன்; அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு, இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான்; அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது; ஒரு கூட்டத்தார் எப்படி யாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும் நடந்தவரை லாபம் நடத்துங்கள் என்றார்.

பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்பு வதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால், அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும்  எழுதி வரும்படியும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச் சாரியார் அவர்களிடம் சொன்னேன் அவர் இச்சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது; அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டுவிட்டு நீ பத்திரிக்கை நடத்தப் போவது சரியல்ல என்றார் (குடிஅரசு 1.5.1927) _ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பத்திரிகையைத் தொடங்கும் போது தனது சக நண்பர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார் பெரியார் என்பதும், அந்த சகாக்களில் டாக்டர் வரதராஜுலு நாயுடு இருந்தார் என்பதையும் தினமணி ஆசிரியர் தம் அறியாமை யிலிருந்து விடுபட்டு, வெளிச்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமது பொது வாழ்க்கைக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதைத் தந்தை பெரியார் அவர்களின் வாயிலாகத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தம். எனது (பெரியாரது) பொது வாழ்வுக்குத் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்களே காரணமாவார். அவரது கூட்டுறவு அந்தக் காலத்தில் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், அக்காலத்தில் எனது தொழிலின் பயனாய் இன்று நான் ஒரு சமயம் ஒரு பெரிய முதலாளியாகவும்; வணிகனாகவும் இருந்திருப்பேன் அல்லது ஒரு சமயம் அம்முயற்சி யால் அநாமதேயப் பாப்பராகவும் இருந்திருப்பேன். எப்படியிருந்தாலும் அவரது நேசமே நான் இன்று 
இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் (புரட்சி 3, டிசம்பர் 1933)

கடந்த எடுத்துக்காட்டு கண்களை மறைத்திருந்தாலும் ஈரோட்டாரின் இந்த எடுத்துக்காட்டு திரு வைத்திய நாதருக்கு சாங்கோ பாங்கமாகத் தெரிவித்திருக்கும் என்று நம்பலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் என்றால் நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் என்பது ஒரு சொலவடையாகவே அமைந்த ஒன்று)

நாம் (பெரியார்) பச்சைத் தமிழில் எழுதுகிறோம். டாக்டர் (வரதராஜுலு நாயுடு) அவர்கள் ராஜதந்திரத் தமிழில் எழுதுகிறார்; ஸ்ரீமான் முதலியார் (திரு.வி.க.) அவர்கள் சங்கத் தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார்; இதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை (குடிஅரசு 1 ஆகஸ்டு 1926).

_ இதுவும் தந்தை பெரியார் அவர்களின் எழுத்து வடிவம்தான்;- எழுத்து நடை வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றே என்று நெற்றியடி கொடுத்து விட்டாரே வெண்தாடி வேந்தர்.

பார்ப்பனர் அல்லாதார் என்ற கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் ஒருக்கால் நாம் இணைத்துப் பேசலாம் என்று நினைக்கக் கூடும்.

பெரியாரையும், வரதராஜுலுவையும் பார்ப்பனர்கள் எந்தக் கண்ணோட் டத்தில் பார்த்தனர்?

இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீதிக்கட்சி தான் கொண்டு வந்தது. அப்பொழுது காங்கிரஸில் இருந்தபடியே ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜுலு அவர்களும்; அதைப் பற்றி பார்ப்பனர்களின் பார்வை என்ன?

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது அவாளின் கண்ணோட்டம் எப்படி இருந்தது?

பெண்களைக் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுகிற பழக்கம் தப்பு என்பதாக  நாம் ஒருமுடிவு செய்து விடுவோமானால் ஈ.வெ. இராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் நாளைக்குக் கோயிலில் சுவாமிக்கு அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள் அதையும் கேட்க வேண்டியதாய் ஏற்பட்டு விடும்!- -----------------------சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபை யில் பேச்சு (குடிஅரசு 11.3.1928).

இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றிப் பாமர ஜனங்களை ஏமாற்றத் தமிழ்நாட்டுத் தேசிய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி ஈ.வெ. ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டு களால் நசுக்குண்டு போயிருந்தாலும் வேறுவிதமான தந்திரங்கள்  இன்ன மும் நடந்து கொண்டு தானிருக்கின்றன (குடிஅரசு 9.3.1926).

தமிழ்நாட்டின் பொது வாழ்வில், முக்கிய பிரச்சினைகளில் இரு கரங்களாக இருந்து பல முக்கிய கட் டங்களில் களமாடிய தலைவர்களை நண்பர்களாகப் பார்ப்பதில் பார்ப்பனர்களுக்கு என்ன கண்ணோவோ தெரியவில்லை.

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந் திருக்க மாட்டார் என்று எம்டன் குண்டைத் தூக்கிப் போடுகிறார் தினமணியின் ஆசிரியர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் தந்தை பெரியாரைப் போல காங்கிரசை விட்டு விலகியதும் உண்டு.

குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் இணைந்ததும் உண்டு. இதற்குச் சாட்சியாக அவாள் ஆத்துக்காரரை விட்டே சொல்ல வைப்போம்.

வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசை விட்டு விலகியபோது, இப்போதுதான் காங்கிரசு படுசுத்தமானது என்று எஸ். சீனிவாச அய்யங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு 26.9.1926).

டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், தந்தை பெரியார் அவர்களும் முறையே காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து போரிட்ட வருணாசிரம ஒழிப்புப் பெருங்களம் சேரன்மாதேவி குருகுலப் போராட் டமாகும். காங்கிரஸின் நிதி உதவியால் சேரன் மாதேவியில் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தின் நிருவாகியாக இருந்தவர் வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் -_- சுருக்கமாக வ.வே.சு. அய்யர்.

குருகுலத்தில் பார்ப்பன மாணவர் களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்களுக்கும் வருண வேறுபாடு காட்டப்பட்டது. தனித்தனி தண்ணீர் பானை என்கிற அளவுக்கு அது அருவருப்பாக இருந்தது. உணவில்கூட உப்புமா, இட்லி  பார்ப்பனர்களுக்கும் பழைய சோறு சூத்திரர்களான பார்ப்பனர் அல்லாதாருக்கும்;

பெரியார் காதில் விழுந்து விட்டால் சும்மா விடுவாரா? செவுள் பிய்ந்து விடாதா? வரதராஜுலு அவர்கள்தான் சாமானியமானவாரா? அந்தப் பிரச்சினையில் காந்தியாரின் வழவழா கொழ கொழா சமாதானத்தையே தூக்கி எறிந்தவராயிற்றே!

சேரன்மாதேவி குருகுலம்பற்றி காங்கிரஸ் செயற்குழுவில் கொந்தளித்த - பரிமாறிக் கொண்ட பிரயோகங்கள் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
வ.வே.சு. அய்யர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. வேத முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டுள்ளார் என்று ஒரு பார்ப்பனர் பூணூல் தாண்டவம் ஆடியது.
ஈரோட்டு எரிமலை வெடித்தது! ஜாதிப்பாகுபாட்டுக்கும், உயர்வு - தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று குமுறினார் பெரியார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த டாக்டர் வரதராஜுலு அவர் களோ அக்னிக் குண்டமாக தகி தகித்தார்.

ஆரியர்களின் வேதகால கலாச் சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

                               ------------------(குருகுலப் போராட்டம் நாரா. நாச்சியப்பன் பக்கம் 52)

திருவாளர் கே. வைத்தியநாத அய்யர் கூறியுள்ளாரே _- டாக்டர் வரத ராஜுலு நாயுடு நமது கலாச்சாரத்தைப் பெரிதும் போற்றினாரென்று. குருகுலப் போராட்டத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு எந்த கலாச்சாரத்திற்காகப் போர்க் குரல் கொடுத்தார்? அந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் தந்தை பெரியாரும், டாக்டர் நாயுடுவும் இரட் டைக் குழல் துப்பாக்கிகளாகத்தானே இருந்திருக்கின்றனர்.

குருகுலப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் டாக்டர் வரதராஜுலு மீது ராஜாஜி உட்பட பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து முறியடித்தவர் தந்தை பெரியார். வரதராஜுலுவின் தியாகம் எந்த மற்றொரு தியாகத்துக்கும் குறைந்ததல்ல. வரதராஜுலுவின் தலைமையில் நம்பிக்கைத் தீர்மானம் இயற்றாமல் எவரும் கூட்டத்தை விட்டு வெளியில் போக முடியாது என்று எச்சரித்தவர் பெரியார் என்பது -_ வைத்தியநாதய்யர்வாள்களுக்குத் தெரியுமா? ராஜாஜி உட்பட நான்கு பார்ப்பனர்கள் காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாக அப் பொழுதே கூறிடவில்லையா?

இன்னொரு களம் மிக முக்கிய மானது -_ அது தமிழ்நாட்டின் அரசி யல் களம்.
1952இல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்த ராஜாஜி அவர் களால் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித் திட்ட ஒழிப்புக் களம்.

சேரன் மாதேவிக்குப் பிறகு அந்த நாயுடுவும், அந்த நாயக்கரும் (டாக்டர் வரதராஜுலுவும், பெரியாரும்) மீண்டும் நாயகர்களாக நின்று ஆச்சாரியாரைப் பந்தாடி பொது வாழ்க்கைக் கோட்டுக்கு வெளியே வீசி எறிந்ததாகும்.
ராஜாஜி முதல் அமைச்சர் பதவியி லிருந்து விலகி ஓடும்படிச் செய்ததில் தந்தை பெரியார் அவர்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மிகப் பெரிய பங்குண்டு.

வேறு வழியின்றி பதவி விலகிய நிலையில் அடுத்து யார் முதல் அமைச்சர் என்ற வினாக்  குறிக்கு விடை யளித்தவர்கள் தந்தை பெரியாரும் - டாக்டர் வரதராஜுலும் ஆவார்கள்.

அந்தச் சந்திப்பு சென்னை அர சினர் தோட்டத்தில் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

தந்தை பெரியார், டாக்டர் நாயுடு, காமராசர், குத்தூசி குருசாமி ஆகியோர் அங்கிருந்தனர். முதல் அமைச்சர் காமராசர் என்று அந்தச் சந்திப்பில் தான் முடிவு செய்யப்பட்டது.

காமராஜர் தயங்கிய நிலையில், தந்தை பெரியார் கொடுத்த துணிவுதான் அப்பொறுப்பை ஏற்கச் செய்தது.

முதல் அமைச்சர் பதவிக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காமராசர் பெயரை முன்மொழிந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆவார்.
தந்தை பெரியாருக்கும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கும் இருந்த இந்த நெருக்கத்தில் நட்பு கிடையாது என்று தினமணியார் கூறப் போகிறாரா?
தந்தை பெரியார் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சென்னை பெரியார் திடலில் கலந்து கொண்ட டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ஆற்றிய உரை (17.9.1956) குறிப்பிடத் தகுந்ததாகும்.

தலைவர் அவர்களே! நண்பர் பெரியார் அவர்களே! சட்டசபை உறுப்பினர் மாநாடு ஒன்று நடந்தது.

கவர்னர் ஒரு விருந்து வைத்திருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் இங்கு கொஞ்சம் பின் தங்கி வர நேர்ந்தது. நான் அய்யாவுக்குப் பத்து வயது இளையவன். எனக்கு மூத்தவரை வாழ்த்துவதற்கு நான் தகுதி உடையவன் அல்லன். பெரியார் அவர்கள் இன்னும் நூறு வயது வாழ வேண்டும். அவரது புரட்சிகள் பயங்கரமானதாகத் தோன்றலாம். வேகமாகப் போகிறார் என்று படும். அவரது புரட்சி பெரும் புரட்சி!

எனக்கு வெகு நாளாய் ஒரு யோசனை உண்டு. பொது இடம் ஒன்றில் பெரியார் அவர்களின் சிலை இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதை நான் மந்திரிகளிடமும் கூறி இருக்கிறேன். இந்த நிலத்தில் (பெரியார் திடலில்) பெரிய மண்டபம் கட்டி பெரியார் அவர்களின் நல்ல சிலையை வைக்கும்படி திராவிடர் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார் அவர்கள் நீடூழி வாழ விரும்புகிறேன்

                                   ----------------------------------(விடுதலை 20.9.1956)
என்றாரே - இதற்கு என்ன பதில்? விளிக்கும் போதே நண்பர் பெரியார் என்றுதானே குறிப்பிடுகிறார்.

நான் சொல்லும் நண்பர் என்பதற்குப் புதுப் பொருள் கொடுக்கப் போகிறாரா தினமணி அய்யர்வாள்?

குறிப்பு: பெரியார் திடலில் மண்டபமும் இப்பொழுது இருக்கிறது _ பெரியார் சிலையும் இருக்கிறது; ஆம்! டாக்டர் வரதராஜுலு நாயுடு வின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரியார் பற்றி வரதராஜுலு நாயுடு''
புதிய கல்வித் திட்டம் குறித்த அரசின் அறிவிப்பு 1953 ஏப்ரலில் வெளியானது. நகராட்சி, பேரூராட்சி நீங்கலாகக் கிராமப் பள்ளிகளிலும் ஆதாரப்பள்ளிகள் தவிர்த்த அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் 1953 (ஏப்ரலில் தொடங்கிய) கல்வி ஆண்டிலிருந்து அத்திட்டம் உடனே நடைமுறைக்கும் வந்தது.
இராஜாஜி முன்னுரைத்த கல்வித் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது.

பெரியார் அக்கல்வித் திட்டத்தை வர்ணாசிரம கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் எனக் கண்டித்தார். தம்மைக் கலக்காமல் அறிவிக்கப்பட்டதால் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிலரிடமும் அதிருப்தி நிலவியது.
அச்சமயத்தில் சேலம் சூரமங்கலத்தில் ஊராட்சி மன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற நமசிவாயம் என்பவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பெரியாருடன் வரதராஜுலு கலந்து கொண்டார். கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி மேற்கொண்டிருந்த பெரியாருக்கு, காங்கிரசுகாரரான வரதராஜூலுவின் அக்கூட்டப் பேச்சு மானசீக ஆதரவாகத் தோன்றியிருக்கலாம்.

பெரியர் ஒரு புரட்சி வீரர், இருப்பதை அழித்துப் புது அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று போராடுகிறவர். நம்மால் அவ்வளவுக்கு வேகமாகப் போக முடியாது. ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலம் கடத்தலாம் என்று நினைப்பவர்கள் நாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே பெரியார் அவர்கள் நினைத்தார்கள் சமுதாய சீர்திருத்தம் எற்பட்டால் தான் சுயராஜ்யம் உதவுமென்று காந்தியார் அவர்களும் இந்தப்படியே கருதினார். சமுதாய சீர்திருத்தம் இல்லாமலே சுதந்திரம் வந்தது. அதன் பலனை இப்போது அனுபவிக் கிறோம். எங்கும் ஜாதி வெறி, ஜாதிப் பூசல்கள் தலைவிரித் தாடுகின்றன. இந்த ஜாதி வெறியெல்லாம் ஒழிய வேண்டும் இன்னும் இந்தக் கட்சிப் பூசல்கள் ஒழிய வேண்டும்.
இன்றைய தினம் பெரியார் அவர்களின் கொள்கையும் சேவையும் பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் இன்றைக்கல்ல இன்னும் 15 ஆண்டுகள் கழித்து பெரியார் அவர்களின் சேவை இந்தத் தேசத்திற்கு எவ்வளவு தேவையானது, அவசியமானது என்பதை எல்லோரும் உணருவார்கள். பெரியார் அவர்களின் சேவை  இந்த நாட்டின் வரலாற்றிலே போற்றி எழுதப்பட வேண்டியது; எழுதப்படும். எனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்குமானால் அந்த மந்திரி சபையிலே பெரியார் அவர்களை ஒரு மந்திரியாக நிச்சம் சேர்த்துக் கொள்வேன் - அவருடைய சேவை தேசத்திற்கு மிகவும் தேவை (விடுதலை, 15 மே 1985).
வரதராஜுலு -பெரியார் உறவு மீண்டும் நெருக்கமாக விட்டதை மேற்கண்ட பேச்சிலிருந்து உணர முடியும்.

(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் -_ டாக்டர் 256_-257

டாக்டர் வரதராஜூலு நாயுடுக்காக பெரியார் சண்டமாருதம்

வரதராஜூலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜூலுவை கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜூலு அவர்களை ஆதரித்தது. சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகைய்ல பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத்துணியும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொது ஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தியோகங்களையும் பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா- அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடி அரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜூலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் - டாக்டர் 224-_225

------------------------  மின்சாரம் அவர்கள் 25-5-2013 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

33 comments:

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா போற்றி வணங்கும் இராம கிருஷ்ண பரமஹம்சரின் கதை


மூளைக் குழப்ப வியாதியால் பைத்தியமாகிவிட்ட கடாதரின் பூர்வாசிரப் பெயர் மாற்றப்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று நாமம் சூட்டப்பட்டு உச்சாணிக் கொம் பில் ஏற்றி வைக்கப்பட்டார். அவரே கூறுகிறார். இறுதியில் தேவியின் ஆணை எனக்கு அருளப்பட்டு விட்டது.

மானுடம் பயன் பெறுவதற்காக உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள் என்று மதப்பைத்தியம் பிடித்த மக்கள் கடாதரரை வேடிக்கை பார்ப்பதற்குக் கூட்டங் கூட்டமாகத் தானேஸ்வரம் தேடிச் சென்றார்கள். படித்த இளைஞர்கள்கூட விவேகானந்தராக ஆகப் போகும் நரேந்திர தத்தா உட்பட அனைவரும் குருவின் காலடியில் அமர்ந்து ஆத்ம தரிசனம் அடைந்தார்கள். நான் படிப்பற்றவன் இருந்தும் என்னைக் காண்பதற்கு மக்கள் இங்கே அலை மோதுகிறார்கள் என்னே விந்தை?

நிரஞ்சன்தர் தனது ஆய்வின் முடிவில் கூறுகிறார் தன்னளவில் ராமகிருஷ்ணர் நேர்மையானவர்தான் ஆனால் அவரது மூளை ஏணல் கோணலாக செயல்பட்டது. அவரது வாழ்க்கை முழுதும் இயற்கைக்கு மாறான நெறிபிறழ்ந்த செயல்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன. அவரது இயற்கைக்கு மாறான நெறி பிறழ்ந்த செயல்களின் கட்டுமீறிய வெளிப்பாடுகள்தான் அவர் அவ்வப் பொழுது கிறுக்குப் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவது.

அவர் வாழ்ந்த காலத்தில் நவீன நோயாளியான அவரது செயல்களுக்குத் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டு விட்டது. வாய்ப்பை வளமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் அவரை வைத்து ஆதாயம் அடைந்தது கடாதரர் கடவுளாக்கப்பட்டார். இதில் அவலம் என்னவென்றால் கடாதரரும் தன்னைக் கடவுள் என்று நம்பும் அளவுக்கு நரம்பியல் நோய் தீவிரமாக இருந்தது.

நரம்பியல் நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனுக்குத் தனது உண்மையான நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. புற்று நோயால் அவதிப்பட்ட ராமகிருஷ்ணர் மரணப் படுக்கையில் கிடந்தார். தனது யோக சக்தியைப் பயன்படுத்தி நோயின் பிடியிலிருந்து மீண்டு கொள்ளுமாறு நரேந்திர விவேகானந்தர் உட்பட அவரது சீடர்கள் அவரை வேண்டினர்.

இராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பொழிப்புரை ஒன்றை எரிச்சலுடன் எடுத்தோதினார். நான் இவ்வாறு வேதனையில் அவதியுறுவது தலைவிதியா என்ன? நோயில் இருந்து விடுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

ஆனால் தேவியின் திருவுளம்பற்றி னாலன்றோ எனது நோய் தீர முடியும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று இராமகிருஷ்ணர் தணியாத தாகம் கொண்டிருந்தார். ஆனால் புற்றுநோயின் கொடுமையால் நீண்ட காலமாக இழுபறியில் தத்தளித்த அவர் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று இறந்தார். மிகுதியான யோக சக்திகள் கொண்டிருப்பதாக நம்பப்பட்ட அவரது விருப்பத்தை நிறைவேற்ற யோக சக்திகள் கை கொடுக்கவில்லை.

(இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர் பிரேம் நாத் பசாஸ்)

தகவல்: பரமத்தி சண்முகம், கரூர்

தமிழ் ஓவியா said...


குருபார்வையும் குருபெயர்ச்சியும்...!



கோபுர தரிசனம்..
கோடி புண்ணியமாம்...?
குரு பார்க்க...
கோடி நன்மையாம்...?
பக்தர்களுக்கு...!
குரு பெயர்ச்சி
கோடி வருமானம்
கோயில்களுக்கு!
கோடி கோடியாய்
குவியுது உண்டியலில்!!
புது பழமொழி
நாதியற்ற நாடாக இருந்தாலும்
நதியற்ற நாடா இருக்கக் கூடாது!
-_ கோ. கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...

தீர்மானம்

1920ஆம் வருடம் திருநெல்வேலி யில் நடந்த 26ஆவது ராஜீவ் மாகாண கான்பிரன்சின்போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில், ஈ.வெ. ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ்ப் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடிச் சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு ஜன சங்கைக்குத் தகுந்தபடி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண் டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


பூனை கெட்ட சகுனமா?


மனிதர்கள் எந்த காரியத்தை செய்ய வெளியே கிளம்பி னாலும் பாதையின் குறுக்கே ஒரு பூனை கடந்து போனால் உடனே அதை கெட்ட சகுனமாக நினைத்து நின்று விடு வார்கள். உண்மையில் பூனை கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் மனித சமூகத்தோடு சேர்ந்து வாழ்பவை. மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும் படைகள் மனித நடமாட்டமே இல்லாத நீண்ட காடுகளையும், பாலைவனப் பகுதிகளையும் கடந்து செல்லும். அப்படி போகும் போது தங்கள் பாதையின் குறுக்கே பூனை போவதைப் பார்த்தால் உடனே நின்று விடுவார்கள். காரணம், அருகில் குடியிருப்புகள் இருப்பதை பூனைகள் காட்டுகின்றன. அருகில் உள்ள அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தம்மை எதிரியாக கருதி தாக்குதல் நடத்தலாம். எனவே படை வீரர்கள் சிறிது நேரம் கழித்து, தங்களை தயார் செய்து கொள்வார்கள். எனவே பூனைகள் எதிரியை அடையாளம் காட்டுவதாக மாறின.

இதுவே நாளடைவில் பூனையைப் பார்த்தாலே படை வீரர்களுக்கு எதிரி நினைவு வரும் நிலையை ஏற்படுத்தியது. படை வீரர்கள், பூனையை எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சம் காலம் போகப் போக பூனையைப் பார்த்தால் தங்களுக்கு கெட்டதாக, அதாவது தாக்குதல் நடக்கப் போகிறது என்று எண்ணத் தொடங்கினார்கள்.

இந்த எண்ணம் படை வீரர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவர்கள் நாட்டிற்கு வந்த பின்னும் தங்கள் பாதையில் பூனை சென்றால் போருக்கு செல்வது போலவே கெட்ட நிகழ்வாக பார்க்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் பூனை ஒரு கெட்ட சகுனமாக மாறத் தொடங்கியது.

இன்றைக்கு மன்னர்கள் ஆட்சி செய்யவில்லை. மக்கள் போருக்கு குதிரை மேல் அமர்ந்து போகவில்லை. எல்லாம் மாறி விட்டது. ஆனால் அன்று உருவான பூனை மீதான பயம் மட்டும் இன்னும் தொடர்கிறது. பூனை ஒரு கெட்ட சகுனமாகவே மக்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்து விட்டது. இன்றைய காலத்துக்கு ஒத்துவராத மூடநம்பிக்கை தான் இது.

தினத்தந்தி 29.4.2013
தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

தமிழ் ஓவியா said...


மழைக்கு வழி தொழுகையா?


கடும் வறட்சி பருவத்தில் மட்டுமல்ல; மக்களின் அறிவிலும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் ஜாடையாம் பட்டி என்னும் குக்கிராமம். 300 குடும்பத்தினர் அவ்வூர் மக்கள். என்ன செய்தார்கள்?

தத்தம் வீடுகளைப் பூட்டி விட்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர் (23.5.2013).

எதற்காக அப்படிச் சென்றார்களாம்? ஊரைக் காலி செய்துவிட்டு வெளியே சென் றால் மழை கொட்டுமாம் - வறட்சி நீங்குமாம். அப்படி ஒரு மூடநம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு.

மூடநம்பிக்கைகளில் உள்ள பலப்பல ரகங்களை நினைத்துப் பார்த்தால் நகைச்சுவை மட்டுமல்ல; பாழும் மூடநம்பிக்கையால் இந்த 2013ஆம் ஆண்டிலும்கூட நம் மக்கள் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்ற பரிதாப உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. பெரம்பலூரில் நூற்றுக்கணக்கான முசுலிம் மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளனர். மழை வேண்டி. (குடையை எடுத்துக் கொண்டு போகவில்லை).

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம். கல்யாணப் பத்திரிக்கை அடித்து - பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து முறைப்படி கல்யாண மந்திரங்களை ஓதி நடைபெறுகிறது.

அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையாம். ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் செல்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாவது மழை பொழிந்ததா - வெப்பம் குறைந்ததா? குடிநீர் கிடைத்ததா?

இன்னும் சில இடங்களில் வருண பகவானை வேண்டி யாகம் நடத்துகிறார்கள். அமிர்த வர்ஷினி ராகத்தை இசைக்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் புழல் ஏரியில் நின்று கொண்டும் சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளத்திலும் குன்னக்குடி வைத்தியநாதய்யர் அம்ச வர்த்தினி ராகத்தில் வயலின் வாசித்த துண்டு; விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை.
இந்த ராகத்தில் பாடினால், பிரார்த்தனை தொழுகை நடத்தினால் வருண பகவான் மனமிரங்கி மழையைக் கொட்டுவார் என்ற நம்பிக்கையாம்.

ஒரு கேள்விக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். கருணையே வடிவானவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் மதவாதிகள், பக்தர்கள் கூறுகிறார்கள். அது உண்மையானால், பிரார்த்தனை செய்தால்தான் மழையைக் கொடுப்பாரா? தொழுகை செய்தால் தான் கடவுளின் கருணைக் கண்கள் திறக்குமா?

மாடுகூட பால் நினைந்தூட்டும் என்று சொல்கிறார்கள் - பகவானுக்கு அந்த ஈர நெஞ்சம் இல்லாது போனது ஏன்?

காரணம் தெளிவானது - கடவுள் என்ற ஒன்று இல்லை - அதனால் மழையைக் கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை!

மழை எப்படி பொழிகிறது? அதற்கான அறிவியல் காரணம் என்ன? என்பதை நான் காம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனையோ, சிறுமியையோ கேட்டால் பட்டென்று பதில் சொல்லி விடுவார்கள்.

மதப்பாசி ஏறிய மதியுடையோர் அறிவைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மவுடீகத்தைப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய மூடநம்பிக்கை வழிகளைப் பின்பற்றுகின்றனர்.

யாகம் நடத்தி நெருப்பை வளர்க்க மரங் களை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக, மரங்களை வளர்த்தால், ஏரி, குளங்களைத் தூர் செய்து வைத்திருந்தால், நிலத்தடி நீரைக் காப்பாற்றி வைத்தால், தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இடம் இருக்காதே!

மரங்களைக் கும்பிடுவதைவிட்டு மரங்களை வளர்க்க முனையுங்கள். அதுதான் மழையைக் கொடுக்கும் - மறவாதீர்கள்! 25-5-2013

தமிழ் ஓவியா said...


காவிரி கண்காணிப்பு தற்காலிகக் குழு அமைப்பு காவிரி மேலாண்மைக் குழு எப்பொழுது?


புதுடில்லி, மே 25- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படு வதற்கு முன்னோடியாக, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காவிரி நதிநீர் பங்கீட் டில் சம்பந்தப்பட்ட தமி ழகம், கருநாடகா உட் பட 4 மாநிலங்களின் தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப் பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணை யத்தையும் உடனடியாக அமைக்க மத்திய அர சுக்கு உத்தரவிட வேண் டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் மாதத்தில் பயிர் சாகுபடி தொடங்க இருப்பதால், இந்த 2 குழுக்களையும் மத்திய அரசு எப்போது அமைக்கும் என்பதை யும், எவ்வளவு அவகா சம் தேவை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை தற்காலிக மாக காவிரி கண்காணிப்பு குழு அமைக்க வேண் டும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கரு நாடகாவைச் சேர்ந்த தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவுக்கு மத்திய நீர் வளத் துறை செயலாளர் தலைமை ஏற்க வேண் டும் என்று உத்தர விட் டனர்.

அதன்படி, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. இக் குழு வில் தமிழகம், கரு நாடகா உட்பட 4 மாநி லங்களின் தலைமை செயலாளர்கள் உறுப் பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியாளர், இந்த குழுவின் உறுப்பினர்- செயலாளராக இருப்பார்.

கண்காணிப்பு குழு வின் தலைமையகம், டில்லியில் செயல்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, இது முற்றி லும் ஒரு தற்காலிக நட வடிக்கை என்று மத்திய அரசு கூறி உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல் படுத்தும் பொறுப்பை இந்த கண்காணிப்பு குழு கவனிக்கும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட் டால், மேற்பார்வை குழுவின் தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களோ உச்ச நீதிமன்றத்தில் அணுக லாம். மற்ற மாநிலங் களுக்கு எதிராக உத் தரவை பெறலாம்.

புதிதாக அமைக் கப்பட்ட காவிரி நீர் கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம், ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவித்து உள்ளன.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் பணியில், இது ஒரு மிகப்பெரிய நடவடிக் கையாக கருதப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


கடவுளின் கருணையோ கருணை! கோவில் தேர் கவிழ்ந்து பக்தர் பலி!


பெரம்பலூர், மே.25- கோவில் தேர் கவிழ்ந்து பக்தர் ஒருவர் உடல் நசுங்கி இறந்தார். மேலும் 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப் பந்தட்டை வட்டம், கை.களத்தூர் ஊராட்சி பாதாங்கியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக தேர் அலங்காரம் செய்யப்பட்டு இருந் தது. தேர் நேற்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. முக்கிய வீதி களை கடந்து தேர் நிலையை அடையும் நேரம் நெருங்கியது. தேரை அவ்வப்போது நிறுத்து வதற்கு வசதியாக தடுப்பு கட்டை போடும் பணியில் சிலரும், தேரை இழுப்பதில் பக்தர்களும் ஈடுபட்டனர்.

தேரை நிறுத்த தடுப்பு கட் டையை போட்டபோது தேர் அந்த தடுப்பு கட்டைக்கு நிற்காமல் அதன் மீது ஏறி பின்னர் திடீர் என்று கவிழ்ந்தது. இதனால் தேரின் 4 சக்கரங்களும் கழன்று தனியாக ஓடின. தேருக்கு தடுப்பு கட்டை போடும் பணியில் இருந்த விழுப் புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டம் திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகண்ணன் (வயது 35) கவிழ்ந்து விழுந்த தேருக்கு அடியில் சிக்கி அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் பாதாங்கி கிராமத்தை சேர்ந்த கோல்டன்ராஜ் (25) உடும்பியத்தை சேர்ந்த கலிய மூர்த்தி (60) சேலம் மாவட்டம் காமக்கா பாளையத்தை சேர்ந்த சதீஷ் (38) ஆகிய 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


முற்றுகிறது விடையம்: நரேந்திரமோடிக்கு அத்வானி எதிர்ப்பு


புதுடில்லி, மே. 25- நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி பிரச் சாரம் செய்ய வேண்டும் என்றும் அவரை பிரத மர் வேட்பாளராக அறி விக்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் வற்புறுத்தி வருகிறார்கள். நரேந் திரமோடிக்கு கட்சியின் உயர்மட்ட தலைவர்களி டம் இருந்தும் மறைமுக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங் களுக்கு சட்டசபை தேர் தல் நடைபெறுகிறது.

தேர்தல் பணிகள் மற் றும் பிரச்சார பொறுப் புகள் நரேந்திரமோடியி டம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட் டது. அவருக்கு மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள் ளார். இது தொடர்பாக கட்சித் தலைவர் ராஜ் நாத்சிங்குக்கு அத்வானி ஒரு கடிதம் எழுதியுள் ளார். அதில் வரும் 5 மாநில சட்டசபை தேர் தல் பொறுப்பாளராக நிதின்கட்காரியை நிய மிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார். 5 மாநில தேர்தலில் கட்சி யின் பிரச்சாரத்தை வழி நடத்திச் செல்ல நிதின் கட்காரிதான் தகுதியா னவர் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

இதன் மூலம் அவர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளது தெரிய வந்துள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகள் நரேந்திரமோடியிடம் 5 மாநிலத் தேர்தல் பொறுப்பை வழங்க வேண்டும் என்று விரும் புகின்றனர். நிதின்கட் காரி தலைவராக இருந்த போது ஊழல் புகார் சுமத்தப்பட்டதால் பதவி விலகினார். என்றாலும் தற்போது அத்வானி சிபாரிசு செய்து இருப் பதை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்க வேண் டிய கட்டாயத்தில் உள்ளார்.

தமிழ் ஓவியா said...

எந்த பொந்தில் எந்த பாம்போ! குருநாத் மெய்யப்பன் கைது!



மும்பை, மே 25- அய்பிஎல் சூதாட்டம் தொடர்பாக மும்பை காவல்துறையில் குருநாத் மெய்யப்பன் நேற்று ஆஜரானார். அவ ரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கைதும் செய்யப்பட் டார். அய்பிஎல் கிரிக் கெட் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய இந்தி நடிகர் வின்டு தாராசிங் அளித்துள்ள வாக்கு மூலம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பனுக்காக சூதாட்டத்தில் ஈடுபட் டதாக காவல்துறையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், விசாரணைக் காக நேற்று ஆஜராகும்படி குருநாத்துக்கு மும்பை காவல்துறையினர் சம்மன் கொடுத்தனர். திங்கட் கிழமை வரை அவகாசம் வழங்க குருநாத் கேட்டார். ஆனால், காவல்துறையினர் மறுத்து விட்டனர். இதையடுத்து, கொடைக்கானலில் தங்கி இருந்த குருநாத், நேற்று மாலை அவசரமாக மதுரை வந்தார். அங்கிருந்து தனி விமானத்தில் மும்பை சென்றார்.

அங்கிருந்து நேராக குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார். அவரி டம் சூதாட்டம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரைக் கைது செய்தனர்.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!


கொளுத்தியது

சென்னையில் நேற்றைய வெப்ப நிலை 108 டிகிரி. அடுத்து இரு நாள்களிலும் வெயில் வறுத்து எடுக்குமாம்! தாங்குவது எப்படியோ!

@@@@@@@@@@@@

தேவை கூடுகிறது

கோடை கால தொடக்க நிலை யில் தமிழ்நாட்டில் பொது மக்களின் மின் நுகர்வு 21 கோடி யூனிட்டாக இருந்தது. கோடையில் மின்சாரத் தின் பயன் அதிகரித்து இப்பொழுது 28 கோடி யூனிட் தேவைப்படுகிறது. மின்வெட்டுக்கு ஏதாவது காரணம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

@@@@@@@@@@@@

இப்படியும் திருட்டு!

செங்குன்றத்தில் திருடர்கள் எவ்வளவு ஜாலியாக இருந்திருக் கின்றனர். ரத்தினசாமி என்பவருக்கு மளிகைக் கடை வியாபாரம்; உறவினர் வீட்டுத் திருமணத்துக்குக் குடும்பத் தோடு வெளியூர் சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு பீரோக் கள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. 25 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் இரண்டு டிஜிட்டல் கேமராக்கள் திருடப்பட்டு விட்டன.

வீட்டுக்குள் நுழைந்து படுக்கை யறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு சிகரெட் புகைத்து திருடிய பொருள் களை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வண்டியைப் பயன்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் திருட்டு, கொள்ளை, கொலை என்பவையெல்லாம் வெகு சொகுசாகவே நடந்து வருகின்றன.

செல்வி ஜெயலலிதா முதல்வர் ஆனதும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடியதாக நம் நாட்டு ஊடகங்கள் ஒலி முழக்கம் செய்தன. இப்பொழுது தமிழ்நாடு என்பது திருடர்களின் உல்லாசப் பூங்காவாகி விட்டதோ!

@@@@@@@@@@@@

மயிர்நீப்பின்...

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் பக்தர்கள் செலுத்தும் முடியின் மூலம் மட்டும் கிடைத்திருக்கும் தொகை ரூ.107 கோடியாம். மயிர் நீப்பின் கவரிமான் சாகிறதோ இல்லையோ மனிதனின் மயிர் நீப்பின் ஏழுமலையானுக்கு பணம் மட்டும் கோடி கோடியாக குவிகிறது.

எவ்வளவு குவிந்து என்ன பயன்? ஏழுமலையான் ஒரே ஒரு பருக்கை யையாவது உண்ணப் போகிறானோ!

@@@@@@@@@@@@

கிரிக்கெட்டு

கிரிக்கெட்டின் முன்னாள் விளை யாட்டுக்காரரும் இந்நாள் எம்.பி. யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். கிரிக்கெட் வாரியத்தில் கொள்ளை யடிக்கும் விடையத்தில் ஓர் அய்க்கிய முன்னணியே கூட்டணியே செயல் படுகிறது என்று கூறியுள்ளார்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவது உட்பட இது போன்றவற்றில் மட்டும் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் கூட்டணிகள் உருவாகி விடுகின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கே முதலாளிகளிடம் பணம் பெறுவதில் பிஜேபிதானே முதல் இடத்தில் இருக்கிறது.

@@@@@@@@@@@@

துப்பாக்கி

மேகாலயாவில் பயங்கரவாதிகள் சிறுவர்களுக்கும் துப்பாக்கி பயிற்சி அளிக்கின்றனராம். ஆர்.எஸ்.எஸ். சிறுவர்கள், பெண்கள் உட்பட துப்பாக்கி பயிற்சி நீண்ட காலமாகவே அளிக்கப் பட்டு வருகிறதே - அது தெரியாதா? டடட

தீக்குளிப்பு!

உணவுக்காக கால்நடைகள் கொல்லப்படுவதைக் கண்டித்து இலங்கையில் கண்டிமா நகரில் புத்தத் துறவி ஒருவர் தீக்குளித்துள்ளார்.

ஆமாம்! இலங்கைப் புத்த துறவி களுக்கு கால்நடைகளை உணவுக் காக வெட்டும் பொழுதுதான் புத் தரின் காருண்யம் நினைவிற்கு வரும். தமிழர்களை வெட்டிக் கொன்றால் - அதெல்லாம் காருண்யக் கடவு சீட்டுக்குள் வரவே வராது!

@@@@@@@@@@@@

இலஞ்சம்

வேலூர் இராணிப்பேட்டை வட் டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம் கொடி கட்டிப் பறக்கிறது என்ற தகவலின் அடிப் படையில் காவல்துறை நடத்திய வேட்டையில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாம். அந்த அதிகாரி சுத்த துப்புக் கெட்டவராக இருப்பாரோ!

இலட்சங்களுக்கு ஏன் ஆசைப் படுகிறார்? கிரிக்கெட் தரகர் வேலை பார்த்திருந்தால் டாட்டாவின் பேர னாகி கோடி ஈஸ்வரன் என்ற பட்டமும் பெற்று இருப்பாரே!

@@@@@@@@@@@@

தட்கல்

டிராவல்ஸ் நிறுவனத்துக்காக, ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்த 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணமுடையின் காரணமாக இது போன்ற வேலைகளில் இறங்குபவர் களைக் கைது செய்வதற்குப் பதிலாக டிராவல்ஸ் உரிமையாளர்களையல்லவா கைது செய்ய வேண்டும்! ரயில்வேயில் பணியாற்றுவோருக்கும் டிராவல்ஸ் முதலாளிகளுக்கும் இடையே உள்ள இரகசிய ஏற்பாட்டை ஒழிக்காமல் நிழலோடு சண்டை போடலாமா?

தமிழ் ஓவியா said...


நமது பணி...


மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கை களைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக் குவதே நமது முக்கிய வேலை.

(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...


இரண்டாண்டு அ.இ.அ.தி.மு.க.வின் ஆட்சி? ஆனந்த விகடனை - சுட்டிக் காட்டி கலைஞர் விளக்கம்


சென்னை, மே 25- இரண்டாண்டுகளில் அ.இ. அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை ஆனந்தவிகடனைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று முரசொலியில் எழுதி இருப்பதாவது:

கேள்வி:- ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சிப் பற்றி தமிழக ஏடுகள் எல்லாம் பயந்து கொண்டு பாராட்டினாலும், அரசின் குறைபாடுகளை அவர் களால்கூடச் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லையே?

கலைஞர்:- உண்மைதான்; இந்த வார ஆனந்த விகடன் இதழில் அம்மையாரின் ஆட்சி யைப் பற்றிப் பெரிதும் பாராட்டியிருந்த போதிலும், அவர்களாலும் சிலவற்றைச் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.

குறிப்பாக ஆனந்தவிகடன் சுட்டிக்காட்டியிருக்கும் அம்சங்கள் வருமாறு :-

சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு என்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா சொல்வதை வழிமொழியும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை. விண்ணை எட்டும் விலைவாசி, சிறு மற்றும் பெருந்தொழில்களைக்கூட மோசமாக்கி நாசமாக்கிய மின்வெட்டு. இந்த இரண்டுக்கும் மத்தியில் கொண்டா டும் சூழ்நிலை மக்களுக்கு இல்லை. விலை வாசி, மின் விநியோகம், சட்டம் ஒழுங்கு இந்த மூன்று துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியைத் தான் பொது மக்கள் சிறப்பான ஆட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அந்த மூன்றி லுமே ஸ்கோர் செய்யவில்லை ஜெ. அரசு.

அரசு அலுவலரிடமிருந்து ஒரு கையெழுத்தோ, கார்டோ வாங்கு வதற்குள் அப்பாவிகள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு மத்திய தர வர்க்கக் குடும்பம் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை 2,500 ரூபாய்க்கு வாங்கியது என்றால், இன்று அதன் சந்தை மதிப்பு விலை 6,000 ரூபாய்க்கும் மேல். இந்த வர்த்தகத்தை அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை.

30 அமைச்சர்களும் யோக்கியசிகாமணிகளாக அமைவது குதிரைக் கொம்புதான். ஆனால் சரிபாதி யாவது சரியானவர் களாக இருக்க வேண்டாமா? ஒரு சுயநல வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட மதிக்காமல், பசை காட்டி னால்தான் காரியம் நடக்கும் என்று செயல்படும் மந்திரிகளை அறிந்துகொள்ள வேண்டாமா?

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட் டார்கள் என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் அங் கிருந்த திருடர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டதுபோல கடந்த இரண்டு ஆண்டு களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறிகள் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தன. தொடர்ச்சியாகத் தவறு செய்பவர்களுக்குக் காவல் நிலையம் தான் தப்பிக்கும் வாசலைத் திறந்து வைக்கிறது. கூலிப்படைகள் பெயர்ப் பலகை மாட்டி தனி வெப்சைட் திறக்காத குறையாகப் பட்டவர்த்தனமாகச் செயல்படுகின்றன. இதைத் தடுக்க காவல் துறையின் உயர் அதிகாரிகளால் முடியவில்லை. அவர் களுக்கு வேறு பிசினஸ் உள்ளது. இப்போதே இதைக் கவனிக்காவிட்டால், அய்ந்தாண்டுகள் முடியும் போது இந்த ஆட்சியால் கண்டுபிடிக்க முடியாத குற்ற வாளிகளின் தொகை நீக்கப்பட்ட மந்திரி களை விடக் கூடுதலாக இருக்கும்.

இது அதிகாரிகளின் அரசாங்கமாக இருக் கிறது. தகுதியற்ற அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் அதிகாரி கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். பல முக்கியமான துறைகளில் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச் சர்களே நடுங்குகிறார்கள். முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளின் குட்புக்கில் இடம் பெற்றிருக்கும் அய்.ஏ.எஸ்.கள் நினைத்தால் எதுவும் சாத்தியம். இத னால் சிலரது வசதி வாய்ப்புகள் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாத உச்சத்தைத் தாண்டி எகிறுகிறது.

சித்திரை மாதம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம், வள்ளுவர் சிலை பராமரிப்பு, சமச்சீர் கல்வி என எல்லாவற்றையும் கருணாநிதி எதிர்ப்புக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதை முதலில் விட வேண் டும். தமிழன்னைக்குச் சிலை வைப்பதை விட்டுவிட்டு, தமிழக அரசு நிர்வாகத்தில் இருக்கும் களங்கங்களைக் களையெடுக்க வேண்டும்.

ஆனந்தவிகடன் எழுதியுள்ள இந்த நீண்ட கட்டு ரையில் மற்ற பகுதிகள் எல்லாம் அம்மையாருக்குப் புகழாரங்கள்தான். அவர்கள் இந்தக் குறை பாடுகளைச் சுட்டிக்காட்டியிருப்பதன் நோக்கமே, இந்தக் குறை பாடுகளில் முதலமைச்சர் அக்கறை காட்டித் திருந்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் இந்த ஆட்சியில் என்னென்ன குறை பாடுகள் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டவே, அவற்றை இங்கே தொகுத்துத் தந்துள்ளேன்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் சூழ்ச்சிக்குத் தோல்விகள்


சென்னையிலும் மற்றும் பல வெளி யிடங்களிலும் சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் என்கிற தேசிய வார்த்தைகளின் பெயரால் நமது பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சி களுக்கு இவ்வாரத்தில் பெருந் தோல்வி யென்றே சொல்ல வேண்டும். சென்னையில் சென்ற 4ஆம் தேதி நடந்த தேர்தல்களின் முடிவானது நமது பார்ப்பனர் களுக்கு முற்றும் விரோதமாகவே போன தோடு, அங்குள்ள பாமர ஜனங்கள் பார்ப்பனர் களின் சூழ்ச்சியை அறிந்து கொண்டோம், அறிந்து கொண் டோம் என்று ஆரவாரம் செய்து விட்டார்கள்.

சென்னைத் தேர்தல் களில் முக்கியமாய் டாக்டர் நடேச முதலியாரை ஒழிக்க வேண்டுமென்பதுதான் நமது பார்ப்பனர்களுக்குப் பெரிய ஆத்திர மாயிருந்தது. அதற்காக வேண்டி ஸ்ரீமான் ஓ.கந்தசாமி செட்டியார் அவர்களைப் பிடித்து, அவருடைய ராவ்பகதூர் பட்டத்தையும் விடச் செய்து, டாக்டர் நடேச முதலியாருக்கு விரோதமாய் நிறுத்தி, எவ்வளவோ பொய்ப் பிரசாரங்களையும் இழிவுப் பிரசாரங்களை யும் செய்து, ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யத் துணிந்தும் கடைசியாய் ஓட்டர்களை ஏமாற்ற முடியாமல் போய் விட்டது.

இதுபோலவே ஸ்ரீமான் குமாரசாமி செட்டியார் அவர்களையும் தோற்கடிக்க வேண்டுமென்கிற எண்ணங் கொண்டு அங்கும் ஸ்ரீமான் இராமலிங்கம் பிள்ளை என்கிற ஒருவரை நிறுத்தி எவ்வளவோ சூழ்ச்சிப் பிரசாரங்களெல்லாம் நடத்தியும் பயன்படாமல் அளவுக்கு மிஞ்சிய தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

டாக்டர் நடேச முதலியார், குமாரசாமி செட்டியார் ஆகிய இரு தலைவர்களையும் தோற்கடித்து விட்டால் பார்ப்பனரல்லாதா ரையே ஒழித்து விட்டதாக நினைத்துக் கொண்டு செய்த பகீரத பிரயத்தனத்தின் பலன், நமது பார்ப்பனர்களை மறுபடியும் இவ்விதக் கெட்ட எண்ணத்தில் தலையிடு வதற்கே கருதுவதற்கில்லாமல் செய்து விட்டதென்றே சொல்லலாம்.

பார்ப்பனரல் லாத கட்சியின் பெயரால் நின்ற ஸ்ரீமான் குமாரசாமி செட்டியாருக்கு 614 ஓட்டுகளும், பார்ப்பனக் கட்சியான சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் நின்ற ஸ்ரீ இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு 47 ஓட்டுகளுந்தான் கிடைத் திருக்கிறது. டாக்டர் நடேச முதலியார் அவர்களுக்கு 454 ஓட்டுகளும் ராவ் பகதூர் பட்டத்தை விட்ட ஸ்ரீ கந்தசாமி செட்டி யாருக்கு 194 ஓட்டுகளுமே கிடைத்திருக் கிறது.

சென்ற வருஷங்களில் பார்ப்ப னரல்லாதார் கட்சிக்குப் பார்ப்பனர்களால் சென்னைத் தேர்தல்களில் பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும், பார்ப்பனக் கூலிகளால் வசைமொழிகளும், அடிதடிகளும், கல்லடி களும், காலித்தனங்களும் நடத்தியிருந் தாலும் பார்ப்பனரல்லாதார் போதுமான பிரசாரம் செய்யாததாலும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை தைரியமாய் எடுத்துச் சொல்லாததாலும் பாமர ஜனங்கள் ஏமாந்து போக நேரிட்டதென்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இது போலவே வெளியிலும் அனேக இடங்களில் பார்ப்பனரல்லாதாருக்குப் பூரண வெற்றி கிடைத்துக் கொண்டு வருவதுடன் பார்ப் பனக் கட்சிக்கு சாவு குறியும் காணப்பட்டு வருகிறது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் கட்சிக்கு எங்கு வெற்றி ஏற்பட்ட போதிலும் அவைகளெல்லாம் பார்ப்ப னர்களின் சூழ்ச்சியை பார்ப்பனரல்லாதார் தைரியமாய் எடுத்துச் சொல்லப் பின் வாங்கி நின்ற காரணங்களினாலும், பார்ப்பனர் களைப்போல் பார்ப்பனரல்லாதார் அனை வரும் ஒன்று கூடி ஒற்றுமையாய் வேலை செய்ய முன் வராததாலுமேயல்லாமல் வேறல்ல.

அல்லாமலும் பார்ப்பனர்களுக்குப் பிரசாரம் செய்வதற்கு மகந்துகளும் மடாதி பதிகளும் தாராளமாய்ப் பணம் கொடுப்ப தாலும், கூலிக்கு உழைப்பதற்குப் பார்ப்ப னரல்லாத வயிற்றுச் சோத்து பிரசாரங்கள் எளிதில் கிடைப்பதனாலும் பார்ப்பனர் சூழ்ச்சி செல்வாக்குப் பெற இடமேற்பட்டு விடுகிறது. அதை எதிர்த்து நிற்க வேண்டு மானால் பார்ப்பனரல்லாதாரிலேயும் பார்ப்பனரல்லாதார்களும் பிரசாரத்திற்குப் பணமும் உண்மையான பிரசாரங்களும் ஏற்பாடு செய்துதானாக வேண்டும்.

இவ்வொரு வருஷத்தில் பார்ப்பனரல் லாதார் கொஞ்சமாவது துணிந்து பார்ப்பனர் களின் சூழ்ச்சியை வெளியிட்டதன் பலனா லும் ஸ்ரீமான்கள் ஆரியா, தண்டபாணி பிள்ளை, சக்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் போன்ற வர்களுக்கு பார்ப்பனர்களின் சாவகாசத்தை விட்டும் காங்கிரசின் ஊழல்களை அறிந்து அவற்றின் நிர்வாகங்களிலிருந்து விலகவும் தைரியம் ஏற்பட்டதன் பலனாகவே பார்ப்பன சூழ்ச்சி தோல்வி அடைய சௌகரிய மேற்பட்டது.

சென்னையிலாகட்டும் மற்றும் வெளியிடங்களிலாகட்டும், சட்டசபை முதலிய ஸ்தாபனங்களுக்கு அபேட்சகர் களாகக்கூட நிறுத்துவதற்கு ஆளில்லாமல் பார்ப்பனர்கள் திண்டாடவும் இவர்களை நம்பி ஏமாந்து இவர்கள் சார்பாய் அபேட்ச கர்களாய் நின்ற இரண்டொருவர்களும் இப்பொழுது ஒவ்வொருவராய் விலகிக் கொண்டு போவதையும் பார்த்தால் இந்த பிரசாரங்கள் சென்ற வருஷத்திலேயே தொடங்கியும் இப்பொழுது விலகிய கனவான்களுக்கு சென்ற வருஷத்திலேயே விலகும்படியான தைரியம் இருந்தும் இருக்குமானால் இது வரையில் பார்ப்பனர் சூழ்ச்சியும் அதன் பலனாய் ஏற்பட்ட காங்கிர சுயராஜ்யக் கட்சிகளும் மாண்டு ஒழிந்து போயிருக்குமென்பதுடன் மகாத்மாவின் ஒத்துழையாமைக் காங்கிரஸ் மறுபடியும் தொடங்கப்பட்டிருக்கு மென்றே சொல்லலாம்.

மகாத்மாவின் காங்கிரஸ் தொலை வதற்கு அப்பார்ப்பனர்களே முக்கிய காரணஸ்தர்க ளென்று சொல்ல வேண்டு மானாலும்கூட, அக்காரணங்களுக்கு மேற்சொன்ன பார்ப்பனரல்லாத தலைவர் களும் இதுவரை உதவியாயிருந்து வந்ததும் ஒரு காரணமென்பதையே நாம் வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இனியும் பார்ப்பன சூழ்ச்சியோ, சுயராஜ்யக் கட்சியோ, பார்ப்பன காங்கிரசோ ஒரு கடுகளவு நமது நாட்டில் ஒரு கணம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது நமது பார்ப்பனரல்லாதாரின் சுய நலமும் சமுகத் துரோகமும் வயிற்றுப் பிழைப்பு தேசபக்தியுமே காரணமேயல்லாமல் வேறல்ல வென்பதை உறுதியாய்ச் சொல்லுவோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 08.08.1926

தமிழ் ஓவியா said...


தமிழ் சுயராஜ்யா


பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளைப்போல் பார்ப்பனரல்லா தாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பனரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல்லாதாரின் க்ஷீணத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வருவதை உலகமறியும்.

சின்னாட்களுக்குமுன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. சுயராஜ்யா பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சுயராஜ்யா பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமியிருந்த பார்ப்பனரல்லாதவர் களன்று. இதைப்பற்றி திராவிடன் கூறியுள்ள முத்து போன்ற எழுத்துக்களைக் கவனிப்போம்.

தமிழ் சுயராஜ்யா அற்பத்தனமாயும் அயோக்கியத் தனமாயும் எழுதத் துவங்கிவிட்டது மிகவும் வருந்ததக் கதாகும். உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சௌந் தரிய மகாலில் பெருந்திரளாய்க் கூடியிருந்தவர்கள் அனைவருமாம். வீடுதோறும் பிறப்புக்கும், கலி யாணத்துக்கும், இழவுக்கும் அழையா விட்டாலும் நாய்போல் வந்து பல்லைக் காட்டி அரையணா, ஒரு அணா பெற்றுப் பொறுக்கித் தின்பவர்கள் பார்ப்பனர் களே, நிருவாகசபை உத்தியோ கங்கள் முதல், கேவலம் செருப்புத் துடைத்தல், கும்ப கோணம் வேலையில் ஈடுபடல் ஆகிய இழிதொழில்கள் செய்து கால்களை நக்கிப் பொறுக்கித் தின்று வயிறு பிழைப்பவர்கள் பார்ப்பன மாக்களேயன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.

இதைப்பார்த்த பின்னும்- இவ்வாறு அந்த பார்ப்பனப் பத்திரிகையால் பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும் மறையாத மாசுடையோராய் இழித் துரையாடப் பெற்ற நக்கிப் பொறுக்கிகள் என்ற வார்த்தையைக் கேட்டபிறகும் - தன் நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின் சுத்த ரத்தம் ஓடப் பெறும் எவராவது - பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்த எந்த ஆண்மையுடையோராவது இனி சுயராஜ்யாப் பத்திரி கையை கையில் தொடுவாரா? கண்ணில் பார்ப்பாரா? மானம், வெட்கம், ரோஷம், சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும் இனி அப்பத்திரிகையைப் பார்க்கவும் தொடவுமாட்டார்களென்றே நம்புகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 18.07.1926

தமிழ் ஓவியா said...

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி

தமிழ்நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர்கள் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசி யில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலா சாலை ஏற்படுத்த வேண்டு மென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.

இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக் கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணிவேர் நுனி வரை நுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழி யெனக்கொண்டு, தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார்,, ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா.பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும், தமிழுக்கும் உள்ள பேதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 01.08.1926

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்



அச்சம்

செய்தி: திருப்பதி கோயில் நகைகள் அனைத் தும் சரியாகவே உள்ளன. பக்தர்கள் அச்சம் அடைய வேண்டாம்.

- திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை

சிந்தனை: இந்த அறிக் கையைப் பார்க்கும்பொழுதே அச்சப்பட வேண்டிய அள வுக்கு ஏதோ நடந்திருக் கிறது என்பது புரிகிறதே!

தமிழ் ஓவியா said...

முக்கிய தகவல் கல்லீரல் புற்று நோயை தடுக்க தடுப்பூசி



சென்னை, மே 26- சர்வதேச ஜீரண (கேஸ்ட் ரோஎன்டராலஜி) ஆரோக்கிய தினம் ஆண்டு தோறும் மே மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி, இந்திய கேஸ்ட்ரோ என்டராலஜி சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் வி.பாலசுப்பிர மணியன் ஆகி யோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நோய் வர காரணமாக இருப்பது உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துவது மற்றும் ஹெபடைடஸ் பி, ஹெபடைடஸ் சி வைரஸ்தான். கல்லீரலை சுற்றி கொழுப்பு படர்ந்து அதனால் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஹெபடைடஸ் பி வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹெபடைடஸ் சி வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. தற்போது தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு ஹெபடைடஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.1000 மட்டுமே செலவு ஏற்படும்.

இதுவரை ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இதனால் கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை மத்திய அரசுக்கு கலைஞர் எச்சரிக்கை


என்.எல்.சி. நிறுவன பங்குகளைத் தனியா ருக்கு விற்க முற்படுவது, தமிழர்களை வீண் வம் புக்கு இழுக்கும் செயல் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மே 23-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி னார். அந்தக் கடிதத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வும், அது கூடாது என்று எழுதியுள்ளார்.

ஆனால் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கை வலியுறுத்தி 2012 ஏப் 21-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.

ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று மட்டும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.

ஒப்பந்தத் தொழி லாளர்கள் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் நாள் கணக்கில் பேச்சு வார்த்தை நடந்ததே தவிர, முதல்வரோ, அமைச்சர்களோ இதில் ஈடுபடவில்லை.

இறுதியாக இந்தப் போராட்டம் 2012 ஜூன் 5 -ஆம் தேதி முடிவுற்றது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் நாரா யணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இந்தக் கருத்து புதுவை உள்பட தமிழ கத்துக்கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமானதாகும். எனவே, என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது.

அது தேவையின்றி, தமிழர்களை, குறிப்பாக நெய்வேலி தொழிலாளர் களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்.

அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு, மேலும் ஓர் எதிர்ப்பை தேடிக் கொள்ள வேண்டாம் என கலைஞர் எச்சரித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கா. அப்பாதுரையார்


பன்மொழிப் புலவர் என்று சொன்னால் முதன்மையாக கா. அப்பாதுரையார் அவர் களைத் தான் குறிக்கும். அவரது ஏழாம் பாட்டனார் 40 மொழிகளை அறிந்தவர் என்றால் நம் அப்பாதுரையார் 10 பத்து மொழிகளில் பண் பட்ட புலமையாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 170 நூல்களை யாத்தவர் இவர். ஜஸ்டிஸ் லிபரேட்டர், திராவிடன், விடுதலை முதலிய ஏடுகளில் பணியாற் றியவர் ஆவார். இவர் சென்னை வருவதற்கு முதற் காரணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.

இவர் எழுதிய இந்தியா வில் மொழிச் சிக்கல் எனும் ஆங்கில நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கம் முன் னுரை எழுதினார் என்றால், அது என்ன சாதாரணமா?

சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர் களின் தலைமையில் தொகுக் கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் துறையில் இணை ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையும் பன்மொழி புலவருக்கு உண்டு.

தந்தை பெரியார் அவர் களிடம் நெருக்கமான தொடர்பு இருந்தது. திராவி டர் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகும் அள வுக்குக்கூட அவர் பேசப்பட்ட துண்டு. தென் சென்னையில் கழகத்தை வளர்க்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் என்றால் யாருக்கும் ஆச் சரியமாக இருக்கலாம்.

மதச் சார்பற்ற முறையில் குறளுக்கு ஓர் உரையினை எழுதுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொள்ள, முப்பால் ஒளி எனும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி திருக்குறளுக்கு விளக்க வுரை எழுதினார். இருபது அதிகாரங்களுக்கு அவர் எழுதிய உரை ஆறு தொகுதி யானது.

திராவிடர் இயக்க ஆர்வ லரும், பதிப்பக உரிமையாளரு மான வெள்ளையம்பட்டு சுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் கா. அப்பா துரையார் குறிப்பிடும் கருத் தினை வெளியாக்கியுள்ளார்.

மொழி வகை மூன்று

1) திராவிட மொழிக் குடும்பம்

2) ஆசியாவை உள்ளடக் கிய ஆரிய மொழிக் குடும்பம்

3) மேலை நாட்டார் மொழிக் குடும்பம் அறிஞர் கால்டுவெல், மறைமலை அடிகளார், தேவ நேயப்பாவாணர் மூவரும் தமிழ் தந்த மூவர் என்றார்; படித்தவர்களைவிட தந்தை பெரியார் சிந்தனையும் செய லாற்றலும் மிக மிகச் சிறந்தது - ஈடு இணையற்றது என்று குறிப்பிடுகிறார் புலவர்.

சென்னை பெரியார் திடலில் சங்கராச்சாரி யார்? எனும் தொடர் சொற் பொழியை ஆறியவர் அன் றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள். ஒரு தொடருக்கு அப்பாதுரையார் தலைமை வகித்தார் (5.6.1983) அப்பொழுது அவர் சொன்னார்.

ஆதி சங்கரர் எழுதிய மனேசாப் பஞ்சகம் எனும் நூலில் கடவுள் மறுப்புக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகள் கூடாது, உருவ வணக்கம் தவறு என்றும் ஆதிசங்கரர் கூறியுள்ளார் என்று குறிப்பிட்ட அப்பாதுரை யார் ஆதி சங்கரரைக் கொன்றது பார்ப்பனர்களே என்கிறார்.

கா. அப்பாதுரையின் நினைவு நாள் இன்று (1989).

- மயிலாடன்

குறிப்பு: முகம் மாமணி எழுதிய அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் நூலினைப் படியுங்கள்.

தமிழ் ஓவியா said...


இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதா? தமிழர் தலைவர் கண்டனம்!


இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது பொன் முட்டை யிடும் வாத்தினை அறுப்பதாகும். இந்த முயற்சியினை மத்திய அரசு கைவிட வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது லாபந்தரும் பொதுத்துறை நிறுவனம். நவரத்தினங்களில் ஒன்று. முன்பே 10 சதவிகித பங்குகளை விற்கும் யோசனை வெளிவந்தபோது, திராவிடர் கழகம், அதுபோலவே தி.மு.க. அத்துணைக் கட்சி தொழிற் சங்கங்கள் எல்லாம் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின! தி.மு.க. அய்க்கிய முற் போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தது; அதன் விளைவு அன்று இத்திட்டம் கை விடப்பட்டது.

மீண்டும் இப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழி போல் 5 சதவிகிதப் பங்கினை விற்கும் ஆபத்தான யோசனை முளைவிட்டுக் கிளம்பியுள்ளது.

இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமல்ல; அ.தி.மு.க.வும் தமிழக அரசும் அதன் தோழமைக் கட்சிகளும்கூட இதனை எதிர்த்துள்ள நிலையில், இந்த வகை யில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, (காங்கிரஸ்) தேவையின்றி தமிழ் நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அழித்துக் கொள்ள முடிவு செய்து விட்டது போலும்!

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தைக்கூட லாபத்தில் இயங்க வைக்க முன் வருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தில் இயங்கும் நிறுவனப் பங்குகளை இப்படி தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

பொன் முட்டையிடும் வாத்தினை கொல்லும் பேதைமைத்தனம் அது என்பதல்லாமல் வேறு என்ன?

எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கொள்கை முடிவுகள் கோணல் இல்லாமல் இருக்க வேண்டும்; தனியார் கொள்ளைக்குக் கதவு திறந்து விடுவதாக இருக்கக் கூடாது!

சென்னை
26.5.2013

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அந்தோ, இசை உலகின் சங்கநாதமான டி.எம். சவுந்தரராஜன் மறைந்தாரே!


தமிழ் இசை உலகில் தனிப் பெரும் மன்னர்மன்னனாய்த் திகழ்ந்து, 60 ஆண்டு காலம் இணையற்றவராக ஏறு நடைபோட்ட அருமை இசைவாணர் டி.எம். சவுந்தரராஜன் அவர்கள் நேற்று (25.5.2013) காலமானார் என்ற செய்தி இசை உலகிற்கு மட்டுமல்ல அந்த இசையின் இன்பத்தை நுகர்ந்த பயனாளிகளான பொது மக்களுக்கும் வெகு மக்களுக்கும் கூட மிகப் பெரிய இழப்பாகும்.
அவரது வெண்கல நாதக்குரலால் நல்ல தமிழ்க் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் உயிர்ப்புப் பெற்று உலா வந்தன. அவரது ஆற்றல் மிகவும் தனித்தன்மையானது.

பொதுவாக, இசைக்கு மயங்காதவர்கள் இல்லை என்றாலும்கூட, இவரது இசையில் ஈர்க்கப்பட்டு தம்மை மறந்தவர்கள் கோடிக்கணக்கில். அவர் தமது 91 வயதில் - பத்தாயிரம் பாடல்கள் கண்டு அதற்கு அப்பாலும் கண்டவர் என்ற நிலையில் - மறைந்தார் என்பது நிரப்பப்பட முடியாத சோகம் என்றாலும், அவரது பாடல்கள் ஒலிக்கும் போதெல்லாம் அவர் நம்முடன் வாழ்கிறார்; மறையவில்லை என்ற உணர்வுடன் அவருக்கு நாம் வீர வணக்கம் செலுத்துகிறோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

26.5.2013

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


ஓடி விளையாடும் ஆட்டமா?


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுப்பதும், அதனை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கண்டனக் குரல் கொடுப்பதும், திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பதும் வழமையான ஒன்றாகி விட்டது. ஓடி விளை யாடும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

2004ஆம் ஆண்டில் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதே குறைந்தபட்ச செயல் திட்டம் (Common Minimum Programme) ஒன்று அறிவிக்கப்பட்டதே நினைவிருக்கிறதா?

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவ னங்கள் எதுவும் அரசின் கையை விட்டுப் போகாது; அதன் பங்குகளை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அதில் கூறப்பட்டதே - மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?

பிரதமர் உள்ளிட்டவர்கள் இதுபற்றியெல்லாம் பொறுப்போடு சிந்திக்க வேண்டாமா? அரசு ஒரு வார்த்தையைச் சொன்னால் அதனைக் காப்பாற்றும் பண்பாட்டைக் கை கொள்ள வேண்டாமா?

1930இல் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டு கர்ம வீரர் காமராசர் அவர்களின் முயற்சியினால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட் டுக்குக் கிடைத்தது!

டி.டி.கே. போன்ற பார்ப்பனர்கள் இது பயன்படாத திட்டம் என்று சொன்ன நிலையில், வெளிநாட்டு நிபுணர்கள் சிறந்த திட்டம் என்று கூறினர்.

1957இல் தொடங்கப்பட்டாலும், அது இலாபம் தரும் நிறுவனமாக மாறியது - 1976ஆம் ஆண்டு முதல்தான். 1976இல் கிடைத்த லாபமும் வெறும் மூன்று கோடி ரூபாய்தான்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஆந்திரா, கருநாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் வரை - இந்த நெய்வேலி அனல் மின்சாரத்தால் தான் வெளிச்சம் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

தனக்கு மிஞ்சிதான் தான தருமம் என்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதெல்லாம் பழைய மொழிதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்பது என்பது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது.

பிஜேபி ஆட்சியில் இருக்கும் பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனித்துறையும், அதற்கென ஓர் அமைச்சருமே இருந்து வந்தார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியானாலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் பொருளாதாரக் கொள்கையில் சம எடை உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர்.

சோப்பு, சீப்பு விற்க வந்த வெள்ளைக்காரன், பிறகு இந்தியாவையே 350 ஆண்டுகள் வரை ஆண்டான்; அவனை விரட்டி சுதந்திரம் பெற்றதாக மார் தட்டினோம்.

இப்பொழுது என்னடா என்றால் சோப்பு, சீப்பு, காய்கறிகள், மளிகை சாமான்கள் வரை விற்பதற்கு வெளிநாட்டுக்காரர்களை சிகப்புக் கம்பளம் போட்டு, பூர்ண கும்பமும் அளித்து, வரவேற்கத் தயாராகி விட்டோம்! இதற்குப் பெயர் சுதந்திர நாடாம்.

புதிய பொருளாதாரம் என்பதன் உண்மை யான பொருள் என்னவென்றால் ஒரு நாட்டின் சுதந்திரத்தை சூட்சமமான முறையில் இன்னொரு நாட்டுக்கு விலை பேசுவதே!

தனியார்த் துறைகளில் இருந்தவற்றை நாட்டுடைமையாக்குவது தான் சோசலிசம் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை, அதன் பங்குகளை தனியா ருக்கும், வெளிநாட்டுக் காரர்களுக்கும் விற்பது என்ற தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது என்ன இசமோ தெரியவில்லையே!

மக்கள் விழிப்புணர்வுதான் இதற்கெல்லாம் முடிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மையாகும். 27-5-2013

தமிழ் ஓவியா said...


பிள்ளையார் உடைப்பு!


1953 - இதே நாளான மே 27 இல் தமிழ்நாடே - ஏன் இந்(து)திய நாடே திடுக்கிடக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்தி யவர் தந்தை பெரியார்.

ஆம்! பிள்ளையார் உடைப்புப் போராட்டம் தான் அது. புத்தர் விழா வில் தந்தை பெரியார் பேசிய உரையை ஒலி பரப்புவதாக ஒப்புக் கொண்டு ஒலிப் பதிவும் செய்த அகில இந்திய வானொலி நிலையம், உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. நட்டக் கணக்குப் பெரியார் வரலாற்றுப் பேரேட்டில் ஏது? முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார். புத்தர் ஜெயந்தியன்று நாடெங் கும் பிள்ளையார் பொம் மைகளை உடையுங்கள் கழகத் தோழர்களே என்று ஆணையிட்டார்.

ஆட்சியோ ஆச்சாரி யாருடையது - பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள் என்று வன் முறைக்குத் தூபம் போட்டார். ஆனாலும் அய்யா அவர்கள் அறிவித்த வாறே நடத்தியும் காட் டினார்.

இவ்வளவுப் புரட்சிகர மான போராட்டத்தை நடத்தினாலும் தந்தை பெரியார் எப்படி வழி காட்டினார்? போராட்டம் என்றாலே வன்முறை வெறியாட்டம் என்ற அகராதியைத் தயாரித் துள்ள தலைவர்கள் (?) தெரிந்து கொள்ள வேண் டும்.

இதோ பெரியார் கூறுகிறார்:

விக்ரகங்களை உடைக் கிறேன் என்றவுடன் கோயிலுக்குள் போய் புகுந்துஉடைப்போம் என்று யாரும் கருத வேண்டாம்; இந்தப்படி கோயிலுக்குள் புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்சத் தேவையில்லை - கோயிலுக்குள் யாரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு வந்து இன்றைய கோயி லில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச் சொல்லி, அல்லது கடை களில் விற்கிறதே, வர்ணம் அடித்த பொம்மை கள், அதைக் கடையிலே வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு நடு ரோட்டிலே போட்டு உடைப் போம்! (விடுதலை 4.5.1953) என்றார்.

வருணாசிரம ஜாதி ஏற்பாட்டையும் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட கடவுளையும் எதிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இந்தப் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்ற முறையில் நடத்தப்பட்ட போராட்டம் இது. - மயிலாடன் 27-5-2013

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் நியமனம்! கர்நாடக அரசின் அட்வகேட் - ஜெனரலாக சட்டமேதை ரவிவர்மக் குமார் நியமனம்!


பெங்களூரு - 27.5.2013 கர்நாடகாவின் மேனாள் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான சட்டமேதை பேராசிரியர் ரவிவர்மக்குமார் அவர்கள் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞராக (Advocate General) அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று நாள்களுக்கு முன் பொறுப்பேற்றார்.

அவருக்குக் கழகத் தலைவர் அவர்கள் தொலை பேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்!

சமூக நீதி வழக்குரைஞர் ஃபோரத்தின் டிரஸ்டிகளில் ஒருவர் இவர்.

சிறந்த சமூக நீதியாளர். அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். கி.வீரமணி சமூக நீதி விருது இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனன் செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட்டோமானால், கொல்லுவாரின் றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


கடமை வீரர் மனோகரனுக்கு நமது புகழ் அஞ்சலி!


எத்தனை பேர் நம் நாட்டில் கடமையாற்றுவதில் தவறாதவர்கள்? என்ற ஒரு கணக்கெடுத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்! பெரும்பாலும் பணியாற்றும் பலரும் - எந்த நிறுவனமும் நம் நாட்டில் எளிதில் விலக்கல்ல - கடியாரத்தையும் காலண்டரையும் தான் பார்த்துப் பணியாற்றுகிறார்களே தவிர, தங்கள் மனச் சாட்சிக்குக்கூட அவர்கள் நீதி வழங்குவதில்லை! எப்போது இடை வெளி - மணி - வருவதேகூட கால தாமதம் பல சாக்குப் போக்குகள்! சமாதானங்கள்! விளக்கங்கள் - வியாக்யானங்கள் இத்தியாதி! இத்தியாதி!

நெருக்கடி நிலை பிரகடனத்தைக் கூட இன்னமும் நம் வயதானவர்கள் சிலர் சிலாகித்துப் பேசுவதற்கே ஒரு முக்கிய காரணம் - அப்போது எல்லாம் அரசு பணிமனைகள் சரியாக இயங்கின. எவரும் தாமதித்து வர மாட்டார்கள். லஞ்சம் கேட்டதில்லை. திருமணங்களைக்கூடச் சிக்கனமாக நடத்தினர்; காரணம் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளைக்கூட அதிகாரிகளை விட்டு கணக்கெடுத் தது அரசு - அபராதம் - சிறை வருமே என பயந்து எல்லோரும் கடமையாற்று வதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர் என்பர்.
உண்மைதான்!

மனிதர்களுக்கு சுதந்திரக் காற்று - சுயக்கட்டுப்பாடும் அல்லவா தனி அடையாளம் - அவர்களது ஆறாம் அறிவு காரணமாக. அதை விடுத்து எப்போதும் கட்டுப்பாடு! கடுமையான அடக்குமுறை இருந்தால்தான் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க முடியும் என்றால் அது என்ன வாழ்க்கை? சிறைக்கூட வாழ்வு அல்லது சர்க்கஸ் கூடார மிருக வாழ்க்கை! இல்லையா?

தானே கடமையாற்றும் நல்லவர் பலர் இன்னும் நாட்டில் இல்லாமல் இல்லை!

இதோ ஒரு அருமையான உடல் புல்லரிக்கும் செய்தி. கடமையாற்றி விட்டு உயிரைவிட்ட ரயில் என்ஜின் ஓட்டுனர் மனோகரன்!

இதோ அந்தச் செய்தியைப் படியுங்கள்! கும்மிடிப்பூண்டி, மே.25- கும்மிடிப்பூண்டி- சென்னை இடையே சென்ற மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சாகும் முன் ரெயிலை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத் திற்கு மின்சாரரெயில் நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயிலை மனோகரன் (வயது 48) ஓட்டி வந்தார்.

ரெயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. பயணிகள் ஏறிய தும் ரெயில் புறப்பட்டது. கவரைப் பேட்டையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜின் டிரைவர் மனோகரன் திடீர் என்று ரெயிலை நிறுத்தினார். நடுவழியில் ரெயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் என்னவோ ஏதோ என்று பயந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் டிரைவர் மனோகரனும் கீழே இறங்கினார். வலியால் நெஞ்சை பிடித்த படி மனோகரன் தரையில் சாய்ந்தார்.

உடனடியாக அதிகாரிகள் மனோகரனை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோகரனின் உயிர் பிரிந்தது. மரணத்தின் பிடியில் இருந்த போதும் ரெயிலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற் றுவதற்காக சிரமப்பட்டு ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி இருக்கிறார் மனோகரன்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன் இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும் அந்த ரெயிலில் வந்த பயணிகள் கண்ணீர் மல்க மனோகரனின் மனிதாபிமானத்தை நெகிழ்ந்து பாராட்டினார்கள். மரணம் அடைந்த மனோகரனின் சொந்த ஊர் திருவள்ளூர் ராஜீவ்நகர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பல நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி விபத்து நேராமல், ஸ்டேஷன் கவரைப் பேட்டை அருகில் கொண்டு வந்து ரயிலை நிறுத்தி விட்டார்.

அவருக்கு நெஞ்சு வலி. மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார் அந்த கடமை வீரர் மனோகர்! அவருக்கு நமது வீர வணக்கம். விபத்தினை தவிர்த்தார். இவருக்கு ரயில்வே துறையினர் தனி சிறப்பு விருது - வழங்க வேண்டும் குடும்பத் தினருக்கு - செய்வார்களா?

தமிழ் ஓவியா said...


சட்டம் ஒழுங்கு - அபாய நிலை!


நாட்டில் சட்டம் ஒழுங்கு வெகு நேர்த்தியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்படு கிறது; அவ்வப்பொழுது அரசு சார்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் அன்றாடம் நாட்டில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் வேறு எப்பொழுதும் கேள்விப்படாதவை - நடக் காதவை.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலை. ஆளுங் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுகிறார்கள் - இரவு நேரத்தில் மட்டுமல்ல; பட்டப் பகலிலேயே கொலைகள் பட்டவர்த்தனமாக நடைபெறத் தொடங்கி விட்டன.

ஏதோ குக்கிராமங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெரு நகரத்திலேயே குலை நடுங்கும் கொலைகள்.

காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரி மாவட் டத்தில் தொடங்கப்பட்ட - தாழ்த்தப்பட்டவர் களின் பகுதிகள் எரிப்பு என்பது இப்பொழுது மரக்காணம் வரை பரவி விட்டது.

அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் நிலைமையைச் சமாளித்து விட்டதான நெருப்புக் கோழி மனப்பான்மை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி விடாது.

மக்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் வன்முறையை நேரில் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள் - ஏடுகளிலும் படித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப்படாது.

வீட்டைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ள பொருள்கள், நகைகள் பணத்திற்கு உத்திரவாதம் கிடையவே கிடையாது.

வெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் ஓய்வும் எடுத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக, எந்தவிதப் பதற்றமுமின்றிப் பொருள்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி செல்லுகிறார்கள் என்றால் இவை எல்லாம் சினிமாவில் நடப்பதுபோல் தெரியவில்லையா?

காவல் நிலையம் அருகே படுகொலை என்றெல்லாம் செய்தி வருகிறது.

பட்டப்பகலில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் பறிக்கப்படுவது சர்வ சாதாரணம். தங்க நகை என்று நினைத்துப் பறித்துச் சென்றவன், அது போலி என்று தெரிந்து கொண்டபிறகு, அந்தப் பெண்ணிடம் திரும்பி வந்து ஓர் அறை அறைந்து விட்டுச் சென்றான் என்று எல்லாம் சேதி வருகிறதே - இது எங்கே கொண்டு போய் விடும்?

கொலைகாரர்களும், கொள்ளைக்காரர் களும் எளிதாக பிணை பெற்று வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக் கிறது. பிணையில் வெளிவந்த ஆளே வெட்டிக் கொல்லப்படும் செய்தியும் வருகின்றது.

இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - வாய்ச் சவடால் விடுவதற்கு; மக்களின் உயிருக்கும், உடைமைக்கு உத்தரவாதம் என்பது மிகவும் அடிப்படை உரிமைப் பிரச் சினை. இதனைச் செய்து கொடுக்க முடியா விட்டால் அரசாங்கம் இருப்பது என்பதற்கே பொருளில்லாமல் போய் விடும்.

மூல காரணத்தைக் கண்டு அறிவதில் அரசும், காவல்துறையும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.

தேவை வெறும் அறிக்கையல்ல - நடை முறையில் மாற்றம்தான்!

ஊடகங்கள் மவுனசாமியார் ஆகிவிட்டன என்ன பின்னணியோ! யார் அறிவார் பராபரமே!28-5-2013

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கேள்வி: மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கலைஞர்: அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கூறுகிறேன். அந்தக் கருத்துக் கணிப்பு 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதற்கும் தற்போது எடுக்கப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதாக உள்ளது. 2005ஆம் ஆண்டு உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக மத நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை எடுத்த போது, இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் மத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மத நம்பிக்கைபற்றி அண்மையில் உலகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 51 ஆயிரத்து 927 பேரிடம் இதுபற்றி கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு மத நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகித அளவிற்கு இந்தியர்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தக் கணக் கெடுப்பில் தெரிய வந்திருப்பது, சீனாவில் 47 சதவிகிதம்; ஜப்பானில் 31 சதவிகிதம்; செக் குடியிருப்பில் 30 சதவிகிதம்; பிரான்சில் 29 சதவிகிதம்; இந்தியாவில் 3 சதவிகிதத்தினர் தான் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மே 29- இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டு கோள் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: தமிழக மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு, தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோணி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?
கலைஞர்: இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வரு கிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழ கத்தில் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டு கோளை விடுத்து விளக்கியுள்ளோம். இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்களே, இலங்கையில் தமிழர் மறு வாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்தியாவில் இலங்கை ராணு வத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகா ரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை என்று கூறினார். அப்போதே அதற்குப் பதி லளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.

அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத் தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் புரிந்து கொண்டு அதற் கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கை யாகும்.

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியடையும்!



நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள் கூட இப்போது தேவையில்லை. நம் கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இல்லாமலிருந்தாலே போதும். மனித அறிவும், சமுதாயமும் நல்ல வண்ணம் வளர்ச்சியடையும்.
(விடுதலை, 24.7.1969)

தமிழ் ஓவியா said...


திராவிடக் கட்சிகளுடன் உறவு கிடையாதா? கூட்டணி வைக்க பாமகவை யாரும் அழைக்கவில்லையே: மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, மே 29-திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட வாரியாக மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம், நேற்று (28.5.2013) காலை அன்பகத்தில் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், அசன் முகமது ஜின்னா, சுபா சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு, துணை அமைப்பா ளர்கள் வடிவேல், ஆனந்தம், சுரேஷ், பிரபாகர் ராஜா, ஆனந்த் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
ஓராண்டுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தில் விதிக்கப்பட்ட சில விதிமுறைகள் அடிப் படையில் நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்ந் தெடுத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் 5000 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஓராண்டு செயல்பாடு பற்றி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சரியாக பணியாற்றாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. சில இடங்களில் மாற்றப்பட வேண்டிய நிலையும் இருக்கிறது. அந்த பணியும் முறைப்படுத் தப்படும்.

கேள்வி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்: சட்டம், ஒழுங்கே இல்லை. பிறகு எப்படி எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியும்.

கேள்வி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளாரே?
பதில்: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. 2006இல் கலைஞர் முதல்வ ரான பிறகு, மீண்டும் அந்த திட்டத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டார். நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று தேவையான நிதியை பெற்று வந்தோம். 90 சதவீத பணிகள் திமுக ஆட்சியில் முடிந்துவிட்டது.
2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த பணிகளை தொடர்ந்திருந்தால் 6 மாதத்தில் திட்டம் முழுமையாக முடிந்திருக்கும். ஆனால், அப்படி செய்யாத தால் தேக்க நிலை இருந்தது. இப்போது கூட, பணிகள் முழுமை பெறவில்லை. அவசர கோலத்தில் திறந்து வைக்கப்படுகிறது என்று செய்தி வந்துள்ளது. இதுதான் உண்மை. பல பகுதிகளில் பணிகள் முழுமை அடைய வில்லை. புதிய தலைமைச் செயலகம், சேது சமுத்திர திட்டம் போல், இந்த திட்டத்தையும் கிடப்பில் போடாமல், திறந்து வைப்பது வரவேற்கதக்கது. மீதமுள்ள பணிகளை முழுமையாக முடித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

கேள்வி: ராமதாசை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: நான் அவரை சந்திக்கவில்லை. மருத்துவ மனையில் இருந்த துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரிக்க சென்றேன். அப்போது, எதிர் அறையில் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் கட்சியை சேர்ந்த தனராஜ் இதை தெரிவித்ததால் நான் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தேன்.

கேள்வி: திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி கூறியிருக்கிறாரே?

பதில்: எந்த திராவிட கட்சியினர் இவர்களை அழைத் தார்கள் என்று தெரியவில்லை.

கேள்வி: அய்பிஎல் சூதாட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடுமா?

பதில்: இதுபற்றி கட்சித் தலைவர் கலைஞர் அறிவிப்பார்.