Search This Blog

19.5.13

பகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை! -பெரியார்


சிந்தனையாளர் சங்கம் இப்போது தான் ஏற்படுகிறதென்றும், இதற்கு முன் இருந்தவை சிந்தனையற்ற மிருகங்களின் சங்கம் என்பதே பொருளாகும்.

 உலகில் மனிதன் ஒருவனுக்குத் தான் சிந்தனா சக்தி உண்டு. மற்ற எந்த ஜீவனுக்கும் சிந்தனா சக்தி மாற்றிக் கொள்ளத் தெரியாது; மனிதன் ஒருவன் தான் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவும், நலனுக்கேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியான அறிவினைப் பெற்றி ருக்கின்றான்.

மிருகங்களோடு மிருகங்களாக கண்டதைப் புசித்துக் கொண்டு குகையில் வாழ்ந்து கொண்டிருந்தவன், படிப்படியாக வளர்ந்து இன்று உணவை வேக வைத்து பல சுவைகளோடு உண்பதோடு வீடு கட்டிக் கொண்டு, அதில் பல வசதிகளை செய்து கொண்டு வாழ்கின்றான். மற்ற பிராணிகள் முன் எப்படி வாழ்ந்ததோ, அதுபோல்தான் இன்றும் வாழ்ந்து வருகிறது. இப்போது நாம் அடியோடு பகுத்தறிவில்லாத ஜீவனாக இல்லை, சில விஷயங்களில் மட்டும் இன்னும் காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
உணவு, உடை, உறையுள் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித்து நலனுக்கேற்ப தன் அறிவைக் கொண்டு மாற்றிக் கொள்கிற மனிதன் கடவுள் - மத - மூட நம்பிக்கையின் காரணமாக இன்னும் மடையனாக, வளர்ச்சியடையாதவனாக, இழி மகனாக இருந்து கொண்டிருக் கின்றான். இந்நிலைமையை எடுத்துச் சொல்லி இந்த விஷயங்களிலும் அவன் அறிவு பயன்பட வேண்டும் என்பதை சிந்திக்கத் தூண்டுவதற்காகவே இச் சிந்தனையாளர் மன்றமென்பதாகும்.

கடவுள் - மதம் - சாஸ்திரம் - முன் னோர்கள் - தெய்வீக சக்தி பொருந்திய வர்கள் - பழமை என்கின்ற இவைகளின் காரணமாக, இவைகளைப் பற்றி சிந்திக் கக் கூடாது. சிந்தித்தால் நரகத்திற்குப் போக வேண்டும். பாவம் என்றெல்லாம் சொல்லி மனிதனை மடையர்களாக்கி விட்டார்கள். இதற்கு ஆட்பட்டவர்கள் உலகில் பல பாகங்களிலுமிருக்கிறார்கள் என்றாலும் மற்ற நாடுகளிலிருப்பதைவிட நம் நாட்டில் அதிகமிருக்கக் காரணம், நம் நாட்டில் தான் இலட்சக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலனடைய ஒரு கூட்டம் இருக் கிறது. ஆதலால் அக்கூட்டத்தார் அதனை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நாட்டில் முதன்முதல் மனிதன் அறிவு பெற வேண்டும் - எதையும் சிந்திக்கின்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று நான் ஒருவன்தான் தொண்டாற்றிக் கொண்டு வருகிறேன். இதை நான் ஆணவமாக சொல்வதாகக் கருதக் கூடாது.


எனக்கு இந்த உணர்வு எப்படி வந்ததென்றால் எங்கள் வீடு பணக்கார வீடு என்பதோடு பக்தர்கள் வீடானதால் எங்கள் வீட்டிற்கு நிறைய பக்தர்கள், புராண பிரச்சாரகர்கள், புலவர்கள் வருவார்கள். அவர்களோடு சிறு வயது முதல் வாதாடு வேன். எனது கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாதபோது அவர்கள் மிக சாமர்த்தியமாக தம்பி ரொம்ப கெட்டிக்காரன் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்.

இப்படி சிறு வயது முதல் இயற்கையாக வாதாடுகிற தன்மை ஏற்பட்டது. எனக்கு என்று 10, 20 பேர் சேர்ந்தவர்கள். என் கேள்விகளுக்கு எவனாலும் சமாதானம் சொல்ல முடியவில்லை. காரணம், அவர்கள் எல்லாம் மடமையின் காரணமாக பலவற்றை ஏற்றுக் கொண்டிருப்பதால் அதை மீறி சமாதானம் சொல்ல அவர் களால் முடிவதில்லை.

இப்படி வாயாடியாக இருந்து பின் முனிசிபல் சேர்மன் ஆனேன். சேர்மனாக இருக்கும்போதே பொதுத் தொண்டு செய்து வந்தேன். அப்போது காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்ததால் சமு தாயத் தொண்டு வேஷம் போட்டது. அதைப் பார்த்து நானும் சமுதாயத் தொண்டு செய்ய வேண்டுமென் கின்ற ஆர்வத்தில் காங்கிரசில் போய்ச் சேர்ந்தேன். என்னோடு திரு.வி.க., வ.உ.சி., வரத ராஜூலு நாயுடு போன்ற பல தமிழர்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.

நாங்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்து பிரச்சாரம் செய்த காரணத்தால் மக் களிடையே அப்போது ஆட்சியிலிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் மீது பற்றும், ஆதரவும் பெருக ஆரம்பித்தது. மக்கள் ஆதரவு தங்களுக்கு அதிகமிருக்கிறது. தேர்தலில் நின்றால் வெற்றி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதும், காங்கிரஸ் தேர்தலில் ஈடுபடுவது இல்லை சட்டசபைக்குச் செல்வது போன்றது என்று சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றிக் கொண்டு தேர்தலில் நிற்பது என்று ஆரம்பித்தது.

காங்கிரஸ் தேர்தலில் ஈடுபடுவதாக இருந்தால் பார்ப்பனரல்லாத  மக்களுக்கு 100-க்கு 50 பாகம் ஒதுக்கி வைத்து விட்டு மிகுதியில் எல்லோரும் போட்டியிட வேண்டுமென்று சொன் னேன். முதலில் அதற்கு சம்மதித்தார்கள். பிறகு காஞ்சி புரத்தில் நடைபெற்ற காங்கிரசில் இதையே தீர்மானமாகக் கொண்டு சென்றேன்.

என்னுடைய தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விட்டால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், ஓட்டிற்கு விடாமல் இந்த காங்கிரசில் அடிப்படைக் கொள்கைக்கு மாறானது என்று சொல்லி தள்ளி விட் டார்கள். அந்த மாநாட்டிலேயே காங்கிரசை விட்டு நான் கோபித்துக் கொண்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கை கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு, காங்கிரஸ் ஒழிப்பு, காந்தி ஒழிப்பு, பார்ப்பான் ஒழிப்பு ஆகிய அய்ந்து காரியங்களுமேயாகும். இதில் காந்தியை பார்ப்பானே ஒழித்து விட்டான். மிச்சமிருப்பது கடவுள் - மதம் - காங்கிரஸ் - பார்ர்ப்பான் ஆகிய நான்குமேயாகும்.

நமது பகுத்தறிவு பிரச்சாரத்தால் மக்கள் எவ்வளவு தெளிவு பெற்றிருக் கிறார்கள் என்பதற்கு அவர்கள் இந்த பகுத்தறிவு ஆட்சியைக் கொண்டு வந்ததே போதுமே! இந்த ஆட்சியிலுள்ளவர்கள் கடவுள், மதம் ஆகியவைகளுக்கு விரோதி என்பது, எல்லா மக்களுக்குமே தெரியும் பகுத்தறிவாளர் ஆகாத காரியம் ஒன்று மில்லை. பகுத்தறிவிற்கு எதிரில் எதுவுமே நிற்க முடியாது. அவ்வளவு சக்தி பகுத்தறி விற்குண்டு. இன்றைக்கிருக்கிற விஞ்ஞான புதுமைகளையெல்லாம் பாதிரியோ, சங்கராச்சாரியோ, முல்லாவோ, பிஷப்போ கண்டுபிடிக்கவில்லை. பகுத்தறிவுடை யவன் கண்டு பிடித்ததாகும்.

நம்மில் இன்னும் இதுபோன்ற பகுத்தறிவுவாதிகள் தோன்றாததற்கு காரணம் பல ஆயிரக்கணக்கான ஜாதிகள், கடவுள்கள், மதங்கள். அவற் றிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட புராண, இதிகாச, சாஸ்திரங்கள் ஆகியவை நம் அறிவை வளரவிடாமல் தடை செய்த தாலேயேயாகும்.

மனிதன் வளர்ச்சியடைய வேண்டு மானால், அவனது குறைகள் நீங்க வேண்டுமானால், சமுதாய இழிவு ஒழிய வேண்டுமானால் மனிதன் பகுத்தறிவைக் கொண்டு சிந்திப்பது ஒன்றினால்தான் முடியும்.
நமது மக்கள் முட்டாள்கள், மூட நம்பிக்கைகாரர்கள், சரித்திரம் தெரிந்த நாள் முதலான ஈனஜாதி மக்கள் அவர்களிடையே அறிவை எடுத்துச் சொல்வதற்கு இதுபோன்ற அரசியல் சார்பற்ற மன்றங்கள் நிறையத் தேவை. இப்போது சென்னையில் அரசாங்கத்தில் உயர் பதவியிலிருக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து பகுத்தறிவாளர் கழகம் என் கின்ற பெயரில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அரசாங்கத்தில் பதிவு செய் துள்ளார்கள். கோவையில் சிந்தனை யாளர் பேரவை என்கின்ற பெயரில் இரண்டும், மதுரை, திருச்சி, தாராபுரம், நாமக்கல் போன்ற நகரங்களிலும் இதுபோன்ற மன்றங்கள் ஏற்படுத்தி யுள்ளார்கள். இன்று இங்கு ஏற்படுத்தி யுள்ளார்கள்.

இதில் அரசாங்க உத்தியோகஸ்தர் களையெல்லாம் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் யாவரையும் சேர்க்க வேண்டும். உங்களுக்குள்ளேயே ஒவ் வொன்றைப் பற்றியும்  வாதாட வேண்டும். மற்ற பகுத்தறிவு வாதிகளை அழைத்து மாதம் ஒரு முறையாவது பிரச்சாரம் செய்யச் சொல்ல வேண்டும். பகுத்தறிவுக் கருத்துள்ள நூல்களை வரவழைத்து படிக்க வேண்டும். மற்ற மக்களுக்கும் பகுத்தறிவைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்களிடையே இருக்கிற இழிவு - மடமை - நீண்ட நாட்களாக இருந்து வருகிற அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டு மென்கின்ற தொண்டினை  செய்து வருகிற நாங்கள் அரசியலில் ஈடுபட்டால் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியாது. இந்த உண்மைகளை எடுத்துச் சொன்னால், மக்கள் ஓட்டளிக்க மாட்டார்களே! ஆன தனாலே நாம் அரசியலாலே முன்னேற்ற மடைய முடியாது. பகுத்தறிவாலே ஒரு துணிவு ஏற்பட்டால் தான் நாம் மாற்ற மடைய முடியும் .

--------------------------------------23.10.1970 அன்று கோபிச்செட்டிபாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.12.1970

29 comments:

தமிழ் ஓவியா said...


பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை




சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் - சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்கள் காலத்திலிருந்தே, மத்திய அரசு, இதர பிற்படுத் தப்பட்டோருக்கு(Other Backward Classes) 27 சதவிகித இட ஒதுக்கீட் டினை வழங்கி வருகிறது. இவர்களில் முன்னேறிய வர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சத்து அய்ம்பதாயிரம் ரூபாய்க்கு மிகாமல் வரு வாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த உச்ச வரம்பை நகர்ப்புறங் களில் ரூ. 12 இலட்சமாக வும், கிராமப் புறங்களில் ரூபாய் 9 இலட்சமாக வும் உயர்த்த வேண் டும் என்று இதர பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் பரிந் துரை செய்தது. ஆனால் இந்த அள விற்கு சாத்தியம் இல்லை என்றும், ஒரே மாதிரியாக 6 இலட்சம் ரூபா யாக உயர்த்தலாம் என்றும் மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய் தது. இந்த நிலை யிலேதான் பிரதமர் டாக்டர் மன்மோ கன் சிங் அவர்கள் தலை மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதர பிற் படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை நான்கரை இலட்சம் ரூபாயிலிருந்து ஆறு இலட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய் யப்பட்டுள்ளது எனச் செய்தி வெளிவந்துள்ளது.

தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானம்

18-4-2008 அன்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, சமூக நீதிப் பயணத்தில் நாம் என்ற பொருள் பற்றி விவாதிப்பதற்காக நடைபெற்ற தி.மு. கழக உயர்நிலை செயல் திட் டக் குழுக் கூட்டத்தில், நீண்ட நேரம் விவாதித்து, நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் வரு மாறு :-

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமை யிலும், திருமதி சோனியா காந்தி அவர்கள் வழி காட்டுதலிலும், மத்தி யிலே அமைந்துள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை நிறைவேற்றிடும் வண்ணம், இந்திய அரசியல் சட்டத் தில் 93ஆவது திருத் தத்தைச் செய்து, அதனடிப்படையில் மத்திய அரசின் உயர்கல்வி நிலை யங்களில் பிற்படுத் தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை நிறை வேற்றியதையும்; அந்தச் சட்டத்தின் செல் லத்தக்க தன்மையினை (validity),, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் ஏற்றுக் கொண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும்; கழகத் தின் உயர்நிலை செயல் திட்டக் குழு மனமார வரவேற்று, பாராட்டுத் தெரிவித்துக் கொள் கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் - 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கிவிட வேண்டு மென்று (exclusion of creamy layer) தெரிவித் திருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.

திராவிட முன்னேற் றக் கழகத்தைப் பொறுத்த வரை தொடக்கத்திலி ருந்தே இடஒதுக்கீட் டுக்குள் பொருளாதார அளவுகோலைத் திணிப் பதையோ, பிற்படுத்தப் பட்டோருள் பொருளா தார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக் கீட்டிலிருந்து விலக்கி வைப்பதையோ ஏற்றுக் கொண்டதில்லை.

தமிழ் ஓவியா said...


பெரியார், அண்ணா, காமராசர் பாடுபட்டது...

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழகத்தில் நடத்திய பெரும் கிளர்ச் சியின் காரணமாகவும் - பெருந்தலைவர் காம ராஜர் அவர்கள் கொடுத்த அழுத்தத் தினாலும் (pressure) - பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் முன் வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951ஆம் ஆண்டு நிறைவேற்றிய முதலாவது திருத்தத்தின் மூலம், இணைக்கப் பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில் சமூகரீதியாக வும், கல்வி நிலையிலும் (socially and educationally) என்ற சொற்றொடர் தான் இணைக்கப்பட் டது.

அப்போது சிலர் பொருளாதார ரீதியாக (economically)’ என்ற சொற்றொடரும் இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தியும், அத னைப் பண்டித நேரு அவர்களோ, அன்றைய சட்ட அமைச்சர் டாக் டர் அம்பேத்கர் அவர் களோ ஏற்றுக் கொள்ள வில்லை. சமூகரீதியாக என்பது பரந்துபட்ட பல பொருள்களை உள் ளடக்கிய விரிவான தொரு சொல்லாகும். (‘socially is a much wider word including many things’) என்று பண்டித நேரு பதில் விளக்கமளித் தார்.

அன்றிலிருந்து இன்றுவரை சமூகரீதி யாகவும், கல்வி நிலையி லும் என்ற சொற் றொடர் இந்திய அரசி யல் சட்டத்தில் எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத் தப் படாமல், நிரந்தர மாகிவிட்ட நிலையில்; பொருளாதார ரீதியாக என்ற இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெறாத சொற்றொடரைப் பயன் படுத்தி பிற்படுத்தப்பட் டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரி வினரை இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கிவிட வேண்டும் என்று சொல் வது, பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக் கீட்டினை நீர்த்துப் போகச் செய்துவிடும். ஏழ்மையைப் போக்கவா இடஒதுக்கீடு?

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டு களாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி நிலை யிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு - அரசி யல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

ஒரு குடும்பத்தினு டைய ஆண்டு வருவாய் என்பது ஆண்டுக்காண்டு பல்வேறு காரணி களால் வேறுபடுவது கண்கூடு. எனவே, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வருமான வரம்புக்கு மிகுந்த வரு மானத்தின் காரணமாக இடஒதுக்கீட்டுக்குத் தகுதியில்லை என்று சான்றளிக்கப்பட்ட ஒருவர், வேறு ஒரு ஆண்டில் வருமான வரம்பிற்கு உட்பட்ட வருமானத்தின் காரணமாகச் சான்றிதழ் பெறுவதற்கு வாய்ப்புண்டு. அதைப்போலவே, ஒரே குடும்பத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதி பெற்றவராகவும், மற்றொருவர் மற்றொரு ஆண்டில் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதியில்லாதவராகவும் ஆகி விடுவதற்கும் வாய்ப்புண்டு. இது ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளை களுள் வேறுபாட்டையும், சில நேரங்களில் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கு வதற்கு வழி வகுத்தது போல் ஆகிவிடும். பிற்படுத்தப்பட்டோரைப் பேதப்படுத்தினால் முழு இடஒதுக்கீட்டு அளவும் அவர்களுக்குக் கிட் டாமல் போய்விடக் கூடும். எனவே, பிற்படுத்தப்பட்டோருள் பொரு ளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி, பிற்படுத் தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு ஏதுவாக அனைத்து முயற்சிகளையும் பண்டித நேருவும், அண்ணல் அம்பேத்கரும் எடுத்துரைத்த கருத்துக்கு முரண் இல்லாமல், சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டு மென்றும்; இதற்கிடையே-

தமிழ் ஓவியா said...


கல்வியில் இடஒதுக்கீடு உடனடியாக....

அரிய வாய்ப்பாக மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் நீண்டகாலத்திற்குப்பிறகு பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாகவும், உடனடியாகவும் வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்திட வேண்டுமென்றும்; மத்திய அரசை கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இந்த முக்கியமான தீர்மானத்தை நிறை வேற்றி மத்திய அரசுக்கும் அப்போதே அனுப்பி வைத்தோம். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலேயே “Government can make a relaxation to some extent so that sufficient number of candidates may be available for the purpose of filling up the 27 per cent reservation. It is for the Union Government and the State Governments to issue appropriate guidelines to identify the ‘creamy layer’ so that SEBC are properly determined in accordance with the guidelines given by this Court. If, even by applying this principle, still the candidates are not available, the State can issue appropriate guidelines to effectuate the implementation of the reservation purposefully. - - அதாவது; 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நிரப்பிடும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைத்திடத்தக்க வகையில், கிரீமிலேயருக்கான அளவுகோல்களை ஓரளவுக்கு அரசு தளர்த்திக் கொள்ளலாம். இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒட்டி - சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டோரை முறையாகத் தீர்மானித்திட - மத்திய அரசும், மாநில அரசுகளும் - கிரீமிலேயரை அடையாளப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.

அதற்குப்பிறகும் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைக்க வில்லை என்றால், இடஒதுக்கீட்டினை - அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் - செயல் படுத்திடத் தேவையான வழிகாட்டு நெறிமுறை களை அரசு வழங்கலாம் என்று குறிப்பிடப்பட் டுள்ளதால்; பொருளாதாரத்தில் பின்தங்கியோ ருக்குப் போக எஞ்சியுள்ள இடங்களை பொருளா தாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே உள்ளோர் பெற்றிடத்தக்க வகையில் கிரீமி லேயருக்கான அளவுகோல்களைத் திருத்திக் கொள்ள தீர்ப்பிலேயே இடம் உள்ளது என்பதை யும் நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. கிரீமிலேயரை அறவே நீக்குக!

வருமான வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 4.5 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்திய போது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படை யிலேதான் உயர்த்தப் பட்டது. வருமான வரம்பை உயர்த்தியதன் மூல மாக அதிக எண்ணிக்கையிலான பிற்படுத்தப் பட்டோர் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடம் பெற முடியுமென்ற காரணத்தால், அப்போதே அதனை நான் வரவேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

அதன்பிறகும் அந்த 4.5 லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பினை யும், 9 இலட்சம் ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு கடிதமும் எழுதினேன். தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வருமான வரம்பினை கிராமப்புற மக்களுக்கு 9 லட்சம் ரூபாய் என்றும், நகர்ப்புற மக்களுக்கு 12 இலட்சம் ரூபாய் என்றும் உயர்த்தப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அமைச்சரவை தற்போது இந்தப் பரிந்துரையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், வருமான வரம்பினை 4.5 லட்சம் ரூபாயிலிருந்து 6 இலட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்திருப்பது, நமக்கு முழு நிறைவு அளிக்கவில்லை என்ற போதிலும், நீண்ட காலமாக இதற்காக வாதாடி வந்தவன் என்ற முறையில் ஓரளவு திருப்தியை அளித் துள்ளது.

இந்த முடிவினை எடுத்துள்ள மத்திய அரசுக்கு கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையை கடந்த முறை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதைப் போலவே, இந்த முறையும் ஏற்றுக் கொண்டு வருமான வரம்பினை கிராமப்புற மக்களுக்கு 9 லட்சம் ரூபாய் என்றும், நகர்ப்புற மக்களுக்கு 12 இலட்சம் ரூபாய் என்றும் உயர்த்தி அறிவித்திட வேண்டுமென்று மீண்டும் வலியு றுத்துகிறேன். மேலும் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர் என்ற பாகுபாட்டையே முழுவதுமாக நீக்கி விட வேண்டுமென்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோரிக்கை யாகும்.

அன்புள்ள,
மு.க.

நன்றி: முரசொலி 18.5.2013

தமிழ் ஓவியா said...


உ.பி.யில் பார்ப்பனர் காட்டில் மழையா?


இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத் தில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள்; அவர்கள் கரங்களில்தான் அதிகாரம் வர வேண்டும் என்று ஓர் இயக்கத்தை அகில இந்திய அளவில் உருவாக்கியவர் கன்ஷிராம்!

உத்தரப்பிரதேச அரசியலில் அது கையும் கொடுத்தது. அதன் அடிப்படையில்தான் லக்னோவில் மூன்று நாட்கள் மிகப் பெரிய அளவில் பெரியார் மேளாவும் நடத்தப்பட்டது - மாயாவதி அப்பொழுது முதல் அமைச்சராகவும் இருந்தார். (1995).

மாயாவதி எந்த அளவுக்குச் சென் றார் தெரியுமா? பார்ப்பனர்களைச் செருப்பால் அடியுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது வார்த்தைகள் எகிறிப் பாய்ந்தன.

உ.பி.யைப் பொறுத்தவரை 14 விழுக்காடு வாக்காளர்கள் பார்ப் பனர்கள்; மாயாவதியின் மூளையில் குயுக்தியாக ஒரு பொறி தட்டியது. பகுஜன் என்பதைவிட வெகுஜன் என்று தலை கீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனர்களின் வாக்கு வங்கியைத் தம் பக்கம் ஈர்க்கலாம் என்று கணக் குப் போட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராகவே சதீஷ் சந்திரா மிஸ்ரா என்ற பார்ப்பனரை நியமித்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு 51 இடங்களை லட்டாகத் தூக்கிக் கொடுத்தார். 2009இல் நடைபெற்ற மக்கள வைத் தேர்தலிலே பார்ப்பனர்களுக்கு 20 இடங்களைத் தாரை வார்த்தார். தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுத்த இடங்களோ வெறும் 17 தான். (வாழ்க சமூக நீதி!)

2007இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2012 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.

2014இல் மக்களவைத் தேர்தல் நடப்பதையொட்டி உத்தரப்பிரதேசத் தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2007இல் பின்பற்றிய யுக்தியை - தற்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு வியூகம் வகுத்துள்ளார். பரசுராமன் விழா என்று பெயரில் விழா ஏற்பாடு செய் யப்பட்டது.

பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பார்ப் பனர்களுக்குச் சரமாரியான சலுகை களை வாரிக் கொட்டியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை நாடாளு மன்றத்தில் தோற்கடித்தது சமாஜ் வாடி கட்சிதான் என்று மார் தட்டியுள்ளார்.

பிராமணர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதலிடத்தில் இருப் பது எங்கள் கட்சிதான்; கடந்த ஆட்சி யில் பிராமணர்கள்மீது போடப்பட் டுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று நாக்கில் தேன் தடவியுள்ளார்.

உ.பி.யின் இன்னொரு பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநாட்டைக் கூட்டி அதில் கட்சியின் பொதுச் செயலாளரான சதீஷ்சந்திரமிஸ்ரா பிராமணர்களுக்கு பாதுகாப்பான கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே! என்று கூறியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்த முதல் அமைச்சரும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியும் சரி, உயர் ஜாதி பார்ப்பனர்களைத் தாஜா செய்வதற் காகக் களத்தில் குதித்து விட்டனர்! (இதில் மற்றும் ஒற்றுமைக் கூட்டு!)

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் கொழுத்த ஆதர வைப் பெற்று மஞ்சள் குளிப்பது மட்டும் பார்ப்பனர்கள்தாம்.

ஆம், உ.பி.யில் பார்ப்பனர்கள் காட்டில்தான் மழை பெய்கிறது. ஆனாலும் இதனையும் தாண்டி, கான்ஷிராம் அடித்தளம் போட்டுக் கொடுத்த - விதை ஊன்றிய அந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினரின் அந்த அழுத்தமான பெரும்பாலான மக்கள் இந்த இரு அரசியல் கட்சி களையும் தூக்கி எறிந்தால் ஆச்சரி யப்படுவதற்கில்லை.

இன்றைய நிலையில் பிற கட்சிகள் - ஏன் காங்கிரஸ்கூட இந்தக் கோணத்தில் சிந்திக்கலாமே! அறு வடை சுலபமாகக் கிடைக்குமே!

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை ஓகோ என்று வளர்ச்சி அடைந்து விட்ட மாநிலம் அல்ல.

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்த இடத்தில் கால் ஊன்றிடவில்லை. கல்வி, பொருளாதாரம் இவற்றில் பாதாள பள்ளத்தில்தான் கிடக்கின்றனர்.

அவர்களுக்காக யார் குரலை கொடுக்க முன் வருவார்களோ அவர்கள் பக்கம் அரசியல் காற்றடிக்க வாய்ப்பு உண்டே!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

ஞானோதயம்

செய்தி: விவசாய நாடு என்ற பெருமையை இந்தியா இழந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.
குஜராத் முதல்வர் மோடி

சிந்தனை: மோடி விரும்பும் இந்துத்துவாவில் விவசாயம்தான் பாவத் தொழில் ஆயிற்றே - இப் பொழுது என்ன திடீர் ஞானோதயம்?

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் போதை - சூதாட்டம் கழக ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (24.5.2013)



1 சூதாட்டம் சூதாட்டம்
கிரிக்கெட் சூதாட்டம்!

2. மத்திய அரசே மத்திய அரசே!
அனுமதிக்காதே, அனுமதிக்காதே
சூதாட்ட விளையாட்டை சூதாட்ட விளையாட்டை
அனுமதிக்காதே, அனுமதிக்காதே!

3. கிரிக்கெட் விளையாட்டா
சூதாட்ட விளையாட்டா
வெற்றி பெறுவது யார்?
வெற்றி பெறுவது யார்?
சூதாட்டக்காரர்களா?
விளையாட்டுக்காரர்களா?

4. அய்பிஎல் கிரிக்கெட்டா
கறுப்புப்பண சந்தையா?
கறுப்புப்பண சந்தையா?

5. வெட்கம்! வெட்கம்!
விளையாட்டின் பேராலே
விளையாட்டின் பேராலே
வர்த்தகச் சூதாட்டமா?
வர்த்தகச் சூதாட்டமா?

6. விளையாட்டின் சிறப்பை
விளையாட்டின் சிறப்பை
கொச்சைப்படுத்தும்
கொச்சைப்படுத்தும்
கிரிக்கெட்டை, கிரிக்கெட்டை
தடைசெய்! தடை செய்!
கிரிக்கெட்டைத் தடை செய்!

7. இளைஞர்களே, இளைஞர்களே,
மாணவர்களே, மாணவர்களே,
பலியாகாதீர்! பலியாகாதீர்!!
கிரிக்கெட் போதைக்கு
கிரிக்கெட் போதைக்கு
பலியாகாதீர்! பலியாகாதீர்!

8. மத்திய அரசே, மத்திய அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
கிரிக்கெட் பேராலே
கிரிக்கெட் பேராலே
மோசடி செய்யும், மோசடி செய்யும்
பெரிய மனிதர்கள் மீது
பெரிய மனிதர்கள் மீது
நடவடிக்கை எடு - நடவடிக்கை எடு!

9. மத்திய அரசே, மத்திய அரசே
ஆதரவு கொடு, ஆதரவு கொடு!
சடுகுடு ஆட்டத்துக்கு
சடுகுடு ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஆதரவு கொடு! ஆதரவு கொடு!

10. பிரச்சாரம் பிரச்சாரம்!
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
பிரச்சாரம் பிரச்சாரம்!
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்!

11. கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
முதலாளிகளின், முதலாளிகளின்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?

12. வெட்கக் கேடு, வெட்கக்கேடு
விளையாட்டுக்காரர்கள்
விளையாட்டுக்காரர்கள்
ஏலம் போவது - ஏலம் போவது
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!

13. தடை செய் - தடை செய்!
சூதாட்டக் கிரிக்கெட்டை
சூதாட்டக் கிரிக்கெட்டை
தடை செய்! தடை செய்!

- திராவிடர் கழகம் -

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார்.

விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந் தது.

வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங் கினார். விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

விடுதலை போராட் டத்தில் உயிரிழப்பு என் பது எதிர்பாராத ஒன் றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர் களை மட்டும் படு கொலை செய்யாமல், பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளையும், பெண் களையும், முதியவர்களை யும், மாற்றுத்திறனாளி களையும் கொன்று குவித்துள்ளனர்.

விடு தலை உணர்வு உள்ள யாரும் மிஞ்சக்கூடாது என்பதற்காக பிஞ்சு குழந்தைகளைக்கூட கொன்று குவித்தது தான் இனப்படுகொலைக்கு சாட்சியாக மாறி உள்ளது. போர் நடக்கும் போது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தா லும், மனித உரிமை ஆர் வலர்களும், ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ள வர்களும் சிங்கள இன வெறியர்கள் நடத்தியது இனப்படுகொலை என் பதை உணர்ந்து வரு கிறார்கள்.

தனிஈழம் தேவை என் பதையும் உணரத் தொடங்கி உள்ளனர். அதற்கு முன்னோட்ட மாக தான் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் சிங்கள அரசுக்கு எதி ரான தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு சூழல் வளர்ந்து உள்ளது.

ஆயுதம் ஏந்தி போராடி ஈழத்தை வென் றெடுக்க முயற்சிப்பதை விட சர்வ நாடுகளின் சமுதாயத்தின் ஆதரவை திரட்டி அறவழியில் ஈழத்தை பெறவும், நீதியை பெறுவதுடன், நம் முன்னால் 3 முக்கிய கடமைகள் உள்ளன.

எஞ்சிய தமிழர்க ளுக்கு மறுவாழ்வு, இனப் படுகொலை குற்றவாளி களுக்கு தண்டனை, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற 3 சவால்களை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாமல், உலக தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அதற்காக விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடுவ துடன், ஒருமித்த கருத்து கொண்டவர்களிடம் கைகோத்து நிற்கும். பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் ஈழ விடுதலை போராட் டத்திற்கான ஆதரவை சர்வதேச அளவில் திரட் டுவோம். சர்வதேச நாடு களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழ பிரச்சி னைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. எனவே நமக்கிடையே உள்ள முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு ஜாதி, மத வேறுபாடு களை களைந்து தமிழர் களாக அணிதிரள் வோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுச்செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி யரசு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம் பெண்கள்மீதான முக்கிய தீர்ப்பு


டில்லி, மே 20- பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவர், பெண்ணின் தவறான நடத்தையை ஆதாரமாக காட்டி தப்பிக்க முடியாது' என, உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி என, கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், பாலியல் வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண், தவறான நடத்தை உள்ளவர்; பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார்' என, குறிப்பிட்டு இருந்தார். இம்மனு, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எப்.எம்.அய். கலிபுல்லா ஆகியோர் அடங்கிய, அமர்வு' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பாலியல் வன்முறை என்பது, ஒரு பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றம் அல்ல; ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எதிரான குற்றம். இந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் கடுமையாகவும், தீவிரமாகவும் கையாள வேண்டும். பாதிக்கப் பட்ட பெண், தவறான நடத்தை கொண்டவர் என்பதை ஆதாரமாக காட்டி, குற்றவாளி தப்பிக்க முடியாது. ஒரு பெண் ஏற்கெனவே தவறாக நடந்தார் என்பதால், அவரை, பாலியல் வன்முறை செய்ய உரிமை உள்ளதாக குற்ற வாளி கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த வழக்கில் குற்றவாளி, வன் முறை செய்தவர்தான்; பாதிக்கப் பட்ட பெண் அல்ல. தவறான நடத்தை உடைய பெண் என்பது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒன்று. அவர் பாலியல் வன் முறைக்கு பயன்படுத்தும் பொருள் அல்ல. பாலியல் உறவுக்கு உடன்பட மறுப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு, நீதி பதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

தமிழ் ஓவியா said...


நட்புக்கும் உண்டு அடைக்குந் தாழ்!


பொதுவாக வாழ்க்கையில் நமக் குப் பெருந் துணை -நண்பர்களும், நல்ல புத்தகங்களும்தான்!

அதிலும் குறிப்பாக முதுமையை நோக்கி நாம் பயணிக்கும்போது, நல்ல நண்பர்கள், நமக்கு மிகவும் தேவை. நல்ல புத்தகங்களும் நம்முடன் உறவாகும்!

நமது வாழ்விணையர்களை, தந்தை பெரியார் அவர்கள் உற்ற நண்பர் களாக வாழ வேண்டும் என்று மணவிழா உறுதி ஏற்பில் கூறுவதும், வாழ்த்தில் விளக்குவதும் இதன் அடிப்படையில்தான்!

நட்பு என்பது ஓர் கிடைத்தற்கரிய சொத்து. நமது வீட்டில் உள்ளவர்களை உறவுக்காரர்களாகப் பார்ப்பதைவிட நண்பர்களைப் போல் நெருங்கிப் பழகு வது இருசாரார் உள்ளத்திலும்கூட ஒரு புது உற்சாகத்தைப் புது வெள்ளம் பாய்வது போலக் கொண்டு வருமே!

ஆனால், நண்பர்களில் பல ரகம் உண்டு. அதில் தான் தெளிவுடன் இருக்க வேண்டும்.

சிலர் காரியவாதிகளாக நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து - லாபம் கருதிப் பழகுவார்கள்; உயிரையே தருகிறார் இவர் எனக்காக என்று அவ சரப்பட்டுக் கூறும் சில அவசர சாமி களுக்கு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் எச்சரிக்கையை நகைச்சுவைத் தேனில் குழைத்துக் கூட்டங்களில் தருவார் - நல்ல அனுபவப் பாடம்.

காலை 10 மணிக்குப் பார்த்து, 12 மணிக்குள் எனக்காக உசரையே தரும் அளவுக்கு என் நண்பர் வந்து விட்டானே என்று நீ சொன்னால் அவன் அடுத்த 2 மணிக்கு உன் உசரையே எடுக்கப் போகிறான் என்பதை மனிதர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார்!

எவ்வளவு சரியான அனுபவ அறிவுரை அது! எதிலும் எடை போடுவதிலும் நிதானம் தேவை - அதுதான் பிறகு - நமக்கு நிம்மதியைத் தரும்!

சில நண்பர்கள் வெகு சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து காரிய சாதிப்பாளராக இருப்பார்கள்.

முதல் முறை பார்க்கும் போது பரிந் துரை உதவிகளைக் கேட்க மாட்டார்கள்.

முதலில் பழம், வரிசைகள் இத்தியாதி.

கொடுத்து விட்டு நலம் விசாரித்து மட்டும் விடை பெறுவார்கள். என்னங்க எதற்கு வந்தீங்க. என்ன சேதி சொல் லுங்க என்றால் அதெல்லாம் ஒண்ணு மில்லீங்க, உங்க நலம் விசாரிச்சிட்டுப் போகத்தான் வந்தேன் என்று சொல்லிப் போய் விடுவார்கள்! பிறகு ஒரு இடை வெளி விட்டு, மீண்டும் வந்து பரிந்துரை வேண்டுவர்!

ஆம், மனோதத்துவம் புரிந்த நண் பர்கள்!

எதையோ எதிர்பார்த்து வெகு காலம் பழகியிருந்து, பலன் முழுமையும் சுவைத்து விட்டு, கடைசியில் மேலும் விரும்பியதைப் பெற்றுத் தரவில்லை நாம் என்றவுடன் அவர்கள்,

தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர்களாகி விடுவார்கள்!

அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகள் போன்ற நண்பர்களைத்தான் அனை வரும் அறிவார்களே - அதுபற்றி விளக்கம் தேவையில்லை!

நண்பர்களைவிட நாம் அடையாளம் காணும்போது, அதற்கு சரியான அளவுகோல் - உரைகல் என்ன தெரி யுமா?

ஒன்று அவருக்கு நம்மால் கிடைத்த போது அவர் காட்டும் நன்றியோ, விசுவாசமோ அல்ல.

நாம் முயன்றும் அது அவருக்குக் கிடைக்காத நிலையிலும், தொடர்ந்து நம்மிடம் நன்றி விசுவாசம் காட்டு கிறார்களே, அவர்கள்தான் கிடைத்தற் கரிய கிழக்குத் திசைகள்! (சூரிய வெளிச்சம்) - இவர்களை கிழப்பருவத் திலும்கூட நம்பலாம் - மனந்திறக்க லாம்.

பாரத்தை இறக்கி வைக்கலாம்.
---------------veramani

தமிழ் ஓவியா said...


அறிவைப் பயன்படுத்தாமல்...


கடவுளையும், மதத்தையும், சாத்திரங் களையும் சம்பந்தப்படுத்திச் செய் யப்பட்ட காரியங்களாலேயே மனிதர்கள் முட்டாள் களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆகி விட்டனர். இப்படிப் பட்ட காரியங்களுக்கு அறிவைப் பயன்படுத் தாமல், கடவுளையும், மதத்தையும் ஒத்துக் கொண்டால், அது நாம் முட்டாளாகவும், மடையர்கள் ஆகவும்தானே பயன்படுகின்றது.
(விடுதலை, 13.2.1961)

தமிழ் ஓவியா said...


குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?


ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார்.

பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு.

அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர்.

பலர் அரசுப் பணிகளில் அமர்ந்து அணி செய்கின்றனர்; இயக்க நோக்கிற்காக மட்டுமல்ல; இந்தப் பட்டறை வாழ்வில் புதிய திருப்பத்துக்கான ஒளிமிக்க பாதையைத் தரக்கூடியது.

மாணவர்களும், இருபால் இளைஞர்களும் கலந்துகொள்ளலாம் - நல்ல பலன்களைத் தரும்.

கழகப் பொறுப்பாளர்களே, கழகத்தின் இந்த மிக முக்கியப் பணியில் ஆர்வம் காட்டுவீர்! மாணவர்களை, இளைஞர்களை அனுப்பி வைப்பீர்!

சென்னை மண்டலத் தலைவரும், செயலாளரும், மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர்களும், இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் கலந்துகொண்ட கூட்டத்தில் 20 தோழர்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து இருபால் இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.

மே 29, 30, 31 ஜூன் 1 ஆகிய நாள்களில் குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் திருமண மண்டபத்தில் நடைபெறும். வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம்

குறிப்பு: கழகப் பொறுப்பாளர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம்

தமிழ் ஓவியா said...


கோவில் தோன்றியது இப்படித்தான்!

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.

- தினமலர் செய்தி

ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் தையற் கலைஞர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா என்ற, இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த, 2007 ஆம் ஆண்டு டிசம்பர், 23 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பழனிச்சாமி தன் மனைவி மற்றும் இரு குழந் தைகளையும் இருசக்கர வாகனத்தில் மணப்பாறை யில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பன்னாங்கொம்பு அருகே சென்ற போது, பால்வேன் இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தனுஜாவின் இறுதி நிகழ்வு முடிந்து, ஒன்பதாம் நாள் சிறீரங்கம் அம்மா மண்டபத்தில், சிறுமிக்கு ஈமக்கிரியைகளை செய்து கொண்டி ருந்தனர்.

அப்போது, வேதமந்திரங்கள் கூறிக்கொண்டி ருந்தவர், தனக்கு ஈமகாரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்றாண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் என்று தனுஜா போல பேசி, அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதேபோல், மூன்றாண்டுக்குப்பின் பழனிச்சாமி யின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி, தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பின், தனுஜாவின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே, தனுஜா வுக்கு, ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி நடந்து வருகிறது. இந்தாண்டும் பால்குட விழா, மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வந்து, கோவில் முன் இருந்த பூக்குழியில் இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலபிஷேகம் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, ஊர் நாட்டாண்மைகள் பின்னத்தூர் ரெங்கநாதசுவாமி, அழககவுண்டர் மற்றும் வெள்ளையம்பட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா


ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:

சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ கம் பெரும் வளர்ச்சி அடையும். இலங்கை யைச் சுற்றி செல்லும் கப்பல்கள் சேது சமுத் திரக் கால்வாய் வழி யாகச் செல்லும்போது 424 கடல் மைல்கள் தூரம் குறையும் என்ப தால் ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவு மிச்ச மாகும்.

நீர்வளம் பெருகி, சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளின் கப்பல்கள் எளிதில் தென் தமிழகத் தின் துறை முகங்களுக்கு வந்து செல்வதன்மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். இத்திட்டத்தை நிறை வேற்றக் கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத் தப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து 9 முறை ஆய்வு நடத்தப்பட்டு முடிவில் 1955 ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பயனுள்ள திட் டம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

1957 இல் குளித் தலை எம்.எல்.ஏ.,வாக இருந்த தலைவர் கலை ஞர் சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதன் முதலாக சட்டமன்றத் தில் பேசினார். 1960 இல் தி.மு.க. உருவான போதும் இத்திட்டத்தை அண்ணா வலியுறுத்தி னார். அதன் பிறகு ஒவ் வொரு முறை தி.மு.க. மாநாடு நடந்தபோதும் சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வைகோ, கம்யூ னிஸ்ட தலைவர்கள் வர தராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டவர்களால் கூட சேது சமுத்திரத் திட்டம் வரவேற்கப்பட் டது. 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழக சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

தேர்தல் நேரத் தில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கும் ஜெய லலிதா, எம்.ஜி.ஆரால் வரவேற்கப்பட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்டத் திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பது மதவாதிகளுக்கு துணை போகும் செயல் இல் லையா?

இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.850 கோடி வரை செலவு செய்யப் பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் கருத்துக்கு முரண்படும் வகையில் இத்திட்டத்தை ஜெய லலிதா முடக்க நினைப் பது சரியா? கடந்த 22.8.1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்போ தைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற் றக் கோரி கடிதம் எழு தியது நினைவில்லையா? 2001, 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று வோம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இக் கருத்திலிருந்து முரண் பட காரணம் இத்திட் டத்தால் கலைஞருக்குப் பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் திட் டத்திற்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட நினைக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக் கக்கோரி உச்சநீதிமன்றத் தில் தொடர்ந்துள்ள வழக்கை ஜெயலலிதா திரும்பப் பெறவேண் டும்.

- இவ்வாறு முன் னாள் அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!


சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை

திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும்!

மே 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்!

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மட்டுமல்ல - பொதுவாகக் கிரிக்கெட்(டு) விளையாட்டில் தொடர்ந்து சூதாட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனை ஒழிக்கும் வரை திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் - போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்

சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!!

1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்!

அதாவது 16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஜாம் ஜாம் என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பது தானே பொருள்?

அய்.பி.எல். மட்டுமல்ல

அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச் சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?

தமிழ் ஓவியா said...

முன்னாள் மத்திய அமைச்சருக்கும் தொடர்பாம்!

இதில் இன்னொரு மாபெரும் வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு - தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (அவர்கள் இவர் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்; மேலும் முக்கிய புள்ளிகள் மூவர் இவருக்குப் பக்கத்துணையாக இருந்துள்ளனராம்!)

சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!

கிரிக்கெட் சூதாட்டம் விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்து விட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த்; இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!

இதற்கிடையில் - நெருக்கடி அவப் பெயரிலிருந்து மீளுவதற்குக் கிரிக்கெட் சங்கத்துக்காரர்கள் சில தந்திர உபாயங்களை - நடவடிக்கைகளை எடுத்துத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றனர் போலும்!

திசை திருப்பலா?

அதோடு மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா?

ஒவ்வொரு அய்.பி.எல். அணி விளையாட்டுக்காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;

அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி போதை முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.

ஏலம் போகும் விளையாட்டுக்காரர்கள்!

முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு - மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.

வழக்கில் ஓட்டை கூடாது!

இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளைக் காட்டி தப்பிக்க இயலாதபடி சரியான குற்றப் பத்திரிக்கை விலை போகாத வழக்குத் தேவை!

ஓர்ந்து கண்ணோடாத நீதிபரிபாலனம் மூலம் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுத்து, விளையாட்டின் உயர்ந்த உன்னதத் தத்துவங்களை நிலை நிறுத்துவது அவசர அவசியமாகும்.

இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தவிருக்கிறது. (திருச்சி மற்றும் ஈரோட்டில் மட்டும் 25ஆம் தேதி)
அதற்கு ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஈடுபட முன் வர வேண்டும்.

கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை நமது போராட்டம்

நமது கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது;

அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் - அறப் போர் - தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!!



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21.5.2013

தமிழ் ஓவியா said...


கழக முயற்சிக்குக் கைமேல் பலன் வட்டாட்சியர் அலுவலகப் பிள்ளையார் அகற்றப்பட்டார்



கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு சிலர் திடீரென பீடம் அமைத்து ஒரு விநாயகன் சிலையை வைத்து விட்டனர். அரசு விதி முறையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தி.க. மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் த. சுரேஷ் ஆகியோர் 10.05.2013 அன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடமும் அந்த மனுவின் நகலை கொடுத்தனர்.

மேலும் விடுதலை ஏட்டில் (14.5.2013 விடுதலை) வேலியே பயிரை மேய்கிறது என்ற தலைப்பில் செய்தியும் வெளியாகியது. உடனடியாக திராவிடர் கழக தோழர்களின் வலியுறுத்தலின் பெயரில் வருவாய்துறை அதிகாரிகள் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த விநாயகன் சிலையை பீடத்துடன் அகற்றினர்.
மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து 9 நாட்களுக்குள் விநாயகன் சிலை பீடத்துடன் அகற்றப்பட்டது. இது விடுதலை ஏட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் முயற்சிக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

தமிழ் ஓவியா said...

தெரியுமா சேதி?

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்கின் (அய்.பி.எல்.) முத லாளியாவார். கவர்னரே கலெக்டராகவும் இருக்கிறார் எப்படி?

####

ஒவ்வொரு முறையும் நடக்கும் அய்.பி.எல். கிரிக் கெட்டில் மட்டும் சூதாட்டத்தில் புரளும் தொகை ரூ. மூன்று லட்சம் கோடியாம்!

தமிழ் ஓவியா said...

உருண்ட பக்த கே()டிகள்!


கரூர் மாவட்டம், தெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் 99ஆவது ஆண்டு ஆராதனையில் எச்சில் இலைகள்மீது பக்தர்கள் உருண்டனர். குறிப்பு: மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும் கலந்து கொண்டார். அவர் எச்சில் இலை மேல் உருண்டாரா என்பது பற்றி தகவல் இல்லை.

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்



தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


இலங்கை மீது நடுநிலையான பன்னாட்டு விசாரணை தேவை


கருத்து மாறுபடுவோர் மீது இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை

அம்பலமாக்கும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை

இலங்கை அரசு, தன்னை விமர்சிப் பவர்கள் மீது அச்சுறுத்தல், தொல்லைப் படுத்துதல், சிறைவாசம் முதலிய கொடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அண்மையில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மாற்றுக்கருத்துக் கொண்டவர் மீது தாக்குதல் என்று அந்த ஆணவம், அதிபர் ராஜபக்சேயினால் நடத்தப்படும். இலங்கை ஆட்சி எப்படி விமர்சனங்களை, ராஜத்துரோகம் என்ற அதன் அசுரப் பிடியில் வேகப்படுத்தி வருகிறது, என்பது பற்றி விளக்குகிறது.

பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் குறிவைக் கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் அடிக்கடி பாதுகாப்புத் துறை யினராலும், அவர்களுடைய பதிலி களாலும் தாக்கப்படுகின்றனர். ஆம் னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஆசிய பசிபிக் பகுதியின் துணை ஆணையர் பாலி டிரஸ்காட் என்பவர் இலங்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொடுமையான அடக்குமுறைக்கு ஆட்படுத்துவதிலும், அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளுவதிலும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது என்று கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங் களுக்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. இலங்கையில் உண்மை யிலேயே அச்சமான சூழ்நிலை பரவி வரு கிறது. அரசுக்கு எதிராக துணிச்சலாக பேசக்கூடியவர்கள் மோசமான வேத னைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

மே 29இல் விடுதலைப் புலிகளுட னான ஆயுதப் போர் முடிவுக்கு வந்த வுடனேயே அரசாங்கம் தனது சக்திகளை ஒன்றுபடுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டது.

2010 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் பட்ட 18ஆவது அரசியல் திருத்தம், அரசினால் கொண்டு வரப்பட்டவுடனேயே அரசு நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது; கொடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளுக்கு அளவில்லாத அதிகாரங்களை குவித்தது. அதே நேரத்தில், அரசுத்தரப்பு, விமர்ச கர்களுக்கு எதிரான தனது பேச்சுக்களை அதிக எதிர்ப்புணர்ச்சியுடன் வெளிப் படுத்திற்று. துரோகிகள் போன்ற வார்த்தைகள் அரசு நடத்தும் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி, மாற்றமில்லாமல் வெளிவந்தன.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், வசைமாரிகளுக்கும் வன் கொடுமை களுக்கும் ஆளானார்கள். சிலர் தாக்கப் பட்டும், சிலர் கொல்லப்பட்டும் போயினர். 2009-க்கு முன்னும் பின்னும், டஜன் கணக்கான அம்மாதிரியான விவரங்களை அந்த அறிக்கை விளக்குகிறது.

நீதித்துறை அடக்குமுறையின் முக்கிய குறியாயிற்று. அரசு தனது சுதந்திரத்தைச் சிறுமைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் மனித உரிமை மீறல்களுக்காளானவர் களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

ஜனவரி 2013இல் தலைமை நீதிபதி ஷீராணி பண்டார நாயகேயின் தவறான நடத்தை காரணமாக பதவி நீக்கம் செய் யப்பட்டபோது, எதிர்ப்புணர்ச்சி உச்சத்திற் குப் போயிற்று. இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஷீராணி பண்டார நாயகேயின் பதவி பறிப்பு முறையற்றது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறது.

ஊடகங்களின் பெரும்பான்மை உறுதி யாக அரசு வசப்பட்டிருந்தாலும் சற்று சுதந்திரமாக உள்ள போரின் போது அரசின் செயல் முறைகள் பற்றியும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விமர்சனம் செய்தும் வரும் மற்ற ஊடகங்கள் மீது அரசாங்கம் குறிவைத்துள்ளது.

ஊடக வியலாளர்கள் அரசாங்கத்தின் போக்கு பற்றி விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். அவமானப் படுத்தப்படுகிறார் கள், தாக்கவும்படுகிறார்கள். 2006ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 15 இதழாளர் களாவது கொல்லப்பட்டிருக்கிறார்கள், மற்ற பலர் நாட்டை விட்டு ஓடும்படி துரத்தப் பட்டுள்ளனர்.

அண்மையில் நிகழ்ந்த, உதாரணமாக சண்டே லீடர் என்ற பத்திரிகையைச் சார்ந்த பஃராஸ் செனகத்தலி என்ற இதழாளர், சில மனிதர்களால் பிப்ரவரி 2013இல் துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்தில் கடுமையான காயம் எற்படுத்தப் பட்டுள்ளார்.

2009இல் கைது செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே போன்ற பழைய உயர் மட்டக் கொலைகள் கூட இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

அரசாங்கத்தைப் பற்றி விமரிசித்துக் கட்டுரைகள் வெளியிடும் இணையங்கள் (website) அடிக்கடி சைபர் அட்டாக் முறைக்கு ஆளாக்கப்படுகின்றன; அவர் களது அலுவலகங்கள் காவல் துறையின ரால் சோதனைகளுக்கு ஆளாக்கப்படு கின்றன; சில நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. அரசாங்கம் கூட சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. அதன் படி அளவுக்கதிகமான பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் இவை விமர்சிக்கும் ஆன்லைன் வெளியீடுகளை மூடப்படுவதற்கான முயற்சிகளாகும்.

டிரஸ்காட், அரசாங்கத்தின் பத்திரிகை களை கட்டுப்படுத்துவது அல்லது சுதந்திர மானவற்றை ஒழிப்பது ஆகிய தொடர்ந்த முயற்சிகள், பத்திரிகை சுதந்திரத்தின் முகத்தில் விழும் பூச்சிகளாகும்; மேலும் உள் நாட்டினராலும் பன்னாட்டினராலும் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தினை கூட சிதைப்பதாகும் என்று கூறியுள்ளார். இலங்கை ராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும், போரின் இறுதிநிலைகளில் பல்லாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்ட விவரங்களை வெளியிடும் ஊடகங்கள் மீது குறிப்பாக அவற்றை ஒழித்து விடும் பணியில் அரசு இருக்கிறது. முக்கியமான பன்னாட்டு நிகழ்வுகளின் போது விமர்சகர் மீதான அழுத்தங்கள் அதிகப்படுத்தப் படுகின்றன.

உதாரணமாக அண்மையில் நிகழ்ந்த அய்.நா. மனித உரிமை மீறல்கள் பற்றிய குழுவின் 2012, 2013இல் நிகழ்ந்த கூட்டங்களைச் சொல் லலாம்; மனித உரிமைக்கவுன்சில், இலங் கையின் ஆயுதம் கொண்டு நடத்தப்பட்ட போரில், பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டதை ஆராயும் வகையில் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி வெளியிடுவதைத் தடுக்கும் பல தடை தந்திரங்கள் கையாளப்பட்டன.

அய்.நா. கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்களும், அந்நிகழ்ச்சிகளை செய்திப்படுத்த விரும்பிய இலங்கைப் பத்திரிகையாளர்களும், திரும்பத் திரும்ப இலங்கை அரசினரால் ஊடகங்கள் தாக்கப்பட்டன. சில நிகழ்வுகளால் உடல் வன்மை கூட்டியும் தாக்கப்பட்டனர்.

இலங்கை அரசால் குறிவைக்கப் பட்டுள்ள மற்ற பலருள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் அதுவும் குறிப்பாக தமிழர் மிகுந்த பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் முதலியோர்.

2013 நவம்பர் மாதத்தில் அடுத்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு (CGIGM) கொழும்புவில் நடக்க இருக் கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக இலங்கை பங்கு பெறும்.

டிரஸ்காட், இலங்கையில் அச்சுறுத் தும் முறையில் வளர்ந்துவரும் மனித உரிமை மீறலை சரி செய்யச் சொல்லி, இலங்கை அரசிற்கு, நவம்பர் மாதத்திற்கு முன்பு காமன் வெல்த் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி யுள்ளார்.

மனித உரிமைகள் பற்றிய விதி மீறல்கள் படிப்படியாக இலங்கை அரசு நிறுத்தி விட்டது என்பதை தனது செயல் பாடுகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் மீதான தாக்குதல்கள் உடனடியாக வேறு பாடுகள் இல்லாமல் தகுதியான முறையில் ஆரா யப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவையெல்லாம் இலங்கை அரசால் நிருபிக்கப்படும் வரையில் இலங்கையின் கொழும்பு நகரில், காமன்வெல்த் நாட்டுத்தலைவர்களின் மாநாடு நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது.

இவை தவிர மேலும் நடந்து வரும் விதி மீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது; அவை களை நிறுத்துவதற்கான வாக்குறுதி களை அடிக்கடி அளிக்கிறது; ஒரு பயனுள்ள ஆய்வின் மூலம் பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்கள், ராணுவத்தின ராலும், விடுதலைப்புலிகளாலும் ஆயுதப் போரின்போது நடத்தப்பட்டவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏராளமான வெளிப்படையான நிகழ்வு கள் மூலம் இலங்கை அரசு ஒரு நம்பிக் கையான ஆய்வை, பன்னாட்டுச் சட்டப் படியான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உட்பட விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு விரும்பவில்லை. போரின் போது நடந்த குற்றங்கள், குற்ற நிகழ் வுகள் பற்றிய சுதந்திரமான, நடு நிலைமையான, பன்னாட்டுச் சமூகத் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது என்பது தான் இன்றைய அவ சியம் என்று டிரஸ்காட் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பெட்டிக்கடைகளும் - நடைபாதை கோவில்களும்!


சென்னையில் சாலையோரங்களிலும், நடை பாதைகளிலும் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னையில் பெட்டிக்கடைகளால் போக்கு வரத்து இடையூறு என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அத்தகைய பெட்டிக்கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் திங்களில் ஆணையிட்ட தன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பெட்டிக்கடைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளதாம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62, அண்ணாநகர் மண்டலத்தில் 36, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 8, திரு.வி.க. நகரில் 22, தண்டையார்ப்பேட்டையில் 18, ஆலந்தூரில் 6 கடைகளும் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.

உண்மையைச் சொல்லப்போனால், சென் னையில் பெட்டிக்கடைகளைவிட, போக்குவரத் துக்குப் பெரும் இடையூறாக இருப்பது நடைபாதைக் கோவில்கள்தான்.

போக்குவரத்தைக் காரணம் காட்டி இடிக்கப் படவேண்டுமானால், முதலில் அகற்றப்படவேண் டியது நடைபாதைக் கோவில்களும், அனுமதி யின்றிக் கட்டப்பட்டுள்ள கோவில்களும்தான்.

உயர்நீதிமன்றத்தின் ஆணையின் காரண மாகத்தான் பெட்டிக் கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டது என்று சமாதானம் சொல்லப்படுமானால், உயர்நீதிமன்றத்தைவிட பெரும் அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்தானே!

அந்த உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் பிறப்பித்த ஆணையின்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டு இருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் கூறவேண்டும் என்று 2010 செப்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்ததே!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதி யற்ற வழிபாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். 77,450 கோவில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்களாகும்.

இன்னும் சொல்லப்போனால், 2009 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆணை யைப் பிறப்பித்தது. கடைசியாகப் பிறப்பித்த ஆணைதான் 2010 செப்டம்பர் 14 அன்று பிறப்பிக்கப்பட்டதாகும்.

இதன்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்திட முனைந்துள்ள தமிழ்நாடு அரசு - உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கிடப்பில் போட்டுள்ளதே - இது சரியானதுதானா?

உயர்நீதிமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் அற்றது என்று ஒருக்கால் தமிழ்நாடு அரசு கருதுகிறதோ!

சிறுசிறு பெட்டிக் கடைகளை வைத்து அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாடு கிறார்கள். அவர்கள்மீது காட்டும் வேகத்தை - நடைபாதையில் அத்து மீறிக் கோவில்களை எழுப்பி, உண்டியல் மூலம் வசூல் வேட்டை நடத்தி, ஒவ்வொரு நாள் இரவிலும் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தின்மூலம் போதை ஸ்நானம் - தீர்த்தம் - செய்யும் பேர்வழிகளிடம் காட்ட வேண்டியதுதானே!

கல்லு சாமிகளிடம் காட்டும் கருணை, மனிதர்களிடத்தில் காட்டப்படுவதில்லையே, ஏன்?

முதலில் இந்த நடைபாதைக் கோவில்களில் கை வைக்கட்டும் - அடுத்ததை அடுத்துப் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முக்கியம் பெறுகிறது!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பி.சி.சி.அய்.) தலைவர் சீனிவாசன் - அய்.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது. தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது - என்று அடித்துக் கூறியுள்ளார்.

வீரர்களை காவல்துறை போல், எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சூதாட்டம் குறித்த தகவல்கள் வருகின்றன. இதனைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லாமையால் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் கலந்து பேசி சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம், இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொள்ளைப் போதை - இவை குறித்து திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 16.5.2013).

அய்.பி.எல். கிரிக்கெட் என்பது பெரும் முதலாளிகளின் கருப்புச் சந்தைக் களமாக உள்ளது. வீரர்களை ஏலம் எடுப்பது என்பது கேவலமானது. பல நூறு கோடி ரூபாய் போட்டு இந்தக் களத்தில் இறங்கி உள்ளவர்கள், தாங்கள் வெற்றி பெற குறுக்கு வழியைத் தானே தேர்வு செய்வார்கள். தரகர்களையும் ஏற்பாடு செய்வார்கள்?

ஒரு விளையாட்டில் இவ்வளவுப் பெருந்தொகை நுழைவதுதான் குற்றங்களுக்கெல்லாம் முதற்படி.

கிரிக்கெட் என்றால் பணம் காய்ச்சி மரமாக அல்லவா இருக்கிறது? கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ஒரு புறம் - ஒவ்வொரு நாளும் விளையாடுவதற்குச் சம்பளம் - நான்கு ஓட்டம் எடுத்தால் அதற்கொரு வெகுமதி, ஆறு ஓட்டம் எடுத்தால் அதற்கென்று தனித் தொகை இவையன்றி அரசாங்கத்தின் சலுகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் - ஒரே ஒரு முறை கூட அவைக்கு அவர் சென்றதாகத் தெரியவில்லை.

இந்த வசீகரம்தான் அந்த விளையாட்டின்மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுவதற்கே காரணமாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல விளையாட்டு என்றால் அதில் திறமை - அர்ப்பணிப்பு இவையல்லவா குடிகொண்டு இருக்க வேண்டும்? அதனை விலை பேசுகிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!

ஒவ்வொரு முறை பந்தை வீசும் பொழுது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதென்ன - கழுத்தில் மாட்டியுள்ள தாயத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வதென்ன? என்ன....

சாயிபாபா இருந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு வருவ துண்டு. அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு விளையாடுவதுண்டு. ஆனாலும் சாதனைக்கு அவை துணை நிற்கவில்லை என்பது தெரிந்த சேதியே!

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பணம் மட்டுமல்ல - பெண்கள் வரை அனுப்பி வைக்கப்படு கின்றனர் என்றால் நாடே தலைகுனிய வேண்டாமா?

இதில் எந்தவித அரசியல் செல்வாக்குக்கும் கட்டுப்படாமல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்காரர் களையும், சூதாட்டத் தரகர்களையும், அவர்களை இயக்கும் பணத் திமிங்கலங்களையும் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து, சட்டத்தின் கடமையைத் தங்குத் தடையின்றி செயல்படுத்திட வேண்டும்.

பி.சி.சி.அய். தலைவர் சீனிவாசன் அளித்துள்ள பதில் பொறுப்பற்றதாக உள்ளது. இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் எந்த அளவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்; வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து திரளாகப் பங்கேற்கவும் அனைவரையும் அழைக் கிறோம்.

-------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

தமிழ் ஓவியா said...


நம் பழைய சூதாட்டத்தைப் பரப்பும் சிகாமணிகளுக்கு பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தரலாமே!




- ஊசி மிளகாய்

நெறிகெட்ட கிரிக்கெட் சூதாட்டம்!

சூதாட்டத்தின்மூலம் கிரிக்கெட்டின் மீது - அய்.பி.எல். என்ற ஒரு வாய்ப்பின் மூலம் - திடீர்க் குபேரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!

கிரிக்கெட் தரகர் ஒருவர் தினமும் ரூபாய் ஒரு கோடி வீதம் சம்பாதித் துள்ளார். எந்தாடா ஆச்சர்யம்!

இது எவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - அதுமட்டுமா?

ஏற்கெனவே ஆட்டம் ஆடியவர் களுடன் செய்த ஏற்பாட்டின்படி, பந்தயம் கட்டிய (சூதாட்ட பேரத்தில்) வெறும் ஏழு நிமிடங்களில் இரண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி இன்று வெளியாகியது! எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் இது!

மது, மாது என்பதைவிட இந்தக் கிரிக்கெட் சூது எப்படிப்பட்ட லாபகர மான தொழிலாக பலருடைய ஆதரவின் பேரில் செழித்தோங்கி நடைபெறுகிறது பார்த்தீர்களா? இதைத் தடை செய்ய இதற்குமேலும் காரணங்கள் தேவையா?

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியாரின் பொருள்களை இங்கிலாந்து நாட்டில் ஏலம் விட்டுள்ளனர்.

காந்தி சீடர்களான ஆட்சியாளர் அதை ஏலம் எடுத்து, காந்தி மியூசியத்தில் வைக்கவேண்டும் அல்லது காந்தி சமாதிக்கு அருகில் அவர் பயன்படுத்திய பொருள் கொண்ட ஒரு காட்சியகத்தை அமைக்கவேண்டுமென்ற எண்ணம்கூட இல்லை. எவர் எவரோ ஏலம் எடுத்துள் ளனர்!

இன்று காந்தி என்றாலே எந்த காந்தி என்று கேட்கும் நிலையில், இதற்காக முக்கியத்துவம் வரும்? அது கிடக்கட்டும்!

காந்தி பயன்படுத்திய சில பொருள் களின் மதிப்பு ஏலத்தில் விடப்பட்டு எடுக் கப்பட்டதின்மீது வந்த தொகை 2 கோடியே 30 லட்சம் ரூபாய்தான்.

ஆனால், 7 நிமிட கிரிக்கெட் சூதாட் டத்தின்மீது சம்பாதிக்கப்பட்ட பணம் ரூபாய் இரண்டரை கோடி (2 கோடியே 50 லட்சம்) ஆகும்!

இரண்டு தராசு தட்டுகளில், காந்தி தட்டு வெயிட் இல்லாதது; மேலே நிற்கும்!

கிரிக்கெட் என்ற விளையாட்டு, வெளிநாட்டு விதேசி, (அது சுதேசி விளையாட்டு அல்லவே) என்றாலும், நம் நாட்டில் ஆண்டியை அரசனுக்குமேல் ஆக்கும் நவீன அலாவுதீனின் அற்புத விளக்காக அல்லவா கிடைத்துள்ளது!

ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தைத் தடுப்பது என்பதன்கீழ் வராது என்பது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கணக்கோ!

அதுமட்டுமா? கொலைகளுக்கும்கூட இந்த அய்.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் காரணமாக அமைந்துள்ளது என்பது மகாராஷ்டிரத்தில் எம்.பி.ஏ., படித்தவன் 30 லட்சம் ரூபாயை இழந்ததைச் சரி கட்ட, ஆள் கடத்தி கொலை செய்த கதை போலவே ஆந்திராவிலிருந்து மற்றொரு வேதனையான செய்தி!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி, பல் வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என பெற்றோர் கவலை ஒருபுறம், கணவரும், குழந்தை களும் அய்.பி.எல். போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று சண்டை ஆரம்பித்து, ரிமோட்டை வைத்து ஆரம்பித்து - இதனால் அடிவாங்கிய மனைவி, (சீரியல் பார்க்க அவர் விரும்பினார்;

அய்.பி.எல். பார்க்க கணவர் விரும்பினார்) இதனால் மனமுடைந்த மனைவி, மண் ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்துச் சாகும் நிலையில் உள்ளாராம்! என்னே கொடுமை! பரிதாபம்! (நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இது நடந்தது).
இவ்வளவு ஒழுக்கக்கேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மக்களாட்சியின் கடமை அல்லவா?

சூதாட்டத்தில் பங்கு வாங்கி மகிழ்வதா ஆட்சியின் கடமை என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

இது ஞானபூமியாம்! நம்ம பாரத கலாச்சாரமே சூதாட்டம்தானே!

மஹாபாரதத்தில், தருமன் உள்பட பஞ்சபாண்டவர்கள் தம் பொது மனைவியை (துரோபதையை) பந்தயமாக வைத்து ஆடித் தோற்றதும்,
அதற்குமுன் வேத காலங்களி லும்கூட ஆரியர் சூதாட்டத்தில் ஈடு பட்டு, ஓய்வு அதிகம் (வேறு விளை யாட்டுத் தெரியாத காலமோ!) என்ப தால் ஆடினார்கள் என்பது உண்மை.

பழைய நம் பாரத கலாச்சாரத்தை நம் கிரிக்கெட் என்ற நவீன விளையாட்டின்மூலம் பரப்புவதற்காக சூதாட்ட வீரர்களுக்கும் பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தந்து கவுரவிக்கலாமே! 22-5-2013

தமிழ் ஓவியா said...


இலங்கையில் மனித உரிமைக்கு இடமில்லை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குழு குற்றச்சாற்று



கொழும்பு, மே 22- இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந் நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந் திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்து கொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங் களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை அரசாங்கம் எடுக்க வில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. யுத்த காலத்திலேயே பல கஷ்டங் களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள்.

ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ், தொடர்புடைய விடயங்கள், மனித உரிமை தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்ற வர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப் படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்சே அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவ கார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என அய்.நா. தலைமைச் செயலாளருக்கு ராஜபக்சே வழங்கியிருந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப் பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரை களும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.

பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக் கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண் மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழி தேடுவார்கள் என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்



பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.

தமிழ் ஓவியா said...


காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?

நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.

இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?

ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?

தமிழ் ஓவியா said...


இதுதான் மதம் என்பதோ! கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானதாம் சொல்கிறார் சவுதி மத குரு


வாஷிங்டன், மே 23- வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத் துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்து உள்ளார். சவுதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி.யை பயன்படுத்துவது அவர்கள் வீட் டில் இருப்பதை பிறர் கவனிக்கக் கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூ டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் சன்னி முஸ்லிம் மற் றும் முஸ்லிம் அல்லாத பெண் கள் பாலியல் வன்முறை செய் யப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.