Search This Blog

30.4.13

திராவிடர் கழகம் தொழிலாளர் ஸ்தாபனமே!-திராவிடர் உணர்ச்சி வலுத்தால்...


பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன். பெருமைப்படுகிறேன் தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிடர் வாலிபர் கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவே யாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும் - முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருத்தமான எண்ணமாகும். இவ்வபிப் பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது, கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில் அவ்வெண் ணம் மேலும் ஊர்ஜிதமாகிவிட்டதை நான் காண் கிறேன்.

இஷ்டமில்லை என்றாலும்...

சில மாதங்களுக்குமுன் நடைபெறுவதாயிருந்த அகிலஇந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது பத்திரிகைக்காரர்கள் அதுபற்றி எனது அபிப்பிராயம் கேட்டனர். அது சமயம் நான் திருச்சியில் நமது கழக நிர்வாகத் தலைவர் தோழர் டி.பி.வேதாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கியி ருந்தேன். அங்குதான் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்தது. வேலை நிறுத்தம் செய்வது எனக்கு இஷ்ட மில்லை. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் அதைத்தான் நான் ஆதரிப்பேன் என்றேன். இவ்வாறு கூறுவது எங்களுக்குப் புரியவில்லையே என்றனர் பத்திரிகை நிருபர்கள்.
உங்களுக்குப் புரியாதுதான், நான் புரியும்படி விளக்கம் கூறுகிறேன் என்று மேலும் அவர்களிடம் நான் சொன்னேன், நமது குழந்தைகள் இருக்கின்றன; நெருப்புக்கிட்டே போகாதே என்று எவ்வளவோ பயப் படுத்தித்தான் வைக்கிறோம். எனினும் அக்குழந்தை தீயில் குதித்துவிட்டு, அய்யயோ சுடுதே! சுடுதே!! என்று அலறும்போது, பெற்றெடுத்த தாயோ, தகப் பனாரோ அந்தக் குழந்தையை மேலும் ஏன் தீயில் குதித்தாய் என்று கடிந்து இரண்டு உதை கொடுப்பது அறிவுடைமையாகுமா? அவர்கள் செய்தது தவறா யிருப்பினும் அந்தச் சமயத்தில் நாம் அவர்களைக் கடிந்து தண்டிப்பது நியாயமில்லையல்லவா? அதேபோன்று வேலை நிறுத்தம் கூடாதென்று கடைசி நேரம்வரை நான் ஒவ்வொரு வேலைநிறுத்தக் காலங்களிலும் கூறி வந்திருக்கிறேன். இதனால் நான் தொழிலாளிக்கும் துரோகி என்றுகூடக் கெட்ட பெயர் சூட்டப்பட்டேன். ஆனால் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் துவக்கப்பட்டுவிட்டால், மற்றவர்களைக் காட்டிலும் நானே அதில் அதிக கவலைப்பட்டு என்னாலியன்ற தொண்டு புரிந்து வந்திருக்கிறேன். அத்தன்மையிலேயே அனைத்து இந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் அறவே கூடாதென் பதும், எக்காரணத்தாலேனும் துவக்கப்பட்டு விட்டால் நானும் எனது இயக்கத்தாராகிய திராவிடர் கழகத்தினரும் ஆதரித்தே தீருவோம் என்பதும் என்று கூறினேன். இவையனைத்தையும் பத்திரிகை நிருபர்கள் எழுதிக் கொண்டார்கள். ஆனால் அதைச் சிறிதுகூட வெளியிடவேயில்லை.

பத்திரிகைகளின் மோசடி

சில நாள்கழித்து மற்றொரு காரியமாக அதே நிருபர்கள் என்னிடம் வந்தனர். என்னையா! முன்பு தாங்கள் எடுத்துக் கொண்ட செய்தி வெளியிடவே யில்லை. மீண்டும் வேறு காரியத்துக்காக என்னை அபிப்பிராயம் கேட்க வந்துவிட்டீர்களே என்று சற்று கோபமாகக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்; நாங்கள் என்ன செய்வது? நீங்கள் தொழிலாளரின் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையாக அபிப்பிராயம் கூறுவீர்கள் என்று பத்திரிகை உலகத்தார் நினைத் தார்கள்போலும். ஆகவேதான் நாங்கள் அனுப்பிய செய்தியை கத்திரித்து விட்டார்கள். அது எங்கள் குற்றமல்ல, பத்திராதிபர்களின் குற்றமாகும் என்றனர்.

நம் தொண்டின் முக்கியம்

இதை ஏன் கூறுகிறேன் என்றால், சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடு பட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என் பதை எடுத்துக்காட்டவே யாகும். இதைத் தவிர, எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவை களில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காக தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக் கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

தொழிலாளரின் குறைகள்

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோசிய லிஸ்ட்டு, தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடி தடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றையத் தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படு வோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினை களை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன் படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக்கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவே தான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டுவருவதின் கருத் தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலை திட்டங்களுமாகும்.

ஆரியச் சூழ்ச்சி


நம் நாட்டுக்கு கி.மு.2000 ஆண்டு காலத்தில் திராவிடம் என்றே பெயர் இருந்தது. இராமாயணங்களிலும் புராணங்களிலுங்கூட நம் நாட்டுக்கு திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் இந்நாட்டுக்குக் குடியேறிய பின்னர்தான் திராவிடம் என்பதற்குப் பதிலாக தென்னாடு என்று பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு என்றும் வழங்கி வரலாயிற்று. திராவிடம், திராவிடர் என்பதால் ஆரியர் ஆதிக்கத்துக்கு என்றும் எதிர்ப்பு இருக்கும். ஆதலால் திராவிடம் என்ற உணர்ச் சியை அறவே அழித்தொழிக்கச் சூழ்ச்சி செய்துவரலாயினர். ஆனால் தற்சமயம் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர் கூறலாம்; நாங்கள் ஆரியரல்ல நாங்களும் இந்நாட்டினர் தானென்று. ஆனால் இதே சமயத்தில், நம் நாட்டுப் பற்றோ, மொழிப்பற்றோ சிறிதும் கிடையாது. ஆரியக் கலாசாரத்தையே பின்பற்றி வருவதோடல்லாமல், நமது முன்னேற்றத்தையும் முயற்சியையும் ஒழிப்பதையே அவர்களது முழுமுயற்சியாகக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கைவிடாமல் நாங்கள் ஆரியரல்ல என்று கூறிவிட்டால் போதுமா?

உதாரணமாக ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள், நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சியிருக்கிறதா? நமது மக்களைப்பார்த்தால் டேய்! தமிழ் மனுசா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் எப்படிப் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ நேராக அய்ரோப்பாவில்  பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவோ நடக் கிறார்கள்.

அதைப்போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும், மேல் நாட்டி லிருந்து குடியேறிய ஆரியர் களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாயிருந்தும் கூட, ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி ஜாதி-மதம்-கடவுள்-புராணம்-இதிகாசம் பேரால் தங்களுக்குத் தனிச்சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையும் இருக்க, பாடுபட்டுழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்க்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.

திராவிடர் உணர்ச்சி வலுத்தால்... இன்றுகூட எந்தப் பார்ப்பனனையாவது பார்த்து நீ என்னையா பிராமணனா என்று கேட்டால், இன்றைய நிலையில் அவ்வாறு கூறிக்கொள்ளச் சற்று அச்சம் கொண்டாலும், நான் பிராமணனல்ல என்று கூறுவானேயன்றி நானும் திராவிடன்தான் என்று கூற முன்வரமாட்டார்களே ஏன்? திராவிடர் என்ற உணர்ச்சி வலுத்துவிட்டால் பார்ப்பனிய ஆதிக்கத் துக்கு, அன்றே அழிவு ஏற்பட்டுவிடும் என்பதாலேயாகும்.

எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் பார்ப்பனர்களுக்குத் தனிப்பட்ட தொல்லையோ தீங்கோ விளைவிப்பதென்பது எங்கள் கொள்கை யல்ல; பார்ப்பனியத்தை அறவே ஒழித்து மக்களிடையே ஒன்றுபட்ட சமுதாய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்பதாகும் என்று கூறுகிறோம். இதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் இனியாவது அறிந்து தம் தவறுதலைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து எங்களது முயற்சியை அழிக்க மேலும் சூழ்ச்சிகள் செய்வார்களேயானால் அது தமக்குத் தாமே அழிவு தேடிக்கொள்வதாக முடியும். பார்ப்பனர்களுக்கு தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும்வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா? அதுவும் சுயராஜ்யம் பெற்றபின்னரும் இந்த அக்கிரமம் இருக்கலாமா? அறிவின் பேரால், உழைப்பின் அருமையின் பேரால் ஒருவனுக்கு உயர்வும் நல்ல பலனும் இருக்க வேண் டுமா? ஜாதியின் பேரால் பதவியின் பேரால் சோம் பேறிகளெல்லாம் உயர்ந்தவர்கள் என்று புகழப்படுவதா என்று கேட்கிறேன்? தொழிலாளத் தோழர்களே! இந்த உணர்ச்சியும், மானமும், ரோஷமும் உங்களுக்கு ஏற்படாமல், உங்களுக்கு என்னதான் கூலி உயர்ந் தாலும் பயன் என்ன?

சமுதாய அமைப்பு

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியவில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும். அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி-பட்டம் ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?

சமுதாயமும் அரசியலும் வெவ்வேறல்ல

சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவது தானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்து வமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல் லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

வாலிபர் பங்கு

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்குவதில் தீவிரப்பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களே யாகும். அவ்வித தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்டுகளும், சோஷியலிஸ்டுகளும் மறைமுகமாகப் பார்ப்பனியத் துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக்கொள்கைக்கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழி லாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டு மானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்திசெய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

எச்சரிக்கை!

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை யாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.

நாம் வழிகாட்டுவோம்

நம்மை வேண்டுமானால், காங்கிரஸ்காரரோ, மதவாதிகளோ அவர்கள் மேடையில் அனுமதிக்க மாட் டார்கள். ஆனால் நாம் அதற்கு வழி காட்டவேண்டும். ஏனென்றால் நம்மிடம் ஒன்றும் ஒளிவுமறைவு கிடையாது. அரசியல் லாபத்துக்காக இயக்கத்தை நடத்துபவர் களல்ல நாம்; எனவே, தோழர்களே! எதிர்காலத்தில் நமக்குப் பொறுப்பு அதிகமிருப்பதால், திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டு வாழவும், உழைப்பாளிகளுக்கு உள்ளபடியே உரிமை ஏற்படவும் பாடுபட வாலிபர்கள் முன்வரவேண்டும். பார்ப்பனத் தோழர்களும் கால நிலையை அறிந்து, மனமாற்றம் அடைந்து திராவிட நாட்டின் நலனுக்காக ஆவன செய்ய வேண்டுகிறேன். அதுவே திராவிடர் இயக்கத்தின் கொள்கையாகும். இனிப்பொதுத் தொண்டில் மக்களிடையே ஒரு சிறிதும் துவேஷ உணர்ச்சி கூடாது. கனம் ஆச்சாரியாரும் நானும் சந்தித்த வாய்ப்பு இதற்கு வழிகாட்டியாகவும், அனுகூலமாகவும் இருக்குமென்பதே எனது எண்ண மாகும்.

-----------------------------------22.05.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய பேருரை - "குடிஅரசு' - சொற்பொழிவு - 28.05.1949

33 comments:

தமிழ் ஓவியா said...

ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!


ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?

இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை

அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும் தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.

தந்தை பெரியாரின் கோட்பாடு

ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள்!

வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.

இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.

இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.

ஏணிப்படி ஜாதிமுறை

வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது! என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.

சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?

ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?

தமிழ் ஓவியா said...


விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.

இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?

அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?

இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?

தலைவர்கள் என்றால் யார்?

தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?

பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?

அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா? ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.

நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.

தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.

முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒழியட்டும் ஜாதித் தீ!

ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!

இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்சென்னை
28.4.2013

தமிழ் ஓவியா said...


சமாதி


புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்யசாயி மஹோத் சவம் எனும் தலைப்பில் தினமலர் (25.4.2013 பக்கம் 3) ஆறு பத்தி தலைப்புடன் செய்தியை வெளியிட்டுள்ளது.

சத்யசாயிபாபாவின் இரண்டாம் ஆண்டு மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சத்ய சாயி மகாசமாதி அமைந்துள்ள, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாயி ஆராதனை மற்றும் மஹோத்சவம் சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்கள் நடை பெற்ற விழாவில் ஏராளமான பண்டிதர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு பாபாவின் அருளாசி பெற்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பாபா செத்துப் போனாலும் அவரின் சமாதி ஆசீர்வாதம் செய்கிறதாம். அவர் ஆசீர்வாதத்துக்கு அவ்வளவு சக்தியிருந்தால் சாய்பாபா ஏன் ஒரு மாத காலம் நோய்த் துன்பத்தில் படாத பாடுபட்டார்? (அதன்மீது நமக்கு அனுதாபம் உண்டு!)

எவ்வளவுத் தீவிரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன! மிகப் பெரிய மருத்துவ நிபுணர்கள் எல்லாம் மண் டையைக் கசக்கியும் (கோடிக் கணக்கில் செலவு செய்தும்) நவீன மருத்துவ வசதிகளைக் கையாண்டும் கடைசியில் பயனில்லையே!

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்க வில்லை என்று கிராமங்களில் ஒரு பழமொழியைச் சொல்லு வார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது. சாயிபாபா குளியல் அறை யில் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் நடமாடினார். புட்டபர்த்தியில் அவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓடிப் போய் அறையைத் தாழிட் டுக் கொண்டதால் உயிர் தப்பினார். இவை எல்லாம் நம் சொந்த சரக்குகள் அல்ல! அப் பொழுதே ஏடுகளில் சாங்கோ பாங்கமாக வெளி வந்தவை தான். பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார் நேரிடையாகவே சாயிபாபாவைச் சந்தித்து சாயி பாபாவின் மாயா ஜாலத்தை அவருக்கு எதிரிலேயே செய்து காட்டி அசத்தவில்லையா? (பி.சி. சர்க்கார் பேட்டி (இம்பிரிஸ்ட் ஜூன் 1983).

இவற்றிற்கு மேலும் சாயி பாபாவிடம் மனிதனுக்கு மேலாக தெய்வ சக்தி ததும்பி வழிந்தது என்று சொல்ல வருவார்களே யானால் சொல்லுகிறவர்கள் அசல் ஏமாற்றுக்காரர்கள், அவற்றை நம்புபவர்கள் அசல் ஏமாளிகள் - மடையர்கள் என்ப தல்லாமல் வேறு என்னவாம்?

பாபா மறைந்த நிலையில் அங்கு சமாதி கட்டி அதற்கு அற்புதங்களை உண்டாக்கி மறுபடியும் பக்தி வியாபாரம் கிளம்பி விடும் என்று புட்ட பர்த்திக்கு நேரில் சென்று பார்வையிட்ட திராவிடர் கழகப் படை எழுதியது. (உண்மை 15.1.2011) அதுதான் இப்பொழுது நடக்கிறது.

சமாதி என்று சொன்ன வுடன் நேரில் பார்த்துச் சொன்ன தந்தை பெரியாரின் ருசிய நாடகக் கதைதான் நினைவிற்கு வருகிறது.

பாதிரியார் ஒருவர் தன் மகனிடத்தில் ஒரு கழுதையைக் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள் என்று வெளி யூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் கழுதை நடக்க முடியாமல் இடையில் செத்து விட்டது. மகன் என்ன செய் தான்? அந்தக் கழுதையை அதே இடத்தில் புதைத்துவிட்டு மகான் அடக்கமாகி விட்டார் என்று கிளப்பி விட்டான். பக்தர் கள் பணத்தைக் குவித்தனர். பெரிய பணக்காரன் ஆகி விட்டான். இதைக் கேள்வியுற்ற தந்தை பாதிரியார் அங்கு வரு கிறார். மகன் நடந்ததைச் சொன்னான்.

மகன் அப்பாவைப் பார்த்துக் கேட்டான் நீங்கள் பணம் சம் பாதித்தது எப்படி? அப்பா பாதிரி யார் சொன்னார் புன்னகையோடு செத்துப் போன குட்டிக் கழுதையின் அம்மாதான் என் றாரே பார்க்கலாம் சமாதியின் லட்சணம் இது தான்!

- மயிலாடன் 28-4-2013

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமம் நிறைவு விழா


பெரியார் மனிதர்களை நேசித்தார் அதனால், பேதத்தைக் கண்டித்தார்

தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, ஏப்.28. தந்தை பெரியார் ஜாதி மத ஒழிப்புப் போரில் தன்னை ஏன் ஈடுபடுத் திக் கொண்டார் என் றால், அவர் மனிதர் களை நேசித்தார். அத னால், பேதங்கள் அனைத் தையும் கண்டித்தார் என்று தமிழர் தலைவர் உரையாற்றினார்.

இந்தியாவில் இன்ன மும் மலம் அள்ளு கின்றவர்களின் எண் ணிக்கை 12 லட்சம் பேர். உலர் கழிவறைகள் 27,000 என்று பேராசிரி யர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

சென்னை புத்தகச் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று (27-04-2013) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடக்கத் தில், தெற்கு நத்தம் சித் தார்த்தன் கலைக் குழு வினரின் வீதிநாடகம் நடைபெற் றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தை சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆலோ சகரும், விழிகள் பதிப் பகத்தின் உரிமையாளரு மான வேணுகோபால் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். தீர்மானிக் கும் தீர்மானங்கள் என்ற தலைப்பில் திராவிடர் இயக்கத் தமிழர் பேர வையின் தலைவர் பேரா சிரியர் சுப. வீரபாண்டி யன் உரையாற்றினார். சென்னை புத்தகச் சங்க மத்தின் நிறைவுரையை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங் கினார். நன்றியுரையை, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரும் சென்னை புத்தகச் சங்கமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான வீ. அன்புராஜ் அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...


கடந்த 18 ஆம் தேதி தொடங்கப்பட்டு, மிகச் சிறப்பாக நடந்தேறிய புத்தக சங்கமத்தின் நிறைவு நாளான நேற்று (27-04-2013) மக்கள் அலையலையாக வந்தி ருந்து ஆவலுடன் புத்த கங்கள் வாங்கியதைக் காண முடிந்தது.

வீதி நாடகம்

நேற்று (27.4.2013) சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், தெற்குநத்தம் சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது.

சென்னை புத்தகச் சங்கமத்தின் பலத்த வரவேற்பைப் பெற்றவை களுள் ஒன்றான கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக மாலையில் நடைபெற் றன. வீதி நாடக வித்தகர் சித்தார்த்தன் குழுவினர், மக்கள் முன்னேற்றத்திற் கும், ஒற்றுமைக்கும் ஜாதி மதங்கள் எப்படி யெல்லாம் முட்டுக்கட் டையாக இருக்கின்றன என்பதை நகைச்சுவை யோடு நடித்துக் காட்டி நல்ல வரவேற்பைப் பெற் றனர். இந்நாடகத்தை பெரியார் நேசன் ஒருங் கிணைத்தார்.

தீர்மானிக்கும் தீர்மானங்கள்

வீதி நாடகத்தைத் தொடர்ந்து, பேரா. சுப. வீரபாண்டியன், தீர்மா னிக்கும் தீர்மானங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தமதுரையை நம் நாட்டின் பண்பாட்டை, நாகரிகத்தை வரலாற்றை பல தீர்மானங்கள்தான் தீர்மானித்திருக்கின்றன என்று தொடங்கினார். தொடர்ந்து, பல தீர் மானங்கள் இருந்தாலும் நேரமின்மை காரண மாக 1929 ஆம் ஆண்டு நடந்த செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானங் களில் ஒன்றை மட்டும் பேசப் போகிறேன் என்று அறிவித்துத் தொடர்ந்தார்.

ஜாதிப் பட்டங்களைத் துறந்த தீர்மானம்

எந்த ஜாதியை ஒழிப் பதற்காக சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக் கப்பட்டதோ, அந்த இயக்கம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கும் நிலையில், சிலர் புதிதாக ஜாதியை ஆயுதமாக தூக்கியிருப்பதைக் சுட்டிக்காட்டிவிட்டு, 1929 ஆம் ஆண்டு நடந்த சுயமரியாதை மாநில மாநாட்டுக்கு, சவுந்திர பாண்டிய நாடாராகச் சென்றவர், சவுந்திர பாண்டியனாக திரும்பி னார் என்று சொன்ன தும், அந்த நிகழ்வின் தாக்கத்தால் மக்கள் பலத்த கைதட்டலை எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர், அன்று ஜாதிப்பட்டத்தை துறந்தவர்களை இன்று சிலர் சுயநலத்திற்காக ஜாதிச் சிமிழுக்குள் அடைக்கும் அவலத்தை யும் சுட்டிக்காட்டினார்.

ஜாதி உள்ளே போனால் கண்ணியம் வெளியேறுகிறது

இன்றிருக்கும் நிலையைப் பற்றிப் பேசத் தொடங்கிய அவர், இரண்டு நாட் களுக்கு முன் நடை பெற்ற மாநாட்டை நினைவுகூர்ந்து, மேடையில், கலைஞர், ஆசிரியர் உட்பட அனைத்துத் தலைவர் களையும் எப்படி நாக ரிகமில்லாமல் ஒருமை யில் பேசினார்கள் என் பதைப் பற்றி குறிப் பிட்டபோது, ஜாதி உள்ளே போனால், கண்ணியம் வெளியே போய்விடுகிறது என்று எதிர்வினையாகக் கூறியதும், திராவிட இயக்கத்தின்-அதன் தலைவர்களின் கண் ணியம் கொடிகட்டிப் பறந்தது. அதற்கான அங்கீகாரமும் உடனே கிடைத்தது. மக்களின் கைதட்டல் மூலம். மேலும் அவர் பெரியாரை நினைவு கூர்ந்தார்.

இந்திய அரசியல் சாசனம், ரவேடிரஉயடைவைல ளை டிககநஉந - என்று தான் சொல்கிறது. ஆனால், ஊயளவந ஐவளநடக ளை டிககநஉந என்று பெரியார் சொன்னார் என்று கூறிவிட்டு, இப்படிப்பட்ட அரசியல் சாசனம் இருக்கிற நாட்டில் தான் கைகளால் மலம் அள்ளுகிறவர்கள் 12 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் உலர் கழிவறைகள் 27,000 இருக்கிறது என்றதும் மக்கள் வெட்கத்தால் வெதும்பினார்கள்.

இந்து மதமும், இந்து மனமும்

தொடர்ந்து பேசிய அவர். பாலியல் குற்றங்களால் டில்லி நகரமே குலுங்கியது. இங்கே நடந்தால் அங்கே குலுங்குவதில்லை. ஆகவே இதிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்று ஊடகங்களை ஒரு பிடிபிடித்தார். மேலும் அவர், பாலியல் குற்றங்களை நாமும் கடுமை யாக கண்டிக்கிறோம். இந்தப் பிரச்சினையில் அனை வரின் குரலும் ஒன்றாக இருக்கிறது என்று கூறி, அம்பேத்கர் பொது மனசாட்சி என்று சொன்னதை பொருத்தமாக நினைவு கூர்ந்து, அதையே பெரியார், பாமர மக்களுக்கு இன்னமும் தெளிவாக தெளிவிக் கக்கூடிய வகையில், பொது புத்தி என்று சொன்ன தையும் சேர்த்துச் சொல்லிவிட்டு, பாலியல் குற்றம் என்று வருகிறபோது பொது மனசாட்சி குற்றத்திற்கு எதிராக பேசுகிறது. ஆனால், மனிதன் மலம் அள்ளு வதைப் பற்றி பேச மறுக்கிறது. அதற்குக் காரணம், இந்து மதமும் நமக்குள் இருக்கிற இந்து மனமும் என்று இந்து மதத்தின் வேரையே வெட்டிக் காட்டி யவுடன் அரங்கினர் அதை ஆமோதித்து ஆர்ப் பரித்தனர். மதுவிலக்குக்கு நடப்பவர்கள், தீண்டாமைக்கெதிராக நடப்பார்களா?

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமத்தின் நிறைவு நாளில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள்.
தொடர்ந்த அவர், எங்கே மதுவிலக்கு மாநாடு போடுகிறார்களோ, என்று சொல்லி முடிப்பதற்குள் மக்கள் புரிந்து கொண்டு சிரிக்கத் தொடங்கி விட்டனர். அங்கேதான் டாஸ்மார்க் அதிகமாக விற்பனை யாகிறது என்று முடிக்கும் போதே கைதட்டல்களும் அவர் பேச்சோடு கலந்தே முடிந்தது. அத்தோடு நிறுத்த வில்லை அவர், மதுவிலக்குக்காக தெற்கிலிருந்து கிழக் காக, வடக்கிலிருந்து மேற்காக என்று மாறி மாறி நடப் பவர்கள், ஏன் தீண்டாமைக்கெதிராக நடப்பதில்லை என்று கேட்டு சிலரின் பொய் முகங்களையும் கிழித் தெறிந்தார்.

ஜாதிய தமிழ்தேசியம்

தொடர்ந்து பேசிய பேராசிரியர். இரட்டை வாழிடம், இரட்டைக் குவளை, இரட்டைச் சுடுகாடு ஆகியவற்றைக் கூறி இவைகளை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவோரை நன்றாக சுளுக்கெடுத்தார். அதாவது, மாநாடு போட்டு பேசுவோர், அவர்களின் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழில் பேசுவதைக் சுட்டிக்காட்டி, தூய தமிழில் பேசுகின்றவர்கள். ஜாதிய வாதியாக இருக்கின்றார்கள் என்பதை போட்டுடைத் தார். அதுமட்டுமல்ல, அப்படி ஒரு தமிழ்த் தேசியம் ஜாதியோடுதான் இருக்குமென்றால், நமக்கு தமிழே வேண்டாம் என்று கூறியதும் மெய்சிலிர்த்து மக்களுக்கு, பேராசிரியர் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஜாதியை ஒழிக்காதவரை தமிழ் தேசியமே வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும் என்று சொன்னதும் கைதட்டல் காதைப் பிளந்தது. பேராசிரியர் உணர்வு வயப்பட்டு கூறவில்லை என்பதை அவர், அடுத்து பெரியாரை நினைவு கூர்ந்ததும் புரிந்தது. அதாவது, பெரியார் நான் விஸ்தீரணத் திற்காக போராடுகிறவன் அல்ல. சமூக விடுதலைக்காக போராடுகிறவன்- என்று சொன்னதாக கூறியதும் மக்க ளும் உணர்வு வயப்பட்டு கைதட்டவில்லை. பிரச்சினை யின் அடி ஆழத்தை உணர்ந்தே கைதட்டியிருக் கிறார்கள் என்பதை பெரியாரின் கருத்துக்கு மீண்டும் அவர்கள் கைதட்டியதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.ஆகவே, ஊர் ஊருக்கு ஜாதி மறுப்பு இணை தேடலை நடத்துவோம். ஜாதியை ஒழிப்போம் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறிவிட்டு. தொ டர்ந்து, 1929 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர் மானத்தை மீண்டும் மீண்டும் நிறைவேற்றி கடமை யாற்றுவோம் என்று சூளுரைத்துவிட்டு தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.
கூட்டு முயற்சிக்கு வெற்றி

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் கருத்து மழை ஓய்ந்த பிறகு, மீண்டும் ஒரு கருத்து மழை மய்யம் கொண்டது. ஆம். தமிழர் தலைவர் தமது சிறப் புரையைத் தொடங்கினார். அவர் தமது சிறப்புரையில், முதலில் இந்த சென்னை புத்தகச் சங்கமத்திற்காக உழைத்த அனைவருக்கும் மனம் திறந்த பாராட்டு களைத் தெரிவித்துக் கொண்டார். குறிப்பிட்டு ஒளிவண்ணன், புகழேந்தி, வேணுகோபால், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் ஏராளமானோர் தேனீக்களைப் போல பணியாற்றியிருக்கிறார்கள். இது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. ஆகவே, இது தொடர வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...


நான்கு அணா திருக்குறள்

தொடர்ந்து பேசிய அவர், புத்தகங்கள் தொடர்பாக பெரியாரை நினைவு கூர்ந்தார். அதாவது, 1948 இல் தந்தை பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க., சக்ரவர்த்தி நாயினார் ஆகியோரை கூட்டி திருக்குறள் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தியதையும், 1330 குறள்களையும் கையடக்கப் பதிப்பாக வெறும் நான்கு அணாவுக்கு அச்சடித்து பல லட்சம் பிரதிகளை விற்பனை செய்ததாகக் கூறிவிட்டு, மக்கள் வியப்பின் வசப்பட்டு இருக்கையில், அதுவரை புலவர்கள் வீட்டில் இருந்த திருக்குறளை மக்களின் வீட்டுக்குள் கொண்டு சென்றவர் தந்தை பெரியார் என்று சொல்லி மக்களின் வியப்பை இன்னும் கூட்டிக் காட்டினார்.

ஊழ்-சுபாவம்

திருக்குறளுக்கு யாராரோ உரை எழுதியிருந்தாலும், ஊழ்-என்பதற்கு தந்தை பெரியார் சொன்னது போல வேறு யாரும் சொல்லவில்லை என்பதை தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார். அதாவது, ஊழ் என்பதற்கு விதி - என்று உரையாசிரியர்கள் கூறுவர். பெரியார் அதற்கு சுபாவம் என்று கூறிய தாகவும், அது, மனிதனின் தனித்தன்மை என்று அதற்கு விளக்கம் கூறியதையும் குறிப்பிட்டார். தொடர்ந்து வள்ளுவரே, ஊழிற் பெருவலி யாவுள - என்று கூறி னாலும், மற்றொரு குறளில், ஊழையும் உப்பக்கம் காண்பர் அறிஞர் என்று குறிப்பிட்டதையும், கூறி விட்டு, சாருவாகர்கள், லோகாயுதவாதிகள், மெட்டீ ரியலிஸ்டுகள் ஆகியோரும் இந்த சுபாவம் என்பதை வலியுறுத்தியதை குறிப்பிட்டு, தந்தை பெரியாரின் தனித்த சுய சிந்தனையை தொட்டுக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

சுனிதா வில்லியம்சும் - பகவத் கீதையும்

புத்தகங்கள் வருவதற்கு முன் கருத்துகள் எப்படி பரப்பப்பட்டன என்பதை நினைவு கூர்ந்த தமிழர் தலைவர். புத்தர் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பகவத் கீதையின் மோசடியைப் பற்றி குறிப்பிடுகையில், விண்வெளிக்குச் செல்லும்போது தான் பகவத் கீதையை எடுத்துச் சென்றதை பெரு மையோடு குறிப்பிட்ட சுனிதா வில்லியம்சை சுட்டிக் காட்டி, அப்படி அதில் என்ன இருக்கிறது பெருமைப் பட என்ற வினாவையும் எழுப்பி, பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. இதுவா பெருமை என்று கேட்டுவிட்டு, போரில் எதிரி நேருக்கு நேர் நிற்கும் போது அர்ஜுன னுக்கு 700 சுலோகங்களை கண்ணன் சொன்னதாக கீதையில் இருப்பது அறிவுக்கு பொருந்துமா? என்றும், தொடக்கத்தில் அது வெறும் பாரதமாக இருந்தது. பிறகு திட்டமிட்டு பகவத் கீதை இடைச்செருகலாக சேர்க்கப்பட்டு, மகா பாரதமாக பலரும் கட்டியதையும் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து, அதில்தான் கண்ணன் சொன்னதாக வரும் சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் - என்பதை நினைவூட்டி இப்படி மனிதர்கள் தனித் தனியாக பிறப்பாலேயே பிரிந்ததை எதிர்த்துதான் பெரியார் போரா டினார் என்று கூறி விட்டு, பெரியார் மனிதர்களை நேசித்தார். அதனால்தான் பேதத்தை கண்டித்தார் என்ற கார ணத்தையும் சொன் னார். சாராய பானையில் மல்லிகை வாடையா வரும்?

தமிழ் ஓவியா said...

பேரா. சுப.வீ. மேடை யில் கண்ணியமின்றி பேசு கின்ற வர்களை குறிப்பிட்டதைச் சொல்லி, அவர்கள் பற்றி நாம் பேச வேண் டியதில்லை என்று கூறி விட்டு, தந்தை பெரி யாரின் பிரச்சார வாழ்க்கை சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அதாவது, பெரியார் மேடையில் பேசும்போது, சிலர் மலத்தை அள்ளி பெரியார் முகத்தில் வீசியதையும், அய்யா அதை வழித்து போட்டுவிட்டு, என் மீது வீசுவதற்காக அவர் கள் கையில் மலத்தை தொட்டார்களே! என்று நினைக் கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு தூரம் கீழிறங்கிப் போனார்களே! என்று அவர்களுக் காக வருந்தியதைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்டவர்களை யே பார்த்து பெரியார் வருந்தியதை நினைவு கூர்ந்து, இப்பொழுது அத்தகையவர்களை நினைத்து நாம் வருந்தவேண்டும். அவர் களிடம் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியாது. காரணம், சாராயப் பானையில் மல்லிகை வாடையா வரும் என்று கூறியதும் கைதட் டலால் அரங்கம் கிடுகிடுத்தது.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் பயணம் தொடருகிறது

தொடர்ந்து பேசிய அவர், விழிகள் பதிப்பகத்தின் உரிமையாளர் வேணுகோபால் கொடுத்ததாகச் சொல்லி, ஒரு புத்தகத்தை எடுத்துக்காட்டி பேசினார். புத்தகத்தின் பெயர், இந்தியாவில் மட்டுமே ஜாதிகள் இருக்கிறது ஏன்?- என்றும், குஜராத்தைச் சேர்ந்த கண்ணுபிள்ளை என்கிற ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி, 200 புத்தகங்களை ஆய்வு செய்து விட்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றெல்லாம் அந்தப் புத்தகத்தைப்பற்றி முன்னோட்டம் கூறிவிட்டு, அந்தப் புத்தகத்திலிருக்கும் அரிய கருத்துகளை எடுத்து வைத்து, இது பெரியார் எழுதியதல்ல. தமிழ்நாட்டிலும் எழுதப்பட்டதல்ல, கண்ணுபிள்ளை அய்.பி.எஸ்.-ஆல் அதுவும் குஜராத்தில் - என்று முடிக்கும் முன்பே குஜராத்திலிருந்து இப்படியொரு புத்தகமா அதுவும் அய்.பி.எஸ். அதிகாரியால் எழுதப்பட்டிருக்கிறதா என்ற எண்ணங்களால், ;ஆசிரியர் குஜராத்தில் என்று குறிப்பிட்ட போதே, ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு அரங்கினர் பலமாக கைதட்டினர். பிறகுதான் குஜராத் தில் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி எழுதியது என்று ஆசிரியர் முடித்தார். அதைத் தொடர்ந்துதான், பெரி யார் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பயணம் தொடர்கிறார் என்று கூறிவிட்டு, நல்ல புத்த கங்களை படியுங்கள், பகுத்தறிவை பயன்படுத்தி படி யுங்கள். அதன் மூலம் புதியதோர் சமுதாயத்தை உருவாக் குங்கள் என்று கூறிவிட்டு தமதுரையை நிறைவு செய்தார். முன்னதாக, இடையில் வேறு பணிகள் காரணமாக புறப்பட இருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியனுக்கு தடங்கலுக்கு வருந்துகிறோம் - என்று மக்களிடம் சிரித்தபடியே கூறிவிட்டு சிறப்பு செய்துவிட்டு மீண்டும் உரையைத் தொடர்ந்தார்.

பரிசளிப்பு விழா

நிறைவுரையைத் தொடர்ந்து, பரிசளிப்பு விழா தொடங்கியது. முதலில் சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரை முகநூல் மூலம் அனுப்பிய யுவகிருஷ் ணன் சார்பாக தமிழ்நிலா பரிசினைப் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, காகிதச் சிற்பி ரமேஷ், பதிப்பாளர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பதிப்பாளர்கள் வரிசையாக நின்று தமிழர் தலைவரிடம் நினைவுப் பரிசை மிகுந்த உற்சாகத் தோடு பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, (27-04-2013) அன்றைய சிறப்புப் பரிசுக்கு சென்னையைச் சேர்ந்த தஸ்லிம் பானு என்பவரை தமிழர் தலைவர் தெரிவு செய்தார். பரிசு பெற்றவர் அரங்கத்திலேயே இருந்ததால் மிகுந்த மகிழ்வோடு வந்து தமிழர் தலை வரிடம் பரிசைப் பெற்றுக் கொண்டார். அடுத்தடுத்த பரிசுகள் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டன.

நன்றியுரை

அதைத்தொடர்ந்து, பொதுச் செயலாளரும், சென்னை புத்தகச் சங்கமத்தின் தலைமை ஒருங்கிணைப் பாளருமான வீ. அன்புராஜ் நன்றியுரை கூறி னார். அவர் தமது நன்றியுரையில் முதலில் ஜாதி, மொழி, இனம், நாடு கடந்து பல்லாயிரம் மக்கள் வருகை தந்திருந்ததைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொ டர்ந்து, சூக்ஷகூ தலைவர் சிக்கந்தர், உறு துணை யாக இருந்த மதன்ராஜ், பி.எஸ்.ஆர்.பி.அய்., ஞஆரு, அபிராமி மெகா மால், தினத்தந்தி தொலைக்காட்சி, ஹலோ எஃப்.எம்., விடுதலை, துளிர், சுட்டி விகடன், வாசன் கண் மருத்து வமனை, நக்கீரன், ஆனந்தபவன், ரோட்டரி, மன்னா, ஓசான் மற்றும் பாயிண்டஸ், பி.எஸ்.எம். ஆகிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, வாக்கத்தானில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் விவேக், அனைத்துப் பதிப்பாசிரி யர்கள், தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலஸ் அ. லிஸ்தபதோவ், புத்தகர் விருது பெற்ற அய்ந்து பெருமக்கள், பயிற்சிப்பட்டறையை ஒருங் கிணைத்த ஒளிவண்ணன், பி.எம். ரமேஷ், புத்தக வங்கிக்காக இது வரை 1551 பேர் புத்தகங்கள் கொடையளித்துள்ளார்கள் அவர்களுக்கும், பரிசுகள் வழங்கியவர்களுக்கும், நிகழ்ச்சியை முழுவதும் இணையத்தில் நேரலை செய்த பிரின்சு தலைமை யிலான குழுவினருக்கும், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன், pmu பேராசிரியர்கள், சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கிய திராவிடன் நல நிதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், செக்யூரிட்டி பணியா ளர்கள், செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள், ஊடகங்கள், தீயணைப்புத்துறை, சுவரொட்டி ஒட்டிய தோழர்களுக்கும், மற்றும் புகழேந்தி, ராய்மோகன், வேணுகோபால் ஆகிய அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி! நன்றி!! என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதற்கு துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்லதல்ல! கலைஞர் பேட்டி


சென்னை, ஏப். 28 - தமிழ்நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும் அதன் காரணமாக துப்பாக்கி முனையில் பதில் சொல்வதும் நல்ல அறிகுறியல்ல என்று தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (27.4.2013) செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தபோது தெரிவித்தார்.

கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- மரக்காணத்தில் நேற்றைய தினம் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது? கலைஞர் :- அதைப்பற்றித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ் நாட்டில் ஜாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனை யிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன்வர வேண்டும். கட்சித் தலைவர்களும் தங்கள் கடமை யை மறவாமல் பிரச்சினையை அக்கறையோடு அலசி, அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

செய்தியாளர் :- மாமல்லபுரத்தில் நடை பெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று கூறி யிருக்கிறார். ஜாதிகளை யெல்லாம் அடையாளப் படுத்திப் பேசியிருக்கிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுதான் எனக்கும்.

செய்தியாளர் :- நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.அய். விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.அய். இயக்குநரே உச்ச நீதிமன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

செய்தியாளர் :- தமிழகச் சட்ட சபையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை யெல்லாம் வெளி யேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்க வில்லையே?

கலைஞர் :- உங்கள் முடிவுக்கே விட்டு விடு கிறேன். -இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜாதிக்கலவரத்தை அனுமதிக்க கூடாது: மார்க்சிஸ்ட் தீர்மானம்


சென்னை, ஏப். 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (27.4.2013) சென்னை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவுக்கு வாகனங்களில் வந்த பாமகவினர் புதுவையை அடுத்து வழிநெடுகிலும் வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சமூக நீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஜாதி கலவரத்தை திட்டமிட்டு உருவாக்க முனை வதை அனுமதிக்கக் கூடாது.

உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு


ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா? இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!

மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.

உற்சாகம் பொங்க வாரீர்!

நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).

உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!

சங்கடமில்லை - சபலமில்லை!

நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.

சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,

இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!

குக்கல்கள் குரைக்கட்டும்!

குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!

அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.
அவர் வழியே நம் வழி!

எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க, இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!

95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்

குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!

காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!

வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!

இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!

அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!

உலகம் வியக்க வேண்டும்!!

இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!

ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!

கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!

வாருங்கள், தோழர்களே வாருங்கள்!

அன்போடு அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா

தொண்டன் தோழன்கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்சென்னை, 29.4.2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?

சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.

குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?
சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.

இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே - அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.

தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.

இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவுப் பெரிய கொடுமை! சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 29-4-2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


ஈழ விடுதலைக்கு இதுவே முதல்படி

கோயில்கள் நிறைந்த நகரமாம் குடந்தையில் செய்த பாவங்களை ஆண்டுக்காண்டு தவணை முறை யிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுவதுமாகவும் கழுவி சுத்தம் செய்யும் (அந்தோ! அந்த மகாமகக் குளத்தில் இறங்கினாலோ எல்லா நோய்களும் உடலில் ஒட்டிக் கொள்ளும்) அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த குளக்கரையில்...
கடந்த 10.4.2013 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் தமிழர்கள் தமிழினம் சந்திக்கும் சவால்கள் எனும் தலைப்பில் ஆற்றிய எழுச்சி யுரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது! ஆம்! இளையோர், முதியோர், மாண வர், மகளிர் அனைவரையும் சிந்திக்க வைத்தது!.

ஈரோட்டுப் பகலவனாம் அய்யா வின் அறிவு ஒளி மின்சாரமின்றி இருண்டு கிடந்த குடந்தை மாநகரில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியது! உண்மை தான். தங்களின் உரை அந்த அளவுக்கு அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது!

தமிழினம் சந்தித்த சவால்கள், சந்திக்கின்ற சவால்கள், சந்திக்க இருக் கின்ற சவால்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பேசியது. இனி வரலாற்றாசிரியர்களே மூடி மறைக்க நினைத்தாலும் முடியாத உண்மை யாம் ஆரிய - திராவிடப் போராட் டம் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது!.

அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற ஒரு சாதாரண மனிதநேயம் மிக்க சட்டமே இன்று முடக்கப்பட்டிருக்கிறது.

அய்.சி.யு. வார்டுக்குள் செருப்பு போட்டுக் கொண்டு போகக்கூடாது என்று தடுத்தவருக்கே - அதுவும் ஒரு மருத்துவருக்கே. சிறை என்றால் தமிழன் கட்டிய கோயில். தமிழ னையே கருவறைக்குள் போகாதே எனத்தடுக்கும் பார்ப்பனருக்கு என்ன தண்டனை? எத்தனை ஆண்டு வழங் குவது என்ற கேள்வி அனைவர் உள்ளத்தையும் தொட்டது!.

அடுத்து ஈழத்தமிழர் சந்திக்கும் சவால்களுக்கு முடிவுகட்ட டெசோ அமைப்பு துவங்கப்பட்ட வர லாற்றைக் கேட்ட மக்கள் உள்ளத்தில் புதிய சிந்தனையை விதைத்தது!

போஸ்னியா, ருவான்டி போன்ற நாடுகளில் நடந்த படுகொலை களுக்கு அந்நாட்டு சூத்ரதாரிகள் தண்டிக்கப்பட்டது போல, ஈழத் தமிழர்களை கொத்துக் குண்டுகளை வீசி இலட்சக்கணக்கான தமிழர் களைக் கொன்று குவித்த ராஜ பக்சேவுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இன்று, உலகத்தமிழர்களின் எண்ணம் மட்டுமல்ல, உலகநாடுகளின் தலை வர்களின் எண்ணமும் அதுதான் என்பதை உலகுக்கே உணர்த்தி விட்டது டெசோ அமைப்பு.

தி.க.வும், தி.மு.க.வும் இணைந்து எடுத்த இந்த முடிவு ஒன்றே ஈழத்தமிழர்களுக்கு விடிவு என்பதை அன்றைய கூட்டம் உறுதி செய்தது!

தன் குட்டிகளைப் பறிகொடுத்த சிங்கம் கோபத்தோடு பிடறியை உதறிக்கொண்டு எழுந்து நிற்பதைப் போல இன்று மாணவர்கள் எழுச்சி யோடு போராடுவதே டெசோ வுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கட்கும், தங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். ஈழ விடுதலைக்கும் இதுவே முதற் படி!

தங்களின் சுயமரியாதைத் தொண்டர்

நெய்வேலி க.தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது சிங்களக் கேப்டனை பிடித்து சிறை வைத்தது போல தற்போதும் தீவிரமான நடவடிக்கை தேவை மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கைசென்னை, ஏப்.29- இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தமிழக மீனவர்களை தாக்கி வந்த சிங்கள கேப்டனை பிடித்து வைத்து மண்டபத்தில் சிறை வைத்தது போல, மத்திய அரசு தற்போது தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இலங்கை சிறையிலே வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தி.மு.க. தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (28.4.2013) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற் படையினர் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாக நடத்தி வரும் தாக்குதல் குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, இந்தப் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏன், தமிழக அரசும் கூட, தமிழக மீனவர்கள் தாக்கப் படுகின்ற போதெல்லாம் உடனடியாக பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. நமது வலியுறுத்து தலைத் தொடர்ந்து இந்தியஅரசும் இலங்கை அரசுக்கு முறையீடு செய்து விட்டு, அதுபற்றி நாடாளுமன்றத்திலேயோ அல்லது அறிக்கை மூலமாகவோ தங்கள் கடமை முடிந்துவிட்டதைப் போல விளக்கமளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இதனால் எல்லாம் பிரச்சினைகள் முடிந்து விட்டனவா என்றால்இல்லை என்றே வேதனையோடு சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். உதாரணமாக 27-4-2013 அன்று நமக்கு வந்துள்ள செய்திப்படி, இலங்கை அனுராத புரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாவது முறையாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்தில் 6-5- 2013 வரை இவர்களுக்கு காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்த முப்பது மீனவர்கள் ஏப்ரல் 6ஆம் தேதி யன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலை மன்னார் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட் டார்கள். அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட போது, முதலில் ஏப்ரல் 18ஆம் தேதி வரை சிறையிலே அடைக்கப் பட்டார்கள். பின்னர் ஏப்ரல் 18ஆம் தேதி அவர்கள் மீண்டும் நீதி மன்றத்திலே ஆஜர்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 26ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்கள். அந்தக் கெடுவும் முடிந்து, ஏப்ரல் 26ஆம் தேதி நீதி மன்றத்திலே அவர்களை ஆஜர்படுத்திய நேரத்தில், மே 6ஆம் தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நேற்றையதினம் சாலை மறியல் செய்துள்ளார்கள்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மாத்திரமல்ல; ஏப்ரல் 5ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, புதுவை-காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை நீதி மன்றத்திலே ஆஜர் படுத்தி, அவர்களையும் சிறையிலே அடைத்திருக் கிறார்கள். நீதி மன்றம் அவர்களை மே 29ஆம் தேதி வரை சிறையிலே அடைக்க உத்தர விட்டுள்ளது.

எனவே தமிழக மீனவர்களின் அவலம் தொ டர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் இந்தப் பிரச்சினைக் காக வேண்டுகோள் விடுப்பதும் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுக் காலமாக நீடித்து வரும் மீனவர்களின் இந்தத் துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க இனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து தீவிரமான ஒரு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இத்தாலி கடற்படையினரால் கேரள மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் மத்திய அரசு செலுத்தி வருகின்ற அக்கறையில் நூற்றில் ஒரு பங்காவது தமிழக மீனவர்களுக்கும் செலுத்திட வேண்டுமென்று தமிழகமே எதிர்பார்க்கிறது.

kkமேலும் கடந்த 1985ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த போது, சிங்களக் கேப்டன் ஒருவர், அடிக்கடி தமிழக மீனவர்களை, தமிழக எல்லைப் பகுதிக்குள்ளேயே வந்து தாக்கி வருவதைக்கேள்விப்பட்டு, கோப மடைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், அந்தக் கேப்டனைக் கைது செய்ய நமது கடற்படைக்கு உத்தரவிட்டார். நமது கடற்படைவீரர்களும் சிங்களக் கேப்டனைப் பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.

அதன் பிறகு அந்தக் கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இந்தச் சம்ப வத்தை இந்திய அரசு நினைவிலே கொண்டு, இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நடவடிக்கையைப் போல தீவிரமான நடவடிக்கை தற்போதும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நமது மீனவர்களின் விருப்பமாகும்.
மத்திய அரசு மேலும் இதிலே தயக்கம் காட்டுமேயானால், தமிழகத்தின்மீதும், தமிழக மீனவர்கள் மீதும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே அது தெளிவாக்குவதாக அமைந்து விடும் என்பதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது.

தமிழ் ஓவியா said...

திருச்சியில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

* ஜோதிடத்தை அரசு தடை செய்ய வேண்டும்

* பாலியல் வன்முறைகள் தடுக்கப்பட சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

* ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்

திருச்சியில் நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருச்சி, ஏப்.29- மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 26.4.2013 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், திருச்சி , புத்தூர் பெரியார் மாளிகையில் தமிழர் தலைவர் - பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் , மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா,. நேரு, பொதுச்செயலாளர்கள் வீ.குமரேசன், வடசேரி வ.இளங்கோவன் , துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா,. நேரு நிகழ்வின் தொடக்கத்தில் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், மதவெறி எதிர்ப்பு கருத்தரங்கங்கள் மாவட்டம் தோறும் நடத்த வேண்டிய அவசியம் பற்றியும், தமிழர் தலைவர் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்திற்கென இட்டுள்ள பணிகளான கருத்தரங்கங்கள், மாணவ மாணவியர்க்கு நடத்த வேண்டிய பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளை மாவட்டம் தோறும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் முனைப்புடன் திட்ட மிட்டு நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கோபி.குமார ராஜா, திண்டுக்கல் மு.நாகராசன், கன்னியா குமரி உ.சிவதாணு, அருப்புக்கோட்டை ந.ஆனந்தம் , பழனி ச.திராவிடச்செல்வன், திருச்சி மாவட்டம் மு.நற்குணம், கும்ப கோணம் ஆடிட்டர் சு.சண்முகம், அரியலூர் பு.கா. அன்பழகன், திருச்சி மாநகர் பா.லெ. மதிவாணன், நாகை இல.மேகநாதன், ஆத் தூர் வ.முருகானந்தம், மதுரை புற நகர் மன்னர்மன்னன், மதுரை மா நகர் சே.முனிய சாமி, பட்டுக்கோட்டை ச.முரளிதரன் ஆகி யோர் தாங்கள் செய்துள்ள பணிகளையும் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சிறப்பாக செயல்பட தங்கள் கருத்துகளையும் அனு பவத்தின் அடிப்படையில் எடுத்து வைத்தனர். தொடர்ந்து மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர்கள் வடசேரி வ.இளங் கோவன் வீ.குமரேசன் ஆகியோர் உரையாற் றினர். வீ.குமரேசன் தனது உரையில்:- பகுத்தறி வாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர் களின் பன்முக வேலைத்திட்டங்கள் பற்றியும் , மன்றல் , சென்னை புத்தகச் சங்கமம் போன்ற நிகழ்வுகளையும், டெசோ அமைப்பில் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பு பற்றியும் மற்றும் இயக்க ரீதியாகவும் வெளி மாநிலங் களிலும், வெளி நாடுகளிலும் தந்தை பெரி யாரின் கொள்கை பரவ அய்யா ஆசிரியர் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பகுத்தறி வாளர் கழகம் உறுதுணையாக இருப்பது நமக்குப் பெருமை என்றார். மாடர்ன் ரேசனலிஸ்ட் பத்திரிகை வாசகர் வட்டம் ஆரம்பிக்க ஆசிரியர் அனுமதி தரவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பகுத் தறிவாளர் கழகம் எப்படியெல்லாம் பணி யாற்றலாம் என்பதனைச்சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

புரவலர் தமிழர் தலைவர் நிறைவாக பகுத்தறிவாளர் கழகப்புரவலர் தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரையாற்றினார். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்டத்தலை நகரங்களில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக கருத்தரங்கங்கள் நடத்தப் படவேண்டும். அவை மதவெறி எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணியம், அறிவியல் வளர்ச்சி- பகுத்தறிவின் மேன்மை போன்ற தலைப்புகளில் நடத்தப்பட வேண்டும், அவை திருநெல்வேலி, நாகர்கோவிலில் ஆரம்பித்து சென்னை வரை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். அரசாங்க அதிகாரிகளை, ஊழியர்களை, வழக்குரைஞர்களை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டும், சேர்க்க வேண்டும். குமரேசன் அவர்கள் குறிப்பிட்டது போல பகுத்தறி வாளர் கழகம் பொறுப்பெடுத்துச் செய்ய லாம். அதற்கு கட்சி வேறுபாடு இன்றி அனைவரையும் வரவழைத்து கூட்டங்கள் நடத்தலாம் என்றும், சென்னையில் நடை பெறும் புத்தகச் சங்கமம் நிகழ்வின் சிறப்பு களைக்குறிப்பிட்டு, இதனைப்போல மற்ற மாநகராட்சிகளிலும் நடத்த திட்டம் இருக் கிறது, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பா ளர்கள் முழு ஒத்துழைப்போடு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். பின்பு வழிகாட்டும் விதமாக பல்வேறு நிகழ்வுகளைக்குறிப்பிட்டு, மிகச்சிறப்பாக செயல்பட திட்டமிடுங்கள் மாநில பொறுப் பாளர்கள் உட்கார்ந்து பேசி அடுத்தடுத்த வேலைத்திட்டங்களை வகுத்து செயல்பட வலியுறுத்தினார்.

தமிழ் ஓவியா said...

மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன், தீர்மானம் எண் 1: மத வெறி எதிர்ப்புக் கருத்தரங்குகளை மாவட்டம் தோறும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடத்துவது. தீர்மானம் எண் 2: மதச்சார்பற்ற அரசு நடத்துகிற அரசு விழாக்களில் பூமி பூஜை என்ற பெயரில் இந்து மதக்கலாச்சாரத்தை விதைக்கும் போக்கிற்கு கண்டனம் தெரிவிப் பதோடு , இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு இக்கூட்டம் சுட்டிக் காட்டு கிறது.

தீர்மானம் எண் 3 : இந்தோனேசியா நாட்டில் தடை செய்தது போல , இந்திய நாட்டிலும் ஜோதிடத்தை அரசு தடை செய்ய வேண்டும். அறிவியலுக்குப்புறம்பாக பொய் யையும் மூட நம்பிக்கையையும் பரப்பும் ஜோதிடர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். தீர்மானம் எண் 4 : பெருகி வரும் பாலியல் வன்முறைகள் தடுக்கப்பட சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். உளவியல் ரீதியான நெறிப்படுத்துதல் பயிற்சிகள் (யீளலஉடிடடிபஉயட உடிரளேநடடபே) கல்வி நிலையங்களில் அளிக்கப்படல் வேண்டும். ஆண் குழந்தைகள் வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆபாச உணர்வு களைத் தூண்டும் அனைத்துத் தளங்களும் தடை செய்யப்பட வேண்டும். கோயில்களில் உள்ள ஆபாசக்காட்சிகளை சித்தரிக்கும் சிலைகளும் வடிவமைப்புகளும் நீக்கப்பட வேண்டும். பெண்ணை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கும் மதங்கள் ஒழிக்கப் பட்டால் ஒழிய பாலியல் வன்முறை ஒழியாது. எனவே மத எதிர்ப்புப் பிரச்சாரம் தீவிரமாக்கப்பட வேண்டும்.
தீர்மானம் எண் 5 : ஆசிரியர் தகுதித் தேர் வில் இட ஒதுக்கீடு முறை மிகத் தந்திரமாக நீக்கப்பட்டிருப்பதை வன்மை யாக கண்டிக் கிறோம். உரிய வழியில் அதனை சந்தித்துக் கொண்டுள்ள தமிழர் தலைவர் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீர்மானம் எண் 6: பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக தி மாடர்ன் ரேசனலிஸ்டு வாசகர் வட்டங்களை அமைப்பது. அதில் விடுதலை வாசகர் வட்டம் போல சுயவடியேடளைவள சுநயனநசள ஊசைஉடந (சுசுஊ) என்னும் பெயரில் மாவட்டங்கள் தோறும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் எண் 7 : தி மாடர்ன் ரேசன லிஸ்டு, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

முடிவாக திருச்சி மாவட்ட செயலாளர் மலர் மன்னன் நன்றி கூறினார். கலந் துரையாடல் கூட்டத்தில் திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் பி.சுப்பிர மணியன், நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜெயக்குமார், அமைப் பாளர் மு.க. ஜீவானந்தம் , திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.பென்னி, திருப்பூர் மாவட்ட செயலாளர் கு.மணிவண்ணன், திண்டுக்கல் மு.செல்வம், தஞ்சை மாவட்ட தலைவர் கோபு.பழனி வேல், அமைப்பாளர் ச.அழகிரி, கி,கார்வண்ணன், திராவிடர் கழக திருச்சி மாவட்ட தலைவர் சேகர், மா நகரத்தலைவர் சி.மருதை, பொதுக்குழு உறுப்பினர் கணபதி,வே.முத்துக்குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் பா.லெ., மதிவாணன், குத்புதீன், ஜோ.பென்னி, ஆசிரியர் நற்குணம், மலர் மன்னன் போன் றோர் திராவிடர் கழகப்பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு கலந்துரையாடல் கூட்ட நிகழ்வையும், தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வையும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது பாராட்டுக்குரியது. புதிய பொறுப்பாளர் : தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் : கூடலூர் டி.பி.எஸ்.ஆர். ஹரிகரன்.

தமிழ் ஓவியா said...


இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!


- மின்சாரம் -

உனக்குமா ஓர் இயக்கம்? அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே
- உனக்குமா ஓர் இயக்கம்?
என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த பொன்னாள் இந்நாள் (1891).

இனக்குறையை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாம் திராவிடர் கழகம் நாட்டில் இருக்கையில், ஏன் உனக்கு இன்னொரு கட்சி என்ற வினாவை எழுப்பியுள்ளார் நம் புரட்சிக் கவிஞர்.

உண்மைதானே, இந்த இனத்துக் குள்ள குறை என்ன? இன்றும் சாஸ் திரப்படியும், சட்டப்படியும் நாம் சூத்திரர் கள்தானே - பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் தானே!

இதனைச் சுட்டிக்காட்டி எம்மின மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத் தித் தன்மானத் தீயை மூட்டும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எது?

இந்த இழிவை நீக்க இராமாயணத் தில் தீப்பரவட்டும் என்று எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனை எரித்த தீரர்கள் கொண்ட கோட்டம் திராவிடர் கழகம்தானே!
ஜாதியைப் பாதுகாக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை பட்டப் பகலில் பகிரங்கமாக எரித்து, அதன் சாம்பலைப் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஆற்றல் - சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு காலத் தண்டனை என்று இதற்காகவே சட்டம் கொண்டு வந்தபோதும்கூட அச்சம் இல்லை - அச்சம் இல்லை என்று கூறி பத்தாயிரக் கணக்கில் சட்டத்தை எரித்து மூன் றாண்டுகள் வரை கடும் தண்டனை யைச் சிரித்த முகத்தோடு ஏற்றுச் சிறைக் கோட்டம் ஏகிய இலட்சிய வீரர்களை கொண்ட இவ்வியக்கம் அல்லாமல் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் புரட்சிக்கவிஞர். எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நம் இனத்திற்கு? ஜாதித் தீயை மூட்டும் பிற்போக்குச் சக்திகள் தலை தூக்கப் பார்க்கின்றன! சவால்களைச் சந்திக்க வேண்டியது நாம்தானே!

30 கல் தொலைவில் உள்ள நமது ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறனரே!

தமிழின மீனவர்களை சிங்கள கடற்படை நாள்தோறும் வேட்டையாடிக் கொண்டு இருக்கிறதே!

அந்த இயக்கத்தின் இளைஞர் சேனை ராஜபாளையத்தில் ஓர் எழுச்சி மாநாட்டை நடத்துகிறது வரும் மே 4ஆம் நாள்.

சமூகநீதித் துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் - இன்னும் இருக்கிறது.

நூற்றண்டுக்கு மேலாக நமது கனவிலே இருந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் - கைக்கு எட்டி வந்த நேரத்திலே அதனைத் தட்டிப் பறிக்கும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

காவிரி நீர்ப்பிரச்சினையிலும் இன்னும் நாம் கையேந்தும் நிலைதான்!

முல்லைப் பெரியாறு பிரச்சினை யிலும் மூக்கு அறுந்துதான் தொங்கு கிறது!

நமது ஒகேனக்கல் பகுதிக்கே வந்து கருநாடகத்துக்காரன் கலாட்டா செய்கிறான்.

ஆந்திரக்காரனோ பாலாற்றின் குறுக்கே அணையைக் கட்டி, உன்னால் ஆனதைப் பார் என்கிறான்.

தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்கு முழு உரிமை கிடையாது. தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியாது.

இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவு தான் என்ன? வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டை மீட்டெடுப்பது யார் பொறுப்பு?

பண்பாட்டுத் தளத்தில் படை நடத்துவோர் யார்?

புரட்சிக்கவிஞர் இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் குயிலில் (3.3.1959) குரல் கொடுத்தாரே - அடையாளம் காட்டினாரே அந்த இயக்கமான திராவிடர் கழகத்தின். தலையில்தானே தமிழர் பிரச்சினைகள் விடிந்திருக்கின்றன.

நம்முன் னிற்கும் இந்தக் கடமை களை ஒரு கணம் நினைத்துப் பார்த் தால், ராஜபாளையத்தில் நமது கழகம் நடத்தும் இளைஞரணி மாநில மாநாட் டின் அருமை என்னவென்று புரியும்.

வெறும் பொழுது போக்கு மாநாடல்ல - கேளிக்கைகளுக்கு இடமில்லை.

இலட்சிய முழக்கம் இருக்கும், ஈடேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வெடிக்கும்.

இளைஞர்களின் அணிவகுப்பு மிக முக்கியமானது. சமூக காப்பணியின் வேழ நடை வீர உணர்வைத் தூண்டக் கூடியது. இயக்க வரலாற்றிலும் ஒரு பொன் னேடு - புகழேடு

- புறப்படு தோழா புறப்படு!
போர்ப்பாட்டுப் பாடுவோம்
புறப்படு தோழா புறப்படு!
தனிமனிதனாக அல்ல
குடும்பம் குடும்பமாகப் புறப்படுக! புறப்படுக!!

பெரியார் இயக்கத்தின் மாட்சியை அது கையில் எடுத்துக் கொண்டிருக் கும் மீட்சியின் பட்டியலைக் காணப் போகிறோம்!

வா தோழா வா! தொல்லுலகுக் குள்ளே அல்லல் அறுப்பதென் தோள் தோள் தோள்.

வல்லவன் உன்னை வெல்ல நினைப் பவன் தூள் தூள் தூள்! என்று புரட்சிக் கவிஞர் அழைக்கிறார்.

ராஜபாளையம் - புது ராஜபாட் டையைக் கொடுக்கப் போகிறது புறப்படு! புறப்படு!

தமிழ் ஓவியா said...


மே தின வாழ்த்துக்கள்


நாளை மே முதல் நாள் - மேதினியெங்கும் கொண்டாடப்படும் உழைப்பாளர்களின் உரிமையை மீட்ட உன்னதத் திருநாள்!

உழைப்பவரே உயர்வானவர் என்பதனை மறுக்கும் ஜாதி உள்ள சமுதாயத்தில், மீண்டும் ஒரு புதிய புரட்சி பூத்து, சமத்துவ சமூகத்தை உருவாக்கிட உறுதியேற்க வேண்டும் - நம் நாட்டில் உழைப்பே உயர்வுதரும் என்று சொன்னால் மட்டும் போதாது; உழைப்பவரையும் உயர்த்திடும் உரிமை பெற்ற புதியதோர் சமுதாயம் பூக்கட்டும்!

தந்தை பெரியார் விரும்பிய தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் உரிமையும், லாபத்தில் பங்கும் தந்து - முதலாளி - தொழிலாளி பேதம் மறைந்து பங்காளிகள் அனைவருமே என்ற சமத்துவம் மலரச் சங்கநாதம் செய்வோம்!

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்சென்னை
30.4.2013

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது

சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தீர்மான எண் (1)
இரங்கல் தீர்மானம்

30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).

தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர், குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மான எண் (2)

ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!

(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மான எண் (3)
இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு

இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.30-4-2013

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்....

இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த பொறுக்கு மணிகள்:

தலைமைக் கழகம் தொடர்ந்து கிளைக் கழகம் வரை ஒரு வலைப்பின்னல் (Network).

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் களுக்குப் பொறுப்பான மாவட்டங்கள் பற்றிய இயக்க செயல்பாடுகள் உள்ளிட்ட அறிக்கை தாக்கல்.

மாவட்டக் கழகத் தலைவர்கள் ஒன்றிய வாரியாக சுற்றுப் பயணம் மாதம் ஒரு முறை.

பிரச்சார முறையில் புதிய அணுகுமுறைகள், இணைய தளம், கணினி இவற்றையும் பயன்படுத்துதல் அவசியம். கழகச் செயல்பாடுகள், மறுப்புகள், பொதுச் பிரச்சினகளில் நமது செயல்பாடுகள் அவ்வப்போது இணையதளத்தில் இடம் பெற வேண்டும்.

கழகத்தின் செயல்பாடுகள் அதிகம். ஆனால் அவை பற்றிய விளம்பரம் குறைவு; சரி செய்யப்பட வேண்டும்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு; மாநகரங்களில் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய வாரியாக நடைபெற வேண்டும். தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சரிவர நிறைவேற்றப் பட உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில் பெண்களைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழிகள் - சிந்தனைகளை விரிவாகப் பரப்புவதற்கு உரிய நேரமாக இக்கால கட்டத்தைக் கருத வேண்டும்.

ராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான போராட்டத் திட்டம் அறிவிப்பு வெளி வரும்.

ராஜபாளையம் மாநாட்டை ஏதோ இளைஞரணி மாநாடாக மட்டும் கருதாமல் அனைத்து அணியினரும் குடும்பம் குடும்ப மாகத் திரள வேண்டும்.

பயிற்சிப் பட்டறை ஆண்டு முழுவதும் சனி, ஞாயிறுகளில் நடத்தப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


அவசியம்கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டுக்கு காலா காலத்திற்கும் பதில் சொல்லித் தீர வேண்டும்.

தமிழ் நாட்டுக்கு அதிகாரப் பூர்வமாக செய்யப்பட்ட துரோகம் என்பதில் கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கனவு காணப்பட்ட திட்டம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவைச் சேர்ந்த திரு. டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து, அந்தக் கனவுத் திட்டத்தை நனவு திட்டமாக மாற்றப்படும் ஒரு கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. இத்தகைய முட்டுக் கட்டையைப் போட்டு வருகிறது.

இவ்வளவுக்கும் இக்கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிட இருக்கிறது; அந்த அண்ணாவின் கொள்கை நிலைப்பாட் டுக்கும் திராவிட இயக்கத்தின் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக செயல்படுவது மன்னிக் கவே முடியாத பெருங் குற்றமாகும்.

இவ்வளவுக்கும் 2001 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப் பட்ட திட்டமாகும்.

2001 மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின்போது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (பக்கம் 84 மற்றும் 85)யில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்திய தீபகற்பத்தை சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம் இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்..

இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது; இருப்பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு. இத்திட்டத்திற்கான உரிய கவனத் தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை என்று இவ்வளவுத் திட்டவட்டமாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு அதற்கு முற்றிலும் முரணாக அந்தத் திட்டத்தையே கை விட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லுவது ஏன்?

இப்படி முரண்பட்டதற்கு நியாயமான காரணத்தை இதுவரை செல்வி ஜெயலலிதா கூறியதுண்டா?

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதன் அரசியல் இலாபம் தி.மு.க.வுக்குப் போய் விடும்.

தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்தப் பட்டதால் தி.மு.க.வுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும்தான் இதற்குள் புதைந்து கிடக்கின்றன.

நாட்டு நலனைவிட அரசியல் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது.

முதலில் ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது என்று சொன்னவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுகிறார் என்றால் இதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

அடுத்த தேர்தல்களில் தங்கள் வெறுப்பை - எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் ஓவியா said...


ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!


ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.

மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.

வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.

மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)

இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.
ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.

ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.

நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.

அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.

இனமுரசு இயக்கம் இதுதான்!
சமூகநீதி இயக்கம் இதுதான்!
பகுத்தறிவு இயக்கம் இதுதான்!
பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!
ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!
சகோதரத்துவம் பேணும்,
சமத்துவ இயக்கம் இதுதான்!
நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;
வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!
அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.

இது ஓர் உலக இயக்கம்;

மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!

இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!

மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!

ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!

ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!

ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!

மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;

கேட்கட்டும் ஜெயபேரிகை!

- மின்சாரம்

தமிழ் ஓவியா said...

பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்

எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமதவாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.

(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

கேள்வியும் - பதிலும்

- சித்திரபுத்திரன்

கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

குடி அரசு - வினா விடை - 29.10.1933

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவும் - சுயமரியாதையும்


மே தினத்தில் திமுக தொழிற்சங்கத் தலைவர் மானமிகு செ. குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் சுயமரியாதையும், பகுத்தறிவுமே அடிப்படை என்ற அழகான, ஆழமான கருத்தினைக் கூறியுள்ளார்.

இதனை திராவிடர் இயக்கத் தோழர்கள் மட்டுமல்லர், (முக்கியமாக அழுத்தமாகக் கடைபிடிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றாலும்) தமிழர்கள் அனைவரும் உணரவும், கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து உலக மானுடத்திற்கே கூடத் தேவையானதுதான்.

திருவள்ளுவரின் திருக்குறளில்கூட ஏழு சொற்கள் இடம் பெறும்; தந்தை பெரியார் அவர்கள் வடித்துக் கூறியதோ நான்கே நான்கு சொற்கள்.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு - இந்தக் கருத்தின் கருவைத் தான் கலைஞர் அவர்கள் வேறு சொற்களில் சுயமரியாதையும், பகுத்தறிவும் அடிப்படை என்று கூறியுள்ளார்.

மறைந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் ஒரு கருத்தை அடிக்கடி கூறுவார். ஒரு இயந் திரத்தின்மீது மனிதன் எச்சிலை உமிழ்ந்தால் அதற்குக் கோபம் வரப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படியல்லவே.

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பெறாத உள்ளம்
என்பார் புரட்சிக் கவிஞர்.

தமிழர்களின் ஒட்டு மொத்த வீழ்ச்சிக்குக் காரணமே இந்து மதத்தின் பெயரால் பார்ப்பனீயம் செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டில், பக்தி எனும் போதை மருந்துக்குப் பலியாகி, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பறி கொடுத்திருப்பதை மறுக்க முடியுமா?

உலகத்தில் எந்த நாட்டிலாவது கேள்விப்பட்ட துண்டா? கடவுள் தனது முக்கிய நான்கு உறுப்புகளிலிருந்து மனிதர்களை பிறவிப் பேதத்தை அடிப்படையாக வைத்துப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளதா?

அர்த்தமுள்ள இந்துமதம் என்று சொல்லும் இந்தப் பாழும் மதத்தில்தானே பிர்மா எனும் படைத்தல் கடவுள், தன் முகத்திலிருந்து பிராமணனைப் படைத் தார், தோளிலிருந்து சத்திரியனைப் படைத்தார், இடுப்பிலிருந்து வைசியனைப் படைத்தார், பாதங்களிலிருந்து சூத்திரர்களைப் படைத்தாராம்.

இந்த நான்காம் ஜாதியான சூத்திரர்கள் அடிமைத் தொண்டு செய்ய வேண்டியவர்கள், பார்ப்பனர்களின் வேசிப் புத்திரர்கள் என்று எழுதி வைத்துள்ளனர் என்பதோடு இன்று வரை இதன் அடிப்படையில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது - தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று எழுதியதை இன்றைய உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் நாம் 2013ஆம் ஆண்டில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி, நம் உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதே!

இன்னும் தமிழன் பக்தியின் பெயரால் செருப்படித் திருவிழா நடத்திக் கொண்டு கிடக்கின்றானே! ஒருவனுக்கொருவன் விளக்கமாற்றால் அடித்துக் கொண்டு கிடக்கிறானே!

வெட்கப்பட வேண்டாமா? விஞ்ஞானி எனும் நிலையை அடைந்தவன்கூட மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம்) குடிக்கிறானே! கோயிலுக்குள் சென்று பார்ப்பானைப் பார்த்து சாமி என்று கூறிக் கைகட்டி நிற்கிறானே!

பார்ப்பானை உயர் ஜாதியான் என்று ஒப்புக் கொண்டு தன் வீட்டு நிகழ்ச்சிகளை அவனை அழைத்து நடத்தி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தானே செய்கிறது!

சுயமரியாதையும், பகுத்தறிவும் இல்லாததால் தானே - பல உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பொழுது பொங்கி எழும் உணர்ச்சிக்கு ஆளாவ தில்லை.
நிஜம் எது, நிழல் எது என்று தெரியாமல் எதிரிகள் விரிக்கும் வலையில் தமிழன் விட்டில் பூச்சியாக விழுவதற்குக் காரணம் - தந்தை பெரியார் எடுத்துச் சொன்ன - கலைஞர் தொடுத்துச் சொன்ன அந்தவுணர்வு இல்லாது போனதுதானே!
தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு! என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தையும் இணைத்துக் கொள்வீர் தமிழர்களே! 2-5-2013

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


மதம், மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது.
(விடுதலை, 14.10.1971)

தமிழ் ஓவியா said...


மானங்கெட்ட கோயில் விழா விளக்கு மாற்று அடி பரிமாற்றம்


ஆண்டிபட்டி, மே 2- ஆண்டிபட்டி அருகே கோயில் விழாவில் மாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலை வில் மறவப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூறாண்டுகள்

தமிழ் ஓவியா said...


ஜனநாயகமா - காலி நாயகமா?


ஜனநாயகமா - காலி நாயகமா?

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 681 கோடீசுவரர்களும், 220 குற்றவாளிகளும் (13 பேர் கொலைக் குற்றவாளிகள்) போட்டியிடுகின்றனர்.

இது என்ன ஜனநாயகமா - காலி நாயகமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

#####

செவ்வாய்க்கிரகத்தில்
குடியேற விருப்பமா?

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விளம்பரம் செய்திருந்தது. மூன்றே நாளில் 20 ஆயிரம் விண்ணப்பம் குவிந்தது. இதற்குப் பிறகாவது செவ்வாய்த்தோஷம் பற்றிப் பேசுவதை இந்துத்துவாவாதிகள் கை விடுவார்களா?