Search This Blog

22.4.13

அருவிக்குத்தி சிறையில் பெரியார்


இதே நாளில் தான் (1924) தந்தை பெரியார் வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்காக அருவிக் குத்தியில் சிறை வைக்கப்பட்ட நாள்.

தீயர், ஈழவர்கள், புலையர்கள் என்னும் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் கோயில் வீதிகளில் நடக்கக் கூடாது என்ற கொடுமையை எதிர்த் தும் எழுந்ததே வைக்கம் போராட்டம்!

விவரம் தெரிந்தவர்கள் என்று கருதப்படக் கூடியவர் கள்கூட இதற்கு மாறாகக் கோயில் நுழைவுப் போராட் டம் என்று கூறுவது அறி யாமையே!

தீண்டாமை ஒழிப்புக்காக வைக்கம் கோயில் வீதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது போராட்ட வசதி கருதியே என்பதுதான் உண்மை.

வைக்கம் ஆலயத்தில் இருந்து நூறு கஜம் தூரத்தில் ஒரு விளம்பரப் பலகை தொங்கிற்று தீண்டத் தகாத ஜாதியினர் இதற் கப்பால் பிரவேசிக்கக் கூடாது என்ற அறிவிப்பு இது.

கேரளாவைச் சேர்ந்த பிரமுகர்களின் அழைப்பின் பெயரில் தந்தை பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார் (11.4.1924).

பெரியாரின் பிரச்சாரப் பீரங்கியின் வேட்டுச் சத்தம் நாலாத் திசைகளும் கேட்க ஆரம்பித்தது.

மக்கள் மத்தியில் கிளர்ச் சித் தீ வெடித்துக் கிளம் பியது. 10 நாட்கள் அமைதி காத்த திருவனந்தபுரம் அரசர், பெரியாரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

தந்தை பெரியாரும், கோவை அய்யாமுத்தும் கைது செய்யப்பட்டனர். அதுதான் இந்நாள் (22.4.1924)

இந்த இடத்தில் இன்னொன்றும் நினைவுபடுத் தப்பட வேண்டும். அருவிக் குத்தி சிறைச்சாலைக்கு இவர்களைக் கொண்டு சென்ற போது கடும் புயல் சீற்றத்தின் காரணமாக இவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. அதை சரி செய்து மீள்வதற்கு பணியாட்களுக்கும், காவலர்களுக்கும் பெரியார் உதவி செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது. (கைதியான நிலையிலும்கூட தொண்டுதானோ!) ஒரு மாத காலம் அருவிக் குத்தி சிறையில் வைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு மேலும் தீவிரமாகப் பேச ஆரம்பித் தார். கீழ் ஜாதி மக்கள் தெருவில் போவதால் அது தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்தப்பனை (மகாதேவரை) கீழே போட்டுத் துணி துவைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்.

அரசன் கை சும்மா இருக்குமா? இப்பொழுது கடுங்காவல் தண்டனை! சிறையோ திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலை; கால்களில் விலங்கு சங்கிலி, தலையில் கைதிக் குல்லா, கொலைக் குற்றவாளி களோடு மற்றவர்களைவிட இரு மடங்கு வேலை செய்தார் சிறையில் என்று கூறு கிறது வரலாறு. வைக்கம் வீரர் - என்று மகுடம் சூட்டி தலையங்கம் தீட்டினார் திரு.வி.க., (நவ சக்தி 24.5.1924).

                 --------------------------------------------- மயிலாடன் அவர்கள் 22-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...


என்னதான் முடிவு?


பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி என்பது இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் இருக்கிறது.

கொஞ்ச காலத்துக்கு முன் (16.12.2012) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உட் படுத்தப்பட்டது குறித்துப் பெரும் புயல் நாடு தழுவிய அளவில் வெடித்துக் கிளம்பியது. சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எவ்வளவோ மருத்துவ உதவிகளை மேற்கொண்டும் பாதிக்கப்பட்ட பெண் உயிர் பிழைக்கவில்லை.

ஊடகங்கள் உறுமின - ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப் பட்டது. அவரும் பல யோசனைகளை அளித்துள்ளார்.

ஏற்கெனவே பல சட்டங்களும், விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சட்டமும், நிருவாகத் துறையும் நீதிமன்றமும் எந்தக் கதியில் இயங்குகின்றன என்பதுதான் முக்கியம்; கடந்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் பாலியல் வன்முறை வழக்குகளில் 16 ஆயிரம் வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது.
காவல்துறையின் கட்டப் பஞ்சாயத்து காரண மாகவோ, அல்லது காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயோ புதைக்கப்பட்ட வழக்குகளுக்குக் கணக்கு இல்லை.

டில்லியில் கடந்த டிசம்பரில் கயவர்களால் மருத்துவக் கல்லூரி மாணவி வேட்டையாடப்பட்ட நிலையில் வெகு மக்களும் குமுறி எழுந்த நிலையில் இது போன்ற குற்றங்கள் பெருகி வருவதுதான் அதிர்ச்சிக்கு உரியதாகும். தமிழ்நாட்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வன்புணர்ச்சிகள் நடந்துள்ளன. நம் நாட்டு ஊடகங்களின் ஒரு சார்புத் தன்மையால் அவை வெளிச்சத்துக்கு வராமல் போய் விட்டன. அரசாங்கமும் ஒன்றும் நடக்காதது போல காய்களை நகர்த்திக் கொண்டது.

நேற்று ஏடுகளில் வெளிவந்த இன்னொரு சேதி - இதுநாடா கடும் புலி வாழும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறது.

5 வயது சிறுமி புதுடில்லியில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் துடியாய்த் துடிக்கிறார்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான திருமதி சோனியா காந்தி வார்த்தைகள் போதாது - செயல்கள் தேவை! என்று கோபமாகச் சொன்ன தாக ஏடுகள் சொல்லுகின்றன.

அவ்வப்பொழுது இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடப்பதும், அந்த நேரங்களில் மட்டும் வீராவேசமாகத் துள்ளிக் குதிப்பதும் பழகிவிட்ட ஒன்றாகவே ஆகி விட்டது. மக்களின் மனதும் மரத்துப் போகும் நிலைதான்.

நீதிபதி வர்மா ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையைக்கூட மத்திய அரசு நீர்த்துப் போகத்தான் செய்திருக்கிறது.

கீழ்நிலையில் உள்ள காவல் அல்லது ராணுவ ஊழியர் அல்லது அதிகாரி வன்புணர்வில் ஈடுபட்டால் அதற்கு அவருக்கு மேலுள்ள அதிகாரியே பொறுப் பேற்க வேண்டும் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரையையும் அரசு புறந்தள்ளி விட்டது.

நீதிபதிகள், பொது மக்கள், ஊழியர்கள் போன் றோர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தனி அனுமதி தேவையில்லை எனும் நீதிபதி வர்மாவின் பரிந்துரைகூட ஏற்கப் படவில்லை.

பாலியல் குற்றம் செய்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற சிபாரிசுகள் ஏற்கப் படவில்லை.

ஆணுக்குப் பெண் அடிமை எனும் மனப்பான்மை தகர்த்தெறியப்பட கடுமையான சட்டங்கள் தேவை. பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கொம்புக்கும் நோகாமல் சட்டம் செய்தால் அது நாக்கை வழித்துக் கொள்ளத்தான் பயன்படும்.

பெண்களுக்குப் போதிய கல்வி தந்து ஆட்சி அதிகாரத்தில் 50 விழுக்காடு இடம் தந்து, பெண்ணென்றால் பலகீனமானவர் என்ற நிலை மாற்றப்படுவதற்கான போதிய உடல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுவது போன்ற தொலை நோக்குகள் தேவை.

ஊடகங்கள் மூலம் எச்சரிக்கும் ஏற்பாடுகள் தேவை; இல்லை என்றால் அவ்வப்போது பேசப்படும் வெட்டிப் பேச்சாகவே அது முடிந்து போய்விடும்.

பெண்களும், ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு விடாமல் வீதிக்கு வந்து போராட வேண்டும் - இது மிகவும் முக்கியம். 22-4-2013

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ். வரலாற்று ஆதாரத்தோடு விளக்கம்

சென்னை புத்தகச் சங்கமத்தில் சிந்தனையரங்கம் : பொம்மலாட்டம் நடத்திய மு. கலைவாணன் மற்றும் பாவலர் அறிவுமதி கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சிறப்புரை ஆற்றிய இறையன்பு அய்.ஏ.எஸ். (நினைவுப் பரிசு வழங்கப்பட்டது) (21.4.2013).

சென்னை, ஏப்.22- தந்தை பெரியார் பய ணங்களின் போது எப்போதுமே கலைக் களஞ்சியங்களைத்தான் படித்துக் கொண்டி ருப்பார். படித்தவற்றை மறுபடியும் படித்து விளக்கம் சொல்வார். இந்த ஒரு தகவல் என்னை உசுப்பிவிட் டது. எனது பாதை யையே புரட்டிப் போட் டது என்று இறையன்பு அய்.ஏ.எஸ். அவர்கள் பேசினார்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் திரள்

பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறு வனமும் NBT India வும் இணைந்து நடத்தும், சென்னை புத்தகச் சங்கமம் - மூன்றாவது நாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமைகள் அரங்கேறிக் கொண்டி ருக்கின்றன. மக்கள் திரளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே யிருக்கிறது. இது வரை யிலும் நடந்த நடந்து கொண்டிருக்கிற புத் தகக் கண்காட்சிகளோ, சந்தைகளிலோ, சரி, புத்தகங்கள் எல்லாம் ஓரிடத்தில் கிடைக் கிறதே என்று கட மைக்காக வந்து வாங்கிச் செல்வார்கள். சென்னை புத்தகச் சங்கமத்தில் இன் றைய நிகழ்ச்சிகள் நிச் சயமாக நேற்றைய நிகழ்ச்சியைவிட சிறப் பாக இருக்கும் என்ற ஆவலில், உணர்வு பூர்வ மாக குடும்பத்துடன் வந்து கண்ணுக்கும் கருத் துக்கும் விருந்துண்டு செல் வதை காண முடிகிறது.

தமிழ் ஓவியா said...

அப்புசாமியும் அகல் விளக்கும் - குழந்தைகளின் குதூகலமும்

அந்த வகையில், மூன் றாம் நாளான நேற்று (21.04.2013) கலை அறப் பேரவை கலைவாணன் பொம்மலாட்டக் குழு வினரின் பொம்மலாட் டம் நடைபெற்றது. ராதா மன்ற அரங்கத்தில் பார்வையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப் போடு, பேருந்துகளில் முன்கூட்டியே தங் களுடன் வந்தவர்களுக்கு இருக்கை போட்டு வைப்பது மாதிரி, கைக்குட்டை சென்னை சங்கமத்தில் வாங்கிய புத்தகங்கள், கைப்பை ஆகியவற்றை வைத்து இருக்கைகளை உறுதி செய்து கொண்டதைப் பார்க்க முடிந்தது. மாலை நிகழ்ச்சிகள் மிகச் சரியாக ஆறு மணிக்கு தொடங்கின. எடுத்த எடுப்பிலேயே, சீர்திருத்த கோமா ளிங்க அய்யா... சீர்திருத்த கோமாளிங்க - என்ற பாடல் மூலம் பொம்ம லாட்ட நிகழ்ச்சி ஆர வாரத்துடன் களை கூடியது. இயற்கையைக் கெடுத்தால் பேரிடர் தான் வரும் - என்ற கருத்துடன் அமைந்த பொம்மலாட்டம், நவீன திரைப்படங்களின் அனைத்து உத்திகளை யும் கைக் கொண்டு அருமையாக அமைக் கப்பட்டிருந்தது. இறுதி யில் இனிவரும் தலை முறை, நலமுடன் வாழ வழிமுறை செய்வோம் வா! வா! - என்ற பாட லுடன் நிறைவு பெற்றது. தொடக்கம் முதல் இறுதி வரை குழந்தை களின் குதூகலத்தை இடைவிடாமல் காண முடிந்தது. அது மட்டு மல்ல, கலைவாணன் அவர்களை தேடிச் சென்று குழந்தைகளும் தங்கள் மகிழ்ச்சியை அவருடன் பரிமாறிக் கொண்டனர்.

பெற்றோருடன் குழந்தைகளுடன் சென்னை புத்தகச் சங்கமத்தில்

பொம்மலாட்டப் பயிற்சிக்காக ஓர் அமைப்பு கருத்தரங்கம் தொடங்கியது. சிறப்பான நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழங்கிய கலைவாணன் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன் பயனாடை அணிவித் தும், இயக்க நூல்கள் நினைவுப் பரிசு ஆகியவற்றை அளித்தும் சிறப்பு செய்தார். தொடர்ந்து முன்னிலை வகித்த கவிஞர் அறி வுமதி மற்றும் பொம்மலாட்ட குழுவினருக்குச் சிறப்பு செய் தார். தொடர்ந்து பேசிய, கலைவாணன் அவர்கள் இந்த கலை அழிந்து போகாமல் இருப்பதற்காக, இதற்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறேன் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார்.

பெரியார் திடலில் தொடங்கியது என்றுமே வெற்றி பெற்றே தீரும்

கலைவாணன் உரையைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை யேற்றுச் சிறப்பித்தார். அவர் தமது உரையில், கலைவாண னின் தந்தையார் முத்துக் கூத் தனை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து அவர், இத்தகைய சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்கு பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கும் மற்ற ஒருங் கிணைப்பாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும் அவர், தந்தை பெரியார் பற்றி குறிப்பிடுகையில், இந்தி யாவிலேயே நூல்கள் வெளியி டுவதற்கென்றே ஒரு அமைப் பைத் தொடங்கியது. தந்தை பெரியார்தான் என்ற அரிய தகவலை சென்னை புத்தகச் சங்கத்தில் மிகப் பொருத்த மாகத் தெரிவித்தார். அது மட்டு மல்ல, குடியரசு உண்மை, விடுதலை என்று தந்தை பெரியார், தான் தொடங்கிய இதழ் படித்து வைத்த நல்ல தமிழ் பெயர்களையும் குறிப் பிட்டு விட்டு, தந்தை பெரியார் தமிழுக்கு என்ன செய்துவி ட்டார் என்று கேள்வி எழுப்பு கின்ற அதி மேதாவிகளுக்கு தந்தை பெரியார் செய்த அரிய பணிகளை பட்டியலிட்டார். மேலும் அவர், இராஜாஜியின் குலக் கல்வியையும் பெரியாரின் எதிர்வினையையும் மீண்டு மொரு முறை நினைவூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தந்தை பெரியாரின் பிரச்சார வீச்சு பற்றிய சமீபத்திய புள்ளி விவரம் ஒன்றை குறிப்பிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அதாவது, தொலைக்காட்சி களில் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தொடர் களாக இந்தியா முழுவதிலும் ஒளிபரப்பினார்கள். ஆனால், இந்த இரண்டையும் குறைவாக பார்த்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தான் என்பதை குறிப்பிட்டார். மேலும் அவர், சென்னை புத்தகச் சங்கமம், நல்ல முயற்சி என்றும், பெரியார் திடலில் நடைபெறுவது எது வாக இருந்தாலும், மக்களுக்கு நன்மை தருவதாகத்தான் இருக் கும் என்றும், பெரியார் திடலில் தொடங்குவது எதுவாக இருந் தாலும் வெற்றி பெற்றே தீரும் என்றும் பலத்த கைதட்டல் களுக்கு இடையே தெரிவித்து விட்டு, இந்த ஏற்பாடுகள், அடுத்த ஆண்டு சென்னை புத் தக சங்கமம் எப்போது வரும் என்கிற ஆவலை எல்லோர் மத்தியிலும் தூண்டிவிட்டிருக் கிறது என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பணியை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியாது

துணைத் தலைவர் தொடர்ந்து வாழ்த்துரை வழங்க வந்த கவிஞர் அறிவுமதி தன்னுடைய கவிதை ஒன்றைச் சொல்லி எல்லோருக்கும் விபத்து மயிரி ழையில் நடக்கும், தமிழனுக்கும் மட்டும் நூலிழையில் நடக்கும் என்று பலத்த கைதட்டலுடன் தொடங்கினார். மேலும் அவர், என்னைப் பொறுத்த வரையில், செயலும், வாழ்வும் ஒன்றென உயர்ந்தவர்கள் இருவர்தான். ஒருவர் தந்தை பெரியார் மற் றொருவர் பிரபாகரன். பெரி யார் கருத்து வடிவம், பிரபாக ரன் செயல் வடிவம் என்று குறிப்பிட்டு விட்டு, அதனால் தான் தந்தை பெரியாரின் பணியை எந்தக் கொம்பினா லும் மறுக்க முடியாது என்று ஒரு பிரகடனம் போலச் சொல் லிவிட்டு, முத்துக்கூத்தனின் பிள் ளைகளும், பேரப் பிள்ளை களும் வாழையடி வாழையாக இந்தக் கலையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொண்டு தொடரட் டும் என்று வாழ்த்தி அமர்ந்தார்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் அய்யாவு

வசந்தம் வராது. நாம்தான் உருவாக்க வேண்டும்

அதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் இறையன்பு (அய்.ஏ.எஸ்.) சிறப்புரையாற் றினார். முன்னதாக அவருக்கும், கவிஞர் அறிவு மதிக்கும் கழகத் துணைத் தலைவர் சிறப்பு செய்தார். தொடர்ந்து பேசிய இறையன்பு அவர்கள், மனித னின் வாழ்க்கையில் ஏழு இலக்கு இருக்க வேண்டும். அப்படி, தான் வகுத்த இலக்குப்படி வாழ்பவன்தான் நிம்மதியாக இறக்கிறான். மற்றவர்கள், மரணத்தின் போதுகூட இன் னும் கொஞ்ச நாள் வாழ மாட் டோமா என்றும், சொர்க்கம், நரகம் பற்றிய கற்பனைகளில் - அது கற்பனை என்று தெரிந்தே உழளுகிறார்கள் என்று குறிப் பிட்டு விட்டு, அதற்கு பொருத்த மான உதாரணத்தையும் கண் முன்னே காட்டினார். அதாவது டாவின்சி தனது 60ஆவது ஆண்டுகளில் மரணப் படுக் கையில் இருந்தார். ஆனாலும், அவர் முகம் முழு நிலவைப் போல ஒளி பெற்றுக் கிடந்தது. காரணம் அவர் தன் இலக்கை எட்டியிருந்ததுதான் என்று குறிப்பிட்டு விட்டு, காசு பணம் மனிதனின் கடைசி காலத்தை நிறைவூட்டுவதில்லை. சமூகத்திற்கு பயன்படக் கூடிய ஏதாவது ஓரிலக்கு இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார். மேலும் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விழைந்தபோது மனப் பாடக் கல்வியை கடுமையாகச் சாடினார். தொடர்ந்து அவர், திருக் குறளையும், புறநாணுற்றையும் பெருமையோடு நினைவு கூர்ந்தார். தொடர்ந்து தமிழ் சமூகத்தின் மேன்மையை குறிப் பிட வந்த அவர், ரிக் வேதத்தில் திராவிடர் என்ற சொல் இருப்பதைக் குறிப்பிட்டார், மேலும் அவர் திக்கெட்டும் சென்று வெற்றிக்கொடி நாட் டிய இராஜேந்திர மன்னனை பற்றி குறிப்பிட்டு கடல் கடந்து வாணிபம் செய்த ராஜேந்திரன் சீனத்திலிருந்து காகிதத்தை இறக்குமதி செய்திருந்தால் எவ்வளவு தகவல்களை பதிவு செய்து வைத்திருக்க முடிந்தி ருக்கும். ஆனால் செய்யவில் லையே என்று குறைபட்டுக் கொண்டார் . இவைகள்தான் எவ்வளவோ பெருமைகள் பெற்றிருந்தும் தமிழன் மேலும் செழுமையடையாமல் போன தற்குக் காரணம் என்று அழுத் தம் திருத்தமாகச் சொன்னார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் என்னை புரட்டிப்போட்டார் தொடர்ந்து பேசிய அவர் , மனிதன் ஏதோ உபதேசத்திற் காக, கருத்துக்காக காத்திருக் கிறான் . அது அவனது வாழ்க் கையை புரட்டிப்போடுகிறது என்பதை சொல்லிவிட்டு, தன் வாழ்க்கையில் , தன்னை தந்தை பெரியார் எப்படி புரட்டிப் போட்டார் என்ற தகவலைக் குறிப்பிட்டார். அதாவது ஒரு முறை தொடர் வண்டிப் பய ணத்தில் தந்தை பெரியாரின் உதவியாளர் ஒருவரை சந்தித் ததாகவும், அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அந்த உதவியாளர் ஒரு தகவலைச் சொன்னதாகவும், குறிப்பிட் டார் அந்த தகவல் தந்தை பெரியார் பயணங்களின் போது பெரிய அளவிலான கலைக் களஞ்சியங்களைத்தான் படிப் பார் என்பதுதான் அதுவரை யில் பெரிய புத்தகங்களை படிக்காமல் இருந்த நான், படிக்கத்தொடங்கினேன். அது என் வாழ்க்கையையே புரட் டிப்போட்டது என்றார். இப்படித்தான் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட ஒரு வாய்ப் பிற்காக காத்துக்கொண்டிருக் கிறார்கள் என்று குறிப்பிட் டார். (அபிதான சிந்தாமணி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி இவை தந்தை பெரியார் அவர் களால் பெரும்பாலும் பயன் படுத்தப்படக்கூடியவை ஆகும்).

சென்னை புத்தகச் சங்கமத்தில் வெளிநாட்டவர்களும்...

திராவிடர் நாகரிகம் தான் சிறந்தது தொடர்ந்து பேசிய அவர் வரலாற்றின் பக்கம் திரும் பினார். இந்தியாவில் ஆரியர் கள்தான் நாகரிகத்தை உருவாக் கினவர்கள் என்று தவறாகச் சொல்கிறார்கள் அது முற்றி லும் தவறு இதற்கு முன்பேயே மிகச்சிறந்த நாகரிகமாக இருந்தது சிந்துச்சமவெளி நாகரிகம், இது சுமேரிய நாகரிகத்தை விட ஏன்? என்று கேள்வி கேட்டு, இன்னும் ஒரு படி மேலே சென்று நைல் நதி யின் நாகரிகத்தை விட சிறந்தது என்று ஆதாரங்களுடன் ஆணித் தரமாக விளக்கினார். தொடர்ந்து, ஹிட்லர் தன்னுடைய ஆசிரி யரின் தவறான வழிகட்டுதலால், ஓவியராக இருக்க வேண்டியவர் பாதை மாறிப் போனதையும் குறிப்பிட்டுவிட்டு, மீண்டும் மனிதன் தான் கழித்துக் கொண் டிருக்கும், தன் வாழ்க்கையை புரட்டிப் போட வைக்கும் வார்த்தைகள் - வசனங்கள் பற்றி இன்னும் சில உதாரணங்களை குறிப்பிட்டு, அப்படிப்பட்ட மாற்றங்களை ஏராளமானதாக உள்ளடக்கிய புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. சென்னை புத்தகச் சங்கமம் உங்களுக்காக காத்திருக்கிறது. புத்தகங்களை வாங்கி பயன்பெறுங்கள் என்று கூறிவிட்டு, இன்னும் ஒரு படி மேலே சென்று, புத்தகங்களின் மீது படுத்து உறங்குங்கள், வாசியுங்கள் நேசியுங்கள் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பரிசு மழை

தொடர்ந்து, இன்றைய பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு தொடங்கியது. இறையன்பு அய்.ஏ.எஸ். அவர்கள் பரிசுக் கான நபரை தெரிவு செய்தார். அதேபோல நேற்று தேர்வான வருக்கும் மைக்ரோமேக்ஸ் 7 திறன் பேசியை கொடுத்து சிறப்பு செய்தார். தொடர்ந்து, சீதை, நாம் தமிழர் பதிப்பகம், அகிலா பதிப்பகம், விஸ்டம் பதிப்பகம், ஏகம் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களின் சார்பி லும் பரிசுக்குரியவர்கள் குழந் தைகள் மூலம் தெரிவு செய்யப் பட்டனர்.

பரிசு பெற்றவர்கள் முறையே, டாக்டர் பி.எஸ்.நாகராஜன் (நேற்று தேர்வானவர்), ஷீலா பெர்சி, கற்பகவிநாயகம், பம் பல் வரலட்சுமி, பாலசுப்பிர மணியம், திருவள்ளூவரைச் சேர்ந்த பி.அருள், தூத்துக்குடி யைச் சேர்ந்த புவனேஸ்வரன், சிறப்புப் பரிசாக வலங்கைமா னைச் சேர்ந்த பி.விஜயகுமார் (முதல் பரிசு 21.3.2013) ஆகி யோராவர்.

நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் சித்து முருகானந்தம், செந்தமிழ் சேகுவோரா, திரா விடன் புத்தக நிலையம் நடரா ஜன், வெற்றிச்செல்வி, சென்னி யப்பன், பிரபாகர், பெரியார் சாக்ரடீஸ், சரவணா ராஜேந் திரன், கோ.கருணாநிதி, வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வன், செயலாளர் கோவி. கோபால் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் ஒளிவண்ணன், புகழேந்தி, வேணுகோபால் மற்றும் பேரா.தவமணி, வி.சி. வில்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் அய்யாவு, தங்கமணி, தன லட்சுமி, சிவஞானம், பெரியார் மாணாக்கன், கற்பகம், செல்வி, கருணாகரன் மற்றும் ஏராள மான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து பெற்று திரும்பிச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!வீண்

நாடாளுமன்றத்தில் தேவையற்ற குறுக்கீடு களால் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் நேரம் வீணாகிறது என்று வருத்தத்தைத் தெரி வித்துக் கொண்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ரோசையா.

டடட

எச்சரிக்கை!

மருத்துவமனைகளில் குழந்தைகளைக் கடத்த ஆண் புரோக்கர்கள், பெண் புரோக் கர்கள் பெருகி வருகிறார்களாம். முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தைகளைக் கொடுக்க வேண்டாம்; எச்சரிக்கை! எச்சரிக்கை!!

டடட

நடராஜனின் பரிதாபம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் கடவுள் சிலை ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா அருங் காட்சியகத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

நடராஜன் கடவுள் பற்றி ஆன்மீகவாதிகள் ஆகா ஊகா என்று எழுதுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

டடட

ஒரு தகவல்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. தொடர்புக்கு: 9600822994.

டடட

இங்கு என்ன வாழ்கிறது?

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதில் அரசியல் மூக்கு நுழைக்கப்படுகிறது. டில்லியில் இது நடந்தால் அதனைக் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திசை திருப்பலாம் என்ற போக்கு காணப் படுகிறது. சோனியா, பிரதமர் வீடு முற்றுகை என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

தமிழ் ஓவியா said...

மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி நடக்கிறது அங்கு 5 வயது சிறுமி பாலியல் வன் புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வயல் வெளியில் தூக்கியெறியப்பட்டுள்ளார். (சிறுமிகள் பாலியல் வன்முறையில் மத்தியப் பிரதேசம்தான் முதலிடம்) உடனே பிஜேபிக்கு எதிராக அரசியல் நடத்தலாமா? - இது வெறும் கட்சிப் பிரச்சினை யல்ல - சமூகப் பிரச்சினை - ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடி ஒழிக்க வேண்டும்.

டடட

அத்தைக்கு மீசை முளைத்தால்....

பிஜேபியின் முன்னாள் தலைவரான வெங்கையா மிகவும் விவரமானவர்தான். இல்லாவிட்டால் தனித் தெலங்கானாவையும், ராமன் கோயில் கட்டுவதையும் முடிச்சுப் போடுவாரா?

தேர்தலுக்குப்பின் பிஜேபி ஆட்சியில் அமர்ந்தபின் ஆந்திர மாநிலத்திலிருந்து, தெலங்கானாவைப் பிரித்துத் தனி மாநிலம் ஆக்குவோம் - அத்துடன் ராமன் கோயிலையும் அயோத்தியில் கட்டுவோம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். ஒரே கல்லால் இரண்டு காய்களை அடிக்கப் பார்க்கிறார். தெலங்கானா ஆதரவாளர்களை ராமன் கோயில் கட்டுவதற் கும் ஆதரவாளர்களாக ஆக்கும் தந்திரம் இதில் உள்ளது.

தனித் தெலங்கானா கிடைக்கப் பெற ஆந்திராவில் பிஜேபியின் பங்கு இப்பொழுது என்ன? வேடிக்கைப் பார்க்கும் கேலரியில் தானே உட்கார்ந்திருக்கிறார்கள் - அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும்!

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 22: புவி தினம்


நாம் வாழும் பூமியைக் காப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியை 'புவி தினம் என அனுசரிக்கிறோம். 1969இல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மெக்கன்னல் என்பவர்தான் இப்படி ஒரு தினத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை முன்மொழிந்தார்.

இந்த தினத்தை 192 நாடுகள் கடைபிடிக்கப்படுகின் றன. பூமியைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த தினம், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் காப்பது, போர், வறுமை மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தயும் உணர்த்துகிறது.

தமிழ் ஓவியா said...


அப்புசாமியும் அகல் விளக்கும்


அப்புசாமியும் - அகல் விளக்கும் பொம்மலாட்டத்தில் குழந்தைகளின் குதூகலங்களைக் கண்டு, அவர்களிடம் கருத்து கேட்கலாம் என்று சிலரை அணுகினோம். நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. அது வெற்று குதூகலமாக இருக்குமோ என்றெண்ணியதற்கு மாறாக வெற்றி குதூகலமாகவும் நமக்கு இருந்தது. முதலில் 5ஆம் வகுப்பு பயிலும் செவ்வியனைச் சந்தித்தோம். அவர், ரொம்ப நல்லா இருந்திச்சு. இயற்கையை காக்க வேண்டும் என்று சொன்னார்கள். மூடநம்பிக்கை கூடாது என்று சொன்னார்கள் என்றார்.

அதைத் தொடர்ந்து விளாங்காடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு பயிலும் ராகுல் என்பவரைச் சந்தித்தோம். அவர், ரொம்ப நல்லா புரியுது, மரத்தை நட்டு வளர்க்கனும், பசுமையில்லாத நிலையை மாத்தனும். மூடநம்பிக்கை கூடாது என்று சொன்னார்கள் என்று முடித்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, எம்.குணா, இசாந்த் என்ற சகோதரர்களைச் சந்தித்தோம். முதலில் குணா எனக்கு தமிழில் பேச வராது. இங்கீலிசில் சொல்லட்டுமா என்று கேட்டுக் கொண்டான். நாம் சம்மதித்ததும் யோசித்து யோசித்து “It was very good help the earth, do not burn tyers, rubbers, setting was nice. monster came. It was good” என்று துண்டு துண்டாக தனக்கு விளங்கியதைத் தெரிவித்தான்.

அதைத் தொடர்ந்து குணாவிற்கு இளையவர் இசாந்தும் இங்கிலீசிலேய பதில் கூறினார். அவர் தனது பதிலில், “It was good. shouldn’t polute earth. fire fight is good”
என்று கூறினார். இவர்கள் அனைவரும் கலைவாணன் அவர்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


குழந்தைகள்பாலியல்வன்முறை பத்தாண்டுகளில் 336% அதிகரிப்பு


புதுடில்லி, ஏப்.22- டில்லியில் 5 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்முறை செயப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் குழந்தைகள் பாலியல் வன்முறை விகிதம் அதிகரித்துவரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தேசிய குற்றப்பதிவு மய்யம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 48 ஆயிரத்து 338 குழந்தைகள் பாலியல் வன்முறை செயப்பட்டு உள்ளனர். 10 ஆண்டுகளில், குழந்தைகள் பாலியல் வன்முறை விகிதம் 336 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டுவரை 2,113 ஆக இருந்த குழந்தைகள் பாலியல் வன்முறை எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டில் 7,112 ஆக அதிகரித்ததாகவும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் 9465 வழக்குகள் பதிவான மத்திய பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மராட்டியம் (6868) 2 ஆவது இடத்தையும், உத்தரப்பிரதேசம் (5949) 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்பி கண்ட பலன்?


தேர் சக்கரத்தில் சிக்கி பக்தர் கால்கள் நசுங்கின

பள்ளிப்பட்டு, ஏப்.22- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பெரிய நாகபூண்டி கிராமத்தில் பழமை வாய்ந்த நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கோவில் அருகே தேர் சென்று கொண்டி ருந்தபோது யாரும் எதிர்பாராமல் ஒரு பக்தர் தேர் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. விசாரணையில் அவரது பெயர் ஆனந்தன் (வயது 35), எரும்பி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் பெயிண்ட ராக வேலை செய்வதும் தெரியவந்தது.

படுகாயம் அடைந்த அவரை உறவினர் கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். இது குறித்து ஆர்.கே. பேட்டை காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கோவிலுக்குச் சென்ற பக்தர் நீரில் மூழ்கி பலி

பெரியபாளையம், ஏப்.22- நண்பரது குழந்தையின் காதணி விழாவுக்காக பெரிய பாளையம் கோவிலுக்கு சென்ற சென்னை பக்தர் நீரில் மூழ்கி பலியானார்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). வால் டாக்ஸ் சாலையில் உள்ள பித்தளை சாமான்கள் தயாரிக்கும் பட்டரையில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் வைர முத்துவின் குழந்தைக்கு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நேற்று காதணி விழா நடைபெற்றது. இதையடுத்து அவர் நண்பர்கள் 15 பேருடன் சென்னையில் இருந்து பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றார். நிகழ்ச்சி முடிந்த உடன் கோவில் அருகே உள்ள ஆரணி ஆற்றில் நண்பர் களுடன் குளிக்க சென்றார்.

ஆழமான பகுதிக்கு சென்ற சக்திவேல் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். சக்திவேலை காணாமல் அவரு டன் குளிக்க சென்ற நண்பர்கள் கூச்சலிட் டனர். அருகில் இருந்த பொதுமக்கள் ஆற்றில் மூழ்கி இறந்துபோன சக்திவேலின் உடலை மீட்டனர். தகவல் அறிந்த பெரியபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து போன சக்திவேலின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன சக்திவேலின் தந்தை மனோகரன் மாற்று திறனாளி ஆவார். தந்தை மனோகரன் மற்றும் தாய் லட்சுமியை சக்திவேல்தான் காப்பாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் ஓவியா said...

மேல்மலையனூர் அக்னி குளத்தில் மூழ்கி மாணவர் பலி

மேல்மலையனூர்,ஏப்.22- மேல்மலை யனூர் அக்னி குளத்தில் மூழ்கி சென்னை யைச் சேர்ந்த மாணவன் பலியானார்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 150 பேர் பேருந்து மற்றும் வேன்களில் மேல்மலையனூருக்கு சாமி கும்பிட வந்தனர். நேற்று காலையில் சிறுதலைப் பூண்டி சாலையில் உள்ள அக்னி குளத்திற்கு குளிக்கச் சென்றனர். இவர்களில் கோடம்பாக்கம் புலியூர்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சதீஷ்குமார் என்கிற ஜெகதீஷ் (வயது 18) என்பவர் தனது நண்பர்கள் விக்னேஷ், சீனிவாசன், யுவராஜ் ஆகியோருடன் குளத்திற்கு குளிக்கச் சென்றார். 4 பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சதீஷ்குமார் சென்றுள் ளார். குளத்திற்கு அவரது கால் உள்ளே சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த மற்ற 3 பேரும் அவரை காப்பாற்ற முயன் றனர். முடியாததால் அவர்கள் குளத்தை விட்டு வெளியே வந்து கூச்சல் போட்டனர். பின்னர் சென்னையில் இருந்து வந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினார்கள். ஆனால் மாணவர் சதீஷ் குமார் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து மேல் மலையனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் திருஞானம் தலைமையில் தீய ணைப்புப் படையினர் விரைந்து வந்து அக்னி குளத்தில் மூழ்கிய மாணவன் சதீஷ்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் சதீஷ் குமாரின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

விசாரணை பின்னர் இந்த சம்பவம் குறித்து வளத்தி காவல் நிலையத்தில் மேல்மலையனூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மாணவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். குளத்தில் மூழ்கி பலியான சதீஷ்குமார் சென்னை கோடம் பாக்கம் டிரஸ்ட் புரத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


விகடன் கச்சேரி

இந்த வார ஆனந்தவிகடன் (24.4.2013) தலையங்கமும், அதனைத் தொடர்ந்து கூட்டணி பவன் எனும் அரசியல் சிறப்புக் கட்டுரையும் அனேகமாக பார்ப்பனர்களின் மனப்பான்மையும், முதலாளித்துவ மனப் பான்மை கொண்டவர்களின் சிந்தனையும், எந்தத் திசையில் பயணிக்கின்றன என்பதற் கான கண்ணாடியாகும்.

மதச் சார்பற்றச் சிந்தனை கொண்ட ஒருவரைத் தான் பிரதமர் வேட்பாளராக எதிர் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்துகளைப் பரப்பி, எதிர் அணியினரைக் குழப்பும் காங்கிரஸின் வியூகம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்திய தேசத்தை வழி நடத்தக் கூடிய பிரதமர் மதச் சார்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே சமயம் அந்த ஒற்றைத் தகுதி மட்டுமே பிரதமர் வேட்பா ளருக்குப் போதும் என்ற பிரஸ்தாபிக்க முனையும் காங்கிரஸின் துடிப்பு வடிகட்டிய முட்டாள்தனம் என்கிறது. ஆனந்தவிகடன் தலையங்கம்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மதச் சார்பின்மை என்னும் பிரச்சினை ஏதோ காங்கிரஸ் சம்பந்தப்பட்டது போலவும் மற்ற வர்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பது போலவும் எழுதுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா!

இன்னும் சொல்லப் போனால் காங்கிரசை விட பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான அய்க்கிய ஜனதா தளம் அதன் சார்பில் பிகாரில் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய நிதிஷ்குமார்தான் மதச் சார்பின்மை என்னும் குரலை வெண்கல நாதமாக ஒலிக்கிறார்.

அந்த ஒற்றைத் தகுதி மட்டும் போதுமா என்று ஆனந்தவிகடன் எழுப்பும் வினாவில் மோடி என்னும் மிக மோசமான இந்துத்துவா வெறியரின் நச்சுக் காற்றுக் குடிகொண்டு இருக்கிறது.

குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப் பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை - பிஜேபியின் கதா நாயகரான வாஜ்பேயியே அதிரச் செய்துவிட்டதே! இனி எந்த முகத்துடன் வெளி நாட்டுக்குச் செல் லுவேன்? என்று அவரைப் புலம்ப வைத்ததே!

ஆனந்த விகடன் மிகச் சாமர்த்தியமாக கூறும் அந்த ஒற்றைத் தகுதி என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) முக்கியமே!

காங்கிரஸின் சாதனைகளைப்பற்றி விகடன் குறை கூறியுள்ளது. காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கம் இல்லை.

அதே நேரத் தில் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன பெரிய வேறுபாடு? வெளியுற வுக் கொள்கைதான் ஆகட்டும் என்ன வித்தியாசம்?

பி.ஜே,பி.யின் மதச் சார்பு தன்மைக்கு நேரிடையாக வக்காலத்து வாங்குவதில் ஜகா வாங்கும் விகடன், சாதனைகள் என்ற ஒன்றைக் காட்டித் திசை திருப்பப் பார்க்கிறது.

தலையங்கத்தை ஒட்டி எடுக்கப்பட்ட சிறப்புக் கட்டுரையின் சாராம்சம் அதிமுகமீது குற்றப் பத்திரிகை படிக்காமல், சில குறைகளைச் சொல்லு வதுபோலச் சொல்லி, அதிலிருந்து அது திருத்திக் கொண்டு செயல்படுவது நல்லது என்னும் அக்கறையுடன் நயமாக நல்லுரைகள் பரிமாறப் பட்டுள்ளன. துக்ளக் ராமசாமிகள் கடைப்பிடிக்கும் பாணி இது.

ஒரு பக்கத்தில் இந்திய முதலாளிகள் மோடி வர வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்;

இன்னொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகள் பிஜேபியும், அதிமுகவும் அதிகாரபீடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு எழுது கிறார்கள்.

இதுதான் நாட்டின் நிலைமை!

வெகு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உலகப் புத்தக நாள்


இன்று உலகப் புத்தக நாள் (1995) இதனையொட்டி சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து சென்னை புத்தகச் சங்க மத்தை இம்மாதம் 18 முதல் 27 முடிய நேர்த்தியாக நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்கை ஏற்படுத்திக் கொண்டு இயக்க நூல்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறது என்றாலும் இயக் கமே இத்தகைய சங்கமத்தை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். சென்னை பெரியார் திடலில் அமைக்கப் பட்டுள்ள 68 அரங்குகளின் நேர்த்தியையும், எழிலையும் மனந்திறந்து பாராட்டுகின் றனர். ஆண்டுதோறும் இது தொடர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் வைத்துள்ளனர். தொடரும் என்றும் கழகத் தலைவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

வெறும் நூல்கள் விற்பனை அரங்கு மட்டுமல்ல; மாலை நேரத்தில் சிந்தனை அரங்கம் என்பது பல புதிய அறிமுகங்களின் அணி வகுப்பாக அமைந்து வருகை யாளர்களின் ஆர்வத்தை வாரி அணைத்துக் கொள் கிறது. கவினுறு கலை நிகழ்ச் சிகள் கூத்தாடுகின்றன. பொம்மலாட்டம் வீதி நாடகம், கதை சொல்லுதல், மேஜிக் காட்சிகள் என்று ஒவ்வொன் றும் கட்டம் கட்டிப் போட வேண்டிய கற்கண்டு விருந்து! காணாதார் கண்கள் இருந்து என்ன பயன்? கேட்காதார் காது களாலும் யாது பலன்? என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஒரு பகுத்தறிவு இயக் கத்தை உருவாக்கியதோடு அல்லாமல், நூல் வெளி யீட்டுக் கழகம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி நூல்களை வெளியிட்டுக் கருத்துப் பிரச்சாரம் செய்த திலும் தந்தை பெரியார்தான் முன்னோடி!

இன்று அது மேலும் வளர்ந்து நூற்றுக்கணக் கான வெளியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அறிவுப் பசியைத் தூண்டி விருந்தும் படைக்கிறது.

வணிக நோக்கில் அல்ல- கருத்துப் பிரச்சாரமே அதன் இலக்கு. இன்றுகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல்கள் அளவுக்கு வேறு யாராலும் மலிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவ தில்லை. காரணம் கருத்துப் பிரச்சார லாபமே அதன் குறிக்கோள்!

குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எனும் இயக்க ஆர்வலர் தந்தை பெரியார் அவர்களிடத்தில் குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தா சேரும் வரை ராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரை களை நிறுத்தி வைப்பது நல்லது என்று ஆலோசனை சொன்ன நேரத்தில் நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை. ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும், நான் என் கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா? என்று பளிச் சென்று பதில் சொன் னாரே! (விடுதலை 17.5.1959).
உலகப் புத்தக நாளில் இந்தச் சிந்தனை முக்கியம் அல்லவா!

- மயிலாடன் 23-4-2013

தமிழ் ஓவியா said...


புத்தகச் சிந்தனை
int

உலகில் நொடி ஒன்றுக்கு 16121 நூல்கள் வாங்கப்படுகின்றன.

இந்திய மொழிகளுள் முதன் முதலாக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது தமிழில்தான். நூல்: தம்பிரான் வணக்கம்

தமிழ் ஓவியா said...


அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவ னுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


மதுரைக் கூத்து!


மதுரையில் நேற்று காலை 8.41 மணிக்கு சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் கோலாகலமாக விவாஹ சுப முகூர்த்தம் - அதாவது திருக் கல்யாணம் நடந்ததாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்குக் கல்யாணம் நடக்கிறது. இலட்சக் கணக்கான பக்தர்கள் அப்படியே வெள்ளமாய்த் திரண்டு வந்து சேவிக்கிறார்களாம்.

அப்படி சேவிக்கிற பக்தர்களில் ஒரே ஒருவராவது சிந்திக்கவேண்டாமா?

போன வருசம் இதே நாளில்தானே இதே இருவருக்கும் கல்யாணம் நடந்தது. இப்பொழுது மறுபடியும் கல்யாணம் என்றால், போன வருடம் செய்துகொண்ட கல்யாணம் என்னாச்சு என்று யோசிக்கவேண்டாமா?

பக்தர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கல்யாணம் செய்துகொண்டா இருக்கிறோம்? இது என்ன கூத்தாயிருக்குது? போன வருசம் கல்யாணம் கட்டிக்கொண்ட மீனாட்சி வேறு - இந்த மீனாட்சி வேறா? என்றெல்லாம் கொஞ்சம் அசைப்போட வேண்டாமா?

மற்றொன்றையும் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியது. நன்றாகப் பாருங்கள். பக்தர்கள் நம்பும் அந்த மீனாட்சிக்கு சுந்தரேச ஆண் கடவுளா, மீனாட்சியாகிய பார்வதியின் கழுத்தில் தாலி கட்டுகிறார்? இல்லையே! பார்ப்பான்தானே மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

எந்த ஒரு பக்தருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பவில்லையே! அகிலாண்டேசுவரியின் கழுத்தில் இந்த அற்பப் பார்ப்பன அர்ச்சகனா தாலி கட்டுவது? என்ற கோபம் கிழித்துக்கொண்டு கிளம்ப வேண்டாமா? வைரத்தாலி கட்டியதால் ரோஷம் வரவில்லையா? பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாக அல்லவா போய்விட்டது!

தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார். போன வருஷம் கல்யாணம் பண்ணியதை எவன் அடித்துக்கொண்டு போனான்? என்று கேட்டாரே, அப்பொழுதுகூடப் பக்தர்களுக்குப் புத்திவரவில்லையே, வெட்கக்கேடு!

இன்னொரு படுதமாஷ். நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். எதற்கு? தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைக் கண்குளிரக் காண்பதற்கு; நேற்று காலையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. நாளை தான் அழகர் ஆற்றில் இறங்குகிறாராம். ஞானக் கண்ணால் தங்கையின் கல்யாணம் நடந்ததையும் அறிந்திருக்கவேண்டாமா? பாதி வழியில் தெரிந்து கோபித்துக்கொண்டு திரும்பு கிறாராம் அழகர்! இன்னொரு கேள்வியும் நியாயமாக எழவேண்டுமே!

போன வருஷம்தான் தாமதமாக வந்தார்... இருந்துவிட்டுப் போகட்டும்; இந்த ஆண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கையின் திருக்கல் யாணத்தைக் காண விரைந்து வந்திருக்க வேண்டாமா? மனிதன் ஒருவன் தவறு செய்தால் இந்தக் கேள்வியைத்தானே கேட்பார்கள்.

ஆனால், கடவுள் செய்த காரியமாயிற்றே! அதனால்தான் பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்ற பழமொழியும் பிறந்ததோ!

சரி, அழகருக்குக் கோபம் வந்ததே - திரும்பி எங்கு சென்றார்? தான் குடியிருக்கும் அழகர் மலைக்கா சென்றார்?

அதுதான் இல்லை, வண்டியூருக்குத் திரும்பினா ராம்; அங்கே யார் இருக்கிறார்? துலுக்கநாச்சியார் என்ற அழகரின் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுகிறாராம்.
என்ன வாந்தி வருகிறதா? நாம் எழுதுவது கடவுள் கதை - ஞாபகம் இருக்கட்டும்!

இந்து முன்னணிகாரர்கள், அழகர், துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் செல்லுவதுபற்றி மூச்சு விடுவதில்லையே - ஏன்? நியாயமாக அவர்கள் மறியலில் ஈடுபடவேண்டாமா?

கடவுள் என்றால் உயர்ந்தவர்; அனைத்துயிரையும் படைத்தவர் - அனைவருக்கும் தந்தை போன்றவர் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு ஒழுக்கக் கேட்டையும் செய்கிறார் என்றால், இதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டாமா? இத் தகைய ஒழுக்கக்கேடான கோவில் விழாக்களைத் தடை செய்யவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கவேண்டாமா?

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன்னது தவறா? இப்பொழுது சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!

தமிழ் ஓவியா said...


விலங்கு வழிபாடு


விலங்குகளைக் காப்பதற்கான மத நோக்கங்கள்:-

பல விலங்குகள் மதசம்பந்தமான நோக்கங்களுக் காகவும் பாதுகாக்கப் படுகின்றன. சிறப்பாக எகிப்தில் மதத் தினரால் பாதுகாக்கப்பட்ட விலங் குகள் மிகப் பலவாக இருந்தன. கிட்ட தட்ட நூறு விலங்கினங்கள் அங்கே தெய்வமாக வழிபடப்பட்டன. ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய அடைய, எகிப்திலும், பிறநாடு களிலும் மத சம்பந்தமான தடைகள் வலிவிழந் தன. ஒரு காலத்தில் எகிப்தில் முதலை வழிபாடு இருந்தது.

பயங்கர ஊருண்ணியான முதலைகள் நைல் ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்கின்றன என்று எண்ணி மனிதர்கள் அவற்றை வணங்கி வந்தார்கள். ஆனால் இந்தப் பேராற்றின் மேற்பகுதிகளில் வெண்பனி மளமளவென்று உருகுவதே நைல் நதியின் வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்பது தெரிந்ததும் முதலையை கடவுளாக வழிபடுவதை மக்கள் நிறுத்தி விட்டார்கள்.

எகிப்தில் அப்பிஸ் என்னும் எருது இருந்தது. அது கடவுளாகப் போற்றிப் பேணப்பட்டது. அது தெய்வம் என்று பூசாரிகள் சொன்னார்கள். எகிப்தை வென்று அடிமைப்படுத்திய பாரசீக மன்னன் கட்பீஸ் இது தெய்வம் அல்ல, மாட்டிறைச்சி என்று ஒரு முறை கூவி, கட்டாரியால் அந்த எருதைக் குத்தி னான். அவனுடைய மெய்க்காவ லர்கள் அப்பிஸின் பூசாரிகள் மக்களை ஏமாற்றியதற்காக மிலாறுகளால் நய்யப்புடைத்தார்கள். அந்தநாள் முதல், அதாவது கி.மு. 525ஆம் ஆண்டு முதல் இந்த எருது வழிபாடு நின்று விட்டது.

இவ்வாறு விஞ்ஞானத்தின் செல்வாக்கினால் எகிப்தில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் விலங்குப் பாதுகாப்புக்கான மதநோக்கங்கள் படிப்படியாக வழக் கொழிந்து போயின. அந்த நிகழ் முறை நம் காலத்திலும் தொடர்கிறது.

விலங்கியல் (பக்கம் 392 -393) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ வெளியீடு
தொகுப்பு: மதி, செங்கோட்டை

தமிழ் ஓவியா said...


கிருபானந்தவாரியார் ஒப்பம்


தேக்கி வைக்கப் பட்டுள்ள மின்சாரத்தை செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியைக் கடத்து வது செப்பினால் முடியும் என உணர்ந்து, இறை வன் உருவங்களைச் செப்பினால் சிலை வடித் தார்கள்.

- கிருபானந்தவாரியார்
சொற்பொழிவிலிருந்து அ.சம்பத்
ஆதாரம்: தாய் வார இதழ், 28.8.83

இவை உண்மையென்றால் கல்லால் வடிக்கப் பட்டுள்ள கடவுளர் சிலைகள் (சர்வ சக்தி படைத்த) அருள் ஒளியைக் கடத்துவதில்லை என்றுதானே அர்த்தம்? பிறகு ஏன் அவற்றை வணங்குகிறார்கள்?

தகவல்: ஆர்.வி.குப்புசாமி, இரங்கம்புதூர்

தமிழ் ஓவியா said...


கொள்ளைக்காரன் திருமங்கை ஆழ்வார்


நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலிநாடர் களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரை குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்.

(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியிட்டுள்ள தஞ்சை வாணன் கோவை - பக்கம் 7 - வரிகள் 26-30)

பார்ப்பனீய மதத் தலைவர்களுள் ஒருவர் பிறமதத்தைச் சார்ந்த - புத்தமதத்தைச் சார்ந்த - இடத்திலிருந்து கொள்ளையடித்த செய்தியையும், பிறமதங்களை அழிப்பதற்கு கையாண்ட முறையையும் இச்செய்தி தெரிவிக்கிறது. இவரைக் குற்றங் கூறுநர் இலர் என்று கூறப்பட்டதன் மூலம் மற்றவர்களையும் இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.

தகவல்: சு.ஆறுமுகம், வேலூர்-6 (வ.ஆ)

தமிழ் ஓவியா said...


கடவுள் காப்பாற்ற மாட்டார்!


சோமநாதபுரத்தில் இருந்த மிகப் பெரிய கோயிலில் பல நூற்றாண்டு களாகப் பக்தர்களால் அளிக்கப்பட்ட செல்வம் குவிந்து கிடந்தது. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத் தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்களாம். ஏதாவது அற்புதம் நிகழும், தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் பக்தர்களின் கற்பனையாலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது அபூர்வமாகத் தானே இருக்கிறது. ஆகவே அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. முகமது கோயிலை இடித்து பாழாக்கி னான், பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்றும் நம்பியிருந்த 50 ஆயிரம் பேர் அவனால் கொல்லப்பட்டனர்.

(நேரு எழுதிய உலக வரலாறு)

தமிழ் ஓவியா said...


இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம்.

இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் ஓவியா said...


அன்று ஆச்சாரியார் சொன்னார்


நம் நாட்டில் மற்றவர்கள் சண்டை யைக் காட்டிலும் பக்தர்கள் சண் டையே அதிகம். என் தெய்வம் பெரி தா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டை தான் அதிகம்.

சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் சி.ஆர். - 15.4.1953

தமிழ் ஓவியா said...


செல்வா


தந்தை செல்வா என்றால் அது ஈழத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் செல்வ நாயகம் அவர்களைத் தான் குறிக்கும். அவரின் மறைவு நாள் இந்நாள் (1977).

தொண்டு செய்யும் தூய வர்களும், சாதனை செய்யும் செம்மல்களும் மறைவதில்லை - பொருத்தமான சந்தர்ப் பங்களில் எல்லாம் மக்கள் மனதில் மலர்ச்சியுற்று மணம் வீசுவர். அந்த வகையில் சீலமிக்க செல்வா அவர்கள் அடிக்கடி நினைக்கப்படும் நிலாவொளியே! அகிம்சை யில் அவர் காந்தியாருக்கு சளைத்தவரல்லர். ஈழத் தமி ழர்களின் சுயமரியாதையுடன் கூடிய சுய நிர்ணயத் தன் மைக்காக அறவழிக் கொடி களை இலங்கை வீதிகளிலே ஏந்திச் சென்றவர் தான்.

1949 டிசம்பர் 18இல் கொழும்பில் நடைபெற்ற தமிழரசு கழக மாநாட்டின் தலைமை உரையில் செல்வா சிந்திய கருத்தென்ன?

பெரிதும் சிறிதுமாக உள்ள மொழியினங்களி டையே ஏற்படும் முரண் பாடுகள் போருக்குக் காரண மாக இருந்தன. இப்போர் களில் வல்லரசுகள்கூட இழுக்கப்பட்டுள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்ப தற்கு இரு வழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியினத்திற் கும் அரசுரிமை உடைய தனித்தனி நாடுகளை அமைக்க பரந்த நிலப் பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி. ஒவ்வொரு மொழியினத் திற்கும் தன்னாட்சி மாநிலங் களை அமைத்து மத்தியில் கூட்டாட்சி அரசை உடைய ஒரு நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி.

நாங்கள் கேட்கின்ற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம்; தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம். இரண்டு மாநிலங் களுக்கும் பொதுவான மத்திய அரசு இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு; சிறிய தான தமிழ்ப் பேசும் தேசிய இனம் அழிந்து போகாமலும் பெரியதான சிங்களத் தேசிய இனத்தால் விழுங்கப்படா மலும் இருப்பதற்குரிய மிகக் குறைந்த ஏற்பாடு இதுதான் என்று செல்வா 64 ஆண்டு களுக்குமுன் சொன்ன ஒவ் வொரு சொல்லும் செஞ் சொல் அல்லவா?

இன்றைக்குக்கூட அரசி யல் தீர்வு என்று சொல்லப் படுவது இதனைத் தழுவியது தானே!

சுயாட்சி மாநிலம் என்ற கோரிக்கை தனி நாடு என்று மாற்றப்படுவதற்கு யார் காரணம்? சிங்களவர்களும், அவர்களின் ஆணவ மிக்க பாசிச ஆட்சியும்தானே?

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து இல்லை; பவுத்தம் சார்ந்த சிங்களர் ஒருவர்தான் அதிபராக வர முடியும் என்ப தில் ஆரம்பித்து ஒவ்வொன் றிலும் தமிழர்களை அழிக்கும் நச்சுக் குப்பிகளை அடுக்கிக் கொண்டே போனதாலும், உரிமைக்காகக் குரல் கொடுத்த தமிழீழ மக்களை அரசு துணை கொண்டு வேட்டையாடியதாலும், தன்மானமிக்க தமிழினத்தின் பெண்களை மாமிசப் பிண்ட மாகக் கருதிக் கடித்துக் குதறியதாலும்தானே இளை ஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக் குத் தள்ளப்பட்டார்கள்.

செல்வா நினைவு நாளில் அவரை நினைப்போம்! அவர் நினைப்பிற்கு வடிவம் கொடுப் போம், வாழ்க செல்வா!

கூடுதல் தகவல்: (Tail-Piece) பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் ஈழத் தமிழர்களின் உரிமைப் போர் வரலாறு (திராவிடர் கழக வெளியீடு) நூலைப் படியுங்கள். - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


வளருமா?

செய்தி: அட்சய திரிதியையில் எந்தப் பொருளை வாங்கினாலும் அது பல மடங்காகப் பெருகும்.

சிந்தனை: அப்படியா? ஒரு மொடா குடிகாரன் பாட்டில்களை அன்று வாங்கினால்...?

தமிழ் ஓவியா said...


தானாக வீழ்ந்துவிடும்பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


தீண்டாமை

செய்தி: அரசியலில் தீண் டாமை அதிகரித்து வருகிறது.
- குஜராத் முதல்வர் நரேந்திரமோடி

சிந்தனை: தீண்டாமை க்ஷேமகரமானது எனும் இந்துத் துவாவின் தத்துப் புத்திரர்கள் தீண்டாமைப்பற்றிப் பேசலாமா?

தமிழ் ஓவியா said...


2012 தேர்தலில் பாடம் கற்கவில்லையா மாயாவதி?


கான்ஷிராம் அவர்களால் தொடங்கப்பட்டது பகுஜன் சமாஜ் கட்சி. பகுஜன் என்றால் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்பவர்கள்தான் - இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் (பகுஜன்). இவர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பது தான் அதன் அடிப்படையாகும்.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இது இந்திய அரசியலுக்கே ஒட்டு மொத்தமாகத் தேவைப்படக் கூடிய ஜனநாயகக் கோட்பாடாகும்.

கான்ஷிராம் அவர்கள் அந்த அடிப்படையிலேயே தேர்தல் களத்தைச் சந்தித்து, வெற்றி பெற்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வி மாயாவதி அவர்களின் கரத்தில் ஆட்சியையும் கொண்டு வந்து சேர்த்தார்.

அந்தக் கோட்பாட்டுத் தளத்தில் உறுதியாக நின்று, லக்னோவிலிருந்து அந்தச் சுழல் விளக்கை உயர்த்திப் பிடித்திருந்தால் மூன்றாவது அணி இங்கு முளைக்கவில்லையே என்ற ஏக்கத்துக்கு நல்ல மருந்தும் கிடைத்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் மதவாத இந்துத்துவா கட்சியான பிஜேபி கூட காணாமல் போயிருக்கும்.

அவசரப்பட்ட காரணத்தாலும், அடிப்படையைத் தொலைத்த தன்மையாலும், உத்திரப்பிரதேசத்தில் தான் இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களை பிடித்துத் தம் வலையில் போட்டால் எளிதாக உத்தரப்பிரதேச அதிகார நாற்காலி நகர்ந்து தன் பக்கம் வந்து சேரும் என்று கணக்குப் போட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற மதிப்பு மிக்க பொறுப்பை பார்ப்பனரான சதிஸ் சந்திர மிஸ்ரா என்பவருக்குத் தாரை வார்த்தார்.

2007 சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களைப் பார்ப்பனர்களுக்குத் தூக்கிக் கொடுத்தார் அதில் 51 இடங்களில் வெற்றி பெற்றனர். முக்கிய துறைகளில் எல்லாம் அமைச்சர்களாக அவர்களை நியமித்தார்.

2009 மக்களவைத் தேர்தலிலும் பார்ப்பனர்களுக்கு 20 இடங்கள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர் களுக்கோ 17 இடங்களை அளித்தார். எங்கே கிளம்பி, எங்கே பயணிக்கிறார் என்பதை எண்ணினால் வெட்கமும், வேதனையும் இரட்டிப்புத் தாக்குதலைத் தொடுக்கின்றன.

இதே சூத்திரம் (Formula) 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் கை கொடுக்கவில்லையே! கண்ணிய மாகக் கருத்தூன்றி கணித்தாரா மாயாவதி?

2007இல் ஆட்சியைக் கொடுத்த உ.பி. மக்கள் 2012இல் ஏன் பறித்தனர் என்று சிந்திப்பதுதானே - சிறப்பானது சீலமானது.

206 இடங்களைப் பெற்றவர் இப்பொழுது வெறும் 80-க்குள் முடங்கிக் கிடப்பது ஏன்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

2014இல் நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர்தலில் முதல் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் மாயாவதி. 36 இடங்களில் 18 இடங்கள் பார்ப்பனர் களுக்காம்.

பதவி என்று வந்து விட்டால் பத்தும் பறக்கும் என்பது இதுதானோ! கான்ஷிராம் இதற்காகத்தானா இந்த மாயாவதியை முன்னிறுத்தினார்?

பகுஜன் சமாஜ் எனும் கான்ஷிராம் குரலை மாற்றி, திரிபு செய்து சர்வஜன் என்று புதுப்பெயர் சூட்டிக் கொண்டார்.

பார்ப்பனர்களையும், சத்திரியர்களையும், உயர் ஜாதியினரையும் செருப்பால் அடியுங்கள் என்று சொல்லும் அளவுக்குத் தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவி என்று காட்டிக் கொண்டவர் - இன்றைக்குப் பார்ப்பனர்களின் கைப்பாவை ஆகி விட்டாரே!

பார்ப்பனீயம்தான் எவ்வளவு வலிமை உடையது தந்திரமானது;

செருப்பாலடிப்பேன் என்று சொன்ன மாயாவதியையே தடம் புரளச் செய்யும் அளவுக்குச் சாமர்த்தியம் கொண்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது கொள்கைக்காக மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அண்ணல் அம்பேத்கர் எங்கே?

பதவிக்காக அடிப்படைக் கொள்கைகளை ஆழப் புதைத்து அதன்மேல் நின்று பதவிக்காகப் பரிதாபப்பட்டு நிற்கும் - அவலம் எங்கே?

நாமே விமர்சனம் செய்யும் - அளவுக்கு மாயாவதி ஆகிவிட்டாரே! என்ன செய்ய!

மாயாவதி தவறான உதாரணம் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களும் உணர்ந்திடத் தவறக் கூடாது எச்சரிக்கை!
25-4-2013

தமிழ் ஓவியா said...


பிரச்சாரக் கதைகள்


திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மானமற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)