Search This Blog

2.4.13

சோதிடம் பற்றி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

சோதிடம்பற்றி மார்க்கண்டேய கட்ஜு 

இந்திய மக்கள் மத்தியில் விஞ்ஞான பூர்வமான சிந்தனையைத் தூண்டிட வேண்டும். நாட்டில் 90 சதவிகித மக்கள் சோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்றனர்; மோசடி சாமியார்களை நம்புகின்றனர். விஞ்ஞான மனப்பான்மை நம்மிடம் ஏற்படா விட்டால்   தரித் திரக்காரர்களாகத்தான் இருப்போம்; அதன் மூலம் பணக்கார நாடுகளோடு ஒப்பிடும் பொழுது, நாம் பின்னுக்குத் தள்ளப்படும் பட்டியலில் தான் இடம் பெறுவோம்!


இப்படிப் பேசி இருப்பவர் சாதாரணமானவர் அல்லர்; உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வரும், இப்பொழுது இந்தியாவின் பத்திரிகைக் கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்தான்.


அவர் கூறிவரும் கருத்துக்கள் மிகவும் முற்போக்குத் தன்மை கொண்டதாகவும், மதவாதத்தை அடித்து வீழ்த்தக் கூடியதாகவும் இருந்து வருகின்றன.


குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றியும் பச்சையாக அண்மையில் தோலுரித்தார் - அதனால்தான் பிஜேபியை சேர்ந்தவர்கள், அவர் பதவி விலக வேண்டும் என்று கூச்சல் போட்டனர்.


தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுவதையும் அவர் கண்டித்து வந்துள்ளார்.

சோதிடம் குறித்து தந்தை பெரியார் அவர்களின் கருத்து உலகம் அறிந்ததே! ராஜாஜி, நேரு போன்றவர்கள்கூட சோதிடத்தை எதிர்த்து, வெறுத்துக் கருத்துக் கூறியுள்ளனர்.


ராஜாஜியோ சோதிடர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அலகாபாத்தில் (11.1.1962) பேசிய பிரதமர் நேரு அவர்கள்  சோதிடம் பற்றிக் கூறிய கருத்தும் குறிப்பிடத்தக்கது.


இந்த எட்டுச் கிரகச் சேர்க்கை என்னை ஒன்றும் செய்யாது. இதனால் ஆபத்து ஏற்படுமென்று சில சோதிடர்கள் கூறுவதைக் கேட்டு பீதி அடையாதீர்கள். நம்முடைய தலை விதியை ஆக்குவதோ அழிப்பதோ இந்தக் கிரகங்களின் வேலையல்ல. நம் தலை விதியை நிர்ணயிப்பது நம் கையில்தான் இருக்கிறது - என்று பேசினார் பிரதமர் ஜவகர்லால் நேரு.


நேரு அவர்களை வேறு பிரச்சினைகளுக் கெல்லாம் எடுத்துக்காட்டிப் பேசுவோர், கல்வி யாளர்கள், அவர்தம் பகுத்தறிவுக் கருத்துக் களை மட்டும்  மூடிப் போட்டு மறைத்து விடுவார்கள்.

மார்க்கண்டேய கட்ஜு ஒன்றும் கருப்புச் சட்டைக் காரர் அல்லர். திறந்த மனதோடு கட்டுக்குள் தன்னைப் பூட்டிக் கொள்ளாமல் சிந்தனையை உலவ விடுவதால் இவ்வாறு கூற முடிகிறது.


சோதிடம் மற்றும் மூடநம்பிக்கைகள் பேராசையைத் தூண்டக் கூடியதாகவும், சோம் பேறித்தனத்தை வளர்க்கக் கூடியதாகவும் தன்னம்பிக்கையையும், உழைப்பையும் உருக் குலைப்பதாகவும் இருப்பதால் முன்னேற்றமும், வளர்ச்சியும் தடுக்கப்படுகின்றன.


இவை இல்லாத இடத்தில் வறுமைதானே தாண்டவம் ஆடும்? அதனால் தான் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் வறுமைக்கு ஆட்பட்டு இந்தியா பின் தள்ளப்படும் என்று எச்சரிக்கிறார்.

மக்கள்மீது உள்ள அக்கறையினால் சொல்லப்படும் இந்தக் கருத்தினைக் கொச்சைப் படுத்தத்தான் இந்த நாட்டு ஊடகங்கள் இருக்கின்றன என்பது வெட்கக் கேடாகும்.


என்றாலும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்ற முறையில் அவர் சொல்லும் கருத்துக்கள் வலு உடையன ஆயிற்றே. அதற்குரிய தாக்கம் குறிப்பிட்ட அளவில் ஏற்படத்தானே செய்யும் -அந்த வகையில் வரவேற்கிறோம்.
             -------------------------------- 'விடுதலை” தலையங்கம் 01-04-2013

24 comments:

தமிழ் ஓவியா said...


தினமணிக்கு...


முட்டாள்களின் கீழ் உலகம் எனும் சிறப்புக் கட்டுரை இன்றைய தின மணியில் (1.4.2013 பக்கம் 6) வெளி வந்துள்ளது.

அதில் ஒன்று: அட முட்டாள் புருனோ! நீ சொல்வதைப் போல உலகம் உருண்டையா னது என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்? இது மத குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில், அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?

இப்படி புருனோ கேள்வி கேட்டு கிறித்துவ மதக் குருமார்களை மடக்கியதை எல்லாம் சாங்கோ பாங்கமாக விவ ரித்து எழுதும் தினமணி அய்யர்வாள்களைக் கேட்க விரும்புவதெல் லாம் இதுதான்.

இரண்யாட்சதன் என் பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான்; பன்றி(வராக) அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கடலில் குதித்துப் பூமியை மீட்டார் என்று தீபா வளிக்குக்கதை சொல் கிறீர்களே. அந்தத் தீபா வளிக்குச் சிறப்பு மல ரையும் வெளியிடுகிறீர் களே! தந்தை பெரியாரும், அவர் வழி வந்த கருஞ்சட் டைத் தொண்டர்களும் உங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதுதானே!

அட முட்டாள்களே! உருண்டையான பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு போய் கடலில் எப்படி விழ முடியும்? என்று தானே அன்று முதல் இன்றுவரை கேட்டு வருகிறோம்.

இதுவரை யோக்கியமான முறையில் தினமணி தினமலர் துக்ளக், கல்கி, ஆனந்த விக டன் வகையறாக்களிட மிருந்து பதில் இல்லையே!

அதே நேரத்தில் கிறித் துவப் பாதிரியார்களை முட்டாள்கள் என்று சொல்லுவதற்கு பயன் படுமேயானால் பகுத்தறிவுவாதி போல வினா தொடுக்கத் தோள் தட்டி வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வைத்தியரே முதலில் உமது நோயைக் குணப் படுத்திக் கொள்க!

கருஞ்சட்டைக்காரர்களைப் பொறுத்தவரை உங்களை நோக்கியும் வினா எரிமலை வெடிக்கும்!

கிறித்தவர் உட்பட எந்த மத மூடத்தனத்தை நோக்கியும் எங்கள் வினாக்கள் முட்டி மோதிக் கிளம்பத்தான் செய்யும்.

- மயிலாடன்-1-4-2013

தமிழ் ஓவியா said...


முக்கிய அறிவிப்பு


தமிழ்நாடு நிகர்நிலை பல்கலைக் கழக நிர்வாக கூட்டமைப்பு
No.147, Greams Road, Chennai - 600 006

31.03.2013 அன்று ஒரு தமிழ் நாளிதழ் மற்றும் சில தொலைக்காட்சிகளில், 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அரசின் அங்கீகாரம் மத்திய அரசினால் ரத்து செய்யப்படுவதாக பொய்யான உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. எந்தவித மான ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட வழக்கு உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது. 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து நீடிக்கிறது. (Status Quo). 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் பற்றிய முடிவை உச்சநீதி மன்றமே முடிவு செய்யும், எனவே பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பொய்யான செய்தியினை நம்ப வேண் டாம் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

இப்படிக்கு
தமிழ்நாடு நிகர்நிலை பல்கலைக் கழக நிர்வாக கூட்டமைப்பு

தமிழ் ஓவியா said...

பத்திரிகா தர்மம்

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் பூட்சு கால்களுடன் முதல் அமைச்சரின் பாதுகாப்புக் காவலர் நுழையக் கூடாது என்று கூறிய மருத்துவர் - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அல்லவா? அந்தச் செய்தியை சுத்தமாக - அறவே இருட்டடிப்பு செய்துள்ள இனமலர், இனமணி ஏடுகளின் பத்திரிகா தர்மத்தைக் கொஞ் சம் எண்ணிப் பார்க்கட்டும் தமிழர்கள்.

தமிழ் ஓவியா said...

விவேகானந்தர்

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு ஜெயந்தி என்ற பெய ரால் இந்துத்துவா சக்திகள் தங்கள் வேலைகளைக் காட்ட ஆரம்பித்து விட்டன. பள்ளிகளில் எல்லாம் பிரச்சாரம் - நூல்கள் வெளியீடு - இத்தியாதி இத்தியாதி வேலைகளில் இறங்கியுள்ளன.

அதே விவேகானந்தர் பார்ப் பனர்களைத் தோலுரித்துள்ளாரே! ஆதி சங்கரர் இதய மில்லாத பேர் வழி என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே - அவை எல்லாம் இருட்டடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதிகளைப் பகுத்தறிவுவாதிகள் வெளிப்படுத்தலாம் அல்லவா!

தமிழ் ஓவியா said...

குடியைக் கெடுக்கும்

ஆந்திராவில் குடிப் பழக்கம் உள்ள ஒரு தாய். குடி போதை தலைக்கேறிட, மூன்று குழந் தைகளைக் கிணற்றில் தள்ளி விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் - மற்றவர்கள் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். மூன்று குழந்தைகளும் மரணம் - தாய் மருத்துவமனையில்!

என்னே கொடுமை! குடி -குடியைக் கெடுக்கும் என்பது இதுதானோ!

தமிழ் ஓவியா said...

சமயபுரத்தாள் பாத்துப்பாளா?

சமயபுரம் கோயில் வாசலில் போடப்பட்ட போலியோ பாதித்த பச்சிளம் குழந்தை குழந்தைக்கு உரியோர் தேடப்படுகின்றனராம்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தலப் புராணம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. கல்யா ணம் நடப்பதிலிருந்து சகல துறைகளுக்கும் - ஒவ்வொரு ஊர் கோயில் பற்றி ஆன்மீக இதழ்கள் பக்கம் பக்கமாக வரிந்து கட்டி எழுதுகின்றன.

இதனை நம்பியவர்கள் இதுபோல காரியங்களில் ஈடுபடிருக்கலாம்.

எல்லாம் சமயபுரத்தாள் பார்த்துக் கொள்வாள். காவல் துறை வேறு உருப்படியான வேலையை செய்யட்டும். மக்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல் பட வேண்டாம் என்று சொல்ல லாமா?

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்

இராமேசுவரம் அருகில் தங்கச்சி மடத்தின் அருகில் வேர்க்காடு எனும் ஊரில் கிரிக்கெட்(டு) போட்டி நடந் துள்ளது. வெளியூர்க்காரர்கள் விளையாடுவதுபற்றிப் பிரச்சினையாம்! அடிதடியில் ஆரம்பித்து கலவரமாக மாறி யது. காவல் துறையினர் துப் பாக்கிச் சூடு நடத்தினார்களாம். கடைகள் அடைக்கப்பட்டன வாம் - 12 பேர் கைது செய்யப் பட்டுள்ளனராம்.

நாட்டில் எவ்வளவோ பிரச் சினைகள் இருக்க - கேவலம் கிரிக்கெட்டுக்காக அடிதடியா? கலவரமா? துப்பாக்கிக் சூடா?

தமிழர்கள் கோயில் கருவறைக்குள் நுழையக் கூடாது. காரணம் தமிழர்கள் சூத்தி ரர்கள். வேசி மக்கள் என்று கூறும்போது வராத கோபம் - கேவலம் ஒரு கிரிக்கெட்டுக் காக இவ்வளவுப் பெரிய களேபரமா? வெட்கக் கேடு!

தமிழ் ஓவியா said...

தோழர் தா.பா.

ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எழுப் பியுள்ளார் - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா. பாண்டியன்.

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது மத்திய அரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான பிரச்சினை மட்டுமே என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யின் தொழிற் சங்கத் தலைவர் (ஏ.அய்.யூ.சி.) குருதாஸ் தாஸ் குப்தா சொன்ன பிறகு இதில் தோழர் தா.பா. அவர்கள் குரலை ஓங்கி ஒலிக்க என்ன இருக் கிறதாம்?

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்னவாம்?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது வரவேற்கத்தக்கது தான். ஆனால் காலம் கடந்து வெளியில் வந்ததை திமுகவி னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் பிஜேபியின் இல.கணேசன்

தி.மு.க. புரிந்து கொண்டு தானிருக்கிறது; புரியாதது போல நடிப்பதுதான் பிஜேபி யின் வேலை.

அதெல்லாம் சரிதான். ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசுக்கும் - பிஜேபிக்கும் இடையே ஏதாவது மாறுபாடு இருக்கிறதா?

நாடாளுமன்றத்தில் தீர் மானம் கொண்டு வருவதுபற்றி மக்களவைத் தலைவர் மீரா குமார் கூட்டிய கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் சுஷ்மா சுவராஜ் (பி.ஜே.பி.) என்ன கூறினார்? அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று தானே அடித்துக் கூறியுள் ளார். ஊரை ஏமாற்ற வேண்டாம்.

தமிழ் ஓவியா said...


டார்பிடோ ஏ.பி.ஜே எனும் சுயமரியாதைச் சுடரொளி

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமைப்புச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் மாணவர் கழகத்தை வளர்த்தவர்களில் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனமும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அக்கால விடுதலை ஏடுகளைப் எடுத்துப் பார்த்தால், திராவிடர் மாணவர் கழகப் பணிகளில் அவர் பொறுப் பேற்று நடத்தியது வியப்பளிக்கிறது. பிற்காலத்தில், நம் இயக்கத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த பொழுதும், அதன் பிறகு அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பொழுதும் அவர் தன் பகுத் தறிவுக் கொள்கையை - சுயமரியாதைக் கொள்கையை கை விடவே இல்லை. எந்த நிலையிலும் தானொரு பெரியார் தொண்டன் என்று வெளிப்படுத்திக் கொள்ளத் தவறவே யில்லை. ஒரு முறை நாடாளுமன்றத் தில் பேசும் பொழுது, நாங்கள் பெரியார் ஈ.வெ.ராவின் திராவிடர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள்- எனக் கூறினார்.

1970 - ஆம் ஆண்டு, அவர் தி.மு.க. வில் இருந்தாலும், அவரை அழைத்து அண்ணாமலை நகரில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடத்தினோம். அப்பொழுது அவர் பேசுகையில், மதியழகன், தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன், வி.வி. சுவாமிநாதன் போன்றோர் காலங்களில் திராவிடர் மாணவர் கழகம் செயல்பட்ட விதம் குறித்து விளக்கமாக உரையாற் றினார். அறிஞர் அண்ணா தன்னை தமிழக மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததைச் சொல்லிச் சொல்லி குழந்தை போல், மகிழ்வார். அது போலவே, 1977ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தமிழக சட்ட மன்றத்தின் மூலம் சில உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்தலில், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமது பெயரைத் தான் முதலா வதாக எழுதினார். பிறகுதான் மற்றவர் களின் பெயரை எழுதினார் என்று குழந்தை போலச் சொல்லி மகிழ்வார்.

எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமல் பேசவே மாட்டார். தமது பெயரை முதல் பெயராக எழுதினார் எம்.ஜி.ஆர். என்ற, அதே டார்பிடோ அவரோடு கருத்து மாறுபாடு கொண்டு, முதல்வர் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானதுண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர் சிலரின் தவறான வழி காட்டுதலால், பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு பொருளாதார அளவுகோல் (9000 ரூபாய் வருமானம் வந்தால், அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையைப் பெற முடியாது) என்ற தீர்மானம் கொண்டு வந்தபொழுது, டார்பிடோ ஏ.பி.ஜெ அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து, இந்தப் பொருளாதார அளவுகோல், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் கருத்துக்கு மாறானது என்று கூறி னார். அதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்க எல்லாம் தி.க.காரர்கள் இப்படித் தான் சொல்லுவீர்கள் என்று கடிந்து கொண்டார். தனக்கு நாடாளுமன்ற உறுப் பினர் பதவி கொடுத்தவரை, இன் றைக்கு யாராவது இதுபோல் எதிர்த்து பேச முடியுமா? டார்பிடோ பேசினார் என்றால், அவரைப் பேச வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையாகும்.

தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டராக வாழ்ந்ததால் தான், ஒரு முறை தமிழக மேலவை உறுப்பினர்; ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் என்று பதவி வகித்திருந்தாலும், ஒரு சொந்த வீடுகூட இல்லாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். அரசியல் பதவி பெயரால் குடும்பத் தேவைகளைக்கூட நிறை வேற்றிக் கொள்ளவில்லை. வாழ்க ஏ.பி.ஜே. புகழ்!

- (இன்று ஏ.பி.ஜே. நினைவு நாள் - 1987).

தமிழ் ஓவியா said...


உரிமையுண்டு


எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம். - (விடுதலை, 2.4.1950)

தமிழ் ஓவியா said...


நில நடுக்கத்தை விடக் கொடுமையானது மனநடுக்கமே!...

ஆசிரியருக்குக் கடிதம்

நில நடுக்கத்தை விடக் கொடுமையானது மனநடுக்கமே!...

மக்களாட்சியின் கண்களைப் பிடுங்கி அரசியல் பல்லாங்குழி ஆடி மகிழ்ந்த ராஜபக்சே, இன்று டெசோ அமைப்பின் தொடர் போராட்டத்தால், உலகோர்முன் சர்வதேச போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறான்!.

மொழியை அழித்தனர்... நூல கத்தைக் கொளுத்தினர்! உரிமைகளை சிதைத்தனர்... கொத்துக் குண்டுகளை வீசி... இலட்சக்கணக்கான தமிழர் களைக் கொன்று குவித்தனர்! இத்தனை கொடுமைகளையும்... புத்தமதத்தின் பேரால் செய்தனர்! இன்று புத்தர் இருந் தால்... இந்தக் கொடுமைகள் கண்டு தானே தற்கொலை செய்து கொண் டிருப்பார்!.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று தந்தை பெரியார் சொன்னது ஈழத் தமிழர் பிரச்சினையிலேயே நூற்றுக்கு நூறு உண்மை என்பது விளங்கி விட்டதே!.

367 இந்துக்கோயில்களை இராஜ பக்சே இடித்துத் தள்ளியபோது இந்துக் கடவுள்கள் என்ன செய்துகொண்டிருந் தன? இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழப் போரிலே கொன்று குவிக்கப் பட்டார்களே - அத்தனை பேரும் நாத்திகர்களா? பக்தர்கள் தானே! தனது பக்தர்களையும் காப்பாற்ற முடியாது. தன்னையும் காப்பாற்றிக்கொள்ள தெரியாது. குத்துக்கல்லாகவே இருக்கும் கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்று சொன்னதிலே என்ன தவறு இருக்க முடியும்?.

இனியேனும் தமிழினம் புரிந்து கொண்டு, தனக்காகக் காலம் முழுவதும் உழைப்போரை அடையாளம் காண வேண்டும்! அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக் கப்பட்டது தான் டெசோ அமைப்பு! காலத்தே கிடைத்த நன்கொடை!

குறுகிய காலத்திலே அதன் பணி, இன்று உலகத்தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தலைவர்களின் கவனத்தையே தன்பால் ஈர்த்திருக்கிறது!

அய்.மு.கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் தி.மு.க. வெளியேறுகிறது என்ற செய்தி கேட்டு, தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சியும். இன்று மாணவர்கள் எழுச்சியால் தமிழ் நாடே எரிமலையாகி, கொந்தளித்துக் கொண்டிருப்பதோடு, இலங்கைப் பிரச் சினைக்கு ஒரே தீர்வு தமிழீழம் காண் பதே என்ற முடிவுக்கு வந்திருப்பதுவுமே தக்க சான்றுகள்.

இதனைத்தான் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தி.மு.க. எடுத்த முடிவினை காலத்தே எடுக்கப் பட்ட ஞாலம் வரவேற்கும் வரலாற்றுச் சிறப்பான முடிவு! என பாராட்டி மகிழ்ந் திருக்கிறார்.

விலங்குகளை, பறவைகளைக் காப் பாற்றும் சட்டம், தமிழர்களை மட்டும் காப்பாற்றத் தயங்குவதேன்? அவர்களை ஒழித்துவிடத் துடிப்பது ஏன்?

தமிழன் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும், சிங்களனால் இலங்கையில் சீரழிக்கப்படுகிறான் தமிழன்! இங்கோ பார்ப்பனியத்தால் பழிவாங்கப்படுகின் றான்!!.

இந்தக் கொடுமைகளுக்கு, விடிவு வேண்டாமா? வீடு தீப்பற்றிக் கொண்ட தென்றால். சோம்பேறியும் எழுந்து சுறுசுறுப்போடு தீயை அணைக்க துடித்து ஓடிவருவானே!

நிலநடுக்கங்கூட பரவாயில்லை. ஆனால், மனநடுக்கம் சிறிதுமின்றி தமிழனங்காக்க தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து டெசோ தலைவர்களின் வழி நடந்தால்...

தமிழினத்தை அழிக்கத் தரங்கெட்ட சூழ்ச்சிக் கூட்டம் போடும் சதித் திட்டங் களை உடைத்து நொறுக்கித் தவிடு பொடி ஆக்கிவிடலாம்! வரலாறே நம்மை வாழ்த்தும்!

- நெய்வேலி, க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது நியாயம்தானா?


சென்னை, ஏப்.1- கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்தி பார்ப்பது நியாயம்தானா? என தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கலைஞர் இன்று முரசொலி யில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இரண்டு கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தாலி வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும், கேரள அரசும் திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இத்தாலி சென்ற அந்த வீரர்கள் இந்தியா திரும்பவில்லை.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

சோனியா காந்தி இத்தாலி துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

உச்சநீதிமன்றம் இரு வீரர்களுக்கும் உத்தரவாதம் அளித்த இத்தாலி தூதர் வெளிநாடு செல்வதற்கு அதிரடியாகத் தடை விதித்தது. அதன் பின் இத்தாலி அரசு பணிந்து, 2 வீரர்களையும் இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பியது.

இது இத்தாலிக்கான நிலை. இலங்கையின் நிலையைப் பார்ப்போம்.

இதுவரை 600 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு நிகழ்விலாவது கேரள மீனவர் - இத்தாலி கடற்படையினர் பிரச்சினையில் பின்பற்றிய அணுகுமுறையும், வேகமும் தமிழக மீனவர் பிரச்சினையில் கடைப்பிடிக்கப்பட்டது உண்டா?

மார்ச் 13இல் ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் சென்றுவிட்டனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 14இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 34 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மார்ச் 18இல் புதுக்கோட்டையைச் சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதெல்லாம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கையிடம் முறையிடுவதும் தொடர்கதையாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் மார்ச் 13ஆம் தேதி சிறைபிடிக் கப்பட்டு அனுராதபுரம் சிறையில் உள்ள 19 மீனவர் களின் நீதிமன்றக் காவல் நீடிப்பு செய்யப் பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து சனிக்கிழமைகூட மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் காதுகளில் விழுகிறதா?

கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இத்தாலி கடற்படையினர் தொடர்பாக இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவாதித்து, வேகம் காட்டும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் 19 பேரின் சிறை நீடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன சொல்கிறது?

கேரள மீனவர்களையும், தமிழக மீனவர் களையும் பாரபட்சத்துடன் பார்ப்பது நியாயம் தானா? என்று கலைஞர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை


உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக் கூடாதவை. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்ட மாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள். ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத் திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்புள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும்.

எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!


நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் நோயை கட்டுப் படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்த லாம்.

அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

இரண்டு வெண்டைக்காய் பிஞ்சுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல் ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.

இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத் தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். சொல் லப்போனால் வெண்டைக் காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும்.

ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?

வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது.

இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. எனவே வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

தமிழ் ஓவியா said...


நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப் பழம்!


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்: மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும் : பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி சிரங்கு நீங்கும் : சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும் : நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறை பாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ் வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

தொற்றுநோய் தடுக்கப்படும் : தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப் பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்

Thamizhan said...

அன்புள்ள தமிழ் ஓவியா, உங்கள் பதிவை திமுக வலைதள பதிவில் பார்த்து உள்ளே சென்று படிக்க தொடங்கினேன். முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை அத்தனையும் அற்ப்புதமான, பயனுள்ள, அறித்தமுள்ள கட்டுரைகள், செய்திகளின் கோர்ப்பு. உடல் நலம் குறித்து கூறியுள்ள குறிப்புக்களும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் தமிழ் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

தமிழ் ஓவியா said...


ஓ, முரளிதரனா!


அய்.பி.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதியில்லை என்று முதல் அமைச்சர் அறிவித்தாலும் அறிவித்தார்; சில சர்ச்சைகளை எழுப்பியது.

இலங்கை அணியில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்தையா முரளிதான். உலகளவில் சாதனைகளை நிகழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் அவர்.

இவ்வளவு திறமை இருந்தும். இலங்கை அணியின் துணைத் தலைவர் (கேப்டன்) பொறுப்பில்கூட நியமனம் செய்யப்பட்டதில்லை. காரணம் அவர் தமிழர்.

மாமனார் வீடு சென்னையில் இருந்தும் என்ன? உள் நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை - சென்னையில் மட்டும் உரிமை கொண்டாடி என்ன பயன்?

தமிழ் ஓவியா said...


மோடி முன்னிறுத்தப்படுவதன் முக்கிய நோக்கம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோதிடம் பார்த்து, நல்ல நாள், நல்ல நேரத்தைப் தேர்ந்தெடுத்து பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் பிஜேபிக்கான நிருவாகிகளின் பட்டியலை வெளியிட்டு விட்டார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கருத்துத் தானங்களை ஏடுகள் வாரி வழங்க ஆரம்பித்து விட்டன.

மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அரசல் புரசலாகக் கருத்துக்களை பிஜேபி வெளியிட்டு வந்ததுண்டு, அதில் மாறுபட்ட கருத்துகளும்கூட பிஜேபிக்குள் இருக்கத்தான் செய்தன.

இந்த நிலையில் மோடி பிஜேபியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமிக்கப்பட்டதால் கிட்டத் தட்ட அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற இடத்துக்குக் காய் நகர்த்தப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு வீரராக தம்மை முன்னி றுத்திக் கொண்டு கடைசியில், தானே ஊழலில் சிக்கிக் கொண்ட யோகக் குரு என்ற அழைக் கப்பட்டு வரும் ராம்தேவ் சபாஷ்! மோடிதான் பிரதமருக்கான சரியான வேட்பாளர் என்று கை தட்டி வரவேற்றுள்ளார்.

இதற்கிடையில் விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான பீரவீண் தொகாடியா குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்; வரும் 2015ஆம் ஆண்டுக்குள் குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களிலும் வி.எச்.பி. கிளைகள் தொடங்கப்பட்டு, அதற்குப்பிறகு இந்து மாநிலமாக குஜராத்தை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமன் கோயிலை பிரம்மாண்ட மாக கட்ட வேண்டும்; வருங் காலத்தில் ஒட்டு மொத்த உலகமே இந்துக்களைப் பின்பற்றப் போகிறது என்று தனது நம்பிக்கைகளைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதச் சார்பின்மை என்பது ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்படும்; ஹிந்து ராஜ்ஜியம் உருவாக்கப்படும் என்பதை மறைமுகமாக பிரகடனப்படுத்தி விட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஊழல் ஒழிப்பு வீரர் காந்திக்குல்லாய் அன்னா ஹசாரே காங்கிரசை எதிர்த்து ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இவற்றின்மூலம் அப்பட்டமான அடை யாளங்கள் அய்யப்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.

இதில் இன்னொரு தகவலும் முக்கியமானது - கவனிக்கத்தக்கது. பீகாரில் பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது நிதிஷ்குமாரை முதல்வராகக் கொண்ட அய்க்கிய ஜனதா தளம்.

மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர்தான் பிரதமருக்கான வேட் பாளராக வரவேண்டும் என்று நிதிஷ்குமார் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார்.
மோடி ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட இந்த நேரத்தில்கூட, அய்க்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் அழுத்தம் திருத்தமாக தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார். மதச் சார்பற்றவரே பிரதமராக வேண்டும் என்று அழுத்திக் கூறி இருக்கிறார்.

மோடி பிரதமருக்கான வேட்பாளராக பிஜேபி யால் அறிவிக்கப்படும்பொழுது மதச் சார் பின்மையா? ஹிந்து ராஜ்யமா? என்ற கேள்வி இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கும்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தின் - கொள்கையின் அருமை அப்பொழுதுதான் புரியப் போகிறது - பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 2: ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்


ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

சென்னை, ஏப். 2- மனவளர்ச்சி... மூளை வளர்ச்சி குறைபாடுகளை போல, ஒரு விதமான வளர்ச்சி குறைபாட்டுடன் (ஆட்டிசம் பாதிப்பு) குழந்தைகள் பிறக்கின் றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதி கரித்து கொண்டே வருகிறது.

ஆட்டிசம் பாதிப்பு குழந் தைகளுக்காக 2007ஆம் ஆண்டு அய்நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஆட்டிசம் பாதிப் புடன் குழந்தைகள் பிறப்பதற் கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியை ஆட்டிசம் விழிப் புணர்வு தினமாக அறிவித்தது.

இதுக்குறித்து ராயப்பேட்டை ஸ்கோப் மறுவாழ்வு மைய இயக்குநர் பா.சுகுமார், வி.கேன் ஆட்டிசம் பள்ளி இயக்குநர் கீதா ஆகியோர் கூறியதாவது:

ஆட்டிசம் ஒரு நோயல்ல; வளர்ச்சி குறைபாடுதான். இது பிறவியிலேயே வரக்கூடியது. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை, அதன் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்து ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கலாம். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மட்டும் 40, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன. இதேபோல தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டி சம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளை நடத்துகின்ற னர். ஆனால், அரசு மருத்துவ மனைகளில் தனியாக ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை பிரிவு என்பதே இல்லை. ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளையும் நடத்தவில்லை.

அதனால், அரசு மருத்துவ மனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அந்த பிரிவில், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டை நியமிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு என்று சிறப்பு பள்ளிகளை அரசு நடத்த வேண்டும். ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பராம ரித்து மற்றும் சிகிச்சை அளித் தால், அந்த குழந்தைகள் 4 ஆண்டு களுக்குள் சாதாரண குழந்தைகள் போல மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தை களை மாற்றுத்திறனாளிகள் பட் டியலில் சேர்த்து சிறப்பு அந் தஸ்து கொடுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசின் சலுகை கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருந்து, மாத் திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான மருந்து, மாத்திரை கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மாவட்டங் களில் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அறிகுறிகள் என்ன?

ஆட்டிசம் குழந்தைகள் துரு துருவென இருப்பார்கள். ஆனால், பேச மாட்டார்கள். காது நன்றாக கேட்கும். கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார் கள். தனியாகவே இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும்.

ஆட் டிசம் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கூர்மை அதிகம். அவர்களை முறையாக பராம ரித்து, சிகிச்சை அளித்தால் மிகப் பெரிய அளவில் சாதனை புரிவார் கள். உலக அளவில் சாதனை படைத்தவர்களில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திரளுவோம் தோழர்களே!


தமிழ் நாட்டு டெல்டா விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (23.3.2013 விடுதலை).

தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்தும் போதிய அளவு உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்ற உண்மையை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியும் இருந்தார். திராவிடர் கழகம், அதிமுக ஆட்சியின்மீது குறை சொல்வதற்காக இப்படி சொல்கிறது என்று குற்றம் கூறமுடியாது.

அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)யின் சட்டப் பேரவை உறுப்பினரான தோழர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் சட்டப் பேரவையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்தும் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குத்தகை விவசாயிகளின் குத்தகைப் பாக்கிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை யிலேயே பேசியுள்ளார் (தீக்கதிர், 26.3.2013 பக்கம் 5).

25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில்கூட (எண் - 9) கீழ்க்கண்ட கருத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரித் தண்ணீரை உரிய நேரத்தில் தேவையான அளவிற்கு ஜெயலலிதா பெற்றுத்தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பெருமளவிற்குப் பொய்த்துப் போய் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், ஜெயலலிதா அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கூட இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாய்ப் போய்ச் சேரவில்லை என்று அந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் அவர்கள் பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்; மறைக்கத் தேவையில்லை.

நீர்த் தட்டுப்பாட்டால் விவசாயம் பொய்த்து டெல்டா மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று எடுத்துக் கூறியிருந்தால் மேலும் பலன் கிடைத்திருக்கும் என்று கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

காவிரி நீர்ப் பிரச்சினையில் பெரும் வெற்றி பெற்று விட்டதாகக் கூறி முதல் அமைச்சருக்கு மிகப் பெரிய அளவில் விழா எடுக்கப்பட்டது. பாராட்டட்டும் - அதில் நமக்கொன்றும் வருத்தம் கிடையாது.

அந்த விழாவிலே விவசாயிகளுக்காக சில அறிவிப்புகளை ஏழை விவசாயிகள் எதிர்பார்த் தனரே - ஆரவாரத்தோடு விழா முடிந்ததே தவிர, விவசாயியின் வறுமைப் பாம்பு கடிக்கு மருந்து இல்லையே!

அதிமுகவின் முக்கிய தோழமைக் கட்சியான சி.பி.அய்.யின் விவசாய சங்கத் தலைவர் தோழர் முகுந்தன் விடுத்த வேண்டுகோள் விழாவுக்கு முன் ஜனசக்தியில் வெளிவந்ததே - விழா வெளிச்சத்தில் இந்தக் கோரிக்கைகள் மறைந்து போயிற்றே என்பதுதான் நமது வேதனை.

சரி - நிதிநிலை அறிக்கையிலாவது மின்னல் தெரிந்ததா? வெறும் அம்மா பாட்டு இருந்ததே தவிர டெல்டா விவசாயிகளின், அம் மாபெரும் கஷ்டத் துக்கு வடிகால் கிடைக்கவில்லையே.

நடுவர் மன்றத் தீர்ப்பு கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டதாம். இந்தப் பிரச்சினையில் எல்லாம் முடிந்து பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு விட்டதாக வாண வேடிக்கை விட்டோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம்.

இதற்கு முன்புகூட இப்படி நடந்ததுண்டு; நாளை என்ன என்பதுதான் முக்கியம்.

அடுத்த கட்ட நடவடிக்கை இதில் என்ன என்பதுதான் முக்கியம்.

அதனைச் செய்விக்க மத்திய அரசை வற்புறுத் திட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் கூட குப்பைக் கூடையில் வீசி எறிந்தது கருநாடகம் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் விவசாயம் பஞ்சமர், சூத்திரர்களுக்கான பாவப்பட்ட தொழிலாயிற்றே - (மனுதர்மம் பாவத் தொழில் என்றே கூறுகிறது). அதனால்தான இத் தனை வேதனைகள் - சோதனைகள். விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டத்தில்தான் நாம் இருக் கிறோம் என்பதை நம் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி இருந்தார் (விடுதலை, 22.2.2013).

இவற்றையெல்லாம் வலியுறுத்திடவே வரும் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

விவசாயப் பெருங்குடி மக்களே!

கட்சி - அரசியல் கண்ணோட்டம் கிஞ்சிற்றும் இல்லாத தமிழ்நாட்டின் உரிமை இயக்கமாம் திராவிடர் கழகம் குரல் கொடுக்கிறது.

பதவிப்பக்கம் செல்லாப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தை வழி நடத்தும் தமிழர் தலைவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

திரண்டு வருக - திறனைக் காட்டுக!

மாநில அரசின் காதுகளையும்

மத்திய அரசின் காதுகளையும்

கேட்க வைப்போம் - வாரீர்! வாரீர்!!

- கருஞ்சட்டை -

தமிழ் ஓவியா said...


எப்போதும் கற்போம்! எவரிடமிருந்தும் கற்போம்!!


கற்றுக் கொள்வது என்பதற்கு இதற்குமுன் நம்மில் பலரும் ஒரு குறுகிய பொருளில்தான் புரிந்து கொண்டோம். ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், அதற்கு விரிவான விளக்கம் உண்டு.

கற்றுத் தருவோர் எவராயினும் அவர் நமக்கு ஆசிரியர்களே; குரு தான்!

பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என்றுதான் அவர்கள் இருப் பார்கள் என்பதில்லை.

இப்போதெல்லாம் நம் வீடுகளி லேயே ஏராளமாக அவர்கள் இருக் கிறார்கள்! யார் அவர்கள்?

அவர்கள்தான் நமது பேரர்களும், கொள்ளுப் பேரர்களும், பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளும்!

இந்த குமர குருபரர்களுக்குத் தெரிந்த பல்வேறு தொழில் நுட்பச் செய்திகள் - டெக்னாலாஜிக்கல் (Technological) நுட்பங்கள் வயது முதிர்ந்த, குடும்பத் தலைவர் என்ற வெறும் பழம் பெருமையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற நம்மில் பலருக்குத் தெரியாது; நாம் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகப் பெரும் அளவு ஆகும்!

கற்றல் என்பதற்கு வயது இடை வெளி கிடையாது; கூடாது; கூடவே கூடாது! கற்பித்தவர்கள் யார் என்பது பற்றியும் - அய்யோ என்னுடைய பெயர னிடம் இருந்தா மெத்தப் படித்த மோதாவி யாகிய நாம் கற்றுக் கொள்வது என்ற கர்வம் நம்மில் யாருக்கும் தேவையே யில்லை!

யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் அறிவதுதான் நம் காலத்திற் கேற்ப பெரும் அரிய தகவல் தொழில் நுட்பம் அடங்கிய கல்வி; காரணம் தற்போதுள்ள யுகத்திற்குப் பெயரே அறிவு யுகத்தின் வெடிப்புகள் - வெளிச்சங்கள்! Knowledge Explosion - “Information Age”

தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்களே பெரிதும் நம் நாட்டில் இல்லை எனலாம்.

அதுபோலவே கைத் தொலைபேசி - செல்போன் கையில் இல்லாத மனிதர் களும் வெகு அபூர்வம்.

வேலை செய்யும் பணிப் பெண்கள், கீரை விற்கும் கீர்த்தியம்மாள் முதல் சித்தாளு, கொத்தாளராக இருக்கிற தாய்மார்கள் உட்பட கைத் தொலை பேசியையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்!

இது ஒருவகையான அறிவு வளர்ச்சி. கல்வியும்கூட! அமைச்சர் ராசாவின் அரிய பணி, இந்தக் கருவி சாமான்யர் களும் பயன்படுத்தும் - சகல கலா ஆயுதமாக்கி விட்டது!

ஆனால் இதை தொழில் நுட்ப வசதிகளோடு பயன்படுத்த பெரிதும் நாம் யாரிடம் கற்றுக் கொள்கிறோம்?

நம் வீட்டுப் பேரப் பிள்ளைகளிடம் தானே!

7,8 வயது குழந்தை 70, 80, வயது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குமரகுருக் களாகி, போதித்துச் சொல்லிக் கொடுக் கின்ற ஆசான்களாகி விடுகிறார்கள்!

அங்கிங்கெனாதபடி எங்கும் இதே நிலைதான்! அதற்காக நாம் வெட்கப் படுகிறோமா?

இல்லையே!

அறிவும் தகவலும் எங்கிருந்து எவரிடமிருந்து, வயது வித்தியாசம் இல் லாமல் கற்றுக் கொண்டு, கடைப் பிடிக்கிறோமா இல்லையா? எனவேதான், இந்த வாழ்க்கைக் கல்விக்கு வாத்தியார்கள் நம் இளை யர்கள் - குழந்தைகள்தானே!

எனவே கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வயது இடைவெளி ஒரு பொருட்டே அல்ல.
அது மட்டுமல்ல பெரிய மேதை, படிப்பாளிகள் என்பவர்களுக்குச் சட் டென்று விளங்காத செய்திகள் - சாதாரணமான பட்டறிவு உள்ளவர் களுக்கு பளிச்சென்று விளங்கி விடு கிறதே!

புவி ஈர்ப்பு பற்றிக் (Laws of Gravitation) கண்டுபிடித்த சர். அய்சக் நியூட்டன் என்ற பெரிய விஞ்ஞானி பற்றி ஒரு கதை உண்டு. (இதைப் பல விஞ்ஞானிகளின் பேர்களிலும் மாற்றி மாற்றிச் சொல்லி வருவதும் உண்டு)

தன் ஆய்வுக் கூடத்தில் ஒரு பூனை இருந்ததற்கு - தொல்லை செய்யாமல் போக அவரது அறைக் கதவில் ஒரு ஓட்டை போடச் சொல்லி தன் பணியா ளரிடம் கூறி அவரும் அதேபோல் செய்து கொடுத்தார்.

சில காலம் கழித்து அந்த பூனை குட்டிகளைப் போட்டது. விஞ்ஞானி சொன்னார்: பூனைக்குட்டிகள் போய் வர பக்கத்திலேயே கதவுகளில் ஓட்டைகளைப் போடுங்கள் என்று, அதை செய்யுமுன் பணியாளர் சிரித் தாராம்! ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் விஞ்ஞானி!

அதற்குப் பணியாளர், அய்யா பூனை போகும் ஓட்டை மூலமே, குட்டிகளும் போகலாமே, அதற்கென ஏன் தனியே ஓட்டை போட வேண்டும் என்று கேட்ட பிறகு அக்கேள்வியில் உள்ள பகுத் தறிவு வெளிச்சமும், இவரது சிந்தனை யில் இருந்த இருட்டும் இவருக்குப் புலப்பட்டதாம்!

அதுபோல நாம் எவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள எப்போதும் ஆயத்த மாக இருப்பதே அறிவு வழி! வளர்ச்சிப் பாதையாகும்!
-----------கி.வீரமணி -வாழ்வியல் சிந்தனைகள் -4-4-2013