Search This Blog

13.4.13

சித்திரையில் புத்தாண்டாம் தை கூடாது என்கிறது ஆரியக் கூட்டம்-2

- நேற்றைய தொடர்ச்சி...

(தை முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டு என்று முதல்வர் கலை ஞரின் சட்டத்தை மாற்றி சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனும் ஆரிய சிந்தனைக்கு மறுப்பாக இக்கட்டுரை).

திருவள்ளுவர் ஆண்டு என்னும் சகாப்தத்தினைத் தமிழறிஞர் நடை முறைக்குக் கொண்டு வந்தது, தமிழர்க்கு ஒரு தொடர் ஆண்டு அமைய வேண்டும் என்பதே. திருவள்ளுவர் ஆண்டு தை மாதத்தினைத்தானே முதல் மாதமாகக் கொண்டுள்ளது. அதில் இவர்கள் கேட்கும் அறிவியல் சிந்தனை இல்லையே. தெளிவான தமிழுணர்வு தானே உள்ளது. அதுபோலவே சித்தி ரைக்குப் பதிலாக தை என்பதில் தமிழுணர்வு வேரூன்றி இருப்பதை ஏன் எதிர்க்கிறார்கள்?

தைக்கு எதிரான போராட்டம்

போகிற போக்கைப் பார்த்தால் தை என்ற சொல்லே இனி இந்த ஆரியக் கூட்டத்திற்கு நாராச வார்த்தையாக நாவில் நடமிடும் போலும்.
தி.மு.க. தலைவர் 2008 ஜனவரி 10ஆம் நாள், சென்னை சங்கமம் துவக்க விழாவில் 2009 முதல், தமிழ்ப்புத்தாண்டு சித்திரை முதல் நாளுக்குப் பதிலாகத் தை முதல் நாள் கொண்டாடப்படும், அதற்கான சட்டம் இயற்றப்படும் என்றார்.
சொல்லப்போனால் தமிழ் அறிஞர் களுக்கு முன்னாலே, முதன் முதலாக, சித்திரையில் ஆண்டு தொடங்கப்படுவ தற்கான ஆபாசக்கதையினைப் பெரியார் எடுத்துக்காட்டிச் சித்திரை மாதத்திற்குப் பதில் தைத் திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்க் வேண்டும் எனும் கோரிக் கையை முன் வைத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தான்.
 
கலைஞர் அறிவித்ததற்கேற்ப ஜனவரி 23, 2008 அன்று தமிழ்ப் புத் தாண்டு அறிவிப்பு சட்டமுன் வரை வினை முதல்வர் கலைஞரால் தாக்கல் செய்யப்பெற்று பிப்ரவரி 1, 2008 அன்று சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டுச் சட்டமாகியது. நன்கு கவனிக்க வேண்டும். ஒரு மனதாக நிறைவேறியது. அப்போது எதிர்க் கட்சியாக இருந்த செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க எதிர்க்கவோ, சட்டசபை வெளிநடப்புச் செய்யவோ, எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை.

சட்டமன்றத்தில் ஃபிப்ரவரி 9 அன்று சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து சங்கத்தமிழ்ப் பேரவை எனும் அமைப் பினர், புரட்சிகரமான சட்டமாற்றத்தைக் கொண்டு வந்ததற்குக் கலைஞருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.

கலைஞர் அவர்கள் சுயநலத்திற்காகவும், சுயவிளம்பரத்திற்காகவுமா சட்டம் நிறைவேற்றினார்? எந்தத் தமிழறிஞர் தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கும் படி கேட்டார்கள்? என்று போலிக்கூச்சல் போடுவோரே, தமிழ் அறிஞர்கள் பாராட்டு விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது சான்று இல்லையா? கலை ஞர் அப்பாராட்டு விழாவில் பேசுகையில், தமிழ் அன்னையின் முக்கியத்துவத் தையும், தமிழ் மொழியின் கவுரவத் தையும் மீட்டிடத்தான் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.

இங்கே மற்றுமொரு தகவலைப் பகிர்ந்து கொள்வோம்.

தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் பிப்ரவரி 1, 2008. எனவே ஜனவரி 14, 2009ல் தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் வரும். இதற்கிடையில் ஏப்ரல் 13, 2008 அன்பு சித்திரை மாதப்பிறப்பை ஆரியர்கள், ஆரியர்களின் அடிவருடிகள் கொண்டாடினர். இந்து அறநிலையத்துறை ஆலயங்களில் பஞ்சாங்கம் வாசிப்பது, சிரிப்பு வழிப்பாட்டைப் பன்னிரெண்டு மணிக்குச் செய்யும் ஆகமவிதிக்கு முரணான செயல்கள் தாமாக நின்று போயின.

சிலர் வீம்புக்கு ஏதோ ஒன்றிரண்டு இந்து அறநிலையத்துறை நிருவாகத்தின் கீழ் வராத கோயில்களில் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கதை பேசினர்.
ஆனால் ஜனவரி 14, 2009ல் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தைத்திங்களில் கூறி மகிழ்ந்தனர். தமிழ் உணர்வாளர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கியது. இவ்வளவு தூரம் இல்லாமல், பொங்கல் திருநாளை, உழைப்பின் உயர்வு நாளைக் கரிநாள் என்று பொய்யுரை வேறு அவாள் பகன்றனர். பொங்கல் நாள் உத்திராயண நாள் கரி நாளாம். சித்திரையினையே மக்கள் ஏற்றனர். தை மாதத்தை மக்கள் ஏற்கவில்லை என்போர் சும்மா இருந்தார்களா? மக்கள் தான் ஏற்கவில்லை என்கிறீர்களே, பின் எதற்கு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் தடம் பதித்து வழக்கு மன்றம் போனீர்கள்? நீதிமன்றம் சென்று முட்டினர்.

மக்களிடம் இவர்கள் கருத்து எடுபட வில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மணி எனும் ஆரியக்குஞ்சு 12 பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு வழக்கும், டிராபிக் ராமசாமி என்ற பார்ப்பனர் தனியே ஒரு வழக்கும் தொடர்ந்தனர்.  அதற்கு சட்டமாற்றத்தை எதிர்த்து - அதாவது தைதான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை எதிர்த்து அரசியல் சட்டத்தின் துணையை வேறு நாடினர். டிராபிக் ராமசாமி, தன் மனுவில் அரசு கொணர்ந்த சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது. இந்த விஷயத்தில் சட்டமியற்றும் உரிமை தமிழகச் சட்டமன்றத்திற்குக் கிடையாது. அரசியல் அமைப்பு 14, 25, 26, 29 ஆகிய விதிகளின்படி அரசின் சட்டம், அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று வழக்குத் தொடர்ந்தார்.

செப்டம்பர் 12, 2008 அன்று தலைமை நீதிபதி திரு.ஏ.கே.கங்கூலி, நீதிபதி எப்.எம்.இபுராகிம், கலீபுல்லா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, இரண்டு வாரத்தில் அரசு பதில் மனு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் பதில் மனு சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு மட்டுமே பிறப்பித்தது.
இங்கே ஒரு செய்தி 2009 துவக்கத்தில் வழக்கு வந்தபோது வழக்குத் தொடர்ந்த டிராஃபிக் ராமசாமியை, வழக்குத் தொடர்ந்ததற்கு 10,000 ரூபாய் வழக்குச் செலவாக அவர் செலுத்த வேண்டும் என விதித்துத் தீர்ப்பு வழங்கியது. எனவே ராமசாமி உச்சநீதிமன்றத்திற்குப் படை யெடுத்து, மேல் முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததை தள்ளுபடி செய்தது புதிய மனுவை உயர்நீதிமன்றத்திலேயே  வேண்டுமானால் தாக்கல் செய்யச்சொன்னது.
சே.மணி என்பவரும் அவருடன் சேர்ந்து பால.கவுதமன். கு.சுரேஷ், வே.ஏழுமலை, வே.ஜெயராம், ம.அய்யப்பன், சு.மோகன கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ம.தெய்வேந் திரன், நா.ராமன், சு.பச்சையப்பன் ஆகியோர் 12.2.2009இல் வழக்குத் தொடர்ந்தனர்.

இவர்கள் தங்கள் மனுவின் வழக்க மாகப்பாடும் பல்லவியான அரசு எங்க ளுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தி யுள்ளது. நாங்கள் எங்களுடைய மதப் பழக்கங்களைப் பின்பற்றும் அடிப்படை உரிமைகளை இழக்கும்படி செய்துள்ளது. எந்த ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் மரபிலிருந்து வழுவி ஒரு புதிய முறையில் விலகியுள்ளது அரசின் புதிய சட்டம், பல நூற்றாண்டுகளாக மத நம்பிக்கை, மத உணர்வு, மதப்பழக்க வழக்கங்கள் ஆகிய வற்றுடன் இரண்டறக் கலந்துள்ள மரபு வழியிலான சடங்குகள், சம்பிரதாயங்களை அவமதித்துள்ளது. இந்தச் சட்டத்தினால் மாநில அரசுக்கோ அல்லது மாநில மக்களுக்கோ எந்தவிதமான ஆதாயமும் கிடையாது. இச்சட்டம் எந்தக் குறிக் கோளையும் அடையப்போவதில்லை. ஆனால் இந்தச்சட்டம் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதோடு, அரசியலமைப்பில் உறுதி செய்யப் பெற்றுள்ள மதச்சுதந்திரத்திற்குக் குறைவு ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசின் தமிழ்ப்புத்தாண்டுச் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றனர்.

டிராபிக் ராமசாமியைப் புதிய மனுவைத் தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் கூறி னாலும், அவர் தன்னுடைய புதிய மனுவை (ஆஞஐ) 2009 உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்து, இந்த 12 பேர் தொடங்கிய வழக்கில் தம்மையும் இணைத்துக் கொண்டார்.

இவர்களின் மனு அப்போதைய, சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தலைமை நீதிபதி மு.கோபாத்யாயா, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள் ளப்பட்டு, மாநில சட்டத்துறை செயலாள ருக்கும், மய்ய அரசு சட்டத்துறை செயலாள ருக்கும் அறிவிப்பு ஆணை பிறப்பித்தனர். வழக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் வழக்கை அனுமதிக்காமல் நீதிமன்றம் ரிட்மனுவைப் பட்டியலிலேயே வைத்திருந்தது. மார்ச் 4, 2009ல் மாநில் அரசு மேலும் கால அவகாசம் கேட்டு ஒரு மாதம் தாமதித்தது. ஏப்ரல் 30, 2009ல் நீதியரசர் முருகோபாத்யாய அரசு வழக்கறிஞரிடம் மூன்று கேள்விகள் கேட்டார்.
1) பல நூற்றாண்டுகளாகக் கடை பிடிக்கப்பட்டு வந்துள்ள சமய, பண்பாட்டு மரபை மாற்றும் அரசியல் அமைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா?
2) எந்த மாதிரியான சூழ்நிலைகள் இந்தச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அரசைச் தூண்டின.

3) இந்த புத்தாண்டு நாள்காட்டி, தமிழ் மாநிலத் தமிழர்களுக்கு மட்டுமா, உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் பொருந்தக் கூடியதா?
அரசு வழக்கறிஞர் பதில் மனு சமர்ப்பிக்கக் கால அவகாசம் கேட்டார்.
அப்போதும் கூட நீதிபதி இந்த 12 பேரின் வழக்கை அனுமதிக்க வில்லை. நீதிமன்றம் ஜூன் 24 அன்று 42வது வழக்காக வந்தது. ஆனால் நேரமில்லாத தால் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

ஜூன் 25 அன்று 25வது வழக்காக இருந்தது அன்றும் விசாரணைக்கு வரவில்லை. ஜூன் 29ஆம் தேதி 40வது வழக்காக நீதிபதி டி.முருகேசன், நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பகுதி அமர்வு நீதிமன்றத்தில் 40வது வழக்காகப் பட்டியல் இடப்பட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது கண்டிப்பாகப் பதில் மனு தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் உறுதி அளித்தார். வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது நீதிமன்றம். நீதிமன்றத்தில் தேதி குறிப் பிடாமல் எத்தனையோ வழக்குகள் தள்ளி வைக்கப்படுவது சகஜமானது என்பது நீதித்துறைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். விசாரணைக்கு வரவழைப்பதோ, வரவழைக்காமல் இருப்பதோ அரசின் கையில் இல்லை.

திரு மணி, 11 நபர்கள், டராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்ததன் பின்னணியில் இருந்தவர்கள் பட்டியல் இது. இது அவர்களே ஒப்புக்கொண்ட பட்டியல்
இதில் மிக மிக அதிகமானவர்கள் பார்ப் பனர்கள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பின்னணி என்பது பட்டியலைப் பார்த்தாலே தெளிவாக விளங்கும்.

1) காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திரர்
2) பரகால ராமானுஜஎம்பார் ஜீயர்
3) வழக்கறிஞர் டி.ஆர்.மணி
4) வழக்கறிஞர் டி.எம்.அரிகரன்
5) வழக்கறிஞர் சுப்பிரமணியம், பாலாறு
6) தொல்லியலார் எஸ். ராமச்சந்திரன்
7) பாம்புப் பஞ்சாங்கம் வெளியிடும் ம.வ.கணேஷ்குமார்
8) ஆர்க்காடு பால ரத்னா என்.ஆர்.மகாலிங்க அய்யர்
9) பால.கவுதமன்
10) ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் சிறீராம்
11) ஆர்.எஸ்.எஸ். மாவட்டத்தலைவர் ராமநாதன்
12) இந்து முன்னணி துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் 13) ராமேசுவரம் பட்சி சிவராஜன்
14) திருவண்ணாமலை சங்கர்
15) திருவண்ணாமலை மோகன கிருஷ்ணன்
16) பா.ஜ.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.ராஜா
17) திருமதி ஜெயசிறீ சாரநாதன்
18) ஓகை நடராஜன்

இந்தப் பெயர்கள் இவர்கள் பயன்படுத்திய தினமலர், தினமணி, துக்ளக் ஆகி யவையின் பின்னணி குறித்துக் கூறவே வேண்டாம். அ.தி.மு.க சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதில் கைதேர்ந்த கட்சியாயிற்றே.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் சட்டமன்றத்தில் சட்டம் வந்த போது வாய் மூடி மவுனியாக இருந்தது. அடுத்து 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைக்கு மாற்றுவோம் என்று  அ.தி.மு.க. வாக்குறுதி ஏதும் அளிக்க வில்லை. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., வென்று ஆட்சிக்கு வந்ததும் வெற்றி பெற்றதும் தி.மு.க செய்ததையெல்லாம் மாற்றும் நடவடிக்கைகளில் ஒன்றாகத் தமிழக அரசு, தி.மு.க அரசு நிறைவேற்றிய தைப் புத்தாண்டு எனும் சட்டத்தை ரத்து செய்தது.
தமிழக மக்களின் தமிழ் உணர்வுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஒன்றான நடவடிக்கைகள் பலவற்றில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
என்னதான் தூக்கி நிறுத்தினாலும் தமிழ் உணர்வாளர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு தையில் தான். சித்திரை என்பது வழக்கமாக நித்திரையில் இருக்கும் தமிழனுக்கு உரியது. நாம் அந்த நித்திரையைக் கலைக்கத் தொடர்ந்து முயல்வோம்.

சித்திரை நாள் தமிழ்ப்புத்தாண்டு நாள் என மலேயா, இலங்கை, சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு வாதம். இதற்குப் பெரியார் அய்யா பதில் கூறுவார். கடவுள் இல்லை என்கிறீர்களே, உலகத்தில் பல நாடுகளிலும் கடவுள் நம்பிக் கையுள்ளதே ஒருவர் கேள்வி அதற்குப் பெரியார் அளித்த பதில்: உலகத்திலே தமிழ் நாட்டிலே மட்டும் தான் முட்டாள்கள் இருக்க வேண்டுமோ. உலகத்தில் மற்ற நாடுகளிலும் முட்டாள்கள் இருக்கலாமே முட்டாள்தனம் தமிழனுக்கு மட்டும் சொந்தமா?
சித்திரையே புத்தாண்டு என்பதற்குச் சங்க காலம் முதல் தேடினால் எந்தச் சான்று கிடைக்கவில்லை எனும் உண்மையை மறைக்கிறார்கள்.  ஆனால் ஆவணி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. இதை சித்திரையே புத்தாண்டு என்பவர் ஏற்பதில்லை.

தொல்காப்பியத்தில்

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
உதிர்யாமம் எண்மார் புலவர்

என்று கூறப்பட்டுள்ளது.

கார்காலம் புரட்டாசிக்கு முந்திய ஆவணி. எனவே இந்த வரிசையில் ஆவணி புத்தாண்டாக இருந்துள்ளது என்பதை முறையாக மறுக்காமல் எந்த எந்த மாதங்களில் என்ன சிறப்பு என்பதைக் காட்டப் புரட்சிக் கவிஞர் இளைஞர் இலக்கியத்தில்

 கொத்துக் கொத்தாய் பாவிருக்கும் சித்திரையிலேயே
கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்த குறிராயிருக்கும் மார்கழியிலே. மிக
வெப்பக்கதிர் காட்சி தரும் தைப் பரப்பிலே

என்ற பாடலை, வெட்கமில்லாமல் சித்திரை தமிழ்மாதம் பிறப்பா என்று புரட்சிக் கவிஞர் வெகுண்டெழுந்து பாடியதைச் சுட்டாமல் இதை எடுத்துக் கூறுகின்றனர்.

முன்னாளில் தமிழாண்டு முதல் மார்கழி ஈராகவும், ஆவணி முதல் ஆடி ஈராகவும் இருவேறு நிலையில் கணிக்கப்பட்டு வழக்கில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் கணிதத் துறையிலே ஏற்படும் சில சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக இன் றுள்ள நெறியில் மேடத்துக்குச் சூரியன் வரும் நாள் முதல் மீனத்தைப்பிரியும் நாள் வரை ஓர் ஆண்டாகக் கணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் பெயரும், காரணமும் எனும் சா.கணேசனின் கட்டுரை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் சித்திரையே எனும்  அவர்கள் வெளியிட்ட நூலிலேயே உள்ளது.

நெடுநல்வாடையில் அரசமாதேவி காணும் காட்சி ஒன்று குறிப்பிடப்படுகிறது.

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணுர்புதிர்தரும் வீங்குசெல்ல மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவினன் நோக்கிறெழது உயிரா
உ 166-113

திண்ணிய கொம்புடைய ஆடு எனும் இப்பாடல் பெரும் பாலானவர்கள் கையாளும் பாடல் திண்ணிய கொம்புகளை உடைய ஆடு என்பது ஷேராசியைக் குறிக்கிறது என்பது சித்திரைப் புத்தாண்டுத் தரப்பினர் வாதம் திண்ணிய கொம்புகளை உடைய ஆடு என்பது திருமருப்பாவை என்று அசுவதி நட்சத் திரத்தைக் குறிக்கிறது என்று முனைவர் இரா.மதிவாணன் கூறுவதை ஏற்காது, திண்ணிய மறுப்பின் ஆடு என்பது செம்மறி ஆட்டைக் குறிக்காது என்கின்றனர் சித்திரையாளர்.

திருஞான சம்பந்தர் திருமயிலையில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய திருப்பதிகத்தில் இரண்டாம் திருமுறை - 47ஆம் பதிகத்தில், ஐப்பசி ஓணம், கார்த்திகை, நாள் விளக்கீடு, ஆதிரை நாள், தைப்பூசம், மாசிக்கடலாட்டு, பங்குனி உத்திரநாள் என்று திருவிழாக் களை யெல்லாம் கூறியவர் சித்திரைப் புத்தாண்டு சித்திரை பவுர்ணமி விழா என்றெல்லாம் கூறவில்லையே என்பதற்கு இந்தச் சித்திரைத் திருக்கூட்டத்தால் விளக்கம் சொல்ல முடியவில்லை.

சித்திரையே தமிழ் ஆண்டுத் தொடக்கம் என்பதற்கு பழ.சுரேஷ் என்பவர் கூறும் பைத்தியக்காரத் தனமான வாதங் கள் இவை

தமிழகத்தில் முக்கனி என்று சொல்லப் படுகின்ற மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளுமே ஒருசேர நமக்குக் கிடைக்கத் தொடங்குவது சித்திரை மாதத்தில்

மல்லிகைப்பூ மனிதனுக்குக் கிடைக்கத் தொடங்கும் காலம் சித்திரை
புத்தாண்டு அன்று சிறப்பாகச் செய்யும் அறுசுவை கலந்த பச்சடியும் அதில் சேர்க்கக்கூடிய மா, வேப்பம்பூ, புளி, வெல்லம் ஆகியவைகளும் கிடைக்கும் காலம் சித்திரையாகும்.

சூரியன் தன் சுற்று வட்டப்பாதையில் வலப்புறமாக அமையப்பெற்றது தை அன்று முதல் சூரியனின் ஆதிக்கம் துவங்கி னாலும் சராசரியாக அவன் உச்சநிலைக்கு வருவது சித்திரை மாதத்தில் தான். சூரியன் வளர்ச்சியில் சராசரியாக ஆதிக்கம் செலுத்தும் நாள் தான் சித்திரை எனவே சித்திரை தான் புத்தாண்டாக அமையும்.

பறவைகள், விலங்குகள் இனப் பெருக்கம் செய்து மகிழ்ச்சியாக இருக்கும் நாள் சித்திரை.

இவையெல்லாம் பொருத்தமாக இருக்கிறதா? சிந்தியுங்கள்

தொல்காப்பியம் கூறும் தமிழ்ப்புத்தாண்டு

தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கணித் தல் வழக்கமாக இருந்து வந்துள் ளது. ஞாயிறு எனப்படும் சூரியனுக்கு உரிய ஓரை ஆவணி ஓரையாவது சிங்க ஓரை யாகும். அதற்குரிய திங்கள் ஆவணி யாகும். எனவே ஆவணி தொடங்கி மாதங்களை எண்ணுதல் ஒருமுறையாகும்.

காடும் மாலையும் முல்லை என வரும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை கூற வந்த நச்சினார்க்கினியர் கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை (ஆவணி) முதலாகத் தன்மதிக்கு உரிய கற்கடக வோரை (ஆடி) ஈராக வந்து முடியுந்துணையும் ஓர் ஆண்டு ஆம் ஆதலில் அதனை இருமுறையாளே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் 36 காலம் ஆக்கினார் என்று கூறுவது, 3000 ஆண்டுகளுக்கு முன் சித்திரை, தமிழ் மாதப் பிறப்பில்லை என்று காட்டும் சரியான எடுத்துக்காட்டு.

-------------------- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 13-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
33 comments:

தமிழ் ஓவியா said...


பி.பி. மண்டல்


பிற்படுத்தப்பட்ட மக்கள் தம் வாழ்நாளில் மறக்கக் கூடாத ஒரு பெருமகன் பி.பி. மண்டல் ஆவார். அவரின் நினைவு நாள் இந்நாள் (1982).

பீகார் மாநில முதல மைச்சராகவும் இருந்தவர். இவரின் தலைமையில்தான் 20.12.1978 அன்று பிரதமர் மெரார்ஜி தேசாய் அவர் களால் பிற்படுத்தப்பட்டோ ருக்கான நலக்குழு அமைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆவது பிரி வின்படி குடியரசு தலைவர் அவர்களால் இத்தகு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தொடக்கத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எவரும் உறுப்பினராக இல்லாத நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மான மிகு கி.வீரமணி அவர் களால் அன்று முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்ட தன் விளைவாக தமிழ் நாட்டைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த சுப்பிர மணியம் அவர்கள் நியமிக் கப்பட்டார்கள். அவர் கடைசி வரை கழகத் தோடும் தமிழர் தலைவ ரோடும் தொடர்பு கொண்ட வண்ணமாகவே இருந்தார்.

குழு அறிக்கைக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது, கலந்துரை யாடுவது என்பனவற்றில் பெரியார் திடலோடு நெருக் கமான உறவோடு இருந்து வந்தார்.

பி.பி. மண்டல் அவர் களும், சுப்பிரமணியம் உள்ளிட்ட உறுப்பினர்களும் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் (30.6.1979) சிறப்பான வர வேற்பும் அளிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பி.பி. மண்டல் மனந் திறந்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறேன்: நாங்கள் அரசுக்கு அறிக்கை அளிப் போம். ஆனால் அரசு அத னைச் செயல்படுத்தும் என்பதற்கு உறுதி யில்லை. அதனைச் செயல்படுத்தும் திறன் உறுதி பெரியார் மண் ணுக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இருக் கிறது! என்று முழங்கியது இன்னும் காதுகளில் ரீங் காரம் செய்கிறது!

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் தமிழர் தலைவர் அவர்கள், செயல் படுத்திக் காட்டுவோம் என்று சங்கநாதம் செய் தார். அதன்படி 42 மாநாடு களையும், 16 போராட்டங் களையும் நடத்தி கழகம் செயல்படுத்தியும் காட் டியதே!

ஆனாலும், பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில், ஏழு விழுக்காட்டைத் தாண்ட வில்லை - நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு. பயணம் செய் வோம் - பணி முடிப்போம் என்று மண்டலின் நினைவு நாளில் உறுதி கூறுவோம்! வாழ்க மண்டல்!

- மயிலாடன் 13-4-2013

தமிழ் ஓவியா said...


கழகத்திற்கு கிடைத்த வெற்றி


தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி. கூட்டத்தில் முடிவு

சென்னை, ஏப்.13- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத் தின் தேர்வுகளில் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டன மற்றும் சில தேர்வுகளில் பாதி யாக குறைக்கப்பட் டதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் 18.3.2013 அன்று மாவட்டங்களின் தலை நகரங்களிலும் 19.2.2013 அன்று சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தமி ழுக்கு உரிய முக்கியத் துவம் அளிக்கும் வகை யில், புதிய பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என நேற்று (12.4.2013) நடந்த தேர்வாணைய அவசரக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள் ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறி விப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்று டி.என்.பிஎஸ்சி. வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

தமிழ்மொழி தொடர்பான கேள்விகள் நீக்கம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழி யர்களும், அதிகாரி களும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என். பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் பாடத்திட்டம் அடியோடு மாற்றிய மைக்கப்பட்டது. அதன்படி, குரூப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் தமிழ்மொழி தொடர் பான கேள்விகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அதற் குப் பதிலாக பகுத்து ஆராயும் திறன் (ஆப்டி டியூட்) புதிதாக சேர்க் கப்பட்டது. குரூப்-2 தேர்வில் தமிழ்மொழி தொடர் பான நூறு கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட் டன. அதற்குப் பதிலாக பொது அறிவு கேள்வி களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டு, ஆப்டி டியூட் தொடர் பாக 50 வினாக்கள் புதிதாக சேர்க்கப்பட் டன. அதோடு அறிவியல் மற்றும் பொது அறிவு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

திராவிடர் கழகம் போராட்டம்

புதிய பாடத்திட்டத் தில் தமிழுக்கு முக்கியத் துவம் குறைக்கப்பட்ட தால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர் வாணையத்தை கண் டித்து கடந்த 18.3.2013 அன்று மாவட்ட தலை நகரங்களிலும், சென்னையில் 19.3.2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் திராவிடர் கழகத் தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேலும், இது தொடர் பாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரி வித்தன. பாடத்திட்டத் தில் தமிழுக்கு முக்கியத் துவம் குறைக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரி வித்து ஏராளமான மாணவ-மாணவிகளும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டனர். அரசுக்கும் மனுக்கள் அனுப்பினர். தமிழ் மொழிக்கு உரிய முக்கி யத்துவம் அளிக்க வேண் டும் என்று சட்டப் பேரவையில் உறுப்பி னர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக டி.என்.பி. எஸ்.சி.க்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் அவ சரக் கூட்டம் நேற்று (12.4.2013) நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையில், செய லாளர் மா.விஜயகுமார் முன்னிலையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர் களும் கலந்து கொண்டனர். காலை 11.30 மணியளவில் தொடங் கிய இந்த கூட்டம், மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது.

தமிழுக்கு முக்கியத்துவம்

திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு உரிய முக் கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத் திட் டம் மாற்றி அமைக்கப் படும் என்றும் இது தொடர்பான அதி காரபூர்வ அறிவிப்பு 17-ஆம் தேதி (புதன் கிழமை) வெளியிடப் படும் என்றும் டி.என்.பி. எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலமாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணியில் சேர்ந்த வர்களில் பெரும்பா லானோர் தமிழை விருப்ப பாடமாக தேர்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 200 வினாக்கள் கொண்ட குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ. தேர்வு களில் நூறு கேள்விகள் தமிழ் சம்பந்தப்பட் டவை என்பதால் அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்வில் எளிதில் வெற்றிபெற்று, அரசு பணியில் சேர முடிந்தது.

தமிழ் ஓவியா said...

கோவையில் புரட்சிப் பெண்கள் மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது


தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார்

கோவை, ஏப்.13- கோவையில் இன்று (13.4.2013) காலை திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை சார்பில் புரட்சிப் பெண்கள் மாநாடு சுந்தராபுரத்தில் வெள்ளக்கோவில் அரங்கநாயகி அம்மான் நினைவரங்கில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது.

மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களை அடிமைப்படுத்தும் நாடோ, சமூகமோ எவ்வகை யிலும் முன்னேற முடியாது. ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்புமே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். என்ற அறிவு ஆசான் தந்தை பெரியாரின் அடியொற்றி வீறு நடைபோடும். திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களால் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு 13.4.2013ஆம் தேதி கோவை சுந்தராபுரத்தில் அறிவிக்கப்பட்ட மாநாடு புரட்சிப் பெண்கள் மாநாடு

கழகத் தலைவருக்கு வரவேற்பு

மாநாட்டு நிகழ்வுக்கு வருகை தந்த கழகத் தலைவருக்கு 13.4.2013 அதிகாலை 5.30 மணியளவில் கோவை தொடர்வண்டி நிலையத்தில் கோவை மண்டல திக மகளிரணி, திக அனைத்து அணியின ரும் அணிவகுக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரியாரின் சிலைக்கு மாலை

கோவை சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் டெய்சி - மணியம்மை தலைமையில் பெரியார் சமூக காப்பணி அணி வகுப்புடன் மகளிர் அணி, மகளிர் பாசறை தோழியர்கள் மற்றும் கோவை மண்டல கழகத்தைச் சார்ந்த தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் மாலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று பெண்ணுரிமை பேணிய ஒப்பற்ற தலைவராம், சமூக விஞ்ஞானி தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பெண்ணுரிமை பேணிய பெரியார் வாழ்க!

ஆணுக்கு பெண் அடிமையில்லை என்று சொன்ன பெரியார் வாழ்க!

ஆணாதிக்கம் ஒழியாமல் பெண்ணுக்கு விடுதலை இல்லை என்ற பெரியார் வாழ்க!

கள்ளுக்கடை மறியல் நடத்திய நாகம்மையார் வாழ்க!

இராவணலீலா நடத்திய மணியம்மையார் வாழ்க!

பெண்ணுரிமைப் போராளி வீரமணி வாழ்க!

என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன இது காண்போரை வியப்பிலும், விழிப்புணர்விலும், சிந்தனையிலும் ஆழ்த்தியது என்று சொன்னால் மிகையில்லை.
மாநாட்டின் கருவான கருத்தரங்கத்தின் முன்பாக பொதிகை தொக்காட்சி புகழ் ளுகுஹ மால்கம் மார்சல் ராஜ் அவர்களின் அதிரடிப்பறை நிகழ்ச்சி நடைபெற்றது. இச்சாகசத்தை பாராட்டி திக மகளிரணி, திக மகளிர் பாசறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் ரூ. 100/- அன்பளிப்பு வழங்கப்பட்டது. இச்சாகசத்தை செய்த பெரியார் பிஞ்சுவின் தந்தை பல கோவில் நிகழ்ச்சிகளில் என் மகன் இது போன்ற சாகசங்களைச் செய்திருந் தாலும், திரா விடர் கழக மேடையில் இன்று சாகசம் செய்ததை எண்ணி உள்ளம் பூரிப்பதாக தன் உவகையை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து கருத்தரங்கம் தொடங்கியது.

முனைவர் கு.ராமாத்தாள் உரை

பெண்களைக் கேவலப்படுத்தும் விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும்,

தேராமன்னா செப்புவதுடையேன் என்ற வீரப்பெண்கள் உலவிய நாட்டில் தொடர்ந்து நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பெண்ணை கேவலப்படுத்துகின்ற, அவமானப்படுத்துகின்ற அசிங்கப்படுத்துகின்ற விளம்பரங்கள் நிபந்தனை யின்றி தடைசெய்யப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

புராண, இதிகாசங்களில் பெண்கள் மிகமிகக் கேவலமாக சூதுக்கு விற்கப்பட்ட பொருளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே மூடப் பழக்கவழக்கங்களும், இதிகாச புராணங்களும் நம்மை கற்பித்து கீழாக்கியதோ அதையெல்லாம் நாம் தூக்கி எறிய வேண்டும். நான் அடங்குவதற்காக பிறக்கவில்லை சாதிக்க பிறந்தவள் என்று உரக்கச் சொல்ல வேண்டும். அடங்கி வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. ஆளும் திறன் என்பது பெண்களின் இயல்பான குணம், சொத்து, உரிமை ஆகும். அதை வெளிக்கொண்டு வரும் சந்தர்ப்பம் நமக்கு நிறைய இருக்கிறது. இதையெல்லாம் நம்மோடு பணியாற்றுகிறவர்களுக்கு மட்டுமல்ல ஊரில் இருப்பவர்கள், அண்டை, அயலார் போன்றவர்களுக்கும் நாம் சொல்லவேண்டும்.

நாட்டு வருமானத்தை அளக்கும் அளவுகோலில் பெண்களின் வருமானத்தை கணக்கு எடுப்பதில்லை. இதற்காக போராட்டம் உதயம் பெற வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் நிறைய நடத்தப்பட வேண்டும். எங்கெங்கு பெண்களின் உரிமை ஒடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் எங்கள் புரட்சிக் குரல் ஒலிக்கும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பேராசிரியர் தவமணி தொடக்க உரை

இப்போது நிறைய பாடசாலைகளில் பெற்றோர் களின் காலுக்கு பூசை செய்து வாரிசுகள் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது நமக்கு ஏற்புடையதல்ல! ஒரு நாள் மட்டுமல்ல எல்லா நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெற்றோர்கள். மதிப்பெண் எடுத்தால் திறமையா னவர் இல்லையென்றால் திறமை குன்றியவர் என்ற போக்கு கூடாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையில் சிறந்தவர்கள் தன்னுடைய குழந்தைகள் எந்த துறையில் திறமைசாலிகள் என்பதைக் கண்டறிந்து வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்தி தர வேண்டும். குழந்தைகள் தவறு செய்தால் மென்மை யாகக் கண்டிக்க வேண்டும். கட்டுக்கள் போடக் கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்தை யொட்டி செயலாற்ற வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் வாழ்வியல் சிந்தனைகள் படிக்க வேண்டும். அதை குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 13


ஏப்ரல் 13ஆம் நாளை தமிழ்நாட்டு மக்களால் மறக்கவே முடியாது. இந்நாளில்தான் 1954ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

எந்தச் சூழலில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்? உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் ஏற்றிப் போற்றப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் நான்காம் வகுப்பே படித்திருந்த காமராசர் அமர்ந்தார் என்பது சாதாரணமானதல்ல.

ஆச்சாரியார் ஏன் தூக்கி எறியப்பட்டார்? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மக் கண்ணோட்டத் தோடு - அரை நேரம் படிப்பு - அரை நேரம் அப்பன் தொழில் என்ற குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினாரே! 1952இல் மட்டுமல்ல; 1937இல் சென்னை மாகாண பிரதம அமைச்சராக வந்த போதும்கூட இதே ராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை இழுத்து மூடினாரே!

ஆச்சாரியாரின் இந்த மனப்பான்மையை மனதில் நிறுத்தினால் தான் 1954இல் இதே நாளில் காமராசர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன சூழ்நிலையையும், காலத்தின் கட்டாயத்தையும் அறிய முடியும்.

ஆச்சரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார்; அதே நேரத்தில் காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

கே.ஆர். விசுவநாதன் என்ற சட்டமன்ற உறுப் பினர் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். வல்லுநர் குழு ஒன்றை நியமித்து புதிய கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்: அறிக்கை வரும் வரை கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக (முதல் அமைச்சர் ராஜாஜிக்கு ஆதரவாக) 137 வாக்குகளும் கிடைத்தன. மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிபுணர் பருலேகர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க மறுத்து விட்டார் முதல் அமைச்சர் ஆச்சாரியார். கடும் எதிர்ப்புக் காரணமாக ராஜாஜி பதவி விலகினார்.

காமராசர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு எளிதில் இசையவில்லை. தந்தை பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களும் கொடுத்த அழுத்தமும் துணிச்சலும்தான் அவர் ஒப்புதலுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

மக்கள் எதிர்பார்த்தபடியே ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளை மளமளவென்று திறந்து மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இலவசக் கல்விக் கதவைத் திறந்து, தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் கல்விக் கண்களைத் திறந்து விட்ட வள்ளல் ஆனார்.

இன்றைக்குக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை கொள்ளவும் 69 விழுக்காடு இடஒதுக் கீட்டினை சட்டரீதியாகப் பெற்றிடவும் கால்கோள் போட்ட கருப்புத் தங்கம் காமராசர்!

ஆம், அவாள் ஆத்து ஆனந்தவிகடன் எழுதியதுபோல கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர்!

காமராசருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் கல்வி வளர்ச்சி செம்மாந்து ஓங்கியது என்பதில் அய்யமில்லை.

இன்னும் மத்திய அரசின் கல்வி நிறுவனங் களில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., முதலியவற்றில் ஒடுக்கப் பட்டோருக்குக் கதவடைப்பு எனும் நிலைதான் தொடர்கிறது அந்தக் கதவையும் உடைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிகரமாக வெளிவரும் நாள்தான் தந்தை பெரியார் அவர் களுக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் உண்மையான நன்றி தெரிவிக்கும் உன்னத நாளாகும்.

வாழ்க பெரியார்!
வாழ்க காமராசர்!

தமிழ் ஓவியா said...


எதிர்க்காமல்...


மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது.
(விடுதலை, 5.11.1967)

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா அரசு வீசிடும் தடைக் கற்கள்


தமிழகத்தில் சமூக நீதி - இடஒதுக்கீட்டிற்காக

திராவிட இயக்கங்கள் போராடிப் பெற்ற வெற்றியின் பாதையில்

ஜெயலலிதா அரசு வீசிடும் தடைக் கற்கள்

கவிஞர் கனிமொழி எம்.பி.,
தலைவர், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை


அடிமைகளைப்போல் நடத்தப்பட்டவர்கள், கல்வி என்றால் அவர்களின் காதுகளில் ஈயத் தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற காட்டு மிராண்டிக் காலங்களை இப்போதுதான் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து சமூக நீதியை சில நேரங்களில் கடைபிடிக்கத் தொடங்கி யிருக்கிறது.

நீதிக்கட்சியில் தொடங்கி தலைவர் கலைஞர் வரை அந்தப் போராட்டம், அதன் அரசியல் மாற்றங்களும் நுணுக்கங்களும் கண்காணிக்கப்பட்டு தொடர்ந் தாலும், அதற்கு எதிரான குரல்கள் என்றும் ஓய்ந்ததே இல்லை. அவை ரகசியத் தளங்களில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். இடஒதுக்கீட்டிற்கான எதிர்ப் பிரச்சாரங்கள் இன்று தனது ஊடகமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையே பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. சில ஊடகங்களும், திறமைக்கு மரியாதை, தகுதித்தேர்வு என்ற கருத்துக் களை, அதன் சரித்திர ரணங்களைப் புரிந்து கொள் ளாமல் முன்வைக்கிறார்கள். Brain Drain பற்றி இன்று கவலைப்படுபவர்களுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கல்வி என்ற உரிமை மறுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள் இவர்களின் மூளைகள் எல்லாம் விரயம் செய்யப் பட்டது நியாயமாகத் தெரிகிறதா?

இப்படித்தான் நம்மோடு நம்மிடையே வாழ்ந்து, ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்று, நம்மவர்களாலேயே சமூகநீதி காத்த வீராங்கனை என்று வாழ்த்தும் பெற்றிருக்கக்கூடிய நாளைய இந்தியப் பிரதமர் கனவில் இருக்கும் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் நம் தோள்களின் மீது ஏறி நின்று கொண்டு, தன் பாரம்பரியப் பகையை, பழிவாங் கலை, அரங்கேற் றிக் கொண்டிருக்கிறார்.

வழிவழியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர் களையும், காலம் காலமாக அத்தனை வாய்ப்பு களையும் தனதாக்கிக் கொண்டவர்களையும் ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிட முடியாது என்ற காரணத்தால், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், தலித்துகள், பெண்கள், இஸ்லாமியர், பழங்குடி யினர், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பாக இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மூன்று தலைமுறையாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் உயர்ஜாதி குடும்பத்துப் பிள்ளையையும் கிராமத்து வீதிகளில் நடக்கக் கூட உரிமையற்ற வீட்டுப் பெண்பிள்ளையையும் ஒரே அளவுகோலால் அளக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடைதான் இடஒதுக்கீடு. ஆனால் அதை நாம் அயரும் நேரம் பார்த்து ஒழிப்பதையே கொள்கையாகக் கொண்டது அ.தி.மு.க அரசு.

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்

தமிழகத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வுகளில், அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்படாததோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள ஏறக்குறைய 19,000 ஆசிரியர் பணி நியமனங்களிலும், அரசு சட்ட விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. முது நிலை ஆசிரியர் பணி நியமனத்திலும், உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பிறகும் மீண்டும் மோசடி நடை பெற்றுள்ளது. இதுவரை இந்தியாவிலேயே நடைபெறாத அளவிற்கு, இந்த மோசடிகள் நேர்த்தியாக நடத்தப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாக விடுதலையில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான கல்வித் தகுதியோடு தொடர் புடைய தேர்வு இது. அதாவது முன்பெல்லாம் பி.எட் பட்டம் அல்லது ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் பெற் றால் போதுமானது, அவரை ஆசிரியராக நியமனம் செய்யலாம். ஆனால், இப்போது இந்தத் தேர்விலும் வெற்றி பெற்றால்தான், ஒருவர் ஆசிரியர் பணி நியமனத்திற்குத் தகுதியுடையவராக முடியும் என்று மத்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டம் (2010) அறிவித்துவிட்டது.

கல்லூரி ஆசிரியர்களுக்கான NET மற்றும் SLET தேர்வுகள் எப்படியோ; அப்படித் தான் டி.இ.டி. தேர்வும். இத்தகைய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், பணிநியமனம் பெறுகிறவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இவற்றைப் பதிவு செய்துகொள்ளலாம். அதுவும் இவை அரசு சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படுபவை. எனவே இட ஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன அம்சம், இதில் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

வகுப்பு வாரி தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கவில்லை

இந்த தகுதித் தேர்வை தமிழகத்தில் நடத்திய சுர்ஜித் சௌத்ரி (ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர்) இதற் கான தேர்வு முடிவுகளை வெளியிட்ட போது, வகுப்பு வாரியாக தனித்தனித் தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிக்கவில்லை.

தமிழகத்தில், கடந்த ஜூலை- 12 (2012) மற்றும் அக்டோபர்- 14 (2012) ல் நடைபெற்ற, இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் இடஒதுக்கீடு முற்றிலும் வழங்கப்படவில்லை. இந்தியா முழுவதும், மற்ற மாநிலங்களில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு களிலும் கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுகளிலும் இடஒதுக்கீடு, அவை தொடங்கிய காலம் முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தின்படி, கீழ்க்காணும் வகையில் இடஒதுக்கீடு பின்பற்றப் படுகிறது:

மேற்கண்ட இந்த 69% போக, எஞ்சியிருக்கும் 31ரூ எல்லோருக்கும் பொதுவானதாகும்.

அதாவது இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 69ரூ இடங்கள் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர், இஸ்லாமியர் போன்றவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும், மீதம் உள்ள 31ரூ எல்லோருக்கும் பொதுவானது.

இதில் இடம் பெறு வது என்பது மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே. 95ரூ மதிப்பெண் பெறும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி, தான் பெற்றிருக்கக் கூடிய உயர்ந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த 31% இல் இடம் பெறும் தகுதி பெறுகிறாள். ஆனால் அ.தி.மு.க அரசு நடத்திய தேர்வில் 31% பொதுப் போட்டி இடங்களும் உயர்ஜாதியினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதன் விளைவாக ஒடுக்கப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத்திற னாளிகள் என 50,000க்கும் மேற்பட்டோர் இடஒதுக் கீட்டின்படி தகுதி இருந்தும் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களில் 15,000 பேருக்கு அரசு ஆசிரியப் பணி உரிமை (காலியாக இருக்கும் பணி யிடங்கள் ) மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டி.இ.டி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, ஆசிரியர் நிய மனம் குறித்த எந்த ஒரு அரசு உத்தரவோ அல்லது அறிவிப்போ அரசிதழில் வெளியிடப் படாமல் ஏறக்குறைய 21,000 பணியிடங்கள் நிரப்பப்பட் டுள்ளன.

இதனால் ஏறத்தாழ தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர் கள் இல்லாமல் திண்டாடும் நிலை உருவாக்கப்பட் டிருக்கிறது. எந்தக் குழந்தைகளின் கல்விக்காக தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களும், அறிஞர் அண்ணாவும், அண்ணல் அம்பேத்காரும், தலைவர் கலைஞரும் போராடினார்களோ, வெற்றி பெற்றார் களோ, அந்த வெற்றிப்பாதையில் அம்மாவின் அரசு தடைக்கற்களை சாதுர்யமாக வீசி இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு(தகுதித் தேர்வு அல்ல) 27.05.2012 அன்று நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 27.7.2012 அன்று வெளியிடப்பட்டன. இந்தப் பட்டியலில்தான் பொதுப்போட்டியில் வரவேண்டிய உயர் ஜாதியினர் தவிர்த்த பிறரை அவரவர் இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். அதாவது உயர் ஜாதியினரை மட்டும் GT என்று குறிப் பிட்டு, நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் மற்ற வர்களை BC, MBC, SC, ST என்று குறிப்பிட்டிருந் தார்கள். இதன் மூலம் 31% பொதுப்போட்டி இடங்களை மொத்த மாக உயர்ஜாதியினருக்கே ஒதுக்கி விடும் சதி இது.

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் இந்த முறையானது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவால், அண்டை மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து கண்டுபிடிக்கப்பட்ட முறை என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

ஆந்திராவில்

ஆனால், நம் அண்டை மாநிலமான ஆந்திராவில், இதே ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில், இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, தகுதி மதிப்பெண் களாக, உயர்சாதியினருக்கு 60% மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50ரூ மதிப்பெண் களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40% மதிப்பெண் களுமாக வகுப்புவாரியாக நிர்ணயம் செய்திருப்பது, அந்தக் குழுவின் கண்களுக்குத் தெரிய வில்லையா? அல்லது தெரிந்தே தெளிவாக எடுக்கப்பட்ட முடிவா இது?

தமிழ் ஓவியா said...

சட்டமன்றத்திலும், அறிக்கைகளிலும் ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் ``என் ஆணையின்படி என மிகுந்த தன்னடக்கத்தோடு சொல்லிக்கொள்ளும் முதல்வர், அவரது ஆணை யின்றி ஒரு அணுவும் அசையாத ஆட்சியில் அவருக் குத் தெரியாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட துரோகம் இழைக்கப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. இந்தச் சதியை மறைக்க அவர்கள் நடத்தி இருக்கும் நாடகம் சிலாகிக்கப் படவேண்டியது. மிக நுட்பமானது.

பொதுப்பிரிவில் தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களை, அதாவது 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கியவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் சௌத்ரி அவர்கள் 142 மதிப்பெண்கள் வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சித்ரா, 118 மதிப்பெண்கள் வாங்கிய காதர் மீரான் சித்திக் (BCM), 110 மதிப்பெண்கள் வாங்கிய சுரேஷ் (SC) இவர்களை எல்லாம் ஜாதியைக் குறிப் பிட்டு இடஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு மாற்றியிருக் கிறார். இது வெளியே தெரியாமல் இருக்க தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, வரிசை எண்களையும் ஜாதிப் பிரிவையும் மட்டுமே குறிப்பிட்டு, இடஒதுக்கீடு அடிப்படை யில் தேர்வு பெற்றோர்களின் மொத்தப் பட்டியலை வெளி யிடாமல், அவரவர் தனித்தனியாகத் தெரிந்து கொள்வது போல வெளியிட்டு, எல்லாம் சட்டப்படி நடந்திருப்பது போல் ஒரு மாயையை உருவாக்கி யிருக்கிறார்கள்.

இதைப்பற்றி சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தோமானால்,

``பாலோஜி பதவாத் அண்டு அதர்ஸ் என்ற வழக் கில் நீதிபதிகள் எ.பி. சின்ஹா மற்றும் சிரியக் ஜோசப் வழங்கிய தீர்ப்பில்;

“The reserved category candidates have two options. If they are meritorious enough to compete with the open category candidates, they are recruited in that category. The candidates below them would be considered for appointment in the reserved categories.”

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வருபவர் களுக்கு இரண்டு வழிகளில் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒன்று இடஒதுக்கீட்டு முறை மற்றது பொதுப்பட்டியல். இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத்தான் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அடைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்வு வெறும் தகுதி நிர்ணயத் தேர்வுதான், வேலை நியமனத் தேர்வு இல்லை என்று நாம் எளிதாக இதை நினைத்துவிட முடியாது. ஏன் என்றால் ``தகுதி நிர்ண யம் என்று முளையிலேயே நம் வாய்ப்புகளை அழித்து விட்டால் பிறகு வேலை நிர்ணயம் என்ற பயிரைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை என்ற பெரிய திட்டத் தின் முதற்படியாகவும் இது இருக்கலாம்.

நீதிமன்றத் தீர்ப்பு

இந்த சதியைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்ற வழக்கில், 01.10.2012 இல் நீதியரசர் நாகமுத்து வழங்கிய தீர்ப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீட்டை முறையாகப் புரிந்துகொள்ளாமல், பின்பற்றாமல் பட்டியல்கள் வெளியிட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். எனவே அந்தப் பட்டியலை ரத்து செய்தார்.

“From the above facts. It is crystal clear that the Teachers Recruitment Board has not understood the method to be followed while making selection as against Open quota, Vertical reservations for Backward Classes, Most Backward Classes, Scheduled Castes, Scheduled Tribes and the Horizontal reservations as laid down in the judgements cited herein before.”(தீர்ப்பின் ஒரு பகுதி)

அ.தி.மு.க ஆட்சி, ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் பொதுப் பிரிவில் மற்ற ஜாதியினர் அதா வது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் இடம் பிடித்துவிடக்கூடாது என்று தன்னு டைய அறிவுத் திறமையைப் பயன்படுத்தி, பொதுப் பிரிவில் மற்ற ஜாதியினர் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான இடஒதுக்கீட்டிலும் கைவைத்து, மிகப்பெரிய மோசடி வேலையைச் செய்துள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டு மென்றால், நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாத இடஒதுக்கீட்டு உரிமையில் அம்மையார் ஜெயலலிதாவின் ஆணையின் கீழ் இயங்கும் அரசு தலையிட்டிருக்கிறது.

- நன்றி: முரசொலி, 12.4.2013

தமிழ் ஓவியா said...

சிறீரங்கம்: திராவிடர் கழகக் கூட்டங்களும்; பார்ப்பனர்கள் ஒத்துழைப்பும்!தமிழ்நாடு முழுக்கவும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திரா, கருநாடகா, மும்பை, புதுடில்லி என இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட பெரியார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சிறீரங்கத்தில் மட்டும் ஏதாவது சலசலப்பு கேட்கிறது. திராவிடர் கழக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு வேலையிலும் வந்துவிடுகிறது அந்தச் சலசலப்பு! எந்தச் சலசலப் புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிகள் நாங்கள், என பட்டுக்கோட்டை அழகிரி அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் அவர் சொன்னது இன்று வரை சிறீரங்கத்துப் பார்ப்பனர்களுக்குத் தெரியவில்லை போலும்!

சிறீரங்கத்தில் நமது தோழர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தொடங்கும் அதே வேளை பார்ப்பனர்களும் தொடங்கிவிடுகிறார்கள் வேலை! இதில் இன்னொரு வியப்பு என்னவெனில், திராவிடர் கழக நிகழ்ச்சிகள் சிறீரங்கத்துத் தமிழர்களுக்குத் தெரிவதற்குள், அவாள்களுக்குத் தெரிந்து விடு கிறது.

இன்னும் சொன்னால், திருவெறும்பூர் கழகத் தோழர்களுக்குக்கூட தாமதமாகவே தெரியவரு கிறது. போகிற போக்கில் பார்ப்பனர்களைக் கைப்பேசியில் அழைத்து, ஏம்ப்பா! சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்வார் கள் போல! அவ்வளவு சுறுசுறுப்பு!

நம் தோழர்கள் ஏதோ சின்னதாய் ஒரு தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்வார்கள். பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்து அதைச்செய்து, இதைச்செய்து அல்லது எதையாவது செய்து தெருமுனைக் கூட்டத்தைப் பொதுக் கூட்டமாக மாற்றிவிடுவர். சரி! நம் தோழர்கள் நீண்ட நாள்கள் ஆச்சே, என ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயல்வார்கள். எட்டுப் பார்ப்பனர்கள் ஒன்றாய் சேர்ந்து, எட்டுத்திக்கும் பிரச்சினைச் செய்து பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிவிடுவார்கள். அண்மையில் கூட பிராமணாள் உணவகம் தொடர்பான கூட்டத் தைப் பார்த்து, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இது என்ன மாநகரக் கூட்டமா? மாநாட்டுக் கூட்டமா? என்று கேட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

சிறீரங்கத்தில் கூட்டம் என்றால் அவ்வூர் தோழர்களை மட்டும் நாம் பார்க்க முடியாது. திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம் பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கைந்து மாவட்டத் தோழர்களையும் அங்கு காணலாம். அந்த அளவிற்குப் பெருமைச் சேர்க்கும் சிறீரங்கப் பார்ப்பனர்களுக்கு நன்றி தெரிவித்துக்கூட நாம் ஒரு கூட்டம் நடத்தலாம். இப்படியான சூழலில்தான் சென்ற 4ஆம் தேதியன்று சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. உடனே இச்செய்தி பார்ப்பனர்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படித் தெரியும் என்று கேட்டால், நாங்களும் விடுதலை படிப்போம்ல..... என வடிவேலு பாணியில் அனலாய்ப் பேசுகிறார்கள்.

தோழர்கள் மாநாட்டிற்கான வேலைகளை முடுக்கிவிட, அவாள்களும் வேட்டியை முறுக்கிவிட்டுப் போனார்கள். எங்கு போனார்கள்? சிறீரங்கம் காவல் நிலையம் நோக்கி! அதுதான் மாநாட்டிற்கு நாம் அனுமதி வாங்கி விட்டோமே! அவர்கள் ஏன் போனார்கள்? என்று கேட்காதீர்கள். நாம் வாங்கியது மாநாடு நடத்த! அவர்கள் போனது மாநாட்டைக் கடத்த!

ஒவ்வொரு முறையும் நாம் கூட்டம் நடத்தும் போதும் அவர்கள் மறக்காமல் செல்லுமிடம் சிறீரங்கம் காவல் நிலையம். அங்கு போய் ஆணையரிடம் முறையிடுவார்கள். ஏம்ப்பா! அரங்கநாதரிடம் முறையிட வேண்டியது தானே? என யாரும் கேட்கக் கூடாது. அவாள்களுக்குத் தெரியும் அது முழு மனிதனை படுக்கை வசத்தில் செதுக்கிய வெறும் பாறை என்று! சரி! காவல் நிலையம் போய் என்ன சொல் வார்கள்? சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் நடத்தக்கூடாது, அவர்கள் எங்களைப்பற்றி தவறாகப் (?) பேசுவார்கள், பிரச்சினை வர வாய்ப் பிருக்கிறது என்றெல்லாம் குறைப்பட்டு முறையிடு வார்கள். காவல் துறை ஆணையர் கொஞ்சம் மெத்தனமாக இருந்தால், எங்களுக்கு முதல்வரைத் தெரியும், பிரதமரைத் தெரியும், ஒபாமாவைத் தெரியும் என உலகளவில் சொந்த பந்தங்களைக் கூட்டுவார்கள்.

இதென்னப்பா வம்பா போச்சு! எனக் காவல்துறை ஆணையரும் நம் தோழர்களை அழைப்பார், என்னப்பா கூட்டம் நடத்தப் போறீங்க? எனக்கேட்பார் (அது தான்! சென்ற வாரமே உங்களிடம் அனுமதி வாங்கிவிட்டோமே என்றெல்லாம் சொல்லக்கூடாது. கேட்ட கேள்விக் குப் பதில் சொல்ல வேண்டும்), கூட்டத்திற்கு யார் யாரையெல்லாம் வருகிறார்கள்? என்ன பேசு வார்கள் என எழுதிக் கொடுங்கள். குறிப்பா பிராமணர்கள் குறித்துப் பேசக்கூடாது. அதுவும் அவர்கள் மனம்(?) நோகப் பேசக்கூடாது, என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.

நம் தோழர்களும் வகுப்பு முடித்து வந்து விடுவார்கள் பிறகு மீண்டும் அழைப்பார்கள். விளம்பரப் பலகை இரண்டுதான் வைக்க வேண்டும். நான்கு வைக்கக்கூடாது, ஒலிபெருக்கி நான்குதான் வைக்க வேண்டும். எட்டு வைக்கக் கூடாது. என ஏதோ மாலத்தீவில் கூட்டம் நடத்துவது போல பேசுவார்கள். திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட வளைவு (ஆர்ச்) வைக்க அனு மதிக்க மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால், வளைவை யாராவது எரித்துவிட்டால் என்ன செய்வது? எனக் காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். என்ன செய்வது? என்கிற காவல்துறையினரின் வார்த்தை இன்றுவரை நமக்குப் புரியவில்லை.

சிறீரங்கத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறார்கள், மனசு வலிப்பதாய் துடிக்கிறார்களே! அரங்கநாதர் கோயிலில் தினமும் விழாக்கள் நடத்துகிறீர்களே? அதை நிறுத்த வேண்டும் என நாங்களும் புகார் செய்யவா? சமஸ்கிருதத்தில் பொய், பொய்யாய் உளறி, எங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறீர்களே... அதற்கும் சேர்த்துக் கிரிமினல் புகார் கொடுக்கலாமா? அவ்வாறு புகார் செய்தால் காவல்துறை அதை ஏற்றுக்கொள்ளுமா? அதன் மீது நடவடிக்கை எடுத்து, பார்ப்பனர்களையும், ஆன்மீகத் தமிழர் களையும் திருத்தி நல்வழிப்படுத்துமா?

தமிழ்நாட்டில்தான் திருவண்ணாமலை இருக்கிறது. ஆன்மீக ஊர் என்கிறீர்கள். பழனி இருக்கிறது, மேல்மருவத்தூர், கும்பகோணம் இருக்கிறது. அங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் வருவதில்லையே? சிறீரங்கம் மட்டும் என்ன கைபர், போலன், கனவாய் அருகிலா இருக்கிறது? எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் கொஞ்சம் அதிகம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வார்களா?

தமிழ்நாட்டின் மொத்தப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தும்கூட பெரியாரை, அவரது இயக் கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, தெரிந்து கொள்ளுங்கள். ஆணவத்தில் கூறவில்லை! நியாயத் தில் கூறுகிறோம்!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் எங்களால் எதிர்கொள்ள முடியும். உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நேர்மை வழி நடக்கிறோம்! எங்கள் செயல்களுக்குப் பின்னால் சூழ்ச்சி கிடையாது, வன்முறை கிடையாது, சமூகக்கேடு கிடையாது, மனித அழிவு கிடையாது. ஆனால் அத்தனையும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கிறது. அதை எதிர்த்த பயணம் தான் எங்களின் போராட்டங்கள்! எங்களின் நிகழ்ச்சிகள்!

நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்! ஒருபோதும் களைத்து ஓயமாட்டோம்! காரணம் எங்கள் பயிற்சியாளர் பெரியார்!!

தமிழ் ஓவியா said...


இந்தியா சட்டசபையும் -சென்னை பிராமணர்களும்


ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியார்கள் இந்தியா சட்டசபைத் தேர்தலுக்கு அபேட்சகர்களை நிறுத்தி யாய் விட்டது. அதாவது, மூன்று ஸ்தானங் களுக்கும் மூன்று பிராமணர்களையே நிறுத்தியாய் விட்டது. அவர்களின் பெயர்களாவன:-

1. வி.வி.ஜோகைய பந்துலு

2. டி.பிரகாசம் பந்துலு

3. சி.துரைசாமி அய்யங்கார்

முதல் இரண்டு பேர்களும் தெலுங்குப் பிராமணர்கள்; மூன்றாவதவர் தமிழ் அய்யங்கார் பிராமணர். ஆக மூன்று பேரும் பிராமணர் களேயாவார்கள். ஆந்திரா தேசம் சுமார் 10 ஜில்லாக்களையுடையது. இதில் நூற்றைம்பது லட்சம் ஜனங்களுக்கு மேல் மகமதியரல்லாத வர்கள். அதாவது (பிராமணரல்லாத) இந்துக்கள்.

இந்த ஒன்றே முக்கால் கோடி பிராமணரல் லாதவர்கள் அடங்கிய சமுகத்தில் இந்தியா சட்ட சபைக்கு அபேட்சகராய் நிற்பதற்கு ஒரு பிராமண ரல்லாதார்கூட கிடைக்கவில்லை என்றால், அதாவது இந்தியா சட்டசபைக்கு நிற்க ஒரு பிராமணரல்லா தாருக்குக்கூட யோக்கியதை இல்லை என்றால் இவர்கள் சுயராஜ்யம் அடைய எப்படி யோக்கியதை உடையவராவார்கள்? மகமதியர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், பிராமணரல்லாத இந்துக்களில் மாத்திரம் யோக்கியதை உடையவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். காரணமென்ன? மகமதியர் களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்களில் யோக்கியதை உள்ளவர்கள் இருக்கிறார்கள். பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித் துவம் இல்லை.

அதனால் அவர்களில் யோக்கியதை உடைய வர்கள் இல்லை. இதுதான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தொலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தனது தொண்டையைக் கிழித் துக் கொள்ளத் தயாராயிருக்கும் ஸ்ரீமான் முத லியார் அவர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

இனி தமிழ்நாட்டின் கதி எப்படி இருக்கிறதோ! இன்னும் தெரியவில்லை. ஆனாலும் சென்னைக்கு ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் செங்கல்பட்டு, தென்னாற்காடு இவைகளுக்கு ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரியா, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் இவைகளுக்கு ஸ்ரீமான் சேசஅய்யங் கார்; இவரில்லாவிட்டால் வேறு ஒரு அய்யங்கார்; தஞ்சை, திருச்சி இவைகளுக்கு ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார்.

கோயமுத்தூர், சேலம், நீலகிரி இவைகளுக்கு ஸ்ரீமான் ஆர்.கே.சண் முகஞ் செட்டியார் பேர் அடிபடுகிறது. ஆனபோ திலும் கலியுகக் கர்ணனான ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காருக்கு கோயமுத்தூர் ஜில்லாவில் சென்னை சட்டசபைக்கு ஓட்டுக் கிடைக்காது. ஸ்ரீமான் இரத்தின சபாபதி முதலியார் ஜெயித்து விடுவார் என்கிற சந்தேகம் வருமானால் ஸ்ரீமான் செட்டியார் பாடு ஆபத்துதான்.

சுயராஜ்யக் கட்சியில் இருந்து விலகியாவது இன்னொரு 2, 3 லட்ச ரூபாய் தர்ம விளம்பரம் செய்தாவது இந்தியா சட்டசபைக்கு நின்று விடுவார். அப்புறம் செட்டியார் பாடு மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போக வேண்டி யதுதான். இதன் முடிவு ஸ்ரீமான் சி.எஸ்.இரத்தின சபாபதி முதலியார் கோயமுத்தூர் ஜில்லாபோர்டு பிரசிடெண்ட் எலெக்ஷனில் பெறும் ஜெயம் அல்லது தோல்வியில் அடங்கியிருக்கிறது.

ஆகவே இந்தியா சட்டசபைக்கு தமிழ்நாடு சார்பாக 4 அய்யங்கார் உறுதி, ஒரு அய்யங்கார் சந்தேகம். தமிழ்நாட்டில் இந்தியா சட்டசபைக்குப் போக யோக்கியதை உள்ளவர்கள் அய்யங்கார் ஜாதியார் தானா? பிராமணரல்லாதாரில் எவரும் இல்லையா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் இந்த ஸ்தானங்களுக்குப் பிராமண ரல்லாதார் நிற்காமல் காலியாகி சர்க்கார் நாமினேஷனுக்குப் போய்விடுமா என்று ஸ்ரீமான் முதலியார் அவர்களைக் கேட்கிறோம். சென்னை சட்டசபைக்குப்பற்றி பின்னால் எழுதுவோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 02.05.1926

தமிழ் ஓவியா said...


மாயவரத்தில் மும்மூர்த்திகள்


சில தினங்களுக்கு முன்பாக மாயவரத்தில் மும்மூர்த்திகள் வந்து சபை கூடி ரகசிய யோசனைகள் செய்து முடிவான தீர்மானங்கள் செய்து கொண்டு போயிருக்கிறார்கள். அவர்கள் 1.ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் 2. சட்ட மெம்பர் சர்.சி.பி.ராம சாமி ஐயர் 3. அட்வகேட் ஜெனரல் கனம் வெங்கட்டராம சாஸ்திரியார் ஆகிய மூவரூமேயாகும்.

இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து தற்கால நிலைமை யில் பிராமணர்கள் எப்படி உத்தியோகங்கள் பெறு வது, பிராமண வக்கீல்கள் இனி எப்படி பிழைப்பது, பிராமணரல்லாதார்களை ஏய்ப்பதற்கு வழியென்ன என்று யோசித்து முடிவு செய்துகொண்டு போயிருக்கிறார்களென்றே நினைக்கிறோம். எல்லாம் ரகசியத் திலேயேயிருக்கிறது. குதிரை எப்பொழுது முட்டை யிடுமோ பார்ப்போம்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 02.05.1926

தமிழ் ஓவியா said...


ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே தற்கால அரசியல் முறைக்கு ஏற்றதென்றும், வகுப்புப் பூசலும் சமயச் சண்டையும் கிளம்பாமலிருப்பதற்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் நல்குவதே ஏற்ற மருந்தென்றும் அறிஞர் பலரும் கூறுகின்றனர். சென்ற ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி பெங்களூர் முனிசிபல் சபையார் இத்தகைய சிறந்ததொரு முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அச்சபையில் இனி எவரேனும் ஓர் எஞ்சினீயர் நிய மனம் செய்யப் படுவாரெனின் அவர் பிராமணரல்லாத வராயிருத்தல் வேண்டுமென தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டு பல பார்ப்பனர்களின் எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது. மற்ற நகரசபைகளுக் கெல்லாம் ஓர் வழி காட்டியாய் நடந்து கொண்ட பெங்களூர் நகரசபையைப் போற்றுகிறோம்.

நம் நாட்டிலுள்ள இதர முனிசிபல் சபை, ஜில்லா போர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களும் பெங்களூர் நகர சபையைப் போன்று உத்தியோகம் நியமிப்பதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாடினால் பெரிதும் நலம் பயக்குமென்று கூறுகிறோம்.

நாட்டிலே தற்காலம் வகுப்புப் பகை வளர்ந்து வருவதற்குக் காரணம் சமுக வாரியாக உத்தியோகம் நல்கப்பட வில்லை என்பது பற்றியே யாகும். ஆதலால், தற்காலம் குடிமக்கள் கையிலிருக்கக் கூடிய ஸ்தல ஸ்தாப னங்கள் அனைத்தும் பெங்களூர் முனிசிபல் சபை போன்று சமூக வாரியாக உத்தியோகம் நல்கி சகலரும் ஒத்து வாழ வழி தேடுமென நம்புகிறோம்.

- குடிஅரசு செய்தி விளக்கம் 02.05.1926

தமிழ் ஓவியா said...


புது இறக்குமதி


இந்தியாவுக்குப் புதிதாக ஒரு கவர்னர் உத்தி யோகம், ஒரு லார்ட் பட்டம், ஒரு ரைட் ஆணரபிள் பட்டம் ஆக மூன்று புதுமைகள் இறக்குமதி ஆகி வந்தது. அந்த மூன்றும் பிராமணர்களுக்கே போய்விட்டது.

அதாவது ளு.ஞ.சின்னா, லார்ட் சின்னா, ரைட் ஆணரபிள் சீனிவாச சாஸ்திரி ஆகிய மூன்று பிராமணர்களுக்கும். பிளேக்கோ, இன்புளுவென் சாவோ, எக்ஸ்சேஞ்சு நாணய மாற்றுப் பஞ்சமோ முதலிய புதுவியாதிகள் இறக்குமதி யானால் அது முழுமையும் பிராமணரல்லாதாருக்குத்தான் கிடைக் கிறது. பிராமணரல்லாதாரின் பாக்கியமே பாக்கியம்!

- குடிஅரசு - செய்தி விளக்கம் -02.05.1926

தமிழ் ஓவியா said...


பக்தியால் விளைந்த கொடுமை: நாக்கை அறுத்து கடவுளுக்கு படைத்த சிறுவன்


சத்னா, ஏப்.13- மத்திய பிரதேச மாநிலம் சத்னா அருகே உள்ள பகுமங்கன்வா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், ராகேஷ் குஷ்வானா. இவன் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் தேவி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினான். பின்னர் வீட்டில் உள்ள அன்னை சாரதா தேவி படத்தை வணங்கிக்கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு பிளேடை எடுத்து தனது நாக்கை அறுத்து துண்டாக்கி, தேவி படத்தின் முன்பு வைத்து விட்டான். இந்த காட்சியைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மயங்கி விழுந்த சிறுவன் ராகேஷை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாக்கை அறுத்துக்கொண்டாலும், கையை வெட்டிக்கொண்டாலும் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டுமே தவிர, கடவுள் காப்பாற்றுவார் என்றிருந்தால் உயிரையோ, உடலுறுப்பையோ இழக்கவேண்டி வரும் என்பதுதான் உண்மை.

தமிழ் ஓவியா said...


உங்களுக்கு ஆபத்து நிறைந்த வாழ்க்கையில் உழன்றிட ஆர்வமா?


அப்படி எனில் அறிவியலை மறப்பீர்!


பாலகிருஷ்ணன்
(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்)


இன்றைய அளவில் உலகை இயக்குவது யார்?

அறிவியல் மற்றும் தொழில் வரை யில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான் உலகத்தை இயக்குகிறது.

சுமார் அய்ந்து தலைமுறைகளுக்கு முன்பு,. அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைக்கு நமக்கு இருக் கின்ற வசதிகள் பல இருந்திட வில்லை.

மின்சாரம் இருந்தது இல்லை

குளிர்பதனப் பெட்டி இல்லவே இல்லை.

காற்றுக் குளிர்விப்பு சாதனம் கிடையவே கிடையாது.

பலவிதமான ஊர்திகளைக் கண்டதே இல்லை

தொடர் வண்டி இருந்ததா? இல்லை இல்லை விமானங்கள் யாரும் பார்த்ததே இல்லை. தொலை பேசிகளைக் கனவிலும் கருதியது இல்லை தொலைக்காட்சிப் பெட்டி கள், திரைப்படங்கள் இருந்ததே இல்லை.

டிஜிட்டல் காமிராக்களோ, கணினிகளோ, எதிர் உயிரி மருந்து களோ, ஊசி மருந்துகளோ, நுண் ணுயிரிகள் போன்றவைகள் எல்லாம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தில்லை.

ஜீன்கள் எனப்படும் மரபணுக் களைப் பற்றியோ, டி.என்.ஏக்களைப் பற்றியோ நாம் அறிந்திருக்கவில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்கள் இல்லாமல் இன்றைய உலகம் இயங்க முடியும் என்று நம் மால் கற்பனை செய்ய முடியவில்லை.

இவை போன்ற முன்னேற்றங்கள் எல்லாம் அறிவியலால்தான் தோற்று விக்கப்பட்டன. மனித வாழ்வு முறை வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற மனிதனின் ஆசை அறிவியலால்தான் நிறைவேற்ற முடிந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்ள வேண் டும் என்கிற மனிதநேய அவா, அறி வியலை வளர்த்தெடுக்க உதவியது.

அறிவியல் மனப்பான்மையும், தொழில் புரட்சியும் மனித குல வளர்ச்சியில் அண்மையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஆகும்.

ஆயினும் அறிவியலை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்ற மனிதர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே.

கடுமையான வறுமையிலும், போதுமான உணவும் இட வசதியும் இல்லாத மக்கள் நிறைந்த நாட்டில் நாம் வாழுகின்றோம். ஏன் நம் நாட் டில் ஏழைகள் நிறைந்திருக்கின்றார் கள்? இதை எப்படி நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது? இதுக்கு எல் லாம் காரணம் ஆதிக்க வர்க்கத் தினர்தான் என்பதில் அய்யமில்லை. படிப்பறிவில்லாத மக்களை என் றும் படிப்பறிவு இல்லாதவர்களாக வைத்திருக்கவே நம்முடைய அரசி யல்வாதிகள் விரும்புகின்றார்கள். அப்பொழுதுதான் அவர்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று நினைக்கின்றார்கள்.

கேரளா, தமிழ்நாட்டில், முதி யோர் கல்வி நூற்றுக்கு நூறு வளர்ச் சியடைந்துள்ளது. ஆனால் மற்ற மாநி லங்களில் அவ்வாறு இருக்கவில்லை.

மக்களின் வறுமைக்குக் காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த கர்மம் தான் என்று தலைவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். அது அவர்களின் விதி என்றும், அவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது என்றும் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

ஒவ்வொன்றிற்கும் நாங்கள் முற்பிறவியில் செய்திட்ட வினைதான் காரணம் என்று நம்புவதால், பல ஏழைகள் கல்வியில் கவனம் செலுத்துவதில்லை.

மக்கள் அனைவரும் கல்வி கற்று விட்டால், தங்களுக்கு ஆபத்து என்று அரசியல் கட்சியினர் நம் பிக்கை கொண்டுள்ளனர். அதனால் தான் ஏழைகளின் கல்வி வளர்ச்சியில் அரசியல் கட்சியினர் அக்கறை காட்டுவதில்லை.

சமீபத்தில் அசாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாய், தான் கூறிய கருத்துகளால் இச்சிக்கலில் மாட்டிக் கொண்டார். அசாம் மாநிலத்தில் முஸ்லீம்கள் கல்வி அறிவு இல்லாமல் இருப்பதால், மக்கள் தொகை பெருக்கமடைகிறது என்பதுதான் அவர் கூறிய கருத்து.

தமிழ் ஓவியா said...

அவர் கூறியது உண்மைதான். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் கல்வி அதிகம் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதே உலக ளாவிய கருத்தாக உள்ளது.

ஆனால் முசுலிம் தலைவர்கள், தருண் கோகாய் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு முசுலீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பவோம் தங்களின் ஆற்றலை செலவழிப்பதற்குப் பதிலாக, கல்வி வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம். முசுலீம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினரும், கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபடலாம்.

மக்களைக் கல்வி பயிலச் செய்வது மட்டும் போதுமானதல்ல. அவர்களி டத்தில் முறையான அறிவியல் உணர்வையும் வளர்ந்தெடுக்க முயற்சி செய்தல் வேண்டும். தங்களை வறுமை யிலிருந்தும் அழிவிலிருந்தும் பாது காத்துக் கொள்ள அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் பயன் படுத்திக் கொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அணு ஆயுதங்களை தயாரிப் பதற்குப் பதிலாக, அத்தொகையை அடிப்படை கல்வி வளர்ச்சிக்கு அரசு கள் பயன்படுத்த முன்வர வேண்டும்.

அண்மையில், மழைக் கடவுளை திருப்திப்படுத்தி மழையை வரவழைப்பதற்கு கோவில்களுக்கு ஏராளமான நிதியை கர்நாடக அரசு அளித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

மழை எவ்வாறு உண்டாகின்றது என்பதை அறிவியல் அடிப்படையில் நாம் அறிவோம். மேற்கண்ட தொகையை வேறு ஏதாவது பயனுள்ள வழிகளில் செலவு செய்து இருக்கலாம். உதாரணமாக, விவ சாயிகள் அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களை தள்ளுபடி செய்ய பயன்படுத்தி இருக்கலாம்.

காலரா, டைபாய்டு போன்ற நீரின் மூலம் பரவும் நோய்களுக்குப் படுத்திட நவீன மருந்துகளைப் பயன்படுத்தலாம். நீரை கொதிக்க வைத்து பருகச் செய்யலாம். ஆனால் இவற்றை எல்லாம் செய்வதற்குப் பதிலாக, நோயினால் தாக்குண்ட வரை காப்பாற்றிட கடவுளுக்கு பூசை செய்ய வேண்டிய அவசியமில்லை.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் எல்லாம் வல்ல கடவுளை நம்பினார்கள் அவர்தான் இவ்வுலகத்தை தோற்று வித்தார் என்றும், பூமியில் உள்ள உயிரினங் களை உண்டாக்கினார் என்றும் நம்பினார்கள்.

பரிணாம வளர்ச்சி அல்லது படிம வளர்ச்சியின் தந்தையாகிய சார்லஸ் டார்வினை நம்மில் பலர் அறிவோம். அவர் முதன் முதலாக மதப் பிரச்சாரகாரராகத்தான் பயிற்சி பெற்றார். எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில் மத போதகராக நியமிக்கப்பட்டார். அக்கப்பல் உலகம் முழுவதும் சுற்றி வந்தது.

டார்வினுக்கு கடவுள் படைப்பில் தொடக்கத்தில் நம்பிக்கை இருந்தது. உயிரினங்களில் மாற்றங்கள் எவை யும் நிகழ்வதில்லை என்றும் நம்பி னார். ஆனால் அவர் கலாபகாஸ் தீவுக்குப் பயணித்தபோது பலவித மான பறவைகளின் உடலமைப்பை நன்கு ஆய்த்தார்.

உயிரினங்கள் தோன்றி பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன என்ற முடிவுக்கு வந்தார்.

பயணத்தின் மூலம், உயிரினங்கள் தோன்றி பல உருவ மாறுதல்களை அடைந்து புதிய உயிரினங்கள் உரு வாகின்றன என்று நம்பினார். எந்த உயிரினங்களும் உள்ளது உள்ள படியே உருவாக்கப்படவில்லை என்றும் கண்டு கொண்டார். பல மாறுதல்களுக்குப் பின்பே மனித இனமும் உருவாகினது என்ற முடிவுக்கு வந்தார்.

படிம வளர்ச்சி அல்லது பரிணாம வளர்ச்சி என்பது வெறும் கோட்பாடு மட்டுமே என்று உயிர் உருவாக்கத்தில் நம்பிக்கை கொண் டவர்கள் வாதிட்டார்கள். படிம வளர்ச்சியில் உண்மை சிறிதும் இல்லை என்று ஓலமிட்டார்கள்.

ஆனால் டார்வின் அவர்கள் படிம வளர்ச்சி என்பது உண்மையே என்று வாதிட்டார். உண்மை என்று நிறுவியும் காட்டினார்.

படிம வளர்ச்சி என்பது தொடர்ந்தாற்போல நடைபெறும் செயல் முறை. படிம வளர்ச்சி நடை பெற்றே புதிய புதிய உயிரினங்கள் உருவாகின்றன என்று டார்வின் அவர்களால் எடுத்துக் கூறப்பட்டது.

மதங்களைப் போல அறிவியல் பிடிவாதக் கொள்கைகளைக் கொண்டிருப்பதில்லை.

டார்வினுக்குக் கடவுள்மீதுள்ள நம்பிக்கை குறைந்ததற்குக் காரணம் படிம வளர்ச்சி மட்டுமே என்றும் கூற முடியாது.

திடீரென்று ஏற்பட்ட காய்ச்ச லால் அவரின் மகள் இறந்தது. அவ ரின் கடவுள் நம்பிக்கை தளர்ந்ததற்கு ஒரு காரணமாகும். ஒன்றுமறியாத குழந்தையின் உயிரை எடுக்கும் கடவுள் உண்மையில் இல்லை என்றே நம்பினார்.

19ஆம் நூற்றாண்டில் அய்ரோப் பாவில் நிகழ்ந்த இயற்கை பேரழிவு கள் மூலம் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு அனைவரும் வந்தார்கள்.

பூமி அதிர்ச்சி, புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகளால், பல்லாயிரக்கணக்கான மக்களும் குழந்தைகளும் மடிகின்றார்கள்.

எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், இவற்றை எல்லாம் ஒருக்காலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாரே அது எப்படி? எந்த மதவாதியாலும் இதற்குப் பதில் கூற முடியுமா? இவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும்போது கடவுள் இல்லை என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கின்றது. இயற்கைக்கு மீறிய ஆற்றல் கொண்ட எந்தக் கடவுளும் இருக்கவில்லை.

இதுவரை தோன்றிய அறிவியல் அறிஞர்களில் மிகச் சிறந்தவர் அய்ன்ஸ்டீன் அவர்கள் கடவுளை நம்புவது என்பது குழந்தைத்தனமான மூடநம்பிக்கை என்றார்.

ஏழை மக்களின் வறுமை என்பது இயற்கையாக உண்டாகாமல் பல நிறுவனங்களின் செயல்பாட்டினால் தான் உருவாகிறது. எனவே கலாப காஸ் தீவுக்கு கிஞ்சிற்றும் அய்ய மில்லை.

தமிழ் ஓவியா said...


இந்தியா இருண்டது எதனால்?


பிரம்மா மனுஸ்மிருதி சாஸ்திரத்தை உண்டுபண்ணி விதிப்படி பிருகுரிஷிக்கு முன்னர் ஓதுவித்தார். பிறகு ரிஷியும் மஹீசி முதலான ரிஷிகளுக்கு ஓது வித்தார். (மனுநீதி,11 சு.58)

மாதர முபைத்ய கசாரமுபைதி புத்திரார்த்தித
சகமார்த்தி நாபத்திரலோகா நாஸ்த்த
ஸர்வம்பரவேர் விந்து ஹல் தஸ்மாஷ் புத்ரார்த்தம்

மாதரம் ஸீரஞ்சதி ரோஹதி

இதன் பொருள்: புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, மகள், பிள்ளை இவர்கள் யாரோடாயினும் கூடலாம்.

பிராமணன் ருசியுள்ள இறைச்சி மந்திரத்தால் கொல்லப்பட்ட மிரு காதிகளின் மாமிசத்தை புசிக்கலாம். (மனு அத்,315 சு.27, 227)

சிரார்த்தத்தில் விதிப்படி விதிக் கப்பட்ட பிராமணன் மாமிசத்தை தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (மனு அத்.5. சு.35)

சூத்திரன் என்பவன், பிராமணன் இடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், விபச்சாரி மகன், யுத்தத் தினால் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், (மனு அத்.8. சு.415)

இராமன் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். (உத்திரகாண்டம் 110ஆம் சருக்கம்)

இராமனின் மனைவிமார்கள் வேலைக்காரர்களோடு மகிழ்ச்சி அடைவர். மந்தரை கைகேயியிடம் கூறியது. (மன்மதநாத தத்தர் எழுதிய இராமாயணம்) 300 இராமாயணங் களில் இது ஒன்று.
கவுசல்யா சுப்ரஜா ராமா

பூர்வ சந்த்ய ப்ரவசத்து - இது சுப்ரபாதம்.

இதன் பொருள்: கவுசல்யா பெற்ற இராமா, எழுந்திரு. ஆரண்யத்தில் அரக்கர்களின் (தமிழர்கள்) அட்டகாசம் தாங்க முடியவில்லை. நீ உடனே எழுந்துவந்து அந்த அரக்கர் களை (தமிழர்களை) எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டும். இதுதான் சுப்ரபாதம். (சன்முரசு 7.9.2007) நம் முடைய பழைய சாத்திரம் அதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது. (தெய்வத்தின் குரல்-பெரியசங்கராச் சாரி)

கிறித்தவனும், முஸ்லீமும், கடவு ளுக்கு என்று எதையும் படைப்ப தில்லை. அவனும் மனிதன் தான் - வாழ்கிறான்.

ஈ, எறும்பு, பூச்சி முதல் எல்லா ஜீவராசிகளும் தேங்காய், பழம் போன்ற உணவுப் பண்டங்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். கடவுள் படைத்த தேங்காய், பழங்களையும் ஆடு, மாடுகளைப் பலிகொடுத்து ஏமாற்றுவது சரியா? சர்வசக்தி படைத்தவன் கைகளில் வேல், கம்பு, சங்கு, சக்கரம் எதற்கு?

தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியர் அல்லாதவரை குரங்குகள், அசுரர்கள் என்று இராமாயணக் கதையில் உள்ளது (திராவிடர் - ஆரியர் உண்மை) நாரதருக்கும், கிருஷ்ணருக்கும் பிறந்த 60 குழந் தைகளின் பெயரே நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள ஆண்டுகளின் பெயராம். அதை செய்தது மனிதனா? கடவுளா?

சிவனுக்கும், பார்வதிக்கும் திரு மணம் செய்த புரோகிதர் பிரம்மா பார்வதியின் தொடையை பார்த்ததும் வெளிவந்த விந்து சிந்தப்பட்டு அதிலிருந்து ரிஷிகள், இராட்சர், சல்லியன், நசகுனி, மண்டோதரி, பத்மை போன்றவர்கள் பிறந்தது எப்படி?
வசிஷ்டர், நாரதர், வால்மீகி, வியாசர், அகஸ்தியர் போன்றவர்கள் மான், நரி, தவளை, கழுதை, கரடி, கிளி போன்றவைகளுக்குப் பிறந்தனர். இது எப்படி கடவுள் படைப்பாகும்.

செடி, கொடி, பூச்சி, மிருகம், மனிதன் அனைத்தின் பிறப்பும் அது அதுவாகவே இருக்கும். ஆனால் கடவுளின் தலை, தோள், தொடை, கால்களில் பிறந்தவர்கள் அற்புதம் செய்யும் கடவுளைப் போல் அல்லவா இருக்க வேண்டும். ஒரே ரத்தம் கொண்ட இம்மனிதர்களுக்குள் சாதி பேதங்கள் ஏற்படக் காரணம் கடவுளா? மனிதனா? முதலில் பிறந்தது மனிதனா? கடவுளா? மனிதன் தான் என்பதற்கு ஆதாரம் கடவுளுக்கு கல்யாணம் உண்டு, கூத்தி உண்டு, மாமிசம் சாப்பிடும் - சாப்பிடாத கடவுள் உண்டு. சொந்த பந்தம் உண்டு. பூணூல் போடும் - போடாத கடவுள் உண்டு. இவையெல்லாம் மனிதனிடம் உண்டு. மனிதனைப் போலவே கடவுளுக்கும் எல்லா சேஷ்டங்களும் இருக்கிறது என்றால் முதலில் பிறந்தது மனிதனே. மனிதன்தான் இவனைப் போன்ற எல்லாக் காரியங்களையும் கடவுளுக்கு கொடுத்து, ஊடகங்கள், கதை, கட்டுரைகளில் உருவம் படைத்தான்.

இவன் வாழும் வரை குடிக்க கஞ்சி இல்லை. செத்தபிறகு சொர்க்கத்தில் நித்யானந்தம் கிடைக்கும் என்பதாக சொல்லும் புரோகிதம் எந்தளவுக்கு உண்மை.
மரம், செடி, கொடி, பூச்சி, மிருகங்கள் செத்தபிறகு பிறவற்றிற்கு பலவிதங்களில் உதவுகிறது. மனிதனால் யாருக்கு என்ன பயன்?

கடவுளால், மனிதன் வாழ்வதாக கற்பனைக் கதைகளை உருவாக்கி தன்மூலமாகவே கடவுளை பார்க்க முடியும் என்று புரியாத மொழியில் புரோகிதம் செய்வித்து மனிதனை மனிதன் ஏமாற்றுகிறான்.

புரோகிதம் இந்த நாட்டைப் பிடித்த சனியன் - விவேகானந்தர்.

மனிதனை நினை, கடவுளை மற.

கோயிலுக்குள் நுழைந்து தொண்டு செய்கிறவர்கள் இழிகுலத்தவர் என்று மனு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தில் சு.சாமிக்கு மூக்குடைப்பு


சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் செய்தியில் ஆரம்ப காலத் திட்டத்தின்படி, இத்தாலிய கடற்படை வீரர்கள் இந்தியாவிற்குத் திரும்ப மாட்டார்கள்; இத்தாலிய தூதர் நாடு கடத்தப்படுவார்; குடும்பத்தை இத்தாலி நாடு காட்டிக் கொடுக்காது என்று சொன்னார் அதே சமயத்தில் இத்தாலி அரசு தமது கடற்படை வீரர்களை திரும்ப அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.

நான் மட்டும் உச்சநீதிமன்றத் திற்குச் சென்று, இத்தாலிய தூதரை அடக்கி வைக்கவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இருக்காவிட்டால் இன்னேரம்... என்று சுவாமி பரபரக்க, அவரது தொண்டரடிப் பொடி டிவிட்டர், படையினர், தகுதியில்லாத நிலையில், அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு களைக் குவித்துள்ளனர். அதன்படி, சு.சாமியின் புதிய மந்திரக் கதைகளில், அவரின் பொது நல வழக்கு காரணமாகத்தான், உச்சநீதிமன்றம் இத்தாலிய தூதர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததன் விளைவாக இத்தாலிய அரசாங்கம் மண்டியிட்டது என்றெல்லாம் முழங்கி வரும் வேளையில், சு.சாமி யின் வெற்றிப் பவனியின்போது உச்சநீதிமன்றம் வெந்நீர் ஊற்றி விட்டது.

சு.சாமியின்மீது விழுந்த அதிரடி அறை, இத்தாலிய தூதர் இந்த நாட்டை விட்டு செல்லக் கூடாது என்ற தடையை நீக்கியபோது, விழுந்தது.

இத்தகைய தூதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றிய விண்ணப்பம் செய்வதற்கு சுப்பிர மணிய சுவாமி செயல்பட்ட பொழுது, அவருக்கு இந்த அடி விழுந்தது.

தமிழ் ஓவியா said...

டெலிகிராப் பத்திரிகை கூறுவ தாவது:

நீர் யார்? என்று உங்கள் மன்ற முதன்மை நீதிபதி கேட்டார்.

தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வந்துள்ளதாக சுப்பிரமணியசாமி கூறினார். அதற்கு நீதிபதி, நீர் யாரென்று நான் கேட்கிறேன். நீர் ஒரு வழக்கறி ஞரில்லை; ஆகவே இதில் உமக்கு உரிமையுமில்லை; வாதிடவும் உரிமை யுமில்லை. வீதியில் போகிறவர்கள் எல்லாம் வந்து, நான் வழக்காட விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன ஆகும்? இதுபோல இதற்கு முன் நீர் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது

நான் யார் என்று தெரியுமா? என்று கேட்பதன் மூலம் தனது அதி காரத்தை வலியுறுத்திக் கொள்ளும் இந்த நாட்டில், அதுவே மேலும் ஒரு அவமானகரமாக அமைந்து விட்டது.

உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி கபீர் அத்துடன் விட்டுவிடவில்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த சுப்பிரமணிய சுவாமியைப் பின் இருக்கைக்குப் போகச் சொன்னார். முதல் வரிசை வழக்கறிஞர்களுக் கானது; வழக்கில் சம்பந்தப்பட்டவர் களுக்கானது அல்ல; அங்கே உட்கார உமக்கு உரிமை இல்லை என்று சொன்னார்.

சுப்பிரமணியசுவாமி யாரோ ஆகிவிட்டார். முக்கியமானவர்கள் (பத்து) இருக்கையிலிருந்து வெளி யேற்றப்பட்டார்! சதி நடக்கிறது என்று கூக்குரலிட காரணம் கிடைத்து விட்டது. சுப்பிரமணிய சுவாமியும் அதைத்தான் செய்தார்.
இங்கு ஏதோ கூட்டு இருக்கிறது என்று சொல்லிய சாமி வேறு வழியின்றி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதிலிருந்து பெறப்படும் பாடம் என்ன? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திருடாதே; அவர்களுக் குண்டான நீதிக்கான புகழை பிறர் திருட அவர்கள் ஒருக்காலும் விட மாட்டார்கள்

சுப்பிரமணிய சுவாமியோ, தனது நிலைமையின் ஊடுருவலைச் சமா ளிக்க, டிவிட்டரில் பாரத மாதாவின் கவுரவத்தைக் காப்பதற்காக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியிடம் அவ மானப்படுவதை நான் ஒரு பொருட் டாகக் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில், இந்திய உச்ச மன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஊழல் படிந்த பரம்பரையின் பிற்காலத்தை பாதுகாக்க, சுப்பிர மணிய சுவாமியைப் பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திய இருக்கிறதென சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார் என ஆக்ட் இண் டியா கூறியுள்ளது. இரண்டு டிவிட்டர் செய்திகளுக்குப் பிறகு அவர் நேரிடையாக நீதிமன்றத்தைக் குறை கூறியுள்ளார். என்னுடைய நீதிமன்ற அவமதிப்பு விண்ணப் பத்தை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது ஒரு செயலற்ற தன்மையாகும் என்று கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள்மீது அவ தூறு குவிக்கும் தொல்லைக்காரரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ஆபத்து குறைந்த தந்திரத் திட்டம் அவரால் தாக்கப்படும் எந்த நபரும் அவர்மீது மான நஷ்ட வழக்குகளை தொடர் வதில்லை. தொடர்ந்தால் சுப்பிர மணியசாமி ஏங்கிக் கொண்டிருக்கும் கவன வெள்ளம் அவர்மீது பாய்ந்து வரும். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் மூக்கை நீட்டுவது ஆபத்தான விளையாட்டு அதுவும் தனது சட்டத் திறமைக்காக வெளிச் சத்தில் நிற்க விரும்பும் தனி மனித கட்சிக்கு!

உச்சநீதிமன்றம் நினைத்தால், சுவாமியை வெளியே தள்ளுவதற்கோ, உள்ளே வைத்துப் பூட்டுவதற்கோ ஏராளமான சட்டப்படியான வழிமுறைகள் உள்ளன.

உச்சநீதிமன்ற முதன்மை நீதி பதிகள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் அதுவும் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கும் போது; அதை இந்திய ஊடகங்கள் சமீப காலங்களில் அறிந்து வைத்துள்ளன.

ஆனால், தவறான அவமதிப்பு விண்ணப்பங்கள் வந்து, நீதிமன்றம் தன்னிச்சையான விசாரணைக்கு ஆட்படுத்தாத வரை எல்லாக் கதை களையும் டிவிட்டரில் சொல்லும் போது அது நல்ல பொழுது போக்காக இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


தற்கொலைகள்


இந்தியாவில் தற்கொலை செய்த கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குடும்பத் தகராறு, விரக்தி, காதல் தோல்வி, வரதட்சணை கொடுமை, மனைவியின் தொடர் தொந்தரவு, வறண்டு போன விளை நிலம், தொழிலில் நஷ்டம், வேலை இன்மை, தேர்வில் தோல்வி என தற்கொலைக்கான காரணங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உயிரை பலி கொடுக்கின்றனர்.

இந்தியாவில் 2001ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 506 பேர் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். இந்த எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை 2011ஆம் ஆண்டு 15,963 பேர் தற்கொலை செய்து கொண்டு மாநில பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித் துள்ளனர்.

இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கை

ஆண்டு எண்ணிக்கை
2001 1,08,506
2002 1,10,417
2003 1,10,851
2004 1,13,697
2005 1,13,697
2006 1,18,112
2007 1,22,637
2008 1,25,017
2009 1,27,151
2010 1,34,599
2011 1,35,585

இதே கால கட்டத்தில் சென்னையில் 2,438 பேர் தற்கொலைக்கு பலியாகி மாவட்ட பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.

முதல் இடத்தை கேரளா வின் கொல்லம் கைப்பற்றியது.

தமிழ் ஓவியா said...


தெரியாத வரலாறு!
உன் வரலாறு அத்தனையும் தெரியும் எங்களுக்கு!

சிவப்புத் தோல் விரித்தாய்...

விழுந்தவனை அழித்தாய்

மந்திரம் சொல்லி,

மத மயக்கம் கொடுத்தாய்

ஜாதி வலையில் சதி பின்னினாய்

கடவுளென்ற கயமை கற்பித்தாய்

நீ அழித்திடாத அழிவுகளே அரிது

சூழ்ச்சிதானே உன்

சூத்திரம் எதுவும் தெரியாதென்று திரியாதே !

உன் வரலாறு அத்தனையும் தெரியும் எங்களுக்கு...

ஒன்றே ஒன்று புரியவே இல்லை. ஆறறிவு மக்களுக்கே கேடுகள்

பல செய்துள்ளாயே...

நீ மேய்த்தாயே ஆடு, மாடுகள்...

அதற்கு எவ்வளவு கொடுமைகள் செய்திருப்பாய்? -

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே, பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமானுக்கு சமீபமாக இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள் கூர்ந்த பெருமான். தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக்கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29--_31

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே, பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமானுக்கு சமீபமாக இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள் கூர்ந்த பெருமான். தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக்கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29--_31

தமிழ் ஓவியா said...

வடதுருவம், தென்துருவம் ஆகியன எப்போதும் பனியால் மூடப்பட்டுள்ளன - ஏன்?


பூமி உருண்டையாக இருப்பதும், பூமி தனது அச்சில் சாய்வாக இருந்தபடி சுற்றுகிறது என்பதும் இதற்குக் காரணம்.

சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து படும்போது சூடு உறைக்காது. அதுவே செங்குத்தாக வந்து விழும்போது வெயில் வாட்டும். காலையில் சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து விழுவதாலும், காற்று மண்டலத்தின் வழியே அதிகத் தொலைவு கடக்க வேண்டியிருப்பதாலும் காலையில் வெயிலின் கடுமை தெரியாது. மதிய வேளையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக வந்து விழுவதால் வெயில் உறைக்கிறது.

பூமி கோள வடிவில் உள்ளதால் தெற்கு, வடக்குத் துருவங்களில் சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து விழுகின்றன. இரு துருவப் பகுதிகளிலும் சூரியன் ஒரு போதும் உச்சிக்கு வருவதில்லை.

மேலும் தென்துருவத்திலும், வடதுருவத்திலும் மாறி மாறி 6 மாதம் பகலாகவும், 6 மாதம் இரவாகவும் உள்ளதால் வடதுருவப் பகுதிகளில் கடுங்குளிர் எப்போதும் நிலவுகிறது. இவை எப்போதும் உறைபனி படிந்தே விளங்குகின்றன.

- க.ம.ரா.கந்தன்

தமிழ் ஓவியா said...

சட்டப் பேரறிஞர்


நம் நாடு சுதந்திரம் அடைந்த சில நாள்களில் அரசியல் நிர்ணய சபை கூடியது. அக்கூட்டத்தில் அரசியல் சட்டத்தை வரைவதற்காக வரைவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தக் குழுவின் தலைவரானார். அவருக்கு உதவி செய்ய உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த எழுவரில் ஒருவர்கூட அம்பேத்கருக்கு உதவி செய்யவில்லை.

ஆனாலும், அம்பேத்கர் தளர்ந்துவிடவில்லை. அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அரசியல் சட்டம் முழுவதையும் தனி மனிதராக இருந்து வகுத்துக் கொடுக்க முயன்றார். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அம்பேத்கர். பல மாதங்கள் கடுமையாக உழைத்துத் திறம்படச் செய்து முடித்தார்.

அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொதுமக்களின் முன்பு வைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபை கூடியது. அரசியல் சட்டத்தின் விதிகள் ஒவ்வொன்றையும் படித்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்டம் மும்முறை படித்து ஆராயப்பட்டது. அப்போது அவரது உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. சட்டச் சிற்பி செதுக்கிய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நியூயார்க் நகரத்திற்கு வரும்படி அமெரிக்கர்கள் அழைத்த அழைப்பினை ஏற்று நியூயார்க் சென்றார் அம்பேத்கர். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு சட்டப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

காலை உணவைத் தவிர்ககாதீர்!


பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே!

நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நன்றாகப் படிப்பது, நன்றாக விளையாடுவது, அளவான நேரத்திற்கு நண்பர் - நண்பிகளுடன் இருப்பது - உரையாடுவது, பிறகு நன்றாகத் தூங்கி எழுந்து, அன்றன்றாடக் கடமைகளைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

பெரியார் பிஞ்சுகளான, உங்களுக்கா சொல்ல வேண்டும்? எள் என்பதற்குள் எண்ணையாக இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களான தேனீக்கள் அல்லவா எம் தங்கங்கள்!

ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு வேண்டுகோளாக சொல்லப் போகிறேன்.

ஏனென்றால் உங்கள மாதிரிப் பிள்ளைகள் அறிவுரை, ஆலோசனை என்றாலே முகம் சுளிக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் வேண்டுகோள் என்றேன்.

சரி தாத்தா விஷயத்திற்கு வாங்க; எங்களுக்குப் பொறுமை இல்லே - உடனே சொல்லுங்க..... அப்படின்னுதானே சொல்றீங்க.

ம் சரி இதோ சொல்றேன் - கேளுங்க பிள்ளைகளே!

உங்கள்ல பலரும் பள்ளிக்குப் புறப்படும்முன் காலை உணவை - சிற்றுண்டியை - (Break fast) சரியாகச் சாப்பிடாமல் உரிய நேரத்தில் அதிகாலையிலே எழாமல், தாமதித்து எழுந்து, உங்கள் அம்மாவைப் போட்டு வதைக்கிறீங்க - சாப்பிடாமலேயே - பஸ் வந்ததும் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நெருக்கிக் கூறி, பட்டினியாகவோ, அல்லது அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு அரக்கப்பறக்க ஓடுகிறீர்கள்!

அது சரியில்லே. சரியேயில்லை.....! ஏன்னா அது உங்க வளர்ச்சியை ரொம்ப ரொம்பப் பாதிக்கும்.

உடல் வளர்ச்சியை மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி, வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்டு உள்வாங்கி மனதில் பதியவைப்பதற்கு - காலை உணவைத் தவிர்த்தல் உதவவே உதவாது - மாறாக, வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை மூளை ஏற்பதில் சுறுசுறுப்பு காட்ட இயலாது. ஏன் தெரியுமா? நமது உணவு - உங்களுக்குத் தெரியுமா? செரிமானமாகும்போது, அதனைச் சர்க்கரையாக மாற்றித்தானே நமது மூளையை இரத்த ஓட்டத்தின் மூலம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

காலை உணவை - முதல்நாள் இரவோ, மாலையோ சாப்பிட்டு பொழுது விடிந்து எழுந்தவுடன், வயிறு மிகவும் காலியாகி இருக்கும். அதனை நன்கு உண்டு நிரப்புவது அவசியமோ அவசியம்! தெரிகிறதா தம்பிகளே, தங்கைகளே?

ஒழுங்காக காலைச் சிற்றுண்டி உணவை, சரியாகச் சாப்பிட்ட பல பள்ளிக் குழந்தைகள் நல்ல நினைவு வன்மை - Memory - ஏற்படுவதால் பாடங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல முறையில் உள்வாங்கி, மனதில் நிலைநிறுத்த முடிகிறது.

எனவே, நீங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு காலை உணவை ஒழுங்காக நல்ல முறையில் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்; நன்றாகப் படிக்கவும், தேர்வில் ஏராளமான மதிப்பெண் பெறவும், வீட்டில் தாய், தந்தை மகிழும் நிலை உங்களுக்கு ஏற்படும் - செய்வீர்களா செல்லங்களே,,,,,,,!

அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

தோல்வியா? துவளாதீர்!


-சிகரம்

ஓர் உண்மையைச்- சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். நாம் தோல்வி என்று நினைப்பது, சொல்வது எல்லாம் முழுக்க முழுக்கத் தப்பு.

ஒரு மாமரத்தில் தொங்கும் மாங்காயை அடிக்க ஒருவன் கல் விடுகிறான். மாங்காய் விழவில்லை. கல் குறி தவறிச் சென்றுவிட்டது. இது தோல்வியா?

அடுத்தமுறை ஒரு கல் விடுகிறான், மாங்காய் விழுந்துவிட்டது. இது வெற்றி என்போம். மாங்காய் அடித்ததில் வெற்றி, தோல்வி என்று இரு முடிவுகள் எப்படி வரமுடியும்? ஆக, நாம் நினைப்பதில் தப்பு உள்ளது என்பது புரிகிறதா? ஆம். உண்மையில் தப்புதான்.

முதல் கல்லில் மாங்காய் விழாதது தோல்வி அல்ல. -நிறைவேறாமை என்பதே உண்மை. முதல் முயற்சியில் இலக்கு நிறைவேறவில்லை.

இரண்டாவது முயற்சியில் இலக்கு நிறைவேறியது என்பதே உண்மை. மாறாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. நாம் முதல் முயற்சியில், இரண்டாம் முயற்சியில் அல்லது சில முயற்சிகளில் ஒரு செயல் நிறைவேறவில்லையென்றால் அதைத் தோல்வி என்கிறோம்.

தோல்வி என்றால் வெற்றிபெறவே முடியாது என்பது மட்டுமே-! வெற்றிபெற வாய்ப்புள்ள எதற்கும் தோல்வியில்லை-! விண்வெளிக்கு ராக்கெட் ஏவியதும் வெடித்துச் சிதறியது. அது தோல்வியா? அடுத்தடுத்து ஏவி செவ்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்டோமா! தோல்வியென்றால் விண்வெளிப் பயணமே முற்றுப் பெற்றுப் போயிருக்கும். அடுத்தடுத்த முயற்சி வந்திருக்காது.

எனவே, முயற்சிக்கு வாய்ப்பு உள்ள எச்செயலுக்கும் தோல்வியில்லை. முடியவே முடியாது என்ற முடிவு மட்டுமே தோல்வி-! முயற்சியின் முனைப்பில் தோல்வி முடிவாவதில்லை; முயற்சிகளின் முடிவிலேதான் தோல்வி உறுதியாகிறது. எனவே, முதல் முயற்சி நிறைவேறாதது தோல்வியென்று எண்ணித் துவளுவது அறியாமையாகும்.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க வேண்டியவர்கள். எதிர்காலத்தை வடிவமைத்து, நாளைய உலகை நடத்திச் செல்ல வேண்டியவர்கள். எனவே, இதை நன்றாக மனதிற்கொண்டு, முயன்றால் முடியாதது இல்லை; இயலாது என்பது முட்டாள்களின் முடிவு என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

அதேபோல் வெற்றியென்பது நிரந்தரமானது அல்ல. ஓட்டப்பந்தயத்தில், கிரிக்கெட் விளையாட்டில், அம்பு எய்வதில் என்று எந்தப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்த போட்டியில் தோற்கிறார்கள். ஒருமுறை 100 ஓட்டங்கள் பெறும் வீரர், அடுத்தமுறை 2 ஓட்டங்களில் வெளியேறுகிறார். இவர்களெல்லாம் வெற்றிவாய்ப்புக் கிட்டாதபோது (கிடைக்காதபோது) துவண்டால் சாதிக்க முடியுமா-?


தாமஸ் ஆல்வா எடிசன்

மின்சார பல்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி முதல் பலரும் பலமுறை முயன்றே வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் வழிகளில் முயன்றே இறுதியில் மின்சார பல்பு ஒளிர வழிகிடைத்தது என்பதை உணர்ந்து பிஞ்சுகள் நெஞ்சு நீதியுடன் நிமிர்ந்து நின்றால், வாழ்வில் ஒளிரலாம், உயரலாம்-!

அதேபோல் மாணவர்கள் இன்னொரு கருத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒரு செயலில் சாதிக்க முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்க முடியாது என்பது இல்லை. படிப்பில் உயர்நிலை எட்ட முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்கலாம்.


இராபர்ட் கிளைவ்

இராபர்ட் கிளைவ் சிறுவயதில் படிக்கமாட்டார். அளவற்ற குறும்பு செய்வார். அவரது செயல்களைப் பொறுக்கமுடியாத அவரது பெற்றோர், இராணுவத்தில் சேர்த்தனர். அப்படி உருப்படாதவன் என்று துரத்தப்பட்ட இராபர்ட் கிளைவ்தான், ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் வேரூன்ற -- நிலைக்க வழிசெய்தார்.


கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் மூன்று முறை பள்ளி இறுதித் தேர்வு எழுதித் தோல்வியுற்றார் (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அவர்தான் இலக்கிய மேதையாக, எத்தனையோ திரைப்படங்களுக்கு எழுத்தாளராய், அரசியல் விற்பன்னராய், தலைசிறந்த நிர்வாகியாய், பேச்சாளராய், கவிஞராய் பன்முகத்திறன் பெற்று, அய்ந்து முறை தமிழக முதல்வராயும் ஆனார்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாதிப்பதைவிட, சராசரியாய் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான், எதிர்காலத்தில் உயர்நிலையை எட்டி பல்திறன் பெற்று பளிச்சிடுவதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே, தோல்வியில் துவளாமல், தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டும்! சரித்திரம் படைக்க வேண்டும்-!

தமிழ் ஓவியா said...

வருஷப் பிறப்பை கொண்டாடலாமா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்கு கண்ணன், நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு, நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்! என்றனன்.கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.-------------------------------------(ஆதாரம்: அபிதான சிந்தாமணி)இவ்வளவு கேவலமான, ஆபாசமான, அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடு பவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது? குறிப்பு: கேவலமான, ஆபாசமான, அறிவுக்கு பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பாக இருப்பதால்தான் தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் தலைமையிலான அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இருந்தாலும் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி பழைய ஆபாச வருஷப்பிறப்புக்காகச் சிறப்பிதழ் வெளியிடுவது வெட்கம்! மகா வெட்கம்!!

11-4-2010

தமிழ் ஓவியா said...


அந்த மாமனிதர் அம்பேத்கர்!கிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய்; தாழ்ந்து

கிடந்தமக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ!

விழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும்; பேச

வாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும்; வாழ

வழியின்றி ஆண்டாண்டாய் ஒடுக்கப்பட்டு

வறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்

எழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த

இருள்முழுதும் விலகியதோ? இன்னும் இல்லை!

பிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்

பன்றிகட்கும் நாய்களுக்கும் கீழாய் சொந்தத்

திருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்;

தீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்!

அரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்

அழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்!

திரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்

துயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்!

அறியாமை எனும்இருட்டில் கிடந்தும்; ஜாதி

ஆதிக்கத்தின்பிடியில் உழன்றும்; கூட்டில்

சிறைப்பட்டப் பறவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்

கேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப்பட்டும்

தரித்திரராய் வாழ்ந்துமடிந் தழிந்தார்! தங்கற்

தலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி

உரிமையொடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்

உண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை!

ஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க

உயர் ஜாதி மக்களாலே மறுக்கப் பட்டார்!

சேரி மக்கள் தொட்டுவிட்டால் தீட்டாம் என்றே

தெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப்பட்டார்!

வேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு

மற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்

சீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்துத்

தவித்தார்கள்! அவர்களையார் நினைத்துப் பார்த்தார்?

பள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து

படியேற நினைக்கையிலும் உதவி டாமல்

தள்ளிவிடப் பட்டார்கள்! கல்வி என்னும்

தருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்!

எல்லார்க்கும் பொதுவென்னும் கோயிலுக்குள்

இம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை!

கல்லாக இருக்கின்ற காரணத்தால்

கடவுள்களும் கண் திறந்து பார்த்ததில்லை!


ஜாதிமதத்தின் பேரால் கடவுள் பேரால்

தன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்

நீதிபெற முடியாமல் பட்ட துன்பம்

நிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே

நாதியற்றும் நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்

நிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்!

ஆதிநாளின் கொடுமை இன்று இவையென்றாலும்

அடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை!


செந்தாமரைசேற்றில் மலர்ந்த தைப்போல்

தோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்

வந்துபிறந் தாயேஇச் சமுதாயத்தில்!

விடிவெள்ளியாய் உன்னைக் காண்ப தற்கு

நொந்துதவம் செய்தாரோ அந்த மக்கள்!

நெடுவாழ்வின் துயர்போக்கும் மருந்தே நீதான்!

இந்தபிறப்பில் மட்டும் இன்றி என்றும்

இறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே!- கா. முருகையன்

சென்னை -72