Search This Blog

2.4.13

பெரியாரும்-உடுமலை நாராயணகவியும்

உடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்உடுமலையாரின் பிறப்பும் - வாழ்வும்:

அன்னைத் தமிழகத்தின் கொங்கு நாடாய்ப் போற்றப்பெறவது கோவை மாவட்டம். அங்கு உடுமலைப்பேட்டை வட்டம், பூவிளைவாடி (தற்போது பூளவாடி) என்னும் சிற்றூரில் திருவள்ளுவராண்டு 1930 (25.09.1899) இல் பிறந்த நம் உடுமலையாரின் தாயார் பெயர் திருவமை, முத்தம்மாள்; தந்தையார் பெயர் திருவமை. கிருட்டிணசாமி ஐயா, உடுமலை நாராயணகவியாருக்குப் பெற்றோரிட்ட பெயர் நாராயணசாமி. சாதிப் பெயர்களைப் பின்னொட்டாகப் போட்டுப் பெயர்களை எழுதும் ஓர் தீய வழக்கம் வெகுவாகப் பரவியிருந்த அக் காலக் கட்டங்களில் பகுத்தறிவுச் சுடராக ஒளிர்ந்த நம் உடுமைலையார் அவர்கள், சாதியால் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் தாம் பாடலியற்றும் தொழிலால்தான் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் கருதியே தம் பெயருக்குப் பின்னால் கவி என்னும் பின்னொட்டைச் சேர்த்து நாராயணகவி என்று தன்னைக் குறிப்பிடச் சொன்னார். உடுமலைப் பேட்டை எனும் தன் ஊரின் பெயரை முன்னொட்டாகக் கொண்டு உடுமலை நாராயணகவி என அன்போடு அழைக் கலானார்.

தந்தை பெரியாரைப் பின்பற்றி வந்தவர் தாம் நம் உடுமலை நாராயணகவியாரும். அவர்தம் பாடல்களில் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் பரந்துபட்டுக் கிடக் கின்றன. அவரே தந்தை பெரியார் பற்றி எழுதிய பாடலும் உள்ளது.

இழிவை நீக்கும் ஈ.வெ.இராமசாமி என்ற 
எங்கள் தந்தை உண்மைப் பெரியார்

பல்வகைக் குமுகாயநலப் பாடல்களை எழுதியிருந்தாலும் நாராயணகவியாரின் பாடல்களில் பகுத்தறிவுக் கருத்துள்ள பாடல்களே பெருமளவில் இருக்கின்றன.

பகுத்தறிவுக் கொவ்வாத
பஞ்சாங்கப் பாடைதனைப் பார்ப்பனர்கள் சரிபாதி
பாய்ச்சி விட்டனர்...

மூடநம்பிக்கை மறுப்பு

அறிவினாலும் அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மாந்தர் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள்மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூட நம்பிக்கையே.

ஆகூழ் (அதிர்ஷ்டம்), ஓகம் என்னும் பெயரில் குமுகாய மக்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கைகள் பெருமளவு, ஆகூழைக் காரணங்காட்டியே உழைக் காமல் சோம்பேறிகளாக உள்ள மாந்தரும் நிறையப் பேர் உள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே உடுமலையார்,

ஆளை ஏய்ச்சுத் தின்பார் எல்லாம்
வேலை செஞ்சே தீரணும்

என்ற தம் பாடல் வரிகளில் மூட நம்பிக்கைக்கு வேட்டு வைக்கிறார்.

கடவுள் மறுப்பு:

திராவிடக் கருத்துகளின் வழித் தோன்றலான நம் உடுமலையாரின் பாடல் களில் கடவுள் மறுப்புக் கொள்கையும் வெளிப்படையாகக் காணப்படுகிறது.
காலஞ் செய்கிறதைக் கடவுள் செய் யாதென்று கவனத்தில் வையுங்கடா...
கடவுள் நம்பிக்கைக்காரரால் கல்விக் கடவுள் என்று சொல்லப் பட்டு வரும் கலைவாணி, தன் கணவன் நாக்கில் குடியிருப்ப தாகச் சொல்லப்படும் வடிகட்டிய மூடத்தனத்தைத் தனக்கே உரிய நகைச் சுவையுணர்வுடன்...

மறையவன் நாவிலவள் உறைவது நிசமானால்
மலசலம் கழிப்பது எங்கே? எங்கே? என்று பகடி செய்கிறார்.

சாதி மறுப்பு:

மண்ணுலகில் ஆண் சாதி, பெண் சாதி என்னும் இரண்டு சாதி தவிரப் பிரி வினை செய்யும் பிறசாதிகள் இல்லை யென்றும், அப்படிப் பிரிவினை செய்வதால் வாழ்வில் நன்மையில்லை என்றும் கூறுகிறார்....

பெண்ணும் ஆணுமெனப் பிறந்த சாதியது
மண்மேல் ரெண்டுதான் வேறில்லை

என்று சாதிமறுப்பை வலியுறுத்திப் பாடுகிறார்.

மத மறுப்பு:

சாதிமத பேதம் இல்லாமலே
தன்னலம் எண்ணாமலே மேலாம்
நாடு செழித்திடவும் நாடு...

என்பதன் மூலம் நாடும் நாட்டு மக்களும் தாழ்வடையாமல் உயர்ந்து விளங்கித் தழைத்தோங்கிடத் தன்னல மின்றி, சாதி - மத வேற்றுமையின்றி வாழ வேண்டும் என்கிறார்.

உடுமலை நாராயண கவியார் பாடல் களில் பொதுவுடைமை உணர்வுகளும் ஏழை, எளியோர் மீதான இரக்க உணர்வும் தேங்கியுள்ளன.

மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது
அந்தக் காலம்
மடமை நீங்கிப் பொதுவுடைமை கோருவது
இந்தக் காலம்...

இதில், அந்தக் காலம் போல் பிறரை ஏய்த்துப் பிழைக்காமல் பொதுவுடைமை வேண்டும் இக்காலத்தில் என்கிறார்.

பெண்ணியம்:

ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல்களில் பெண்களை ஆண்கள் பேய்கள் என்றும் குரங்குகள் என்றும் இழிச்சொல், பழிச்சொல் கூறி நடத்தி வந்தனர். அப்படிப் பழிக்கும் ஆண்களுக் கெல்லாம் பெண்களைத் திருமணம் செய்வித்து அவர்களுக்குப் பெண்ணின் பெருமையை உணரச் செய்வதாக,

பெண்குலத்தைப் பேய்கள் என்ற பித்தர் தம்மையே பெண்டு
பிள்ளைக்குட்டி உள்ளவராய்
மாற்றி விடுவோம்...
அறிவியல் பார்வை:

குழந்தைப் பேறு வேண்டி மக்கள் அந்தக்காலம் போல் காசிக்குப் போகாமல் அறிவியல் கண்டுபிடிப்பில் உருவான ஓர் ஊசியைப் போட்டாலே போதும் என்பதைத் தான் பாடலில் உணர்த்துகிறார். குடும்பக் கட்டுப்பாட் டுத் திட்டத்தைத் தம் பாடல்வழி வலி யுறுத்திய பெருமை உடுமலையாரையே சாரும். அறிவியலை ஏதோ மேலோட்ட மாகப் பாராமல் அறிவியலின் வளர்ச் சியை ஒவ்வொரு படிநிலையாக ஆழமாக விரித்துரைத்துள்ளார். குழந்தைப் பேறின்மை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அது குறித்த மூட நம்பிக்கைகளை விட்டொழித்துவிட்டு, அறிவியலின் வளர்ச்சியைப் பயன்படுத்தி அக்குறைபாட்டை அகற்ற வலியுறுத்து கிறார்.

காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு - இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகும் என்ற
உண்மை தெரிஞ்சு போச்சு

என்று மூடத்தனத்தை விடச் சொல்லி அறிவியல் நோக்கில் காட்டுகிறார் உடுமலையார்.

இலக்கிய நயம்:

படைப்பாளிகளின் படைப்புத் திறனை அளந்தறிவதற்கு அவர்தம் உவமைகள் மிகச் சிறந்த அளவு கோல்களாய் அமைகின்றன. உடுமலையாரின் உவமை களைக் கொண்டு அவரின் படைப்புத் திறனை அளக்கும்போது அவர் இலக் கிய வானில் உயர்ந்து விளங்குகின்றார். உடுமலையார் பாடல்களில் உவமை உத்தி, பல்வேறு இடங்களில் மிளிர் கிறது. வானத்து நிலவைப் பெண்ணின் முகத்திற்கு ஒப்பிடுகின்றார். அதில் அவள் கண்களை மீன்களாக உவமைப் படுத்துகின்றார்.

வெண்மதித் துண்டொன்றில் வில்லிரண்டும் கெண்டை
மீன்களிரண்டும் கண்டேன்...

இறப்பு:

புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார், தம் 82 ஆம் அகவையில் - தி.பி.2012 (23.05.1981) இல் உயிர்துறந்தார். அவர்தம் இறப் பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்த பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்துள்ளார். அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனி மேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண் டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன் றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வி யிலே மேன்மை இது போதுமானது. இது தவிர வேறு எதையும் செய்யா தீர்கள். இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங் களுக்கு ஆளாகி, என்பின்னோர்க்கு (வாரிசு களுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்து விட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை விணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!

 என்று எழுதிவைத்துள்ளார். காலத்தை வென்ற - வரலாற்றுப் புகழ் மிக்க எண்ணற்ற பாடல்களை எழுதி, தமிழ்க்குமுகத்திற்கு விழிப் புணர்வை ஊட்டிய உடுமலை நாராயண கவி யாரின் மறைவு நமக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பாகும்.

----------------------------த.அருள்சோதி - (நன்றி: புதிய புத்தகம் பேசுது, பிப்ரவரி 2011)

7 comments:

தமிழ் ஓவியா said...


ஓ, முரளிதரனா!


அய்.பி.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதியில்லை என்று முதல் அமைச்சர் அறிவித்தாலும் அறிவித்தார்; சில சர்ச்சைகளை எழுப்பியது.

இலங்கை அணியில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்தையா முரளிதான். உலகளவில் சாதனைகளை நிகழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் அவர்.

இவ்வளவு திறமை இருந்தும். இலங்கை அணியின் துணைத் தலைவர் (கேப்டன்) பொறுப்பில்கூட நியமனம் செய்யப்பட்டதில்லை. காரணம் அவர் தமிழர்.

மாமனார் வீடு சென்னையில் இருந்தும் என்ன? உள் நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை - சென்னையில் மட்டும் உரிமை கொண்டாடி என்ன பயன்?

தமிழ் ஓவியா said...


மோடி முன்னிறுத்தப்படுவதன் முக்கிய நோக்கம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோதிடம் பார்த்து, நல்ல நாள், நல்ல நேரத்தைப் தேர்ந்தெடுத்து பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் பிஜேபிக்கான நிருவாகிகளின் பட்டியலை வெளியிட்டு விட்டார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கருத்துத் தானங்களை ஏடுகள் வாரி வழங்க ஆரம்பித்து விட்டன.

மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அரசல் புரசலாகக் கருத்துக்களை பிஜேபி வெளியிட்டு வந்ததுண்டு, அதில் மாறுபட்ட கருத்துகளும்கூட பிஜேபிக்குள் இருக்கத்தான் செய்தன.

இந்த நிலையில் மோடி பிஜேபியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமிக்கப்பட்டதால் கிட்டத் தட்ட அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற இடத்துக்குக் காய் நகர்த்தப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு வீரராக தம்மை முன்னி றுத்திக் கொண்டு கடைசியில், தானே ஊழலில் சிக்கிக் கொண்ட யோகக் குரு என்ற அழைக் கப்பட்டு வரும் ராம்தேவ் சபாஷ்! மோடிதான் பிரதமருக்கான சரியான வேட்பாளர் என்று கை தட்டி வரவேற்றுள்ளார்.

இதற்கிடையில் விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான பீரவீண் தொகாடியா குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்; வரும் 2015ஆம் ஆண்டுக்குள் குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களிலும் வி.எச்.பி. கிளைகள் தொடங்கப்பட்டு, அதற்குப்பிறகு இந்து மாநிலமாக குஜராத்தை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமன் கோயிலை பிரம்மாண்ட மாக கட்ட வேண்டும்; வருங் காலத்தில் ஒட்டு மொத்த உலகமே இந்துக்களைப் பின்பற்றப் போகிறது என்று தனது நம்பிக்கைகளைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதச் சார்பின்மை என்பது ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்படும்; ஹிந்து ராஜ்ஜியம் உருவாக்கப்படும் என்பதை மறைமுகமாக பிரகடனப்படுத்தி விட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஊழல் ஒழிப்பு வீரர் காந்திக்குல்லாய் அன்னா ஹசாரே காங்கிரசை எதிர்த்து ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இவற்றின்மூலம் அப்பட்டமான அடை யாளங்கள் அய்யப்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.

இதில் இன்னொரு தகவலும் முக்கியமானது - கவனிக்கத்தக்கது. பீகாரில் பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது நிதிஷ்குமாரை முதல்வராகக் கொண்ட அய்க்கிய ஜனதா தளம்.

மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர்தான் பிரதமருக்கான வேட் பாளராக வரவேண்டும் என்று நிதிஷ்குமார் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார்.
மோடி ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட இந்த நேரத்தில்கூட, அய்க்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் அழுத்தம் திருத்தமாக தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார். மதச் சார்பற்றவரே பிரதமராக வேண்டும் என்று அழுத்திக் கூறி இருக்கிறார்.

மோடி பிரதமருக்கான வேட்பாளராக பிஜேபி யால் அறிவிக்கப்படும்பொழுது மதச் சார் பின்மையா? ஹிந்து ராஜ்யமா? என்ற கேள்வி இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கும்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தின் - கொள்கையின் அருமை அப்பொழுதுதான் புரியப் போகிறது - பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 2: ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்


ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

சென்னை, ஏப். 2- மனவளர்ச்சி... மூளை வளர்ச்சி குறைபாடுகளை போல, ஒரு விதமான வளர்ச்சி குறைபாட்டுடன் (ஆட்டிசம் பாதிப்பு) குழந்தைகள் பிறக்கின் றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதி கரித்து கொண்டே வருகிறது.

ஆட்டிசம் பாதிப்பு குழந் தைகளுக்காக 2007ஆம் ஆண்டு அய்நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஆட்டிசம் பாதிப் புடன் குழந்தைகள் பிறப்பதற் கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியை ஆட்டிசம் விழிப் புணர்வு தினமாக அறிவித்தது.

இதுக்குறித்து ராயப்பேட்டை ஸ்கோப் மறுவாழ்வு மைய இயக்குநர் பா.சுகுமார், வி.கேன் ஆட்டிசம் பள்ளி இயக்குநர் கீதா ஆகியோர் கூறியதாவது:

ஆட்டிசம் ஒரு நோயல்ல; வளர்ச்சி குறைபாடுதான். இது பிறவியிலேயே வரக்கூடியது. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை, அதன் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்து ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கலாம். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மட்டும் 40, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன. இதேபோல தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டி சம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளை நடத்துகின்ற னர். ஆனால், அரசு மருத்துவ மனைகளில் தனியாக ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை பிரிவு என்பதே இல்லை. ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளையும் நடத்தவில்லை.

அதனால், அரசு மருத்துவ மனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அந்த பிரிவில், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டை நியமிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு என்று சிறப்பு பள்ளிகளை அரசு நடத்த வேண்டும். ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பராம ரித்து மற்றும் சிகிச்சை அளித் தால், அந்த குழந்தைகள் 4 ஆண்டு களுக்குள் சாதாரண குழந்தைகள் போல மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தை களை மாற்றுத்திறனாளிகள் பட் டியலில் சேர்த்து சிறப்பு அந் தஸ்து கொடுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசின் சலுகை கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருந்து, மாத் திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான மருந்து, மாத்திரை கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மாவட்டங் களில் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அறிகுறிகள் என்ன?

ஆட்டிசம் குழந்தைகள் துரு துருவென இருப்பார்கள். ஆனால், பேச மாட்டார்கள். காது நன்றாக கேட்கும். கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார் கள். தனியாகவே இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும்.

ஆட் டிசம் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கூர்மை அதிகம். அவர்களை முறையாக பராம ரித்து, சிகிச்சை அளித்தால் மிகப் பெரிய அளவில் சாதனை புரிவார் கள். உலக அளவில் சாதனை படைத்தவர்களில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திரளுவோம் தோழர்களே!


தமிழ் நாட்டு டெல்டா விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (23.3.2013 விடுதலை).

தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்தும் போதிய அளவு உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்ற உண்மையை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியும் இருந்தார். திராவிடர் கழகம், அதிமுக ஆட்சியின்மீது குறை சொல்வதற்காக இப்படி சொல்கிறது என்று குற்றம் கூறமுடியாது.

அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)யின் சட்டப் பேரவை உறுப்பினரான தோழர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் சட்டப் பேரவையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்தும் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குத்தகை விவசாயிகளின் குத்தகைப் பாக்கிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை யிலேயே பேசியுள்ளார் (தீக்கதிர், 26.3.2013 பக்கம் 5).

25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில்கூட (எண் - 9) கீழ்க்கண்ட கருத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரித் தண்ணீரை உரிய நேரத்தில் தேவையான அளவிற்கு ஜெயலலிதா பெற்றுத்தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பெருமளவிற்குப் பொய்த்துப் போய் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், ஜெயலலிதா அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கூட இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாய்ப் போய்ச் சேரவில்லை என்று அந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் அவர்கள் பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்; மறைக்கத் தேவையில்லை.

நீர்த் தட்டுப்பாட்டால் விவசாயம் பொய்த்து டெல்டா மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று எடுத்துக் கூறியிருந்தால் மேலும் பலன் கிடைத்திருக்கும் என்று கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

காவிரி நீர்ப் பிரச்சினையில் பெரும் வெற்றி பெற்று விட்டதாகக் கூறி முதல் அமைச்சருக்கு மிகப் பெரிய அளவில் விழா எடுக்கப்பட்டது. பாராட்டட்டும் - அதில் நமக்கொன்றும் வருத்தம் கிடையாது.

அந்த விழாவிலே விவசாயிகளுக்காக சில அறிவிப்புகளை ஏழை விவசாயிகள் எதிர்பார்த் தனரே - ஆரவாரத்தோடு விழா முடிந்ததே தவிர, விவசாயியின் வறுமைப் பாம்பு கடிக்கு மருந்து இல்லையே!

அதிமுகவின் முக்கிய தோழமைக் கட்சியான சி.பி.அய்.யின் விவசாய சங்கத் தலைவர் தோழர் முகுந்தன் விடுத்த வேண்டுகோள் விழாவுக்கு முன் ஜனசக்தியில் வெளிவந்ததே - விழா வெளிச்சத்தில் இந்தக் கோரிக்கைகள் மறைந்து போயிற்றே என்பதுதான் நமது வேதனை.

சரி - நிதிநிலை அறிக்கையிலாவது மின்னல் தெரிந்ததா? வெறும் அம்மா பாட்டு இருந்ததே தவிர டெல்டா விவசாயிகளின், அம் மாபெரும் கஷ்டத் துக்கு வடிகால் கிடைக்கவில்லையே.

நடுவர் மன்றத் தீர்ப்பு கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டதாம். இந்தப் பிரச்சினையில் எல்லாம் முடிந்து பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு விட்டதாக வாண வேடிக்கை விட்டோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம்.

இதற்கு முன்புகூட இப்படி நடந்ததுண்டு; நாளை என்ன என்பதுதான் முக்கியம்.

அடுத்த கட்ட நடவடிக்கை இதில் என்ன என்பதுதான் முக்கியம்.

அதனைச் செய்விக்க மத்திய அரசை வற்புறுத் திட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் கூட குப்பைக் கூடையில் வீசி எறிந்தது கருநாடகம் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் விவசாயம் பஞ்சமர், சூத்திரர்களுக்கான பாவப்பட்ட தொழிலாயிற்றே - (மனுதர்மம் பாவத் தொழில் என்றே கூறுகிறது). அதனால்தான இத் தனை வேதனைகள் - சோதனைகள். விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டத்தில்தான் நாம் இருக் கிறோம் என்பதை நம் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி இருந்தார் (விடுதலை, 22.2.2013).

இவற்றையெல்லாம் வலியுறுத்திடவே வரும் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

விவசாயப் பெருங்குடி மக்களே!

கட்சி - அரசியல் கண்ணோட்டம் கிஞ்சிற்றும் இல்லாத தமிழ்நாட்டின் உரிமை இயக்கமாம் திராவிடர் கழகம் குரல் கொடுக்கிறது.

பதவிப்பக்கம் செல்லாப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தை வழி நடத்தும் தமிழர் தலைவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

திரண்டு வருக - திறனைக் காட்டுக!

மாநில அரசின் காதுகளையும்

மத்திய அரசின் காதுகளையும்

கேட்க வைப்போம் - வாரீர்! வாரீர்!!

- கருஞ்சட்டை -

தமிழ் ஓவியா said...


எப்போதும் கற்போம்! எவரிடமிருந்தும் கற்போம்!!


கற்றுக் கொள்வது என்பதற்கு இதற்குமுன் நம்மில் பலரும் ஒரு குறுகிய பொருளில்தான் புரிந்து கொண்டோம். ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், அதற்கு விரிவான விளக்கம் உண்டு.

கற்றுத் தருவோர் எவராயினும் அவர் நமக்கு ஆசிரியர்களே; குரு தான்!

பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என்றுதான் அவர்கள் இருப் பார்கள் என்பதில்லை.

இப்போதெல்லாம் நம் வீடுகளி லேயே ஏராளமாக அவர்கள் இருக் கிறார்கள்! யார் அவர்கள்?

அவர்கள்தான் நமது பேரர்களும், கொள்ளுப் பேரர்களும், பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளும்!

இந்த குமர குருபரர்களுக்குத் தெரிந்த பல்வேறு தொழில் நுட்பச் செய்திகள் - டெக்னாலாஜிக்கல் (Technological) நுட்பங்கள் வயது முதிர்ந்த, குடும்பத் தலைவர் என்ற வெறும் பழம் பெருமையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற நம்மில் பலருக்குத் தெரியாது; நாம் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகப் பெரும் அளவு ஆகும்!

கற்றல் என்பதற்கு வயது இடை வெளி கிடையாது; கூடாது; கூடவே கூடாது! கற்பித்தவர்கள் யார் என்பது பற்றியும் - அய்யோ என்னுடைய பெயர னிடம் இருந்தா மெத்தப் படித்த மோதாவி யாகிய நாம் கற்றுக் கொள்வது என்ற கர்வம் நம்மில் யாருக்கும் தேவையே யில்லை!

யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் அறிவதுதான் நம் காலத்திற் கேற்ப பெரும் அரிய தகவல் தொழில் நுட்பம் அடங்கிய கல்வி; காரணம் தற்போதுள்ள யுகத்திற்குப் பெயரே அறிவு யுகத்தின் வெடிப்புகள் - வெளிச்சங்கள்! Knowledge Explosion - “Information Age”

தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்களே பெரிதும் நம் நாட்டில் இல்லை எனலாம்.

அதுபோலவே கைத் தொலைபேசி - செல்போன் கையில் இல்லாத மனிதர் களும் வெகு அபூர்வம்.

வேலை செய்யும் பணிப் பெண்கள், கீரை விற்கும் கீர்த்தியம்மாள் முதல் சித்தாளு, கொத்தாளராக இருக்கிற தாய்மார்கள் உட்பட கைத் தொலை பேசியையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள்!

இது ஒருவகையான அறிவு வளர்ச்சி. கல்வியும்கூட! அமைச்சர் ராசாவின் அரிய பணி, இந்தக் கருவி சாமான்யர் களும் பயன்படுத்தும் - சகல கலா ஆயுதமாக்கி விட்டது!

ஆனால் இதை தொழில் நுட்ப வசதிகளோடு பயன்படுத்த பெரிதும் நாம் யாரிடம் கற்றுக் கொள்கிறோம்?

நம் வீட்டுப் பேரப் பிள்ளைகளிடம் தானே!

7,8 வயது குழந்தை 70, 80, வயது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குமரகுருக் களாகி, போதித்துச் சொல்லிக் கொடுக் கின்ற ஆசான்களாகி விடுகிறார்கள்!

அங்கிங்கெனாதபடி எங்கும் இதே நிலைதான்! அதற்காக நாம் வெட்கப் படுகிறோமா?

இல்லையே!

அறிவும் தகவலும் எங்கிருந்து எவரிடமிருந்து, வயது வித்தியாசம் இல் லாமல் கற்றுக் கொண்டு, கடைப் பிடிக்கிறோமா இல்லையா? எனவேதான், இந்த வாழ்க்கைக் கல்விக்கு வாத்தியார்கள் நம் இளை யர்கள் - குழந்தைகள்தானே!

எனவே கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் வயது இடைவெளி ஒரு பொருட்டே அல்ல.
அது மட்டுமல்ல பெரிய மேதை, படிப்பாளிகள் என்பவர்களுக்குச் சட் டென்று விளங்காத செய்திகள் - சாதாரணமான பட்டறிவு உள்ளவர் களுக்கு பளிச்சென்று விளங்கி விடு கிறதே!

புவி ஈர்ப்பு பற்றிக் (Laws of Gravitation) கண்டுபிடித்த சர். அய்சக் நியூட்டன் என்ற பெரிய விஞ்ஞானி பற்றி ஒரு கதை உண்டு. (இதைப் பல விஞ்ஞானிகளின் பேர்களிலும் மாற்றி மாற்றிச் சொல்லி வருவதும் உண்டு)

தன் ஆய்வுக் கூடத்தில் ஒரு பூனை இருந்ததற்கு - தொல்லை செய்யாமல் போக அவரது அறைக் கதவில் ஒரு ஓட்டை போடச் சொல்லி தன் பணியா ளரிடம் கூறி அவரும் அதேபோல் செய்து கொடுத்தார்.

சில காலம் கழித்து அந்த பூனை குட்டிகளைப் போட்டது. விஞ்ஞானி சொன்னார்: பூனைக்குட்டிகள் போய் வர பக்கத்திலேயே கதவுகளில் ஓட்டைகளைப் போடுங்கள் என்று, அதை செய்யுமுன் பணியாளர் சிரித் தாராம்! ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார் விஞ்ஞானி!

அதற்குப் பணியாளர், அய்யா பூனை போகும் ஓட்டை மூலமே, குட்டிகளும் போகலாமே, அதற்கென ஏன் தனியே ஓட்டை போட வேண்டும் என்று கேட்ட பிறகு அக்கேள்வியில் உள்ள பகுத் தறிவு வெளிச்சமும், இவரது சிந்தனை யில் இருந்த இருட்டும் இவருக்குப் புலப்பட்டதாம்!

அதுபோல நாம் எவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள எப்போதும் ஆயத்த மாக இருப்பதே அறிவு வழி! வளர்ச்சிப் பாதையாகும்!
-----------கி.வீரமணி -வாழ்வியல் சிந்தனைகள் -4-4-2013