Search This Blog

20.4.13

சாய்பாபா ஜாலம் - பி.சி. சர்க்கார் அம்பலப்படுத்தினார்!


(புட்டபர்த்தி (கருநாடகம்) சாய்பா பாவை நேரில் கண்ட பின், அவரது தந்திரங்களை அம்பலமாக் கியுள்ளார் புகழ்பெற்ற மாயச் செயல்வீரரான பி.சி.சர்க்கார். இம்பிரிண்ட் என்ற ஆங்கிலத் திங்களேட்டில் கடந்த திங்கள் (சூன்83) அவரெழுதிய கட்டுரை இங்குத் தமிழில் வழங்கப் படுகிறது.)

மனித இயற்கை விந்தையானது ஒவ்வொரு நாளிரவும் நூற்றுக்கணக்கான மக்கள் என் மாயச் செயற் கண் காட்சியைப் பார்க்கிறார்கள். ஒரு பெண்ணை இரண்டாக துண்டிப்பதையும், ஒரு யானை காற்றில் மறைந்து போவதையும், ஒன்றுமில்லாததிலிருந்து விரும்பும் பொருளைக் கொண்டு வருவதையும் அவர்கள் பார்க் கிறார்கள். ஆனாலும், என்னிடம் தெய்வ ஆற்றல் உறைந் திருப்பதாக எவரும் நம்புவதில்லை. ஆனால் அம்மக்களே, கடவுட் பிறப்பு எனக் கூறப்படும் மனிதனைப் பார்க்கும் போது, அவர் ஒரு சில மாயச் செயல்களைச் செய்து காட்டும் போது மட்டும் அதில் தெய்வத்தன்மை உள்ளதெனக் கண் ணை மூடிக்கொண்டு நம்புகிறார்கள். என்னே! அறியாமை.
எடுத்துக்காட்டாகப் புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை நோக்குவோம். அவர் செய்யும் மாயங்களை எங்களைப் போன்ற மாயக்காரர்கள் செய்து காட்ட முடியும். எனவே தான், அந்தப் பாபா, அவரது தெய்வீக விந்தைகளை எங்கள் முன் செய்துகாட்ட விரும்புவதில்லை.

நான் சாய்பாபா வாழ்விடஞ் சென்று அவரை நேரே கண்டு உரையாடப் பன்முறை முயன்றிருக்கிறேன். என்னை ஒவ்வொரு முறையும் காண்பதற்கு மறுத்தே வந்துள்ளார்.

இறுதியாக நான் மாற்றுருவில் சென்று அவரைக் காண்பதென்று முடிவு செய்து கொண்டேன். என்னை ஒரு பெயர் பெற்ற பணக்கார அசாம் வணிகரென்றும், எனக்கு காச நோயிருப்பதால் சாய் பாபாவிடம் திருநீறு பெற்று நலம்பெற விரும்புகிறேனென்றும் சொல்லிக் கொண்டு அவர் வாழ்விடத்துள் புகுந்தேன்.

உள்ளே நுழைந்த அய்ந்து மணித்துளிகளில் அங்கு யாதோவொரு மாயச் செயல் வஞ்சகமாக நடக்கிறதென உணர்ந்தேன். என்னைப் போல வந்துள்ளவர்களை ஒவ்வொருவராகக் கண்டு வணங்குவதற்கு ஒப்புக் கொண்டார். ஒரு நேரத்தில் ஓரடியார்தான் சாய்பாபாவைக் காணமுடியும். அப்படித்தான் அங்கு நடைபெறல் வழக்கம். அவரைச் சுற்றி அவருடைய சில மாணாக்கர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வரக்கூடி யவர்கள்; அல்லது சாய்பாபாவின் குழுவை சார்ந்தவர் களென்பது மெதுவாக விளங்குகிறது. பொதுவாக இது எல்லா மாயக்காரர்களும் செய்யும் தந்திரமே.  சில நேரங் களில் கூட்டத்திலிருந்து சிலரை நாங்கள் மேடைக்கு அழைப் போம். எங்கள் ஆட்கள் சிலரையே பொதுமக்களோடு (காண வந்திருப்போர்களோடு) சேர்ந்து உட்கார வைப்போம்.

கூட்டத்திலிருந்து மேடைக்கு வரும் உண்மையான மனிதர்களைச் சுற்றி எங்கள் ஆட்களும் சேர்ந்து கொள் வார்கள். இதனால் மேடைக்கு வந்த பார்வையாளரை நாங் கள் செய்யும் மாயங்கள் உண்மையானவையே என்று நம்பச் செய்து விடும். இது வழக்கமாக நாங்கள் செய்யும் தந்திரம்.
சாய்பாபாவும் இத்தந்திரத்தையே கையாள்கிறார். எனவேதான் தம்மைச் சுற்றி தம் குழுவைச் சேர்ந்தவர் களையே எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார். நான் சாய்பாபாவைப் பார்க்க அவர் இருப்பிடத்திற்கு சென்றவுடன் என்னை மொய்த்து நின்றவர்களுக்கெல்லாம் அவர் ஆட்களே என்பதை உடனே விளங்கிக் கொண்டு விட்டேன். எனவே எனக்கு அய்யப்பாடு வலுத்து விட்டது. பாபா என்னைப் பேசச் சொன்னார். என்னுடைய மொழி மட்டும் எனக்கு தெரியுமெனச் சொல்லி அசாம் மொழியிலும், இந்தி மொழியிலும்  கலந்து பேசுவார். சாய் பாபாவால் அம்மொழி களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையெனத் தலையை அசைத்து உணர்த் தினார். உடனே அவர் தம் மாணாக்கர்கள் மொழி பெயர்ப் பாளரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனக்கு பெரு வியப்பாயிருந்தது. கடவுளுக்கும் மொழிச் சிக்கல் உண்டு போலும் எனக் கருதினேன். ஆயினும் அமைதியாகவே இருந்தேன்.

ஒரு மொழி பெயர்ப்பாளர் வந்த பிறகு எங்கள் உரையாடல் தொடங்கியது. உங்கட்கு என்ன சிக்கல் என்று சாய்பாபா என்னைக் கேட்டார். எனக்கு காசநோய்; அதை நீக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன் என்று கூறினேன்.
பாபா, மெதுவாகவும் அமைதியாகவும் நீங்கள் என்னைப் பார்க்க வந்து விட்டீர்கள். இனி உங்கட்கு நலமாகி விடும் என்றார்.

எனக்கு ஏதேனும் மந்திர மருந்து தருவீர்களா? என்று கேட்டேன்.
தேவையில்லை என்றார் அவர். கையை அசைத்துத் திருநீறு கொண்டு வருவீர்களே? அதனைத் தரமாட்டீர்களா? என்று கேட்டேன் உடனே அவர் முகம் மாறி விட்டது. ஒன்றும் மறுமொழி கூறமுடியாத நிலையில் தடுமாறினார். என்ன நடந்துள்ளது என்பது எனக்குத் தெரிந்து விட்டது.
கையை அசைப்பதனால் திருநீறு வரவழைப்பது மிகப் பழங்காலத் தந்திரம். திருநீற்றினை ஒரு சிறிய பைக்குள் நிரப்பிக் கையிடுக்கில் வைத்துக் கொண்டு, ஒரு சிறுநெடுங்குழலைக் கைகளில் வைத்துக் கோடல்தான் இத்தந்திரம். மறைவாயுள்ள குழலை அழுத்தினால் திருநீறு கொட்டும். இதனில் குறிப்பிடத்தக்க சுவையான செய்தி, அரைக்கை சட்டை அணிந்துள்ள போதெல்லாம் திருநீற்றை வரவழைப்பதில்லை. முழுக்கைச் சட்டை அணிந்திருந்தால் தானே மறைத்து வைத்ததற்கு வாய்ப்பாக இருக்கும்.

அன்று பாபாவை கண்டுணர்ந்த கடைசி பார்வையாளன் நான்தான். முன்னரே பையில் நிரப்பப் பெற்றிருந்த நீறு முற்றும் செலவாகி விட்டமையால் எனக்கு வழங்க முடியவில்லை. அதனை வரவழைக்கத் தக்க வேறு வழியும் இல்லை. அவர் திகைத்தார். உடனே நான் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை நுணுக்கமாக நோக்கினேன். பாபாவினால் பயிற்றப் பெற்ற ஒருவர் அவரருகிலிருந்த பலகாரத் தட்டுகளை வேறிடத்தில் மாற்றி வைத்ததனை ஓரக்கண்ணால் நோக்கியிருந்தேன். அம்மாணாக்கர் கையசைப்பில் ஒன்றை வர வழைக்கப் போகிறார் என நான் நுணித்துணர்ந் தேன். திருநீறு வரவழைக்க முடியா நிலையில் வேறு யாதொன்றோ கொடுத்து என்னைச் சரிகட்ட முயல்வது அப்பட்டமாகப் தெரிந்து விட்டது.

பின்னர் பாபாவிடம் நான் மீண்டும் எனக்கு திருநீறு தந்து ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். நான் நினைத்தது உண்மையாயிற்று. பிற மாயக்காரர்களைப் போலவே அவரும் சூ மந்திரக்காளி போட்டார். சந்தனம் வரவழைத்துக் கொடுத்ர். இது எல்லா மாயக்காரர்களும் செய்யக் கூடிய வித்தைதான். பலகாரத் தட்டை எடுத்துச் சென்ற அவர் பணியாள், அதில் சந்தனத்தைப் போட்டுச் சாய்பாபா அருகில் வைத்ததும், அதிலிருந்து கைத் தந்திரத்தால் சந்தனத்தை வரவழைத்தார். இதுதான் உண்மையில் நடந்தது.

எங்கள் எல்லாருக்கும் நடுவில் ஓர் இன்சுவை பண்டம் இருந்தது. சாய்பாபா செய்த அதே தந்திரத்தை நானும் செய்து கையசைப்பில் அந்த இனிய பண்டம் வரைவழைத்து அவரிடமே கொடுத்தேன். உடனே அங்குள்ள அனை வருக்கும் அதிர்ச்சி குழப்பம் உண்டாயிற்று.

பாபா தென்னாட்டு மொழி ஒன்றில் பெருங்குரலால் அஞ்சுமாறு கூச்சலிட்டார். அவரைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக ஓடிவந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நான்மிகவும் அமைதியாக நான்தான் பி.சி.சர்க்கார். நான் நன்றாக இப்போது உணர்ந்து கொண்டேன். பாபா அவர்களே! நீங்கள் ஓர் இயல்பான மாயம் வல்லவர்தான். அவர் எதுவும் கூறவில்லை. பக்கம் இருந்த ஒரு வாயிலில்  புகுந்து உள்ளே போய்விட்டார். ஏனையோர் என்னைப் பார்த்துக் கூச்சலிட்டார்கள். அவ்விடத்தை விட்டு என்னை அப்புறப்படுத்தினார்கள். இந்த பக்கம் மீண்டும் வராதே என்று எச்சரித்தார்கள்.

இச்செய்தி மறுநாள் வந்த நாளேடுகளில்பெரும் பரபரப்பாக வெளியாயிற்று. கைத் தந்திரங்களால் நடத்தப்படும் மாயச்செயல்களே என விளக்கிப் பல நேர்காணல்களை நடத்தினேன். காற்றிலிருந்து கைக் கடிகாரம் வரவழைத்தலும், தொப்பியிலிருந்து முயலை வரவழைத்தலும் ஒரே வகையான தந்திரம்தான். இவையனைத்தையும் ஒரு மாயமந்திரக்காரரால் செய்து காட்ட முடியுமென உறுதியாகக் கூறுகிறேன்.

------------------------------------------நன்றி: தமிழில் குறளியம், 1.9.1983 இதழ்

58 comments:

தமிழ் ஓவியா said...


சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் கோலாகலத் தொடக்கம்!


ருசிய தூதர் திறந்து வைக்க; தமிழர் தலைவர் சிறப்புரை

பெரியார் விதைத்தார் இன்று அறுவடை செய்கிறோம்!

சென்னை புத்தகச் சங்கமத்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் மேதகு டாக்டர் நிக்கோலய். அ.லிஸ்தபதோவ் அவர்கள் திறந்து வைத்தார். உடன் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், சிக்ஸத் சென்ஸ் கே.எஸ். புகழேந்தி, எமரால்டு கோ. ஒளிவண்ணன், விழிகள் வேணுகோபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 18.4.2013)

சென்னை, ஏப்ரல் 19- புத்தகத்தால் புத்தாக்கம் பெறமுடியும் என்ற கருத்தோட்டத்தை முன்னி றுத்தி உலக புத்தக நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, சென்னை புத்தக சங்கமத்தை தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டாக்டர். நிக்கோலய் அ.லிஸ்தபதோவ் திறந்து வைத்தார்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமும், நேசனல் புக் டிரஸ்ட் இந்தியாவும் இணைந்து ஏப்ரல் 19 முதல் 27 வரை, புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதற்கான தொடக்க விழா நேற்று (18.04.2013) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடந்தது.

தமிழ் ஓவியா said...

திக்கெட்டும் பரவட்டும் சென்னை புத்தக சங்கமம்

முன்னதாக பெரியார் நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலையிலிருந்து, லயோலா கல்லூரி மாணவர்களின், மாற்றம் கலைக்குழு சார்பில் ஆரவாரமான பறை இசை நடைபெற்றது. காலில் சலங்கை கட்டி இசைக்கேற்ப அவர்கள் ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில், சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோ.ஒளிவண்ணன் தந்தை பெரியார் சிலைக்கு மாலையை அணிவித்தார். ஊர்வலமாய் நகர்ந்து பெரியார் திடலுக்குள் வந்த பறையாட்டம் நிலை கொண்டு மீண்டும் பார்வையாளர்களை பரவசப் படுத்தியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்ய தூதர் நிக்கோலய் அ.லிஸ்தபதோவ் ரிப்பன் வெட்டி புத்தக கண் காட்சியை, தமிழர் தலைவர் கி.வீரமணி, திராவிடர் கழகத்திக் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். தொடர்ந்து அனைவரும் புத்தகங்களை பார்வை யிட்டவாறே கருத்தரங்கம் நடைபெற இருந்த அரங்கை நோக்கிச் சென்றனர்.செய்தியாளர் சந்திப்பு

கருத்தரங்கிற்குள் நுழையும் முன்பு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் தனது பேட்டி யில், உலக புத்தக நாளையொட்டி, பெரியார் திடலில் 70-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்ளக் கூடிய இந்த சென்னை - புத்தக சங்கமத்தில் ஏராளமான புத்தகங்கள தள்ளுபடி விலையோடு கிடைக்கும் வகையில் குறுகிய காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக் கிறோம். ரஷ்ய தூதர் வருகை தந்து சிறப்பித் திருக்கிறார். நாள்தோறும் புதிய புதிய புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

முக்கியமாக இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் படித்து பயன்படுத்திய புத்தகங்களை சேகரித்து, கிராம பள்ளிக் கூடங்களுக்கு அளிக்க Book Bank என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். இது தொடக்கம், இந்த அனுபவங்களைக் கொண்டு, ஆதரவு அதிகமாக கிடைத்தால் அடுத்தாண்டு இதைவிட சிறப்பான வகையில் இந்த சென்னை புத்தக சங்கமம் தொடரும் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


லயோலா கல்லூரி மாணவர்களின், மாற்றம் கலைக்குழுவின் பறையாட்டம் மீண்டும் ஒரு முறை மேடையில் அரங்கேரியது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளர் ஒளிவண்ணன் மேடைக்கு அழைத்தார். தொடர்ந்து அவர், சென்னை புத்தக சங்கமம் தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தொகுத்தளித் தார். அதைத் தொடர்ந்து சிக்ஸ்த் சென்ஸ் பதிப்ப கத்தின் உரிமையாளரும், நிகழ்ச்சியின் ஆலோகரு மான புகழேந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து வரியியல் அறிஞர் ச.ராஜரத்தினம் தலைமையேற்று சிறப்பித்தார்.

NBT - தலைவர் சிக்கந்தரின் வாழ்த்து

சென்னை புத்தக சங்கமத்தின் நிகழ்ச்சிக்கு வருகை தரவிருந்த நேசனல் புக் ட்ரஸ்டின் தலைவர் சிக்கந்தர் அவர்கள் வருகை தர இயலாததால் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்தை பிரின்சு என்னாரெசு பெரியார் வாசித்தார். NBT - - ன் தலைவர் தன் வாழ்த்துறையில், இம்மாபெரும் சென்னை புத்தக சங்கமத்தை திறந்து வைத்திருக்கும் மேதகு டாக்டர் நிக்கோலஸ் அ.லிஸ்தபதோவ், அவர்களுக் கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் என்று குறிப்பிட் டிருத்தார்.

நிக்கோலய் அ. லிஸ்தபதோவ் பெருமிதம்

தொடர்ந்து பேச வந்த ரஷ்ய தூதர். இந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதை தான் மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்காக உழைத்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். முக்கியமாக இந்த நிகழ்ச்சிக்கு காரணமாக இருந்த பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கும், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், இப்படிபட்ட புத்தக கண்காட்சிகள் இளைய தலை முறையினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டுவிட்டு சோவியத் யூனியன் உலகிலேயே அதிக புத்தகங்களை பதிப்பித்த நாடு, அதிகம் படித்த நாடு. சோவியத் ஒன்றியம் சிதறுண்டதால் நிலைமை மாறி விட்டன. மீண்டும், அந்த நிலை உருவாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தனது நாட்டின் பழைய நிலையை நினைவு கூர்ந்தார். பிறகு அவர், இந்த புத்தக கண்காட்சியில் நான் நுழைந்தபோது, மார்க்சிம் கார்க்கி, புஷ்கின், லியோ டால்ஸ்டாய், தஸ்தோ வெஸ்கி ஆகிய சோவியத் யூனியனின் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் தமிழ், இங்கிலீஷ், இந்தியாவின் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு தான் பெருமிதம் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து அவர், தன்னைப்பற்றி குறிப்பிடும் போது, நான் குழந்தைப் பருவம் முதலே படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவன், ரஷ்யன், இங்கிலீஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகள் எனக்குத் தெரியும். இப்போது தமிழும் படிக்க முயன்று வருகிறேன் என்று குறிப்பிட்டு விட்டு, உடனே அரங்கத்தின் பதாகையைத் திரும்பிப் பார்த்து சென்னைப் புத்தக சங்கமம், உலக புத்தக நாள், ஏப்ரல் என்று தமிழை படித்துக் காட்டி, தான் ஒப்புக்குச் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று குறிப்பில் உணர்த்திய பார்வையாளர்களையும் மேடையிலிருந் தவர்களையும் பரவசப்படுத்தியது.

மேலும் அவர், பதிப்பகங்களும், புத்தக காதலர்களுக்கும் தனது வாழ்த்துக்களை சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார்.

ரஷ்ய தூதருக்கு தமிழர் தலைவர் மரியாதை

தொடர்ந்து, தமிழர் தலைவர் ரஷ்ய தூதருக்கு பயனாடை அணிவித்தும், இயக்க புத்தகங்களை அளித்தும் சிறப்பு செய்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், இந்திய அளவில் சிறப்பாக இயங்கக் NBT India வையும், அதன் தலைவர் சிக்கந்தரையும் பாராட்டிப் பேசினார். மேலும் அவர், புத்தகத்தால், புத்தாக்கம் பெறு வோம் என்று முழங்கினால் மட்டும் போதாது. அதற்கான வழிமுறைகளையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ரஷ்ய தூதருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தந்தை பெரியார் பல மாதங்கள் தொடர்ந்து ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்ததையும் அதற்கு முன்னதாக குடியரசு இதழில் கம்யூனிஸ்ட் மேனிபஸ்டோயை வெளியிட்டதையும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது, பகுத்தறிவு பரவ வேண்டும். அதற்கு முன்பு கல்வி வளர வேண்டும். யாரெல்லாம் அதற்கு உறுதுணையாக இருந்தார்களே அவர்களை எல்லாம் பெரியார் ஆதரித்தார் என்று கூறினார்.

மேலும் அவர் தந்தை பெரியாரைப்பற்றி குறிப் பிடுகையில், ஏன்? தந்தை பெரியார் அப்படிப்பட் டவர்களை ஆதரித்தார்? என்று கேள்வி கேட்டு விட்டு, பதிலும் சொன்னார். அய்ரோப்பாவில் வெள்ளையர்கள் - கறுப்பர்கள் என்ற பேதம் இருந்தது. இப்பொழுது கறுப்பர்கள் என்ற வார்த் தையை அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. அன்றைக்கு அவர்கள் அடிமைகளாக விற்கப்பட் டார்கள். இங்கும் அந்த அடிமைத்தனம் இருந்தது. ஆனால், அங்கு அடிமையாக இருந்தாலும் அந்த அடிமைகளுக்குக் கல்வி மறுக்கவில்லை. அதற்கு நேர் மாறாக இங்கு நம்மையெல்லாம் படிக்கவே கூடாது என்று தடுத்திருந்தார்கள். தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்.. என்று நிறுத்தினார். பார்வையாளர்கள் தன்னிலை மறந்து - உண்மையை உணர்ந்து கையொலியெழுப்பினர்.

தமிழ் ஓவியா said...

பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை

அப்படிப்பட்ட மாற்றங்களை தந்தை பெரியார் விதைத்தார். இன்று பலர் அதை அறுவடை செய்து கொண்டு இருக்கின்றனர் என்றார். மேலும் அவர், இளைய தலைமுறையினர்க்கு பல பேருக்கு தெரியாத செய்தியொன்றைக் கூறினார். அன்றைய காலக் கட்டத்தில், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை -என்றே புத்தகங்கள் பதிப்பித்தார்கள். காரணம், சின்ன எழுத்துக்களில் நமக்கு படிக்க வராது. பெரிய எழுத்தில் இருந்தால்தான் எழுத்துக் கூட்டிப் படிக்கலாம் அல்லவா என்று குறிப்பிட்டு விட்டு, அந்த நிலைகளெல்லாம் இன்று மாறி வந்திருக்கிறது என்றார்.

இனி வரும் உலகம்

தந்தை பெரியாரின் சிறப்பை, இனிவரும் உலகம் - ஒளிப்புத்தகத்தை குறிப்பிட்டுக் காட்டி விளக்கினார். கையில் சின்ன புத்தகம் போலிருந்து கிண்டில் - என்கிற நவீன கருவியை எடுத்துக் காட்டி இதில், 4,87,900 - புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன என்று அறிவியல் வளர்ச்சியை சுட்டிக் காட்டினார். இதுபோன்ற கருவிகளில் நமக்கு இருக்கும் அறிவைக் காட்டிலும் நமது பிள்ளைகளின் அறிவு அதிகம். நமது பேரப் பிள்ளைகள் தான் நமக்கு குமர குருபரர்கள் என்று நகை சுவை ததும்ப குறிப்பிட்டார்.

பதிப்பகங்களுக்கான கூட்டமைப்பு

இறுதியாக அவர், ஆங்கில பதிப்பகங்கள் நவீன அறிவியலைப் பயன்படுத்தி இது போன்ற மின்னணுக் கருவிகளில் புத்தகங்களாக விற்பனை செய்வதை சுட்டிக்காட்டி, அதுபோன்று தமிழ்ப் பதிப்பகங்களும் தனியாக செய்வது கடினம்தான் என்பதால், அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிந்தித்து ஏடு கூட்டமைப்பு போல உருவாக்கி, சென்னை புத்தக சங்கமத்தை ஒரு நிரந்தர அமைப்பாக்கி பயன்பட வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார். நிகழ்ச்சியை உலகெங்கிலும் பார்க்கும்படியாக பெரியார் வலைக்காட்சித் தோழர்கள் இணையம் முலம் நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நன்றியுரை வழங்கி தொடக்க நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் சென்னை மண்டலச் செயலாளர் வெ. ஞானசேகரன், பொதுக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், பொன்னேரி பன்னீர்செல்வம் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், கோ. கருணாநிதி, ஆவடி முருகன், புலவர் பா. வீரமணி, திராவிடர் கழக இலக்கியத் துறையின் மாநில செயலாளர் பேரா. மஞ்சை வசந்தன், மயிலை நா. கிருஷ்ணன், கி. சத்யநாராயண சிங், மனோகரன், திருமகள், தங்கமணி, தனலட்சுமி, வெற்றிச்செல்வி, பெரியார் மாணாக்கன் மற்றும் பதிப்பாளர்கள், வாசிப்பாளர்கள், பொது மக்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?


இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக் காவைச் சுற்றிப் பார்க்கப் போனாராம். இறங்கியதுமே அமெரிக்கப் பெண் கேட்ட முதல்கேள்வி, நான் மகாபாரதம் படித்திருக்கிறேன், உங்களுடைய மற்ற கணவர்கள் எங்கே? அங்கேயே விட்டு வந்து விட்டீர்களா? என்பதுதானாம். இப்படி இந்தியாவைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று ராணி பத்திரிகையாசிரியர் சொன்னதும், அனுராதா ரமணன் எழுந்து... என்னை அப்படி கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அய்ந்தாவது நபர் தான் தாலி கட்டிய கணவனென்று... இவ்வாறாக 21.8.1983 நாளிட்ட தாய் இதழில் ஒரு பெட்டிச் செய்தி வந் துள்ளது.

உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?

திருமதி அனுராதா ரமணன் கூற்றுப்படி ஒரு பெண்ணானவள் தாலி கட்டிய ஒரு கணவனையும், தாலி கட்டாத நான்கு ஆண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாரா? மகாபாரதத்தைக் காப்பாற்ற போய் தன் மானத்தைப் பறக்க விட்டு விட்டாரே!
(உண்மை, 1.8.1983)

தமிழ் ஓவியா said...

அம்பாளை உடைக்கும்
பக்தர்கள்

மதுரை மாவட்டம், சிறுகுடியில் உள்ள மந்தை முத்தாளம்மன் கோவிலில் அம்மன் சிலை கிடையாது. அங்குள்ள பீடத்தை மட்டும் மாலை போட்டு வணங்குகிறார்கள்.

வருடாந்திர விழாவின் போது மட்டும் களி மண்ணால் அம்மன் சிலை செய்து அங்கு வைத்து வணங்கி விட்டு மறுநாள் சிலையை உடைத்து குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


நெய்வேலியும் திருவெறும்பூரும்நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். தொழிலாளர் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தால் உடனே உச்சநீதிமன்றம் தாவுகிறது நிருவாகம்.

இப்பொழுது உச்சநீதிமன்றமும் தெளிவாக - திட்டவட்டமாக தீர்ப்பு அளித்து விட்டது.

என்.எல்.சி.யில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டு விட்டது.

இதே நிலைதான் திருவெறும்பூர் பெல் நிறுவனக் கதையும்; தொழிலாளர்கள் போராடிப் பார்த்து நீதிமன்றம் சென்றால் அதற்கு இடைக்காலத் தடை வாங்குவது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் அதனை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்வது என்கின்ற வஞ்சனையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றால் சொந்தமாகச் செலவு செய்ய வேண்டும்; நிறுவனம் நீதிமன்றம் சென்றால் அதன் செலவு நிறுவனத்தைச் சேர்ந்தது. சோசலிசம் பேசும் நாட்டில் (?) இப்படித் தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டு வருகின்றனர்.

நெய்வேலியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 30 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தமே செய்யும்.

பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தை பெல் நிருவாகம் ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம்.

பெல் நிருவாகம் ஒரு கண்ணில் சுண்ணாம் பையும் இன்னொரு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் வஞ்சனை நிறைந்ததாகும்.

பெல் நிறுவனத்தைச் சேர்ந்த அரித்துவாரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நியாயம் அதே நிறுவனமான திருவெறும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் கிடையாதாம்.

நாம் என்ன ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழுகிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது? ஊருக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்தபோது ஏழரை லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை இரயில்வேயில் நிரந்தரப் படுத்தினார். அதனையெல்லாம் எடுத்துக்காட்டி பெல் நிறுவனத்தில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான திராவிடர் தொழிலாளர் கழகம் பல வடிவங்களிலும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.

எந்த நியாயத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப் படாமல் தானடித்த மூப்பாக திருவெறும்பூர் பெல் நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

240 நாட்களுக்கு மேல் ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், அவர் பணி நிரந்தரம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி முறைகள் இருந்தும், அவற்றை எல்லாம் வெற்று காகிதச் சுரைக்காயாகத் தான் இருக்கின்றன.

1978ஆம் ஆண்டு பெல் வளாகக் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் (Y1 No II) என்ற பெயரில் பெல் நிர்வாகமே ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் துவக்கி நிர்வாகமே அதனை நடத்தியும் வருகிறது.

1300 பேர்கள் பணியாற்றினார்கள் என்றால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோரே! இவர்களில் பட்டதாரிகளும் உண்டு. பெல் நிறுவனத்தில் இவர்கள் செய்யாத பணிகளே கிடையாது. 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் கடைசி வரை நிரந்தரப்படுத்தப் படாமலேயே ஓய்வு பெற்றும் சென்று விட்டனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனித உரிமை மீறல் என்றே கூற வேண்டும். மனித உரிமை ஆணையம்கூடத் தலையிடலாம். அவ்வளவு நியாயம் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை எல்லாம் நிறுவனத்துக்குத் தான் (முதலாளிக்குத் தான்) சேவை செய்யத் துடிக்கிறதே தவிர, உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக பச்சை மையால் கையொப்பமிட மனம் மறுக்கிறது.

நெய்வேலி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே ஆணை பிறப்பித்து விட்டது. திருவெறும்பூர் பெல் நிருவாகம் இறங்கி வருமா? இல்லை தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா? 19-4-2013

தமிழ் ஓவியா said...


2ஜி அலைக்கற்றை : நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்து கலைஞர் பதில்


சென்னை, ஏப்.19- 2ஜி அலைக் கற்றைப் பிரச்சினையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கேள்வி :- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அர சால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப் பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக் கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

தி.மு.க. தலைவர் கலைஞர் :- ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?

கேள்வி :- ஆ. ராசா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?

கலைஞர் :- அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோ சனைகளை நான் ஒன்றும் சொல்வ தற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண் டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

கூட்டுறவு தேர்தல்

கேள்வி :- கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டி யிட்டு உண்மைகளைப் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?

கலைஞர் :- நாங்கள் முன்பே கூட்டு றவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக் கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர் கள் இப்போது உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

சாஸ்திரம்

செய்தி: இன்று ராமநவமி. சிந்தனை: ராமன் பிறந்த நவமியும், கிருஷ் ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாளாம் - சொல்லு கிறது சாஸ்திரம்.

கேட்டீர்களா சேதியை?

அட்சய திருதியையில் நகை வாங்கினால் அதிர்ஷ் டம் குவியும், செல்வ தேவதை வந்து குடியிருப் பாள் என்று கிளப்பிவிட் டார்கள் அல்லவா?
இப்பொழுது புதாஷ்டமி யில் வீடு, நிலம் வாங் குங்கள் - விளங்குவீர்கள் என்று கிளப்பி விட்டுள்ளனர்.
முன்னது நகைக்கடைக் காரர்களின் சரடு - பின் னது ரியல் எஸ்டேட்கா ரர்கள் கட்டிவிட்டது.

தமிழ் ஓவியா said...


கழகம் மேற்கொண்ட எதிர்ப்பின் எதிரொலி தமிழ்நாடு தேர்வாணையம் வழிக்கு வருகிறது


சென்னை, ஏப்.19- குரூப்2, குரூப்4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான திருத் தப்பட்ட புதிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய முக்கி யத்துவம் அளிக்கப் பட்டு உள்ளதாக டி.என். பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவ நீதகிருஷ்ணன் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் குரூப்2, குரூப்4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தை அண்மை யில் மாற்றியமைத்தது. புதிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு முக்கி யத்துவம் குறைக்கப் பட்டு இருப்பதாக பல் வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், மேற் கண்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றி யமைக்கப்பட்டு திருத் தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருக் கிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலை வர் ஏ.நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி டி.என்.பி. எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் குறைக் கப்பட்டதாக கருத் துகள் எழுந்தன. சட்ட சபையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், பாடத் திட் டத்தை மறுஆய்வு செய்து தரமும் குறையாமல் அதே நேரத்தில் தமிழ் மொழிக்கு உரிய முக் கியத்துவம் குறைந்து விடாமல் மாற்றம் செய் துள்ளோம்.

தாய்மொழியான தமிழுக்கு உரிய அங்கீ காரம் கொடுத்து இருக் கிறோம். சிறந்த ஊழியர் களை, அதிகாரிகளை தேர்வுசெய்யும் வண் ணம் ஆப்டிடியூட் எனப் படும் திறனறித்தேர்வு பகுதியையும் சேர்த் துள்ளோம். குரூப் 1,2,3,4 தேர்வுகள்

குரூப்1 தேர்வைப் பொருத்தமட்டில் தேர்வு முறை மற்றும் பாடத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நகராட்சி ஆணையர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வா ளர் போன்ற பதவி களுக்காக நடத்தப்படும் குரூப்2 நேர்காணல் தேர்விலும், அதேபோல், பல் வேறு துறைகளுக்கான உதவியாளர் பதவிகளை உள்ளடக்கிய குரூப்2 நேர்காணல் அல்லாத பணி தேர்விலும், குரூப்3 தேர்விலும் அதேபோல் குரூப்4 தேர்விலும் மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் 100 கேள்விகள் கொண்ட பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கில தேர்வு சேர்க்கப்பட்டு உள்ளது.

விஏஓ தேர்வு

கிராம நிர்வாக அதி காரி (வி.ஏ.ஓ.) தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 30 கேள்விகளுக்குப் பதி லாக 80 வினாக்களும், பொதுஅறிவு தாளில் 100 கேள்விகளில் 25 வினாக் கள் கிராம நிர்வாகம் தொடர்பாக கேட்கப்படும். திறனறி வுத்தேர்விற்கான 20 வினாக்களில் மாற்றம் இல்லை.

தேர்வு எழுதுவோர் தமிழை ஆழ்ந்து தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் ஏற்க னவே உள்ள இலக்கணத் துடன் தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டும் என்ற பகுதிகள் கூடுத லாக சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல் பொது ஆங்கிலத்தில் ஆங்கில இலக்கணத்துடன் கூடுதலாக ஆங்கில இலக்கியம், ஆங்கில அறிஞர்களும் தொண்டும் என்ற பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில்..

குரூப்2 மெயின் தேர்வில் தேர்வர் களின் பொது விழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன், தமிழ் மற்றும் ஆங்கிலத் தில் வரைவு எழுதல் ஆகிய திறமைகளை சோதிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கும். திருத்தப்பட்ட புதிய பாடத்திட் டத்தின் மூலம் திறமை வாய்ந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இயலும். புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எஸ்.எஸ். எல்.சி. தரம் கொண்ட குரூப்4, வி.ஏ.ஓ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தமிழிலும் வெளியிடப்படும். இவ் வாறு நவநீத கிருஷ்ணன் கூறினார்.

தமிழ் ஓவியா said...

அறிவுப் பலவீனம்


கடவுள் முதல் சொர்க்க நரகம் வரை,

விழிகளுக்குத் தெரியாத செவிகளுக்குக் கேட்காத

நாசியால் முகர முடியாத

நாவின் ருசிக்கு எட்டாத

தொட்டு உணர முடியாத

ஒன்றைச் சொல்லி அதை நம்ப வைத்து

காலங் காலமாய்

கண்ணாமூச்சி ஆடுவது

ஆத்திகரின் அறிவுப் பலமா ? ?

அப்பாவி மக்களின் அறிவுப் பலவீனமா ?

- செல்வன்

தமிழ் ஓவியா said...

இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?


மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில்.

குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி சொல்லியிருக்கிறது.

வேணுகோபாலன் மட்டுமா சுமக்கப்படுகிறார்? இரண்டு தடியர்களும் அல்லவா அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள்! இந்த மனித உரிமை மீறல்களை இன்னும் அனுமதிக்கலாமா? தமிழக அரசு என்ன செய்கிறது?

இப்பெல்லாம் பார்ப்பனீயம் எங்கெங்க இருக்கு எனக் கேள்வி கேட்கும் அதிமேதாவிகளே, இந்தப் படம் சொல்வதென்ன? வருணதர்மத்தின் அடுக்கில் நான் மேலேதான், நீங்கள் கீழேதான்- எம்மைச் சுமப்பவர்கள் நீங்கள்தான் என்று சொல்கிறார்களே... அதுவும் சங்கர மடம் உள்ள காஞ்சிபுரத்தில்! என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

இஸ்லாமிய நாடுகளில் பகுத்தறிவுப் புயல்

- இளையமகன்

நாத்திகர்கள், பகுத்தறிவாளர்களுக்கு கடவுளுடன் வாய்க்கால் வரப்புச் சண்டை எதுவும் இல்லை. பின் ஏன் கடவுள் மறுப்பைப் பேச வேண்டும்? இந்தக் கேள்வி எழுவது இயற்கைதான். உலக மனிதர்கள் அனைவரும் உடன்பிறப்புகள். வாழும் நிலத்தால், இயற்கைச் சூழலால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஒருவேளை, இடையிடையே கடலே இல்லாமல், ஒரே நீளமாக நிலமாகவே இருந்திருந்தால் இவ்வளவு வேற்றுமைகள் இருந்திருக்காதோ என்னவோ? இத்தனை மதங்கள் இருந்திருக்கக்கூட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். கொஞ்சம் முரண்பாடுகளுடன் மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.

மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதாக மதவாதிகளால் சொல்லப்படுகிறது. ஆனால், மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் நடக்கும் தீமைகளைப் பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. மதங்கள் தொடங்கப்பட்ட காலங்களில் அந்த நாள் சமூகத்துக்கு மதத்திற்கான தேவைகூட இருந்திருக்கலாம். ஆனால், அந்தத் தேவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அப்படியே இருக்குமா என்ன? காலம் மாறும் போது கருத்துகளும் மாறும். இது இயற்கை நியதி. உலகின் இயங்கியல். அதனால்தான் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேவை மாறாமல் இருந்திருந்தால் புதிய மதங்கள் தோன்ற வேண்டிய அவசியம் இருக்காதே!

மதங்களும் காலத்திற்கேற்ப தங்களைச் சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டு தம்மைத் தக்க வைத்துக் கொள்கின்றன. எந்த மதமும் இதிலிருந்து தப்ப முடியாது. இதற்குக் காரணம் பகுத்தறிவின் வளர்ச்சிதான், வேறல்ல. அய்ரோப்பாவின் நோயாளி என வர்ணிக்கப்பட்ட துருக்கியை முஸ்தபா கமால் பாட்சா மாற்றி அமைத்தார். அந்த மண்ணின் இஸ்லாமியர்கள் அதுவரை பின்பற்றிய உடை, மொழி, தோற்றம் என அனைத்திலும் மாறுதல்களைச் செய்தார். அவரைத்தான் அம்மக்கள் துருக்கியின் தந்தை என்றழைக்கின்றனர். பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவுக்கு முஸ்தபா கமால் பாட்சாதான் மானசீகம். ஆனால், ஜின்னாவின் மரணம் அந்நாட்டினை முழு மதவழிப்பட்ட நாடாக மாற்றிவிட்டது வரலாற்றின் சோகம்.

அறிவியல் வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே அந்த மாற்றங்களை அந்நாடுகள் சந்தித்ததென்றால், அறிவியலுடன் தொழில்நுட்ப ஊடகவியலும் அனைத்து மக்களையும் சென்றடைந்து, உலகத்தையே இணைத்து வரும் இந்தக் காலத்தில் மாற்றம் நடைபெறாமலா இருக்கும்?

தமிழ் ஓவியா said...

மிகுந்த கட்டுப்பாடான மதச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சில ஆண்டுகளாக பகுத்தறிவுக் குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே உண்மை இதழில், பாரெங்கும் பரவும் பகுத்தறிவு பாகிஸ்தானை விடுமா? என்ற தலைப்பில் பாகிஸ்தானில் இளைஞர்கள் பகுத்தறிவுக் கொள்கையுடன் மதத்தைத் துறந்து வருவதைப் பதிவு செய்திருந்தோம். ஆண்கள் மட்டுமல்லாமல், அதீத கட்டுப்பாடுகள் காரணமாக இஸ்லாமியப் பெண்களும் இந்த அடக்குமுறைகளை எதிர்த்துத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இரானின் கடவுள் மறுப்பாளர்களும் (கிலீமீவீ) கடவுள் கவலையற்றோரும் (கிரீஸீஷீவீநீ) தங்களுக்கென திறந்துள்ள முகநூல் பக்கத்தில் சுமார் 49000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மதங்களுக்கும், மூடநம்பிக்கைக்கும், பெண்ணடிமைக்கும் எதிரான தங்கள் கருத்துகளை எழுத்து, ஓவியம், புகைப்படம், காணொளி வாயிலாக, மிகச் சரியான தர்க்க வாதங்களோடும், எளிமையாகப் புரியும் விதத்திலும் பகிர்ந்து வருகின்றனர். அறிவியலின் துணையோடு அத்தனை மதங்களையும் தகர்த்தெறிகிறார்கள். பதில் கொடுக்க முடியாமல், தடுமாறி வருகின்றனர் மதவாதிகள். கட்டற்ற இணையதளங்களில் பகுத்தறிவுக் கேள்விகளை எதிர்கொள்ள வக்கில்லாமல், அவற்றிற்குத் தடை கோரவும், அப்படி எழுதுபவர்களைத் தாக்கவும் தொடங்கியுள்ளனர். பகுத்தறிவுக் கருத்து பேசுவோரைத் தாக்குவது காலம் காலமாக நடப்பதுதான். இதற்கெல்லாம் பயந்து அவர்கள் ஒருபோதும் ஒடுங்கிவிடவில்லை என்பதைத்தான் வரலாறு நெடுகவும் நமக்குச் சொல்கிறது. ஈரான், பாகிஸ்தான், டுனிசியா என்று நமக்கு ஆங்காங்கே தெரியும் நாடுகள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய நாடுகளில் பரவலாக பகுத்தறிவுக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

வங்காளதேசத்தில் மதத்திற்கெதிரான கருத்துகளைத் தெரிவித்த தஸ்லீமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டது நாமறிந்தது. இப்போது அங்கே குறிப்பிடத்தக்க அளவில் மதச்சார்பற்றவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் பலர் நாத்திகர்களாகவும் இருக்கின்றனர். வங்காளதேச அறிவுலகில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அங்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதனை மதவாதிகள் மிகுந்த வெறுப்புணர்வோடு எதிர்கொள்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

இவ்வாண்டின் தொடக்கம் முதலே நாத்திகக் கருத்துகளை எழுதும் வலைப்பதிவர்கள், எழுத்தாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. கருத்தைக் கருத்தால் சந்திக்கும் வன்மையற்றவர்களின் நடவடிக்கை இப்படித்தானே இருக்கும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஆசிஃப் என்ற வலைப் பதிவர் மீது மிகக் கடுமையான கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தையும், நபியையும் இழிவுபடுத்துவதாக அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு முன்பும் தொடர்ந்தும் இத்தகைய நிகழ்வுகள் நடந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் வங்காளதேசப் பத்திரிகையாளர்கள். 2004-ஆம் ஆண்டு கவிஞரும் இலக்கியவாதியும், நாவலாசிரியருமான ஹுமாயுன் ஆசாத் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெர்மனியில் மரணத்தைத் தழுவினார்.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நாத்திக எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் எழுந்து வருகிறது மதவாதிகளிடமிருந்து! மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் ஆசிஃப் உள்ளிட்ட மூன்று வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 84 நாத்திக எழுத்தாளர்களின் பெயர்ப்பட்டியலை இஸ்லாமிய மதவாதிகள் வங்கதேச அரசிடம் வழங்கியுள்ளனர் என்றும் அவர்களும் கைது செய்யப்படலாம் என்றும் பத்திரிகைகள் சொல்கின்றன.

தொடர்ந்து பல்லாண்டுகாலமாக வங்கதேச நாத்திகர்களுக்கும் இஸ்லாமிய மதவாதிகளுக்கும் இணையதளத்தில் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. எனினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாத்திக எழுத்தாளர் அஹ்மத் ரஜிப் ஹெய்டர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தும், 1971இ-ல் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையின் முடிவில் ஜமாத்--_எ_ இஸ்லாமி மதவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் மீதும் குற்றச்சாட்டு உறுதியாகி, அவர்கள் தண்டனைக்குட்பட வேண்டியிருக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாலும் இப்போது இந்தப் போராட்டங்கள் வலுத்துள்ளன. வங்கதேச அரசு நாத்திக எழுத்தாளர்கள் சிலரின் வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. இஸ்லாம் மதவாதிகளுக்கெதிராக மதச்சார்பற்ற எழுத்தாளர்களும், அவர்தம் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, மூன்று எழுத்தாளர்கள் கைதுக்கும், வலைத் தளங்கள் தடை செய்யப்படுவதற்கும் எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு எதிராக மதவாதிகளும் பெருமளவில் கூடி, இஸ்லாமுக்கு எதிராக எழுதுவோரை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், இஸ்லாமைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இப்போது உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள், மனிதநேய அமைப்புகள், நாத்திகர்கள் வங்கதேச நாத்திகர்களுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தஸ்லீமா நஸ்ரின் உள்பட பலரும் தங்கள் ஆதரவை மதச்சார்பற்ற எழுத்தாளர்களுக்குத் தெரிவித்துள்ளனர். வங்கதேசம் தவிர மொராக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளிலும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. அதற்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கருத்தைக் கருத்தால் சந்தித்து வளர்ந்ததே இன்றைய உலக வளர்ச்சி. ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்த முழு உரிமை உண்டு; அந்தக் கருத்தை மறுக்கவும் மற்றவர்க்கு உரிமை உண்டு; ஆனால், நீ இந்தக் கருத்தைச் சொல்லாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றார் பெரியார்.

எதையும் நம்பாதே உன் அறிவால் ஆராய்ந்து பார் என்பது பகுத்தறிவு; அறிவியல். ஆனால், நான் சொல்வதை அப்படியே நம்பு; ஆய்ந்து பார்க்காதே என்கிறது மதம். மதவாதிகளோ மதங்களுக்கு எதிரான கருத்துகளையே பேசக்கூடாது என்கின்றனர். மரணதண்டனை கொடு என்று அரசிடம் வேண்டும்போதும், தாங்களே தாக்குதல் நடத்தும்போதும் ஒரு விசயத்தை மதவாதிகளே தெளிவாக ஒப்புக் கொள்கிறார்கள்.- அது கடவுள் இல்லை; அதற்குச் சக்தி இல்லை. எனவேதான் நாங்கள் அரசிடம் முறையிடுகிறோம் என்பதுதான்.

எந்தக் காலத்திலும் -அறிவு _ மதவாதத்திற்கும்- _ஆதிக்கத்திற்கும் அடங்கியிருக்காது. உலகத்தின் வளர்ச்சிக்கு மதங்கள் மடிவதும், மனிதம் வளர்வதும் இன்றியமையாதது. காலம் அதைநோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மதவாதிகளின் பதற்றம் நமக்கு உணர்த்துவது மதம் ஆட்டம் காண்கிறது என்பதையே! நாமும் அதையே எதிர்பார்க்கிறோம்.

இன்னும் வேகமாக பகுத்தறிவுக் கருத்துகள் பரவ எதிர்ப்பு அவசியம்தானே. முடிந்தால் அறிவுத் தளத்தில் நின்று மோத மதவாதிகள் தயாராகட்டும். -பகுத்தறிவாளர்கள் தயார்! இல்லையேல், உலகம் மதவாதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு முன்னேறிக் கொண்டேயிருக்கும். மற்றபடி, இந்த மிரட்டல் வன்முறை, மரணதண்டனை எல்லாம் அறிவு வளர்ச்சியை ஒரு நாளும் தடுக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

உடலின் செல்கள் சொல்வதேன்ன?

நலம் என்பது ஆரோக்கியம் _ நோயற்ற வாழ்வு. உங்கள் உடலுடைய முழுமையான நலம்தான் _ அதன் பலமாகவும் அமைகிறது.

நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே _ உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிரந்தரமானது. உடற்கட்டு _ பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.

உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது _ விஞ்ஞானம்/ அறிந்து _ உணர்ந்ததை ஏற்றுக்கொள்வது _ அறிவியல்.

நாம் விஞ்ஞான மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையோடு இயைந்த அறிவியல் பாதைக்குத் திரும்புவதே _ முழு நலனைத் தரும். நம் உடலின் மொழி _ இயற்கையோடு தொடர்புடையது. இயற்கை என்றால் என்ன? அது தற்செயல் நிகழ்ச்சிகளின் தொகுப்பு _ என்பது நமக்குச் சொல்லிக் கொடுத்தது _ திணிக்கப்பட்ட பாடம்.

இயற்கை _ தற்செயலானது அல்ல;

அது ஒழுங்கமைவோடு இயங்கும் இயக்கம். இயற்கையின் ஒத்திசைவான இயக்கத்தை _ நம் முன்னோர்களில் பலர் அறிந்திருந்தனர். அவற்றைத் தம் ஆரோக்கிய வாழ்விற்குப் பயன்படுத்தினர். ஆகவே, அவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளாக இல்லை. இயற்கையின் ரகசியங்களை உணர்ந்த அறிவியலாளர்களாக இருந்தனர். இயற்கை தவறு செய்யாது _ என்பதை உணர்ந்து, தெளிவதுதான் அடிப்படைப் பாடம். நாம் இயற்கை என்ற பிரம்மாண்டத்தின் வழியே _ உடலை அறிந்து கொள்வது கடினமானது. நமக்குப் பரிச்சயமான உடலின் மூலம் இயற்கையை அறிய முற்படுவது எளிமையானது.

எந்த உடல்நலக் கோளாறும் இல்லாத ஒருவர் _ தூசு அதிகமாக உள்ள ஒரு பஞ்சாலைக்கோ, தொழிற்சாலைக்கோ செல்கிறார்.

அவருடைய மூக்கு _ தூசி கலந்த காற்றைச் சுவாசிக்கிறது. உடனே ஒரு பலத்த தும்மல் வெளிப்படுகிறது. இந்தத் தும்மலை விஞ்ஞான ரீதியாக ஒவ்வாமை என்று பெயர்வைத்து விடுவது சுலபம்தான். ஆனால், ஏன் தும்மல் ஏற்பட்டது? தூசியை _ மூக்கு உள்ளே அனுமதித்து இருக்குமானால், அது நுரையீரலுக்குச் செல்லும். பல வகையான நாட்பட்ட நுரையீரல் கோளாறுகளை அது ஏற்படுத்தியிருக்கும். தூசியை உள்ளே அனுப்புவது நல்லதா? அல்லது அதை வெளியே தள்ளுவது நல்லதா? உடல் எப்போதுமே _ தனக்குத் தீங்கு விளைவிப்பதை உள்ளே அனுமதிக்காது. அதுதான் உடலினுடைய இயற்கை. உடலிற்குத் தீங்கு விளைவிக்கப் போகும் தூசியை _ தானே கண்டறிந்து, அதனைத் தும்மல் மூலம் வெளியே தள்ளும். இயற்கையை நாம் விளங்கிக் கொள்வது இல்லை.

தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும், தன்னையே குணப்படுத்திக் கொள்ளும் அற்புதமான கட்டமைப்பை உடல் கொண்டிருக்கிறது.

உடலின் செயல்கள் அனைத்துமே _ நம் நன்மையை மையமாகக் கொண்டிருக்கிறது.

- நூல்: உடலின் மொழி

- அ.உமர்பாரூக்

தமிழ் ஓவியா said...

கருத்து


ஜாதி, மதங் களின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் தலைவர்களால் நாடு நிர்வகிக்கப்படுகிறது. அதனால் நான் வாக்களிக்க மாட்டேன். என்னுடைய வாக்குக்கு அர்த்தமில்லாதபோது நான் ஆடு மாடுகளைப் போல வரிசையில் நின்று வாக்களிக்க விரும்பவில்லை. நான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானவன். இந்தியா உண்மையான ஜனநாயக நாடு இல்லை.

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி
மார்க்கண்டேய கட்ஜு
ஆரம்பக் கால சினிமாவை என்னால ஏத்துக்க முடியலை.அப்போ புராண, இதிகாசக் கதைகளையும், நாடகங்களையும் மட்டுமே படங்களா எடுத்தோம். ஆனா, இப்பவும் டிராமா வடிவத்திலேயேதான் சினிமா இருக்கு. வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமாக்களைப் பார்த்துட்டு, `ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரச்சினை இருக்கு. உங்க நாட்டுல `அய் லவ் யூ சொல்றது மட்டும்தான் சார் பிரச்சினையா இருக்குனு கேலி பேசும் அளவுக்குத்தான் தமிழ் சினிமா இருக்கு.

- திரைப்பட இயக்குநர் மகேந்திரன்


எல்லா அரசுகளும் அதனதன் அளவில் செய்யும் கொலைகளுக்கு ஈடாகத் தான் செய்யும் கொலைகளைக் கொண்டு நியாயம் கேட்கப் பார்க்கிறார் ராஜபக்சே.

- ஈழத்துக் கவிஞர் தீபச் செல்வன்

தமிழ் ஓவியா said...

கல்விச் சந்தை - மதிப்பெண் மட்டும் போதுமா?


- க.அருள்மொழி

சமச்சீர் கல்விக்காக சமர் பல நடத்தி உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்விதான் வழங்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லி விட்ட பிறகும் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இடையே ஒரு பனிப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா என்று சந்தேகம். இப்போது பெற்றோருக்கு எந்தப் பக்கம் போவது என்று குழப்பம்.

உள்ளூர்ப் பள்ளிகளெல்லாம் சரியில்லை, திருச்செங்கோடு, நாமக்கல், ஊட்டி, கொடைக்கானல், பள்ளிகளில் சேர்த்து விடுங்கள், உங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆவது உறுதி என்று ஒரு குரல் கேட்கிறது. இதற்கு எதிர்காலப் பலன் ஒன்று உண்டு. அதாவது, அதிக மதிப்பெண் பெற்று பெரிய வேலையில் சேர்ந்தபிறகு பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போவதால் முன்பு நான் விடுதியில் தங்கியிருந்ததுபோல் நீங்கள் விடுதிக்குப் போங்கள் என்று பெற்றோரை அனுப்பிவிடுவதுதான்.

தமிழ் ஓவியா said...

ஒரு காலத்தில் எட்டாக்கனியாய் இருந்த கல்வி இப்போது கரை புரண்டு ஓடுகிறது. மகிழ்ச்சி. எல்லோருக்கும் கட்டாயக் கல்வி. அடடா! இந்தக் கட்டுரையின் நோக்கம், மக்கள் தரமான கல்வி, தரமான கல்வி என்று சொல்கிறார்களே அது என்ன? தரமில்லாத கல்வி என்பது என்ன என்பதைப் பற்றி விவாதிப்பதுதான்.

பணம் கொடுத்து வாங்கும் கல்வி தரமான கல்வி! இலவசமாகக் கிடைக்கும் கல்வி தரமற்றது. இதுதான் மக்களின் மன நிலை. ஏனென்றால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 1. அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். 2. நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.3. ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்.4. அறிவாளிகளாக இருக்கிறார்கள்.

அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்தானா என்பது ஒவ்வொரு முறையும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள், மற்றவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?

சரி மேற்கண்ட தரமான கல்வி என்பதற்கான விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் உடல் நலன் பற்றிய கேள்விக் குறி பெரிதாக எதிரே நிற்கிறது. தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளால் தரமான உடல் நலனைக் கொடுக்க முடியுமா?

மதிப்பெண், மதிப்பெண் என்று மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக்கிய பெருமை மெட்ரிகுலேஷன் பள்ளிகளையே சாரும். போட்டி உலகத்தில் மதிப்பெண் பெறாவிட்டால் மதிப்பிழந்து போவீர்கள் என்று சொல்லிப் பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி இன்னும் சொல்லப் போனால் பலாத்காரம் செய்து மதிப்பெண் பெற வைத்து மாணவப் பருவத்தைச் சீரழித்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். அவர்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்களையும் அதே போல் மதிப்பெண் பெற வைக்க வேண்டிய கட்டாயத்தை ஆசிரியர்கள் மீது அதிகாரிகளும் பெற்றோர்களும் உண்டாக்குகிறார்கள்.

அதிக மதிப்பெண் பெற வைப்பது, அதற்காக உழைப்பது என்பதெல்லாம் முற்றிலும் தவறு என்று நாம் சொல்லவில்லை. அந்த முறைதான் தவறு என்கிறோம். பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் தொடங்கி விடுவதும், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமலே பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை இரண்டாண்டு நடத்துவதும் தனியார் பள்ளிகள் செய்கின்ற அநியாயம். அடித்தளம் இல்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். திரும்பத்திரும்பச் சொல்லிப் பழகி நினைவில் வைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை! (புரிந்து படித்து விரும்பிப் பதியச் செய்து கொள்வதல்ல.)

துல்லியமாக மனப்பாடம் செய்து திரும்ப ஒப்புவித்தால் பாராட்டு உண்டு! இணக்கமாக இல்லை என்றால் தண்டனை உண்டு.

ஓடியாட வேண்டிய பருவத்தில் படி, படி என்று முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் படிப்பு........ மாலை முழுதும் விளையாட்டு என்பதைக்கூட பாடப் புத்தகத்தில் மட்டும்தான் தெரிந்து கொள்கிறார்கள். அதனைச் செயல் வடிவம் கொடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை.

பள்ளியில் விளையாட்டு வகுப்பு கால அட்டவணையில் மட்டுமே. விளையாட அனுமதியில்லை. பள்ளிவிட்டு வந்த பின்னர் பெற்றோர்கள் விடுவார்களா? காசு கொடுத்துப் படிக்க வைக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்? கொடுத்த காசுக்கு மதிப்பெண்ணைப் பெற வைக்க அவர்கள் பங்குக்கு படி, படி, என்று உயிரை எடுப்பார்கள்.

விளையாடாமல் இருப்பதானாலும், பாடச் சுமை தரும் மன அழுத்தத்தினாலும் மாணவர்கள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். விளையாட்டில் பெறும் வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதுவது போல் எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப் பக்குவம் ஏற்படுகிறது. சிறிய தோல்விகளுக்கும் துவண்டு போவதற்கும் வாழ்க்கையையே முடித்துக் கொள்வதற்கும் மதிப்பெண் எந்திரமாய் மாணவர்களை உருவாக்கும் கல்வி முறைதான் காரணம்.

தமிழ் ஓவியா said...


பல தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மாத வருமானம் பள்ளி சொல்லும் கட்டணத்தையும் இதர செலவுகளையும் தயக்கமின்றி செய்யத் தயங்காத அளவிற்கு இருக்கிறதா என்று பார்க்கின்றனர்.

பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கட்டண விலக்குக் கொடுத்தும், ஒரு லட்சம் பணம் கொடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு +2 தேர்வில் எங்கள் பள்ளியின் தரத்தைப் பாருங்கள் என்று விளம்பரம் செய்து, இந்த மாணவருக்குக் கொடுத்த பணத்தை மற்றவர்களிடம் பிடுங்கும் தந்திரம் தனியார் பள்ளிகளுடையது.

சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொல்வதென்னவென்றால், தன்னுடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகள் பலரும் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்பதுதான்.

அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுடைய பின்புலம், வாழ்க்கை முறை, ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி விட்டுச் சென்று தன் தந்தையுடன் கடையிலோ தாயாருடன் வீட்டில் செய்யும் கூலி வேலையிலோ உதவி செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி, கல்வியை மட்டுமல்லாமல் உணவு உடை, பேருந்து, புத்தகம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறது. எதுவுமே இலவசமாக வந்தால் இளக்காரம்தானே? ஏதோ பள்ளிக்குப் போய் வந்தான் என்றால் சரி என்பதோடு அவர்களின் கவனம் முடிந்து விடுகிறது.

நம் மக்களின் கலாச்சாரச் சிந்தனையை இங்கே கவனிக்க வேண்டும். உழைத்துப் பெற வேண்டிய அரிசி, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இலவசமாகப் பெற வேண்டிய கல்வியைக் காசு கொடுத்து வாங்குவதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் காசு கொடுத்துப் படிக்க வைப்பதால் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் பேசி தன்னுடைய குழந்தையைப் பற்றி விசாரிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் இலவசம் என்பதால் அந்தப் பக்கமே தலை காட்டுவதில்லை. உண்மையில் இலவசம் என்றாலும் அது ஒவ்வொரு பெற்றோரும் மற்றோரும் கொடுக்கக் கூடிய வரிப் பணம்தானே? கல்விக்கென்றே பல பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதே? அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவாவது கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் அரசுப் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் கட்டணம் என்பது அதிகப்படியான இரண்டாவது கட்டணம் என்ற உண்மை இவர்களுக்கு எப்போது புரியும்?

தமிழ் ஓவியா said...

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அங்குள்ள கல்வித்தரம் பற்றியும் கழிப்பிடம், நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும், தரமும் வசதியும் சரியில்லை என்றால் கேட்டுப் பெறவும், புகார் செய்யவும், வசதிகளை ஏற்படுத்தச் செய்யவும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால், காசு கேட்கும் தனியார் பள்ளிகள் பலவற்றில் பல அடிப்படைக் குறைபாடுகள் இருந்தாலும் கல்வி தரமாக இருக்கிறது என்பதால் (இருப்பதாக நினைத்துக் கொண்டு) வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். வேலூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் சிமெண்ட் தொட்டியில் குடி நீர் என்று எழுதி வைத்திருந்தது. அதனைக் குடிக்கலாம் என்று வாயில் ஊற்றினால் கடல் நீரைப் போல உப்புக் கரித்தது. அதே பள்ளியின் கட்டடங்களுக்குக் குறுக்கே தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டை இருந்துதானே மாணவி பலியானாள்?

இது போல பல பள்ளிகளைப் பற்றி பல செய்திகள் உண்டு. குறை சொன்னால் தன் பிள்ளைகளுக்குச் சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்தில் பேசாமல் வந்து விடுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இதுபற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. அடிப்படை வசதிகள் என்றால் வகுப்பிற்கு மாதம் 1000 ரூபாய் கட்டணம் வாங்கும் பள்ளியின் வசதியும் 100 ரூபாய் வாங்கும் பள்ளியின் வசதியும் வேறுபடுவது போல் அரசுப் பள்ளிகளின் வசதிகளும் மாறுபடும்தான். வசதி இல்லை என்றாலும் சும்மா இருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
கிராமம் முதல் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள எல்லா ஆங்கில வழிப் பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? முக்கியமாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியுமா? ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்கூட ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். பேசுவதுதான் முக்கியப் பிரச்சினை.

தமிழ் ஓவியா said...

ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும்தானே?
ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கில வழியில் படிப்பதைவிட ஆங்கிலோ இந்தியர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் பழகிக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியர்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் பெண்கள் எவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுகிறார்கள் தெரியுமா? அவர்கள் அறிவாளிகள் வரிசையில் வருவார்களா?

ஒழுக்கம் என்பதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அணியும் உடையைப் பற்றி நிறைய பேர் பேசுவார்கள். வெப்பப் பிரதேசத்தில் ஷூ, டை அணிந்து கொள்வது ஒழுக்கமா? அவஸ்தையா? இன்னொன்று ஆங்கிலத்தில் பேசினால் கெட்ட வார்த்தையாகத் தெரியவில்லையோ என்னவோ? , என்பதும் இன்னும் பலவும் அடிக்கடி ஆங்கில வழி மாணவர்கள் பேசும் வார்த்தைகள்.

இன்றைக்கு டேட்டிங் என்று சொல்லி ஊர் சுற்றுவதும் யார்? இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? சில பள்ளி முதலாளிகள், தன்னுடைய பள்ளி மாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்களுடன் சேராதீர்கள். அவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள், அரசுப் பள்ளி மாணவிகள் முறையற்ற உறவால் கர்ப்பமாகி விடுகிறார்கள் என்று நவீன தீண்டாமையைச் சொல்லித் தருகிறார்கள். கல்விக்கட்டணம் செலுத்த முடியாதவர்களை மனிதர்களாகவே மதிக்காமல் அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்தப் புதிய மனுவாதிகள், கல்வியில் வர்ணபேதம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

அரசுப் பள்ளிகள் பற்றிய குற்றச்சாட்டிற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், மவுனம்தான். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. (இது அதிக சம்பளம் என்று சொல்லவில்லை.) ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தன்னுடைய அறிவையும் தகுதியையும் அதிகப்படுத்திக்கொள்ள நூல்களை வாங்கிப் படிக்கிறார்களா? என்றால், இல்லை! இதனால் இவர்களுக்கே இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதைவிட அசிங்கம் இவர்களுக்கு இல்லை.

இப்போது ஆசிரியர்களாக இருக்கும் பலரும் ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தவர்கள்தான். இவர்கள் ஏன் உயர்ந்த பதவிக்குப் போக முடியவில்லை? அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வாக முடியாமல் போன பல்லாயிரக்கணக்கான பேரும் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை. தமிழும் சரியாகத் தெரியவில்லை. பொது அறிவில் பொதுவாக அக்கறையில்லை.

இப்போது அரசு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாம். தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று புரட்சிக் கவிஞர் சொன்னது போல் தமிழ்நாட்டின் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ் இல்லாமல் போகப் போகிறது. கல்விச் சந்தையில் அரசுக்கும் தனியாருக்கும் நடக்கும் போட்டியில் விலைபோகாச் சரக்காகிப் போகுமா தமிழ்?

ஆங்கிலத்தை அறிந்து கொள்வதற்குப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டுமே தவிர பாட வழியையே மாற்றுவது பலன் தராது. தாய் மொழியை இலக்கண வகுப்பை நடத்திவிட்டுப் பிறகு பேசக் கற்றுக் கொடுப்பதில்லை. வீட்டருகில் தெலுங்கோ இந்தியோ பேசுகிறவர்கள் இருந்தால் அவர்கள் பேசுவதைக் கவனித்து நாமும் அந்த மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறோம். அதுபோலவே ஆங்கிலத்தைப் பேசுவதிலிருந்து இயல்பாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

அதை விட்டு, முதலில் எடுத்தவுடனே டென்ஸ், வாய்ஸ், என்று ஆரம்பித்தால் நம் மாணவர்களுக்கு டென்ஷனில் வாய்ஸ் வரமாட்டேன்கிறது. அயல் மொழியான ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளும் வேகத்தில் தாய் மொழியைத் தவற விட்டுவிடக் கூடாது. தாய் மொழியைக் காப்பாற்றாத தறுதலை இனமாகத் தமிழினம் தாழ்ந்துவிடக் கூடாது.

தமிழ் ஓவியா said...

கவிதை - இங்கிலீஷ்லிருந்து . . .


கவிதை - இங்கிலீஷ்லிருந்து . . .

மன்னிப்புக் கோருகிறேன் - நஜ்ரின் ஃபஸல்

மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டிய மாபெரும் குற்றம் ஒன்றை இழைத்துவிட்டதற்காக!

தவறான குரோமோசோம்களோடு (பெண்ணாகப் ) பிறக்க நேர்ந்ததற்காக நான் வருந்துகிறேன். என் தரப்பு நியாயம் என்னவெனில் XX விரும்புகிறாயா, XY வேண்டுமா என்று தேர்வு செய்யுமாறு

என்னிடம் கேட்கப்படவில்லை! எனது சொந்த விருப்பம் XY அதுதான் வீதிகளில் வெப்பமூட்டுகிறது என்பது என் காதில் விழுகிறது.

எனது மார்பு தட்டையாக இல்லாது போனதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எனது இடுப்புகள் வளைந்திருப்பதற்காகவும்!

எனக்குப் புரியாதிருக்கிறது

எனது உடல் கவனத்தை ஈர்க்கிறது என்பது. சொல்லப் போனால்
கவனத்தைக் கோருவதாகவும் இருக்கிறது.

மன்னிக்கவும் உங்களது முரட்டுத்தனமான கடந்து போதலை ஒரு பவ்வியமான புன்னகையோடு நான் எதிர்கொள்ளாது போய்விட்டேன்.

ஆனால், இப்போது எனக்கு நன்றாகவே புரிகிறது பொதுவிடங்களில் நான் தோன்றுவதற்காக மன்னிப்புக் கோருகிறேன். என் மீது ஒரு முரட்டுத் தாக்குதல் நிகழாதிருக்க வேண்டுமானால் நான் எவ்வளவு எச்சரிக்கையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்...

ஒவ்வொரு முறை நான் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கும் போதும் உங்களுக்குள் இருக்கும் குகை மனிதனை உசுப்பி விடுகிறேன் என்பதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

எனது சகோதரி தனக்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்டதால் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

அது அவளது குற்றம் அல்லவா!

//புது தில்லி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு அவளே பொறுப்பு என்று சிலர் (அதிலும் பெண்மணி ஒருவர்) சொன்னதில் ஏற்பட்ட அதிர்ச்சியில், மீடியா மற்றும் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ் இறுதியாண்டு மாணவியான நஜ்ரீன் ஃபஸல் எழுதிய இந்தக் கவிதை தி ஹிந்து நாளேட்டின் ஞாயிறு திறந்த பக்கத்தில் (03-02-2013) வெளியாகி உள்ளது. //

தமிழில்: எஸ்.வி.வேணுகோபாலன்

தமிழ் ஓவியா said...

குடிசைவாசிகள்


இந்தியாவில் 6.80 கோடி மக்கள் குடிசைகளில் வசிப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. 10 லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 19 நகரங்களில் வசிப்பவர்களில் 25 சதவிகித மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மகாராஷ்டிரா, உ.பி. மற்றும் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர்.

இதில், 90 சதவிகித குடிசை மக்களின் வீட்டில் மின்சார வசதி உள்ளது. 8.2 சதவிகிதத்தினர் மண்ண்ணெய் விளக்கு பயன்படுத்துகின்றனர். விளக்கு வசதி இன்றி 0.5 சதவிகிதத்தினர் உள்ளனர்.

74 சதவிகித குடிசை மக்கள் குழாய்களுடன் கூடிய குடிநீர் வசதியையும் 20.3 சதவிகிதத்தினர் கைப்பம்புகளுடன் கூடிய தண்ணீர் வசதியையும் பெற்றுள்ளனர்.

66 சதவிகித குடிசைகளில் கழிப்பறை வசதி உள்ளது. 18.9 சதவிகித மக்கள் திறந்த வெளியை கழிப்பிடங்களாகவும் 15.1 சதவிகிதத்தினர் பொதுக் கழிப்பிடங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

முற்றிலும் குடிசைப் பகுதியாக மேகாம், பெர்வா, ஹாஜன், குய்மோ மற்றும் ஃபிரிசல் ஆகிய 5 நகரங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளன. உ.பி.யில் 3 ஊர்களும், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஓர் ஊரும் முழு குடிசைப் பகுதிகளாக உள்ளன.

தமிழ் ஓவியா said...

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்


பூசை : ஆகம ஆதாரங்கள் இல்லை

நூல்: கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்

ஆசிரியர்: நீதியரசர் ஏ.கே. ராஜன்

வெளியீடு: சேது பப்ளிஷர்ஸ்,

ஷி - 79, அண்ணாநகர், சென்னை - 600 040.

தொலைப்பேசி: 044 - 2626 7992

பக்கங்கள்: 88 விலை: ரூ.40/-

ஆகம முறைகளும் வைதீக முறைகளும்:

தெய்வங்களுக்கு உணவு படைக்கும்போது, உணவு வகைகளை நேரே தெய்வத்திற்குக் காட்டுவதால் (படைப்பதால்), அத்தெய்வங்கள் அவற்றை உண்டுவிடுவதாகக் கருதப்படுவது, செய்முறை வழக்கமாகும். அவை நிவேதனம், நைவேத்யம் அல்லது நெய்வேத்யம் எனப்படும். இவையே ஆகம பூசைகளாகும்.

அவ்வாறு உணவை அப்படியே கடவுளுக்குப் படைக்காமல் அதை ஹோம குண்டங்களில், எரியும் நெருப்பில் இட்டு, அக்கினி பகவான் அவற்றை அந்தத் தெய்வங்களுக்குக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படுவது வைதீக முறை பூசை ஆகும். அர்ப்பணிப்பவை அனைத்தையும் அக்கினி மூலம் செய்வது வைதீக முறை பூசை ஆகும்.

கருவறை, அர்த்த மண்டபம் முதலானவை:

ஆகம முறைப்படி கோயில்கள் எவ்வாறு, எங்கே கட்டப்பட வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டின் தலைசிறந்த ஸ்தபதியும், சிற்பியும், கோயில் கலைஞருமான திரு. கணபதி ஸ்தபதி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒவ்வொரு கோயிலிலும் கருவறை (கர்ப்பக்கிரஹம்) இருக்க வேண்டும். கருவறையின் முதற்பாதி அர்ச்சனா மண்டபம்; இரண்டாம் பாதி அர்த்த மண்டபம்; அர்த்தம் என்றால் பாதி என்பது பொருள்; அர்த்த மண்டபம் என்பது கருவறையின் ஒரு பகுதிதான். கருவறைக்கு அடுத்து உள்ள ஒரு சிறுபகுதி -_ அகமண்டபம்; அதை ஒட்டி முக மண்டபம் இருக்க வேண்டும்; அதனை அடுத்து மகா மண்டபம்; அதற்கடுத்து கொடி மரம் இருக்க வேண்டும். இவை தவிர சைவ ஆலயங்களில் பலி பீடமும், நந்தியும் இருக்க வேண்டும். வைணவ ஆலயங்களில் நந்திக்குப் பதிலாக கருடாழ்வார் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தால்தான் அக்கோயில் ஆகமக் கோயில் என்று கருதப்படும்.
ஆகமக் கோயில் அல்லாதவை:

மேலும் அவர், இந்த விதிகளின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகமப்படி அமைக்கப்பட்ட கோயில் அல்ல; அதுபோன்றே, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் ஆகமப்படி அமைக்கப்பட்ட கோயில் அல்ல; இவை போன்றே ஆகமப்படி அல்லாத, அல்லது சிலவற்றில் ஆகமங்களிலிருந்து மாறுபட்ட கோயில்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. பிள்ளையார்பட்டி கணபதி கோயிலும் இந்த வரிசையில் அடங்கும் என்றும் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...


பெரும்பாலான கோயில்களில் ஆகம விதிமுறை மீறல்கள், முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான முரண்பாடுகள் அனைத்தும் அந்தந்தக் காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த மன்னர்களின் விருப்பத்திற்கேற்பவும், பக்தர்களின் விருப்பத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் மாற்றப்பட்டவை என்பதை அறியலாம். இதுபோன்ற ஆகம விதி மீறல்களையும், ஆகம மாற்றங்களையும் சமுதாயமும், சமய அமைப்புகளும் எந்த எதிர்ப்பும் இன்றியும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். அவற்றிற்கெல்லாம் முக்கியக் காரணம், ஆகமம் என்பது நடைமுறையில் தொடர்ந்து வந்த வழக்கம் என்பதுவே அன்றி வேறில்லை.

தற்போதுள்ள நடைமுறையில், ஆகம விதிகளின்படி கட்டப்படாத சில கோயில்களில் ஆகம முறை பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்கள் சிலவற்றில், ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுவதில்லை. பல கோயில்களில் ஆகமங்கள் மாற்றமடைந்துள்ளன. ஆகம முரண்பாடுகள் மற்றும் ஆகம மீறல்களும் காணப்படுகின்றன என்பதே ஆகம வல்லுநர்களின் முடிவாகும். அர்ச்சகர்கள்:

சைவக் கோயில்களில், ஆகமத்தில் ஓரளவே தேர்ச்சி பெற்றவர்கள், ஓரளவே அறிந்தவர்கள் அர்ச்சகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நித்திய பூசைகளை மட்டும் செய்யலாம். நடைமுறையில் சில வேளைகளில், சிவாச்சாரியார்களின் ஆணைப்படி நைமித்திய பூசைகளையும் செய்கிறார்கள். அதாவது, தேவைப்படும்போது மாற்றிக் கொள்கின்றனர். ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களுக்கு மூலவரைத் தொட்டு அபிஷேகம் செய்வதற்கோ, அலங்காரம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்வது ஆகம விதி மீறல்களாகும். ஆனால், அவ்வாறான விதி மீறல்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலிலும் நிகழ்கின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது கோயில்களில் உள்ள நடைமுறைகள் குறித்து, சைவ, வைணவ மடாதிபதிகள், வேதபாடசாலைகள் நடத்தும் ஆசிரியர்கள், ஆகமங்கள் அறிந்தோர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றைச் சுருக்கமாக கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்:-

1. ஆகமங்கள் எவற்றிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் பூசை செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

2. சைவக் கோயிலானாலும், வைணவக் கோயிலானாலும், அம்மன் கோயிலானாலும் அர்ச்சகர்களாக பூசை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் தகுதியுண்டு என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

3. வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்த பலர், ஒரு குறிப்பிட்ட முறைப்படி பலகாலம் பூசை செய்து வந்ததனால், அவர்கள் ஒரே இனமாகக் கருதப்பட்டுவிட்டனர். அதற்குக் காரணம் அர்ச்சகர்கள் தந்தை, மகன் என வழி வழியாக நியமிக்கப்பட்டு வந்ததுதான்.

4. ஸ்மார்த்தம் என்ற தனிச் சமயத்தைச் சார்ந்தவர்கள் சைவ, வைணவ மற்றும் அம்மன் கோயில்களில் பூசை செய்து வருகிறார்கள். இந்நிலை ஆகம மீறல் இல்லை எனும்போது சைவ, வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள், எந்த ஜாதியினராயினும், அவரவர் சமயத் திருக்கோயில்களில் பூசை செய்வது ஆகம விதி மீறல் ஆகாது.

5. ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் அல்லது அவர்கள் வழி வந்தவர்களே பூசை செய்து வந்ததைச் சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்குத்தான் பூசை செய்ய உரிமை உள்ளது என்றும், அதுதான் ஆகம விதி என்றும் தீர்மானிக்க இயலாது.

6. ஒவ்வொரு இந்து சமயத் திருக்கோயிலிலும் பின்பற்றப்பட வேண்டிய ஆகமங்கள் (நடைமுறைகள்), பூசை முறைகள் முதலியன அந்தக் கோயிலில் அர்ச்சகர்கள்/ பூசாரிகள் ஆக நியமிக்கப்படுபவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தந்தக் கோயிலில் பின்பற்றப்படுகின்ற கால பூசைகள், செய்முறைகள், மந்திரங்கள் ஆகியவற்றை அவர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

7. கோயிலில் பூசை செய்பவர் அக்கோயிலைத் திறப்பது முதல் இரவு நடை சாத்தப்படும் வரை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியதும், அதற்கான மந்திரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதும்தான் அர்ச்சகராவதற்கான அடிப்படைத் தேவையாகும்.

8. சைவக் கோயில்களில் சைவ சமயத்தைச் சார்ந்தவர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படலாம். வைணவக் கோயில்களில் வைணவர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படலாம்.

9. அம்மன் கோயில்களைப் பொறுத்தமட்டில், சைவம் சார்ந்த அம்மன் கோயிலில் சைவர்களும், வைணவம் சார்ந்த அம்மன் கோயிலில் வைணவர்களும் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்.

10. ஆகமங்கள் வேதங்கள் அல்ல, நடைமுறை வழக்கமே. நடைமுறையில் சில நேரங்களில் வேத, மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டும் என்பது வழக்கத்தின் அடிப்படையில்தான்.

தமிழ் ஓவியா said...

ஜேம்ஸ் வாட்சன்


ஜேம்ஸ் வாட்சன் ஓர் உயிரியலாளர்; மரபுக்கூறு வல்லுநர்; டி.என்.ஏ. (D.N.A.) என்ற மரபு அணுவின் அமைப்பை பிரான்சிஸ் கிரீக் என்ற மற்றொரு அறிவியலாளருடன் சேர்ந்து 1953ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர். 1962ஆம் ஆண்டில், வாட்சன், கிரீக் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் சேர்த்து, உடலியலுக்கான (Physiology) நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

வாழும் பொருட்களில் (Living material) செய்தி மாற்றங்களுக்கு நியூக்லிக் ஆசிட்டால் ஆன மோலிக்யூலியா அமைப்பும் அதன் குறிப்பிடத்தக்க செயல்பாடும் என்ற அவரது கண்டுபிடிப்புகளைப் பாராட்டி, அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினோஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஜேம்ஸ் வாட்சன் பிறந்தார். ஜூன் மிட்செல் மற்றும் ஜேம்ஸ் டி. வாட்சன் தம்பதியினரின் ஒரே மகன் அவர். அவரது தந்தையார், ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவர்; வரி வசூலிப்பாளர். அவர் கத்தோலிக்க மதத்தினராக வளர்க்கப்பட்டார். பின்னொரு கட்டத்தில், அவர், கத்தோலிக்க மதத்திலிருந்து விடுபட்டது என் வாழ்நாளிலேயே நான் அடைந்த நல்வாய்ப்பாகும். ஏனென்றால், எனது தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்ததுதான் என்று சொல்லியிருக்கிறார்.

வாட்சன் பொதுப் பள்ளியில் படித்து, அவருடைய சம காலத்தவரைவிட முந்தி பட்டம் வாங்கியுள்ளார். 15ஆவது வயதிலேயே, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1950இல் விலங்கியல் துறையில் அவர் பி.எச்.டி. (Ph.D) பட்டம் வாங்கியபோது அவருக்கு வயது 22. மேல் படிப்பு ஆராய்ச்சிக்காக அவர் கோப்பன்ஹேகம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அந்தக் காலத்துக் கருத்துப்படி, மரபுக்கூறுகள் (Genes) புரோட்டீன்களால் ஆனவை; தங்களுக்குள்ளேயே தங்களைப் பெருக்கிக் கொள்ளும் டி.என்.ஏ. (D.N.A) என்று சொல்லப்படும், குரோமோசோமின் மற்றொரு முக்கியப் பகுதியானது, ஒரு கிறுக்குப் பிடித்த டெட்ரா நியூக்லியோ டைய்டு (Stupid tetra newcleotide) புரோட்டின்களின் ஆதரவுக்கான கட்டுமானத்திற்கு உதவி வருவன.

தமிழ் ஓவியா said...

அந்த ஆரம்பக் காலத்திலேயே அவர் டி.என்.ஏ.தான் ஜெனரிக் மோலிகுயிள் (Generic molecule) என்பதை அறிந்திருந்தார். பிறகு விளக்கப்படக்கூடிய ஓர் உறுதியான மோலிக்யூலர் கட்டுமானத்தை டி.என்.ஏ. பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

கிரீக்குடன் சேர்ந்து வாட்சன் கேவன்டீஷ் ஆய்வகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டி.என்.ஏ.வின் இரட்டை ஹெலிக்ஸ் அமைப்பைப் புரிந்துகொண்டார். அந்தக் கண்டுபிடிப்பின் முதல் அறிவிப்பு செய்யப்பட்டபோது, அது பத்திரிகைகளில், சரியாக வெளியிடப்படவில்லை.

பிறகு, இயற்கை (Nature) என்ற அறிவியல் இதழுக்கு ஆய்வுக் கட்டுரை அனுப்பினார். மற்ற உயிரியல் (Biology) வல்லுநர்களும், நோபல் பரிசு பெற்றவர்களும், அது 20ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு என்று பாராட்டினர். நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள நினைவுப் பலகையில் அவரது சாதனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1968ஆம் ஆண்டில் வாட்சன், கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தில் (Cold Spring Harbour Laboratory) ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன் தலைவர் ஜிம் வாட்சன், ஓர் ஆராய்ச்சிச் சூழ்நிலையை, அறிவியல் உலகத்தின் எந்தவொரு சூழலுடனும் ஒப்பிட முடியாததாக அமைத்து இருக்கிறார். அவருடைய தலைமையின் கீழ்தான் புற்றுநோய்க்கான ஜெனடிக் அடிப்படையின் அமைப்புகளைப் புரிந்துகொண்டு, அதற்கான சில பங்களிப்புகளைக் கொடுத்து இருக்கிறது.

மனிதர்களின் துன்பங்களுக்குக் காரணமான புற்றுநோய் மற்றும் நரம்பு தொடர்பான நோய்கள் ஆகிய வியாதிகளைக் கண்டறிந்து செயல்படவும், அவற்றிற்கான சிகிச்சை அளிப்பதற்கும், மோலிகியூலியர் உயிரியல், அதன் ஜெனடிக்ஸ் ஆகியவை பற்றியும் ஆய்ந்து, கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் ஆணையராக, தலைவராக, சான்சலராக இருந்து, வாட்சன் பெரும்பணி ஆற்றியுள்ளார் என்று பாராட்டியுள்ளார். இன்றைக்கு உள்ள நூலகங்களில், பேணி வைக்கப்பட்டுள்ள புனைக்கதை அல்லாத 100 புத்தகங்களில் வாட்சன் எழுதியுள்ள த டபிள் ஹெலிக்ஸ் (The double Helix) என்ற நூலும் ஒன்று. அந்த நூலானது, அறிவியலாளர்கள் மற்றும் அவர்கள் பணிசெய்யும் முறை பற்றி பொதுமக்கள் வைத்திருந்த கருத்தை அப்படியே மாற்றிவிட்டது.

எந்த அளவிற்கு அவர் ஓர் ஊரறிந்த அறிவியலாளராக இருந்தாரோ அந்த அளவிற்கு அவர் மனிதகுலத்தின் மேம்பாட்டில் பெருமளவு ஆர்வம் செலுத்தி வந்தார். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பொழுது, தன்னுடன் பணிபுரிந்த பயோகெமிஸ்ட்ரி மற்றும் மோலிகியூலர் பயாலஜியைச் சேர்ந்த 12 துறைத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற ஒருவரையும் சேர்த்துக் கொண்டு உடனடியாக வியட்நாமிலிருந்து, அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்.
1975ஆம் ஆண்டு ஹிரோசிமா நகரில் அணுகுண்டு வீசிய 30ஆவது ஆண்டு விழாவில், தன்னுடன் 2 ஆயிரம் அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களைச் சேர்த்து, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் போர்டுக்கு - அவரது அணு ஆயுத வளர்ச்சிக் கொள்கைக்கு எதிராகப் பேசினார்.

மக்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்: அறிவியலில் உள்ள வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் என்ற அவரது நினைவுகள் பற்றிய நூலில், பூகோள இயல்படி வேறுபட்டு நிற்கின்ற மக்கள்தொகையில், அறிவாற்றலிற்கு இனம்தான் ஒரு காரணம் என்று கற்பித்ததை அவர் சொல்லவில்லை. அவர் அனைவரும் சமம் என்றே நம்பினார். நிறத்தைக் கொண்டு மனிதனை வேறுபடுத்தக் கூடாது என்று அவர் சொல்கிறார். ஏனென்றால், மிகமிகத் திறமைசாலிகள், மாறுபட்ட நிறமுடையவர்களாக இருக்கிறார்கள்.

1968ஆம் ஆண்டு வாட்சன் எலிசபெத் லீவிஸ் என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு இரண்டு ஆண் மக்கள். அதில் ஒருவருக்கு மனநிலை பிறழ்தல் நோய் இருந்தது. மனநலம் காப்பதற்கான சிசிச்சையில் வளர்ச்சி வேண்டும் என அவர் விரும்பினார். அதற்காக மரபியலின் (Genetics) பங்களிப்பு எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் ஆய்ந்தார். வாட்சன் ஒரு நாத்திகராக இருந்தார். 2003இல் மனிதகுல அறிவிக்கையில் (HUMANIST MANIFESTO) கையெழுத்திட்ட 21 நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களில் வாட்சனும் ஒருவர்.

- தமிழில்: ஆர்.ராமதாஸ்


- நீட்சே

தமிழ் ஓவியா said...

தமிழக அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு!

தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இரு தகுதித் தேர்வுகளிலும், ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களிலும் NCTE வகுத்துள்ள சமூகநீதி தொடர்பான வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறையும் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

1) தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும், (2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14) சமூக நீதி அறவே பின்பற்றப்படவில்லை.

2) 2895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 27.-7.--2012 அன்று வெளியிடப்பட்டது. இதில் பொதுப்போட்டியில் வெற்றி பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை பொதுப் போட்டிக்கான இடங்களில் நிரப்பாமல், அவரவர் சார்ந்த இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பி, பொதுப்போட்டி இடங்கள் என்பது முற்றிலும் முன்னேறிய சமூகத்தினருக்கான இடங்களாக ஆக்கப்பட்டிருந்தன.

3) இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு அளித்த நீதியரசர் நாகமுத்து, ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் பட்டியலை முற்றிலுமாக ரத்து செய்ததோடு, தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் திரு. சுர்ஜித் சவுத்ரி நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தை அடுத்து, அது முற்றிலும் தவறு எனக் கூறிய நீதியரசர், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையும் திரும்பப்பெறவும் உத்தரவிட்டார். (WP 21170 of 2012 dt: 1.10.2012).

அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் அட்வகேட் ஜெனரல், இனி இதுபோல் நடைபெறாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

01.10.2012 அன்று வெளிவந்த இந்தத் தீர்ப்பின்படி, கடந்த 24--.08.--2012 அன்று வெளியிடப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பட்டியலும் நீதிமன்ற ஆணையால் செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது.

4) தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி, பொதுவாக 60%-ற்கு (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150--க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்) ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். பள்ளி நிர்வாகங்கள் (அரசு உள்ளாட்சி, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத) அவரவர் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம்.

5) இத்தேர்வில் வெற்றி பெற்றவர்தான், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். (தனியார் பள்ளிகள் உட்பட)

6) தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் இத்தகுதிச் சான்றிதழ் அவசியம். தற்போது நடைபெற்ற தேர்வில் 19,000 பேர்கள் மட்டுமே தேர்வு என்று அறிவிக்கப்பட்டதால், மீதமுள்ளோர் எந்தப் பள்ளியிலும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடியான தகுதித் தேர்வு முறையினால் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆறரை லட்சம் பேர்கள் (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தோர்) தனியார் பள்ளிகளில்கூட ஆசிரியர் பணியில் சேர முடியாத பெருந்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

7) தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, பிற மாநிலங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனி மதிப்பெண்களை நிர்ணயம் செய்து தேர்வு நடத்தியுள்ளன.
எடுத்துக்காட்டாக,

ஆந்திரா OC 60%, OBC 50%, SC/PH 40%,
ஒடிசா OC 60%, Others 50%.
அஸ்ஸாம் OC 60%, Others 55%, (OBC, SC/ST/PH)
பீகார் OC 60%, Others 55%

8) ஆனால், தமிழ்நாட்டில் பொதுப்போட்டிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 60 விழுக்காடு மதிப்பெண்களை, அனைத்துப் பிரிவினரும், மாற்றுத் திறனாளிகள் உட்பட பெறவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும், (TNTET) சமூகநீதி முறை அடிப்படையிலான தனித்த தகுதி மதிப்பெண்கள் முறை பின்பற்றப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

9) தகுதித் தேர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய முடியாது. ஆனால், அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டிய வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிக்கையை வெளியிடாமலேயே மூன்றே நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 19000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10) ஆனால், பட்டியலின் முழு விவரம் அதாவது பொதுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் என எந்தவொரு பட்டியலும் வெளியிடப்படாமல் இந்தப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பணி நியமன இடஒதுக்கீட்டில், BC, MBC, SC, ST தவிர்த்து BC Muslim, SC அருந்ததியர் மற்றும் அனைத்துப் பிரிவினரிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உண்டு.

கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோர் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு உண்டு. இவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

11) இந்த நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டுள்ள உயர்ஜாதியினரைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களும், பதிவு அடிப்படையில் மூப்பும் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்போட்டியில் இடம் பெறாமல், இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

12) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கணிதம், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் முதல் மதிப்பெண் 142 பெற்ற சித்ரா என்பவர் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 107 மதிப்பெண் பெற்ற சுந்தரி என்பவர் முன்னேறிய சமூகத்தவர், பொதுப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுபோல் 130 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பலரும், இடஒதுக்கீட்டு இடங்களுக்குத் தள்ளப்பட்டிருக்க, வெறும் 90 மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்ற மோசடி, பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திலும் நடைபெற்றிருக் கிறது. சான்றாக, மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், 13.11.2002--இல் பதிவு செய்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், 15.2.2010--இல் பதிவு செய்த முன்னேறிய வகுப்பினர் பொதுப்பட்டியலிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அதிர்ச்சிகரமான விதத்தில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாமலேயே, தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

13) இவை அனைத்தும், முதுநிலைப் பட்டதாரிகள் பணி நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் நாகமுத்து அவர்களின் கடுமையான தீர்ப்புக்குப் பிறகும்கூட துணிந்து செய்யப்பட்ட மோசடிகள்! மேலும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் தனது தீர்ப்பில், ஆசிரியர் தேர்வுக் கழகம் எவ்வாறு இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என விரிவாக எடுத்துக்காட்டி உத்தரவிட்டதற்கு மாறாக இந்த 19000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலை முழுவதுமாக ரத்து செய்ததோடு, புதிய பட்டியல், இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. வேறுவழியின்றி முறையான கட்--ஆப் மதிப்பெண்களை மட்டும் வெளியிட்ட தேர்வு வாரியம், அதன்படி திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிடவில்லை.

கட்--ஆப் மதிப்பெண்களை வெளியிட்ட பின்னும் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக பணி நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில் இடம் பெற வேண்டிய தகுதி வாய்ந்த தாழ்த்தப்பட்டோர், இடஒதுக்கீட்டுப் பிரிவிலேயே (SC) சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுகளையும், ஆதாரங்களையும் வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரியின் திட்டமிட்ட, இந்த மோசடிகளை வெளிக் கொணர வேண்டுமானால், திரு.சுர்ஜித் சவுத்ரி இல்லாத நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து, இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் பணி நியமனங்களையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

14) அதனுடன், உடனடியாக NCTE விதிப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய தகுதி மதிப்பெண்களை தமிழக அரசு அறிவித்து, அதன்படி முன்பு நடந்த இரு தகுதித் தேர்வுகளுக்குமான புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்.

15) கடந்த ஆண்டு செய்யப்பட்ட இந்த 21,000 பணி நியமனங்களையும் (முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் உள்பட) நிறுத்தி வைத்து, ஆசிரியர் பணி நியமனங்கள் தொடர்பான வகுப்புவாரியான காலிப்பணியிட விவரங்களைக் கொண்ட முறையான அறிவிக்கையை வெளியிட்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பில் (01.10.2012) அறிவுறுத்தப்பட்டபடி முறையான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வகுப்புவாரியான கட்-ஆப் மதிப்பெண்களை அறிவித்து, பணி நியமனத்திற்குரிய கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கட்--ஆப் மதிப்பெண்களும், கட்-ஆப் தேதியும்தான் இடஒதுக்கீட்டை, முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றுவதற்குரிய மிகச்சரியான நடைமுறையாகும்! இப்படித்தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) உள்பட மற்ற எல்லாத் துறைகளிலும் நடந்து வருகிறது.

ஆனால், நீதிபதி நாகமுத்து அவர்களின் உத்தரவைப் பார்க்கும்பொழுது திரு. சுர்ஜித் சவுத்ரி இதுவரை கட்-ஆப் மதிப்பெண்களையே வெளியிடாமல் பணியிடங்களை நிரப்பி, மோசடியான முறையில் கடந்த காலத்தில் பல்வேறு பணி நியமனங்களையும் மேற்கொண்டுள்ளார்.

16) 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து 10 மாணவர், மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு சார்பில் தெளிவான திட்டவட்டமான கருத்துகள், தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 87 விழுக்காடு உள்ளனர் என்றும், 1921 முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பான பெரிய வரலாறு இருக்கிறது என்றும், வளர்ந்து வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு மிகவும் அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தமிழ்நாடு அரசின் அண்மைக்கால ஆசிரியர் பணி நியமனம் இடஒதுக்கீடுக்கு விரோதமாக நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசு முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

17) தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணில் இவ்வளவு பெரிய சமூக அநீதி நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டரீதியாக உறுதி செய்யப்பட அந்தக் கால கட்டத்தில் முதல் அமைச்சராகவிருந்த ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையையும் (1993---_1994) இந்த நேரத்தில் நினைவூட்டி, அவசர கதியில் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

நீதியரசர் நாகமுத்து அவர்களின் ஆணைக்குப் பிறகும் அதே தவறுகள்!

“After the order was delivered in open court, the learned Additional Advocate General, made a request to this Court to withdraw the remarks made in paragraph No.230 against the Teachers Recruitment Board. He would submit that in future Teachers Recruitment Board will not commit any such error and since this was the first occasion such kind of examination was conducted, inadvertently those errors have occurred. In view of the said submission made by the learned Additional Advocate General, the remarks made against the Teachers Recruitment Board in the beginning or paragraph No.230 of this order are withdrawn.” (W.P. 21170 of 2012 dt. 1.10.2012)

நீதிமன்றத்தில் நீதியரசர் நாகமுத்து அவர்கள் 1.10.2012 அன்று வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, கூடுதல் அட்வகேட் ஜெனரல், நீதியரசர் அளித்த தீர்ப்பில் பாரா எண் 230-இல் உள்ள குறிப்பிட்ட சில கண்டனங்களைத் திரும்பப் பெறக் கோரி வேண்டுகோள் விடுத்தார். மேலும், இத்தேர்வு முறை முதன்முறையாக இம்மாதிரி நடத்தப்பட்டதால், தெரியாமல் சில தவறுகள் நடைபெற்றுள்ளன. இனி ஆசிரியர் தேர்வுக் கழகம் இது போன்ற தவறுகளை வருங்காலத்தில் செய்யாது என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நீதியரசர் பாரா 230இல் முதலில் குறிப்பிட்ட அந்த வாசகங்கள் திரும்பப் பெறப்பட்டன. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்விலும் நியமனத்திலும் அதே தவறுகள் நடந்துள்ளது எப்படி? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பொறுத்துக் கொள்ளத்தான் முடியும்?

தமிழ் ஓவியா said...

தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் . . .


பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா!. விருந்தைச் சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பாலாவிற்கு என்னவாயிற்று?

கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெருமளவு கல்வி வழங்கியது கிறித்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்ற பெருமளவு கிறித்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்தத் தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம். மாற்றப்பட்டும் இருக்கலாம். ஆனால், இந்துத்துவாவின் ஊதுகுழலாய் மாறி பாலா இப்படி ஒரு காட்சியை வலிய திணித்திருப் பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு எனும் பார்ப்பனப் பரதேசிகளின் கேரக்டரை கிறித்துவ டாக்டர் மீது திணித்து அவர் ரொட்டியை மக்கள்மீது வீசுவதாக அமைத்திருக்கிறார்.

பி.எச்.டேனியல் எழுதிய உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட அத்தியாயத்தைப்பற்றிப் பேசும் எரியும் பனிக்காடு (ஸிணிஞி ஜிணிகி) கதைதான் பாலாவால் பரதேசியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதையான எரியும் பனிக்காட்டில் வரும் கிறித்துவ மருத்துவர் ஆபிரஹாம் சிறந்த மனிதநேயராகவும் தொண்டுள்ளம் பெற்றவராகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார். எஸ்டேட் மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டும் கூலிகளின் நிலையைக் கண்டும் ஆபிரஹாம் வெகுண்டெழுந்தார். நாலணா கூலிக்காக இந்தப் பாவப்பட்ட ஜனங்கள் அரைப் பட்டினியிலும், நோய்க் கொடுமையிலும் நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆப்ரஹாம் பாத்திரம். ஆனால் பரதேசியிலோ, கிறித்துவ மருத்துவர் பாத்திரம் ஒரு காமெடிப் பாத்திரமாக கூலிகளைக் கிறித்துவத்திற்கு மாற்றுவதையே முழு நோக்கமாகக் கொண்ட பாத்திரமாக மாற்றிவிட்டார் பாலா.

வெறும் பஞ்சம் மட்டும் பிழைக்க அந்தச் சமுதாயம் டீ எஸ்டேட் நோக்கிப் போகவில்லை. ஆதிக்க சமுதாயத்தின் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுபடவே அவர்கள் சென்றார்கள் என்பது கங்கானியின் உரையாடலிலேயே தெரியும். நாய்க்கருகிட்டயும், தேவமாருகிட்டயும் நெலம் இருக்கு. அவங்க நம்மள என்ன பாடுபடுத்துறானுவோ? அவங்க வீட்டுப்பக்கம் கூட நம்மள விடமாட்டானுவோ. தண்ணீர் தாகத்துல நாக்கு வறண்டு செத்தாலும் அவுக கெணத்துல இருந்து சொட்டுத் தண்ணி எடுக்கவிட மாட்டானுவோ என்று வேலைக்கு ஆள் பிடிக்கும் கங்கானி கூலிகளைப் பார்த்துச் சொல்வதாக மூலக்கதையில் உள்ளது.

ஆனால், பரதேசியில் பாலாவோ அவர்களை வெறும் பஞ்சம் பிழைக்கப் போனவர்களாகவே காட்டியுள்ளார். படத்தை ரசிக்கவோ பாராட்டவோ முனையும் போதெல்லாம் கிறித்துவ மருத்துவர் வந்துபோகும் காட்சியே கண்முன் வருகிறது.

என்னதான் முக்கி முக்கி படம் எடுத்தாலும் 48 மதிப்பெண்ணுக்கு மேல் போடாத ஆனந்த விகடன் மார்க் அள்ளிப் போட்டிருந்ததைப் பார்த்ததுமே இதில் ஏதோ உள்குத்து இருப்பதை உணர முடிந்தது.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

நிர்வாணம்

செம்பரட்டைத் தலை
தலை முதல் கால் வரை
சாம்பல் பூச்சு!
நிர்வாணக் கோலத்தில்
பெண்டிருடன் நீராடல்
இதற்குப் பெயரா
கங்கையின் கும்பமேளா?
சிறப்பு விளக்கம்
புரியாத புதிரே
அந்த நிர்வாணக்காட்சி!

- உத்திரமேரூர் யு.கே.ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதி வழக்கும் அத்வானியின் பேச்சும்!


டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் 33 ஆம் ஆண்டு நிறுவன தினத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, அயோத்தியா விவகாரத்தில் நமது கட்சி வருத்தப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு பெருமைக்குரிய விசயமாகும். தயக்கம் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.அயோத்தியா குறித்து நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் _ அதன் சிறப்புக்காக நாம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் மன்னிப்புக் கோர வேண்டியதில்லை. அந்த நிகழ்வுக்காக நாம் பெருமைப்பட வேண்டும். என்று பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்தான் உச்ச நீதிமன்றம் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 21 பேர்களின் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய தாமதம் ஏற்பட்டது ஏன்? என்று கேட்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

உ.பி மாநிலத்தின் அயோத்தியில் கரசேவை நடத்தி கடந்த 1992ஆ-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சம்பவத்தின்போது, ராம்கத குஞ்ச் மேடையில் இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (இரு வகுப்பினரிடையே பகைமை ஏற்படுத்துதல்), 153 (பி) (நாட்டின் ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுத்துதல்), 505 (பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற வகையில் தவறான கருத்துகள் வெளியிடுதல், வதந்திகளைப் பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதே பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மீது குற்றச்சதி செய்ததாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பி யும் வழக்கில் சேர்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதான வழக்கில், அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக சேர்க்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பியின் கீழான குற்றச்சாட்டினை தனி நீதிமன்றம் ரத்து செய்து 2001ஆ-ம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2010ஆ-ம் ஆண்டு, மே மாதம் 21-ஆம் தேதி தனிக்கோர்ட்டு உத்தரவினை உறுதி செய்தது. அதே நேரத்தில் பிற பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தமிழ் ஓவியா said...


167 நாட்கள் தாமதத்துக்குப் பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எச்.எல். டட்டு தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உத்தரவிட்டபடி வழக்கு விவரங்களை சி.பி.அய். ஏப்ரல் 1 அன்று தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணையில், சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசின் கூடுதல் தலைமை வக்கீல்) தரப்பால் மேல்முறையீடு தாக்கல் செய்ததில் தாமதம் ஆகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபரின் பிரமாணப் பத்திரம், தாமதம் ஏன் என்பது பற்றி நாங்கள் அறிந்துகொள்ள உதவும். இந்தப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால் அது உங்களுக்கு நல்லதாக அமையும். எனவே, இரண்டு வாரங்களுக்குள் அந்தப் பிரமாணப் பத்திரத்தைத் (சொலிசிட்டர் ஜெனரல்) தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இத்தகைய சூழலில்தான் அத்வானி இப்படிப் பேசியுள்ளார்.

1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இந்துத்துவக் கும்பல் இடித்தபோது, உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் இடித்துவிட்டார்கள் என்று நழுவியவர்கள் இப்போது இப்படிப் பேசுவதற்கு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதே காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தனது பிரதமர் கனவைக் கலைக்க நரேந்திர மோடியை கட்சியின் தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் போன்றோர் முன்னிறுத்தும் வேளையில் தன்னைத் தீவிர இந்துத்துவாவாகக் காட்டிக்கொள்ள அத்வானி இப்படிப் பேசலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. மேலும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அவர்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லாததால் கட்சி பலவீனப்பட்டிருக்கும் நிலையில் தனது பழைய ஆயுதத்தையே பா.ஜ.க. எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு தனது இந்து ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள அத்வானி இப்படிப் பேசியிருக்கிறார் என்றும் டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகிறது.

இந்த அரசியல் காரணங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர், இன்னொரு மத வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் காரணமாக இருந்து விட்டு, அந்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார்.

அதனை இந்த நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், இங்கே மனிதம் வாழுமா? மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்தப் பேச்சை எப்படி நாடு அனுமதிக்கிறது என்ற கேள்வியை மதங்களைக் கடந்த மனிதநேயர்கள் கேட்கிறார்கள். 1992 ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கை 21 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டு போகலாமா? கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?அத்வானியின் இந்தப் பேச்சை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? சுதந்திர இந்தியாவில் அதுவரை நீடித்த மத நல்லிணக்கம் சீர் குலைந்து, மனிதர்களுக்குள் மத உணர்வுகள் தலைதூக்க 1992 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு ஒரு முக்கியக் காரணம் அல்லவா? எங்கே போகிறது இந்தியா?

- அன்பன்

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


காக்கும் கடவுள்?

பெருத்துப் போய்
கோயிலின்
உண்டியல் வயிறுகள்,
கசங்கிய கச்சையில்
ஏழை பக்தனின்
யாசக பிரார்த்தனை.
ஆண்டாண்டு காலமாய்
கல்லாகவே இருப்பதை
எப்படி நம்புவது ?
காக்கும் கடவுளென்று .......

- செல்வன்வேறுபாடு

உண்டு கொழுத்தவன்
திண்ணையைத் தேடுவான்
ஊரை ஏய்ப்பவன்
கோவிலை நாடுவான்.

- கவிமுகில்
வருமோ வாட்டம்

பல தெய்வம் உண்டென்று

பக்தராய் எங்கும் கூட்டம், அதில்

குல தெய்வம் எமதென்று

குடும்பம் குடும்பமாய் ஓட்டம்

சில தெய்வம் உண்டென்று

சிந்தனையில் இல்லை நாட்டம்

உள தெய்வம் அறிவென்று உணர்ந்தால்

ஒரு நாளும் வருமோ வாட்டம்!

- ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி
எதற்கிந்த கவனம்?

கவனத்தில்
குறைவாய் கவனிக்கப்பட்டு
காலமானவரின்
இறுதிச் சடங்கில்
ஒலித்தது ஒரு குரல்
கவனமாய் உடை
தேங்காயை என்று!

_ மலர்மன்னன், முசிறிசமத்துவம்

சமத்துவம் பேசும் நண்பன்
தன் தந்தை வருவதைப் பார்த்ததும்,
டேய் வெளியே போய் நில்லு என்கிறான்.....
எனக்குப் பின் கூடவே
ஒளிந்துகொள்கிறது அவன்
ஜாதியும், சமத்துவமும்......
................
தெருவில் விளையாடும்
குழந்தைகளுக்கு
எப்படியோ தெரிந்திருக்கிறது
நாமமும், பட்டையும்
போடாத குழந்தைகள்
தன் நண்பர்கள் இல்லையென்று......

- தாய்சுரேஷ், கடத்தூர்சமத்துவக் குழந்தை

நிலா காட்டி சோறூட்டும் தாயின் இடுப்பில் அமர மறுத்து,
கதை சொல்லி சோறூட்டும்
ஆயாவின் மடியையே விரும்புகிறது
சமத்துவக் குழந்தை.......

- தாய்சுரேஷ், கடத்தூர்
வழியில்லை

சிலருக்கு
கோவணத்திற்கே
வழியில்லை! - அந்தக்
கோயிலை இடிக்கவும்
வலுவில்லை.

- கவிமுகில்


குடிசை வீட்டுப் பையன்

பணக்கார வீட்டுப் பிள்ளை
ருசி பார்த்த அய்ஸ்க்ரீம் பந்தை
திருப்பி அடித்து அடித்தே
அவனைவிட மிக உயரப் பறந்தான்........
குடிசை வீட்டுப் பையன்.....!

- தாய்சுரேஷ், கடத்தூர்


கயவன் யார்?

கல்லுக்குப் பூப்போடடு
கற்பூர மேற்றி
வணங்க வைத்தவன் யார்?
வடித்த கல்லை வணங்கென்று
முட்டாளாய் ஆக்கிவிட்ட
தன்னலத் தறுதலையாம்
ஆரியனன்றி வேறு யார்?

- கவிமுகில்

தமிழ் ஓவியா said...

மனைமாட்சியருக்கு விழா!


ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.

அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.

மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!.... எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!

இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!

தமிழ் ஓவியா said...

மன்றல்


இனியனும் அரசியும் ஒரே கிராமத்துவாசிகள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்களாய்ப் பழகியவர்கள். கல்லூரிதான் மாற்றம். நட்பில் மாற்றமில்லாச் சந்திப்புகள். இனியன் முதுகலைப் பட்டதாரி. வேலை தேடும் வேலை. இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியப் படிப்பின் இறுதியாண்டு மாணவி அரசி. தேர்வு முடிந்த இறுதி நாள்.

தற்செயலாக, நேரமிருந்தால் வா என்று தனது இல்லத்திற்கு இனியனை அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று வந்தான். பேசினார்கள்.... பேசினார்கள்.....

படிப்பின் போக்குப் பற்றி, பணி தேடும் பணி பற்றி, தங்களின் நட்பின் ஆழம் பற்றித் தொடர்ந்து இருவரின் உரையாடல், நேரம் போனது தெரியவில்லை. ஒரு மணி நேரம் கடந்திருக்கலாம். கடைவீதி சென்ற பெற்றோர் திரும்பினர். வீட்டினுள்ளே வரக்கூடாத பையனைப் பார்த்த தந்தை, தலையில் ஆயிரந்தேள் அயராது கொட்டியது போல் பரபரவென நின்றார். தாயோ, என்ன நடக்குமோவென வெடவெடுத்து நின்றார். பத்து வயது தங்கையோ எதையுமறியாது அடுப்படிக்குள் நுழைந்தாள்.

ஏய்! உன்னையெல்லாம் இங்கே யார் நுழையவிட்டது? போ வெளியே என்றார் கடுமையுடன் தந்தை. அப்பா! இதிலென்னப்பா இருக்கிறது? ஒன்றாகப் படித்தோம்; பழகினோம்; நட்பானோம். வரச் சொன்னேன். வந்தான். இதிலென்ன தப்பு? யதார்த்தமாகக் கேட்டாள் அரசி. தம்பி! நீங்கள் தயவுசெய்து வெளியே போங்கள். குடும்பத்துக்குள் கலவரத்தை ஏற்படுத்தாதீர்கள் என்றாள் தாய்.

எழுந்தான். போய் வருகிறேன் என்ற இரு சொல்லோடு நடையைத் தொடர்ந்தான் இனியன்.


தமிழ் ஓவியா said...

யாரும் சாப்பிடவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. மன்னியுங்கள். உங்கள் ஜாதிப் பெருமைக்கு நான் எந்தவிதக் கேடும் இழைக்கமாட்டேன் என மகள் அரசி தானாக முன் வந்து பேசியதால் வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

வழக்கமாக வீதியில் சந்தித்தார்கள். நடந்தவைகளுக்காக அரசி வருத்தம் தெரிவித்தாள் இனியனிடம். வாரமொன்று கடந்தது. அப்பாவின் திடீர் அறிவிப்பு. மாப்பிள்ளை வீட்டார் இன்று வருகிறார்களென்று.

வந்தார்கள். அமர்ந்தார்கள். பேசினார்கள். ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்கள் அடிப்படையில் தொடர்ந்தது சொல்லாடல்கள்.

வந்தவர்க்குப் பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது. வாய்விட்டுத் தெரிவித்ததால், மகிழ்ந்தார் அரசியின் தந்தை; ஜாதி காப்பாற்றப்பட்டது என்பதற்காக. தவறாக நினைக்காதீர்கள். மருமகளுக்குக் கூடப் படித்த பையனோடு ஏதோ..... தவறான பேச்சு வார்த்தை இருக்கிறதாமே! அது உண்மையா? என்றார் வருங்கால மாமியார்.

அப்படியெல்லாம் ஏதுமில்லை. கூடப்படித்தவர்களோடு சரளமாகப் பேசுவாள். அவ்வளவுதான். என் பொண்ணு நல்ல ஒழுக்கமான பெண் என்றார் அரசியின் தந்தை.

ஒழுக்கமா! கீழ் ஜாதிப் பயலை வீட்டுக்குள்ளேயே கூட்டி வந்து, உட்கார வைத்து நாட்கணக்கில் பேசியிருக்கிறாள். உண்மையா, பொய்யாவென்று உங்கள் பெண்ணையே கேளுங்கள் என்றான் வேகத்துடன் மாப்பிள்ளை.

விரைந்து வந்த அரசி, உண்மைதான். பேசினேன். அதிலென்ன தப்பு? நான் நேர்மையானவள். அவனும் அப்படியே. நாங்கள் எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. நம்புங்கள் என்றாள்.

அக்கம் பக்கத்தார் சொல்கிறார்களே. உங்கள் குழந்தைதானே, அக்காளும் அவனும் பூட்டிய வீட்டுக்குள் இருந்தார்கள். அப்பா கோபப்பட்டுத் திட்டினார் என்று சொன்னாள் என்றாள் வந்தவள்.

வெகுளித்தனமாய்த் தங்கை வீதியில் பெருமை அடித்துக்கொண்டு விட்டாள் விளைவை அறியாமல்.

தமிழ் ஓவியா said...

நம்புங்கள். மாப்பிள்ளைக்கும், நம் ஜாதி ஜனங்களுக்கும் எந்தவிதத் துரோகமும் இழைக்கமாட்டாள் என்றார் அரசியின் தந்தை.

அவள்தான், பேசினேன் அதற்கென்ன? என்கிறாளே. தெரிந்தே சாக்கடையில் விழுவதா? வா அம்மா, போகலாம் என நடையைக் கட்டினான் மாப்பிள்ளையாய் வந்தவன்.

நெடுமரமாய் நின்றனர் அரசியின் பெற்றோர். மரியாதையாய்ப் பேசுங்கள். சாக்கடையாம், யார் சாக்கடை? ஜாதிப் பெருமை பேசி என் தந்தை நின்றதால் நானும் என் உள்ளத்து ஆசைகளை எரித்துச் சாம்பலாக்கி உங்களைக் கட்டிக்கச் சம்மதித்தேன். ஜாதிப் பெருமை தேடி வந்த நீங்களோ, ஒழுக்கம் பற்றி உரையாடல் நடத்துகிறீர்கள். நான் பேசினதற்கே கெட்டுப் போயிருப்பாளோ என நினைத்தால் நாளை எதற்கெல்லாம் ஒழுக்கங்கெட்டவள் எனச் சான்றிதழ் தருவீர்கள்? தெரியாமல்தான் கேட்கிறேன். நீங்கள், இதற்குமுன் எங்கேயாவது ஒழுக்கங்கெட்டுத் திரிந்தீர்களாவென எந்தப் பெண்ணாவது எங்கேயாவது கேட்கிறார்களா? அது என்ன பெண்ணிடம் மட்டும் அந்தச் சோதனை? ஆண்கள் ஒழுக்கமானவர்கள்தான். அதுவும் உயர் ஜாதியென்றால் ஒழுக்கமே ஆடையென அணிந்தவர்கள் என்பதை நாங்கள் வினாத் தொடுக்காமலேயே நம்ப வேண்டும். நம்பிக் கழுத்தில் கட்டுடா, வெட்டுடா என நீட்ட வேண்டும் அப்படித்தானே எனப் பொரிந்து தள்ளினாள் அரசி.

போதும், நிறுத்தம்மா என்றார் மாப்பிள்ளையின் தந்தை. பொறுக்கமாட்டாதவராய் போங்கய்யா என்று விரட்டினார் அரசியின் தந்தை. உங்கள் ஜாதிப் பெருமைக்காக நான் வாங்கிக் கட்டிக் கொண்ட பட்டம் பார்த்தீர்களா அப்பா. நான், ஒழுக்கங்கெட்டவளாம். சாக்கடையாம். பரவாயில்லை அப்பா. உங்கள் சுய கவுரவத்தை எனக்காகத் தானம் செய்ய வேண்டாம். இன்னும்கூட உங்கள் ஜாதியிலேயே வேறொரு மாப்பிள்ளையைப் பாருங்கள். கட்டிக்கொள்ள நான் தயார் என்றாள் அரசி.

என்னை மன்னித்து விடம்மா. ஜாதிப் பெருமையைவிட ஒழுக்கம்தான் மேலானது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒழுக்கம் உடைமை குடிமை என்பார் திருவள்ளுவர். வெளியே போ என்றவுடன் போனாரே அந்த நேர்மையைப் பாராட்டுகிறேன் அம்மா. அம்மா..... அரசி..... அந்தத் தம்பியின் செல்பேசி எண்ணைத் தாம்மா என்றார் தந்தையார்.

எண்ணைத் தந்தாள். தொடர்பு கொண்டார். நீயே வரச் சொல்லும்மா என்று செல்பேசியை மகளிடம் தந்தார். உடனே புறப்பட்டு வாருங்கள், உங்கள் அம்மா, அப்பாவுடன் என்றாள். வந்தார்கள். வரவேற்பு தடபுடலாக நடந்தது.

மன்னித்து விடுங்கள் தம்பி. மேல்ஜாதி என் ஜாதி என்று கூச்சலிட்டேன். உங்கள் நட்பால் என் பெண் பெருமைதான் அடைந்துள்ளாளேயொழிய சிறுமைத்தனம் பெறவில்லை. நீங்கள் சம்மதித்தால் என் பெண்ணையே தங்களுக்குத் தர விரும்புகிறேன் என்றார் அரசியின் தந்தை. பெற்றோர் தலையாட்டச் சம்மதித்தான் இனியன்.

ஜாதிக்காரன் வந்து இழிவாய்ப் பேசுவதைக் காட்டிலும் அவர்களில்லாமல் மணம் முடிக்க ஏற்பாடாகியது. தன் நண்பன் உதவியோடு மன்றல் நிகழ்வில் கலந்துகொண்டு திருமகள் இறையன் தலைமையில், பார்வதி, வெற்றிச்செல்வி முன்னிலையில் மனோரஞ்சிதம்மை அறிவுரையுடன் அரசியும் இனியனும் இணையராயினர்; வாழ்க்கையில் எல்லா நிலையிலும் பாதுகாப்பாயினர்.

- மா.பால்ராசேந்திரம்

தமிழ் ஓவியா said...

மாற்றம்


வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.

பரம்பரையா வாழ்ந்த இடம்... மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே... அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.

வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.

அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.

கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.

கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.

பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.

அய்யனார்க்கே இந்த நிலைமையா?

இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.

அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.

பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.

_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்

தமிழ் ஓவியா said...

தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்! தமிழர்களை உயிரோடு புதைத்த கொடுமை!!

கோத்தபாய ராஜபக்சே பொறுப்பென்று சாட்சியம் அளித்த சிங்களப் பெண்!

கொழும்பு, ஏப். 16- சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண் தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான் இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில் கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர்.

இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும் மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன் றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.

அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.

இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார். அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!


இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை; தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகாமையிலே கோடியக்கரை என்று ஒரு ஊர் இருக்கிறது ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்குச் சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதம் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையைப் பார்த்ததார் என்று சொல்கிறார்கள்.

திரவுபதி மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்லபுரம்; மகாபலுபுரம் என்று தான் சொல் வழக்கு ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்டநகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளைப் பார்த்தால் அங்கே ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும் அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டுப் பார்த்து பாறையையும் தொட்டுப்பார்த்தது அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம்- ஒரு விளக்கம். இவை அத்தனையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக்கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.83 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!


மனைவி செண்பகவள்ளியின் சிலைக்கு தீபாராதணை காட்டும் சுப்பையா

இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ! புதுக்கோட்டை நகரப்பகுதிக்குள் இருக்கும் உசிலங்குளம் ஏழாம் வீதியில் உள்ளவர் சுப்பையா. இவர் தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் தன் மனைவிக்குக் கோயில் கட்டி அதில் மனைவியின் சிலையை நிறுவி மற்ற கோயில்களில் நடக்கும் ஆகம விதிப்படி இங்கும் பூசைமுறைகளைக் கையாண்டு மனைவியை வணங்கி வருகிறார் .

இது குறித்து சுப்பையாவிடம் கேட்டபோது என் அப்பா மன்னர் காலத்தில் கையெழுத்துப் போடத் தெரிந்த காரணத்தால் அப்போதே காவல் துறையில் வேலையில் சேர்ந்து விட்டார் . 1958-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார் . நான் பிறந்தது 1.7.1935இ-ல். என் மனைவி செண்பக வள்ளி பிறந்தது 23.3.1943. அவர் எனக்கு தாய்மாமன் பொண்ணு. ஏழெட்டு வயதாக இருக்கும்போதே என் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். அந்தப் பழக்கமானது வாலிபப் பருவத்திலும் தொடர்ந்ததால் எனது 21-ஆவது வயதில் இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது நான் தொலைபேசித்துறையில் பணி புரிந்து வந்தேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் 5 பெண்குழந்தைகள் 5-என பத்துக் குழந்தைகள் பிறந்தனர் . அவர்களில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இறந்து விட, இருப்பது எட்டுப்பேர் . அனைவருக்கும் திரு மணம் ஆகி விட்டது. அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மக்கள் மருமக்கள் அனைவரும் அர சுப் பணிகளிலும் தொழில்துறை களிலும் இருக்கிறார்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஒருநாள்கூட ஒருவர் மீது ஒருவர கோபப்பட்டது கிடையாது. கடந்த 7.9.2006இ-ல் என் மனைவி செண்பகவள்ளி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் . அவரது பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. இந்நிலையில் அவருக்கு ஒரு கோயில் கட்ட நினைத்து மகன்களிடம் சொன்ன போது யாரும் ஒத்துக் கொள்ள வில்லை. மகள்கள் மட்டும் ஒத்துக் கொண்டார்கள்.

தமிழ் ஓவியா said...

அதன்படி என்மனைவியின் போட்டோவைக் கொடுத்து சிலை செய்யச் சொன்னேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி அவருடைய உரு வத்தை ஒத்து வந்தது. ரூபாய் 2-லட்சம் செலவில் அய்ம்பொன் சிலை கும்பகோணத்தில் செய்யப் பட்டது. திறப்பு விழாவிற்கு மகன்கள் நான்கு பேருமே வர மறுத்து விட்டார்கள். மகள்களும் மருமகன்களும் மட்டும் வந்தாரகள். திறப்பு விழா செய்தேன். இன்றுவரை தினமும் வழிபட்டு வருகிறேன். எனக்கு தெய்வமாய் இருந்து வழிகாட்டி வருகிறார்.

மகன்களுக்கு மட்டும் இந்தக் கோயில் கட்டுவதிலோ வழிபாடு நடத்துவதிலோ விருப்பமே இல்லை. அதனால் எந்தச் செலவுக்கும் பணம் தர மறுத்து விட்டார்கள். ஆனாலும் மகன்கள் பெயர்கள் எல்லாம் வருகிறமாதிரி கிரில் சன்னல்களும் கல்வெட்டுக்களும் வடிவமைத்து விட்டேன். பிற்காலத்தில் அவர்களது பெயர்களும் நிலைக்க வேண்டும் என்பதற்காக. எனது சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் சிலை வடித்தேன் கோயிலும் கட்டினேன். எல்லாமுமாக மூன்று லட்ச ரூபாய் செலவானது.

தமிழ் ஓவியா said...

இப்போதும் தினமும் என் செண்பகவள்ளியை வணங்கி விட்டுத்தான் மற்ற பணிகளுக்குச் செல்வேன். சில நேரங்களில் ஆக மத்திற்காக பூசகரை வைத்து வழி பாடு நடத்துவேன். ஆண்டுக்கொரு முறை மகள்களும், மருமகன்களும் மட்டும் வந்து வணங்கிச் செல் வார்கள் என்றார்.
இந்தச் செயல்பாடுகளில் பல உண்மைகள் தெரிய வரும். கோயில் என்றால் அது என்னவோ பெரிய சக்தி மாதிரி வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையை நாம் உணர வேண்டும். மன்னருக்கு முடிந்ததால் மனைவிக்கு தாஜ்மகால் கட்டினார். இவருக்கு முடிந்ததால் மூன்று லட்சத்தில் கோயில் கட்டியிருக்கிறார் என் பதைத் தவிர வேறொன்றுமில்லை. அதே போல் நான்கு புறமும் சுற்றி வருவதால் இயல்பாகவே ஆண் களுக்கு பக்தியில் நம்பிக்கை இல்லை. ஆனால் பெண்களுக்கு அதை விட்டால் வேறு வழியே இல்லை என்பதுபோலவும் அதே நேரத்தில் அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் என்கிற அளவில் பக்தியைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சுப்பையா மட்டும் மணியடித்துக் கொண்டிருந்தால் யாரும் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் ஆகம விதிப்படி என்று சொல்லி பூசகரை வரவழைத்து பூசைகள் செய்வது. அந்தக் கோயில் இல்லை என்றால் அவர் வேறு கோயிலுக்குச் சென்று மனைவியை நினைத்து உருகிக் கொண்டிருப்பார். மனநிலை பாதிக்கப் பட்டிருப்பார் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.

அதேபோல் இன்றைக்கு உருவாக்கி வைத்திருக்கும் கிரில் கேட்டும் கல்வெட்டும்தான் நாளைய வரலாறு. இன்றைக்கு மகன்கள் வரவில்லை என்றபோதிலும் நாளை அவர்களது பிள்ளைகள் வரும் போது நம் பாட்டி என்று வணங்குவார்கள். அவர்களது பிள்ளைகள் வரும்போது முன்னோர் தெய்வமாக்கப்பட்டு விடுவார் செண்பகவள்ளி. இப்படித்தான் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வோர் இடத்திலும் கோயில்கள் உருவாகி இருக்கின்றனவே தவிர வேறொ ன்றுமில்லை. அந்தக் கோயில்களால் மட்டுமல்ல எந்தக் கோயிலாலும் ஊருக்கும் மக்களுக்கும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நடக்கும் என்பது உண்மை.

அதாவது சிறிய கோயிலாக இருந்து பிரபலமானால் கோயில் பூசகருக்கு மட்டும் வருமானம். அதுவே பெரிய கோயிலாகி விட்டால் பார்ப்பன இனத்துக்கே வருமானம் தரும் கோயிலாக நம் துணையோடு மாற்றப்பட்டு விடும். அதில் பார்ப்பானின் பணமோ உடல் உழைப்போகூட இருக்காது. எனவே கோயில்களின் தன்மை அறிந்து ஒதுங்கிக் கொள்வது ஒன்றே நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் நல்லது.

- - புதுக்கோட்டையிலிருந்து கண்ணன்

தமிழ் ஓவியா said...


எங்கே செல்லுகிறது சமூகம்?


ஒரு மாத விடுமுறை.. தற்காலிக மனைவி.. போகும் போது விவாகரத்து!

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா விலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் பாலியலுக் காக இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்குவது, அந்த காலகட்டத்தில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது விவாகரத்து கொடுத்து விட்டுப் போகும் செயல் சத்தம் போடாமல் அரங்கேறி வருகிறதாம். 17 வயது சிறுமியின் மூலம் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு தாங்கள் மனைவி யாக நடிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

பாலியலுக்கான டூரிசம் இந்த கொடுமைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர் பாலியல் டூரிசம். ஒரு மாதம், 2 மாதம் என மேற் கண்ட நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் பண மூட்டையுடன் இந்தியா வருகின்றனர். இங்கு அவர்கள் விரும்பும் வயதுடைய பெண்களைக தற்காலிக மனைவி களாக்கி பணம் பார்க்கின்றனர் இங்குள்ளவர்கள்.

ஹைதராபாத்தில்தான் அதிகம்

இந்த அக்கிரமச் செயல் ஹைத ராபத்தில்தான் அதிகமாக நடக் கிறதாம். அதிலும் ஏழைகளான, சிறுபான்மையின பெண்களைக் குறி வைத்தே இந்த கொடுமை நடக்கிறது.

வறுமையைப் பயன்படுத்தி...

குறிப்பாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இவர்கள் அடையாளம் கண்டு பணத்தாசை காட்டி வலையில் வீழ்த்துகின்றனர். இந்த செயலில் உள்ளூர் ஏஜென் டுளும் கை கோர்த்து செயல்படு கின்றனர்.

அம்பலப்படுத்திய நவ்ஷீன் தபஸம் 17 வயதான நவ்ஷீன் தபஸம் என்ற சிறுமிதான் இந்த அவல கல் யாணத்தை வெளியில் அம்பலப் படுத்தியுள்ளார். கடந்த மாதம் இவர் ஒரு சூடான் பணக்காரரின் பிடியி லிருந்து தப்பி ஓடி வந்து தனக்கு நேர்ந்த கதியை வெளியில் சொன்னார்.

நான்கு வார மனைவி

கடந்த மாதம்தான் சூடானைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரருக்கு தற்காலிக மனைவியாக அனுப்பப் பட்டார் இந்த சிறுமி. பெற்றோரே வலியுறுத்தி அனுப்பியுள்ளனர். நான்கு வார காலத்திற்கு மனைவியாக இருப்பதற்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 486 பணம் கொடுத்துள்ளனர்.

44 வயது சூடான் பணக்காரர்...

நடந்தது குறித்து காவல்துறையில் தபஸம் கூறுகையில், என்னை ஒரு ஹோட்டலுக்கு எனது அத்தை அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் போல மேலும் சில சிறுமிகள் இருந்தனர். எங்களை சூடானைச் சேர்ந்த 44 வயதான உஸ்மான் இப்ராகிம் முகம்மது என்பவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு சூடானில் கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன ராம்.

கல்யாணம் செய்து வைத்து...

கமிஷன் அடித்து.. பின்னர் அந்த சூடான்காரர் என்னைத் தேர்வு செய்தார். இதையடுத்து எனக்கும், அந்த சூடான்காரருக்கும் ஹைதாரா பாத்தைச் சேர்ந்த ஒரு காஜி திருமணம் செய்து வைத்தார். எனது அத்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். அதில் ரூ. 25,000 எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை அத்தை எனது வீட்டில் கொடுத்தார். காஜிக்கு ரூ. 5,000 கொடுத்தனர்.

அடுத்த நாள் வீட்டுக்கு வந்தார்

திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் சூடான்காரர் எனது வீட்டுக்கு வந்தார். என்னுடன் உறவுக்கு முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை எனது வீட்டார் மிரட்டினர். பிறகு நான் தப்பி வந்து விட்டேன்.

ஆப்பிரிக்கர்களே அதிகம்

தபஸத்தைப் போல பல சிறுமிகளை இப்படிப் பணத்திற்காக தற்காலிக மனைவிகளாக்கி வருவோர் ஹைதராபாத்தில் அதிகம் உள்ளனராம். மேலும் ஆப்பிரிக் கர்களே பெரும்பாலும் அதிக அளவில் பணத்தைக் கொடுத்து தற்காலிக மனைவிகளைப் பெற்று லீவு முடியும் வரை செக்ஸ் நட வடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

மதம், பக்தி என்று எவ்வளவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதே - இவை எல்லாம் இதற்குள் அடங்குமோ!

பாரத புண்ணிய பூமியின் 22 காரட் பண்பாடு இது தானோ!

ஓ, அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி தானே பாரதப் பண்பாடு?

தமிழ் ஓவியா said...


தமிழன் தொடுத்த போர்


(தமிழன் தொடுத்த போர் நூலில், 10ஆம் பக்கத்தில் இருப்பது)

சமஸ்கிருதம் எனும் ஆரிய மொழி, அதனைத் தாய்மொழியாகக்கொண்ட ஆரியர், அந்த ஆரியர் போற்றி வளர்த்த வேத புராண இதிகாசக்கலை, அந்தக் கலையிற் பிறந்த ஆரிய வருணாசிரம நாகரிகம் - இவற்றின் கூட்டுத் தொகைதான் தமிழன் சீர்கேடு.

இதை எந்தத் தமிழனும் - அவன் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி - மறந்து விட முடியாது. ஒரு வேளை சூழ்நிலையின் காரணத்தால் மறுக்க நேர்ந்தாலும் மறுக்க முடியாது. தவறி மறுப்பானாயின் அவன் தமிழனாய் இருக்க முடியாது. எதை வேண்டுமானாலும் தமிழன் பொறுத் துக் கொண்டிருப்பான்.

ஆனால் யாரேனும் தன் உயிர் நாடியை அழிக்கத் தொடங்கினால் - தன் தாய் மொழியை வளமிழக்கச் செய்தால் - தமிழுக்கு ஆபத்துச் சூழ்ந்தால் - அதை மட்டும் அவன் பொறுக்க மாட்டான்.

இது அவனுக்கு வரலாறு புகட்டிய பாடம்.

ஆரிய நாகரிகம் தமிழன் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் முதன்முதல் ஆரியத்தின் நோக்கம் தமிழன் மொழி மீதுதான் பாய்ந்தது.

தமிழன் தன் மொழியை இழந்தால் பிறகு தன் கலையை, வாழ்வை, நாக ரிகத்தை, நாட்டை ஆகிய அத்தனை யையும் இழந்து விடுவான் என்பதை நன்குணர்ந்த அந்த நாள் ஆரியம் எடுத்த எடுப்பில் தமிழ் மொழியை வீழ்த்தத்தான் திட்டமிட்டது,
ஆரியச் சூழ்ச்சியின்

விளைவாகத் திருமுதுகுன்றங்கள்
விருத்தாசலங்களாயின.

மறைக்காடுகள் வேதாரண் யங்களாய் உருவெடுத்தன.

திருக்கழுக்குன்றங்களும் திருவானைக்காக்களும், பஷி தீர்த்தங்களாய் ஜம்பு கேஸ்வரங்களாய் மாற்று வடிவம் அடைந்தன.
நெடுஞ்செழியன் என்றும்

செங்குட்டுவன் என்றும்.

இளமுருகன், இளவழகன், இளஞ் செழியன், இளவெயினி, இராவணன் (இரா. வண்ணன் - கருப்பு நிறத்தான்) என்றும் கண்ணகி காவற் பெண்டு காக்கை பாடினியார் ஒக்கூர் மாசாத் தியார் வெண்ணிக்குயத்தியார் என்றும், கீரன் இளங்கீரன் நச்சினார்க்கினியன் மாறன் பொறையன் ஒரே ருழவன் பிசிராந்தை என்றும், பாசி ஓரி ஆய் அதியமான்

கோச்செங்கணான் கோவூர் கிழான் கரிகாலன் என்றும்,

மாவளவன் மலையமான் மதியழகன் மணிமொழியன் மணக்குடவன் என்றெல்லாம் இனிய அழகிய தூய தண்தமிழ்ப் பெயர் வாய்ந்திருந்த தமிழர்.

ஆரியருடைய மயக்குரையால் ஏமாந்து, அவர்தம் மொழிவழிச் சென்று, அவர் இசைத்ததை இன சத்துத் தம் பெயரைச் சடாசூடி ரரூபன் என்றும்,
சஹஸ்ரநாமம் என்றும்,

ஸ்வயம்பு என்றும்

லஷ்மிகாந்தன் என்றும்

- க.பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


தூக்கமும் சோர்வின்மையும்


சரியான தூக்கமில்லாதவர்கள், சோர்வுடனும், வேலையில் ஆர்வம் இல்லாமலும், அலுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கமுடியும். ஆனால் விஞ்ஞானிகள், சில இரவில் 4 அல்லது 5 மணிநேரமே தூங்குபவர்கள், உடல் நலத்துடனும், சோர்வு இல்லாமலும், எரிச்சல்பட்டு செயல்படாமலும், நம்பிக்கையாளர்களாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும் பருமன் இல்லாத மனிதர்களைக் கண்டு ஆய்வு நடத்தினர். இப்படிப்பட்ட மனிதர்கள், தேனீர், காப்பி போன்றவற்றை குடிக்காமலும், ஒரு நாளில் இடை சிறு தூக்கமில்லாமலும், சலைக்காமல் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்பதை, அமெரிக்க நாட்டு கலிபோர்னியா விஞ்ஞானிகள், கலிபோர்னியாவிலுள்ள ஒரு குடும்பத்தில் உள்ளவரிடம் ஆய்வு செய்தனர். டி.என்.ஏ. சோதனையில் இத்தகையவரிடம் அவர்களின் மரபணுவில் சிறுமாற்றம் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இல்லாத வகையில் உள்ளதைக் கண்டனர். இப்படி குறைந்த தூக்கத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர் 100க்கு 1 இருந்து 3 பேராக உள்ளனர். இவர்கள் டி.என்.ஏ. சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு மூலம் குறைந்த தூக்கமுள்ளவர்கள் மேலும் சில மணி நேரம் தூங்குவதற்கு, உடல் பாதிப்பு ஏதுமில்லாத மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.
- மு.வி. சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...

எங்கே போகிறது பகுஜன்?

15ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டன. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 36 பேர்களில் 18 பேர் பார்ப்பனர்களாம்.

கன்சிராம் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கியதன் நோக்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும்தான்; இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற நோக்கில்தான் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். அந்த அடிப்படையில்தான் மாயாவதி, உ.பி. முதல்வரும் ஆனார். ஆனால் இப்பொழுது என்னடா என்றால் 50 விழுக்காடு இடங்கள் பார்ப்பனர்களுக்காம்! நாடு எங்கே போகிறது? பதவி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே, அது இதுதானோ!

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.
(குடிஅரசு, 26.1.1946)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


பாலியல் வன்கொடுமைகள்

அண்மையில் திருமதி சுனிதா அவர்களின் சொற்பொழிவைக் கேட் டேன். நான்கு வயது சிறுமி யைச் சின்னா பின்னப் படுத்திய வன்கலவிக் கொடுமைக்காரன் பற்றிக் கேட்க நேர்ந்தது.

இதே மாதிரி நிகழ்வுகள் தமிழகத் திலும் நடை பெறுவதை அறிந்து துடிக்காத நல்ல நெஞ்சங்களே இல்லை.விடுதலை, உண்மையிலும் இது பற்றிய செய்திகளைப் பார்த்தேன். பல்லாயிரக் கணக்கானோர் வருத்தப் படுவதுடன் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்திருப்பார்கள்.

திராவிடர் கழகம் மக்கள் கழகம். முன்னோடியாகச் சிந்தித்துச் செயல் படும் சமுதாய அமைப்பு. நாம் இந்தக் கொடுமைகளை வேரோடு சாய்க்க பகுத்தறிவுடன் சிந்தித்து, சிந்திக்க வைத்துச் செயல் பட வேண்டும்.

சிறு வயதில் பாலியல் கொ டுமைக்கு ஆனவர்கள் தான் இந்த மாதிரி மனித நேயமற்றக் கொடுமை களைச் செய்பவர்கள் என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர். இதில் நெருங்கிய உறவினர்களின் திருட்டுத் தனமான பாலியல் வன்முறைகள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மனக்காயத்தை ஏற்படுத்துவ்தும் அதுவே பிற்காலத்தில் இவர்கள் கொடுமைகள் செய்வதற்கு அடிப்படை என்றும் கருதுகிறார்கள்.

சிறு வயதில் பாதிக்கப்பட்டவர்கள் மனக் கொடுமைகளைப் பேசிக் கொட்ட ஒரு அமைப்பு தேவை.மருத்துவர்கள் என்று இல்லாமல் சமூக நீதி ஆர்வலர்கள் ஆங்காங்கே வாரம் ஒரு முறை சந்திக்கவும் , விரும்பியவர்கள் பெயரைச் சொல்லவும், விரும்பாதவர்கள் பெயரைச் சொல்லாமல் குழப்பத்தை மட்டும் எழுதிக் கொடுத்து அதைப் பற்றி அனைவரும் பேசுவதும் பலன் தரும். மன அமைதிக் குழுக்கள் என்று பொதுவாக இருந்தால் அனைவரும் பங்கேற்க முடியும்.
குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழில் போட்டிகள் வைத்து சிறந்த வற்றை ஒவ்வொரு இதழிலும் போட்டுப் பரிசும் கொடுக்கலாம். திருக்குறள் கதைகள் ,கட்டுரைகள் போட்டிகள் வைத்து ஆங்காங்கே " பெரியார் பிஞ்சு" நிகழ்ச்சிகள் நடத்தினால் பெரியார் பிஞ்சுக்கும் விளம்பரம் கிடைக்கும், செய்திகளும் போய்ச் சேரும்ஆங்கே குழந்தைகள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதையும் சொல்லிக் காட்டலாம்.

இங்கு அமெரிக்காவிலே பல நகரங்களில், தமிழ்ச் சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் ஆண்டு தோறும் திருக்குறள் போட்டிகள் வைத்துப் பரிசளிப்பதில் குழந்தைகளின் பங்கேற்பு பெரிதும் வளர்ந்துள்ளது.

இதைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றால் நல்லது. நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல் போலத் திருக்குறள் கதை நூல்கள் பல வரவேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கும் படியான சிறு நூல்கள் நல்ல பலன் தரும். சிறந்த நூல்களுக்குப் பரி சளிப்போம்.

என்னை இந்த அளவிற்குச் சமுதாயப் பணிகளில் ஈடு படத் தூண்டிய பெரியார் அய்யாவின் எழுத்துக்களுக்கும், அயராத உழைப் பால் அனைவரையும், முக்கியமாக என்னுடைய சிந்தனை செயல்பாடு களை ஊக்கப்படுத்திய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கும், தங் களையே அர்ப்பணித்துக் களப்பணி செய்யும் கருப்பு மெழுகுவர்த்தி களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெரியார் மகளிர் அணியின் சாதனைகளுக்குத் தலை வணங்கு கின்றேன். கோவை மாநாட்டின் பலன் பலருக்குக் கிடைக்கட்டும்.

- சரோ இளங்கோவன்
அமெரிக்கா

தமிழ் ஓவியா said...


குறள் - தந்தை பெரியார்


நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்? நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல.

தமிழ் ஓவியா said...

வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.

நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். - குடிஅரசு - துணைத் தலையங்கம் 14.02.1926