Search This Blog

10.4.13

சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? ஒரு நெருக்கடியான ஆராய்ச்சி-பெரியார்
சுயமரியாதைக்காரர்கள் கற்பை ஒரு மோக்ஷ சாம்ராஜ்ஜியமான சங்கதி என்று எண்ணுவதில்லையானாலும் புருஷனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எந்த விஷயத்திலும் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது என்பதிலும், இருவர்கள் உரிமையிலும் ஒருவருக்கொருவர் அதிகம் கூடுதல் குறைவு பாராட்டக்கூடாது என்பதிலும் மிகவும் கண்டிப்பானவர்கள்.

இந்நிலையில் இன்று ஆரியர்கள் கற்பு, தமிழர் கற்பு என்கின்ற விஷயத்தில் நடக்கும் விவகார விஷயத்தில் சுயமரியாதைக்காரர்களுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். என்றாலும் இன்றைய முறையில் கற்புக்கு ஒருவித மரியாதை கற்பிக்கப்பட்டு அது இல்லாததற்கு ஒருவித இழிவு கற்பிக்கப்பட்டு அவை அமுலில் இருக்கும் காலத்தில் அதைப்பற்றி பேசித் தமிழர்களுக்கு கற்பு ஆரியர்கள் வந்துதான் கற்றுக் கொடுத்தார்கள், அதற்கு முன்பு இருந்ததில்லை என்று சொன்னால் அது வகுப்பு உணர்ச்சியின் பயனாக எந்தத் தமிழனுக்கும் அவன் சுயமரியாதைக்காரனாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கூட வருத்தம் வரத்தான் செய்யும். ஏனெனில் ஒரு வகுப்பை இழிவுபடுத்தி மற்றொரு வகுப்பை உயர்வுபடுத்த வேண்டும் என்கின்ற முறையில் அப்படிச் சொன்னதாகக் கருதும்போது இதற்குப் பயன் படுத்தப்படாத சுயமரியாதை உணர்ச்சியானது வேறு எதற்குத்தான் பயன்படும் என்பதனால்தான்.

ஆகவே அந்த கற்பைப் பற்றிய விவகாரத்தை விட்டு விட்டு இந்துக்கள் அல்லது ஆரியர்கள் சம்மந்தமான புராண ஆசிரியர்கள் தங்கள் தங்கள் வகுப்பு நலத்துக்கு என்று எழுதி வைத்திருக்கும் புண்ணிய சரித்திரங்கள், தெய்வீக சம்மந்தமான காவியங்கள் என்பவைகளில் கற்பிக்கப்பட்டிருக்கும் முக்கிய பாத்திரங்களுக்கு உயர்வுகளைக் கற்பிப்பதில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்களா? முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்களா? என்று பார்த்தால் சுத்த முட்டாள்தன மாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ராமாயணம்

ஏனெனில் உதாரணமாக ராமாயணம் என்னும் காவியத்தைப் பற்றி அதில் வரும் முக்கிய பெண்பாத்திரமாகிய சீதையைப் பற்றியே யோசித்துப் பார்த்தால் இது விளங்காமல் போகாது.

முதலாவது சீதை எப்படிப் பிறந்தாள் என்பதற்கு ஆதாரமே காணோம்.

ஆனாலும் சீதையைப்பற்றிய முன் ஜன்மக் கதை ஒன்று கூர்ம புராணத்தில் உள்ளது.

அது என்னவென்றால் சீதையானவள் குசத்துவசன் என்பவனுடைய வாயில் தோன்றினாளாம். தம்பன் என்னும் அரக்கன் சீதையை இச்சித்து கேட்க குசத்துவசன் மறுக்க குசத்துவசனை அந்த அரக்கன் கொன்று விட்டானாம். பிறகு சீதை விஷ்ணுவை மணக்க ஆசைப்பட்டுத் தவம் செய்கையில் அவ்வழி வந்த ராவணன் சீதையைக் கண்டு பலாத்காரம் செய்து விட்டானாம். பிறகு சீதை ராவணன் தொட்டுவிட்டதால் அந்த தோஷம் நீங்க நெருப்பில் இறங்கிவிட்டாளாம். நெருப்பில் இறங்கும் போது அடுத்த ஜன்மத்தில் லங்கையில் பிறந்து ராவணனை அழித்து விடுவதாகச் சபதம் கூறி இறந்தாளாம்.

அந்தப்படியே சீதை லங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் கிடந்தாளாம். (எப்படி வந்து கிடந்தாளோ தெரியாது) அப்போது ராவணன் கண்டு எடுத்துப் போய் தன் வீட்டில் மகள் போல் வளர்த்தானாம். ஜோசியர்கள் இச்சீதை லங்கையில் இருந்தால் லங்கைக்கு ஆபத்து என்றார்களாம். அதை நம்பி ராவணன் சீதையை ஒரு பெட்டியில் இட்டுக் கடலில் விட்டு விட்டானாம். அது கரைக்கு வந்து பூமியில் புதைபட்டு விட்டதாம். பிறகு அது ஜனகன் கைக்குக் கிடைத்து அவன் எடுத்து வளர்த்து ராமனுக்குக் கட்டிக் கொடுத்தானாம்.

(சீதை போல இந்தக்காலத்தில் ஒரு குழந்தை கிடைத்தால் அதைப் பற்றிப் பொது ஜனங்கள் என்ன சொல்லுவார்கள்? என்பது ஒரு பக்க மிருக்கட்டும்.)

எல்லாவற்றையும் சைன்சுக்கு (விஞ்ஞானத்துக்கு) விரோதமாகவே "தெய்வீக"மாக வைத்துப்பார்ப்போம்.

ராமாயணக் காவியப்படியே வால்மீகி வாக்குப்படி சீதை ராமனுடைய மனைவி, ராமன் மகாவிஷ்ணு என்னும் ஒரு வைணவக் கடவுளின் அவதாரம். சீதை மஹாலக்ஷ்மி; அதாவது மேற்படி வைணவக் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியின் அவதாரம். இங்கு வேறு சங்கையும் ஏற்படலாம். அதாவது விஷ்ணுவுக்கு இரண்டு பெண்ஜாதிகள் உண்டு. அவர்களுக்கு சீதேவி, பூதேவி என்றுகூடச் சொல்லுவார்கள். மற்றும் வேறுபல பெயர்களும் சொல்லுவார்கள். அப்படியிருக்க விஷ்ணு ராமாவதாரத்தில் ஒரு பெண்ஜாதியை மாத்திரம் அழைத்துக்கொண்டு மற்ற பெண்ஜாதியை ஏன் விட்டுவிட்டு வந்துவிட்டானோ விளங்கவில்லை. அல்லது ராமனுக்கு வேறு பல பெண்ஜாதிகளும் உண்டு என்பதாக வால்மீகி கூறுகிறபடி மற்ற பெண்ஜாதியையும் அழைத்து வந்தானோ என்பதும் தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் பூதேவியும் ராமாயணக்கதையில் வருகின்றாள். ஆனால் பூதேவி ராமனுக்குப் பெண்ஜாதியாய் வரவில்லை. மற்றெப்படி வருகின்றாள் என்றால் மாமியாராய் வருகிறாள். அதாவது ராமன் சீதையை விபசாரி என்று சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கிவரும்படி சொன்னபோது முதல் தடவை நெருப்பில் குதித்து வந்தது போதாமல் மறுபடியும் சந்தேகப்பட்டு குதித்துவரும்படி சொன்னதில் பூமாதேவி வந்து கோபித்து தன் மகளை (சீதையை) கூட்டிக் கொண்டு போய்விடுகிறாள்.

ஆகவே விஷ்ணுவாய் இருக்கும்போது சீதேவி பூதேவி என்பவர்கள் பெண்ஜாதிகளாகவும் ராமனாய் வரும்போது பூதேவி, சீதேவி என்பவர்கள் முறையே மாமியாராயும், மனைவியாயும் வருகிறார்கள். இதுவும் இப்போதும் சில இடங்களில் நடப்பதுண்டு. அதாவது கன்றும் தாயுமாகப் பார்த்து மாடு வாங்குவது போல் தாயும் மகளும் பயன்படும்படி சிலர் கல்யாணம் செய்து கொள்வதுண்டு. சில இடங்களில் முதலில் தாயார் பயன்பட்டு பிறகு மகளும் பயன்படுவதுண்டு.

இந்தக் கதையில் ராமனுக்கு என்றாலும் சரி, விஷ்ணுவுக்கு என்றாலும் சரி, தாயும் மகளும் பயன்படுத்தப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் சீதை ராமாயணக் கதையில் தான் வருகிறாளே ஒழிய அதற்கு முன்பு வந்ததாக நமக்குத் தெரியவில்லை. ஆகவே ராமாயணக் கதைக்கு பின்புதான் விஷ்ணு பெண்ஜாதி சீதை என்று ஏற்பட்டிருக்க வேண்டுமே ஒழிய அதற்குமுன் ஏற்பட்டிருக்க நியாயம் தென்படவில்லை. ஆதலால் விஷ்ணுவின் மனைவிமார் தாயாரும் மகளும் என்று சொன்னால் எப்படி மறுக்க முடியும்?

(இந்த முறைகள் ஒரு புறமிருக்கட்டும். இதனால் ஒன்றும் முழுகிப் போகவில்லை.) எப்படியிருந்தாலும் விஷ்ணு என்றாலும் சரி, ராமன் என்றாலும் சரி, அவன் ஆண் ஆனதால் அவர்களைப் பற்றிக் கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கவனிப்போம்.

அதாவது சீதை கற்புடையவளாயிருந்திருக்க முடியுமா என்பதேயாகும்.

ராமாயணக் கதைக்கு ஒரு ஆதாரக்கதை அவசியக்கதை அதன் பூர்வோத்திரக்கதை என்பது ஒன்று வால்மீகியாலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

அது என்னவென்றால் விஷ்ணு ராமனாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? லக்ஷ்மி சீதையாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? சீதை என்னும் லக்ஷ்மியை மற்றொருவன் தூக்கிக் கொண்டுபோகவேண்டிய காரணம் என்ன? என்பவைகளுக்கு எல்லாம் அதில் நியாயம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதென்னவென்றால் விஷ்ணுவானவன் ஜலந்தராசூரன் என்கின்ற ஒரு ராக்கதனுடைய மனைவி பிருந்தையைத் திருட்டுத் தனமாக மாறு வேஷம் பூண்டு புணர்ந்துவிட்டான்.

எப்படியென்றால் ஜலந்தராசுரன் மனைவி மகா பதிவிரதையாம். அவள் புருஷனை சிவன் கொன்று விட்டானாம். (மகாபதிவிரதையின் புருஷனை சிவன் எப்படி கொன்றானோ கொலை பாதகன் அதிருக்கட்டும்) இந்த சங்கதி அவளுக்குத் தெரியாதாம். (ஏனென்றால் அவள் பதி விரதையல்லவா? எப்படித் தெரியும் பாவம்) அப்படி இறந்துவிட்ட சமயத்தில் விஷ்ணுவானவன் அந்த ஜலந்தராசுரன் போல் உருமாறி அந்தம்மாளைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும் விஷ்ணுவின் புணர்ச்சி வேறுபட்டிருந்ததிலிருந்து அந்தம்மாள் இந்த உருமாறின விஷ்ணு தன் புருஷனல்ல என்பதாகத் தெரிந்து விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்ததாகவும், அந்தச் சாபத்தில் "நீ என்னை கற்பை அழித்தது போல் உன் பெண்ஜாதியினுடைய கற்பை ஒரு அசுரன் அழிக்கவேண்டும்" என்றும் சபித்ததாகவும் அந்தச் சாபம் நிறைவேறவே மகாவிஷ்ணுவும் அவன் மனைவி மகாலக்ஷ்மியும் முறையே ராமனாகவும், சீதையாகவும் வந்ததாகவும் அந்த சாபம் நிறைவேறவே ராவணன் என்கின்ற அசுரன் தோன்றிச் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே, பதிவிரதையான பிருந்தையின் சாபம் நிறைவேறுவதற்கு ஆகவே இவ்வளவு காரியமும் ஏற்பட்டிருக்கும் போது அந்த கற்பு கெடுவது என்கின்ற பாகம் மாத்திரம் நிறைவேறப்படாமல் எப்படி பாக்கியிருக்க முடியும்? என்பது ஒரு சாதாரண கேள்வியாக ஆகிவிடமுடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.

விஷ்ணுவானவன் ஜலந்தராசுரன் மனைவியின் கற்பைக் கெடுக்காமல் இருந்திருந்தால்தான் சீதையின் கற்பு கெடாமல் இருந்திருக்க முடியுமே ஒழிய, ஜலந்தராசுரன் மனைவியின் கற்பு கெடப்பட்ட பிறகு சீதையின் கற்பு மாத்திரம் கெடாமல் இருந்திருக்கும் என்றால் ராமாயணக் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஆதாரமான முன் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும்.

ஆகவே விஷ்ணு ஜலந்தராசுரன் மனைவியை என்ன என்ன செய்தானோ அதையெல்லாம் ராவணேசுரன் என்பவன் சீதையை செய்துதான் இருக்கவேண்டும் என்பது மாத்திரமல்லாமல் கதைப்படி பார்த்தால் செய்து தான் தீரவேண்டும் என்றே சொல்லுவேன்.

ஏனெனில் ஒரு அசுரன் என்பவன் மனைவியை ஒரு ஆரியன் என்பவன் இப்படி அனுபவித்தான் அப்படி அனுபவித்தான் என்று ஆனந்தமாகப் பச்சையாக எழுதிவிட்டு ஆரியன் என்பவன் மனைவியை அசுரன் என்பவன் அனுபவித்தான் என்கின்ற விஷயத்தில் மாத்திரம் ஜாதி அபிமானம் காரணமாக ஜாடை மாடையாய் எழுதியிருந்தாலும் விவகாரத்துக்கு வரும்போது தாக்ஷண்யமில்லாமல் பார்க்கும் போது உண்மை வெளியாகித்தானே தீரவேண்டும்.

அன்றியும் சீதையை ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்பு ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும் ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி அவளை தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில் சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை.

மற்றபடி என்ன சொன்னாள் என்றால் "நான் ஒரு பெண், அபலை, ராவணன் மகா பலசாலி அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது" என்று தான் சொன்னாளே ஒழிய மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.)

ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பது தான் இந்த வியாசத்தின் கேள்வியாகும்.

சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்.

இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை. ஆனால் கதையின் தத்துவப்படி மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும்.

ஆரியர்கள் தேவர்கள் அசுரர்கள் என்கின்ற விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்றால் ஏன் துரோபதை சீதை அகலியை தாரை என்கின்ற முதலிய பஞ்சகன்னிகைகள், மகாபதிவிரதைகள் கோஷ்டியில் இந்த ஜலந்தராசுரன் மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். இந்த நான்கு "உத்தம பத்தினிகளின்" யோக்கியதைகளை விட பிருந்தையின் யோக்கியதை என்ன கெட்டுவிட்டது? அந்தம்மாள் பதிவிரதா தன்மைக்கு ஆதாரம் மகா விஷ்ணுவுக்கே (கடவுளுக்கே) சாபம் கொடுத்தது. அந்த சாபம் நிறைவேறிற்று என்றால் இதற்குமேல் உரைகல் வேறு என்ன என்று கேட்கின்றேன். ஆகவே ஆரியர்கள் சகல வழிகளிலும் சகல துறைகளிலும் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வதும் ஆரியர்கள் அல்லாதவர்களை இழிவு கீழ்மைப்படுத்துவதுமான காரியத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த மாதிரியான காரியத்துக்காக அவர்கள் எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள் என்பதிலும் நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. உதாரணமாக சென்னையில் அசம்பளி தேர்தலின் போது ராமசாமி முதலியாரை தோற்கடிப்பதற்காக எந்த வகையிலும் யாதொரு சம்பந்தமில்லாத ஒரு பெரும் பழியை அதாவது ராமசாமி முதலியார் ஒரு பெண்ணின் தாலியை அறுத்துவிட்டார் என்று பிரசாரம் செய்து அவரை தோற்கடித்தார்கள் என்றால் இவர்கள் இனி என்னதான் செய்யமாட்டார்கள்? இதற்குமுன் என்னதான் செய்திருக்க மாட்டார்கள் என்பது விளங்கும். ஆதலால் கண்மூடித்தனமாக எல்லா புராணங்களையும் நம்பாமலும், மேம்புல்லை மேயாமலும் நன்றாய் ஊன்றிப் பார்த்தால் அவைகளின் யோக்கியதை அத்தனையும் ஆபாசமாகத்தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இதை எழுதுகிறேன்.

------------------------------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதியது --”குடி அரசு” கட்டுரை 08.03.1936

38 comments:

தமிழ் ஓவியா said...


சுனிதா வில்லியம்ஸ்


அமெரிக்காவில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண்மணி என்ற புகழுக் குரியவர் - இருமுறை பயணித்தவர்.

பெண்ணால் எதனை யும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர்.

ருசிய பெண் வாலண் டினா விண்வெளி சென்று வியக்க வைத்தார் அன்று.

சுனிதா வில்லியம்ஸின் தந்தையார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் - தாயாரோ அய் ரோப்பாவின் சுலோவேனி யாவைச் சேர்ந்தவர்.

இந்து மதமும், கிறித் துவ மதமும் இணைந்த குடும்பத்திற்குச் சொந்தக் காரர் - அதனால்தானோ என்னவோ சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளிக்குச் சென்றபோது கீதையையும், உபநிஷத்துக்களையும் எடுத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார்.

விண்வெளி தொடர் பான நுணுக்கங்கள் அவற் றில் நிரம்பி வழிகின்றன என்ற எண்ணத்தில் அவற்றை எடுத்துச் சென் றிருக்க முடியாது. இவற் றைப்பற்றிதான் உலகெங் கும் பறைசாற்றி வைத்துள் ளார்களே - அவற்றின் தாக்கமாக இருக்கக்கூடும்!

உண்மையைச் சொல்லப் போனால், கீதை பெண் களுக்கு உகந்த நூலே அல்ல.

பாவ யோனியில் பிறந்த வர்கள் பெண்கள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32) என்று கூறுவதுதானே கீதை - அதைப்பற்றி சரி யாகத் தெரிந்திருந்தால் இந்த வீராங்கனை கீதை யைத் தீண்டியிருக்கவே மாட்டார்.

வான்வெளியில் பறந்த ராகேஷ்சர்மா என்ற இந் தியன் விண்வெளிக் கலத் தில் காலடி பதித்தபோது காயத்ரி மந்திரம் உச்சரித் தார் என்பதற்காக உச்சிக் குடுமி பார்ப்பன ஏடான தாம்பிராஸ் (மே 1962) ஒரு முறை பூணூலை இழுத்துப் பார்த்து சந்தோஷப்பட்ட துண்டு.

அவ்வளவு தூரம் போவானேன்? முதல் மனி தன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ் மாசில் (Cosmos) சென் றதை விஞ்ஞானியான டாக்டர் சி.வி.இராமன் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத் திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் என்று சொல்ல வில்லையா?

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பெரும் பாலும் நாத்திகர்களாக இருந்தாலும், இதுபோன்ற இந்து சாயல் உடையவர்கள் அந்தச் சிறையிலிருந்து அறிவை விடுவித்துக் கொள்ளாதது இரங்கலுக் குரியதே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஈழத்தில் மீண்டும் சண்டை மூளும் அமெரிக்க தூதர் எச்சரிக்கை!

E-mail Print

கொழும்பு, ஏப்.10- தமிழர்களின் மனக்குறைகளை தீர்க்காவிட்டால், இலங்கையில் மீண்டும் சண்டை மூளும் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடையே இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்செல் சைசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தோம். அதில், படிப்பினைகள் மற்றும் நல்லி ணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத் துமாறும், சர்வதேச கடமைகளை நிறைவேற்று மாறும் இலங்கையை கேட்டுக்கொண்டோம்.

அதன்பிறகு, தற்போதுள்ள நிலைமைகளை பார்த்தோம். அந்த நிலைமைகளையும், இலங்கை அரசு அளித்த வாக்குறு திகளையும் ஒப்பிட்டு பார்த்தோம்.

முதல் தீர்மானத்தில் நாங்கள் எழுப்பிய கவ லைகள் அப்படியே இருப்பது மட்டுமின்றி, நிலைமை இன்னும் மோச மாக இருப்பதை உணர்ந்து கொண்டோம். எனவே, கடந்த மாதம் 2 ஆவது தடவையாக தீர்மானம் கொண்டு வந்தோம்.

சிறுபான்மையினரான தமிழர்களின் மனக்குறை களை தீர்க்காவிட்டால், இலங்கையில் மீண்டும் சண்டை மூளும். வர லாறு, இதைத்தான் காட் டுகிறது. இது கடின மான பணியாக இருந் தாலும், முடிவில், அது இலங்கையின் ஸ்திரத் தன்மைக்குத்தான் நல் லது. எனவே, நல்லி ணக்கத்துக்கும், பொறுப்பு ஏற்கும் தன்மைக்கும் பாடுபடுமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறோம். நல் லிணக்கம் என்பது ஒன்றுபட்ட இலங்கை யில் இலங்கை மக்கள் அனைவரும் அமைதி யாகவும், இணக்கத் துடனும், பாதுகாப்பா கவும் வாழ்வது என்று பொருள்.

பொறுப்பு ஏற்கும் தன்மை என்பது மனித உரிமை மீறல் குற்றங்கள் புரிந்தவர்களை அடையாளம் காண்பதும், அவர் களின் குற்றங்களுக்கு தண்டனை விதிப்பதும் ஆகும்.

இந்த பணிகள் சிக்கலானவை என்றும், இவை முடிவடைய பல வருடங்கள் ஆகும் என்றும் இலங்கை அரசு கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள் கிறோம். ஆனால், கூடிய விரைவில் இந்த பணிகளை தொடங்குவது அவசியம்.

ஒபாமா அரசு நடவடிக்கை:

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயேச்சையான விசாரணைக்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசை தொடர்ந்து நிர்ப்பந்தம் செய் வோம். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர் பாக இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கு உலகளாவிய கருத்து ஒற்றுமையை உருவாக்குவ தற்கு ஒபாமா அரசு பாடுபட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையை நாங்கள் பரிசீலித்து வரும் அதே வேளையில், மனித உரிமை ஆணையத்திலும், அதற்கு அப்பாலும் இலங்கைக்கு எதிரான அனைத்து வழிமுறைகளையும் மீண்டும் புதுப்பிப் போம்.

நல்லிணக்கமும், பொறுப்பு ஏற்கும் தன்மையும் நிலவ செய்யுங்கள் என்று சர்வதேச சமூகம் கூறுவதை வெறும் அறிவுரையாக கருதக்கூடாது. நாட்டின் அமைதியான, வளமான எதிர்காலத்துக்கு இது அவசியம் என்று பார்க்க வேண்டும். - இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


அடே, அப்படியா?


அரசியல்வாதிகளுக்குத் தான் பிரதமர் பதவிமீது ஆசை ஏற்படும். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் ஆசைகள் இல்லாத சாதாரண மனிதன். எனவே, பிரதமராக வேண் டும் என்ற ஆசை எதுவும் எனக்கு இல்லை.

- கொல்கத்தாவில் நரேந்திர மோடி, 9.4.2013

தமிழ் ஓவியா said...


பாடம் போதிப்பார்கள் பெண்கள்!


பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற தகவல் பரவலாகத் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டது. இதில் மோடியைப் பொறுத்தவரை தந்திரசாலி - இதுபோல் காய்களை நகர்த்துவதில் வல்லவர்.

பி.ஜே.பி.யின் பார்லிமெண்ட் குழுவில் இடம் பிடித்துவிட்டார். அத்வானியின் மனதில் பிரதமர் நாற்காலி எண்ணம் இருந்ததில் தவறு இல்லைதான். கட்சியின் மூத்த தலைவர், துணைப் பிரதமர்வரை எட்டிப் பிடித்தவர்.

கடந்த முறை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுத் தேர்தலைச் சந்தித்த நேரத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட நிலையில், இந்த முறை மாற்று வேட்பாளரைத் தேடும் நிலைக்குப் பி.ஜே.பி. தள்ளப்பட்டு விட்டது.

தன்னை ஒதுக்கிவிட்டு மோடியை முன்னிறுத் தும் நிலையில், அத்வானி தன் மனக்கிலேசத் தையும் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. காங்கிரசைப் போல பி.ஜே.பி.யையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டதுடன் நிற்கவில்லை; இன்றைய பி.ஜே.பி.யின் செயல்பாடுகள் என் சிந்தனை களுக்கு ஒத்துப்போகவில்லை என்று பி.ஜே.பி. யின் 33 ஆம் ஆண்டு விழாவில் இந்தியாவின் தலைநகரில் முன்னணித் தலைவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மனந்திறந்துள்ளார் அத்வானி.

அதே கூட்டத்தில் மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கட்சியின் அகில இந்தியத் தலைவர் கூறியபோது, இல்லை இல்லை, அத்வானிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று டில்லி மாநில பி.ஜே.பி. தலைவர் விஜய்கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வருபவர்தான். மோடிக்குக் கொடுக்கும் முக்கியத் துவம் அவருக்குக் கொடுக்கப்படாததும் - பார்லிமெண்ட் போர்டில் அவருக்கு இடம் அளிக்கப்படாததும் இன்னொரு பக்கத்தில் அதிருப்திப் புயல் மய்யம் கொண்டுதானிருக்கிறது.

போலி என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப் பட்ட - மோடியின் நெருங்கிய சகாவான அமித்ஷா (முன்னாள் அமைச்சரும்கூட) பி.ஜே.பி.யின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதுவும் கட்சியில் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் மோடி என்றே சொல்ல வேண்டும்.

மக்கள் தொகையில் சரி பகுதி கொண்ட பெண்களின் வாக்குகளின்மீது குறி வைத்துள் ளார். பெண்களுக்காக, தானொன்றும் அதிகம் செய்திடவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறுவதுபோலக் கூறினாலும், உண்மையும் அதுதானே!

இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் குஜராத் 14 ஆம் இடத்தில்தானே இருக்கிறது. இந்நிலையில், பெண் கல்வியைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது?

குஜராத்தின் வளர்ச்சிபற்றி திட்டக் குழுவின் கணிப்பு என்ன? நுண்ணூட்டச் சத்துக் குறை பாட்டில் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே!

இது ஒருபுறம் இருக்கட்டும், மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் மாயா கோத்வானி, நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துள்ளதே!

இவ்வளவுக்கும் அந்தப் பெண் ஒரு டாக்டர். கொலை செய்யப்பட்டவர்களோ 97 பேர் - அதுவும் குழந்தைகள் 35 பேர் - என்ன கொடுமை!

இந்த லட்சணத்தில் பெண்கள் முன்னேற்றத் தில் அக்கறை கொண்டதுபோல பசப்புகிறார் மோடி.

யார் முறியடித்தாலும், முறியடிக்காவிட்டாலும் இந்தியப் பெண்கள் முன்னின்று தோற்கடிக்கப்பட வேண்டியவர் நரேந்திர மோடிதான் - நினைவிருக் கட்டும்!

தமிழ் ஓவியா said...


செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (2)சிக்கன் சூப் தொகுதிகள் எழுதிய ஊக்கமூட்டும் எழுத்தாளர் ஒரு கருத் தரங்கில் - பயிற்சி முகாமில் பேசியதை நேற்றைய கட்டுரையில் வளர்தொழில் ஏட்டிலிருந்து எடுத்துக் குறிப்பிட் டிருந்தேன்.

நாள்தோறும் நாம் அய்ந்து செயல்களில் விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும்; அப்படிச் செய்தால் நிச்சயம் நமது இலக்கை அடைய முடியும் என்று மிகுந்த தன்னம்பிக்கை ததும்பும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

வெற்றி பெற விரும்பும் அனைவரும் முதலில் தங்களுடைய வெற்றிக்கு தாங்களே முழுப் பொறுப்பு என்பதை உணரவேண்டும். தாய், தந்தை பரிந் துரைப்பர்; உறவினர் கைகொடுப்பர் என்றெல்லாம் பிறரை நம்பி இருப்பதை விட நாமே சொந்தமாக முயற்சி செய்யவேண்டும்.

Event + Response = Out come என்ற ஃபார்முலாவைப் புரிந்துகொண் டால் உங்கள் பொறுப்புணர்வை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு நிகழ்வு (Event) நடைபெறுகிற போது, அதையொட்டி நீங்கள் மேற் கொள் கிற செயல்பாடே (Response) விளை வாக (Outcome) வெளிவருகிறது.

உலக நிகழ்வை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், விளைவை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்கள் செயல்பாடு களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

செயற்பாடுகளை நிர்ணயிப்பது மூன்று காரணிகள்தான்.

1. மனப்போக்கு (Behaviour) நடத்தை

2. எண்ணங்கள் (Thoughts)

3. மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தல் (Visualizing Images)

இந்த மூன்றும்தான் உங்கள் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன.

இந்த மூன்றையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

முதலில் மனப்போக்கை எடுத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அதை எப்படிச் சொல்ல விரும்புகிறீர்கள்? என்பது மிக முக்கியம்.

காலங்காலமாக நீங்கள் உங்களிடம் உள்ள பழக்கங்களையும், மனப்போக்கு களையும், திரும்பிப் பார்க்கவேண்டிய நேரம் இது.

எதையெல்லாம் முடியாது என்று எண்ணி இருந்தீர்களோ அதையெல்லாம் முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் அனைத்தை யும் நேர்மறைச் சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் நாள்தோறும் அதிகபட்சமாக தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய அய்ந்து பேரிடம் தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அந்த அய்வரையும் உங்களைப் போன்ற வெற்றி ஆர்வலராக இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

அயல்நாடுகளில் கார்களில் ஜி.பி.எஸ். என்ற கருவியைப் பொருத்தியிருப் பார்கள். நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த முகவரியை அதில் பதிவு செய்துவிட்டால், அக்கருவி இடது பக்கம் செல், வலது பக்கம் செல், நேராகப் போ என கட்டளையிட்டுக் கொண்டே வரும். அதுபோன்றுதான் மனமும். இலக்கைக் கொடுத்துவிட்டால் வழியை நமக்கு அது காட்டும்.

சரி, இதனை எப்படிச் செயல்படுத்து வது? இதோ... அதற்கு நான்கு நிலை களை நான் சொல்கிறேன்.

முதல் நிலை:

உங்கள் இலக்கை வரையறை செய்யுங்கள் (Set Your Goal)

நீங்கள் எங்கே செல்லவேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துக் கொள் ளுங்கள். அது ஒரு இலக்காகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெவ்வேறு வகையான தன்மை கொண்ட பல இலக்குகளாகக்கூட இருக்கலாம். இலக்கை நீங்கள் எப்போது அடைய விரும்புகிறீர்களோ, அதை தேதி மற்றும் நேரத்தோடு குறித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது நிலை:

இலக்கை சிறுசிறு கூறுகளாகப் பிரியுங்கள் (Break Your Goals)

அந்த இலக்குகளை அடைய ஒவ் வொரு ஆண்டும் நீங்கள் செய்யவேண் டிய பணிகளைத் திட்டமிடுங்கள்; பெரிய இலக்கை சிறுசிறு இலக்கு களாக மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் அந்த இலக்கை அடைய ஏதாவது அய்ந்து செயல்களைச் செய்யுங்கள்.

மூன்றாவது நிலை:

உறுதிப்படுதல்
(Affirmations)

உங்கள் இலக்குகளை எல்லாம் உறுதியான சொல் தொடர்களாக எழுதி நாள்தோறும் அதைப் படியுங்கள்.

நான்காவது நிலை:

மனக் கண்களில் வெற்றியைக் காணுதல் (Visualization)

அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பீர்கள் என்ற காட்சியை உங்கள் மனதிற்குள் கட்டாயப்படுத்தி, அதை நாள்தோறும் ஓட விட்டுப் பாருங்கள்.

இப்படிச் செய்தால் உங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

ஆம், நீங்கள் எதை விரும்பினாலும், அதை அடையக்கூடிய சக்தி மனதிற் குள் இருக்கிறது. எனவே, நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும்.

வாழ்க்கையில் சாதாரண மனித னாக வாழ்வதற்கும், சாதனை மனித னாக வாழ்வதற்கும் ஒரே அளவு நேரத் தையும், ஆற்றலையும்தான் செல வழிக்கப் போகிறீர்கள்.

அதற்கு ஏன் சாதாரண மனித னாக நாம் வாழவேண்டும்? சாதனை மனிதனாக வாழலாமே? என்றார் எழுத்தாளர் ஜேக் கேன்ஃபீல்ட்!

நண்பர்களே, இதனை செயல்படுத் தத் தொடங்குங்கள் - வெறும்படித்ததோடு கீழே போட்டுவிடாதீர்கள்!

தமிழ் ஓவியா said...


துரோகம் தொடர்கதையானது யாராலே?


கலைஞர் கடிதம் உடன்பிறப்பே,

தமிழகச் சட்டமன்றத்தில் நேற்றைய தினம் தென்பெண்ணையாற்று தண்ணீரைக் கர்நாடக அரசு திருப்பிவிடுவதைப் பற்றி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கழகச் சட்டப் பேரவை உறுப்பினர் தம்பி எ.வ.வேலு கொடுத்து, அதன் மீது உறுப்பினர்கள் பேசி பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித் திருக்கிறார். அப்போது அந்த அமைச்சரும், அவையை அமைதியாக நடத்திச் செல்லும் பொறுப்புமிக்க அவை முன்னவரும் எழுந்து தேவையில்லாமல், காவிரிப் பிரச்சினை பற்றியும், முல்லைப் பெரியாறு பற்றியும், இலங்கைப் பிரச்சினை பற்றியும் பேசி, அதில் தி.மு. கழகமும், நானும் துரோகம் இழைத்து விட்டதாகப் பேசியிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அதற்குப் பதில ளிக்கத் தயாராக இருந்த முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சரான தம்பி துரைமுருகனையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் அனை வரைப் பற்றியும் நான் குறை கூறவில்லை. ஆனால் ஒரு சில அமைச்சர்கள், அப்படிப் பேசினால்தான் தங்களுடைய தலைமை தங்களைக் கொண்டாடும் என்று கருதிக் கொண்டோ, தங்க ளுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்வ தற்காகவோ என்னவோ சட்டப்பேரவையில் பிரச் சினைகளை எழுப்புகிறார்கள். அதற்குப் பதில் சொல்ல எதிர்க் கட்சிகள் முயற்சி செய்தால், ஜனநாயக ரீதியாக வாய்ப்பளித்திட மறுத்து மாற்றுக் கருத்தைச் செவிமடுக்கும் பொறுமையின்றி, வெளியேற்ற வும் செய்கிறார்கள். தமிழகச் சட்டப்பேரவையில் மாத்திரமல்ல; 7-4-2013 அன்று டில்லியில் பிரதமர் தலைமையில் மாநில முதலமைச்சர்கள், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத் தில் தமிழக முதல் அமைச்சர் கலந்து கொள்ள வில்லை. அவருக்குப் பதிலாக, தமிழக அமைச்சர் ஒருவர், தமிழக முதலமைச்சரின் பேச்சினைப் படித்தபோது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளுக்காக கடந்த இருப தாண்டுகளுக்கு மேலாக நான் (ஜெயலலிதா) மேற்கொண்ட இடைவிடாத போராட்டத்தின் காரணமாக கடைசியில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்று கூறியதாக தமிழக ஏடுகளில் வெளிவந்துள்ளது. இருபதாண்டு களுக்கு மேலாக தமிழக முதல் அமைச்சர் மேற்கொண்ட இடைவிடாத போராட் டத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழிலே வெளியிடப்பட்டதாம்! கேழ் வரகில் நெய் வடிகிறது என்று கிராமங்களில்தான் சொல்வார்கள். அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. முதலமைச்சர் பேச்சுதான் அப்படி என்றால், தமிழகச் சட்டப்பேரவையில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. துரோகம் இழைத்து விட்டது; இலங்கைப் பிரச் சினையிலே தி.மு.க. துரோகம் இழைத்துவிட்டது; முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தி.மு.க. துரோகம் இழைத்து விட்டது; கச்சத் தீவில் தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று எந்தவித அடிப்படையுமின்றி, எதையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்.

துரோகத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்? தமிழினத்திற்கு - தமிழர்களின் நலனுக்குத் தொடர்ந்து துரோகம் செய்தது யார்? என்பதை விளக்கு வதற்காகத்தான் இந்தக் கடிதம்!

இலங்கையில் போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்பட ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திட 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று நான் அறிக்கை கொடுத்த நேரத்தில், இலங்கையில் ராஜபக்சே இப்போது நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல; விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் என்று ஜெயலலிதா கூறினாரே; அதற்குப் பெயர் துரோகமா? அல்லவா?

போர் என்றல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்றவர் யார்?

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று 17-1-2009 அன்று ஜெயலலிதா சொன்னாரே, அதைவிட ஒரு பெரிய துரோகம் இருக்க முடியுமா? என்ன?

பிரபாகரனைக் கைது செய்து இந்தியா விற்குக் கொண்டு வரவேண்டும் என்று ஜெயலலிதாவே 16-4-2002 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றினாரே, அதைவிடவா ஒரு பெரிய துரோகம் இருக்க முடியும்? இலங்கைப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திலே கூட்டம் நடத் திய போது அதைப் புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தாரே, அது பச்சைத் துரோகமா? அல்லவா?

ஈழத் தமிழர்களுக்காக சென்னை மாநகரில் மிகப் பிரம்மாண்டமான மனிதச் சங்கிலியை 2009ஆம் ஆண்டு நடத்திய போது அதை கபட நாடகம் என்று ஜெயலலிதா வர்ணித்தாரே, அது துரோகமா? அல்லவா?

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் காண, மத்திய அரசு முயற்சிக்கக் கோரி தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தபோது, அதை ஜெயலலிதா புறக்கணித்தது துரோகமா? அல்லவா?

விடுதலைப் புலிகளை இன்றைக்கும் விரோதிகள் என்று கூறுகிற ஜெயலலிதா துரோகியா? நான் துரோகியா?

ஈழத்தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்தது தி.மு.க.

ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தது தி.மு.க., நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்தோம். ஏன் தற்போது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யிலி ருந்து கூட விலகினோம். இவை துரோகச் செயல் களா? அல்லது அவற்றை விமர்சிக்கும் ஜெயலலிதா போன்றவர்கள் துரோகிகளா?

தமிழ் ஓவியா said...

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பது யார்?

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியா விற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது துரோகமா? அல்லவா? இலங்கையில் தமிழினப் படுகொலை யைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றியபோது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் அந்தத் தீர்மானத்தைப் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள் நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டாரே, இதை விடவா ஒரு பெரிய துரோகம் இருக்க முடியும்?

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தால் கூட, கர்நாடகாவில் அவர்களாகவே அணை யைத் திறந்தால் தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும். கர்நாடகம் சம்மதித்து ஒரு நியாயமான அனுகூலமான முடிவை மேற்கொண்டால் தான் நடுவர் மன்றத் தீர்ப்பு பயனுள்ளதாக அமைய முடியும் என்று 21-3-1991இல் ஜெயலலிதா கூறியது துரோகமா? அல்லவா?

நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கினால் கூட, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம்; கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பாவுக்குக் கிடையாது என்று ஜெயலலிதா கூறியது, தமிழ்நாட்டிற்கு அவர் செய்த துரோகமா? அல்லவா?

9-6-1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.சுக்லா, நடுவர் மன்றத்தின் இடைக் கால ஆணையை நடைமுறைப்படுத்த குழு அமைப் பது பற்றி ஒப்புதல் கேட்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்திற்கு 30-3-1993 அன்று ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் ஜெயலலிதா பதில் எழுதினார். இதைவிட ஒரு பெரிய துரோகம் இருக்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

காவிரி நதி நீர் ஆணையம் குறித்து அன்று சொன்னதெங்கே?

1991இல் நடுவர் மன்றம் இடைக்கால ஆணை பிறப் பித்தும்கூட, 1996ஆம் ஆண்டு வரை முதல மைச்சர் பொறுப் பிலே இருந்த ஜெயலலிதா ஒரு ஆண்டு கூட இடைக்கால உத்தரவுப்படி 205 டி.எம்.சி. தண்ணீரைப் பெற்றுத் தரவில்லை. அது அவர் செய்த துரோகமா? அல்லவா? காவிரி நதி நீர் ஆணையம் தி.மு.கழகத் தின் பெருமுயற்சியால் அமைந்த நேரத் தில், 2-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஜெயலலிதா செயல்படாத ஆணையம், காவிரி ஆணையம். அந்த ஆணையத்தை நாங்கள் ஏற்காமல் பா.ஜ.க. கூட்டணி யிலிருந்து வெளியேறி னோம் என்று கூறினார். இவ்வாறு காவிரி ஆணையத்தை, பல் இல்லாத ஆணையம் என்றும் செயல்படாத ஆணை யம் என்றும் ஜெயலலிதா கூறியது துரோகமா? அல்லவா?

ஜெயலலிதா 21-9-1998 அன்று ஆங்கிலத்தில் விடுத்த அறிக்கையில் The Cauvery River Authority headed by the Prime Minister is a very big fraud perpetrated on the farmers of the Cauvery Delta in Tamil Nadu என்று குறிப்பிட்டார். இது தமிழகத்திற்கு மறைமுகமாக அவர் செய்த துரோகமா? அல்லவா?

21-6-2002 அன்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி நதி ஆணையக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று ஜெயலலிதா முடிவெடுத்தாரே, அது தமிழகத்திற்கு ஜெயலலிதா செய்த துரோகமா? அல்லவா?

காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஜெயலலிதா கூறி, அதை உச்சநீதி மன்றமே கண்டிக்கின்ற அளவிற்கு நிலை மாறி, பின்னர் ஜெயலலிதா அதற்காக வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டதே, அது ஜெயலலிதா தமிழகத் திற்குச் செய்த துரோகமா? அல்லவா? பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருந்ததைப் பற்றி பிரதமராக இருந்த வாஜ்பாய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலம் என்றும், அரசைக் கவிழ்க்கப் போவதாக சுதந் திரத் தினத்திற்கு முந்தைய நாளன்று கூட ஜெயலலிதா அச்சுறுத்தினார், ஆனால் அவரது பிளாக் மெயில் தந்திரத் திற்கு நாங்கள் அடி பணியவில்லை என்றும் 22-8-1999 அன்று குறிப்பிட்டார் என்றால் அது ஜெயலலிதா செய்த நம்பிக்கை துரோகமா? அல்லவா? ஏன், எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்திலேயே இவரது வளர்ச்சியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்றும், தனது வளர்ச்சியை அவரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை என்றும் குறிப்பிட்டாரே; அதை விட ஒரு பெரிய பச்சைத் துரோகம் இருக்க முடியுமா? என்ன?

ஏன் எழுதுகிறேன்?

உடன்பிறப்பே, இந்த விவகாரங்களை யெல்லாம் எழுதுவதற்கோ, மற்றவர்களைச் சங்கடப்படுத்து வதற்கோ எனக்கு உண்மையில் விருப்பம் இல்லை தான். ஆனால் அன்றாடம் தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு சில அமைச்சர்கள் நம்மை இவ்வாறு எழுதுவதற்கு அவர்களாகவே தூண்டுகிறார்களே என்பது தான் வேதனையான உண்மை.

அன்புள்ள, மு.க.
(முரசொலி, 10.4.2013)

தமிழ் ஓவியா said...


டெங்கு காய்ச்சல்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


லண்டன், ஏப்ரல் 10- ஆண்டுதோறும், சுமார் 390 கோடி மக்கள், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றார்கள். வெப்பமண்டல பகுதி களில் எளிதில் பரவக் கூடிய இந்நோய் கணக் கில் காட்டப்படுவதை விட, மூன்று மடங்கு விரைந்து அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

அதிக வலி கொடுக் கும் இந்நோய் பரவுவ தற்கு கொசுக்கள் முக்கிய காரணமாக இருப்ப தால், தொடர்ந்து நடத் தப்பட்ட ஆய்வுகள், இந்த வைரஸ் பல்கிப் பெருகியுள்ளதைக் காட்டுகின்றன. நோயாளிகளுக்கு ஆபத்தான விளைவுகள் எதுவும் இந்நோயினால் ஏற்படாது என்றபோதி லும், நோய்த்தாக்கம் அதிகமாய் இருப்பதன் காரணத்தினால் அவர் கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்கின்றது.

வெல்கம் தொண்டு மய்யம் மற்றும் ஆக்ஸ் போர்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியா ளர்கள் சமர்ப்பித்துள்ள முடிவுகள், 96 கோடி மக்கள் தீவிரமாகவும், 300 கோடி மக்கள் இன் னும் அறிகுறிகள் வெளித் தெரியாத வண்ணமும் இந்நோயினால் பாதிக் கப்பட்டுள்ளதாக குறிப் பிடுகின்றன. ஆனால், உலக சுகாதாரக் கழகம் 50-100 கோடி மக்களே டெங்குவினால் பாதிக் கப்பட்டுள்ளதாக சமீபத் தில் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

வெளித்தெரியா நோய் அறிகுறி உடைய வர்கள் இந்நோய் பின் னாளில் பரவக் காரண மாக இருப்பார்கள் என எச்சரிக்கின்றார் வியட்நாம் ஆராய்ச்சி மய்யத் தலைவர். மேலும், ஒருமுறை இந்நோயின் வீரியம் குறைவாக இருந்தால் கூடத் தொடர்ந்து தாக் கக்கூடிய தன்மை இந் நோய்க்கு உண்டு

தட்பவெப்பநிலை மாறுபாடும், இந்நோய் பெருகக் காரணமாக அமைகின்றது. இதனால் வளர்ந்து வரும் நாடு களில் மட்டுமில்லாமல் தெற்கு அய்ரோப்பா, தெற்கு அமெரிக்கப் பகுதிகளும் இந்நோய் பரவும் சூழ லில் இருக்கின்றன.

தமிழ் ஓவியா said...


இன்பமுடன் வாழ 26 - கட்டளைகள்


1) காலையில் வழக்காக எழுவதற்கு 15 - நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுந்து விடுங்கள். வெளியே செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்ன தாகவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

2) நாட்குறிப்பேட்டில் அன்றைய நாள் செய்ய வேண்டிய பணிகளையும் எப்போது செய்யப் போகிறோம், என்பதையும் குறித்து வைத்து விடுங்கள்.

3) அன்றாடப் பணிகளைத் தள்ளி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும், செய்யும் பணிகளை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எதிலும் முன்னதாகவே திட்டமிடுங்கள், எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

4) செல்ல வேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல வழக்கப்படுங்கள். பத்து நிமிடத்திற்குள் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

5) சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.

6) மன இறுக்கத்தை தளருங்கள், சில வேலைகள் தடைபடுவதாலோ, உலகம் முடிந்துவிடப் போவதில்லை என்பதை உண ருங்கள்.

7) தவறாப்போன ஒரு விடயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதைவிட சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

8) நாம் செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

9) சில நேரங்களில் கைப்பேசியையும், தொலைப்பேசியையும், அணைத்து வைத்துவிட்டு (ஸ்விட்ச் ஆப்) ஓய்வு எடுங்கள். எந்த தொந்தரவும் இன்றி இருக்கலாம்.

10) நாம் செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமின்மையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக் கவும்..... என்னால் செய்ய இயலாது என்று சொல்லப் பழகுங்கள்.

11) உணவு, உடை, உறைவிடம், தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

12) எளிமையாக வாழுங்கள்.

13) உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

14) நன்றாகத் தூங்குங்கள், முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள், தடையற்ற தூக்கத்திற்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள், அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருட்களால் தேவையற்ற மன அழுத்தம் தரும்.

15) ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும்.

16) பிரச்சனைகளை எழுதப் பழகுங்கள், கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை, குறைக்க எழுத்து வடிகாலாகும்.

17) குழப்பம், கவலைகளை மனதிற்குள் போட்டு குழம்பாமல் உங்களின் நம்பிக்கைக் குரியவர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

18) தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் ஏதேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

19) பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள், செய்யும் அனைத்துச் செயல்களையும், மனமார்ந்த அன்போடு செய்யுங்கள்.

20) என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே! எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

21) உங்கள் உடை, நடை, பாவணைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

22) அதிகமாக வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள், ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

23) வாரத்தின் இறுதி நாள், விடுமுறை நாட்களை மிகச்சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

24) இன்றைய பணிகளை செவ்வனே செய்வதால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதிற் கொள்ளுங்கள்

25) பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

26) மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

தமிழ் ஓவியா said...


பாழும் பக்தியும் மூட மதமும் படுத்தும்பாடு - பாரீர்!


கோயிலில் சாட்டையடி


ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடந்து வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் திரு விழா நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 2ஆம் தேதி இரவு பூச்சாட்டு தலுடன் விழா தொடங்கியது. விழாவில் 4ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் நேற்று காலையில் சாட்டை அடி விழா நடந்தது. அப்போது ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் நேர்த்திக்கடனுக்காக பூசாரி யிடம் பயபக்தியுடன் சாட்டையடி வாங்கினார் களாம். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சீராப் பள்ளி மற்றும் ஒடு வன்குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் பலர் வந்திருந்தராம்.

ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை

தலையில் கல்லை போட்டு கட்டட தொழி லாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கிளி ஜோதிடர் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப் பட்டது.

திருப்பூர் பி.என். சாலை பாண்டியன் நகர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). கட்டடத் தொழிலாளியான இவர் திருமுருகன் பூண்டி ரிங்ரோடு அருகேயுள்ள ஆலமரத்தின் அடியில் தங்கி வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி இரவில் முருகேசன் மரத்தின் அடியில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஆனந்த்(30), கோவை வீரகேரளத்தைச் சேர்ந்த கிளிஜோதிட ரான பசுங்கிளி என்ற கிளிமுருகன்(41) ஆகியோர் குடிபோதையில் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரும் சத்தம் போடவே, அதை முருகேசன் தட்டிக் கேட்டார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகேசன் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் நள்ளிரவில் ஆனந்த்தும், கிளி முருகனும் மீண்டும் அங்கு வந்தனர். அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்த முருகேசனின் தலையில் அங்கு கிடந்த பெரிய கல்லை, தூக்கிப் போட்டு கொலை செய்தனர். இதுகுறித்து அனுப்பர் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆனந்த், கிளி முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருப்பூர் முதல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பத்மநாபன், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த், பசுங்கிளி என்ற கிளிமுருகன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் எம்.சத்தியநாராயணன் வாதாடினார்.

தமிழ் ஓவியா said...

ஒரே நாளில் 5 கோயில்களில் கொள்ளை


திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 5 கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. பெரிய அளவில் பொருட்கள் ஏதும் கொள்ளை அடிக்கப்படாவிட்டாலும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மன் கோயில் அம்போ!
விருத்தாசலம் அருகே கோவில் பூட்டை உடைத்து பொருட்களை சிலர் திருடிச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசம் அருகே உள்ள சாத்துக்குடல் கிராமத்தில் ஏரிக்கரை தெருவில் உள்ளது பெரியாயி அம்மன் கோவில். இந்த கோவில் அறங்காவலராக இருந்து வருபவர் குணசேகரன் (வயது45).

சம்பவத்தன்று காலை, வழக்கம் போல் குணசேகரன் கோவிலுக்கு சென்றபோது, அங்கு கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் கோவில் உள்ளே சென்று பார்த்தார்.

அதில் கோவிலுக்குள்ளே இருந்த குத்துவிளக் குள், மற்றும் ஏனைய பொருட்கள் என அனைத் தும் காணமல் போனது தெரியவந்தது. இதன் மூலம் இரவு நேரத்தில் யாரோ சிலர் கோவில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.

உடன் இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறை யினரிடம் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன குத்துவிளக்கு, மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் மோதல் - பாட்டில் வீச்சு!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இங்கு நேற்று இரவு இன்னிசைக் கச்சேரி நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனது நண்பர்களுடன் கச்சேரியை பார்த்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த வடுகப் பட்டியை சேர்ந்த பத்து பேர் கண்ணனிடம் கோவில் திருவிழாவுக்கு எப்படி வரலாம் என தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் பத்து பேரும் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட் டினர். தடுக்க வந்த அவர்களது நண்பர்களையும் வெட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த கண்ணனின் உறவினர்கள் விரைந்து வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக் குப் பேராடிக்கொண்டிருந்த கண்ணனை மீட்க முயன்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த விக் னேஷ் தரப்பினர் ஆம்புலன்ஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் கண்ணாடிகள் உடைந் தன. ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ண னின் ஆதரவாளர்கள் விக்னேஷ் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் அப்பகுதி கலவரம் போல காட்சி அளித்தது. மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பினரையும் அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது காவல்துறையினர் மீதும் கல் வீசப் பட்டது. இதில் காவல்துறை இணை ஆய்வாளர் வித்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கண்ணனையும், காவல்துறை இணை ஆய்வாளர் வித்யாவையும் காவல்துறையினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்வம் குறித்து தென்கரை காவல் துறையினர் இருதரப்பை சேர்ந்த விக்னேஷ், முனியசாமி, சிவா, முருகன், அழகர்ராஜா, முருகப் பாண்டி, முத்துப்பாண்டி, செல்வகணேஷ் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விக் னேஷ், முனியசாமி கைது செய்யப்பட்டனர். மற்றவர் களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


கோவைக்கு வாருங்கள் உரக்கப் பேசுவோம்!


நாளை மறுநாள் 13.4.2013 சனியன்று கோவை - சுந்தராபுரத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது ஒரு மாநில மாநாடு எனும் அளவுக்குப் பெருமையும், தகுதியும் உடையதாக இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

மாநாட்டுக்குத் தீர்மானங்கள் வரவேற்கப்பட்டன. இந்தக் கால கட்டத்திற்குத் தேவையானதும், எதிர்காலத்தில் சந்திக்கப்பட வேண்டியதும் சிந்திக்கப்பட வேண்டியதுமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவின் தலைநகரில் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம் உலகையே உலுக்கி எடுத்து பெண்கள் பாதுகாப்புப் பற்றி உரக்கச் சிந்திக்க வைத்தது.

பெண்களுக்குத் துப்பாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்குக்கூட கருத்துகள் உலா வந்தன.

இதுபோன்ற ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகம் நடத்தும் கோவை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.
என்னதான் கல்வி வாய்ப்புகள் பெண்களுக்குப் பெருகி இருந்தாலும் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது, தேவைப்பட்டால் எதிர்தாக்குதல் கொடுப்பதெல்லாம் தேவைப்படுகிறது.

அதற்காகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய இடம் கல்விக் கூடங்கள்தாம்! உடற்பயிற்சி, கராத்தே போன்ற சிறப்புப் பயிற்சிகள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். உள ரீதியாக தன்னம்பிக்கை, துணிவு - இவை எல்லாம் அவசியம் தேவை. அதற்கான கல்வித் திட்டம் நம் நாட்டில் இல்லை என்பதை மரியாதையாக ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.

1929ஆம் ஆண்டிலேயே பெண்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறச் செய்தவர் தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கும்மி, கோலாட்டம் கற்றுக் கொடுப்பதும், கோலம் போடச் சொல்லிக் கொடுப்பதும் தேவையில்லை. மாறாக கைக்குத்து, குஸ்தி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே கோடிட்டுக் காட்டியுள்ளார் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
1987இல் கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தென் மாநில ஒடுக்கப்பட்டோர் சமூக நீதி மாநாட்டில் பெண்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மிக முக்கியமாக பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு பெண் களுக்குத் தேவை என்று வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியர் பணிகளில் ஓரளவு இந்த வாய்ப்பு இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கென்று தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.

நாடாளுமன்றம், மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற மசோதா 1996 முதல் நிலுவையில் இருக்கிறது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதற்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். இதுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையும் முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து கோவை மாநாட்டில் முக்கியமாகக் கருத்துகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பு என்னவென்றால், காலை கருத்தரங்கமாக இருந்தாலும் சரி பிற்பகல் நடக்கும் பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் நடக்கவிருக்கும் திறந்த வெளி மாநாடாக இருந்தாலும் சரி அனைத்து நிகழ்விலும் பெண்களே கலந்து கொள்வார்கள். கழகத் தலைவர் என்கிற முறையில் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு.

இந்திய அளவில்கூட இப்படி ஒரு மாநாடு இந்த வகையில் நடப்பது கோவை மாநாடே! இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்திலும் வேலூரில் நடத்தப் பட்டது.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் இரு கண்கள் போன்றவை யாகும்.

இந்த இரு நிலைகளிலும் வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட முடியும். ஏற்றத் தாழ்வுகள் பிளவுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளும் கட்டுப்படுத்தப்படும்.

சமூக நிலையிலே இருக்கக் கூடிய இத்தகைய ஏற்றத் தாழ்வைப் போக்காத நிலையில், வேறு எந்த சீர்திருத்தம், மாற்றம் வந்தாலும் அது நிலைக்காது என்பது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.
உரக்கப் பேசுவோம் - வாருங்கள் - கோவைக்கு!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் - திராவிடர் எழுச்சி மாநாடு

சிறீரங்கத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.4.2013 அன்று மாலை வெகு எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

மாவட்டக் கழகத் தலைவர் வரவேற்புரை

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர் ச.கணேசன் நன்றி கூறினார். மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் முன்மொழிந்தார்.

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தமதுரையில் இதே சிறீரங்கத் தில் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். அதில் கிராமக் கோயில் பூஜாரிகள் மாநாடும் ஒரு நாள் நடைபெற்றது.

இதன் நோக்கமென்ன? கிராமக் கோயில் பூஜாரிகள் என்பவர்கள் பார்ப்பனர் அல்லாதார் தான். அவர்கள் நகரப் பகுதியில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக ஆகக் கூடாதா?

அந்த எண்ணம் - அந்த ஆசை அவர்களுக்கு எப்படியும் வந்து விடக்கூடாது என்பதுதான் இதற்குள்ளிருக்கும் சதி என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற் றினார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத் தது என்று மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் தமது தெய்வத்தின் குரல் எனும் நூலில் (பக்கம் 266) குறிப்பிட்டுள்ளார். சிறீரங்கம் மாநாட்டில் பேசிய மாஜி சங்கராச்சாரியர் ராமன் கோயில் கட்டுவதன் அவசியம் பற்றி சிலாகித்துள்ளார்.

மக்களுக்கு இப்பொழுது முக்கிய பிரச்சினை ராமன் கோயில் கட்டுவது தானா? ராமன் கோயில்தான் சர்வரோக மருந்தா?

இதே ஊரில் பிராமணாள் என்ற பெயரில் ஒருவர் உணவு விடுதியை நடத்தி வந்தார். கழகம் களத்தில் குறித்த காரணத்தால் அந்தப் பெயர் நீக்கப்பட்டதோடு, கடையையே காலி செய்து விட்டார்.

சாஸ்திரப்படியே கேட்கிறோம் பிராமணர் ஓட்டல் நடத்தலாமா? உணவை விற்கலாமா? கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் கூறியுள்ளதே!

பார்ப்பான் பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்ய வேண்டும் என்று அதே மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளதே (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 112).

பார்ப்பனர்கள் சங்கீதக் கச்சேரிகளை நடத்து கிறார்களே. மனுதர்மத்தில் சங்கீதம், பார்ப்பனர் களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே (மனுதர்மம் 4, சுலோகம் 15).

மற்றவர்களுக்கு சாஸ்திரத்தை உபதேசிக்கும் பார்ப்பனர்கள் முதலில் தாங்கள் அவற்றைப் பின்பற்றட்டும் என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

சிறீரங்கத்தில் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் இந்துக்கள் ஒற்றுமை யாக இருந்தால் விரைவில் ராமன் கோயிலைக் கட்டலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலீம் களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார் பிஜேபி கும்பல் ஒரு பட்டப்பகலில் இடித்தது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், வினய் கட்டியார் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டுள்ள நிலையில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து கொண் டிருக்கக்கூடிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று பேசலாமா?

அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்றால் அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல, பாபர் மசூதி என்பது வெறும் கட்டடம்தான் - அதை இடித்தது குற்றமல்ல என்றும் பேசியதும் இதே சங்கராச்சாரியர்தான் இதன்மீதுகூட சட்டப்படி வழக்குத் தொடுக் கலாம் ஏன் செய்யவில்லை?

நாளைக்கு யாரோ ஒருவர் ஆத்திரப்பட்டு காஞ்சி மடத்தையோ ரங்கநாதர் கோயிலையோ இடித்தால் அது வெறும் கட்டடம்தான் - இடித்ததது குற்றமில்லை என்று சொன்னால் சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சங்கராச்சாரியார் கூறியிருப்பதால் அதற்குப் பதிலாக இதனைக் கூறுகிறோம். வன்முறையை தூண்டுவது கழகத்துக்கு உடன்பாடல்ல என்றும் குறிப்பிட்டார்.

BKCJEM said...

அய்யா அறிவு சுடரே பகுத்தறிவு என்றால் அதை தி.க வினர் குத்தகைக்கு எடுத்தது போல் எழுத வேண்டாம்

தமிழ் ஓவியா said...


அண்டப்புளுகு என்பது இதுதானோ!2012 மார்ச்சில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப் பட்டது. போர்ப் படிப்பினை மற்றும் மறு சீரமைப்புக் கான குழு (L.L.R.C) என்னும் பெயரில் இலங்கை ராஜபக்சே அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் கண்டுள்ளவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போர்க் குற்றங்களைச் செய்த இலங்கை அரசின் அதிகார வர்க்கம்தான்.

2012 மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கண்டிருந்தபடி எல்.எல்.ஆர்.சி. மீது இலங்கை அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், மீண்டும் கடந்த 21.3.2013 ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மீண்டும் அதே பல்லவிதான்.

மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை 18 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திர பன்னாட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் இது மிக விழிப்பாக நீக்கப்பட்டு மறுபடியும் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருடன் கையில் சாவி கொடுத்த கதை என்று அப்பொழுதே விமர்சனம் எழுந்தது.

நேற்று வந்த ஒரு தகவல் அது உண்மைதான் என்பதை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகி விட்டது. எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டது. அதன்மேல் இலங்கையின் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியதாம். அந்த விசாரணையின் முடிவில் அது தெரிவித்திருக்கும் விடையங்கள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும், அய்.நா.வும் அமெரிக்காவும், உலக நாடுகளும் மனித உரிமை ஆணையமும் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனவே என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

சிங்கள இராணுவ வீரர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் எந்த ஒரு அப்பாவித் தமிழரும் இராணுவத்தால் கொல்லப்படவில்லை. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள்தான் சர்வதேச நெறிமுறைகள் அனைத்தையும் மீறியுள்ளனர் என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பாகவே கூறிவிட்டது.

பல்லாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம் அல்லாமல் வேறு எந்த நாட்டுப் படை கொன்று குவித்ததாம்?

பிரிட்டனின் சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் பொய் - சிங்கள ஓநாய்கள் - ஆட்டுக்குட்டிகளை எங்கள் மார்போடு அணைத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம் என்று சொன்னால் நம்பித் தொலைக்க வேண்டியதுதானே!

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் சொல்லுவதைத்தான் இலங்கை இராணுவ நீதிமன்றமும் சொல்லியுள்ளது.

இதற்குப்பின் அடுத்த கட்டம் என்ன? அய்.நா.வும், மனித உரிமை ஆணையமும் அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன?

நமக்கு ஒரு சந்தேகம்; அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் இந்தோனேசியா நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்ததே - அதன்மீது என்ன நடவடிக்கை என்பதுபற்றி மூச்சுப் பேச்சே இல்லையே - அவை வெறும் காகிதக் கட்டுகள் தானா?
அய்.நா. அமைத்த குழுவின் அறிக்கை நம்பகத் தன்மை உடையதா? கொலைகாரனே நீதிபதியாகி தீர்ப்பு சொன்ன இலங்கை இராணுவ நீதிமன்றத்தின் முடிவு நம்பகத்தன்மை உடையதா?

இதுபற்றி முடிவு செய்யும் தன்மையில்தான் உலகின் யோக்கியதாம்சமே அடங்கியுள்ளது.12-4-2013

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி


மதங்களுக்கு உயிர் நாடியாய் இருப்பது பிரச்சாரமும், பண முமேயல்லாமல் அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனப் பெண் மொட்டை அடிப்பதுண்டா?

ஆண்களும், பெண்களும் கோவில்களுக்கு சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடி கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணிய காரியம் என்கிறார்கள். எந்த பார்ப்பனராவது, பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?

தமிழ் ஓவியா said...


யாரால் அனுப்பப்பட்டார்கள்?


ஆழ்வார்கள், அவதார புரு ஷர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய் யர்கள், திருடர்கள், கொலைகாரர் கள், நம்பிக்கைத் துரோகம் செய் கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

(குடிஅரசு, 27.8.1949

தமிழ் ஓவியா said...


நாத்திகம் பற்றி வினோபா


நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக ஒருவர் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: பயிற்சி பெற்றோருக்கு உடனே பணி ஆணை வழங்குக! குடந்தையில் தமிழர் தலைவர்


குடந்தை, ஏப்.12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணி வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால், கட்சி வேறுபாடு, ஜாதி வேறு பாடின்றி பொதுமக்களைத் திரட்டி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடை பெறும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

குடந்தையில் 10.4.2013 அன்று மாலையில், மகாமகாக் குளம் மேல்கரையில், குடந்தை பெரு நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம், குடந்தை கழக மாவட்டம் ஆகியவற்றின் சார்பில், திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவரின் எழுச்சி உரை

இக்கூட்டத்தில், தமிழினம் சந்திக்கும் சவால்கள் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில், பார்ப்பன ஜாதி ஆதிக்கம், ஆணவம் என்பதனு டைய விளைவாக, இன்னமும் கோயில்களுக் குள்ளே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று ஏன் எதிர்க்கவேண்டும்.

கேரளாவில் பெரிய பெரிய கோவில் இருக்கின்றது. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இருக்கிறதே, அதனை எதிர்த்து யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லையே?

ஆனால், இங்கே அச்சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்களே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண் டும் என்று தி.மு.க. நிறைவேற்றிய அந்தச் சட்டம் மீண்டும் எழுந்து நடமாடக் கூடிய அளவிற்குச் செயல்படுத்தவேண்டும். அது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினரும் அவரவர்கள் பங்கிற்கேற்பத் தயாராக இருக் கிறார்கள். அதனை செயல்படுத்தவேண்டும்.

தமிழக அரசு, சுமுகத் தீர்வு என்கிறது ஏதோ புதிர் நாவல் மாதிரி சஸ்பென்ஸ் இருக்கக்கூடாது. சுமுகத் தீர்வு வந்தால் நல்லதுதான். இந்தச் சட்டத்தைப் நாங்கள் ஏற்கிறோம் என்று பார்ப்பனர்கள் சொல்லவேண்டிய கட்டத்தை இந்த ஆட்சி உரு வாக்கினால், நாங்கள் பாராட்டிச் சொல்வோம். நல்லது செய்யும்போது பாராட்டுவோம்; தவறு செய்யும்போது கண்டிக்கிறோம்.

நாங்கள் ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இல்லையே!

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், மனித நேயத்திற்கு எதிராகப் போனால், அதனைக் கண் டிக்கவேண்டியது மனிதநேயர்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான், தமிழக அரசுக்கு, அ.தி.மு.க. அரசுக்கு - ஏற்கெனவே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, எங்களிடத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 60 சதவிகித இட ஒதுக்கீடு, அதன்படி பயிற்சி நடைபெறும் என்று. அதற்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சி அந்தச் சட்டத்தை நிறைவேற்றி, 69 சதவிகித அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்தி, பயிற்சி கொடுத்திருக்கிறார் கள். அதை இப்பொழுதுள்ள ஆட்சி நடைமுறைப் படுத்தவேண்டும் அல்லவா!

பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் இப்பொழுது பணி யின்மையால் பட்டினியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இதில் என்ன நட்டம் வந்துவிடும்.

இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக, தெளிவாக தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சட்டத்தை, சுமூகத் தீர்வு என்ற பெயராலே என்ன செய்தாலும், நடத்தி வெற்றி காணவேண்டும்; அமுல்படுத்தவேண்டும்.

இல்லையென்றால், கட்சி வேறுபாடு இல்லாமல், ஜாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும். ஜூன் மாதம் முதற்கொண்டு அப்பணிகளைச் செய்யும் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


பி.பி. மண்டல்


பிற்படுத்தப்பட்ட மக்கள் தம் வாழ்நாளில் மறக்கக் கூடாத ஒரு பெருமகன் பி.பி. மண்டல் ஆவார். அவரின் நினைவு நாள் இந்நாள் (1982).

பீகார் மாநில முதல மைச்சராகவும் இருந்தவர். இவரின் தலைமையில்தான் 20.12.1978 அன்று பிரதமர் மெரார்ஜி தேசாய் அவர் களால் பிற்படுத்தப்பட்டோ ருக்கான நலக்குழு அமைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆவது பிரி வின்படி குடியரசு தலைவர் அவர்களால் இத்தகு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தொடக்கத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எவரும் உறுப்பினராக இல்லாத நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மான மிகு கி.வீரமணி அவர் களால் அன்று முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்ட தன் விளைவாக தமிழ் நாட்டைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த சுப்பிர மணியம் அவர்கள் நியமிக் கப்பட்டார்கள். அவர் கடைசி வரை கழகத் தோடும் தமிழர் தலைவ ரோடும் தொடர்பு கொண்ட வண்ணமாகவே இருந்தார்.

குழு அறிக்கைக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது, கலந்துரை யாடுவது என்பனவற்றில் பெரியார் திடலோடு நெருக் கமான உறவோடு இருந்து வந்தார்.

பி.பி. மண்டல் அவர் களும், சுப்பிரமணியம் உள்ளிட்ட உறுப்பினர்களும் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் (30.6.1979) சிறப்பான வர வேற்பும் அளிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பி.பி. மண்டல் மனந் திறந்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறேன்: நாங்கள் அரசுக்கு அறிக்கை அளிப் போம். ஆனால் அரசு அத னைச் செயல்படுத்தும் என்பதற்கு உறுதி யில்லை. அதனைச் செயல்படுத்தும் திறன் உறுதி பெரியார் மண் ணுக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இருக் கிறது! என்று முழங்கியது இன்னும் காதுகளில் ரீங் காரம் செய்கிறது!

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் தமிழர் தலைவர் அவர்கள், செயல் படுத்திக் காட்டுவோம் என்று சங்கநாதம் செய் தார். அதன்படி 42 மாநாடு களையும், 16 போராட்டங் களையும் நடத்தி கழகம் செயல்படுத்தியும் காட் டியதே!

ஆனாலும், பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில், ஏழு விழுக்காட்டைத் தாண்ட வில்லை - நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு. பயணம் செய் வோம் - பணி முடிப்போம் என்று மண்டலின் நினைவு நாளில் உறுதி கூறுவோம்! வாழ்க மண்டல்!

- மயிலாடன் 13-4-2013

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 13


ஏப்ரல் 13ஆம் நாளை தமிழ்நாட்டு மக்களால் மறக்கவே முடியாது. இந்நாளில்தான் 1954ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

எந்தச் சூழலில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்? உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் ஏற்றிப் போற்றப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் நான்காம் வகுப்பே படித்திருந்த காமராசர் அமர்ந்தார் என்பது சாதாரணமானதல்ல.

ஆச்சாரியார் ஏன் தூக்கி எறியப்பட்டார்? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மக் கண்ணோட்டத் தோடு - அரை நேரம் படிப்பு - அரை நேரம் அப்பன் தொழில் என்ற குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினாரே! 1952இல் மட்டுமல்ல; 1937இல் சென்னை மாகாண பிரதம அமைச்சராக வந்த போதும்கூட இதே ராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை இழுத்து மூடினாரே!

ஆச்சாரியாரின் இந்த மனப்பான்மையை மனதில் நிறுத்தினால் தான் 1954இல் இதே நாளில் காமராசர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன சூழ்நிலையையும், காலத்தின் கட்டாயத்தையும் அறிய முடியும்.

ஆச்சரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார்; அதே நேரத்தில் காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

கே.ஆர். விசுவநாதன் என்ற சட்டமன்ற உறுப் பினர் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். வல்லுநர் குழு ஒன்றை நியமித்து புதிய கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்: அறிக்கை வரும் வரை கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக (முதல் அமைச்சர் ராஜாஜிக்கு ஆதரவாக) 137 வாக்குகளும் கிடைத்தன. மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிபுணர் பருலேகர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க மறுத்து விட்டார் முதல் அமைச்சர் ஆச்சாரியார். கடும் எதிர்ப்புக் காரணமாக ராஜாஜி பதவி விலகினார்.

காமராசர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு எளிதில் இசையவில்லை. தந்தை பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களும் கொடுத்த அழுத்தமும் துணிச்சலும்தான் அவர் ஒப்புதலுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

மக்கள் எதிர்பார்த்தபடியே ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளை மளமளவென்று திறந்து மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இலவசக் கல்விக் கதவைத் திறந்து, தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் கல்விக் கண்களைத் திறந்து விட்ட வள்ளல் ஆனார்.

இன்றைக்குக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை கொள்ளவும் 69 விழுக்காடு இடஒதுக் கீட்டினை சட்டரீதியாகப் பெற்றிடவும் கால்கோள் போட்ட கருப்புத் தங்கம் காமராசர்!

ஆம், அவாள் ஆத்து ஆனந்தவிகடன் எழுதியதுபோல கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர்!

காமராசருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் கல்வி வளர்ச்சி செம்மாந்து ஓங்கியது என்பதில் அய்யமில்லை.

இன்னும் மத்திய அரசின் கல்வி நிறுவனங் களில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., முதலியவற்றில் ஒடுக்கப் பட்டோருக்குக் கதவடைப்பு எனும் நிலைதான் தொடர்கிறது அந்தக் கதவையும் உடைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிகரமாக வெளிவரும் நாள்தான் தந்தை பெரியார் அவர் களுக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் உண்மையான நன்றி தெரிவிக்கும் உன்னத நாளாகும்.

வாழ்க பெரியார்!
வாழ்க காமராசர்!

தமிழ் ஓவியா said...


எதிர்க்காமல்...


மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது.
(விடுதலை, 5.11.1967)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம்: திராவிடர் கழகக் கூட்டங்களும்; பார்ப்பனர்கள் ஒத்துழைப்பும்!தமிழ்நாடு முழுக்கவும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திரா, கருநாடகா, மும்பை, புதுடில்லி என இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட பெரியார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சிறீரங்கத்தில் மட்டும் ஏதாவது சலசலப்பு கேட்கிறது. திராவிடர் கழக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு வேலையிலும் வந்துவிடுகிறது அந்தச் சலசலப்பு! எந்தச் சலசலப் புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிகள் நாங்கள், என பட்டுக்கோட்டை அழகிரி அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் அவர் சொன்னது இன்று வரை சிறீரங்கத்துப் பார்ப்பனர்களுக்குத் தெரியவில்லை போலும்!

சிறீரங்கத்தில் நமது தோழர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தொடங்கும் அதே வேளை பார்ப்பனர்களும் தொடங்கிவிடுகிறார்கள் வேலை! இதில் இன்னொரு வியப்பு என்னவெனில், திராவிடர் கழக நிகழ்ச்சிகள் சிறீரங்கத்துத் தமிழர்களுக்குத் தெரிவதற்குள், அவாள்களுக்குத் தெரிந்து விடு கிறது.

இன்னும் சொன்னால், திருவெறும்பூர் கழகத் தோழர்களுக்குக்கூட தாமதமாகவே தெரியவரு கிறது. போகிற போக்கில் பார்ப்பனர்களைக் கைப்பேசியில் அழைத்து, ஏம்ப்பா! சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்வார் கள் போல! அவ்வளவு சுறுசுறுப்பு!

நம் தோழர்கள் ஏதோ சின்னதாய் ஒரு தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்வார்கள். பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்து அதைச்செய்து, இதைச்செய்து அல்லது எதையாவது செய்து தெருமுனைக் கூட்டத்தைப் பொதுக் கூட்டமாக மாற்றிவிடுவர். சரி! நம் தோழர்கள் நீண்ட நாள்கள் ஆச்சே, என ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயல்வார்கள். எட்டுப் பார்ப்பனர்கள் ஒன்றாய் சேர்ந்து, எட்டுத்திக்கும் பிரச்சினைச் செய்து பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிவிடுவார்கள். அண்மையில் கூட பிராமணாள் உணவகம் தொடர்பான கூட்டத் தைப் பார்த்து, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இது என்ன மாநகரக் கூட்டமா? மாநாட்டுக் கூட்டமா? என்று கேட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

சிறீரங்கத்தில் கூட்டம் என்றால் அவ்வூர் தோழர்களை மட்டும் நாம் பார்க்க முடியாது. திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம் பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கைந்து மாவட்டத் தோழர்களையும் அங்கு காணலாம். அந்த அளவிற்குப் பெருமைச் சேர்க்கும் சிறீரங்கப் பார்ப்பனர்களுக்கு நன்றி தெரிவித்துக்கூட நாம் ஒரு கூட்டம் நடத்தலாம். இப்படியான சூழலில்தான் சென்ற 4ஆம் தேதியன்று சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. உடனே இச்செய்தி பார்ப்பனர்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படித் தெரியும் என்று கேட்டால், நாங்களும் விடுதலை படிப்போம்ல..... என வடிவேலு பாணியில் அனலாய்ப் பேசுகிறார்கள்.

தோழர்கள் மாநாட்டிற்கான வேலைகளை முடுக்கிவிட, அவாள்களும் வேட்டியை முறுக்கிவிட்டுப் போனார்கள். எங்கு போனார்கள்? சிறீரங்கம் காவல் நிலையம் நோக்கி! அதுதான் மாநாட்டிற்கு நாம் அனுமதி வாங்கி விட்டோமே! அவர்கள் ஏன் போனார்கள்? என்று கேட்காதீர்கள். நாம் வாங்கியது மாநாடு நடத்த! அவர்கள் போனது மாநாட்டைக் கடத்த!

ஒவ்வொரு முறையும் நாம் கூட்டம் நடத்தும் போதும் அவர்கள் மறக்காமல் செல்லுமிடம் சிறீரங்கம் காவல் நிலையம். அங்கு போய் ஆணையரிடம் முறையிடுவார்கள். ஏம்ப்பா! அரங்கநாதரிடம் முறையிட வேண்டியது தானே? என யாரும் கேட்கக் கூடாது. அவாள்களுக்குத் தெரியும் அது முழு மனிதனை படுக்கை வசத்தில் செதுக்கிய வெறும் பாறை என்று! சரி! காவல் நிலையம் போய் என்ன சொல் வார்கள்? சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் நடத்தக்கூடாது, அவர்கள் எங்களைப்பற்றி தவறாகப் (?) பேசுவார்கள், பிரச்சினை வர வாய்ப் பிருக்கிறது என்றெல்லாம் குறைப்பட்டு முறையிடு வார்கள். காவல் துறை ஆணையர் கொஞ்சம் மெத்தனமாக இருந்தால், எங்களுக்கு முதல்வரைத் தெரியும், பிரதமரைத் தெரியும், ஒபாமாவைத் தெரியும் என உலகளவில் சொந்த பந்தங்களைக் கூட்டுவார்கள்.

இதென்னப்பா வம்பா போச்சு! எனக் காவல்துறை ஆணையரும் நம் தோழர்களை அழைப்பார், என்னப்பா கூட்டம் நடத்தப் போறீங்க? எனக்கேட்பார் (அது தான்! சென்ற வாரமே உங்களிடம் அனுமதி வாங்கிவிட்டோமே என்றெல்லாம் சொல்லக்கூடாது. கேட்ட கேள்விக் குப் பதில் சொல்ல வேண்டும்), கூட்டத்திற்கு யார் யாரையெல்லாம் வருகிறார்கள்? என்ன பேசு வார்கள் என எழுதிக் கொடுங்கள். குறிப்பா பிராமணர்கள் குறித்துப் பேசக்கூடாது. அதுவும் அவர்கள் மனம்(?) நோகப் பேசக்கூடாது, என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.

நம் தோழர்களும் வகுப்பு முடித்து வந்து விடுவார்கள் பிறகு மீண்டும் அழைப்பார்கள். விளம்பரப் பலகை இரண்டுதான் வைக்க வேண்டும். நான்கு வைக்கக்கூடாது, ஒலிபெருக்கி நான்குதான் வைக்க வேண்டும். எட்டு வைக்கக் கூடாது. என ஏதோ மாலத்தீவில் கூட்டம் நடத்துவது போல பேசுவார்கள். திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட வளைவு (ஆர்ச்) வைக்க அனு மதிக்க மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால், வளைவை யாராவது எரித்துவிட்டால் என்ன செய்வது? எனக் காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். என்ன செய்வது? என்கிற காவல்துறையினரின் வார்த்தை இன்றுவரை நமக்குப் புரியவில்லை.

சிறீரங்கத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறார்கள், மனசு வலிப்பதாய் துடிக்கிறார்களே! அரங்கநாதர் கோயிலில் தினமும் விழாக்கள் நடத்துகிறீர்களே? அதை நிறுத்த வேண்டும் என நாங்களும் புகார் செய்யவா? சமஸ்கிருதத்தில் பொய், பொய்யாய் உளறி, எங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறீர்களே... அதற்கும் சேர்த்துக் கிரிமினல் புகார் கொடுக்கலாமா? அவ்வாறு புகார் செய்தால் காவல்துறை அதை ஏற்றுக்கொள்ளுமா? அதன் மீது நடவடிக்கை எடுத்து, பார்ப்பனர்களையும், ஆன்மீகத் தமிழர் களையும் திருத்தி நல்வழிப்படுத்துமா?

தமிழ்நாட்டில்தான் திருவண்ணாமலை இருக்கிறது. ஆன்மீக ஊர் என்கிறீர்கள். பழனி இருக்கிறது, மேல்மருவத்தூர், கும்பகோணம் இருக்கிறது. அங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் வருவதில்லையே? சிறீரங்கம் மட்டும் என்ன கைபர், போலன், கனவாய் அருகிலா இருக்கிறது? எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் கொஞ்சம் அதிகம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வார்களா?

தமிழ்நாட்டின் மொத்தப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தும்கூட பெரியாரை, அவரது இயக் கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, தெரிந்து கொள்ளுங்கள். ஆணவத்தில் கூறவில்லை! நியாயத் தில் கூறுகிறோம்!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் எங்களால் எதிர்கொள்ள முடியும். உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நேர்மை வழி நடக்கிறோம்! எங்கள் செயல்களுக்குப் பின்னால் சூழ்ச்சி கிடையாது, வன்முறை கிடையாது, சமூகக்கேடு கிடையாது, மனித அழிவு கிடையாது. ஆனால் அத்தனையும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கிறது. அதை எதிர்த்த பயணம் தான் எங்களின் போராட்டங்கள்! எங்களின் நிகழ்ச்சிகள்!

நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்! ஒருபோதும் களைத்து ஓயமாட்டோம்! காரணம் எங்கள் பயிற்சியாளர் பெரியார்!!

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தில் சு.சாமிக்கு மூக்குடைப்பு


சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் செய்தியில் ஆரம்ப காலத் திட்டத்தின்படி, இத்தாலிய கடற்படை வீரர்கள் இந்தியாவிற்குத் திரும்ப மாட்டார்கள்; இத்தாலிய தூதர் நாடு கடத்தப்படுவார்; குடும்பத்தை இத்தாலி நாடு காட்டிக் கொடுக்காது என்று சொன்னார் அதே சமயத்தில் இத்தாலி அரசு தமது கடற்படை வீரர்களை திரும்ப அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.

நான் மட்டும் உச்சநீதிமன்றத் திற்குச் சென்று, இத்தாலிய தூதரை அடக்கி வைக்கவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இருக்காவிட்டால் இன்னேரம்... என்று சுவாமி பரபரக்க, அவரது தொண்டரடிப் பொடி டிவிட்டர், படையினர், தகுதியில்லாத நிலையில், அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு களைக் குவித்துள்ளனர். அதன்படி, சு.சாமியின் புதிய மந்திரக் கதைகளில், அவரின் பொது நல வழக்கு காரணமாகத்தான், உச்சநீதிமன்றம் இத்தாலிய தூதர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததன் விளைவாக இத்தாலிய அரசாங்கம் மண்டியிட்டது என்றெல்லாம் முழங்கி வரும் வேளையில், சு.சாமி யின் வெற்றிப் பவனியின்போது உச்சநீதிமன்றம் வெந்நீர் ஊற்றி விட்டது.

சு.சாமியின்மீது விழுந்த அதிரடி அறை, இத்தாலிய தூதர் இந்த நாட்டை விட்டு செல்லக் கூடாது என்ற தடையை நீக்கியபோது, விழுந்தது.

தமிழ் ஓவியா said...

இத்தகைய தூதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றிய விண்ணப்பம் செய்வதற்கு சுப்பிர மணிய சுவாமி செயல்பட்ட பொழுது, அவருக்கு இந்த அடி விழுந்தது.

டெலிகிராப் பத்திரிகை கூறுவ தாவது:

நீர் யார்? என்று உங்கள் மன்ற முதன்மை நீதிபதி கேட்டார்.

தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வந்துள்ளதாக சுப்பிரமணியசாமி கூறினார். அதற்கு நீதிபதி, நீர் யாரென்று நான் கேட்கிறேன். நீர் ஒரு வழக்கறி ஞரில்லை; ஆகவே இதில் உமக்கு உரிமையுமில்லை; வாதிடவும் உரிமை யுமில்லை. வீதியில் போகிறவர்கள் எல்லாம் வந்து, நான் வழக்காட விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன ஆகும்? இதுபோல இதற்கு முன் நீர் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது

நான் யார் என்று தெரியுமா? என்று கேட்பதன் மூலம் தனது அதி காரத்தை வலியுறுத்திக் கொள்ளும் இந்த நாட்டில், அதுவே மேலும் ஒரு அவமானகரமாக அமைந்து விட்டது.

உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி கபீர் அத்துடன் விட்டுவிடவில்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த சுப்பிரமணிய சுவாமியைப் பின் இருக்கைக்குப் போகச் சொன்னார். முதல் வரிசை வழக்கறிஞர்களுக் கானது; வழக்கில் சம்பந்தப்பட்டவர் களுக்கானது அல்ல; அங்கே உட்கார உமக்கு உரிமை இல்லை என்று சொன்னார்.

சுப்பிரமணியசுவாமி யாரோ ஆகிவிட்டார். முக்கியமானவர்கள் (பத்து) இருக்கையிலிருந்து வெளி யேற்றப்பட்டார்! சதி நடக்கிறது என்று கூக்குரலிட காரணம் கிடைத்து விட்டது. சுப்பிரமணிய சுவாமியும் அதைத்தான் செய்தார்.
இங்கு ஏதோ கூட்டு இருக்கிறது என்று சொல்லிய சாமி வேறு வழியின்றி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதிலிருந்து பெறப்படும் பாடம் என்ன? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திருடாதே; அவர்களுக் குண்டான நீதிக்கான புகழை பிறர் திருட அவர்கள் ஒருக்காலும் விட மாட்டார்கள்

சுப்பிரமணிய சுவாமியோ, தனது நிலைமையின் ஊடுருவலைச் சமா ளிக்க, டிவிட்டரில் பாரத மாதாவின் கவுரவத்தைக் காப்பதற்காக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியிடம் அவ மானப்படுவதை நான் ஒரு பொருட் டாகக் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில், இந்திய உச்ச மன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஊழல் படிந்த பரம்பரையின் பிற்காலத்தை பாதுகாக்க, சுப்பிர மணிய சுவாமியைப் பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திய இருக்கிறதென சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார் என ஆக்ட் இண் டியா கூறியுள்ளது. இரண்டு டிவிட்டர் செய்திகளுக்குப் பிறகு அவர் நேரிடையாக நீதிமன்றத்தைக் குறை கூறியுள்ளார். என்னுடைய நீதிமன்ற அவமதிப்பு விண்ணப் பத்தை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது ஒரு செயலற்ற தன்மையாகும் என்று கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள்மீது அவ தூறு குவிக்கும் தொல்லைக்காரரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ஆபத்து குறைந்த தந்திரத் திட்டம் அவரால் தாக்கப்படும் எந்த நபரும் அவர்மீது மான நஷ்ட வழக்குகளை தொடர் வதில்லை. தொடர்ந்தால் சுப்பிர மணியசாமி ஏங்கிக் கொண்டிருக்கும் கவன வெள்ளம் அவர்மீது பாய்ந்து வரும். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் மூக்கை நீட்டுவது ஆபத்தான விளையாட்டு அதுவும் தனது சட்டத் திறமைக்காக வெளிச் சத்தில் நிற்க விரும்பும் தனி மனித கட்சிக்கு!

உச்சநீதிமன்றம் நினைத்தால், சுவாமியை வெளியே தள்ளுவதற்கோ, உள்ளே வைத்துப் பூட்டுவதற்கோ ஏராளமான சட்டப்படியான வழிமுறைகள் உள்ளன.

உச்சநீதிமன்ற முதன்மை நீதி பதிகள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் அதுவும் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கும் போது; அதை இந்திய ஊடகங்கள் சமீப காலங்களில் அறிந்து வைத்துள்ளன.

ஆனால், தவறான அவமதிப்பு விண்ணப்பங்கள் வந்து, நீதிமன்றம் தன்னிச்சையான விசாரணைக்கு ஆட்படுத்தாத வரை எல்லாக் கதை களையும் டிவிட்டரில் சொல்லும் போது அது நல்ல பொழுது போக்காக இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே, பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமானுக்கு சமீபமாக இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள் கூர்ந்த பெருமான். தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக்கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29--_31

தமிழ் ஓவியா said...

சட்டப் பேரறிஞர்


நம் நாடு சுதந்திரம் அடைந்த சில நாள்களில் அரசியல் நிர்ணய சபை கூடியது. அக்கூட்டத்தில் அரசியல் சட்டத்தை வரைவதற்காக வரைவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தக் குழுவின் தலைவரானார். அவருக்கு உதவி செய்ய உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த எழுவரில் ஒருவர்கூட அம்பேத்கருக்கு உதவி செய்யவில்லை.

ஆனாலும், அம்பேத்கர் தளர்ந்துவிடவில்லை. அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அரசியல் சட்டம் முழுவதையும் தனி மனிதராக இருந்து வகுத்துக் கொடுக்க முயன்றார். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அம்பேத்கர். பல மாதங்கள் கடுமையாக உழைத்துத் திறம்படச் செய்து முடித்தார்.

அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொதுமக்களின் முன்பு வைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபை கூடியது. அரசியல் சட்டத்தின் விதிகள் ஒவ்வொன்றையும் படித்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்டம் மும்முறை படித்து ஆராயப்பட்டது. அப்போது அவரது உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. சட்டச் சிற்பி செதுக்கிய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நியூயார்க் நகரத்திற்கு வரும்படி அமெரிக்கர்கள் அழைத்த அழைப்பினை ஏற்று நியூயார்க் சென்றார் அம்பேத்கர். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு சட்டப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

காலை உணவைத் தவிர்ககாதீர்!


பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே!

நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நன்றாகப் படிப்பது, நன்றாக விளையாடுவது, அளவான நேரத்திற்கு நண்பர் - நண்பிகளுடன் இருப்பது - உரையாடுவது, பிறகு நன்றாகத் தூங்கி எழுந்து, அன்றன்றாடக் கடமைகளைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

பெரியார் பிஞ்சுகளான, உங்களுக்கா சொல்ல வேண்டும்? எள் என்பதற்குள் எண்ணையாக இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களான தேனீக்கள் அல்லவா எம் தங்கங்கள்!

ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு வேண்டுகோளாக சொல்லப் போகிறேன்.

ஏனென்றால் உங்கள மாதிரிப் பிள்ளைகள் அறிவுரை, ஆலோசனை என்றாலே முகம் சுளிக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் வேண்டுகோள் என்றேன்.

சரி தாத்தா விஷயத்திற்கு வாங்க; எங்களுக்குப் பொறுமை இல்லே - உடனே சொல்லுங்க..... அப்படின்னுதானே சொல்றீங்க.

ம் சரி இதோ சொல்றேன் - கேளுங்க பிள்ளைகளே!

உங்கள்ல பலரும் பள்ளிக்குப் புறப்படும்முன் காலை உணவை - சிற்றுண்டியை - (Break fast) சரியாகச் சாப்பிடாமல் உரிய நேரத்தில் அதிகாலையிலே எழாமல், தாமதித்து எழுந்து, உங்கள் அம்மாவைப் போட்டு வதைக்கிறீங்க - சாப்பிடாமலேயே - பஸ் வந்ததும் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நெருக்கிக் கூறி, பட்டினியாகவோ, அல்லது அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு அரக்கப்பறக்க ஓடுகிறீர்கள்!

அது சரியில்லே. சரியேயில்லை.....! ஏன்னா அது உங்க வளர்ச்சியை ரொம்ப ரொம்பப் பாதிக்கும்.

உடல் வளர்ச்சியை மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி, வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்டு உள்வாங்கி மனதில் பதியவைப்பதற்கு - காலை உணவைத் தவிர்த்தல் உதவவே உதவாது - மாறாக, வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை மூளை ஏற்பதில் சுறுசுறுப்பு காட்ட இயலாது. ஏன் தெரியுமா? நமது உணவு - உங்களுக்குத் தெரியுமா? செரிமானமாகும்போது, அதனைச் சர்க்கரையாக மாற்றித்தானே நமது மூளையை இரத்த ஓட்டத்தின் மூலம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

காலை உணவை - முதல்நாள் இரவோ, மாலையோ சாப்பிட்டு பொழுது விடிந்து எழுந்தவுடன், வயிறு மிகவும் காலியாகி இருக்கும். அதனை நன்கு உண்டு நிரப்புவது அவசியமோ அவசியம்! தெரிகிறதா தம்பிகளே, தங்கைகளே?

ஒழுங்காக காலைச் சிற்றுண்டி உணவை, சரியாகச் சாப்பிட்ட பல பள்ளிக் குழந்தைகள் நல்ல நினைவு வன்மை - Memory - ஏற்படுவதால் பாடங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல முறையில் உள்வாங்கி, மனதில் நிலைநிறுத்த முடிகிறது.

எனவே, நீங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு காலை உணவை ஒழுங்காக நல்ல முறையில் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்; நன்றாகப் படிக்கவும், தேர்வில் ஏராளமான மதிப்பெண் பெறவும், வீட்டில் தாய், தந்தை மகிழும் நிலை உங்களுக்கு ஏற்படும் - செய்வீர்களா செல்லங்களே,,,,,,,!

அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

தோல்வியா? துவளாதீர்!


-சிகரம்

ஓர் உண்மையைச்- சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். நாம் தோல்வி என்று நினைப்பது, சொல்வது எல்லாம் முழுக்க முழுக்கத் தப்பு.

ஒரு மாமரத்தில் தொங்கும் மாங்காயை அடிக்க ஒருவன் கல் விடுகிறான். மாங்காய் விழவில்லை. கல் குறி தவறிச் சென்றுவிட்டது. இது தோல்வியா?

அடுத்தமுறை ஒரு கல் விடுகிறான், மாங்காய் விழுந்துவிட்டது. இது வெற்றி என்போம். மாங்காய் அடித்ததில் வெற்றி, தோல்வி என்று இரு முடிவுகள் எப்படி வரமுடியும்? ஆக, நாம் நினைப்பதில் தப்பு உள்ளது என்பது புரிகிறதா? ஆம். உண்மையில் தப்புதான்.

முதல் கல்லில் மாங்காய் விழாதது தோல்வி அல்ல. -நிறைவேறாமை என்பதே உண்மை. முதல் முயற்சியில் இலக்கு நிறைவேறவில்லை.

இரண்டாவது முயற்சியில் இலக்கு நிறைவேறியது என்பதே உண்மை. மாறாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. நாம் முதல் முயற்சியில், இரண்டாம் முயற்சியில் அல்லது சில முயற்சிகளில் ஒரு செயல் நிறைவேறவில்லையென்றால் அதைத் தோல்வி என்கிறோம்.

தோல்வி என்றால் வெற்றிபெறவே முடியாது என்பது மட்டுமே-! வெற்றிபெற வாய்ப்புள்ள எதற்கும் தோல்வியில்லை-! விண்வெளிக்கு ராக்கெட் ஏவியதும் வெடித்துச் சிதறியது. அது தோல்வியா? அடுத்தடுத்து ஏவி செவ்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்டோமா! தோல்வியென்றால் விண்வெளிப் பயணமே முற்றுப் பெற்றுப் போயிருக்கும். அடுத்தடுத்த முயற்சி வந்திருக்காது.

எனவே, முயற்சிக்கு வாய்ப்பு உள்ள எச்செயலுக்கும் தோல்வியில்லை. முடியவே முடியாது என்ற முடிவு மட்டுமே தோல்வி-! முயற்சியின் முனைப்பில் தோல்வி முடிவாவதில்லை; முயற்சிகளின் முடிவிலேதான் தோல்வி உறுதியாகிறது. எனவே, முதல் முயற்சி நிறைவேறாதது தோல்வியென்று எண்ணித் துவளுவது அறியாமையாகும்.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க வேண்டியவர்கள். எதிர்காலத்தை வடிவமைத்து, நாளைய உலகை நடத்திச் செல்ல வேண்டியவர்கள். எனவே, இதை நன்றாக மனதிற்கொண்டு, முயன்றால் முடியாதது இல்லை; இயலாது என்பது முட்டாள்களின் முடிவு என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

அதேபோல் வெற்றியென்பது நிரந்தரமானது அல்ல. ஓட்டப்பந்தயத்தில், கிரிக்கெட் விளையாட்டில், அம்பு எய்வதில் என்று எந்தப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்த போட்டியில் தோற்கிறார்கள். ஒருமுறை 100 ஓட்டங்கள் பெறும் வீரர், அடுத்தமுறை 2 ஓட்டங்களில் வெளியேறுகிறார். இவர்களெல்லாம் வெற்றிவாய்ப்புக் கிட்டாதபோது (கிடைக்காதபோது) துவண்டால் சாதிக்க முடியுமா-?


தாமஸ் ஆல்வா எடிசன்

மின்சார பல்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி முதல் பலரும் பலமுறை முயன்றே வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் வழிகளில் முயன்றே இறுதியில் மின்சார பல்பு ஒளிர வழிகிடைத்தது என்பதை உணர்ந்து பிஞ்சுகள் நெஞ்சு நீதியுடன் நிமிர்ந்து நின்றால், வாழ்வில் ஒளிரலாம், உயரலாம்-!

அதேபோல் மாணவர்கள் இன்னொரு கருத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒரு செயலில் சாதிக்க முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்க முடியாது என்பது இல்லை. படிப்பில் உயர்நிலை எட்ட முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்கலாம்.


இராபர்ட் கிளைவ்

இராபர்ட் கிளைவ் சிறுவயதில் படிக்கமாட்டார். அளவற்ற குறும்பு செய்வார். அவரது செயல்களைப் பொறுக்கமுடியாத அவரது பெற்றோர், இராணுவத்தில் சேர்த்தனர். அப்படி உருப்படாதவன் என்று துரத்தப்பட்ட இராபர்ட் கிளைவ்தான், ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் வேரூன்ற -- நிலைக்க வழிசெய்தார்.


கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் மூன்று முறை பள்ளி இறுதித் தேர்வு எழுதித் தோல்வியுற்றார் (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அவர்தான் இலக்கிய மேதையாக, எத்தனையோ திரைப்படங்களுக்கு எழுத்தாளராய், அரசியல் விற்பன்னராய், தலைசிறந்த நிர்வாகியாய், பேச்சாளராய், கவிஞராய் பன்முகத்திறன் பெற்று, அய்ந்து முறை தமிழக முதல்வராயும் ஆனார்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாதிப்பதைவிட, சராசரியாய் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான், எதிர்காலத்தில் உயர்நிலையை எட்டி பல்திறன் பெற்று பளிச்சிடுவதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே, தோல்வியில் துவளாமல், தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டும்! சரித்திரம் படைக்க வேண்டும்-!

தமிழ் ஓவியா said...

வருஷப் பிறப்பை கொண்டாடலாமா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்கு கண்ணன், நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு, நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்! என்றனன்.கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.-------------------------------------(ஆதாரம்: அபிதான சிந்தாமணி)இவ்வளவு கேவலமான, ஆபாசமான, அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடு பவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது? குறிப்பு: கேவலமான, ஆபாசமான, அறிவுக்கு பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பாக இருப்பதால்தான் தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் தலைமையிலான அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இருந்தாலும் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி பழைய ஆபாச வருஷப்பிறப்புக்காகச் சிறப்பிதழ் வெளியிடுவது வெட்கம்! மகா வெட்கம்!!

11-4-2010