Search This Blog

17.4.13

கல் முதலாளிகளுக்குச் சொத்துக் குவியாமல் என்ன செய்யும்?

இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கத் தொழிலதிபர் ராமலிங்க ராஜூ என்பவர் ரூ.16.65 கோடியை காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குக் கொடுத்துள்ளார். 11 கோடி ரூபாய் ஏழுமலையானுக்காம்; 5 கோடி ரூபாய் பத்மாவதி தாயாருக்காம். (கடவுளி டத்தில்கூட ஆண் - பெண் வித்தியாசம் தானோ!)

கோவில்கள் தோன் றியது ஏன்? எனும் நூலினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ளார்.

மத ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகார கோட் டைக் கொத்தளங்கள் உள்ள உள்ள நகரங்களி லும், கிராமங்களிலும் உள்ள தெய்வங்களுக்குச் சொந்தமான பலவித சொத்துக்களையும் ஓரி டத்தில் சேகரிக்க அரசரது பொக்கிஷத்திற்குக் கொண்டு போய் சேர்த்து விடலாம்.

அன்றியும் ஓர் இரவு தெய்வத்தையோ, படத்தையோ ஏற்படுத்தவேண் டியது; அல்லது ஒரு கெட்ட சகுனத்தைப் போக்க திருவிழாக்களும், கூட்டங்களும் நடத்துவ தாகப் பாசாங்கு செய்து ஜனங்களிடமிருந்து அரசனது செலவுக்குப் பணம் வசூலிக்கலாம் என்று கவுடில்யன் அர்த்த சாஸ்திரம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி அரசனின் கரு வூலத்தில் குவிந்த மக்கள் பணம், பிறகு அர்ச்சகர் கைகளுக்கு வந்து சேர்ந் தது. நீதிக்கட்சி ஆட்சி யின்போதுதான் இந்தி யாவிலேயே முதன்முத லாக ஓர் சட்டம் இயற் றப்பட்டது. இந்து அற நிலையத் துறையிடம்  கோவில்களும், அவற் றின் சொத்துகளும் வந்து சேர்ந்தன.

சிதம்பரம் நடராஜன் கோவில் சொத்துகளோ நீண்ட காலமாக தீட்சதப் பார்ப்பனர்களின் தனிப் பட்ட சொத்துகளாகக் கைமாறின. மானமிகு கலைஞர் அவர்கள் அய்ந் தாம் முறையாக ஆட் சிக்கு வந்தபோது சிதம் பரம் கோவிலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

திருப்பதி ஏழுமலை யான் கோவிலுக்கு அர சன் கிருஷ்ணதேவராயர் அளித்த நகைகள் எல் லாம் மாயமாகப் போய் விட்டன. ஆந்திர மாநில உயர்நீதிமன்றமோ ஏழு மலையான் கோவில் நகைக ளைக் கணக் கெடுக்க உத்தரவு பிறப் பித்துள்ளது.

அமெரிக்காவரை ஏமாளிகள் இருந்தால் கல் முதலாளிகளுக்குச் சொத்துக் குவியாமல் என்ன செய்யும்?

அந்தோ பரிதாபம் - அந்தக் குத்துக்கல்லு முதலாளியால் ஒரே ஒரு பருக்கையாவது உண்ண முடியுமா?

-------------------- மயிலாடன் அவர்கள் 17-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி. கூட்டணி சிதறுகிறது!


அய்க்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பி.ஜே.பி. சாடல்
நவீன்பட்நாயக்கும் பி.ஜே.பி.யை உதறுகிறார்!

புதுடில்லி, ஏப்.17-பி.ஜே.பி. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் பிளவு ஏற்பட்டு சிதறுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக் கும் நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது பற்றி பாரதீய ஜனதா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சி யான அய்க்கிய ஜனதாதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதச்சார் பற்ற ஒருவரைத்தான் பிரதமர் வேட் பாளராக பாரதீய ஜனதா அறிவிக்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மோதல்

மேலும் டில்லியில் நடைபெற்ற அய்க்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், கூட்டணி யின் பிரதமர் வேட்பாளரை பாரதீய ஜனதா இந்த ஆண்டுக்குள் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கெடு விதிக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக, பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் பாரதீய ஜனதாவுக்கு அய்க்கிய ஜனதாதளம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

ஆனால், நரேந்திர மோடிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக நினைத்து அய்க்கிய ஜனதாதளத்தின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து அவரை கைவிட்டுவிட பாரதீய ஜனதா தயா ராக இல்லை என்றே தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

சாடல்
நிதிஷ் குமார் எல்லை மீறி பேசு வதாகவே பெரும்பாலான பாரதீய ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

அக்கட்சியின் செய்தித் தொடர்பா ளரான மீனாட்சி லேகி டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக் கையில்; நரேந்திர மோடி மீதான புகார்களை பாரதீய ஜனதா முற்றி லுமாக நிராகரிப்பதாகவும், அவரு டைய மதசார்பின்மை பற்றி நிதிஷ் குமார் உள்ளிட்ட யாருடைய நற்சான் றிதழும் தேவை இல்லை என்றும் கூறினார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் துக்கு பின்னரும், மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதிஷ்குமார் அங் கம் வகித்தார் என்றும், இப்போதும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்து வருகிறார் என்றும் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

பாண்டே சீறுகிறார்

பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் மங்கள் பாண்டே விடுத் துள்ள அறிக்கையில்,

நரேந்திர மோடி பாரதீய ஜனதா கட்சியின் மதிப்புக்குரிய தலைவர் என்றும், கூட்டணி கட்சித் தலைவர்கள் அவருக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் அய்க்கிய ஜனதாதளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடியை முதலமைச்சர் நிதிஷ் குமார் விமர்சித்து இருப்பதை பாரதீய ஜனதா அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டித் துள்ளனர். நவீன் பட்நாயக் திட்டவட்டம்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைக்காது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் 2009ஆம் ஆண்டு வரை கூட்டணி வைத்திருந் தது. எனினும், 2009 இல் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பிஜு ஜனதா தளமும் இடம் பெற்றிருந்தது. இப்போது அக் கட்சியை மீண்டும் இந்தக் கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், டில்லியில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பீர் களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக் கும் பேச்சுக்கே இடமில்லை. மூன்றாவது அணி என்பது நல்ல வாய்ப்பாகும். ஆனால் அது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்று அவர் பதிலளித் தார்.

நிதீஷ் அரசிலிருந்து பாஜக வெளியேறலாம்: அய்க்கிய ஜனதா தளம்

பிகாரில் நிதீஷ் குமார் தலை மையிலான அரசை ஆதரிக்க வேண்டுமென்று பா.ஜ.க.வுக்கு எந்த கட்டாயமும் இல்லை; வேண்டுமென்றால் அரசில் இருந்து பாஜக விலகிக் கொள்ளலாம் என அய்க்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்கக் கூடாது என்று அய்க்கிய ஜனதா தளம் கூறியுள்ளதை அடுத்து, அந்த இரு கட்சிகள் இடையே பிரச்சினை நிலவுகிறது. இந்நிலையில் பிகார் தலைநகர் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை, அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிகாரில் எங்கள் கட்சி ஆட் சிக்கு ஆதரவளிக்க வேண்டு மென்று கூறி பா.ஜ.க.வின் கால் களை நாங்கள் கட்டி வைத்திருக்கவும் இல்லை. ஆட்சி ஆதரவைத் தொடருங்கள் என்று கூறி அவர்கள் முன்பு தலைவணங்கிக் கேட்டுக் கொள்ளவும் இல்லை. பா.ஜ.க. ஒரு தனிப்பட்ட கட்சி, அது தனது விருப் பத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம். 17 ஆண்டுகளாக இந்த கூட்டணி உள்ளது. இது உடைவதால் யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படாது. பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியவை தேசிய கட்சிகள் அல்ல. அவர்கள் 4 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தால், நாங்கள் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம்.

இதுதான் வித்தியாசம். நரேந்திர மோடி மதச்சார்பற்றவர் என்று பாஜக கருதினால், அவரை பிரதமர் வேட்பாளராக அறி விக்கட்டும். அதன் பிறகு நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம். பிகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட அய்க்கிய ஜனதா தளம் தயாராகவே உள்ளது என்றார் சிவானந்த் திவாரி.

தமிழ் ஓவியா said...


கோபத்தை விட்டுவிடு வோருக்கே கொள்ளை இன்பம்!


மனிதர்களாகிய நமது எதிரிகள் வெளியில் இருப்போர் என்றுதான் நம்மில் பலர் தவறாகக் கருதிக் கொண்டுள்ளோம். ஆனால், உண் மையான எதிரிகள் பலரும் நமக் குள்ளேயே இருக்கிறார்கள்; அவர் களது ஆளுமை பற்பல நேரங்களில் சிகரங்களைத் தொடவேண்டியவை ஆகும். அம்மனிதர்களைக்கூடச் சீர ழித்து சின்னாபின்னமாக்கி விடுகிறது!

ஆம்! அந்தப் பெரிய எதிரி எது தெரியுமா? சினம் என்னும் சேர்ந் தாரைக் கொல்லி! ஆம், கோபம்தான்!

அதனை அடக்கி ஆளுபவர் களுக்கு உள்ளம் மட்டுமல்ல; உடலும், உடல்நலனும்கூட உயர்ந்த முறையில் ஒத்துழைக்கும்.

இதுபற்றிப் பேசுவது, எழுதுவது எளிது; ஆனால், நடைமுறையில் இதனைக் கொண்டு ஒழுகுவது - கடைப்பிடித்து வாழுவது அவ்வளவு எளிதல்ல; வாழ்ந்து விடுபவர்கள் வெற்றியை அடைந்தவர்கள் மட்டு மல்ல; உண்மையான வீரர்கள் அவர்களேயாவார்கள்!

அண்மையில் சிங்கப்பூரில் கிடைத்த ஒரு ஜப்பானியப் பேராசிரியர் கெண்டட்சூ தக்கமோரி (Kentetsu Takamori) என்பவர் (பவுத்த அறிஞர்) எழுதிய நல்ல படிப்பினைகளைக் கூறும் கதைத் தொகுப்பு நூல் ஒன் றைப் படித்தேன்; அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ ஞானிக்குக் கோபமே வருவதில்லை. எப்போதும் சிரித்த முகத்துடன் எதையும் உள்வாங்கி, எவரிடமும் பேசிப் பழகும் இயல் பானவர்.

அவரது நண்பர்கள் சிலருக்கு ஒரு விசித்திர ஆசை! இவரை எப்படி யாவது ஆத்திரமூட்டச் செய்து இவர் கோபத்தில் கொதிப்பதைக் கண்டு சுவைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அவர் தனியாகக் குடியிருந்த அந்த வீட்டில் அவருக்கு உதவிடும் உதவியாளரான ஒரு அம்மையாரிடம் அவரைக் கோபம் கொள்ளும்படிச் செய்தால் ஏராள பரிசுகள், பணம் தருகிறோம் என்று கூறினார்கள்.

மிக நீண்ட யோசனைக்குப் பின், அந்த உதவியாளரான பெண்மணி, வழக்கமாக தத்துவஞானி உறங்கப் போகுமுன், அவரது படுக்கையை நன்றாக அமைத்திருப்பார்; உதறி தட்டிப் போட்டு அழகுற அமைப்பது அன்றாட வழக்கம்!

அன்று வேண்டுமென்றே இந்த உதவியாளர் அதைப் போடாமல் அலங்கோலமாக வைத்துவிட்டுப் போனார். விடிந்ததும் அவர் கடிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன்!

பொழுது விடிந்து, இந்த அம்மையார் உதவியாளர், அவரைச் சந்தித்தபோது, அவர் வழக்கம்போல் புன்சிரிப்புடன் நேற்றிரவு படுக்கைப் போடவில்லை என்பதை அங்கு போன பிறகுதான் பார்த்தேன் என்று கூறிவிட்டுச் சென்றார்! ஏமாற்றமே மிஞ்சியது!!
மறுநாளும் இப்படியே செய்தார் உதவியாளர்; அதற்கடுத்த நாளும், இந்த ஞானி, நேற்றிரவுகூட படுக்கை சரியாகப் போடப்படவில்லை. நீங்கள் வேறு முக்கிய அலுவல்களில் ஈடு பட்டிருக்கவேண்டும்; இன்றைக்குச் செய்து விடுங்கள் என்று பொறுமை யாகக் கூறினார்!

மூன்றாம் நாள் காலை, நேற்றும் உங்களால் படுக்கை யைச் சரியாகப் போட இயலவில்லை; அதற்குக் காரணம் ஏதாவது இருக் கக்கூடும். கடந்த மூன்று நாள்களாக நானே போட்டுப் பழகிவிட்டேன். இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டாம். நானே போட்டுப் பழகிவிட்டேன் என்றார்.

இது இந்த உதவியாளரை வெட்க முறச் செய்தது. அந்த உதவியாளர் தத்துவ ஞானியின்முன் மண்டியிட்டு அழுதுவிட்டார்! நடந்ததைக் கூறித் தன்னை மன்னிக்கும்படி வேண்டி னார்!

அப்போதும் அந்த ஞானி தனது வழக்கமான புன்சிரிப்பை விடாமல், காட்டியபடியே இருந்தார். ஏதும் சொல்லவில்லை.

####

மற்றொரு கதை. விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பணக்கார பிரபு வீட்டில், ஒரு ஆட்டுக்குட்டி நுழைந்து விருந்தைப் பாழாக்கி விட்டதாம். இதைக் கண்டு மிகுந்த ஆத்திரம்கொண்டு, அந்த ஆட்டுக் குட்டிமீது எரிகின்ற நிலக்கரியை எடுத்துக் கொட்டி விட்டாராம்.

அதன்மீதுள்ள ஆட்டுத் தோலில் தீப்பிடித்துக் கொண்டது. அது பங்களாவுக்குள் அங்கும் இங்கும் வலி தாங்காமல் எரியும் நெருப்புடன் ஓடத் தொடங்கியது! அது ஆட்டு மந்தை யில் ஓடியது, அங்கும் தீ, எங்கும் தீ! குதிர் அருகில் புரண்டது, குதிரும் தீப்பிடித்து எல்லாமே நாசமாகியது!

இந்தத் தீ எல்லாவிடங்களிலும் பரவி, எல்லாவற்றையும் எரித்து நாசமாக்கியது!

பொறுமை முன்னவரை உயர்த் தியது; பின்னவரின் ஆத்திரமோ பெரும் அழிவையே உருவாக்கியது!

எனவே, கோபத்தைக் கொல்க! மனதை வெல்க!!

பொறுத்தவர்க்கு எப்போதும் இன்பம்; ஒறுத்தவருக்கு அந்தக் கணம் மட்டுமே இன்பம்; பிறகு மாறாத்துன்பம் என்ற வள்ளுவரின் குறளில்தான் எவ்வளவு நேர்த்தி!


- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

தமிழ் ஓவியா said...


முற்போக்குச் சிந்தனை தேவை!கோவை சுந்தராபுரத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களுள் 24 ஆவது தீர்மானம் பெண்களுக்கு முற்போக்குச் சிந்தனை தேவை என்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

கோயில் வழிபாடு, பண்டிகைகளைக் கொண் டாடுதல், சடங்குகளைச் செய்தல், மூடப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல், சாமியாரிணிகள், ஜோதிடர்கள், மந்திரவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்லுதல், மோசம் போதல் முதலியவை பெண்களை மேலும் இழிவுபடுத்தவும், முற் போக்குத் திசைக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் பயணிப்பதைத் தடுக்கவும்தான் பயன்படும் என்பதை உணர்ந்து, இந்தத் தளைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, பகுத்தறிவோடு சிந்தித்து, தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும் என்று பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. வேதங்கள் - இதிகாசங்கள் - புராணங்கள் - சாஸ்திரங்கள் என்பவை அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் தன்மை கொண்டதாலும், ஆபாச உணர்வுகளை ஊட்டுவதாலும் பகுத்தறிவுக்கு விரோதமாக உள்ளதாலும் இவற்றை அறவே புறக்கணிக்கும்படி பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இது மிகவும் முக்கியமான அடிப்படையான தீர்மானமாகும்.

நம்முடைய பெண்களின் நிலைமையைப்பற்றி பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரிக அறிவும், கவுரவமும் உள்ள சுற்றத்தாருக்குள்ளும், சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்துகொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர் களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத் தன்மை எப்படி ஏற்படும்?

என்ற வினாவை எழுப்புகிறார் தந்தை பெரியார்.

மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் குறியீடாகச் சொல்லுவது அவர்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளும், பழைமைப் பிடிப்பு களும், சடங்குகளில் மூழ்கிக் கிடக்கும் பிற்போக்குத் தன்மையையும்தானே?

தாங்கள் செய்யும் சடங்குகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கான காரணா காரியம் அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்வார்களா?

கோவில் கோவிலாகச் சுற்றித் திரிவதும், அங்கப் பிரதட்சணம் செய்வதும் நாகரிகமானதுதானா?

குழந்தைப் பேற்றுக்காக கோவிலுக்குமுன் குப்புறப்படுத்துக் கொள்வதும், ஆணி செருப்புக் காலால் அவர்களை மிதித்துப் பூசாரி செல்லுவதும் நாகரிகம்தானா - ஏற்புடையதுதானா?

ஒரு பெண் கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆணிடம் குறைபாடு இருக்க லாம்; அல்லது பெண்ணிடம் குறைபாடு இருக்கலாம். அதனைக் குணப்படுத்தவேண்டிய இடம் மருத்துவ மனையே தவிர கோவில்கள் அல்ல - பூசாரிகளின் செருப்புக் காலும் அல்ல.

பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குப் பெண்கள் வேப்பிலை ஆடையை அணிந்து செல்லுவது எல்லாம் எந்த அடிப்படையில்? பக்தி என்று வந்துவிட்டால் மான உணர்வுகூட பலி கொடுக்கப்படுகிறதே!

கடவுள், மத, சாஸ்திர, வேத, புராண, இதிகாசங் களின் தன்மைதான் என்ன? இந்துக்களின் அய்ந் தாவது வேதம் என்று கூறுகிறார்களே கீதை - அந்தக் கீதை பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லவில்லையா?

பெண்களைக் கொல்லுதல் பாவமாகாது என்று சொல்லுவதுதானே மனுதர்ம சாஸ்திரம். அய்ந்து பேருக்கும் தேவி என்பதும், பெண்ணை வைத்து சூதாடியது என்பதும் மகாபாரதம் கூறும் இழிவு அல்லவா!

இராமாயணத்தில் இராமன் சீதையைத் தீக் குளிக்கச் செய்ததும், நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு விட்டதும் எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

கோவை தீர்மானம் இவற்றைத்தான் சுட்டிக்காட்டு கிறது; கல்வி வந்தாலும் இந்தக் காட்டுவிலங் காண்டித்தன கடும் குரங்குப் பிடியிலிருந்து பெண் கள் விடுதலை பெறாவிட்டால் பெண்களுக்கு மீட்சி இல்லை என்று சுட்டிக்காட்டுவதுதான் அந்த 24 ஆம் தீர்மானம்.

பெண்களே பெரியாரைத் துணை கொள்வீர்!

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கின்றான்.
(விடுதலை, 2.6.1970)

தமிழ் ஓவியா said...


சென்னை உயர்நீதிமன்ற இலச்சினையில் தமிழுக்கு இடமில்லை-இந்தி மட்டும் ஏனோ? ஆசிரியருக்குக் கடிதம்தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் ஆவணங் கள் மற்றும் வழக்காடும் உரிமை வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் தமிழ் வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டாலும் நிறைவேற்றம் என்பது ஏதோ கேட்கக் கூடாத, நடக்கக் கூடாத ஒன்று என்பது போல் இந்திய தேசியத்தால் கருதப் படலாமா? தமிழ்நாடு, தமிழர், தமிழ்மொழி இந்தியாவின் ஓர் அங்கம் என்றால் இந்தியா முழு மைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டாமா? ஆனால், கோரிக்கை என்னவோ இன்னமும் தமிழ்நாட் டிற்குள்தான். அதற்கே கோரிக்கை வைப்பதே பெரும் சாதனையாக, அதுவும் ஆளும்கட்சி முதல்வரால் வைக்கப்படும் கோரிக்கை என்ப தால் நாளிதழ்களில் முதற்பக்க செய்தியாகிறது. மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்று இன்ன மும் மக்களுக்கு விளங்கவில்லை. அரசியல் நடத்துவதற்கு கோரிக்கை எழுப்புவதுமட்டுமே போது மானதா? என்றும் விளங்கவில்லை.

இலச்சினையில்
இந்தி புகுந்துள்ளது

இது ஒருபுறம் இருக்க, சென்னை உயர்நீதிமன்றம் என்பது இன்னமும் மெட்ராஸ் அய்க்கோர்ட் என்று தான் ஆவணங்களில் உள்ளது. ஆங்கிலத்தில் CHENNAI என்று இல்லாமல் இன்னமும் HIGH COURT OF JUDICATURE MADRAS என்றுதான் உள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சின்னம் ஆங்கிலத் தில் உள்ளது என்றாலும் அங்கே யும் வாய்மையே வெல்லும் என்ப தற்கு ஆங்கிலத்தில்TRUTH ALONE TRIUMPHS என்பதுகூட இந்தியில் உள்ளது.

தேசியக்கொடி அவமதிப்பும் இலச்சினையில் உள்ளது

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத் தாற்போல் சின்னத்தில் பொறிக் கப்பட்டுள்ள தேசியக்கொடி மூன்று நிறங்களில் இல்லாமல் பச்சை நிறத்தில் உள்ளது. கோபுரம் ஒரு நிறம், சிங்கம் ஒரு நிறம் மற்றும் நடுவில் வெள்ளை நிறம் என்று உள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் நீலத்தில் இல்லாமல் அது வும் பச்சை நிறத்தில் உள்ளது. கவ னக்குறைவாக இருப்பவர்கள்கூட தமிழ் இல்லாதவாறு கவனமாக இருப்பது மட்டும் ஏனோ? இலச் சினை உள்பட ஆவணங்கள், வழக் காடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழுக்குப் போராட வேண்டி உள்ளது. இந்தி மட்டும் இடம் பிடித்துக் கொண்டுள்ளது ஏனோ? தமிழர் தூக்கம் கலையும் நாள் எந்நாளோ?

எல்லாவற்றிற்கும் திராவிடர் கழகம்தான் போராடவேண்டி உள்ளது

தமிழின் பேரால் வாழும் சிலர் திராவிடத்தால் வாழ்ந்தோமா? என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு திரிவதும் புதியதொரு (FASHION) வாடிக்கையாகி வருகிறது. மற்ற வர்கள் கண்களை மூடிக்கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாலேயே தமிழிய முத்திரை ஆழமாகக் குத்திக்கொண்டுள்ளதாக எண்ணு கிறார்கள். ஆரிய ஆதிக்க ஒழிப்பு, தமிழில் வழிபாடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வாழ்வாதார உரிமை சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் திரா விடர் கழகம் மட்டும் தான் முழு மூச்சாக போராடி வருகிறதே அன்றி மற்றவர்கள் திராவிடத்தால் என்ன சாதித்தோம் என்று சோற் றில் முழுப்பூசணியை மறைக்கும் வேலை செய்துகொண்டு ஆரியத் துக்கு வால் பிடித்துவருகிறார்கள். தமிழ்நாடு அரசுத் தேர்வாணை யத்தில் தமிழுக்கு இடமில்லை என்றாலும், குடிமைப்பணிகளுக் கான தேர்வு தமிழில் எழுத உரிமை கோருவது என்றாலும், அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் கோளாறு ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் உடனுக்குடன் சுட்டிக் காட்டிப் போராடுவதும், தொலை நோக்கோடு தமிழர் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டுவது என்றாலும் தமிழர்தலைவர் அவர் களின் அயராத உழைப்பால் திரா விடர் கழகம் தான் முனைப்பாக செயல்பட்டு வருகிறதே ஒழிய மற்றவர் குறைசொல்லிகளாக இருந்துவருவதுதான். காணக் கிடைப்பது வரும் தேர்தலை மய்ய மாகக் கொண்டே மற்றவர் செயல் படுவர். வரும் தலைமுறையைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவது திராவிடர் கழகம் ஒன்று தான். தமிழினக்காவலராக தமிழர் தலைவர்தான் தன்னல மறுப்பாள ராக தொண்டாற்றி வருபவர். இன் றைய காலகட்டத்தில் ஊடகங்கள் அதிகமானாலும், இருட்டடிப்பு களும் அதிகமாகத்தான் இருந்து வருகிறது. அதையும் தாண்டி எவ்வித விளம்பரத்தையும் எதிர் பாராமல் நம் கடன் பெரியார் பணி முடிப்பதே என்று கடமையாற்றி வருவதே கருஞ்சட்டைப் பட் டாளம்.

-செஞ்சி ந.கதிரவன், மாவட்டச் செயலாளர்,

திராவிட கழகம், விழுப்புரம் மாவட்டம்

தமிழ் ஓவியா said...


பெரியாரியல் வாழ்க்கை முறை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது


அகச்சுரப்பியல் நிபுணர் டாக்டர் மரு.கு.கண்ணன் விளக்கவுரை!

மதுரை, ஏப். 17- 13.4.2013 சனிக் கிழமை மாலை நடைபெற்ற மதுரை விடுதலை வாசகர் வட்ட தொடர் சொற்பொழிவில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அகச்சுரப்பியல் நிபுணர் டாக் டர் மரு.கு.கண்ணன் தக்க ஆதாரங்களுடன் விளக்கியது பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தை யும் அளித்தது. அவர் 'இரத்த அழுத்த உயர் வுக்கு யார் காரணம்?'' என்ற தலைப்பில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உரை யாற்றினார். இரத்த அழுத்த உயர்வுக்கான காரணங்களை ஒளிப்படக்காட்சி மற்றும் மடிக் கணினி மூலம் திரையிட்டுக் காட்சி தனது விளக்கவுரையை ஆற்றியது எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகை யில் அமைந்திருந்தது. பெரியாரியல் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பவர்கள் 1.அடிமைத்தனத்தை வெறுப்பது, 2.அறியாமையை அகற்றுவது, 3.சமுதாய சமத்து வத்தை வலியுறுத்துவது, 4.கட வுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருப்பது, 5.அறிவி யல் உணர்வோடு வாழ்வியலை கடைபிடிப்பது போன்ற பெரியாருடைய கருத்துக்களை பின்பற்றுவதால் அவர்களுக்கு இரத்த அழுத்த உயர்வு ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்தினை அழுத்தமாக பதிவு செய்த போது பார்வையாளர்கள் பெரிதும் மகிழ்ச்சிப் பரவசத் தால் பெருத்த கரவொலி எழுப் பினர்.

அதோடு திரைப்பட நடிகர் புரட்சி தமிழன் சத்யராஜ் அவர் களை விமான நிலையத்தில் அண்மையில் டாக்டர் கண்ணன் சந்தித்து உரையாடிய போது சத்தியராஜ் அவர்கள் என்றைக்கு நான் கடவுளை மறந்தேனோ, அன்றிலிருந்து இரத்த அழுத்தமே இல்லை'' என்று கூறியதை கேட்டு பார்வையா ளர்கள் பெரிதும் ஆனந்தப் பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்திற்கு பணி நிறைவு பெற்ற நீதிபதி பொ. நடராசன் தலைமை தாங் கினார். திருமதி.இரா.வே.சுசிலா வரவேற்புரை நிகழ்த்த, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் தனராசு விடுதலை இம்மாத சிந்தனை என்ற தலைப் பில் விரிவாக விடுதலையில் வெளி யான பகுத்தறிவு சிந்தனைகளை விளக்கி காட்டினார். ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலர் (பணிநிறைவு) காசி விஸ்வநாதன் சிறப்பு பேச்சாளர் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். வேங்கை மாறன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது. அறிவியல் சிந்தனையோடு மருத் துவர் மரு.கு. கண்ணன் ஆற்றிய உரை அனைவருக்கும் மகிழ்ச்சி யை யும் மனநிறைவையும் அளித்தது.

தமிழ் ஓவியா said...

பதில் சொல்லுமா அதிமுக ஏடு?

மறுபடியும், மறுபடியும் அ.இ.அ.தி. மு.க.வின் அதிகார பூர்வ அக்கிரகார ஏடாகவே மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆர். வீண் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது.

அதுவும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம்கூட எழுதுகிறது என்றால், அதற்கொரு அசட்டுத் துணிச்சல் தேவைதான் என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ள லாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்திக் கருத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

நட்பு நாடு நட்பு நாடு என்று இலங்கையைச் சொல்லிக் கொண்டு வருகிறதே - இந்தியா - நட்பு நாடு என்றால் என்ன பொருள்?

இந்தி யாவின் வெளிநாட்டின்கொள்கை மாற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லி விட்டாராம். அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று ஒருதாவு தாவுகிறது (அக்ரகார) அதிமுக ஏடு.

திமுக காங்கிரசோடு கூட்டு சேர்ந்தது - இல்லை என்று மறுக்க வில்லை. அதிமுக காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா?

பா.ஜ.க. வோடு கூட்டு சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? அப்பொழுதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இல்லவே இல்லையா?

அப்பொழுது எந்த நேரத்திலாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள் கையை அதிமுக விமர்சித்ததுண்டா?

திராவிடர் கழகம் திமுக ஆதரிக் கிறது; அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் உண்டு.

அதற்காக அதிமுக ஆட்சியின் அத்தனை செயல் பாடுகளையும் ஆதரித்ததா என்ன?

மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கவில்லையா?

வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருப்பதாகச் சொன்னபோது எதிர்க்க வில்லையா?

மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததினால் (அதிமுக ஆட்சியை ஆதரித்த காரணத்தால்) அதற்கு திராவிடர் கழகத்தைப் பொறுப்பாக்க முடியுமா?

ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுக் கப்பட்ட போது அதனைப் பச்சையாக ஆதரித்தாரா இல்லையா அதிமுக பொதுச் செயலாளர்?

போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றத் தான் என்று கூறினாரா இல்லையா?

மரியாதையாக, நாணயமாக இவற் றிற்குப் பதில் சொல்லி விட்டு, மறுபடியும் பேனா பிடிக்கட்டும் பார்க்கலாம்.

கடைசியாக ஒரு கேள்வி இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டுமா? கூடாதா? பதில் சொல்லட்டும்.

@@@@@@

தமிழ் ஓவியா said...

மழை பொழிய....

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் பொம்மையைப் பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர் - கிராமப் பெண்கள் கடந்த சனியன்று, விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
மழை பொழிவதற்கும், இந்தச் சடங்குக்கும் என்ன சம்பந்தம்?

கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தார்களே மழை கொட்டி தீர்த்ததா?

மழை பொழிய இவ்வளவு எளிதான வழி இருந்தாலும் நாட்டில் பஞ்சம் ஏன்? ஏன்? பெண்கள் முதலில் திருந்த வேண்டும்.

திருச்செந்தூர் முருகனுக்கு சிங் கப்பூர் தொழிலதிபர் ஒரு கிலோ 400 கிராம் கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை காணிக்கையாக அளித்தார். தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பவை இன்றைய செய்திகள்.
இந்தியாவில் 70 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்குள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவு ளுக்கே நகைகளை செய்து அணி விப்பது அசல் முரண்பாடு அல்லவா?

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி எடுத்து வைத்து அந்த வெல்லப்பிள்ளை யாருக்கே படைப்பதா என்று கிராமத் தில் பழமொழி ஒன்றைச் சொல்லு வார்கள்.
மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் அந்த மனிதனைப் போலவே ஏமாளி போலும்!

@@@@@@

தமிழ் ஓவியா said...

பெண்ணென்றால்...

பெண் என்றாலே கேலி தானா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அதையும் தாண்டி அமைச் சர்கள் எனும் நிலையில் உள்ளவர் கள்கூட இதற்கு விதி விலக்கு இல்லை.

அண்மையில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஒருவர் மின் வெட்டையும், குழந்தைப் பேற்றையும் ஒப்பிட்டுக் கிண்டலடித்தார்.

இப்பொழுது மத்திய பிரதே சத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் விஜய்ஷா என்பவர் பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றின் பெண்களைப் பற்றி ஆபாச மான நகைச்சுவைத் துணுக்கை சொல்லப் போய் வீண் வம்பில் சிக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சரின் மனைவியும் இருந் திருக்கிறார். அதன் காரணமாக பிரச் சினையின் பலூன் உப்பி, கடைசியில் அமைச்சர் பதவி விலக நேரிட்டது.

சட்டப் பேரவையில் உட்கார்ந்து கொண்டு கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்ற வேலை களிலும் சிக்குகின்றனர் அமைச்சர் களும், சட்டப் பேரவை உறுப்பினர் களும். 2002இல் கோத்ரா பிரச்சினை யையொட்டி மோடி அரசால் திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறு பான்மையினருக்கான வன்முறையில் முசுலிம்கள் முகாம்களில் தங்கும்படி நேரிட்டது.

அப்பொழுது முதல் அமைச்சரான நரேந்திரமோடி முகாம்கள் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுகின்றன என்று சொன்னாரே - அதே நேரத் தில் அவரை யாரும் பதவி விலகச் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் ஓவியா said...


பயன்படவேண்டும்


சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)