Search This Blog

15.4.13

ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும்!பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார் ஏன்?


தமிழர் தலைவரின் அறிவார்ந்த வினா

சென்னையில் இரண்டரை வயது குழந்தை நரபலிக் கொடுமை!  இந்தோனேசியாவைப் போல ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும்
சென்னையில் இரண்டரை வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது பற்றியும், ஜோதிடத்தை நம்பும் இது போன்ற கொடுமைகளை அனுமதிக்க லாமா? இந்தோனேசியாவைப் போல ஜோதிடத்தை தடை செய்தால் என்ன? ஊடகங்களுக்கும், தலைவர்களுக்கும் இதில் பொறுப்பு இல்லையா? எனும் அறி வார்ந்த வினாக்களைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், அறிக்கை வருமாறு:

நேற்று முன் நாள் சென்னையில் வந்த செய்தி குழந்தை நரபலி என்ற கோர சம்பவம் நம் நெஞ்சங்களில் ரத்தக் கண்ணீர் வடியச் செய்யும் கொடுமையான, அநாகரிகமான, காட்டுமிராண்டிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதற்கான நிர்வாண அடையாளம் ஆகும்!

இரண்டரை வயது குழந்தை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் - அவரது மனைவி கீதா; இவர்களின் இரண்டரை வயது பையன் விஷ்ணு.
9.4.2013 அன்று இவர்களது பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவனைக்கு உடனே எடுத்துச் சென்ற நிலையில், அக்குழந்தை வழியிலேயே இறந்து விட்டது.

குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் விழுந்து, (விபத்தாக) இறந்துவிட்டதாக எண்ணி, பெற்றோர் -குடும்பத்தினர் அதன் உடலை எரித்து விட்டனர்.
பிறகுதான் உண்மை உலகுக்குத் தெரிய வந்தது!

அந்தக் குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்ற பெண், தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம் பக்கத்தாரிடம் அப்பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவர் தெரிவித்துள்ளார்; அதன்பிறகு காவல் துறைக்குப் புகார் கொடுக் கப்பட்டது. மகேஸ்வரியை அழைத்து விசாரித்த போது, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்!

அவர் அளித்த வாக்குமூலம் எப்படி மூடநம்பிக்கை நோய் நம் மக்களின் மூளையை அறவே அரித்துத் துளை போட்டுள்ளது - என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.

குடுகுடுப்பைக்காரன் வேலை

7.4.2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக்காரனிடம் என் கையை நீட்டி, ஜோசியம்  பார்த்தேன். அப்போது எனக்கும் என் குடும்பத்திற்கும் யாரோ செய்வினை வைத்தாகத் தெரிவித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அதை அகற்றி விடுவதாக அந்த குடுகுடுப்பை ஜோசியன் சொன்னான்.

மறுநாள் அந்த குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், இரண்டு தாயத்து, குங்குமம் போன்ற பொருள்களைக் கொடுத்து தாயத்தை என்னையும், என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடு குடுப்பைக்காரன் என்னிடமிருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான்.

கொலை செய்தேன்!

தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுயநினைவை இழந்தேன். குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும்போது எனக்கு ஆத்திரமாக இருந்தது. (எனக்கும் செந்தில் குடும்பத்திற்கும் மன வேறுபாடு இருந்தது. என்றாலும் குழந்தை விஷ்ணு என்னிடம் வந்துதான் விளையாடிக் கொண்டிருப்பான்) கொலை செய்து விடலாம் என்று தோன்றியது.  9.4.2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன், மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டு விட்டு தவறி விழுந்த தாக நாடகம் ஆடினேன். அனைவரும் அதை நம்பினர் (சுயநினைவை இழந்தேன் என்பதும் நாடகத்தின் ஓர் அங்கம்தானோ!)

மகேஸ்வரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை விஷ்ணு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக,  நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மகேஸ்வரி தோஷம் கழிக்கும் நோக்கத்தில் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில்  உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆதங்கம்

இதுபற்றி நேற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மிக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரியார் எப்போதும் தேவைப்படுவது ஏன் என்பதை இதன் மூலம் நெக்குருக வர்ணித்துள்ளார்கள்!

21ஆம் நூற்றாண்டிலா வாழுகிறோம் என்ற பொருள் பொதிந்த கேள்வியினை பொறி தட்டும்படிக் கேட்டுள்ளார்கள்!

நமது அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்று 51A(h) பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான்மையை மனிதநேயத்தை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் மனப் பாங்கை ஊக்குவிப்பது, வளர்ப்பது சீர்திருத்தை வலியுறுத்துவது என்று உள்ளது?

இதை அமைச்சர்கள் பொதுத் தலைவர் களில் தொடங்கி, சாதாரண குடிமக்கள் வரை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்?

வெறும் ஏட்டுச் சுரைக்காய் எழுத்துக் கள்தானே இவை?

1976இல் செங்கற்பட்டில்

தமிழ்நாட்டில் முன்பு செங்கற்பட்டில் ஒரு நரபலி (1976இல்) அதன்பிறகு பெரம்பலூரில் பள்ளி மாணவியைக் கொன்ற நிகழ்வு, இப்போது இப்படி என்று குறைவான அளவு என்றாலும் பெரியார் மண்ணில் - அதுவும் 21ஆம் நூற் றாண்டில் இப்படி நடக்கலாமா?

ஜோசியங்கள், யாகங்கள் நடத்துவோர், காவி வேட கபடதாரிகள், மூடநம்பிக்கை மோசடி பேர் வழிகள் இவர்களையெல்லாம் தனிச் சட்டம் கொண்டு வந்து உள்ளே தள்ள வேண்டாமா? ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பில்லையா? அரசியல் தலைவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்களே!

இங்கிலாந்து நாட்டு தலைவர் மார்கரெட் தாட்சருக்கே, கைபார்த்து, எலுமிச்சம் பழம் தந்து, ஏமாற்றிய சந்திரா சாமி கதையும், அவரை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்திய நட்வர்சிங் அய் இங்கிலாந்து நாட்டுக்கான இந்தியத் தூதுவரும் பற்றி அண்மையில் ஒரு ஏட்டில் வெளிவந்த கட்டுரை எதைக் காட்டுகிறது? வெளிநாட்டுக்கும் இம்மோசடி மூடநம்பிக்கை வியாபாரம் ஏற்றமதி ஆகி விட்டது என்பதைத்தானே!

தேவை அறிவியல் மனப்பான்மை'

உடனடியாக, இந்தோனேஷியா நாட்டில் ஜோதிடத்தைத் தடை செய்ததுபோல மத்திய மாநில அரசுகள் ஜோதிடத்தை தடை செய்ய முன்வர வேண்டும்.
இவற்றைத் தலைமை தாங்கி நடத்துவோரே இந்த மூடநம்பிக்கை ஜோசிய அடிமைகளாக இருக்கும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நிரந்தர அறிவியல் மனபான்மை ஓங்கிட இத்தகைய மூடநம்பிக்கை முட்புதர்களை அழித்திட வேண்டும் பகுத்தறிவு மனிதநேயப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்.

தனி மகேஸ்வரிகளைத் தண்டித்தால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது; நோய் நாடி நோய் முதல் நாடிட வேண்டும். அரசுகள் கடமை தவறலாமா?

---------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை, "விடுதலை” 15.4.2013

19 comments:

தமிழ் ஓவியா said...


மதச்சார்பின்மை படும்பாடு!வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் உள்ள கால்நடை தொற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மத் ஜான் அவர்கள் தரம் உயர்த்தப்பட்ட உற்பத்தி முறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் நுண்ணுயிர் தடுப்பு மருந்து பிரிவுக்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் பொ. சங்கர் இஆ.ப. கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய இயக்குநர் டாக்டர் வி. பிரபாகரன், நகராட்சித் தலைவர் சித்ரா சந்தோஷம், மாவட்டக் கவுன்சிலர் எஸ்.சி. ஏழுமலை, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜி. கமலநாதன் மற்றும் பலர் உள்ளனர்.

குறிப்பு: இந்துமதப்படி பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பிரதமர் பதவிக்கு மோடி லாயக்குள்ளவர் அல்ல!


மதச் சார்பற்றவரே பிரதமராக வேண்டும்

எங்கள் கருத்துப் புறக்கணிக்கப்பட்டால் வேறு முடிவு எடுப்போம்!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்ட அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.15- இந்தியாவுக்குப் பிரதமர் சந்தேகத்துக்கு அப் பாற்பட்ட மதச் சார் பின்மை கொள்கை உடையவராக இருக்க வேண்டும் மோடி அத் தகையவர் அல்ல எங் கள் கோரிக்கை புறக் கணிக்கப்பட்டால் வேறு முடிவு எடுப் போம் என்றார். பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார்.

பாரதீய ஜனதாவில், குஜராத் முதல் அமைச் சர் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. கருது கிறது. இதனால் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்கப்படு கிறது.

ஆனால் இதற்கு பார தீய ஜனதா தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அய்க்கிய ஜனதாதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள் ளது. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை பாரதீய ஜனதா முன் நிறுத்தினால், கூட்டணி யில் இருந்து அய்க்கிய ஜனதாதளம் விலகும்.

இந்த சூழ்நிலையில், டில்லியில் நடைபெற்று வந்த அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட் டம் நேற்றுடன் முடிவ டைந்தது. கூட்டத்தில், கட்சியின் தலைவராக சரத்யாதவ், தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தீர்மானம்

இந்த கூட்டத்தில், பிரதமர் பதவி வேட் பாளர் குறித்து அரசியல் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. பாரதீய ஜனதாவுக்கு கெடு விதித்து நிறை வேற்றப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில் கூறப் பட்டு இருப்பதாவது:-
கடந்த 1999 மற்றும் 2004-ஆம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தல்களை

வாஜ்பாய் தலைமையில் சந்தித்தோம். 2009-ஆம் ஆண்டு தேர்தலை அத்வானி தலைமையில் சந்தித்தோம். எனவே, தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவி வேட்பாளர் பெயரை அறிவிப்பது வழக்கமானதுதான்.

இந்த ஆண்டுக்குள் அறிவிக்க வேண்டும் அந்த அடிப்படையில், 2014-ஆம் ஆண்டு பாராளுமன்றம் தேர்த லுக்கான பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இந்த கூட்டணியின் பெரிய கட்சி பா.ஜனதாதான். எனவே, பாரதீய ஜனதா இதற்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்த ஆண்டுஇறுதிக்குள் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இந்தியா போன்ற பல மொழி களும், பல மதங்களும் கொண்ட நாட்டின் பிரதமர் வேட்பாளர், சந்தேகத்துக்கு இடமின்றி, மதச் சார்பின்மை கொள்கையை பின் பற்றுபவராக இருக்க வேண்டும். கூட்டணியின் செயல்திட்டப்படி நடப்பவராக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கு பாடுபடுபவராகவும், நாட்டின் பின்தங்கிய பகுதிகளையும், மாநிலங்களையும் கைதூக்கி விட உறுதி பூண்டவராகவும் இருக்க வேண்டும். இவற்றை மனதில் கொண்டு வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. சரத்யாதவ்

முன்னதாக செயற்குழு கூட்டத்தில் சரத்யாதவ் பேசுகையில் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவுடன்17 ஆண்டு களாக கூட்டணியில் இருக்கிறோம். இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கூட்டணியில் சமீபகாலமாக சில கருத்து வேறு பாடுகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்போம். கடந்த காலங் களிலும் பிரச்சினைகள் வந்துள்ளன. அவற்றை கடந்து வந்துள்ளோம். என்னை விட பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், பாரதீய ஜனதாவுடன் நீண்ட கால உறவு வைத்திருப்பவர். நமக்கு குறிப்பிட்ட எந்த நபருடனும் பிரச்சினை இல்லை. இது கொள்கை அடிப்படையிலான சண்டை. எனவே, யாருடைய பெய ரையும் குறிப்பிட்டு பேச வேண்டாம். வாஜ்பாயும், அத்வானியும் பதவியில் இருந்தபோது கூட நம்மிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து உள்ளன. ஆனால், அவர்களும் வெளியே பேசியது இல்லை. நாமும் வெளியே பேசியது இல்லை.
இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

தேசிய செயற்குழு கூட்டம் முடி வடைந்த பிறகு, அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில முதல் அமைச்சருமான நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதீய ஜனதா கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளரை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்குமாறு பா.ஜனதாவுக்கு கெடு விதித்து உள்ளோம். பிரதமர் வேட்பாளர், மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். நாட்டுக்கு இப்போது மதச்சார்பற்ற பிரதமர்தான் தேவை. அனைத்து தரப்பினரையும் அரவ ணைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். தேசிய வளர்ச்சிக்கு மதச் சார்பின்மை முக்கியம். அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நம்பிக்கை உடையவராக அவர் இருக்க வேண்டும். எனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை. எனது கட்சி சிறிய கட்சி என்பதால், அந்த மாயையை வளர்த் துக்கொள்ள நான் விரும்பவில்லை. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று எப்போது நாங்கள் விரும்பினோம்? சேர்ந்து இருக்கவே விரும்புகிறோம். தண்டவாளத்தில் ரயில் செல்லவே விரும்புகிறோம். ஒருவேளை ரயில் தடம் புரண்டால், அந்த சூழ்நிலைக் கேற்ப முடிவு எடுப்போம். அது போல், எங்கள் கருத்துகள் புறக் கணிக்கப்பட்டால், நாங்கள் உரிய முடிவு எடுப்போம். நாளை நடப்பதை யார் அறிவார்?

பதவியா கொள்கையா?

நாட்டை ஆள்வதற்கு வாஜ்பாய் போன்ற சிந்தனை உடையவரே தேவை. ராஜதர்மத்தை கடைபிடிக்கு மாறு வாஜ்பாய் வலியுறுத்தினார். அதை பின்பற்றவே நாங்கள் முயன்று வருகிறோம். பதவியில் நீடிப்பதற்காக, அடிப்படை கொள்கையான மதச் சார்பின்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். சிலர் ஒரு மாநிலத்தை இப்படியும், அப்படியுமாக ஆட்சி செய்து விடுகின்றனர். ஆனால், ஒட்டுமொத்த நாட்டையும் அப்படி ஆண்டுவிட முடியாது. அவர்கள் தாங்கள் ஒரு அலையை உருவாக்க முடியும் என் றும், அதை மக்கள் ஏற்றுக் கொள் வார்கள் என்றும் கருதுகிறார்கள். இதுபோன்ற அலைகள் நாட்டில் எப்போதும் இருக்கும். எத்தனையோ அலைகளை மக்கள் பார்த்துள்ளனர். அலையை வைத்து நாட்டை ஆள முடியாது. வெறுமனே யாரையும் முன்நிறுத்துவது சரியாக இருக்காது.

அவர்கள் தங்கள் மாநிலத்தை பின்பற்றுமாறு கூறுகிறார்கள். மற்ற மாநிலங்களை விட பீகார் நன்றாக வளர்ச்சி அடைந்து உள்ளது. எனவே, நாங்கள் மற்ற மாநிலங்களை பின்பற்ற வேண்டியது இல்லை. இயற்கையாக விளையும் பயிர்தான் உடல் நலனுக்கு ஏற்றது. அதை விடுத்து, மரபணு மாற்றப்பட்ட பயிரை உபயோகித் தால், எதிர்விளைவுகள்தான் ஏற்படும்.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே! நேரில் சென்று வந்த எம்.பி., பேட்டி


இலங்கைத் தமிழர் களுக்கு, அதிபர் ராஜ பக்சே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங் குவது சந்தேகமே. அங்கு ள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத் தில், இந்தியா தலை யிட்டு, ஏதாவது செய் யாதா என, எதிர்பார்க் கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்.

அய்ந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, அய்ந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பி யுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறிய தாவது:இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக் கைகளில், சற்று சுறுசு றுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட் டம் இருந்தது. இருப் பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது.

இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை; மாறிக் கொண்டே வரு கிறது. தமிழர் பகுதி களில், சிங்களர்கள் குடி யேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல் லாம், சிங்களர்கள் கைப் பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நிதி உதவி யுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம்; ஓரளவு கட்டித் தந்துள் ளனர். மற்றபடி, சொல் லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எது வும் நடைபெறுவதாக தெரியவில்லை.

தயக்கம்: இலங்கை யில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனா லும், தமிழர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க் கும் போது, தமிழர் களுக்கு அரசியல் அதி காரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அர சாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரி கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடை பெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்க வில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல் கள் தள்ளிப் போடப் பட்டுள்ளன. காவல் துறை அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர் களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண் டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது. தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதி காரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்ற னர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாக வும் குறை சொல்கின்ற னர். அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு வின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.

நேரமின்மை: இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித் தோம். நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடிய வில்லை. பசில் ராஜபசே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகி யோரையும் சந்தித் தோம். இவ்வாறு சவுக தா ராய் கூறினார்.

தமிழ் ஓவியா said...


துணைவியரைப் பாராட்டி, தொண்டறத்தை உயர்ந்துங்கள்!

தஞ்சை பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகமாக பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி (உலகின் முதல் பெண் களுக்கான பொறியியல் கல்லூரி) வளர்ந்ததற்கு முக்கிய காரணமான வர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஆணையரும், வரி இயல் மேல் முறையீட்டுத் தீர்ப் பாயத்தின் மேனாள் உறுப்பினரு மான திரு எஸ். ராஜரத்தினம் ஆவார்கள்.

அவரது பரந்த அனுபவம், ஆற்றல், முதிர்ச்சி நிறைந்த சட்ட ரீதியான அறிவுரைகள் இவைகளை நாடி இன்னும் அவரிடம் பல மூத்த தணிக் கையாளர்களான அறிஞர்கள்கூட, ஆலோசனைப் பெற்றே செயல்படும் நிலை உள்ளது!

பல பிரபல நிறுவனங்கள் இவரது ஆற்றலை, அறிவுத்திறனைப் பயன் படுத்த வேண்டி, தாங்கள் தங்களது நிறுவனங்களில் அவரை இயக்கு நராக (Director ஆக்கிப் பயன் பெறுகின்றன!!

நமது பெரியார் அறக்கட்டளைகள் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த 84 வயது நிறைந்த மூத்த நிதித்துறை அறிஞர்தான் - நிதி நிர்வாகத்தின் தலைவராவர்.

நேர் வழி ஒன்றைத் தவிர, குறுக்கு வழி எதனையும் எவருக்கும், எக்காரணம் கொண்டும் சொல்லித் தராத நேர்மையாளர் அவர்.

அவர்கள் வருமான வரித்துறை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே, மும்பை, டெல்லி, பாட்னா போன்ற பல வட மாநில பெரு நகரங்களில் பணியாற்றிய மேதை.

மனிதநேயத்தோடும் அதே நேரத்தில் தவறு செய்யாமலும், தவறிழைக்கத் தனது சக ஊழியர்களை அனுமதிக்காமலும் பணி செய்துகூட, தனக்கென ஒரு தகைமை சால் இடத்தை என்றுமே தக்க வைத்துக் கொண்டவர்.

இவரது தொண்டறத்தால் வளர்ந் தோங்கியுள்ள நமது பல்கலைக் கழக வளாகத்தில் பன் மாடிக் கட்டடம் ஒன்றுக்கு ஜமுனா ராஜரத்தினம் கட்டடம் என்று பெயர் சூட்டி மகிழும் விழா ஒன்று 10.4.2013 அன்று நடைபெற்றது.

அத்துடன் வடலூர் வள்ளல் நல்ல கிருஷ்ணமூர்த்தி அவர்களது குடும் பத்து அறப்பணிக்கும் நன்றி காட்டும் வண்ணம் மற்றொரு கல்வியியல் பன் மாடிக் கட்டடத்திற்கு பெயர்கள் சூட்டு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது. (இதுபற்றி நாளை எழுதுவோம்)

பிரபல மூத்த ஆடிட்டரான திரு. ஜி. நாராயணசாமி அவர்கள் வந்து கலந்து கொண்டு, ராஜரத்தினம் அவரது பணிக் காலத்தில் அவர் முன், பல வழக்கு களுக்கு ஆஜராகி, வாதாடிய நிலையில் அவரிடம் ஜொலித்த நேர்மையைப் பாராட்டி மனந்திறந்து பேசினார்கள்.

அதற்குப் பதிலுரை அளித்தார் ராஜரத்தினம் - மிகச் சுருக்கமாக!

எனது நேர்வழியை நண்பர்கள் பாராட்டினார்கள், ஆசிரியரிடம் வேறு யார் பெயரையாவது இக்கட்டடத்திற்கு வையுங்கள் என்றேன்; அவர் பிடிவாத மாக இல்லை முடிவு எடுத்தோம் - செய்கிறோம் என்றார்கள்! வேறு வழியில்லை; எனது துணைவியார் திருமதி ஜமுனா பெயரை முன்னால் வைத்து என்னைப் பின்னால் வைத்து பல்கலைக் கழகத்தில் போட்டியிருப்பது தான் எனக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; அதற்காக நன்றி செலுத்துகிறேன்.

காரணம் என்னை நேர்மையாக இருந்து - உத்தியோகம் பார்த்தபோதும் சரி, இப்போதும் சரி தவறாது இருக்கும் படி பார்த்துக் கொண்டவர் எனது துணைவியார் ஜமுனா அவர்கள்தான்!

அவர் பட்டுப் புடவைக்கோ, வைரத் தோடுக்கோ ஆசைப்பட்டவர்கள் கிடை யாது இதுவரை.

அதனால்தான் என்னால், வந்த வருமானத்திற்குள் எனது குடும்பத்தை நேர்மையான வழியில் நடத்த அம்மாதிரி முடிவுதான் பாதை போட்டது!

பல அதிகாரிகள், பல பிரமுகர்கள் நெறி தவறி நடப்பதற்கு மூலகாரணம் அவர்களது வாழ்க்கைத் துணைவிகளின் தேவையற்ற ஆடம்பரம்தான் என்றார்.

அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது! பெரியார் கண்ட புரட்சிப் பெண்கள் அடக்கமாக, ஆரவாரம் விளம்பரம் இன்றி எவ்வளவு பேர் உள்ளனர்!

அவ்வளவு தூரம் போவானேன்? எனது வாழ்விணையர் திருமதி மோகனா பெரும் பண வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

ஆனால் அவரை, வாழ்விணை யராக ஏற்றுக் கொண்ட நானோ ஒரு ஏழை, எளியவன் - என் நிலைக்கு அவர் மாறியவராகவே இன்றுவரை பற்றற்ற துறவியாகவே, தன் குடும்பக் கடமைகளையாற்றி குடும்பச் சுமைகளைத்தானே சுமந்து, என்னை சிறந்த ஊர் சுற்றி, உலகம் சுற்றியாக்கி பெரியார் பணி முடிக்கப் பறந்து திரியும் தேனீயாக்கி, அவரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் என்னுடன் இருந்து என்னையும் கவனித்து - எல்லா வகையிலும் மிகுதிக் கண் செல்ல விடாமல் தடுத்தும் ஆட்கொண்டு, பெரியார் வழியை அகலப்படுத்தி, விரைவு வேகத்துடன் பணிபுரிய வைப்பதுதான் எப்படிப்பட்ட அரும்பணி! நன்றிக்குரிய பணி அல்லவா!

எனவே புதுமொழி ஒன்று கூறலாமா? உங்கள் துணைவியரைப் பற்றிக் கூறுங்கள் உங்களைப்பற்றிக் கூற அதுவே உதவிடும் என்று.

இதுவரை நண்பரைத்தானே அப்படிச் சொல்லியுள்ளார்கள் என்று சிலர் கேட்கலாம்.

இது புதுநெறி - புத்தாக்கம்; உங்கள் துணைவியாரைப் பாராட் டுங்கள். உங்கள் தொண்டும்கூட அதன் மூலம் சிறக்கும்! பளபளக்கும். பல ருக்கு உதவவும் செய்யும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


கோவை சுந்தராபுரம் மாநாடு


இயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் கழகம் நடத்திய மாநாடு ஒவ்வொன்றும் முத்திரை பொறித்தவையாகவே இருக்கும். அத்தகு மாநாட்டுகளுக்குப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உண்டு என்றாலும் அம்மாநாடுகளில் நிறைவேற்றப் படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை - திருப்பங்களைத் தரக் கூடியவைகளாகவே இருந்து வந்துள்ளன.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கி, கடந்த சனியன்று (ஏப்ரல் 13) கோவை குறிச்சி சுந்தராபுரத்தில் திராவிடர் கழக மகளிரணி - மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாடு வரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மய்யப்படுத்தியயே பல ஆய்வு முனைவர் (Ph.D) பட்டங்களைப் பெற முடியும்.

பெண்களுக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை, திருமண விடுதலை உரிமை, விதவைப் பெண்களுக் குத் திருமண உரிமை, வாரிசுரிமை என்று எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கம்பீரமாகக் கூற முடியும்.

கடந்த சனியன்று கோவையில் நடைபெற்ற மாநாட்டின் ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியானவை. காலையில் நடைபெற்ற கருத்தரங்கமானாலும் சரி, பிற்பகலில் நடைபெற்ற பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் சுந்தராபுரம் பெரியார் திடலில் நடைபெற்ற திறந்தவெளி மாநாடாக இருந்தாலும் சரி கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் என்றாலும் சரி, அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு மாநாட்டில் பெண்கள் இவ்வளவுப் பெரிய அளவில் கூடினர் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

குறிப்பாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டபடி காலக் கல்வெட்டாகும் - சிலாசாசனமாகும்.

இந்த மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று - சமூகத்தால் பல வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டுவரும் திருநங்கைகள் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்ல. திருநங்கைகள் சார்பாக, நாமக்கல் எழுத்தாளரும் திருநங்கையுமான ரேவதி அவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்து தங்களின் உரிமை முழக்கத்தை வெளியிட வாய்ப்பு அளித்ததாகும்.

அவரின் குரலில் இருந்த சோக இருள் - அதே நேரத்தில் தங்களுக்குரிய உரிமைக் கனல் இவற்றை வெளிப்படுத்தத் தவறிடவில்லை.

பெற்றோர்களாலும், உறவினர்களாலும், சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படும் எங்களுடைய நிலை என்ன? நாங்கள் ஆணா? பெண்ணா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும்! முதலில் எங்களை ஒரு மனிதராக அங்கீகரியுங்கள் என்று குரல் கொடுத்துள்ள ஆதங்கத்தையும், நியாயத்தையும், சமூகமும், அரசும் உணர வேண்டும்; உணர்ந்து உரியதை செய்ய வேண்டும்.
ஆண் பெண்ணாக மாறினால் திருநங்கை என்று கூறுவதுபோல, பெண் ஒருவர், ஆணாக மாறினால் திருநம்பி என்று ஏன் அழைப்பதில்லை என்று அவர் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது. தங்களை மூன்றாவது பாலாக? (Trans Gender) அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நியாய பூர்வமானது. இந்தக் கோரிக்கையை திராவிடர் கழகப் புரட்சிப் பெண்கள் மாநாடு அங்கீகரிக்கிறது. ஒரு சமுதாயப் புரட்சி இயக்கத்தின் அங்கீகாரம் என்பது முக்கியமானதாக இருக்கும். கோவை மாநாட்டின் தீர்மானம் வருமாறு:

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்கை களை மூன்றாவது பாலாக மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், Sex என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்பட வைக்க வேண்டும் என்றும்,

(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க் குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் கோவைத் தீர்மானம்.

இன்று திருநங்கைகள் நாள் என்பதால் அவர் களைப் பற்றிய உரத்த சிந்தனை என்பதும் மிகவும் பொருத்தம்தானே!

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பணிக்குப் பிறகும் இந்த நிலையா?
தன்மான இயக்கப் பிரச்சாரம் நடத்தி வரும் நிலையிலும் மூடநோயா
நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா?
கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

நரபலிக்காக குழந்தையைக் கொலை செய்த செய்தியை இன்று (14-4-2013) தமிழ் நாளேடு ஒன்றில் பார்த்தேன். சென்னை - வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில். அவருடைய மனைவி யின் பெயர் கீதா. அவர்களுக்கு இரண்டரை வயதில் விஷ்ணு என்ற மகன் இருந்தான். 9-4-2013 அன்று குழந்தை விஷ்ணு, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் குழந்தை வழியிலேயே இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாகப் பெற்றோர் நினைத்து, உடலை எரித்து விட்டனர். இதற் கிடையே அந்தப் பகுதியில் உள்ள ஜோசியா என்பவர், குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்பவர்தான் தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். காவல்துறை யினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறையினர் மகேஸ்வரியை அழைத்து விசாரித்தபோது, அவர் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தில், செந்தில் குடும்பத்திற்கும், எனக்கும் இடையே மன வேறுபாடு இருந்து வந்தாலும், செந்திலின் மகன் விஷ்ணு எப்பொழுதும் என்னுடன்தான் விளையாடுவான். 7-4-2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக் காரனிடம் என் கையை நீட்டி ஜோசியம் பார்த் தேன்.

அப்போது எனக்கும், எனது குடும்பத்திற்கும் யாரோ செய்வினை வைத்ததாகத் தெரி வித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அந்தச் செய்வினையை அகற்றிவிடுவதாக அந்தக் குடுகுடுப்பைக்காரன் தெரிவித்தான். மறுநாள் அந்தக் குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், 2 தாயத்து, குங்குமம் போன்ற பொருள் களைக் கொடுத்து தாயத்தை என்னையும் என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடுகுடுப்பைக் காரன் என்னிடம் இருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான். தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுய நினைவை இழந்தேன்.

தமிழ் ஓவியா said...

குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும் போது எனக்கு ஆத்திரமாக இருந்தது. குழந்தை யைக் கொலை செய்துவிடலாம் என்று தோன்றியது. 9-4-2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து, வீட்டில் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற் சித்தேன். குழந்தை மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான்.

உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினேன். அனைவரும் அதை நம்பினர். குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை விஷ்ணு இறந்துவிட்டான் என்று தெரிவித்திருக்கிறார்.

மகேஸ்வரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை விஷ்ணுவை மருத்துவமனைக்கு எடுத் துச் சென்ற போது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மகேஸ்வரி, தோஷம் கழிக்கும் நோக்கத்தில் குழந் தையை நரபலிக்காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.

இந்தச் செய்தியைப் படித்தபோது, நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

உயிர்களின் பரிணாம வளர்ச்சி, கோள்களைப் பற்றிய முழுமையான ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒரு சிறு கிராம மாகச் சுருக்கியதோடு - உள்ளங்கையில் உலகம் என்ற நிலை; - இப்படி மனித அறிவு, ஆழமாகவும் அகல மாகவும், எல்லை இதுதான் என்று வரையறுத்திட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; செய்வினை - குடுகுடுப்பைக்காரன் - தாயத்து - தோஷம் - நரபலி என்றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒரு பகுதி விடுபடவில் லையோ என்று தோன்றுகிறது.

உலகம் தோன்றிய நாள் தொட்டு, தந்தை பெரி யாரும் அவரைப் பின்பற்றி தன்மான இயக்கத்தினரும் ஆற்றி வரும் எவ்வளவோ பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பிறகும், உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக மூட நம்பிக்கையும், நல்ல கழனியில் தோன்றும் களையைப் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமு தாயத்தை அரிக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக் கைக் களையை முற்றிலுமாக அகற்றுவது என்பது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகும்.

அரசியலைக் கடந்து, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அனைவரும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணியாகும் இது. நமது மக்கள் அனைவரும் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து என்றைக்கு விடுபடு கின்றார்களோ, அன்றுதான் நம் நாட்டின் உண்மையான விடுதலையை நாம் அடைந்த தாக அர்த்தமாகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை, அனைவரும் நினைவு கூர்ந்து, அயராது செயலாற்றுவதே நமது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்.

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 15.4.2013)

தமிழ் ஓவியா said...


தினமணியா? இனமணியா?: திமுக தலைவர் கலைஞர் கேள்வி


சென்னை, ஏப்.15- தினமணி எனும் ஏடு முதல்வர் அவர்களிடம் சபாஷ் பெற அசல் இனமணியாக நடந்து வருவதை திமுக தலைவர் கலைஞர் சுட்டிக் காட்டி யுள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஜனநாயகத்தில் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகளில் - அரசியல் கட்சிப் பத்திரிகைகளாக நடத்தப்படும் ஏடுகள் அந்தக் கட்சிச் சார்பில் ஆதரவாக கருத்துகளை வெளியிடுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் எந்தக்கட்சியையும் சாராத தேசியப் பத்திரிகைகள் என்றும், நடுநிலை ஏடுகள் என்றும் சொல்லிக் கொள்ளும் சில ஏடுகள், ஆளுங்கட்சி யினால் அளிக்கப்படும் கோடிக்கணக் கான ரூபாய் விளம்பரங்களுக்காகவும் தங்களுக்கே உரிய இன உணர்வு காரணமாகவும் தி.மு.கழகத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடு வதையே தொடர்ந்து வாடிக்கையாகக் கொண் டுள்ளன.

குறிப்பாக இனமணி என எல்லோ ராலும் அடையாளம் காட்டப் பட்டுள்ள தினமணி நாளேடு; அந்தப் பெயர்க் காரணத்தை நிரூபித்திடும் வண்ணம் மக்கள் கருத்து என்ற தலைப்பிலும், அடடே என்ற தலைப் பிலும் தொடர்ந்து தங்களுடைய விஷமத்தனமான எண்ணங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டி ருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்திருக்க முடியும்.

உதாரணமாக இன்றைய தினம் மக்கள் கருத்து என்ற பகுதியில் தூக்குத் தண்டனையை மாற்ற அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கருணாநிதி வலியுறுத் துவது என்ற கேள்வியை எழுப்பி, இது அரசியல் பேச்சு என்று 79 சதவிகிதம் கருத்து தெரிவித்திருப்பதாக முதல் பக்கத்தில் முக்கிய இடத்தில் வெளியிட் டிருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனையை மாற்ற வேண்டுமென்றால், அதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிட வேண்டு மென்பது சட்ட ரீதியான அடிப்படை என்ற முறையிலும், ஏற்கனவே அப்படித் தான் கழக ஆட்சியிலே பின்பற்றப் பட்டது என்பதாலும் நான் அதைத் தெரிவித்தேன். ஆனால் தினமணி அதனை அரசியல் பேச்சு என்று திசை திருப்ப முயலுகிறது.

முதல்வரிடமிருந்து சபாஷ் பெற..

தினமணியின் இந்தப் பகுதியில் அன்றாடம் வெளியிடப்படும் கருத்துக் களைக் கூர்ந்து கவனித்தால், தொடர்ந்து அந்த ஏடு தி.மு.கழகத்திற்கு எதிராகவே தங்கள் கருத்துக்களைக் கூறி, அதன் மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா விடமிருந்து சபாஷ் வாங்குவதிலேயே கண்ணும்கருத்துமாகச் செயல் படுகிறார்கள். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும், தூக்குத் தண்டனை என்ற ஒன்றே இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்பது தற்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும், விவாதிக்கப் படும் பொருளாக உள்ளது.

தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை துக்குத் தண்டனை கூடாது என்பதை இன்று நேற்றல்ல பல ஆண்டுகாலமாக நான் வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். ஆனால் அந்தக் கருத்தினை அரசியல் பேச்சு என்று தினமணி மக்கள் கருத்து அது என்றும் அதற்கு 79 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறு வது என்பது போக்கிரித்தனம் அல்ல வா? இதிலே என்ன அரசியல் இருக்கிறது? மனிதாபிமானத்தோடு சொல்லப்பட்ட கருத்து அல்லவா?

இந்தியா முழுவதிலும் உள்ள எத்தனையோ மூத்த வழக்கறி ஞர்கள் எல்லாம் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா? அவர்கள் எல்லாம் கூறுவது அரசியல் பேச்சா? தினமணி இதற்கு மாத்திரமல்ல; ஒவ் வொரு நாளும் இவ்வாறு ஏதோ ஒரு செய்தியைத் தலைப்பாக ஆக்கிக் கொண்டு கேள்வி கேட்பதும், அதற்கு மக்கள் கருத்து என்று தி.மு. கழகத் திற்கு எதிரான, விரோதமான கருத்தினை மக்கள் கூறியதாக வெளியிடுவதும் என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தி.மு. கழகம் இதனை அலட்சியம் செய்து வந்த போதிலும், தினமணி இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்து வருவதின் மூலம், அ.தி.மு.க. ஆட்சியை, அதன் தலைவரைக் காப்பாற்ற நினைப்பது என்பது அவர்களின் இன உணர்வினை வெளிப்படுத்துவதற்குத் தான் உதவுமே தவிர, அவர்களின் இத்தகைய செயல் களைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே கவனித்து வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை

தமிழ் ஓவியா said...


ஆரிய நுழைவால் பெண்ணடிமைத்தனம்! கோவை மாநாட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கருத்துரை


கோவை, ஏப்.15- சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் உரிமையுடன் வாழ்ந் தனர்; கல்வியிலும் சிறந்து விளங்கினர். ஆரிய நுழைவால் மனுதர்மக் கலாச் சாரத்தால் பெண்ணடிமைத்தனம் இங்கே வேர்பிடித்தது என்றார் சுப்பு லட்சுமி ஜெகதசீன் அவர்கள்.

தி.மு.க. உயர்நிலைக் குழு உறுப்பி னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

வழிகாட்டும் தீர்மானங்கள்!

இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள 26 தீர்மானங்கள் மிகச் சிறந் தவை. நல்ல முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும் என்று கூறும், வழிகாட்டும் தீர்மானங்கள் இவை - ஒவ்வொன்றும் முத்து முத்தானவை!

என்னதான் வளர்ச்சி அடைந்திருந் தாலும், இன்னும் பெண்கள் பல வகையிலும் துயரத்தை அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

50 சதவிகித வாய்ப்புகள், அனைத் திலும் பெறவேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது - இதில் என்ன குற்றம்?

மனிதனுக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. ஒரு கண் மட்டும் பார்வை உள்ளதாக இருந்தால் போதுமா? இரண்டு கைகளில் ஒரு கை மட்டும் செயல்பட்டால் போதுமா?

வடக்கே பெரியார் தேவைப்படுகிறார்

பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் அவர்கள் ஒரு நூற்றாண் டுக்கு முன்பாகவே குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்கள் அனைவரையும் கைதூக்கி விட்டார். தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் நம்மிடையே தோன்றியிராவிட்டால் நம் நிலை என்ன? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

நான் சமூக நலத்துறை மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுமையும் பல மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய வாய்ப்புக் கிட்டியது.

வடமாநிலங்களில் பெண்கள் நிலை மட்டுமல்ல; ஆண்கள் நிலையும்கூட பரிதாபகரமாகத்தானிருக்கிறது.

ஆண்டான் அடிமை முறை இன்னும் வடமாநிலங்களில் உள்ளது. ஒரு தனி மனிதர் நிலச் சுவான்தாரராக இருந்து அந்தக் கிராமத்தையே தன்கீழ் கொண்டு வருவார். ஜாதீய கட்டமைப்பு அப்படியே இருக்கிறது.

வடநாட்டில் உள்ள தலைவர்கள் வெளிப்படையாக எங்களிடம் சொன்ன துண்டு. உங்களுக்கு ஒரு பெரியார் கிடைத்தார் - எங்களுக்கு அந்த வாய்ப் புக் கிடைக்கவில்லையே என்று ஆதங் கத்தோடு சொல்வதுண்டு. தந்தை பெரியாரின் தொண்டின் அருமை, திராவிட இயக்கத்தின் அருமை வடமாநி லங்களுக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும். நீதிக்கட்சி ஆட்சிதான் வகுப்பு வாரி உரிமையை நமக்கு அளித்தது; அதனாலேயே கல்வி கற்றோம்.

ஆரிய நுழைவால் பெண்ணடிமை!

சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் பெண்கள் உரிமையுடனும், கல்வி கற்றவர்களாகவும் வாழ்ந்தி ருக்கின்றனர். இடைக்காலத்தில் ஆரிய நுழைவினாலே பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன; அவர்களின் கலாச் சாரம் வேறு, நம்முடைய கலாச்சாரம் வேறு; அவர்களுடைய கலாச்சாரம் மனுமுறைக் கலாச்சாரம்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஆண் ஆதிக்கம்

சட்டமன்றங்களிலும், நாடாளுமன் றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 1996 முதல் கிடப்பில் கிடக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறை யிலே ஆண்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆண்களால் பெண் களுக்கு விடுதலை இல்லை என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு சரியானது என்பதை நேரில் காண் கிறோம்.

பெண் விடுதலைப் போராளி என்று இம்மாநாட்டில் நமது ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பட்டத்தைக் கொடுத் தனர். அதனைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் பெண்கள் விடு தலை பெண்கள் கையில்தான் இருக் கிறது என்று நயமாகக் குறிப்பிட் டார்கள்.
இந்த மாநாடு நல்லதோர் காலகட் டத்திலே சிறப்பாக நடைபெறுகிறது. மாநாட்டு வரவேற்புக் குழுவினருக்குப் பாராட்டுகளைத்

தெரிவித்துக் கொள் கிறேன் என்று குறிப்பிட்டார்.

பெரியார் திடலில் மக்கள் திரள்!

மாநாட்டில் பெரியார் பிஞ்சு திரு வாரூர் கவிதா உணர்ச்சிகரமாகப் பேசினார். அனைவரும் வியந்து பாராட்டினர்.

மாநாட்டுக்குக் கழகப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி தலைமை வகித்தார். பேரா சிரியர் சாரதாமணி ஆசான் தலைவரை முன்மொழிந்தார். பழனி மாவட்ட மாண வரணி அமைப்பாளர் பழனி சே.மதி வதனி தலைவரை வழிமொழிந்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் ச.திலக மணி நன்றி கூறினார்.

பெரியார் திடலே நிரம்பி வழியும் வண்ணம் கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

தமிழ் ஓவியா said...

ரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்கி கைது செய்ததைக் கண்டித்து
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கண்டன உரை

புதுவை, ஏப்.15- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மீனவர் களை விடுவிக்கக்கோரி மாபெரும் கண் டன ஆர்பாட்டம் 13.4.2013 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் புதுச்சேரி திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளர் சுயமரியாதை வீரர் மருத்துவர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சு.பாவாணன் ஆகியோர் முன்னிலை வகித்துக் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார், கண்டன ஆர்ப் பாட்டத்தில் கழக செயலாளர் கி.அறி வழகன், துணைத் தலைவர் சு.துளசிராமன், ப.க.செயலாளர் கோ.மு.தமிழ்செல்வன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக ப.க.துணை தலைவர் மு.ந.நடராஜன், தி.க.பொதுக்குழு உறுப்பினர்கள் இர.இராஜி, கோ.கிருஷ் ணமூர்த்தி, லோ.பழனி, அமைப்பாளர் கே.குமார், துணைச்செயலாளர்கள் த.கண்ணன், ஆ.சிவராசன், தி.க.இளைஞரணி தலைவர் தி.இராசா, செயலாளர் இரா. பெருமாள், மகளிரணி அமைப்பாளர் விலாசினி, எழிலரசி அறிவழகன், மேனாள் இளைஞரணி அமைப்பாளர் இரா.ஆதி நாராயணன், மேனாள் செயலாளர் சே.கா. பாஷா, வை.சண்முகம், கடலூர் நகர செயலாளர் தென் சிவக்குமார், கடலூர் ஒன்றிய அமைப்பாளர் தருமன், திமுக தொகுதி தலைவர் ஏம்பலம் செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொறுப் பாளர்கள் இராவணன், சிறுத்தை செந்தில், அன்பரசன், தி.க.தோழர்கள் பொ. தட்சிணாமூர்த்தி, டி.என்.பாளையம் ஏழுமலை, கோ.கிருஷ்ணராசு, சு.வீரசேகர், இரா.முத்துவேல், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குப்புசாமி, ப.க.தோழர்கள் நெ.நட ராசன், வெற்றிவேல், ஜீவன் சார்வாகன், கு. உலகநாதன் மற்றும் ஏராளமான தோழர் கள் கண்டண முழக்கங்கள் எழுப்பினர். செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

விடுதலை செய்! விடுதலை செய்! புதுச்சேரி - தமிழக மீனவர்களை விடுதலை செய்!

இந்திய அரசே! இந்திய அரசே! அடக்கிவை! அடக்கிவை! இலங்கையின் திமிரை அடக்கிவை!

வளர்க்காதே! வளர்க்காதே! மாற்றாந் தாய் மனப்பான்மையை வளர்க்காதே!

இந்திய அரசே! இந்திய அரசே! சிங்களவன் உனக்கு உறவினனா? தமிழன் என்ன அன்னியனா?

பறி போகுதே! பறி போகுதே! மீனவர் உரிமை பறிபோகுதே!

இந்திய அரசே! இந்திய அரசே! வடிக் காதே! வடிக்காதே! நீலிக்கண்ணீர் வடிக்காதே!

இந்திய அரசே! இந்திய அரசே! கச்சத் தீவை மீட்டுக்கொடு! சிங்களக் காடையர் உறவை ஒழித்துவிடு!

சிங்கள அரசே! சிங்கள அரசே! மிரட் டாதே! மிரட்டாதே! தமிழக மீனவர்களை மிரட்டாதே!

விரட்டாதே! விரட்டாதே! தமிழக மீனவர்களை விரட்டாதே! கெடுக்காதே! கெடுக்காதே! செய்யும் தொழிலை கெடுக்காதே! உடைக்காதே! உடைக்காதே! மீன்பிடி படகுகளை உடைக்காதே!

அறுக்காதே! அறுக்காதே! தமிழக மீனவர்களின் வலைகளை அறுக்காதே!

சிதைக்காதே! சிதைக்காதே! தமிழர் வாழ்வை சிதைக்காதே!

இந்திய அரசே! இந்திய அரசே! மீட் டெடு! மீட்டெடு! சிறைப்பட்ட மீனவர் களை மீட்டெடு!

இந்திய அரசே! இந்திய அரசே! பிடிக்காதே! பிடிக்காதே! சிங்களவனுக்கு வால் பிடிக்காதே! கெடுக்காதே! கெடுக்காதே! தமிழன் வாழ்வைக் கெடுக்காதே!

நடிக்காதே! நடிக்காதே! தமிழர்களுக்கு நன்மை செய்வது போல் நடிக்காதே!

மன்மோகன் அரசே! மன்மோகன் அரசே!

மலையாளி மீனவன் மாண்டால் துடிக் கிறாய்! தமிழக மீனவன் மாண்டால் சிரிக்கிறாய்!

ஆளுக்கொரு நீதி சொல்கிறாய்! தமிழர் களிடம் பகையை வளர்க்கிறாய்!

தமிழர் உறவை கெடுக்கிறாய்! தமிழர்ப் பகைவன் உறவை வளர்க்கிறாய்!

இந்திய அரசே! இந்திய அரசே! அன்னியச் சிங்களவன் உறவை தூக்கி எறி! இந்தியத் தமிழன் உறவை தாங்கிப்பிடி.
மேற்கண்ட ஒலி முழக்கங்கள் ஆர்ப் பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற தொண்டறச் செம்மல்கள் இதோ!


நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்வித் துறையின் பன் மாடிக் கட்டடத்திற்கு பிரசாந்த், ஜோதி, இராஜி என்ற பெயர்கள் சூட்டிய நிகழ்ச்சியும், ஜமுனா- ராஜரத்தினம் பன் மாடிக் கட்டடத்தின் பெயர் சூட்டு நிகழ்ச்சியும் கோலாகலத்துடன் நடைபெற்றன!

வடலூரில் உள்ள பிரபல நிலக்கிழார் நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வடலூர் வள்ளலாரின் வாய்மை மிகுந்த சீடர் - வள்ள லாரின் பெயரில் ஏராளமான மனிதநேயப் திருப்பணிகளை, தாராள மனதுடன் எப்போதும் செய்து வருபவர்கள்.

அவருடைய தாயார் நினைவு நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரும் அறிவு விருந்தும், வள்ளலார் கருத்திற்கொப்ப, பசி போக்கும் வகையில், வாழும் மனிதற்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை வாடிக்கையாக நடத்தி வரும் வள்ளல் ஆவார்கள்.

அடக்கமும், தன் முனைப்பற்ற, தயாள சிந்தனையும் தன்னகத்தே கொண்ட தொண்டறச் செம்மல் அவர்!

உழைப்பால் உயர்ந்தவரான அவர், திராவிடர் இயக்கப் பற்றாளர் ஆவார்.

பெருந்தகையான அவர் நமது அறக்கட்டளை யிலுள்ள டிரஸ்டியாகவும் இருக்கும் வாய்ப்பையும் நமக்கு மனமுவந்து ஏற்படுத் தித் தரத் தவறாதவர்!

அத்தகைய நேர் வழி நின் றொழுகும் செம்மல்கள் எல்லாம் நமது இயக்க உறுதுணையாளர்கள் ஆவார்கள்!

அவர்களுடன் நமக்கு ஏற்பட்ட நட்பு சுமார் 10 ஆண்டு காலத்திற்குள் தான் என்றாலும் அது பயில்தொறும் பண்பு டையாளர் தொடர்பான நட்பாகவே அது அமைந்து விட்டது!

நமது பல்கலைக் கழகம் போன்ற சிறுகக் கட்டி பெருகி வளரும் நிறுவனங்களுக்கு இவர் தந்த இடத்தின் மூலம் நிதி கிடைத்தது. புதிய கட்டடங்கள் எழுப்பிட அதற்குப் பெரு உதவியாய் அமைந்தது!

அதற்கான நன்றியைத் தெரிவிக் கும் வகையில்தான் கடந்த 10.4.2013 அன்று ஒரு மாபெரும் அறப்பணித் திருவிழா - பெருவிழா தஞ்சை வல்லத்தில் நடைபெற்றது!

இதை விளம்பரப்படுத்துவதைக் கூட இத் தொண்டறச் செம்மல்கள் விரும்புவதில்லை!

பின் நாம் ஏன் செய்கிறோம் என்றால், அது ஒரு மக்கள் பல் கலைக் கழகம்.

மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் பல்கலைக் கழகம்; தனிப்பட்ட வியாபார நிறுவனம் அல்ல என்று நாம் காட்டிட இந்நிகழ்ச்சிகள் பயன்படுவது விரும்பத்தக்க தல்லவா?

இதைப் பார்த்து நாமும் நமது குடும்பத்து மூத்த முன்னோடிகளை, நன்றிக்குரியவர்களைப் பெருமைப்படுத்திடலாமே என்ற எண்ணம் தோன்றி, தொண்டறப் பணிகளில் அவர்களும் ஈடுபட்டால் அது சமுதாயத்திற்கு நலம்தானே!

அறிவும் செல்வமும் எப்போது பெருமை பெறுகிறது தெரியுமா?

அது பிறருக்குப் பயன்பட்டு, அதன்மூலம் அறியாமை, இல்லாமை, கல்லாமை, இவைகள் விரட்டப்பட்டு, சமூகத்தின் சமத்துவமும் பாயும் போதுதானே!

மதவாதிகள் பலரும் மேலை நாடுகளிலும் ஏன் இன்றும் ஒவ்வொருவரும் தத்தம் மதங்களுக்கு மதப் பணிகளுக்கு - ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளங்களில் 10 விழுக்காடு பிடித்தம் செய்து நேரே மத நிறுவனங்களுக்கு அனுப்பும்படிக் கூறுகிறார்கள்.

சமுதாயத்தால் வாழும் நாம், அதை ஓரளவுக்கேனும் அந்த சமுதாயத்திற்குத் திருப்பித் தர வேண்டாமா? (Payback to the society which nurtured you)

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து கொள்ள மனமில்லா விட்டாலும், நல்லவர்கள் நடந்து காட்டி, பிறர் செய்யத் தவறியவை களையும்கூட இப்படி - நிறைவு செய்து தொண்டில் புகழ் வாழ்வு சாகா சரித்திர வாழ்வைப் பெறுகின்றார்கள்.

தன் பெயர் வேண்டாம்; தங்கள் குடும்பத் தலைவர் மறைந்தும் மறையாமல் நெஞ்சங்களில் நிறைந்து வாழுபவர்களின் பெயர்களை வைத்துப் பெருமைபடுத்துங்கள் என்றார், அருளாளர் நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்!

என்னே பெரு உள்ளம்!

எத்தகைய அடக்க உணர்வு!! அதனால்தான் வெறும் நல்ல கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல.

உண்மையிலேயே நல்ல, நல்ல கிருஷ்ணமூர்த்தியும் கூட, வாழ்க பல்லாண்டு - வளர்க அவர்தம் தொண்டறம்!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பார்ப்பானே வெளியேறு


பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)

தமிழ் ஓவியா said...


நமது தீர்மானங்கள் - 2


கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. வேறு எந்த அமைப்பாலும் சிந்திக்கப்பட முடியாதவை. பொதுவுடைமைக் கட்சிகள் கூட இதுவரை இந்தத் திசையில் தீர்மானிக்காதவை.

குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னாள் முன்னெழுத்தைக் (Initial) குறிப்பிடும் பொழுது கண்டிப்பாக தாயின் பெயரை முன்னிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்து கிறது. இதனைச் சட்டப்படியாகவும் ஆக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பது எட்டாவது தீர்மானமாகும்.

இதில் உள்ள நியாயத்தையும், விஞ்ஞான பூர்வமான உண்மையும் முதலில் உணர வேண்டும் குழந்தை பிறப்பதற்குக் காரணம் தாய், தந்தை இருவரும்தான் என்றாலும் இதில் கூடுதல் உரிமையும், நியாயமும் தாயின் பக்கம்தான் இருக்கின்றன. கருவுற்று, கருவை வளர்த்து பிரசவித்தல், வளர்த்தல் என்ப தெல்லாம் தாயின் பாரமாகவே இருக்கும் போது, குழந்தையின் முன்னெழுத்து என்றால் அது தந்தையின் பெயரை முன்னிறுத்துவது என்பது ஆண் ஆதிக்கத் தன்மையான முரட்டுத்தனம் அல்லாமல் வேறு என்ன?

தந்தை யார்? என்பது தாய் சொல்லித் தான் தெரியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

அப்படியிருக்கும்போது குழந்தைக்குத் தந்தை பெயரை மட்டுமே முன்னிறுத்தி முன்னெழுத்தாகக் கொண்டு இருப்பது தவறாகும். அப்படியே அவசியமானால் தாய் பெயரோடு தந்தையின் பெயரையும் இணைத்து, பெற்றோர்களின் பெயர்களைக் கொண்டு முன்னெழுத்து என்ற முறையை ஏற்படுத்தலாம்; இதனை சட்டரீதியாக ஆக்கும் பொழுதுதான் அதற்கு அவசியமும், வலிமையும் கூடுதலாக அமையும்!

பத்தாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல் மிக முக்கியமானது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு தந்தையின் ஜாதியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றி, தாய் அல்லது தந்தையின் ஜாதியை விருப்பப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமாய் நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் - இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலி மற்றும் ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர் என்று 2008 டிசம்பரில் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

இது எந்த வகையில் நியாயமானது - சரியானது என்று தெரியவில்லை. உண்மை நிலை என்னவென்றால் தமிழ்நாடு அரசு ஆணை எண் 477/ சமூக நலத்துறை நாள்: 27.6.1975 என்ன கூறுகிறது?

பெற்றோர்களில் தாய் அல்லது தந்தை ஜாதி குறித்து அவர்கள் எந்த ஜாதியைத் தேர்வு செய்கிறார்களோ அதன்படி செய்து கொள்ளலாம் என்று தெளிவாக அரசு ஆணை இருக்கும் நிலையில் தாயைப் பின்னுக்குத் தள்ளி தந்தையின் ஜாதியை உயர்த்திப் பிடிப்பது, பெண்ணுரிமைக்கு எதிரான ஒன்றே! உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சட்ட வலிமை உடையன ஆகையால் ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு அரசின் ஆணையை செல்லத்தக்க வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசிய மாகும். கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 11ஆவது தீர்மானம் இந்த வகையில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகும்.

தமிழ் ஓவியா said...


சிறகடித்து வருக வாசிப்புத் தேனீக்களே!


குழந்தைகளுக்கான அறிவு சார் போட்டிகள்,
கதை எழுதுதல்,
ஓவியம் தீட்டுதல்,
பேச்சுப் போட்டி,
கவிதைப் போட்டி,
நடிப்புப் போட்டி

பதிப்பாளர்களுக்குப் பயிலரங்கு

கலை நிகழ்ச்சிகள்

சொற்பொழிவுகள்

விருது வழங்குதல்
இவையெல்லாம் ஒரே வளாகத்தில்!
புரியவில்லையா?

இவ்வாண்டு முதன்முதலாக சென்னை புத் தகச் சங்கமம் - சென்னை - பெரியார் திடலில்!

உலகப் புத்தக நாளாம் ஏப்ரல் 23 அய் மய்யப்படுத்தி ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 27 ஆம்தேதி முடிய பத்து நாட்கள் அரியதோர் புத்தகக் கண்காட்சி!

ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கப்படுகிறது.

19 ஆம் தேதி முதல் 27 முடிய நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மும், நேஷனல் புக் டிரஸ்டும் இணைந்து இந்த அறிவுப் பூங்காவை உருவாக்கியுள்ளன.

பகுத்தறிவு, இலக்கியம், அறிவியல், குழந்தை களுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளா தாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்பொருள் கொள்கலனாக காட்சி அளிக்கப் போகிறது.

ஒரு லட்சத்துக்கும் மேலான அறிவுப் பூக்களாம் புத்தகங்கள் பூத்துக் குலுங்கிப் புதுமணம் வீச இருக்கின்றன.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் கூடுதல் சிறப்பு அம்சம் முற்றிலும் பதிப்பகங்களே பங்கேற்கும் பாங்காகும்.

10 விழுக்காடு கழிவு உண்டு; ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் மட்டும் 15 விழுக்காடு உண்டு.

அறிவுக் கதிர்களை அகிலத்திற்கே உலவ விட்ட பகுத்தறிவுப் பகலவன் இடத்தில் (பெரியார் திடலில்) அறிவுப் பசியாளர்களுக்கெல்லாம் தடபுடல் அறிவு விருந்து ஒவ்வொரு மாலையும்!

தமிழர் தலைவர் கி.வீரமணி, டாக்டர் மா.நன் னன், ஈரோடு தமிழன்பன், வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., ஜெகத்கஸ்பர், முன்னாள் மத்திய அமைச்சர் க.வேங்கடபதி, பேரா.சுப.வீரபாண் டியன், வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் வாலி போன்றோர் அந்த அறிவு விருந்து படைப்பாளிகள்.

பொம்மலாட்டம்,
வீதி நாடகம்
புதுகைப் பூபாளம் கலைக்குழுவினரின்
நாகரிகக் கோமாளி
திண்டுக்கல் சரவணன் குழுவினரின் பல் குரல் நிகழ்ச்சி
காக்கன் குழுவினரின்
நாட்டுப்புறப் பாடல்கள்,
அடேயப்பா எத்தனை எத்தனை திகட்டா விருந்துகள்!

விழிப்புணர்வு நடைப் பயணம் ஏப்ரல் 21 ஆம் நாள் (காலை 7 மணிமுதல் காலை 8.30 மணி வரை) சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலைமுதல் காந்தியார் சிலைவரை; கொடி யசைத்துத் தொடங்கி வைப்பவர் திரைப்பட நடிகர் விவேக்! சிறப்புகள் கூடிக்கொண்டே போகின்றனவா?

மற்றவை வெள்ளித் திரையில் காண்க!

செல்வத்துள் செல்வம் அறிவுச்செல்வம் தானே? அது பெரியார் திடலில் கிடைக்கிறது என்கிறபோது அதன் கீர்த்திக்குச் சிறப்புப் பாயிரமா தேவை?

வாசகர்கள் படித்து முடித்த நூல்களை நன்கொடையாக தரலாம். அவை சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குக் கொண்டு போய் சேர்க்கப்படும்.

இது எங்கும் காணா அறிவுக் கருணைத் தொண்டாகும்.

சொல்லப்போனால், சென்னை புத்தகச் சங்கமம் வணிகச் சந்தையல்ல; வாழ்வில் உயர்வு செய்யும் வற்றாத அறிவுத் தண்ணீர்ப் பந்தல்!

சிறகடித்துப் பறந்துவருக - அறிவுத் தேன் உண்ண வாசிப்புத் தேனீக்களே!

வாரீர்! வாரீர்!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...


கோபத்தை விட்டுவிடு வோருக்கே கொள்ளை இன்பம்!


மனிதர்களாகிய நமது எதிரிகள் வெளியில் இருப்போர் என்றுதான் நம்மில் பலர் தவறாகக் கருதிக் கொண்டுள்ளோம். ஆனால், உண் மையான எதிரிகள் பலரும் நமக் குள்ளேயே இருக்கிறார்கள்; அவர் களது ஆளுமை பற்பல நேரங்களில் சிகரங்களைத் தொடவேண்டியவை ஆகும். அம்மனிதர்களைக்கூடச் சீர ழித்து சின்னாபின்னமாக்கி விடுகிறது!

ஆம்! அந்தப் பெரிய எதிரி எது தெரியுமா? சினம் என்னும் சேர்ந் தாரைக் கொல்லி! ஆம், கோபம்தான்!

அதனை அடக்கி ஆளுபவர் களுக்கு உள்ளம் மட்டுமல்ல; உடலும், உடல்நலனும்கூட உயர்ந்த முறையில் ஒத்துழைக்கும்.

இதுபற்றிப் பேசுவது, எழுதுவது எளிது; ஆனால், நடைமுறையில் இதனைக் கொண்டு ஒழுகுவது - கடைப்பிடித்து வாழுவது அவ்வளவு எளிதல்ல; வாழ்ந்து விடுபவர்கள் வெற்றியை அடைந்தவர்கள் மட்டு மல்ல; உண்மையான வீரர்கள் அவர்களேயாவார்கள்!

அண்மையில் சிங்கப்பூரில் கிடைத்த ஒரு ஜப்பானியப் பேராசிரியர் கெண்டட்சூ தக்கமோரி (Kentetsu Takamori) என்பவர் (பவுத்த அறிஞர்) எழுதிய நல்ல படிப்பினைகளைக் கூறும் கதைத் தொகுப்பு நூல் ஒன் றைப் படித்தேன்; அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ ஞானிக்குக் கோபமே வருவதில்லை. எப்போதும் சிரித்த முகத்துடன் எதையும் உள்வாங்கி, எவரிடமும் பேசிப் பழகும் இயல் பானவர்.

அவரது நண்பர்கள் சிலருக்கு ஒரு விசித்திர ஆசை! இவரை எப்படி யாவது ஆத்திரமூட்டச் செய்து இவர் கோபத்தில் கொதிப்பதைக் கண்டு சுவைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அவர் தனியாகக் குடியிருந்த அந்த வீட்டில் அவருக்கு உதவிடும் உதவியாளரான ஒரு அம்மையாரிடம் அவரைக் கோபம் கொள்ளும்படிச் செய்தால் ஏராள பரிசுகள், பணம் தருகிறோம் என்று கூறினார்கள்.

மிக நீண்ட யோசனைக்குப் பின், அந்த உதவியாளரான பெண்மணி, வழக்கமாக தத்துவஞானி உறங்கப் போகுமுன், அவரது படுக்கையை நன்றாக அமைத்திருப்பார்; உதறி தட்டிப் போட்டு அழகுற அமைப்பது அன்றாட வழக்கம்!

அன்று வேண்டுமென்றே இந்த உதவியாளர் அதைப் போடாமல் அலங்கோலமாக வைத்துவிட்டுப் போனார். விடிந்ததும் அவர் கடிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன்!

பொழுது விடிந்து, இந்த அம்மையார் உதவியாளர், அவரைச் சந்தித்தபோது, அவர் வழக்கம்போல் புன்சிரிப்புடன் நேற்றிரவு படுக்கைப் போடவில்லை என்பதை அங்கு போன பிறகுதான் பார்த்தேன் என்று கூறிவிட்டுச் சென்றார்! ஏமாற்றமே மிஞ்சியது!!
மறுநாளும் இப்படியே செய்தார் உதவியாளர்; அதற்கடுத்த நாளும், இந்த ஞானி, நேற்றிரவுகூட படுக்கை சரியாகப் போடப்படவில்லை. நீங்கள் வேறு முக்கிய அலுவல்களில் ஈடு பட்டிருக்கவேண்டும்; இன்றைக்குச் செய்து விடுங்கள் என்று பொறுமை யாகக் கூறினார்!

மூன்றாம் நாள் காலை, நேற்றும் உங்களால் படுக்கை யைச் சரியாகப் போட இயலவில்லை; அதற்குக் காரணம் ஏதாவது இருக் கக்கூடும். கடந்த மூன்று நாள்களாக நானே போட்டுப் பழகிவிட்டேன். இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டாம். நானே போட்டுப் பழகிவிட்டேன் என்றார்.

இது இந்த உதவியாளரை வெட்க முறச் செய்தது. அந்த உதவியாளர் தத்துவ ஞானியின்முன் மண்டியிட்டு அழுதுவிட்டார்! நடந்ததைக் கூறித் தன்னை மன்னிக்கும்படி வேண்டி னார்!

அப்போதும் அந்த ஞானி தனது வழக்கமான புன்சிரிப்பை விடாமல், காட்டியபடியே இருந்தார். ஏதும் சொல்லவில்லை.

####

மற்றொரு கதை. விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பணக்கார பிரபு வீட்டில், ஒரு ஆட்டுக்குட்டி நுழைந்து விருந்தைப் பாழாக்கி விட்டதாம். இதைக் கண்டு மிகுந்த ஆத்திரம்கொண்டு, அந்த ஆட்டுக் குட்டிமீது எரிகின்ற நிலக்கரியை எடுத்துக் கொட்டி விட்டாராம்.

அதன்மீதுள்ள ஆட்டுத் தோலில் தீப்பிடித்துக் கொண்டது. அது பங்களாவுக்குள் அங்கும் இங்கும் வலி தாங்காமல் எரியும் நெருப்புடன் ஓடத் தொடங்கியது! அது ஆட்டு மந்தை யில் ஓடியது, அங்கும் தீ, எங்கும் தீ! குதிர் அருகில் புரண்டது, குதிரும் தீப்பிடித்து எல்லாமே நாசமாகியது!

இந்தத் தீ எல்லாவிடங்களிலும் பரவி, எல்லாவற்றையும் எரித்து நாசமாக்கியது!

பொறுமை முன்னவரை உயர்த் தியது; பின்னவரின் ஆத்திரமோ பெரும் அழிவையே உருவாக்கியது!

எனவே, கோபத்தைக் கொல்க! மனதை வெல்க!!

பொறுத்தவர்க்கு எப்போதும் இன்பம்; ஒறுத்தவருக்கு அந்தக் கணம் மட்டுமே இன்பம்; பிறகு மாறாத்துன்பம் என்ற வள்ளுவரின் குறளில்தான் எவ்வளவு நேர்த்தி!


- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

தமிழ் ஓவியா said...


முற்போக்குச் சிந்தனை தேவை!கோவை சுந்தராபுரத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களுள் 24 ஆவது தீர்மானம் பெண்களுக்கு முற்போக்குச் சிந்தனை தேவை என்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

கோயில் வழிபாடு, பண்டிகைகளைக் கொண் டாடுதல், சடங்குகளைச் செய்தல், மூடப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல், சாமியாரிணிகள், ஜோதிடர்கள், மந்திரவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்லுதல், மோசம் போதல் முதலியவை பெண்களை மேலும் இழிவுபடுத்தவும், முற் போக்குத் திசைக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் பயணிப்பதைத் தடுக்கவும்தான் பயன்படும் என்பதை உணர்ந்து, இந்தத் தளைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, பகுத்தறிவோடு சிந்தித்து, தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும் என்று பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. வேதங்கள் - இதிகாசங்கள் - புராணங்கள் - சாஸ்திரங்கள் என்பவை அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் தன்மை கொண்டதாலும், ஆபாச உணர்வுகளை ஊட்டுவதாலும் பகுத்தறிவுக்கு விரோதமாக உள்ளதாலும் இவற்றை அறவே புறக்கணிக்கும்படி பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இது மிகவும் முக்கியமான அடிப்படையான தீர்மானமாகும்.

நம்முடைய பெண்களின் நிலைமையைப்பற்றி பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரிக அறிவும், கவுரவமும் உள்ள சுற்றத்தாருக்குள்ளும், சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்துகொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர் களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத் தன்மை எப்படி ஏற்படும்?

என்ற வினாவை எழுப்புகிறார் தந்தை பெரியார்.

மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் குறியீடாகச் சொல்லுவது அவர்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளும், பழைமைப் பிடிப்பு களும், சடங்குகளில் மூழ்கிக் கிடக்கும் பிற்போக்குத் தன்மையையும்தானே?

தாங்கள் செய்யும் சடங்குகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கான காரணா காரியம் அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்வார்களா?

கோவில் கோவிலாகச் சுற்றித் திரிவதும், அங்கப் பிரதட்சணம் செய்வதும் நாகரிகமானதுதானா?

குழந்தைப் பேற்றுக்காக கோவிலுக்குமுன் குப்புறப்படுத்துக் கொள்வதும், ஆணி செருப்புக் காலால் அவர்களை மிதித்துப் பூசாரி செல்லுவதும் நாகரிகம்தானா - ஏற்புடையதுதானா?

ஒரு பெண் கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆணிடம் குறைபாடு இருக்க லாம்; அல்லது பெண்ணிடம் குறைபாடு இருக்கலாம். அதனைக் குணப்படுத்தவேண்டிய இடம் மருத்துவ மனையே தவிர கோவில்கள் அல்ல - பூசாரிகளின் செருப்புக் காலும் அல்ல.

பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குப் பெண்கள் வேப்பிலை ஆடையை அணிந்து செல்லுவது எல்லாம் எந்த அடிப்படையில்? பக்தி என்று வந்துவிட்டால் மான உணர்வுகூட பலி கொடுக்கப்படுகிறதே!

கடவுள், மத, சாஸ்திர, வேத, புராண, இதிகாசங் களின் தன்மைதான் என்ன? இந்துக்களின் அய்ந் தாவது வேதம் என்று கூறுகிறார்களே கீதை - அந்தக் கீதை பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லவில்லையா?

பெண்களைக் கொல்லுதல் பாவமாகாது என்று சொல்லுவதுதானே மனுதர்ம சாஸ்திரம். அய்ந்து பேருக்கும் தேவி என்பதும், பெண்ணை வைத்து சூதாடியது என்பதும் மகாபாரதம் கூறும் இழிவு அல்லவா!

இராமாயணத்தில் இராமன் சீதையைத் தீக் குளிக்கச் செய்ததும், நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு விட்டதும் எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

கோவை தீர்மானம் இவற்றைத்தான் சுட்டிக்காட்டு கிறது; கல்வி வந்தாலும் இந்தக் காட்டுவிலங் காண்டித்தன கடும் குரங்குப் பிடியிலிருந்து பெண் கள் விடுதலை பெறாவிட்டால் பெண்களுக்கு மீட்சி இல்லை என்று சுட்டிக்காட்டுவதுதான் அந்த 24 ஆம் தீர்மானம்.

பெண்களே பெரியாரைத் துணை கொள்வீர்!

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கின்றான்.
(விடுதலை, 2.6.1970)