Search This Blog

5.4.13

தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!இந்துத்துவா சக்தியை வீழ்த்துவோம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை 

தக்க சட்ட நிபுணர்களை நியமித்து வழக்கில் வெற்றி பெற ஆவன செய்க
சிறீரங்கம் திராவிடர் எழுச்சி மாநாட்டில் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் தீர்மானம்

சிறீரங்கம், ஏப்.5- தந்தை பெரியார் அவர் களால் இறுதியாக அறிவிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை நிலை நாட்டிட, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் வெற்றி பெற தக்க சட்ட நிபுணர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4.4.2013 மாலை சிறீரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

 தீர்மானம் எண்: 1

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் அவர்களால் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது தமிழ்நாட்டில் சட்டமாக நிறைவேற்றப்பட்டும், உச்சநீதிமன்றத்தால் பார்ப்பனர்களின் முயற்சியால் முடக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான வழக்கு முடிவு கட்டத்தில் இருப்பதால் தமிழ்நாடு அரசு இப்பிரச்சினைமீது மிக முக்கியமான அளவில் அக்கறை செலுத்தி, திறமை வாய்ந்த சட்ட நிபுணர்களின் துணைகொண்டு வாதாடி, வெற்றி பெறச் செய்யவேண்டுமென இம்மாநாடு வலியுறுத் துகிறது. அரசின் ஆணைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் பணி நியமனத்துக்காகப் பல ஆண்டுகளாகக் காத்து இருக்கும் நிலை தொடரக்கூடாது என்றும், இதற்கு விரைவாக விடிவு காண தொடர் அழுத்தத்தைக் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 2

ஜாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகள்

ஜாதி அதன் விளைவான தீண்டாமை என்பது மனித சமத்துவத்துக்கும், ஒற்றுமைக்கும், பகுத்தறிவுக்கும் எதி ரானது என்பதால், அவற்றை எல்லா வகையிலும் புறக் கணிக்க வேண்டும் என்றும், வீழ்த்தவேண்டும் என்றும், நமது இன ஒற்றுமைக்கும் கேடானதாக இருப்பதால், பல உரிமைகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதை உணர்ந்து, திராவிடர் கழகத்தின் விழுமிய கொள்கையான ஜாதி ஒழிப்புக்கு எல்லா வகையிலும் ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் தமிழினப் பெரு மக்களை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

பிற்போக்குச் சிந்தனையோடு ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கிளம்புவோர் நம் இன ஒற்றுமைக்கும், மனித சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எதிரான வர்கள் என்பதையும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

ஜாதி மறுப்புத் திருமணங்களையும், விதவையர் மறுவாழ்வையும், காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பது எனவும், இதற்காக இதுவரை சென்னை, திருச்சி, மதுரையில் நடத்தப்பட்டதுபோன்றே தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் மன்றல் விழாக்களை விரிவாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 3

தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!

தேவை இனவுணர்வே!
திராவிடர் உணர்வைப் பெறுவீர்!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி தமிழ்த் தேசியம் பற்றிப் பரப்புரை செய்பவர்கள், பார்ப்பனர்களின் கைப்பாவைகள் என்பதையும், பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வுக்கு வரலாற்று ரீதியாக திராவிடர் என்ற இன வுணர்வுதான் சரியான ஆயுதம் என்பதையும், இந்தப் பார்ப்பனர் எதிர்ப்புதான் நம் மக்களின் இன இழிவைப் போக்குவதற்கும், கல்வி, வேலை வாய்ப்புகள் பெறு வதற்கும் விடுதலை உணர்வு, தன்மான உணர்வு பெறு வதற்கும் காரணமாக இருந்தது என்பதையும் மறந்தால், மீண்டும் மனுதர்மம்தான் கொடிகட்டி ஆளும் என்பதையும், பார்ப்பனர் அல்லாத நம் மக்களுக்கு இம்மாநாடு எச்சரிக் கையுடன் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வகையில், தமிழ்த்தேசியம் பேசுபவர்களை அடையாளம் கண்டு புறக் கணிக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 4

இந்துத்துவா சக்தியை வீழ்த்துவோம்!

(அ) 1992 டிசம்பரில் சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்த குற்றவாளிகள் அதற்குரிய தண்டனையைப் பெறாமல் சுதந்திரமாக அலைந்து திரிகிறார்கள்.

(ஆ) இப்பொழுது அடுத்தகட்டமாக குஜராத் மாநிலத்தை முதற்கட்டமாக இந்து ராஜ்ஜியம் என்று அறி விக்கவிருப்பதாகக் கூறி வருகிறார்கள்.

(இ) குஜராத்தில் சிறுபான்மை மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாகவிருந்த அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை இந்தியா வின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்க எத்தனித் துள்ளனர்.
இவற்றின்மூலம் இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்குப் படுகுழிவெட்டி, இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கிடத் துடித்துக் கொண்டு இருப்பவர்களை அடையாளம் காணவேண்டும் என்று இந்தியா முழுமையும் உள்ள வாக்காளர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இந்த இந்துத்துவா சக்திகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் மிகப்பெரும் பிரச்சாரத்தை தந்தை பெரியார் அவர்களின் தத்துவக் கொள்கை வெளிச்சத்தில் முன்னெடுப்பது என்று இம்மாநாடு பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யைத் தனிமைப் படுத்திவிட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு விரைந்து செயல்படவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண்: 5(அ)

சமூகநீதி

சமூகநீதித் துறையில் அடுத்தகட்டமாக மத்திய - மாநில அரசுகள் ஆற்றவேண்டிய கடமை - தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்ய வேண்டும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. அதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அதுபோலவே, பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்ட வர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றும் இம்மாநாடு வற்புறுத்து கிறது.

தீர்மானம் எண்: 5(ஆ)

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மாநில அரசு தேர்வாணையம் ஆகியவை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும், கிராமப்புற மக்களையும் பாதிக்கச் செய்யும் வகையில் தானடித்தமூப்பாக செயல் படுவதற்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. இதுபோன்ற அமைப்புகளில் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்குப் போதிய பிரதி நிதித்துவம் அளிப்பதற்கு வகை செய்யவேண்டும் என்று இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 5(இ)

திறந்த போட்டி என்பது அதிக மதிப்பெண்கள் பெறும்
அனைவருக்கும் பொதுவானது என்பதை தலைகீழாக மாற்றி, அந்த இடங்கள் உயர்ஜாதியினருக்கு மட்டுமே என்கிற வகையில் மோசடி செய்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதுபற்றி திட்டவட்டமான சுற்றறிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி - இவற்றைத் துல்லியமாக கடைபிடிக்கவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கவேண்டும் என்று இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5(ஈ)

தமிழ்நாடு அரசு அண்மையில் நியமனம் செய்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பி.டி. ஆசிரியர்கள் அடங்கிய 19 ஆயிரம் பேர்களுக்கான பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது; முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முற்றிலும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.நாகமுத்து அவர்கள் தெளிவாக தவறுகளைச் சுட்டிக்காட்டியிருந்தும்,  அதற்குப் பிறகு 19 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பணி நியமனத்திலும் அதே தவறு நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. எனவே, இந்த நியமனத்தை முழுவதுமாக ரத்து செய்து, சட்டப்படியான இட ஒதுக்கீடு முறையிலும், மூப்பின் அடிப்படையிலும் நியமனங்கள் மிகச் சரியாக நடைபெற ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை, குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6(அ)

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்பு

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பானதும், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவையானதுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனைக் கதாநாயகனான ராமன் பெயரை முன்னிறுத்தி முட்டுக்கட்டை போடும் சக்தி களுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏற்கெனவே, திட்டமிட்ட பாதை வழியில் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6(ஆ)

காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் சட்ட விரோதமாக செயல்படும் அரசுகளை எச்சரித்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்:  6(இ)

நதிநீர் இணைப்பு எனும் பிரச்சினையில் குறைந்த பட்சம் தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்துச் செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7(அ)

ஈழத் தமிழர் வாழ்வுரிமை

ஈழத் தமிழர்களின் மீள்வாழ்வுக்காக டெசோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு இம்மாநாடு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பிரச்சினைக்காகப் போராடும் தமிழின உணர்வுடைய அமைப்புகள் ஒருவருக்கொருவர் வீண் உரசலையும், விமர்சனங்களையும் தவிர்த்து அவரவர்களுக்கு உகந்த முறையில் குரல் கொடுக்கவேண்டும், போராடவேண்டும் என்று இம்மாநாடு இனமான உணர்வுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

இப்பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையில் வெளிநாட்டுக் கொள்கைப் பார்வையும் மாறவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஈழத்தில் நடைபெற்ற போர்க் குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழு விசாரிக்கவேண்டும். அதனடிப்படையில் போர்க் குற்றவாளிக்கு உரிய தண்டனை விதிக்கப்படவேண்டும்.

தங்கள் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள தனி ஈழத்துக்காக இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்திட அய்.நா.முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் - இவை களுக்காக இந்தியா இனிமேலாவது உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7(ஆ)

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே நிறுத்திவிடலாமா என்கிற அளவுக்குத் துயர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்குரிய கச்சத்தீவை உடனடியாக மீட்கவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக, உடனடியாக கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சிறீரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் திரண்டிருந்த கருஞ்சட்டைத் திரள் (4.4.2013)
                                 ----------------------------"விடுதலை” 5-4-2013

32 comments:

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்தக் கோரி ஜூன் மாதத்தில் போராட்டம்!


சுமூகத் தீர்வு காணப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது பற்றி விளக்கம் தேவை!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்தக் கோரி ஜூன் மாதத்தில் போராட்டம்!

சிறீரங்கம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு!

சிறீரங்கம், ஏப்.5- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்தக் கோரி வரும் ஜூன் மாதத்தில் நாடு தழுவிய அளவில் பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

சிறீரங்கத்தில் நேற்று நடை பெற்ற திராவிடர் எழுச்சி மாநாட் டிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை வருமாறு:

சிறீரங்கத்தில் நடைபெறும் இந்தத் திராவிடர் எழுச்சி மாநாட் டில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒவ் வொரு தீர்மானமும் தமிழ்நாட் டின் வளம், வளர்ச்சி, உரிமைகள் தழுவிய வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்.

அரிய தீர்மானங்கள்

தமிழ்நாட்டு மக்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தும் வேண்டுகோள் விடுக்கும், வலியுறுத்தும் அவசிய மான தீர்மானங்களாகும்.

துறவிகள் மாநாடு என்ற பெயரிலும் கிராமக் கோயில் பூசாரிகள் என்ற பெயரிலும் இரண்டு நாட்கள் பார்ப்பனர்கள் திருவானைக்காவலில் நடத்தி யுள்ளனர்.

அவர்கள் நடத்திய மாநாடு

சமூக நல்லிணக்கமோ ஒற்றுமை உணர்வை உண்டாக்கவோ அந்த மாநாடுகள் பயன்பட்டதுண்டா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளத்தானே அந்த மாநாடுகள்? வருணா சிரமத்தைக் காப்பது தானே பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டின் நோக்கம்?

பேதம் ஏற்படுத்தும் முறைகள்

உலகில் வேறு எந்த நாட்டிலா வது, மதத்திலாவது பிறவிப் பேதம் உண்டா? பிறக்கும் போதே பிராமணன் பிறக்கின்றனா?

பிறக்கும் போதே சூத்திரன் பிறக்கின்றானா? இந்தப் பாரத புண்ணிய பூமியில்தானே இந்த பேதம்? கேட்டால் கடவுளே இப்படிப் படைத்தான் - பேதத்தை உண்டாக்கினான் என்கிறார்கள்.

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கீதையிலே கிருஷ்ண பரமாத்மா அப்படிக் கூறி இருக்கிறான் என்கின்றனர்.

கடவுளாலேயேகூட மாற்ற முடியாதாம்

அப்படி என்னால் பிறப்பின் அடிப்படையில் பிறப்பிக்கப் பட்ட அந்த வருண தர்மத்தை, படைத்தவனாகிய நான் நினைத் தால்கூட மாற்ற முடியாது என்று அதே கீதையிலே கிருஷ்ணன் என்ற கடவுள் கூறுவதாக எழுதி வைத்துள்ளனர்.

அதனால்தான் பிறப்பிலேயே பேதங்களைப் படைத்த அந்தக் கடவுளையே ஒழிப்பேன் என்று தந்தை பெரியார் கிளம்பினார்.

சட்டத்தைவிட உயர்ந்ததா கீதை?

அண்ணல் அம்பேத்கர் அவர் களால் உண்டாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத் தையே நூறு தடவைக்கு மேல் திருத்தியுள்ளனர். அதைவிட உயர்ந்ததா - அவசியமானதா கீதை? கீதையே மகாபாரதத்தின் இடைச் செருகல் தானே?

கீதையானாலும், பிறப்பில் பேதம் பேசும் வேத சாத்திரங் களானாலும் ஒழிக்கப்பட வேண்டியவை என்று தந்தை பெரியார் கிளம்பியது யார்மீதும் உள்ள வெறுப்பினால் அல்ல; மனித சமத்துவத்தின்மீதுள்ள விருப்பத்தால். இந்த இயக்கமே மனித குலத்தில் சமத்துவம் பேணும் இயக்கமாகும்.

இந்த இயக்கத்தின் சாதனைகள்!

இந்த இயக்கத்தால் தானே கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி உரிமை கிடைத்தது? பஞ்சமன் நீதிபதி யானதும், சூத்திரன் கலெக்டர் ஆனதும் பெரியார் பிறப்பதற்கு முன் உண்டா? எண்ணிப் பாருங்கள்!

இது ஏதோ சாதாரண இயக்க மல்ல. காலட்சேபக் கட்சியும் அல்ல. எங்களை நாங்களே எரித்துக் கொண்டு ஒளிதரும் கருப்பு மெழுகுவர்த்திகள் நாங்கள்.

சூத்திரன் என்றால் அது என்ன பாரத ரத்னா பட்டமா? பார்ப் பனர்களின் வேசி மக்கள் என்று தானே பொருள்? எங்கள் தாய் மார்கள் எல்லாம் தேவடி யாள்களா?

தந்தை பெரியார் கிளம்பியது ஏன்?

இந்தக் குமுறலோடு தான் தந்தை பெரியார் கிளம்பினார். தீண்டாமை சட்டப்படி ஒழிக் கப்பட்டுள்ளது. கோயில் கருவ றைக்குள்ளிருக்கும் தீண்டா மையோ மதத்தின் காரணமாகக் கட்டிக் காப்பாற்றப்படுகிறது! இதனை ஏற்க முடியுமா?

முடியாது என்பதற்காகத் தான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை என்ற போராட் டத்தை தந்தை பெரியார் தொடங் கினார்.


தமிழ் ஓவியா said...

சுமூகத் தீர்வு என்றால் என்ன?

இந்த வழக்கு இப்பொழுது முடியும் தறுவாயில் உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர் கடந்த 13.12.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் சுமூகத் தீர்வு காணப் போகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சுமூகத் தீர்வு என்றால் என்ன என்பதைத் தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும், தெளிவுபடுத்த வேண்டும். நம் குறிக்கோளுக்கு எதிராக திரை மறைவில் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இது உள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்த ஊரில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டை நடத்தியுள்ளார்கள். சுமூகத் தீர்வு என்பதற்கும், இந்த மாநாட்டுக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.

முதல் அமைச்சர் அறிவிக்க வேண்டும்

இந்த நிலையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் உடனடியாக - இப்பொழுது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சட்டசபையில் அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

- சிறீரங்கம் திராவிடர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர்

எந்த பார்ப்பான் கோயில் கட்டினான்?

எந்தக் கோயிலை எந்த பார்ப் பான் கட்டினான்? கருவறைக்குள் ளிருக்கும் அந்தச் சிலையைச் செதுக்கியவன்கூட தமிழன் தானே? கடவுள் உண்டா இல்லையா என்பது பிரச்சினையல்ல. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் நிலை வந்தால் நாங்களா மனு போடப் போகி றோம்? நூறு கோடி கொட்டிக் கொடுத்தாலும் ஏற்காதவர்கள் தான் நாங்கள்.

தமிழ் ஓவியா said...

குறிப்பிட்ட வருணத்துக் காரன்தான் ஜாதிக்காரன்தான் அர்ச்சகர் ஆக முடியும், அதே மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத எங்கள் மக்கள் அந்தக் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை கிடையாது; அருகதை கிடையாது என்றால் அது எங்கள் இனத்தை இழிவுபடுத் துவதுதானே? நாங்கள் கோருவது - வலியு றுத்துவது மனித உரிமைப் பிரச்சினை!

ஈழத் தமிழர் பிரச்சினையானா லும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற பிரச்சினை யானாலும் மனித உரிமைதான் அதில் அடங்கியிருப்பது.

தந்தை பெரியாரும் - அன்னை மணியம்மையாரும் ஊட்டிய உணர்வு!

தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஊட்டிய இனவுணர்வும், தன்மான உணர்வும், போராட்ட உணர்வும் குன்றி விடாது.

அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிக்க சிங்கக் குட்டிகள் கருஞ்சிறுத்தைகள் ஏராளம் நாட்டில் உண்டு!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ் நாளில் உயில் போன்று அறிவித்த போராட் டமாகும். அந்தக் களத்தில் நின்று தான் இறுதியாகப் போராடினார்.

தந்தை பெரியார் கட்டளையும் கலைஞரும்!

தந்தை பெரியார் அவர்களின் கட் டளையை ஏற்று கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தை இயற்றினார். பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கி விட்டனர்.

எம்.ஜி.ஆரின் நிலைப்பாடு என்ன?

அதற்குப்பின் எம்.ஜி.ஆர். அவர்களும் இந்தப் பிரச்சினையில் தொடக்கத்தில் குழம்பியிருந்தாலும், பின்னர் உண்மையை உணர்த் தினோம் - அதனைப் புரிந்து கொண் டார்; ஜஸ்டிஸ் மகாராஜன் தலை மையில் ஒரு குழு அமைத்து இது குறித்து அறிக்கை ஒன்றினைத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். ஆகமங்கள் தடையில்லை என்று அலசி ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை அளித்தார் நீதியரசர்.

எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதனைச் செயல்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதுதான்!

ஜெயலலிதா அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டார். 69 சதவிகித அடிப்படையில் அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சிப் பள்ளி தொடங்கப்படும் என்று அறி வித்தார். இதே மாவட்டம் கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமெல் லாம் கூடத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தொடர் நடவடிக்கை இல்லை.

திராவிடர் கழகம் வைத்த நிபந்தனை

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிடர் கழகத்தின் ஆதரவுக்கு இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்தோம். கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நாங்களும் முழு ஆதரவும் தந்தோம்.

அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மானமிகு கலைஞர் அவர்கள் இது தொடர்பான கோப்பில்தான் முதல் கையொப்பமிட்டார்.

அதற்கான பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதே சிறீரங் கத்தில் வைணவத்துக்கான பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டது.

206 பேர் தயார்!

சைவ, வைணவ பயிற்சி பெற்று 206 பேர்கள் தயாராக உள்ளனர். இதனை எதிர்த்துச் சிவாச்சாரியார் கள் சிலர் உச்சநீதிமன்றம் சென்றுள் ளனர். இதனை எதிர் கொள்ள வேண்டும் மனித உரிமைப் பிரச்சினையில் வெற்றி பெற வேண்டும்.

இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரச்சினை - மனித உரிமைப் பிரச் சினை! நாங்கள் நாற்காலிகளுக்கு ஆசைப்படுபவர்கள் அல்லர். நாங்கள் கோருவது ஒட்டு மொத்தமான சமுதாய தொடர்புடைய பொதுப் பிரச்சினை.

எனவே இதில் முதல் அமைச்சர் அவர்கள் ஏற்கெனவே இதனை ஏற்றுக் கொண்டவர் தான் என்பதால் பயிற்சி பெற்றுள்ள 206 பேர் களுக்கும் அர்ச்சகர்களாகப் பணி யாற்றுவதற்கான வாய்ப்பினை ஏற் படுத்தித் தர வேண்டும். தொடர்ந்தும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

நமக்குச் சாதகமாக உச்சநீதி மன்றத்தில் இரு தீர்ப்புகளும் வந் துள்ளன. அவற்றை எல்லாம் கவனத் தில் எடுத்துக் கொண்டு, உச்சநீதி மன்றத்தில் நல்ல வகையில் வாதாடச் செய்து வெற்றி பெற்றாக வேண்டும்.

சுமூகத் தீர்வு என்பது நியாயத் தீர்வாக இருக்கட்டும்!

முதல் அமைச்சர் அவர்களின் தொகுதி இது - இந்த இடத்திலிருந்து நாங்கள் இதனை முன் வைப்பது கூடப் பொருத்தமானதாகும்.
சுமூக தீர்வு என்பது நியாயத் தீர்வாக இருக்க வேண்டும்.

ஜூன் மாதம் போராட்டம்!

இதனை வலியுறுத்தும் வகையில் வரும் ஜூன் மாதம் தமிழகம் தழுவிய அளவில் பல இடங்களில் திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டத்தின் வடிவம் பிறகு அறிவிக்கப்படும்.

இது ஒரு சமூக இயல், பெரியாரி யல், உரிமை இயல் பிரச்சினையாகும். ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, மனித சமத்துவம் இதன் கோட் பாடாகும்.
சிறீரங்கத்துக்குச் சிறப்பு!

அந்த வகையில் சிறீரங்கத்தில் நடக்கும் இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதில் அய்யமில்லை.
வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!! என்று கூறி முடித்தார்.

தமிழ் ஓவியா said...


மின்வெட்டால் மாணவர்கள் அவதி


தஞ்சையில் தமிழர் தலைவர் பேட்டி

தஞ்சாவூர்,ஏப்.5- தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையால் பொதுமக்கள் குறிப்பாக தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.

தஞ்சை வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்கள்: தமிழகம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினையால் மக்கள் அவதிக் குள்ளாகின்றார்களே அதுபற்றி...

தமிழர் தலைவர்: முன்பு மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீரென்று தீப்பிடித்து கோளாறு; தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கோளாறு; கோளாறுகளைச் சரி செய்யவே பல மாதங்கள் ஆகியிருக்கின்றன என்ற சூழலில், தொடர்ந்த மின்வெட்டிற்கு மிகப்பெரிய அளவிற்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டிருக் கின்றனர்.
சென்னை - தலைநகரத்தைவிட வெளியூர் பகுதிகளில் அதிகமாக மின்வெட்டு இருக்கிறது. இந்த நேரம் தேர்வு நேரம் என்பதால், குறிப்பாக பிள்ளைகள் படிக்கவேண்டிய நேரம் என்பதால், இந்த நேரத்தில் பெற்றோர்களின் வேதனை ஒருபக்கம்; மாணவர்களின் வேதனை அதைவிட அதிகமாக இருக்கிறது.

கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங் களிலே அவர்கள் விலையுர்ந்த இயந்திரங்களை முதலீடு செய்து வாங்கியிருக்கின்றபோது, அந்த இயந்திரங்கள் தெளிவாக இயங்கவேண்டுமானால், குறிப்பிட்ட காலகட்டம் வரையில் ஒவ்வொரு நாளும் இயக்கப்படவேண்டும். அதற்குரிய வாய்ப்புகள்கூட இல்லாத ஒரு சூழல் இருக்கிறது என்பது அவர்களுடைய மிகநீண்ட குறைபாடாக இருக்கிறது.

இவையெல்லாம் திட்டமிட்டு சரியாக ஏற்பாடு செய்யாமல், எல்லாமே சரியாக இருக்கிறது, எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்லி, மூன்று மாதங்களில் சரி செய்வோம், ஆறு மாதங் களில் சரி செய்வோம், என்று இந்த ஆட்சியாளர்கள் சொல்லி, அடுத்த மாதம் இரண்டாமாண்டு நிறைவு விழாவும் வரவிருக்கிறது!

இரண்டாமாண்டு நிறைவு விழாவிலே, மின்வெட்டு குறையும் என்பதற்குப் பதிலாக, மின்வெட்டு கூடுதலாகும் என்று சொல்வதற்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்தான்.

ஆகவே, மற்றவர்கள்மீது சாக்குச் சொல்லி, எதற்கெடுத்தாலும், தி.மு.க. அரசு, தி.மு.க. அரசு என்று பேசிக்கொண்டிருப்பது தவறு, அந்த முறையே தவறு.

தி.மு.க.வின்மீது அதிருப்தி வந்துதானே மக்கள் உங்களிடம் ஆட்சிப் பொறுப்பே கொடுத்தனர்?

அந்தச் சூழ்நிலையிலே இது ஒரு தவறான போக்கு. ஆகவே, ஆக்க ரீதியாக செய்யவேண்டிய பணிகளைப்பற்றி சிந்திக்கவேண்டும்.

குறிப்பாக, சூரிய வெளிச்ச மின்சாரத் திட்டம் என்று சொன்னார்கள், அது எந்த அளவிற்கு மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சரியான மதிப்பீடு செய்யப்பட் டிருக்கிறதா என்று சொன்னால், இல்லை.

பல்வேறு கல்வி நிறுவனங் கள், பல்கலைக் கழக ஆய்வா ளர்கள், அமைப்புகள் இவை களையெல்லாம்கூட அழைத்து, ஒரு பெரிய குழுவை அமைத் துக்கூட, ஒரு பக்கத்தில் சிறப் பாக ஆய்வு செய்து, இன்னொரு பக்கத்தில் ஆக்க ரீதியான செயல் கள் செய்தால் பலன் கிடைக்கும்.

இப்போது, சூரிய வெளிச்ச மின்சாரத் திட்டத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய குறைபாடு என்ன என்று சொன்னால், அதற்குரிய மூலதனச் செலவினம் மிக அதிகமாகிறது.

மற்ற திட்டங்களுக்குத் செலவு செய்வதைவிட, அதற்காக ஆகின்ற செலவுகளை முழுமையாக அந்தப் பயனாளிகளுக்குக் கொடுக்கலாம்.

இவ்வளவு முதலீடு செய்தால், அதில் பெரும் பகுதியினை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று சொன்னால், துணிந்து மக்கள் அதற்குரிய கருவி களை வாங்குவதற்குக்கூடத் தயாராக இருப்பார்கள்.

இதற்குப் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களையும் இணைக்கவேண்டும். ஆகவே, ஒரு ஒருங்கிணைந்த ஒரு பொதுத் திட்டமாக இருக்கவேண்டுமே தவிர, இது வெறும் அரசியல் பார்வையாக இருக்கின்ற காரணத்தினால்தான் இந்தக் கோளாறு.

செய்தியாளர்கள்: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்களே இதுபற்றி...

தமிழர் தலைவர்: பொதுவாக எல்லா இடங்களிலும் அன்னபோஸ்ட் என்று சொல்லி விட்டால், மிகப் பிரமாதமாக இருக்கும்! மற்றவர்களுக்குத் தொந்தரவு இருக்காது.
செய்தியாளர்கள்: நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறாரே...

தமிழர் தலைவர்: புறக்கணிப்பது என்பது ஜனநாயகத்தையே புறக்கணிப்பது என்று பொருள். அது சரியான தீர்வாகாது. அவர் தேர்தலை புறக்கணித்தால், மக்கள் அவரைப் புறக்கணிப்பார்களே தவிர, தேர்தலைப் புறக் கணிக்க மாட்டார்கள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

தமிழ் ஓவியா said...


பாலியல் வன்முறைச் சட்டம்இந்தியாவின் தலைநகரமான டில்லியில் 2012 டிசம்பர் 16ஆம் தேதி மனிதகுலம் வெட்கித் தலைகுனியக் கூடிய ஒரு நிகழ்வு நடைபெற்றது.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், கயவர்கள் அறுவர் களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட அந்தச் செய்தி ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கி எடுத்தது!

நம் நாட்டைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தால் அவ்வப்பொழுது மட்டும் பெரிதாகப் பேசப்படும் - விமர்சிக்கப்படும்; வாத - பிரதிவாதங்கள் ஓகோ என்று நடைபெறும் அத்தோடு பிரச்சினை ஆடி அடங்கிவிடும்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதையொத்த நிகழ்வுகள் - இன்னும் சொல்லப் போனால் அதையும் விஞ்சும் கொடூரங்கள் நடக்கத்தான் செய்யும்.

பெண்கள் பாலியல் வன்கொடுமை என்பது இந்த ரகத்தைச் சேர்ந்ததாகவே இருந்து வரு கிறது. இதில் மிகப் பெரிய வெட்கக் கேடு என்னவென்றால் இந்தியாவின் தலைநகரமான டில்லிதான் - இதில் முதலிடத்தை வகிக்கிறது. பெண்கள் வாழத் தகுதியற்ற பூமியாகி விட்டது டில்லி!

பெண்கள் இப்படியெல்லாம் வன்புணர்ச்சிக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகும் பொழுதெல்லாம் - மேல் தட்டு ஊடகங்கள் எல்லாம் பெண்களைத் தான் குறை கூறி விமர்சனக் கணைகளைத் தொடுப்பார்கள்.

அணிந்திருக்கிற ஆடைகள் சரியில்லை; போக்குகள் சரியில்லை என்கிற தொனியில் கருத்துத் தானங்களைச் செய்வார்கள். இத்தகை யவர்களின் எண்ணங்களில் ஆழமாகப் பதிந்து இருப்பது - ஆணாதிக்க உணர்வுகளே!

சட்டங்கள் பல இருக்கத் தான் செய்கின்றன என்றாலும் அவை ஏட்டுச் சர்க்கரையாகத் தானே இருக்கின்றன. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்குப் பரிகாரமாக சில ஆணைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை நகமும், பல்லும் இல்லாத வைகளாகவே இருக்கின்றன.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குற்றவியல் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

1) பாலியல் வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை, இந்தத் தண்டனை குற்றவாளியின் ஆயுட்காலம் வரைகூட நீட்டிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை மீண்டும் செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும்.

2) பெண்களைப் பின் தொடர்ந்து செல்லுதல், கேலி செய்தல், பெண் உறுப்புகளைப் பார்த்து இன்புறுதல் போன்ற குற்றங்களை இரண்டாவது தடவை செய்தால் அவை பிணையில் வெளிவர முடி யாத குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

3) பெண்கள்மீது திராவகம் வீசினால் 10 ஆண்டு சிறை.

4) பாலுறவு சம்மத வயது - 18.

5) பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக இலவச மருத்துவ உதவி செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்ய மறுக்கும் மருத்துவர்களுக்கும் தண்டனை உண்டு.

6) குற்றம் செய்பவர்கள் அரசு ஊழியர்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர், மருத்துவத்துறை ஊழியர்களாக இருந்தால் 7 ஆண்டுகள் முதல், வாழ்நாள் சிறைத் தண் டனைக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்களும், செயல்பாடுகளும் கறாராக இருந்தால் மட்டுமே ஓரளவு இந்த வகையான குற்றங்களைக் குறைக்க முடியும்.

இவற்றையெல்லாம்விட பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற நிலை மாற்றப்பட்டு அவர்கள் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற வர்களாகவும், உடல் வலிமை மிக்கவர்களாகவும் வளர்த்தெடுக்கப்பட உரிய பயிற்சிகள் ஆரம்பப் பள்ளி முதல் அளிக்கப்பட வேண்டும்.

மன வலிமை மிக்கவர்களாக வளர்க்கப்பட வேண்டும் தந்தை பெரியார் கூறும் புரட்சிப் பெண்களாக வளரட்டும் - மாற்றங்கள், தானே வரும்!

தமிழ் ஓவியா said...


வளர்கிறது


நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
(விடுதலை, 23.8.1961)

தமிழ் ஓவியா said...


கோவில் கோபுர கலசம் திருட்டு


கண்ணமங்கலம், ஏப்.5- கண்ணமங்கலம் அடுத்த அத்திமலைப்பட்டு கிராமத்தில் உள்ள செல்லி யம்மன் கோவில் கோபுர கலசத்தை திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான செல்லியம்மன் கோவில் உள்ளது.

கோவில் மூலஸ்தான கோபுரத்தின் மீது இருந்த கலசத்தை யாரோ திருடிச்சென்று விட்டனர். நேற்று காலையில் கோவிலுக்குச் சாமிகும்பிட சென்ற பக்தர்கள் கோபுரத்தில் கலசம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி ராஜேந்திரன் மற்றும் கிராமபொதுமக்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் இதுபற்றி கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.இதுபற்றி கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தைத் திருடிச்சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.

தன்னுடைய கோபுரக் கலசத்தையே பாதுகாக்க முடியாத அம்மன் எப்படி பக்தர்களைக் காப்பாற்று வாள்?

தமிழ் ஓவியா said...


இந்த முட்டாள்தனத்துக்கு முடிவே இல்லையா?


போர்க் கருவிகட்காக ஒவ்வொரு ஆண்டும் 600 பில்லியன் (அறுபது ஆயிரம் கோடி) யு.எஸ். டாலர்கள் செலவு செய்யப்படுகின்றன. இதைக் கொண்டு பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக் கும் தலா 112 டாலர்கள் செலவு செய்யலாம். குடிசைத் தொழில் உற்பத்தியினால் வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் உள்ள தனி மனித ஆண்டு வருவாயைவிட இந்தத் தொகை அதிக மானது என்று அய்க்கிய நாடுகளின் தலைமைக் காரியதரிசி ஜாவீர் பெர்ஜ்டீ கியூலர். அண்மையில் அய்.நா பொதுச் சபையில் நடந்த படை பலக் குறைப்பு 2ஆவது கூட்டத்தில் கூறியுள்ளார்.

பெரியம்மையை ஒழிக்க உலக சுகாதார நிறுவனத்துக்கு 100 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே செலவானது. ஆனால் இதை விட அதிகமான தொகையை, மிகவும் நவீன பாணியில் உருவாகும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஒரு ஏவுகணைக்காகச் செலவு செய்யப்படுகிறது என்று மற்ற துறைகளுடன் மேலும் ஒப்பிட்டுக் கூறினார்.

விவசாயம்

உலக இராணுவத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆகக் கூடிய செலவு தொகையில் அரை சதவிகித பணத்தைக் கொண்டு, குறைந்த வருமானமும், உணவுப் பற்றாக்குறையும் உள்ள நாடுகளின் விவசாய வளர்ச்சிக்குச் செலவு செய்தால் இந்த பத்தாண்டுக்குள் உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடையச் செய்துவிடலாம்.

குழந்தை மரணம்

ஒரு வருடத்தில் அல்ல; ஒரு மாதத்திலும் அல்ல; ஒவ்வொரு நாளும் 40,000 குழந்தைகள், வளர்ந்து வரும் நாடுகளில் செத்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நாம் இந்த உலகத்தில் ஆயுதப் போட்டிக்காக ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லிய னுக்கும் அதிகமான டாலர்களை செலவு செய்து வருகிறோம்.

கல்வி

புதுமையான பாணியில் தயாரிக்கப்படும். குண்டுகள் மிகவும் போர்த்திறமை பெற்றவை. இரண்டு குண்டுகளின் விலை மட்டும் ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்தத் தொகை யை கொண்டு உலகம் முழுவதும் உள்ள தற்குறி மக்களுக்கு எழுதவும், படிக்கவும் செய்விக்க முடியும்

ஆராய்ச்சி

உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளில் 5,00,000 பேர், இன்னும் கொடுமையான முறைகளில், செயற்கையான வழிகளில் மக்களைக் கொல்ல, எப்படியெல்லாம் ஆயுதங்களை உருவாக்கலாம் என்பதற்காக, தங்கள் அறிவு வளம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகின்றனர்.

பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் அய்க்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கேட்ட கேள்விக்கணைதான் இது;
இந்த முட்டாள்தனத்துக்கு முடிவே இல்லையா?

குறிப்பு: 1 மில்லியன் - 10 இலட்சம்

1 பில்லியன் - 10,000 மில்லியன்

வேர்ல்ட் ஹெல்த், ஜனவரி, 1983 இதழில் இருந்து தமிழாக்கம் செய்தவர்:
-அ.ப. நடராசன், உடுமலை.

தமிழ் ஓவியா said...


கருட பகவான் காலமானார்!

காட்சி-1

மகன்: ஏம்மா, மேலே பறக்கற அந்தப் பருந்தைப் பார்த்து, கன்னத்திலே போட்டுக்கிட்டு கும்பிடுறீங்க?

தாய்: அது பருந்தல்ல! நமது திருமாலின் வாகனம்!

மகன்: அப்படீன்னா, அதைக் கண்டால் பய பக்தியோடு கும்பிடனுமாம்மா?

தாய்: ஆமாம்! அந்தக் கருடாழ்வாரைப் பார்ப்பதே பெரிய புண்ணியம்! கட்டாயம் நாம் அதைப் பயபக்தியோடு கும்பிடனும்.

காட்சி-2

மகன்: அம்மா! நேற்று நீங்க காட்டிய அந்தக் கருட பகவான் இன்று நம்ம வீட்டிலேயே வந்து உட்கார்ந்திருந்தாரம்மா!

தாய்: அப்படியா! நமக்கு ஏதோ நல்ல காலம் வந்திருக்கு! சரி! நீ என்ன செய்தே!

மகன்: நீங்க சொல்லிய அறிவுரைப்படி அந்த கருடபகவானை பயபக்தியோடு கும்பிட்டேன்!

தாய்: (தனக்குள்) அடடா! இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்தி உணர்வு!

மகன்: அப்புறம் நம்ம கருட பகவான் கீழே வந்து நம்ம கோழிக்குஞ்சு ஒன்றை தூக்கிக்கிட்டு மேலே போனார் - நம்ம கருடபகவான்தானே என்று நானும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கிட்டு நின்றேனம்மா!

தாய்: அட, தடிப்பயலே! அந்தப் பருந்தை அடிச்சு விட்டாமே பார்த்துக்கிட்டு நின்றேன் என்கிறாயே! அருமையா வளர்த்த கோழிக்குஞ்சு போச்சே! உனக்கு அறிவு இருக்கா?

மகன்: !......?.....!.......?

காட்சி -3

மகன்: அம்மா! இன்று மீண்டும் அந்தக் கருட பகவான் வந்தாரு!

தாய்: சனியன்! நேற்று கோழிக்குஞ்சை தின்ன ருசியில் இன்று வந்திருக்கு! சரி! அப்புறம் என்ன நடந்தது?

மகன்: மீண்டும் கோழிக்குஞ்சை தூக்கப் போனப்ப, நீங்க சொல்லியபடி கல்லெடுத்து ஒரே அடியா அடிச்சுட்டேன்.

தாய்: அப்புறம் என்ன ஆச்சு?

மகன்: கருட பகவான் இதோ செத்துக் கிடக்காரும்மா!

தாய்: !............?..............!..........?

தமிழ் ஓவியா said...


இந்து மதமல்ல - பார்ப்பன மதமே! அட்லாஸ் கூறுகிறது


இலண்டன், ஜியார்ஜி பிலிப் அண்டு சன் கம்பெனியார் வெளியிட்டுள்ள உலகப் படத் தொகுப்பில், ஆசியாவின் மதங்கள் என்ற பக்கத்தில், புத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்று குறிப்பிட்டவர்கள், இந்து மதம் என்பதற்கு பதிலாக பார்ப்பனீயம் (இந்துஸம் - பிராமணீசம்) என்றே குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து இந்துமதம் என்பது பார்ப்பனீய மதமே என்று அறிவு ஆசான் தந்தை பெரியார் சொன்னது புரிகிறதல்லவா!

ஆதாரம்: Philip Modern School Atlas, published by, George philip and son limited, london, 1965 63-rd Edition, see-asia- Religions, Page No.55.

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.

(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் மாநாடு

சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு 4.4.2013 அன்று வெகு எழுச்சியோடு நடை பெற்றது.

மார்ச்சு 2,3 ஆகிய நாட்களில் பார்ப்பனர்கள் துறவிகள் மாநாடு என்ற பெயரிலும், கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு என்ற பெயரிலும் இரு நாட்கள் அங்கு நடத்தியுள்ளனர்.

துறவிகள் மாநாட்டில் காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கலந்து கொண்டதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அவர் எதைத் துறந்தார் என்று தெரியவில்லை. மண்ணாசை, பொன்னாசை பெண்ணாசை எதையும் துறந்தவர் இல்லை என்பது ஊர் அறிந்த ஒன்றாகும்.

இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் ராமன் கோயில் கட்டலாம் என்றும், இந்துக்கள் ஒன்றுபட்டால் நமக்குத் தேவைப்படும் ஓர் ஆட்சியை உண் டாக்கிக் கொள்ளலாம் என்றும் பச்சையாக தன் பாசிச உள்ளக் கிடக்கையை அவிழ்த்து வெளியே விட்டுள்ளார்.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறு பான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார்க் கும்பல், பிஜேபி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பட்டப் பகலில் ஆயிரக் கணக்கில் கூடி திட்டமிட்ட வகையில் அடித்து நொறுக்கி விட்டனர்.

அதன் குற்றவாளிகள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ராஜா போல சுற்றி வருகிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், அசோக் சிங்கால் உள்ளிட்ட பிஜேபி, வி.எச்.பி.யினர் முக்கிய தலைவர்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் (இவ்வளவு காலம் தீர்ப்பு அளிக்கப்படாதது பெருங்குற்றமே!) ஒரு மடாதிபதி அங்கு ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லுவது சரியானதுதானா? இது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

பாபர் மசூதி வெறும் கட்டடம்தான் அதனை இடித்தது குற்றமாகாது என்று சொன்னவர் (தீர்ப்பை முன் கூட்டியே கொடுக்கிறார்) மீது நியாயப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்க வேண்டும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட ஒன்று என்று வக்கணையாகப் பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. 21 ஆண்டு காலமாக இந்த வழக்கில் தீர்ப்புக் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் நிருவாகம் மற்றும் நீதித்துறை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு கண்ணுக்கு எதிரான எடுத்துக்காட்டுதான்.

இரண்டாவதாக சிறீரங்கம் மாநாட்டில் பேசிய காஞ்சி மடாதிபதி இந்துக்கள் ஒன்றுபட்டு நமக்குத் தேவையான ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்று கூறினார் என்பதன் மூலம் பச்சையாக ஓர் அரசியல்வாதி போல காஞ்சி சங்கராச்சாரியார் செயல்படுகிறார் என்பதை எளிதிற் புரிந்து கொள்ள முடியும்.

மதப் போர்வையில் காவி உடை வேடமிட்டு அரசியல் தந்திர நரிகளாக உலா வரும் இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெகத்குரு என்றெல்லாம் சொல்லுவது ஒரு வகையான விளம்பர உபாயமே தவிர, மற்றபடி வெகு மக்களுக்கும் இவாளுக்கும் என்ன ஒட்டு உறவு?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் தலைவர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும் - அட்டியில்லை.

துறவிகள் மாநாடு என்று சொல்லி தங்கள் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள நஞ்சினைக் கொட்டுகிறார்கள் என்பதைக் கணிக்க, கவனிக்க தவறக் கூடாது.

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அதே சிறீரங்கத்தில் கடந்த 4ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கூட்டப் பெற்று அரிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டுத் தீர்மானங் களையும், திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டுத் தீர்மானங்களையும் பொது மக்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்.

எது தேவை? எது தேவையற்றது? எது சமுதாயத்துக்கானது? எது சமுதாயத்துக்குத் தேவையற்றது, என்பதை எளிதிற் தெரிந்து கொள்ளலாமே! 6-4-2013

தமிழ் ஓவியா said...


மூட்டை சோதனை

பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன் மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங் காருடைய சட்டைப் பையிலிருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காகவேண்டி அவர்களுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும், மடியையும் சோதனைப் போட்டுப் பார்த்ததாக ஒரு நிருபர் எழுதியிருக்கிறார்.

இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர்.

இவர்கள் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணாமல் போனதற்காக எந்தக் காரணத்தைக் கொண்டானா லும், தங்கள் மூட்டையைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப் படுகிறோம்.

அல்லாமலும் இந்தப் பிராமணர்களுக்கும் இவர்களைப் பரிசோதனை செய்யும்படியானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு எந்தச் சமயத்தில் என்ன மரியாதைகள் கிடைக்குமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 25.04.1926

தமிழ் ஓவியா said...


அறிவுப்பூர்வ ஆதாரம்!


பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்தவிடும் என்று கருதும் பழக்கம், படித்தவர், படிக்காதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

சித்திரையில் பிறந்த பெரியோர்கள் சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். விக்டோரியா - நீண்ட காலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத். காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர். அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல்மார்க்ஸ் - புதிய சமதர்ம சமுதாயக் கருத்தைத் தந்த கம்யூனிசத்தந்தை, டார்வின் - பரிணாமவாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோதத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக்-பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி

நன்றி: குமுதம்; தகவல்: சம்பத்ராஜ், பேட்டைவாய்த்தலை

தமிழ் ஓவியா said...


கடவுள் துறைகள்!


திருச்சி உறையூரில் வெக்காளியம்மன் கோயில் இருக்கிறது. அக்கோயிலில் காணப்படும் அறிவிப்புப் பலகையில் கீழ்க்காணும் விவரம் எழுதப்பட்டுள்ளது. எந்தெந்த கோயிலை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்ற பட்டியல் அது.
வ.எண் அம்பாள் அருள்பவை
1 மதுரை மீனாட்சி கலை
2 திருவானைக்கா
அகிலாண்டேஸ்வரி செல்வம்
3 கன்னியாகுமரி குமரி அம்மன் அமைதி
4 சமயபுரம் மாரி(த்தாய்) மழை
5 தில்லை எல்லைக் காளி ஆற்றல்
6 காசி விசாலாட்சி
ஞானம்
7 தஞ்சை முத்துமாரி
வீரம்
8 பட்டீசுவரம் துர்க்கை அழகு
9 காஞ்சி காமாட்சி காமம் அழிப்பாள்
10 உறையூர் வெக்காளி
எல்லாம் தருவாள்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அருள் பாலிக்கும் சக்தியாம். இத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டும் இந்த மக்கள் அடைந்த பலன்தான் என்ன?

உறையூர் வெக்காளி கடவுளுக்கு மட்டும் எல்லாம் வழங்கும் சக்தியாம்.

எல்லா வித நோய்களையும், தீர்க்கும் ஒரே மருந்து என்கிற மூர் மார்க்கெட் மோடி மஸ்தான் வியாபார தந்திரம் தானே, சமயபுரத்தம்மானை வேண்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள் எங்கே மழை?

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா!


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும் பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும், பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழப்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலையவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அரியாமக்கள்; தமைக்காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குடிஅரசு 5.2.1944

தமிழ் ஓவியா said...


நான் மனிதனா ?


இராமன் கௌசல்யாவுக்கு

பிறந்தததால் இந்துவானேன்.

எட்வர்டு ஜெனிபருக்கு

பிறந்ததால் கிறிஸ்துவனானேன்.

சலீம் அனார்கலிக்கு

பிறந்ததால் முஸ்லிமானேன்.

யாருக்கும் யாருக்கும்

பிறந்தால்

மனிதனாவேன்?

- ஜெயபிரபா

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் முதல் பெண்கள்


முதல் பெண் குடியரசுத் தலைவர்... - பிரதிபா பாட்டீல்

முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதல் பெண் மக்களவை சபாநாயகர் - மீராகுமார்

முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் - சுசேதா கிருபளானி

முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர்

காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - டாக்டர் அன்னிபெசன்ட்

அய்.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் பெண் அரசி - ரஸியா சுல்தானா

முதல் பெண் ஏர்மார்ஷல் - பத்மா பந்தோபத்யாய

முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் - புனீதா ஆரோரா

பால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி

புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் - அருந்ததி ராய்

மகசேச விருது பெற்ற முதல் பெண் - அன்னை தெரசா

அயல்நாட்டுத் தூதரான முதல் பெண் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் பெண் அய்.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி

முதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி

உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி - லெய்லா சேத்

முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி

முதல் பெண் பட்டதாரி - கர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா

விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சால்லா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம்

ஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி

ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி

முதல் கமர்ஷியல் பெண் பைலட் - துர்பா பானர்ஜி

முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி

முதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்

முதல் பெண் மேயர் (மும்பை) - சுலோச்சனா மோடி

ராணுவத்தின் முதல் பெண் அதிகாரி - ப்ரியா ஜிங்கன்

முதல் பெண் ரயில் ஓட்டுநர் - திலகவதி

தமிழ் ஓவியா said...


கஞ்சா அடிக்கும் இந்து சாமியார்?


அது எங்கள் பிரசாதம்: கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில், சோறு, தண்ணீர், தூக்கம் கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள் போதை தரும் கஞ்சாவை, புகைக்காமல் இருக்க மாட்டார்கள்.

தினமலர் 4.3.2013 பக்கம் 16

தினமலே சொல்லுகிறது. தெரிந்து கொள்ளுங்கள் இந்து சாமியார்களின் யோக்கியதையை.

தமிழ் ஓவியா said...


பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை!

திருவாரூரில், ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது ருத்ர கோடீசுவரர் ஆலயம்!

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன!

பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் -_ வாடையும் சகிக்க முடியதாததாக இருக்கிறது என்று குடியிருப்புகள் பெருகிவிட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது!.

இப்பகுதியில் உள்ள ருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம். எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா?

உயிரில்லாக் கற்சிலைக்கும், உதவாத அய்தீகதத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்று தான் திருந்துவார்களோ?

- சி.நா.திருமலைசாமி, சின்ன நெகமம், 642137
செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 83

தமிழ் ஓவியா said...


மூளை என்னும் கணினி


அமெரிக்காவின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் மனித மூளையைப் பற்றிய பெரும் ஆராய்ச்சி. அமெரிக்காவின் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆராய்ச்சி அறிவிக்கப்பட்டபோது இது முடியுமா என்ற கேள்விதான் பெரிதாக இருந்தது.

மரபணு ஆரய்ச்சியில் அக்குவேறு ஆணிவேறாக மனித மரபணுவின் அடிப்படையான டி என் ஏ வின் ஜீனோம் திட்டம் அறிவிக்கப் பட்ட போது அறிவியல் உலகமே மகிழ்ச்சியான அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அது வெற்றிகரமாக முடிந்தாலும் எதிர் பார்க்கப்பட்ட முழுப் பயனும் இன்னும் அடையப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல நோய்களின் மரபனுக்கள் வெற்றிகரமாக ஆராயப்பட்டுள்ளன.

விண்ணுலகத்தை ஆராய்ந்ததைவிட நமது மூளை எனும் உலகின் சிறந்த கணினியை ஆராய்ந்து பல நோய்களுக்கும் அடிப்படை காண முயல்வது விஞ்ஞானிகளுக்கே பெரிய சவாலாக, முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மூளையில் உள்ள ஆயிரம் கோடி நியூரான் எனும் செல்களை ஆராய முடியுமா? ஒவ்வொரு நியூரானும் ஒரு பெரிய கணினிக்குச் சமம். இதயத்தின் ஒவ்வொரு செல்லும் கிட்டத்தட்ட ஆராயப்பட்டு, இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இடத்தையும், சில நேரங்களில் ஒழுங்காக செயல்படாத அந்த செல்கள் இதயத்துடிப்பு ஒழுங்காகச் செயல்படாத போது அந்த சிறு இடத்தைக் கண்டுபிடித்து அவற்றை அறுவை சிகிச்சை இல்லாமலேயே "பொசுக்கி" இதயத் துடிப்பைச் சரி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

மூளையின் பல இடங்கள் எதை எதைக் கட்டுப்படுத்துகின்றன என்பது துல்லியமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆனாலும் பல மூளைக் கோளாறுகள் ஏன் ஏற்படுகின்றன? பிறவிக் கோளாறுகள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன? வயதான மூளைத் தாக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன?

அவற்றை எப்படித் தடுக்கலாம் என்பன மிகவும் முக்கியமான ஆராய்ச்சிகளாக அமையும். அமெரிக்கத் தலைவர் ஒபாமாவே இந்த ஆரய்ச்சியைத் தொடங்கி வைத்து ஆதரித்து இன்று பேசியுள்ளார். இதை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்தின் கோட்டையாக உள்ள மூளையின் கதவுகள் திறக்கப் படப்போவது நிச்சயம்.

டாக்டர் சோம. இளங்கோவன் (அமெரிக்கா

தமிழ் ஓவியா said...

லட்டா? துட்டா?கோவிலுக்கு மொட்டை போட்டவனைப் பார்த்து `உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுத்தியா என்று கிராமங்களில் கேட்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை போட கட்டணம் வசூலித்த காலம் இருந்தது. என்.டி.ராமராவ் ஆட்சியின் போது இலவசமாக்கப்பட்டது. ஏனென்றால், பக்தர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மயிர் விற்கப்பட்டது. மயிர் மூலம் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

அந்தப் பணமே போதும் என்பதால், கட்டணத்தை விலக்கினார்கள். திருப்பதி மொட்டை மூலம் கிடைக்கும் மயிரை விற்பதால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கிறதாம். இந்த வருமானம் போதாதென்று புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அண்மையில் அறிவித்துள்ளது. நீண்ட கூந்தல் முடியைக் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு 5 லட்டுகள் இலவசமாக அளிக்கப்படுமாம். இந்த லட்டு தானம் ஏன் தெரியுமா? நீண்ட முடியை அய்ரோப்பிய நாடுகள் `டோப்பா (ஷ்வீரீ)அதாவது தோற்றப் பொலிவிற்காக வைத்துக் கொள்ளும் பொய் முடி) செய்வதற்காக நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன. இந்த வியாபாரிகளைப் பிடித்துவிட்ட திருப்பதி தேவஸ்தானம் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் மயிரைப் பிடுங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக லட்டு கொடுத்து ஏமாற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

தாலியாம் தாலியே...

தமிழ் சினிமாவின் பல செண்டிமெண்டுகளில் தாலி செண்டிமெண்ட்தான் நம்பர் ஒன். தாலியில் கை வைத்தால் அவ்வளவுதான் அப்படியே அதிரும் அளவுக்குப் பின்னணி இசையும், இடி, மழை, மின்னலும் ஒரு சேர மிரட்டும். இந்தக் காட்சிகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்ணுரிமையைப் பறிக்கும் கருவியாக, பெண்ணடிமையைத் தொடரும் அடிமைச் சின்னமாகத்தான் தாலி இம்மண்ணில் உருவாக்கப்பட்டது. அதனைத் தூக்கி எறி என்று குரல் கொடுத்தவர் பெரியார். தம் கருத்தை ஏற்பவர் தாலி கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அதன்படி தாலி கட்டாத இலட்சோப இலட்சம் தொண்டர்களை உருவாக்கினார். தாலி அணியாத பெரியார் தொண்டர்களான வீராங்கனைகளை வித்தியாசமாகப் பார்த்த தமிழகம், ஏளனமாக கேலி பேசியதும் உண்டு. சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலோர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் மீண்டும் நடிக்க வரமாட்டார்கள். அதன் முக்கியக் காரணங்களில் தாலியும் ஒன்று. காட்சிக்கு ஏற்றாற் போல ஒப்பனை செய்துகொள்ளும் போது தாலியைக் கழற்ற வேண்டியிருக்கலாம். அப்படிக் கழற்ற மனமில்லாதவர்கள் மீண்டும் நடிக்க வரவில்லை. சிலர் கதாநாயகி வேடத்தைத் தவிர்த்து, அக்காளாக, குடும்பப் பெண்ணாக, டாக்டராக, வயதான மாமியாராக நடித்தார்கள். இப்படி நடிக்கும் போது தாலி ஒரு பிரச்சினை இல்லை அல்லவா?

இந்தக் காலமெல்லாம் கடந்து சின்னத்திரை வலுப்பெற்று வந்த சூழலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண்களே துணிச்சலாக முதன் முதலில் தாலியைக் கழற்றிவைத்து விட்டு செய்தி வாசித்து, பின் மீண்டும் அணிந்து கொண்டார்கள். இந்த வகையில் முதன் முதலில் தாலிக்கான புனிதத்தை உடைத்ததற்காக இவர்களைப் பாராட்டலாம்.

ஆனாலும், தாலிக்கு சினிமா கொடுத்த செண்டிமெண்ட்டை சின்னத்திரைத் தொடர்களும் தொடர்ந்தன. தாலியை மட்டுமே வைத்துக்கூட பல கதைகள் புனையப்பட்டன. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் கட்டிய தாலியை அவன் இறந்தாலொழிய கழற்றுவதில்லை என்றே சின்னத்திரைக் குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் திகழ்ந்தன. காலமாற்றம் இப்போது மெதுவாக இந்தப் போக்கினை மாற்றி வருகிறது. பெண்கள் பொருளீட்டி, தம் வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவாகிவரும் சூழலில் சின்னத்திரை செண்டிமெண்ட்டுகளும் உடைகின்றன போலும்!

கடந்த மார்ச் மாத இடை வாரத்தில் சன் தொலைக்காட்சியில் நிறைவடைந்த `திருமதி செல்வம் தொடரிலும், இன்னொரு தொடரான நாதஸ்வரம் தொடரிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.

திருமணம் செய்த நாளில் இருந்தே துன்பத்தில் உழன்று, உழைப்பால் உயரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை திருமதி. செல்வம். ஒரு கட்டத்தில் மனைவியை விலக்கிவைத்து விட்டு முன்னாள் காதலியுடன் சேர்ந்து மனைவிக்குத் தொல்லை கொடுக்கிறான் செல்வம். ஆனால், காதலியின் சூழ்ச்சி அறிந்து அவளால் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு சிறைக்கும் சென்றுவிட்டு மீண்டும் மனைவியிடமே வருகிறான். தன்னை மன்னித்து ஏற்க வேண்டும் என்று மன்றாடுகிறான். ஆனால், மனைவி அர்ச்சனா வழக்கமான பழைய பத்தாம்பசலிப் பெண்ணாக இல்லாமல், ``இதேபோல நான் கெட்டழிந்து மீண்டும் உன்னிடம் வந்து என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டிருந்தால் நீ ஏற்றுக்கொள்வாயா? என்று அதிரடியாய்க் கேட்கிறாள்.

திகைக்கும் கணவனை நோக்கி அடுத்த குண்டை வீசுகிறாள் மனைவி. அது அவன் கட்டிய தாலி. ``நீ கட்டிய இந்தத் தாலி அர்த்தமில்லாமல் என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியபடியே தாலியைக் கழற்றிக் கணவனின் முகத்தில் வீசுகிறாள். சுற்றி இருக்கும் உறவினர்கள் அவளது செயலை ஏற்றுக்கொள்வதோடு, இன்னொரு திருமணமும் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் என்பதோடு அந்தத் தொடரை முடித்தார்கள்.

இதேபோல நாதஸ்வரம் தொடரிலும் ஒரு காட்சி. திருமணமாகி சில நாட்களே ஆன தம்பதியரின் கதையில் அக்காட்சி. கணவனின் நயவஞ்சகத்தை, துரோகத்தை அறிந்து அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வாழப் புறப்படுகிறாள் அந்த இளம்பெண். வெளியேறும்போது அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வருகிறாள்.

காலமாற்றத்தையும், பெண்ணுரிமையின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் சூழலையும் உள்வாங்கியே இக்காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணுரிமைப் போரின் வீச்சு இன்னும் அதிகமாகும்போது தாலி தேவையா என்ற காட்சிகளும் வரலாம்.

தமிழ் ஓவியா said...

டுனீசியாவில் பெண்ணுரிமைக் குரல்


’என் (பெண்) உடல் என் (பெண்)னுடையது மட்டுமே’

பெண்ணுடல் மீதான உரிமை அவளையன்றி கிட்டத்தட்ட மற்ற அனைவருக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. மதம், ஜாதி, குடும்பம், சமூகம் என்று பலவும் அவள் உடல் மீது உரிமை கொண்டாடுகின்றன. அது மேற்கண்டோரின் கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தன்னுடல் சார்ந்த தன் உரிமையை உரத்துப் பேச வேண்டிய தேவை பெண்ணுக்கு எழுகிறது.

உலகளவில் எங்கெல்லாம் அடக்குமுறை ஏவப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கான எதிர்க்குரல் கிளம்புகிறது. 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் உருவான பெண்ணுரிமைக்கான அமைப்பு ஃபெமன். இதன் போராட்டங்களில் ஒரு வகை, திறந்த மார்புடன் போராடுவது. அப்படி என் உடல் என்னுடையது மட்டுமே; இது யாருடைய கவுரவத்திற்கும் மூலம் அல்ல (My body belongs to me, and is not the source of anyone’s honour) என்று தனது திறந்த மார்பில் அரபியில் எழுதப்பட்ட வாசகத்துடன் முகநூலில் படம் வெளியிட்டுள்ளார் டுனீசியாவைச் சேர்ந்த அமினா என்ற 19 வயதுப் பெண். இதற்காக அவருக்கு பத்வா அறிவித்திருக்கிறார் அடெல் அல்மி என்ற ஓர் இஸ்லாமிய மதவாதி. ஆனால் மரண தண்டனையே நடப்பில் இல்லாத டுனீசியாவில் சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று நீதிபதி அல்லாத அல்மி கொடுத்துள்ள பத்வா தவறானது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனை எதிர்த்தும், அமினாவின் உயிரைக் காக்க வேண்டியும் உலகளாவிய கையெழுத்து இயக்கமும் நடத்தப்படுகிறது. தற்போது அவருக்கு ஆதரவாக டுனீசியாவைச் சேர்ந்த மெரியம் என்ற பெண்ணும் தன் உடலில் எங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அரபியில் எழுதி தன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பெண்ணுடல் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அதை உடைக்கும் நடவடிக்கைகளும் தொடரவே செய்யும்.

- சமன்

தமிழ் ஓவியா said...

நமக்குரிய இலக்கு இராஜபக்ஷேவே!

இந்த நேரத்தில் பொது எதிரி இராஜபக்ஷே என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விட்டோ, டெசோவையும், அதன் தலைவரையும் முதல் அமைச்சர் வசைபாடுவது எதைக் காட்டுகிறது?

ஈழப் பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கைத்தானே காட்டுகிறது!

முந்தைய அவரது நிலைப்பாடுபற்றிக் கூறி, அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்றே நினைக்கிறோம்.

நமக்குள்ள இலக்கு -- இலங்கை இராஜபக்ஷேவே தவிர, இங்குள்ளவர்கள் பற்றியதல்ல -- ஈழப் பிரச்சினை! - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

திரிபுரா அரசின் தடாலடி


மூடநம்பிக்கை வியாபாரிகள்தான் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுரா மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது.

ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அவர்களின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் ஜோசியர்கள் சிலரும் சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடத்த, பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதி(?)யை அழைத்து வந்தனர். ஆனால், இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். சாமியார்களும், மந்திரவாதிகளும் ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

ஓட்டல்களில் தங்கிக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்து தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும் மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றில் தாயத்து, மந்திரத்தகடு விற்கும் புதிய கும்பல் சில மாதங்களாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதைத் தமிழகக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே நித்தியானந்தா போன்ற ஹைடெக் சாமியார்களும் தியானம், யோகா என்கிற பெயரில் தொலைக்காட்சி மூலமாகத்தான் விளம்பரம் பெறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

திருடர்களுக்கு உதவும் கடவுள்

- தேன் தினகரன்

கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

கோபாலன், கோவிந்தன் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள்.

நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக வழக்குப் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோயில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு?

கோபாலன்: அய்யா, நான் தீவிர முருகன் பக்தன்யா.

நீதிபதி: இதை எப்படிப்பா நம்புறது? நீ வணங்குற முருகன் கோயில்லயே கொள்ளை அடிக்கலாமா?

கோபாலன்: ஏழைகளுக்கு உதவுறவர்தானங்கய்யா அந்த அருள் முருகன்.

நீதிபதி: ஏழைகளுக்கு உதவுவார்ங்கிறது சரி. திருடர்க்கும் உதவுவாரா?

கோபாலன்: ஆமாங்கய்யா..........

நீதிபதி: என்ன சொல்ற நீ?

கோபாலன்: பக்தர்களுக்கு அருள் செய்றதுதானய்யா அவனோட கடமை. நான் திருடுறதுக்காக பல இடங்களுக்கும் போய் ஒண்ணும் கிடைக்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தேன். அப்பதான் முருகன் என் கனவில் வந்து, பக்தா! பசியால வாட வேண்டாம். உண்டியல்ல பணம் நிறையா வச்சிருக்கேன்.... எடுத்திட்டுப் போய் சாப்பிடுன்னு சொன்னார்ங்கய்யா...... அவர் சொல்லித்தான் செஞ்சேன்.

நீதிபதி: முருகன் கனவில் வந்தார்னு சொல்றியே, அதுக்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?

கோபாலன்: ஆதாரம் எதுவும் இல்லைங்கய்யா......
அடுத்து கோவிந்தனை விசாரிக்கிறார்.

நீதிபதி: நீ என்ன கோபாலன் கூட்டாளியா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா....... நான் தனியா உண்டியலை உடைக்கணும்தான் போனேன். அந்த நேரத்தில கோபாலன் அங்க வந்திட்டான்.

நீதிபதி: கோபாலன் சாப்பாட்டுக்கு வழி இல்லாம திருடுனதாச் சொல்றான். நீ எதுக்காக திருடுன?

கோவிந்தன்: எதித்துப் பேசுறனேன்னு தயவு செஞ்சி கோவிச்சிக்கக்கூடாது. ஒங்களுக்கு கடவுள் நம்பிக்கைலாம் இருக்கா?

நீதிபதி: ஓ! இருக்கே! எதுக்காக அப்படிக் கேக்கிற?

கோவிந்தன்: அந்த முருகனை வரவச்சி நான் எதுக்காகத் திருடுனேன்னு நீங்களே அவங்கிட்ட கேளுங்களேன்.

(நீதிபதி யோசிக்கிறார்.)

யோசனை என்னத்துக்கு? முருகனுக்கு சம்மன் அனுப்பி வரவச்சி கேளுங்க, நான் சொல்றது நிஜமா இல்லையான்னு......

நீதிபதி: சம்மன் அனுப்பி வராட்ட என்ன செய்றது?

கோவிந்தன்: கு.வி.மு.ச.87-இன் கீழ் கைது ஆணை போடுங்கய்யா.....

நீதிபதி: என்னப்பா சட்டம்லாம் பேசுற? நீ என்ன வழக்குரைஞரா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா..... பாதிக்கப்பட்டோர் கழகத்தில் உறுப்பினரா

இருக்கேன்.

நீதிபதி: பாதிக்கப்பட்டோர் கழகமா? ஏம்ப்பா.... அவங்க எல்லா விசயத்திலயும் ரொம்ப நியாயமாத்தான் நடப்பாங்க.... அவங்களை எதுக்குப்பா இழுக்கிற?

கோவிந்தன்: என் நண்பர் பெருமாள் கடவுள் இல்லைங்கிறதை சட்டரீதியா ஒன்னால நிரூபிக்க முடியுமான்னு கேட்டான். அதுக்காகத்தான் அந்தக் கோயில்ல கொள்ளை அடிச்சேன். நீங்க இந்த வழக்குல முருகன் ஆஜராகணும்னு உத்தரவு போட்டுட்டா அது தெரிஞ்சிரும்ல?

நீதிபதி: அதெல்லாம் என்னால முடியாது. கோயில் உண்டியலை உடைச்சித் திருடுனது இ.த.ச. 379, 380இன்படி குற்றம், அதுக்குத் தண்டனைய ஏத்துக்கிறியா?

கோவிந்தன்: அய்யா...... எனக்குத் தண்டனை குடுக்கிறதுக்கு முந்தி அந்த முருகனுக்கும் தண்டனை குடுத்திறணும்.

நீதிபதி: முருகனுக்கா? எதுக்கு?

கோவிந்தன்: செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் குற்றம் என்று இ.த.ச.2ல சொல்லப்பட்டிருக்கே. நாங்க கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது அந்த முருகன் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கணும். அதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்ததால இதைக் குற்ற உடந்தைன்னுதான் சொல்லணும். அதனால முருகனுக்கு இ.த.ச.109இன் கீழ் தண்டனை குடுத்திட்டு அப்புறம் எனக்கு உண்டியலைக் கொள்ளை அடிச்சதுக்கான தண்டனையை நீங்க கொடுக்கலாம்.

நீதிபதி: இப்போ நீதிபதி வேலைக்கு வந்ததுதான் பெரிய தப்புன்னு தெரியுது. அதனால என் பதவியை ராஜினாமா பண்ணிர்றேன். இந்த வழக்கை வேற நீதிபதி விசாரிப்பார்.

தமிழ் ஓவியா said...

பன்னாட்டுப் பொன்மொழி

இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடிக்கும். நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேரும் இடத்திற்கு ஏற்பவே மாறுவோம்.

- துருக்கி

தமிழ் ஓவியா said...


ஓவியா IAS


திருச்சி திருவெறும் பூரில் உள்ள பெல் நிறு வனத்தில் பணியாற்றக் கூடிய கழகத் தோழர் கே.வி. சுப்பிரமணியம்.

இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் துணைவரை இழந்த பெண்ணை (ஆரிய மாலா) கொள்கை உணர் வோடு தம் வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொண்ட கொள்கை வீரர்.

அவரது, மகன் சு. கலாநிதி - பொறி யாளர் தனியே தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவ ருக்கும், செவிலியர் கல்வி பெற்ற தங்கமணிக் கும் (ANM) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா திருவெ றும்பூரில் 5.4.2013 காலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது.

மகள் கலைமணிக்கும் திருமணம் முடிந்து விட் டது. அவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். அவரின் இணையரும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் நுழைவு வாயிலில் தங்கள் குடும் பத்தில் பட்டம் பெற்றவர் களின் பெயர்களையும், அவர்கள் பெற்ற பட்டங் களையும் தாங்கிய பதாகை (Flex) ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

பேத்தி ஓவியா (குழந்தை) பெயருக்குப் பக்கத்தில் IAS என்று குறிப் பிடப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு வந் திருந்த அனைவரையும் இது ஆச்சரியமாக பார்க்க வைத்தது; ஏன். அனைவரையும் மனம் விட்டுப் பேசவும் வைத்தது.

ஏதோ விளம்பரத்திற் காக தோழர் கே.வி.எஸ். இதனைச் செய்யவில்லை.

தந்தை பெரியார் சகாப்தத்தில் எத்தகைய சமூக மாற்றம் நடந்திருக் கிறது என்பதை வெளிப் படுத்தவும், தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட கருஞ் சட்டைத் தோழர்களாக வாழ்ந்து காட்டி வரும் நாங்கள் எத்தகைய தன்னம்பிக்கை உள்ள வர்களாகவும், சிறப்பான வாழ்வுக்கு சொந்தக் காரர்களாகவும், கல்வி நிறைந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வலுவாகவும் இருக்கி றோம். நீங்களும் ஏன் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றக் கூடாது? எனும் சிந்தனையைத் தூண்டவும்தான் இந்த ஏற்பாடு! என்னே, இயக்க தோழர்களின் சிந்தனை நேர்த்தி!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதியை இடித்தது சரியானதுதானாம்! என் எண்ணங்களுக்கு ஏற்றதாக பா.ஜ.க. இல்லை - எல்.கே. அத்வானி
அடுத்த பிரதமர் மோடி- ராஜ்நாத்சிங், அடுத்த பிரதமர் அத்வானி - விஜய்கோயல்
பதவிக் கோஷ்டி சண்டையின் உச்சத்தில் பிஜேபி

புதுடில்லி, ஏப்.7- அடுத்த பிரதமர் மோடி என்றார் கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் இல்லை அத்வானி என்கிறார் டில்லி மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் கோயல். பதவிச் சண்டை தேர்தலுக்கு முன்ன தாகவே பா.ஜ.க.வில் ஆரம்பித்து விட்டது. பா.ஜ.க, நிறுவப்பட்ட தன், 33ஆம் ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சி யின் மூத்த தலைவர், அத்வானி பேசிய தாவது: சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், என்னை பாராட்டி பேசியதாக, பலரும் கூறுகின்றனர். இது, பெரிய விஷய மில்லை. எந்த ஒரு விஷயத்தையும், சரியாக பேச வேண்டும்.

அப்படி பேசினால், உலகம், நம் பேச்சை, அங்கீகரிக்கும்; பாராட்டும்.உண்மையை பேசுவதற்கு, எப்போதும் தயங்கக் கூடாது. தாழ்வு மனப்பான்மையுடன், எந்த சிந்தனையையும் மேற்கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும், உங்களுக்குள், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.அயோத்தி பிரச்சினைக்காக, யாரிடமும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவ சியமில்லை. அதற்காக, பெருமைப்பட வேண் டுமே தவிர, மன்னிப்பு கேட்க கூடாது.

ராமர் கோவில் மற்றும் அயோத்தி விவகாரங் களால் தான், பா.ஜ.க, வளர்ச்சி அடைந்தது' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் எங்களுக்கு, எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இதற்காக நாங்கள், பெருமைப்படுகிறோம். பா.ஜ.க., என்பது, ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல; கலாச்சார அமைப்பும் கூட. பா.ஜ.க., தொண்டர்கள், ஊழலை ஒழிப்பதற்காக, கடுமையாக பாடுபட வேண்டும்."பா.ஜ.க, வேறுபட்ட கருத்துக் களை உடைய கட்சி' என, சிலர் விமர்சிக்கின்றனர்.

ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம், அவர்களின் குற்றச் சாட்டுகளை, பொய் என, நிரூபித்துக் காட்ட வேண்டும். இன்றைய பா.ஜ.க.,வின் செயல்பாடு கள், என் சிந்தனை களுக்கு ஒத்துப் போக வில்லை. கட்சியின் இன் றைய செயல்பாடுகளுக் கும், என் கருத்துக்களுக் கும், ஏராளமான வேறு பாடுகள் உள்ளன. இவ்வாறு, அத்வானி பேசினார். அடுத்த பிரதமர் அத்வானிதானாம்
அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க,வின், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந் திர மோடியை அறிவிப் பதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலை யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், விஜய் கோயல், கூறுகிறார்.

அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க, வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அத்வானி தான், பிரதமர். இதில், எந்த மாற்றமும் இல்லை. கட்சி, துவங்கப் பட்டது முதல், அத் வானியும், வாஜ்பாயும் தான், கட்சியை வழி நடத்துகின்றனர். வாஜ் பாய்க்கு, உடல் நலம் சரியில்லாததால், அவ ரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. எனவே, அத்வானி தான், கட்சியை வழி நடத்த வேண்டும். அவர் தலை மையில், அடுத்த அரசு, அமைய வேண்டும். இவ்வாறு, விஜய் கோயல் கூறினார்.

குறிப்பு: பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று பேசி னார். குத்துவெட்டு பிஜேபியில் இப்பொழுதே ஆரம்பமாகி விட்டது.

தமிழ் ஓவியா said...


டெசோவின் அடுத்த கட்ட நடவடிக்கை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது!


காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும்

சென்னை, ஏப்.7- இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக் கையின் அடிப்படையில் காமன் வெல்த் நாடுகளின் தூதர்களைச் சந்தித்து கோரிக்கைகளை வைக்க உள்ளனர் தி.மு.க. எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும், இது குறித்து டெசோ தலைவர் கலை ஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ள தாவது:

25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப்படு கொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில், காமன் வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்பு களும், தமிழ் இனஉணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

26-4-2013 அன்று லண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருவதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆழ்ந்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென்று டெசோ அமைப் பின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக் கைக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை விளக்கி வலியுறுத்துவார் கள் என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சாமிக்கு இணையாக இந்த (ஆ)சாமியா? திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூச்சல்


திருப்பரங்குன்றத்தில் தேர் ஊர்வலத்தில் சுப்பிரமணிய சாமி கடவுளின் அருகில் அர்ச் சகர் பார்ப்பனர் அட்டகாசமாக உட்கார்ந்து வந்து பக்தர்களிடையே சலசலப்பை ஏறப்டுத்தியது. பக்தர்கள் சத்தம் போட்டும் அந்த அர்ச்சகப் பார்ப்பனர் கொஞ்சம்கூட அலட்டிக் கொள் ளாமல் திமிராகவே நடந்து கொண்டார். கருவறைக்குள்ளிப்பதும் சாமி, அர்ச்சகனும் சாமி என்றுதானே அழைக்கப்படுகிறான் அந்தத் திமிர்தான் இது.

திருப்பரங்குன்றத்திலுள்ள முருகன் கோவிலில் (சுப்பிரமணிய சுவாமி) ஆண்டு தோறும் பங்குனித் தேரோட்ட நிகழ்ச்சிகள் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா நிகழ்ச்சிகள் 17.3.2013 முதல் 31.3.2013 வரை நடைபெற்றது. விழா நாட்களில் சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் சாமி சிலையின் பீடத்தில் சாமிக்கு சமமாக அர்ச்சகர் பார்ப்பனரும் அமர்ந்து வந்தார். வழக்கமாக நின்று கொண்டுதான் வருவர். இதைப் பார்த்த பக்தர்கள் என்னடா அய்யரும் - சாமியும் ஒன்றா என்று முணுமுணுத்தனர்.

அர்ச்சகர் களின் திமிர் கூடிக் கொண்டே செல்கிறது என்றும் சிலர் கூறினர். 16 கால் மண்டபம் தாண்டி சென்றபொழுது - மேடான பகுதியாக இருந்ததால் வண்டியினைத் தள்ளுவதில் சிரமம் ஏற்பட்டது. அப்பொழுது பக்தர்கள் அய்யரே கீழே இறங்கு என்று பக்தர்கள் குரலெழுப்பினர். நாமென்ன சாமி கும்பிட வந்தோமா? அய்யரைக் கும்பிட வந்தோமா? என்று பக்தர்கள் கேட்டனர். ஆனாலும் அர்ச்சகர் இறங்கவே இல்லை. தீபாராதனை செய்யும்போதுகூட உட்கார்ந்து கொண்டுதான் செய்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் - அர்ச்சக பார்ப்பனர் ஒருவர் - அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ததாக அன்றைய மாவட்ட ஆட்சியாளர் சகாயம் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டார். எவ்வித நடவடிக்கையும் அர்ச்சகர்மீது எடுக்க வில்லை. அப்பெண் வேலையிலிருந்து நீக்கப்பட் டார் என்று ஏற்கெனவே செய்தி வெளியானது.

அர்ச்சகரும் கோயில் பணியாளனே!

அர்ச்சகர் அனைவரும் - கோவில் பணியாளர்களே என்று இந்து சமய அறநிலையத் துறை சட்டம் குறிப்பிடுகிறது. எல்லா பணியாளர்களும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுகின்றனர். அர்ச்சகர் மட்டும் கையொப்பமிட மறுப்பதாகவும், காவல் அலுவலர்கள் சொன்னாலும் கேட்பதில்லை யென்றும் கூறப்படுகிறது.

எனவே அதிகாரிகளும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின் றனர். மேற்கண்ட ஒழுங்கீனங்களைத் தடுக்க தமிழக முதல்வரும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொது மக்களும் கூறுகின்றனர்.