Search This Blog

20.4.13

மனிதத்துவத்தை மலர்விக்கும் மதமற்ற உலகம் தேவை! தேவை!!

ராஜபாளையத்தில் ஒரு ராஜப்பாட்டை!
திருவில்லிபுத்தூர் சுயமரியாதை மாநாடு -_ 5.4.1930
விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு _ 8,9.8.1931.
இராநமாதபுரம் ஜில்லா 2ஆவது சுயமரியாதை மாநாடு _ 17.7.1932
சிவகங்கை 3ஆவது சுயமரியாதை மாநாடு _ 2.12.1933
திருப்பத்தூர் தாலுகா சுயமரியாதை மாநாடு _ 11.3.1934
இராமநாதபுரம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு _ 19,20.1.1935
அருப்புக்கோட்டை சுயமரியாதை மாநாடு _ 29,30.3.1935.  இராமநாதபுரம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு 19,20.1.1935
அருப்புக்கோட்டை சுயமரியாதை மாநாடு 29,30.3.1935
விருதுநகர் ஜஸ்டிஸ் தொண்டர்கள் மாநாடு _ 13.10.1935
இராமநாதபுரம் 2ஆவது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு _ 23.8.1936
திருவில்லிபுத்தூர் சுயமரியாதை மாநாடு -_ 11.7.1937.
திருப்பத்தூர் தாலுகா 2ஆவது சு.ம. மாநாடு _ 14.11.1937
விருதுநகர் முதல் தமிழர் மாநாடு _ 19.6.1938
இராமநாதபுரம் ஜில்லா 3ஆவது தமிழர் மாநாடு _ 16.7.1939
விருதுநகர் திராவிடர் மாணவர் முதல் மாநாடு _ 12.6.1944

மேற்கண்ட மாநாடுகள் அனைத்தும் முகவை மாவட்டம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இராம நாதபுரம் மாவட்டத்தில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மாநாடு களின் பட்டியலாகும்.

அந்தப் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளை யத்தில்தான் வரும் மே 4ஆம் தேதி யன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு ஓகோ என்று நடைபெற உள்ளது.

1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாடும் அதன் தீர்மானங்களும் என்றென்றும் பேசப்படக் கூடியவையே!

மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட  எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென் றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவமும் வளராதென்றும் இம் மாநாடு அபிப்ராயப் படுகிறது

இன்றைக்கு 82 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்றைக்கும் பொருத்தக் கூடியது என்று தோன்ற வில்லையா?
உலகில் மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல வேறு காரணங்களுக்காக சிந்தப்பட்ட தில்லை என்பதுதான் வரலாறு கூறும் முக்கிய சேதியாகும்.

ஈராக்குப் போராக இருந்தாலும் சரி, பாகிஸ்தானில் 12 வயது மலாலா சுடப் பட்டதும் சரி, பாபர் மசூதி இடிக்கப் பட்டதும் சரி, இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று கேட்டும் குரலிலும் சரி, குஜராத்தில் கோத்ரா நிகழ்வைத் தொடங்கி கூத் தாடிய கொடூரப் படுகொலைகளிலும் சரி, புத்தர் சிலைகளைத் தமிழன் ரத்தத்தால் குளிப்பாட்டுவோம் என்று கொலை வெறித் தாண்டவமாடிய குரூரத்திலும் சரி, காந்தியார் படு கொலையிலும் சரி, - மதவெறி என்னும் மதயானையல்லவாதறி கெட்டுத் தாண்டவமாடுகிறது _- மறுக்க முடியுமா?

இலங்கையிலே ஈழத் தமிழர்களின் மாமிசக் கடையை நடத்திய சிங்கள வெறியர்கள் இப்பொழுது முஸ்லிம் களை நோக்கி முண்டா தட்டு கிறார்கள். 

மியான்மரிலும் முஸ்லிம்கள் தாக்கப்படும் நிலை! 28000 பேர்கள் வெளியேற்றம்! பாகிஸ்தானில் இந்துக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்று கூக்குரல்கள் இன்னொரு புறம்.

2012 டிசம்பரில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் ஈடுபட்ட அய்ந்து பெண் ஊழியர்கள் தாலிபன்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை!

வட நைஜிரியாவில் தேவாலயத் தாக்குதல், மாலத்தீவில் மத அடிப்படைவாதம் தலைதூக்குதல்கள்.

கிறிஸ்துவின்மீது தாங்கள் கொண் டுள்ள விசுவாசத்திற்காக ஆண்டு தோறும் 1,50,000 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று அய்ரோப்பிய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பிரதிநிதி மசிமோ இண்ட்ரோவிஜின் தெரிவிப்பு!

ஒவ்வொரு அய்ந்து நிமிடத்திற்கும் ஒருவர் எனும் விகிதத்தில் கிறித்தவர்கள் தங்களின் தளரா விசுவாசத்திற்காகக் கொல்லப்படுகின்றனர் என்கிற நிலை!

2011 முடிந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா வில் நடந்த மத வன் முறைகள் 2420, பலி யானோர் 427, மதம் யானைக்குப் பிடிப்பதோடு நிற்கக் கூடாதா? மனி தனுக்கும் பிடித்து கோரத் தாண்டவம் ஆட வேண்டுமா?

மதம் - இன்னொரு மதத்தைப் பார்த்து முறைக்கிறது. மதம் திரிசூலங்களை மக்களிடம் அளித்து வருகிறது.

இந்த நிலையில் மனித சமூகத்தில் சகோதரத்துவம் பரவ வேண்டுமானால், மனிதநேயம் மலர்ந்து மணம் வீச வேண்டுமானால், அனைவருக்கும் அனைத்தும் என்னும் அன்பு மழை பொழிய வேண்டுமானால், ஆண் - பெண் சமத்துவம் என்னும் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிய வேண்டுமானால், மதமற்ற உலகம் ஒன்று உருவாக வேண்டும். மதம் வளர்த்த ரத்தவெறி போதும்! போதுமடா போதும்!!

மனிதத்துவத்தை மலர்விக்கும் மதமற்ற உலகம் தேவை! தேவை!!
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் தத்துவம் அதைத்தான் கூறுகிறது.

மதம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்புக் கொண் டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது என்கிறார் தந்தை பெரியார் (விடுதலை 14.10.1971).

இப்பொழுது விருதுநகர் 1931ஆம் ஆண்டு மாநாட்டுத் தீர்மானத்தை ஒரு முறை புரட்டிப் பாருங்கள் புத்தறிவோடு அதன்மீது பொய் -சூது அற்ற புத்தியைக் கொஞ்சம் செலுத்திப் பாருங்கள்!

மனிதத் தன்மையைக் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு அபிப்ராயப்படுகிறது

அந்த முகவை மாவட்டத்தில் (இன்றைய விருதுநகர் மாவட்டத்தில்) ராஜபாளையத்தில் வரும் மே 4ஆம் நாள் நடக்கும் மாநில இளை ஞரணி மாநில மாநாட்டில் அதனைப் புதுப்பிப் போம் வாருங்கள்! வாருங்கள்!!

பூவுலகிற்குப் புதுப் பாதை கொடுப்போம் கூடுங்கள்! கூடுங்கள்!!
 சண்டைக்களைச் சாய்த்து சகோதரத்துவத்தை விதைப்போம்
புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!
குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள்!
ராஜபாளையம் புதிய ராஜபாட்டையைத் திறக் கட்டும்! - தமிழினம் திரளட்டும்! தனி வழியைக் காணட்டும்!    காணட்டும்! காணட்டும்!

    ---------------- மின்சாரம் அவர்கள் 20-04-2013    ”விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

37 comments:

தமிழ் ஓவியா said...


அந்த ஒரு சொல் - குறள்மொழி


எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது தொல்காப்பியம்.

தொல்காப்பியர் உரைத்த இந்தப் பொருள் என்னும் சொல்லானது கருத்து உணர்வு எனவும் விரியும்.

சொல் என்பது ஓசையை ஒழுங்கு படுத்திய ஒலிவடிவம். அந்த ஒலிவடி வத்தைக் கண்ணுக்குப் புலனாக்குவது தான் வரிவடிவம் அதாவது எழுத்து.

எண்ணங்களை வெளிப்படுத்துவ தற்கு மிகவும் இன்றியமையாதவை சொற்கள்.

ஓர் இனத்தை அடையாளப்படுத்துவ தும் இந்தச் சொற்கள்தாம்.

தமிழ்நாடு என்னும் சொல் பாரதியின் காதுகளில் தேனைப் பாய்ச்சியது. ஒரு சொல்லில் என்ன இருக்கிறது? என்று ஒரு முதலமைச்சர் ஏளனம் செய்தபோது அந்தச் சொல்லில்தான் என் இனத்தின் உயிர் இருக்கிறது! என்று சங்கரலிங்கனார் தன் உயிரை ஈகம் செய்ய வைத்ததும் அந்தச் சொல்தான். இந்த- தமிழ்நாடு என்னும் சொல் தொல்காப்பிய நூற்பாவின்படி ஒரு நாட்டின் பெயர் குறித்த பொருளுடையதாகும்

1965 இல் இந்தத் தமிழ் என்னும் சொல்லுக்குக் கேடு நேரவிடாது தமிழக மாணாக்கரைப் புரட்சித் தீயில் குதிக்கச் செய்தது இந்தி என்னும் சொல்தான். இந்தச் சொல் தொல்காப்பிய நூற் பாவின்படி ஒரு மொழியின் பெயர் குறித்த பொருளுடையதாகும்

இன்று 2013இல் தமிழக மாணாக் கரின் எழுச்சிகண்டு உலகமே உரத்த குரல் கொடுக்க வைத்தவை ஈழம் என்னும் சொல்லும் அந்த ஈழத்தின் விடிவெள்ளி பிரபாகரன் என்னும் சொல்லும் அவன் பிள்ளை பாலச் சந்திரன் என்னும் சொல்லும்தாமே! இந்தச் சொற்கள் தொல்காப்பிய நூற் பாவின்படி ஓர் இனத்தின் போராளி களை அடையாளப்படுத்துகிற பொருளுடையனவாகும்.

மேலே சொல்லப்பட்ட நாடு மொழி இனம் - என்னும் இவை மூன்றும் மாந்தரின் உயிரில் உணர்வில் கலந்தனவாகும். இந்த உணர்வில்லாதார் மாந்தராகார். அஃறிணைப் பிறவிகள் ஆவார். இனி, மான உணர்வினை வெளிப்படுத்திய நிகழ்வுகளுக்குக் காரணமான சொற்களையும் பார்ப் போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வடபுலத்தார் தமிழரைத் தாழ்வாகக் கருதும் போக்கு இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக இருந்ததைச் சிலப்பதிகாரச் செய்தியினாலும் அறியலாம்.

நாங்கள் இல்லாதபோது தமிழர சர்கள் வந்து போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கனகன், விசயன் ஆகிய இருவரும் சொல்லி நகைத்ததைக் கேள்விப்பட்டான் சேரன் செங்குட்டுவன். அந்தச் சொற்கள் தமிழரின் வீரத்திற்கும், மானத்திற்கும் விடுத்த அறைகூவலாகக் கருதினான் சேர மன்னன். அன்றைக்குத் தமிழரில் ஒருவனாகவே செங்குட்டுவனும் வாழ்ந்ததால் ஒரு தமிழ் மன்னனாகப் படையெடுத்துச் சென்று பழித்துப் பேசிய கனக விசயரைத் தோற்கடித்து அவர்கள் தலைகளிலேயே கண்ணகிச் சிலைக்கான கற்களைச் சுமக்கச் செய்து தமிழ்நாட்டுக்கு இழுத்து வந்ததாக இளங்கோ அடிகள் பெருமிதத்துடன் கூறுவார்.

அந்தச் சேரன் செங்குட்டுவனின் வழிவந்தவர்கள்தாம் இன்றைய கேரள மக்கள். எங்கே போயிற்று அந்தத் தமிழ் உணர்வு?என்ன ஆனது தமிழன் என்கிற இன உணர்வு?எப்படி வந்தது இன்றைய பகை உணர்வு? யார் காரணம்? அல்லது எது காரணம்?

வடமொழி என்கிற ஒரு சொல்தான் காரணம். அந்த வடமொழி தமிழோடு கொண்ட கலப்புதான் காரணம். வந்த மொழி ஒன்று உடன் பிறந்தவர்களைப் பிளவுபடுத்தியதோடு தீராப்பகைக்கும் வித்திட்ட கொடுமையைக் கேரள கன்னட தெலுங்கு நாட்டினர் உணர மறுக்கின்றனர். நால்வரையும் ஒன்று படுத்த தந்தை பெரியார் பயன்படுத்திய திராவிடர் என்னும் அந்த ஒற்றைச் சொல் - கடந்த காலத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்றிருந்த அந்தச் சொல் இன்றைக்கு புரியாதவர்களால் புறக்கணிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

தமிழர்கள்தாம் பின்னாளில் தெலுங்கராகவும், கன்னடராகவும், மலையாளிகளாகவும் மாறினார்கள் என்பதையும் பார்ப்பன இனத்திற்கு எதிரான ஒரு சொல்லாக இந்தச் சொல்லை ஏற்கலாம் என்பதையும் எடுத்துக்காட்ட வேறுசொல் தென் படாத காரணத்தால்தான் திராவிடம், திராவிடர் ஆகிய சொற்களைப் பயன்படுத்தியதாகத் தந்தை பெரியார் தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.

அன்றைக்கும் தமிழில் துறைபோகிய அறிஞர் பெருமக்கள் இருந்தார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் இருந்தார்கள். யாரும் மறுக்கவில்லை.திராவிடம் திராவிடர் என்னும் சொற்களால் பெறக்கூடிய முழுப்பொருளைத் தருகின்ற மாற்றுச்சொல்லையும் யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆக திராவிடம் திராவிடர் என்னும் அந்தச் சொற்கள் தொல்காப்பிய நூற்பாவின்படி தமிழரின் வரலாற்றைக் குறிக்கும் பொருளுடைய சொற்களாகும்.

அடுத்து இன்றைய தமிழரின் மான உணர்வினை உரசிப்பார்த்த சொற் களைப் பார்ப்போம். தமிழ்நாட்டி லுள்ள அரசியல் தலைவர்கள் கோமா ளிகள் - இவ்வாறு இலங்கை அமைச்சன் ஒருவன் சொன்னான். அதைக் கேட்ட தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை விடுத்தனர். கண்டன அறிக்கைகளை அவர்களே படித்துக்கொண்டனர். கடமை முடிந்ததென்று அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினர். என்னையா திட் டினான். பொதுவாகத்தானே சொன் னான். என்பது அவர்களின் அமைதிக் குக் காரணமாக இருக்கலாம்.

தனிப்பட்ட வகையில் தாக்குதல் நடந்தால்தான் தமிழனுக்கு மான உணர்வு பொங்கி வரும். பொதுவாகத் தமிழரைச் சாடினால் அதனைத் தமிழன் கண்டுகொள்ளமாட்டான் என்பதற்கு இன்னொரு சான்றும் உண்டு.

தெருவில் போகும் ஒரு தமிழனைப் பார்த்து .. மகனே! என்று அழைத்தால் அவன் உடனே அரிவாளைத் தூக்கிக்கொண்டு நம்மை வெட்ட வருவான். ஆனால்தமிழர்கள் என்போர் பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள்; அடிமைகள்; அவர்கள் கல்வி பெறுவதற்கோ திருமணம் செய்து கொள்வதற்கோ உரிமையற்றவர்கள் என்னும் பொருள்படும்படி சூத்திரன் என்னும் சொல் மனுதர்மத்தில் தமிழரின் பிறப்பை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறதே மெத்தப் படித்த மேதைகளும் அறிவார்களே சட்டம் படித்த தமிழர்களுக்கும் தெரியுமே யாராவது இந்த இழிவை நீக்கப் படுவதற்கான முயற்சிகளில் முனைப்புக் காட்டினார்களா தந்தை பெரியாரைத் தவிர?

பிறவி இழிவினை மானக்கேடாக நினைக்காமல் பழந்தமிழர்கள் வாழ்ந் திருக்கிறார்கள் என்பதைப் புறநானூறு 170 ஆம் பாடலில் உள்ள ஒரு சொல்லால் அறியலாம்.

அந்தப் பாடலில் இழி பிறப்பாளர் என்ற சொல் பயிலப்பட்டிருக்கிறது. அந்தச் சொல் புலையரைக் குறித்தது என்பார் உரையெழுதியோர். அந்தப் பாடலை உறையூர் மருத்துவர் தாமோதரனார் பாடியிருக்கிறார். புலையர்கள் உடல் வலிமை வாய்ந்த செயல்களைச் செய்யக் கூடியவர்கள் என்பதைத் தெரிவிக்க எண்ணிய புலவர் தாமோதரனார் அவர்களை இழிபிறப்பாளர் என்று குறித்ததன் காரணம் - ஒருவரைக் குறிப் பிடும்போது அவருடைய தொழி லையோ அவருக்கு மற்றவர்களால் சூட்டப்பட்ட சிறப்புப் பெயரையோ முன்னொட்டாகக்கொண்டு அழைக் கும் அக்கால வழக்கப்படி சொல்லி யிருக்கலாம். சான்றாக அவர் பெயரே மருத்துவர் என்று உள்ளதையே கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

அந்த வகையில் - புலையர் என்னும் ஒரு குழுவைச் சார்ந்தவரைக் குறிப்பிடும்போது இழிபிறப்பாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். தாமோதரனாரும் அந்த இழி பிறப்பாளர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் ஒருவரது உயர்வும் , தாழ்வும் அவருடைய கல்வியால் பண்பால் ஒழுக்கத்தால் பேசப்படவில்லை என்பதும் ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவன் பிறப்பைக் கொண்டு முடிவு செய்யப்பட்டது என்பதும் அதை நம் தமிழரும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதும்தான். மருத்துவர் தாமோ தரனாரின் கூற்றைப் புறந்தள்ளும் தன்மையில் புறநானூறு 183 ஆம் பாடல் இருக்கிறது. கல்விக்கு உயர்வு தருகின்ற பாடல் அது. இப்பாடலை ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியிருக்கிறான். பெயரிலேயே ஆரிய எதிர்ப்பு காணப்படுகிறது. பாடலின் கருத்திலும் வேத எதிர்ப்பு தெரிகிறது.

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே. இப்பாட்டின் பொருள்: வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத் துள்ளும் - கீழ்க்குலத்துள் உள்ள ஒருவன் கற்பின் - மேற்குலத்தில் உள்ள ஒருவனும் இவன் கீழ்க்குலத்தான் என்று பாது அவனிடத்தே சென்று வழிபடுவான்.

பாடல் எண். 170 தமிழர் இழிபிறப்பாளராகக் கருதப்பட்டதைக் காட்டுகிறது. அடுத்து வந்த பாடல் எண். 183 அந்த இழிபிறப்பாளன் கல்வி பெற்றவனாக ஆகிவிட்டால் பிறப்பால் மேல்நிலையில் உள்ளவனும் கீழான பிறப்புக்காரனுக்குக் கட்டுப்படுவான் என்பதை அறிவிக்கிறது.
இதற்கு நேரான எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் - கல்வி பெற்ற ஒரு சூத்திரன் அதாவது கீழ் ஜாதியில் பிறந்தவன் மாவட்ட ஆட்சியராக வந்தால். அவனிடம் ஒரு எழுத்தர் அவன் மேல் ஜாதியில் பிறந்தவனாக,- பார்ப்பனனாக இருந்தாலும் பணிந்து நிற்கிறானே - இதைச் சொல்லலாம். ஆனால் - ஆட்சியராக இருந்தாலும் பிறப்பால் அவன் சூத்திரனே! அலுவல் காரணமாகப் பணிந்து நின்றாலும் பிறப்பால் அவன் பார்ப்பனனே! இந்து சட்டத்தின் முன்னால் இருவரும் சமம் ஆகமாட்டார்கள்.

பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியால் கீழ்ப்பிறப்பாளன், மேற் பிறப்பாளனுக்குச் சமம் ஆகக் கருதப்படுவான் என்று கூறவில்லை.

திருவள்ளுவர் ஒருவர்தான் பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
பிறப்பொக்கும் என்னும் அந்த வள்ளுவச் சொல்தொல்காப்பிய நூற்பா வின்படி சம உரிமைச் சொல்லாகும்.

அந்தச் சம உரிமை இக்காலத்திலும் மறுக்கப்படும் செய்தியை- 25.3.2013 நாள் வெளியான விடுதலை நாளி தழைப் படித்தபோது பார்ப்பனரின் வல்லாளுமைப் போக்கை அறிய நேர்ந்தது.

திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குப் பணியாட்கள் தேவையென்று அறிவித்திருக்கிறார்கள். வாசல் கூட்டுவது காவல் காப்பது முதலிய வேலைகளுக்கு அகவை வரம்பும் கல்வித் தகுதியும் குறித் திருக்கிறார்கள். ஆனால் கருவறைக்குள் சின்னமணி ஆட்டுவதற்கு மட்டும் அதாவது அருச்சனை செய்வதற்கு மட்டும் பார்ப்பனர்தாம் விண்ணப்பிக்க வேண்டுமாம். வெளியே பெரிய மணி அடிப்பதற்குத் தமிழன் தேவைப் படுகிறான். உள்ளே சின்னமணி ஆட்டுவதற்கு மட்டும் தேவநாதன்கள் தேவைப்படுகிறார்கள்! .நல்லவேளையாக விழித்துக்கொண்ட தமிழர் ஒருவர் அவர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்- மதுரை உயர்நடுவர் மன்றத்தில் முறையிட்டுத் தடை பெற்றிருக்கிறார்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது சூத்திரன் என்னும் சொல்லும் அந்த இழிசொல்லை ஏற்படுத்திய பார்ப்பனன் என்ற சொல் லும் தமிழரைத் தாழ்த்தி வைப்பவை என்பதை உணர்தல் வேண்டும்.

தமிழரின் பிறவி இழிவைத் துடைப்பதற்குத் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்துப் போராடி- அந்த இழிசொல் தன் நெஞ்சில் ஒரு முள்ளாக வருத்துவதாகக் கூறி மறைந்த பெரியார் என்னும் சொல்லை நம் வாழ்நாள் முழுதும் நினைத்தல் வேண்டும். 24.3.2013 இணையதளத்தில் (twitter) பார்ப்பனக் கோமாளி சுப்பிரமணியசாமி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறான்.

துரோணரிடம் படைப்பயிற்சி பெற்ற அருச்சுனன்போல நானும் பார்ப்ப னரைக்கொண்ட படை திரட்டுவேன்.

இந்தத் தமிழ் பொறுக்கிகளை வீழ்த்துவேன். சுப்பிரமணியசாமியின் அந்தச் சுடு சொற்களை அறிந்த பின்னும் அந்த சுவை தமிழ்நாட்டில் நடமாடவிடலாமா!

தமிழ் ஓவியா said...


வலிகளை மறப்பதற்கு சில வழிகள்


மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவ தில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத் துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந் திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள் ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கை களையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதே போல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக் குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர்.

அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இதுபோன்ற நினைவாற்றல் நமக் கில்லையே என்று ஏங்கும் பலர் உள்ளனர்.அதேவேளையில் சிலவற்றை மறக்க முடியாமல் நாள்தோறும் அவதிப்பட்டு உடல் நலனைக் கெடுத்துக் கொள்பவர்களும் துன்பம் தரும் நினைவுகளைக் கொல்ல வழி தெரியாமல் தன்னைத் தானே கொன்று கொண்டவர்களும் உண்டு. நினைவாற்றலைப் போலவே மறதியும் ஒரு நல்ல விஷயம்தான். நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் பெறுவது போல் மறதியையும் பயிற்சியின் மூலம் கைக் கொள்ளலாம்.

நித்தம் நித்தம் துன்பம் தரும் உங்கள் கசப்பான அனுபவங்களை மறந்து புதிய வழியில் செல்வதற்கு சில குறிப்புகள் இதோ!

1. உங்களுக்கு வலியைத் தரும் கடந்தகால நிகழ்வுக்கு தீர்வு கிடைக்காது என்றோ, அந்த பிரச்சனையைச் சந்திக்கப் பயந்தோ நீங்கள் ஓடி ஒளிந்து கொண்டிருப்பீர்கள்!? அதனால் அது உள் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். கடந்த காலத்திலோ இனி வரும் எதிர்காலத்திலோ எந்தப் பிரச்சனையையும் நேரடியாகச் சந்தித்து முடிவு வரைச் சென்று விடுங்கள் அப்போதுதான் அது அடி மனதிலிருந்து அகலும், வலி தீரும்.

2. கடந்த காலத்தில் நடந்தது நடந்ததுதான்,முடிந்தது முடிந்ததுதான். காலத்தைத் திருப்பிச் செலுத்த முடியாது. கதையல்ல அது,நிஜம்! நமக்குத் தேவையான மாதிரி திருத்தி மகிழ்ச்சியான முடிவாகக் கதையை முடிக்க முடியாது. ஆனால் உங்கள் சிந்தனையைத் திருப்பிவிட முடியும். இனி வரும் காலத்தை வேறு வழியில் கொண்டு சென்று பழைய பாதிப்புத் தெரியாமல் புதிய முடிவை எட்டலாம்.

3. வாழ்க்கை முழுதுமே துயரம் நிறைந்ததாக யாருக்குமே இருக்க முடியாது. உங்களுக்கு மகிழ்ச்சி தந்த தருணங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து துன்ப நிகழ்வுகளை கீழே அழுத்தி மூழ்கடியுங்கள்.

4. உங்கள் அடையாளத்தையும் சுய மரியாதையையும் பாதிக்கக் கூடிய பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருக்காதீர்கள். முன்பு நடந்தது மட் டுமே உங்களின் முழுமையான ஆளுமையல்ல. உங்கள் எதிர் காலக் கதைக்கு நீங்கள்தான் ஆசிரியர். அது எப்படி முடியவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி உங்கள் தனித் தன்மையும் மதிப்பும் தெரியும்படி எழுதுங்கள்.

5. எல்லோரும் நினைப்பது போல் பழையனவற்றின் பாதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்பதை உங்கள் எதிர் பார்ப்பை மாற்றி அதற்கேற்ற இலக்கைத் தீர்மானியுங்கள். உங்களுக்கு இன்னும் அதே வலிமையையும் திறமையும் உயர்ந்த பண்புகளும் உள்ளதை நம்புங்கள்.

6. திரைப்படம் போல் மூன்று நிமிடப் பாட்டில் வாழ்க்கை மாறி விடாது, மாற்றத்திற்கும் ஒரு கால இடைவெளி தேவை. அதற்காகக் காத்திருங்கள். பழைய நிகழ்வின் காயம் ஆறும்! இறுக்கம் குறைந்து இணக்கமான சூழல் பிறக்கும்.

- க.அருள்மொழி, குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...


இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!


இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை; தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகாமையிலே கோடியக்கரை என்று ஒரு ஊர் இருக்கிறது ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்குச் சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதம் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையைப் பார்த்ததார் என்று சொல்கிறார்கள்.

திரவுபதி மஞ்சள் குளித்தாளா?

சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்லபுரம்; மகாபலுபுரம் என்று தான் சொல் வழக்கு ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்டநகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளைப் பார்த்தால் அங்கே ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும் அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டுப் பார்த்து பாறையையும் தொட்டுப்பார்த்தது அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.

இது என்ன என்று? கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம்- ஒரு விளக்கம். இவை அத்தனையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக்கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.

(20.5.83 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


3G பற்றி தெரிந்து கொள்ளலாம்

3ஜி , 3ஜி இன்று எந்த TV சேனல் திருப்பினாலும் ஏதேதோ விளம்பரம்ல சொல்லுறாங்களே அப்படின்னு நிறைய பேர் நினைக்கலாம். இப்போ இருக்கும் 2ஜி க்கும், புது ரிலீஸ் ஆன 3ஜி க்கும் என்ன வித்தியாசம் அப்புறம் ஏன் நாம் 3ஜி க்கு மாறணும் பாக்கலாம் வாங்க.
சரி இப்போ ஏன் நாம 3ஜி போறோம்னா நாம இப்போ பயன்படுத்துற 2ஜி ல நமக்கு சில குறைகள் இருக்கு அதாவது உங்களுக்கு அருகில் டவர் இல்லை என்றால் சிக்னல் ப்ராப்ளம் ஆவதுதான்,வாய்ஸ் கிளாரிட்டி,டேட்டா ரேட் போன்றவை கூட.


சரி 3ஜில என்ன இருக்கு?

---> வீடியோ காலிங்
---> மொபைல் டி‌வி
---> மிக வேகமான டேட்டா சர்வீஸ்
---> மிக அதிகமான ஏரியா கவரேஜ்
---> ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
---> வீடியோ கான்பரன்சிங்

இன்னும் நிறைய இருப்பினும் அவை அனைத்தும் டெக்னிகல் தொடர்பானவை. அவற்றுக்கும் கீழே லிங்க் தருகிறேன் அதில் பார்க்கவும்

2ஜி ஐ நாம் GSM(Global System for Mobile Communication ) என்பது போல 3ஜி ஐ IMT2000 என குறிப்பிடலாம். 2000 என்பது அதன் frequency. இதிலும் நிறைய வகைகள் உள்ளன.

3ஜி ஆனது உலகில் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டில் இது டொகோமோ நிறுவனத்தால் அறிமுகபடுத்தப்பட்டது. பின்னர் பல நாடுகள் இதை பயன்படுத்த தொடங்கின. நம் இந்தியாவுக்கு இது 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் BSNL (MTNL). தனியார் நிறுவனம் டொகோமோ 5/11/2010 அன்று 3ஜி சேவை தர ஆரம்பித்தது. இந்தியாவில் 67,718.95 கோடி ரூபாய்க்கு 3ஜி சேவையை அனைத்து நிறுவனங்களும் பெற்று உள்ளன. எந்த நிறுவனம் எவ்வளவு என்று அறிய கிளிக் செய்யவும்

இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இதன் வேகமான டேட்டா ரேட் தான். அதாவது, நிற்கும் அல்லது நடக்கும் நபர்களுக்கு 2 MBPS, வாகனங்களில் செல்பவர்களுக்கு 384 Kbps. இது எல்லா இடங்களிலும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது. இன்னொன்று இதன் செக்யூரிட்டி.

2ஜி யில் மொபைல் மூலம் பிரவுசிங் செய்யும் போது போன் கால் வந்தால் இணைய இணைப்பு கட் ஆகிவிடும். ஏதாவது Download கொடுத்து இருந்தால் அது Failed ஆகி இருக்கும். ஆனால் 3ஜி யில் இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். இதில் GPRS சேவைக்கு EGPRS, EEGPRS போன்ற பல முறைகள் உள்ளன.

இப்போது நாம் பயன்படுத்தும் போன்கள் மூலமாக 3ஜி சேவைகளை பெற முடியாது என்பது இதன் குறையாக இருப்பினும் அடிக்கடி போன் மாற்றுவதால் அடுத்த முறை போன் வாங்கினால் 3ஜி சேவை உள்ளதா எனக் கேட்டு வாங்கவும். சாம்சங், நோக்கியாவில் குறைந்த விலைக்கே 3G போன்கள் கிடைக்கின்றன. அதிலும் முன் காமிரா இருந்தால் மட்டுமே வீடியோ கால் பெற முடியும். (நோக்கியா 2730வில் இது இல்லை) 3ஜி சேவை MODEM பயன்பாடுகளுக்கும் நம் நாட்டில் கிடைப்பது ஒரு நல்ல விஷயம்.

எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே 10எம்‌பி பாடலை நீங்கள் டவுண்லோட் செய்யமுடியும். ஐடியா வில் அபிஷேக் பச்சன் சொல்வது போல இனி பேஸ்புக் பார்க்க loading..... , loading..... என்று நாமும் ஒப்பிக்க தேவை இல்லை.
எல்லாம் சரி இது எல்லார்க்கும் இப்போ கிடைக்கல, தமிழகத்தில் சென்னை, கோவையில் மட்டும் இந்த வசதி கிடைக்கும் (8/05/2011 அன்று).

இந்தியாவில் ஏர்டெல்,வோடாபோன், ரிலையன்ஸ், டாடா, ஏர்செல், ஐடியா, எஸ் டெல் போன்ற நிறுவனங்கள் 3ஜி சேவை தருகின்றன. எல்லா நிறுவனங்களும் எல்லா இடத்திலும் தருவது இல்லை. தமிழகத்துக்கான உரிமை இப்போது (8/05/2011 ) ஏர்டெல்,வோடாபோன், ஏர்செல் போன்றவை பெற்று உள்ளன . வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அந்த மாநிலத்தில் எந்த நிறுவனம் தருகிறது என்பது பார்த்து மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலம் மாறிக்கொள்ளவும். 20-4-2013

தமிழ் ஓவியா said...


எங்கே செல்லுகிறது சமூகம்?


ஒரு மாத விடுமுறை.. தற்காலிக மனைவி.. போகும் போது விவாகரத்து!

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா விலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் பாலியலுக் காக இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்குவது, அந்த காலகட்டத்தில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது விவாகரத்து கொடுத்து விட்டுப் போகும் செயல் சத்தம் போடாமல் அரங்கேறி வருகிறதாம். 17 வயது சிறுமியின் மூலம் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு தாங்கள் மனைவி யாக நடிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

பாலியலுக்கான டூரிசம் இந்த கொடுமைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர் பாலியல் டூரிசம். ஒரு மாதம், 2 மாதம் என மேற் கண்ட நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் பண மூட்டையுடன் இந்தியா வருகின்றனர். இங்கு அவர்கள் விரும்பும் வயதுடைய பெண்களைக தற்காலிக மனைவி களாக்கி பணம் பார்க்கின்றனர் இங்குள்ளவர்கள்.

ஹைதராபாத்தில்தான் அதிகம்

இந்த அக்கிரமச் செயல் ஹைத ராபத்தில்தான் அதிகமாக நடக் கிறதாம். அதிலும் ஏழைகளான, சிறுபான்மையின பெண்களைக் குறி வைத்தே இந்த கொடுமை நடக்கிறது.

வறுமையைப் பயன்படுத்தி...

குறிப்பாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இவர்கள் அடையாளம் கண்டு பணத்தாசை காட்டி வலையில் வீழ்த்துகின்றனர். இந்த செயலில் உள்ளூர் ஏஜென் டுளும் கை கோர்த்து செயல்படு கின்றனர்.

அம்பலப்படுத்திய நவ்ஷீன் தபஸம் 17 வயதான நவ்ஷீன் தபஸம் என்ற சிறுமிதான் இந்த அவல கல் யாணத்தை வெளியில் அம்பலப் படுத்தியுள்ளார். கடந்த மாதம் இவர் ஒரு சூடான் பணக்காரரின் பிடியி லிருந்து தப்பி ஓடி வந்து தனக்கு நேர்ந்த கதியை வெளியில் சொன்னார்.

நான்கு வார மனைவி

கடந்த மாதம்தான் சூடானைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரருக்கு தற்காலிக மனைவியாக அனுப்பப் பட்டார் இந்த சிறுமி. பெற்றோரே வலியுறுத்தி அனுப்பியுள்ளனர். நான்கு வார காலத்திற்கு மனைவியாக இருப்பதற்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 486 பணம் கொடுத்துள்ளனர்.

44 வயது சூடான் பணக்காரர்...

நடந்தது குறித்து காவல்துறையில் தபஸம் கூறுகையில், என்னை ஒரு ஹோட்டலுக்கு எனது அத்தை அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் போல மேலும் சில சிறுமிகள் இருந்தனர். எங்களை சூடானைச் சேர்ந்த 44 வயதான உஸ்மான் இப்ராகிம் முகம்மது என்பவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு சூடானில் கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன ராம்.

கல்யாணம் செய்து வைத்து...

கமிஷன் அடித்து.. பின்னர் அந்த சூடான்காரர் என்னைத் தேர்வு செய்தார். இதையடுத்து எனக்கும், அந்த சூடான்காரருக்கும் ஹைதாரா பாத்தைச் சேர்ந்த ஒரு காஜி திருமணம் செய்து வைத்தார். எனது அத்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். அதில் ரூ. 25,000 எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை அத்தை எனது வீட்டில் கொடுத்தார். காஜிக்கு ரூ. 5,000 கொடுத்தனர்.

அடுத்த நாள் வீட்டுக்கு வந்தார்

திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் சூடான்காரர் எனது வீட்டுக்கு வந்தார். என்னுடன் உறவுக்கு முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை எனது வீட்டார் மிரட்டினர். பிறகு நான் தப்பி வந்து விட்டேன்.

ஆப்பிரிக்கர்களே அதிகம்

தபஸத்தைப் போல பல சிறுமிகளை இப்படிப் பணத்திற்காக தற்காலிக மனைவிகளாக்கி வருவோர் ஹைதராபாத்தில் அதிகம் உள்ளனராம். மேலும் ஆப்பிரிக் கர்களே பெரும்பாலும் அதிக அளவில் பணத்தைக் கொடுத்து தற்காலிக மனைவிகளைப் பெற்று லீவு முடியும் வரை செக்ஸ் நட வடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

மதம், பக்தி என்று எவ்வளவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதே - இவை எல்லாம் இதற்குள் அடங்குமோ!

பாரத புண்ணிய பூமியின் 22 காரட் பண்பாடு இது தானோ!

ஓ, அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி தானே பாரதப் பண்பாடு?

தமிழ் ஓவியா said...


குறும்பா!


கல்லால்

அடித்தான்

ஒருவன்

கடவுளை...!

கடவுளுக்கு

வலிக்கலையாம்...1

ரத்தமும்

சொட்டலையாம்...!

காரணம்..

கடவுளும்

கல்லு!!

*****

கடவுள்

கல்லா

இருந்தாலும்

நல்லா

கல்லா

கட்டுகிறதே!

- கோ. கலியபெருமாள்
மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


தமிழன் தொடுத்த போர்


(தமிழன் தொடுத்த போர் நூலில், 10ஆம் பக்கத்தில் இருப்பது)

சமஸ்கிருதம் எனும் ஆரிய மொழி, அதனைத் தாய்மொழியாகக்கொண்ட ஆரியர், அந்த ஆரியர் போற்றி வளர்த்த வேத புராண இதிகாசக்கலை, அந்தக் கலையிற் பிறந்த ஆரிய வருணாசிரம நாகரிகம் - இவற்றின் கூட்டுத் தொகைதான் தமிழன் சீர்கேடு.

இதை எந்தத் தமிழனும் - அவன் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி - மறந்து விட முடியாது. ஒரு வேளை சூழ்நிலையின் காரணத்தால் மறுக்க நேர்ந்தாலும் மறுக்க முடியாது. தவறி மறுப்பானாயின் அவன் தமிழனாய் இருக்க முடியாது. எதை வேண்டுமானாலும் தமிழன் பொறுத் துக் கொண்டிருப்பான்.

ஆனால் யாரேனும் தன் உயிர் நாடியை அழிக்கத் தொடங்கினால் - தன் தாய் மொழியை வளமிழக்கச் செய்தால் - தமிழுக்கு ஆபத்துச் சூழ்ந்தால் - அதை மட்டும் அவன் பொறுக்க மாட்டான்.

இது அவனுக்கு வரலாறு புகட்டிய பாடம்.

ஆரிய நாகரிகம் தமிழன் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் முதன்முதல் ஆரியத்தின் நோக்கம் தமிழன் மொழி மீதுதான் பாய்ந்தது.

தமிழன் தன் மொழியை இழந்தால் பிறகு தன் கலையை, வாழ்வை, நாக ரிகத்தை, நாட்டை ஆகிய அத்தனை யையும் இழந்து விடுவான் என்பதை நன்குணர்ந்த அந்த நாள் ஆரியம் எடுத்த எடுப்பில் தமிழ் மொழியை வீழ்த்தத்தான் திட்டமிட்டது,
ஆரியச் சூழ்ச்சியின்

விளைவாகத் திருமுதுகுன்றங்கள்
விருத்தாசலங்களாயின.

மறைக்காடுகள் வேதாரண் யங்களாய் உருவெடுத்தன.

திருக்கழுக்குன்றங்களும் திருவானைக்காக்களும், பஷி தீர்த்தங்களாய் ஜம்பு கேஸ்வரங்களாய் மாற்று வடிவம் அடைந்தன.
நெடுஞ்செழியன் என்றும்

செங்குட்டுவன் என்றும்.

இளமுருகன், இளவழகன், இளஞ் செழியன், இளவெயினி, இராவணன் (இரா. வண்ணன் - கருப்பு நிறத்தான்) என்றும் கண்ணகி காவற் பெண்டு காக்கை பாடினியார் ஒக்கூர் மாசாத் தியார் வெண்ணிக்குயத்தியார் என்றும், கீரன் இளங்கீரன் நச்சினார்க்கினியன் மாறன் பொறையன் ஒரே ருழவன் பிசிராந்தை என்றும், பாசி ஓரி ஆய் அதியமான்

கோச்செங்கணான் கோவூர் கிழான் கரிகாலன் என்றும்,

மாவளவன் மலையமான் மதியழகன் மணிமொழியன் மணக்குடவன் என்றெல்லாம் இனிய அழகிய தூய தண்தமிழ்ப் பெயர் வாய்ந்திருந்த தமிழர்.

ஆரியருடைய மயக்குரையால் ஏமாந்து, அவர்தம் மொழிவழிச் சென்று, அவர் இசைத்ததை இன சத்துத் தம் பெயரைச் சடாசூடி ரரூபன் என்றும்,
சஹஸ்ரநாமம் என்றும்,

ஸ்வயம்பு என்றும்

லஷ்மிகாந்தன் என்றும்

- க.பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


தூக்கமும் சோர்வின்மையும்


சரியான தூக்கமில்லாதவர்கள், சோர்வுடனும், வேலையில் ஆர்வம் இல்லாமலும், அலுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கமுடியும். ஆனால் விஞ்ஞானிகள், சில இரவில் 4 அல்லது 5 மணிநேரமே தூங்குபவர்கள், உடல் நலத்துடனும், சோர்வு இல்லாமலும், எரிச்சல்பட்டு செயல்படாமலும், நம்பிக்கையாளர்களாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும் பருமன் இல்லாத மனிதர்களைக் கண்டு ஆய்வு நடத்தினர். இப்படிப்பட்ட மனிதர்கள், தேனீர், காப்பி போன்றவற்றை குடிக்காமலும், ஒரு நாளில் இடை சிறு தூக்கமில்லாமலும், சலைக்காமல் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்பதை, அமெரிக்க நாட்டு கலிபோர்னியா விஞ்ஞானிகள், கலிபோர்னியாவிலுள்ள ஒரு குடும்பத்தில் உள்ளவரிடம் ஆய்வு செய்தனர். டி.என்.ஏ. சோதனையில் இத்தகையவரிடம் அவர்களின் மரபணுவில் சிறுமாற்றம் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இல்லாத வகையில் உள்ளதைக் கண்டனர். இப்படி குறைந்த தூக்கத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர் 100க்கு 1 இருந்து 3 பேராக உள்ளனர். இவர்கள் டி.என்.ஏ. சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு மூலம் குறைந்த தூக்கமுள்ளவர்கள் மேலும் சில மணி நேரம் தூங்குவதற்கு, உடல் பாதிப்பு ஏதுமில்லாத மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.
- மு.வி. சோமசுந்தரம்

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருதளித்து தமிழர் தலைவர் எழுச்சியுரை


எங்கேயெல்லாம் இருட்டு இருக்கிறதோ அங்கேயெல்லாம்

வெளிச்சம் பாய்ச்சுவதுதான் பெரியாரின் தொண்டு


இடமிருந்து: வழக்கறிஞர் அ. அருள்மொழி, கு. மகாலிங்கம், தொழிலதிபர் வீ.கே.டி. பாலன், என். பழனி, பல்லடம் மாணிக்கம், ஆசிரியர் கி.வீரமணி, ஞானாலயா வி. கிருஷ்ணமூர்த்தி, டோரதி, நம்மாழ்வார் (அமர்ந்திருப்பவர்).

சென்னை, ஏப்.20- எங்கேயெல் லாம் இருட்டு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் வெளிச்சம் பாய்ச்சுவதுதான் பெரியார் தொண்டு என்று சென்னை புத்தக சங்கமத்தின் முதல் நாளில், புத்தகர் - விருதளித்து, தமிழர் தலைவர் உரையாற்றினார்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமும், சூக்ஷகூ ஐனேயை நிறுவனமும் இணைந்து நடத்தும், சென்னை புத்தகச் சங்கமம் -18.04.2013 அன்று தொடக்க விழா நடைபெற்றதை அடுத்து நேற்று (19.4.2013) புத்தக கண் காட்சி முதல் நாள் கோலாகலமாக நடைபெற்றது.

நாகரிகக் கோமாளிகளின் நகைச்சுவை கலாட்டா

மாலை நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சியாக, புதுகை பூபாளம் குழுவினரின், நாகரிகக் கோமாளி நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றாட நாட்டு நடப்புகளை நகைச்சுவை வெடிகளுடன் கருத்தையும், செய்கை யும் சேர்த்து - இடைவிடாமல் வெடித்துக் கொண்டே இருந்தனர். அமெரிக்காவில் மின்சாரத்தைக் கண்டுபிடித்த எடிசன் நினைவைப் போற்றும் வண்ணம் அவர் பிறந்த நாளில் மின்சாரத்தை நிறுத்தி, எடிசனின் அருமையை உணரச் செய்வார்கள் என்ற கருத்தைக் கூறி - அடுத்த நொடியே தமிழ்நாட்டின் நிலையை நினைவுபடுத்தி, நாளெல் லாம் பொழுதெல்லாம் இங்கு எடிசனின் அருமையை உணர்ந்து கொண்டிருக் கிறோம் என்பதைப் போல, உணவில் ஜாதி, தொலைக் காட்சி விளம்பரங்களின் பொறுப் பற்ற தன்மை என்று எதையும் விட்டு வைக்காமல் சரவெடிகளாய் வெடித்து தள்ளி விட்டனர். பார்வையாளர்கள் தான் சிரித்து சிரித்து திணறிப் போயினர்.

முக்கிய பிரமுகர்கள் வருகை

முன்னதாக, பேரா. நாகநாதன் அவர்கள் சென்னை புத்தக சங்கமத் திற்கு வருகை தந்திருந்தார். அவரை எமரால்டு ஒளிவண்ணன், சிக்ஸ்த் சென்ஸ் - புகழேந்தி ஆகியோர் வரவேற்று, புத்தக கண் காட்சி பற்றிய விளக்கங்களை அளித்து சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து, தினத்தந்தி நாளிதழின் பொது மேலாளர் டாக்டர் தனஞ்செயன் வருகை தந்திருந்தார். அவரை கழக பொதுச் செயலாளர், வீ. அன்புராஜ் மற்றும் சென்னை புத்தக சங்கமத்தின் மற்ற ஒருங்கிணைப்பாளர்களும் வர வேற்று சிறப்பித்தனர். அவர் புத்தக கண்காட்சி, பெரியார் காட்சியகம் ஆகிய வற்றை முழுமையாக சுற்றிப் பார்த்து விட்டு, பெரியார் திடலுக்கு நீண்ட காலம் கழித்து வந்திருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி யாக இருக்கிறது. ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று மனம் திறந்து பாராட்டு தெரிவித்து விடை பெற்றுக் கொண்டார்.

புத்தகர் விருது

சென்னை புத்தகச் சங்கமத்தில் இது வரையிலும் இல்லாத ஒரு புது முயற்சியாக, புத்தகத்தின் அருமை கருதி அதை சேக ரித்து வைத்து சமுதாயத்தின் பயன்பாட் டுக்காக அடைகாத்து வரும் பெருமக் களுக்கு புத்தகர் - என்று விருது அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பணிகளை பிரின்சு என்னாரெசு பெரியா ருடன், இசையின்பன், சரவணா ராஜேந் திரன் ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.

தமிழ் ஓவியா said...

அந்த பெரு மக்களான ஈஸ்வரி வாடகை நூலகம் - என் பழனி, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நூல் பாதுகாவலர் - நம்மாழ்வார் (எ) தாமஸ், கு. மகா லிங்கம், பல்லடம் சாமி. மாணிக்கம் ஆகிய அய்வரையும் பொதுச் செய லாளர் வீ. அன்புராஜ் அன்போடு வரவேற்று, பெரியார் காட்சியகத்தில் அவர்களுடன் அளவளாவி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு அறிமுகம் செய்வித்து, அவர்களுக்கு சிற்றுண் டியும் அளித்து உபசரித்து சிறப்பு செய்தார். இந்தப் பணிகளை சென்னை புத்தக சங்கமத்தின் ஒருங்கிணைப்பா ளர்கள் ஒழுங்கு செய்தனர். இந்த கிளர்ச்சியூட்டும் நிகழ்வை பெரியார் வலைக்காட்சியினர் ஒளிப்பதிவு செய்தனர்.

கருத்தரங்கம்

தொடர்ந்து, சென்னை புத்தக கண் காட்சியின் கருத்தரங்கமும், புத்தகர் விருது வழங்கும் நிகழ்ச்சியும் தொடங் கியது. விழிகள் பதிப்பகம் வேணு கோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். மதுரை டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் தலைமையேற்று சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, புத்தகர் விருது பெறும் பெருமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்வினை பிரின்சு என்னா ரெசு பெரியார் ஒழுங்கு செய்தார். அய்வரின் சாதனைகளையும் அவர் பட்டிய லிட்டார். பார்வையாளர்கள் வியந்து கையொலி எழுப்பி அதை அங்கீகரித் தனர். தொடர்ந்து, தமிழர் தலைவர் அய்வருக்கும் பயனாடை அணிவித்து, இயக்க நூல்கள் நினைவுப் பரிசு ஆகியவற்றை கொடுத்து சிறப்பித் தார். இந்த நிகழ்வு படக்காட்சி மூலமும் காட்டப்பட்டது. இப்பணி களை பெரியார் வலைக்காட்சித் தோழர்கள் ஒருங்கிணைந்தனர்.

தமிழ் ஓவியா said...

எங்கும் கிடைக்காத அங்கீகாரம்

தொடர்ந்து, புத்தகர் விருது பெற்றவர்களின் சார்பாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். அவர் தனது உரையில்:- தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற புத்தகக் கண் காட்சிகள் எதிலும் நடைபெறாத புதுமை இது. பதிப்பாளர்கள், எழுத் தாளர்கள், ஆகியவர்கள்தான் இது வரை பாராட்டப்பட்டிருக் கிறார்கள். இங்கு தான் பெரியார் திடல்தான், புத்தகத்தை சேகரித்து வைத்து சமு தாயத்திற்கு பயன்பட வைத்திருக்கும் எங்களை அழைத்து சிறப்பு செய்திருக் கின்றனர். அதற்கு தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்களின் அடையாளம் பெரியார் திடல்

அவரைத் தொடர்ந்து ஏற்புரை வழங்கிய பல்லடம் மாணிக்கம், யார் தருவார் இந்த சிம்மாசனம் என்பதை போல, இந்த மாபெரும் நிகழ்வில், ஊரைக் கூட்டி முழுமையான அர்ப் பணிப்போடு இந்த சிறப்பை எங் களுக்குச் செய்திருக்கிறார்கள். அதுவும், பெரியாரை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் - இதையே தன் வாழ்நாள் பணியாக செய்து கொண்டு இருக்கும் ஆசிரியப் பெருந் தகையின் கைகளால் இந்த விருதைப் பெற்றதை பெருமையாக கருதுகிறேன் என்று பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், பெரியார் திடல் என்பது வெறும் கட்டடம் அல்ல. தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது பெரியார் திடலில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று உணர்ச்சி மேலிட கூறினார். மேலும், அவர் எங்களுக்கு வயது 70க்கும் மேலாகிறது. இந்தப் பணி எங்களோடு முடிந்து விடக் கூடாது. இளைய தலைமுறையினர் இதை எடுத்துச் செய்வார்களா? - என்று ஏக்கத்தோடு தனது உரையை நிறைவு செய்தார்.

தமிழர் தலைவரின் பாராட்டுரை

அவரைத் தொடர்ந்து, விருது பெற்றவர்களைப், பாராட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

தனது பேச்சின் தொடக்கத்திலேயே பல்லடம் மாணிக்கத்தின் ஏக்கத்திற்கு பதில் கூறும் வகையில், புத்தக சேகரிப்புப் பணிகளை இன்றைய தலைமுறையினர் எடுத்துச் செய்வார் களா என்று ஏக்கத்தோடு பல்லடம் மாணிக்கம் பேசியதை சுட்டிக் காட்டி, இந்த மேடையும் புத்தகர் - என்ற புதிய சொல்லாக்கமும், புத்தக சங்கம மும், புத்தகர் - விருதும், அனைத்தும் செய்தது இளைய தலைமுறையினர் தான். ஒளிவண்ணன், புகழேந்தி, வீ.அன்புராஜ் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு பாடுபட்டு கொண்டி ருக்கும் அனைவரும் இளைஞர்கள் தான். ஆகவே, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் பெற்றிருக்கும் இளைஞர்கள் சரியான வழியில்தான் செல்கின்றனர். ஆகவே, நம்பிக்கையை தளர விடாதீர்கள் என்று பலத்த கைதட்டல்களுக் கிடையே பல்லடம் மாணிக்கத்திற்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வெளி நாடுகளிலும் இதே போல பழைய புத்தகத்தை மிக அருமையாக சேக ரித்து வைத்திருந்ததையும், அங்கு பழைய புத்தகங்கள், புதிய புத்தகங் களை காட்டிலும், விலை அதிகம் என்பதையும், இங்குதான் பழைய புத்தகம் என்றால் மலிவானது என்னும் தவறான கருத்து இருந்து வருவதையும் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

மேலும் அவர், தமிழனுக்கு ஆவணப்படுத்தக் கூடிய அறிவு குறைவு. ஆகவே, அது சரி செய்யப்பட வேண்டும் என்று கூறிவிட்டு, புத்தகர் விருது பெற்ற பெருமக்களை சுட்டிக் காட்டி, விருது பெற்றவர்கள் எங்களை பாராட்டி பேசினார்கள். ஆனால், எங்களைப் பொறுத்த வரையில், தமிழர்களில் இப்படிப்பட்ட தொண் டறச் செம்மல்கள் இருக்கின்றார்கள் என்று காட்டுவதுதான். இதில் எங்களுடைய சுயநலமும் அடங்கி யிருக்கிறது என்று தெளிவுபடுத்தினார். தொடர்ந்து, அதுமட்டுமல்ல, எங்கேயெல்லாம் இருட்டு இருக்கிற தோ, அங்கே யெல்லாம் வெளிச்சம் பாய்ச்சுவதான் பெரியாரின் தொண்டு. அதைத்தான் நாங்கள் செய்திருக் கிறோம். ஆகவே, நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து தொண்டறம் ஆற்ற வேண்டும் என்று தமதுரையை நிறைவு செய்தார்.

நாகரிக கோமாளியர்

முன்னதாக புதுகை பூபாளம் - குழுவினருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தும், இயக்க நூல்கள் அளித்தும் நினைவுப் பரிசு கொடுத்தும் அவர்களது பணிகளை பாராட்டி சிறப்பித்தார். அவர் தமது பாராட்டுரையிலும் கூட பிரகதிஸ், செந்தில் ஆகியோர் பற்றிய தன்னு டைய நினை வலைகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

குறைகிறதா வாசிப்பு?

கலைநிகழ்ச்சி, புத்தகர், விருந் தளிப்பு, பாராட்டுரை ஆகியவற் றுக்குப் பிறகு கருத்தரங்கம் தொடங் கியது. திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளரும் வழக்குரைஞருமான அருள்மொழி குறைகிறதா வாசிப்பு? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில்:- புத்தகம் படிப்பது எப்படி? பிடிப்பது எப்படி? என்பது பற்றியும், புத்தகத்தை படிப் பதும் - இணையதளங்களில் படிப்ப தும் ஒன்றா என்ற கேள்வியை எழுப்பி, பதிலும் கூறினார். மேலும் அவர் பொதுவாக தனி மனித முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர், எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்பதும், ஞாலம் கருதினும் கூடும், காலத்தால் கருதிச் செயின் என்பது நமது இலக்கியமான திருக்குறளில் இருக் கிறது. எதற்காக இத்தனை சுயமுன் னேற்ற புத்தகங்கள். அவை அனைத் தும் சுயநலத்திற்காக மட்டுமே வாசிக் கப்படுகின்றன. உணர்வு பூர்வமாக அல்ல, என்று கூறிவிட்டு, நான் ஒரு புத்தகம் படித்தேன் முன் பிருந்தததைவிட மனித நேயனாக மாறினேன். முன்பிருந்ததைவிட என் அறிவில் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் படியாக புத்தகங்கள் இருக்க வேண்டும். என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பட்டிய லிட்டு விட்டு, புத்தக வாசிப்பு குறைந்து தான் இருக்கிறது. ஆகவே இதுபோன்ற சங்கமங்கள் பெருகவேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

சென்னை சங்கமத்தின் முதல் நாள் பரிசு

கருத்தரங்கம் நிறைவு பெற்ற பிறகு முதல் நாள் சென்னை புத்தகச் சங்கமத் தில் புத்தகங்கள் வாங்கியவருக்காக ஐ ஞடீனு - பரிசு பெறுபவரை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்வு தொடங் கியது. உண்டியல் நன்கு குலுக்கப்பட்டு பிறகு திறக்கப்பட்டது. ஒளிவண்ணன், புகழேந்தி, பிரின்சு என்னாரெசு பெரி யார், வழக்கறிஞர் அ.அருள் மொழி, புத்தகர் விருது பெற்ற பல்லடம் மாணிக்கம், மகாலிங்கம் மற்றும் பொது மக்களின் முன்னிலையில், வி.கே.டி. பாலன் பரிசுக்கான சீட்டை எடுத்துக் கொடுத்தார். ஒளிவண்ணன் அதைப் பெற்று பரிசு பெற்றவர் சென்னையைச் சேர்ந்த அமிர்தவர்சினி எண்: 146 என்று அறி வித்தார். பரிசு பெற்றவர் அரங்கத்தில் இல்லாததால், அதில் கண்டுள்ள தொடர்பு எண் மூலம் அப்பரிசு அவருக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மேனாள் துணை வேந்தர் அறவாணன், தாயம்மாள், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்யநாராயண சிங், பொருளாளர் மனோகரன், பூமி நாதன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தளபதி, ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, வெற்றிச் செல்வி மற்றும் பதிப்பாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்து கருத்துச் செறிவுடன் கலைந்து சென்றனர்.

தமிழ் ஓவியா said...


2ஜி அலைவரிசை தன்னிச்சையாக முடிவு எடுக்கவில்லை


பிரதமர், நிதி அமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுத்தேன்

ஆ.ராசா பேட்டி

ஆலந்தூர், ஏப்.20- 2ஜி ஸ்பெக்ட் ரம் விவ காரத்தில், பிரதமர் மற்றும் நிதி அமைச்ச ருடன் கலந்து பேசி முடிவு எடுத்தேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசா ரணை நடத்திய நாடா ளுமன்ற கூட்டு குழுவின் வரைவு அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, அதன் விவரங் கள் நேற்று முன்தினம் வெளியாகியது.

அதில், தொலைத் தொடர்புத் துறை முன் னாள் அமைச்சர் ஆ.ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை தவறாக வழி நடத்தினார் என்று குற்றம் சாட்டப் பட்டு உள்ளது.

இந்த குற்றச்சாட் டுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்து இருக்கிறார். நேற்று சென்னை வந்த அவர் விமான நிலையத் தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் நான் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வில்லை. பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசிதான் முடிவு களை எடுத்து இருக் கிறேன். அமைச்சர் பதவி யில் இருந்து விலகிய பின்னர் இதை நான் அனைவரிடமும் விளக்க மாக தெரிவித்து இருக்கிறேன். நான் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத் திலும் இதே விவா தத்தை எடுத்துக் கூறினேன். குற்றச்சாட் டுகள் பதிவு செய்யப் பட்ட போதும், இதை யேதான் தெரிவித்து இருந்தேன். இதில் என் னுடைய நிலை மிகத் தெளிவானது. என்னு டைய நடவடிக்கையால் நாட்டில் செல்போன் எண்ணிக்கை அதிகரித்த துடன் கட்டணங்களும் குறைந்தன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எனவே தனிப்பட்ட முறையில் என் மீது தவறு என்று கூறுவது தவறு. என்னுடைய கருத்துகளை விளக்கி, நூறு பக்கங்களைக் கொண்ட விவரமான அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு திங்கட் கிழமை (22-ந்தேதி) அனுப்பி வைக்க இருக் கிறேன். அந்த அறிக் கையை பரிசீலித்த பின்னர், கூட்டு குழுவில் இருந்து எனக்கு அழைப்பு வரும் என்று நம்புகிறேன். கூட்டு குழுவின் அறிக்கையை நான் இன்னும் படித் துப் பார்க்கவில்லை. படித்த பின்னர் அது பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.

மொத்தத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகா ரமே சட்டப்படியானது அல்ல. தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையும் உச்சநீதிமன்றத்தையும் நான் மதிக்கிறேன். என் றாலும் இதில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து களும் இயற்கை நீதியை மீறுவதாக உள்ளது. வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இதில் நான் நிரபராதி, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.

வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க. எம்.பி. இளங் கோவன், ஆ.ராசாவுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாக கூறினார். அவர் (ஆ.ராசா) மீது குற்றம் சுமத்துவதாக இருந்தால், அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர் தரப்பு விளக்கத்தை கேட்டு அறிக்கை தயா ரித்து இருக்க வேண்டும்....ஆனால், ஆ.ராசாவை அழைக்க கூட்டு குழு விரும்பவில்லை. எனவே இந்த அறிக்கையை சரியானது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆ.ராசா குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்காத நிலையில் இந்த அறிக்கையே வீணான ஒன்று. இருப்பினும் இது வரைவு அறிக் கைதான். இறுதி அறிக்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் விவகார விசாரணை யில், நாடாளுமன்ற கூட்டு குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பாக வரைவு அறிக்கை கசியவிடப்பட்டு இருப் பது, நாடாளுமன்ற சொத்துக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான நம்பிக்கை துரோகம் என்று, பா.ஜனதா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. அது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது- நாடாளுமன்ற கூட்டு குழு வரைவு அறிக்கை, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை காப்பாற்ற முயற்சிக்கும் காங்கிரசின் ஆவன அறிக்கை போன்று இருக்கிறது. இன்று (அதாவது நேற்று) தான் உறுப் பினர்களுக்கு அறிக்கை வழங்கப் பட்டு உள்ளது. அதை நான் இன்னும் முழுமையாகப் படித்துப் பார்க்க வில்லை.

வரைவு அறிக்கை குறித்து கூட்டு குழு கூட்டத்தில் விவாதித்து, அதற் கான திருத்தங்கள் தாக்கல் செய்யப் பட்டு இறுதி அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆனால், கூட்டத்தில் விவாதத்திற்கு வருமுன்பே ஊடகங் களில் அறிக்கை வெளியாகி இருப்பது வியப்பையும் வருத்தத்தையும் அளிக் கிறது. இது மிகவும் கெட்ட வாய்ப் பானது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். வருகிற 25-ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் கூட்டு குழு கூட்டத்தில், எங்கள் கண்டனத் தையும் எதிர்ப்பையும் வலுவாகவும், உறுதியாகவும் பதிவு செய்வோம்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

தமிழ் ஓவியா said...

கறுப்பு ஆடுகள்

பாரதீய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி நல்ல தமாஷ் பேர்வழி போலிருக்கிறது. அவர் சொல்கிறார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வரும் என்று கூறியுள்ளார். காவி தீவிரவாத எதிர்ப்புச் சட்டமா? காவி தீவிரவாதம் என்று உள்துறை அமைச் சராகவிருந்த ப. சிதம்பரமும் கூறினார். இப்பொழுது உள்துறை அமைச்சராக உள்ள சுசில்குமார் ஷிண்டேயும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிஜேபி செய்தித் தொடர்பாளர் தீவிரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளாரே - எந்தப் பொருளில்? அவர்களை எதிர்த்து அவர்களே சட்டம் கொண்டு வருவார்களோ!

வைத்தியரே வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது போல் அல்லவா இருக்கிறது!

இதில் உள்ள வேடிக்கை விநோதம் என்னவென் றால் முக்தார் அப்பாஸ் ஒரு முசுலிம் ஆவார். கறுப்பு ஆடுகள் எங்கு தானில்லை?

தமிழ் ஓவியா said...

எங்கே போகிறது பகுஜன்?

15ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டன. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 36 பேர்களில் 18 பேர் பார்ப்பனர்களாம்.

கன்சிராம் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கியதன் நோக்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும்தான்; இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற நோக்கில்தான் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். அந்த அடிப்படையில்தான் மாயாவதி, உ.பி. முதல்வரும் ஆனார். ஆனால் இப்பொழுது என்னடா என்றால் 50 விழுக்காடு இடங்கள் பார்ப்பனர்களுக்காம்! நாடு எங்கே போகிறது? பதவி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே, அது இதுதானோ!

தமிழ் ஓவியா said...

குழந்தைகள் மாயம் அரசு மருத்துவமனைகளில் பிரசவ விடுதிகளில் குழந்தைகள்

காணாமல் போகும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. திருச்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டே நாளான குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முடிவுதான் என்ன? கண்காணிப்புக் கேமரா பொருத்தக் கூடாதா? பொருத்தினாலும் அது சரிவர இயங்க வேண்டும். வெளியாட்கள் மருத்துவமனை களில் நடமாடுவது தடுக்கப்பட வேண்டும்.

பிரசவ வேதனை ஒருபுறம், அதைக்கூட தாய் பொறுத்துக் கொள்வார். குழந்தையையே பறி கொடுத்தால்...?

தமிழ் ஓவியா said...

தொலைத்த இடத்தில் தேடு!

காட்டுமன்னார் கோவிலையடுத்த கோட்பாடி செய் என்னும் கிராமம். 50 வீடுகள் உள்ளன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 10 பேர் மரணம். தொடர் மரணத்தால் மக்கள் பீதி அடைந்து வழக்கம் போல சாமியார்களைத் தேடிச் சென்றுள்ளனர். விடிய விடிய யாகம் நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும் வேர்ப்பிடிக்கவில்லையென்றால் கொடுமைதானே!

தொடர் மரணம் என்றால் மருத்துவர் குழாம் அங்கு சென்றிருக்க வேண்டாமா? காரணத்தைக் (நுவடிடடிபல) கண்டு பிடிக்க வேண்டாமா? அதைவிட்டு விட்டு யாகம் நடத்தினால் நோய் தீருமா? மரணம் குறையுமா? ஒரு பொருளைத் தொலைத்த இடத்தில் தேடு என்றார் தந்தை பெரியார். நோய்க்குக் காரணத்தைக் கண்டுபிடிக்காமல் தீ வளர்த்து உணவுப் பொருள்களைக் கொட்டி - பார்ப்பானுக்கும் கொட்டிக் கொடுப்பதால் என்ன பயன்? உயிருக்கு உயிரும் போய், பொருளுக்கும் கேடு - தேவைதானா?

தமிழ் ஓவியா said...

தொலைத்த இடத்தில் தேடு!

காட்டுமன்னார் கோவிலையடுத்த கோட்பாடி செய் என்னும் கிராமம். 50 வீடுகள் உள்ளன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 10 பேர் மரணம். தொடர் மரணத்தால் மக்கள் பீதி அடைந்து வழக்கம் போல சாமியார்களைத் தேடிச் சென்றுள்ளனர். விடிய விடிய யாகம் நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும் வேர்ப்பிடிக்கவில்லையென்றால் கொடுமைதானே!

தொடர் மரணம் என்றால் மருத்துவர் குழாம் அங்கு சென்றிருக்க வேண்டாமா? காரணத்தைக் (நுவடிடடிபல) கண்டு பிடிக்க வேண்டாமா? அதைவிட்டு விட்டு யாகம் நடத்தினால் நோய் தீருமா? மரணம் குறையுமா? ஒரு பொருளைத் தொலைத்த இடத்தில் தேடு என்றார் தந்தை பெரியார். நோய்க்குக் காரணத்தைக் கண்டுபிடிக்காமல் தீ வளர்த்து உணவுப் பொருள்களைக் கொட்டி - பார்ப்பானுக்கும் கொட்டிக் கொடுப்பதால் என்ன பயன்? உயிருக்கு உயிரும் போய், பொருளுக்கும் கேடு - தேவைதானா?

தமிழ் ஓவியா said...


மோடியின் தந்திரம்


எப்படியும் இந்தியாவின் பிரதமராகித் தீருவது எனும் முனைப்பில் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி ஒற்றைக் காலில் நிற்கிறார். அதற்காகப் பல்வேறு திட்டங்களைப் பின்னிக் கொண்டு இருக்கிறார். இணைய தளத்தின் மூலம் தன் பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

மக்கள் தொகையில் 50 விழுக்காடு இருக்கும் பெண்களின் வாக்குகளைப் பறித்துப் பையில் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கணக்கில் பெண்கள்மீது தமக்கு அக்கறை அதிகம் இருப்பதாகப் பேச்சுக் கச்சேரி நடத்துகிறார் (அவர் ஏற்றுக் கொண்டு இருக்கும் இந்துத்துவா கொள்கையில் பெண்கள் என்றாலே ஓர் உயிரே அல்ல - அது ஒரு ஜடப் பிண்டம் என்பதுதானே நிலைப்பாடு?)

முசுலிம்களை ஏமாற்றுவதற்காக விழா ஒன்றை ஏற்பாடு செய்வார்; அவர்களைக் கட்டி அணைத்துப் பாச மழை பொழிவார்; ஆனால் சட்டப் பேரவையில் ஒரே ஒரு முசுலீமுக்குக்கூட போட்டியிட வாய்ப்பு அளிக்க மாட்டார். முசுலிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சரவை மோடியினுடையது.

குஜராத் சட்டப் பேரவையில் இரு பிஜேபி உறுப் பினர்கள் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்தபோதே தங்கள் கைப்பேசிகளில் ஆபாச காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். கருநாடகத்தில் பிஜேபி உறுப்பினர் களும், அமைச்சர்களும் அவ்வாறு பார்த்ததாக குற்றச்சாற்று எழுந்து அமைச்சர் பதவியை விட்டு விலகும்படி நேர்ந்தது.

குஜராத்தில் மோடி என்ன செய்தார்? நிபுணர்களைக் கொண்டு சோதித்துப் பார்த்ததாகவும், அவர்கள் கைப் பேசியில் (i pad) ஆபாசப் படங்கள் ஏதுமில்லை என்று தடவியல் குழுமத்திலிருந்து ஓர் அறிக்கையை பெற்று பிரச்சினையின் கழுத்தை முறித்து விட்டார்.

அதே மோடி தனது மாநிலத்தில் தனக்குப் பிடிக்காத பிஜேபி முன்னாள் மாநில செயலாளர் ஜோஷி என்பவர் தன்னை பிரம்மச்சாரி எனக் காட்டிக் கொண்டே வேலைக்கார பெண்ணுடன் இணைந்திருப்பது போன்ற குறுந்தகடு ஒன்று புழக்கத்தில் விடப்பட்டது.

ஜோஷியைப் பிடிக்காத நரேந்திரமோடிதான், ஜோஷியை வெளியேற்ற செய்த ஏற்பாடுதான் இது என்று பிஜேபியினரே கூறியுள்ளனர். அதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமாகும்.

இப்பொழுது அதே பாணியில் தனது அமைச்சர வையில் சக அமைச்சராகவிருந்த பெண் அமைச்சர் மாயாகோட்னானி என்பவரைப் பலி கடாவாக்க முடிவு செய்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடி தலைமையில் 2002 பிப்ரவரியில் கட்டவிழ்த்து விடப்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கு எதிரான வன்முறையில் நரோடா பாட்டியா எனும் இடத்தில் 97 முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களுள் 35 பேர் குழந்தைகள்! இந்தக் கொடிய கலவரத்தின் பின்னணியில் இருந்தவர் மாயாகோட்னானி, இவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடக்கத்தில் குற்றப் பத்திரிக்கையில் இவர் பெயரே கிடையாது. உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.

அந்த விசாரணையின் அடிப்படையில்தான் முன்னாள் பெண் அமைச்சருக்கு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேர்களுக்கு 24 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

கொஞ்ச காலம் தலைமறைவாகி பிறகு நீதிமன்றத்தில் தோன்றினார் மாயாகோட்னானி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதமராக வரக் கூடியவர் சந்தேகத் துக்கு அப்பாற்பட்ட மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்து பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் வாயிலாக வெளிவந்த நிலையில், தான் சிறுபான்மையின மக்களுக்கு எதிரியல்ல என்று காட்டிக் கொள்வதற்காக மோடி ஒரு மோடி மஸ்தான் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

சிறுபான்மையினர் 97 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட மாயாகோட்னானிக்கு 28 ஆண்டுகள் தண்டனை விதித்தால் மட்டும் போதாது, தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று மேல் முறையீடு செய்யப் போகிறாராம். அதேபோல 24 ஆண்டுத் தண்டனை விதிக்கப்பட்ட 22 பேர்களுக்கு 30 ஆண்டுகள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்ட 29 பேர்களை எதிர்த்தும் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் எந்த மாயாகோட்னானியின் பெயரைக் குற்றப் பத்திரிகையிலேயே சேர்க்காமல் தப்பிக்க விடப் பார்த்தாரோ, அந்த அம்மையாருக்கு இப்போது தூக்குத் தண்டனை கிடைக்க மேல் முறையீடு செய்யப் போகிறாராம் முதல் அமைச்சர் மோடி. சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்ட வழக்கில், தாம் அக்கறை காட்டுவதாகக் காட்டிக் கொள்ளத்தான் இந்தச் சித்து வேலை!

தான் மட்டும்தான் அதி புத்திசாலி என்று நினைத்துக் காய்களை நகர்த்தப் பார்க்கிறார். இது அவருடைய சந்தர்ப்பவாத நரித் தந்திரத்தைத்தான் காட்டும் - மக்கள் ஏமாளிகளல்ல - எதிர் விளைவைச் சந்திக்கத் தயாரா கட்டும் மோடிகள்!

தமிழ் ஓவியா said...


மொழியைப்பற்றி...

தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.
(குடிஅரசு, 26.1.1946)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


பாலியல் வன்கொடுமைகள்

அண்மையில் திருமதி சுனிதா அவர்களின் சொற்பொழிவைக் கேட் டேன். நான்கு வயது சிறுமி யைச் சின்னா பின்னப் படுத்திய வன்கலவிக் கொடுமைக்காரன் பற்றிக் கேட்க நேர்ந்தது.

இதே மாதிரி நிகழ்வுகள் தமிழகத் திலும் நடை பெறுவதை அறிந்து துடிக்காத நல்ல நெஞ்சங்களே இல்லை.விடுதலை, உண்மையிலும் இது பற்றிய செய்திகளைப் பார்த்தேன். பல்லாயிரக் கணக்கானோர் வருத்தப் படுவதுடன் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்திருப்பார்கள்.

திராவிடர் கழகம் மக்கள் கழகம். முன்னோடியாகச் சிந்தித்துச் செயல் படும் சமுதாய அமைப்பு. நாம் இந்தக் கொடுமைகளை வேரோடு சாய்க்க பகுத்தறிவுடன் சிந்தித்து, சிந்திக்க வைத்துச் செயல் பட வேண்டும்.

சிறு வயதில் பாலியல் கொ டுமைக்கு ஆனவர்கள் தான் இந்த மாதிரி மனித நேயமற்றக் கொடுமை களைச் செய்பவர்கள் என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர். இதில் நெருங்கிய உறவினர்களின் திருட்டுத் தனமான பாலியல் வன்முறைகள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மனக்காயத்தை ஏற்படுத்துவ்தும் அதுவே பிற்காலத்தில் இவர்கள் கொடுமைகள் செய்வதற்கு அடிப்படை என்றும் கருதுகிறார்கள்.

சிறு வயதில் பாதிக்கப்பட்டவர்கள் மனக் கொடுமைகளைப் பேசிக் கொட்ட ஒரு அமைப்பு தேவை.மருத்துவர்கள் என்று இல்லாமல் சமூக நீதி ஆர்வலர்கள் ஆங்காங்கே வாரம் ஒரு முறை சந்திக்கவும் , விரும்பியவர்கள் பெயரைச் சொல்லவும், விரும்பாதவர்கள் பெயரைச் சொல்லாமல் குழப்பத்தை மட்டும் எழுதிக் கொடுத்து அதைப் பற்றி அனைவரும் பேசுவதும் பலன் தரும். மன அமைதிக் குழுக்கள் என்று பொதுவாக இருந்தால் அனைவரும் பங்கேற்க முடியும்.
குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழில் போட்டிகள் வைத்து சிறந்த வற்றை ஒவ்வொரு இதழிலும் போட்டுப் பரிசும் கொடுக்கலாம். திருக்குறள் கதைகள் ,கட்டுரைகள் போட்டிகள் வைத்து ஆங்காங்கே " பெரியார் பிஞ்சு" நிகழ்ச்சிகள் நடத்தினால் பெரியார் பிஞ்சுக்கும் விளம்பரம் கிடைக்கும், செய்திகளும் போய்ச் சேரும்ஆங்கே குழந்தைகள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதையும் சொல்லிக் காட்டலாம்.

இங்கு அமெரிக்காவிலே பல நகரங்களில், தமிழ்ச் சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் ஆண்டு தோறும் திருக்குறள் போட்டிகள் வைத்துப் பரிசளிப்பதில் குழந்தைகளின் பங்கேற்பு பெரிதும் வளர்ந்துள்ளது.

இதைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றால் நல்லது. நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல் போலத் திருக்குறள் கதை நூல்கள் பல வரவேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கும் படியான சிறு நூல்கள் நல்ல பலன் தரும். சிறந்த நூல்களுக்குப் பரி சளிப்போம்.

என்னை இந்த அளவிற்குச் சமுதாயப் பணிகளில் ஈடு படத் தூண்டிய பெரியார் அய்யாவின் எழுத்துக்களுக்கும், அயராத உழைப் பால் அனைவரையும், முக்கியமாக என்னுடைய சிந்தனை செயல்பாடு களை ஊக்கப்படுத்திய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கும், தங் களையே அர்ப்பணித்துக் களப்பணி செய்யும் கருப்பு மெழுகுவர்த்தி களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெரியார் மகளிர் அணியின் சாதனைகளுக்குத் தலை வணங்கு கின்றேன். கோவை மாநாட்டின் பலன் பலருக்குக் கிடைக்கட்டும்.

- சரோ இளங்கோவன்
அமெரிக்கா

தமிழ் ஓவியா said...


பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்து!

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.20- பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆணை பிறப்பித் திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் நேற்று தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியுள்ளது. அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் பிறப்பித்த ஆணை சரிதான் என்றும், குறைந்த பட்ச மதிப்பெண் 40 விழுக்காடு இருக்க வேண்டும் என்றும் நீதிமன் றம் கூறியுள்ளது. இதனால் தாழ்த்தப் பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகி யுள்ளது.

பொறியியல் கல்லூரியில் சேர் வதற்கு தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 35 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும், மிகவும் பிற்படுத் தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் 2011ஆம் ஆண் டில் அன்றைய திமுக அரசு ஆணை பிறப்பித்தது. இதனால் கிராமப் புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட-பழங் குடியின வகுப்பு மாண வர்கள் பொறியியல் கல்லுரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. தற் போது, உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பால் அந்த மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

பொறியியல் கல்வி யின் தரத்தை உயர்த்த வேண்டுமென் பதில் நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், பொறியியல் கல்லு ரியில் சேர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மாணவர்களும் ஒரே மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு தமிழக அரசு கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை. எனவே, சமூக நீதிக்கு எதிரான இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண் டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆண்டுதோறும் பொறியியல் கல்லுரி களில் ஆயிரக் கணக்கான காலியிடங்கள் நிரப்பப் படாமல் கிடக்கின்றன. ஆனாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுரி களில், தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக் கான இடஒதுக்கீட்டை நிரப்புவதில் குளறுபடி கள் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீட்டின் நிலை குறித்து, கேட்பாரற்ற சூழல் உள்ளது. இந்நிலையில், தாழ்த்தப் பட்ட-பழங்குடியின மாணவர் களுக்கு மட்டும் தகுதி மதிப்பெண் அளவை உயர்த்துவது என்பது தலித் விரோத நிலைப்பாடே ஆகும் என் பதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கும் தமிழக அரசுக்கும் சுட்டிக்காட்டுகிறோம். இந்த பாரபட்சத்தைக் களைவதற்கு உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் புத்தகர் விருது வழங்கப்பட்ட சான்றோர் பெருமக்களின் வாழ்க்கைக் குறிப்பு


சென்னை, ஏப். 20- சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (19.4.2013) நடைபெற்ற புத்தகர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் விருது பெற்றோர்களின் தன்விவரக்குறிப்பு வருமாறு:-

திரு என் பழனி, (ஈஸ்வரி வாடகை நூலகம்)

பள்ளிக்கல்லூரி மாணவ / மாணவிகளுக்கு தேவையான அனைத்து நூல்களும் புத்தக கடைகளிலும் நண்பர்களின் மூலமாகவும் கிடைத்து விடும். ஆனால் நமது நாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படையில் பெரும்பாலான வீடுகளில் படித்த பெண்கள் கூட இல்லத்தரசிகளாக மாறிவிடு கின்றனர். வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பை தாமே முன்வந்து ஏற்றுக்கொள்கின்றனர். இவர்களின் பொழுதுபோக்காக பெரும்பாலும் தொலைக்காட்சிகளையே நம்பி இருந்தாலும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய அவர்களுக்கு பள்ளிக்கல்வியைத் தவிர பொதுஅறிவுபயிற்சி தருவதிலும் முக்கிய பங்கும் வகிக்கின்றனர். மேலும் வாசிப்பில் ஆர்வம்மிக்கவர்கள் மாத இதழ்கள், நாவல்கள் மற்றும் இதர தொழிற்கலை நூல்களை படித்து நேரத்தை நல்லமுறையில் கழிக்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் இவர்களின் தேடலை பூர்த்திசெய்யும் வகையில் பல வாடகை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது, சிலர் இந்த பணியை வியாபார நோக்கில் செய்து வருகின்றனர். சென்னை இராயப்பேட்டையில் திரு. பழனி அவர்கள் நடத்தி வரும் ஈஸ்வரி வாடகை நூலகம் என்பது வணிக நோக்கில் செயல்படாமல் அறிவை வளர்க்கும் விதமாக தொண்டாற்றி வருகிறது.

1950-களில் திரு பழனி அவர்கள் ஒரு பழைய காகிதம் சேகரிக்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் கிடைக்கும் நூல்களின்பால் கவனம் செலுத்த தோன்றியதுதான் இந்த ஈஸ்வரி வாடகை நூல் நிலையம், ஆரம்ப காலத்தில் 5 பைசா மற்றும் 10 பைசாவிற்கு சந்தாதாரர்களை சேர்க்க ஆரம்பித்த இந்த வாடகை நூலகம் இன்று சுமார் 45 ஆயிரம் சந்தா உறுப்பினர்கள் இணைத்துகொண்டு சிறப்புடன் திகழ்ந்து வருகிறது ஆரம்ப காலத்தில் மூர்மார்க்கெட்டில் இருந்து பழையபுத்தகங்களை வாங்கிவந்து ராயப்பேட்டையில் துவங்கிய இந்த வாடகை நூலகம், இன்று அறிவு சார் நூலகமாக சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. புதிய தொழில் நுட்பத்தை கையாண்டு இணையத்தின் மூலம் அனைத்து நூலகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கிளையில் எடுக்கப்பட்ட நூலை வேறு எந்த கிளையிலும் திருப்பி கொடுக்கும் வசதியையும் இந்த நூலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. காலத்திற் கேற்ற வேகத்துடன் தன்னையும் தன் குடும்பத்தின ரையும் இணைத்துக்கொண்டு மக்களின் அறிவைத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் தொண்டாற் றும் திரு என். பழனி அவர்களுக்கு சென்னை புத்தகச்சங்கமத்தில் புத்தகர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

நூலகம் என்பது அசாத்திய உழைப்பை உள்ள டக்கியது. அதனை கட்டமைப்பதும், நிர்வகிப்பதும் தனிமனிதர்களுக்கு சாத்தியமானதல்ல. சமூகத்தின் மீதும் மொழியின் மீதும் தீராத அன்பும், அக்கறையும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே ஒரு நூலகம் தனி மனிதனுக்கு வசப்படும். இம்மேடை யில் விருது பெறும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி என்பவரும் அவ்வகை மனிதர் தான்

புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணத்தில் உள்ள பழனியப்பா நகரில் திரு பாலசுப்பிரமணியன் மீனாட்சி தம்பதியினருக்கு 12 ஆண்குழந்தைகளில் ஒருவராக 31.01.1942ல் பிறந்தார்.

புதுக்கோட்டையில் ஆரம்பக் கல்வியை துவங்கி இளங்கலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம், அதன் பிறகு எம்.எட்., முடித்தவர்.

தமிழ் ஓவியா said...

இளம் வயது முதல் நூல் சேமிக்கும் பழக்கம் இவருடைய தந்தையின் மூலம் உருவாக்கப்பட்டது. இவருடைய தாத்தா கிருஷ்ணசுவாமி நல்ல கல்வியாளர், இவரது தந்தை கல்வித்துறை அதி காரியாக இருந்தவர். இப்படி குடும்பமே கல்வியறிவு பெற்று இருந்ததால் இவருக்கு படிக்கும் ஆர்வம் சிறுவயதிலேயே தொடங்கியது. இவருடைய இந்த ஆர்வத்திற்கு காரணம் சிறுவயதில் இவருடைய பெற்றோர்கள் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்வார்கள், அதை அப்படியே பத்திரப்படுத் தவும் கூறுவார்கள், ஒரு சமயம் கையில் கிடைத்த நூலை புரட்டிய போது அது அவருடைய தாத்தா விற்கு பச்சையப்பன் கல்லூரியில் பரிசாக கிடைத்த நூல் என்று தெரிந்தது, அதில் அவரது கையெழுத் தைக்கண்டதும் அவருடனே வாழ்வது போன்ற ஓர் எண்ணம் உணர்வுப் பூர்வமாக தோன்றியது, அன்று முதல் ஒவ்வோர் நூலைவாசிக்கும் போதும் அதை படைத்தவர்களுடன் உரையாடுவது போன்ற ஓர் எண்ணம் தோன்றியது, இந்த உணர்வு பல லட்சம் புத்தகங்களை சேகரிக்கும் அரிய பணியில் கொண்டு வந்துவிட்டது.

ஆரம்ப காலங்களில் இவருக்கு இருந்த ஆர்வத்தை கண்டு தாகூரின் கீதாஞ்சலியை மொழிபெயர்த்த திரு.எம்.கே.செட்டியார் அவர்கள் பல அரிய நூல்களை தந்து இவரை ஊக்கப்படுத் தினார். இவருடைய நூல்களை சேகரிக்கும் ஆர்வத்திற்கு இசைந்தாற்போல் இவருடைய மனைவி திருமதி, டோரதி அவர்களும் ஓர் புத்தக ஆர்வலராகவே இருந்தார். இதன் விளைவு இருவரின் விருப்பத்திற்கு ஏற்ப ஞானாலயம் உருவாகியது. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக பணியைத்தொடர்ந்த பள்ளிக்கூடத்தி லேயே டோரதி அவர்களும் பணிபுரிந்தார், புத்தகத்தின் மேல் உள்ள காதலால் இவர்களும் காதலர்களாக உருவெடுத்தனர். இவர்களது காதல் திருமணத்தை வி.ஆர்.எம் செட்டியார் ஊக்கு வித்தார்.

நூல்களை சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தகவல் கிடைத்தவுடன் முழு முகவரி கூட வாங்கா மல் புறப்பட்டுச் சென்று விட்டு நாள் முழுவதும் தெரியாத ஊர்களில் அலைந்து திரிந்து விட்டு சில நேரங்களில் ஒரு புத்தகம் கூட கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பியதும் உண்டு. இந்த நூல் நிலையத்தை நிர்வகிக்க முழுக்க முழுக்க இவர்களது சொந்த பணமே உதவியாக இருக்கிறது, இணையர் இருவரும் ஓய்வு பெற்று கிடைத்த அத்தனை வருவாயையும் இந்த நூலகத்தை மேம்படுத்தவதற் காகவே பயன்படுத்தியுள்ளனர். நன்கொடையாளர் கள் கொடுக்கும் பணம் அனைத்தும், நூல்அலமாரி கள் வாங்கவும், நூலகத்திற்கு வருகை புரிபவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவுமே சரியாக இருக் கிறது. மனிதர்களின் பிறப்பிற்கும் நிச்சயிக்கப்பட்ட இறப்பிற்கும் நடுவில் வாழ்கின்ற வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் வாழ்ந்தால் தான் நாளைய வரலாறும் அவர்களை பற்றிப்பேசும், அப்படி வரலாற்றில் இடம் பெறப்போகும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு புத்தகர் விருதை சென்னை புத்தகச்சங்கமத்தில் வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

பல அரசு நூலகங்கள் பின்பற்றக்கூடிய வழிகாட் டியாக இந்த ஞானாலயா உள்ளது என்றால் அது மிகையாகாது.

நூற்பாதுகாவலர் திரு. ஆழ்வார்

மயிலாப்பூரில் வசிப்பவர்கள் மாத்திரமல்ல புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் அய்யா நம்மாழ் வார் என்கிற தாமஸ் அவர்களை தெரியாமல் இருக்கவே இருக்காது. அறிவுக்கு விருந்தாகும் நூல்கள் பல தலைமுறைகளை கடந்தும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியை திரு.ஆழ்வார் அவர்கள் தொடந்து செய்து வருகிறார். வருவாயை எதிர்நோக்காது கிடைக்கும் வருமானத்தை கொண்டு அதில் அறிவுசார் புத்தகங்களை தேர்ந் தெடுத்து மக்களிடம் கொண்டு செல்வதில் ஆழ்வார் அவர்களின் பாங்கே தனிதான், விழுப்புரம் நகரில் திரு.ராமானுஜம் சிவகாமிஅம்மாள் அவர்களுக்கு மகனாக 1928ஆம் ஆண்டு பிறந்தார். விழுப்புரத்தில் 5வகுப்புவரை படித்தவர்,தங்களுடைய குடும்பசூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் சென்னைக்கு வந்துவிட்டார்.

தமிழ் ஓவியா said...

சென்னையில் உள்ள லஸ் கபே உணவு விடுதியில் வேலை பார்த்துக்கொண்டே திரைப்படங்களில் துணைவேடங்களில் நடித்து வந்தார். அக்காலங் களில் பெருமாள் என்பவரின் பழைய செய்திதாள் களை வாங்கும் கடையில் அமர்ந்து ஏதாவது படித்துக்கொண்டே இருப்பார். இவருக்கு புத்த கத்தின் மீது உள்ள ஆர்வத்தை பார்த்த பெருமாள் அவர்கள் நீ தனியாக கடை ஒன்றை துவங்கலாமே என்று கூறியதன் விளைவாக, தான் சேகரித்து வைத்திருந்த பணம் 100 ரூபாயை கொண்டு இந்த பழைய புத்தகங்களை சேகரித்து விற்கும் பணியை இன்றிலிருந்து 65 வருடங்களுக்கு முன்பாக லஸ் முனையில் நடைமேடையில் துவங்கினார்.

பதிப் பாளர்கள் பதிப்பிக்கும் புத்தகத்தை மக்களிடம் சேர்க்கும் வியாபாரம் என்பது தனி, ஆனால் நூற்றாண்டுகளாய் கண்ணில் படாமல் போன நூல்கள் எங்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் திரு.நம்மாழ்வார் அவர்களின் புத்தக கடைதான், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இது போன்ற பல புத்தக கடைகள் இருக்கின்றன. அவற்றை நேற்றுவரை பழைய புத்தக கடைகள் என்ற ஒரு ஏளனப்பார்வையை கொண்டவர்கள் ஒரு முறை நம்மாழ்வார் அவர்களின் கடையை பார்வையிட்டார்கள் என்றால் அதன் பிறகு புத்தகம் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணம் வருவது நிச்சயம், காரக்பூர் அய்.அய்.டி யில் படித்து வரும் ஓரு மாணவர் தன்னுடயை அனுபவத்தை கூறும் போது பல ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு சென்று பழைய புத்தகங்களை பார்வையிடும் பழக்கம் எனக்கு உண்டு, சிறுவயதில் இருந்தே படிக்கும் ஆர்வம் மிகுதியால் சில புத்தகங்களின் மீது அதீத ஆர்வம் கொண்டேன், அப்படிப்பட்ட புத்தகங்கள் தேடிக்கிடைக்காத போது மனதில் ஏதோ ஒன்றை இழந்து விட்டது போன்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும், என்னுடைய நன்பர் ஒருவரை காண இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தேன், அந்த நண்பர் என்னுடைய புத்தக ஆர்வத்தை தெரிந்து கொண்டு சென்னை வந்ததும் முதலில் என்னை லஸ் முனையில் உள்ள ஆழ்வார் புத்தககடைக்கு அழைத்துச் சென்றார். முதலில் இது எல்லா நகரங்களிலும் பார்க்கும் புத்தக கடைதான் என்று நினைத்த எனக்கு, நான் தேடிய பல புத்தகங்கள் இங்கு புதையல்போல் கிடைத்தன என வியந்து கூறினார்.

நம்மாழ் வாருக்கு புத்தக கடைமட்டுமல்ல வசிப்பிடமும் இதே கடைதான் இவருடைய நான்கு மகள்களும் புத்தககடையில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். துவக்கத்திலிருந்த நூல் நிலைய அமைப்பின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று வரை தொடர்வதுஆரம்ப காலத்தில் இருந்து இவரது புத்தக கடையை பார்வையிட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு தெரியும், ஆம்! ஆரம்பத்தில் கூரையே இல்லாமல் பிறகு தார்ப்பாய்களின் உதவியோடு நடந்து வந்த இந்த புத்தக கடை 3 மாதத்திற்கு முன்புதான் மெல்லிய தகடுகள் வேய்ந்த மேற் கூரையாக மாறியது. இந்த இடத்தை தக்கவைப் பதற்கு இவர் படுகின்ற இன்னல்கள் கொஞ்சநஞ்ச மல்ல இன்றுவரை சாலை கடைகளுக்கான ஒரு அங்கீகாரத்தை கூட மாநகராட்சி நிர்வாகம் தராமல் வருடத்திற்கு ஒருமுறை வழக்கு வாய்தா என அலைக்கழிக்கும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மனைவியைப்பற்றியும் தன் மக்களை பற்றியும் சிந்திப்பதை விட எந்த புத்தகத்தை யாருக்கு எப்படி தருவித்துகொடுப்பது என்ற எண்ணம் தான் இவருடைய இந்த தள்ளாதவயதிலும் தளராத சிந்தனையாக உள்ளது

புத்தகங்களை காணும் பார்வையை மாற்றி 3 தலைமுறையின் அறிவுத்தேடலை பூர்த்தி செய்த நம்மாழ்வார் என்ற தாமஸ் அய்யாவிற்கு சென்னை புத்தகச்சங்கமத்தில் புத்தகர் இவ்விருதினை வழங்குவதில் பெருமையடைகிறோம்.

தமிழ் ஓவியா said...

கு. மகாலிங்கம்

சைதை மு குப்புசாமி கன்னியம்மாள் அவர்களின் இரண்டாவது மகவாக 1930 பிறந்தார். பொருளாதார குறைபாட்டினால் தன்னுடைய கல்வியை 5-ம் வகுப்பிற்கு மேல் தொடரமுடியவில்லை, இருப்பி னும் தொழிற்கல்வியாக தையற்கலையை கற்றுக் கொண்ட கு.மகாலிங்கம் இளமைப்பருவத்திலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக 1946-ல் காந்தியடிகளை சந்தித் தார். 1952-ல் காந்தியடிகளின் பெயரால் சென்னை சைதாபேட்டையில் நூலகம் ஒன்றை திறந்தார். காந்தி நூலகத்தின் 5-ம் ஆண்டு விழாவில் பெருந் தலைவர் காமராசரை அழைத்து வந்து அவருடைய கரங்களால் காந்தியடிகளின் சிலையை திறக்க வைத்தார். இதன் மூலம் பெருந்தலைவர் காமரா சருக்கும் இவருக்குமான நட்பு பலப்பட்டது. 1984-ல் தீவிர அரசியல் இருந்து விலகி நூலகபணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். 1989-ல் ஆனந்தவிகடன் வாரஇதழ் இவருடைய முதல் செவ்வியை வெளியிட்டு சிறப்பித்தது. 1994ம் ஆண்டில் தற்போதைய சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள் காந்தி நூலகத்திற்கு ரூ10,000 மதிப்புள்ள நூல்களை நூற்கொடையாக வழங்கினார். 2001-ல்இவருடைய சேவையை பாராட்டி உரத்தசிந்தனை அமைப்பு சேவை ஒளி என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.

தமிழ் ஓவியா said...

2002-ல் நூல் நிலையப்பொன்விழா ஆண்டில் 50 எழுத்தாளர்களை அழைத்து சிறப்பித்தார். இவருடை நூலகத்தில் இதுவரை மாபொ. சிவஞானம், எம்.கே .தியாகராஜபாகவதர், கவிஞர் க.மு.செரிப், கவிஞர்.கண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்வாணன், அகிலன், செயகாந்தன் மற்றும் பல கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள் வருகை தந்து சிறப்பு சேர்த்திருக்கின்றனர். 2005-ல் சென்னை சோம சுந்தரர் குருவருட்பணி மன்றம் இவருக்கு தமிழ்நூல்மாமணி என்ற பட்டம் வழங்கி சிறப்பு செய்தனர். இதே ஆண்டில் தமிழ்நாடு நூலக அமைப்பு இவருடைய நூலக பணிகளுக்காக முனைவர் அரங்கநாதன் விருதினை வழங்கி சிறப்பித்தனர். பலநூறு முனைவர்களை உருவாக்கிய இந் நூற்காப்பாளருக்கு திரு.கு.மகாலிங்கம் அவர்களுக்கு புத்தகர் விருதை சென்னை புத்தகச்சங்கமத்தில் வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

பல்லடம் சாமி மாணிக்கம்

தமிழர் யார்? அவர்களுடைய அடையாளம் என்ன?, அவர்களுடைய மொழி, பண்பாடு, கலாச் சாரம் நாகரீகத்தை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், திருமுதுக்குன்றம் என்ற அழகிய தமிழ்ப்பெயரால் அழைக்கப்பட்டு பின்னர் விருத்தாச்சலமாக்கப்பட்ட ஊரின் நடுவே மணிமுத் தாற்றங்கரையில் அமைந்திருக்கும் தமிழ் நூல்காப் பகத்தை உறுதியாக கைநீட்டிக்காட்டலாம். ஆம்! இந்த நூல் காப்பகத்தின் நிறுவனரான திரு.பல்லடம் மாணிக்கம் அவர்கள் 1936-ஆம் வருடம் நவம்பர் 23ஆம் தேதி திரு.சாமியப்பன் வள்ளியம்மை அவர் களுக்கு மகவாக பல்லடத்தில் பிறந்தார். பல்லடத் தில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார், ஆசிரியராக பணி யாற்றிய திரு. மாணிக்கம் அவர்கள் மாணவர் களுக்கு எளிமையான முறையில் தமிழ்வழிக் கல்வியை கற்பித்து வந்தார். அப்போது நூல்களை சேகரித்து நூல்நிலையம் அமைக்கும் ஆர்வத்தில் உதித்ததுதான் தற்போது விருத்தாச்சலத்தில் சேலம் நெடுஞ்சாலையில் மணிமுத்தாற்றங்கரையில் அழகிய சோலையின் நடுவே அறிவுச்சோலையாக அமைந்திருப்பதுதான் இந்த தமிழ் நூல் காப்பகம், பெயருக்கு ஏற்றார் போல் இது தமிழகத்தில் ஓர் அரிய நூற்காப்பகம் மட்டுமல்லாமல் தமிழ்ச்சமூ கத்திற்கு கிடைத்த அறிவுக்களஞ்சியமாகவும் திகழ் கிறது. பல அரிய நூல்களை தேடிச் சமூகத்திற்கு கொடுக்கவேண்டும் என்ற ஆவல்தான் இந்த நூல்காப்பகம் உருவெடுக்க முதன்மைக்காரண மாகும், இவரின் ஆர்வத்தை அறிந்த அறிஞர்கள் பலர் மற்றும் பொதுமக்கள் தங்களின் வசம் இருந்த நூல்களை நூற்காப்பகத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கத்துவங்கினார்.

நூல்கள் வழங்கியவர்களின் அருட்செல்வர் நா.மகாலிங்கம், பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன், பழ.நெடுமாறன், கோவை.ஞானி, கவிஞர்.சிற்பி, துணைவேந்தர் பொற்கோ, துணைவேந்தர் ஈ. சுந்தரமூர்த்தி, துணைவேந்தர் க.ப.அறவாணன் போன்ற மேன்மக்களும் பல முன்னணிபதிப்ப கங்களும் அடங்கும். தமிழ் நூல்காப்பகத்தில் இது வரை திருக்குறளுக்கு உரை எழுதிய எழுத்தாளர்கள், பதிப்பங்கள், மற்றும் தனி நபர்கள் வெளியிட்ட நூல்கள், 1800களில் வெளிவந்த நாலாயிர திவ்யப் பிரபந்தம், மற்றும் சைவச்சிந்தாந்த பதிப்புகள் வெளியிட்ட பழமையான நூல்கள், என சுமார் இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் தமிழ் நூல் காப்பகத்தை அலங்கரிக்கின்றன, மேலும் இந் நூலகத்தில் சைவம், வைணவம், புத்தம் மற்றும் சமண மதம் குறித்த பல்வேறு எழுத்தாளர்களின் தலைசிறந்த நூல்களும் இங்கு நிறைந்துள்ளன.

தமிழ் ஓவியா said...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட பல அரிய நூல்களின் தொகுப்புகள் இங்கு வரிசைப் படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் எழுத்தாளர்களின் கட்டுரைத்தொகுப்புகள் என தென் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ் நூல் காப்பகம் ஒரு முழு மையான தகவல்களஞ்சியமாக திகழ்கிறது. இந்த நூலகத்தில் இதுவரை வெளிவந்த இப்பேரண்டத்தின் வரலாற்று களஞ்சியமான நேசனல் ஜியோகிராபின் இதழின் தொகுப்பு அனைத்தும் அனைவரும் எளிதாக பிரித்து படிக்கும் வகையில் நுட்பமாக பைண்டிங் செய்து வைக்கப் பட்டுள்ளது. மரஞ்செடிகொடிகள் புற்தரைகள் என அழகிய சோலையின் நடுவின் சுமார் 8000 சதுர அடிப்பரப்பளவில் கலைநயம் கொண்ட அமைதி யான இயற்கைசூழலில் நேபாள மன்னர்களின் கட்டிட கலை வடிவமைப்பில் அமைந்துள்ள இந்த தமிழ் நூல் காப்பகத்தின் தரைத்தளத்தில் அனைத்து வகையான நூல்கள் ஒரு புறத்திலும் மற்றோர் பகுதியில் ஒலி, ஒளிப்பதிவு குறுந்தகடுகளும் உள்ளது.

இந்த குறுந்தகடுகளில் பழைய திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் அருமையான பழமையான பாடல்தொகுப்புகள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தின் மேற்தளம் ஆய்வு மாணவர்களின் கலந்தாய்வுக்கும், பேராசிரி யர்கள் மற்றும் கல்வியாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டில் பெண் எழுத்தாளர்களின் மாபெரும் கலந்தாய்வு நிகழ்ச்சி இங்கு நடைபெற்றுள்ளது. அரிய பல நூல்களை சேகரிக்கத் தவறியதால் தமிழ் கூறும் நல்லுலகம் தனது அறிவுக்களஞ்சியத்தை சிறிது சிறிதாக இழந்து வருகிறது, இவரது தனிப் பட்ட முயற்சியால் மீண்டும் அவ்வரிய நூல்களை தேடிப்பிடித்து பாதுகாத்து இனிவருங்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இவரது பணி சிறப்பு பெற்று விளங்குகிறது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 1786ஆம் ஆண்டு அச்சிடப் பட்ட பெப்ரீஸியஸ் அகராதி இங்கு பார்வைக்கு உள்ளது. தமிழ் நூல் காப்பகத்திற்கு தமிழார்வலர் களும் எழுத்தாளர்களும் இன்றளவும் பல அரிய நூல்களை வழங்கிக்கொண்டே இருக்கின்றனர். எதிர்காலத்தலைமுறைக்கு இவரது சீரான தொண் டின் காரணமாக அறிவுத்தேடலை ஏற்படுத்தி வருகிறார். கி.மு. காலத்திலிருந்து கி.பி. காலம் வரை தமிழ்ச்சமுதாயத்தின் வரலாற்றை முழுமையாக எதிர்காலத்தலைமுறையினர் அறிந்து கொள்ள சீரிய தொண்டாற்றும் தமிழ் நூல் காப்பாளர் வரிசையில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் திரு.பல்லடம் சாமி மாணிக்கம் அவர்களுக்கு இந்த புத்தகர் விருதை சென்னை புத்தக சங்கமத்தில் வழங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். மணிமுத்தாற்றங்கரையில் மயக்கும் சோலைகளுக்கு நடுவில் குடியிருந்தாலும் பிறக்கும் சொந்த ஊர் பாசம்மட்டும் போகாமல் பெயரோடு பல்லடத்தையும் சேர்ந்தே சுமக்கின்றார். தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் இவர் ஆற்றும் தொண்டறத்தால் தமிழர்களின் வரலாறு இவரது பெயரை என்றும் சுமந்து கொண்டு இருக்கும்.

தமிழ் ஓவியா said...


குறள் - தந்தை பெரியார்


நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்?

தமிழ் ஓவியா said...

நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.

தமிழ் ஓவியா said...


நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். - குடிஅரசு - துணைத் தலையங்கம் 14.02.1926

தமிழ் ஓவியா said...


என்னதான் முடிவு?


பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி என்பது இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் இருக்கிறது.

கொஞ்ச காலத்துக்கு முன் (16.12.2012) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உட் படுத்தப்பட்டது குறித்துப் பெரும் புயல் நாடு தழுவிய அளவில் வெடித்துக் கிளம்பியது. சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எவ்வளவோ மருத்துவ உதவிகளை மேற்கொண்டும் பாதிக்கப்பட்ட பெண் உயிர் பிழைக்கவில்லை.

ஊடகங்கள் உறுமின - ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப் பட்டது. அவரும் பல யோசனைகளை அளித்துள்ளார்.

ஏற்கெனவே பல சட்டங்களும், விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சட்டமும், நிருவாகத் துறையும் நீதிமன்றமும் எந்தக் கதியில் இயங்குகின்றன என்பதுதான் முக்கியம்; கடந்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் பாலியல் வன்முறை வழக்குகளில் 16 ஆயிரம் வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது.
காவல்துறையின் கட்டப் பஞ்சாயத்து காரண மாகவோ, அல்லது காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயோ புதைக்கப்பட்ட வழக்குகளுக்குக் கணக்கு இல்லை.

டில்லியில் கடந்த டிசம்பரில் கயவர்களால் மருத்துவக் கல்லூரி மாணவி வேட்டையாடப்பட்ட நிலையில் வெகு மக்களும் குமுறி எழுந்த நிலையில் இது போன்ற குற்றங்கள் பெருகி வருவதுதான் அதிர்ச்சிக்கு உரியதாகும். தமிழ்நாட்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வன்புணர்ச்சிகள் நடந்துள்ளன. நம் நாட்டு ஊடகங்களின் ஒரு சார்புத் தன்மையால் அவை வெளிச்சத்துக்கு வராமல் போய் விட்டன. அரசாங்கமும் ஒன்றும் நடக்காதது போல காய்களை நகர்த்திக் கொண்டது.

நேற்று ஏடுகளில் வெளிவந்த இன்னொரு சேதி - இதுநாடா கடும் புலி வாழும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறது.

5 வயது சிறுமி புதுடில்லியில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் துடியாய்த் துடிக்கிறார்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான திருமதி சோனியா காந்தி வார்த்தைகள் போதாது - செயல்கள் தேவை! என்று கோபமாகச் சொன்ன தாக ஏடுகள் சொல்லுகின்றன.

அவ்வப்பொழுது இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடப்பதும், அந்த நேரங்களில் மட்டும் வீராவேசமாகத் துள்ளிக் குதிப்பதும் பழகிவிட்ட ஒன்றாகவே ஆகி விட்டது. மக்களின் மனதும் மரத்துப் போகும் நிலைதான்.

நீதிபதி வர்மா ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையைக்கூட மத்திய அரசு நீர்த்துப் போகத்தான் செய்திருக்கிறது.

கீழ்நிலையில் உள்ள காவல் அல்லது ராணுவ ஊழியர் அல்லது அதிகாரி வன்புணர்வில் ஈடுபட்டால் அதற்கு அவருக்கு மேலுள்ள அதிகாரியே பொறுப் பேற்க வேண்டும் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரையையும் அரசு புறந்தள்ளி விட்டது.

நீதிபதிகள், பொது மக்கள், ஊழியர்கள் போன் றோர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தனி அனுமதி தேவையில்லை எனும் நீதிபதி வர்மாவின் பரிந்துரைகூட ஏற்கப் படவில்லை.

பாலியல் குற்றம் செய்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற சிபாரிசுகள் ஏற்கப் படவில்லை.

ஆணுக்குப் பெண் அடிமை எனும் மனப்பான்மை தகர்த்தெறியப்பட கடுமையான சட்டங்கள் தேவை. பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கொம்புக்கும் நோகாமல் சட்டம் செய்தால் அது நாக்கை வழித்துக் கொள்ளத்தான் பயன்படும்.

பெண்களுக்குப் போதிய கல்வி தந்து ஆட்சி அதிகாரத்தில் 50 விழுக்காடு இடம் தந்து, பெண்ணென்றால் பலகீனமானவர் என்ற நிலை மாற்றப்படுவதற்கான போதிய உடல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுவது போன்ற தொலை நோக்குகள் தேவை.

ஊடகங்கள் மூலம் எச்சரிக்கும் ஏற்பாடுகள் தேவை; இல்லை என்றால் அவ்வப்போது பேசப்படும் வெட்டிப் பேச்சாகவே அது முடிந்து போய்விடும்.

பெண்களும், ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு விடாமல் வீதிக்கு வந்து போராட வேண்டும் - இது மிகவும் முக்கியம். 22-4-2013

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 22: புவி தினம்


நாம் வாழும் பூமியைக் காப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியை 'புவி தினம் என அனுசரிக்கிறோம். 1969இல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மெக்கன்னல் என்பவர்தான் இப்படி ஒரு தினத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை முன்மொழிந்தார்.

இந்த தினத்தை 192 நாடுகள் கடைபிடிக்கப்படுகின் றன. பூமியைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த தினம், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் காப்பது, போர், வறுமை மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தயும் உணர்த்துகிறது.