Search This Blog

23.3.12

ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த இந்தியாவுக்குப் பாராட்டு!வீண் சர்ச்சைகள் வேண்டாம்


இலங்கை அரசை செயல்படுத்த வைப்பதே
நம்முன் உள்ள முக்கியமான கடமையாகும்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

இது ஒரு தொடக்கமே - வீண் சர்ச்சைகள் வேண்டாம்! ஜெனிவாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்தும், இலங்கை அரசை செயல்படுத்த வைப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமையாகும் என்றும், இது ஒரு தொடக்கமே - வீண் சர்ச்சைகள் வேண்டாம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

புலி வருகிறது, புலி வருகிறது என்று சொல்லப்பட்ட ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தின்மீது நேற்று (22.3.2012) நிஜமாகவே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்டது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதன் முடிவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். இந்தியாவின் மாற்றத்துக்குக் காரணம்

பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலுமாகக் காட்டிக் கொண்டிருந்த இந்தியா - உலக நாடுகளின் சூழ்நிலை -இந்தியாவில் அனைத்துத் தரப்புகளின் அழுத்தம் - தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு, பிரிட்டன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பால் (Channel 4) ஏற்பட்ட தாக்கம், அரசியல் நெருக்கடி இவற்றின் ஒட்டு மொத்த விளைவே - இந்தியாவின் தடுமாற்றம் முடிவுக்கு வந்து, கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உள்ளாகி, அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது.

தி.மு.க.வின் முக்கியத்துவம்

இந்திய அரசு இத்தகைய சரியான முடிவை எடுத்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பது உண்மைதான் என்றாலும் இந்த முறை தி.மு.க.வும் அதன் தலைமையும் எடுத்த தெளிவான, உறுதியான நிலைப்பாடுதான் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தியா இப்பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்காவிடின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலக வேண்டும் என்ற அறிக்கையை திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிட்டோம் (13.3.2012).

மத்திய அரசுக்கு நெருக்கடி

கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்கிற அளவுக்குத் தீவிரமான முடிவை தி.மு.க. எடுக்கவில்லையென்றாலும், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்கிற அளவுக்கு தி.மு.க. சென்றது.

மத்தியில் இருக்கக் கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு இன்றைய நிலையில் திமுகவின் ஆதரவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்பது வெளிப்படையே!

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், அவர் தம் வழிகாட்டுதல்படி நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களும் கடுமையான அளவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் - ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, வெளி நடப்பும் செய்தது அசாதாரணமான சாதனையாகும்.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை இந்தியா எடுக்கும்படிச் செய்யப்பட்டதற்கான காரணிகளுள் முக்கியமானவை இவை!

வரவேற்கத்தக்கது - பாராட்டுகள்

காரணம் எதுவாக இருந்தாலும் பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிவித்த முடிவின்படி, நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 19ஆவது அமர்வுக் கூட்டத்தில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்ததன்மூலம் பெரும் பழியிலிருந்து தப்பிப் பிழைத்தது! இந்திய அரசின் இந்தச் செயலுக்காக திராவிடர் கழகம் வரவேற்று தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

24 நாடுகள் ஆதரவு

மொத்தம் 47 நாடுகளில் இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா ஆதரவு தெரிவித்ததால் வேறு சில நாடுகளும் இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கவும் கூடும். 15 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கின அல்லது புறக்கணித்தன.

அடுத்து இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு ஏற்கெனவே நியமித்த விசாரணைக் குழு (LLRC) அளித்த அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சமாகும்.

மனித உரிமைக் கவுன்சில் நியமிக்கும் உறுப்பினர்களின் கண்காணிப்பில் இலங்கை அரசு நேர்மையான முறையில் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும்.

தமிழர்கள் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

முள்வேலி முகாமுக்குள் இன்னும் முடங்கிக் கிடக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு உரியது செய்யப்பட வேண்டும்.

சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களும், போராளிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.

போர்க் குற்றம் புரிந்தவர்கள் மீதான நடவடிக்கையை அடுத்தகட்டமாக அய்.நா. மேற்கொள்வதும் அவசியமாகும்.

குறிப்பிட்ட காலவரையறை முக்கியம்

இவை எல்லாம் குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள் நடக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக இருக்க வேண்டும்.
ஜெனிவா தீர்மானத்தின்மீது பல்வேறு கருத்துகளைத் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தங்கள் போக்கில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு தொடக்கம்தான்!

இந்தத் தீர்மானத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் சர்வத் தீர்வு கிடைத்துவிட்டது என்று பொருளாகாது - இது ஒரு தொடக்கம் அவ்வளவுதான்!

இதுவரை அசையாதிருந்த இந்தியத் தேர் இப்பொழுது அசைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்றுபட்டு நாம் கொடுக்கும் தொடர் அழுத்தத்தின் மூலமே மேலும் பல தீர்வுகள் கிடைக்கப்பட முடியும். இத்தீர்மானத்தின் மூலம் இலங்கை சிங்களவாத அரசின் உண்மை முகம் உலக அளவில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குக் கண்டிப்பாக இது ஆறுதலை அளிக்கக் கூடியதே!

ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளை இலங்கை அரசு உடனடியாக தொடங்கிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு, வீணான சர்ச்சைகளின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவது புத்திசாலித்தனமாகாது.

இன்னும் சிலர் இங்கு - அடையாளம் காண்க!

இந்தியா ஆதரவு தெரிவிக்கக் கூடாது, இலங்கைத் தீவில் நடத்தப்பட்டது யுத்தம் அல்ல; தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் சோ ராமசாமி, சு.சாமி போன்றவர்களும் ஆர்.எஸ்.எசுகளும், சில ஊடகங்களும் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆரிய - திராவிடம் எங்கே? என்பவர்கள் கண் திறக்கவும் இது உதவக் கூடும்.

இந்தியா, தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு தம் கடமை முடிந்து விட்டதாக நினைக்கவும் கூடாது. ஈழத் தமிழர்களுக்கான வாழ்வாதாரங்கள், அவர்களின் சுயமரியாதைக்கான உத்தரவாதம் என்பவற்றில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று சொல்லி வந்ததை நிறைவேற்றிட, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்பதையும் இந்தியாவுக்கு நினைவூட்டுவது நமது கடமை.

அழுத்தம் கொடுப்போம்!



தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரே குரலில் சுருதி பேதம் இல்லாமல் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஈழம்தான் ஒரே இறுதித் தீர்வு ஈழத் தமிழர்களுக்கு என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது - ஒரு நல்ல அறிகுறி. அதுபற்றி நாளை நமது கருத்துகளை விளக்குவோம்.

------------------கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்-"விடுதலை” 23-3-2012

16 comments:

தமிழ் ஓவியா said...

இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிரான அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன?


அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் விடுதலைப்புலி களுடனான உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறியது. பல்லாயிரக்கணக் கான அப்பாவித் தமிழர்களை ஈவிரக்க மின்றிக் கொன்று குவித்து போர்க்குற்றங் களை செய்தது. இவற்றுக்கு எதிராக ஜெனீவா நகரில் கூடிய அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலில், அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானம் நேற்று நிறைவேறி உள்ளது. அந்த தீர்மானத்தில் இடம் பெற்றிருப்பதாவது:- அய்க்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை கவுன்சில் பிரகடனம், மனித உரி மைக்கான அனைத்துலக உடன்படிக் கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு ஏற்றவகையில், பயங்கர வாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு ஏற்றபடி இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளின் கடமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு ஏற்றபடி அமைய வேண்டும். இலங்கையில் சர்வதேச மனித உரிமைச் சட்டம் மீறப்பட்டது தொடர்பாக எழுந் துள்ள தீவிரமான குற்றச்சாட்டு குறித்த நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணை சரியாக நடைபெறவில்லை. இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) சிபாரிசுகளை இலங்கை அரசு எப்படி அமல்படுத்தப்போகிறது என்பதை விளக்க வேண்டும். இந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் என்ன, தொடர்ந்து எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய விரிவான செயல்திட்டத்தை முன்வைக்கு மாறு இலங்கை அரசைக் கோர வேண்டும். போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிராக நடந்த குற்றங்கள் இருதரப்பிலும் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச பொறுப்புடைமை வழிமுறை விசா ரணையை ஏற்படுத்த வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டிருப்பதை எப்படி சரி செய்யப் போகிறது என்பதை இலங்கை அரசு விளக்க வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரப்பரவல் வழங்குவதின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருப் பதாக தெரிய வந்துள்ளது. 23-3-2012

தமிழ் ஓவியா said...

ஆதரவும் - எதிர்ப்பும்


ஜெனீவா, மார்ச் 23- இலங்கையில் நடைபெற்ற போரின்போது இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களைக் கண்டனம் செய்து இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நேற்று அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேறியது. கவுன்சிலின் 47 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவாகவும், 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆதரவாக வாக்களித்த நாடுகள்: இந்தியா, பெனின், கேமரூன், லிபியா, மொரீசியஸ், நைஜீரியா, சிலி, கோஸ் டரிக்கா, குவத்தமாலா, மெக்சிகோ, பெரு, உருகுவே, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமேனியா. எதிராக வாக்களித்த நாடுகள்: காங்கோ, மாரிட் டானியா, உகாண்டா, வங்க தேசம், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய் லாந்து, கியூபா, இகுவடார், ரஷியா.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகள்: அங்கோலா, போஸ்ட் வானா, பகினோ பாசோ, ஜிபோடி, செனகல், ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா. 23-3-2012

தமிழ் ஓவியா said...

அய்.நா. தீர்மானத்தை ஆதரித்து வாக்கு: இந்தியா தந்துள்ள விளக்க அறிக்கை


புதுடில்லி, மார்ச்.23- அய்.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட் டுள்ளது.

அதில், கூறப்பட்டு இருப்ப தாவது:-

இலங்கை அரசு நியமித்த `கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணையத்தின்' (எல்.எல். ஆர்.சி.) சிபாரிசுகளை நாங்கள் ஏற்கெனவே வரவேற்றுள்ளோம். இலங்கையின் பல்வேறு மதரீதியான, இனரீதியான குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண இது நல்ல வாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இதே குழுக் கூட்டத்தில் இலங்கை, இதை செய்வதாக உறுதி அளித்தது. தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தினோம்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை எல்.எல். ஆர்.சி. ஆணையம் அங்கீ கரித்துள்ளது.

போரின்போது காணாமல்போன நபர்கள், சிறை வைக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், உயர் பாது காப்பு மண்டலங்களை குறைத்தல், சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை தடை செய்தல், தனியார் நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், ராணுவ மயமாக்கலை குறைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எல்.எல்.ஆர்.சி. ஆணையம் உறுதியான சிபாரிசுகளை முன்வைத் துள்ளது.

இந்த சிபாரிசுகளை அமல்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்த குழுக் கூட்டத்தில் இலங்கை அரசு விளக்கிக் கூறியுள்ளது. இந்த அறிக்கையை அமல்படுத்துவது, உண் மையான நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்பு கிறோம்.

தமிழ் ஓவியா said...

இந்தியாவும், வடக்கு இலங்கையில் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு கணிசமான உதவிகளை செய்துள்ளது. வீடு கட்டிக் கொடுத் தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பொது சுகாதாரம், தொலைத் தொடர்பு வசதி ஆகியவற்றை நாங்கள் அளித்துள்ளதால், அங்கு இயல்பு நிலைமை திரும்ப வாய்ப்பு ஏற் பட்டுள்ளது.

இந்த பின்னணியில், இலங்கை அரசு விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தை அமல்படுத்துதல், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மனித உரிமை மீறல் விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபர்களை பொறுப் பாளி ஆக்குவதுடன், மனித உரிமை களை மேம்படுத்த வேண்டும். இத் தகைய நடவடிக்கைகள், இலங்கை யின் சிறுபான்மை இனமாகிய தமிழர்கள் உள்பட அனைத்து இன மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு, நாடுகளுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்பு கிறது. எனவே, இதுதொடர்பான தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட நாடு களின் (இலங்கை) இறையாண்மை உரிமையை மதிப்பதாக இருக்க வேண்டும். மனித உரிமைகளை பாது காக்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.

அய்.நா. மனித உரிமை குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத் தின் செய்தியையும், நோக்கத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத் தில், அய்.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதெல் லாம், அய்.நா. மனித உரிமை குழுவில் நாம் ஒப்புக்கொண்ட விதிமுறைகள்.

நல்லிணக்கத்தையும், அமைதி யையும் நிலைநாட்டுவதில் ஜனநாயக நாடான இலங்கைக்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண் டும். நாம் எடுக்கும் முடிவுகள், இந்த நோக்கத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடையூறாக இருக்கக் கூடாது.

அண்டை நாடான இலங்கை யுடன் பல்லாயிரக்கணக்கான ஆண் டுகள் கலாச்சார மற்றும் ஆன்மிக உறவு, இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கை நிகழ்வுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது.

இலங்கையின் அனைத்து குடி மக்களுக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றுடன் கூடிய எதிர்காலம் அமைவதற்காக, நல்லிணக்க நடவடிக்கையை முன் னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கும். - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இலங்கையின் இறையாண்மையில் குறுக்கிட மாட்டோம் என்கிறார் பிரதமர்

புதுடில்லி, மார்ச்.23- இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவே, அய்.நா. தீர்மானத்தை ஆதரித்தோம், அதே சமயத்தில், இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அய்.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இதற்கான காரணம் பற்றி, டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு மன்மோகன் சிங் கூறியதாவது:-

ஒவ்வொருவரும் சாதக, பாதகங்களை எடைபோட்டு பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒட்டியே நாங்கள் செயல்பட்டுள்ளோம்.
இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க நாங்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், அவர்கள் கவுரவமான வாழ்க்கை நடத்துவதற்கும் நமது அக்கறை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்காகவே தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டோம். - இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார். 23-3-2012

தமிழ் ஓவியா said...

துவேஷப் புத்தி தினமலர்



திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பழைய கூற்றுகளைக் கிளற ஆரம்பித்தால் முதல்வருக்குத் தர்ம சங்கடம் வரும். போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்ற தத்துவம் பேசியது யார்?

டவுட் தனபாலு: பழைய கூற்றுகளைக் கிளறினா, உங்களுக்கு வராத தர்ம சங்கடமா அவங்களுக்கு வந்துடப் போகுது.. இதே ஜெயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனைங்கிற பட்டம் கொடுத்தது யார்?- தினமலர் 22.3.2012 பக்கம் 8

செல்வி ஜெயலலிதாவுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனத்தால் காலை வாரும் வேளையில் தினமலர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. செல்வி ஜெயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பட்டம் கொடுத்தது தவறு என்று தினமலர் சொல்ல வருகிறதா? திராவிடர் கழகம் இதை மாற்றிக் கொள்ளவில்லை.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிக் கொடுத்த (31-C) சட்டத்தை நிறைவேற் றினார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்பதால் அந்தப் பாராட்டு, அதனால் பலன் அடைந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களுமே. ஜெயலலிதா, நரசிம்மராவ், சங்கர்தயாள் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களையும் பயன்படுத்தி, 69 சதவிகித இடஒதுக்கீட்டை 76ஆவது சட்டத் திருத்தம் மூலம் பாதுகாக்கப்பட்டது என்றால் அதற்கான மூலக் கருவைக் கொடுத்தார் திராவிடர் கழகத் தலைவர். இதில் என்ன குற்றம்?

அதே நேரத்தில் ஈழத் தமிழர்கள்பற்றி ஜெய லலிதா சொன்னதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சுட்டிக் காட்டியதை மறுக்க முடியுமா? பொருத்தத்துடன்கூடிய பதிலைப் பொறாமை கொண்டவர்களிடமிருந்து துவேஷப் புத்தி கொண்டவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா?

திராவிடர், கழகத் தலைவரை சீண்டாவிட்டால் தினமலருக்குத் தூக்கம் வராது- உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்களைத்தானே இந்தக் கூட்டம் குறி வைக்கும். 23-3-2012

தமிழ் ஓவியா said...

தமிழ் ஈழம்தான் தீர்வு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி


சென்னை, மார்ச் 23- தமிழ் ஈழம் தான் தீர்வு என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

செய்தியாளர்:- ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா. கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வெற்றி பெறவைத்துள்ளது பற்றி உங்கள் கருத்து?

கலைஞர்:- அந்த வெற்றியைத் தான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. அந்த வெற்றிக்கு மூலகாரணமாக அமைந்த இந்திய அரசுக்கும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் - திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மக்க ளின் சார்பில் - நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்:- இந்தத் தீர்மானத்தை கம்யூனிஸ்ட் நாடுகள் எல்லாம் எதிர்த்து வாக்களித்திருக்கிறார்களே?

கலைஞர்:- அதை நான் மனிதாபிமானத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

செய்தியாளர்:- இந்தத் தீர்மானம் நிறைவேறியதால், இலங்கையில் உடனடியாக எந்த மாதிரியான நெருக்கடி ஏற்படும்?

கலைஞர்:- இப்போதே மிரட்டல், பயமுறுத் தல்கள் எல்லாம் இலங்கை யிலே உள்ள தமிழர் களுக்கு அங்கேயுள்ள சிங்களவர்களால் உருவாக்கப்பட் டிருக்கின்றது என்ற செய்தி தமிழ்நாட்டுப் பத்திரிகை களிலே கூட இன்று மாலையிலேயே வந்திருக்கின்றன. அந்தச் செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நம்முடைய இந்தியப் பிரதமர் அவர் களுக்கு பேக்ஸ் மூலமாக கேட்டுக் கொண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன். (ஆங்கிலத்தில் அந்தச் செய்தியை கலைஞர் படிக்கிறார்)

செய்தியாளர்:- ஜெனிவாவில் இந்தத் தீர் மானத்தை முதலில் வைத்தபோது கடுமையான வார்த்தைகள் எல்லாம் போடப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்தக் கடுமையான வார்த்தைகளை எடுத்துவிட்டு மென்மையான வார்த்தைகளை தீர்மானத்தில் சேர்த்ததாகவும் சொல்கிறார்களே? குறிப்பாக முதலில் போர்க் குற்றங்கள் என்ற வார்த்தைகள் இருந்ததாகவும், பின்னர் அதை எடுத்து விட்டதாகவும் சொல்கிறார்களே?

கலைஞர்:- நீங்கள் சொல்வதைப் பற்றி யாரும் இதுவரை கூறவில்லை. இருந்தாலும் நீங்கள் சொன் னதை கவனத்திலே எடுத்துக் கொண்டு, அது உண்மை யாக இருந்தால் அதைப் பற்றிய திருத்தங்கள் வருவதற் கும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் ஓவியா said...

தமிழ் ஈழம்தான் தீர்வு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி


சென்னை, மார்ச் 23- தமிழ் ஈழம் தான் தீர்வு என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

செய்தியாளர்:- ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா. கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வெற்றி பெறவைத்துள்ளது பற்றி உங்கள் கருத்து?

கலைஞர்:- அந்த வெற்றியைத் தான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. அந்த வெற்றிக்கு மூலகாரணமாக அமைந்த இந்திய அரசுக்கும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் - திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மக்க ளின் சார்பில் - நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்:- இந்தத் தீர்மானத்தை கம்யூனிஸ்ட் நாடுகள் எல்லாம் எதிர்த்து வாக்களித்திருக்கிறார்களே?

கலைஞர்:- அதை நான் மனிதாபிமானத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

செய்தியாளர்:- இந்தத் தீர்மானம் நிறைவேறியதால், இலங்கையில் உடனடியாக எந்த மாதிரியான நெருக்கடி ஏற்படும்?

கலைஞர்:- இப்போதே மிரட்டல், பயமுறுத் தல்கள் எல்லாம் இலங்கை யிலே உள்ள தமிழர் களுக்கு அங்கேயுள்ள சிங்களவர்களால் உருவாக்கப்பட் டிருக்கின்றது என்ற செய்தி தமிழ்நாட்டுப் பத்திரிகை களிலே கூட இன்று மாலையிலேயே வந்திருக்கின்றன. அந்தச் செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நம்முடைய இந்தியப் பிரதமர் அவர் களுக்கு பேக்ஸ் மூலமாக கேட்டுக் கொண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன். (ஆங்கிலத்தில் அந்தச் செய்தியை கலைஞர் படிக்கிறார்)

செய்தியாளர்:- ஜெனிவாவில் இந்தத் தீர் மானத்தை முதலில் வைத்தபோது கடுமையான வார்த்தைகள் எல்லாம் போடப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்தக் கடுமையான வார்த்தைகளை எடுத்துவிட்டு மென்மையான வார்த்தைகளை தீர்மானத்தில் சேர்த்ததாகவும் சொல்கிறார்களே? குறிப்பாக முதலில் போர்க் குற்றங்கள் என்ற வார்த்தைகள் இருந்ததாகவும், பின்னர் அதை எடுத்து விட்டதாகவும் சொல்கிறார்களே?

கலைஞர்:- நீங்கள் சொல்வதைப் பற்றி யாரும் இதுவரை கூறவில்லை. இருந்தாலும் நீங்கள் சொன் னதை கவனத்திலே எடுத்துக் கொண்டு, அது உண்மை யாக இருந்தால் அதைப் பற்றிய திருத்தங்கள் வருவதற் கும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் ஓவியா said...

செய்தியாளர்:- இந்திய அரசு தற்போது இந்த முடிவினை எடுக்க தி.மு. கழகம் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதே மாதிரியான அழுத்தத்தை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே நீங்கள் கொடுத்திருக்கலாம் அல்லவா?

கலைஞர்:- கொடுத்தோம். உங்களுக்கே தெரியும் அது. கடந்த கால ஏடுகளிலே உள்ள செய்திகளை எடுத் துப் படித்துப் பார்த்தால் எப்படிப்பட்ட நடவடிக் கைகளிலே நாங்கள் ஈடுபட்டோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், அந்தக் கருத்துக்கள் யார் யாரால் பாழ்படுத்தப் பட்டன என்பது கூட நாடறிந்த உண்மை.
தமிழ் ஈழமே

செய்தியாளர்:- உலகத்தின் பார்வை ஒட்டு மொத்த மாக இதிலே திரும்பியிருக்கிறது. எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்:- என்னைப் பொறுத்தவரையில் அது தான் குறிக்கோள். நான் அண்மையிலே என்று மாத்திர மல்ல, கடந்த காலத்திலே பெரிய பத்திரிகைகளின் நிருபர்கள் சில பேர் உங்களு டைய நிறை வேறாத கனவு என்ன என்று என்னிடம் கேட்ட போது, தமிழ் ஈழம் தான் என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே அந்த கனவு நிறைவேறுகிறவரை - அது உருவாகிற அளவுக்கு என்னுடைய போராட்டமும் இருக்கும்.

செய்தியாளர்:- தற்போது அய்.நா.வில் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் இந்திய, இலங்கை உறவுகள் பாதிக்காதா?
கலைஞர்:- இப்போது அதைப்பற்றியெல்லாம் சொல்ல முடியாது.
எப்படிப்பட்ட உதவிகள் தேவை?

தமிழ் ஓவியா said...

செய்தியாளர்:- இலங்கைத் தமிழர்களுக்கு இனி மத்திய அரசு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய வேண்டும்?

கலைஞர்:- என்னென்ன செய்ய வேண்டுமென்று ஏற்கெனவே மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லி, மத்திய அரசும் அதைப் பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் ஓரளவு நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இப்போது தான் ஒரு புது திருப்பம் ஜெனீவா தீர்மானத்தின் மூலமாக ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால், மேற் கொண்டும் அந்த அடிப்படையிலே இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமா கக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என் பதையெல்லாம் யோசித்து - முடிந் தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

செய்தியாளர்:- அமெரிக்கா கொண்டு வந்த தால்தான் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதா?

கலைஞர்:- இந்தத் தீர்மானம் வந்ததால் வெற்றி பெற்றது.

செய்தியாளர்:- தீர்மானம் நிறைவேற்றப் பட்டதால், இலங்கை அரசுக்கு என்னென்ன நெருக்கடிகள் ஏற் படும்? இலங்கைத் தமிழர்களுக்கு என்னென்ன பயன் கள் ஏற்படும்?
கலைஞர்:- அவர்கள் இதுவரை இலங்கைத் தமிழர் களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடு கின்ற நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள். சவக்குழிக்களுக்குச் சென்றி ருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல் லவும் இலங்கை அரசு கடமைப் பட்டிருக்கிறது. செய்தியாளர்:- இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பயன் விளையும்?
கலைஞர்:- இதுவரையில் நடைபெற்ற கொடுமை களின் தொடர்ச்சி மேலும் நீண்டிடாமல் நிறுத்தப்படும்.

பிரபாகரன் பற்றி...

செய்தியாளர்:- புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொன்னீர்கள். தந்தை செல்வா போன்றவர்கள் அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப் போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தது, அதனால் தான் நாங்கள் போராடத் தொடங்கினோம் என்று பிரபாகரன் சொல்லி யிருந்தாரே?

கலைஞர்:- நான் பிரபாகரனின் போராட்டத்தை குறை கூறுகின்ற அளவுக்கு முட்டாள் அல்ல. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் குறிப்பிட்டு அவர்களைப் பற்றிக் கூறவே இல்லை. ஆனால் பிரபா கரனும் முகுந்தனும் - பிரபாகரனும் பத்மநாபாவும் - பிரபாகரனும் ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண் டதைத்தான் - அதிலே ரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன், இப்போ தும் அந்த நிலை வரக்கூடாது என்று வேண்டுகிறேன்.
உங்களுக்குப் பயந்தா?

செய்தியாளர்:- உங்களுக்குப் பயந்துதான், தி.மு.க. கொடுத்த நெருக்கடியால் தான் இந்திய அரசு தீர் மானத்தை ஆதரித்து அமெரிக்கத் தீர்மானத்திற்கு வாக்களித்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?

கலைஞர்:- நாங்கள் ஒன்றும் நெருக்கடி கொடுக்க வில்லை. நியாயத்தை எடுத்துச் சொன்னோம். நியா யத்தை ஏற்றுக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டது.

செய்தியாளர்:- இறுதிப் போர் நடைபெற்றபோ தும் நீங்கள் இதே நியாயத்தை எடுத்துச் சொன்னீர்கள். அப்போது ஏன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வில்லை?

கலைஞர்:- அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. காலையில் சாப்பிடவில்லை என்றால், மத்தியானம் சாப்பிடும் போது, காலையில் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்கக் கூடாது. செய்தியாளர்:- இலங்கை அதிபர் ராஜபக்சே தான் கொடுமைகளுக்கெல்லாம் காரணம், அவர் சர்வதேச குற்றவாளி என்று தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே? கலைஞர்:-இப்போதுதான் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறி யிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...

ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில மீடியாக்கள்!

சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர்.

வழக்கமாகவே ஈழப் பிரச்சினை என்றாலே வட இந்திய மீடியாக்களுக்கு வேப்பங்காயாக கசப்பது தெரிந்த விஷயம்தான். இலங்கை அரசு, இலங்கை ராணுவம், இலங்கைத் தரப்புக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து வட இந்திய மீ்டியாக்கள், குறிப்பாக ஆங்கில மீடியாக்கள் பிரசுரிப்பது, ஒளிபரப்புவது வழக்கம்.

இலங்கைப் பிரச்சினை என்னவென்றே அவர்களுக்கு முழுமையாக புரியாமல் போனதே இதற்குக் காரணம். இதனால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்சினையை அவர்கள் சரிவர அணுகவில்லை. இது வரலாற்று உண்மை. ஆனால் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த ஞானத்துடனும், சமயோஜிதத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும ஈழப் பிரச்சினையை அணுகியவர் இந்திரா காந்தி என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லால் அத்தனை பேருக்கும் தெரியும்.

இதனால்தான் இந்திரா காந்தியின் ஆசியோடு, எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார், பயிற்சியளித்தார், ஈழப் பிரச்சினையில் இந்த இரு தலைவர்களும், தமிழர்களுக்கு ஆதரவாக நின்றனர், தமிழர்களின் உணர்வுகளோடு கலந்திருந்தனர் - இருவருமே பிறப்பால் தமிழர்கள் இல்லை என்றாலும் கூட.

இன்று வரை ஈழப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொண்ட இந்தியத் தலைவர்கள் யார் என்றால் இந்த இருவரை மட்டுமே தமிழர்களால் நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் சரியான கோணத்தில் சிந்திக்காமல் போனதாலும், சிந்திக்கத் தவறியதாலும்தான் ஈழப் பிரச்சினை வேறு வேறு ரூபத்தில் மாறிப் போய் இன்று ஒரு 'தீவிரவாத' இயக்கத்திடம் சிக்கி இலங்கை மீண்டுள்ளதாக ஒரு கருத்து வலுப்பட்டுப் போகக் காரணமாகி விட்டது. ஈழத்தில் நடந்தது ஒரு இனப் பிரச்சினை என்பது ஆங்கில மீடியாக்களுக்குப் புரிவதில்லை.

செர்பியா, போஸ்னியா, குர்து இன மோதல்கள், பாலஸ்தீன மோதல்கள், தைமூர் மோதல்கள் மட்டுமே அவர்களுக்கு இனப் பிரச்சினை. ஈழத்தில் நடந்தது 'தீவிரவாதப் போர்' என்பது அவர்களது கருத்து.

ஈழத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பார்வையுடன்தான் ஈழப் பிரச்சினையை பார்க்கின்றனரே தவிர மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பார்க்க அவர்கள் தவறி வருகின்றனர். ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறார்கள், பெண்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், எந்த அளவுக்கு சித்திரவதையை அனுபவித்தார்கள், எப்படியெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள், எப்படியெல்லாம் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு சொட்டு கண்ணீரைக் கூட இந்த வட இந்திய மீடியாக்கள் சிந்தவில்லை - ஆனால் சானல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களம் வீடியோவைப் பார்த்து நானும் ஒரு சிங்களன் என்று கூறிக் கொள்ள வெட்கமாக, வேதனையாக உள்ளது என்று தனது மகன் கூறியதாக சொல்லி கண்ணீர் வடித்தார் சிங்களத்து சந்திரிகா குமாரதுங்கா.

தமிழ் ஓவியா said...

அதாவது மனித நேயம், மனித உரிமை குறித்த அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இலங்கையில் நடந்த கொடூரம் குறித்து நிச்சயம் துடித்துப் போவார்கள். உணர்வு இருப்பவர்கள் அப்படித்தான் ரியாக்ட் செய்ய முடியும். சிங்களராகவே இருந்தாலும் கூட சந்திரிகா அதைத்தான் வெளிப்படுத்தினார், நாங்கள் செய்தது தவறு என்றார் வெளிப்படையாக.

ஆனால் எங்கேயோ சிரியாவில் நட்நத தாக்குதல்களைப் பற்றியும், இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும், ஈரானின் நிலை என்ன என்பது குறித்தும் மாய்ந்து மாய்ந்து செய்தி போட்டுத் தாளித்தெடுக்கும் ஆங்கில மீடியாக்களுக்கு, அவர்களுக்கு வெகு அருகே ஈழத்தில் நடந்து முடிந்த ஒரு மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து கவலைப்பட நேரமில்லை, அதுகுறித்து அவர்கள் அக்கறை காட்டக் கூட மறுக்கிறார்கள்.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை -இந்த தீர்மானமே ஒரு வலுவான, உருப்படியான தீர்மானம் இல்லை, அதையும் கூட இந்தியா கடைசி நேரத்தில் திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்து விட்டது - இந்தியா ஆதரிக்கக் கூடாது என்ற ரீதியில்தான் ஆங்கில மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கு வசதியாகப் போய் விடும். அப்படி நடந்தால் இந்தியாவுக்குப் பேராபத்து என்ற ரீதியில் மறைமுகமாக மத்திய அரசை நெருக்கி வந்தன. ஆனால் ஈழப் படுகொலைகளுக்கு நிவாரணம் தேட வேண்டும், அதற்கான ஒரு வழி இப்போதாவது பிறந்திருக்கிறதே என்ற கவலை அவர்களுக்கு இல்லை.

தமிழ் ஓவியா said...

இப்போது தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவைத் தெரிவித்து வாக்களித்ததை பெரும் எரிச்சலுடன் தங்களது செய்திகளில் காட்டி வருகின்றன ஆங்கில மீடியாக்கள். அதிலும் ஒரு இதழ், ஒரு படி மேலே போய், கருணாநிதி ஈழத் தமிழர்களைப் பிடித்த சாபம். இவரால்தான் இன்று சீனா, இந்தியாவுக்குப் பெரும் மிரட்டலாக உருவெடுக்கக் காரணம் என்று மி்கக் காட்டமாக சொல்லியுள்ளது.

இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனா வந்து விடும், பாகிஸ்தான் வந்து விடும் என்று ஆங்கில மீடியாக்கள் பதறுகின்றன, துடிக்கின்றன. நாம் இலங்கையை ஆதரித்தபோதும் கூட இதுதானே நடந்து வந்தது. ஹம்பந்தோட்டா மூ்லம் சீனா, இலங்கைக்குள் நுழையவில்லையா..?. கச்சத்தீவு அருகே போனாலே சுட்டுத் தள்ளுகிறார்களே, இந்திய மீனவர்களை -அதாவது தமிழக மீனவர்களை. அது நியாயம்தானா..?

கச்சத்தீவில் சீன ராணுவம் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகிறதே, அதுகுறித்து நமது மீடியாக்களுக்குக் கவலை இல்லையா..? அது மட்டும் இந்தியாவுக்குப் பாதுகாப்பானதா...? ஈழத்தில் துடிக்கத் துடிக்க சிறார்கள் என்றும் கூட பாராமல் கொடூரமாக குருவியைச் சுடுவது போல சுட்டுக் கொன்ற செயல் எல்லாம் மறந்து விடக் கூடிய சாதாரண குற்றங்கள்தானா...?

ஈழத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தமிழர்கள் போராடிய காலத்தில் ஒரு சீனரையும் இலங்கையின் பக்கம் நம்மால் பார்க்க முடியவில்லை. இந்தியாவின் எதிரிகள் யாரும் அங்கு ஊடுறுவ முடியவில்லை. இந்தியா மிக மிக பத்திரமாகவே இருந்தது. இந்த உண்மையை ஆங்கில மீடியாக்கள் மறந்தது ஏன்...?

உண்மையிலேயே இந்தியாவை நம்பகமான நண்பனாக இலங்கை நினைத்திருந்தால், நிச்சயம் அது சீனாவின் பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ போயிருக்காது. ஆனால் இந்தியாவை மிரட்டத்தான், இந்தியாவை பணிய வைக்கத்தான் சீனாவின் பக்கம் போனது, பாகிஸ்தான் உதவியையும் நாடியது. எனவே இலங்கையின் உண்மையான நோக்கம், தமிழ் இனத்தை பூண்டோடு அழிப்பது, அதற்கு இந்தியாவை வழிக்குக் கொண்டு அதன் பரம விரோதிகளிடம் நட்பு பாராட்டுவது.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாதான் பெருமளவில் உதவி செய்தது. இதை ராஜபக்சேவே வெளிப்படையாக சொல்லியுள்ளார். இந்தியாவுக்காக நாங்கள் போர் புரிந்தோம் என்றும் அவர் கூறினார். இப்படிச் சொல்லிக் கொண்டே சீனா, பாகிஸ்தானுடனான உறவையும் அவர் வலுப்படுத்தியே வருகிறார். இப்படிப்பட்டவரை எப்படி இந்தியா நம்ப முடியும்?.

இலங்கை இப்படி செய்வது சரிதான், அப்போதுதான் இந்தியாவுக்கு ஆபத்து இருக்காது என்று கூற வருகின்றனவா ஆங்கில மீடியாக்கள்...?

இதற்கெல்லாம் ஆங்கில மீடியாக்களிடம் பதில் இருக்காது. இருந்தாலும் சொல்ல மாட்டார்கள். அவர்களது பேச்சையும், எழுத்தையும் பார்த்தால் சிங்களத்துக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற பயம்தான் தூக்கலாக தெரிகிறது.

அகிம்சையை உலகுக்குக் கற்று கொடுத்த நாடு நமது இந்தியா. மகாத்மா காந்தியடிகளையும், புத்தரையும் பார்த்த பூமி இது. இங்கிருந்து போன பெளத்தம்தான் இன்று இலங்கையின் முக்கிய மதம். ஆனால் ஒரு பெளத்தன் செய்யும் காரியத்தைத்தான் சிங்களர்கள் செய்திருக்கிறார்களா என்பதை நடுநிலையோடு அலசிப் பார்க்க முன்வர வேண்டும் ஆங்கில மீடியாக்கள். புத்தர் இப்படித்தான் போதித்தாரா...?

செத்தவன் தமிழன் என்பதையெல்லாம் கூட மறந்து விடுவோம். சக மனிதனை இன்னொரு மனிதன் கொடூரமாகக் கொல்கிறான். அதைப் பார்த்து பிற மனிதர்கள் துடிக்கக் கூடாதா, அப்படித் துடித்தால் அது தவறா. அதைத் தட்டிக் கேட்க ஒருவன் கிளம்பினால் அதை ஆதரிப்பதும் தவறா..? ஆங்கில மீடியாக்கள் இனியாவது மனிதாபிமானத்துடன் யோசிக்கட்டும்...!--------------http://tamil.oneindia.in/news/2012/03/23/tamilnadu-indian-media-its-view-on-unhrc-resolution-aid0091.html

தமிழ் ஓவியா said...

பட்டபின்....


உலக நாடுகள் இலங்கை அதிபர் 21-ஆம் நூற்றாண்டின் இட்லர் ராஜபக்சேவை நறுக் கென்று மூளைதெறிக்க குட்டிய பிறகும்கூட, பக்சே வின், ராஜத் திமிர் அடங்கவில்லை போலும்!

ஜெனிவாவில் தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், நடுநிலை வகித்த நாடுகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்த இந்த நாட் டாண்மைக்காரர் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை மிரட்டியும் உள்ளார். அப்படி வாக்களித்த நாடுகள் பயங்கரவாத விளைவுகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டி வரும் என்று எச்சரிக்கை யும் செய்துள்ளார்.

அரச பயங்கரவாதம் என்று சொல்லுவார்களே அதற்கு முற்றிலும் பொருந் துகிற ஆட்சியின் தலைவர் பயங்கரவாதத்தைப்பற்றி திருவாய் மலர்வது 21ஆம் நூற்றாண்டின் பொறுக்கி எடுத்த நகைச்சுவை!

வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானப் பேச்சுக்கு வந்த வர்களையும் வேட்டை யாடிய கும்பல்; 12 வயது சிறுவனைக்கூட கொடூர மாகக் கொன்ற குரூரர் - பச்சிளம் சிறுவர்கள் வசித்து வந்த விடுதியைக் கூட விட்டு வைக்காமல், மருத்துவமனைகள் என்பதைக்கூட பாராமல் குண்டு வீசி கொலையாட் டம் போட்ட ராஜபக்சேவா பயங்கரவாதம் பற்றி வாய் திறப்பது?

பிரிட்டனின் 4 ஆவது அலைவரிசைக் காட்சியைக் கண்டு கல்லும்கூட கதறுமே! ஆனால் புத்தர் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் போதனை களின் கழுத்தை நெரித்து ரத்தக் குளியல் நடந்தும் நரிகளா இதோபதேசம் செய்வது?

இந்தியாவுக்கு இந்த நேரத்தில் ஒன்று! எவ் வளவுதான் இலங்கைக்கு வெண் சாமரம் வீசினாலும், ஒத்தடம் கொடுத்துப் பார்த்தாலும், திருத்தத் தீர்மானம் கொண்டு வந்து முட்டுக் கொடுத்துப் பார்த் தாலும், கடைசியில் இந்தி யாவுக்கு மிஞ்சியது இலங் கையின் கறுப்புப் பட்டியல்தான்!

வங்கதேசப் போரில் கூட இந்தியாவின் வான் வெளியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பறக்கக் கூடாது என்று இந்தியா எச்சரித்த நிலையில், தமது விமான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பச்சைக் கொடி காட்டியது இந்தச் சுண்டைக்காய் இலங்கை என்பதைக்கூட மறந்து விட்டு, தமிழினப் பிணங்கள்மீது நர்த்தனம் ஆடும் கழுகுக்குக் கைலாகு கொடுக்க எப் படித்தான் இந்தியாவுக்கு மனசு வருகிறதோ தெரிய வில்லை!

பட்டபின் புத்தி கொள் முதல் பெறுவது தான் பகுத்தறிவுக்கு அழகு!

தேறா நட்புதீரா இடும்பை தரும்

- மயிலாடன் 25-3-2012

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்கு ராஜபக்சே எச்சரிக்கையாம்!


சென்னை, மார்ச் 25- அய்.நா. தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொட ரில் இலங்கை எதிர் கொண்ட தோல்வி குறித்து விடுதலைப்புலி களின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவதாக வும், ஆனால் எந்த சூழ் நிலையிலும் பயங்கரவாத அச்சுறுத் தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

தனது பேச்சின்போது இந்தியா உள்ளிட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளை மறைமுகமாக குறிப் பிட்ட ராஜபக்சே, "எங் களுக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்பு கிறேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற் கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர் களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம். இது அவர் களுக்கு பின்னர்தான் புரியும்'' என்றும் எச்சரித்தார். 25-3-2012

தமிழ் ஓவியா said...

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த `செய்தியாளர்களின் கை-கால்களை உடைப்பேன்' இலங்கை அமைச்சர் மிரட்டல்!


கொழும்பு, மார்ச்.25- ஜெனீவாவில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இலங்கையில் செய்தியாளர்களாக பணிபுரிந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் 3 பேர் ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்கள். பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அபயசேகரா ஆகிய அந்த மூன்று பேரும் கொழும்பு திரும்பினால் அவர்களுடைய கை-கால்களை உடைப்பேன் என்று, இலங்கை மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதற்கிடையில் இலங்கை அரசின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான `ஜே.எச்..'வின் செய்தி தொடர்பாளர் உதய காமன்பிலா, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தி இருக்கிறார்.25-3-2012

தமிழ் ஓவியா said...

தினமலரின் சிண்டு துடிப்பது ஏன்?

அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்கு தி.மு.க.வின் பங்கு அதிகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறிவிட்டாராம்.

பொறுக்குமா பூணூல் தினமலருக்கு? மாநிலங்கள் அவையிலே தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்களே, என்று கிண்டல் செய்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில், தனி ஈழக் கோரிக்கையில் ஒத்த கருத்துள்ளவர்கள் தேவை இல்லாமல் மாறுபாடான வற்றைப் பேசி ஒற்றுமை உணர்வைச் சிதைக்காதீர்கள் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கூறிய கருத்து பார்ப்பன வட்டாரத்தைக் கிலி அடையச் செய்திருக்கிறது. அந்த நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக இது போன்ற சில்லுண்டி வேலையில் சிண்டு ஏடு இறங்கியுள்ளது.

தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு உலகில் ஏற்பட்டு விட்டால் அது ஆரியத்திற்கு ஆபத்து என்பதே அவாளின் கணிப்பு. அவர்களால் அப்படியொரு நாட்டைப் பெற முடியாது. காரணம் அவர்கள் நாடற்ற லம்பாடிக் கும்பலாயிற்றே! தனக்குக் கிடைக்காதது, மற்றவர்களுக்கு எவ்வகையிலும் கிடைத்து விடக் கூடாது என்ற பரந்த எண்ணம் பார்ப்பனர் களுக்கு!

பார்ப்பனர்களின் குறி திராவிடர் கழகத்தின் மீது தானே

குறிப்பு: ஞாயிற்றுக் கிழமைகளில் இரு இதழ்களை வெளியிடும் தினமலர் இன்று இரு இதழ்களிலும் டவுட் தனபாலு திராவிடர் கழகத்தை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறது. 25-3-2012