பொது ஜனங்களே, மகா ஜனங்களே, உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்னைகளா? கவலைப்படாதீர்கள்!
கஷ்டப்பட்டு சம்பாதிக்காதீர்கள்; முயற்சி செய்து முன்னேற நினைக்காதீர்கள்.
திட்டங்கள் தீட்டி தீர்வு காண முயற்சிக்காதீர்கள்.;
பெரிய செலவு இல்லை - மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.
இதோ ஒரு சுருக்கு வழி- கு(கி)றுக்கு வழி.
சொத்து வழக்கா? குடும்பத்தில் பாகப்பிரச்னையா? தம்பதிகளுக்குள் விவாக ரத்து பிரச்னையா?
இவற்றிலிருந்து விடுபட ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடையுங்கள்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்யும் வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்புக் கிடைத்த பின் வடை மாலை சாத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் நஷ்டமா?
கவலைப்படாதீர்கள். லட்சுமி குபேரருக்கு நவ நிதிகளை வாரி வழங்கியவர் சிவ பெருமான். அவருக் குரிய பிரதோஷ நாளில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.
---------- தினமலர் ஆன்மீக மலர்
பரதநாட்டியம் கற்கவேண்டுமா?
பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டுமா? இசைக் கருவிகளை மீட்டிட ஆசையா? கல்விக் கடாட்சம் கிட்ட வேண்டுமா?
இதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? இதோ ஓர் எளிய வழி இருக்கவே இருக் கிறது. நாம் ஏதாவது மந்திர உபதேசமோ, குரு உபதேசமோ பெறுவதென்றால் அதை மாசி மகத்தன்று வைத்துக் கொள்ள வேண்டும். மந்திரம் பளிச்சென்று சித்தியாகும். நல்ல பலனைக் கொடுக்கும்.
அதே போல புதிதாக பரதநாட்டியம், இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, கணினி போன்ற கலை கல்விப் பிரிவுகளை மாசி மக நாளன்று தொடங்குவது மிகவும் விசேஷமாம். ஏனெனில் சிவபெருமானுக்கே முருகப் பெரு மான் பிரணவ உபதேசம் செய்த நன்னாள் இது.
-------------- தினகரன் ஜோதிட சிறப்பு மலர்
ரொக்கமும் சொர்க்கமும் கிடைக்க வேண்டுமா?
உங்களுக்கு சொர்க்கமும், ரொக்கமும் கிடைக்க வேண்டுமா? இதற்காக சிரமப்பட வேண்டாம்.
ஏகாதசியன்று சொர்க்க வாசலில் நுழைந்து வாருங்கள்.
- தினத்தந்தி ஜோதிடம்
கையில காசு வாயில தோசை
இவ்வளவு கு(கி)றுக்கு வழிகள், சுருக்கு வழிகள் இருக்கும் பொழுது அரசாங்கம் எதற்காக? சட்டங்கள் எதற்காக? திட்டங்கள்தான் எதற்காக?
குறிப்பு: இப்படி வெளியிடுகிற இதழ்களின் முதலாளிகளோ, கூலி எழுத்தாளர்களோ இவற்றை மட்டுமே நம்பி வேறு எதையும் செய்யாமல் பூஜிக்கிறார்களா? புத்தியைப் பயன் படுத்திப் பார்க்கவும்.
-------------- கருஞ்சட்டை 3-3-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
மூக்கு ஒற்றுமை
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தொப்புள் கொடி உறவுள்ள தமிழகத் தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று, ஆட்சி பீடம் ஏறி அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கடமை என்ன? வளமை போல இலங்கையைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனிதநேயத்தை மறக்க மாட்டோம் என காட்டப்போகிறதா?
டவுட் தனபாலு: அப்படியே இன்னொரு கேள்வியும் கேளுங்களேன். தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்று மத்திய ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தி.மு.க. என்ன செய்யப்போகிறது? வளமை போல் இலங்கையைப் காப்பாற்றப்போகிறதா? அல்லது நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம், நேர்மையோடு நின்று, மனித நேயத்தை மறக்கமாட்டோம் என காட்டப் போகிறதா? - தினமலர் 4-3-2012
திராவிடர் கழகம் சொல்வது இருக்கட்டும். (அது எப்பொழுதுமே தெளிவாகக் கூறி வந்துள்ளது.) தி.மு.க. என்ன செய்யப் போகிறது என்பதும் இன்னொரு புறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சினையில் தினமலர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் என்ன செய்ய விருப்பதாக உத்தேசம்?
இலங்கை அரசு இப்பிரச்சினையில் தண்டிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? பார்ப்பனக் கும்பலின் நிலைப்பாடு என்ன?
ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சு.சாமி சொன்னது பற்றி டவுட் தனபாலுகள் கண்டு கொண்டதா? இது போன்ற விஷயங்களில் எல்லாம் டவுட் தனபாலுக்கு சந்தேகமே வராது. ஏனென்றால் சந்தேகமே இல்லாமல் பார்ப்பனர்களுக்கும், சிங்கள இனத்துக்கும் ரத்த உறவு உண்டே! ஜெயவர்த்தனே அப்படிக் கூறியதுண்டே! (மூக்கு ஒற்றுமை!)
---"விடுதலை” 4-3-2012
டுபுக்கு இதுல நீ சொல்ற தினகரன் பத்திரிகை தான் பகுத்தறிவு பன்னாடை தலைவர்களோட ஆசியோட வெளிவருவது
Post a Comment