- நேற்றைய தொடர்ச்சி...
தமிழர்கள் ஏன் தாழ்ந்தனர்? ஏ! தாழ்ந்த தமிழகமே! என்று அண்ணா முன்னர் எழுதினார். இப்போது தமிழர் கள் ஏன் தாழ்ந்தார்கள் என்பதற்குப் பலரும் விடை தேடிக் கொண்டு இருக் கின்றனர். ஆனால் தமிழ்த் தென்றல் 60 ஆண்டுளுக்கு முன்பே தந்தை பெரியார் வழியில், ஆம்! தந்தை பெரியார் வழியில் சிந்தித்து அற்புதமாக விடை கண்டு விட்டார். ஆரியத்தை நம்பியதால் தமிழன் அழிவுற்றான், ஆரிய மாயையில் சிக்கிய தால் அழிவுற்றான், ஆரியச் சூழ்ச்சியால் பலியானான், ஆரியத்தினால் வீழ்ந்தான் என்பதை எவ்வளவு துல்லியமாகத் தமிழ்த் தென்றல் எடுத்துரைக்கிறார் பாருங்கள்.
ஆரியத்தின் மோட்சலோக பித்த லாட்டத்தை ஏற்று இவ்வுலக வாழ்க் கையே வீண் என்றும், அறம்,பொருள், இன்பம் இவை யாவற்றையும் துச்சமெனத் தள்ளிவிட்டு மோட்ச லோகத்தை எதிர் பார்த்து நிற்பதே பேரின்பம் என்றும், கருதத் துவங்கிய திலிருந்துதானே தமிழர்கள் தாழ்ந்தனர்? தமிழகம் தாழ்ந்தது? வேதாந்தம் தமிழ்நாட்டில் வேர் விடத் தொடங்கிய பிறகுதானே தமிழன் சாகத் தொடங்கினான்? தமிழன் தன்மான உணர்ச்சி அற்றுப் போகக் காரணமாயிருந்தது இவ்வுலக வாழ்வே ஒரு மாயை (ஐடடரளடி) என்கிற ஆரிய தத்துவம்தானே? ஆரிய தத்துவத்தின் அடிப்படை இதுவல்ல என்று யாராவது கூறமுடியுமா? திராவிட தத்துவம் இதற்கு மாறுபட்டதல்ல என்றாவது இந்த மந்திரிகளால் எடுத்துக் காட்ட முடியுமா?
உலக வாழ்வு மாயை என்கிற ஆரிய தத்துவம் ஆட்சிக்கு வந்ததும் உலக வாழ்க்கையே மாய்ந்து போயிற்றே இந்நாட்டைப் பொறுத்தவரை! உயிருள்ள ஒரு பொருளில் கூட மலர்ச்சியைக் காண முடியவில்லையே? மனிதனே கருகி விட்டான் என்றால் மற்றவை கருகாமலா இருக்கும்? இந் நாட்டைப் பொறுத்தவரை எல்லாம் மாயை என்ற அளவில்அன்பும் அறனுங்கூட மாய்ந்து விட்டனவே ஆரிய ஆதிக்கத்தால்! அறமும் அன்பும் இன்றேல் பின் எவைதான் இருக்கும்? உலகில் எவை, எவை இல்லையோ அவை யாவும் கற்பனைக் கைலாயத்திற்கே பறந்து போய்விட்டனவே. உலகமே உண்மை யிலே பாழாகிவிட்டதே!
திரு.வி.க. தந்தை பெரியாரை விட, பேரறிஞர் அண்ணாவை விட ஆரியத்தின் கொடுமை கண்டு பொங்குபவராகக் காணப்படுகிறார். அதனால்தான் ஆரிய மாயை அகற்றித் திராவிடத்தில் மறுபடியும் புத்துணர்ச்சியை உண்டாக்கப் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்திற்கு நீங்கள் யாவரும் தன்மான தமிழ்மகன் ஒவ்வொருவனும் உரிமை வேட்கை உதவி கொண்ட ஒவ்வொரு தொழிலாளர் தோழரும் உதவி புரிதல் வேண்டாமா? என்கையில் இன்றைக்குத் திரு.வி.க. மேடையேறித் திராவிடர் கழகம் போற்றி உரைப்பதாகத் தோன்றுகிறது.
மேலும் அவர் கூறும் இவை இன்றும் திராவிடர் கழகத்திற்குக் கூறும் அறி வுரையாக விளங்குகிறது. நாம் மற்ற தெலுங்கு, கன்னட, மலையாள பிரதேசங் களிலும் நமது கொள்கைகளைப் பிரச் சாரம் செய்ய வேண்டும். இப்போது வடமொழியின் ஆதிக்கத்தை உணர்ந்து அதை ஒழிக்க முயற்சி நடந்து வருகிறது. நாமும் சேர்ந்து பிரச்சாரம் செய்வோ மானால் விரைவில் வடமொழிக் கலப்பு எடுபட்டு அவர்கள் தாமும் தூய தமிழர்கள்தான், திராவிடர்கள்தான் என்பதை உணர்வார்கள். அவர்கள் பந்தமும் நமது ரத்தமும் ஒன்றுதான். அவர்களுடைய பழக்க வழக்கங்களும், ஆசா பாசங்களும் நம்முடைய பழக்க வழக்கங்களும், ஆசா பாசங்களும் ஒன்றாகத்தான் இருந்து வருகின்றன. ஆகவே நாம் நெடுநாள் பிரிந்திருக்க முடியாது, பிறர் என்னதான் சூழ்ச்சி செய்தபோதிலும். எனவேதான் நாம் சில எல்லையைக் குறித்துக் கொள்ளவில்லை. பரந்த உணர்ச்சிகள்தான் நமக்கு வேண்டும். இந்த வரையில் திராவிடர் கழகத்தின் போக்கு மிகவும் பாராட்டுக் குரியதேயாகும்.
கடந்த ஆண்டு வைக்கத்தில் தமிழர் தலைவர் தலைமையில் கூடினோம். அங்கே மலையாள நாட்டில் பெரியாரின் கருத்து விதைகள் விதைக்கப்பட்டன. இந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் தமிழர் தலைவருக்கு ஆந்திரர்கள் அளித்த உற்சாக வரவேற்பு, தெலுங்கு மொழியில் பெரியாரைச் சுயமரியாதை இயக்கத்தை வாழ்த்தி முழங்கிய உணர்ச்சி பூர்வமான கோஷம் திரு.வி.க. அன்று சொன்னது போல் மெல்ல எல்லைக் கற்களை அகற்றிப் பரந்த பகுத் தறிவு நிலம் உருவாகத் துணை புரிகிறது. விமான நிலையத்திலிருந்து விசாகப் பட்டினத்தில் விழா நடைபெற்ற இடம் வரை பெரியார் இயக்கக் கொடி பறந்தது என்பது நினைத்துக் கூடப் பார்க்க இய லாத காட்சி. பெரியார் உலக மயமாவதற்கு முன் இந்திய மயமாவதின் ஆதாரம்தான் இது. திரு.வி.க.வின் துணிச்சல் இருக் கிறதே, அது தந்தை பெரியாரின் துணிச் சலுக்கு ஈடாகப் பளிச்சிடுகிறது. எப்படி என்று பாருங்கள் இதை. ஆரியர்களைப் பற்றிய திரு.வி.க.வின் வாக்குமூலம் இது.
ஆரியர்கள் மனிதர்கள் அல்லர். ஒரு நாகரிகமற்ற மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டிகள்.
இன்று திராவிட இயக்கம் பெற்ற வளர்ச்சி, செல்வாக்கினால், ஆரியர் களைப் பார்த்து அளவின்றிப் பழிக்க, அவர்களின் பொல்லாங்குத் தனத்தை எடுத்துரைக்கலாம். ஆனால் 60 ஆண்டு களுக்கு முன் அது எளிதல்லவே.
ஆலய வழிபாடா, அரசுப் பதவியா, சமூக வாழ்க்கையா எங்கும் சர்வமும் பார்ப்பன மயமாயிருந்த வேளையில் அவர்களைப் பார்த்துக் காட்டுமிராண் டிகள், அதுவும் நாகரிகமற்ற, மனிதத் தன்மை அற்ற காட்டுமிராண்டிகள் என்று கூறவேண்டுமானால் எத்தனை, அல்லது இலக்கணப்படி கூறுவதாயின் எவ்வளவு துணிவு இருக்கவேண்டும்? இனப் போராட்டம் என்பது, சமூகப் போராட்டம் என்பது அதிலும் ஆரியத்தைப் பார்த்துப் போராட்டம் நடத்துவது என்பது மிகக் கஷ்டமான வேலைதான் என்று உணர்ந்து கூறும் வகையில்தான் அவ்வாறு அவர்களை விளித்தார்.
வாய்மையும், தூய்மையும் நிறைந் துள்ள திராவிடர்கள் அத்தகைய காட்டு மிராண்டிகளுடன் போராட்டம் நடத்துவது கஷ்டம்தான். என் செய்வது? போராட்டம் நடத்தித்தான் ஆகவேண்டும்! திராவிட சமுதாயம் மீண்டும் தம் இன்ப வாழ்க் கையை எய்த வேண்டுமானால், இப்படிப் பேசப் பேச எங்கெங்கோ போய்க் கொண்டே இருக்கும், சிலர் திராவிட நாடு வந்துவிட்டால் எல்லோரும் நாஸ்திகர் களாக இல்லை இல்லை என்று அடித் துக் கூறுகிறார்.
திராவிடருக்கு வேண்டிய பண்பாகத் திரு.வி.க. வலியுறுத்துவது இது:
நான் ஒரு பரம ஏழைதான் என்கிற போதிலும், ஒரு போதும் என்னுடைய உரிமை உணர்ச்சியை யாருக்காகவும் விட்டுக் கொடுத்தேனில்லை. என் உணர்ச்சியை யாருக்கும் எதற்காகவும் அடிமைப் படுத்தினேன் இல்லை. திரா விடன் ஒவ்வொருவனுக்கும் இவ்வுணர்ச்சி இருத்தல் அவசியம். திராவிட நாட்டை மாற்றியமைக்கும் சக்தி திராவிடப் பெண்களிடம்தான் உள் ளது. அவர்கள் மனது வைத்தால் இந் நாட்டில் ஒரு காந்தியல்ல, 1000 காந்தி களை, ஒரு பெரியாரை அல்ல, லட்சக் கணக்கான பெரியார்களை உண்டாக்க முடியும். மேலும் அவர், திராவிடம் உயரவேண்டுமானால் உங்கள் வாழ்க்கை வளம்பட வேண்டுமானால், நீங்கள் திராவிடர் கழகத்தைத்தான் பின் பற்றி நடக்க வேண்டுமே ஒழிய, வடக்கு திக்கை எதிர் பார்த்தால் கைலாயத்திற்குத்தான் வழி காட்டப்படும்.
திரு.வி.க. எதையும் மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவரோ, பேசுபவரோ அல்லர். அவர் ஆற்றிய உரை முத்துக்கள், திரு.வி.க. எனும் ஆழ்கடலின் ஆழத்து இருந்து கிடைத்தவை.
திராவிட மக்களுக்கு நல்வழி காட்ட, அவர்கள் தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வு அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார் ஆவார். இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். அதனால்தான் காந்தியையும் மிஞ்சிய அளவுக்குச் சமுதாய சீர்திருத் தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார் என்று முடித்தார்.
---------------முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 16-3-2012 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை
1 comments:
திராவிடர் இயக்க வரலாற்றுக் களஞ்சியம்
தமிழர் தலைவர் தலைமையில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சென்னை மார்ச் 17: திராவிடர் இயக்க வரலாற்றுக் களஞ்சியம் (நுஉலஉடடியீயநனயை) ஒன்றைத் தொகுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
திராவிடர் இயக்க வர லாற்றுக் களஞ்சியம் ஒன் றைத் தொகுப்பதற்கான ஆலோசனை - பூர்வாங்கக் கூட்டம் சென்னை பெரி யார் திடலில், அன்னை மணியம்மையார் அவர் களின் நினைவு நாளான நேற்று (16.3.2012) காலை 11 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டோர்
கூட்டத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவரும், காரைக்குடி அழகப்பா பல்லைக் கழகத் தின் முன்னாள் துணை வேந்தருமான முனைவர் அ. இராமசாமி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், சென் னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை முன் னாள் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், வல்லம் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் பழனி. அரங்க சாமி, பேராசிரியர் முனை வர் பு. இராசதுரை, பேராசிரியர் முனைவர் காளிமுத்து, பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் கோ. வெங்கட்ராமன், பேரா சிரியர் முனைவர் நம்.சீனி வாசன், பேராசிரியர் முனை வர் அ.கருணானந்தன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.கும ரேசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண் ணன், திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத் தின் முதல்வர் இரா. கலைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத் தலைவர் கருத்துரை
ஆலோசனைக் கூட்டத் துக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திரா விடர் இயக்க வரலாற்றுக் களஞ்சியம் (நுஉலஉடடியீயநனயை) தொகுக்கப்பட வேண்டி யதன் அவசியத்தை எடுத் துரைத்தார். அந்தக் களஞ் சியம், எப்படி அமைய வேண் டும் என்ற வழி முறைகளை யும் எடுத்துக் கூறினார்.
பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி அவர்கள் அகரவரிசையில் களஞ் சியம் அமையவேண்டும் என்ற கருத்தை வலியுறுத் தினார். ஒவ்வொரு தகவலின் கீழும் அடிக்குறிப்பு, நூல் பட்டியல் இடம் பெற வேண்டும் என்ற கருத்தைப் பேராசிரியர் பழனி. அரங் கசாமி எடுத்துக் கூறினார்.
எழுதவேண்டிய தலைப் புகளைப் பட்டியலிடும் பொறுப்பினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் எடுத்துக் கொண்டார்.
பொறுப்புகள்
இக்களஞ்சியத்தின் பொது ஆசிரியராக திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், இணை ஆசிரியர்களாக முனைவர் அ.இராமசாமி, பேராசிரியர் முனைவர் அ.கருணானந்தம், முனை வர் பழனி. அரங்கசாமி, முனைவர் பு. இராசதுரை ஆகியோர் இருப்பர். ஒருங்கிணைப்பாளராக முனைவர் ந.க. மங்களமுரு கேசன் பணி யாற்றுவார். பேராசிரியர் அ.கருணானந் தம் நன்றி கூறிட ஆலோ சனைக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுற்றது. 17-3-2012
Post a Comment