வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The non-Brahmin Manifesto) ஒரு வரலாற்று ஆவணமாகும். ஆணவக் கொடி கட்டி ஆண்ட ஆரியத்தின் அங்க, மச்ச அடையாளங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய காலக் கண்ணாடி யாகும்.
சென்னை எக்சிகியூடிவ் கவுன்சிலின் உறுப்பினராக இருந்த அலெக்சாண்டர் கார்டியூ 1913 ஆம் ஆண்டில் பொதுப்பணிக் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்த புள்ளி விவரம் இந்த அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டது.
1892 முதல் 1904 வரை நடைபெற்ற சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பிராமணர்கள், நூற்றுக்கு 95 சதவிகிதமாகும். கடந்த ஆண்டுகளில் மைசூர் மாகாணத்தில் மைசூர் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளில் 85 சதவிகிதத்தை பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டனர். சென்னை மாகாணத்தில் உதவிப் பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் போது அதே 20 ஆண்டுக் காலத்தில் பிராமணர் 17 பேராகவும், பிராமணரல்லாதார் 4 பேராகவும் எடுக்கப்பட்டனர். கணக்குத் தணிக்கைத் துறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் இதே மாதிரி முடிவே இருந்தது. சென்னை மாகாணத்தில் உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்க்கு 77 இடங்கள், பிராமணரல்லாதாருக்கு 30 இடங்கள், ஏனைய இடங்கள் முகமதியர், இந்திய கிறித்துவர், அய்ரோப் பியர், ஆங்கிலோ இந்தியர்.
எக்சிகியூட்டிவ் கவுன்சில் உறுப்பினர் அலெக்சாண்டர் கார்டியூ அவர்களால் அளிக்கப்பட்ட இந்தப் புள்ளி விவரங்களைத்தான் தம் அறிக்கையில் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்டார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பிராமணர் 452 பேர், பிராமணரல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இந்தியர்கள் 74 பேர். இதேபோன்ற புள்ளி விவரங்கள் பார்ப்பனர் அல்லாதார் கொள்கைப் பிரகடனத்தில் இடம் பெற்றிருந்தன.
பார்ப்பனர் அல்லாத இயக்கமான திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப்பட வேண்டிய அவசியத்தை அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தியாகராயர்.
அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த இந்து ஏடு நான்காவது துணைத் தலையங்கம் ஒன்றைத் தீட்டியது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பது என்ன?
It is with much pain and surprise that we persued the document என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மிகுந்த துயரத்துடனும் ஆச்சரியத்துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம் என்று இந்து ஏடு தலையங்கத்தில் குறிப்பிட்டு இருந்தது என்றால், பார்ப்பனர்களின் மனப்பான்மை அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலக் கட்டத்திலும் சரி, ஒரே மாதிரியாக, பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருந்தனர் - இருந்தும் வருகிறார்கள் என்பதைக் கண்கூடாக அறியலாம்.
அதே நேரத்தில் திராவிடர் இயக்கத்தின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளவும் முடியும்.
எல்லோரும் படித்தால் தகுதி, திறமை என்னாவது என்றனர். திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர் ராஜாஜி உங்களுக்கெல்லாம் படிப்பு எதற்கு? துணியைக் கிழிக்காமல் வெளுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! என்று பேசவில்லையா?
செக்கிழுப்பவனும், பீடாக்கடை வைத்திருப்பவனும் எதற்காக சட்ட மன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று பால கங்காதர திலகர் சொல்லவில்லையா?
இரண்டு முறை ராஜாஜி சென்னை மாநில ஆட்சிக்கு வந்தபோதும், அவர் செய்ததெல்லாம் பள்ளிகளை இழுத்து மூடியதுதானே!
இந்தத் தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்தது எந்த இயக்கம்?
இந்த வரலாற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, வேறு எந்த வகையில் நடந்து கொண்டாலும் , அவர்கள் யாராக இருந்தாலும், பார்ப்பனர்களுக்குப் பல்லக்குத் தூக்குபவர்கள்; அவர்களின் கையாள் களாக இருந்து செயல்படுபவர்கள் என்பது வெள்ளிடை மலை!
அவர்களை அடையாளம் காண்பீர்!
------------------”விடுதலை”தலையங்கம் 7-3-2012
25 comments:
ஏன் தோன்றியது திராவிடர் இயக்கம்? அது சாதித்தது என்ன?
வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ளாவிட்டால்
வருணாசிரம தர்மம் மீண்டும் ஆட்டிப்படைக்கும்!
சென்னை லயோலா கல்லூரியில் திராவிடர் கழகத் தலைவர் கொட்டிய சமூகநீதி இனமுரசு!
சென்னை, மார்ச் 7- வரலாற்றை நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ளாவிட்டால், உணர்வு பெறாவிட்டால் வருணாசிரமம், மனுதர்மம் மீண்டும் நம்மை ஆளும், ஆட் டிப் படைக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
சென்னை லயோலா கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற வரலாற்றுத் துறைக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொட்டிய இனமுரசம் வருமாறு:
xஒரு நூற்றாண்டுக்கு முன் லயோலா கல்லூரி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி அளிப்பதில் தன் முத்திரையைப் பொறித்தது. கல்வியளித்ததில் கிறித்துவ நிறுவனங்களுக்கு முக்கிய இடம் உண்டு.
சில பிரச்சினைகளில் எங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும், கல்விக் காக இவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நன்றி தெரிவிப்பதில் எவ்விதத் தயக்கமும் கிடை யாது.
வாழ்நாள் சாதனையாளர்
எங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரையில் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காகப் பாடுபடுவதும், அவர் விரும்பிய ஜாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்காக உழைப்பதும்தான் எனது வாழ்நாள் சாதனை என்று கருதுகிறேன். ஆனாலும், இத்தகைய விருதுகள் எங்கள் பணியில் எங்களை மேலும் உற்சாகப்படுத்தும் - அதற்காக எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.
நம்மிடையே எது பிரிக்கிறது என்பதை விட எது நம்மை இணைக்கிறது என்கிற அளவில் சில பணிகளைச் செய்யலாம்.
எதுபற்றிப் பேசுவது?
இந்தக் கருத்தரங்கில் எதுபற்றிப் பேசுவது என்று கேட்டபொழுது, என்னிடம் சொன் னார்கள், திராவிடர் இயக்க நூற்றாண்டுத் தொடக்கமாக இருப்பதால், அதுகுறித்துத் தமிழிலேயே பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் - அது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான்.
உலகில் வேறு எங்கும் இல்லாத சமுதாய அமைப்பு நம்முடையது. உலகில் எங்குமே பிறக்கும்போதே உயர்வு - தாழ்வு பேசும் ஜாதி அமைப்பு கிடையாது.
ஜாதி என்பது பாதியில் வந்ததாகும். ஜாதி அடிப்படையில் பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. உத்தியோக வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன.
சமுதாயத்திலே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடந்தன. அத் தகைய கால கட்டத்தில்தான் நூறு ஆண்டு களுக்கு முன் திராவிடர் இயக் கம் தோன்ற வேண்டிய கட் டாயமும், தேவை யும் ஏற்பட்டது.
1885 இல் காங்கிரஸ் கட்சி தோற்று விக்கப்பட்டது. தோற்றுவித்தவரும் ஒரு வெள்ளைக்காரர்தான்.
தொடக்கத்தில் வெள்ளைக்காரர்கள்தான் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித் தார்கள். அதற்குப் பின் தலைமை வகித்த வர்கள் எல்லாம் பார்ப்பனர்களே!
வெள்ளைக்காரர் ஆட்சியை வாழ்த்தித் தான் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றுகூட பாராட்டினார்கள்.
காங்கிரஸ் என்றால் பார்ப்பனர்களுக்காகத்தான்
மாநாடுகளுக்குப் பார்ப்பனர்கள் தலைமை வகித்த நிலையில், தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். உத்தியோகங்களில் இந் தியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.
இந்தியர்கள் என்ற போர்வையில் உத்தியோகங்களை அனுபவித்தது எல்லாம் பார்ப்பனர்களே!
The Political Carrier of Periyar E.V. Ramasamy என்ற ஆய்வு நூலை இ.சா. விசுவநாதன் எழுதியுள்ளார்.
அந்தக் காலக்கட்டத்தில் கல்வி வாய்ப்பு எப்படி இருந்தது என்பதை விளக்கியுள்ளார்.
1610 இல் பார்ப்பனர்களின் கல்வி ஆதிக்கம்
500 ஆண்டுகளுக்குமுன் நம் நாட் டின் கல்வி நிலை என்ன? நீலகண்ட சாஸ்திரியின் நூலிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார்.
ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) 1610 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் எழுதிய கடிதம் நாயக்க மன் னரின் கல்வியமைப்பை விளக்குகிறது. மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். அவர்கள் பல வகுப்பு களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் 200 முதல் 300 வரை இருந்தனர். அவர்கள் எல்லோரும் பிராமணர்களே! என்று குறிப்பிட் டுள்ளார்.
முதல் நீதிபதி யார் என்றால், ஒரு முத்துசாமி அய்யர்தான்; முதல் துணைவேந்தர் யார் என்றால் ஒரு சுப்பிரமணிய அய்யர்தான்!
சூத்திரர்கள் படிக்க வாய்ப் பில்லை. காரணம் வருணதருமம் தான். வருண தர்மத்தின்படி பிரா மணர்கள்தான் படிக்கவேண்டும் என்ற சாஸ்திர நிலை!
திராவிடர் இயக்கம் ஏன்?
இந்த நிலையில் சூத்திரர்களுக் கான - திராவிடர்களுக்கான உரிமை கோரும் ஓர் அமைப்புத் தேவைப் பட்டது அதுதான் திராவிடர் இயக்கம்.
நூற்றுக்கு 97 பேர்களாக நாங்கள் இருந்தும் எங்களுக்கு ஏன் கல்வி வாய்ப்பு இல்லை? உத்தியோக வாய்ப்பு ஏன் இல்லை? என்ற உரிமைக்குரல் கொடுக்கத் தோற்றுவிக்கப்பட்டது தான் திராவிடர் இயக்கம்!
சென்னை மாநகராட்சி உறுப்பின ராக இருந்த டாக்டர் சி. நடேசன்தான் தாழ்த்தப்பட்டவர்களை ஆதிதிரா விடர் என்று அழைக்கப்படவேண் டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தவர்.
மற்ற நாடுகளுக்கும் - இந்நாட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?
நீதிக்கட்சி என்ற பெயர் ஏன் இந்த இயக்கத்துக்கு?
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்திய ஏட்டுக்குப் பெயர் ஜஸ்டிஸ் - அதன் தமிழாக்கம் நீதி என்ற நிலையில் அக்கட்சிக்கே நீதிக்கட்சி என்று பெயர் அமைந்துவிட்டது.
மற்ற நாடுகளில் சமூகநீதி என்பதற் கும், இந்தியாவில் சமூகநீதி என்பதற் கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அங்கு வெறும் பொருளாதார பேதம்தான்.
இங்கோ பிறப்பின் அடிப்படையி லேயே ஜாதி பேதம்!
சமூகநீதி தேவைப்படும் இடம்!
எங்கே சமூக அநீதி தலைதூக்கி நிற்கிறதோ, அங்கேதான் சமூகநீதி தேவைப்படுகிறது - அதற்கான உரிமை இயக்கங்களும் வெடித்துக் கிளம்பு கின்றன.
அந்த நீதிக்கட்சி எதற்காகக் குரல் கொடுத்ததோ, எந்த சமூகநீதிக்காகப் போர்க் கொடியை உயர்த்தியதோ அதன் தத்துவம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதே!
அதன் 46 ஆவது பிரிவில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளதே!
பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பொரு ளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக் கான திட்டங்களை மிகுந்த அக்கறை யோடு அமல்படுத்தவேண்டும். சமூக அநீதிகளிலிருந்தும் எல்லா வகை யான சுரண்டல்களிலிருந்தும் அவர் களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற பகுதி இடம் பெற்றுள்ளதே!
அன்று கொடுத்த குரல் - இன்று அரசமைப்புச் சட்டத்தில்!
நூறு ஆண்டுகளுக்குமுன் திரா விடர் இயக்கம் கொடுத்த குரலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் இடம்பெறச் செய்துள்ளார்.
தந்தை பெரியார் அவர்களின் பணியைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது அண்ணா அவர்கள், ஞரவவபே உடிரவேசநைள வடி ய ஊயயீளரடந என்று அழகாகச் சொன்னாரே!
மற்றுமொரு முக்கிய தகவல் நமது பார்ப்பனர் அல்லாத இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன் றாகும்.
சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள்
சூத்திரர்கள் என்றால் ஏதோ பாரத ரத்னா பட்டம் என்பதுபோல நினைத் துக் கொண்டு இருக்கிறார்கள்!
சூத்திரர் என்பதற்கு மனுதர்ம சாஸ்திரம் பொருள் கூறியுள்ளது. அது எத்தனைப் பேருக்குத் தெரியும் என்பதுதான் கேள்வி.
சூத்திரன் என்பவன் ஏழு வகைப் படும்.
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்ட வன்
7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்
- என்று மனுதர்மம் - அத்தியாயம் எட்டு; 415 ஆவது சுலோகத்தில் கூறப்பட்டுள்ளதே!
நமது ஆவணங்களில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் எல் லாம் இந்த நாட்டுக்குரிய பார்ப்பனர் அல்லாத மக்களை சூத்திரர் என்று தானே குறிப்பிட்டு வந்தார்கள்.
இழிவுப்பட்டத்தை ஒழித்தது யார்?
இந்த இழிவுப்பட்டத்தை ஒழித்தது யார்? எதிராகக் குரல் கொடுத்தது யார்?
திராவிடர் இயக்கம்தானே?
பார்ப்பனர் அல்லாத இளைஞர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. மைதானத்தில் 1927 அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் நடைபெற்றது.
அம்மாநாட்டில் பனகல் அரசர், தந்தை பெரியார், டாக்டர் ஏ.இராமசாமி முதலி யார் முதலியோர் கலந்துகொண்டனர்.
திராவிடன் இதழ் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.
சென்னை அரசு தனது ஆவணங்களில் சூத்ரா என்ற சொல்லைப் பயன்படுத்து வது பெரும்பான்மையாக உள்ள பார்ப்ப னரல்லாத சமூகத்தினரின் சுயமரியாதை உணர்வை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது என இம்மாநாடு கருதுகிறது. அதனால் கடந்த கால ஆவணங்களிலிருந்து இந்த சொல்லை நீக்குவதுடன் அலுவலக ஆவணங்களில் இனி இச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாதென அனைத்து இலாகாக்களுக்கும் உடனடியாக ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டுமென அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
ஒட்டுமொத்த சமூகத்தின் சுயமரி யாதையினைப் பற்றியது இத்தீர்மானம் என அவர் கூறினார். பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரர் என்றழைக்கப்பட்டனர்; அவர் களும் இது ஏதோ தங்களுக்கு அளிக்கப் பட்ட மரியாதை என்பதாகவே கருதி, இதுவரை அதில் நிறைவு பெற்றவராகவே இருந்து வந்தனர். ரிக் வேதம், மனுதர்ம சாஸ்திரப்படி ஒரு சூத்திரன் என்பது தாசி மகன் என்றும், பார்ப்பனருக்கு சேவை செய்யவே பிறந்தவன் என்றும் பொருள் தருவதாகும். இந்தப் பட்டமும் அதன் விளக்கமும் இவர்களுக்கு உண்டாக்கும் இழிவைப் போல் இழிவைத் தருவது வேறெதுவுமிருக்க இயலாது. சில காலத்துக்கு முன் சென்னையின் வடக்குப் பகுதி கருப்பு நகரம் என்றழைக்கப் பட்டதைவிட இது மிகவும் மோசமானது. மக்களின் போராட்டத்தின் காரணமாக இப்பெயர் ஜார்ஜ் டவுன் என மாற்றப்பட் டதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பஞ் சமர் என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் இதற்கு எதிராக மறுப்பு தெரிவித்ததால், தற்போது அவர்கள் ஆதிதிராவிடர் என்ற ழைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அரசுப் பணியில் உள்ள பணியாளர்களின் வகுப்பு வாரியான எண்ணிக்கையினை அளிக்க சட்டமன்ற மேலவை கேட்டுக் கொண்டதற்காக சென்னை மாகாண சுயாட்சி அரசு பதில் அளிக்கும்போது, அரசின் பார்ப்பனச் செயலாளர் ஒருவர் சமீபத்தில் சூத்ரா என்ற சொல்லை பார்ப் பனரல்லாதாரைக் குறிக்கப் பயன்படுத்தி யுள்ளார். மத நம்பிக்கை கொண்டு இருந்த அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின்போது, எந்த அரசு அறிக்கை யிலும் இப்பட்டம் பயன்படுத்தப்பட வில்லை. ஆனால், தற்போதுள்ள உள்துறை அமைச்சரோ ஒரு பார்ப்ப்பனரல்லாதவர். டாக்டர் சுப்பராயன் அவர்களிடம் நாம் கோருவதெல்லாம், அரசு ஆவணங்களி லிருந்து இச்சொல் நீக்கப்படவேண்டும் என்பதுதான். இத்தீர்மானத்தை வழி மொழிந்த திரு. டி.ஆர். ரத்தினம் அவர்கள் சூத்ரா என்ற இச்சொல் சமூகத்தை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளதால், அரசு ஆவணங்களில் ஆட்சேபணைக்குரிய இத்தகைய சொல் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது எனக் கூறினார். இத்தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பலத்த கைதட்டல் களுக்கிடையே நிறைவேற்றப்பட்டது.
அதற்குப் பிறகு தானே இந்த இழி பட்டம் பதிவேடுகளில் ஒழிந்தது. திராவிடர் இயக்கத்தின் மிகப்பெரிய - இன இழிவை ஒழிக்கும் செயல்பாடு அல்லவா இது?
பச்சையப்பன் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு மறுப்பு!
பக்கத்திலிருக்கும் சென்னைப் பச்சை யப்பன் கல்லூரியின் நிலைமை என்ன? பார்ப்பனர் அல்லாத வள்ளலான பச்சை யப்ப முதலியார் அவர்களின் அருங் கொடையால் உருவாக்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.
அக்கல்லூரியில் கிறித்தவர்கள், முசுலிம் கள், தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப் பட்டதில்லையே - தடையிருந்ததே! பிறகு அந்தக் கதவு திறக்கப்பட்டது எப்படி? நீதிமன்றம்வரை சென்று தாழ்த்தப்பட்ட வர்களும் இந்துதான் என்று தீர்ப்புப் பெற்ற பிறகுதானே தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க் கப்பட்டனர். இந்த வரலாறெல்லாம் எத்தனைப் பேருக்குத் தெரியும்!
வரலாற்றை மறந்தால்...
இளைஞர்கள் கடந்தகால வரலாற்றைத் தெரிந்துகொள்ளாவிட்டால், உணர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் பழைய வருணாசிரமம்தான்; மனுதர்மம்தான் திரும்பும், நம்மை ஆட்சியும் செய்யும்.
கேட்பார்கள் சிலர்; இன்னும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையா என்று?
இது ஒன்றும் தனி மனிதர்பற்றிய பிரச் சினையல்ல; ஒரு ஆதிக்கத்தை, சுரண்டலை, கலாச்சார ஊடுருவலை எதிர்க்கும், தடுக் கும் முயற்சியாகும்.
எது துவேஷம்?
பார்ப்பனர்கள்மீதான துவேஷம் என்று குற்றஞ்சாட்டிய காலத்தில் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் கூறினார். கொசுக் கடிக்காமல் இருப்பதற்காகக் கொசு வலை கட்டிக் கொண்டால் அதற்குப் பெயர் கொசு துவேஷம் என்று பொருளா? என்று கேட்டாரே!
இதோ என்னிடம் இருப்பது தமிழ் நாட்டில் காந்தி என்னும் புத்தகம். காந்தியார் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தால் அ.இராமசாமி பி.ஏ. அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் 521 ஆம் பக்கத்தில் காணப்படும் பகுதி மிக முக்கியமானது - தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.
காந்தியாருக்கே உரிமை வாங்கிக் கொடுத்த இயக்கம் இது
நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர் செல்வமும், உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரை யாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பதுகூட இப்போது சுவையாக இருக்கும்.
உமாமகேசுவரம் பிள்ளை: பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப்பற்றிப் பலவிதமாகக் கூறு கிறார்கள். பிராமணர் - பிராமணரல்லா தாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும், சிறிது காலத்தில் அவை மறைந்து விடும் என்று டாக்டர் வரதரா ஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்ற வர்கள் இதில் தலையிடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட் டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும், என்னைப் போன்ற வர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற் படுத்திக் கொடுக்கவேண்டுமென்றும் கூறு கிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டு களுக்குமுன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள் என்று காந்தியார் கூறினார்.
இது 1927 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி.
1925 ஆம் ஆண்டுக்குமுன் காந்தி யார் சீனிவாசய்யங்கார் வீட்டுத் தாழ்வாரம் வரைதான் அனுமதிக்கப்பட்டார். 1925-க்குப் பிறகு 1927 இல் காந்தியாரின் மனைவி சீனிவாசய்யங்கார் வீட்டின் அடுப்பங்கரை வரை செல்ல முடிகிறது என்றால், இதன் பொருள் என்ன?
1925 ஆம் ஆண்டுக்குமுன் என்றால் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்காத காலம்- அந்த வகையில் பிரச்சாரம் நடக்காத காலம் - அதனால் மகாத்மா காந்தி சீனிவாசய்யங்கார் வீட்டின் தாழ்வாரம் வரை செல்ல முடிந்தது. 1927 இல் அய்யங்கார் வீட்டின் அடுப்பங்கரை வரை செல்ல முடிகிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியதுதானே! (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியாரின் தொண்டு, பிரச் சாரம் மகாத்மாவையே அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரைவரை செல்ல அனுமதியைப் பெற்றுத் தந்தது - திராவிடர் இயக்கத்தின் சாதனை காந்தியார் வரை ஊடுருவிச் சென்றுள்ளது.
தலையெழுத்து மாற்றப்பட்டது எப்படி?
ஒரு காலத்தில் கல்வி நீரோடையில் ஆரிய முதலைகள்! இன்று முத்தன் மகன் குப்பன் கணினிப் பொறியாளர்.
கல்வி கற்காதது தலையெழுத்து என்று நம்பிய நிலையை மாற்றி, அந்தத் தலை யெழுத்தை மாற்றி எழுதியது யார்? எப்படி நடந்தது?
சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்களின் அறிவுப் புரட்சி. ரத்தம் சிந்தாப் புரட்சியின் அறுவடை தானே இது!
இதே லயோலா கல்லூரியில் சென்னை மாநில பிரதமராக இருந்த ராஜகோபாலாச் சாரியார் என்ன பேசினார்?
சமஸ்கிருதத்தைப் படிப்படியாகத் திணிக்கத்தான் இப்பொழுது இந்தியைப் புகுத்துகிறேன் என்று பேசவில்லையா?
அதனை முறியடித்ததும் திராவிடர் இயக்கம்தானே! இன்றைய தினம் சமூகநீதிக்குரல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல - இந்தியா முழுமையும் எதிரொலிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு ரையிலேயே (Preamble) Justice - Social என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என் றால், இதற்கு மூல காரணம் சமூகநீதி இயக் கமான திராவிடர் இயக்கம் அல்லவா!
மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் அவர்கள்பற்றி புரட்சிக்கவிஞர் பாடினார்.
தொழும் என்றால் கும்பிடுவது என்று பொருளல்ல - தந்தை பெரியார் அவர் களின் கொள்கையை ஏற்கும் - பின்பற்றும் என்று பொருளாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் ஏராளமான இருபால் மாணவர்களும், பேராசிரியர்களும், பல்துறைகளைச் சார்ந்த பிரமுகர்களும் பார்வையாளர்களாகக் கலந்துகொண் டனர்.
லயோலா கல்லூரி வரலாற்று ஆய்வு மய்ய ஆண்டு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழர் தலைவர்
சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யத்தின் ஆண்டு மாநாடு மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இருநாள் மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பலரும் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேருரையாற்றிப் பெருமை சேர்த்தனர்.
6.3.2012 அன்று மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் பேரா.பி.பி. ஜெயசந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர், லயோலா கல்லூரியின் வளர்ச் சிக்கும், சிறப்பான செயல்பாடுகளுக்கும் பங்களித்த கீழ்க்குறிப்பிடப்பட்ட பெரு மக்களுக்கு பாராட்டுகள் வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது. லயோலா கல்லூரி ரெக்டர் மறைத்திரு கே.அமல்
லயோலா கல்லூரியின் தாளாளரும் செயலாளருமான மறைத்திரு டாக்டர் சி.ஜோ அருண். லயோலா கல்லூரியின் முதல்வர் மறைத்திரு டாக்டர் பி.ஜெயராஜ் லயோலா கல்லூரியின் துணை முதல்வர் மறைத்திரு டாக்டர் எஸ்.ஆரோக் கியம் இந்த நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வரலாறு மற்றும் சமூகசேவைத் துறைகளில் பெரும் தொண்டாற்றியுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெரு மக்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது. டாக்டர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
மறைத்திரு. டாக்டர் அல் போன்ஸ் மாணிக்கம், முதல்வர், புனிதசேவியர் கல்லூரி, பாளையங் கோட்டை,
பி.எஸ்.ஞானதேசிகன், மாநிலங் களவை உறுப்பினர் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
பேரா. கருணானந்தன், முன்னாள் பொதுச் செயலாளர், ஏ.யூ.டி மற்றும் ஏ.சி.டி.ஏ. விவேகானந்தா கல்லூரி யின் முன்னாள் பேராசிரியர். டாக்டர் நந்திதா கிருஷ்ணன், இயக்குநர், சர்.பி.சி. ராமசாமி அய்யர் பவுண்டேஷன், சென்னை.
டாக்டர் ரெட்டி, நிருவாக இயக் குநர், அப்பல்லோ மருத்துவமனை கள்.
திரு. தொல்.திருமாவளவன், மக் களவை உறுப்பினர் மற்றும் தலை வர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
பேரா. டாக்டர் ஜி.வெங்கட் ராமன், பேரா சிரியர் மற்றும் துறைத் தலைவர், வரலாற்றுத் துறை, சென்னை பல்கலைக் கழகம்
மறைத்திரு டாக்டர் சேவியர் அல்போன்ஸ், முன்னாள் முதல்வர், லயோலா கல்லூரி.
பின்னர், முக்கிய விருந்தினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி சிறப்புரை ஆற்றினார்.
முடிவில், லயோலா கல்லூரி வரலாற்று ஆய்வு மய்யப் பொரு ளாளர் மறைத்திரு டாக்டர் ஜி. ஜோசப் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
நாட்டுப் பண்ணுடன் இந்த விழா இனிதே நிறைவுற்றது. 7-3-2012
ஜாதியா?
ஈரோடு மாவட்டம் சத் தியமங்களம் வட்டம், பண் ணாரி அருகில் உள்ள ராஜன் நகரில் ஜாதி வாரியாக பிரித்து 3 அங்கன்வாடி மய் யங்கள் செயல்படுகின்றன. ராஜன் நகரில் 400 ஒக்கி லிய சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும், 400 அருந்த திய சமூகக் குடும்பமும், 150 குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பமும் வசித்து வருகிறார்கள்.
இங்கு வெகுநாள் களாக மூன்று அங்கன்வாடி மய்யங்கள் செயல்படுகின்றன.
அங்கன்வாடி கட்டடத்தில் ஒக்கிலிய சமூகத்தினர் குழந்தைகளும், வனக்குழு சமூதாய கட்டடத்தில் குற வர் சமூகக் குழந்தை களும், நூலகத்தின் ஒரு பகுதியில் அருந்ததிய சமூ கக் குழந்தைகளும் தனித் தனியே தங்க வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது.
ஒரே கிராமத்தில் மூன்று அங்கன்வாடி மய்யங்கள் அமைத்து, ஜாதி ரீதியாக குழந்தைகளை பிரித்திருப் பது, குழந்தைகளின் மன தில் ஜாதிய உணர்வைத் தூண்ட வழிவகுக்கிறது என்று ஈரோடு மண்டல திராவிடர் கழகச் செய லாளர் தோழர் த. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஜாதி ஒழிப்புச் சூரிய னாம் தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா இத் தகைய கொடுமை!
இதனை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளவில்லையா? அல்லது அவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவில்லையா?
1920-களிலேயே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தி லேயே இத்தகு வேறுபாடு கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு மானியங் கள் நிறுத்தப்படும்; உரிமங் கள் மறுக்கப்படும் என்ற ஒரு நிலை உருவாக்கப் பட்டுவிட்டதே!
இதில் கூறப்படும் மூன்று ஜாதியினரும், இந்து மத சாஸ்திரங்களின்படி சூத் திரர்களும், பஞ்சமர்களும் தானே! இந்த நிலையில், இவர்களுக்குள் ஏன் இந்த இடர்ப்பாடு - வேறுபாடு?
மட்டத்தில் உசத்தி யார் என்பதுதான் பிரச்சினைக் குக் காரணமா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அவர் களுக்கே உரித்தான ஏணிப் படி முறையிலான ஏற்ற தாழ்வு (ழுசயனநன ஐநேளூரயடவைல) என்ற இந்து சமூக அமைப் பின் திட்டமிட்டு உருவாக் கப்பட்ட சூழ்ச்சிகரமான ஏற்பாடுதானே இது!
தங்களைத் தலைவர் களாகத் தக்க வைத்துக் கொள்ள ஜாதி சங்கங் களை நடத்துவோர் இது பற்றிச் சிந்திக்கவேண் டாமா? முதலில் தலைவர் களுக்குத் தெளிவு பிறக்க வேண்டும். அதன் அடிப் படையில் அடித்தட்டு மக் களுக்கு அறிவு கொளுத் திட பிரச்சாரம் திட்ட முறைகளை உருவாக்க வேண்டும்.
ஈரோடு மாவட்ட திரா விடர் கழகம் இதில் உட னடியாகக் கவனம் செலுத் தும். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுவினைக் கொடுத்து உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளும்.
இதுபோல் வேறு எந்தப் பகுதிகளிலும் நடைமுறை இருக்குமானால், உடனடி யாகக் கழகத் தலைமைக் குத் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
- மயிலாடன் 7-3-2012
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
கழகத் தோழர்களே, கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, தஞ்சைக்குத் தயாராகி விட்டீர்களா?
மார்ச்சு 10, 11 ஆகிய இரு நாள்களிலும் நமது குடியிருப்பு தஞ்சையில்தானே.
வெளியூர்களிலிருந்து வரும் கழகக் குடும்பத்தினர் தங்குவதற்கு மூன்று திருமண மண்டபங்கள் தஞ்சையில் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன.
திரும்பிய பக்கங்களிலெல்லாம் சுவர் எழுத்து விளம்பரங்கள்
* இனமானப் படை வருகிறது
* பகுத்தறிவுப் பெருவெள்ளம் பாய்கிறது
* மகளிர் போர்ப்பறை கொட்டுகின்றனர்
* மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பேராறாகப் புறப்படுகின்றது.
தான் படைத்த சாதனையைத் தானே முறியடிப்பதில் தஞ்சையை விஞ்ச வேறு எது உள்ளது?
கோவிலும், குளமும் என்று திரியும் மக்களிடையே - பெரியதிரை, சின்னதிரைகளின் வெளிச்சத்தில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாக மக்கள் உள்ள ஒரு சமூக அமைப்பில், புறப்படுகிறது ஒரு புரட்சிப் பூகம்பம்! புரட்டி எடுக்கும் பிற்போக்குச் சழக்குகளை!
ஆட்சி மாற்றம் என்றதும் ஆரியக் கூட்டம் கொஞ்சம் துள்ளி விளையாட ஆசைப்படுகிறது.
அதன் ஆதிக்க ஆணிவேர் வரை சென்று அழிக்கும் அரிமாப் படை கருஞ்சட்டைப் பட்டாளம் என்பதை நிரூபிப்போம் வாருங்கள், தோழர்களே!
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது ஒரு வகையிலா - இரு வகைகளிலா?
ஈழத் தமிழர் பிரச்சினையிலிருந்து, நதி நீர்ப் பிரச்சினை வரை தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுதானே வருகிறது.
தமிழக மீனவர்கள் என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பா?
அதிலும் கூட கேரளக் கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் தாக்கப்பட்டால் அதற்கொரு அளவு கோல். தமிழ்நாட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டால் வேறொரு பாராமுகம்!
இந்தக் கொடுமைகளைக் கண்டு குமுறி எழ வேண்டாமா? பாராமுகம் காட்டும் மத்திய அரசுக்குத் தக்க வகையில் புரிய வைக்க வேண்டாமா?
தமிழ் மண்ணின் கந்தக உணர்வின் கர்ச்சனை வெப்பம் எத்தனை டிகிரி என்று காட்ட வேண்டாமா?
இனவுணர்வு என்றால் ஏகடியம் செய்யும் இரு பிறப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பூணூல் கூட்டத்துக்கு நமது புலிப்பாய்ச்சல் என்னவென்று தெரிய வேண்டாமா?
புலி வாலை மிதிக்கத் துடிக்கும் பூசுரர்களே, இதோ, ஒரு புதிய புறநானூறு என்று போர்ப்பாட்டுப் பாட வேண்டாமா?
நமது மங்கைமார் போர் முரசின் வீரியம் விண்ணையும் கிழிக்கக்கூடியது என்பதைக் கூனரும் நிமிரக் கூடிய அளவுக்குக் காட்ட வேண்டாமா?
அதுவும் திராவிடர் இயக்கம் நூற்றாண்டு தொடக்கத்தின் முதல் பாய்ச்சல் தஞ்சையிலே! தஞ்சையிலே!!
புலிப் போத்தாய்ப் புறப்படுவீர்! இலட்சிய எக்காளமிடுவோம் வாரீர்! வாரீர்!!
சமூகப் புரட்சி இயக்கத்தினர் போடும் பாட்டையில்தான் அரசுகள் பவனி வரவேண்டும்.
சமூகப் புரட்சி இயக்கம் வழங்கும் தீர்மானங்கள்தான் ஆட்சியின் நடைபாதை!
இதுதானே வரலாறு! இதுதானே தமிழ்நாட்டின் கடந்த கால வரலாறும்!
* சமூக நீதி வந்தது எப்படி?
* சுயமரியாதைத் திருமணச் சட்டம் வந்தது எப்படி?
* பெண்களுக்குச் சொத்துரிமை கிட்டியது எப்படி?
* சென்னை மாநிலம் தமிழ்நாடாக மாறியது எப்படி?
* இந்திக்கு இடமில்லை தமிழ்நாட்டில் என்னும் இறுமாந்த நிலைக்குக் காரண கர்த்தா யார்?
* மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் முன்னணிப் படை எது?
சாதித்தவை பலப்பல. சாதிக்கப்பட வேண்டியவையும் ஏராளமம் உண்டு.
புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர் பட்டாளம் அணிவகுக்கும் ஓர் இயக்கத்தால்தான் இவற்றைச் சாதிக்க முடியும்!
சாதிப்போம் வாருங்கள், தோழர்களே!
பெரியார் பெருந்தொண்டர்களே!
பெண்ணுரிமைப் போராளிகளே!
இனமான இளைஞர் பட்டாளமே!
தோள் தூக்கும் தொழிலாளர் அணியினரே!
மானமிகு மாணவ அரிமாக்களே!
பீடுறும் பெரியார் பிஞ்சுகளே!
நாம் தஞ்சையில் சந்திக்கப் போகிறோம்! சமதர்மக் குரல் கொடுக்கப் போகிறோம்!
சமத்துவப் போர்ப்பாட்டுப் பாடப்போகிறோம்!
சமூக நீதி சங்கநாதம் செய்யப்போகிறோம்!
பகுத்தறிவுப் பூபாளம் பாடப்போகிறோம்!
புறப்படுவீர்! புறப்படுவீர்!!
இப்படை தோற்கின், எப்படை வெல்லும்? 7-3-2012
நீதிமன்றத்தின் பார்வையில் மோ(ச)டி!
- கலி.பூங்குன்றன்
துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி என்ன சொல்லுகிறார்?
அடுத்த பிரதமர் இந்தியாவுக்கு நரேந்திர மோடிதான்! அவர்தான் இந்தியாவைக் காக்க வந்த அவதாரப்புருசன் என்று ரொம்பவே எழுதுகிறார்.
குஜராத்தில் அவர் ஆட்சியில்தானே அநியாயமான வகையில் படுகொலை நடந்தது. சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில் வேட்டையாடப்படவில்லையா?
கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு, சிசுக்கள் தீயில் தூக்கி எறியப்பட்டு அதனைக் கண்டு குதூகலித்தனரே. குழந்தைகள் வாயில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, தீயின் உருவமாகவே குழந்தைகள் மாறி, அலறியபோது குதியாட்டம் போட்டது யார் ஆட்சியில்?
இப்படி ஒரு குரூர மனிதனை வேண்டுமானால் இலங்கையில் ராஜபக்சே உருவத்தில் காணலாம், வேறு எங்கும் காணவே முடியாது.
ஊருக்கு மட்டுமல்ல, உலகுக்கே தெரிந்த கொடூரம் இது.
உள்ளே வராதே என்றது அமெரிக்கா. இந்த இடிஅமீனை அனுமதிக்க மாட்டோம் என்றது இங்கிலாந்து.
எல்லோருக்கும் தெரிந்த இந்த அவலம் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவே தெரியாது. அந்த ஆசாமி திருவாளர் சோ ராமசாமிதான். அதற்கு அவர் வைத்திருக்கும் துருப்புச் சீட்டு சாதாரணமானதுதானா?
எந்த நீதிமன்றமாவது மோடியைக் குற்றவாளி என்று சொன்னதா? குறை கூறியதா? கையை நீட்ட முடியுமா? என்று யாரும் பதில் சொல்ல முடியாத கேள்வியை அவர் கைவசம் வைத்துள்ளார். ஆமாம், நம்புங்கள்.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் துக்ளக்கின் 42ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கூட இந்தக் கேள்வியை எடுத்து வீசினாரே பார்க்கலாம்.
மனதுக்குள் இந்த மனுவின் புத்திரருக்கு மற்றவர்கள் எல்லாம் மாங்காய் மடையன் என்ற நினைப்போ!
யார் மறந்தாலும் கருஞ்சட்டைக்காரன் மறக்க மாட்டான் என்பது திருவாளர் சோவுக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்?
இன்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் நாம் பயணித்தாக வேண்டும். உலக வரலாற்றில் உச்சி ----முடியைக்-- குலுக்கும் ஒரு பயங்கரம் - குஜராத் மாநில வதோதரா நகரில் நடைபெற்றது. பெஸ்ட் பேக்கரி என்ற ஒரு நிறுவனம், இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது. கோத்ரா ரயில்பெட்டி எரிப்பைத் தொடர்ந்து அன்று இரவு (1-.3.2002) அந்தப் பயங்கரம் நடந்துவிட்டது.
அந்தப் பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லாஷேக் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை விறகுகளைக் கட்டுவது போல கட்டி, அந்த பேக்கரியின் கொடிய நெருப்பில் திணித்து துடிக்கத் துடிக்கக் குரூரமாகப் படுகொலை செய்தனர்.
குடும்பத் தலைவி செஹ்ருன்னிசா, மூத்த மகன் நஃபிதுல்லா, மகள் ஜாஹிரா ஷேக், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் பக்கத்தில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்ததால் எதிர்பாராதவிதமாக தப்பிப் பிழைத்தனர்.
இந்தக் கொடூரத்தை நேரில் கண்ட ஒரே ஒரு சாட்சி ஜாஹிரா ஷேக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வேறு வழியின்றிக் காவல்துறை பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தது என்றாலும் அபாயகரமாக பல வகைகளிலும் அச்சுறுத்தப்பட்டார். பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவச்சலா என்பவர் உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை! எச்சரிக்கை! என்று மிரட்டியதன் காரணமாக நீதிமன்றத்திலேயே பிறழ் சாட்சி சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். விளைவு குற்றஞ் சாட்டப்பட்ட அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர். (27.6.2003)
இந்தக் கொடூரத்தை நேரில் கண்ட ஒரே ஒரு சாட்சி ஜாஹிரா ஷேக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வேறு வழியின்றிக் காவல்துறை பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தது என்றாலும் அபாயகரமாக பல வகைகளிலும் அச்சுறுத்தப்பட்டார். பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவச்சலா என்பவர் உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை! எச்சரிக்கை! என்று மிரட்டியதன் காரணமாக நீதிமன்றத்திலேயே பிறழ் சாட்சி சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். விளைவு குற்றஞ் சாட்டப்பட்ட அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர். (27.6.2003)
மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர் - இந்தப் பொல்லாத் தீர்ப்பினைக் கண்டு. வேறு வழியின்றி காவல்துறை மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்து அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.
நிஜமாகத் தூங்குபவராக இருந்தால் இது போதும்; ஆனால் தூங்குவது போல பாசாங்கு செய்பவராயிற்றே சோ - அதுவும் நடிகரும் ஆயிற்றே! சுலபத்தில் முழிப்பாரா?
மேலும் ஒரு குட்டு!
குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட படுகொலைகளின்போது கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட, அடையாளம் தெரியாத 28 பேரின் சடலங்களைத் தோண்டி எடுத்தது தொடர்பாக சமூக சேவகர் டீஸ்டா செட்டால் வாட் மீது விசாரணைக்கு மாநில அரசு ஆணையிட்டதை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது அவரைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள போலியான வழக்குதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழு என்னும் அமைப்பினைச் சேர்ந்த டீஸ்டா செடல்வாட் இந்த வழக்கினைக் கையில் எடுத்துக் கொண்டார். இவர் ஒரு நீதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது ஆகும்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த துரைசாமி ராஜு மற்றும் அர்ஜித்பசாயத் ஆகியோர் ஆவர்.
உயர் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றங்களை நீதிபதிகள் கடுமையாகச் சாடினார்கள்.
அந்தத் தீர்ப்பின் வரிகள் ரத்தம் பீறிட்ட மனித நேயத்துக்குப் போடப்பட்ட அருமருந்து என்று சொல்லலாம்.
இது சட்டத்தின் பார்வையில் விடுதலையே அல்ல. தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத் தகுந்தவையல்ல, நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.
மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடக்கின்றன. இதைப் பார்க்கும்பொழுது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும்படியான அளவிற்குச் சிலர் போய்விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
எந்தவிதப் பாதுகாப்புமற்ற அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானமாகும்.
பாதுகாப்பற்ற பெண்கள், அப்பாவிக் குழந்தைகளை எரித்துக் கொன்றார்கள். மனித நேயத்தின் சிறு சிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப் போய்விட்டதோ? ஒரு சமுதாயத்திற்குச் சொந்தமான வீடுகளில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்?
குஜராத் விரைவு நீதிமன்றத்தின் அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓர வஞ்சமும் ஒருதலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு!
நீதி வழங்கும் நெறிமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டு உள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. தான் விரும்பிய வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் புலனாய்வோ, கடன்காரத்தனமாக ஏனோ தானோ என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தீர்ப்புரையில் கூறியுள்ளனரே, அவை யாரை நோக்கி?
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை நோக்கித்தானே இத்தனை சொல்லம்புகளும். முதலமைச்சர் மட்டுமல்ல - காவல் துறையையும் அவர்தான் வைத்திருக்கிறார் என்கிறபோது இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கும் அறிவு நாணயமான முறையில் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் மோடி அல்லவா?
எவ்வளவு அசட்டுத் துணிவு இருந்தால் சோ சொல்லுவார்-? எந்த நீதிமன்றமாவது குஜராத் முதல்வர் மோடி மீது குற்றம் சுமத்தி இருக்கிறதா என்று கூச்சநாச்சமின்றி சென்னையில் பேசியிருக்கிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் இந்தத் தீர்ப்பு உரையில் நீதிபதிகள் பயன்படுத்திய ஒரு சொல் இருக்கிறதே அதுதான் மிகுந்த உச்சகட்டம். அது, நவீன நீரோ மன்னன் என்பதுதான் மோடியின் தலைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சூட்டப்பட்ட மிக உயர்ந்த பட்டம் என்று சோ சொன்னாலும் சொல்லுவார். (அப்படித்தானே!)
இந்திய அரசமைப்பில் நாடாளுமன்றத்திற்கும் மேலான உச்ச கட்ட அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றமே மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறிவிட்டதே!
ஒருக்கால் சோ அய்யர்வாளின் கண்ணோட்டத்தில் மோடியை சாதாரண மனிதரோடா ஒப்பிட்டுச் சொல்லியுள்ளார்? உச்ச நீதிமன்றமோ நீரோ என்ற மன்னனோடு அல்லவா கூறியுள்ளது? என்று உச்ச நீதிமன்ற வரிகளை உருட்டல் புரட்டல் செய்து பாஷ்யம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இஸ்ரத் ஜஹான் என்பவர் உட்பட நான்கு பேர்களைப் போலி என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது குஜராத் காவல்துறை.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அஜ்மத் அலி, ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் மோதலின்போது கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு லஷ்கர்_இ_கொய்பா அமைப்போடு தொடர்பு உடையவர்கள் என்றும் குஜராத் மாநில முதல் அமைச்சர் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருந்தனர் என்றும் மோடி ஆட்சியின் சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியதே!
இந்த விசாரணை குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்றம் கூறியதுதான் இங்கு முக்கியமானது. இந்த வழக்கில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்துவார்கள் என்று குஜராத் காவல்துறையை நம்பமுடியாது. தேசிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் வழக்கு என்பதால் மத்திய புலனாய்வுக் குழு இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் கறாராகவே தெரிவித்ததே. இது என்ன மோடியின் நல்லாட்சிக்காகச் சூட்டப்பட்ட கணையாழியா?
இதற்குள் புகுந்து உள்குத்து விமர்சனம் செய்வாரோ வேதியர் குல திலகம் திருவாளர் சோ? ஊழலற்ற முறையின் இலக்கணமாக மோடி அரசு ராஜநடை போடுகிறது என்று சோ நற்சான்றுப் பத்திரம் இழைத்துக் கொடுக்கும் நரேந்திர மோடி தமது மாநிலத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் லோக் அயுக்தாவைச் செயல்பட விடவில்லையே ஏன்? மோடிதான் மடியில் கனம் இல்லாதவராயிற்றே! லோக் அயுக்தாவிற்கு நீதிபதியை நியமிப்பதில் ஏன் தயக்கம்?
ஆளுநர் அந்தப் பொறுப்பை ஏற்று நீதிபதியை நியமனம் செய்ததை எதிர்த்து மோடி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் மோடியின் மண்டை ஓடு நொறுங்கும் வகையில் வாசகங்களைப் பயன்படுத்தித் தீர்ப்பு வழங்கியுள்ளதே!
குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முதல் அமைச்சர் மோடி மறுத்துள்ளது - மக்களாட்சியின் சாரமான சட்டத்தில் ஆட்சியில் உள்ள நம்பிக்கையையும், லோக் அயுக்தா அமைப்பின் நேர்மையையும் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது.
முதலமைச்சர் மோடியின் தலைமையிலான அமைச்சரவை பகுத்தறிவிற்குப் புறம்பாக இவ்வாறு துணிவுடன் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆளுநர் கம்லா பேனிவால் அரசமைப்புச் சட்டத்தின் 163ஆவது பிரிவின்படி தனக்கு அளிக்கப்பட்டுள்ள தனது முடிவின்படி செயல்படும் அதிகாரத்தின் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதி மேதாவை லோகாயுத்தாவாக நியமித்தது சரிதான் என்று தாம் கருதுவதாக குஜராத் உயர் நீதிமன்ற நீதியரசர் வி.எம்.சகாய் விளாசிவிட்டாரே! (18.1.2012)
பகுத்தறிவுக்குப் புறம்பாக நரேந்திர மோடி நடந்து கொண்டுள்ளார் என்று நீதிபதி சொல்லி இருப்பதால், இங்குள்ள பகுத்தறிவு இயக்கத் தலைவரான வீரமணியின் தூண்டுதலால்தான் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி எழுதியிருக்கிறார் என்று சோ சொல்லக்கூடியவர்தான்.
குஜராத் மாநில முதல் அமைச்சர் மோடி பற்றி எந்த நீதிபதியாவது குற்றம் சொல்லியிருக்கின்றாரா என்ற திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளுக்கு, இந்த எடுத்துக்காட்டுகள் போதும் என்று நினைக்கிறோம்.
நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2002இல் மதவெறி சக்திகளால் சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டது. அப்போது கான்பூர் வட்டத்தின் பாந்தர்வாடா உள்ளிட்ட கிராமங்களில் கொல்லப்பட்ட 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனக்கூறி புதைக்கப்பட்டன. அந்தச் சடலங்களை அனுமதி பெறாமல் தோண்டி எடுத்ததாக ஷெட்டால்வாட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் சட்டத்தின்கீழ் அவர் மீது விசாரணைக்கும் ஆணையிடப்பட்டது. இதை எதிர்த்து ஷெட்டால் வாட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவின் மீது (பிப்.21) விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு, இது மனுதாரரைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டிருக்கிற 100 விழுக்காடு போலியான வழக்குதான் என்றும், இது போன்ற வழக்குகள் மாநில அரசுக்குப் பெருமை சேர்க்காது, என்றும் நீதிபதிகள் கூறினர்.
மாநில அரசு இந்த விசாரணையைத் தொடர்வது முறையல்ல என்று கூறிய நீதிபதிகள், ஷெட்டால் வாட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் பிரதீப் கோஷ் படித்துப் பார்த்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று பணித்தனர். இதே போல், குஜராத் அரசின் வழக்குரைஞர் ஹேமன்டிகா வாஹி அந்த முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
நீதிமன்றத்தின் இந்தக் குட்டு மோடிக்கு மகுடம் சூட்டப்பட்டதாகப் பொருளோ! ஒரு குலத்துக்கொரு நீதி என்பதுதானே சோ வகையறாக்களின் மனுதர்மச் சிந்தனை?
Post a Comment