Search This Blog

6.3.12

திராவிடர் இயக்கம் - 4


திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியில் சமுதாய மாற்றத்திற்கான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசாங்க உத்தரவு நெ.2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிருவாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது. உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செம்டம்பர் 26ந் தேதி.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள்பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை).

(9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(எ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(பி) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாக இருந் தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் உயர்ஜாதி இந்துக் களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்கத்தின் உத்தரவு - மாநில அரசு)

- பி.எல்.மூர் அரசாங்க செயலாளர் தாழ்த்தப்பட்டோரைப் பேருந்துகளில் அனுமதிக் காத கால கட்டம் ஒன்று இருந்தது. இராமநாதபுரம் மாவட்ட போர்டு தலைவராக இருந்த பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (நீதிக்கட்சி) இருந்த காலத்தில் என்ன ஆணை பிறப்பித்தார் தெரியுமா?

இந்த மாவட்டத்தில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு போவதில்லை யென்றும், டிக்கெட்டில் ஆதி திராவிடர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகிறோம். இவ்வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது - ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கெட்டுகளில் மறுப்புவிதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் அத்தகைய விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.
(குடிஅரசு ஈரோடு 4.5.1930 )

அந்தக் கால கட்டத்தில் இது திராவிட இயக்கத்தின் வியக்கத்தக்க, போற்றத்தக்க சாதனை யல்லவா!

உள்ளாட்சித் துறையிலோ தனியார் நிறுவனங் களாலோ நடத்தப்பட்டு வந்த எந்தக் கல்விக்கூடம் ஆதி திராவிடர் மாணவர் மாணவிகளைச் சேர்க்க மறுத்தாலும், அவைகளுக்கு மான்ய உதவி உடனே நிறுத்தப்பட வேண்டுமென்று கூறி, மான்யம் பெறுவதற்கே இதை ஒரு முன் நிபந்தனையாக ஆக்கி, மற்ற சாதியினருடன், இப்பிள்ளைகளும் இணைந்து சமமாக அமர்ந்து படிக்கச் செய்யப்பட்டது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 1936இல் 9614 என்றால், இந்த நீதிக்கட்சியின் சாதனையை தமிழ்த் தேசியவாதிகள் அலட்சியப் படுத்தப் போகிறார்களா? பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு பழி தூற்றப் போகிறார்களா? பார்ப்பனர்களின் வால் ஆடினால் இந்தத் புதிய தேசிய வாதிகளின் தலைகள் ஆடு ஆடு என்று ஆடுகின்றனவே, அந்தோ பரிதாபம்!

--------------------"விடுதலை”தலையங்கம் 6-3-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

கருஞ்சட்டைக் கடலே கனத்த குரல் கொடுக்க வருகவே!


தோழர்களே, தோழர்களே! இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை சிங்கள இனவாத பாசிச அரசு மேற்கொண்ட இன அழிப்பு (Genocide) எங்கும் கேள்விப்படாத ஒன்று.

முதலாளித்துவ நாடு என்று கணிக்கப்படும் அமெரிக்காவுக்கு இருக்கும் மனிதநேயம், மனித உரிமைகூட கம்யூனிச நாடுகளான சீனா, ருசியா, கியூபாக்களுக்கு இல்லையே என்பது வெட்கக்கேடு!

மார்ச்சு 27இல் ஜெனிவாவில் கூடவிருக்கும் அய்.நா.வின் கூட்டத்தில் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைக்கு எதிரான தீர்மானத்தின்போது இந்தியா எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. சீன யுத்தத்தின்போதும், பாகிஸ்தான் யுத்தத்தின் போதும்கூட இலங்கை - இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை - எதிராகவே இருந்திருக்கிறது. ராஜதந்திர நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டாலும் இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் உதவி செய்வது உகந்ததாக இருக்கவே முடியாது! முடியாது!!

இந்திய அரசே, இந்திய அரசே, ஜெனிவாவில் கூட இருக்கும் அய்.நா. கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திட வலியுறுத்திட, நாளை காலை 11 மணிக்கு (6.3.2012) சென்னை சைதை பனகல் மாளிகை எதிரில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

கழகத் தோழர்களே! மனித நேயர்களே! கடல் அலையாய்க் கூடுவீர்! கூடுவீர்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம் 6-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசுக்கு எதிராக அய்.நா. கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்


சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 6- இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மா னத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் இதுதான் தலையாய கடமை என்று மத்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்திருக் கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

இலங்கைக்கு எதி ரான ஜெனிவா தீர் மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி இன்று காலை சென்னையில் திராவிடர் கழக தலை வர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இலங்கைக்கு எதி ராக அமெரிக்கா கொண்டு வரும் ஜெனிவா தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி இன்று (6.3.2012) காலை 11 மணிக்கு சென்னை சைதை பன கல் மாளிகை முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இவ்வார்ப் பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரை வருமாறு:

குறிப்பாக தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுகின்ற தமிழின உணர்வாளர்களுடைய உரிமைகளை சிங்கள ராஜபக்சே அடக்கிய தோடு மட்டுமல்லாமல், தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்.

ஒரு லட்சம் பேர் இறந்து போயினர்

1,40,000 தமிழர்கள் இலங்கையிலே காணா மல் போயிருக்கின்றார் கள். 25,000 பெண்கள் என்ன ஆனார்கள் என் பது தெரியாது.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் நடை பெற்ற போரில் கொல் லப்பட்டிருக்கின்றார்கள். இவைகளை எல்லாம் நாம் சொல்லுவதைவிட அய்.நா. குழுவினாலே அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் தெளி வான அறிக்கையைக் கொடுத்திருக்கிறது.

அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் அந்த அறிக் கையை எடுத்து வைத்து ஒரு போர்க் குற்ற வாளியாக இலங்கையை நிறுத்தியிருக்கிறார்.

இட்லரை மிஞ்சிய ராஜபக்சே

குறிப்பாக இட்லரை யும் தோற்கடிக்கக் கூடிய அளவிலே ராஜ பக்சேவினுடைய கொடுங்கோல் ஆட்சி ஈழத் தமிழர்களுடைய இனப்படுகொலைக்கு வழி வகுத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பெண் களிடத்திலே மிக மோச மாக முறைகேடாக நடந்து ஈழத் தமிழச்சி களினுடைய வாழ்வுரி மையைப் பறித்திருக் கிறார்கள். அவமானத் தால் வரலாற்றில் கறை படிந்திருக்கிறது. இந்த கொடுமைகளை எல்லாம் எடுத்து விளக் கிடத்தான் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்து கின்றோம்.

உலகத்தின் பற்பல நாடுகள் ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத் தின் சார்பிலே கூடுகின்றன.

தமிழ் ஓவியா said...

உலகத்தின் போர்க் குற்றவாளி இலங்கை உலகத்தின் போர்க் குற்றவாளியாக இலங் கையை நிறுத்த வேண் டும் என்று பல நாடுகள் முற்பட்டிருக்கின்றன.

அமெரிக்கா முன் மொழியக் கூடிய அந்தத் தீர்மானத்தை அய்ரோப் பிய யூனியன் நாடுகள் ஆதரிக்க இருக்கின்றன. இந்த சூழ்நிலையிலே பயங்கரவாதத்தை அடக் குகிறோம் என்ற போர் வையிலே இலங்கை அரசுக்கு மத்திய அரசு துணை போய் தவறி ழைத்திருக்கிறது. தெளிவாக நாங்கள் சொல்லுகிறோம்.

தமிழ்நாடு கண்டித்திருக்கிறது

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, ஈழத் தமிழர் களுடைய இனப்படு கொலையைப் பற்றி மத்திய அரசு கவலைப் படாமல் பயங்கரவா தத்தை அடக்குகிறோம் என்ற பெயராலே ஏராள மான ஆயதங்களையும் கொடுத்து, இராணுவ உதவிகளையும் செய் திருப்பதை அவ்வப் பொழுது கட்சி வேறு பாடு இல்லாமல் தமிழ் நாடு கண்டித்திருக்கிறது.

இந்த சூழ்நிலை யிலேயே ஏற்கெனவே நடந்தவைகளுக்கெல்லாம் கழுவாய் தேடக் கூடிய வகையிலே ஈழத் தமி ழர்கள் முதல் ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் வாழக் கூடிய தமிழர்களின் உணர் வுகளை ஒட்டு மொத்த மாக பிரதிபலிக்கக் கூடிய வகையிலும், மிகத் தெளிவாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த வாய்ப்பை இந் திய அரசு, மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசுக்கு எதி ராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத் திய அரசு ஆதரிக்க வேண் டும் என்பது தலையாய கடமையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே மத்திய அரசிலே இடம் பெற்றிருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய தலை வர் கலைஞர் அவர்கள், அதே போல தமிழகத்தி னுடைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதுபோல இடதுசாரி கள், இப்படி பல கட்சிகள் எந்த விதமான வேறுபாடு இல்லாமல் கட்சிகளி னாலே வேறுபட்டிருந் தால் கூட, இந்தப் பிரச்சி னையிலே நாங்கள் ஒன்று பட்டிருக்கின்றோம்.

ஒரே மேடையிலே நாங் கள் இல்லாமல் இருக்க லாம். ஆனால் ஒரே குர லிலே தான் இந்திய அரசு அய்.நா. கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கி றார்கள்.

இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு மத்திய அரசு இலங்கையை குற்ற வாளிக் கூண்டிலே நிறுத் துவதற்கு மனித உரிமை பறிப்பைக் கண்டிப்பதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமை அடிப்படையிலே முன் வந்திருக்கின்றன.

ஆனால் நம்மைப் பொறுத்தவரையிலே இந்திய அரசைப் பொறுத்த வரையிலே அதற்கு இன் னும் ஒரு கூடுதலான கட மையும் இருக்கிறது. தமி ழகம் ஓட்டளித்துத்தான் மத்திய அரசு உருவாகி யிருக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தவரையிலே ஈழத் தமிழர்களோடு நாங் கள் தொப்புள் கொடி உறவு உள்ளவர்கள் என்ற உணர்வைப் படைத்தி ருக்கின்றோம். எனவே மனிதநேயம் மட்டும் முக்கியமல்ல. அதை விட ஆழமானது தொப்புள் கொடி உறவு. இதை மன தில் கொண்டு மீண்டும் மத்திய அரசை வலியுறுத் து வதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

இதை தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சியி னரும் ஒரே உணர்வை பிரதிபலிக்கிறார்கள். எனவே இதிலே இந்திய அரசு தெளிவான நிலைப் பாட்டை எடுத்து அமெ ரிக்கா கொண்டு வரக் கூடிய தீர்மானத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசின் பக்கம் மத்திய அரசு சாயக் கூடாது.

நாராயணசாமி கூறியது வரவேற்கத்தக்கது

மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதை வரவேற்கிறோம். முதல் முறையாக பிரதமர் அலுவலகத்தில் இருக்கக் கூடிய ஒரு அமைச்சர் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு பொறுப் புண்டு. அதிலே அவர்கள் கவலை எடுத்திருக்கி றார்கள். தமிழகத்தினு டைய குரல் இதற்கு முன்னாலே எப்படியி ருந்தாலும் இப்பொழுது கேளாக் காதினராக இருக்கப் போவதில்லை என்பதற்கு நல்ல அறிகுறி இது.

இந்த உணர்வு வளரட் டும் தெளிவான முறைகள் ஏற்படும் அதை வலியு றுத்துவதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம். மத்திய அரசுக்கு இது ஒரு வேண்டுகோள் ஆர்ப் பாட்டம்.-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேசினார்.

தமிழ் ஓவியா said...

கலந்து கொண்டோர்:

இந்த ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழக பொருளாளர் வழக்க றிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, கழக தலைமை நிலைய செய லாளர் வீ.அன்புராஜ், கழக துணை பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் ஆகிய முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, கழக மகளிர்கள் மற்றும் வெளியூரிலிருந்து தோழர்கள்கலந்து கொண்டனர்.

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், டி.கே.நடராசன், கு.தங்க மணி, புதுச்சேரி வே. அன்பரசன், ராமேஸ்வரம், சிகாமணி, இரா.வில்வ நாதன், எம்.பி. பாலு, சைதைமதியழகன், மயிலை சேதுராமன், ஊமை செயராமன், சிதம் பரம் அருள்ராஜ், கண் ணன், செல்வரத்தினம், தாம்பரம் ப.முத்தையன், நெய்வேலி வெ.ஞான சேகரன், அ.கோ.கோபால் சாமி, வெற்றிச்செல்வி, இறைவி, துரை.மீனாட்சி, பசும்பொன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மஞ்சுநாதன், தி.வே.சு. திருவள்ளுவர், செம்பியம் கி.இராமலிங்கம், சுமதி கணேசன், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், கனகா, மணியம்மை, பசும்பொன், செ.தமிழ் சாக்ரடீசு, கும்மிடிப்பூண்டி தோழர்கள்: செ.உதய குமார், த.ஆனந்தன், பழனி பன்னீர்செல்வம், சக்கரவர்த்தி, கசேந்திரன், வெ.அருள், பாலு, ஆனந் தகுமார், புழல் கோபி.

ஆவடி தோழர்கள்: ம.ஆ.கந்தசாமி, முத்துகிருஷ்ணன், ஏழுமலை, உ.கார்த்தி, தமிழ்மணி, உடுமலை வடிவேல்,மேகலா, செல்வி,பெரியார் மாணாக்கன், இளங்கோ பா.தென்னரசு, கோ.முருகன், அ.அருண்,வே.கார் வேந்தன்,ராமப்பா, மோகனபிரியா, ந.அன்பு, நெடுங்கிள்ளி, இரணியன், அனுசியா, அறிவுமணி, ராமண்ணா, மொழியன்பன், செல்வம், ரவிச்சந்திரன், அன்புமணி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

பழ.வெங்கடாசலம் மண்டலச் செயலாளர் வேலூர், அண்ணா. சரவணன் மாநில ப.க. து.தலைவர், வி.ஜி. இளங்கோ மாவட்ட செயலாளர் திருப்பத் தூர்.

தி.தொ.கழகம் நாக ரத்தினம், ராமலிங்கம், வழக்கறிஞர் ஜெ.துரை, பெ.செல்லவராஜ் ஆலன் ஆகியோரும் மற்றும் திரளானோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு எதிராக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரைமணி நேரம் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை விண் ணதிர முழங்கினர்.
நிறைவாக தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில் வநாதன் நன்றி கூறி னார். 6-3-2012

தமிழ் ஓவியா said...

5000 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட ஜாதியை ஒரே இரவில் ஒழித்துக் கட்ட முடியாது


விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கி.வீரமணி

- இந்து நாளிதழ் படப்பிடிப்பு

விசாகப்பட்டினம், மார்ச் 6- பெரியார் ராமசாமி அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நனவாக்க விரைந்த தீர்வுகள் எதுவும் இல்லை என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கடற்கரை சாலையில் ஒய்.எம்.சி.ஏ.க்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் ராமசாமி அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் முன்னர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சிலை திறப்பு விழாவில் பழங்குடியினர் நல அமைச்சர் பி.பாலராஜு, மருத்துவக் கல்வி அமைச்சர் கோண்ட்ரூ முரளி, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், ஈ.வெ. ராமசாமி ஆசாய சாதனா சங்கத் தலைவர் ஜெயகோபால் மற்றும் உறுப்பினர்கள் காந்தா பாபா ராவ் மற்றும் பி. பென்டா ராவ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் ராமசாமி ஒரு மாபெரும் மனிதநேயர் என்றும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தனது செல்வம் அனைத்தையும் பொது நலனுக்காக விட்டுச் சென்றவர் என்றும், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். பலதுறைகளிலும் மக்களிடையே வேறுபாடு பாராட்டல் ஆகியவற்றுக்கு எதிராகவும், விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாகவும் இறுதி வரை போராடியவர் என்றும் வீரமணி கூறினார்.

கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஜாதி அமைப்பு முறையை ஒரே இரவில் அழித்துவிடுவது என்பது இயலாதது என்றும், அது ஒரு நீண்ட கால போராட்டம் என்றும், மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல மாற்றும் தங்கள் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

பெண்கள் தங்களுக்குரிய அதிகாரங்களையும், உரிமைகளையும் பெறவேண்டும் என்று போராடிய ஒரு மாபரும் பகுத்தறிவாளர் பெரியார் என்று கூறிய வேந்தர் கி.வீரமணி, பெரியார் எந்த அரசுப் பதவி களுக்கும் ஆசைப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.

நீதிக்கட்சியின் மூலம் சமூக நீதி இயக்கத்தை வழி நடத்திச் சென்றவர் பெரியார் என்று கூறிய வீரமணி அவர்கள், பெரியாரின் தொண்டர்கள் இது பற்றிய விழிப்புணர்வை தங்களின் செயல்பாடுகள் மூலம் ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.

சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று பெரியார் ராமசாமி அவர்கள் நம்பினார் என்று திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து அதை வழி நடத்திச் செல்லும் வீரமணி அவர்கள் கூறினார்.

எனவே, தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களும், ஆதரவாளர்களும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களும், இந்திய நாத்திக சங்கத்தினரும் பல்வேறுபட்ட நிலைகளில் காட்டப்படும் வேறுபாடு களுக்கு எதிராக சோர்வின்றி போராடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- இவ்வாறு இந்து நாளிதழ் விஜயவாடா பதிப்பில் செய்தி நேற்று வெளியாகியுள்ளது. 6-3-2012