திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவி டர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம் என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடுவது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட்பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற்றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்? சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமையான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது? திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
----------- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன் அவர்கள்13-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
14 comments:
திராவிடர்-தமிழர்
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராக_ திராவிடர் இயக்கத்தால் பலன் பெற்றோர், மரியாதை பெற்றோர், விளம்பரம் பெற்றோர் மண்ணை வாரித் தூற்ற ஆரம்பித்துள்ளனர்.
இது ஒன்றும் புதிதல்ல. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சி.யும், அவரைச் சேர்ந்த-வர்களும் திராவிட எதிர்ப்பு மாநாடுகளைப் பல்வேறு இடங்களில் நடத்தியதுண்டு.
திராவிடர் இயக்கத்தினால் பகுத்தறிவும், தன்மான உணர்ச்சியும், வகுப்புரிமையும் பெற்ற தமிழர்கள் ம.பொ.சி.யையும், அவரைச் சேர்ந்த கூட்டத்தாரையும் புறக்கணித்தார்கள். கடைசியில் திராவிட இயக்கத்தின் ஆதரவினால்தான் ம.பொ.சி.க்கு மேலவைத் தலைவர் என்ற பதவியும் கிடைத்தது என்பது வரலாறு நினைவூட்டும் பாடமாகும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைத்து மேன்மை நிலை பெற்று வருவதற்கும், பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை நறுக்கிக் கொண்டதற்கும், தமிழ் செம்-மொழி என்ற நிலையை எய்தியதற்கும், தை முதல்-நாள்-தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டதற்கும், சென்னை மாநிலத்-திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதற்கும், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆன-தற்கும் காரணமே திராவிடர் இயக்கம்தான் என்பது சிறுபிள்ளைகள்கூட அறிந்திட்ட உண்மையாகும்.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, திராவிட இயக்கத்தால் தமிழர்கள் உரிமைகளை இழந்-தார்கள் என்று நாக்கூசாமல் ஒரு சிலர் பேசுகின்றனர் என்றால் இதைவிட நன்றிகெட்டதனமும், பார்ப்பனியத்துக்கு வால் பிடிக்கும் விபீஷணத்தனமும்_ வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
திராவிடர் என்ற பெயர் திராவிட இயக்கம் சூட்டிய புதிய பெயர் அல்ல. அது வரலாற்று ரீதியானதாகும். சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்ததற்குக்கூட காரணம் திராவிடர் இயக்கம் தானே?
திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் சூட்டிக் கொண்டதால் திராவிடர் இனத்தைச் சேர்ந்த மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் கண்டிக்கவில்லையா?
திருவெறும்பூரில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட போதும் நெய்வேலியில் நிலக்கரி ஆலை உருவாக்கப்பட்ட போதும், பணிகளில் மலையாளிகளின் ஆதிக்கம் தென்பட்டபோது பொதுக்கூட்டம் போட்டு கண்டனம்_- எதிர்ப்புத் தெரிவித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா?
தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட மாநிலங்களை இணைத்து தெட்சிணப் பிரதேசம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டம் கருவுற்றபோது, அதனைக் கண்டித்து புயல்குரல் எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, அதனைக் கண்டித்து காமராசருக்கு தந்தி கொடுத்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!
மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்ட போது சென்னை எங்களுக்கே என்று ஆந்திரர்கள் குரல் கொடுத்த போது தந்தை பெரியார் கடுமையாக எதிர்க்க-வில்லையா?
24.1.1955 நாளிட்ட விடுதலை ஏட்டில் தந்தை பெரியர் வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாரே!
இப்பொழுது நான் மந்திரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது தமிழ்நாட்டில் பாமர மக்கள் மொழியாகிய தமிழ் மொழியை அரசியல், சமுதாய இயல் காரியங்களில் அரசாங்கம் சிறிதும் இலட்சியம் செய்வதில்லை. இது தவிர இந்தியை நுழைத்துப் பள்ளிக்-கூடங்களிலும், பரீட்சைகளுக்கும் பாடமாக ஏற்பாடு செய்து, படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தொல்-லைகள் ஒருபுறம் இருக்க, உத்தியோகத் தகுதியைக் கொண்டு வந்து புகுத்திப் பெரும்பாலான தமிழ் மக்களை உத்தியோகத் தகுதியற்றவர்களாக ஆக்குவது மற்றொரு புறமிருக்க, இவையெல்லாம் போதாது என்று கருதியோ, என்னமோ, தமிழ் எழுதப்படிக்க, பேசத் தெரியாத மலை-யாளிகளையும், கன்னடியர் (மங்களூர்க்காரர்)-களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம் மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்கள் ஆட்சி என்கின்ற அலங்காரப் பெயர்-களைச் சொல்லிக்கொண்டு, நடைபெறுகிற ஆட்சியில், 100_க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதைச் சிறிதும் உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழி தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படிப் பேச முடியும்?
என்ற வினாவைத் தொடுத்தவர் தந்தை பெரியார்தானே!
திராவிடர் இயக்கம் என்பதாலேயே கன்னடர், மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் எதிர்க்கத்தானே செய்தார்?
உண்மை இவ்வாறிருக்க திராவிட இயக்கத்தால் நாம் வீழ்ந்தோம் என்பது பேச்சல்ல- பிதற்றலே!
”விடுதலை தலையங்கம்” 21-05-2010
திராவிட இயக்க 100-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நூறாண்டு முடிகின்ற தருவாயில் நம்முடைய இயக்கம் இன்றைக்கு திராவிட இயக்கம் என்ற பெயரால் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நாம் திராவிடர்கள் என்று திராவிட இயக்கம் என்பதற்கு ஆண்டு விழா நடத்துகிறோம் என்று சொல்கிற காரணத்தால், தமிழனை மறந்துவிடவில்லை. தமிழ் மொழியை மறந்து விடவில்லை. நம்முடைய இனத்தை இங்கே மறக்காமல் இருக்கிறோம் என்பதற்காகத்தான் இதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அது மாத்திரமல்ல; 8-3-1942ல் அண்ணா திராவிட நாடு இதழைத் தொடங்கியபோது ஐந்து நாட்கள் ஒரு தொடர் தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கத்தில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன.
அன்றியும் திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடம் என்று மாறிற்று என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.
உதாரணமாக, 1926-ல் டி.ஏ. சாமிநாதய்யர் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம்டிக்ஷனரியில் திராவிட என்பதற்கு தமிழ்நாடு என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் - திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை என்று அப்போதே விளக்கம் அளித்துள்ளார்.
இது சாதாரண இயக்கமல்ல, நூறாண்டுகள் கடந்த இயக்கம் என்று சொன்னார்களே, இன்னும் சொல்லப் போனால் 1885&ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியது என்றால், அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே 1847-ம் ஆண்டிலேயே திராவிட தீபிகை என்ற தமிழ் இதழ் தமிழகத்திலே நடத்தப்பட்டிருக்கிறது.
ஆக, திராவிட என்கின்ற சொல், நானோ, பேராசிரியரோ, மேடைகளிலே இருக்கின்றவர்களிலே யாரோ ஒருவர் கண்டுபிடித்த சொல் அல்ல. தேசிய கீதம் யார் எழுதிய பாட்டு? இது நான் எழுதிய பாட்டா? இல்லை ரவிந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம். அந்தப் பாடலிலே இருக்கிறது, திராவிட என்கின்ற சொல். நாங்கள் யாரும் புதிதாகக் கண்டுபிடித்தது அல்ல. பழைய வார்த்தை. பழைய இனம் பற்றிய வரலாற்று வரி. இது ஆட்சி மாற்றத்திற்காகவோ அல்லது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதற்காகவோ அல்லது இருக்கின்ற ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்பதற்காகவோ நடத்தப்படுகின்ற கூட்டம் அல்ல.
இது எழுந்த இனம் - திராவிட இனம். இன்றைய தினம் அந்த வரலாற்றுப் புகழை மறந்து விட்டு, புதைக்கப்படுமேயானால் மீண்டும் எழுவதற்கு எத்தனை ஆண்டுக் காலம் ஆகும் என்ற அந்தக் கவலையினால்தான் இப்பொழுதே தூக்கி நிறுத்த இந்த நூறாம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கும் நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூக நீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல, இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.
இதையும் அழிப்பதற்கு, இன்றைய தினம் எல்லா பக்கமிருந்தும் நமக்கு பயமுறுத்தல்கள், நமக்கு அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம், நம்முடைய வழியில் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும், அதற்கு இன்றுள்ள கட்சியினுடைய காவலர்கள் உடனடியாக தொண்டாற்ற தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
தொடங்கி விட்டோம் தோழர்களே! தொடர் போராட்டம் தொடங்கிவிட்டோம். ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே என்று பரணி பாடிய கருணாநிதி; 13 வயதிலே இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக - ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக - தமிழ்க் கொடி பிடித்து தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன் கருணாநிதி.
இன்றைக்கும் அந்த கருணாநிதியினுடைய பரம்பரை கருணாநிதியினுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, அப்போது கேட்ட திராவிட நாடு திராவிடர்க்கே என்ற குரல் மீண்டும் ஒலிக்காமல் இருக்க நாம் நிச்சயமாக வெற்றியை ஈட்டுவோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
விழாவுக்கு வந்தவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன், பேராசிரியர்கள் மா.நன்னன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.---http://cinema.maalaimalar.com/2012/02/28044618/anna-arivalayam-dmk-karunanidh.html
திராவிடர் சங்கம் தோன்றிய நூற்றாண்டு (1912-2012) டாக்டர் நடேசனாரின் நினைவைப் போற்றுவோம்!
டாக்டர் சி.நடேசனார் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1937).
இந்த மாமனிதருக்கு பார்ப்பனர் அல்லாதார் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. நன்றி உணர்வென்னும் உணர்வின் கண்ணீர்த் துளிகளால் மாலை சூட்டி நம் மரியாதை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று நெஞ்சில் ஈரமின்றி, வரலாற்று அறிவுமின்றி நுனிப்புல் மேயும் சிலர் நம்மினத்திற்குக் கிடைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
நன்றி விசுவாசம் இல்லையே!
நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்றார் தமிழினப் பாதுகாவலராம் தந்தை பெரியார். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த நன்றி கெட்ட மனிதர்களையும் புறந்தள்ளி நாம் நடந்து வந்த பாட்டையை ஒரு கணம் எண்ணுவோம்.
முதன்மையான மனிதர் நடேசனார்
1912 இல் - இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர் அல்லாதா ருக்கென ஓர் அமைப்பு வேண்டும் என்று நினைத்ததே கூட சாதாரணமானதல்ல.
அப்படி நினைத்த பெருமகனார்களில் டாக்டர் சி.நடேசனார் முதன்மையான மனிதர். சென்னை பெரிய தெருவில் உள்ள அவரது இடமே அதற் கான பிரசவ அறையாகும்.
சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) உருவாக்கப் பட்டது. அதுவே பின்னர் 1913-இல் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
பிற்காலத்தில் 1916 நவம்பர் 20 இல் தென்னிந் திய நல உரிமைச் சங்கமாகிய நீதிக்கட்சி தோற்றுவிக்கப் பட்டதற்கான உந்து சக்தி டாக்டர் சி.நடேசனார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட சங்கமேயாகும்.
அதனால்தான் நீதிக்கட்சி என்பதை திராவிடர் சங்கத்தை நிறுவிய நடேசனாரின் குழந்தை என்றார் கே.எம்.பாலசுப்பிரமணியம்.
தியாகராயரையும், நாயரையும் இணைத்த பாலம்
காங்கிரஸ்காரர்களாக இருந்து தங்களுக்குள் மாறுபட்டு நின்ற வெள்ளுடை வேந்தர் பி.தியாக ராயரையும், டாக்டர் டி.எம். நாயரையும் இணைக் கும் பாலமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!
இந்த மும்மூர்த்திகளும்தான், திராவிடர் இயக்கத்தின் முக்கிய மூன்று தூண்கள்!
அந்தக் காலத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமானால் பெருநகரங்களாகிய சென்னை, திருச்சியைத் தேடித்தான் செல்லவேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகளும் பார்ப்பனர்களுக்கானது. அங்கே பார்ப்பனர் அல்லாதார் தங்குவதற்கு அனுமதி கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்து வரலாம்.
இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் தங்கிப் படிப்பதற்கென்றே ஒரு விடுதியை ஏற்படுத் தினார் (1916) டாக்டர் நடேசனார். இந்த ஆக்கபூர்வமான - ஆதார சுருதியான செயலை செய்த இந்த ஒன்றுக்காக மட்டுமே அந்தப் பெருமகனுக்கு நம் நெஞ்சத்தில் நிரந்தர இடத்தை அளிக்க வேண்டும்!
அந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் துணை வேந்தராக விளங்கிய டி.எம்.நாராயணசாமி பின்னை, பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார்.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக வந்த ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பாரிஸ்டர் ரங்கராமானுஜ (முதலியார்) போன்றவர்கள் கூட இந்த இல்லத்தில் தங்கிப் படித்தனர் என்கிறார் திராவிடப் பெருந்தகை தியாகராயர் என்ற நூலில் மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்கள்.
டி.எம்.நாயர் ஊட்டிய ஊக்கம்
ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளி யேறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதும் திராவிடர் சங்கமே.
டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் எல்லாம் உரையாற்றி உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்பொ ழுது ஒரு முறை டாக்டர் நாயர் “Awake, Arise or Be Forever Fallen” என்று கூறியிருந்தார்.
பார்ப்பனர்கள் அல்லாத பட்டதாரிகளே, விழியுங்கள்! எழுங்கள்! இன்றேல் நீவிர் வீழ்ச்சி அடைவீர்! என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு. உளவியல் ரீதியான தூண்டுதலையும் எழுச்சியையும் ஊட்டி நின்றார்.
1912 இல் நம் நிலை என்ன?
1912 இல் பார்ப்பனர் அல்லாதாருக்கான ஓர் அமைப்பைத் தொடங்கிய கால கட்டத்தில் நம் நாட்டின் நிலை என்ன?
டெபுட்டி கலெக்டர்கள் 55ரூ , சப் ஜட்ஜ்கள் 83ரூ, மாவட்ட முன்சீப்புகள் 72ரூ பார்ப்பனர் களாகவே இருந்தனர் என்ற நிலையை நினைத் துப் பாருங்கள்.
1901 ஆம் ஆண்டில் கல்வியின் நிலை என்ன?
பார்ப்பனர்கள் (தமிழ்நாடு) 73.6% }
தெலுங்குப் பார்ப்பனர்கள் 67.3%
நாயர்கள் 39.5%
செட்டியார் 32%
இந்தியக் கிறிஸ்தவர் 16.2%
நாடார் 15.4%
பலிஜா நாயுடு, கவரை 14.3%
வேளாளர் 6.9%
கம்மா 4.8%
காப்பி, ரெட்டி 3.8%
வௌமா 3.5%
(Census of India, Madras 1921 XIII Part I, 128-129)
இந்தப் புள்ளி விவரங்களை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதாரின் வளர்ச் சிக்கு எந்த இயக்கம் அடிப்படை? எந்தத் தலை வர்கள் காரணம்? என்பதை ஒழுங்காக அறிய முடியும்.
திராவிடத்தால் வீழ்ந்தோமா?
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி பார்ப்பனர்களுக்குச் சேவை செய்யத் துடிக்கும் பேர்வழிகளின் அடையாளத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பற்றிய ஒரு புள்ளிவிவரம் இதோ:
திறந்த போட்டி 460 இடங்கள்
பிற்படுத்தப்பட்டவர்கள் 300 பேர்
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 72 பேர்
தாழ்த்தப்பட்டவர்கள் 18 பேர்
முசுலிம்கள் 16 பேர்
முற்படுத்தப்பட்டோர் 54 பேர்
200-க்கு, 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 8 பேர். இதில் பிற்படுத்தப்பட்டவர் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர்.
இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல் லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450 (89 விழுக்காடு) என்று துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சொன்னாரே! (20-11-2010). இந்த வளர்ச்சிக்கு அடித்தள மிட்டு வளர்த்தது திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா?
பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக இருந்த உத்தியோக மண்டலத்துக்கு முடிவு கட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கொண்டு வரப்படக் காரணமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!
அதிர்வை ஊட்டிய நடேசனாரின் தீர்மானம்
பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக் கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தி யோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை அன் றைய சென்னை மாநில சட்டசபையில் கொண்டு வந்து சபையையே அதிர வைத்த சமூக நீதியின் சண்டமாருதம் நடேசனாரே!
இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் தங்கிப் படிப்பதற்கென்றே ஒரு விடுதியை ஏற்படுத் தினார் (1916) டாக்டர் நடேசனார். இந்த ஆக்கபூர்வமான - ஆதார சுருதியான செயலை செய்த இந்த ஒன்றுக்காக மட்டுமே அந்தப் பெருமகனுக்கு நம் நெஞ்சத்தில் நிரந்தர இடத்தை அளிக்க வேண்டும்!
அந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் துணை வேந்தராக விளங்கிய டி.எம்.நாராயணசாமி பின்னை, பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார்.
இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக வந்த ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பாரிஸ்டர் ரங்கராமானுஜ (முதலியார்) போன்றவர்கள் கூட இந்த இல்லத்தில் தங்கிப் படித்தனர் என்கிறார் திராவிடப் பெருந்தகை தியாகராயர் என்ற நூலில் மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்கள்.
டி.எம்.நாயர் ஊட்டிய ஊக்கம்
ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளி யேறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதும் திராவிடர் சங்கமே.
டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் எல்லாம் உரையாற்றி உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்பொ ழுது ஒரு முறை டாக்டர் நாயர் “Awake, Arise or Be Forever Fallen” என்று கூறியிருந்தார்.
பார்ப்பனர்கள் அல்லாத பட்டதாரிகளே, விழியுங்கள்! எழுங்கள்! இன்றேல் நீவிர் வீழ்ச்சி அடைவீர்! என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு. உளவியல் ரீதியான தூண்டுதலையும் எழுச்சியையும் ஊட்டி நின்றார்.
1912 இல் நம் நிலை என்ன?
1912 இல் பார்ப்பனர் அல்லாதாருக்கான ஓர் அமைப்பைத் தொடங்கிய கால கட்டத்தில் நம் நாட்டின் நிலை என்ன?
டெபுட்டி கலெக்டர்கள் 55ரூ , சப் ஜட்ஜ்கள் 83ரூ, மாவட்ட முன்சீப்புகள் 72ரூ பார்ப்பனர் களாகவே இருந்தனர் என்ற நிலையை நினைத் துப் பாருங்கள்.
1901 ஆம் ஆண்டில் கல்வியின் நிலை என்ன?
பார்ப்பனர்கள் (தமிழ்நாடு) 73.6% }
தெலுங்குப் பார்ப்பனர்கள் 67.3%
நாயர்கள் 39.5%
செட்டியார் 32%
இந்தியக் கிறிஸ்தவர் 16.2%
நாடார் 15.4%
பலிஜா நாயுடு, கவரை 14.3%
வேளாளர் 6.9%
கம்மா 4.8%
காப்பி, ரெட்டி 3.8%
வௌமா 3.5%
(Census of India, Madras 1921 XIII Part I, 128-129)
இந்தப் புள்ளி விவரங்களை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதாரின் வளர்ச் சிக்கு எந்த இயக்கம் அடிப்படை? எந்தத் தலை வர்கள் காரணம்? என்பதை ஒழுங்காக அறிய முடியும்.
திராவிடத்தால் வீழ்ந்தோமா?
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி பார்ப்பனர்களுக்குச் சேவை செய்யத் துடிக்கும் பேர்வழிகளின் அடையாளத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பற்றிய ஒரு புள்ளிவிவரம் இதோ:
திறந்த போட்டி 460 இடங்கள்
பிற்படுத்தப்பட்டவர்கள் 300 பேர்
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 72 பேர்
தாழ்த்தப்பட்டவர்கள் 18 பேர்
முசுலிம்கள் 16 பேர்
முற்படுத்தப்பட்டோர் 54 பேர்
200-க்கு, 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 8 பேர். இதில் பிற்படுத்தப்பட்டவர் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர்.
இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல் லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450 (89 விழுக்காடு) என்று துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சொன்னாரே! (20-11-2010). இந்த வளர்ச்சிக்கு அடித்தள மிட்டு வளர்த்தது திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா?
பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக இருந்த உத்தியோக மண்டலத்துக்கு முடிவு கட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கொண்டு வரப்படக் காரணமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!
அதிர்வை ஊட்டிய நடேசனாரின் தீர்மானம்
பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக் கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தி யோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை அன் றைய சென்னை மாநில சட்டசபையில் கொண்டு வந்து சபையையே அதிர வைத்த சமூக நீதியின் சண்டமாருதம் நடேசனாரே!
பெண்களுக்கு வாக்குரிமை வந்தது எப்படி?
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதும் நீதிக் கட்சி ஆட்சியிலேயேதான்! மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சதி வலையை கிழித்தெறிந்ததும் நீதிக் கட்சியே!
தேவதாசி முறை ஒழிப்பு, இந்து அறநிலையத் துறைப் பாதுகாப்புச் சட்டம் இவற்றைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியே!
நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்
நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை (1920-23) சாதனைகள் பற்றி தனி அரசாணையே வெளியிடப்பட்டதே! (ஆணை எண் 116).
பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன
துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
*தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25- நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப் பட்டன.
ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப் பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. தாழ்த்தப்பட்டவர் களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
அருப்புக் கோட்டையில் குறவர் பையன் களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவு களால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளி யிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளை களுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும் போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
*அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
*தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
*சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப் பட்டு இருந்தது.
*கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
*தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10.05.1921
2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப்பெறல். அரசாணை எண். 817 நாள் 25.3.1922
3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20.5.1922.
4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21.6.1923.
5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11.2.1924; (ஆ) 1825 நாள்: 24.9.1924.
6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27.01.1925.
7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 20.5.1922. (ஆ) 1880 நாள் 15.9.1928
8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27.2.1929
9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18.10.1929.
எடுத்துச் சொன்னால் ஏடு தாங்காது.
69 சதவிகிதம் வரை...
இந்தி திணிப்பு முறியடிப்பு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சி (பெயர்கள் சூட்டுவது உட்பட) செம்மொழி, சுயமரியாதைத் திருமணச் சட்டம், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், 69 சதவிகித இடஒதுக்கீடு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா என்பதை நேர்மையுடன், அறிவு நாணயத்துடன் சிந்தித்துப் பார்க்கட்டும்!
தந்தை பெரியாரின் இரங்கல்
திராவிட இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமான் சி. நடேசனார் தமது 62ஆவது வயதில் மறைவுற்றார். அப்பொழுது தந்தை பெரியார் எழுதினார் குடிஅரசில் (21.2.1937).
டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலும் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவ தும் மூன்றாவதுமாகும்.
சூதற்றவனும் - வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒரு நாளும் வெற்றி பெற மாட்டான் என்கிற தீர்க்க தரிசன ஆப்தவாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள், தனது தொண்டிற்கும், ஆர்வத்திற்கும், உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனைத் தம் சொந்தத்திற்கு அடையாமல் போனதில் நமக்குச் சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார்.
கொள்கை வீரர் - தன்னலமற்ற பெருந்தகை நடேசனார் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நிலை ஏற்படக் கூடாது என்பது நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டு விடாமல் ஆயிரம் நடேசனார் காணுவோமாக! நாம் ஒவ்வொருவரும் நடேசனாக நாடுவோமாக! என்று எழுதினார் தந்தை பெரியார்.
தலைநகரில் நடேசனாருக்குச் சிலை!
திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறையாக இருந்த டாக்டர் நடேசனாருக்கு தலைநகரில் ஒரு சிலை இல்லை. திராவிடர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு காணும் இவ்வாண்டிலாவது அவரது சிலையை - அவர் வாழ்ந்து வந்த சென்னை திருவல்லிக்கேணி வட்டாரத்தில் நிறுவிட வேண்டும் - அது நமது கடமை. அதே போல தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப் பெற்ற டாக்டர் டி.எம். நாயர், முதல் வகுப்புரிமை ஆணையக் கொண்டு வந்து செயல்படுத்திய சிற்பி எஸ். முத்தையா முதலியார் ஆகியோர்களின் சிலைகள் தலைநகரில் நிறுவப்பட வேண்டும். இவ்வாண்டில் நீதிக்கட்சி - திராவிடர் இயக்கத் தொடர்பான முக்கிய நூல்களும் வெளியிடப்படும். இதற்கான முயற்சியில் திராவிடர் கழகம் மேற்கொள்ளும். திராவிடர் சங்க நூற்றாண்டு விழாவையும் நாடு தழுவிய அளவில் கொண்டு சென்று - திராவிடர் இயக்கத்தையும், திராவிடர் என்ற இனப்பெயரையும் சிறுமைப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம்!
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்!
நீதிக் கட்சியின் பவள விழாவினை 1991இல் சேலத்தில் சிறப்பாக நடத்திய திராவிடர் கழகம் இதனையும் உரிய வழியில் கொண்டாடும்.
வாழ்க நடேசனார்! வளர்க திராவிட இயக்க இலட்சியம்!
திராவிடம்-திராவிடர் : ஆய்வரங்கத்தில் கலைஞர் பேச்சு
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளான இன்று தொல்காப்பிய அரங்கத்தில் ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி துவக்கிவைத்தார்.
ஆய்வரங்கத்தில் முதல்வ கருணாநிதி உரையாற்றினார். அதன் உரை:
’’உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத் தொடக்க விழா நிகழ்ச்சியின் தலைவர் முனைவர் கா. சிவத்தம்பி அவர்களே,
சிறப்பு மலரினை வெளியிட்டு உரையாற்றிய மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் அவர்களே,
வாழ்த்துரை வழங்கிய
முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களே,
முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன் அவர்களே,
முனைவர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களே,
முனைவர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களே,
முன்னிலை வகிக்கும் வெளிநாட்டு அறிஞர் பெருமக்களே,
வரவேற்புரையாற்றிய முனைவர் பொற்கோ அவர்களே,
நன்றியுரை நவிலவிருக்கும்
முனைவர் அவ்வை நடராசன் அவர்களே,
ஆய்வரங்கில் கலந்து கொள்ள வந்துள்ள வெளிநாட்டைச் சேர்ந்த -
வெளி மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களே, ஆய்வாளர்களே,
மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே,
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,
வணக்கம்.
மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் நேற்றைய தினம்தொடங்கி வைக்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டம் இன்று தொடங்குகிறது.
அன்னைத் தமிழுக்கு அரிய பயன்தரும் கட்டம்இது; இன்றிலிருந்து தொடங்கி, நான்கு நாட்களுக்கு நடைபெறப்போகும்ஆய்வரங்கங்களின் மூலம்தான் - தமிழ்மொழியை மேலும் செழுமைப் படுத்திடவும்; அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து, 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துரைகளையும் நாம் பெறஇருக்கின்றோம்.
இங்கு நடைபெறவுள்ள ஆய்வரங்கிலும், இணையத் தமிழ் மாநாட்டிலும் பங்கு கொள்ள வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்தஅன்பையும், நன்றியையும், முதற்கண் தெரிவித்துக் கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் நம்மாலே காண முடிகிறது. ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது நமக்குப் புதியதெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.
ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச் சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின்பணியாகும். இத்தகைய ஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன், ஆய்வறிஞர்கள்; எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை வழங்கிட வேண்டும்.
ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப்புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும்.
அந்தஅளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.
கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786இல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816இல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856இல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி
ஆராய்ந்தனர்.
இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம்; அக்குடும்பத்தின் முதன்மை மொழி; தமிழ் என்னும் உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.
1927இல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது.அதன்பின், உலக நாடுகளின் அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு,நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
அவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள்.
திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.
இரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார்.
சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர் தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார்.
காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிடமொழிப் பிரிவின் கிளைமொழியைப் பேசுகின்றனர்.
பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் “குருக்கர்” என்போர் திராவிட மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.
இந்திய நாகரிக அடையாளமான சேலையும்,வேட்டியும் திராவிட நாட்டின்கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்.கே.சட்டர்ஜி; “இந்தோ - ஆரியன் - இந்து” என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு திராவிட வழிபாடேயாகும்.
அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.
ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.
சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும்
உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து உரைக்கின்றார்.
எழுத்து முறையை எகிப்தியருக்குத் திராவிடர் கொடையாகக் கொடுத்தனர்.
மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத் தமிழரிடமிருந்து சென்றவை.
பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில்,மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த “ஒனசு” என்பார், தமது குழுவினருடன் வந்தார். நாகரிகம் கற்பித்தார். ஏர் உழவுக் கருவிகளைக்
கொடுத்தார். அறிவியல்கலை, கட்டடக்கலை, ஆண்டவன் வழிபாடு ஆகியவற்றைக் கற்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
சங்ககாலம் கி.மு.4ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.
“மத்திய தரைக்கடல், குமரிக்கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கணும் பரவியது தமிழர் நாகரிகமே” என்று இராமச்சந்திர தீட்சிதர் “தமிழர் தோற்றமும் பரவியதும்” என்ற நூலில் கூறியுள்ளார்.
தமிழ்மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை தொல்காப்பியம் போன்றதோர் பழைமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும்; திணை, துறை வகுப்பும்; சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாதவாறும்; கூற்றுநிலையில் அமைந்திடுமாறும் உள்ள அகப்பாடல்களும்; பொய்யும் வழுவும் விரவா மெய்யான தூய காதலைப் போற்றும் மரபும்;
மகேசனை மையப்படுத்தாது மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள்போல உலகப் பொதுமையான அற இலக்கியமும் எந்த மொழியிலும் இல்லை; கடவுளை விடுத்துக் குடிமக்களைத் தலைமக்களாகக் கொண்ட சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை; ஆசியா முழுவதும் கோலோச்சிய பௌத்த சமயத்திற்கு மணிமேகலை போல ஒரு காப்பியம் பாலிமொழியிலும் இல்லை; எல்லாச் சமயங்களையும் - சைவ, வைணவ சமயங்களையும் - சமண, பௌத்த சமயங்களையும் - கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும் இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப்பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி. அது மட்டுமல்ல, எல்லா மெய்ப்பொருள் தத்துவங்களையும் விளக்கும் மொழி அது.
தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல - கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று - திரைகடலோடித் திரவியம் தேடியது மட்டுமன்றித் திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழ் இனம்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையினரால் முதலாம் இராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி. 1053ஆம் ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ,பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும். தஞ்சையை விசயாலயச் சோழன் பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது. இச்செப்பேடு இந்த மாநாட்டை ஒட்டிய கண்காட்சியில் உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
இப்படி காலந்தோறும் தமிழ், தமிழர்கள் கொண்டுள்ள எண்ணற்ற சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்; அவற்றையெல்லாம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள்தான் வெளிநாட்டவர்க்கு எடுத்துரைத் திடவேண்டும்; ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர் அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
தமிழன் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை முதலில் தமிழன் உணர வேண்டும்; பிறருக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல், தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதித்துள்ள சாதனைகள், இவையெல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தக் கூடியவை என்றாலும், அந்தப் பூரிப்போடும் பெருமிதத்தோடும் நிறைவு அடைந்துவிடக் கூடாது; தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் ஆற்றவேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை உணர வேண்டும்.
இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்க மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும், ஜெர்மன் மொழியிலும், பிற மொழிகளிலும் தமிழியல் குறித்தும் தமிழினம் குறித்தும் எழுதப் பெற்றுள்ளவை அனைத்தும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப்பெற்று உலகில் எந்த ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும்.
வகைவகையாய்அகராதிகளும், தொகைதொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வரவேண்டும். இன்னும் என்னென்ன வேண்டும் தமிழுக்கு என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் கருத்துப்படி,பாட்டையை அமைத்துக் கொண்டு, உயிர் உள்ளவரை தமிழுக்காகப் பாடுபட - நம்மைத் தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட - நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட - உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.
இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆய்வரங்கின் பல்வேறு அமர்வுகளில் வழங்கப்பெறும் கட்டுரைகளிலும், முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம் ஆகியவற்றிலும் முன் வைக்கப்படும் கருத்துகளும், அவை மீதான ஆரோக்கியமான விவாதங்களும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்றுகூறி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கை மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் தொடங்கி வைக்கிறேன்.
நன்றி; வணக்கம்!’’
நாடாளுமன்றத்தில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிக்கையை கிழித்து வீசிய திமுக எம்பிக்கள்!
டெல்லி: இலங்கை அரசின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்துப் படித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்று திமுக ஆவேசமாக கூறியுள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இலங்கைககு எதிரான ஐநா மனித உரிமை ஆணைய நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார். முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருந்தது அந்த அறிக்கை.
அதற்குப் பின்னர் திமுக சார்பில் திருச்சி சிவா பேசுகையில், கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை விவகாரம் தொடர்பாக எப்போது அறிக்கை வாசித்தாலும், அது இலங்கை அரசின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வந்து படிப்பது போலவே இருக்கிறது. இப்போதும் அப்படி ஒரு அறிக்கையைத்தான் அவர் வாசித்துள்ளார்.
இலங்கையுடன் நமக்கு வரலாற்று ரீதியான உறவு உள்ளது, நட்பு உள்ளது என்கிறார். அந்த உறவுதான் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேரின் உயிரை எடுத்துள்ளது. நமது தமீழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் மாண்டு போகச் செய்து வருகிறது. தொடர்ந்து நமது மீனவர்களை இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த உறவு வரலாற்றுப் பூர்வமானது, நட்பு ரீதியானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படியே நீங்கள் கூறிக் கொண்டிருந்தால், இலங்கையில் இந்தியாவுக்கு ஆதரவான அத்தனை தமிழர்களும் கொன்று குவிக்கப்பட்டு விடுவார்கள். இந்தியாவுக்கு எதிரானவர்கள் குவிந்து விடுவார்கள். இது இந்தியாவுக்கு நல்லதல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பல காலமாக எங்களது சகோதரர்களை கொன்று குவித்து வரும் ஒரு நாட்டுடன் நாம் எப்படி வரலாற்றுப் பூர்வமான உறவை பராமரிக்க முடியும், நட்பாக இருக்க முடியும். எனவே இனியும் அப்படிச் சொல்லாதீர்கள்.
கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா தயவு செய்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சிவா.
அறிக்கையை கிழித்து திமுக வெளிநடப்பு
முன்னதாக எஸ்.எம்.கிருஷ்ணா தனது அறிக்கையைப் படித்து விட்டு உட்கார்ந்தபோது திமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து கிருஷ்ணாவின் உப்புச்சப்பில்லாத பதிலைக் கண்டித்து குரல் கொடுத்தனர். அவர்களை அமருமாறு துணைத் தலைவர் ரஹ்மான் கான் கோரினார். ஆனால் கிருஷ்ணாவின் பதில் குறித்து கடுமையாக விமர்சித்த திமுக உறுப்பினர்கள், அவரின் உரை நகலைக் கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர்.
அதிமுகவும் வெளிநடப்பு
அதேபோல அதிமுக உறுப்பினர்களும் எஸ்.எம்.கிருஷ்ணா பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
---http://tamil.oneindia.in/news/2012/03/14/india-dmk-slams-s-m-krishna-tores-his-speech-copy-in-rs-aid0091.html
இலங்கைக்கு எதிரான தீர்மானம்- இந்தியாவின் நிலை குறித்து எதுவுமே சொல்லாத எஸ்.எம்.கிருஷ்ணா!
டெல்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.
இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர்.
நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசபாவை உலுக்கியது. இன்று காலை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். இதையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பிற்பகல், லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையைப் படித்தார்.
அவரது அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகளை நீளமாக பட்டியலிட்டுப் பேசிய கிருஷ்ணா, தனது அறிக்கையின் இறுதியில், நாம் எந்த முடிவாக இருந்தாலும் அது இலங்கையுடனான நமது நாட்டின் வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறினார். தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவர் நேரடியாக பதில் தரவில்லை.
கிருஷ்ணாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...
இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர்களின் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்.
ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகி விடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாது என்றார் கிருஷ்ணா.
இது போக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்வோருக்கு சைக்கிள் கொடுத்தது, வீடு கட்டிக் கொடுத்தது ஆகியவை குறித்து புள்ளி விவரத்துடன் நீண்ட பட்டியலையும் கிருஷ்ணா வாசித்தார். அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, ஆதரிக்குமா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
------http://tamil.oneindia.in/news/2012/03/14/india-centre-spell-its-stand-on-us-backed-resolution-aid0091.html
Post a Comment