Search This Blog

16.6.11

யார் இந்த ஹனுமான்?அனுமானின் தகப்பனார் யார் தெரியுமா?


தேசிய நெடுஞ்சாலைகளில் திடீர் திடீரென்று 30,40 அடி உயரத்தில் குரங்கு சிலை கல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த இடங்களில் எல்லாம் இந்தக் குரங்கு சிலையை நிறுவுவதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?

இதுபோல குரங்கு சிலைகளை வைப்பதற்கு எந்தவித அனுமதியும் தேவைப்படாது என்ற எழுதப் படாத உத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்பட்டுள்ளதா என் றெல்லாம் தெரியவில்லை.

குரங்கு சிலை என்று கேவலமாகப் பேசக் கூடாது - அது ஹனுமான் சிலை என்று கூடப் பக்தப் பெருமான்கள் சொல்லக் கூடும். அது எப்படியோ ஒழியட்டும்!

யார் இந்த ஹனுமான்? ராமனைப்பற்றி உபந்நியாசம் நடத்தப்படும் இடங்களில் எல்லாம் இந்தக் குரங்காகிய ஹனுமான் பிரசன்னம் ஆகியிருப்பாராம். ராமப் பக்த ஹனுமான் என்று கூடச் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு ராமன் விசுவாசி இந்தக் குரங்கு.

இந்தக் குரங்குதான் ராமனின் தூதுவனாக இராவணனிடம் சென்றதாம். இலங்கா புரியைத் தகனம் செய்ததாம்.

இராம - இராவணன் யுத்த களத்தில் இலட்சுமணன் மூர்ச்சை அடைந்தபோது சஞ்சீவி மலையை அலக்காகத் தூக்கிக் கொண்டு வந்து மூலிகை சாறுபிழிந்து பிழைக்க வைத்ததும் இந்தக் குரங்காகிய அனுமான்தானாம்.

இந்த அனுமானின் தகப்பனார் யார் தெரியுமா? வாயுவாம். மாற்றான் மனைவியைக் கூடி வாயு இந்த ஹனுமனைப் பெற்றெடுத்தானாம். ஹிந்து மதச் சாளரத்தைத் திறந்தால் அதில் கொட்டுவதெல்லாம் பீப்பாய் பீப்பாயாக சாக்கடைதான்! என்றாலும் அவற்றின்மீது தெய்வீக முலாம் பூசப்பட்டு டாலடிக்கச் செய்கின்றனர்.

இந்தக் குரங்கு ராமனுக்கு இவ்வளவுத் தொண்டு செய்தும் அவனுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

மூலநூலமாகிய வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டம் என்ன சொல் லுகிறது?

ராமபட்டாபிஷேக காலத்தில் வெகுமானிக்கப்பட்ட வர்கள் பட்டியல் தரப்பட்டுள் ளது. புருஷோத்தமர் (ராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும், நூறு காளை மாடுகளையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார் (பக்கம் 556).

மீண்டும் பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங்களையும், மிகவும் விலை உயர்ந்த பொன் ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் வழங்கினர். சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்.

(ராவ் சாஹேப் பி.எஸ். கிருஷ்ணசாமி அய்யரில் மொழிபெயர்ப்பு)

போர்க் களத்தில் உயிரைப் பணயம் வைத்து ராமனுக்காக உழைத்த அனுமானுக்கு இரண்டே இரண்டு வஸ்திரங்கள்; தண் டச் சோற்றுப் பார்ப்பனர் களுக்கோ லட்சம் குதிரைகளாம் அப்பொழுது கன்று போட்ட ஏராள பசுக்களாம், நூறு காளைகளாம்.

அடிமை அனுமார்களின் யோக்கியதை இதுதான் என்று காட்டுவதற்கா இந்த சாலை யோர சிலைகள்?

--------------- மயிலாடன் அவர்கள் 16-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

சங்கர மட கஜானா திறக்கப்படுமா?


சோமபானம், சுராபானம் குடிக்கும் பரம்பரையான தினமலருக்குத் தேளும் கொட்டிவிட்டது போலத் தெரிகிறது. தொடர்ந்து திராவிடர் கழகத்தையும் தலைவரையும் சீண்டாமல் இருக்க முடியவில்லை சிண்டுகளுக்கு.

தினமலரின் டவுட் தனபாலு (16-6-2011) இதோ பேசுகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள கிராம நிருவாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு, இந்தக் கணக்கெடுப்பை நடத்த அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் கூட செலவாகாது.

டவுட் தனபாலு: சரியாகச் சொன்னீங்க... அதனால கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வச்சிருக்கிற திராவிடர் கழகமும், இட ஒதுக்கீடு வாங்கித் தர்றதுக்காகவே பிறந்த உங்க கட்சியும் சேர்ந்து, 10 கோடி ரூபாயை செலவழிச்சு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திடுங்க . . . அதை தமிழக அரசு ஏத்துக்கும்படியா பார்த்துக்கலாம்.

(தினமலர்: 16-6-2011 பக்கம் 6)

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றாலே அக்கிரகாரத்துக்கு கடுப்பு ஏறுவது ஏன்? ஜாதி ஒழிப்பு ஜாம்பவான்களாகக் காட்டிக் கொள்வது ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களின், பிற்படுத்தப்பட்டவர்களின் மக்கள் தொகை என்ன? அதே நேரத்தில் கல்வியில், வேலை வாய்ப்புகளில் அவர்களின் விழுக்காடு என்ன? மூன்று சதவிகிதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் எத்தனை மடங்கு அதிகமாக இவற்றில் ஆதிக்கம் செலுத்து கின்றனர் என்ற குட்டு உடைந்து போய்விடுமே!

இப்பொழுது தமிழ்நாட்டில் 69 சதவிகிதமாக இருக் கிற இட ஒதுக்கீட்டின் அளவு 90 சதவிகிதமாகப் போனாலும் போய்விடுமே - நம்மப் பிழைப்பு என்னாவது என்கிற ஆத்திரத்தில் இந்த அக்கிரகார சவுண்டிகள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்கின்றனர்.

நூற்றுக்கு மூன்று பேர்கள்தான் நாங்கள் - எங்களுக்கு அது போதும் என்று கூறட்டுமே - இட ஒதுக்கீட்டுக்கு தீர்வு ஒரு நொடியில் கிடைத்துவிடுமே!

வருடா வருடம் ஆவணி அவிட்டம் நடத்திப் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளும் இந்தத் தினமலர் கூட்டம் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றவுடன் தையத் தக்கா என்று குதிப்பது ஏன்? புள்ளி விவரம் எடுப்பதற்கு ஆகும் செலவை திராவிடர் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!

அப்படியா? திராவிடர் கழகம் இதனைச் செய்தால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு?

கோவில் குடமுழுக்கு செலவுகளை தினமலர்களும், தினமணிகளும், கல்கிகளும், துக்ளக்குகளும் எடுத்துக் கொள்ளுமா? காஞ்சி மட கஜானாவில் பதுங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை அவிழ்த்துக் கொட்டுவதுதானே?

திராவிடர் கழகம் செலவு செய்து ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்துக் கொடுத்தால், தமிழக அரசு ஏத்துக்கும்படியா பார்த்துக் கொள்ளலாமாம்.

புரிகிறதா? இந்த அதிமுக அரசிடம் தினமலர் கூட்டத்துக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது இப்பொழுதுதாவது புரிகிறதா?

அரசை ஏற்றுக் கொள்ள வைக்கும் பொறுப்பை தினமலர் ஏற்றுக் கொள்கிறதாம் - அந்த அளவுக்குப் பூணூல் இறுக்கம்!

--- "விடுதலை” 16-6-2011

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீட்டைத் தூக்கி எறிந்து 60 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்
ஓய்வு பெற்றவர் உள்ளே நுழைந்தது எப்படி?

சென்னை அய்.அய்.டி.யில் உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்வதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னை அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களைப் போலவே இப்போதும் இட ஒதுக்கீட்டு முறையை ஓதுக்கி தள்ளி விட்டு 60 உதவி பேராசிரியர்களை அதன் இயக்குநர் ஆனந்த் தேர்வு செய்துள்ளார்.

சென்னை அய்.அய்.டி இயக்குநர் பதவியிலிருந்து விலகுவ தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்துவிட்ட இயக்குநர் தற்போது நேர் காணலை நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய் திருப்பது அப்பட்டமான விதிமீறல் என்று கல்வி யாளர்கள் குற்றம் சாற்றியுள்ளார்.

சென்னை அய்.அய்.டி. இயக்குநர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்துவிட்ட இயக்குநர் தற்போது நேர் காணலை நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்திருப்பது அப்பட்டமான விதிமீறல் என்று கல்வியாளர்கள் குற்றம் சாற்றியுள்ளனர். இந்தப் பணி அமர்த்தல்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை அய்.அய்.டி. நிருவாகக் குழு தலைவருக்கு முறையீடு அளிக்கப்பட் டுள்ளது.

சென்னை அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும், வேண் டியவர்களுக்கு வேலை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக சென்னை அய்.அய்.டி. மீதும், அதன் இயக்குநர் ஆனந்த் மீதும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அய்.அய்.டி. இயக்குநர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவர் அறிவித்துவிட்டார். அவரது பதவி விலகலை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து அவர் அடுத்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அய்.அய்.டி. இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன்பாக ஆள் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. பல்வேறு நீதிமன்றங்களும் இதை உறுதி செய்துள்ளன.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சென்னை அய்.அய்.டி.யில் 60 உதவிப் பேராசிரியர்கள் உட்பட 350க்கும் மேற் பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நட வடிக்கை களில் இந்த அய்யங்கார்ப் பார்ப்பனர் ஈடுபட்டி ருப்பதாக அய்.அய்.டி.யில் பணியாற்றும் பேராசிரி யர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்தின் பதவி விலகல் கடிதத்தை குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் ஏற்றுக் கொண்டுவிட்டார். ஜூலை இறுதியில் ஓய்வு பெறும் ஆனந்த் எந்த விதமான முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது. ஆனால், விதிகளைப் புறந்தள்ளிவிட்டு கடந்த மே மாத தொடக்கத்தில் 5 துணைப் பதிவாளர்கள், 6 உதவி பதி வாளர்கள் என 11 பேர்களை நியமனம் செய்துள்ளார்.

அது மட்டுமின்றி 16 துறைகளில் 60 உதவி பேராசிரியர்களை அமர்த்து வதற்கான நேர் காணலை ஆனந்த் நடத்தி முடித்துள்ளார். அவரால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு சென்னை அய்.அய்.டி.யின் நிருவாகக் குழு தலைவராக இருந்த விஞ்ஞானி சிதம்பரம் பதவிக் காலத்தின் கடைசி நாளில் அனுமதி அளித்துள்ளார்.

இது சட்டத்திற்கு எதிரானது. ஓய்வு பெறு வதற்கு முன்பாக எல்லா பணிகளையும் நிரப்பிவிடலாம் என்று முடிவெடுத்து செயல்படுவதைப் போல ஆனந்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று அய்.அய்.டி.யில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

அய்.அய்.டி.பணியிடங்களை நிரப்பும் போது இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித் திருக்கிறது. நடுவணரசும் இதை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலேயே அனைத்துப் பணியிடங்களையும் ஆனந்த் நிரப்பி யுள்ளார். அவர் இவ் வாறு செய்வது இது முதன் முறையல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே ஆனந்த் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.

----------தொடரும்

தமிழ் ஓவியா said...

அவர் கடைப் பிடித்து வரும் ஆள் தேர்வு கொள் கையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக் கின்றன. இதனால் அவர் ஆட்களையே தேர்வு செய்ய முடியாது. ஆனாலும் விதிகளை காலில் போட்டு மிதித்தபடியே தமது விருப் பத்திற்கு ஆட்களை அவர் அமர்த்தி வருகிறார் என்று அய்.அய்.டி.யில் நடைபெறும் விதிமீறல்களை எதிர்த் துப் போராடி வரும் முனைவர் முரளி தரன் தெரிவித்தார்.

அய்.அய்.டி.க்கு தேர்வு செய்யப் பட்டுள்ள 60 உதவி பேராசிரியர்களில் ஆனந்தின் புதல்வர் சுதர்சன், மகள் நந்தினி ஆகியோரும் அடங்குவர். சுதர்சன் இயற்பியல் துறை உதவி பேராசிரிய ராகவும், நந்தினி வேதியியல் துறை உதவி பேராசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனினும், தமது குடும்பத்திலிருந்து எவரையும் அய்.அய்.டி. பணிக்கு தேர்வு செய்ய வில்லை என்று ஆனந்த் மறுப்பு தெரி வித்துள்ளார்.

சென்னை அய்.அய்.டி.உதவி பேரா சிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தேர்வில் தவறு நடை பெற்றிருப்ப தால், புதிதாக தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணியமர்த்தல் ஆணை களை வழங்கக் கூடாது என்று சென்னை அய்.அய்.டி.யின் நிருவாகக் குழு தலைவர் எம்.எம்.சர்மாவிற்கு முரளிதரன் முறையீட்டு மனு அனுப் பியுள்ளார்.

---”விடுதலை” 16-6-2011

seeprabagaran said...

“தினமலர்” நாளேடு தமிழினத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான ஒரு தீயசக்தி. தமிழினத்திற்காகவும் சமூகநீதிக்காகவும் உண்மையாக உழைக்கும் அனைத்து சக்திகளும் “தினமலரை” புறக்கணிக்க வேண்டும். இந்தபணியை அதிமுக்கியப் பணியாக நாம் செய்ய வேண்டும். (நான் செய்து கொண்டிருக்கிறேன்)

புகல் said...

/*இந்து மதச் சாளரத்தைத் திறந்தால் அதில் கொட்டுவதெல்லாம் பீப்பாய் பீப்பாயாக சாக்கடைதான்! என்றாலும் அவற்றின்மீது தெய்வீக முலாம் பூசப்பட்டு டாலடிக்கச் செய்கின்றனர்.*/
மிக சரி ஆனா கொடுமையை என்னனா இந்த சாக்கடையில் தமிழர்கள் மாட்டி கொண்டார்கள்
@seeprabagaran
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
வேண்டுகொள்
தமிழன் இந்து என்றால், ஆரிய கடவுள் பெயர்கள், சமற்கிருத பெயர்கள் வைப்பது, கிருத்தவன் என்றால் வெள்ளகாரன் பெயரை வைப்பது, இசுலாமியர்கள் என்றால் ஆரேபிய பெயரை வைப்பது.
ஒரு பையன்களும் தமிழ்ல பெயர் வைப்பதில்லை என்ன கொடுமடா,
சொந்த தமிழ்நாட்ல இருந்துகொண்டு இப்படி தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
எந்த மதம் வேண்டுமானாலும் கும்பிட்டு தொலைங்க ஆனால் தமிழை ஒதுக்கிவிடாத்திர்கள்.