Search This Blog

4.6.11

எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா?


தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை

எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே! மொட்டை அடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடிவிடுகிறார்களே! அப்படியிருக்க உங்கள் தலை மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரை காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே! எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷன் போதாதென்று ஆறாவது புருஷனையும் விரும்பிய துரோபதியம்மாளைப்போய் கும்பிடுகிறீர்களே! அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே! உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷன் வேண்டும் என்று வரம் கேட்கவா அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

---------------தந்தை பெரியார் - "விடுதலை" 3.6.1976

பத்திரிகை சென்சார் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் கத்தரித்து எறியப்பட்ட அய்யாவின் அறிவுரை.

********************************************

சாஸ்திரத்தைச் சுட்டுச் சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்?

சாத்திரத்தைச்சுட்டு - மனு தர்ம சாஸ்திரத்தைச் சுட்டுப் பொசுக்கி, சதுர்மறையைப் பொய்யாக்கி, - மேல் கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி, சூத்திரத்தைக் கண்டு - பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டு பிடித்து, சுகம்பெறுவதெக்காலம் - அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?

---------------- தந்தை பெரியார் - "குடிஅரசு - 5.5.1929

-------------------- நன்றி:- “விடுதலை” 3-6-2011

2 comments:

Anonymous said...

எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா?"- என்பதுதான் பெரியார் கேட்டது.

நீங்கள் தலைப்பில் ஆண்கள் செய்வார்களா என்று மாற்றிப் போட்டதேன்?

பொதுவாக பெண்கள் திருப்பதியில் மொட்டை போடுவதில்லை. அவர்கள் கொஞ்சம் முடியை மட்டும் வெட்டும்படி சொல்வதுண்டு. சிலர் மட்டுமே மொட்டை போடுவதாக நேர்ச்சை செய்திருப்பர். அவர்கள் மட்டுமே போடுவதுண்டு. அவர்கள் எச்சாதிப்பெண்களாகவும் இருக்கலாம். இத‌ற்கு கார‌ண‌ம் பெண்க‌ள் முடியைத் த‌ன்பெண்மையின் அடையாள‌மாக‌க் க‌ருதுவதால். மொட்டை போடு என்று திருப்ப‌தி சொல்ல‌வில்லை. இத‌னால் வேறு எதையும் காணிக்கைப்பொருளாக‌க் கொடுக்க‌லாமே?

சீக்கிய‌ம் த‌ன் பெண்க‌ளுக்கு த‌லைப்பாகைக் க‌ட்ட‌ச்சொல்லவில்லை. ஆண்க‌ளுக்கேதான் அதை வைத்த‌து. ப‌வுத்த‌ம் பெண் பிக்குக‌ளை முத‌லில் சேர்க்க‌வில்லை. புரொட்ட‌ஸ‌ண்டு கிறுத்துவ‌ம் பெண்க‌ளை ம‌த‌ குருமார்க‌ளாக‌ ஏற்ப‌தில்லை.

பார்ப்பனப்பெண்கள் மட்டும் என்று தனித்துப் பார்க்க முடியாது. அவ‌ர்க‌ள் எல்லாப்பெண்க‌ள் போல‌வேதான்.

பெரியார் செய்த பெரும்பிழை - இங்கே இக்கருத்தில் - என்னவென்றால், பார்ப்பனப் பெண்களை மற்ற பெண்களோடு சேர்க்காமல் தனிமைப்படுத்தி, பார்ப்பன ஆண்களோடு சேர்ப்பதுவே.

இது ஏன் தவறு ? பார்ப்பனீயம் எப்படி தலித்துகளை நடத்தியதோ அப்படி பார்ப்பன பெண்களையும் நடத்தியது. எப்படி தலித்துகளைத் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லியதோ அப்படி பார்ப்பனப் பெண்களையும் சொன்னது. எப்படி தலித்துகளுக்கு கல்வியை மறுத்ததோ அப்படியே பார்ப்பனப் பெண்களுக்கும் செய்தது. த‌லித்து காதிலும் பெண்க‌ள் காதிலும் ஈய‌த்தை ஊற்று என்றுதான் ம‌னு சொன்ன‌து. பெண்ணையும் மாட்டையும் க‌ட்டிப் போட்டு வ‌ள‌ர்க்க‌வேண்டும் என்றுதான் ம‌னு சொன்ன‌து. ம‌னு பார்ப்பன‌ர்க‌ள் எப்ப‌டி வாழ‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌த்தான் எழுதினார். அத‌ன்ப‌டியே அவ‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள்.

பகவத்கீதை சொல்கிறது:

"பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்" (அத்தியாயம் 9; சுலோகம் 32)

ஒரு பார்ப்ப்னப் பெண் கைம்பெண் ஆகிவிட்டால், வைதீக நெறியில் அவளைப் பார்ப்ப்னர்கள் படுத்தும் பாடு. அய்யோ அய்யோ !

பெண்ணடிமைத்தனம் பார்ப்பனீயத்தின் ஒரு கூறு. அதை அனுபவித்த பார்ப்பனப் பெண்களுக்கு அஃதை எதிர்க்க பெரியார் எதையேனும் சொன்னாரா ? அவர்கள் மீது அவர் இரக்கம் கொண்டாரா ?

வைதீக நெறிகள் அனைத்தையும் வரைந்தவர்கள் அக்குல ஆண் மக்களே. இஃதில் அவர்கள் பெண்களுக்கு எந்த பங்கும் கிடையாது. இன்று அப்படி எழுதியவகளை அவர்கள் பெண்களே செல்லாக் காசாக்கிக்கொண்டு வருகிறார்கள். எதிர்ப்பு அவர்களிடமிர்ந்துதான் வரவேண்டும்.

சோ இராமசாமி என்னும் ஆணாதிக்கப்பார்ப்பானுக்கு முதலடி கொடுத்தவர் ஜோதிர்லதா கிரிஜா துக்ளக்கில். பட்டுச்சேலையும் பூவும் பொட்டுமாக மேடையேறிப் பேசி பார்ப்ப்னீயத்தை உடைத்தெறிந்து காட்டிய பார்ப்பனப்பெண் அனுராதா ரமணனே!

இதற்காக அதே மேடையில் அவரைத் திட்டியவர் எந்தவொரு பார்ப்ப்னானும் அல்ல. வலம்புர் ஜானே. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா ! இதை ரமணனே எழுதியிருந்தார்.

ஜெயேந்திர‌னின் காம ர‌ச‌னைக‌ளை வெளியே கொண்டுவந்த‌து ஆர் ? நீங்க‌ளா ? இல்லை ! அனுராதா ர‌ம‌ண‌னே ! அதன் பின்ன‌ர்தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நுழைந்தார்க‌ள், இல்லையா ?

பார்ப்பன ஆண்கள் மொட்டை போடுவார்களா ? என்ற கேள்விக்கு என் பதில். ஆம் போடுவார்கள். எப்படிச்சொல்கிறாயென்றால், என் பதில், Seeing is believing.

நம்பி said...

//Blogger simmakkal said...

பெரியார் செய்த பெரும்பிழை - இங்கே இக்கருத்தில் - என்னவென்றால், பார்ப்பனப் பெண்களை மற்ற பெண்களோடு சேர்க்காமல் தனிமைப்படுத்தி, பார்ப்பன ஆண்களோடு சேர்ப்பதுவே.//

பார்ப்பன பெண்கள் பிறஜாதியினப் பெண்களை பார்க்காமல் இருந்ததையும், அதற்கு யார் தடைக்கல்லாக இருந்தனர் என்பதையும் "சமூகப் பெரும்பிழை"யாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவன் உயிருடன் இருக்கும் பொழுதே முடியிறக்கி கொள்வது பார்ப்பனரல்லாத பெண்களுக்கு சர்வ சாதாரணம். அது நேர்த்திக்கடன் என்ற பெயரிலும் நடைபெறும், ஆனால் பார்ப்பனத்திகளுக்கு அப்படி சொல்வதே அபச்சாரம்! என்ற நிலையில் பார்ப்பவர்கள். "கோயிலுக்கு போனியே மொட்டையடிக்கவில்லையா?! முடி கொடுக்கவில்லையா!?" என்று பார்ப்பனத்தியை கேட்டால் இப்படித்தான் "அபச்சாரம்! சிவ! சிவா!" என்று கூறும் வழக்கம் இன்றும் பார்ப்பனத்திகளிடம் உள்ளது.

(நகர வாசிகள் உள்பட)

இந்த சமூகப் "பெரும்பிழை" யை பெரியார் இங்கு சுட்டிக்காட்டியது மட்டுமே! நிதர்சனம்!

"தாய் மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை" என்று தந்தை பெரியார் அறிவுரை எனும் அறைகூவல் விடுத்ததை கண்டாலே இதைப் புரிந்து கொள்ளலாம்.....!

பார்ப்பனர்கள் உருவாக்கிய மனுதர்மம் பார்ப்பனப் பெண்களை வர்ணாசிரமத்தின் கடைசி பிரிவின் கீழ் கொண்டு வந்ததே இப்படி பெண்களை இழிவுப் படுத்துவதற்காகத்தான். அதுமட்டுமல்ல ஆரியர்கள் இந்நாட்டில் நுழையும் பொழுது பெண்களை அவர்கள் அழைத்து கொண்டு வந்து இங்கு நுழையவில்லை. என்பதை பல ஆய்வு நூல்கள் கூறுகிறது. ஆகையால் அவர்கள் இங்குள்ள திராவிடப்பெண்களோடு கலந்து அதன் வழித்தோன்றலாக திராவிடப் பெண்களை தன் இனப்பெண்களாக அதுவும் இழிவுப்படுத்தி, கட்டுப்பாடுகளை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டனர்.


//Blogger simmakkal said...
பட்டுச்சேலையும் பூவும் பொட்டுமாக மேடையேறிப் பேசி பார்ப்ப்னீயத்தை உடைத்தெறிந்து காட்டிய பார்ப்பனப்பெண் அனுராதா ரமணனே!

இதற்காக அதே மேடையில் அவரைத் திட்டியவர் எந்தவொரு பார்ப்ப்னானும் அல்ல. வலம்புர் ஜானே. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா ! இதை ரமணனே எழுதியிருந்தார்.

ஜெயேந்திர‌னின் காம ர‌ச‌னைக‌ளை வெளியே கொண்டுவந்த‌து ஆர் ? நீங்க‌ளா ? இல்லை ! அனுராதா ர‌ம‌ண‌னே ! அதன் பின்ன‌ர்தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நுழைந்தார்க‌ள், இல்லையா ?
//

பட்டுச்சீலையும், பூவும் பொட்டும் (இது மட்டும் தான் பார்ப்பனீயமா?) வைத்து பார்ப்பனீயத்தை உடைத்தெறிந்த அவரே! ஏன்? திரும்பவும் பார்ப்பனீய ஸ்தாபனமான சங்கரமடத்தில் போய் சேர்ந்தார்! ஏன் வேறு மடங்களில் சேரவில்லை! தனது ஆச்சாரத்திற்கு இழுக்கு என்பதினாலா? யாரும் சேர்க்க மாட்டோம் என்று ஒதுக்கினார்களா? ஏன்? முற்றிலும் ஒதுக்கவில்லை?

இத்தனைக்கும் அவர் (அனுராத ரமணன்) கலப்புத் திருமணம் புரிந்தவர் தானே!

(இதுவே தவறான வாதம் மனிதனும் மனிதனும் மணம் புரிந்து கொள்வது எப்படி கலப்புத் திருமணமாகும்? விலங்கும் மனிதனும் மணம் புரிந்தால் கலப்புத் திருமணம். பெரியார் கூற்றுப்படி---பெரியார் இந்த வார்த்தைக்கே முரண்படுகிறவர்...அதான் பெரியார்!)

அப்படியென்றால் அவரால் (அனுராத ரமணன்) முழுமையான பார்ப்பன எதிர்ப்புக்கு ஆட்படமுடியவில்லை தனக்கு இடர்பாடான, இடைஞ்சலான விஷயத்துக்கு மட்டும் பார்ப்பனக் கட்டுப்பாட்டைத் தூக்கியெறியந்திருக்கிறார்.

பார்ப்பன பெண்கள் பார்ப்பனீயத்தில் இருந்து கொண்டு முற்போக்காக சிந்திக்கிறார்கள்,ஒரளவுக்கு! பெரியார் கருத்தை உள்வாங்குகிறார்கள்! என்று வேண்டுமானால் கூறலாமேத் தவிர! பார்ப்பனீயத்தை முழுதும் தூக்கியெறியவில்லை! அப்படி! தூக்கியெறிந்திருந்தால் அந்த கபட வேட தாரி சங்கராச்சாரியாரின் மடத்திற்கு பணிபுரிவதற்காக சென்றிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது!


அங்கு சென்று அந்த சங்கராச்சாரியாரின் காம இச்சை தாக்குதலுக்கு ஆளாகி, சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையித்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கவும் வேண்டியதில்லை. இதுவும் உண்மை தானே!?


ஒரு வேளை! பார்ப்பனீயத்தை முழுதும் கைவிடாமல் அனுராத ரமணன் ரத்தத்தில் ஊறிய பார்ப்பனீயத்துடன் சென்றதால், சங்கராச்சாரியாரின் காம லீலையை வெளிவுலகுக்கு கொண்டு வந்ததாக வேண்டுமானால் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!

ஆனால் இது தான் சமுதாயத்தில் இன்றளவுக்கும் இருக்கும் "பெரும்பிழை".