Search This Blog

18.6.11

பகவான் சாயிபாபாக்குச் சொத்து ஏன்?

சத்திய சாயிபாபா என்றும் பகவான் பாபா என்றும் பக்தர்களாலும், பக்தியைப் பரப்பி மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தி பணம் பறிக்கும் முதலைகளான ஊடகங்களாலும் புகழப்படும் சிறீமான் சாயிபாபா 4 வார காலம் படுத்த படுக்கையாகக் கிடந்து, செயற்கைப் பிராண வாயு (வென்டிலேட்டர்) அளிக் கப்பட்டு, படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் பழுதுபட்டு, அதிகபட்ச துன்பங்களை அடைந்து பரிதாபமாக மரணம் அடைந்தது - மனிதாபிமானம் உள்ளவர் களால் வருத்தப்படக் கூடியதே!

1) அதே நேரத்தில் பகவான் என்று சொல்லிக் கொள்பவர் - இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததிலிருந்தே பகவான் என்று கூறுவதெல்லாம் அசல் பொய் மூட்டை என்பதை உணருவதற்கு பாபா ஒரு உதாரணப் புருசர் ஆகிவிடவில்லையா? சிந்திக்கலாம்.

2) பகவான் சாயிபாபா என்பவருக்குச் சொத்து ஏன்? தங்கக் கட்டிகள் ஏன்? வைரக் கற்கள் ஏன்? வங்கிக் கணக்கு ஏன்? இவை எல்லாம் இல்லா மலேயே சாதித்துக் காட்டினால் தானே பகவான் என்று சொல் லுகிறார்களே, அதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கும் போலிருக் கிறது என்று எண்ணத் தோன்றும்.

சாயிபாபா செத்துப் போன ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு சாயிபாபா தங்கி இருந்த அறை (யஜீர் வேத மந்திரம் என்று அதற்கு நாமகரணமாம்.) சாயிபாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலையில் தக்க பாதுகாப்புகள் ஏற்பாட்டில் திறக்கப்பட்டுள்ளது (16.6.2011)

98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும், வைர நகைகளும், ரூ.11 கோடியே 56 லட்சம் ரொக்கப் பணமும் கிடந்தனவாம். இதைத் தவிர உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள சொத்துக்கள், வங்கி இருப்புகள் எல்லாம் சேர்ந்தால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பாம்.

கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்பட்டவருக்கு இவ்வளவு சொத்துக்கள் ஏன் தேவைப் பட்டன என்ற கேள்வி சாதாரண மனிதனுக்குக்கூட ஏற்படக் கூடிய சாதாரண கேள்வியாகும்.

உடலுழைப்பாலோ தொழிற்சாலை வைத்தோ, வியாபாரம் செய்தோ இவ்வளவு சொத்துக்களையும் அவர் சேர்க்கவில்லை.

மக்களின் மூடத்தனம்தான் அவர்தம் முதலீடு! சாகசமும் - தந்திரமும்தான் அவர் கையாண்ட தொழில் திறன்! பச்சையாகச் சொன்னால் மக்களை ஏமாற்றிச் சுரண்டியது தான் இவ்வளவு பெரும் தொகை.

இந்த ஏமாற்றுப் பேர்வழி யிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், குடியரசு தலைவரும், பிரதமரும் மண்டியிட்ட நிலையை நினைத்தால் மக்களின் தரமும், நாடும் எந்தக் கெதியில் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளலாம். பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் தேவையையும் கணித்து விடலாம்.

3) அந்த அறையில் ஏராளமான தங்கச் சங்கிலிகளும் மோதிரங்களும் இருந்தனவாம். புரியவில்லையா? கை அசைப்பில் சங்கிலி யையும், மோதிரங்களையும் கொண்டு வருவதாக ஏமாற்றி வந்தாரே - அவை எல்லாம் எந்த வெங்காயமும் கிடையாது.

இத் தொழிலுக்கான கையிருப்பு தான் அறையில் கிடந்த அவை! இந்த சங்கிலி மோதிரங்களைத்தான் கையில் மறைத்து வைத்து சாதுர்யமான முறையில் வேகமான கை அசைப்பில் (Quickness) கொண்டு வருவதுபோல் காட்டி மக்களை மயக்கி, அசத்தும் செயலாகும்.

பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்ட விழா ஒன்றில் கை அசைப்பில் சங்கிலி எப்படி வந்தது என்பது வீடியோவில் பதிவாகி, ஊர் சிரித்தது என்பதையும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம்.

------------ மயிலாடன் அவர்கள் 18-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

ராஜன் said...

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973

periyarin peyari koorikondu palat kadavulaym mathangalayum (kurippaga sivan) kevalammana murayil pesivaruvathai kandikkiren

sharfu said...

why, he should have get all those chains and rings just like that ....

when he is sleeping or resting....

so don't criticize that!!!!!!!

even for a magicman, he needs some practise before performing infront of the crowd and he is baba.......

Admin said...

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

கடவுளுக்கும் வருத்தம் வரும் சிரிப்பு வருகிறது.

கடவுளை மிஞ்சிய சக்தியா இந்த பாபா...

பாவம் இந்த பாபா..

நம்பி said...

//periyarin peyari koorikondu palat kadavulaym mathangalayum (kurippaga sivan) kevalammana murayil pesivaruvathai kandikkiren

June 18, 2011 8:06 PM//

நோ..நோ...நோ கண்டிக்கும் அதிகாரம் மனிதன் உருவாக்கிய "கல்லு" "சிவனுக்கு" மட்டும்தான் உண்டு. அது உயிர்தெழுந்து வந்தவுடன் கண்டனத்தை தெரிவிக்கும். அதுவரைக்கும் கண்டனத்தை எல்லாம் தள்ளிப்போடு.....

கடவுளைப் பத்தி பேசினா கடவுள் தான் கண்டனைத்தை தெரிவிக்கணும், "கண்டவனெல்லாம்" கண்டனம் தெரிவிக்க முடியாது.

கடவுளைக் "கண்டவன்" என்று கூறிக்கொள்பவனும் கண்டனம் தெரிவிக்கமுடியாது. மீறி தெரிவித்தால் அந்தக் கல்லை உருவாக்கிய நாங்கள் கண்டனத்தை தெரிவிப்போம்....பகுத்தறிவு மக்கள்.