Search This Blog

7.6.11

சாமியார்களா - அரசியல்வாதிகளா?


ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு இருப்பதாகக் கூறும் ராம்தேவ் மேற்கொண்ட வழிமுறைகளில் ஒழுக்கம் இருக்க வேண்டாமா?

டில்லி காவல்துறை இது குறித்துக் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கதும், முக்கியமானதுமாகும்.

யோகா பயிற்சி முகாம் நடத்துவதாக பாரத் ஸ்வாமி மான் அறக்கட்டளை விடுத்த விண்ணப்பத்தின்மீது அதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் முகாமில் யோகா பயிற்சி அளிக்கப்படவில்லை. அதற்கு மாறாக அரசியல் பேசும் மேடையாக அது மாற்றப்பட்டது.

அரசியல் கட்சியின்மீதும், தலைவர்கள்மீதும் அவ தூறுகள் அள்ளி வீசப்பட்டன. அதன் காரணமாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி வைத்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தது எந்த வகையில் நேர்மையானது - சரியானது?

சட்டத்தைமீறி உண்ணாவிரதம் இருந்தவரை அப்புறப்படுத்த காவல்துறை முயன்றது எப்படி குற்றமாகும்? காவல்துறையினரை ஏமாற்றிட கூட்டத்துக்குள் ஓடிச் சென்று பதுங்கிக் கொள்வதும், பெண் வேடம் போட்டுக் கொண்டதும் எந்த வகையில் பாராட்டத்தகுந்தது?

ஒரு நாலாந்தர மனிதனின் நடவடிக்கையைச் சேர்ந்தது இது அல்லவா! ராம் தேவை வெளியேற்றியது குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள், ராம்தேவ் நடந்து கொண்ட சட்ட விரோத, ஏமாற்றுத் தனமான நடவடிக்கை குறித்து விமர்சிக்க முன் வராதது - ஏன்?

காவல்துறையினரை நோக்கி கற்களையும், பூந் தொட்டிகளையும் ராம்தேவ் ஆதரவாளர்கள் வீசினால் காவல்துறையினரின் கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்குமா?


ராம்தேவுடன் சாத்வி ரிதம்பரா வந்தது என்ன? ராம்தேவைக் கைது செய்ததற்காக அத்வானி ஏன் ஆர்ப்பரிக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையா? ராம்தேவ் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 24 மணி தர்ணாவுக்கு பா.ஜ.க. ஏன் அழைப்புக் கொடுக்க வேண்டும்?

இந்த சாமியாருக்கு 1000 கோடி ரூபாய் சொத்து எங்கிருந்து வந்தது என்ற திக் விஜய் சிங்கின் கேள்விக்கு நாணயமான முறையில் பதில் கூற வேண்டாமா? ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் முதலில் தங்களுக்கு இவ்வளவுப் பெரிய அளவில் சொத்து எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டாமா?

இந்த ராம்தேவ் யார்? அவருடைய உதவியாளர் யார்? என்ற கேள்வியையும் திக் விஜய் சிங் எழுப்பியுள்ளார். அந்தப் பாலகிருஷ்ணா ஆச்சாரியா ஒரு கிரிமினல் பேர் வழி என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். போலியாக பாஸ்போர்ட் தயாரித்த குற்றவாளி என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய கிரிமினல்தான் யோக்கியர்(?) ராம்தேவின் உதவியாளர் என்றால் அவரின் யோக்கியதை என்ன? பொது மக்கள் கேட்க மாட்டார்களா? இதைப்பற்றி எல்லாம் ஊடகங்களோ, அரசியல் கட்சித் தலைவர்களோ ஏன் விமர்சனம் செய்ய முன்வரவில்லை?


இதில் இன்னொரு முக்கிய கேள்வி. ஊழலை ஒழிப்பதுதான் இவர்களின் முக்கிய இலக்கு என்றால் முதலில் இவர்கள் களம் அமைக்க வேண்டிய இடம் பா.ஜ.க. ஆளும் பெங்களூருதானே?

பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் குறித்து இந்த உத்தமப்புத்திரர்கள் வாய் திறந்துள்ளார்களா? அது எப்படி வாய் திறப்பார்கள்? இவர்கள்தான் பா.ஜ.க.வின் கைப்பாவைகள் ஆயிற்றே!

எல்லா வகைகளிலும் பா.ஜ.க., வீழ்ச்சியுற்று வரும்போது அதிலிருந்து மக்களைத் திசை திருப்பிட இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. போகப் போக இது இன்னும் தெளிவாக வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது.

இவர்தான் சாமியார் ஆயிற்றே - ஏன் போராட்டத்தில் இறங்க வேண்டும்? சாமியார்களின் வேலை தபசு இருந்து கடவுளிடம் மனுபோட வேண்டியதுதானே? பகவானே, இந்த இலஞ்ச லாவண்ய குணத்தை ஆட்சியாளர்களின் மனத்திலிருந்து அகற்று! அதற்காக யாகம் செய்கிறேன் என்று மன்றாட வேண்டியதுதானே!

அதை விட்டுவிட்டு அரசியல்வாதியைப் போல் ராம்தேவ் ஏன் போராட்டத்தில் இறங்க வேண்டும்? ஆன்மீகவாதிகள் ஏன் ராம்தேவைக் கண்டிக்க முன்வர வில்லை?

டில்லியில் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரங்கேற்றுவது - மக்களைத் திரட்டுவது - அதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவது - அதன்மூலம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது - அதற்கு மாற்று அகில இந்திய அளவில் பா.ஜ.க.தான் என்று முன்னிறுத்துவதுதான் இந்த நாடகத்தின் பின்னணி இரகசியமாகும்!

ஏற்கெனவே இருக்கும் சட்டங்களே ஊழிலை ஒழிக்கப் போதுமானது. அவற்றை ஒழுங்காக அமல்படுத்தினாலே போதும் - அதனை அரசுகள் செய்யட்டும்! தேவை யில்லாமல் சாமியார்களைக் கெ()ஞ்சும் வேலையில் இறங்க வேண்டாம்.

--------------------”விடுதலை” தலையங்கம் 7-6-2011

7 comments:

தமிழ் ஓவியா said...

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கி உள்ள பாபா ராம்தேவின் முக்கிய கூட்டாளி திடீர் தலை மறைவாகி விட்டார்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதி ராக பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய கூட்டாளி ஆச்சார்ய பாலகிருஷ்ணா. பாபா ராம்தேவின் வலதுகர மாக செயல்பட்டு வந் தார்.

பட்டினிப் போராட் டத்தை கைவிடக்கோரி, பாபா ராம்தேவுடன் மத்திய அரசு மேற் கொண்ட ரகசிய ஒப்பந் தத்தில், ஆச்சார்ய பால கிருஷ்ணாதான் கையெ ழுத்திட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பட் டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், பாபா ராம் தேவ் பட்டினிப் போராட் டத்தை கைவிட மறுத்து விட்டு மத்திய அரசுக்கு புதுப்புது நிபந்தனை களை விதித்துக் கொண் டிருந்தார். எனவே, மத் திய அமைச்சர் கபில் சிபல் அந்த கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி முதல் ஆச் சார்ய பாலகிருஷ்ணா திடீரென காணவில்லை. அவருடைய நிலைமை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

பாபா ராம்தேவின் கூட்டாளியான ஆச் சார்ய பாலகிருஷ்ணா ஒரு நேபாள நாட்டு குற்றவாளி, அவர் மோச டியாக இந்திய பாஸ் போர்ட் பெற்றுள்ளார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச் செய லாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:-

பாபா ராம்தேவுடன் எப்போதும் ஒன்றாக காணப்படும் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நேபாள நாட்டைச் சேர்ந்தவர். அங்கு குற்றம் இழைத்து விட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். ஆனால் அவர் தற் போது, மோசடியாக இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். - இவ்வாறு அவர் தெரிவித்தார்.

---"விடுதலை” 7-6-2011

தமிழ் ஓவியா said...

பாபா ராம்தேவ் ஆதர வாளர்கள் மீது காவல் துறை தடியடி நடத்து வதை தவிர வேறு வழி இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறி யுள்ளார்.

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அப் புறப்படுத்தப்பட்டார். அவருடைய ஆதர வாளர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட் டனர். இந்நிலையில், நேற்று ஓர் இந்தி பத் திரிகையின் விருது வழங் கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர்.
அதற்கு மன்மோகன் சிங் கூறியதாவது:-

காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண் டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதைத் தவிர வேறு வழி இல்லை. ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்பு பணம் தொடர்பாக கவலை அடைந்துள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஊழலை ஒழிப் பதற்கு மந்திரக்கோல் ஏதும் இல்லை. - இவ் வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் கூறுகையில், பத்திரிகை துறையில் இருப்பவர் கள், பரபரப்புக்காக செய்தி போடுவதற்காக உண்மைகளை திரித்து வெளியிடுவது, சமூகத் துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பத்திரி கையாளர்கள் தாங்கள் வெளியிடும் செய்தி களில் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு கெடுதலான விஷயங் களை தூண்டிவிடக் கூடாது.

பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளி யிடும் வியாதி, கவலைக் குரியது. அற்ப லாபங் களுக்காக பத்திரிகை யாளர்கள் தங்கள் கவு ரவத்தை தாழ்த்தி கொள்வது விரும்பத் தக்கதல்ல. பின்தங்கிய மக்களுக்கு முக்கியத் துவம் வாய்ந்த பிரச் சினைகள் குறித்து உறு தியான விவாதம் நடத்த ஏற்பாடு செய்வது அனைத்து தரப்பு பத்தி ரிகைகளின் கடமை.
- இவ்வாறு அவர் பேசினார்.

---”விடுதலை” 7-6-2011

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி மீது ஷூ வீச முயன்றவர் காவல்துறை யினரிடம் ஒப்படைக் கப்பட்டார்.

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி யின் பொதுச் செயலா ளர் ஜனார்த்தன் திவேதி நேற்று மாலை செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த மேடைக்கு ஒருவர் சென்றார்.

ஜனார்த்தன் திவேதி அருகே சென்ற அவர் திடீரென காலில் அணி ருந்த ஷூவை கழற்றி திவேதி மீது வீச முயன்றார். அதிர்ச்சிய டைந்த ஜனார்த்தன் திவேதி அந்த இளை ஞரை தடுக்க முயன்றார்.

அதற்குள் அருகில் இருந்த கட்சி தொண் டர்கள் சிலர் பாய்ந்து சென்று அந்த இளை ஞரை மடக்கினர். அவரை இழுத்து சென்று அடி கொடுத்தனர். அப் போது தனியார் செய்தி தொலைக்காட்சி கேம ராக்கள் அங்கு இருந் தால், இந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப் பானது.

அந்த இளைஞரை காவல்துறையினரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். அவரி டமிருந்து, ராஜஸ் தானில் இருந்து வெளி வரும் நவ் சஞ்சார் பத் திரிகா என்ற பத்திரிகை யின் செய்தியாளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட் டது. அதில் அவரது பெயர் சுனில் குமார் என்று குறிப்பிடப்பட் டிருந்தது. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று ஜனார்த்தன் திவேதி மீது ஷூ வீச முயன்றது ஏன்? என்று காவல்துறையினர் விசா ரணை நடத்துகின்றனர். அவர் வைத்திருந்த அடையாள அட்டை போலியானதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை யினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு பேட்டி யளித்த ஜனார்த்தன் திவேதி, ராம்தேவின் போராட்டம் பற்றி பேட்டியளிக்க இருந் தேன். இதனால்தான் என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. இதற்கு பின் னணியில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வினர் உள்ளனர். அவர்கள் விரக்தியில் உள்ளதை இந்த தாக்கு தல் காட்டுகிறது என்றார்.
---”விடுதலை” 7-6-2011

தமிழ் ஓவியா said...

மத்திய அரசுக்கும் யோகா குரு பாபா ராம்தேவுக்கும் இடையே மோதல் முற்றி உள்ளதை யடுத்து, பாபா ராம்தேவின் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளின் பின்னணி பற்றி மத்திய அரசு தகவல்களை திரட்டி வருகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண் டும். கறுப்பு பணம் வைத்திருப் பவர்களை தேசத் துரோகி களாக அறிவித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யோகா குரு ராம் தேவ் உண்ணாவிரத போராட் டம் நடத்தி வருகிறார்.

இதனால் பாபா ராம்தேவை கைது செய்ய மத்திய அரசு, தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. அவருடைய சொத்து மதிப்பு என்ன? அவர் வரி ஏய்ப்பு மற் றும் வேறு ஏதேனும் பொரு ளாதார குற்ற நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளாரா? என் பது குறித்து வருமான வரித் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியானா மாநிலம் அலி சைத்பூர் கிராமத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு பாபா ராம் தேவ் பிறந்தார். இவருடைய தந்தை ராம்நிவாஷ்யாதவ். இவர் ஒரு சாதாரண விவசாயி.

சொத்து குவியத் தொடங்கியது

பாபா ராம்தேவ், தனது 9-ஆவது வயதில் கான்பூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளியில், சமஸ்கிருதம் மற்றும் யோகாசனம் படித்த அவர், யோகாசனத்தில் தீவிர ஆர்வம் காட்டி சாமியாராக மாறினார்.

1995-ஆம் ஆண்டு திவ்ய யோகா மந்திர் என்ற அமைப்பை தொடங்கி யோகாசனங்களை கற்றுக் கொடுத்து வந்தார். இந்த நிலையில், 2003-ஆம் ஆண்டு ஆஸ்தா டி.வி.யில் யோகாசனம் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதன் மூலம் தான் அவர் பிரபல மானார். அதன் பிறகு அவருக்கு சொத்து குவியத் தொடங்கியது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் ஒன்றை மிக பிரமாண்டமாக அவர் அமைத் துள்ளார். இங்கு 300 படுக்கை கொண்ட ஆயுர்வேத மருத்துவ மனை, யோகாசன ஆராய்ச்சி மய்யம், பல்கலைக்கழகம், உணவுக்கூடம், அழகுசாதன பொருள்கள் தொழிற்சாலை ஆகியவை உள்ளன.

அவரும் அவருடைய கூட் டாளிகளும் 200-க்கும் மேற் பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனங் களின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயி ரம் கோடிக்கும் அதிகம் ஆகும்.

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த சுனிதா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பாபா ராம்தேவிடம் சிகிச்சை பெற் றார். யோகாசனம் மூலமாக அவரது நோய் நீங்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சுனிதா, ஸ்காட்லாந்தில் 684 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவை ரூ.15 கோடிக்கு விலைக்கு வாங்கி பாபா ராம்தேவுக்கு கொடுத்து விட்டார்.


டி.வி.யையும் விலைக்கு வாங்கினார்

இப்போது, அந்த தீவில் பாபா ராம்தேவ் ஒரு ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர, பாபா ராம்தேவ் முன்பு யோகா சனம் நடத்தி வந்த ஆஸ்தா டி.வி.யையே விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாபா ராம்தேவ் தயாரித்து விற்பனை செய்து வரும் ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் எலும்புகள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இது மத்திய அரசு விசார ணையில் இறங்கி உள்ளது.

பதஞ்சலி யோகா பீடம் அமைந்துள்ள நிலம் தொடர் பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. உண்மையிலேயே, இந்த நிலம் `உதசின் அகாரா' என்ற மடத் துக்கு சொந்தமானது. அந்த மடத்தின் தலைவர் மகான் ராஜேந்திரதாஸ் ஆவார். அவ ருடைய மறைவுக்கு பின்னர், வாரிசு அடிப்படையில் அந்த சொத்து மகான் மகேந்திர தாசுக்கு வந்திருக்க வேண்டும்.

தற்போது, அந்த நிலத்தை பாபா ராம்தேவின் நெருங்கிய கூட்டாளியான பாலகிருஷ்ணா வாங்கி உள்ளார். ஆனால், அந்த சொத்து இன்னமும், மகேந்திரதாஸ் பெயரில்தான் இருப்பதாக ஆவணங்கள் தெரி விக்கின்றன. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மத்திய அரசுக்கும் பாபா ராம்தேவுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளதையடுத்து, பாபா ராம்தேவின் செயல் பாடுகள் அனைத்தையும், மத் திய அரசு அமைப்புகள் கண் காணிக்க தொடங்கி உள்ளன.
----”விடுதலை” 6-7-2011

தமிழ் ஓவியா said...

பாபா ராம்தேவ் நம் பிக்கை மோசடி செய்து விட்டார் என்று, மத் திய அரசு குற்றம் சாட்டி இருக்கிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவரு மான குலாம் நபி ஆசாத், டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பட்டினிப் போராட்டம் இருந்த பாபா ராம்தேவ், அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் பற்றி அவருடன் பல முறை பேச்சு நடத்தினோம். அவரது கோரிக்கைகளை 100 சதவீதம் அள வில் நிறைவேற்ற முடியவில்லை. என் றாலும் 90 சதவீதம் நிறைவேற்றுவ தாக உறுதி அளித்தோம். இதுபற்றி பிரதமரும், அவருக்குத் தெளிவாக கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அவர் பட்டினிப் போராட்டத்தைத் திரும் பப் பெற்றுக்கொள்வதாக முதலில் கூறினார். ஆனால், அவர் பின்னர் உண்ணாவிரதத்தை தொடருவதாக அறிவித்து விட்டார். அவர் ஏற்கெ னவே அளித்த வாக்குறுதியை மீறி விட்டார். இது அவரது மிகப்பெரிய நம்பிக்கை மோசடி.

ராம்தேவ் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, பாரதீய ஜனதா கட்சியினர் அரசியல் ஆக்குகிறார்கள். காந்தி நினைவிடம் முன்பு அவர்கள் கூடி இருக்கிறார்கள். அங்கு அவர் கள் மகிழ்ச்சி கொண்டாடுகிறார்கள். நடனம் ஆடுகிறார்கள். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது ராம்தேவுக்கும், பா.ஜன தாவுக்கும் உள்ள உறவை உறுதிபடுத்துகிறது.

பாபா ராம்தேவை காவல்துறையினர் அப்புறப்படுத்தியபோது குழந்தைகளும், பெண் களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி காவல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

ஜனநாயகத்துக்கு மேல் யாரும் கிடையாது. ஜனநாயகத்தின் அடிப் படை சட்டவிதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறும் செயல்களை அரசு ஏற்றுக் கொள்ளாது.

பாபா பதில் சொல்ல வேண்டும்

ராம்தேவ் மருந்து மற்றும் மாத் திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவரது தயா ரிப்புகள் அமெரிக்காவுக்கு விற்ப னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு, பாபாவின் தயா ரிப்புகள் மீது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி இருக் கிறது. இதற்கு பாபாதான் பதில் சொல்ல வேண்டும். இந்திய அரசும் இதன் மீது விசாரணை நடத்தும்.இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
----”விடுதலை” 7-6-2011

தமிழ் ஓவியா said...

டில்லியில் பட்டினிப் போராட்டம் இருந்த பாபா ராம்தேவை காவலர் பிடிக்க வந்த போது, அவர் மேடையில் இருந்து கீழே குதித்து, ஆதரவாளர்கள் கூட் டத்துக்குள் புகுந்து கொண்டார். 2 மணி நேரம் காவலருக்கு போக்கு காட்டிய ராம்தேவ், உண்ணாவிரத பந்தலுக்கு வெளியே, பெண் உடை யான சல்வார் கமீசில் இருந்தபோது பிடிபட்டார். முகத்தை துப்பட்டா வால் மூடிக்கொண்டு, காயம் அடைந்த பெண் போல, 2 பெண்களின் தோள் களில் கைபோட்டபடி அவர் நடந்து சென்றபோது பிடிபட்டார்.

இதுபற்றி நேற்று ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் கேட்டபோது, அது தவறு அல்ல என்று ராம்தேவ் நியாயப்படுத்தினார். `பெண் உடையில் இருப்பது பலவீனம் அல்ல. ஒரு ஆணை பிறக்கச் செய்வதே அம்மா தான்' என்றார் அவர்.
----”விடுதலை” 7-6-2011

rev.peter said...

hi friends
Chance to Become Most Popular One in India ...
it s so easy ... look Ramday ...
Make protest against the corruption (not having any divine guidance from opposite political party in central which is "immaculate" of injustice) and do Fasting until death of hen or sheep for lunch or supper & Wearing ladies' dress forgetting to wear his own in night time & finally Run like a thief in midnight