Search This Blog

4.4.10

ஆனந்தவிகடன் குழுமத்துக்குப் புத்தி எங்கே போயிற்று?



மேல் உலகமா? கடவுளா? கொப்பரைச் சட்டியா?

ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து புற்றீசல்போல பல இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் நாளேடு நடத்தவேண்டியதுதான் பாக்கி.

அந்தப் புற்றீசலில் நாணயம் விகடன் என்ற ஓர் இதழில் ஒரு செய்தி:

கடவுள் என்ற ஒருவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில், எந்த ஆசாபாசங்களுக்கும் மயங்காமல் வாழ்ந்து முடித்து மேலுலகம் செல்கிறார் ஒருவர். அங்கே போனால் கடவுள் என்று ஒருவரே கிடையாது என்பது தெரிய வர அதிர்ச்சியாகிறார்!

அதேபோல், இன்னொருவர் கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் உலகில் போடாத ஆட்டம் எல்லாம் போட்டுவிட்டு இறுதியில் மேலுலகம் செல்கிறார். அங்கே போனால் கடவுள் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையுடன் காத்திருக்கிறார்...!

கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவருக்கு கடவுள் இல்லாவிட்டாலும் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. ஆனால், கடவுள் இல்லை என்று ஆடாத ஆட்டம் ஆடிவிட்டு போனவருக்கு மிகப்பெரிய தண்டனை காத்திருந்தது. ஒருவேளை கடவுள் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் இருந்திருந்தால் அவர் அப்படி ஆடியிருக்கமாட்டார். அதுபோலத்தான் ஒருவர் முதலீடு செய்யும்போது நஷ்டம் வரலாம் என்ற எண்ணத்துடன், தன்னால் எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியுமோ அதை அளவுகோலாக வைத்து முதலீட்டில் இறங்கவேண்டும்.

சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நாணயம் விகடன் நடத்திய வாசகர்களுக்கான கேளுங்கள், சொல்கிறோம் என்ற நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸின் இயக்குநர் எஸ். கார்த்திகேயன் இப்படி ஒரு எடுத்துக்காட்டுடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்க, ஆரம்பமே அமர்க்களப்பட்டது! அதைத் தொடர்ந்து பல வகையான முதலீடுகளைப் பற்றியும் அவற்றில் நாம் செய்யும் தவறுகள் குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

(நாணய விகடன், 15.4.2010)

மேலுலகமாம்! கடவுளாம்!! எண்ணெய்க் கொப்பரைச் சட்டியாம்!

இவர்கள் எல்லாம் எந்தக் காலகட்டத்தில் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்?

என்னதான் படித்திருந்தாலும், அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி இதழ்களை அச்சிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த ஆபாச அழுக்குக் குட்டையை விட்டு கரையேற மறுக்கிறார்களே!

நாம் வாழும் காலத்தில் கடவுள் பிரச்சினைபற்றி பல விவாதங்களை அறிவு இயக்கம் முன்னெடுத்து வைத்துள்ளது.

தந்தை பெரியார்தம் வாழும் காலத்திலேயே கம்பீரமாக அறிவாயுதங்களை எடுத்து வீசினார்.

தந்தை பெரியார் வீற்றிருந்த மேடையிலே பட்டையும், கொட்டையும் கட்டிக்கொண்டு பேசிய பெரியவர்கள்கூட, அய்யா மன்னிக்கணும், எங்களுக்குக் கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உண்டு என்று, கடவுள் நம்பிக்கை என்பதைக் குற்றவுணர்வோடு சொல்ல வைத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவுவாதிகள் இதுவரை எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் விடை எழுப்ப வக்கற்ற விலா எலும்பு இல்லாதவர்கள், ஏதோ ஓர் அரங்கத்தில் கூடிக்கொண்டு அரட்டைக் கச்சேரி அடிப்பதும், அதில் கடவுள் மறுப்பாளர்களைச் சீண்டுவதும் அறிவு நாணயம் ஆகாது.

மேல் உலகம் என்று ஒன்று இருக்கிறதா? ஆகாயத்திலா? சந்திர மண்டலத்துக்கு அருகிலா? அல்லது சூரியனுக்குப் பக்கவாட்டிலா? செவ்வாய்க் கிரகத்தின் வாலிலா?

அயல்கிரகங்களுக்கெல்லாம் விண்கலம் அனுப்பிப் புதுமைகளை அறிவியல் சிண்டைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருக்கிறதே இவர்கள் கூறும் மேலுலகம், கீழுலகம் எங்கே இருக்கிறது என்று குறைந்தபட்சம் அட்ரசையாவது கொடுக்கவேண்டாமா?

அன்பே உருவானவன் ஆண்டவன் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு கடவுள் இல்லை என்பவர்களைச் சித்திரவதை செய்வதற்காகக் கொப்பரைச் சட்டியுடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுவது கடவுளையேகூட கேவலமாகச் சித்திரிப்பதுதானே! கடவுளைக் கொடூரன் என்று காட்டுவது ஆகாதா?

உருவமற்றவனான கடவுள் எப்படி அங்கு நின்று கொண்டு இருந்தானாம்? இவர் போய் நேரில் பார்த்து வந்தாரோ!

கடவுள் இல்லை என்பவர்கள் ஒரு விழுமிய கருத்தை முன்வைக்கிறார்கள் அறிவார்ந்த முறையில்.

ஆனால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள்தான் கடவுளுக்கு உருவம் கற்பித்து பெண்டாட்டிகளைக் கட்டி வைத்து, வைப்பாட்டி வீடுகளை ஏற்பாடு செய்து, கற்பழிப்புப் புராணங்களை உண்டாக்கி, நாலாந்தரக் காலிகளைவிட கீழான கடைந்தெடுத்த அயோக்கியர்களாகக் கடவுளைக் காட்டுகின்றனர்.

அரட்டைக் கச்சேரிகளில் விளம்பரத்துக்காக சிலர் உளறுகின்றனர் என்றால், அதை வெளியிடும் இந்த ஆனந்தவிகடன் குழுமத்துக்குப் புத்தி எங்கே போயிற்று?

--------------- கருஞ்சட்டை 4-4-2010 " விடுதலை” யில் எழுதிய கட்டுரை

10 comments:

Unknown said...

முதலில் தன்னுடைய சொந்தத் தேவைக்காக ‘தமிழ் ஓவியா’ என்ற பெயரில் இன்னொருவனும் ப்ளாக் ஆரம்பிக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளப்பாருங்கள். பிறகு ஊரைத் திருத்தலாம்.

தமிழ் ஓவியா said...

அதில் ஒன்றும் தவறு இல்லைதான். ஆனால் தமிழ் ஓவியா வலைப்பூவில் பதிவு செய்த படம், மற்றும் பதிவுகளை எந்த மாற்றமும் இல்லாமல் அந்த இன்னொரு வலைப்பூவில் போட்டுக் கொண்டு, இந்த தமிழ் ஓவியா வலைப்பூவின் கொள்கைக்கு மாறாக அந்த வலைப்பூவில் பதிவுகள் போடும் போது அதைச் சுட்டிகாட்டி ஏமாறவேண்டாம் என்பது தவறா?
Kiruthikan Kumarasamy

Unknown said...

Why did Veeramani attend the conference of Popular Front of India.Did he question the islamic concept of hell and heaven there.
Did he question the concept of life after death,judgment day and punishment in hell there.Popular Front of India is not a Front of rationalists or atheists.Did he have the guts to tell them there was no God, no life after death,
at the conference.

thagavalkaran said...

that matter was told for share trading purpose only.
please clean your dirty the people will clean their dirty by them.

Kiruthigan said...

ஆமா சார் சரியா சொன்னீங்க..

தமிழ் மலர் said...

http://www.tamilmalar1977.blogspot.com/

நாத்திகனாக இரு அல்லது கடவுளை முழுவதும் நம்பு.
இரண்டுக்கும் இடையில் இருக்காதே.
இரண்டு கெட்டனாய் உலகம் என்ன என்று கூறும் உனக்கும் தெரியும்.

இரண்டில் ஒரு முடிவு கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை .

கடவள் இல்லை என்று முடிவு எடுத்தவர்கள் வாழ்க அவர்கள் அப்படியே இருக்கட்டும்.நம் உலகில் வாழும் பெரும்பாலும் மக்கள் இரண்டும் கெட்டனாய் வாழ்வதை விட நாத்திகனாக வாழ்வது மேல்.

கடவுள் இருக்கிறார் என்று முடிவு எடுத்தவர்கள் .
கடவுள் எப்படி இருப்பார் எப்படி இருதால் அவர் கடவுள் .
கடவுள் ஜாதி படைத்தது இருப்பானா ?
கடவுள் ஒரு சிலரை கோயில் உள்ள வர கூடாது என்று கூறுவானா ?
கடவுள் எனக்கு அது பண்ணு இது பண்ணு என்று கூறுவானா
மெழுகுவர்த்தி வைப்பது தேர் இழுப்பது நேர்த்தி கடன் உடலை வருத்துவது உண்ணாமல் இருப்பது இதை எல்லாம் கடவுள் விரும்புவாரா.
இது எல்லாம் சிலர் தங்கள் நன்மைக்காகக் கடவுள் பெயரை கூறி ஏமாற்றுகின்றனர்.
கடவுள் சொல்லாததை சிலர் தங்கள் பிழைப்புக்காக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.
கடவுள் பெயரை கூறி ஏமாற்றுவார்கள் மிக கொடூரமானவர்கள்.
அவர்கள் கடவுளை கேவல படுதுகிரறாக்கள்,
அவர்களை வணக்கி பூஜித்து நீ நரகத்திற்கு செல்ல போகிறாயா உன் குழந்தை இதை பழக்கி
நரகத்திற்கு அழைத்து செல்ல போகிறாயா.

priyan said...

periyar daasan was brainwashed...!!
is it right.?
What is your view on islam...?
One of your guy has accepted it...?

அ.சந்தர் சிங். said...

ennudaiya commentsai ellam neengal publish seiya maatteergal endru enakku nandraagave theriyum.becuase ungalukku nadunilamai endral ennavendru konjam kooda theriyathe. ungalukku therinthathellam vengayam,onion,union mattumthan.pongal poi pizhaippathatku vazhi yethavathu irunthal parungal.

நாடோடித்தோழன் said...

நாத்திகவாதியாக இருக்கவும் முடிய வில்லை..
ஆத்திகவதியாக மாறும் அளவிற்கு பகுத்தறிவு முழுமை பெறவும் இல்லை..
உங்கள் தளத்திலிருந்து தெளிவு பெற முயற்சி செய்கின்றேன்..
நன்றி...

நம்பி said...

//கடவுள் என்ற ஒருவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில், எந்த ஆசாபாசங்களுக்கும் மயங்காமல் வாழ்ந்து முடித்து மேலுலகம் செல்கிறார் ஒருவர். அங்கே போனால் கடவுள் என்று ஒருவரே கிடையாது என்பது தெரிய வர அதிர்ச்சியாகிறார்!

அதேபோல், இன்னொருவர் கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் உலகில் போடாத ஆட்டம் எல்லாம் போட்டுவிட்டு இறுதியில் மேலுலகம் செல்கிறார். அங்கே போனால் கடவுள் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையுடன் காத்திருக்கிறார்...!//

இது இரண்டையும் ஒருவரே எப்படி பார்க்கமுடியும்...பார்த்துவிட்டு எப்படி கீழே (உயிருடன்) வந்து நாணய விகடனிடம் (கார்த்திகேயனிடம்) சொல்லமுடியும்...?
(எப்படி மேலே போவதையெல்லாம் இவர் தீர்க்கமாக பார்த்தது மாதிரி சொல்ல முடிகிறது?...இவருக்கு தெரிந்த ரகசியம் நமக்கு எப்படி தெரியாமல் இருக்கும்? என்று எல்லாம் மக்கள் நினைக்க சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள்...இந்த புருடா நகைச்சுவையை மெய் மறந்தும் கேட்பார்கள், அப்படியே மெய்மறந்து முதலீடும் செய்வார்கள்)

(எஸ்.கார்த்திகேயன்)அவரிடம் சொன்னதற்கான ஆதாரத்தை வைக்காமல் அவர் வெறும் பித்ற்றலை மட்டுமே மக்களின் முன் எப்படி வைக்கமுடியும்?...எல்லாம் அவர்கள் மூதலீட்டு வணிகத்திற்காக...மக்களை ஏமாற்றுவதற்காக...

நிதி, பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி, ஆயுள் காப்பீடு...போன்ற முதலீட்டு வணிகத்திற்காக இம்மாதிரி நிறைய பிதற்றல்களை பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிதி நிறுவனங்கள் வணிக நோக்கில் பயிற்சிக்காக விற்பனை பிரதிநிதிகளிடமும், அதன்மூலம் மக்களிடமும் வைக்கும்....மக்களும் ஆகா, ஒகோ என்று கைதட்டிவிட்டு பணத்தை தூக்கி கொண்டு போய் கொட்டுவாங்க...

திவால் ஆனவுடன் இந்த கதையின் உண்மை புரியும்...இல்லை நஷ்டம் வந்தவுடன் இந்த கதையின் முழுவிவரவமும் புரியும்...நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே அப்ப கேள்வி கேக்கல இப்ப திவாலானவுடன் வந்து கேள்வி கேக்கறீயே...என்று...

இதை விற்பனையாளருக்கு இப்படி பேசி ஏமாற்றுங்கள் என்றே அனைத்து பொதுத்துறை, தனியார் துறை நிதி நிறுவனங்கள் தங்களுடைய முகவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது...இது உண்மை...இந்த பிதற்றல்களை பெரும்பாலும் பார்ப்பன அதிகாரிகள் தான், அதுவும் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே சீட்டை தேய்க்கும் அதிகாரிகள் (களப்பணிக்கே செல்லமாட்டார்கள்..அது தான் அவர்கள் தொழில்) வணிகம் புரிவதற்கு செய்யும் யுக்திகளாக சொல்லுவது. இந்த உளுத்துப்போன யுக்தியை சொல்லுவதற்கு காசு வேறு வாங்குவார்கள்.

மக்களும், நேர்மையாக இருப்பவரையோ, மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் விற்பனை பிரதிநிதிகளிடம் முதலீடு செய்ய ஆர்வும் காட்டுவதில்லை...மாறாக அவருக்கு சொல்லத் தெரியவில்லை, தவறான தகவல் தருகிறார் என்ற பட்டத்தையும் கொடுப்பார்கள்.

டை கட்டிக்கொண்டு இது மாதிரி பிதற்றினால் இன்னும் அதிகமாக உற்சாகத்தோடு கை தட்டுவார்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த யுக்திகள் மக்களிடம் பிசு பிசுக்க ஆரம்பித்து விட்டன. எவ்வளவு காலத்திற்குத்தான் அவங்களை (மக்கள்)ஏமாற்ற முடியும்...அவங்கதான் (மக்கள்) நிறைய ஏமாந்துட்டாங்களே...