குழப்படி குல்லுகபட்டர்!
பார்ப்பனர்கள் தங்கள் ஆசாமி என்றால் அடேயப்பா எப்படியெல்லாம் தூக்கி நிறுத்துவார்கள் சுமப்பார்கள் தெரியுமா?
கண் வைத்து, காது வைத்து, மூக்கு வைத்து, இறக்கைகளையும் கட்டிவிட்டு பறக்கவிட்டு, செவ்வாய்க் கிரகம்வரை சென்று வந்தார் என்று அசத்துவார்கள்.
ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும்தான் அவர்கள் அடுப்பங்கரையில் இருக்கின்றனவே ஊதிவிடக் கேட்கவா வேண்டும்?
அப்படி அவாளுக்குக் கிடைத்த புத்திர சிகாமணிதான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் வழக்கமாக முடிச்சுப் போட முயற்சிக்கும் திருவாளர் சோ ராமசாமி.
இந்த வார துக்ளக் (7.4.2010)கைப் புரட்டினால் தலையங்கம் பகுதியிலே ஒன்று தட்டுப்படுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை அது.
பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டம் அனுமதித்தது; அதுவும் பத்து வருடங்களுக்குத்தான். இப்படி ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு பல திருத்தங்கள், மாறுதல்களைக் கண்டு, இன்னும் சில பிரிவுகளில் உள்ள செல்வந்தர்கள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது என்று தலையங்கத்தின் முதல் பத்தி கூறுகிறது.
இவர் எழுதப் போனது கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து.
ஆனால் இவர் சொல்லியிருப்பதோ, தேர்தலில் சட்டமன்றங்களிலும், மக்களவையிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கீட்டின் தனி தொகுதிகளைப் (Reserved Consituency) பற்றி.
இதற்குத்தான் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் தேவைப்படுகிறதே தவிர, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கு அரசமைப்புச் சட்டப்படி எந்தவிதக் காலவரையறை நிர்ணயமும் கிடையாது, கிடையவே கிடையாது.
ஒருமுறை அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி இப்படித்தான் கூறினார். அவராவது அரசியலுக்கு அவசரமாக வந்தவர்!
இவர் அப்படியல்லவே. அரசியலை அப்படியே கரைத்துக் குடித்தவர்; எதையும் அக்குவேறு ஆணி வேறாக அலசக் கூடிய அசகாய சூரர் ஆயிற்றே!
அணு முதல் அண்டார்டிகா வரை அவருக்குத் தெரியாத அல்ப விஷயமும்கூடக் கிடையாது என்று அள்ளிவிடுகின்றனர் பார்ப்பனர்கள். அப்படிப்பட்ட ஆசாமிதான் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டப்பிரிவையும், கல்வி, வேலை வாய்ப்புகளில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தையும் வாணலியில் போட்டு புரட்டோ புரட்டென்று புரட்டுகின்றார்.
அவருக்குத் தெரியாமலா எழுதியிருக்கிறார்?
எதையாவது குழப்புவதுதான் அவர் வேலை. இதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
கேள்வி: துக்ளக் விலையேற்றத்தைப்பற்றிய அறிவிப்பிலும், தாங்கள் குழம்பியிருப்பதாக எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்களே?
பதில்: குழப்புவது என்று பிறப்புரிமை.
(துக்ளக், 1.12.1987, பக்கம் 9)
இந்தப் பின்னணியில்தான் அவர் இப்படி எழுதியுள்ளார் என்றால்,
இந்த ஆசாமியின் அறிவு நாணயத்தை, துக்ளக் வாசகர்கள்தான் எடை போட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வைதிகப் பார்ப்பான், லவுகிகப் பார்ப்பான் என்று இருவகைப் பார்ப்பனர்கள்பற்றிப் பேசப் படுவதுண்டு. இந்தப் பார்ப்பானோ இரண்டும் கலந்த ஆபத்தான பார்ப்பான்!
கடித்தவுடனேயே சாகடிக்கும் பாம்புக்குத்தானே இந்த நாட்டில் நல்ல பாம்பு என்று பெயர்!
தமிழில் வெளியிடப்பட்டு, தமிழர்களிடத்திலே விற்றுக் காசு பறித்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு, சமூகநீதி இவற்றைக் கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்றைக்குத்தான் அடையாளம் காண்பார்களோ! அவரது பிழைப்பு எப்படி நடக்கிறது? இதோ அவரே பதில் சொல்லுகிறார் கேளுங்கள்:
கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியும், எந்தப் பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்ததுண்டா?
பதில்: எந்தப் பலனும் இல்லையென்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!
(துக்ளக், 24.10.2005, பக்கம் 26)
இந்தப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடவேண்டாமா? தமிழர்களே, சிந்திப்பீர்!
----------------5-4-2010 “விடுதலை” யில் கருஞ்சட்டை எழுதிய கட்டுரை
5 comments:
தனி நபர் இழிவு ஆபாசமானது. அருவருப்பானது, அசிங்கமானது. கண்டிக்கத்தக்கது.
சோ போன்ற ஜோக்கருக்கு முதலில் உணர்த்துங்கள் rammy
பார்பனர்கள் குறைவான எண்ணிக்கையில்தானே உள்ளனர் .அவர்களை புறக்கணிக்கலாமே .எல்லோரும் துக்ளக் படிப்பதை நிறுத்தி விடலாமே பிராமணர்கள் மட்டும் துக்ளக் படித்து விட்டு போகட்டமே .சமுதாயத்தில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் பார்பனர்கள்தான் காரணமா .மற்ற பிரிவினர் எந்த தவறும் செய்வதில்லையா
//ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும்தான் அவர்கள் அடுப்பங்கரையில் இருக்கின்றனவே ஊதிவிடக் கேட்கவா வேண்டும்?//
நெத்தியடி !
பார்ப்பனர்கள் -கிருமிகள்
மற்றவர்கள் - நோயாளிகள்
Ramakrishnan
Post a Comment