மறுமலர்ச்சியோ!
கேள்வி: தமிழக அரசின் கோபுரச் சின்னம் மாற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்க ஆரம்பித்-துள்ளனரே?
பதில்: அரசுச் சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று காரணம் கூறுகிறார்கள். சின்னத்தை உருவாக்கிய அறிஞர்களுக்கு நமது மதச் சார்பின்மை தெரியாததல்ல. கட்டடக் கலை ரீதியில் தமிழகக் கோயில் கோபுரங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. கோபுரம் உடனடியாகத் தமிழகத்தை உணர்த்தும். அதற்காகத்தான் கோபுரச் சின்னமே தவிர மதத்துக்காக அல்ல. மேலும், அசோகரின் சிங்கச் சின்னமும், தேசியக் கொடியும் அதில் உண்டு.
இவ்வாறு பதில் சொல்லியிருப்பது ஒரு அக்கிர-கார இதழைத் தவிர வேறு யார்தான் சொல்லியிருக்க முடியும்? கல்கி (25.4.2010) இதழ்தான் இவ்வாறு பதில் சொல்லுகிறது.
கல்கி கூறுவதை விவாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், ஓர் அரசின் சின்னம் கட்டடக் கலையைத் தான் சார்ந்ததாக இருக்க வேண்டுமா?
திருவல்லிப்புத்தூர் கோயில் கோபுரச் சின்னம் தான் அது என்பதை மறுக்க முடியுமா? அது இந்து மதக் கோயில் என்பதைத் தான் புறந்தள்ள முடியுமா?
மதச் சார்பற்ற ஓர் அரசுக்கு மதம் சார்ந்த ஒன்று அரசு முத்திரையாக இருக்கலாமா என்ற வினாவுக்குப் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் கட்டடக் கலை என்ற முகமூடிப் போடுவதன் சூட்சமம் தமிழர்களுக்குத் தெரியாதா?
திருவள்ளுவர் உலக மக்களுக்கே தேவையான உயர் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளவர். காலங் கடந்து நிற்கும் கருத்துகளை ஒண்ணே முக்கால் அடியில் உணர்த்துகிறார்.
மதம் சாராத அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் உள்ளபடி தமிழராக இருப்பவர்கள் எவரும் ஆயிரம் கைகளைக் கடன் வாங்கியல்லவா வரவேற்று வாழ்த்துப் பா படிப்பார்கள்.
குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.
நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த பிள்ளைதான் 60 தமிழ் வருஷங்கள் என்று ஆபாசமாக எழுதி வைத்திருந்ததை மாற்றி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை பிறப்பித்ததையே வரவேற்க மனம் இல்லாத வஞ்சகப் பார்ப்பனர்கள், கோபுரத்துக்குப் பதில் திருவள்ளுவர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
கோயில் ஒழிந்த இடம் பார்ப்பான் செத்த இடமாயிற்றே! அது சரி, கல்கி எழுதியதை ஆதாரமாகக் காட்டி மதிமுகவின் அதிகாரப் பூர்வ சங்கொலி ஏடு (30.4.2010) திருவள்ளுவர் உருவம் கூடாது, கோபுரம் தான் இருக்க வேண்டும் என்று எழுதுகிறதே, என்ன சொல்ல! ஓ, அது தெரியாதா? இதற்குப் பெயர்தான் மறுமலர்ச்சி என்பதோ!
------------ மயிலாடன் அவர்கள் 25-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
12 comments:
//நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த பிள்ளைதான் 60 தமிழ் வருஷங்கள் என்று ஆபாசமாக எழுதி வைத்திருந்ததை மாற்றி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை பிறப்பித்ததையே வரவேற்க மனம் இல்லாத வஞ்சகப் பார்ப்பனர்கள், கோபுரத்துக்குப் பதில் திருவள்ளுவர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?// நல்ல கேள்வி....
தமிழ் ஓவியா ஐயா....இந்துக்களைப் போலவே கிறித்துவ இஸ்லாமியர் தி.க ஆதரவு அளிக்கிறார்கள், என்பது தெரியும், திக த்தில் உறுப்பினராக இருப்பவர்களில் பிற மத உறுப்பினர்களில் உங்களுக்கு தெரிந்து விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு இருக்குமா ?
ஆதரவு என்பது தவிர்த்து உங்கள் கருத்துகளை இந்துக்கள் தவிர்த்து யாருமே செயல்படுத்தமுன்வராத நிலையில் நீங்கள் மதச்சார்பற்ற நிலை என்பதை யாருக்காக கூவுகிறீர்கள் ?
சின்னத்தை மாற்றித்தான் ஆக வேண்டுமெனில், மேலும் பல சின்னங்கள் தேர்வு /ஆய்வு செய்யப்பட வேண்டும். வள்ளுவர் சிலை சின்னத்தை மட்டும் வைத்து கருத்து கணிப்பு நடத்தினால், திருமங்கல ஃபார்முலா மூலம் வள்ளுவர் கண்டிப்பாக வென்றிடுவார்.மேலும் பிறிதொரு ஆட்சியாளர் வரின், வள்ளுவர் சின்னம் அகன்று விட வாய்ப்பிருக்கிறது. மாவட்டங்களுக்கும், பேருந்துகளுக்கும் விருப்ப பெயர் வைத்த கதை மறந்து விட்டதா?
//மதச்சார்பற்ற நிலை என்பதை யாருக்காக கூவுகிறீர்கள் ?//
அய்யா மதச்சார்பற்ற நிலையை வலியுறுத்துவது, வற்புறுத்துவது தவறா?
பெரியார் தனி ஆளாகத்தான் இயக்கத்தை தொடங்கி வெற்றி பெற்றார்
மதங்கள் மனிதனை மதம் பிடிக்க வைக்கத்தான் அருகதையுள்ளவையே தவிர அதனால் வேறு பயன் இல்லை. ஆனால் திருக்குறள் நம்மை நல்ல மனிதனாக வாழ வல்ல கருத்துகளை உள்ளடக்கியது. உலக அரங்கில் தமிழன் தலை நிமிர்த்து திமிருடன் வலைய வர திருக்குறள் எங்கள் சொத்து என்பதும் ஒரு காரணம். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை விட திருவள்ளுவர் சிலை (கன்னியாகுமரியில் உள்ளது)மிகப்பொருத்தமானது. நமது பண்பாட்டை பிரதிபலிக்கச்செய்வது இதுதானே ஒழிய ஆரியர்களின் திணிப்பான கோவில்களுக்கு அந்த அருகதை சிறிதும் இல்லை.
//தமிழ் ஓவியா said...
//மதச்சார்பற்ற நிலை என்பதை யாருக்காக கூவுகிறீர்கள் ?//
அய்யா மதச்சார்பற்ற நிலையை வலியுறுத்துவது, வற்புறுத்துவது தவறா?//
நீங்க மதச்சார்பற்ற நிலை என்று அடையாளம் காட்டுவது தான் கேலிக் கூத்தாக இருக்கிறது, தமிழர்களில் இந்துக்கள் தவிர்த்து யாரும் வேட்டி அணிவதில்லை என்பதற்காக அது இந்து அடையாளம், தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவீர்களா ?
கோவில்கள் என்பது தமிழக பழங்கால கட்டிடக்கலையில் எஞ்சி இருப்பவை, அவற்றை சின்னமாக வைப்பத்தில் ஏன் மதச் சாயம் பூசுகிறீர்கள்.
நந்தியை சின்னமாக வைத்திருக்கும் ஆந்திர அரசை எதிர்த்து இஸ்லாமியர் பெரும்பான்மை வகிக்கும் ஐதராபாத்தில் கூட அவர்களால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லையே. மதச்சார்பே இல்லை என்போருக்கு ஏன் கோவில் சின்னம் உறுத்தலாக இருக்க வேண்டும், நீங்கள் அழிக்க நினைப்பது இந்து அடையாளங்களையா ? தமிழர் அடையாளங்களையா ?
மதசார்பற்ற அரசில் மைனாரிட்டி கமிஷன் எதற்கு, மைனாரிட்டிகளுக்கு தனி உரிமைகள் எதற்கு.பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர தி.க போராடுமா.ஹஜ் பயணத்திற்கு அரசு மானியம் கூடாது என்று திக போராடுமா.மதச்சார்பின்மையை அதன் முழுப் பொருளில் கடைப்பிடிக்க வேண்டுமெனில்
மதத்தின் பெயர் தனிச்சலுகை கூடாது, தனி உரிமை கூடாது என்றும் தி.க போராட முன்வருமா.
அரசியல் சட்டத்தின் மைனாரிட்டிகளுக்கு உள்ள உரிமைகள்
தேவையில்லை என்று குரல் எழுப்புமா. முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கூறுமா.
பெரியார் முயன்றும் ஒழிக்க முடியாத இந்து மதத்தினை வீரமணியோ கருணாநிதியோ ரவிக்குமாரோ ஒழித்து விட முடியாது.
உங்களுடைய மதசார்பின்மை உண்மையில் இந்து மத விரோதம்தான்.அதனால்தான் கோயில் கோபுரம் உங்களுக்கு கண்ணை உறுத்துகிறது. இந்திய அரசின் சின்னத்தில் உள்ள சத்யமேவ ஜெயதே
உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதையும் மாற்ற வேண்டும் என்பீர்களா.அசோகர் புத்த மதத்தினை சார்ந்தவர் ஆகவே சிங்கங்களின் உருவம் கொண்ட சின்னமும் கூடாது என்பீர்களா.
“ மதச்சார்பே இல்லை என்போருக்கு ஏன் கோவில் சின்னம் உறுத்தலாக இருக்க வேண்டும், நீங்கள் அழிக்க நினைப்பது இந்து அடையாளங்களையா ? தமிழர் அடையாளங்களையா ?”
தமிழ் இந்து அடையாளங்களை ஒழிக்க நினைக்கும் தி.கவினர் பிற மதங்கள் என்று வரும் போது வேறு விதமாக நடந்து கொள்வார்கள்.
///நீங்க மதச்சார்பற்ற நிலை என்று அடையாளம் காட்டுவது தான் கேலிக் கூத்தாக இருக்கிறது, தமிழர்களில் இந்துக்கள் தவிர்த்து யாரும் வேட்டி அணிவதில்லை என்பதற்காக அது இந்து அடையாளம், தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவீர்களா ///
----இது சரியான வாதமாக தெரியவில்லை. வேட்டி கட்டுவது லுங்கி கட்டுவது அவர் அவர் விருப்பும். இது அரசாங்கம் சம்பந்தப்பட்டது. எந்த மத சாயமும் இருக்க்கக்கூடாது.
///கோவில்கள் என்பது தமிழக பழங்கால கட்டிடக்கலையில் எஞ்சி இருப்பவை, அவற்றை சின்னமாக வைப்பத்தில் ஏன் மதச் சாயம் பூசுகிறீர்கள்///
----இருக்கலாம். ஆனால் அவை இந்து மதத்தை தான் குறிக்கிறது. நாத்திகர்கள் மனதை புண்படுத்துகிறது...
///நந்தியை சின்னமாக வைத்திருக்கும் ஆந்திர அரசை எதிர்த்து இஸ்லாமியர் பெரும்பான்மை வகிக்கும் ஐதராபாத்தில் கூட அவர்களால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லையே. மதச்சார்பே இல்லை என்போருக்கு ஏன் கோவில் சின்னம் உறுத்தலாக இருக்க வேண்டும், நீங்கள் அழிக்க நினைப்பது இந்து அடையாளங்களையா ? தமிழர் அடையாளங்களையா ///
----நம்ம வீட்டிலே குப்பை இருக்கு சுத்தம் செய்யலாம் வாங்க என்றால் பக்கத்து வீட்லேயும் குப்பை இருக்கு அதனால் நாம குப்பையோட இருக்கலாம் என்கிறிர்கள். அழிக்க நினைப்பது இந்து அடையாளங்களைத்தான். மேலும் இந்தியாவில் எங்கு தடுக்கி விழுந்தாலும் கோயில்கள் மீது தான் விழனும். தமிழர் அடையாளம் கோயில்கள் அல்ல! அல்லவே அல்ல! மேலும் இது மாதிரி கோயில்கள் உலகம் முழுவதும் இருக்கிறது....ஆகவே தமிழர் அடையாளம் திருவள்ளுவர் என்பது சரி தான்.
தமிழ் ஓவியா கூறுவது சரியான வாதம் என்பது என் தரப்பு.
என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!
//----இது சரியான வாதமாக தெரியவில்லை. வேட்டி கட்டுவது லுங்கி கட்டுவது அவர் அவர் விருப்பும். இது அரசாங்கம் சம்பந்தப்பட்டது. எந்த மத சாயமும் இருக்க்கக்கூடாது//
விருப்பம் பற்றி நான் சொல்லவில்லை, வேட்டியை எந்த மதச் சின்னம் என்பீர்கள் என்று தான் கேட்டேன். கருணாநிதி, வீரமணி வேட்டி கட்டுகிறார் என்பதற்காக அவர்களை மதச் சார்பு உள்ளவ்ர்கள் என்பீர்களா ? இந்துக்கள் தவிர்த்து வேறு யாரும் வேட்டி கட்டுவதில்லையே. அவர்களின் விருப்பம் என்பது மதம் தொடர்புடையாகத்தானே இருக்கிறது.
//----இருக்கலாம். ஆனால் அவை இந்து மதத்தை தான் குறிக்கிறது. நாத்திகர்கள் மனதை புண்படுத்துகிறது...//
அப்படி என்றால் ஒரு இடத்தில் பெரியார் சிலை வைக்கும் போது அனைத்து மக்களிடம் ஒப்புதல் பெற்றா வைக்கிறீர்கள் (நான் பெரியார் பற்றாளன் என்பது வேறு விசயம்). பிடிக்காதவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் சிலையை எடுத்துவிடுவீர்களா ?
//நம்ம வீட்டிலே குப்பை இருக்கு சுத்தம் செய்யலாம் வாங்க என்றால் பக்கத்து வீட்லேயும் குப்பை இருக்கு அதனால் நாம குப்பையோட இருக்கலாம் என்கிறிர்கள். அழிக்க நினைப்பது இந்து அடையாளங்களைத்தான்.//
நீங்கள் அழிக்க நினைப்பது இந்து அடையாளம் என்றால் அதை ஏன் மதச் சார்பு அற்ற நிலை என்று சொல்கிறீர்கள், இந்து எதிர்ப்பு என்று சொல்லலாமே. இந்து மதத்தை மட்டும் எதிர்பது மதச்சார்பற்ற நிலை என்று பெரியார் எங்கும் குறிப்பிட்டது இல்லையே.
//மேலும் இந்தியாவில் எங்கு தடுக்கி விழுந்தாலும் கோயில்கள் மீது தான் விழனும்//
ம், சுடுகாடுகளும், மருத்துவமனைகளும் கூடத்தான் எங்கும் இருக்கிறது, பயன்படுத்தாதவர்கள் அது தேவை அற்றது என்று சொல்வது சரியான வாதமாகாது.
//தமிழர் அடையாளம் கோயில்கள் அல்ல! அல்லவே அல்ல! மேலும் இது மாதிரி கோயில்கள் உலகம் முழுவதும் இருக்கிறது....//
உலகம் முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்தும் தமிழர்கள் வைத்துள்ள அடையாளம் தான். உள்ளே இருப்பவன் பார்பான் என்பதற்காக கோவில்கள் தமிழன் அடையாளம் இல்லை என்று சொல்ல முடியாது.
எல்லோரும் பெரியார் பெயரைச் சொல்லி உண்டியல் குலுக்கி வயிறு வளர்ந்தால், பெரியாரே தவறு என்று சொல்பவனை நான் மடையன் என்று தான் சொல்லுவேன்,
//ஆகவே தமிழர் அடையாளம் திருவள்ளுவர் என்பது சரி தான்.//
ம் அது சரி முப்பாட்டன் பேரு மட்டும் இருந்தால் போது பாட்டன் கட்டின வீடெல்லாம் தேவை இல்லை இடித்துவிடுவோம் என்பது போல் இருக்கு. பெரியார் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து கொண்டே கோவில் டிரஸ்டியாகவும் இருந்திருக்கிறார். அவரைவிட நீங்கள் அறிவாளியோ.
//நந்தியை சின்னமாக வைத்திருக்கும் ஆந்திர அரசை எதிர்த்து இஸ்லாமியர் பெரும்பான்மை வகிக்கும் ஐதராபாத்தில் கூட அவர்களால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லையே. //
ஆந்திர சின்னம் நந்தி இல்லை, 'பூரண கும்பம்'
கோயில்கள் என்றால் எல்லா சமயத்தவரின் கோயில்களும் இடம்பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்..அப்படியிருந்தால் தான் மதச்சார்பற்ற நிலையில் உள்ளதாக கருத முடியும்..இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்..திருப்பி திருப்பி இது இருப்பதாகவே காலம் முழுவதும் காட்டிக்கொண்டிருக்கும்..அடுத்த கட்டத்திற்கு நகராது..இந்த வேறுபாட்டை களைய திருவள்ளுவரின் கற்பனை உருவமே இருக்கலாம்..அவர் கருத்து சமயசார்பற்ற கருத்து..அவர் படம் இருப்பதில் தவறில்லை...ஏறக்குறைய அந்த கோபுர அளவுக்கு உருவம் வரும்..கூடவே தமிழக வரைபடம் கூட இருக்கலாம்.
Post a Comment