Search This Blog

26.4.10

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

பார்வதி அம்மையாரை சிகிச்சை பெறாமல் தடுத்ததே ஜெயலலிதாதான்
வைகோ, நெடுமாறன் போயஸ் தோட்டத்திற்குமுன் உண்ணாவிரதம் இருந்திருக்கவேண்டும்
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்!
சென்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கமான உரை


பார்வதி அம்மையாரை சிகிச்சை பெறாமல் தடுத்ததே ஜெயலலிதாதான்.

உண்ணாவிரதம் இருந்த வைகோ, நெடுமாறன் ஆகியோர் ஜெயலலிதா வீட்டு முன் உண்ணாவிரதம் இருந்திருக்கவேண்டியதுதானே. பார்வதி அம்மையாரை தமிழக முதல்வர் கலைஞர்மூலம் காப்பாற்றுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

சென்னை பெரியார் திடலில் நேற்று (25.4.2010) மாலை நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:

மிகுந்த வேதனையான கூட்டம்

மிகுந்த வேதனையோடு நடைபெறக்கூடிய கூட்டம் இது. எனக்கு முன்னாலே பேசிய எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்களும் விளக்கமாகப் பல செய்திகளைச் சொன்னார்கள்.

நான் நீண்ட நேரம் பேசப் போவதில்லை. என்னுடைய உரை ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் இருக்கலாம், அவ்வளவுதான்.

பிரபாகரனின் தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்

பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்று சொல்லுவார்கள். பாவத்தில், புண்ணியத்தில் நாங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்.

பிரபாகரனின் தாயார் செய்த குற்றமென்ன? ஒரு தமிழச்சியாகப் பிறந்ததுதான் குற்றமா? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறவர். பாதி நினைவோடு இருப்பார்கள்; மீதி பாதி நினைவில்லாமல் இருப்பார்கள். அத்தகைய சங்கடமான சூழ்நிலையிலே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசுகூட...

இலங்கை அரசுகூட அவருக்குக் கருணை காட்டி மலேசியாவிற்கு அனுப்பியிருக்கிறது. மலேசிய அரசும் உதவியிருக்கிறது. இந்திய அரசு தூதரகத்தில் விசா பெற்று சிகிச்சைக்காக பார்வதி அம்மையார் சென்னை வந்திருக்கிறார்.

நான் செய்தித்தாளைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்

அவர்கள் வருகின்ற செய்தி மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எங்களுக்கு அவர்கள் யாரும் சொல்லவில்லை. பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டார் என்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் நான் செய்தித்தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.

நம்முடைய கோபதாபங்களை வெளிப்படுத்திட ஒரு நீண்ட கண்டன அறிக்கையை மனிதநேயத்துடன் எழுதினேன். மற்ற ஏடுகளுக்கும் உடனடியாக அனுப்பி வைத்தோம்.

கலைஞர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திட

இது முழுக்க முழுக்க ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகும். மனிதாபிமானமற்ற முறையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவர்களை மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர்களை திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?

கலைஞர் அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயர் ஏற்படுத்தவேண்டும் என்கிற பின்னணி இருந்திருக்கலாம்.

பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி இவர்கள் திருச்சியிலிருந்தார்கள். பிறகு, யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள்.

இங்கே இருந்த ஜெயலலிதா அன்றைக்கு வாஜ்பேயி அரசுக்கு ஒரு கடிதமே எழுதினார் தமிழக அரசின் சார்பில்!

பூனைக்குட்டி வெளியே வந்தது!

இந்த செய்திதான் பூனைக்குட்டி வெளியே வந்தது என்பதைக் காட்டியது. இந்தச் செய்தி இந்து ஏட்டில் வெளிவந்தது.

ஜெயலலிதா வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம்

2003 ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களையும், அவருடைய தாயார் பார்வதி அம்மையாரையும் இந்தியா வர தமிழகத்திற்கு வர அனுமதிக்கப்படக் கூடாதவர்கள் என்று அன்றைய வாஜ்பேயி அரசுக்குக் கடிதம் எழுதினார்.

பாலசிங்கத்தையும் தடுத்தார்

இதே அம்மையார் ஆண்டன் பாலசிங்கம் நீரிழிவு நோயினால் வெளிநாட்டில் லண்டனில் அவதிப்பட்டு சென்னைக்கு வந்து சிகிச்சை பெற முயன்றபோது பாலசிங்கம் இங்கு வரவே கூடாது என்று தடுத்தவர் இதே ஜெயலலிதா அம்மையார்தான்.

ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் அவர்களுடைய பாஸ்போர்ட்டை வைத்து விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கணினிமூலம் பார்ப்பார்கள். இவர்கள் வரக்கூடாதவர்கள் பட்டியலில் இருக்கிறார்களா? என்பதை சரி பார்ப்பார்கள். அது அவர்களுடைய கடமை. அப்படி இருந்தால் திருப்பி அனுப்புவார்கள். அது மத்திய அரசு அதிகாரிகளுடைய கடமை. இது ஒரு நடைமுறை.

பார்வதி அம்மையார் வருவது முதல்வர் கலைஞர் அவர்களுக்குத் தெரியாது. சொல்லப்படவில்லை.

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது கலைஞரா?

அருமைச் சகோதரர் வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்களே.

2003 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்மையார் அவர்களையும் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியவராயிற்றே.

சட்ட ரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ...

அதுமட்டுமல்ல, இந்து பத்திரிகையில் இவர் எழுதிய செய்தி அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது.

Legally or illegally சட்ட ரீதியாகவோ அல்லது சட்டத்திற்கு விரோதமாகவோ எப்படியோ இவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் எழுதியவர் ஜெயலலிதா அவர்கள்தானே.

ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே!

சகோதரர் வைகோ அவர்களுக்கும், நெடுமாறன் அவர்களுக்கும் உண்மையிலேயே அந்த உணர்வு இருந்திருந்தால், ஜெயலலிதா வீட்டு போயஸ் தோட்டத்திற்கு முன் அல்லவா உண்ணாவிரதம் இருந்திருக்கவேண்டும்?

இதில் கலைஞரை சாடுவதற்கு என்ன இருக்கிறது?

இவ்வளவு மோசமான பின்னணி இருக்கிறது. இதை அவர்கள் மறைக்கலாமா? இந்த லட்சணத்தில் தமிழக முதல்வர் கலைஞரை சாடுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை அல்லவா? இதில் போய் அரசியல் நடத்தலாமா?

நம்முடைய நோக்கம் எப்படியும் பார்வதி அம்மையாரை சிகிச்சைக்காக மீண்டும் அவர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதில் போய் மலிவான அரசியலை புகுத்தக்கூடாது.

பிரச்சினையே இவர்களால்தான்!

வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்திற்குச் சென்ற பிறகுதான் பிரச்சினையே உருவாகியிருக்கிறது.

உடனடியாக முதலமைச்சரைத் தொடர்பு-கொண்டு இதுபற்றித் தெரிவித்தார்களா?

யாரும் எளிதில் அணுகக்கூடிய முதல்வர் ஆயிற்றே!

பார்வதி அம்மையார் வருகை தடுக்கப்பட்டால், இதன்மூலம் உலகத் தமிழர்கள் மீது கலைஞர் அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த பழி சுமத்தக்கூடிய ஒரு தவறான எண்ணத்தை அல்லவா இவர்கள் உருவாக்கிவிட்டார்கள்?

அதற்கு இதை ஒரு வாய்ப்பாக அல்லவா வைகோ அவர்களும், நெடுமாறன் அவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்?

சட்டமன்றத்தில்
முதல்வர் பேச்சைக் கேட்காத அ.தி.மு.க.

சட்டமன்றத்திலே இந்த சம்பவம்பற்றி பேசியிருக்கிறார்கள். இடதுசாரிகள், பா.ம.க.வினர், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எல்லாம் பேசினார்கள். அதற்குப் பதில் சொல்ல முதல்வர் கலைஞர் எழுந்தவுடன் ஒவ்வொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,வாக வெளியேறுவதா? இந்து பத்திரிகையில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி கலைஞர் அவர்கள் பேச முற்பட்டார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களையும் அவையில் அமர்ந்து அவர் சொல்லப் போகின்ற கருத்துகளைக் கேட்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக நழுவி வெளியேறிவிட்டார்களே. கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கிறார். இதில் நாம் அனைவரும் ஒரே குரல் எழுப்பி செயல்படவேண்டிய செயலாயிற்றே.

இவர்கள் எல்லாம் வெட்கப்படவேண்டாமா? போர்க் களத்தில் முதலில் கள பலியாவது வீரர்கள் அல்ல. உண்மைதான். அதைத்தான் நாங்கள் இங்கே எடுத்துச் சொல்கின்றோம்.

பார்வதி அம்மையார் சிகிச்சை பெறவேண்டிய மனிதாபிமான செயலில் இருந்து நழுவிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

ஜெயலலிதாவிடம் வைகோ பேசினாரா?

சகோதரர் வைகோ போன்றவர்கள் ஏப். 27 ஆம்தேதி கடை அடைப்புக்காக ஜெயலலிதா அம்மையாரை சந்தித்திருக்கின்றன. படமெல்லாம் பத்திரிகையில் வந்திருக்கிறது.

பென்னாகரம் இடைத்தேர்தலுக்குப் பிறகுதான் அந்த அம்மையார் மற்றவர்களை உட்கார வைத்தே பேசுகிறார் (சிரிப்பு, கைதட்டல்).

பார்வதி அம்மையார் பிரச்சினைபற்றி உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால், இதைப்பற்றி அந்த அம்மையாரிடம் பேசினீர்களா?

நெடுமாறன்- சுப.வீக்கு வாய்ப்பூட்டு

சகோதரர் நெடுமாறன் அவர்களுக்கும், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் எங்கும் பேசக்கூடாது என்று நீதிமன்றத்தின்மூலம் உத்தரவு பெற்று பழிவாங்கியவர்தானே இந்த அம்மையார்.

நாங்கள்தான் பேசினோம்; கோயில் பூட்டையே அகற்றியவர் நமது முதல்வர் கலைஞர். எனவே, இவர்களுடைய வாய்ப்பூட்டையும் அகற்ற வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தோம்.

விடுதலையைப் படித்தார் கலைஞர். மறுநாள் அவரை நான் சந்தித்தேன். இப்படி நீங்கள் பேசியிருப்பது விடுதலையில் வந்திருக்கிறது. இதில்நாம் என்ன செய்ய முடியும் என்று கலைஞர் கேட்டார். ஒன்றுமில்லிங்க, நாம் அரசு வழக்கறிஞர் மூலமாக அந்த வாய்ப்பூட்டுத் தடையை நீக்கலாம் என்று சொன்னேன்.

முதலமைச்சர் உடனே பேசினார்

உடனே அவரே தொலைபேசியை எடுத்துச் சுழற்றி அரசு வழக்கறிஞரிடம் பேசினார்.

என்ன இப்படிச் சொல்லுகிறார்களே! அதற்கு உடனே ஏற்பாடு செய்து அந்தத் தடையை நீதிமன்றத்தின் மூலம் நீக்கிவிட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று சொன்னார்.

அப்பொழுது சகோதரர் நெடுமாறன் அவர்களுடைய நிலையும், சுப. வீரபாண்டியன் அவர்களுடைய நிலையும் என்ன?

பொம்மலாட்ட சைகைதான்!

எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேச மாட்டார்கள். பொம்மலாட்ட சைகைமூலம் காட்டிவிட்டு, நீதிமன்றத் தடை இருக்கிறது. எங்களால் பேச முடியாது என்று உட்கார்ந்து விடுவார்கள். இதுதானே ஜெயலலிதா செய்தது. அந்த வாய்ப்பூட்டை அகற்றியதற்காகத்தான் சுப.வீ. அவர்கள் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வைகோவுக்கு ஜெ. கொடுத்த 13 மாத சிறை

வைகோ அவர்கள் 13 மாதம் இந்த அம்மையாரால் சிறையில் இருந்ததை மறந்துவிட்டாரா? நாடாளுமன்றத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீதிபதியிடம் வைகோ அவர்கள் அனுமதி பெற்றது தெரிந்தவுடன் இரவில் தலைமை நீதிபதியிடம் இந்த அம்மையார் ஆட்சியில் உத்தரவு பெற்று இவரை ஒரு நாள் டில்லி செல்ல அனுமதிக்காதவர்தானே இந்த அம்மையார்.

பார்வதி அம்மையாருக்கு வேண்டுகோள்

பார்வதி அம்மையாருக்கு தமிழர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். தமிழகத்தில் சிகிச்சை பெற தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதுங்கள். இதுதான் அரசியல் ரீதியான அலுவலக முறை.

ஏற்கெனவே கலைஞர் அவர்களும், சட்டமன்றத்தில் சிகிச்சை பெற மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

டி.ஆர். பாலு கேட்டாரே!

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலே டி.ஆர். பாலு அவர்களை கேள்வி கேட்க வைத்தார் கலைஞர். தமிழக அரசுக்குத் தெரியாமல் எப்படி மத்திய அரசு பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது என்று கேள்வி கேட்க வைத்திருக்கின்றார்.

எனவே, பார்வதி அம்மையாரை தமிழகத்தில் சிகிச்சை பெற வைத்து, அவரைக் காப்பாற்றவேண்டியது நம்முடைய கடமையாகும்.

தமிழக முதல்வர் கலைஞர் இதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்வார்.

சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கின்றார். முதல் கட்டமாக இதை சட்டப்படி நாம் செய்தாகவேண்டும்.

பலத்த கரவொலி எழுப்பி ஆதரியுங்கள்!

எனவே, இங்குக் கூடியிருக்கின்ற அனைத்துக் கட்சித் தோழர்களும் பலத்த கரவொலி எழுப்பி இதை ஆதரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

----------------------------- "விடுதலை” 26-4-2010

7 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வடிவேலு - விவேக் போன்றோரை மிஞ்சும் நகைச்சுவை நடிகர்கள் திருமா,வீரமணி,சுப.வீ போன்றவர்கள்...

உங்களுக்குத் தெரியாதது இல்ல... தமிழ் ஓவியா ஐயா!

Unknown said...

அம்மா, வாஜ்பாய் அரசுக்கு கடிதம் எழுதும்போது, அதை வீரமணி அவர்கள் அப்போது விமர்சனம் செய்தாரா? அப்போது அம்மையாரை அல்லவா அண்டி இருந்தார்!

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

அஞ்சு வருஷமா அந்த உத்தரவை நீக்கம் செய்யாமல் தி.மு.க அரசு செயல்படுவது ஏன்

நல்லா நடுத்துரைங்கையா பொழப்ப

Unknown said...

அய்யா,
நான் செயலலிதா விசுவாசியும் அல்ல கலைஞருக்கு எதிரணியும் இல்லை.

இந்த விவகாரத்தில் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் கலைஞர் மேல் விழுந்த கறையை கழுவ வேண்டுமென்றால் அந்த அம்மாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்வதுதான் சரி. என்ன நடக்கிறது என்ற சுய நினைவில்லாதவர் கலைஞருக்கு கடிதம் எழுதச்சொல்வது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை. இயலாதவருக்கு நாமே சென்று உதவுவதுதான் அழகு.

தமிழ் ஓவியா said...

பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி முதலமைச்சரைச் சந்தித்து
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேரா. சுப.வீ. வேண்டுகோள்



நேற்றிரவு (26.4.2010) 8 மணியளவில் சென்னையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை அவர்தம் இல்லத்தில், பக்கவாத நோயால் அவதிப்படும் 81 வயது மூதாட்டியான அன்னை பார்வதி அம்மாள் அவர்களை மீண்டும் மலேசியாவிலிருந்து இங்கே வந்து உரிய சிகிச்சை பெற, அவர்களிடமிருந்து கடிதம் வரும் நிலையில், மத்திய அரசுக்கு எழுதி அனுமதித்து ஆவன செய்யவேண்டும் என்பதை ஒரு மனுமூலம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து வேண்டுகோள் மனு ஒன்றை அளித்து, சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய கருத்துகள் அடிப்படையில் ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்!

முதல்வர் அவர்கள் மனுவைப் பெற்றுக்கொண்டு, பார்வதி அம்மா அவர்களிடமிருந்து கடிதம் வந்தால், அதற்குரிய அனுமதி ஏற்பாடுகளை மத்திய அரசுடன் பேசி செய்வதாக இணக்கமாகக் கூறினார்கள்.

மூவரும் நன்றி தெரிவித்து, சிறிது நேரம் உரையாடி விடை பெற்றனர்!

அம்மனுவின் வாசகங்கள் வருமாறு:

பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு,

கனிவான அன்பு வணக்கம்.

சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மையார் 16.4.2010 அன்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தபோது, சென்னையில் இறங்குவதற்கு குடியுரிமை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து தாங்கள் 19.4.2010 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தீர்கள்.

நான் மீண்டும் தமிழகத்தில் வைத்தியம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதி அம்மையார் விரும்புவார்களேயானால், கடிதம் எழுதுவார்களேயானால், அதுபற்றி மத்திய அரசுக்கு எழுதி, அனுமதி பெற தயாராக இருக்கிறேன் என்று அறிவித்துள்ளதற்கு எங்களின் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் கூறும் நல்லுலகம் இதனை நன்றி உணர்வோடு வரவேற்றுப் பாராட்டும் என்பது உறுதி.

இந்தப் பிரச்சினையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை மூல ஆணை பிறப்பிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களை மறைத்துத் திசை திருப்பும் வேலையில் சிலர் இறங்கியுள்ளனர். இந்த உண்மையும் அம்பலமாகிவிட்ட நிலையில், தாங்கள் கருணை கூர்ந்து, இதுபற்றி திருமதி பார்வதி அம்மாவிடமிருந்து வேண்டுகோள் வருமானால், அதுபற்றி தாங்கள் பெரு உள்ளத்துடன், உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, சட்டப் பேரவையில் அறிவித்தபடி ஆவன செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார்கள்.

---------------"விடுதலை” 27-4-2010

Suddi said...

Hi,

In 2003, JJ wrote a note to Central
Govt (then headed by Vajpayee), not
to allow these people.

Now, MK is CM for the past 4+ years.
Why did not revoke or repeal that
note?.
Or as usual, he could have sent a
letter ?. Or
Like during portfolio allocation he
went to Delhi, he could have gone
again?.

As per CM's words, he saw the news
in next day's Hindu, then he realised that Mrs. Parvathi has come
to Chennai.. :-)

If Mr. Jangit (Police commissioner)
can know the arrival of Mrs. Parvathi, why not the CM?.

All sappakattu stories...

And I strongly condemn what has
happened. We allow even Pakistanis
to come to India, for medical treatments. Why not 1 old lady?.

And Mr. Veeramani was with JJ at that time right?.

Innuma intha ulagam nambala nambuthu?. Vadivelu rightly said.

Sudharsan

Padmanbhan said...

don't tell lie even the other party presidents like viko tirumalavan knows her arrival but CM dosen't know it look like comedy.