Search This Blog

1.4.10

ஏப்ரல் முதல் தேதி மட்டுமா முட்டாள் த(தி)னம்!


முட்டாள்த(தி)னம்!

இன்று ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் என்று உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாக ஏற்காமல் பழைய ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களைக் கேலி செய்வதற்காகத்தான் இந்த ஏப்ரல் முதல் தேதியைத் தேர்ந்தெடுத்து முட்டாள் தினம் (April Fool) என்று அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் பார்த்தால் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சியில் தமிழர் பண்பாட்டு மறு-மலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு அதிகாரப் பூர்வமாக, சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 குழந்தைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்றும் அது சித்திரை முதல்நாள்தான் தொடங்குகிறது என்றும் அடம் பிடிக்கும் அரட்டைக் கச்சேரி நடத்தும் ஆரியர்களையும், அவர்களுக்குத் துணை போகும் தொங்கு சதைகளையும் இந்நாளை ஒரு குறியீடாகக் கொண்டு ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கலாமே! என்ன சரிதானே!

இது ஒரு புறம் இருக்கட்டும். ஏப்ரல் முதல் தேதி என்று ஒரு நாளைக் குறிப்பிட்டு அழைத்தாலுங்கூட மதக்குட்டையில்நாளும் மூழ்கி, தொட்டதற்கெல்லாம் தலையெழுத்து என்றும், நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான் அவன் எல்லாம் பார்த்துக் கொள்வான் நம் கையில் என்ன இருக்கிறது? ஆட்டுக்கு வாலை அளந்து வைத்திருப்பவன் அவன்தானே! உடம்பு முழுவதும் எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, ஆற்று மணலில் உருண்டு புரண்டாலும் உடலில் ஒட்டும் மண்தானே ஒட்டும், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா? கல்லினுள் தேரைக்கும் அவன்தானே அன்றாடம் கறிசோறு போடுகிறான் - இந்த ஜீவாத்மா என்பதெல்லாம் பொய்த் தோற்றம் - பரமாத்மாவோடு அய்க்கியமாவதுதான் இந்த ஊத்தைச் சதையை நாம் தாங்கியிருப்பதன் பயன் அதற்கு நாம் ஆண்டவனிடம் சரணாகதி அடைந்துவிட வேண்டும். அரே ராமா! அரே கிருஷ்ணா, சிவசிவா என்ற நாமங்களை உச்சரித்துக் கொண்டிடும் இருக்கும் மனிதர்களை ஒவ்வொரு நாளும், ஏன், ஒவ்வொரு நொடியும் கூட முட்டாள்கள், படுமுட்டாள்கள் பரமமுட்-டாள்கள் என்று நாமகரணம் சூட்டி அழைத்துக் கொண்டிருக்கலாமே! ஏப்ரல் முதல் தேதி மட்டுமல்ல. எல்லா நாள்களிலும் முட்டாள்களாக இருக்கிறார்களே, படித்தவர்கள் உள்பட என்ன செய்ய!

--------------- மயிலாடன் அவர்கள் 1-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

வஜ்ரா said...

//
"ஏப்ரல் முதல் தேதி மட்டுமா முட்டாள் த(தி)னம்!"
//

இல்லை.
உங்களைப்போன்ற முட்டாள்களுக்கு எல்லா நாளும் முட்டாள்கள் தினமே...

தமிழ் ஓவியா said...

வஜ்ரா உங்களைப் போல் மதக்குட்டையில் மூழ்கிக் கிடக்கும் நபர்களுக்காக எழுதப்பட்டது தான் இந்தக் கட்டுரை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

C.S.Raja said...

அப்படியே சித்திரை, வைகாசி என்ற தமிழ் மாதங்களுக்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி, வீரமணி, கனிமொழி..... இப்படியே பேரை வச்சிடுங்க. இன்னும் கொஞ்ச நாளுல கருணாநிதி பிறந்த நாளுல இருந்து தான் வருஷம் தொடங்கணும் என்றும் சொல்லுங்க. இப்படியே தமிழ் நாட்டுல உள்ள எல்லோரையும் முட்டாளா ஆக்கிடுங்க.