விக்ருதியாம்!
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாம் - தெரிவித்துள்ளார் அண்ணா திமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா.
உண்மையிலே அண்ணாவின் கொள்கையை ஏற்பவராகவிருந்தால், அண்ணாவின் சிந்தனைகள் பற்றிய அடிப்படை ஞானமிருந்தால், சித்திரையை முதல் நாளாகக் கொண்ட பழைய பத்தாம் பசலித்தனமான பார்ப்பனீய ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துக் கூறுவாரா?
விக்ருதி என்று இந்த ஆண்டுக்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதே இந்த சொல் தமிழ்தானா?
இந்த ஒரு சொல் இருக்கட்டும்; 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று தமிழில் சொல்லுவதற்கு தப்பித் தவறி ஒரே ஒரு சொல் உண்டா?
இதற்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணியாவது உண்டா? துருநாற்றம் பிடித்த கேவலமான ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று பார்ப்பனீயத்துக்கே உரித்தான ஆபாசக் கற்பனையில் உருவகப்படுத்தப்பட்டுள்ள புராணக் குப்பையைக் கோபுரத்தில் தூக்கி வைக்க ஆசைப்படலாமா?
இதைவிட தரம் தாழ்ந்த மூடநம்பிக்கை ஒன்று இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குள்ள ஒன்றுக்காக வாழ்த்துக் கூறுகிறார் முன்னாள் முதல்வர் என்றால் இதன் பொருள் என்ன?
இந்த அம்மையார் அய்யா, அண்ணா பெயரை உச்சரிப்பதே அவசியத்துக்கும் அவசரத்துக்கும், ஊரை ஏமாற்றுவதற்கும்தானே தவிர, மற்றபடி அந்தரங்கத்தில் ஆரிய சொரூபம் தான் அவருக்கானது என்பது அப்பட்டமாக விளங்கிடவில்லையா?
சரியான சந்தர்ப்பத்தில் எல்லாம் சரியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கிறார் இந்த ஆரியக் குலத் திலகம்!
அண்ணா திமுகவில் உள்ள திராவிட இயக்கக் கொள்கைகளில் நம்பிக்கையுள்ள ஒரே ஒருவராவது அக்கட்சியில் இருப்பாரேயானால், இந்த நிமிடம் முதற்கொண்டே அந்தத் தலைமையை உதறி எறிந்த வெளியில் வந்து தன்மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
அது சரி, மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோவும் அம்மையாருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறாரே எங்கே போய் முட்டிக் கொள்ள? வைகோ அவர்கள் அணிந்திருக்கும் கறுப்புச் சால்வை அவரைக் கேலி பேசாதா?
----------------- மயிலாடன் அவர்கள் 14-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
19 comments:
தாராளமாக வாழ்த்து கூறலாம். வெகுஜன விருப்பத்திற்கு மாறாக எதை மாற்றினாலும் எடுபடாது. தை மாதம் புத்தாண்டு என்பது அடுத்த ஆட்சி வரும்வரை ஒரு சிறு கும்பலினால் கட்டாயத்தின் பேரில் கொண்டு ஆடப்படும்.
தமிழ் ஓவியாவிற்கு,
தங்களின் கருத்து உண்மைதான்.ஆனால் பிராமணீயத்தை சாடவே அந்த தலைப்பை வைத்தீரோ?நிற்க,இது தமிழ் வருட பிறப்பு அல்ல,என்பதற்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் உரையை மேற்கோள் காட்டி தமிழ்மாதப் பெயர்கள் எப்படி வந்தன?என்று ஒரு இடுகை இட்டுள்ளேன்.அதிலும் இது தமிழ் வருடப்பிறப்பு அல்ல என்பதையே குறிப்பிட்டுள்ளேன்.சித்திரை 1ம் தேதியை இதுவரை கடைபிடிக்கின்ற வழக்கப்படி தமிழ்புத்தாண்டு வாழ்த்து சொன்ன அம்மையாரை சாடிவிட்டீர்கள்.சரி இதிலிருந்து இது தமிழ் வருடபிறப்பே அல்ல,அதை தமிழ் வருடப்பிறப்பாக கூறியதால் அம்மையாரை சாடினீர்.ஆனால் மான்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் தை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடபிறப்பு என்கிறாரே!,அது தங்கள் கூற்றுப்படி தவறு தானே!எனில் தை மாதம் ஐயா வாழ்த்து சொன்னால் அவருக்கும் இந்த வசை மொழி உண்டா?ஏனெனில் ப்ரபவ,விபவ...என்ற வருடங்கள் தமிழ் வருடமல்ல என்கிறீர்.எனில் சித்திரை,வைகாசி.ஆனி...தை...பங்குனி இது தமிழ் மாதம் அல்ல,தங்கள் கூற்றுப்படிதான்.அப்ப சித்திரை,தை இவை இரண்டும் தமிழ் வருடத்தை சார்ந்த தமிழ் மாதம் அல்ல என்கிறீர்.அப்ப இந்த இரண்டு மாதங்களில் எப்போது தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் தப்புதன,உங்கள் கூற்றுப்படி தான்.எனில்
1.தமிழ் வருடம் எது?
2.தமிழ் மாதம் எது?எத்தனை?எவ்வாறு கணக்கிடப்படுகிறது?அதன் பெயர்காரணம் என்ன?
3.தைமாதம் 1ம் தேதி மான்புமிகு முதல்வரோ அரசு சார்ந்த-அரசு சாராத வர்களோ தமிழ்புத்தாண்டு வாழ்த்து கூறினால் அவர்களையும் நீங்கள் வசைபாடுவீரா?
மேற்கண்ட ஐயங்களுக்குமட்டும் விளக்கம் தரவும்.நாத்திகம் பற்றியோ பிராமணஜாதி த்வேஷம் பற்றியோ எழுதி விஷயத்தை திசைதிருப்பவேண்டாம்.அதை அடுத்து பேசுவோம்.நன்றி தமிழ் ஒவிய & திரு மயிலாடன்
தமிழ் ஓவியாவிற்கு,
தங்களின் கருத்து உண்மைதான்.ஆனால் பிராமணீயத்தை சாடவே அந்த தலைப்பை வைத்தீரோ?நிற்க,இது தமிழ் வருட பிறப்பு அல்ல,என்பதற்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் உரையை மேற்கோள் காட்டி http://aagamakadal.blogspot.com என்ற வலைப்பூவில் தமிழ்மாதப் பெயர்கள் எப்படி வந்தன?என்று ஒரு இடுகை உள்ளது.அதிலும் இது தமிழ் வருடப்பிறப்பு அல்ல என்பதையே குறிப்பிட்டுள்ளது.சித்திரை 1ம் தேதியை இதுவரை கடைபிடிக்கின்ற வழக்கப்படி தமிழ்புத்தாண்டு வாழ்த்து சொன்ன அம்மையாரை சாடிவிட்டீர்கள்.சரி இதிலிருந்து இது தமிழ் வருடபிறப்பே அல்ல,அதை தமிழ் வருடப்பிறப்பாக கூறியதால் அம்மையாரை சாடினீர்.ஆனால் மான்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் தை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடபிறப்பு என்கிறாரே!,அது தங்கள் கூற்றுப்படி தவறு தானே!எனில் தை மாதம் ஐயா வாழ்த்து சொன்னால் அவருக்கும் இந்த வசை மொழி உண்டா?ஏனெனில் ப்ரபவ,விபவ...என்ற வருடங்கள் தமிழ் வருடமல்ல என்கிறீர்.எனில் சித்திரை,வைகாசி.ஆனி...தை...பங்குனி இது தமிழ் மாதம் அல்ல,தங்கள் கூற்றுப்படிதான்.அப்ப சித்திரை,தை இவை இரண்டும் தமிழ் வருடத்தை சார்ந்த தமிழ் மாதம் அல்ல என்கிறீர்.அப்ப இந்த இரண்டு மாதங்களில் எப்போது தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் தப்புதன,உங்கள் கூற்றுப்படி தான்.எனில்
1.தமிழ் வருடம் எது?
2.தமிழ் மாதம் எது?எத்தனை?எவ்வாறு கணக்கிடப்படுகிறது?அதன் பெயர்காரணம் என்ன?
3.தைமாதம் 1ம் தேதி மான்புமிகு முதல்வரோ அரசு சார்ந்த-அரசு சாராத வர்களோ தமிழ்புத்தாண்டு வாழ்த்து கூறினால் அவர்களையும் நீங்கள் வசைபாடுவீரா?
மேற்கண்ட ஐயங்களுக்குமட்டும் விளக்கம் தரவும்.நாத்திகம் பற்றியோ பிராமணஜாதி த்வேஷம் பற்றியோ எழுதி விஷயத்தை திசைதிருப்பவேண்டாம்.அதை அடுத்து பேசுவோம்.நன்றி தமிழ் ஒவிய & திரு மயிலாடன்
வணக்கங்கள் தோழரே ...
நானும் நண்பர்களுக்கு வாழ்த்து மின்னஞ்சல்களும் sms களும் அனுப்பியிருந்தேன் ... சித்திரை முட்டாளர்கள் தின வாழ்த்தென்று ....
வலை பூ ஒன்றை சில தினங்களில் தொடங்க ஆர்வமாயிருக்கிறேன் ... உங்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி அல்லது அலை பேசி எண் தர இயலுமா... தஞ்சாவூர் பக்கத்திலிருந்து செயல்படும் நமது பகுத்தறிவு இணைய நண்பர்கள் யாரையேனும் நான் தொடர்பு கொள்ள உங்களால் உதவ இயலுமா...
எனது மின்னஞ்சல் முகவரி hruprakash@gmail.com
நன்றி தோழரே!
தமிழ் ஓவியாவே,
என்ன நான் இட்ட மறுமொழியை இங்கு ப்ரசுரிக்கவே இல்லை.அதற்கு தங்களின் மறுமொழி என்ன?அடுத்தவர்கள் சாடி பிளாக் எழுதுவது ஒன்றும் சாதனை அல்ல.அதற்கு வரும் விமர்சனங்களை ஏற்று பதில் அளிக்க தைரியம் இல்லாத கோழயா நீங்கள்.
இது பார்ப்பனீய ஆண்டு என்றால் தமிழ் ஆண்டு எது?தமிழ் மாதங்கள் எது?எத்தனை?அது உண்டான பின்னனி என்ன?அதன் பெயர் காரணம் என்ன?
அம்மையாரை யும் திரு வைகோ வயும் சாடியது போல் தை 1ம் தேதியை தமிழ் வருடப்பிறப்பாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வரையும் நீங்கள் சாடுகின்றீர்களா?அல்லது அதற்கு தனி நொண்டி சாக்கு கைவசம் உள்ளதா?
எனது கேள்வி களுக்கு பதில் தாருங்கள் தமிழ் ஓவியாவே!
அதெப்படி அய்யா கன்னடக்காரனை கேட்டால் அவனுடைய ஆண்டும் விக்ருதியாம். தெலுங்கனை கேட்டால் அவனுடைய ஆண்டும் விக்ருதியாம். இவர்களிருவரும் தங்களுடைய புத்தாண்டை மார்ச் 16 ம் நாளன்றே கொண்டாடிவிட்டார்கள். இந்த பார்ப்பனர்கள் மட்டும் 'விக்ருதி'யை தமிழ் என்கிறார்கள்?
ஏம்பா பாப்பாத்தி செயலலிதாவுக்கு சமுக நீதி காத்த வீராங்கனைன்னு வீரமணி பட்டம் கொடுத்தானே அப்ப என்னைப்போல எத்தனை பெரியார் வழி நடப்போர் மனம் கொதித்தனர் தெரியுமா? இன்னைக்குத்தான் அவ பாப்பாத்தின்னு மயிலாடனுக்கும் வீரமணி தெரியாதா ? நான் பெரியார் தொண்டன் , அவரின் விசுவாசி, உன் போன்ற வீரமணி அடிவருடி இல்லை. உண்மையில் நான் இவ்வாறு ஒருவரையும் தரக்குறைவாக விமர்சிக்க பெரியார் சொல்லித்தரவில்லை. ஆனால் மனசாட்சி கொதிக்கிறது. உங்கள் போன்ற அடிவருடிகள் ஒழிக்கப்பட்டாலே உண்மை அரியணையில் ஏறிவிடும். என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு உன்னாலும் மயிலாடனாலும் வீரமணியாலும் பதில் தர முடியுமா? நீங்கள் அரசியல் வியாதிகள் ஆகி பலவருடங்கள் ஆகி விட்டது. உங்கள் கட்சி அரசியல் கட்சியாகாமல் இருப்பது மட்டுமே நிகழ்கால நிலைமை .
என்னுடைய கருத்துகளை உன்னாலும் உன் சார்ந்த கும்பலாலும் தாங்கிக்கொள்ள முடியாது அது உன் இணையதளத்தில் இடம்பெறாது என்பதும் எனக்கு தெரியும். அது உனக்குத்தான்.
சமூக நீதி வீராங்கனை பட்டம் குறித்து பல முறை விவாதித்து விட்டாகிவிட்டது. உன்னைப் போன்றோர் முட்டாள்தனமாக எதையாவது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விதண்டாவாதமாக விமர்சிப்பதற்கென்றே உள்ளனர் என்பதை நன்கறிந்துள்ளேன். உமது கதைக்குதவாத விமர்சனங்களை அலட்சியப்படுத்திறேன்.
என்ன தமிழ் ஓவியா,எனது பிளாக்கில் உள்ள தமிழ்மாதப்பெயர்கள் எப்படி வந்தன என்ற பதிவை சுட்டிக்காட்டி ஒருவர் உங்களிடம் பல வினா எழுப்பி உள்ளார்.பதிலை காணோமே.ஹி ஹி பதில் தெரியலியா?
உமது பிளாக்கில் எழுதியவைகளுக்கு ஏதாவது சான்று உண்டா?
எனது பிளாக்கில் எழுதியதற்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் அவர்களின் தெய்வத்தின் குரலில் சான்று உள்ளது.சான்று கிடக்கட்டும்.சமஸ்கிருதம் தெரிந்தவரிடம் காட்டுங்கள் அவர் நான் இட்டது சரியா?தவறா?என்று கூறுவார்.சரி அது கிடக்கட்டும் மீதி கேள்விக்கு பதில் கானோமே?
தமிழ் ஓவியாவே,
எவ்வளவு மறுமொழி தான் இடுவது.ஆயினும் பதில்தான் வந்தபாடில்லை.நான் என் பிளாக்கில் எழுதியதை விடுங்கள்.நீங்கள் சித்திரை,வைகாசி.ஆனி...போன்றவைகளை பார்ப்பனீய ஆண்டுப்பிறப்பு என்கிறீர்.எனில் தமிழ் மாதம் எது?தமிழ் வருடம் எது?அது எப்படி வந்தது?அதன் பெயர் காரணம் என்ன?
ஏனெனில் ஒரு விஷயம் தவறு என்று மக்களுக்கு கூறினால் எது சரி என்பதையும் தானே கூறவேண்டும்.அது தானே உங்களைப்போன்ற மக்களுக்கு உண்மையை ப்ரச்சாரம் செய்பவர்களுக்கு அழகு.இந்த பஸ் தாம்பரம் போகாது என்றால் எந்த பஸ் தாம்பரம் போகும் என்பதையும் கூறவேண்டும்.அது தானே சரியான வழிகாட்டி.ஆனால் நீங்கள் இது பார்ப்பன வருடங்கள் என்கிறீர்.சரி ஒத்துக்கொள்கிறேன்.பின் தமிழ் வருடம் எது என்ற விளக்கம் அதில் இல்லையே.அது ஏன்?பரவாயில்லை இப்போதாவது கூறுங்கள்.அட நாங்க தெரிஞ்சிபோம்ல சார்,
That is neither Thai nor Chitrai. Both are wrong. It is Thuiruvalluvar Aandu. That's it. No need to give any MORE names. Enough is enough. Use Thiruvallvar Aandu calculation.
//தமிழ் மாதம் எது?தமிழ் வருடம் எது?அது எப்படி வந்தது?அதன் பெயர் காரணம் என்ன?//
venkatesa sivam & sivaramamurthy sivam
இது குறித்து பல் தமிழறிஞர்கள் ஏற்கனவே பல முறை விளக்கம் அளித்து தெளிவு படுத்தி விட்டார்கள். நீங்கள் தான் அதையெல்லாம் அறியாமல் பிதற்றிக் கொண்டுள்ளீர்கள்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று நிணைக்குமாம். அது போல் இருக்கிறது உங்கள் செயல்.
உங்களின் இருளான மூளைக்கு வெளிச்சம் கிடைக்க கீழ் கண்ட சுட்டியைப் படியுங்கள். உண்மை புரியும்.
http://www.kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=441:2010-01-14-01-10-01&catid=43:2009-09-22-18-12-38&Itemid=54
தமிழ் புத்தாண்டு குறித்து மேலும் செய்திகளை அறிந்து கொள்ள கீழ்கண்ட வலைப்பூ வைப் படித்து அறிந்து கொள்ளவும்.
http://thirutamil.blogspot.com/2009/01/blog-post.html
//தமிழ் ஓவியாவே,
எவ்வளவு மறுமொழி தான் இடுவது//
ஒரு மறுமொழி இட்டால் போதுமானது. அந்த மறுமொழியையை நான் பார்வையிடுவதற்குள் அதே மறுமொழி பலமுறை.
ஏன் இந்த அவசரம்.
எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற உங்களின் செயலை மாற்றிக் கொள்ளுங்கள்.
தேடுங்கள் உண்மை புரியும்.
மக்கள் நலன் விரும்பி
மேற்கண்ட சுட்டியை சுட்டி நீங்களும் உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி
Post a Comment