Search This Blog

8.4.10

இன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா?

மூடர்களே! மூடர்களே!!

மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது. அம்மன் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடுநாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது. சிவன் விக்ரத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களைக் கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தின் தேரில் நெருப்பு பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றனர். மூடர்களே, இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்த தேர்வாகனங்களின் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்களா? உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி. வட்டி வாங்குகிறவன்கள் கோடீசுவரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்ராய் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா? இன்னும் ஒன்றுதான். அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள். . .

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில்: சரி, அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு).

மூடர்: கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள்தனமாகும்.

பதில்: அப்படியானால், உலகப் படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில்: சரி நல்ல காரியமாச்சு, சனியன் தொலைந்தது. ஆனால் காணாத இடத்தில் குலைக்காதே.

-------- சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது

(”குடிஅரசு”, கற்பனை உரையாடல், 04-01-1931)

8 comments:

ராஜன் said...

கடவுள் இல்லை . அது ஒரு உளவியல் நிகழ்வு . கடவுளின் மற்றும் ஒரு பெயர் நம்பிக்கை.

ராஜன் .

Sivamjothi said...

>>>>இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி. வட்டி வாங்குகிறவன்கள் கோடீசுவரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்ராய் போகிறான் என்பதைப் பார்த்தும்,

You dont how வட்டி வாங்குகிறவன் dies.How he suffers and his next generation suffers in this world.


Please think about following

1. How our blood circulates in our body? Are we doing it? Sciene doing it?

2.How we become refreshed after sleep?

3. How heart pumps blood?

4. How mind works? From where it originates? where it gone in sleep?


.....



Now we have to think who is doing all this? Where is he?

akilan said...

இல்லாத ஒன்று இருக்குமென நம்பும் கூட்டத்தில்
கடவுள் இல்லை என்று காட்டு கூச்சல் போடும் மானிடா
இங்கு தேவையில்லை உன்னைப்போன்றோரின் அறிவுரை
தேவை ஒரு மனிதன் நல்ல மனிதன், தேடுவோம் நீயும் நானும்...

Unknown said...

சக்தியே உலகின், பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரம். அந்த சக்தியை வெவ்வேறு மனிதர்கள் உருவமாகவோ, அருவமாகவோ, அடையாளமாகவோ, பயம்/நன்றி/நிம்மதி அடிப்படையில் வணங்குகின்றனர். கோவில் என்பது ஒத்த கருத்துள்ளோர் கூடி மன அமைதி பெரும் ஒரு சபை. அந்த அந்த பகுதி மக்களின் சமுதாய
விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை சடங்குகளின் ஆதாரங்கள். கால மாற்றம் ஆத்திகனை/நாத்திகனை தடம் மாறச் செய்யும். மஞ்சளின் மகிமையை நீர் அறிவீரோ?

தமிழ் ஓவியா said...

//கோவில் என்பது ஒத்த கருத்துள்ளோர் கூடி மன அமைதி பெரும் ஒரு சபை//

ஒருத்தன் மணி ஆட்டுவதும், ஒருத்தனை கோயிலுக்குள்ளேயே விட மறுப்பதும் மன அமைதி ஏற்படுத்தும் செயலா?
கோயிலினால் ஏற்படும் கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம் rammy

Unknown said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மை கதை

படத்தின் இயக்குனர் V.C.வடிவுடையான்

http://www.vettothi.com/

Unknown said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மைகதை

கரண், சரவணன், கஞ்சா கருப்பு, அஞ்சலி, காதல்தண்டபானி என ஒரு நடிகர் பட்டாளம் நடிக்க வைரமுத்து பாடல் எழுத வித்தியாசாகர் இசை அமைக்க படத்தொகுப்பு சுரேஷ் அ÷ஸ் ,நடனம் தினேஷ், ºñ¨¼ பயிற்சி கணல் கண்ணன்.

http://www.vettothi.com/

Unknown said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மை கதை

படத்தின் இயக்குனர் V.C.வடிவுடையான்.முதன் முதலாக கரண்-சரவணன் கூட்டணி

http://www.vettothi.com