Search This Blog

7.4.10

காலாவதியான மருந்துகளை விற்று பணம் குவித்தவர்களின் நெற்றியில் குங்குமம்!

நெற்றியில் குங்குமம்!

காலாவதியான மருந்துகளை விற்று பணம் குவித்த கும்பலைச் சேர்ந்தவர்களைக் கவனித்தீர்களா? அவர்களின் நெற்றிகளையெல்லாம் பாருங்கள், பட்டையும், குங்குமமும் அப்படியே ஜொலிக்கிறது. அப்படியே பக்திப் பழமாகக் காட்சியளிக்கின்றனர்.

அவர்கள் செய்த காரியமோ மக்களின் உயிர்களோடு விளையாடும் விபரீதச் செயல்!

உண்மையைச் சொல்ல-வேண்டுமென்றால் பக்தி செலுத்துபவர்கள் தனி ஒழுக்கத்தைப் பற்றியோ, பொது ஒழுக்கத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நம்பும் மதமும், கடவுளும், வழிபாடும், சாஸ்திர சம்பிரதாயங்களும் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பவை அல்லவே!

கடவுளைக் கும்பிட்டால் நினைத்தது நடக்கும் என்பதுதானே! அவர்கள் நினைத்தது என்ன என்பதுதான் முக்கியமானதாகும்.

நினைப்பது_ - குறுக்கு வழியிலே கோடீஸ்வர-னாவது எப்படி? கோடி சம்பாதித்தால் அவன் ஈஸ்வரனாகவும் ஆகி விடு-கிறானே! (கோடி+ஈஸ்-வரன்).

பக்தி என்பதே உழைப்பு இல்லாமல் தகுதிக்கு மேல் ஆசைப்படும் உணர்வுதானே!

தவறான வழியிலே பொருளைக் கொள்ளை யடித்தாலும் அந்தப் பாவங்களிலிருந்து சுலபமாக வெளியேற எளிமையான பிராயச்சித்தங்களையும் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்களே!

விஷ ஊசி போட்டுக் கொன்று கொள்ளை அடித்த பணத்தில் ஒரு சிறு தொகையை திருப்பதி உண்டியலில் போடவில்லையா?

நம் நாட்டுக் கோயில்களில் தலப் புராணங்கள் என்ன சொல்லுகின்றன? எவ்வளவுக்கெவ்வளவு மோசமான, கொடிய பாவங்களையும் போக்க எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த அளவு பரிகாரம் என்பதில்தானே கோயில்களுக்குள் போட்டா போட்டி?

அதாவது குறைந்த முதலீடு கொள்ளை லாபம்!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கே பாவப் பரிகாரம் ஒரு குளத்தில் குளிப்பதுதானே! இதற்கு மேல் எந்த எழவை இந்து மதத்திலிருந்து எடுத்துச் சொல்வது?

பக்தி வேடம் போடும் ஆண்களிடம் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று மக்கள் கலையரசி மனோரமா சொன்னதாக நினைவு!.

---------------------- மயிலாடன் அவர்கள் 4-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

கோவி.கண்ணன் said...

//பக்தி வேடம் போடும் ஆண்களிடம் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று மக்கள் கலையரசி மனோரமா சொன்னதாக நினைவு!.//

ஊருக்கு உபதேசம், அந்த அம்மாவே நித்தியின் நூல் வெளியீட்டு விழாவில் நித்தியை கடவுளாக புகழ்ந்தவர் தாம்

ttpian said...

ssaamiyarkalai seruppaal atikka naan thayaar!
neenkal thayaaraa?

தமிழ் ஓவியா said...

மனோரமா தனக்குத்தானே சொல்லி கொண்ட கற்ருக் கொண்ட புத்திமதியாக இருக்கலாம் கோவி.கண்ணன்

Unknown said...

ஊழலை அறிவியலாகவே செய்தவர் என்று ஒருவரைப் பற்றி சர்க்காரியா கமிஷன் சொன்னதே.அவர் என்ன நெற்றியில் குங்குமமா இட்டிருந்தார்.
பொது நிலத்தினை ஆக்ரமிப்பு செய்த குற்றசாட்டின் பெயரில் ஒருவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதே.அவர் நெற்றியில் குங்குமம் இருக்கிறதா.

நம்பி said...

//i criticize periyar said...

ஊழலை அறிவியலாகவே செய்தவர் என்று ஒருவரைப் பற்றி சர்க்காரியா கமிஷன் சொன்னதே.அவர் என்ன நெற்றியில் குங்குமமா இட்டிருந்தார்.
பொது நிலத்தினை ஆக்ரமிப்பு செய்த குற்றசாட்டின் பெயரில் ஒருவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதே.அவர் நெற்றியில் குங்குமம் இருக்கிறதா.
April 13, 2010 7:05 PM //

சர்க்காரியா கமிசன் வரைக்கும் போனீங்களே அப்படியே முந்தரா ஊழல் டி.டி கிருஷ்ணமாச்சாரி என்ன வைத்து இருந்தார் என்று வைத்திருக்கலாமே...நைசா ந்ம்மாளை சைடு கட்டுறீங்களே....