Search This Blog

19.6.15

ஜாதியின் பேரால் மாநாடுகள் கூட்டலாமா?- பெரியார்

வாழ்க்கை வசதி இல்லாததாலேயே தொழில் இழிவு வந்தது!


பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே! நண்பர் ஜீவரத்தினம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

இந்த மீன் பிடிப்போர்களின் மாநாட்டில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை அழைத்து, வாய்ப்பு அளித்த மாநாட்டினர்களுக்கும், வரவேற்புகள் அளித்த ஊராட்சி மன்றத்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மீனவர்களுக்கு உள்ள குறைபாடுகள் பற்றியும், அரசாங்கம் செய்துள்ள நன்மைகள் பற்றியும், தலைவர் அவர்களும் நண்பர் ஜீவரத்தினம் அவர்களும் நன்கு எடுத்து விளக்கினார்கள்.

உங்கள் குறைபாடுகள் எல்லாம் நீங்கவேண்டும் என்ற ஆசை எனக்கு மிகவும் இருக்கின்றது. இந்தக் குறைபாடுகளுக்கு எல்லாம் இன்றைய நமது காமாசரர் அரசாங்கம் சரிவரப் பரிகாரம் செய்யும் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உண்டு. நாம் அரசாங்கத்தினரிடத்தில் விசுவாசமாக (நம்பிக்கையுடன்) இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாநாடுகள் மூலமே தங்கள் குறைபாடுகளை அரசாங்கத்துக்கு எடுத்துக்காட்டலாம். இப்படிச் ஜாதியின் பேரால் மாநாடுகள் கூட்டலாமா என்பது ஒரு பெரிய பிரச்சினை. நண்பர் ஜீவரத்தினம் அவர்கள் காலையில் என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது இது ஜாதி பேரால் கூடும் மாநாடு அல்ல. மீன் பிடிக்கும் தொழிலைக் கொண்ட பல்வேறு வகுப்பாருக்கும் பொதுவானதுதான் என்றார். ஜாதியின் பேரால் ஒரு ஸ்தாபனம் (அமைப்பு) ஏற்படுவது கூடத் தப்பு அல்ல. ஜாதியானது நமது சமுதாயத்துக்கே கேடானது. குஷ்டரோகம் (தொழுநோய்) போன்றது. ஜாதிப் பேரால் உள்ள கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கின்ற நாம், ஜாதி மாநாடு கூட்டித்தானே அவைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியும்? இப்படிக் கூடாது என்பவர்கள் ஜாதியின் பேரால் பிழைப்பவர்களே ஆவார்கள்.

நம்முடைய கொடுமைகளை எல்லாம் - கொடுமைகளை அனுபவிக்கும் ஜாதியர்களாகிய நாம் மாநாடுகள் கூட்டித்தான் சிந்தித்து அரசாங்கத்துக்கு உணர்த்த முடியும். இப்படிப்பட்ட ஜாதி மாநாடு கூடாது என்பது எல்லாம் சுத்தப் புரட்டு. ஒவ்வொரு ஜாதியாரும் மாநாடு கூட்டித் தங்கள் குறைபாடுகளை எல்லாம் எடுத்து அரசாங்கத்துக்குச் சொல்ல வேண்டும்.

என்னைச் ஜாதி மாநாடுகளுக்குக் கூப்பிட்டால் போவேன். கடைசியில் பேசிவிட்டு, "ஜாதி ஒழிய வேண்டும். ஜாதியின் காரணமாக ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற கொடுமைகள் ஒழியவேண்டும்" என்று கூறுவேன்.

தொழிலின் பேராலும் மாநாடுகள் நடத்தத் தான் வேண்டும். இது மீனவர்கள் மாநாடு. இந்தத் தொழிலையே விட்டுவிட நீங்கள் தீர்மானம் போட வேண்டும். நீங்களாவது பரவாயில்லை. கக்கூஸ்காரன்கள் (மலம் எடுப்பவர்) எல்லாம் கூடி மாநாடு கூட்டினால், உலகம் உள்ள வரையில் தங்கள் இனமே கக்கூஸ் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றுப் பேச முடியுமா?

நீங்கள் வசதிகள் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் பிள்ளைகளை எல்லாம் உங்கள் தொழிலிலேயே பழக்காமல் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். வேறு தொழிலுக்கு எல்லாம் அனுப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட கஷ்டமான தொழிலைச் செய்கின்றவர்களுக்கு வீடு, வாசல், படிப்பு முதலிய வசதிகள் இல்லாததனால் அவர்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் அந்தஸ்து (மேம்பாடு) இல்லை.

"செய்யும் தொழில்கள் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நேராமோ" என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். கை நெசவுக்காரன் உற்பத்தி செய்யும் சாமானுக்கும் மரியாதை இல்லை. தலைவரைப் போன்றவர்களும், நம்மைப் போன்றவர்களும் "வாங்குங்கள்! வாங்குங்கள்!" என்று பொது மக்களிடத்தில் சிபாரிசு செய்யணும். அரசாங்கமும் கைத்தறித் துணி வாங்குபவர்களுக்கு ரிபேட் (கழிவு) கொடுக்கணும். அப்போதுதான், ஏதோ ஓர் அளவு வாங்கப்படுகின்றது. இந்தத் தொழில் செய்கின்றவர்கள் குடும்பத்தோடு பிள்ளைக் குட்டிகள், மனைவி, கிழடு, கிண்டுகள் அத்தனையும் சேர்ந்துக் காலம் நேரம் என்று பார்க்காமலும் வேலை செய்தாலும்கூட அதன்மூலம் வருகின்ற கூலி வயிற்றுக்கே போதுமானதாக இருக்கின்றது இல்லை. கஷ்டப்படுகின்றார்கள்.

இந்த நிலைகளை எல்லாம் நான் பார்த்துப் பார்த்துத்தான், அவர்கள் கூட்டத்தில் பேசும்போது "நீங்கள் இந்தத் தொழிலைக் கட்டிக்கொண்டு மாரடிப்பது போதும். உங்கள் சந்ததிகளையாவது இதற்கு அனுப்பாதீர்கள், வேறு தொழிலுக்கு அனுப்புங்கள்" என்று கூறுவது வழக்கம்.

அரசாங்கம் இவர்கள் நலனில் அக்கறை காட்டுவதாக இருந்தால் இந்தத் தொழிலை ஒழித்துவிட்டு இவர்களுக்கு எல்லாம் வேறு தொழில்கள் கொடுக்க வகை செய்ய வேண்டும். அல்லது இவர்கள் இன்ன இன்ன இரகங்கள் நெசவு செய்கின்றார்கள். இவைகளை மில்களில் (ஆலைகளில்) நெய்யக் கூடாது என்றாவது உத்தரவு போட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு நாணயம் மிக முக்கியம். தொழிலாளர்கள் முன்னுக்கு வரக் கூலி உயர்வு மட்டும் பயன் இல்லை. இலாபத்தில் பங்கு வரவேண்டும். காமராசர் ஆட்சியானது தொழிலாளர்களுக்கு ஆற்றிவரும் நன்மைகள் அளவற்றவை.

           ------------------------------------- 18.05.1961 அன்று கொரடாச்சேரியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு -"விடுதலை", 11.06.1961

31 comments:

தமிழ் ஓவியா said...

யோகா: வழிக்கு வந்தது மத்திய அரசு

வெள்ளி, 19 ஜூன் 2015 1


புதுடில்லி, ஜூன்.19- தாங்கள் நடத்தும் யோகா தின நிகழ்ச்சி யில் சூரிய நமஸ் காரத்தை சேர்ப்பது இல்லை என்ற முடி வில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. ஓம் மந் திரத்தை உச்சரிப்பது கட்டாயம் அல்ல என்றும் கூறியுள்ளது. சர்வதேச யோகா தினம், ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சிகளில், சூரிய நமஸ்காரமும், ஆசனம் செய்யும்போது, ஓம் என்ற மந்திர உச்சரிப்பும் இடம்பெறச் செய்ய திட்ட மிடப்பட்டது. இதற்கு சில சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், சூரிய நமஸ்காரம் செய்வது கட்டாயம் அல்ல என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறிவிட்டது. அத்துடன், டில்லியில், தாங்கள் நடத்தும் யோகா தின கொண்டாட்டத்தில், சூரிய நமஸ்காரம் இடம்பெறாது என்றும், ஓம் மந்திரத்தை உச்சரிப்பது கட்டாயம் அல்ல என்றும் தெரிவித்தது. இதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்து அமைப்புகளின் எதிர்ப்பு பற்றி, நேற்று டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ராஜாங்க அமைச்சர் சிறீபாத் நாயக்கிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், சூரிய நமஸ் காரம் இடம்பெறாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார்.

அவர் கூறியதாவது:- மத்திய அரசின் யோகா தின கொண்டாட்டத்தில், சூரிய நமஸ்காரம் இடம்பெறாது. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதும் கட்டாயம் அல்ல. அவரவருக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரித்துக் கொள்ளலாம்.

சில அரசு சார்பற்ற அமைப்புகள், யோகா தின கொண்டாட்டத்தை தனியாக நடத்து கின்றன. ஆயிரக்கணக்கான ஆசனங்கள் இருப்பதால், அவர்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு எந்த ஆசனத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். தங்கள் மத நம்பிக்கைப்படி, எந்த பெயரையும் உச்சரித்துக் கொள்ளலாம். இவ்வாறு சிறீபாத் நாயக் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103541.html#ixzz3dW4yTsLg

தமிழ் ஓவியா said...

யோகாவிலும் புதிய வருணாசிரம தர்மமா?

யோகா நிகழ்ச்சிக்கு அழைப்பு உயரதிகாரிகளுக்கு மட்டும் தானாம்!

கடைநிலை ஊழியர்களுக்குக் கிடையாதாம்
தெருக் கூட்ட நாங்கள், யோகா செய்ய அதிகாரிகளா

போர்க் கொடி தூக்கினர் கடைநிலை ஊழியர்கள்



சண்டிகர் ஜூன் 19 மத்திய அரசின் சார்பில் நடைபெறும் யோகா தின நிகழ்வில் கலந்துகொள்ள உயரதிகாரிகளுக்கு மட் டும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. மோடி அரசின் இந்த செயல்பாடு மத்திய அரசு அலுவலர் களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

பன்னாட்டு யோகா தினம் வரும் 21-ஆம் தேதி நாடெங்கிலும் கொண் டாடப்படும் என மோடி அரசு அறிவித்து அதற் கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்துத்துவாவின் ஓர் அடையாளமாக மாற்றிய யோகாவை வலுக்கட்டாய மாக அனைத்து மதத்த வரிடமும் திணிக்கும் முடிவை எடுத்த மத்திய அரசுக்கு நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பி யுள்ளன. இந்த எதிர்ப்பு களை எல்லாம் கண்டு கொள்ளாமல் நாடுமுழு வதும் யோகாவை பிரம் மாண்டமாக கொண் டாட ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் அதன் சார்பாக, யோகா பயிற்சி குறித்து ஒரு சுற் றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. அதில், சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நன்கு பயிற்சி பெற்றவர்களால் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட இருப்பதாக வும், இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறும்படி உயர்பதவி களில் இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. இத னால், உயர் அதிகாரி களைப் போல் தங்களுக் கும் அழைப்பு விடுக்காதது ஏன்? என மத்திய அரசு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே போல் உயரதிகாரிகளில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளுக் கும் அழைப்பிதழ் அனுப் பப்படவில்லை. இந்த விவ காரம் பெருத்த சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு அலுவலர்கள் கூறும் போது, உயரதிகாரிகளுக்கு மட்டும் விடுக்கப்பட் டுள்ள அழைப்பின் மூலம் அரசு எங்களைப் போன்ற அலுவலகப் பணியாளர் கள் உயரதிகாரிகள் என வேறுபாடு காட்டுவதாகத் தோன்றுகிறது. நாடாளு மன்ற இரு அவைகளின் செயலகங்கள் உட்பட இந்தியாவின் அனைத்து மத்திய அரசு அலுவல கங்களிலும் அதன் உய ரதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள் ளதாக தகவல் கிடைத் துள்ளது.

தூய்மை இந்தியாவிற்கு மட்டும் கடைநிலை ஊழியர்களா?

கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் தூய்மை இந்தியா திட்டத்திற்கு கடைநிலை ஊழியர் களுக்கு என்று தனித்தனி சுற்றறிக்கைவிடப்பட்டது. அதில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அப்படி கலந்து கொள்ளாத பட்சத்தில் அன்றைய தினம், அவர் களின் அலுவலகத் தின மாக சேர்த்துக் கொள் ளப்படாது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டி ருந்தது. அப்போதும் உய ரதிகாரிகளுக்குப் பொது வாக அறிவிப்புப் பல கையில் மட்டும் ஒட்டப் பட்டு இருந்தது; அதுவும் எந்தவொரு அதிகாரியின் பெயரும் குறிப்பிடாமல் பொதுவாக அனைவரும் கலந்துகொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந் தது. அப்போது இந்த விவகாரம் குறித்து யாரும் குரலெழுப்பாத நிலையில், தற்போது யோகாவில் இந்த பேதம் தொடர் கிறது. நாளை அரசு விழாக்களில் நடைபெறும் விருந்தின் போது கூட கடைநிலை ஊழியர்கள் தட்டுகளைத் துடைக்க வேண்டும், பாத்திரங் களைக் கழுவவேண்டும் என்று அறிவிப்பு வெளி யாகும் நிலை வரலாம்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103532.html#ixzz3dW59ok7C

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சூழ்ச்சி

சிவனுக்கும்- பார்வ திக்கும் ஆடல் போட்டி நடைபெற்றது. சிவனால் வெல்ல முடியாத நிலை யில் காலைத் தூக்கிக் காட்டினான்; பெண் என்பதால் பார்வதியால் காலைத் தூக்கிக் காட்ட முடியவில்லை; அதனால்  சிவனிடம் பார்வதி தோற் றதாகச் சொல்லு கிறார்களே.

இதில் சிவன் திறமை யால் வென்றானா?  அரு வருப்பான சூழ்ச்சியால் வென்றானா? சூழ்ச்சியும் ஒரு திறமைதானே என்று ஆன்மிகக் குஞ்சுகள் சொல்லுமோ!

தமிழ் ஓவியா said...

கான்வென்ட் பள்ளிகளைத்  தடை செய்ய வேண்டுமாம்!

கோவாவில் இந்து மத மாநாட்டில் வெறிக் கூச்சல்



பனாஜி, ஜுன்19_ பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் இந்து அமைப் புகள் ஒன்று கூடி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளன. அம்மாநாட்டில் கான் வென்ட் பள்ளிகள் மற் றும் மாட்டிறைச்சிக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. ராம்நாத்தி கிராமத் தில் வலது சாரி இந்து அமைப்பான இந்து ஜன கிருதி சமிதிசார்பில் அனைத்திந்திய இந்துமத மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியா முழுவதும் 22 மாநிலங்களி லிருந்தும், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந் தும் பலர் பங்கேற்றனர். இதில் 210 இந்து அமைப் புகள்  பங்கேற்றன.

மாநாட்டில், இந்து மாணவர்கள் பழைமை யான இந்துக் கலாச்சா ரத்தைப் பின்பற்ற அனு மதிக்காமல் கான்வென்ட் பள்ளிகள் தடையாக இருக் கின்றன. கான்வென்ட் பள்ளிகளில் படித்துவரும் இந்து மாணவர்கள் இந்து பழக்கவழக்கங்களாக உள்ள மருதாணி வைத்துக் கொள்ளவும், மலர்களைச் சூடிக்கொள்ளவும், துப் பட்டா அணிவதற்கும், குங்குமம் அல்லது பொட்டு வைத்துக்கொள்வதற்கும் கான்வென்ட் பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது நிறுத்தப்பட வேண் டும். கான்வென்ட் பள்ளி களில் ஒட்டுமொத்தத்தில் பாகுபாடுகள் இருக்கின் றன என்று குறிப்பிட்டுள் ளார்கள்.

இந்து ஜனகிருதி சமிதி தேசிய ஒருங்கிணைப்பா ளர்  சாருதத் பிங்க்ளே கூறு கையில், மாநாட்டின் மூலமாக கோவா முதல் வர் லட்சுமிகாந்த் பர் சேகர் ஆளும் கோவா மாநிலத்தில் 70 விழுக் காடு இந்து மாணவர்கள் கான்வென்ட் பள்ளிகளில் படித்துவருகிறார்கள். ஆகவே, அந்த மாநிலத் தில் கான்வென்ட் பள்ளி களைத் தடை செய்யுமாறு அவரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். கத்தோலிக்க கிறித்த வர்கள் அரசு செயல்பாடு களில் தலையிடமுடியும் என்றால், இந்து அமைப்பு களுக்கும் அதே உரிமை உண்டு என்று அதற்கான கோரிக்கையை எழுப் புவோம் என்றார்.

கோவாவில் கத்தோ லிக்கக் கிறித்தவ சட்ட மன்ற உறுப்பினர்களிடம் கோவாவின் கிறித்தவ சர்ச் அமைப்பாகிய ஆர்ச் டையாசன் கல்வி வாரியம் என்று  வைத்துக் கொண்டு பல்வேறு கோரிக்கைளை எழுப்பிவருகிறார்கள் என்பதைக் குறித்தே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.

மாநாட்டில்,  நாடு முழுவதும் மாட்டிறைச் சிக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், கான் வென்ட் பள்ளிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண் டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளனவாம்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலையா?
மோடியைத்தான் அத்வானி விமர்சித்து இருக்கிறார் - எதிர்க்கட்சிகள் கருத்து

புதுடில்லி, ஜூன் 19_ இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறி இருப்பதுவும், அரசியல் தலைமையிடம் நம்பிக்கை இல்லை என கூறி இருப்பதுவும் பரபரப்பான விவாதத்துக்கு வழி வகுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி உள்ளனர். அது வருமாறு:-

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் கருத்து தெரிவிக்கையில், நீதிபதி வெளியே வந்திருக்கிறார். அத்வானி பேசுகிற தலை வர். அவர் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்லி விட்டார். அவர் களது அரசு இருக்கிறது. அவர்களது பிரதமர் இருக் கிறார். இந்த நிலையில் அவர் யாரைப்பற்றி சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. இதை அவர் அறிவார். அவர் ராஜதந்திரி. பிரதமர் பெயரை குறிப்பிட விரும்ப வில்லை. ஆனால் அவரது பேட்டியை வாசிக்கிற அனைவரும் அவர் மோடியைப் பற்றித்தான் கூறி உள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்

நிதிஷ்குமார்

பீகார் முதல் அமைச் சருமான நிதிஷ்குமார், அத்வானி மிக மூத்த தலைவர். அவரது கருத் துக்கள் தீவிர பரிசீல னைக்கு உரியவை. தினமும் இப்போது நெருக்கடி நிலை போன்ற சூழலைத் தான் எதிர் கொண்டிருக் கிறோம் என கருத்து தெரிவித்தார்.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், அத்வானி பேட்டி குறித்து கருத்து கூறும்போது, அத்வானி ஒரு கவலையை வெளியிட் டிருக்கிறார் என்றால், கட்சியின் மூத்த உறுப் பினர் கூறி இருக்கிறார் என்ற வகையில் அதை அரசாங்கம்தான் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். நாட் டில் இப்போது நடந்து கொண்டிருக்கிற ஆட்சி முறை ஜனநாயக ரீதியி லானதாக இல்லை. சர் வாதிகார மனப்பாங்கு பிர திபலிக்கிறது என குறிப் பிட்டார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நெருக்கடி நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது என அத்வானி கூறி இருப்பது சரிதான். டில்லிதான் அவர்களது முதல் பரிசோதனையோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்படி எதிர்க்கட்சி தலைவர்கள், அத்வானி பேட்டியில் விமர்சித்திருப் பது பிரதமர் மோடியைத் தான் என குறிப்பிடுகிற போது, அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதாவும் மறுத்துள்ளன

ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஜி. வைத்யா, இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், அத்வானி, பாரதீய ஜனதாவின் மகா தர்ஷக் மண்டலில் (வழி காட்டும் குழு) உறுப்பினர். அவர் வயதாலும், அனுப வத்தாலும் மூத்த தலைவர். அவர் மோடியிடம் பேச முடியும். இந்த பேட்டியின் வாயிலாக மோடிக்கு செய்தி அனுப்பும் நோக்கம் அவருக்கு இருக்கும் என நான் கருதவில்லை என கூறினார்.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், அத்வானி தனிப்பட்ட நபர்களைவிட அமைப்புகளைத்தான் குறிப்பிடுவதாக நினைக் கிறேன். அத்வானியின் கருத்தை மதிக்கிறேன். ஆனால் நாட்டில் நெருக் கடி நிலை அமல்படுத் தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தனிப்பட்ட முறையில் நான் கருத வில்லை. அந்தக் காலம் முடிந்துவிட்டது. இந்திய ஜனநாயகம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது என குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

மறைப்பது ஏன்?

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம் 2010 என்பதில் மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்படுவது குறித்து தலையங்கம் தீட்டியுள்ள இன்றைய தினமணியில், இத்தகைய நன்கொடைகளை அதிகம் பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவாரங்கள் குறித்து மூச்சு விடாதது  - ஏன்?

முதல் தலைமுறை!

அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஈ., பி.டெக் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1.56 லட்சம் பேர்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 80 ஆயிரம்.

தெரியுமா?

குழந்தை நாள் ஒன்றுக்கு 200 தடவை சிரிக்கிறது. வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 15 தடவை மட்டுமே சிரிக்கின்றனராம்.

ரூ.ஒரு கோடியே 40 லட்சம்

தமிழ்நாட்டில் நிர்வாக ஒதுக்கீட்டால் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்க ஒரு மாணவனுக்கு ஆகும் செலவு ரூ.ஒரு கோடியே 40 லட்சமாகும்.

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படித்து உண்மையை உணருவோம்

ஈழமும் தமிழரும்!



- டாக்டர் சோம.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டு  அமைப்பு இயக்குநர்


ஈழமும் தமிழ்நாடும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள கால கட்டம் இது. இதில் ஆழ்ந்து சிந்தித்துச் செயல் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். சில அடிப்படை உண்மைகளை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்கள் தந்தை செல்வா காலத்திலிருந்தே தமிழ் ஈழ ஆதரவாளர்கள்.திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டு மின்றிப் பலரும் ஆதரவாளராக இருந்துள்ளனர். சில காங்கிரசுக் காரர்களும் இதில் அடக்கம். இவர்கள் யாரும் எந்த தன்னலமும் இன்றி ஆதரவு தந்தவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ராஜீவ் காந்தி என்ற குழப்பமும், அவரது முடிவும் தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் ஈழத்திற்கு இருந்த ஆதரவையும் மிகவும் குறைத்து விட்டது. அதைப் பயன்படுத்தி கொண்ட ஜெயலலிதா அரசு புலிகளுக்கு எதிராக நடந்து கொண்டது.

செப்டம்பர் 11-ம், அதனால் பயங்கரவாதி என்ற முத்திரை குத்தப் பட்டு உலக அரங்கிலே ஈழப்போராட் டம் பெரும் பின்னடைவிற்குச் சென்று உலகமே எதிர்த்து, சிங்களப் பேரின வாதம் அந்த வார்த்தையை நன்கு பயன் படுத்தி உலக நாடுகள் இந்தியா- பாகிஸ்தான், இசுரேல்-ஈரான், அமெரிக்கா-சீனா என்று அனைத்து நாடுகளின் உதவியுடன் போரை முடிவிற்குக் கொண்டு வந்தது.

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி களும் பல போராட்டங்கள் நடத்தியும், பல முறை புது டில்லிக்குச் சென்று பேசியும் பயனில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக யார் இருந்திருந்தாலும் இந்த முடிவு மாறியிருக்காது என்பது தான் அறிவு சார்ந்த உண்மை.  தனிப்பெரும் ஆதரவுடன் திகழ்ந்த எம்.ஜி.ஆர் ராஜீ விடம் ஒன்றும் செய்ய முடியவில்லை என் பதை நினைவு கூர்வது விளக்கமளிக்கும்

தமிழ் ஓவியா said...

எதிரி ராஜபக்சேவும், புதுடில்லியும் என்பதை மறந்து விட்டுக் கலைஞ ருடன் சேர்ந்து நிற்காமலும், கலை ஞரை எதிரியாகவும் ,பி ஜே பி அரசு வந்துவிடும் பின்னர் எல்லாம் சரியாகி விடும் என்ற கணக்கும் தவறானது.. கலைஞர் பதவி விலகியிருந்தாலும் ஒன்றும் நடந்திருக்காது என்பதும், அமெரிக்கா போன்ற நாடுகள் போர் நிறுத்த முயன்றும் இந்தியா சிங்கள இனவாத அரசிற்கு முழு ஆதரவைக் கடைசி வரை தந்து உதவியது என்பதும் முக்கியம். எந்த விலை கொடுத்தும் புலிகளை அழித்துவிட வேண் டும் என்ற இந்திய அரசின் முடிவை யாராலும் மாற்ற முடியவில்லை.இதை ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக வேலை செய்வதில் தான் நமது அறிவும், செயலும் ஈடு பட வேண்டும்.

மிகவும் அரும்பாடுபட்டு உலக அரங்கில் முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கானடா, அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள்  இவற்றில் தமிழர்களின் கதையை எடுத்துச் சொல்லி, சிங்களத்தின் பொய்களை விளக்கி, ராஜபக்சேவின் அடாவடி நடவடிக்கைகளாலும், முள்ளி வாய்க்காலுடன் மூடப்பட்டிருக்க வேண்டிய கதையை கேலம் மக்ரே வெளிக் கொணர்ந்ததாலும்  இன்று நாம் அய்க்கிய நாட்டு உதவியுடன், அம்மை யார் நவிப்பிள்ளை சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் இன்றுள்ள நிலையில் இருக்கின்றோம்.

இப்பொழுது நமக்கு மிகப் பெரிய எதிரி நாமே தான் !

நமக்கு வழி நடத்திச் செல்ல ஒரு பாதை தேவை.  அந்தப் பாதையைப் போட வேண்டியது நம் அனைவரின் ஒட்டு மொத்தக் கடமை.

உலக அரங்கு, புலம்பெயர் தமிழர், தமிழ்நாடு, ஈழம் இவற்றில் நாம் செய்ய வேண்டிய பணி மிகவும் தெளிவானது.

சிங்கள இனவாதம் தமிழர்களுக்கு உலக அழுத்தம் இன்றி எதையும் செய்யாது, உலக அழுத்தம் இருந்தாலும் ஏமாற்றத்தான் பார்க்கும் என்பதை உலகிற்குப் புரிய வைக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தாங்கள் எதைத் திறம் படச் செய்ய முடியும் என்பதைத் தீர்மானித்து அதற்கு மற்ற அமைப்புக்கள் ,அனைவரின் உதவியையும் நாடிச் செய்ய வேண்டும். மற்ற அமைப்புக்களிடம் உள்ள குறைகளைத்  தனியே உரியோர் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பொதுவில் குறை சொல்லுவது நம்மைப் பிரிக்கத்தான் உதவும். இன்று நமக்கு வேண்டியது நண்பர்கள் தாம். இருக்கும் நண்பர்களையும் எதிரி களாக்கிக் கொள்வது தலையில் மண்ணை அள்ளிப் போடுவதற்குச் சமம். மற்ற புலம் பெயர் தமிழர்களையும், தமிழ்நாட்டில் உள்ள எந்தத் தமிழரையும் குறை கூறிப் பயனில்லை.

அவரவர் அவர்களால் முடிந்ததைச் செய்தார்கள் என்று நினைத்து மறப்போம், மன்னிப்போம் என்று நமது முன்னேற்றத்தைத்  தொடர அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.நமது கொள்கையை அட மானம் வைக்காமல் அனைவரிடமும் உதவி பெறுவதே "அறிவாயுதம்" ஆகும். யாரை வேண்டுமானலும் ஆதரியுங்கள் ஆனால் யாரையும் எதிர்த்துப் பேசி இருக்கும் நண்பர்களை இழக்காதீர்கள். அதனால் யாருக்கு என்ன பயன் என்று சிந்திக்க வேண்டும். பழைய கதைகள் பாடமாக இருக்க வேண்டுமே தவிர பிரிவை உண்டாக் கும் கருவிகளாக ஒரு போதும் ஆகி விடக் கூடாது.

இன்று ஈழத்திலே கூட்டமைப்பும், வடக்கின் முதல்வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் . அவர்களுக்கு நம்மால் முடிந்த அத்துனை உதவிகளையும் செய்து அவர்களை முன்னிறுத்திச் செயல் பட வேண்டும். அவர்களிடம் நாம் குறை கண்டால் அவற்றை உரியவர்கள் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே  தவிர இணைய தளம் செலவில்லாதது என்பதால் அதைக் கழிவறையாகப் பயன்படுத்தக்கூடாது.

செயல் தான் தற்போது முக்கியம். முக்கிய நடவடிக்கைகள் சிங்களத் தேர்தல் முடிவிற்குப் பின்தான். அதுவரை நமது செயல்கள் நம்மைத் தயார் செய்து கொள்ளவும், உலக அளவில் அய்க்கிய நாட்டு மன்றத்தி லேயும், மற்ற நாடுகளின் ஆதரவைத் தேடுவதிலேயும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் நமது ஆக்கபூர்வ பங்களிப்பைக் கொடுத்து முன்னேறு வோம்.

நம்மைப் பிரிப்பதை ஒதுக்குவோம், இணைப்பதைச் சேர்த்துச் செயல் படுவோம்.

எண்ணங்கள் ஆழ்மனதிலும், செயல்பாடுகள் அனைவரிடமும் புன்ன கையுடனும் தொடரட்டும்.

தமிழ் ஓவியா said...

கண்ணாடியும் - நண்பர்களும்

வெள்ளி, 19 ஜூன் 2015



காலத்தை வென்ற மேல்நாட்டுக் கலைவாணர் (நகைச் சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணனைப் போல்) சார்லி சாப்ளின் அவர்கள் வெறும் சிரிப்புமூட்டும் கலைஞர் மட்டுமல்ல; சிரிக்கவும் வைத்து உலக மக்களைச் சிந்திக்கவும் வைத்த மிகப் பெரிய மேதை.

அவரது சிந்தனையின் பலனாக உருவாக்கப்பட்ட திரைப்படங் களையே கண்டு மிரண்ட அரசுகளும், அதன் காரணமாக நாட்டையே விட்டு வெளியேறிட வேண்டிய நிர்ப்பந்த மும்கூட அவருக்கு ஏற்பட்டதுண்டு!

மக்களையெல்லாம் இப்படி மகிழ்ச்சி அருவியில் குளிக்க வைத்து மகிழ்வித்த அந்த மாமேதையின் வாழ்க்கைக்குள்ளோ எத்தனையோ சோகத் தாக்குதல்கள்; அவற்றை மறைத்தோ, மறந்தோ அவர் மக் களுக்கு தனது நகைச்சுவை (துணுக் குகள்) மூலம் அறிவு கொடுக்கத் தவறவில்லை!

அவர் ஒருமுறை சொன்ன கருத்து உலகம் முழுவதும் பரவிய கருத்து; ஊடகங்களும்கூட இதனை அவ்வப் போது மேற்கோளாகக் காட்டிடத் தவறவில்லை!

முகம் பார்க்கும் கண்ணாடி (Mirror) தான் என் சிறந்த நண்பர்; ஏனெனில் நான் அழும்போது, அது ஒரு போதும் சிரித்ததில்லை - சார்லி சாப்ளின்
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!

நம்முடைய நண்பர்களில் பலர் நமக்கு முகமன் கூறியே நம்மிடம் சலுகையோ, தயவோ, பெற விரும்புவர்கள்.

நகுதல் பொருட்டல்ல நட்பு என் பதைக் கடைப்பிடித் தொழுகுவதை அறியாதவர்கள்.

காரியம் ஆவதற்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடி என்ற அனுபவ மொழிக்கேற்ப, பயன் கருதி நட்புப் பாராட்டுபவர்களே உலகில் ஏராளம்!

ஒப்பனை இல்லாத நட்பே உயர் நட்பு!

இடுக்கண் வருங்கால் நகுக என்ப தற்கு நாங்கள் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த 60 ஆண்டு களுக்கு முன்பு - இக்குறளைப் பல நண்பர்கள் எப்படிப் பொருள் கொண்டு கூறினார்கள் தெரியுமா?

துன்பம்; இன்னல், சோதனை ஒருவருக்கு வரும்போது அதுகண்டு உதவிடவோ, ஆதரவுக்கரம் நீட்டவோ கூடச்செய்யாது, சிரித்து மகிழ்வதில் - அதாவது கேலிச் சிரிப்பு நகுதலை வாடிக்கையாகக் கொண்டு ஒழுகுக என்பது இன்றைய நடைமுறை என்று மாணவத் தோழர்கள் கூறுவதுண்டு.

நம்மில் பலரும் - அது குடும்பமா கவோ, நிறுவனமாகவோ, இயக்கமாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும், பரவாயில்லை. அவற்றுடன் தொடர்புடைய நமது நண்பர்கள் கூறும் மாறுபட்ட கருத்து எதையும் கேட்கக் கூட நம்மில் பலர் தயாராக இருப்பதில்லை.

எப்போதும் புகழுரை என்ற குளிர் பதனத்தையே அனுபவித்துக் கொண் டுள்ள நாம், கொஞ்சம் வித்தியாசமான - அது நம்முடைய உண்மை நலனில் அக்கறை கொண்ட கருத்துரையாக இருப்பினும்கூட,  வெப்பம் போல் அதைக் கேட்கக் கூடத் (ஏற்றுக் கொள்வது பிறகு அடுத்த நிலை - அல்லது இறுதி நிலை) தயாராக இருப்பதில்லை.

எந்தக் கருத்து, அறிவுரையாயினும் நண்பர்கள் - உள்நோக்கம் ஏதுவும் இன்றி - கூற முன் வரும்போது அதை வர வேற்று, பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டு, கொள்ளுவதைக் கொள்ளலாம்;  தள்ளுவதைத்  தள்ளலாம். திருத்திக் கொள்ள வேண்டியவற்றைத் திருத்தி நாம் மேலும் வளரலாம் - வாழலாம்.

அதற்குப் பலரும் தயாராவ தில்லை என்பது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்!

மழையோ, புயலோ வரக்கூடும் என்று வானிலை நிலவரம் கூறும் பொறியாளர் - விஞ்ஞானி மக்கள் பகைவரா?

ஆட்சிக்கு எதிரான சதிகாரரா? இல்லையே, மக்களை எச்சரிக்கைப் படுத்திடும் மிக அரிய பணியைச் செய்யும் நண்பர் அல்லவா?

உடைந்த எலும்பை படமாகக் காட்டும்  எக்ஸ்ரே கருவியை - நாம் விரோதி என்றா கருதுகிறோம்?

அதன் மூலம் தானே நாம் நம் உடல் நலத்தை சீரமைத்துக் கொள் ளும் வாய்ப்பை மருத்துவ உதவி மூலம் பெறுகிறோம் - இல்லையா?

எனவே, உண்மை நட்பை - அவர்கள் கசப்பு மருந்தை தந்தாலும் அதை உண்டு நலம் பெறுவோம். ஒப்பனை (முகமன் கூறும்) நண் பர்களை  அடையாளம் காண்போம். சில கண்ணாடிகள் மாற்றிக் காட்டி னால் அதை எறிந்துவிடுங்கள்.

சில நண்பர்கள், கண்ணாடி கீழே விழுந்தால் பட்டென்று உடை வதுபோல் உடைந்து, ஒதுங்கி விடு வதும் உண்டு; அதையும் மறுபுறம் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்.

அக நக நட்பே; தலையாயது என்று உறுதியுடன்  கணியுங்கள்.

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

இளைஞரணி, மாணவரணி தோழர்களுக்கு...

வெள்ளி, 19 ஜூன் 2015

தஞ்சைப் பொதுக் குழுத் தீர்மானங்களில் கழகம் தொடர்பான தீர்மானங்களைக் கழகத் தோழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(அ) குறிப்பாக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறையை வலிமைப்படுத்த வேண்டியது அவசியமாகும். மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விடுதிகளில் கழகக்கொள்கை தொடர்பான துண்டறிக்கைகளை இருபால் மாணவர்கள் மத்தியில் பரப்பிட வேண்டும் இயக்க ஏடுகள், இதழ்கள் அவர்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும்.

(ஆ) மாணவர், இளைஞர் பிரச்சினைகளை மய்யப் படுத்தி ஆங்காங்கே கருத்தரங்குகளை நடத்திட வேண் டும். தேவைப்பட்டால் தலைமைக் கழகத்தின் அனுமதி யுடன் தேவையான அறப் போராட்டங்களையும் நடத்தலாம்.

(இ) இணையதளங்களில் மூழ்கிக்கிடக்கும் இளைஞர் களை வாசிப்புப் பக்கம், விளையாட்டுப் பக்கம் திருப்ப வேண்டும்.

(ஈ) திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சி முகாம்களுக்கு புதிய புதிய மாணவர்களை, இளைஞர் களைக் கொண்டு வர போதிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

(உ) பல்வேறு போதைகளுக்கு இளைஞர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்நிலை அவர்களின் நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் இருளில் கொண்டு போய்த் தள்ளி விடும்; இது அவர்களைப் பொறுத்தது மட்டுமல்ல; எதிர்கால சமுதாயத்தைப் பொறுத்ததுமாகும்.

இளைஞர்கள், மருந்துப் போதை, மதுப் போதை, கிரிக்கெட் போதை போன்ற தொற்றுநோய்களுக்கு எளிதாகப் பலியாகி விடுகிறார்கள். நுகர்வுக் கலாச்சாரம் ஊடகங்களால் ஊதி ஊதிப் பெருக்கிப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவற்றின் மயக்க வலைகளில் எளிதாக இளைஞர்கள் வீழ்ந்து விடும் அபாயம்பற்றி மற்றவர்களை விட திராவிடர் கழகம் அதிக கவலை கொள்கிறது.

இதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களே பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு பக்கத்தில் கல்வி, வேலை வாய்ப்புக்காக திராவிடர் கழகம் குரல் கொடுத்து வருகிறது, பாடுபட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை இன்னொரு பக்கத்தில் இத்தகைய போதைகள் விழுங்கிச் சாப்பிட்டு விடுகின்றன.

சமுதாயப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தும், திராவிடர் கழகம் இந்நிலை குறித்துக் கவலையுடன் சிந்திக்கிறது. யானையை யானையைக் கொண்டு பிடித்தல் போல இளைஞர்களை, மாணவர்களை நமது இளைஞர்கள் அமைப்பு, மாணவர்கள் அமைப்பின் மூலம்தான் மாற்றத்திற்குக் கொண்டு வர முடியும்.

தமிழ் ஓவியா said...

எனவே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே! உங்களுக்குள்ள கடமையும், பணியும் மிகவும் முக்கிய மானது; திட்டமிடுங்கள், செயல்படுங்கள் நம்பிக்கையான எதிர் காலத்தை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள் என்று தஞ்சை திராவிடர் கழகப் பொதுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்கிட வேண்டும் என்பதற்காக வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி யுள்ளது.

இந்த உத்தரவாதம் அளிக்கப்படவில்லையானால் இளைஞர்கள் மத்தியில் விரக்தியும், அவ நம்பிக்கையும், வன்முறைக் காதலர்களாக மாறும் அபாயமும் உருவாகும் என்பதை தொலைநோக்கோடு மத்திய மாநில, அரசுகள் உணர வேண்டும்.

முன்பெல்லாம் கல்விக் கூடங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், மாலை நேரங்களில் விளை யாட்டு என்பது கட்டாயமாகவே இருந்தது. என்.சி.சி. ஏ.சி.சி. போன்றவைகளும் இடம் பெற்றிருந்தன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் விளையாட்டு மைதானங்களே இல்லாத கல்விக் கூடங்கள் உண்டு. விளையாட்டுப் பயிற்சி, மாணவர்களின் உடலை மட்டுமல்ல; உள்ளத்தையும், ஒழுங்குபடுத்தக் கூடியதாகும்.

அப்படியே விளையாட்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும்கூட கிராமப்புற வயல்வெளிகளில் கூட கிரிக்கெட் விளையாடும் பரிதாபத்தையும் பார்க்க முடிகிறது. தமிழ் மண்ணுக்கே உரித்தான சடுகுடுப் போட்டிகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

உண்மையைச் சொல்லப் போனால் ஒலிம்பிக், ஆசியப் போட்டிகளில் இந்தச் சடுகுடுதான் இந்தியாவுக்குத் தங்கத்தைப் பெற்றுத் தந்து, இந்தியாவின் மானத்தை ஓரளவுக்குக் காப்பாற்றி வருகிறது என்பதை மறக்கக் கூடாது. ஒரு காலத்தில் சி.பா. ஆதித்தனார் கையில் எடுத்த தமிழர்களின் இந்த வீர விளையாட்டினை, பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இப்பொழுது கையில் எடுத்துக் கொண்டு ஆங்காங்கே சடுகுடுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இது மேலும் கிராமப் பகுதிகள் வரை பரவலாக் கப்பட வேண்டும். முதற்கட்டமாக கிராமப்புற இளை ஞர்கள் கிரிக்கெட் மயக்கத்திலிருந்து மீட்கப்பட்டாக வேண்டும்.

தேர்வு என்று வரும் பொழுது காகிதத்தில் எழுதும் பதில்களுக்கான மதிப்பெண்கள் மட்டுமல்லாமல், விளை யாட்டுத் துறையிலும் மாணவர்களின் பங்களிப்புக்கான மதிப்பெண்கள் தருவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

திராவிடர் கழக மாணவர்கள், இளைஞர்களுக்குப் பெரியார் சமூகக் காப்பணிக்கான பயிற்சித் திட்டம் உடனடி யாக மேற்கொள்ளப்பட உள்ளது. கழக மாணவரணி, இளைஞரணியினர் அனனவருக்குமே இத்தகு பயிற்சி அளிக்கப்படுவது அவசியமாகும். இதுகுறித்து இதற்குப் பொறுப்பான நிருவாகிகள் தேவையான திட்டங்களை வகுத்துத் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

மதவாத அபாயம் தலைதூக்கும் இக்கால கட்டத்தில், கழக இளைஞரணி, மாணவரணியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். கழகப் பொறுப்பாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கு மாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு

பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்து வதில்லை, தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை.
(குடிஅரசு, 26.5.1935)

தமிழ் ஓவியா said...

அய்யா அகராதி

இராமாயணம் - பார்ப்பனரின் புரொசீஜர் கோட்
கற்பு - பெண்ணடிமை ஆயுதம்
சாதி - மனிதனை மனிதன் இழிவுபடுத்துவது
சமயம் - சாதிக்கு வித்து
கடவுள் - சமயத்தின் காவலன்

பார்ப்பான் - இம்மூன்றையும் படைத்த கர்த்தா
குருக்கள் - மோட்ச லோகக் கைகாட்டி
கோயில் - அறிவு பணம், இரண்டையும் இழக்கும் இடம்
சத்தியாகிரகம் - சண்டித்தனம்
உண்ணாவிரதம்- தற்கொலைக் குற்றமுள்ள நோய்
தியாகம் - அர்த்தமில்லாச் சொல்

சோதிடம் - சோம்பேறிகளின் மூலதனம்
புராணங்கள் - புளுகு மூட்டைகள்
புலவர்கள் - பழைமைக் குட்டையில் படிந்து ஊறிய பாசி
உற்சவம் - கண்ணடிக்கும் கான்பரன்ஸ்
வக்கீல் - சேலை கட்டாத தாசி

வியாபாரி - நாணயமற்ற லாப வேட்டைக்காரர்
மோட்சம் - முடிச்சுமாறிகளின் புரட்டு
நரகம் - வெறும் கற்பனைப் பூச்சாண்டி
பிரார்த்தனை - பேராசையின் மறுபெயர்
நாஸ்திகம் - அறிவின் உண்மையான எல்லை
மூடநம்பிக்கை - Observation and Experiment இரண்டுக்கும் உட்படாதது

நாணயம் - ஒருவனுடைய இலட்சியத்தையும், தேவையையும் பொறுத்த ஒழுக்கம்
ஆசிரியர்- பையன் பாஸ் செய்தால் கெட்டிக்காரர் என்று பெயர் வாங்குபவர் - பெயில் ஆகிவிட்டால் பையன் முட்டாள் என்று பெயர் சூட்டுபவர்.

பிச்சைக்காரன் - பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித்தனத்தாலும் கெஞ்சி புகழ்ந்து வாழ்பவர்கள்.
தொழிலாளி - தன் வயிற்றுப் பிழைப்புக்காக தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்குக் கொடுக்கிறவன் அல்லது பிறர் இஷ்டப்படி நடக்க வேண்டியவனாகிறவன்.

முதலாளி - தன் உழைப்பைத் தன் இஷ்டமான விலைக்கு பிரதிப் பிரயோசனத்திற்கு மாறுப்பண்டமாக விலை பேசுகிறவன்.
மனைவி - ஓர் ஆணுக்குச் சமையற்காரி; ஓர் ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.

பெண்ணுரிமை - பெண்களுக்கும் ஆண்கள் போன்று வீரம், வன்மை, ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்கள் உணரச் செய்வது.
சாதி ஒழிப்பு - நாட்டில் லைசென்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பது.
கிராமம் - ஒரு வித வருணாசிரம தர்ம முறையில் கீழான சாதி.

தமிழ் ஓவியா said...

ஆரிய (மிலேச்ச)ரைப் பற்றி வ.உ.சிதம்பரனார்



பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர் களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர் களென்றும், நினைத்தவற்றை யெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும்,

அவர்களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள் களைத் கொள்ளாமலும், அவர்களை தொட நேர்ந்தபோது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள்:- உடனே தங்களைப் பிராம ணர்கள் என்றும், சொல்லவும், எழுதவும் தலைப்பட்டார்கள்;

அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும், நடத்தையிலும் காட்டினார்கள். அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம்.

அதாவது, பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொரு வரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியர்களை நடத்துகிறது போல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய் விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.

(5.11.1927இல் நடந்த சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டுத் தலைமை தாங்கும் போது திரு. வ.உ.சி. அவர்கள் ஆற்றிய சொற்பொழிலிருந்து எடுக்கப்பட்டது. பக்கம் 39, 40, 41)



Read more: http://www.viduthalai.in/e-paper/103549.html#ixzz3dW8rdRTx

தமிழ் ஓவியா said...

புராணப் பிரியர்களும் சிரிக்கிறார்கள்
நமது பெரியவர்கள் சொல்லிவிட்டு போன கதைகளைச் சொன்னால் இந்தகாலத்துப் பசங்கள் கேலி பேசறதா; நம்பமாட்டேன் என்கிறா - நையாண்டி செய்யறா - அனுமாரின் வாலை நீர் அளந்து பார்த்தீரோ; அரம்பை ஆடுவது கண்டீரோ;

இந்திரன் கண்களை எண்ணிப் பார்த்தீரோ என்றெல்லாம் கேள்விகளைப் பூட்டிப் பேசறா - நாம் என்ன இருக்கு, செய்ய? ஒவ்வொன்றுக்கும் காரணம் கேட்கிறதா, அர்த்தம் கேட்கிறதா, ஆதாரத்தைக் காட்டுன்னு மல்லுக்கு நிற்கிறா - என்று தான் வைதீகர்கள் - புராணப் பிரியர்கள் தங்கள் முகாமிலே கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது விசாரப்படுகிறார்கள்;

பதைக்கிறார்கள் முதலில் - பிறகு திகைக்கிறார்கள் - கடைசியில் அவர்களே சிரிக்கிறார்கள். ஆமாம்! இந்தப் பயல்கள் சொல்வது போல் புராணக் கதைகள் நம்ப முடியாதவைகளாகத்தான் இருந்து தொலைக்கின்றன - நாம் என்ன செய்வது என்று சிந்தித்து விட்டுச் சிரிக்கிறார்கள்.

- 5.12.1948, திராவிடநாடு

தமிழ் ஓவியா said...

இராமாயண ஆராய்ச்சி
வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்



இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.

தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.

அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:

மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.

இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.

என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;

இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.

ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.

நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.

இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.

இதைப்பற்றி சிந்திப்போம்

வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?

மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.

மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு

சனி, 20 ஜூன் 2015
எங்கெங்கு காணினும் பெரியார் கொள்கை மயம்!

அம்பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலி:

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு

தந்தை பெரியாரின் ராமாயண பாத்திரங்கள் ஆய்வு ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது!



புதுடில்லி, ஜூன் 20- அம் பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலியாக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாண வர் அமைப்பு தந்தை பெரி யாரின் ராமாயண பாத்திரங்கள் ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது. புதுடில்லி ஜவகர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சமீபத்தில் மலர்ந்தது. இந்த வாசகர் வட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக தந்தை பெரியார் தமிழில் எழுதிய ராமாயணபாத்திரங்கள் என்ற நூல் இந்தியில் சச்சி ராமாயணா என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது இந்த நூலை மக்களிடையே கொண்டு செல்லும் பரப்புரையை மேற்கொண்டனர்.   தங்களது வாசகர் வட்ட மையத்தில் இணைந்துள்ள வர்களுக்கு தங்களது நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மென்புத்தகம் (PDF) அனுப்பி அனைவரையும் படித்து தெளிவு பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இராமாயணப் பாத்திரங்கள் - வால்மீகி இராமாயணத் தில் உள்ளபடி உண்மை இராமாயணம்? ‘Ramayana - True  Reading’  என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல். பல்லாயிரக்கணக்கில் பிரதிகள் விற்கப்பட்டன. தமிழில் பல லட்சக்கணக்கான பிரதிகள் மக்களால் வாங்கப் பெற்றது. பவ்லா ரிச்சமென் (Paula Richman) என்ற அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியரான அம்மையார் (இவரை சென்ற ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதுபற்றி உரையாடி மகிழ்ந்து நன்றி சொன்னார்).

1958இல் தந்தை பெரியார் அவர்களை உத்தர பிரதேசத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டினைத் திறந்து வைக்க அழைத்திருந்தபோது அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி, புலவர் கோ. இமய வரம்பன், ஆனைமலை நரசிம்மன், இராம கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் கான்பூர், லக்னோ, டில்லி போன்ற ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தபோது லாலைசிங் யாதவ் (Lalai Singh Yadav)  என்ற நண்பர் -ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் உண்மை இராமா யணம் (True Reading) புத்தகத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கேட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார்.

அது சச்சி இராமாயணா என்ற பெயரில் ஹிந்தியில் வெளி வந்து பல பதிப்புகள் விற்பனையானது.

இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு - பார்ப்பனர் எழுப்பிய எதிர்ப்புக் கூச்சல் கண்டு அந்நூலைத் தடை செய்தது. அதன்மீது உயர்நீதிமன்றத்தில் நூல் வெளியீட் டாளர் லலித்சிங்யாதவ்  வழக்கு போட்டு,  வென்றார். அதன் மீது உ.பி. அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தடையை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு வாதாடியது.

நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது, 1976 வாக்கில் இந்த மேல் முறையீடு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதிகள் ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைந்த அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு எழுதிய வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்,

ஆயிரம் பூக்கள் மலருவது ஒரு பூந்தோட்டத்திற்கு அழகு; அதுபோல இராமாயணத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துரைகள், நூல்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கது.

உத்தரப்பிரதேச அரசு தடை போட்டது செல்லாது என்று திட்டவட்டமாக கூறியது. அதுவும் நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது வந்த வரலாற்று முக்கியத்தீர்ப்பு இது!

1976 முதல் இன்று வரை 39 ஆண்டுகளாக இந்நூல் வடநாட்டில் அமோக விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

மனிதன்

மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!
veramani

வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.

எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)

எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.

அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.

மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!

நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும்,  அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!

பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!

நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?

வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்)  எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாது,  அஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!

வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்!  இருக்கிறது!

உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?

அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?

அதில் சற்று நயத்தக்க  நாகரிகம் ததும்ப வேண்டாமா?

உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!

அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?

பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!

அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?

அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!

புகழேகூட  போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.

புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!

(எஞ்சியது  நாளை)

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி

விடுதலை 15.6.2015 நாளிதழில் மயிலாடன் அவர்களின் ஒற்றைப் பத்தியில் குரங்குக்கு நோட்டீஸ் என்ற செய்தி கட்டுரையில் மிகவும் நகைச்சுவையாகவும், இந்து மத கேலிக்கூத்துகளும் எப்படி இருக்கின்றன என்பதை மயிலாடன் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுவதுமாக படித்துப்பார்த்தால் இந்துமதக் கோயில்களில் எவ்வளவு கேலிக்கூத்துகளும், மூடத்தனத்தின் உச்சாணி நிகழ்வும் எப்படி நிகழ்கின்றன என்பதை ஆதார பூர்வமாக அருமையாக விளக்கியுள்ளார். மயிலாடன் அவர்களின் ஒற்றைப்பத்தி புதிய புதிய செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் தினந்தோறும் அருவியாக தந்து கொண்டிருக்கிறது.

அந்த நாள் விடுதலையில் மஞ்சை வசந்தன் அவர்களின் இருட்டுக் கால திருட்டு செய்ய எத்தனிக்கும் எத்தர்கள் என்று கட்டுரை பிஜேபி, இந்துத்துவா கூட்டாளிகள் முகத்திரையை கிழிப்பதாக இருந்தது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்டநிலையில் வளர்ச்சியெங்கே என்றால் வாய்ச்சவடால் அடிக்கிறார். மோடி என்ன மோடி மஸ்தானா? வளர்ச்சி மந்திரம் மூலம் வருமா என்ன? மோடி வந்தால் ஆறுமாதத்தில் வளர்ச்சிவரும் என்றனர். இன்றைக்கு மோடி என்ன மந்திரமாக வைத்திருக்கிறார் என்று அயோக்கியத்தனமாக மாற்றிப் பேசு கிறார்கள். ஆக இந்த மதவாதக் கும்பல் ஒரு மோசடிக் கும்பல், அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. இவ் வாறு கட்டுரை முழுவதும் எரியீட்டியாக எழுச்சி நடையில் வீசுகிறார் மஞ்சை வசந்தன்.

அதே நாள் விடுதலையில் தஞ்சைத் தீர்மானம் என்ற தலையங்கத்தில் அண்ணா பெயரில் கட்சி வைத்து அண்ணாவின் கொள்கைக்கு புறம்பாக நடைபோடும் கட்சிக்கு சரியான சவுக்கடி, எச்சரிக்கை மணி.

பால்காவடி எடுப்பதுதான் பகுத் தறிவா? தேர் இழுப்பதுபற்றி எல்லாம் அண்ணா எழுதவில்லையா? பேச வில்லையா?

அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லிக்கொண்டே அண்ணாமலையார் கோவிலில் விழுந்து புரளுவதுதான் அண்ணா திமுகவா? அண்ணா ஆட்சியா?

இவ்வளவு ஆணித்தரமாக கொள்கை ரீதியாக நமது இயக்கத்தைவிட வேறு யார் சொல்லிட இயலும், சொல்லிட தைரியம் வரும், விடுதலையைத் தவிர வேறு யாருக்கு இந்த வீரம் வரும், வாழ்க பெரியார்!

- தி.க.பாலு

(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3.)

தமிழ் ஓவியா said...

சட்டவிரோதமாக தனது கணவர், மகளுக்கு பதவி வழங்கிய சுஷ்மா சுவராஜ்


புதுடில்லி, ஜூன் 21_ பொருளாதார மோசடி குற்றவாளியாகி நாட்டை விட்டு சரியான அனுமதி யின்றி திருட்டுத்தனமாக வெளிநாடு சென்ற லலித் மோடிக்கு உதவிய விவ காரத்தில் சிக்கிய சுஷ்மா சுவராஜ் தற்போது தனது பதவியைப் பயன்படுத்தி தனது கணவருக்கும், மக ளுக்கும் அரசு வழக்கறிஞர் தகுதி வழங்கி மோசடி செய்த்து அம்பலமாகியுள் ளது. சுஷ்மா சுவராஜ் கணவர் சுவராஜ் கவுசல் மகள் பன்சுரி இருவரும் வழக்குரைஞர்கள் இவர் கள் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத் தின் சார்பில் உச்சநீதி மன்ற அரசு விவகாரங் களுக்கான வழக்குரைஞர் களாக பதவியேற்றார்கள். மாநிலத்தில் எத்தனையோ மூத்த வழக்கறிஞர்கள் இருக்கும் போது சுஷ்மா சுவராஜ் தன்னுடைய கணவன் மற்றும் மகளை இப்பதவியில் நியமித்தது குறித்து அப்போது மத்திய பிரதேச வழக்குரைஞர் களுக்குள் மோதல் ஏற் பட்டது. ஆனால் மபி அரசு மற்றும் சுஷ்மா சுவராஜின் நேரடி தலை யீடு காரணமாக எதிர்க் குரல்கள் எதுவும் எழும்பவில்லை. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவர்கரும் வழக் குரைஞருமான அஜய் துபே என்பவர் ஆர்.டி.அய் மூலம் சுவராஜ் மற்றும் பன்சூரி பதவி விவகாரம் குறித்து விளக்கம் கேட்டி ருந்தார். அதில் அவர்களின் பதவி நியமனம் குறித்து எந்த ஒரு வழக்கமான நடைமுறையும் பின் பற்றப்படவில்லை என்றும், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் பதவிவழங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டியதாகவும் தெரிகின்றது. மேலும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள மூத்த வழக் குரைஞர்கள் பட்டியலில் இவர்கள் பெயரே இல்லை என்று தெரியவந்தது. சில முக்கிய நபர்களின் வாய்மொழி உத்தரவின் பேரில் இவர்கள் மபி அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப்பட்டியலில் அருண் ஜெட்லி மகள் சோனியா ஜெட்லி பெயரும் இருந் தது. ஆனால் பிறகு அவ ரது பெயர் ஏனோ அழிக்கப்பட்டுவிட்டது. அரசு சார்பான வழக் குகளில் வாதட போதிய அனுபவமில்லாத பன்சுரி (சுஷ்மாவின் மகள்) லலித்மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அய்.பி.எல் தலைமை நிர்வாகி இருந்த லலித் மோடிக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள் ளார் என்று இங்கி லாந்தின் ஆங்கில வார இதழான சண்டே மிர்ரர் செய்தி வெளியிட்டிருந் தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்தியப்பிரதேச பாஜக அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் அரசு வழக்குரைஞராக நியமிக்க அரசுக்கு முழு உரிமை யுள்ளது. யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து மூத்த வழக் குரைஞர்களிடம் கலந்தா லோசித்து அவர்களின் முழு சம்மத்தின் பேரில் தான் நியமிக்கப்பட் டார்கள், என்று கூறினார். மூத்த அரசியல்வாதி யும் பல முறை நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தவருமான சுஷ்மா சுவராஜ் தான் எடுத்த பதவிப்பிரமாணத்திற்கு விரோதமாக தன்னுடைய குடும்ப உறுப்பினர் களையே அரசு பதவி களில் நியமித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி மற்றும் காங் கிரஸ் கட்சிகள் சுஷ்மா சுவராஜ் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். லலித்மோடி விவகா ரம் அரசுப்பதவியில் தன்னுடைய குடும்ப உறுப் பினர்களை நியமித்த விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பான நேரத்தில் எதிர்கட்சிகளின் கேள் விக்கு பதிலளிக்காமல் அமெரிக்காவில் நடை பெறும் யோக தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றுள்ளார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/103653.html#ixzz3dhMYYvZY

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் கண்ட கனவான பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்



கவிஞர் கனிமொழி பேச்சு
திருவண்ணாமலை, ஜூன் 21_ பெண்களுக்கு சொத்தில் சம உரிமையைத் தந்து, அதை சட்டமாக இயற்றியவர் திமுக தலைவர் கலைஞர் என்று திமுக மகளிரணி செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனி மொழி கூறினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா, பாட்டு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவ லகத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலா ளருமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.
மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பாளர் உ.நித்யா முன்னிலை வகித் தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.

பாட்டு பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்து கனி மொழி பேசியதாவது:
சமுதாயத்தில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
குடும்பத் தலைவியாக இருந்தாலும் கூட, அவர் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்புக்கு பொருளாதார ரீதியாக கணக்கிட்டால்

உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. படித்தப் பெண்கள் போராட வேண் டும். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
அப்படி கேட்கும்போது தான் இந்த சமுதாயம் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும். 1929-இல் செங்கல்பட்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிட இயக்க மாநாட்டில் பெண் களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்றத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானத்தை தனது 65-ஆவது வயதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, பெரியார் கண்ட கனவை நிறைவேற் றியவர் கலைஞர். திருக் குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக் கியங்களையும் மக்களிடம் கொண்டு சென்றவர் கலைஞர் என்றார்.

திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாளை யொட்டி, திருவண்ணா மலை ஜீவா வேலு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1,092 மரக்கன்றுகள் நடும் விழா, கீழ்கச்சிராப்பட்டு ஊராட் சியில் கம்பன் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாக்களில் கனிமொழி கலந்து கொண் டார். பின்னர், திருவண் ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு 1,092 மரக்கன்றுகளை நட்டார்.

குடும்பத்துக்கு ஒரு தென்னங்கன்று வீதம் வழங்கி அந்தக் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துக் கொண்டார்



Read more: http://www.viduthalai.in/page-7/103680.html#ixzz3dhNtn1fW

தமிழ் ஓவியா said...

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட்மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல்களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுக்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.

பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பி ராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்ட தாகவும் தெரியவருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுதானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. தலதாபன நிர்வாகங் களில் காண்ட்ராக்ட்டு வேலைகளும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்ப தினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன.

இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும்,  கவுன்சிலர்களுக்கும், மெம்பர் களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகிவிடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடம் இருக்காது.

ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரியமேற்படும். ஆகவே, முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்



சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ,

ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

அடைய முடியும்

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)


எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.

மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.

இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.

எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!

உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!

உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.

குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?

இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!

சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.

‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.

நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)

பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.

இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)

பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.

எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!

அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)

பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?

அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!

கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.

அப்போது விளங்கி யாருக்குப் பயன்?

“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”

ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!

எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

 

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

ஓரணியாய் திரள்வோம் - சமூகநீதி காப்போம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில், புதுமைப்பித்தன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை முத்துக்கள், காண்டேகரின் கருத்துமழை ஆகிய இலக்கியச் சுவை பகுதிகளை, அவரும் சுவைத்து நம்முடன் பகிர்ந்தளித்த மாண்பை மிகவும் ரசித்துப்படித்து உணர்கிறேன். இனமானப் பேராசிரியரைப் பார்க்கச் சென்றபோது பெற்ற இதயம் காக்க, நூலைப்படித்து எமக்குத்தந்த குறிப்புகள் மிகச்சிறப்பாக பயன் தருகிறது. புத்தகத்தை வாங்கிப்படிக்க ஆர்வம்.

புதுமைப்பித்தன் சிந்தனைச் சுவைகளைத் தொடுத்து பெரியார் புத்தக நிலையம் வெளியிடலாமே. இதயம் காக்க நூலையும் வாங்கி விற்பனை செய்யலாமே.

தாலி அகற்றும் நிகழ்ச்சியன்று நடந்த மதவாதிகளின் தாக்குதலை சந்திக்க உருவாக்கப்பட்ட வழக்கு நிதிக்கு, தந்தை பெரியாரின் உழைப்பால் சகிப்புத் தன்மை நிறைந்த தியாகத்தால் பெற்ற இடஒதுக்கீடு காரணமாக அரசுப் பணியில் உள்ள பார்ப்பனரல்லாத பணியாளர்கள், வழக்கு நிதியை வழங்கிட முன்வர வேண்டும்.

மய்ய, மாநில அரசுகளின் முன்னணித் துறைகளில் மறுக்கப்படுகின்ற சமூக நீதியை ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக மட்டுமல்ல நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கேட்கவும், கழக வழக்குரைஞர்கள் சட்டத்தின் சரத்துகளை வைத்து வாதாடி வென்றிடவும் வழக்குநிதி நிறைய தேவைப்படுவதாக உணர்கிறோம். தங்களால் இயன்ற நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டுகிறோம்.

உயர்நீதிமன்றம், அய்.அய்.டி. நியமனம், அஞ்சலகங்கள், விமான நிலையங்கள், வானிலை ஆய்வு நிறுவனங்கள், ரயில்வே துறை போன்றவற்றில் மறுக்கப்படுகிற சமூகநீதியை எதிர்ப்போம். ஆசிரியரின் தன்னலமற்ற பொதுப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம். வேண்டு கோளையும், திட்டங்களையும் செயல் படுத்துவதில் முனைப்பு எடுப்போம்.

ஆர்.எஸ்.எஸ். மதவாதி மோகன் பகவத்துக்கும், ராம்தேவ் உணவகத்துக்கும், மத்திய அரசின் பாதுகாப்பா? கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி, தமிழக அரசின் திட்ட நிதிகளைப்போல எங் கேயோ ஒதுக்கி எப்போதோ பட்டுவாடா செய்யவா? பகுத்தறிவுச் சிந்தனையாளர் களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டிய நேரம், மிக அவசரமாக நெருங்கி வருகிறது. இணைந்து பணியாற்ற பெரியார் திடல் வருக. மதவாத சதியாளர்களை துரத்திட கரம் கோர்த்து வருக. இணையதளங் களிலும் பரப்புரை புள்ளி விவரங்களை பதிவேற்றுவோம்.

- ஆ.வேல்சாமி
பகுத்தறிவாளர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்

தமிழ் ஓவியா said...

நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்



நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு  வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும்  பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே அத்தகைய பாதிப்பு  இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான  ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர்.

தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ்  உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத்திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத்திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவ தில்லை.

எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண்தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத்தசைகள் ஆண் களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச் சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச்சத்து சமநிலை அடைகிறது.

அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்கு பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும் பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுகுறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகிவிடு கி றது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப்பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண்கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங் கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந் துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்ட சத்து, நீர்ச்சத்து, கொழுப்புசத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

இந்தக் கீ ரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லிய மாக தெரிய உதவும். பொன்னாங்கண்ணியின் பயன்கள் சில..
1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

3. உடலை, தோலைப்பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குறிப்புகள்


* தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகி விடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும் பல் வலி குணமாகிவிடும். ர் உடம்பெல்லாம் வலிக்கிறதா? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும்.

* சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிவிடும். சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். ர் பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்க வில்லையா? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது.

* உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று சாப்பிட்டால், உடல் சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்பு குணமாகிவிடும்.

* குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை.

* தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது.