Search This Blog

17.3.14

தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்?

மதவெறி, ஜாதிவெறி, பிற்போக்குத்தனம் சந்தர்ப்பவாதம் இவற்றை முறியடித்திட
மதச்சார்பற்ற கொள்கையை உடைய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர்!
தஞ்சையில் திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானம்
 

தஞ்சையில் இன்று (16.3.2014) நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்.

தஞ்சாவூர், மார்ச் 16- மதவெறி, ஜாதி வெறி பிற்போக்குத்தனம், சந்தர்ப் பவாதம் இவற்றை முறி யடிக்க மதச் சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் காக் கும் திமுக தலைமையி லான ஜனநாயக முற்போக் குக் கூட்டணியை ஆதரிப் பது என்று தஞ்சையில் இன்று கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

16.3.2014 ஞாயிறு காலை தஞ்சாவூர் கவிதா மன்றத் தில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட் டத்தில் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம்

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகி யோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் உற்ற தோழருமான திராவிடர் கழகப் பொருளாளர் வழக் குரைஞர் கோ.சாமிதுரை (வயது 81, மறைவு 9.11.2013), தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற புரட்சியாளர் நெல்சன் மண் டேலா (வயது 95, மறைவு 5.12.2013), இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் (வயது 75, மறைவு 30.12.2013), வரலாற்றுப் பேராசிரியரும், 130 நூல்களுக்குமேல் எழுதியவரும், கழகத் தலைவர் அவர்களின் அன்புக்கும், மதிப்பிற் குரியவருமான பேராசிரியர் உடுமலைப் பேட்டை ந.சுப் பிரமணியம் (வயது 99, மறைவு 22.10.2013), விஜயவாடா நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயன் அவர்களின் இணையர் சுமதி (வயது 72, மறைவு 12.11.2013), ஏ.அய்.டி.யு.சி.யின் அகில இந்தியத் துணைத் தலைவர் - இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எஸ். தியாகராசன் (வயது 75, மறைவு 23.11.2013), பகுத்தறிவுக் கவிஞர் தஞ்சைவாணன் (மறைவு 30.1.2014) ஆகி யோரின் மறை விற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துக் கொள்கிறது.

கடலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் புதுச் சேரி வ.சு.சம்பந்தம் (வயது 79, மறைவு 16.12.2013), நீலகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோவிந்தராசன் (வயது 83, மறைவு 26.12.2013), சிவகங்கை சுயமரியாதை இயக்க வழிவந்த கழக மூதாட்டியார் இராமலக்குமி சண்முகநாதன் (வயது 89, மறைவு 2.1.2014),

சுயமரியாதைச் சுடரொளி பென்னாகரம் பி.கே. இராமமூர்த்தி அவர்களின் இணையரும், திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல்செல்வி அவர் களின் மாமியாரும், கோவை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கவுதமன் அவர்களின் அன்னையாரும், கழகப் பொதுக்குழு உறுப்பினருமான திருமதி சாந்தா இராமமூர்த்தி அவர்கள் (வயது 82, மறைவு 14.3.2014),

திராவிடர் கழகப் பேச்சாளராகவும், எழுத்தா ளராக வும் இருந்த திருவாரூர் கோ.தங்கராசு (வயது 89, மறைவு 5.1.2014), சங்கரன்கோயில் சீரிய பகுத்தறிவாளர் பழனிச் சாமி,  லால்குடி வட்டம் பிச்சாண்டார் கோவில் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் சண்முகம் (வயது 80, மறைவு 18.1.2014), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மயிலாடுதுறை இராமநாதன் (வயது 76, மறைவு 21.11.2013), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் வல்லம் படுகை பாலகிருஷ்ணன் (மறைவு 21.10.2013 - உடற்கொடை -அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவமனைக்கு ஒப்படைப்பு), தேனி மாவட்டம் கூடலூர் நகர திராவிடர் கழகத் தலைவர் க.சின்னசாமி (வயது 76, மறைவு 4.1.2014 - உடற்கொடை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப் படைப்பு), திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வாடிப்பட்டி வட்டம் கருப்பட்டி நல்.லோகநாதன் (வயது 64, மறைவு 3.10.2013), நீடாமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.சின் னப்பன் (வயது 85, மறைவு 7.11.2013),

தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் பொருளாளர் எடமேலையூர் சண்முகம் (வயது 92, மறைவு 15.11.2013), தென்னவராயநல்லூர் ஆசிரியர் சி.கார்த்திகேயன் (வயது 85, மறைவு 17.11.2013), போளூர் நாத்திகன் ந.முரு கேசன் (வயது 53, மறைவு 3.11.2013), கோட்டூர் ஒன்றிய கழகத் தலைவர் வீ.புட்பநாதன், விக்கிரபாண்டியம் பெரியார் பெருந்தொண்டர் வீரையன் (மறைவு, 21.11.2013),

கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக முன்னாள் செயலாளர் கந்தவேல் (மறைவு 30.10.2013), புவனகிரி பெருமாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் அ.இராமசாமி (வயது 80, மறைவு 7.12.2013), சிவகங்கை மாவட்டம் கல்லல் பெரியார் பெருந்தொண்டர் ப.சு.மாயன் (வயது 90, மறைவு 14.12.2013), திருவாரூர் நகர திராவிடர் கழகத் துணைத் தலைவர் அ.அருமைக்கண்ணு (வயது 73, மறைவு 30.12.2013), நாகர்கோவில் செ.சிவசுப்பிரமணியம் (வயது 79, மறைவு 20.12.2013), உளுந்தூர்பேட்டை வட்டம் நாச்சியார்ப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் பஞ்ச நாதன் (வயது 82, மறைவு 19.1.2014).

பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி ஒன்றிய கழகத் தலைவர் வெ.சடையப்பன் (வயது 80, மறைவு 18.1.2014), திருக்கோவிலூர் ஒன்றியம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆறுமுகம் (வயது 91, மறைவு 31.1.2014), தஞ்சாவூர் - அம்மாப் பேட்டை நகர திராவிடர் கழக செயலாளர் சா.கலிய மூர்த்தி (வயது 76, மறைவு 14.2.2014), ஜோலார்ப் பேட்டை கழக மூதாட்டி கண்ணம்மாள்,நீடா மங்கலம் திராவிடர் கழக முன்னாள் தலைவர் இரெ.சுந் தரேசன் (வயது 85, மறைவு 11.3.2014), மயிலாடுதுறை நகர திராவிடர் கழக முன்னாள் செய லாளர் நா.இரகுபதி (மறைவு 19.11.2013), திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக் குரைஞர் த.வீரசேகரன் அவர்களின் சகோதரர் பகுத் தறிவாளர் த.இராசேந்திரன் (வயது 65, மறைவு 24.10.2013) ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் அரும்பெரும் தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத் தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆறு தலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2: தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்?

முன்மொழிந்தோர்:
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்

நம் நாட்டின் 16 ஆவது நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தல் (2014) ஏப் ரல் 24 ஆம் தேதி  நமது தமிழ்நாடு - புதுவை ஆகிய மாநிலங்களில் நடைபெற விருக்கிறது.

முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலி ருந்து மாறுபட்ட வகையில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியின் தன்மை அமைந்துள்ளது. குறைந்தது 5 அணிகள் போட்டியில் உள்ளன.

மத்தியில் கடந்த இரண்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்க்கிய முற்போக் குக் கூட்டணி காங்கிரஸ் தலைமையில் அமைந்து, மதச்சார்பற்ற ஒரு ஆட்சி மக்களுக்குக் கிடைத்தது என்ற நிலை இருந்தது!

தஞ்சை திராவிடர் கழக பொதுக்குழுவில் பங்கேற்றோர் (16.3.2014)

ஆனால், இரண்டாம் முறை அமைந்த அரசில் ஆளுங்கட்சியின் அரவ ணைப்பு, முற்போக்குக் கொள்கைகளுக்கு விடை கொடுத்து, பல வகைகளி லும் மக்கள் விரோதப் போக்கு, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, நெருக்கடி ஏற்படும்போது தங்களை மட்டும் காப்பாற் றிக் கொள்ள, கூட்டணியில் உள்ள கட்சிகளையே தங் களுக்குப் பதில் பலிகடாக் களாக்கிய தன்மை முதலிய பல காரணங்களால் இன்று நாடு முழுவதிலும் காங் கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ள நிலை ஏற்பட்டுள் ளது!

இந்த அதிருப்தியை முழுமையாகப் பயன் படுத்தி, ஒரு இந்துத்துவ ஆட்சியை ஏற்படுத்தும் தம் லட்சியத்தினை நிறைவேற் றிக் கொள்ள இதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதி, ஆர்.எஸ்.எஸ். என்ற இந்து வர்ணதர்ம காப்பு மத அமைப்பு - அதன் அர சியல் வடிவமான பா.ஜ.க. வையும், அதன் மூத்த தலைவர்களையும்கூட ஒதுக்கிப் பின்னுக்குத் தள் ளிவிட்டு, காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம் என்று உணர்ந்து,  குஜராத் மோடியை - அவர் பிற் படுத்தப்பட்டவர் என்ற முத்திரையுடன் பிரதமர் வேட்பாளர் என்று தன்னிச் சையாக அறிவித்து, பன் னாட்டு முதலாளிகள், சார்பு ஊடகங்கள்,இவர் களின் துணையோடு கடந்த சில மாதங்களாகவே, பண பலம், இன பலம், பத்தி ரிகை பலம் உள்ளிட்ட எல்லாப் பலங்களையும் கையகப்படுத்தி, முனைப் புடன் செயல்பட்டு வரு கின்றது. அந்தந்த மாநிலங் களில் பதவிப் பசியுடன் அலையும் சில கட்சிகள் - அக்கட்சிகள் இதற்குமுன் கூறி வந்த நிலைப்பாடு களை - கொள்கைகளை - விரட்டிவிட்டு, பி.ஜே.பி. அணியுடன் பதவிப் பசி காரணமாக கைகோர்த்து நிற்கும் அவலத்திற்கு ஆளாகிவிட்டன.

ஒரு மதவெறி ஆட்சி உருவாக இந்தத் தேர்தலை ஒரு சரியான வாய்ப்பாகக் கருதி களத்தில் இறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இது ஒரு இனப் போராட்டம்தான் - தந்தை பெரியார் மொழியில்!
இதில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, காங்கிரசின்மீதுள்ள எதிர்ப்பலையை தனக்குச் சாதகமாக்கி, ஒரு அணியாக தனக்குள்ள ஆட்சி அதிகாரம், பண, இன பலம், பத்திரிகை பலத்தை முழுமையாக ஏவிவிட்டு, ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்டு, தாம் வெற்றி பெற்று, முக்கியமான பதவி வாய்ப் பைப் பெறவும், முடியாத பட்சத்தில், ஆட்சியை அமைக்கத் தள்ளாடும் நிலை ஏற்பட்டால், ஹிந்துத்துவா அரசுக்கே ஆதரவு தரும் நிலையை உருவாக்க மக்கள் விரோத, தந்திர அணியாக காங்கிரஸ் - தி.மு.க., எதிர்ப்பு என்ற நிலைப் பாட்டினை எடுத்து மாய மானாக களத்தில் நிற்கிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடியைப்பற்றி எந்தவித விமர்சனத்தையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செய்யவில்லை என்பதும் அதற்காகவே இடதுசாரிகளிடம் முன்பு கைகோர்த்து, பின் அவர்களைக் கழற்றிவிட்டு விட்டது என்ற கருத்து பரவலாகப் பேசப்படுவது -  கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்நிலையில், இத்தகையவர்களுக்கு சரியான மாற்றாக, தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஒரு உண்மையான கொள்கைக் கூட்டணியாக, மதச்சார்பற்ற, சமூகநீதி, ஜனநாயகம் காக்கும் கூட்டணியாக அமைந்துள்ள நிலையில், அதனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வதன்மூலமே, மேற்கண்ட கொள்கை களோடு, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, தமிழக மீனவர் பாதுகாப்பு, தனி மனித மறுக்கப்பட்ட உரிமை, நீதி மீட்டெடுப்பு போன்றவைகளை மேற்கொள்ளும் ஓர் ஆட்சி மத்தியில் அமையமுடியும்;சரியான எதிர்காலம் நாட்டிற்கு உறுதியாகக் கிடைத்திட - ஜாதிவெறி, மதவெறி, பிற்போக்குத் தனம், சந்தர்ப்பவாதம் ஆகியவைகளிலிருந்து சமுதாயத் தைக் காத்திட, தி.மு.க.வையும், அந்த அணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு வாக்காளர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

இந்த அணியின் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபடுமாறு கழகத் தோழர்களையும் இப்பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3: மத்திய பணியாளர் தேர்வை தமிழில் எழுதிட வாய்ப்புத் தேவை

மத்திய தேர்வாணையம் நடத்தும் (UPSC) அய்.ஏ.எஸ். தேர்வுகளில்கூட மாநில மொழிகளில் எழுதலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பணியாளர் ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் தேர்வுகளில் மெட்ரிக் வரை மாநில மொழி களில் எழுதலாம். அதேநேரத்தில், பட்டதாரி அளவில் நடக்கும் தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடியும் என்ற நிலை இருக்கிறது.

இதனால், பெரும்பாலும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண் டவர்கள் அதிகம் பலன் அடையும் நிலைமை இருந்து வருகிறது. இதனைப் பலமுறை நாம் சுட்டிக்காட்டியும், நியாயம் கிடைக்கவில்லை; எனவே, மாநில மொழி களிலும் இத்தேர்வை எழுதிட ஆவன செய்யுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 4: கல்வியில் தமிழ் கட்டாயப் படிப்பாக அமையவேண்டும்

தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பட்டங்களைப் பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இரண்டாவது மொழி என்பதில் தமிழுக்குப் பதில் வேறு மொழியைப் படிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாகத் தமிழை முற்றிலும் புறக்கணிக்கும் பேராபத்து இருந்து வருவதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி, தமிழைக் கண்டிப்பாகப் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கும் வகையில், கல்வித் தொடர்பான விதிகளில் மாற்றக் கொண்டுவர வேண்டும் என்றும், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு மேல்மட்டக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் விதிமுறைகளைத் திருத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5: பத்து சதவிகிதத்துக்குப் பதிலாக மூன்று சதவிகிதம் மட்டுமே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீடு கோரவேண்டும்

தமிழ்நாடு பார்ப்பன சங்க மாநாடு ஒன்றை 2013 டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சிராப்பள்ளியில் நடத்தி, தங்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பில் அளிக்குமாறு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.
மக்கள் தொகையில் மூன்று சதவிகிதமே உள்ள அவர்கள் அதே மூன்று சதவிகித அளவுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கோருவதுதான் நியாயமும், நேர்மையும், ஒழுங்கும், சமூகநீதியும் ஆகும் என்பதை இப்பொதுக் குழு சுட்டிக்காட்டி, அப்படி அவர்கள் மூன்று சதவிகிதம் அளவில் மட்டுமே இட ஒதுக்கீடுக் கோருவார் களேயா னால், இந்த இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சிக்கலுக்கும் தீர்வு எளிதாக ஏற்பட்டு விடும் என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் எண் 6: அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் போக்கை தமிழக அரசு கைவிடுக!

கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங் கள் என்பதால், தி.மு.க. ஆட்சியில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்துகொள்வது மக்கள் ஆட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் கேடானதாகும் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ரூ.1800 கோடியிலான பறக்கும் பாலம் திட்டத்தை நீதிமன்றம் சென்று தடுத்தது; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க.வின் முயற்சியால் தி.மு.க.வைச் சேர்ந்த மாண்பு மிகு டி.ஆர்.பாலு அவர்கள் கப்பல்துறை அமைச்சராக இருந்த நல்வாய்ப்பில் தமிழர்களின் 150 ஆண்டுகால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ரூ.2427 கோடியில் தொடங்கப்பட்டு,பெரும் பாலான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இல்லாத ராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்து முடக்கி இருப்பது - தமிழ்நாட்டு வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டை என்பதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி, இத்தகைய அணுகுமுறையைக் கைவிடவேண்டும் என்று தமிழக முதலமைச்சரை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7: சமூகநீதியில் அ.இ.அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையும், துரோகமும்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக 2011 இல் வந்த மாண்புமிகு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், மிகவும் வெளிப்படையாக சமூகநீதிக்கு எதிரான வகையில் செயல்பட்டு வருவதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

1. சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்டு, நடைபெற்று வந்த புதிய சட்டமன்ற கட்டடத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான நியமனத்தில் மூத்த மருத்துவத் துறை ஆலோசகர்கள், இணை ஆலோசகர்கள், இளநிலை ஆலோசகர்கள், பதிவாளர்கள், நிலைய மருத்துவர்கள் உள்ளிட்ட 83 முக்கிய பணிகளில் நிய மனத்துக்கான அரசு விளம்பரத்தில் இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்பது தமிழ்நாட்டின் வரலாற் றிலேயே முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அறிவிப்பாகும்.

திராவிடர் கழகத்தின் கடும் எதிர்ப்பு - ஒத்த கருத்துள்ள சமூகநீதியாளர்களை இணைத்து மேற்கொண்ட நட வடிக்கைகள், தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் இவை காரண மாக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

2. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இரண்டாண்டு படித்துத் தேர்வு பெற்று வந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்துக்காகத் தனியாகத் தகுதித் தேர்வு என்பதே முறைகேடானதாகும். அவர்கள் பெற்ற பட்டயக் கல்வியையே அவமதிப்பதாகும் என்பதால், இந்த முறையைக் கைவிடவேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

அடுத்தகட்டமாக ஆசிரியர் தகுதித் தேர்வில், ஆசிரியர் கல்வித் தேசியக் கவுன்சில் (NTCE) இட ஒதுக்கீடுப் பிரிவினருக்கு தளர்வு மதிப்பெண் வழங்கிட வாய்ப்பு அளித்திருந்தும், மற்ற மாநிலங்கள் அந்த முறையைப் பின்பற்றியிருந்தும், தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி வேரோடிய தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அண்ணா தி.மு.க. அரசு - அதன் முதல்வர் - அந்த வாய்ப்பை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்காத நிலையில், அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகள் கண்டனக் குரல் கொடுத்தும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எச்சரித்தும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கும் சென்ற நிலையில், தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப் பட்டவருக்கும் தகுதி மதிப்பெண் 60 விழுக்காடு என்று இருந்ததை 55 விழுக்காடாகக் குறைத்து சட்டப்பேர வையில் அறிவித்தார் முதலமைச்சர். இதில்கூட தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் என்பது சமூகநீதியாகாது.
இந்த அறிவிப்புக்கூட 2013 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவித் திருப்பது - அதற்கு முந்தைய ஆண்டில் தேர்வு எழுதியவர்களைத் தண்டிக்கும் சமூக அநீதியாகும் என் பதை இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக் காட்டி, ஒரு கண்ணில் வெண்ணெய்யும், இன் னொரு கண் ணில் சுண்ணாம்பும் வைக்கும் முறைக் கேட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

3. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. என்பது பார்ப்பனக் குரலை எதிரொலிக்கிறது என்பதற்கு அக்கட்சி வெளியிட்டுள்ள 16 ஆவது மக்களவைத் தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

தேர்தல் அறிக்கை 20 ஆம் பக்கத்தில் 13 ஆவது அம்ச மாக சமூகநீதி எனும் தலைப்பில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகநீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற் படுத்தப் பட்ட மக்கள் (Socially And Educationally Backward Classes of Citizens) என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதற்கு மாறாக பொருளாதார ரீதியாக என்ற சமூக நீதிக்குத் தொடர்பில்லாத - எதிரான சொல்லைப் பயன் படுத்தி சமூகநீதியின் ஆணிவேரையே அறுக்கும் வேலை யில் ஈடுபட்டு இருப்பதற்கு இப்பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1979 இல் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்திய நிலையில், திரா விடர் கழகம் முன்னின்று, சமூகநீதி சக்திகளை ஒருங் கிணைத்து மாநாடுகளையும், பல்வேறு போராட்டங் களையும் நடத்தியது.

அக்காலகட்டத்தில் 1980 இல் நடைபெற்ற மக்க ளவைத் தேர்தலில், அதுவரை தேர்தலில் தோல்வியைக் கண்டிராத எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. - தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 37 இடங்களில் கடும் தோல்வியைச் சந்தித்தது என்பது தமிழக முதலமைச்சரும், அ.இ. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரு மான செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி, நினைவூட்டி எச்சரிக்கிறது.

தேர்தலில் தோல்வி கண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் பொருளாதார அளவுகோலை நீக்கியதோடு, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு அதுவரை 31 சதவிகித இட ஒதுக் கீட்டின் அளவை 50 சதவிகிதமாக உயர்த்தினார் என்ற வரலாற்றுத் தகவலையும் முதலமைச்சருக்கு இப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் வெளியிட்டுள்ள பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்ற வரியை நீக்கி, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று திருத் தம் வெளியிடுமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்குக!

தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்தது மனிதாபி மானமற்றதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களை பிடி வாதமாகப் பணி நியமனம் செய்யாதது நீதிமன்ற அவமதிப்புமாகும் என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு அவர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9: சோதிடப் பாடத் திட்டத்தைக் கைவிடுக!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோதிடவியல் பட்டயப் படிப்பு கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவு கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்ற அடிப்படைக் கடமைக்கும், அறிவியலுக்கும் விரோத மான மூட நம்பிக்கையைக் கற்பிக்கும் பிற்போக்குத் திட்டம்.

ஆதலால், அதனைக் கைவிடவேண்டும் என்று தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரையும், ஆட்சி மன்றக்குழு உறுப் பினர்களையும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடவியல் பாடத் திட்டத்தை வைத்தபோது திரா விடர் கழகம் மேற்கொண்ட போராட்டத்தின் (20.1.2012) காரணமாக அத்திட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கைவிட்டது என்பதையும் இப்பொதுக்குழு நினைவூட்டுகிறது.

இப்பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மண்டலத் தலைவர் நெய்வேலி வெ.ஜெயராமன், மாநில ப.க. தலைவர் வா.நேரு, கலைத் துறைச் செயலாளர் சித்தார்த்தன், மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி,  நாகர்கோவில் சங்கரநாராயணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை தே.எடிசன் ராஜா ஆகியோர் முன்மொழிந்தனர்.

கழக பொதுக்குழுவில் இரண்டு குறுந்தகடுகள் வெளியீடு
தஞ்சாவூர், மார்ச் 16- இன்று (16.3.2014) காலை தஞ்சாவூரில் நடைபெற்ற திரா விடர் கழக பொதுக்குழுவில், 14.3.2014 அன்று கலைஞர் தொலைக் காட்சி யில் ஒளிபரப்பான விடியலே வா நாடாளுமன்றத் தேர்தல்-2014, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து தமிழர் தலைவரின் கருத்துரை அடங்கிய குறுந்தகடும் (வீடியோ), 14.3.2014 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற 16ஆம் மக்களவைத் தேர்தலும், மக்கள் கடமையும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவரின் கருத் துரை அடங்கிய குறுந்தகடும் (ஆடியோ) ஆகியவை வெளியிடப்பட்டது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வெளியிட, கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி, பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் ஆகியோர் பலத்த கரவொலிக்கிடையே பெற்றுக் கொண்டனர்.

                                -------------------------------------"விடுதலை"16-03-2014

23 comments:

தமிழ் ஓவியா said...


குஷ்வந்த்சிங்


ஆன்மீகப் பிரச்சாரம் செய்து வரும் தோழர் சுகிசிவம் கொஞ்சம் வித்தி யாசமானவர். தொலைக் காட்சிகளில் தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பற்றி எல்லாம்கூட எடுத் துக்காட்டி தொலைக் காட்சிகளில் உபந்நியாசம் செய்யக் கூடியவர்.

தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட கடைசி பிறந்த நாள் கவியரங்கில்கூட (17.9.1973) (உவமைக் கவிஞர் சுரதா தலைமையில்) கலந்து கொண்டு தந்தை பெரியார் பற்றிப் பாடியவர் சிவம்.

மார்ச்சு 9 (2014) கல்கி இதழில் கடைசிப் பக்கத் தில் ஒரு தகவலைச் சொல்லி இருக்கிறார்கள் - சோதிடம் பற்றிய தகவல் அது.

ஒரு சின்ன துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு ஓர் ஆராய்ச்சி யாளரின் அக்கறையுடன் தொலைக்காட்சியை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் என் நண்பர் தலைவிரிகோல மாக ஓர் இளம் - பெண் அன்றைய ராசிப் பலன் களைப் பெரிய கவிதை போல இரசித்து, தலை யசைத்து வாசித்துக் கொண்டிருந்தார்.

கடகராசி நேயர்கள் அன்று உடுத்த வேண்டிய ராசியான நிறங் கள், நகர வேண்டிய திசை கள் போகக் கூடாத இடங் கள் பற்றித் தலைவிரிப் பெண்மணி சொன்னதும் புன்னகையுடன் பீரோவி லிருந்து தமக்கு ராசி என்று சொல்லப்பட்ட நிற பேன்ட் சட்டை (சகிக்காத கலர் மேட்ச்) தேடி எடுத்து உடுத் திக் கொண்டார் எந்தநிற உடையென்று நாள்தோறும் அந்த அம்மணி சொல் வதைத் தாம் பின்பற்றுவ தாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

எனக்குப் பயமாய்ப் போய் விட்டது. ஒரு வேளை அன்று ராசியான நிறம் அந்த அம் மணி சொல்லாமல் போய் விட்டால், நண்பர் எவ்வித ஆடையுடன் வெளியில் போவார் என்று எண்ணிக் கலங்கி விட்டேன்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி குஷ்வந்தசிங், ஒரு நிகழ்வு சொன்னார். ஒரு முறை பத்திரிகை அச் சேறும் வரை ஜோதிடப் பலன் வந்து சேரவில்லை என்பதால் பழைய பலன் களைப் பார்த்து தாறு மாறாக அவரே எழுதி அச்சேற்றி விட்டாராம். அந்த வாரம் ஜோதிடப் பகுதிக்கு ஏகப்பட்ட பாராட் டாம். பலன் துல்லியமாக இருந்தது என்று கடிதங்கள் குவிந்தனவாம்!

இந்தத் தகவலை எழுதி யுள்ள சுகிசிவம் இன் னொரு சொந்தத் தகவலை யும் குறிப்பிட்டுள்ளார். என் நண்பனும் நானும் 27.8.1953 அன்று ஒரே நாளில் பிறந்தோம். ஆனால் எங்கள் வாழ்வு பல வகையில் மாறுபட்டது. அவருக்கு ஆண் வாரிசு கள், எனக்கோ பெண் வாரிசுகள். அவர் தாய் முன்னதாக இறந்தார்.

எனக்கோ என் தகப்பனார் முன்னதாகவே மறைந்தார். இவ்வளவுக்கும் எங்கள் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் என்று போட்டு உடைத்து விட் டார் சுகிசிவம்.
சோதிடப் பிரியர்களே சொல்லுவது கருஞ் சட்டைக்காரர்கள் அல்லர் - ஆன்மீகப் பிரச்சாரகர் சுகிசிவம்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/77051.html#ixzz2wB4f9SAs

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


ஏழுமலையான் வரமோ!

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட கிடைத் துள்ள வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருது கிறேன்.

- ஞானதேசிகன், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்

அந்த இறைவன் ஏழு மலையானாக இருந்தால் மூன்று கோடாக (நாமம்) முடியுமே! ஏழுமலையானைத் தவிர்த்து என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் அல்லவா! (தமிழ், தமிழர், இனவுணர்வு, இவையெல்லாம் ஒவ்வாமை என்று கருதும் காலம் வரை தமிழ்நாட்டில் காங் கிரசின் நிலைப்பாடு இதேதான்!).

மோடியும் - கோடியும்

மோடியின் தேர்தல் சுற் றுப் பயணத்துக்காக மட்டும் மோடிக்காகச் செலவிட இருப் பது 2000 கோடி ரூபாயாம்!

கார்ப்பரேட் கம்பெனி கள் சுற்றிலும் இருக்கும் போது இரண்டாயிரம் என்ன இரண்டு லட்சம் கோடி ரூபாய்கூட சும்மா தூசு மாதிரிதான்! ஆமாம், தேர்தல் ஆணையம் என்ன செய்கிறதாம்? அவா ளுக்கே வெளிச்சம்!

ஆம் என்க!

எல்லாக் அரசியல் கட்சி களையும் குப்பைத் தொட்டி யில் போட வேண்டும்.
- கெஜ்ரிவால் ஆம் ஆத்மி

அதுசரி. இவர் நடத்து வதும் அரசியல் கட்சிதானே - இவரை? தூக்கி எங்கே போடு வதாம்?

காங்...கிரஸ்

ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிடுவ தற்காக நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட முந்தி நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் என்னடா என்றால் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேர்த லில் நிற்கத் தயங்குகிறார்கள்.

இந்த நிலையில் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண் டிப்பாகப் போட்டியிடடே தீர வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் வற்புறுத்துகிறது. திராவிடக் கட்சிகளின் அரு மையை இப்பொழுதாவது தேசியக் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி....

இடது... சாரிகள்

தமிழ்நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியும், மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியும் தலா 9 இடங்களில் கூட்டணி வைத்து போட் டியிடுகின்றன. மற்ற தொகு திகளில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. தி.மு.க.வுக்கு ஆத ரவு இல்லையாம். அப்படி யானால் அணி வாரியாக ஆதரிக்காமல் தனி வாரியாக ஆதரிக்கப் போகிறார்களோ! இதனை முடிவு செய்ய எத் தனை நாள் கமிட்டியோ!

அய்.. ஜே... கே!!

இந்திய ஜனநாயகக் கட்சி - சுருக்கமாக அய். ஜே.கே. என்று பெயர். பி.ஜே.பி. கூட்ட ணியில் பிரச்சினை! (யாருக்குத் தான் அங்கு அது இல்லை?) அக் கட்சியின் பிற மாநிலங் களுக்கான அமைப்புச் செய லாளர் (ஓ, அ.இ. கட்சியோ!) சேலம் லட்சுமணன் கூறுகிறார். தமி ழகத்தில் பா.ஜ.க.வை எந்தக் கட்சியும் கண்டு கொள்ளாத நேரத்தில், நரேந்திரமோடியை அழைத்து வந்து மாபெரும் கூட்டத்தைக் கூட்டி அதை பா.ஜ.க. பெயரில் நாங்கள் நடத்தினோம் நாங்கள் சந்தர்ப் பவாதத்துக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. மாறாக அவர்களின் கொள்கைக்கா கவே கூட்டணி வைத்தோம். ஆனால் எங்களுக்குக் கேட்ட தொகுதியை ஒதுக்கவில்லை என்று ஒப்பாரி வைத்துள்ளார்.

பூனைக்குட்டி இப்பொ ழுது வெளியில் வந்துவிட்டது. திரு. பச்சை முத்து செலவில் குளிர் காய்ந்தது பா.ஜ.க. என்று தெரிய வந்துள்ளது. பி.ஜே.பி.யை நம்பினால் இதுதான் கெதி - இப்பொழுதாவது தெரிந்து கொண்டால் சரி....

அது சரி.. பா.ஜ.க.வின் கொள்கைக்காகக் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறுகிறாரே - அது என்ன அப்படிப்பட்ட கொள்கை ஒரு பிற்படுத்தப் பட்டவர் உயர் ஜாதி சூழ்ச்சி வலைக்குள் சிக்கலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/77053.html#ixzz2wB5A8IgN

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள்:


அன்னையார் பணி வெல்க வெல்கவே!

இன்று (16.3.2014) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்
நினைவு நாள்.

நம்மைப் பொறுத்தவரை நமக்கு இது ஒரு வரலாற்றுக் குறிப்பு
நாள்! அவ்வளவுதான்.

ஏனெனில் அன்னையார்தம் அரும்பணி தொண்டறம் -
தொடர நம்மை மேலும் தீவிரமாக அர்ப்பணிக்க
உறுதி - சூளுரை எடுக்க வைத்த - நாளாயிற்றே!
உலகிலேயே வசவுகளால், துவளாது,
தொய்வடையாது, தொடர்ந்து என்பணியில்
(எம் அய்யாவைக் காப்பாற்றி வாழ வைக்கும்
கடமையில்) என்றும் ஓயமாட்டேன், ஒதுங்க
மாட்டேன் என்று உறுதி மலைமீது நின்று பிரகடனம்
செய்த எம் அன்னையார் வாழ்ந்த காலம்
59 ஆண்டுகளே!

இதில் 45 ஆண்டுகளுக்குமேல் அய்யா
விடமே அன்னையார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

தனக்கு அறிவுப்பற்று, மனிதப்பற்று தவிர,
வேறு எந்தப் பற்றுமே கிடையாது என்று
முழங்கிய அறிவு ஆசான் தந்தை பெரியாரையே
பற்றிக் கொண்டு, தனக்குள்ள இளமை, வலிமை
ஆகியவற்றையெல்லாம் துறந்து, தூய
தொண்டறத்தின் உருவமாய் உயர்ந்து
தன்பணியில் தளராது இறுதி மூச்சடங்கும்வரை
கொள்கைகளாக தன்னை எரித்த
ஈடு இணையற்ற எங்கள் அன்னையே
எரிந்து எரிந்து தன்னை அழித்து
ஒளி தந்து, இன்று எரிந்த பின்பும்
மங்காத வெளிச்சமாய், எங்கள் ஒளியாய்,
வழியாய் திகழும் எம்தந்தையின் காவல்
அரணே!

அய்யாவின் இமை மூடியபின், அவர் தந்த
இயக்கத்தைக் காத்துவளர்த்த எங்கள்
அன்னையே
உனது நினைவு நாளில்
- நீங்கள் நடத்திய இராவண லீலா - இராம -
இராவணப் போர் இன்று தேர்தல் களத்தில்
நடைபெறும் கால கட்டத்தில், உங்களின்
உறுதியை நாங்கள் ஏற்று
உங்கள் பயணத்தைத் தொடருகிறோம் அன்னையே!
நீங்கள் தந்த நெஞ்சுரத்தைத் தவிர,
தந்தை அளித்தகொள்கைளைத் தவிர,
வேறு எதையும் ஏற்காது
பணி தொடருவோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/77055.html#ixzz2wB5SXEKH

தமிழ் ஓவியா said...


மறைந்த தலைவர்கள் சிலைகளை மறைக்கத் தேவையில்லை தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


சென்னை, மார்ச். 16- மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மறைந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதுகுறித்து கேள்வி எழுப் பப்பட்டது.

அதற்கு பிரவீண்குமார் அளித்த பதிலில், கட்சித் தலைவர்களின் சிலைகளை மட்டுமே மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது. மறைந்த தலைவர் களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

செல்பேசி குறுஞ் செய்தி மூலம் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள் ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்ப டுத்தியுள்ளது. இந்தப் புதிய வசதியை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அதி காரி (அய்.டி.,) அஜய் யாதவ் வெளியிட்டார். அதன்படி, 94441 23456 என்ற செல் போன் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பலாம்.

செல்பேசி புதிய வசதி: வாக்குக்கு பணம் கொடுத் தால் அதனை பெறக் கூடாது எனவும், அப்படி பணம் கொடுக்க கட்டாயப் படுத்தினால் அதனை புகைப் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதற்காக செல்பேசியில் தனியான வசதி உருவாக்கப்படும். இந்த புதிய வசதி அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப் படும் என்று பிரவீண் குமார் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/77052.html#ixzz2wB5gDCNB

தமிழ் ஓவியா said...


நம்மைப் பிடித்த நோய்


- குடந்தை கருணா

மோடியை வேண்டுமென்றே ஊடகங்கள் தாங்கிப்பிடிக்கின்றன என ஊடகங்களின் ஒரு சார்பு நிலையை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் அம்பலப்படுத்தியதற்கு ஆத்திரப்படும் ஊடகங்கள், தமிழ் நாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கிலும் அதே ஒரு சார்பு அணுகுமுறையைத் தானே கையாள்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்திற்கு வழக்காடாமல் விடுப்பு எடுப்ப தற்கு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பவானி சிங்கிற்கு அவரது ஒரு நாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு அம்மையாருக்கு வருமானால், அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியாது; தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கை, வாய்தா வாங்கியே இழுத் தடித்து வரும் நிலையில், தற்போது, இறுதி வாதத் திற்கு வழக்கு வந்துள்ளது.

இந்திய அரசியலில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என மேடை தோறும் ஜெயலலிதா பேசி வரும் நிலையில் இந்த வழக்கின் இறுதி வாதத்திற்கு, அரசு வழக்கறிஞர் வராமல் தவிர்ப்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆனால், இந்த செய்தியை நம்மூர் பத்திரிகைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்தன? தினகரன், முரசொலி பத்திரிக்கைகள் தவிர்த்து, மற்ற பத்திரி கைகளான தினத்தந்தி 12-ஆம் பக்கத்திலும், தினமலர் 9-ஆம் பக்கத்திலும், தி இந்து தமிழ், 16-ஆம் பக்கத் திலும், தினமணி 11-ஆம் பக்கத்திலும், டைம்ஸ் ஆப் இந்தியா 9-ஆம் பக்கத்திலும், தி இந்து ஆங்கிலம் 4-ஆம் பக்கத்திலும் செய்தியை வெளியிட்டுள்ளன.

டெக்கான் கிரானிகல், மாலை முரசு பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிடவில்லை. அதே நேரத்தில், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ராஜ் நாத்சிங்கையும், ரஜினிகாந்தையும் சந்தித்தது, தனிப்பட்ட சந்திப்பு என அவரே சொன்னாலும், அதில் அரசியல் இருக்கிறது;

திமுகவிற்கு பாதிப்பாகுமா? என்றெல்லாம் துப்பு துலக்கி, முதல் பக்கத்தில் செய்தி வெளியிடும் இந்த பத்திரிகைகள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதான வழக்கில், நமக்குத் தெரிந்து, அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளதை ஒரு முக்கியம் வாய்ந்த செய்தியாக கருதாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நம்மைப் பிடித்த நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சொன்னாரே, அது தான் நினைவுக்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/77058.html#ixzz2wB5uqgeZ

தமிழ் ஓவியா said...

இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தாமும் உறுதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் போர்க்குற்றம்: சுதந்திரமான விசாரணை, தொடர் நடவடிக்கை தேவை!


இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!

வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!



இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.

உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் _ - நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.

இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.

இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!

குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!

சர்வதேச விசாரணை _- சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு -_ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.

தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக் கொண்டபடி செய்திருக்க வேண்டும்;

இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!



- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஒரு சிங்களரின் உள்ளத்திலிருந்து...


சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர் நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி.

மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து...

இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக்கென்ற தனித்த சுயஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார்கள். 75 சதவீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவதுமாக மாற்றி எழுத வேண்டும். தமிழர்களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை அவர்களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.

அய்.நா. சபையின் மூன்றாவது தீர்மானம் எதையாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய். ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம். உலக நாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.

என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார்கள். தேசப் பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர்களைத்தான்; இலங்கையை அல்ல. இலங்கையில் எல்லாத் தரப்பினரும் அமைதியோடும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனது கொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடுவது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

தமிழ் ஓவியா said...


தஞ்சை என்றால் தஞ்சைதான்!


தஞ்சையிலே பொதுக் குழு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் மறு வார்த்தை சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டனர். இப்பொழுதுதான் கடந்த டிசம்பர் 2இல் மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்தினார்கள் என்றாலும் எப்பொழுது சொன்னாலும் சிறிதும் தயங்காமல் சிறப்பாக செய்து முடிப்பது தஞ்சை மாவட்டக் கழகம் - தஞ்சை என்றால் தஞ்சைதானே! (பலத்த கரவொலி). (16.3.2014)

விடுதலைச் சந்தா: 67 விடுதலை சந்தாக்களுக்கான தொகையான ரூ.35 ஆயிரத்தை விடுதலை ஆசிரியர், கழகத் தலைவர் அவர்களிடம் பொதுக் கூட்டத்தில் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் பொறுப்பாளர்கள் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினர்.

Read more: http://viduthalai.in/e-paper/77087.html#ixzz2wGzLt2i5

தமிழ் ஓவியா said...

பாதாமை பயமில்லாமல் சாப்பிடலாம்

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு.

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளே வனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்...

இதயத் துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கெனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை அய்ந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப்போனால், பாதாம் எடுக்காத வர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமே கூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக் கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/77084.html#ixzz2wH2M4zhw

தமிழ் ஓவியா said...


வயிறு சிரிக்க பயிறு சாப்பிடுங்க


நமது உடலில் வயிற்று பகுதியில் பல்வேறு உடல் உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றின் மொத்த சீரான இயக்கம்தான் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. எனவே அவற்றை நோய் வரும் முன்னே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்வது நமது கடமை. அவ்வாறு இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது.

இதனை தான் சித்த மருத்து வர்கள் வலியுறுத்துகின்றனர். வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை. அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர்.

இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட் களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் மனது இலகுவாகும், நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.

இந்த பயறு வகைகளில் பி காம்பளக்ஸ், வைட்டமின் பி1, பி2, பி3, பிஎஸ், பி6, பி12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் டி, இ, சி மற்றும் கே, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.

பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத் தையும் கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத் துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது.

தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சினைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2ho41j

தமிழ் ஓவியா said...

தலைவலிக்கு கை வைத்தியம்

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலை வலி குறையும்.

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றி யில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படி யென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலை வலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற் றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2qaCzU

தமிழ் ஓவியா said...

வைட்டமின் சி நிறைந்த நெல்லி!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக் கனியில் உள்ளது.

இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்ற வற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.

Read more: http://viduthalai.in/page-3/77083.html#ixzz2wH2wGzJf

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் தொழிலாளர்மீது முறையற்ற முறையில் துப்பாக்கிச் சூடு! தமிழர் தலைவர் கண்டனம்!


நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அறப் போரில், அங்குள்ள பாதுகாப் புப் படையினர், தேவை யின்றி, துப்பாக்கிச் சூடு நடத்திய தினால், ராஜா என்ற ஒரு தொழிலாளியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக் கும், மிகுந்த துயரத்திற்கும் உரியது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

துப்பாக்கிச் சூடு என்பதை எந்தக் கட்டத்தில் தவிர்க்க இயலாத நிலையில், நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம், காவல் படைகளுக்குப் போதிய பயிற்சியை அளிக்க மத்திய மாநில அரசுகள் தவறக் கூடாது.

அதீதமாக தமது அதிகார எல்லை தாண்டி நடந்து கொண்ட காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணை கொடுத்தவர் யார்? ஆணை யில்லாமலே தன்னிச்சையாக இப்படி நடந்து கொண்டாரா என்பது போன்ற பல கோணத்தில் அரசுகள், சுதந்தரமான நீதி விசாரணை நடத்தி, மனித உயிர்கள் விலை மதிப் பற்றவை என்பதை உணர்த்த வேண்டும்.

பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு தேவை!

டெல்லி போன்ற பெரு நகரங்களில்கூட பெருங்கூட்டத்தைக் கலைக்க, நீர்ப் பீய்ச்சி அடிப்பது, வானத்தை நோக்கி மேலே சுட்டு கூட்டத்தைக் கலைய வைப்பது போன்ற சில முறைகள் பின்பற்றப் படுகிறபோது, இங்கே இப்படி நிகழ் வுகளா? எனவே இதற்கு ஒரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க ஆய்வு நடத்தி, புதிய வழிகாட்டும் நெறி முறைகளை காவல் துறையினருக்கு உணர்த்த வேண்டும்.

உயிர் இழந்தவருக்கு சுமார் 10 லட்ச ரூபாய் இழப் பீடாகத் தர வேண்டியதும் மனிதாபிமானமாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



18.3.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/77151.html#ixzz2wMjVXLbj

தமிழ் ஓவியா said...


போலி என்கவுண்டரில் சிக்குகிறார் மோடியின் நண்பர் அமித்ஷா சி.பி.அய். அழைப்பாணை!


அகமதாபாத், மார்ச் 18- போலி என் கவுண்டர் வழக் கில் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடியின் அதி முக்கியமான நண்ப ரும், குஜராத் மாநில முன் னாள் உள்துறை அமைச் சரும், உத்தரப்பிரதேசத்தில் நடக்க இருக்கும் தேர்த லுக்கான பி.ஜே.பி.யின் மோடியின் பொறுப்பாளரு மான அமித்ஷா சிக்கியுள் ளார். சி.பி.அய். சிறப்பு நீதி மன்றம் அவருக்கு அழைப் பாணை விடுத்துள்ளது.

15-6-2004-இல் குஜராத் தில் இஷ்ராத் ஜஹான், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக் மற்றும் இரு வர் குஜராத் காவல்துறை யினரால் பொது இடத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். பிரனேஷ்பிள்ளை என்கிற ஜாவீத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை அளித்த முறையீட்டின்பேரில் சி.பி. அய். சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. இரண்டு குற்றப் பத்திரிகைகள் சி.பி.அய். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டும் குஜராத் முதல்வருக்கு நெருக்க மானவரும், முன்னாள் உள் துறை அமைச்சருமாகிய அமித்ஷா மற்றும் அப் போது பணியிலிருந்த அகமதாபாத் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை. அவர்கள் இருவரையும் நீதிமன்றத் தில் நிறுத்தி குற்ற விசா ரணையைத் தொடர வேண் டும் என்று மனுதாரராகிய கோபிநாத் பிள்ளை கோரி யுள்ளார். போலி என்கவுண் டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் காவல்துறைத் தலைவர் கே.ஆர்.கவுசிக் ஆகியோருக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கீதா கோபி தாக்கீது அனுப்பி உள்ளார். மேலும், இவ்வழக்கு விசாரணை மார்ச் 26ஆம்தேதி நடை பெற உள்ளது.

இவ்வழக்கில் தொடர் புடைய முன்னாள் உள் துறை அமைச்சர் அமித்ஷா குறித்து போதுமான ஆதா ரங்கள் இருப்பதாக புல னாய்வுத் தகவல்கள் கூறு கின்றன. அய்.பி.எஸ். அதிகாரி கிரிஷ் சிங்கால் மற்றும் மற்ற காவல் துறை அதிகாரிகள் பரத் பட்டேல், டி.எச்.கோஸ்வாமி ஆகி யோர் கொடுத்துள்ள வாக்கு மூலங்களில் போலி என் கவுண்டரில் அமித்ஷாவின் பங்களிப்பு குறித்து கூறி யுள்ளனர். ஜி.எல்.சிங்கால் போலி என்கவுண்டருக்கு முதல்வர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷா வும் உத்தரவிட்டனர் என் பதை தெளிவாகவே கூறி யுள்ளார். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நட வடிக்கையில் அரசு இருப்ப தாகக் கூறப்பட்டு போலி என்கவுண்டர் நடைபெற்ற தாக சிறையிலடைக்கப் பட்ட அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா எழுத்து மூலம் கூறியுள்ளார். மேலும், அவர் அதில் குறிப்பிடும் போது அதிகாரிகளும், குற்றப்பிரிவினரும் 2002 முதல் 2007வரை அரசின் தீவிரவாத ஒழிப்புக் கொள் கையின்பேரால் தொடர் நடவடிக்கையில் ஈடுபடுத் தப்பட்டனர் என்கிறார்.

முன்னாள் இந்திய புல னாய்வுத் துறையின் முன் னாள் இயக்குநர் ராஜிந்தர் குமார் வன்சாராவிடம் முதல்வரிடம் பேசுமாறு கூறியபோது பாதுகாப்பான தாதி, கலி தாதி எல்லோரும் அறிந்தது என்னவெனில் மாநகர குற்றப்பிரிவைச் சேர்ந்த அனைவரையும் முதல்வர் நரேந்திர மோடி யும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நன்கு தெரிந் தவர்கள்தான் என்றார். சிங் கால் கூறும்போது தன்னு டைய அழுத்தமான எதிர்ப் பையும் மீறி அந்தப் பெண்ணை தீவிரவாதி என்று முத்திரை குத்திக் கொன்றுவிட்டனர் என்றார். ராஜிந்தர் குமார், வன்சாரா, அமித்ஷா ஆகியோரிடை யேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு கள் உள்ளன. சூன் மாதத் தில் 18 தொலைபேசி அழைப்புகள் அமித் ஷா, வன்சாராவுடன் பேசுவது பதிவாகி உள்ளன. அந்த பதிவுகள் நேரிடையான சாட்சிகளாகவே உள்ளன.

மனுதாரரான கோபி நாத்பிள்ளையின் வழக் குரைஞர் ஷம்ஷாத் பதான் நீதிமன்றத்தில் தன்வாதத் தில் அமித் ஷா, ராஜிந்தர் குமார், வன்சாரா ஆகியோ ருக்கிடையே போலி என் கவுண்டர் திட்ட மிட்டது தொடங்கி செயலை முடித் ததுவரை உள்ள தொடர்பு களுக்கு ஆதாரம் உள்ளது என்று கூறினார். என்கவுண்டர் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ர வரி 5ஆம் தேதி அன்றுதான் இரண்டாம் குற்றப்பத்திரி கையை சி.பி.அய். தாக்கல் செய்து, அதில் ராஜிந்தர் முக்கியப் பங்காற்றியவர் என்று கூறி உள்ளது. துஷார் மிட்டல், எம்.கே.சின்கா, ராஜீவ் வெங்கெடே ஆகிய மூன்று அய்.பி. அதிகாரி களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. முதல் குற்றப்பத்திரிகை யில் போலி என்கவுண்டர் என்று பெயரிட்டு, குஜராத் காவல்துறை அய்.பி. அதி காரிகளுடன் இணைந்து செயல் பட்டதாகக் கூறி உள்ளது.

அய்.பி.எஸ் அதிகாரி களான டி.ஜி.வன்சாரா, பி.பி.பாண்டே, கிரிஷ் சிங் கால் ஆகியோரைப் பெய ருடன் குறிப்பிட்டுவிட்டு பின்பு பேரட், என்.கே. அமீன், ஜே.ஜி.பார்மர், அனாஜ் சவுத்ரி ஆகியோ ரையும் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/77145.html#ixzz2wMjfWfHU

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.மீது குதிரை சவாரி செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இதுவரை பின்புலத்தில் இருந்து அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யை இயக்கி வந்தது - இப்பொழுது மிகவும் வெளிப்படை யாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது; தனது ஹிந் துத்துவா கொள்கையை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திக்குமாறு கூறி விட்டது. அதன் விளைவாகத்தான் பி.ஜே.பி.யின் மாநிலங்களவையின் தலைவர் அருண் ஜெட்லி மிக வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோயில் பற்றி எதுவும் இடம் பெறுவதில்லையே - ஏன்?

அருண்ஜெட்லி: தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது குறித்து அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். எங்களுடைய அடிப்படை நோக்கம் குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகி றீர்கள் (ணிநீஷீஸீஷீனீவீநீ ஜிவீனீமீ ஞிணீமீபீ 22.1.2014).

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னதை வழிமொழிகிற வகையில் அருண்ஜெட்லி பேட்டி கொடுத்திருக்கிறாரே!

எந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். குதிரை சவாரி செய் கிறது என்பதற்கு ஒரு தகவலை நினைவூட்டினாலே போதுமே.

பாகிஸ்தானுக்குச் சென்ற எல்.கே. அத்வானி அங்கு முகம்மதலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள் எழுதி விட்டாராம். ஜின்னாவின் மதச் சார்பற்ற தன்மை பற்றியும் கூறி விட்டாராம். விளைவு என்ன ஆனது தெரியுமா? அத்வானியை பிஜேபியின் தலைவர் பொறுப்பிலிருந்து சீட்டுக் கிழித்துவிட்டதே! அதன்பிறகு பிரதமருக்கான வேட்பாளராக எல்.கே. அத்வானி இருந்தாலும், பிஜேபி தலைவர் பதவியைக் கடைசி வரை அவருக்கு அளிக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதிக்கவேயில்லை.

பிஜேபி தலைவர் பொறுப்பிலிருந்து அவரை விலகும்படிச் செய்த சூழ்நிலையில், 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில் அத்வானி மனம் நொந்து என்ன சொன்னார்?

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையைக் கலக் காமல் பிஜேபியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது பிஜேபிக்கோ, ஆர்.எஸ்.எசுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழி வகுக்கும் என்று ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸில் இருந்து கட்சி வளர்ச் சிக்காக பி.ஜே.பி.க்கு அனுப்பப்பட்ட அத்வானியே ரத்தக் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். நாட்டாண்மை செய்கிறது. 4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக்காட்சி அலை வரிசையில் ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி அளித்த பேட்டி கவனிக்கத்தக்கது.

கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட்கண்ட்ரோ லாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி...

சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்? ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?

கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங்களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரகர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும் திறமை யையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பி.ஜே.பி.க்கு, ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண்டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளைச் செய்வார்கள். அதே போல தமிழ்நாட்டுப் பிஜேபிக்கு எங்கள் தகுதி வாய்ந்த இல. கணேசனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி கூறினாரே!

வாஜ்பேயி தலைமையில் மத்தியில் பிஜேபி ஆட்சி யில் இருந்தபோது அரசாங்கத்தின் இரகசியங்கள் எல்லாம்கூட ஆர்.எஸ்.எசுக்கு அறிவிக்கப்பட்டன - இராணுவ இரகசியம் உட்பட!

1999 மே 11,13 ஆகிய இந்நாட்களில் மத்திய பிஜேபி கூட்டணி அரசு ராஜஸ்தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக மிக முக்கிய மான இரகசியம் இது! குடியரசு தலைவருக்குக்கூட முதல் நாள்தான் தெரிவிக்கப்படும் என்றால் - இது எவ்வளவு உண்மையான பரமரகசியம் என்பது வெளிப்படை!

ஆனால் என்ன நடந்தது? பொக்ரானில் அணு குண்டு வெடித்த அதே நாளில் - நேரத்தில் ஆர்.எஸ். எஸின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் அணு ஆயுத இந்தியா என்ற தலைப்பில் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை முன்னிறுத்தி சிறப்புக் கட்டு ரையே வெளியிட்டது என்றால் இதன் பொருள் என்ன?

குடியரசு தலைவருக்குத் தெரிவதற்கு முன்பே ஆர்.எஸ்.எசுக்குத் தெரிகிறது என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்தான - இரகசியத்தை பாதுகாக்கத் தவறிய ஆட்சி பிஜேபி ஆட்சி என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, பிஜேபிக்கு வாக்களிப்பது என்பது வெளிப்படையாக ஆர்.எஸ்.எசுக்கு வாக்களிப்பதாகத் தான் பொருள்.

ஆர்.எஸ்.எஸின் குணம், மணம் எத்தகையது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனவே வாக்காளர்ப் பெரு மக்களே உஷார்! உஷார்!! கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்து கொள்ளாதீர்!

தமிழ் ஓவியா said...


கடவுள் - மதம்


மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண் டாக்கக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டிலோ, மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக் கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள்.

- (விடுதலை, 16.5.1968)

Read more: http://viduthalai.in/page-2/77157.html#ixzz2wMklOwLv

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை - 18.3.2014



பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்! நேற்றையதினம் நெய்வேலி யில் உள்நாட்டுப் போர் ஒன் றே நடைபெற்றிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தில் ஒப்பந்தத் தொழி லாளியாகப் பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்கு மார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நெய் வேலி இரண்டாவது சுரங்கத் தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே கலவரம் மூண்டு இரு தரப் பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார் கள். தொழிலாளர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியதில், பல தொழி லாளர்கள் காயமடைந்துள் ளார்கள்.

தொழிலாளர்களைத் தாக்கியதோடு நிறுத்தாமல், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை யினர் அடித்து நொறுக்கிய தில், 20 மோட்டார் சைக் கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட் டிருக்கிறார். பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாக செய்தி வந்திருக்கிறது. தொழிலாளர் கள் தாக்கப்பட்டதைக் கண் டித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதாகவும், நிறு வனப் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்ற தாகவும் அவர்களுடைய கேமராக்கள் நொறுக்கப் பட்டதாகவும் பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச் சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்ததாக வோ, தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தியதாகவோ தகவல்கள் வரவில்லை.

காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி தான் சம்ப வங்கள் நடைபெற்ற பிறகு அதிரடிப்படையினரோடும், வேறு சில அதிகாரிகளோடும் அங்கே வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வன்முறைகள் ஆங் காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இதெல்லாம் தக்க உதாரணங்களாகும். துப்பாக் கிச் சூட்டில் இறந்த தொழி லாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசி னால் இதுவரை அறிவிக்கப் படவில்லை. உடனடி அரசு நிர் வாகத்தில் இருப்போர் நெய் வேலியில் அமைதி திரும்பு வதற்கும், தொழிலாளர் களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு, முதல மைச்சரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக ஆயிரக் கணக்கான காவலரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல் துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத் தைக் களையவும் முன் வர வேண்டுமென்று வற்புறுத்து கிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/77170.html#ixzz2wMluJ85l

தமிழ் ஓவியா said...


கல்கியின் பார்வையில் அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியோ, வளர்ச்சி!


தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று சட்டமன்றத்தில் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், புள்ளி விவரங்கள் சொல்லுவது வேறு மாதிரி இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளின்படி தமிழகத்தில் 2011 இல் 677 பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2013 இல் இதன் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துவிட்டது.

வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இது தொடர்பாக 2012 இல் தமிழகத்தில் 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2009 இல் (தி.மு.க. ஆட்சியில்) அய்ந்தாக இருந்த காவல் நிலைய மரணங்கள், 2013 இல் பதினைந்தாக உயர்ந்துவிட்டது..

சரி... பொருளாதாரத்துக்கு வருவோம்.

விவசாயத்தில் 12 சதவிகிதமும், உற்பத்தித் துறையில் 1.3 சதவிகிதம் வீழ்ச்சியையும் ஜெயலலிதா ஆட்சி கண்டிருப்பதாகத் திட்டக் கமிஷன் கூறுகிறது.

தொழில் வளர்ச்சியில் தி.மு.க. ஆட்சியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், இப்போது14 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

- கல்கி 16.3.2014, பக்கம் 11

- தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை எடுத்துக்காட்டிப் பேசினார், 16.3.2014).

Read more: http://viduthalai.in/e-paper/77179.html#ixzz2wSAdgoSO

தமிழ் ஓவியா said...


தேர்தல் கோண(ங்)ல்கள்


பயன்படுத்திக் கொள்ளலாம்!

இந்தியா முழுமையும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 1593; அதில் தமிழ்நாட்டில் மட்டும் 138 கட்சிகளாம். வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக் கிக்கொள்ள அரசியல் கட்சிகளைச் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற வழி தெரிகிறது!



வைகோவின் சரி! சரி!

சென்னையில் நடைபெற்ற மதி முக கட்சிக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள் சிந்திய முத்துக்கள். பி.ஜே.பி. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது அதில் ம.தி.மு.க. வும் இடம்பெறும். (மாண்புமிகு வைகோ என்று அழைக்கப்பட்டால், மகிழ்ச்சிதான் - நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்!).

ம.தி.மு.க.வுக்கு முதலில் ஒன்பது தொகுதிகள் கேட்டோம்! அவர் களும் தருவதாகச் சொன்னார்கள். திடீரென்று எட்டு தொகுதிதான் தர முடியும் என்றார்கள். சரி! என்றேன். பின்னர் ஒரு நாள் ராம்ஜெத்மலானி போன் செய்து என்னிடம் நீங்கள் ஒரு தொகுதியை விட்டுத் தரவேண்டும் மோடியே இதை உங்களிடம் சொல் லச் சொன்னார் என்றார்.

மோடியே சொல்கிறாரா, சரி! சரி! என்றேன்.

இப்பொழுது ஏழு தொகுதிகள் உறுதியாகிவிட்டன.

சரி!, சரி! எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.

மோடியே நேராகத் தொடர்பு கொண்டு பேசினால், மேலும் இடங் களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் சரி!

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இப்படி சரி என்று சொல்லியிருந் தால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கலாமே! அ.இ. அ.தி.மு.க.வு டன் சேர்ந்து அநியாயத்துக்குத் தோல்வி கண்டதுதான் மிச்சம்! சரி! சரி! என்று இப்படி 2011 தேர்தலில் தேர்தலுக்கே முழுக்குப் போடவேண்டிய நிலையும் ஏற் பட்டு இருக்காதே!
இந்துத்துவாவின் காந்தத்துக்கு வைகோவைப் பொறுத்தவரையில்

சக்தி அதிகம்தான். அது சரி, நமக்கு ஏன் வீண்வம்பு?

ரூ.50 ஆயிரம் ரூ.50 லட்சம் ஆனது!

2009 இல் நடக்கவிருந்த மக்கள வைத் தேர்தலில் கல்லக்குறிச்சிக்குப் பிரச்சாரம் செய்ய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சென்றபோது, ஹெலிகாப்டர் இறங்க ஹெலி பேடுக்கு ரூ.50 ஆயிரம் செலவாம் - இந்த முறை அதே ஊருக்கு அவர் சென்றபோது ஆகியுள்ள செலவு ரூ.50 லட்சமாம்.

வேட்பாளர் மனு தாக்கல் செய் யும்வரை ஆகும் செலவெல்லாம் கட்சியைச் சேர்ந்ததாம் - அதற்குப் பிறகு ஆகும் செலவு வேட்பாளரைச் சார்ந்ததாம்.

அதற்கு முன்பே முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை இதனால்தான் அவசர அவசரமாக அமைத்துக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

சிக்கியது...

பி.ஜே.பி.யிலிருந்து விலகி காங் கிரசில் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உறவினரான கருணா சுக்லாவின் வாக்குமூலம்: மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தனி நபர் களின் பிடியில் பா.ஜ.க. சிக்கிவிட்டது என்று கூறியுள்ளார். எல்லோருடைய சிண்டும் ஆர்.எஸ்.எஸிடம் சிக்கி இருக்கிறது என்பது அதைவிட உண்மையாயிற்றே!

இந்தி - ஓட்டா?

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி போடுவது இந்தி மொழி பேசும் மக்களின் ஓட்டுகளைப் பெறு வதற்கே என்று கூறியுள்ளார் பி.ஜே. பி.யின் தேசிய பொதுச்செயலாளர் அனந்த்குமார்.

அப்படி என்றால், இந்தியை ஏற்றுக்கொள்ளாத தென் மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக மோடிக்கு பட்டை நாமம் சாத்து வார்கள் என்று பொருள்.

மண் சோறு மகாத்மியம்!

திருச்சிராப்பள்ளியில் அ.இ.அ.தி. மு.க. சார்பில் போட்டியிடும் வேட் பாளர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதற்குப் பிறகு, ரயில்வே ஜங்சன் வழிவிடு முருகா (டிராபிக் போலீசோ?) கோவிலுக்கு முன் மண் சோறு சாப்பிட்டுவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார்களாம் - இதற்குப் பெயர்தான் இரட்டை வேடம் என்பது!

பெரியார் சிலைக்கு மாலை போட்டதால், வழிவிடு முருகனுக்குச் சக்தியிருந்தால் அ.தி.மு.க. வேட்பா ளரைத் தோற்கடித்துவிட மாட்டாரா?

அண்ணன் என்னடா - தம்பி என்னடா?

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் சார்பில் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து அவர் தம்பி பவன்கல்யாண் (இவரும் நடிகரே!) அவசர அவசரமாக ஒரு கட்சியைத் தொடங்கி, பி.ஜே.பி. அணியுடன் கூட் டணி சேர்ந்து, அண்ணனை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அண்ணன் என்னடா - தம்பி என் னடா - இந்த அரசியல் கும்ப மேளாவில்!



பதில் இல்லையே - ஏன்?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அவர்கள் பி.ஜே.பி.யைப் பற்றி விமர்சிப்பதில்லையே, ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி. (தோழர் தா.பாண்டியன்கூட குறிப்பிட்டுள் ளார்) இதுவரை ஜெயலலிதா இதற் குப் பதில் அளிக்காதது ஏன்? மவுனம் காப்பது ஏன்?

மவுனம் சம்மதத்துக்கு அடை யாளம் - பி.ஜே.பி.யோடு ரகசிய கூட்டு இருக்கிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் ரகசியம்!

Read more: http://viduthalai.in/e-paper/77177.html#ixzz2wSApk2Bz

தமிழ் ஓவியா said...


நாத்திகம் தோன்றக் காரணம்


எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ, அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.

_ (குடிஅரசு, 21.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/77189.html#ixzz2wSB3jOrP

தமிழ் ஓவியா said...


குஜராத் கலவரத்தின்போது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணம், காணாமற்போனதாம்!

அகமதாபாத் மார்ச் 19- பத்தாண்டுக்கும் மேலாகிவிட்ட 2002 குஜராத் கலவரத் தின்போது மாநில அரசு நிர்வாகம் முடங்கிவிட்டதால் அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்திருந்தார். அந்த ஆவணம் மறைக்கப்பட்டுள்ள தான தகவலைத் தேசிய சிறுபான்மை யருக்கான ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையருக்கான ஆணையத்தின் செயலாளராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள சரிதா ஜே.தாஸ். குஜராத் கலவரத்தின்போது மாநில அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதால் 2002 இல் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி பரிந்துரைத்திருந்தார்.
இவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆவ ணம் மாயமாகிவிட்ட தகவலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தான் பரிந்துரை செய்த அந்த அறிக்கையினை மாற்றிவிட்டு, முக்கிய மான குற்றச்சாட்டுகளையும் நீக்கி உள்ள னர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறு பான்மை யருக்கான ஆணையம் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளது. ஆணையத்தின் அறிக்கைகள், தகவல் கள் அரைகுறையாக இருப்பதாகக் கருதி, தற்போது காணாமற்போன ஆவணத்தை யும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்து தொலைக் காட்சி செய்திகளில் மோடி தன் இதயமே நொறுங்கிவிட்டதாகக் கூறியதைக் கேட்ட போது ஆச்சரியமானேன். என் கடமையை சரிவர செய்யவில்லையோ என வேதனைக் குள்ளானேன் என்று கூறினார். சரிதா ஜே.தாஸ் அளித்த குஜராத் கலவரம் குறித்த விமரிசன அறிக்கை ஆவணங்களிலிருந்து மாயமானது மீண்டும் முறையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆணை யத்தை அணுகினேன் என்றார்.

கடந்த சூலை மாதத்தில் மோராய்ட் டர் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், எந்த இடத்தில் தவறானவை நடந்தாலும், இயற்கையாகவே வருத்தம் தான் ஏற்படும். இந்திய உச்சநீதிமன்றம் இன்று உலகிலேயே நல்ல நீதிமன்றமாக உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த சிறப் புப் புலனாய்வுக்குழு மிக உயர்ந்த, மிகச் சிறப்பான அலுவலர்களைக் கொண்டு இயங்கியது. அந்தபுலனாய்வுக் குழு அறிக்கையும் வந்தது. அந்த அறிக்கையில் நான் பரிசுத்தமானவன் என்று இருந்தது. நாம் ஓட்டுநராக, அல்லது பின் இருக்கை யில் உட்கார்ந்து இருக்கும்போது, நாய்க் குட்டி சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் வருத்தப்படுவோமா இல்லையா? அது போல்தான் இதுவும். நான் முதலமைச்ச ராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் ஒரு மனிதத்தன்மை உள்ளவன். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும், இயற் கையாகவே வருத்தப்படுவேன் -இவ் வாறு ராய்ட்டர் செய்தி நிறுவனத் திடம் மோடி கூறினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அன்றைய ஆணையத் தலைவர் வஜாஹத் ஹபிபுல் லாஹ் முன்னிலையில் விசாரணைக்கு சரிதா ஜே.தாஸ் எழுப்பும் பிரச்சினை வந்துள்ளது. ஆவணங்கள் தொடக்கத்தில் கண்டறியப்பட வில்லை. அப்படியே கிடைத்தாலும், அதில் சரிதா ஜே.தாஸ் ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தர்லோச்சன் சிங் ஆவணம் இருந்தது. சரிதா ஜே.தாஸ் சமர்ப்பித்ததில் முழுமையாக திருத்தப்பட்டு இருந்தது. அதில் மாயமான தகவல்கள்குறித்து நான் விசாரணை நடத்த உத்தரவிட்டேன் என் கிறார் ஹபிபுல்லாஹ். தேசிய சிறுபான் மையர் ஆணையத்தில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை துணைத்தலைவராக இருந்தார். தேசிய ஜனநாயக முன்னணி 2004 இல் அதிகாரத்துக்கு வந்தபிறகு ஆணையத்தின் தலைவராக தர்லோச்சன் நியமிக்கப்ட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாஜக மற்றும் இந்திய தேசிய லோக் தளத்தின் ஆதரவுடன் அரியானாவுக்கான மாநிலங்களவை உறுப்பினரானார். இவர் கோத்ரா சம்ப வம் தானாகவே நிகழ்ந்த சம்பவமாகக் கூறுகிறார். குஜராத் அரசே தானாகவே சிறுபான்மை ஆணையத்தின்மூலம் உண்மைஅறியும் குழுவை அமைத்து, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 137பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் அகமதாபாத் நகரில் அதி காலையிலேயே வன்முறை ஏற்பட்டது என்று தர்லோச்சன் சிங் தெரிவித்தார். 2014 இல் மோடி பிரதமராக வருவார் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான இடங்களைப்பிடிக்கும் என்றும் அவர் கூறினார். காங்கிரசுக் கட்சி மத்தியில் நிலையான, மதசார்பற்ற அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது.

நன்றி: ஃபர்ஸ்ட் போஸ்ட், புதுடில்லி, 14.3.2014

Read more: http://viduthalai.in/page-2/77192.html#ixzz2wSBRHY1E