Search This Blog

6.5.13

மூன்று கன்றுக்குட்டிகளின் அனுபவங்கள் -பெரியார்


கேள்வி : மூன்று கன்றுக்குட்டிகள்

மூன்று பசுவின் கன்றுக்குட்டிகள் ஒன்றாய் ஒரு காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் குடியானவர் வீட்டுக்கன்றுக்குட்டி:-

“நண்பர்களே வீட்டுக்கு போகலாம், பால் கரக்கும் நேரமாய் விட்டதால் நாம் போய் பால் குடிக்கலாம்” என்றது.

செட்டியார் வீட்டு கன்றுக்குட்டியானது “பால் கரக்கின்ற நேர மானால்தான் என்ன முழுகிப் போய்விட்டது? வயிரார பால் கிடைக்கவா போகின்றது?” என்றது.

மூன்றாவதான அய்யர் வீட்டுக்கன்றுக்குட்டியானது “நீங்கள் என் னமோ பேசிக்கொள்ளுகின்றீர்களே? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே” என்றது.

ஒவ்வொன்றும் இந்தப்படி பேசியதின் கருத்து என்ன?

பதில்
குடியானவன், கன்றுக்குட்டிக்கு வயிராரப் பால் கொடுப்பது வழக்கம்.

செட்டியார், கன்றை அவிழ்த்து விட்டு முலைக்காம்பில் வாய்வைத்து முட்டி கொஞ்சம் பால் குடித்தவுடனேயே கன்றுக்குட்டியை பிடித்துக்கட்டி விடுவது வழக்கம்.

அய்யரோ, கன்றுக்குட்டியை மாட்டுக்கு எதிரில் காட்டுவதைத்தவிர பக்கத்தில் கட்டி இருக்கக்கூட சம்மதிக்காமல் பால் கரந்து கொள்ளுவார். ஆதலால் அவை தன் தன் அனுபவங்களையே பேசின.

--------------------தந்தைபெரியார் “குடி அரசு” - 20.09.1931

16 comments:

தமிழ் ஓவியா said...

சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ.75,000 பரிசு: இமாச்சல பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு


சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சாதி பேதத்தை ஒழிக்க சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ. 75,000 பரிசு அளிக்கப்படும் என்று வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சாதி விட்டு சாதியோ, மதம் விட்டு மதமோ திருமணம் செய்தால் காப் பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சாதி பிரச்சனையை போக்க வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் ஜோடிக்கு ரூ.75,000 பரிசு அளிக்கப்பட்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு திருமணம் செய்யும் ஜோடியில் ஒருவர் எஸ்.சி.யாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த வகை திருமணத்திற்கு ரூ.25,000 பரிசு அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் எம்.பி. சூத் கூறுகையில்,

சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 25,000 பரிசுத் தொகை ஊக்கமளிப்பதாக இல்லை. அதனால் தான் அந்த தொகையை அதிகரிக்க முடிவு செய்தோம். இந்த புதிய அறிவிப்பை அடுத்து ஏராளமான இளம் ஜோடிகள் அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

புதிதாக திருமணம் செய்துள்ள சிம்லாவை சேர்ந்த அனீஷ் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா கூறுகையில், திருமணம் அவரவர் விருப்பம் என்றனர். வங்கியில் பணிபுரியும் அனீஷ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தார். அவரது மனைவி ஸ்வேதா பிராமணர்.
--------------http://tamil.oneindia.in/news/2013/05/05/india-marry-outside-caste-himachal-get-rs-75000-174680.html

VOICE OF INDIAN said...

தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
Reply

தமிழ் ஓவியா said...


இராஜபாளையம் மாநாடு4.5.2013 சனியன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கழக வரலாற்றில் முத்திரை பொறித்த ஒன்றாக அமைந்து விட்டது!

தன்மான இயக்கக் காலந்தொடங்கி, திராவிடர் கழகம் என்ற வகையில் இவ்வூரில் பொதுக் கூட்டங்கள் பல நடைபெற்றதுண்டு, மாநாடு என்னும் வகையில் இந்த மாநாடுதான் அந்த மண்ணில் மிகப் பெரியது - எழுச்சி மிக்கது!

கடந்த இரு மாதங்களாக மாநில இளைஞரணி செயலாளர் மானமிகு இல. திருப்பதி அவர்களுடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு தஞ்சை இரா. செயக்குமார் - அவருடன் பத்துத் தோழர்கள், இராஜபாளையம் தோழர்கள் மானமிகு சிவக்குமார், மானமிகு கோவிந்தன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாண்டி முருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு சிகரத்தை எட்டியது என்றே கூற வேண்டும். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வானவில் வ. மணி அவர்களின் துணை அருந் துணையாக இருந்தது.

எத்தனைப் பேர் இருந்து நடத்தினார்கள் என்பதைவிட இருப்பவர்கள் எப்படி திட்டமிட்டுப் பணியாற்றினார்கள் என்பதுதான் முக்கியம்! இதற்கொரு எடுத்துக்காட்டுதான் இராஜபாளையம் மாநாடு!

ஆன்மிகம் நிரம்பி வழியும் இராஜபாளையத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கும் உரிய இடம் தந்தனர் என்றே கூற வேண்டும். கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, கழகத் தின் சமுதாயப் பணியால் ஏற்பட்ட பலன்களை அன் றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களால், எப்படி அவற்றைப் புறந்தள்ள முடியும்? அதன் வீச்சைக் காண அங்கு முடிந்தது.

கொளுத்தும் வெயில் கால மன்றோ! மாலை நேரத்தில் பேரணி என்றாலும் தாகத்திற்குத் தவிக்காதவர்கள் இருக்க முடியாதே! அதுவும் தொண்டை வற்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு வந்த நிலையில், தாகத்திற்குக் கேட்கவா வேண்டும்?

ஆங்காங்கே தாய்மார்கள் குடும்பத் தலைவர்கள் குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, தண்ணீரை வழங்கிய அந்தத் தன்மையை என்ன சொல்லுவது!

பக்தியைத் தாண்டி இந்தப் பகுத்தறிவு இயக்கத் தின்பால் தமிழர்கள் வைத்துள்ள அந்தப் பாசம், அன்பு மெய்ச் சிலிர்க்கக் கூடியதே!

பல கட்சிக்காரர்களின் மாநாட்டையும், பேரணி யையும் அவ்வூர் மக்கள் பார்த்தவர்கள்தான்; திரா விடர் கழக மாநாட்டில் ஊர்வலத்தில் பல வித்தியாச மான காட்சிகளை அவர்கள் கண்டதுதான் அவர்களின் ஆச்சரியத்துக்குக் காரணம்.

கழகத்தின் எந்த ஒரு செயலும் வீணானதல்லவே! மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகள் பெண்கள் உட்பட பங்கேற்று நடத்திக் காட்டியது அவர்களின் ஆச்சரியத்துக்கான வித்தியாசமான பார்வைக்கான காரணம் ஆகும். அங்கு நடைபெற்ற எந்த ஊர்வலத்திலும் காணப்படாதவை அவை.

மானாவாரியாக முழக்கங்களை முழங்கிச் செல்லாமல் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஒலி பெருக்கிமூலம் குறிப்பிட்ட இளைஞரணி தோழர்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட முழக்கங்களை எடுத்துச் சொன்னதும், பேரணியிலே பங்கு கொண்ட தோழர்கள் அவற்றைத் தொடுத்துச் சொன்னதும் நம் கொள்கைகளைப் பொது மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பு (இருபால் இளைஞர்கள்) தமிழில் கட்டளைச் சொற்கள் காவல்துறையினர் உட்பட அனைவரையும் பெரிதும் ஈர்த்தன.

இளைஞரணியினரின் சீருடையுடன் கூடிய அணி வகுப்பின் நேர்த்தி பெரியார் பிஞ்சுகள் முதல் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை கையில் கழகக் கொடியை ஏந்தி முழக்கமிட்டு வந்த அந்தக் கட்டுப்பாடு பலே பலே என்று பாராட்ட வைத்தது.

பல அரசியல் கட்சிகளின் நண்பர்கள்கூட ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களை நடத்துங்கள் என்று தாங்களாகவே முன்வந்து தெரிவித்ததையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் எங்கே இருக்கப் போகிறது என்று சொன்னவர்கள் உண்டு.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்கிறது. பலமாக இருக்கிறது - இளைஞர்களின் கோட்டமாக இருக்கிறது என்று மக்களுக்கு உணர்த்திய மாபெரும் மாநாட்டினை நடத்திக் காட்டிய தோழர் களுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்களுக் கும், ஆதரவுக்கரம் நீட்டிய தமிழர்களுக்கும் பாராட் டையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

தமிழ் ஓவியா said...


நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்..!


சென்னையின் மக்கள் நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட் டுக்கு தேவையான பொருட் களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். பகலெல் லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட் டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொது கழிப்பறைகள் எதுவும் கிடை யாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும் போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட் டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார். அதன் பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்த போது ஆத்திரமாக விவரித்தார். அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான். ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத் தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமான கரமாக உணர்ந்திருப்பார்.

சென்னையில் மக்கள் நெருக் கடியான பகுதிகளுக்குள் சுற்றும் போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ?

பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத் திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொது கழிப்பறைகளை திறந்து வைக்க வில்லை. அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான். ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? பள்ளி கல்லூரிகளில் பெண் பிள்ளைகளின் நிலை இன்னும் பரிதாபம்.

மேலோட்டமாக பார்த் தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க கழிப்பறையை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மன நிலை எவ்வளவு மோசமானது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவை யான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்சினை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை. மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு கழிப்பறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக, சாக்குதான் இருக்கும். அதே மும்பை யில் பணக்கொழுப்பெடுத்த அம் பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் கழிப்பறையும் (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !)

இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக் களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுங் கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்..

எப்போதாவது செல்லும் இறை வழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவ சியமான கழிவறைகளுக்கு இட மில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்க முமில்லை.. - கார்ட்டூனிஸ்ட் பாலா

தமிழ் ஓவியா said...


அறிவுப் பிரச்சாரம்


மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)

தமிழ் ஓவியா said...


உலகில் வளர்ந்த நாடு என்பதற்கு எது சரியான அளவுகோல்?


- ஊசி மிளகாய்

உலக அரங்கில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர வேண்டிய நாடுகள் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர்.

மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் - இவற்றையே, உலக வல்லுநர்கள் அளவுகோல்களாகக் கொண்டு, மேற்காட்டிய மூவகை களைப் பிரித்து வகைப்படுத்து கின்றனர்.

பொருளாதாரத்தில், தொழில் முன்னேற்றத்தில் வாழ்க்கைத் தரத் தில் மட்டும் வளர்ந்தால் போதுமா?

பகுத்தறிவுத் துறையில் வளர்ந் தால் தானே அவற்றை உண்மை யாகவே வளர்ந்த நாடுகள் என்று அழைக்க முடியும்?

அவ்வகையில் நமது நாட்டின் தென் பகுதியில் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், மக்கள் மத்தியில் செய்த அறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகள், மதவெறியை எதிர்த்து மனிதநேயத்தைப் பரப்பிய தன் விளைவாக, - மற்ற வழிகளில் பிற்போக்காக இருந்தாலும் கூட இந்தியா - சில விஷயங்களில் இந்த வளர்ந்த நாடுகள் என்று அழைக் கப்படும் நாடுகளைவிட கூடுதலாக வளர்ந்துள்ள நாடாகவே காட்சி யளிக்கின்றது!

எடுத்துக்காட்டாக, கொடிய நோயான புற்று நோய்க்கு Cancer) நவீன மருத்துவத்துறை சிகிச்சை யான மரபு அணுக்கள் மூலம் ‘Stem Cell’ சிகிச்சைக்கு இங்கே வரு கிறார்கள் அமெரிக்காவிலிருந்து புற்று நோய்க்கு ஆளான நோயாளி கள். காரணம் கத்தோலிக்க மத நம்பிக்கை, கிறித்துவ மத நம்பிக் கைக் காரணமாக இந்த சிகிச் சையை இவ்வளவு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ந்த அமெரிக்காவில் அனுமதிக்க வில்லை. அந்நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதன் விளைவு அதனைத் திறம்படச் செய்யும் நமது நாட்டுத் தனியார் மருத்துவமனைகளுக்கு அல்லவா வருகின்றனர்!

நம் நாட்டு கரன்சிநோட்டில் மத நம்பிக்கைக்கோ, கடவுள் நம்பிக் கைக்கோ இடமில்லை. ஆனால் அமெரிக்காவில் அதன் ஆரம்ப கால அரசியல் சட்ட வரைவாளர்கள், எண்ணத்திற்கு எதிரிடையாகவே ‘In the God we trust’ என்று அச்சிடப்பட்டி ருக்கிறதே!

கடவுளை நம்பாதவர்கள் அங்கும் ஏராளம் உண்டே! இங்கர்சால் களின் பிரச்சாரம் உண்டு. கருத்துச் சுதந்தரம் - மதச் சார்பின்மை பற்றிக் கூறிவிட்டு இப்படி அரசின் கரன்சி நோட்டுகளில் போடலாமா?

அது மட்டுமா? அறிவியல், புவியியல் தத்துவங்களுக்கும், உண்மைகளுக்கும் விரோதமாக சில மாநிலங்களில் வகுப்புகளில் Creationism பூமியைக் கடவுள் ஆறு நாள்களில் படைத்தார்; என்றும் பாடத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து போதிப்பதைவிட அசல் பிற்போக்குத்தனம் வேறு உண்டா?

இதை எதில் வளர்ந்த நாடு என்று கூறுவது?

அதுபோலவே மிகவும் சுதந்திரக் காற்று வீசிய, இங்கிலாந்து நாட்டை யொட்டிய அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க மதவெறி கருச் சிதைவை ஏற்றுக் கொள்ள - சட்ட பூர்வ அனுமதியின்றி சட்ட திட் டங்கள் உள்ள நிலை காரணமாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு தாய் - அதைச் செய்ய மருத்துவ மனைகளும் டாக்டர்களும் மறுத்த தால் உயிர்விட நேர்ந்தது, மிகப் பெரிய மனிதாபிமானத்திற்கு நேர் எதிரிடையானதல்லவா?

அது கிளப்பிய எதிர்ப்பினை - சுவர் எழுத்துப் படிப்பினையாகப் பெற்ற அந்நாட்டு ஆட்சியாளர் அண் மையில் ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே கருச்சிதைவை (Abortion) நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

அதற்கு அந்நாட்டு கத்தோலிக்க மதக் குருக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மதவெறி கொண்ட அவர் களுக்கு மனித உயிர்கள் காப் பாற்றப்படுவது முக்கியமல்ல; மதம் தான் காப்பாற்றப்பட வேண்டுமாம்! என்னே அறிவர்களின் அறியாமை - மதவெறி!

ஆனால் நாம் பல மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களின் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பே MTP Medical Termination of Pregrency) Act சட்டம் கருச்சிதைவு சட்டபூர்வம் என்று வந்துவிட்டதே!

அதன்படி நாம் முன்னேறிய அளவு அயர்லாந்து - முன்னேற வில்லையே!

இப்படி எத்தனையோ பிற்போக் குத்தனங்கள் - அறிவியல் தொழில் நுட்பவியல் வளர்ந்த நாடுகளில் இன்னமும்!

காரணம் அங்கு பெரியார்கள் தோன்றி, மக்கள் இயக்கங்களை நடத்தி ஆட்சிகளுக்கு முன்னோடி யாக வழிகாட்ட வரவில்லை என்பதே!

தமிழ் ஓவியா said...

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி!
போராட்டத்தை அறிவித்த ராஜபாட்டை மாநாடு!
வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு - நன்றி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ராஜபாளையம் மாநாடு போராட்ட அறிவிப்பு கொடுத்த ராஜபாட்டை மாநாடு என்றும், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக் கும் பாராட்டு, நன்றி என்றும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ராஜபாளையத்தில் 4.5.2013 சனிக்கிழமையன்று கூடிய திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு உண்மையிலேயே ஒரு வரலாறு படைத்த மாநாடாகும்!

ராஜபாளையத்தில் கழக கருஞ்சட்டை இளைஞர் பட்டாளம் ஏராளம் திரண்டு வந்திருந்தனர். இயக்கக் குடும்பத்தவர்களும் கூடி பல்லாயிரக்கணக்கில் உணர்ச்சி கொப்பளிக்க, உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!

ராஜபாளையத்தில் கழக மாநாடா? அதுவும் இளைஞர் மாநாடா? என்று சற்று சந்தேகம் கலந்த அச்சத்துடன் கேள்வி கேட்ட அப்பகுதி மக்களில் சிலர் திகைத்து விட்டனர்; காரணம் கூடிய மக்கள் கடலால் திண்டாடியது அந்நகரம்!

தென் திசையில் ஏற்பட்ட புத்துணர்ச்சி வெள்ளம் எங்களை எல்லாம் பூரிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று, புளகாங்கிதம் அடையச் செய்தது!

கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள...

தாகமுற்ற மக்கள் தண்ணீர் பந்தலை நோக்கி தணியாத தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக கூடி திராவிடப் பெருங்குடி மக்கள், கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அன்று காலை முதலே அந்நகரில் திரண்டனர்!

மக்கள் கடலும் கருங்கடலும் இணைந்த காட்சியைக் கண்டவர் வியந்தனர்!

தந்தை பெரியார் என்பவர் வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதி;

தலைவர் பெரியார் திராவிடர் சமுதாயம் திணறும் போதெல்லாம் அதன் (மூச்சுத்) திணறலை மாற்றி வாழ வைக்கும் மூச்சுக் காற்று என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு ராஜபாளையம் ஓர் சான்று! இயக்கக் குடும்பங்களுக்கோ இது ஓர் இன்பமயமான கொள்கைச் சங்கம கோலாகலத் திருவிழா - பெருவிழா.

விடுத்த வேண்டுகோள் கண்டு விரைந்தோடி வந்து எங்களை உற்சாக மூட்டிய எங்களின் ஈடு இணையற்ற கழகக் குடும்பத்தினர்களே, உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி - கூறுவது தெரியாமல் திகைக்கிறோம்!

மிகப் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல எம் கழகக் குடும்பத்தினர். என்றாலும் அறிக்கை வந்துவிட்டதே ராஜபாளையம் செல்லாமல் இருப்போமா? என்று கேட்டு, உற்சாகத்துடன் அவ்வூர் காணாத காட்சியின் மாட்சியை உருவாக்கினார்கள்!

ராஜபாளையம் மாநாடு குறித்து முன்கூட்டியே நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், மதுரை மண்டலத் தலைவர், செயலாளர், தென் மாவட்டப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அனைவருமே, மாவட்டப் பொறுப்பாளர்க ளுடன், பொதுச் செயலாளர், மாநில இளைஞரணிச் செயலாளர் ஆகிய அனைவரும் கலந்துரையாடி சிறப்பான திட்டங்களைத் தீட்டினர்.

தமிழ் ஓவியா said...

கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான மானமிகு தோழர் ஜெயக்குமார்; அவருடன் 10 இளைஞர்கள் மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் இல. திருப்பதி, மாவட்டத் தலைவர் சிவகாசி வ. மணி, ராஜபாளையம் தோழர் சிவக்குமார், தோழர் கோவிந்தன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பாண்டிமுருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் சுமார் இரண்டு திங்களாக, தேனீக்களாகச் சுற்றிச் சுற்றிப் பறந்து பணியாற்றி இந்த மாபெரும் வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற நமது இலக்குச் சொல்லுக்கேற்ப இச்சாதனை சிறப்பாக வாகை சூடியதாக சாதாரண மக்கள், நடுத்தர மக்களை கடைகடையாக, வீதி வீதியாக அந்நகரத்திலும், சுற்று வட்டாரத்திலும் சென்று மாநாட்டுத் துண்டறிக்கைகளைக் கொடுத்து, எளிய தொகைகளை அன்பு பொங்க அவர்கள் தர, இவர்கள் பெற்றே இம்மாபெரும் மாநாட்டை நடத்தி, இளைஞர்கள் வரலாறு படைத்தனர்!

நல்ல இளம் போத்துக்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் பெரியார் சமூகக் காப்பணி புது முறுக்குடன் வீர நடை போட்டது.

அதன் பயிற்சியாளர்களான மானமிகு தோழர்கள் இரா. பெரியார்செல்வன் (இயக்குநர்), துணை இயக்குநர்கள்: சித. வீரமணி, தே. பொய்யாமொழி, ப. நாத்திக செழியன், பயிற்றுநர்கள்: அண்ணாசரவணன், கி. கார்வண்ணன், ச. விஜய்யோகானந்த், ம. திராவிடராசன், வ. ஆறுமுகம், அ. சித்தார்த்தன், இராம. சகாதேவன், அ. திருநாவுக்கரசு, விசுவநாதன், சி. அம்பேத்கர், கி. முரளி அனைவருமே குறுகிய காலப் பயிற்சியில் மிக அருமையான பணியைச் செய்து கட்டுப்பாட்டுக்குரியதே கருஞ்சட்டைப் படை என்பதைக் காட்டினர். அதிலும் குறிப்பாக திராவிடர் மகளிர் அதில் தனி அணியாகப் பங்கு பெற்று அணி வகுத்த காட்சி கண்டோரை மெய் சிலிர்க்க வைத்தது!

நமது உளப்பூர்வ நன்றி!

அந்நகரம் இதுவரை காணாத மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை பல்லாயிரம் மக்கள் இரு மருங்கிலும் திரண்டு நின்று வியந்து பார்த்து பக்தி மோசடிபற்றிச் சிந்திக்கத் துவங்கினர்!

விருதுநகர் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மிகவும் திறமையுடனும், பொது உணர்வுடனும் தங்கள் கடமையாற்றினர். அவர்களுக்கு நமது உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மிகப் பிரமாண்டமான அந்த மாநாட்டுக் கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்போ, அசம்பாவிதமோ எதுவும் நிகழவில்லை என்பதும் பேரணி வந்தபோதும் கடைகள் எல்லாம் திறந்தே இருந்ததோடு, மகிழ்ந்து பார்த்தனர்! இதையே ஊரில் உள்ள பல மக்கள் பேசி வியந்தனராம்!

அழகுக்கு அழகு சேர்த்த தளபதி மு.க. ஸ்டாலின் உரை

ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தினை செயல்பட வைக்க - அரசினை வற்புறுத்தும் வகையில் அறவழிப் போராட்டம் என்பதை அறிவித்த ராஜபாளையம் மாநாடு, கழகத்தின் பாட்டை ராஜபாட்டை என்பதை உணர்த்தும் மாநாடாக அமைந்தது.

சிறப்புரையாற்றிட்ட நம் இனமானத் தளபதி மு.க. ஸ்டாலின் அரியதோர் உரையாற்றி அழகுக்கு அழகு சேர்த்தார். அவர்களுக்கும் நமது தாய்க் கழகத்தின் சார்பில் நன்றி.

பணிகள் தொடரட்டும்; பிரச்சாரம் பெருகட்டும்!

சென்னை
7.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


இன இழிவை ஒழிக்கும் போராட்டத்துக்குத் தயாராவீர்!


இராஜபாளையம் மாநாட்டின் சிறப்பு அம்சங்களுள், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடியவையாகும்.

முதல் தீர்மானம் முதல் 20 ஆம் தீர்மானம் வரை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கப்பட வேண்டியவை!

அனேகமாக நம் சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகள் மீதும், ஊடுருவியும், கவனம் செலுத்தியும், கருத்தூன்றியும், தொலைநோக்கோடும், நடைமுறைக் கண்ணோட்டத்தோடும் தீட்டப்பட்டவை அவையாகும்.

ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டம் - தீண்டாமை ஒழிப்பு நோக்கம் இவற்றின் அடிப்படையிலும், இன இழிவைத் துடைத்தெறியும் ஓர் இனத்தின் சுயமரியாதைக் கண்ணோட்டத்திலும், தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

கடவுளே இல்லை என்று சொல்லும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்தான் இதற்காகவும் பாடுபட வேண்டிய - போராட வேண்டிய கடமையை முன்னிறுத்தியுள்ளது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

காரணம் கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை என்றாலும் அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை யாகும்.

கல்வி உரிமைக்காகவோ, வேலை வாய்ப்பு உரிமைக் காகவோ திராவிடர் கழகம் போராடும் போது இதனால் பலன் பெறுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகளா? பக்திமான்களா? என்று கழகம் பார்ப்பதில்லை.

எங்கள் இனத்தைச் சேர்ந்த பக்தியுள்ள தமிழன் அதற்குரிய பயிற்சியைப் பெற்றாலும்கூட அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி இல்லை என்று வெளியிலே பிடித்துத் தள்ளுவது - எந்த அடிப்படையில்? தமிழன் - இந்துமத அடிப்படையில் நாலாம் ஜாதி - சூத்திரன் - பிறவி அடிமை - பார்ப்பனர்களின் வேசி மக்கள் - அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி கிடையாது.

அவன் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுப் போய்விடும். அதற்காக பிராயச் சித்தம் செய்யப்பட வேண்டும் - சுத்திகரிக்க வேண்டும். 108 கலசங்களைச் செய்து வைக்க வேண்டும், பிராமண போஜனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அடுக் கடுக்காக நிபந்தனைகளை விதிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் தமிழர்கள் தங்கள் சூத்திரத் தன்மையை ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்? இந்தப் போராட்டத்தை பக்திமான்களாக இருக்கக் கூடிய தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்டிருந்தால் கருப்புச்சட்டைக்காரர்களுக்கு வேலை இருந்திருக்காதே!

தமிழர்களுடைய மான உணர்வைக் காப்பாற்றும் கடமை திராவிடர் கழகத்திற்கென்று ஆன நிலையில், அதற்கான களத்தில் நிற்க வேண்டியவர்களாகி விட்டோமே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை உண்டு என சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட, பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அதனை முடக்குகிறார்கள் என்றால் இதன் நிலையைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இந்த 2013 ஆம் ஆண்டிலும் தமிழர்களைச் சூத்திரர்களாக நிலை நிறுத்துவதிலும், பார்ப்பனர்கள் தங்களைப் பிராமணர் என்ற பிறவி ஆதிக்கத் திமிரி லிருந்து சற்றும் இறங்கி வரத் தயாராக இல்லை என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார்கள் என்பது விளங்கிடவில்லையா?

பார்ப்பனர்கள் எவ்வளவோ திருந்தி விட்டார்கள். இனி மேலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் தேவை தானா என்று அதிமேதாவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் பார்ப் பனர்கள் நடந்து கொள்ளும் தன்மையையும், போக்கையும் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் போதுமே, அந்தத் தருணத்திலேயே பார்ப்பனர்கள் பற்றி திராவிடர் கழகம் முன்னிறுத்தும் கருத்து நூற்றுக்கு நூறு மிக மிகத் துல்லியமாகவே சூரிய வெளிச்சம் போல உண்மை - உண்மையிலும் உண்மை என்பது விளங்கி விடுமே!

இந்த நிலையில் இராஜபாளையம் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு தீர்மானத்திலும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் மாநாட்டு உரையிலும் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த இரு மாதங்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இதுகுறித்து விளக்கமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று (தந்தை பெரியார் பெரும்பாலும் போராட்டம் நடத்திடத் தேர்வு செய்யும் நாளிது) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் பங்கேற்கும் போராட்டத்தை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக்க உள்ளார்.

கழகத் தோழர்களே தயாராக இருங்கள்! இருங்கள்!! போராட்ட வீரர்களின் பட்டியல் தயாராகட்டும்! தயாரா கட்டும்!

இன இழிவை ஒழிக்கும் போரிலே இன்னுயிரையும் இழக்கத் தயாராவோம்! தயாராவோம்!! வாழ்க பெரியார்!

வளர்க இன உணர்வு!!

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் டும்! டும்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை யடுத்த கோழிக்கால் நத்தம் பகுதியில் நடந்துள்ள ஒரு நிகழ்வு - மக்கள் இன்னும் கற்காலத்தில்தான் உழலுகிறார்களோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்துகிறது.

மழை பொழியவில்லையாம் - கடும் வறட்சி ஏற்பட்டுவிட்டதாம் - விவசாயம் செய்ய முடிய வில்லையாம்.

என்ன செய்தார்கள் தெரியுமா? கழுதைக் கும், கழுதைக்கும் கல்யாண ஏற்பாடாம்.

சாதாரணமாக அல்ல - கல்யாணப் பத்திரிகை அடித்து அழைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. நாள் நட்சத்திரம் பார்க்கப்பட் டுள்ளது (ஒரு சந்தேகம் கழுதைக்குத் தாலி கட்டிய அந்தவூர் பிரமுகருக்கும், அந்தக் கழுதைக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் பட்டதா என்ற விவரம் தெரியவில்லை).

அய்தீக முறைப்படி சடங்குகள் நடந்தன வாம்! ஆண் கழுதைக்கு ஸ்ரீஹரி என்றும், பெண் கழுதைக்கு ஸ்ரீயோக லட்சுமி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்னிகுண்டம் இடம்பெற்றதாம் (அய்யர் வந்து மந்திரம் சொன்னதுபற்றித் தகவல் இல்லை).

அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பெண் கழுதைக்குத் தாலி கட்டியுள் ளார்.

நீ முதலில் ஸோமனுக்கு மனைவியாக இருந்தாய்; இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாய்; மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்தாய்; நான் காவதாகத்தான் எனக்கு மனைவியாக வந்துள்ளாய் என்ற கல்யாண மந்திரத்தை பெண் கழுதையை நோக்கி சொன்னார்களா என்பதும் தெரியவில்லை.

இன்னொரு தகவல் சாந்தி முகூர்த்தம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

மனிதன் பகுத்தறிவு பெறவில்லையென் றால் கழுதைக்குக் கூடக் கல்யாணம் செய்வான் என்பதைப் புரிய வைக்கவேண்டும். மற்ற எந்தப் பிரச்சாரத்தையும்விட பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் முதன்மையானது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் எத்தகைய முக்கியத் துவம் வாய்ந்தது என்பதும் தெரியவில்லையா?

மதம் மனிதனைக் கழுதையாக்கும் - பகுத்தறிவு மனிதனை செழுமையாக்கும் புரிகிறதோ! (ஆமாம், கழுதைக்கும் கழுதைக் கும் கல்யாணம் ஆகிவிட்டதே - மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்டதோ!)

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டங்கி என்ற ஊரைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். எதற்கு?

எந்த வாகனத்தில் வந்தனர்? சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியில் ஏறி வந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சிங்கராய கொண்டா அருகே லாரி வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்தது - கவிழ்ந்தது! சிமெண்டு மூட்டைகளுக்குள் சிக்கி அந்த பத்துப் பக்தர்களும் பரிதாபகரமாக மடிந்தனர் என்பது ஏடுகளில் வெளிவந்த செய்தி!

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் கடவுளைக் கும்பிட வந்தபோது விபத்தில் சிக்கிச் செத்துப் போய்விட்டனரே!

ஒருகணம் பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? கடவுளைத் தேடி வந்தவர்களை குறைந்தபட்சம் அந்தக் கோவில், அந்தக் கடவுள் பக்தர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கவேண்டாமா?

ஏன் காப்பாற்றவில்லை? கடவுள் என்ற ஒன்று இல்லை - எனவே, காப்பாற்றவில்லை.

திருப்பதி கோவில், அய்யப்பன் கோவில் என்று சொல்லி சாமி கும்பிடச் செல்லும் பக்தர்கள் மரணம்பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

அப்பொழுதுகூடப் பக்தர்கள் புத்தி கொள்முதல் பெறவில்லையே - ஆம், பக்தி வந்தால் புத்தி போயே போகுதே!

கூடுதல் தகவல்: (Tail Piece) திருச்சி அருகே சிறுகனூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட நான்கு பேர் சாவு!

எந்த மதக் கடவுளுக்கும் சக்தி இல்லவே யில்லை - போதுமா?

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரர் துறவறம் பூண்டவரா?

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி துறவறம் பூண்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்! அதை முன்னிட்டு 60 தம்பதிகளைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் ஒரு மண்டபத்தில் நடைபெற்றதாம்.

அந்த நிகழ்ச்சியில் அந்த சாட்சாத் ஜெயேந்திரரும், அவரின் சீடர் விஜயேந் திரரும் கலந்துகொண்டனராம்.

60 ஜோடிகளுக்கும், பக்தர்களுக்கும் ஜெயேந்திர சரஸ்வதி அருளாசி வழங்கினா ராம். இந்த விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப் பட்டதாம்.

பார்ப்பனர்களின் இனப்பற்றுக்கு இது ஒரு சான்று. ஜெயேந்திர சரஸ்வதி அனைத்தையும் துறந்தவரா? அவர் 60 ஆண்டுகாலமாகத் துறவியாகத்தான் வாழ்ந்து வருகிறாரா?

இந்தப் பத்திரிகை செய்தியைப் படித்தவர் கள் யாராவது வாயால்தான் சிரிக்க முடியுமா?

ஊருக்கு ஊர் காதலிகள், காமகோடியின் சங்கர மடமே காமக்கோட்டமாக, ஆபாசச் சேட்டையின் பஞ்சு மெத்தையாக இருந்து வந்துள்ளதை பார்ப்பன எழுத்தாளரான அனுராதா ரமணன் ஊர் சிரிக்க வைத்தாரே! நக்கீரன் வார இதழ் தோரணம் கட்டி தொங்கவிட்டதே!

இவ்வளவுக்குப் பிறகும் இந்தப் பார்ப் பனர்கள் அந்த வெட்கம் கெட்ட மனிதரை ஜெகத்குரு என்பதும், முற்றும் துறந்தவர் என்பதும் அவாளிடத்தில் உள்ள இனப் பற்றைத்தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...


திராவிட மாணவர், இளைஞரணி கழகத் தோழர், தோழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண்டும். அதனடிப்படையில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச்சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ‘The Modern Rationalist’ ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும்,

நமது இயக்க நடவடிக்கைகள், முக்கிய உரைகள், தீர்மானங்கள்பற்றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுதுவது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல் படுவது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம்.

திராவிடர் மாணவர் மாநில கழகச் செயலாளர் பிரின்ஸ் அவர்கள் தலைமையில் இதற்கென ஒரு சிறப்புக்

குழு விரைவில் அமைக்கப்பட விருக்கிறது.


சென்னை
7.5.2013

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சமூகநீதியாளர்கள் ஓரணியில் திரளட்டும்!

இராஜபாளையம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமுமே அதனதன் தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமூகநீதி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எட்டில் ஒன்பது உள்தலைப்புகள் கொண்டவை.

இந்திய பணியாளர்த் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுதிடும் வாய்ப்பு, தாழ்த் தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) ஒட்டுமொத்தமாக அகற்றுதல், மத்திய தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுத் தொகுதியில் (Open Competition) இடம்பெறவேண்டிய பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் இட ஒதுக்கீடு பிரிவில் கொண்டு போய் வைப்பதும், அதனால் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றவர்களை வெளியேற்றுவது என்னும் சதி அரங்கேற்றப்படுவதைத் தடுத்தல், பத்தாண்டு களுக்கு ஒருமுறை தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைக்கவேண்டிய நிலையில், பல பத்தாண்டுகள் பறந்துபோன நிலையிலும், அத்தகைய ஆணையங் களை நியமனம் செய்யாமை - மண்டல் குழுப் பரிந்துரையில் கல்வி, வேலை வாய்ப்பு மட்டுமன்றி பொருளாதாரத் துறையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அளிக்கப்படவேண்டிய வாய்ப்புகள்பற்றி அரசு சிந்திக்காமல் இருக்கும் போக்கு உள்ளிட்ட பல்வேறு சமூகநீதித் தொடர்பான, நியாயமான சட்ட ரீதியான பிரச்சினைகளை இராஜபாளையம் மாநாடு மிகவும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டி குறிப்பாக மத்திய அரசினை வலியுறுத்தியுள்ளது தீர்மானம்.
குறிப்பாக இட ஒதுக்கீட்டின் அளவுகோல் என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னடைந் துள்ள நிலையைச் சுட்டிக்காட்டுவதாகும். சமூக ரீதியாக என்பதில் ஜாதிதான் முக்கிய இடம் பெறுகிறது.

ஜாதியின் காரணமாகத்தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, ஜாதியின் அளவுகோல் என்பது முற்றிலும் சரியானதே! இதில் பொருளாதார அளவுகோல் எங்கிருந்து குதித்தது? அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கோ, குழு உறுப்பினர்களுக்கோ தெரியாத விடயமா?

அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலாவது பொருளாதார அளவுகோல் பற்றிப் பேசப்பட்டுள் ளதா? இட ஒதுக்கீடு இத்தனை சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தானடித்த மூப்பாக இவற்றைத் திணித்தது சட்டப்படி சரியானதுதானா?

இவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவேண்டும். இதனை இந்தியத் துணைக் கண்டத்திலேயே முழுமையாக மிகவும் துல்லியமாகச் செய்யக்கூடிய ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்பட வைத்ததற்கும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணை (பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு) ஒழிக்கப்பட்டதற்கும், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு நிலை பெறச் செய்வதற்கான வழிமுறை களைச் சொல்லி அ.இ.அ.தி.மு.க. அரசைச் செயல்பட வைத்ததற்கும் முழு முதற்காரணம் திராவிடர் கழகம் அல்லவா!

அந்த நிலையில்தான் சமூக நீதியில் இன்னும் எட்டப்படவேண்டியவை குறித்து துறை வாரியாகச் சுட்டிக்காட்டி மாநில - மத்திய அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட இராஜபாளையம் மாநில இளை ஞரணி மாநாட்டுத் தீர்மானங்கள் என்றென்றும் பேசப்படக்கூடியவை.

தீர்மானத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை களை நிறைவேற்ற, சமூகநீதி சக்திகளை இந்திய அளவில் ஒன்று திரட்டித் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செயல்படுவார். சமூகநீதியாளர்கள் கட்சிகளை மறந்து அணி திரளட்டும்!

தமிழ் ஓவியா said...


புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு!


அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!

உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.

எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!

கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.

அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.

உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!

நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா!

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள் களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

(விடுதலை, 22.6.191973