தீண்டாமை
இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை
ஒரு பெருமை யெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு
அதைத் திறந்து வைக்கக் கொஞ்ச மும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு
சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து
கொள்ளுகிறேன்.
ஆதி திராவிடர்களுக் கென்று தனிக் கிணறுகள்
வெட்டுவது அக்கிரம மென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள்
வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன்
கலக்கத் தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும்
ஏற்படுத்துவ தாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு
வெட்ட வேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு
தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித
தர்மங்கள் உதவும்.
நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை
ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங் களில்
தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது
என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத்
தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்துச்
சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும். என்று சொல்லிவிட்டு
நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிகவேலை
செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும்
உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை.
ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு
உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச்
சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிற
வர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது, இந்தியாவின்
நன்மைக்காக அய்ரோப் பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத் தான்
ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை.
பறையர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம்
நாட்டிலிருப்பதால்தான் சூத்திரர் என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம்
நாட்டிலிருக்கிறது. பறையர் என்கிற ஜாதிப் பெயரைவிட சூத்திரர் என்கிற ஜாதிப்
பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில்
பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும்
பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை.
ஏனென்றால் சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். சூத்திரன்
என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள்.
இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான்
என்பது சாஸ்திர சம்பந்தம். ஆகையால் என் போன்ற சூத்திரன் என்று
சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படு வோர்களுக்கு உழைப்பதாகச்
சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது
என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது
உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்று கிறது.
உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும்,
புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை
அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக் கும் அறியாமை யால்,
தங்களை மற்றவர்கள் தாழ்மை யாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த்
தோன்றுவதில்லை.
இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதங்
கண்டு பிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக் கிறது, நீங்கள் ஸ்நானம்
செய்வதில்லை, துணி துவைப்ப தில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள்,
மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள்.
நீங்கள் வேஷ்டி துவைக்காமலும் குளிக்காமலும் இருப்ப தற்கு யார் ஜவாப்தாரி
என்பதை அவர் உணருவதில்லை. உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால்
குளிப்பதெப்படி, வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடவே
பிறந்ததா என்று கேட்கிறேன்.
குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல்
துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள்
என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்து விட்டால் அவர்கள் துணி
அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும் வாயும்
நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். நாமே ஒருவனைப்
பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய்
விட்டான் பாவி என்று சொன்னால், யார் பாவி யென்பதை நினைத்துப் பாருங்கள்.
அல்லாமலும், மாடு தின்பதும்,
மதுவருந்துவதும், நீங்கள் பறையர்களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது
கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக்
கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு
கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம்
உங்களைச் சேர்ந்ததல்ல.
உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி
சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய்
எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில் லாமல் செய்துவிட்டதால்
கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க
வேண்டியதாயிற்று.
மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச்
சேர்ந்த மகமதியாரும் கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க்
கிடைப்பதாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை
என்று சொல்லு கிறார்கள்.
ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி
சாப்பிடுவ தற்குத் தரித்திரந்தான் முக்கியக் காரணம். அல்லாமலும், மாட்டு
மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு
அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும்,
பூச்சு புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் சாப்பிடுகிறது.
இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு பிராமணர்கள் முதல் தென்னாட்டு
சூத்திரர்கள் வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயு மிருக்கும் போது,
புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற
மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்.
அப்படிப் பார்த்தாலும் மாடு
சாப்பிடுகிறவர்களை யெல்லாம் தொடாதே, தெருவில் நடக்காதே, குளத்தில் தண்ணீர்
சாப்பிடாதே, ஊருக்குள் குடியிருக்காதே என்று சொல்லுகிறார்களா? இது வீணாய்,
வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப்
பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு.
மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ள
வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும் மாட்டு மாமிசத்தையும்
தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான
காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக, மதுவையும் மாட்டு
மாமிசத்தையும் விடுங்களென்று கேட்க மாட்டேன்.
அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு
அவசியமில்லை. நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும்,
காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை
மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15, 20 கோடி ரூபாய் பெரும்படியானதை யெல்லாம்
நீங்க ளேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும்
நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட
வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும்.
மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு
விரோதமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது
தொண்டு செய்திருக் கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும்
சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும்
மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே
சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதைச் சொல்லா
மலிருக்க முடியவில்லை.
அதாவது, நீங்க ளாகவே உங்கள் ஜாதிக்கு
இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அனாவசியமாய் யாரைக் கண்டாலும் சுவாமி
என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள்
ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப்
பார்த்தால் அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள்
மனதில் உதிக்க வேண்டும்.
சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை
உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி
வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் சுவாமி என்று கூப்பிடக் கூடாது.
வேண்டு மானால் அய்யா என்று கூப்பிடுங்கள். நீங்களாகவே பதுங்குவதும்
ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான்
நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள். என்று பேசி முடித்தார்.
---------------------------------------------------காரைக்குடி - சிராவயலில் நடைபெற்ற
காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு
விழாவில் 06-04-1926 ந்தேதி - தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- - "குடிஅரசு" - 25.04.1926
66 comments:
அன்னையர் நாள்!
இன்று அன்னையர் நாள் - உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மாசு மருவற்ற அன்பு என்பது தாயிடத்தில் தான்குடி கொண்டு இருக்க முடியும் - எதையும் எதிர்பாராத இயற்கை அன்பு என்று இதனைக் கூறலாம்.
ஒரு குழந்தைக்குத் தன்பாலை ஊட்டி உயிரூட்டம் செய்கிறார் - குழந்தையின் முதல் ஆசிரியராகவும் அந்தத் தாயே அமைகிறார்.
தாய்ப்பால் என்பது தான் கலப்படத்திற்கும் இடம் இல்லாதது - ஊட் டச் சத்தும் நிறைந்தது.
இன்றைய தினம் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை 2000 கோடி அமெரிக்கன் டாலரை செலவு செய்து சீனா உருவாக்கி - புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்துவிட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை 44 விழுக்காடு குழந் தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் அவதிப்படு கின்றன. தென்னாப் பிரிக்காவில்கூட 25 சதவிகிதம்தான்; இந்தி யாவின் அவல நிலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?
இந்தியாவிலேயே பொருளாதாரம் கொழிக்கும் மாநிலம் மோடி ஆளும் குஜராத் மாநிலம் என்று ஊதிப் பெருக்கிப் பலூன் விடுகிறார்களே - அந்த மாநிலத்தைப்பற்றிய கணிப்பு என்ன தெரி யுமா? இந்தியாவின் சோமாலியா என்பதே!
உலக அன்னையர் நாளில் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தாயின் நிலை இன் றைய நிலையில் எத் தகையது?
வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம்; ஆனால் அந்த அன்னையார் இருப்பதோ முதியோர் இல்லம் - இதுசரிதானா?
வருமானம் பெருகிய அளவிற்கு மனிதநேயம் பெருகவில்லையே! வெறும் பணமும் நுகர் வும்தான் வாழ்க் கையா?
மாதா, பிதா, குரு என்ற வரிசையில்கூட தாய் தானே முதலிடத் தில்; ஒவ்வொருவரும் தமக்குள் எடை போட் டுப் பார்க்கட்டும் - இந் நாளில்.
- மயிலாடன்
பலே பலே வீராங்கனை! பால்ய கல்யாணத்தைத் தூக்கி எறிந்து படிப்பில் சாதனை படைத்தார் தொழிலாளியின் மகள்
மருத்துவராகவும் விருப்பம்!
மதுரை, மே 12- மதுரை மாவட்டத்தில் 14 வயதில் கட்டாய திரு மணம் முடிக்கப்பட்ட ஒரு பெண் - திருமணக் கட்டை உடைத்தெ றிந்து பள்ளியில் சேர்த்து, சிறப்பாகப் படித்து +2 தேர்வில் 1136 மதிப் பெண் எடுத்துள்ளார். டாக்டருக்குப் படிக்கப் போவதாகவும் சூளுரை எடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நொண்டிகோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரபா. எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது 14ஆவது வயதில் சொந்த தாய்மாமனுடன் கட்டாயமாக திரும ணம். படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண் டிருந்த ஜெயப்பிரபா வின் வாழ்க்கை, லட் சியம் எல்லாம் தொலைந் தது. கணவனாக வந்த வனும் குடிக்கு அடிமை. என்ன கொடுமை! ஒரு முடிவுக்கு வந்தார் ஜெயபிரபா.
16 வயதில் கணவ னிடம் இருந்து பிரிந்தார். இரண்டாண்டு இடை வெளிக்குப் பிறகு, தனித் தேர்வராக எஸ்எஸ் எல்சி எழுதி, 469 மதிப் பெண்கள் பெற்றார். மேலூர் அரசுப்பள்ளி யில் மேல்நிலைக் கல்வியை தொடர்ந்தார். அங்கும் வந்தது சோதனை. திருமண மான பெண்ணை வகுப் பில் சேர்த்தால், சக மாணவிகள் கெட்டுப் போவார்கள் என டிசி கொடுத்து அனுப்ப முடிவு எடுத்தது பள்ளி நிர்வாகம்.
ஜெயப்பிரபா துவளவில்லை. உயர்கல்வித்துறையில் போராடி, படிப்பைத் தொடர்ந்தார். சிறப்பாக பிளஸ் 2 தேர்வும் எழுதி னார். கடந்த 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வந்தன. எந்தவித அடிப்படை வசதிகளோ, சிறப்பு பயிற் சிகளோ, நிறைவான குடும்ப சூழல்களோ இல்லாதிருந்தும் கூட அவர் எடுத்த மதிப் பெண் 1,136. (தமிழ் 190, ஆங்கிலம் 174, வேதி யியல் 199, உயிரியல் 199, கணிதம் 188, இயற்பியல் 186).
பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவரால் பள்ளிக்கே பெருமை. வாய்ப்புக் கிடைத்தால் பெண் ணால் சாதிக்க முடியும் என்பதற்கு இப்பெண் மணி எடுத்துக்காட்டு! ஒதுக்கித் தள்ளியவர்கள், ஓடி வந்து வாழ்த்துச் சொல்கிறார்கள் அன்று தாம் செய்த முட்டாள்தனத்தை எண்ணி வருத்தப்படுகின் றனர் பெண்ணின் பெற் றோர். மருத்துவராகி சாதித் துக் காட்டுவேன் என் கிறார் ஜெயபிரபா. இது போல் எத்தனை எத் தனையோ ஜெயபிர பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சாதனைச் செல்வி!
ஜெயப்பிரபாவின் அப்பா, சைக்கிள் பஞ்சர் ஓட்டும் சாதாரண தொழி லாளி. ஏழ்மையான குடும்ப சூழலுக்கு, மருத்துவப் படிப்பு என்பது கடினமான இலக்கு. என்றாலும், அதை அடைந்தே தீரும் லட்சியத்துடன் ஜெயப் பிரபா இருக்கிறார்.
பெரிய மனிதர்கள், நிறுவனங்கள் அவரது படிப்புக்கு ஸ்பான்சர் செய்ய வேண்டும். சாதாரண கிராமத்து மாணவியை, சாதனை மாணவியாக மாற்றிய பெருமை கிடைக்கும் என்கிறார்கள் உடன் படித்த மாணவிகள்.
பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!
பழகு முகாமின் நிறைவு நாளில் தமிழர் தலைவர் கருத்துரை!
நிறைவு நாள் நிகழ்வில் பிஞ்சுகளுடன் பெற்றோர்கள்...
தஞ்சை, மே 12- பழகுமுகாமின் நிறைவு நாளில், பெரியார் பிஞ்சுகள், பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியவர்களாய் பார்த்து, பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை என்று பேசினார்
பெரியர் பிஞ்சு யாழ்மொழிக்கு பிறந்த நாள்
பழகு முகாமின் நிறைவு நாளான ஆறாம் நாளில் கடந்த அய்ந்து நாட்களில் தாங்கள் கற்றுக் கொண்ட திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. நடனம், கராத்தே, சிலம்பம், டேக்வான் டோ, யோகா என்று ஏறக்குறைய எல்லோருமே பெயர் கொடுத்திருந் தனர். நேற்று (11.5.2013) அதிகாலையிலே எழுந்து தயாராகி புத்துணர்ச்சியுடன் நடைப் பயிற்சியைத் தொடங்கி விட்டனர்.
முன்னதாக பிறந்த நாள் காணும் யாழ்மொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம், ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அழகிரி, யாழ்மொழியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு மற்ற பிஞ்சுகளிடம் வலம் வந்தார். அனைவரும் யாழ்மொழிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அப்படியொரு பிறந்த நாளை யாழ்மொழி இதுவறை கொண்டாடியிருக்கமாட்டார்.
மரம் நட்டு, மனிதம் காத்த பெரியார் பிஞ்சுகள்
நடைப் பயிற்சி சொர்ணா ரங்கநாதன் விடுதியி லிருந்து தொடங்கியது. நாகம்மையார் விடுதிக்கு அடுத்துள்ள ஆலமரத்தின் அருகில் இருக்கும் மரபணு பூங்காவில் பிஞ்சுகள் அனைவரும் மரம் நடக் காத்திருந்தனர். அவர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி, ஆம் தமிழர் தலைவர் தொடங்கி வைக்க பிஞ்சுகள் அனைவரும் மரத்தை நட்டு கொடுக்கப்பட்டிருந்த உரத்தையும் இட்டு தண்ணீர் ஊற்றினர்.
அப்போது நேற்று மாலை கையில் இருந்து கயிற்றை அறுத்தெரிந்த ஹரிஹர சுதனனை கேட்டார் - அழைக்கப்பட்டான், வந்தான் அவனிடம், கயிற்றை அறுத்தாச்சு நேற்று பேய் கனவில் வந்ததா? என்று கேட்டார். அவன் பளீரென்று சிரித்துக் கொண்டு இல்லை என்று தலையை அசைத்தான். தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று தட்டிக்கொடுத்தார்.
அப்போது துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடற்பயிற்சி இயக்குநர் ரமேஷ், உதவி உடற்பயிற்சி இயக்குநர் ஹேமலதா, யோக ஆசிரியர் முரளீதரன், பேரா. பர்வின், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், ச.அருணாச்சலம், அழகிரி ஆகியோர் உடனிருந்ததனர். முன்னதாக தமிழர் தலைவர் பிஞ்சுகளுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார்.
மீண்டும் தமிழர் தலைவரின் முன்னிலையில் பட்டிமன்றம்,
மூச்சை நிறுத்தும் சிரிப்புடனும், அளவு கடந்த வியப்புடனும் பார்த்து ரசித்த சுட்டிகளின் குட்டிப்பட்டிமன்றம் மீண்டுமொரு முறை நடைபெற்றது. இம்முறை ஒரு அணிக்கு தலா மூன்றுபேர் பங்கெடுத்தனர். இன்னும் அதே கார சாரத்துடன் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக இருந்த முனைவர் அதிரடி அன்பழகன் மிகவும் நேர்த்தியாகவும் சுவை குன்றாமலும் சிறப்பாக நட்த்தி, ஆசிரியர்கள்தான் குழந்தைகள் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றுகிறார்கள் என்று தீர்ப்பு தந்தார்.
பட்டி மன்றத்தை, தமிழர் தலைவர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைவேந்தர் நல் இராமச்சந்திரன், மேனாள் நீதியரசர் எஸ்.மோகன், பேரா. பர்வின், புதுவை பா.வீரமணி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பட்டிமன்றத்தில், பெற்றோர்களே என்ற அணியின் தலைவரான யஸ்வந்த்துடன் ஹரிஹர சுதன், பாவேந்தன் ஆகியோரும் ஆசிரியர்களே என்ற அணியின் தலைவரான கிசோருடன் பகுத்தறிவு, தமிழரசி ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பு பெற்றனர்.
தனித்திறன் காட்டி அசத்திய பெரியார் பிஞ்சுகள்
முக்கிய பிரமுகர்கள், பெரியார் பிஞ்சுகள் பெற்றோர்கள், உறவினர்கள், ஒருங்கிணைப்பாளர் என்று அய்ன்ஸ்டீன் அரங்கம் நிரம்பித் தளும்பியது. முதலில் தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பக் கலையை, எஸ்.நந்தினி, ஆர்த்தி, எஸ்.அஸ்வின், கிஷோர், எம்.சுபசிறீ, எ.பரணீதரன் புகழ் கொண்டான், எஸ்.வி.வீரமணி, எ.சித்தார்தன், டி.நிவேதா ஆகியோர் செய்து காட்டி அசத்தினர். இவர்களுக்கு பயிற்சியளித்தவர் அய்யப்பன் ஆவார்.
சிலம்பத்தைத் தொடர்ந்து, சந்தோஷ், ஆர்த்திப் பிரியா, கார்திகா, ஸ்நேகா, அபிநயா, கபிலன், அஜித்குமார். க.ஹமுராபி, பாக்யா சாம்பவி யாழினி, ஹரிணி, திவ்யதர்சினி, சிபி ஆகிய பெரியார் பிஞ்சு கள் யோகா கலையை செய்து காட்டி அனைவரின் கைதட்டலையும் அள்ளினர். இவர்களுக்கு பயிற்சி கொடுத்தவர் பாண்டியராஜன் ஆவார்.
அதைத் தொடர்ந்து, யாழ்மொழி, பகுத்தறிவு ராகப்பிரியா, எழிலரசன், யஸ்வந்த், அறிவுச் செல்வன், நிஷாந்த், துரை.சக்ரவர்த்தி, தமிழ் அமுதன், எம்.சிறீராம், கோகுலகிருஷ்ணன், பிரகதீஸ்வரன் ஆகியோர் கராத்தே முறைகளை செய்து காட்டி அரங்கினுள் ஆரவாரத்தை எழுப்பினர். இவர்க ளுக்கு எட்வின் பொய்யாமொழி ஆகியோர் பயிற்சி கொடுத்து சிறப்பித்திருக்கின்றனர்.
பிஞ்சுகளுக்கு பப்பாளி, தேக்கு ஆகிய இரண்டு மரச் செடிகளும் அதற்கு உரமும், அத்துடன் பழகு முகாம் சான்றிதழும் தமிழர் தலைவர் வழங்கினார்.
கராத்தேவைத் தொடாந்து எஸ்.விக்னேஷ், இலக்கியா, பிரியதர்சினி, அருண்ஞானச் செல்வி, முகிலன், சத்யபாரதி, சிறீராம், பூர்ணிமா, கவிப் பிரியா, தமிழரசி, அஸ்வர்யா, ஆதிரை ஆகியோர், தோழா வா தோழா! நாம் கோயில் மணி கூட்ட மல்ல, வீரமணி கூட்டமடா என்ற பாடலுக்கு மிக அருமையாக நடனமாடி பார்வையாளர்களின் கைத்தட்டல்களை அள்ளினர். இவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலை கழகத்தின் நடனக்குழு பயிற்சி கொடுத்து சிறப்பித்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து, யாழ்மொழி, தமிழரசி, ஸ்நேகா, அகிலா, அருந்தமிழ், கார்த்திகா, நந்தினி, பூர்ணிமா, அபிநயா, சுபசிறீ, அதியமான், எஸ்.சித்தார்த்தன், கவிப்பிரியா, நிவேதா ஆகியோர் பொழுது விடியட்டும் என்ற பாடலைப் பாடினர். அனைவரின் ஆதரவையும் பெற்றனர்.
இப்படி சிலம்பம், யோகா, கராத்தே, நடனம், பாடல், என்று நேரம் துருதுருவென்று நகர்ந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை மாணவர்களின் கையில் இருந்து அறுத்த கயிற்றை ஒரு கண்ணாடி புட்டியில் வைத்திருந்து, இன்று கொண்டு வந்து அதில் கிருமிகள் இருப்பதைக் காட்டி அது தொடர்பான சில அறிவியல் விளக்கங்களையும் கொடுத்தார்.
ஒரே நாளில் இரண்டாவது பிறந்த நாள் கொண்டாட்டம்
யாழ் மொழிக்கு காலையிலேயே தன் வாழ்க்கை யில் மறக்க முடியாத வகையில் பிறந்த நாளை நடை பயிற்சி துவங்கும் முன் கொண்டாடி இருந்தார். மீண்டும் ஒரு முறை நிறைந்த அரங்கத்தில் பழகு முகாம் சார்பில், தமிழர் தலைவர் முன்னலையில் கேக் வெட்டி கொண்டாடி குதூகலித்தார். அரங்கில் இருந்த பெற்றோர்களுக்கு இந்த நிகழ்ச்சி அளவு கடந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படித்தானே தங்கள் பிள்ளைகளும் கடந்த அய்ந்து நாட்களில் பேணப்பட்டு இருப்பார்கள் என்ற எண்ணத்தையும் தூண்டியது.
நிறைவு விழா!
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று நேரமல்ல - நாட்களே இறக்கை கட்டிப் பறந்த பழகு முகாம் நிறைவுக் கட்டத்தை எட்டியது. பழகு முகாமின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பழகு முகாம் பற்றிய வரலாற்றை தொகுத்துக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கிருந்த ஆர்வத்தை சுட்டிக் காட்டினார்.
பெரியார் பிஞ்சு பழகு முகாமில் பிஞ்சுகளின் கலை நிகழ்ச்சிகள்...
தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பழகு முகாமின் சிறப்பை தனக்கே உரிய வகையில் விடுகதை ஒன்று விடுத்து, பிஞ்சுகளிடமிருந்து விடையை பெற்றுக் காட்டினார். மேலும் அவர், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் செயல் திறனையும், தொழில்நுட்பத்தை அவர் கைக்கொள்ளும் வேகத்தையும் சுட்டிக்காட்டி, அவரை இன்றைய இளைஞர்களின் ரோல் மாடல் என்று ஒப்பிட்டுக் காட்டினார்.
அதிரடி அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பிஞ்சுகள் உரை...
தொடர்ந்து பேசிய அவர், இந்த பழகு முகாம், தனக்கு இயக்கத்தில் பெரியார் பிஞ்சுகள் அணி என்ற அணியை தோற்றுவிக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், இதை தமிழர் தலைவரிடம் வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து புதுவை வீரமணி, துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், மேனாள் நீதியரசர் எஸ்.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
நன்கொடையாளர்கள்
திராவிடர் கழகத்தின் மேட்டுப்பாளையம் இளைஞரணி அணியினர் சிவக்குமார் ரூ.1000மும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அண்ணாதுரை, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500-ம், காரைக்காலைச் சேர்ந்த ஜி.கே.நாராயணசாமி இன்றைய மதிய உணவுக்கான தொகை ரூ.6 ஆயிரத்துக்கான காசோலையை ஊருக்கு சென்ற பிறகு, அனுப்புவதாக மேடையேறி தெரிவித்தார். இவருடைய பேரன் இந்த பழகு முகாமில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் சரவணன், சிவகங்கை பூங்காவில் (10.5.2013) மதிய உணவிற்காக பெரியார் பிஞ்சுகளுக்கு மினி தண்ணீர் பாட்டிலை அளித்து மகிழ்ந்தார்.
தமிழர் தலைவரின் தலைமையுரை
முதலில், பெரியார் பிஞ்சுகளின் சிறப்புகளைப் பற்றி பட்டியலிட்டார். அதைத்தொடர்ந்து, பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதை குறிப்பிட, விற்ற கோழி, மீண்டும் விற்றர் வீட்டிற்கே வந்து முட்டையிட்ட கதையைச் சொல்லி, அந்த முட்டையை அந்த வீட்டின் சிறுவன் என்ன செய்தான் என்பதையும் சொல்லி, கோழி வாங்கியவர் சிறுவனின் நேர்மை யில் மயங்கி, முட்டையையும், கோழியையும் அவனிடமே கொடுத்து விட்டதையும் சொல்லி, நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது பெற் றோர்களின் கடமை என்பதை சுட்டிக் காட்டிவிட்டு, பெற்றோர்களும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தாயும், பிள்ளையும் தொடர் வண்டியில் பயணம் செய்த கதையைச் சொல்லி, வீட்ல ஏழு வயசு, தொடர் வண்டியில் ஆறு வயசு என்று தாயைக் காட்டிக் கொடுத்ததைச் சொல்லி, பெற்றோர்களின் கடமையை நினைவூட்டினார்.
பெற்றோர்களுக்கும் பழகு முகாம்
தொடர்ந்து அவர், இரட்டை வாழ்க்கை வாழக் கூடாது என்று அண்ணா சொன்னதை நினைவூட்டி, பழகு முகாமின் கடைசி ஒரு நாள் பெற்றோர் களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். காரணம் எந்தக் குழந்தையும் முட்டாள் அல்ல. Not Putting in.But putting out - என்று கூறி, திறமையை வெளியில் கொண்டு வரணும் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பெரும்பாலான குழந்தை களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, சாரங்கபாணியாக இருந்த நான் வீர மணி ஆனேன் என்று தன்னையே உதாரணமாக்கிக் கொண்டு, பெற்றோர்களே! தமிழர்களே! உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்.
நமது அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்றார். மேலும் அவர், வாழ்க்கையில் முன்னேற்றம் எப்ப வரும்னா, தவறுன்னு தெரிஞ்சா திருத்திக்கணும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அஞ்சு கண் ணன், பேய் என்றெல்லாம் குழந்தையை பயமுறுத்தி, அவர்களது தன்னம்பிக்கையையே போக்கி விடும் போக்கை சுட்டிக் காட்டி, பகுத்தறிவின் முகம் திறக்க முடியாத பிரச்சினையே இல்லை என்று கூறி, எல்லோருக்கும் வாழ்த்துகளைச் சொல்லி தமதுரையை நிறைவு செய்து கொண்டார்.
தொடர்ந்து, பிஞ்சுகளுக்கு பப்பாளி, தேக்கு ஆகிய இரண்டு மரச் செடிகளும் அதற்கு உரமும், அத்துடன் பழகு முகாம் சான்றிதழ் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக கல்லூரி பகுத்தறிவாளர் கழக மாணவர் அமைப்பின் மலர், 5 நாளில் மாணவர்களின் மதிப்பீடு ஆகியவையும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியைச் சொன்ன பதினெட்டு பிஞ்சுகளுக்கு, தமிழர் தலைவர் இனிவரும் உலகம் புத்தகத்தைக் கொடுத்து மகிழ்ந்தார். பேரா.பர்வீன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிறைவு விழாவின் இணைப்புரையை முனைவர் அதிரடி அன்பழகன் ஒழுங்கு செய்து கொடுத்தார்.
அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. உணவுண்ட பிறகு, உரிய படிவத்தில் கையொப்பமிட்டு அவரவர் தங்கள் குழந்தைகளை மனநிறைவோடு அழைத்துச் சென்றனர். தோழர் விஜய், பெரியார் பிஞ்சு பழகு முகாம் குறுந்தகடு ஆகியவற்றில் அறிவிப்பு செய்திருப்பதை முன்பதிவு செய்து கொடுத்தார்.
பெரியார் சமுதாய வானொலியில் பெரியார் பிஞ்சுகள்!
தஞ்சை, மே. 12- பெரியார் சமுதாய வானெலியில் பழகு முகாமில் கலந்து கொண்ட குழந்தைகள் சமுதாய விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளை பேசி மகிழ்ந்தனர்.
பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளில் ஆர்.எஸ்.அருள் மொழி, அரும்தமிழ், ருத்ரபாலா, யாழ்மொழி, ஆதிரை, அய்ஸ்வர்யா, தமிழரசி, பிரியதர்சினி, காவ்யா ஆகியோர் பெரியார் மணியம்மை பல் கலைக் கழக வளாகத்தில் இயங்கி வரும் பெரியார் சமுதாய வானொலியில் கடந்த 10.05.2013 அன்று சமுதாய விழிப்புணர்வு தொடர்பான கதை, பாட்டு, கவிதை, ஆகியவற்றை பாடி பேசி மகிழ்ந் தனர்.
இந்நிகழ்ச் சியை ஜி.காந்திமதி, மணிகண்டன், இலக்கியா, சத்தீஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.
இலங்கை இனப்படுகொலை - போர்க்குற்றம் பற்றி விசாரணை தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து
சென்னை, மே 12- இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வ தேச விசாரணை வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கலைஞர் கூறினார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட எண்ணற்ற இன்னல்களுக்கு இன்னமும் உரிய பரிகாரமும், நியாயமும் கிடைக்கவில்லை. இலங்கையில் நடை பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை முடிந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற இந்த கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
பல விசாரணை குழுக்கள், சர்வதேச அமைப்புகள் இலங்கை நிகழ்வுகளின் கொடுமைகளை உலக அரங்கிற்கு கொண்டு சென்று உணர்த்தியுள்ளன. கொடுமைகளுக்கான சான்றுகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
சர்வதேச பொது மன்னிப்பு அவை என்ற அமைப்பு எவ்வித அரசியலையும், எந்த நாட்டு அரசையும், எந்த ஒரு மதத்தையும் சார்ந்திராத சுதந்திரத்தன்மை கொண்டதாகும். அந்த அமைப்பு 150 நாடுகளில் 30 லட்சம் ஆதரவாளர்களையும், உறுப்பினர்களையும் கொண்டு இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் அடிப்படை நோக்கமே, மனித உரிமைகளுக்கு புறம்பான செயல்களைத் தடுத்து நிறுத்துவதாகும்.
பேரதிர்ச்சி
இலங்கையின் பல்வேறு தரப்பினரிடமும், நேர்காணல் நடத்தி தொகுக்கப்பட்ட விவரங்களை 3042013 அன்று சர்வதேச பொது மன்னிப்பு அவை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு, கருத்து வேறுபாட்டின்மீது இலங்கை அரசின் தாக்குதல் என்று தலைப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையிலே பதிவாகியுள்ள செய்திகள் நம்மை பேரதிர்ச்சிக் குள்ளாக்கி வேதனை அடையச் செய்கின்றன.
இலங்கையில் கருத்து வேறுபாடு என்பது அபாயகரமானது. போர் முடிந்த பின்னரும் கூட, அரசியல் சமூக நடவடிக்கைகளில், இலங்கை அரசினர் பொறுமையின்மையையே கடைப்பிடித்து வருகிறார்கள். மனித உரிமைகள் மற்றும் மனித நேயம் தொடர்பான சர்வதேச சட்ட மீறல்களுக்கான சாட்சியங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக் கின்றன.
போரின் போது புரிந்த குற்றச்செயல்களை மறைத்து, சட்ட ரீதியான, அரசியல் ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, அந்த குற்றச்செயல்களைப் பற்றி அறிந்தோர் உலகுக்கு உண்மையை உரைத்து இலங்கை அரசின் முகத்திரையை கிழித்து விடுவார்கள். இதற்காக அப்படிப்பட்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களைச் சிறைக்கு அனுப்புவதும், கடத்திச் செல்வதும், கொலை செய்வதுமான கொடுமை களை இலங்கை அதிகார பீடத்திலே அமர்ந்திருப் போர் நிகழ்த்தி வருகிறார்கள்.
தேச துரோகம்
இலங்கையில் கருத்து சுதந்திரம் என்பதே குற்ற நடவடிக்கை என்பதைப் போலவும், கருத்து வேற் றுமை என்பதே தேச துரோகம் என்பதைப் போல வும் கணிக்கப்படுகின்றன. கருத்து வேற்றுமையை வேரறுப்பதிலும், இலங்கை அரசின் கொள்கை களுக்கும், நடைமுறைகளுக்கும் எதிர்ப்பான அமைப்புகளையும், நீதி துறையையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழித்தொழிப்பதிலும், இலங்கை அரசினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமை நீதிபதி நீக்கம்
மனித உரிமைகளைக் காப்பாற்றும் வகையில் தீர்ப்புகளை வழங்கியமைக்காக, 2013 ஜனவரியில் இலங்கை நாட்டின் தலைமை நீதிபதி, வழக்கறிஞர் களின் ஒன்றுபட்ட எதிர்ப்புகளுக்கிடையே பதவி நீக்கம் செய்யப்பட்டார். கருத்து வேற்றுமையை வெளிப்படுத்தும் வழக்கறிஞர்களைக் கண்காணிப் பதும், அவர்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மனித உரிமைகளுக்காக வாழும் வழக்கறிஞர்கள், சிறுபான்மையினரை பாதுகாக்கும் வழக்கறிஞர்கள், மாணவர் தலைவர்கள், பேராசிரியர்கள், மத தலை வர்கள், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என யாரும் விட்டு வைக்கப்படாமல், அனைவருமே அரசினரின் கோபத்திற்கும், தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்ற னர். போரினால் பாதிக்கப்பட்டோரை பற்றிய விவரங்களை திரட்டுவோர் மற்றும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோர் அனைவருமே அச்சுறுத் தப்படுகிறார்கள்.
பொது மன்னிப்பு அவை
பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை காப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியும், அச்சுறுத்தியும், கைது செய்து சிறையில் அடைத்தும், கொலை செய்தும் தொடர்ந்து கொடுமைகள் புரிந்து வரும் இலங்கை அரசு, இத்தகைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
2013 செப்டம்பர் மாதத்தில் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறுவ தால் அதற்கு முன்பே அய்.நா. மன்றமும், காமன் வெல்த் அமைப்பும் இலங்கையில் நடந்த அனைத்து வகை மீறல்களுக்கும் இலங்கை அரசை பொறுப் பேற்க செய்ய வேண்டுமென்றும்; பொது மன்னிப்பு அவை வலியுறுத்தி வருகிறது.
காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடு என்ற வகையில் இலங்கை, மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தின் அம்சங்கள் அனைத்தையும் பிழையின்றி நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் எதையும் இயற்றாத நாடு இலங்கை. கருத்து சுதந்திரம், மக்கள் அமைதியாக கூடுதல் மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகிய சர்வதேச பொறுப்பை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து விட்டது.
இலங்கையில் இப்போது கருத்து வேற்றுமையின் மீது வன்முறை ரீதியிலான அடக்குமுறை ஒரு புறமும், அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்திக் கொள்ளும் முயற்சி மற்றொரு புறமும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்களை மறுத்தும், மனித உரிமை களைப் பாதுகாத்தல், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட ஆட்சி நடத்துதல் பற்றி வெற்று உறுதிமொழிகளைத் தாராளமாக வழங்கியும், சர்வதேச அரங்கில் இரட்டை வேடம் போட்டு நாடகம் ஆடி வருகிறது ராஜபக்சே அரசு.
அநீதி இழைக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைத்திட வில்லை. போருக்கு முன்னும், பின்னும் காணாமல் போனவர்கள், எவ்வித விசாரணையுமின்றி கொலைக்களம் அனுப்பப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லாததால் அவர்களது குடும் பத்தினர் தொடர்பான பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
பயனில்லையே!
பொது மன்னிப்பு அவை, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அய்.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு போன்றவை இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணை வேண்டுமென்று திரும்பத்திரும்ப குரல் கொடுத்தும் உரிய பயன் இதுவரை உருவாகவில்லை.
இலங்கை ராஜபக்சே அரசின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி சுதந்திரமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட நாமும் தொடர்ந்து குரல் கொடுப் போம். நமது குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக் கட்டும்.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
கடவுள் நம்பிக்கை... கலாட்டா!
திருப்பதி மலைப்பாதையில் பேருந்து விபத்து
திருப்பதி, மே 12- திருப்பதி மலைப்பாதையில் ஆந்திர அரசு பேருந்து, மரத்தில் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இதில் 15 பக்தர்கள் காயமடைந்தனர். திரு மலை பேருந்து நிலையத்திலி ருந்து நேற்று காலை 7.35 மணியள வில் ஆந்திர அரசு பேருந்து ஒன்று புத்தூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தில் தேவஸ்தான ஊழியர்கள் உள்பட பக்தர்கள் பயணம் செய்தனர்.
திருப்பதி மலைப்பாதை 2ஆவது வளைவில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பக்தர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கள் திருப்பதி ரூயா அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டனர்.
பேருந்து மரத்தில் மோதி நிற்காமல் போயிருந்தால் அங் குள்ள பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகி இருக்கும். தகவலறிந்த திருமலை 2ஆவது காவல் நிலைய காவல்துறையினர், தேவஸ்தான விஜிலென்ஸ் மற் றும் பாதுகாப்பு துறை அதிகாரி கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத் தினர். இதுகுறித்து திருமலை 2 ஆவது காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிழா சண்டை கோயிலுக்குப் பூட்டு
கலசப்பாக்கம், மே 12- கலசப் பாக்கம் அருகே ஆதமங்கலம் புதூரில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் இடையே மோதல் காரணமாக கோயிலுக்கு சீல் வைக்கப்பட் டது. திருவண்ணாமலை மாவட் டம், கலசப்பாக்கம் அடுத்த ஆத மங்கலம் புதூரில் திரவுபதியம் மன் கோயில் வளாகத்தில் கங் கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த 7ஆம் தேதி நடப்ப தாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சண்முகம் செய்தார்.
இதற்கு ஏ.எல்.வி.ராஜா (எ) ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித் தார். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட் டது. இதையடுத்து அன்று மாலை, திருவண்ணாமலை உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அமைதிக்குழு கூட்டம் நடந் தது. இதில் ராஜா தரப்பினர் பங் கேற்றனர். மற்றொரு தரப்பினர் பங்கேற் கவில்லை. இதையடுத்து, அன்று இரவே சண்முகம் தரப்பினர் காப்பு கட்டும் நிகழ்ச்சியை நடத் தினர். இதுதொடர்பாக, இருதரப் பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
தகவல் அறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், கடந்த 2 நாட்களாக அங்கு அமைதி நிலவியது. இந்நிலையில், வரும் 14ஆம் தேதி கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடத்த ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற் படலாம் என கருதிய அதிகாரி கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு களை செய்தனர்.
முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, நேற்று காலை 8 மணி முதல் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் குவிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணை யர் வேதா தலைமையில் ஊழியர் கள் வந்து கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.
குடமுழுக்கும் - அர்ச்சகர் பிரச்சினையும்
2011-2012ஆம் ஆண்டில் 1006 கோயில்களுக்கும், 2012-2013ஆம் ஆண்டில் 1096 கோயில்களுக்கும் குட முழுக்குச் செய்யப்பட்டது. நடப்பாண்டில் 1006 கோயில்களுக்குத் திருப்பணி செய்யப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110ஆவது விதியின் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தினால் மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்குச் செய்யப்படும் நிரந்தரமான ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்?
படித்த மற்றும் படிக்காத பாமர மக்கள் காலத்தையும், பொருளையும், உழைப்பையும் வீணடிக்கப் பயன்படக் கூடிய திட்டம்தான்.
மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. நடைபாதையில் வாழும் மக்கள் தொகை குறையவில்லை.
தலைநகரமான சென்னையிலேயே இந்த அவல நிலை! இரவு உணவு இல்லாமல் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு பசியால் தூக்கம் இல்லாமல் துடிக்கும் மக்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கரும் பலகைகூட இல்லாத பள்ளிகள் உண்டு; போதிய கட்டட வசதியில்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பது ஏடுகளில் படத்துடன் வெளி யிடப்படுவதும் உண்டு. உயர்நிலைப்பள்ளியில் கல்வியை முடிக்காமல் இடையில் நிறுத்தப்படும் (Dropouts) நிலையும் உண்டு.
விவசாயம் பாதிக்கப்பட்டு கிராமப்புற மக்கள் வறுமையின் வன்பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் சொல்லும் தரமன்று; நோயாளிகளுக்குப் படுக்க வசதியில்லாமல் தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். போதிய மருந்துகளும் அரசு மருத்துவமனையில் இருப்பதில்லை.
இவ்வளவுக் கொடுமைகளும், இல்லாமையும் வறுமையும் குவிந்து கிடக்கும் நாட்டில், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்ததாகக் கூறப்படும் கடவுள்களுக்குக் கோயில் புனருத்தாரணம்தான் முக்கியமா?
உயிருள்ள ஜீவனுக்குக் குந்தக் குடிசை இல்லை; குழவிக் கற்களுக்குக் கூடக் கோபுரங்கள் கேட்கிறதா?
சிறிதும் மனிதாபிமானமற்ற செயல்பாடு இது. அரசின் செயல் திட்டங்கள் வளர்ச்சிப் போக்கில் இருக்க வேண்டுமே தவிர. உற்பத்தி நாசத்திற்கு எந்த வகையிலும் பயன்படக் கூடாது.
கோயில் என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் நடைபெறுவது உற்பத்தி நாசம்தான் - பால், தயிர், வெண்ணெய், எண்ணெய், தேங்காய் என்று அழிக்கப்படுகின்றன. மக்களுக்குப் பயன்படக் கூடிய இந்தப் பொருள்கள் கடவுளுக்கு அபிஷேகம் என்ற பெயரால், கற்சிலைகளின் தலைகளில் கொட்டி குளிப்பாட்டி சாலவத்தின் வழியாக வெளியேற்றப் படுவது - உற்பத்தி நாசமல்லாமல் வேறு என்னவாம்?
இவை எல்லாம் இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று எந்த கடவுள் முதல் அமைச்சரின் கனவில் வந்து சொல்லியதாம்? சொல்ல முடியுமா?
காணிக்கைகளால் வருமானம் அர்ச்சகப் பார்ப்பானுக்கு கிடைக்கிறது. புரோகிதச் சுரண்டல் ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது; கோயில் என்பது சுரண்டலின் மறுபெயர். இதற்கு அரசுப் பணம் எதற்காக செலவழிக்கப்பட வேண்டும்?
கோடிக்கணக்கில் கோயிலுக்காக குடமுழுக்குக் காக மக்கள் பணம் அரசு சார்பில் கொட்டப்படுகிறதே - அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன?
குறைந்த பட்சம் பருவ மழையாவது பெய்ததா? நியாயப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைத்து விட்டதா - முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முடிவுதான் எட்டப்பட்டதா?
தற்கொலைகள் குறைந்தனவா? படுகொலை பட்டியல் அடைபட்டு விட்டதா? (கோயில் சிலைகளே கடத்தப்படுகின்றன - இந்த லட்சணத்தில் அவற்றிற்குக் குட முழுக்காம்!)
இன்னொன்று மிக முக்கியமானது. விதி 110 இன்கீழ் கோயில் குட முழுக்குகளின் பட்டியலை வெளியிட்ட முதல் அமைச்சர், இந்தத் துறைக்குச் சம்பந்தப்பட்ட, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினைபற்றி மூச்சு விடாததே ஏன்?
206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்று ஆண்டுகள் பல ஓடிய நிலையில், இதற்கானஅறிவிப்புகள் இதுவரை வராதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் நிலைப்பாடு குறித்து முதல் அமைச்சர் சட்டப் பேரவையில் தெரிவித்திருக்க வேண்டாமா?
முதல் அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் பக்தியை மக்கள் சமுதாயத்தின் தலையின்மீது ஏற்றிச் சுமக்க வைக்கக் கூடாது; காரணம், அரசு என்பது சட்டப்படி மதச் சார்பற்றத் தன்மை கொண்டதாகும்.16-5-2013
மதுவைவிட மோசமானது கிரிக்கெட்(டு)ப் போதை!
சூதாட்டம் - கறுப்புப் பணம், கொலைக்குத் துணை போகும் அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப்பது சரியா?
விழிப்புணர்வை ஏற்படுத்த மே 24இல் ஆர்ப்பாட்டம் மாணவரணி, இளைஞரணி தோழர்களே, தயாராவீர்!
தமிழர் தலைவர் அறிக்கை
மதுவைவிட அதிகப் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம். கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு - குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப்பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் வரும் 24ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
விளையாட்டு என்பது உடலை நலத்தோடு வைத்துக் கொள்ளவும், உள்ளத்தைப் பக்குவப்படுத்தவும் - வெற்றி, தோல்வி எதுவரினும் சமப் பார்வையுடன் ஏற்கும் மன நிலையைப் பெறவும் பயன்படும் அரிய ஒன்றாகும்.
இங்கிலாந்தில் கோடை விளையாட்டுதான் கிரிக்கெட்!
அது உடலுக்கும் அதிக வலிமை தராமல், இங்கிலாந்து நாடு என்ற (ஆண்டில் முக்கால் பகுதி) குளிர் பிரதேசத்தில் கால்பகுதி கோடையாக - சூரிய வெளிச்சம் வெப்பம் வரும்போது, அதனைச் சுவைக்க ஏதோ ஒரு விளையாட்டு பொழுதுபோக்காக அமையட்டுமே என்று கண்டுபிடிக்கப்பட்டதே கிரிக்கெட் என்ற விளையாட்டு!
இது கால்பந்து, கைப்பந்து, சடுகுடு என்ற கபடி, சிலம்பம், ஏன் ஆக்கி போன்றவை மூலம் வரும் வலிமை, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இந்த கிரிக்கெட்டில் கிடையாது. இது ஒரு மேனா மினுக்கி விளையாட்டு. அவ்வளவு தான்!
இன்று அந்தப் பைத்தியம் நமது இளைஞர்கள் - மாணவர்கள் பலருக்கும் பிடித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் எப்படி மது வியாபாரம் நடைபெறுகிறதோ அதுபோல, கிரிக்கெட் என்பது கொள்ளை லாப குபேரர்களின் போட்டிப் பந்தயத் தொழிலாகி விட்டது!
உழைப்பவர்களின் பணம்கூட விரயம்!
உழைக்கும் மக்கள்கூட, இந்த விளையாட்டை பார்த்து நூற்றுக்கணக்கான ரூபாய் மதிப்பில் டிக்கெட் வாங்கி, கைப் பொருள் இழக்கின்றனர்!
சில நாடுகளின் அணிகளுக்கிடையே நடந்த இந்த கிரிக்கெட் பந்தயம் - இப்போது முற்றிலும் விசித்திரமாக IPL (Indian Premier League)
என்ற பெயரால், கிரிக்கெட் ஆட்டக்காரர்களை பல கம்பெனியாளர்கள் முதலீடு செய்து, விலைக்கே வாங்கி ஆட விட்டு, கொள்ளைப் பணம் அடிக்கின்றனர்.
மது போதையைவிட மோசமானது!
மது போதையைவிட இந்த கிரிக்கெட் போதை மிக மிக ஆபத்தானது; அதைவிட மோசமானது!
விடிந்தால் போகும் மதுப் போதை, இந்தக் கிரிக்கெட் (டு)ப் போதையோ ஒரு முறை பிடித்தால் எளிதில் போகாது - நீரிழிவு நோய் போல!
மனித உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் விரோத மான தத்துவம் மனிதனை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்குவது என்ற நிலையில், விளையாடுபவர்களை விலை கொடுத்து - ஆடு மாடுகளை வாங்குவதுபோல வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை ஆட வைத்து, பணம் கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது!
கறுப்புப் பணப் பெருக்கம்!
அதைவிடப் பெரிய அநியாயத்திற்கு அசிங்கப் பூண்போட்டதுபோல், மேல் பந்தயம் சூதாட்டமாக தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இதனால் கறுப்புப் பணப் பெருக்கமும் மற்றொருபுறம் - என்னே கொடுமை!
கிரிக்கெட்டு சூதாட்டமும் - கொலையும்
இந்த சூதாட்டங்கள் கொள்ளையில் மட்டுமல்ல கொலையிலும் முடிகிறது என்பது இன்று காலை மும்பை யில் நடைபெற்ற ஒரு 13 வயது சிறுவன் கொலையால் அறிய முடிகிறது. வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதல்லவா?
இதோ இந்த செய்தியைப் படியுங்கள்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க சித்தப்பா மகனை கடத்திக் கொன்ற படுபாதகன்
மும்பை: மும்பையில், அய்.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில், இழந்த பணத்தை மீட்பதற்காக, 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப் பட்டான்.மும்பையை சேர்ந்தவர், ஹிமான்சு ரன்கா. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், தற்போது நடைபெற்று வரும், அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டார். அதில், 30 லட்சம் ரூபாயை இழந்தார். மனமுடைந்த ரன்கா, இழந்த பணத்தை எப்படி மீட்பது என தீவிரமாக ஆலோசித்தார்.தன் சித்தப்பாவிடம், 30 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அறிந்தார்.
அந்தப் பணத்தை பறிக்க நினைத்த ரன்கா, தன் நண்பர், பிஜேஷ் சங்க்வியுடன் சேர்ந்து, சித்தப்பாவின் மகன் ஆதித்யாவை கடத்தினார்.பின், கடத்தல்காரன் போல, சித்தப்பாவின் வீட்டிற்கு போன் செய்து, "உங்கள் மகன் ஆதித்யாவை கடத்தி வைத்திருக்கிறோம். 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், விட்டு விடுகிறோம் என, மிரட்டினார்.
அதிர்ச்சி அடைந்த, ஆதித்யாவின் தந்தை ஜிதேந்திரா, போலீசில் புகார் செய்தார். அவர் போலீசில் புகார் செய்ய சென்ற போது, ஒன்றும் தெரி யாதவர் போல ரன்காவும் உடன் சென்றார். இதற் கிடையே, போலீசார் தன்னைக் கண்டுபிடித்து விடு வார்களோ என, பயந்த ரன்கா, நண்பர் சங்க்வியுடன் சேர்ந்து அவனை கொல்ல திட்டமிட்டார். இருவரும் சேர்ந்து, கடத்தி வைத்திருந்த ஆதித்யாவை மும்பை புறநகர் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஆதித்யாவின் கை நரம்புகளை நறுக்கினர். இதில், அதிக ரத்தம் வெளியேறி, அவன் மயக்கமடைந்ததும், பன்வெல் என்ற இடத்தருகே, காரிலிருந்து தூக்கி வீசினர். இதில், ஆதித்யா உயிரிழந்தான்.இதற்கிடையில், ரன்காவின் காரில், ஆதித்யாவின் செருப்பு இருந்ததைக் கண்டு, சந்தேகமடைந்த ஜிதேந்திரா, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். காரைப் பறிமுதல் செய்து, காவல் துறையினர் சோதனை நடத்தியதில், காரில் ரத்தக் கறைகள் காணப்பட்டன.இதையடுத்து, ரன்காவிடம் விசாரணை நடத்தியதில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரும், அவரின் நண்பர் சங்க்வியும் கைது செய்யப்பட்டனர்.
(தினமலர் 16.5.2013 - பக்கம்.9)
மும்பையைச் சேர்ந்த ஹிமான்சு ரன்கா எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அய்.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத் தில் ஈடுபட்டார்; அதில் 30 லட்சம் ரூபாயை இழந்தார். முன்பே இந்தத் தறிகெட்ட கிரிக்கெட்டு சூதாட்டம் பற்றி பல்லாயிரக்கணக்கில் நடந்த ஊழல்கள் வெளிப்படையாக அலசப்பட்டு சந்தி சிரிக்கவில்லையா?
ஏற்கனவே நடந்த கிரிக்கெட் சூதாட்டம்; காரணமாக இரண்டு கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருமதி ஷில்பாஷெட்டி சூதாட் டம்பற்றி சாட்சியம் அளிக்கிறேன் என்று கூறுகிறார்!
சர்வதேச அவமானம்!
விளையாட்டுத் தத்துவத்தின் பொது ஒழுக்கத்தையே சிதைத்த வண்ணம், பேசி வைத்துக் கொண்டு திட்டமிட்டு நன்கு ஆடாமல் தோற்று விடுவதற்கு, பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்ற கதையைவிட சர்வதேச அவமானம் அல்லவா!
இந்தப் போதையில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும் படிப்பைக் கோட்டை விடுகின்றனர்!
பணத்தை நாசம் செய்கின்றனர்; இதனால் உடல் வளமும்கூட பெருகிடவில்லை!
கிராமப்புற வயல்களில்கூட..
கிராமப்புறங்களில்கூட மாணவர்கள் வயல்வெளிகளில் கொளுத்தும் கத்திரி வெயிலில் ஆடி தங்கள் உடலுக்குக் கேடு சேர்த்துக் கொள்கின்றனர்.
பாபநாசம், ராஜகிரி பகுதியில் கிரிக்கெட் பற்றி எழுந்த பிரச்சினையில் வாதத்தில் தொடங்கி மகன் தந்தையை கொன்ற செய்தி மறந்து விட்டதா?
பான்பராக், குட்கா, மது, இந்த வரிசையில் இந்த கிரிக் கெட் சூதாட்ட மோகம் மிகக் கேடானது ஆகும்!
இதனை எதிர்த்து, இதை அரசு தடை செய்ய வேண்டும் அல்லது 90 விழுக்காடு வரிவிதித்து. அதன் மூலம் அதை சிறுகச் சிறுக ஒழிக்க வேண்டும்.
சட்ட அனுமதி தரலாமா?
சூதாட்டம் கிரிமினல் குற்றம் என்கிறபோது இதை மட்டும் மத்திய, மாநில அரசுகள் அனுமதித்து இப்படி கொலையும், கொள்ளையும் பெருகி, பொது ஒழுக்கக் கேட்டிற்கு சட்ட அனுமதி தரலாமா?
24ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
இதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி - மகளிரணியினர் இணைந்து மாவட்டத் தலைநகர்களில் வருகின்ற 24.5.2013 வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்.
இந்தப் பிரச்சாரத்தை நன்கு விளக்கி தெருமுனைக் கூட்டங்கள் போட்டுப் பேசுவது இதன் இரண்டாவது கட்ட செயல் திட்டமாகக் கழகம் கொள்ளவிருக்கிறது!
நமது வீர விளையாட்டுகளைப் புதுப்பிக்க இந்த கண்டனங்களும், பிரச்சாரமும் நிச்சயம் பயன்படும் என்றும் நாம் நம்புகிறோம்!
ஒத்த கருத்துள்ளவர்களும் இதில் கலந்துகொண்டு, இளைஞர்கள் - மாணவர்களின் எதிர்கால வாழ்வைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை
16.5.2013
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னையிலும் அமோகம்
அய்.பி.எல்., கிரிக்கெட் போட்டி சூதாட்டம், வடசென்னையிலும், சில இடங்களிலும், வெகுஜோராக நடந்து வருகிறது.குறிப்பாக, சென்னையில், சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, வடசென்னையில் அதிக பணம் புரளும் இடம் ஒன்றில், 10ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் பலர், லட்சக்கணக்கில், பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, மொபைல் போன், வாகனம், லேப்-டாப் உள்ளிட்டவற்றை, "பிணையாக வைத்தும், சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோரும் இதை மறைத்துவிடுவதால், போலீசுக்கு தகவல் கிடைக்கவில்லை. முன்பெல்லாம், இந்த சூதாட் டத்தில், வெளியாட்கள் கலந்து கொண்டனர். தற்போது, நெருக்கமான உறவினர்கள் மட்டும் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. இதனால், சூதாட்டம் நடப்பது வெளியில் தெரியவில்லை.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக, சென்னை சவுகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில், போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
(தினமலர் 16.5.2013 - பக்கம்.9)
கலாச்சாரப்படி...
பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954
கடவுளர் சக்தி இப்படியா சந்தி சிரிப்பது?
- ஊசி மிளகாய்
வழக்கம்போலவே நேற்றும் தமிழக சட்டமன்றத்தில் நமது முதலமைச்சர் அவர்கள், விதி 110 இன்கீழ் வாசித்த ஓர் அறிக்கையில் கூறியுள்ள சில கருத்துகள்பற்றி:-
கோவில்களில் உண்டியல் கொள்ளை, நகைகள் மற்றும் உடை மைகள் திருட்டு; எல்லாவற்றையும் விட கடவுள், கடவுளச்சிகளையே பெயர்த்துக் கடத்திக் கொண்டு போகும் கள்ள பக்த கேடிகள் ஆகியோரைக் கண்டுபிடிக்க, முன் னெச்சரிக்கையாக எச்சரிக்கை மணி - அபாய மணி போன்று ஒலிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மேலும் கடவுளைத் திருடும் - கடத்தும் பக்த கேடிகளைக் கண்டுபிடிக்கவும் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தவும் இனி இந்து அறநிலையத் துறையினரால் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிப்புச் செய்துள்ளார்!
பலே, பலே, கடவுள் சக்தி எப்படிப்பட்டது என்பதை நிரூபிக்க இதைவிடச் சிறந்த பிரச்சாரம் - எடுத்துக்காட்டு வேறு என்னதான் இருக்க முடியும்?
கோவிலுக்குச் செல்லும் பக்தர் களை எதற்காகக் கோவிலுக்குப் போகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் நம்மைக் கடவுள் காக்க வேண்டும்;
உலகத்தைக் காக்க வேண்டும் என்று பிரார்த்தனை - வேண்டுகோளை வைக்கவே செல் கிறோம்; ஏனெனில் கடவுள் சர்வ சக்தி - சர்வ வல்லமை - சர்வ வியாபி - சர்வதயாபரன் - கரு ணையே வடிவானவன் என்பதால் தான் என்றுதானே கூறுகிறார்கள்?
சர்வசக்தி வாய்ந்த சாமிக்கு - அதன் இருப்பிடமான கோவிலைப் பாதுகாக்க மனிதர்களும், மின்னணு இயந்திரங்களுமா தேவை? கண் காணிப்புக் கேமிராவில் எல்லாம் தெரியுமோ; ஆண் சாமியைக் குளிப் பாட்டினதோடு, பெண் கடவுளையும், பிறந்த மேனியாக்கிக் கழுவிக் குளிப்பாட்டுவது வரை படம் பதிவா குமோ? அர்ச்சகரையும் அப்படியே கண்காணித்தால் நல்லதுதானே!
அதிலும் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் நடத்திய சொர்க்க லோகக் காட்சிகளும் பதிவாகு மானால், அதைவிட பக்தி ரசம் சொட்டும் அருமையான சரித்திரம் தான் யாருக்குக் கிடைக்கும்?
சர்வசக்தி கடவுளுக்கு இல்லை; அதை வைத்துப் பிழைக்கும் மனிதர் களுக்கும், அரசுக்கும்தான் இருக் கிறது என்பதை இந்த முறையின் மூலம் நாட்டுக்குணர்த்திட்ட முதல மைச்சரின் ஏற்பாடு விசித்திரமானது என்றால், கடவுள் மறுப்புப் பிரச் சாரத்தை வேறு மாதிரி செய்கின்ற முயற்சி அல்லாமல் வேறு என்ன?
ஏற்கெனவே பல முக்கிய பெரிய கோவில்களின் சாமி சிலைகள்கூட ஒரிஜினல்கள் எல்லாம் பாதுகாப்புப் பெட்டகங்களில் டெபாசிட் செய்து வைக்கப்பட்டு, முக்கிய திருவிழா வின்போது மட்டும் அந்த ஒரிஜினல் சாமி, பரோலில் ஓரிரு நாள்கள் வெளியே வந்து சிறைக்கு மீண்டும் திரும்பும் கைதிபோல, ஊர்ப் பொதுத் திருவிழா முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்புப் பெட்டகத்திற்கே (Safe Deposit Vault) திரும்பி விடுவார்.
மற்ற நாள்களில் மாற்று நகல் கடவுள்தான் - counterfeit Coin போல பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறாராம்!
பெரியார் கேட்டார்: ஏம்பா, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத கடவுள், எப்படியப்பா உன்னைக் காப்பாற்றுவார்? என்று.
நியாயமான கேள்விதானே அது?
அதனால்தான் பதில் தர முடியாத சிக்கலான கேள்வியாகவே அது எப்போதும் இருக்கிறது!
வருஷாவருஷம் கடவுள் - கடவுளச்சியர் திருக்கல்யாணம் செய்து வைப்பவர்களைப் பார்த்தும் கேள்வி கேட்டார்!
போன வருசம் பண்ண கல்யாணம் என்ன ஆச்சு? டைவர்சா? ரத்தா? இல்லை, ஓடிப் போயாச்சா? - அறிவுள்ளவர்கள் கேட்கமாட் டார்களா? என்பார்!
அதுமட்டுமா?
சாமிகளுக்குப் பள்ளியறை கட்டி பெரியவர்கள் பிள்ளை விளையாட்டு நடத்துகின்றனரே!
எங்காவது பிரசவம் பார்க்க மருத்துவமனை, மகப்பேறு மருத் துவமனை உண்டா? கட்டப்பட்டுள் ளதா? நடிகவேள் எம்.ஆர். ராதா கேட்பார் தனது நாடகத்தில்,
ஏண்டா, சாமி ஆறு வேளை சாப்பிடுதுங்கிறியே, சரி படைக்கிறே; அதற்கு டாய்லட் (கழிப்பறை) கட்டி வச்சியா? உண்மையிலேயே அது சாப்பிடறதாயிருந்தா அதுவும் இல்ல கட்டி வைச்சிருப்பே என்று கேட்பார்.
பக்தர்களும், பாமரர்களும், படித்தமேதை முட்டாள்களும் சேர்ந்தே கைதட்டிச் சிரித்து விட்டு வருவர்!
எல்லாம் வல்ல
எங்கும் நிறைந்த
கடவுள்களின் சக்தி
இப்படியா சந்தி
சிரிப்பது?
அரே, ராம், ராம் ஓம்! ஓம்! ஆம்! ஆம்!15-5-2013
காரணம்
வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963
நுழைவுத் தேர்வு அறவே வேண்டாம்
நுழைவுத் தேர்வு என்றாலே - அதன் பொருள் கிராமப்புற மக்கள், ஆண்டாண்டுக்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் முட்டுக்கட்டை என்று பொருள்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வந்தபோதே அதனைக் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகமே. சமூக நீதித் திசையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெளிவு கிடையாது - அதன் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல பாடமும் கற்றுக்கொண்டார்.
5 ஆம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக வந்த மானமிகு கலைஞர் அவர்கள் நுழைவுத் தேர்வைத் தடை செய்து சட்டம் இயற்றினார். உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்வரை சென்று மோதி முட்டிப் பார்த்தனர் - விளக்கெண் ணெய்க்குத்தான் கேடானதே தவிர பிள்ளை பிழைத்திடவில்லை.
மாநில அரசின் இந்தக் கொள்கை முடிவினை - கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன்மூலம் முட்டித் தள்ளுகிறது.
அதுவும் கபில்சிபல் என்ற மேல்தட்டு மனிதர் மனித வள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்ச ராக வந்த நாள் முதற்கொண்டு நுழைவுத் தேர்வைத் திணித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் எலும்பு உடைய உடைய ஊசி முனையில் தவம் இருக்கிறார்.
பி.ஏ., பி.எஸ்ஸி., என்ற பட்டப் படிப்பில்கூட அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைத் துத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்.
அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப்படும் என்கிறார்.
முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வினை மருத்துவக் கவுன்சில் வைக்க அடம்பிடிக்கிறது.
அதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கியது கலைஞர் தலைமையிலிருந்த தி.மு.க. அரசு.
உச்சநீதிமன்றம் மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இது என்ன கொடுமை!
தமிழ்நாடு அரசும், ஆந்திர மாநில அரசும் மருத்துவக் கவுன்சிலின் முடிவினை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், இவ் வாண்டு நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத் துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இது தற்காலிக வெற்றியே! ஆனாலும், நிரந்தரமாக நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
பிளஸ் டூ தேர்வு என்பதே எழுத்துத் தேர்வு; அதற்குப் பிறகு எதற்கு இன்னொரு எழுத்துத் தேர்வு? அப்படி என்றால், பிளஸ் டூ தேர்வுக்குத் தான் என்ன மரியாதை?
போட்டித் தேர்வும், நுழைவுத் தேர்வும் ஒன்றல்லவே! இரண்டையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்ளவேண்டும்?
சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் கள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கின்போது சொன்ன கருத்துரை என்ன?
நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான்! ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கின்றனர்?
இட ஒதுக்கீட்டின் காரணமாக, தட்டுத் தடுமாறி தொழிற்கல்லூரிகளில் நுழைபவர்களைக் கொல் லைப்புறம் வழியாக நுழைந்து வெளியே தள்ளும் பார்ப்பன சூழ்ச்சிதான் நுழைவுத் தேர்வு என்பது.
தற்காலிகமாக அல்ல - நிரந்தரமாகவே நுழைவுத் தேர்வை தடை செய்யவேண்டும் என்பதுதான் சமூகநீதியாளர்களின் அழுத்தமான வேண்டுகோள்! 15-3-2013
இந்தியா டுடே பார்வையில்... ராஜபாளையம்
சாதிக்கு சவுக்கடி
சாதிவெறி சக்திகளை ஒடுக்கக் கோரியது திராவிடர் கழக மாநாடு
தி.க. தொண்டர்கள் அணிவகுப்பு
தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி யாக செயல்படும் என்று என்றோ சொல்லப்பட்டது இன்று ஞாபகத்திற்கு வருகிறது. ராஜபாளையத்தில் மே 4 அன்று நடந்த தி.க.இளைஞர் அணி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண் டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது. ஆகஸ்ட் 1 அன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமைக்கான சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவதாகும்.
இந்தப் போராட்டத் தில் பங்கு கொள்ள உறுதி தெரிவித்தவர்களில் சிலர் ரத்தத்தில் கையொப்பமிட்டிருந்தனர். இதற்கெல்லாம் ரத்தம் சிந்தக்கூடாது. ரத்தம் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டியது எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்பட வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார் தி.க. தலைவர் கி.வீரமணி.
பெண்களை விளம்பரப் பொருளாகவும் கலையின் பெயரால் ஆபாச வடிவமாகவும் காட்டுவது கூடாது; பாலியல் தொடர்பான கல்வியை கல்லூரி பாடத்திட்டத்திலாவது இருபால் மாணவர்களுக்கும் போதிப்பது அவசியம்; சாதி வெறியைத் தூண்டும் சக்திகள் மீது மத்திய; மாநில அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; காதல் திருமணங்கள் சாதி ஒழிப்புக்கு ஆக்கம் தருவதால் அதனை ஆதரிக்க வேண்டும்;
காதல் திருமணம் என்றால் கெட்ட வார்த்தை என்ற பிரச்சாரத்தை முறியடிக்க, அதுவே மனம் ஒத்த, உண்மையான இணையைத் தேடிக்கொள்ளும் வழிமுறையாகும் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் போன்ற தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
(நன்றி: இந்தியா டுடே மே 22, 2013)
நல்ல தீர்ப்பு தந்த நீதியரசர்களை நாடே வாழ்த்தட்டும்!
- கி.வீரமணி
அண்மையில் ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற நீதியரசர்களில் மிகவும் மனிதநேயத்தோடு, சமூக நலத்தையே பிரதானமாகவும் கொண்ட இருவர் ஜஸ்டீஸ் திரு கே. வெங்கட்ராமன், ஜஸ்டீஸ் திரு.கே.என். பாஷா ஆகியோர் ஆவார்கள்.
எந்த வழக்கிலும் ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து நீதித் தீர்ப்பு வழங்குவதில், அச்சமோ, சலுகையோ இன்றி, நியாயத் தராசு எப்பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாது தீர்ப்புகளை - மனித நேயக் கண் ணோட்டத்தோடு அளிப்பதில் உயர்நீதிமன் றத்தில் வரலாறு படைத்தவர்கள் அவ்விரு பெருமை மிகு மாண்பமை நீதியரசர்கள்.
அவர்களில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு. கே.என். பாஷா அவர்களும், ஜஸ்டீஸ் திரு. நாகமுத்து அவர்களும் இணைந்த அமர்வு ஒன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்மையை, தாய்மையைச் சிறுமைப்படுத்தாத ஒரு தீர்ப்பை, (மேல் முறையீடு) ஒரு கொலைக் குற்ற வழக்கில் தந்துள்ளனர்.
ஒரு நிறுவனத்தின் காவலாளியான ஆண் ஒருவரும், அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் துணைவியும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் ஒழுக்கக் கேடான - பாலுறவில் ஈடுபட்டிருக்கக் கூடும். ஏனெனில் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் அவர்களுக்குள் உடலுறவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அந்த சந்தேகத்தின் மீதுதான் இந்த குற்றவாளி அந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடும்;
எனவே அவருக்கு மறைமுக சாட்சிய ஆதாரங்களின் அடிப்படையில் (குறிப்பாக அனுமானத்தின் - யூகத்தின்) ஆயுள் தண்டனை வழங்கு கிறேன் என்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி யவர்கள் கூறியதை, ஏற்க மறுத்து, அவ் வழக்கில் குற்றவாளியின்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை; மறைமுக (Cricumstantial Evidence ) சாட்சியங் களுக்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை; மாறாக, ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தாலே அவர்கள் உடலுறவு கொள்வார்கள் என்று நீதிபதி முடிவுக்கு வருவது ஏற்கத்தக்கதல்ல என்று நன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்!
பெண்களைப் பற்றிய இப்படிப்பட்ட தவறான கருத்துகளுக்கு - முன்னோடி மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம் போன்ற தர்மங்களும், இதிகாசப் புராணங்களும்தான்.
அதில் இதே கருத்துள்ள வாசகங்கள், ஏராளம் நீதி வாக்கியங்கள்பேரில் உபதேசிக் கப்பட்ட கருத்துக்களாகக் கூறப்பட்டதின் விளைவு....? இன்று நீதிபதிகளின் மண்டைக்குள்கூட அது புகுந்து குடைந்து, நீதியின் போக்கையே மாற்றி, மனித தர்ம ஆளுமைக்குப் பதில் மனுதர்ம ஆளுமை நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது!
பெண்களை - மனிதர்களாகவே இதிகாசங்களும், புராணங்களும் பார்க்க விடாமல், அவர்களை வெறும் பாலியல் இயந்திரங்களாகப் (Sex Machines) பார்க்கும் வெட்கப்படத்தக்க நிலையை உருவாக்கி நாட்டில் பரவச் செய்ததின் விளைவுதான்.
6-7 வயது பெண் குழந்தையிடம் கூட வயதான ஆண்கள் பலர் சமூக வக்கிரங்களின் வாலாட்டங்களாக ஆகி கொடுமைக்குட்படுத்தி, அவமானத்தின் அதல பாதாளத்தில் வீழ்கின்றனர்!
சிறு வயதிலிருந்தே அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளை - பாலியல் அடிப்படையில் வைக்காமல் - மரியாதைக்குரியவர்கள் நம் தாய், தமக்கை, தங்கை, வாழ்க்கைத் துணைவிகள் - வாழ்விணையர்கள் என்ற வாழ்க்கைக் கல்வியை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆரம்பப் பாடத் திட்டங்களில் துவங்கி, பல்கலைக் கழக பாடங்கள் வரை பயிற்று விக்கப்படல் வேண்டும்.
ஓர் ஆணும் ஆணும் பழகும் போது ஏற்படாத சந்தேகம், அசூயை, அருவருப்பு - ஓர் ஆண் - பெண் சந்தித்தால், பேசினால், பழகினால் மட்டும் ஏன் ஏற்பட வேண்டும்?
அது பார்வைக் கோளாறும், அதன் விளைவும்தானே!
திரைப்படங்கள், சின்னத் திரையில் சிறு இளம் வயது பள்ளி மாணவப் பருவத்திலேயே காதல் என்ற காம உணர்வு அரும்பி, நட்பே (காதலைத்) தவிர வேறு இல்லை என்று ஆவதா?
பெண்களை அடிமைகளாக்கியிருக்கிற சமூகப் பார்வையும் மாறி, அவர்களைச் சுதந்தரம் பெற்றவர்களாக ஆக்கிட தந்தை பெரியார்தம் பகுத்தறிவு, சுயமரியாதைப் பார்வை - அணுகுமுறை தேவை!
நல்ல தீர்ப்பு தந்த நீதியரசர்களை நாடே வாழ்த்தட்டும்!
மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!
புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது.
+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மாணவ - மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளா கின்றனர் என்பதுதான் நுழைவுத் தேர்வு ரத் துக்கு அடிப்படையான காரணமாகும்.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப் புக்கும் மற்றும் எம்.டி, எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கை நடை பெறும் என்று, மத்திய அரசின் கட்டுப்பாட் டில் உள்ள இந்திய மருத் துவ கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்து இருந் தது.
தமிழக அரசு மட் டுமின்றி, ஆந்திரா உள் ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த மொத்தம் உள்ள 23 வழக்குகளும் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றப் பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருக் காது என்றும், தற்போது உள்ள நிலையே தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.
என்றாலும், இதில் இறுதி தீர்ப்பை, வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஒரு வேளை இந்த தீர்ப்பில் மாற்றம் எதுவும் வந் தாலும், மாணவர்கள் நலன் கருதி அடுத்த கல்வி ஆண்டுக்குத்தான் அந்த தீர்ப்பு பொருந் தும். இதற்கிடையில், இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதத்தில் உத் தரவு ஒன்றை உச்சநீதி மன்றம் பிறப்பித்து இருந்தது.
இந்திய மருத் துவ கவுன்சில், மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை ஏற்கெனவே நடத்தி இருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு உள் ளிட்ட நுழைவுத் தேர் வின் முடிவுகளை வெளி யிட அந்த உத்தரவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய இடைக்கால தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி அந்த தடையும் நீக்கப்பட்டது.
அ.தி.மு.க. அரசின் மிக மோசமான கொள்கை முடிவு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசு - அ.இ.அ.தி.மு.க. அரசு இடஒதுக்கீடு முறையில் அடிப்படையான தவறினைச் செய்திருக்கிறது. 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் செய்யப் பட்டுள்ள மிகப் பெரிய தவறினைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை; நம் நாட்டு அரசியல் கட்சிகளும் தலைவர்களும்கூட சமுதாய அமைப்புகள் கூட இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கோட்டை விட்டது ஆச்சரியம்தான்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து மிகவும் விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார் (விடுதலை 2.4.2013).
அதற்குப் பிறகுதான் இந்தப் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. இடதுசாரிகள் சட்டப் பேரவையில் பிரச்சினையைக் கிளப்பினார்கள். முதல் அமைச்சரின் கவனத்தில் இருப்பதாகக் கல்வி அமைச்சர் கூறினார்.
கல்வி மானியக் கோரிக்கையின் போது திருத்தத் துடன் முதல் அமைச்சரோ அல்லது கல்வி அமைச் சரோ புதிய அறிவிப்பினை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி தருவதாக உள்ளது.
தகுதித் தேர்வு எழுதிய உயர் ஜாதியினர், தாழ்த் தப்பட்டோர், மலை வாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) தமிழ் வழியில் படித்தோர் என்னும் வகையில் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு தனித்தனியே உள்ளது.
ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு மதிப் பெண்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக இதே தேர்வில் ஆந்திர மாநிலத்தை எடுத்துக் கொண்டால் உயர் ஜாதி யினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் என்று தனித்தனியே மதிப்பெண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
அ.இ.அ.தி.மு.க. அரசு தேசிய ஆசிரியர் கழகம் (சூஊகூநு) அறிவுறுத்தியதற்கு மாறாக உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அனை வருக்குமே ஒரே அளவுகோலாக 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கூறி தேர்வையும் நடத்தி பணி நியமனமும் செய்துள்ளது!
இது அடிப்படையில் தவறானது - இடஒதுக்கீடு வழி முறைகளுக்கு முரணானது. தாழ்த்தப்பட்ட வர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்குவது என்று சட்டப் பேரவையில் சுட்டிக் காட்டினால், கல்வி அமைச்சர் சொல்லுகிறார் இது அரசின், கொள்கை முடிவு என்று. தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சம அளவில் பாவித்துத் தேர்வு நடத்துவதுதான் அரசின் கொள்கை முடிவா?
அப்படி என்றால் அ.இ.அ.தி.மு.க. அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் எதிரான அரசு என்று பிரகடனப்படுத்தப் பட்டதாகப் பொருள். இது இடஒதுக்கீட்டின் தத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தான பார்ப்பனத்தனமாகும். மதிப்பெண்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பலன் பெற்றிருப்பார்களே.
இந்தச் சந்தர்ப்பத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசின் இன்னொரு செயல்பாட்டை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.
பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு சமூக வாரியாக அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு 40 சதவிகித மதிப்பெண்களை அது நிர்ணயித்து இருந்தது. 35 சதவிகிதம் இருந்தாலே போதும் என்பது தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு சென்றது. அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த அணுகுமுறை ஆசிரியர்கள் தேர்வில் ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை? அதிமுக அரசுக்கு ஏனிந்த தடுமாற்றம்? தவறு நடந்து விட்டது. நாகரிக மாக ஒப்புக் கொண்டு மறு தேர்வு நடத்துவதற்குப் பதிலாக முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற தன்மையில் நடந்து கொள்ளலாமா? இது பெரியார் மண் - சமூகநீதியில் கை வைத்தால் விளைவைச் சந்தித்தே தீர வேண்டும் - எச்சரிக்கை!
14-5-2013
மயக்கம் தெளியட்டும்!
தமிழர்களில் சிலரை மயக்கி மடக்கப் பார்க்கின்றது பார்ப்பனீயம் !
ஒவ்வொரு மயக்கத்தையும் பயன் படுத்துவதே அவர்களது வழக்கம்.தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் கெட்டுப் போக வேண்டுமா? அரசியலுக் குச் செல்! என்று.இன்று அதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.தமிழக மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு முதலமைச்சர் என்றால் கூட எல்லோரை யும் மகிழ்விக்க இன்னும் பல மாவட் டங்கள் தேவைப்படும் !
பதவியைப் போன்றதே இன்னும் பெரிய மயக்க மருந்து, பெரிய போதை தருவது புகழ் என்ற மமதை! இன்று கூட்டம் சேர்க்க முடியாதவர்களுக் கென்று பார்ப்பனீயம் கண்டு பிடித்துள்ள புதிய மயக்கம் பத்திரிகை மயக்கம்,
சிலரைக் குறி வைத்து ஏதோ அவர்கள் சொல்லுங் கருத்துக்கு மதிப்பளிப்பது போன்ற மாயையை உண்டாக்கி, அவர் களை எழுதச் சொல்லி அதை வெளி யிடுவது. நாம் எழுதுவது பத்திரிகையில் வந்தால் மகிழ்ச்சியடையாதவர் எவர்? அந்த உணர்வையே மயக்க மருந்தாக்கி நன்கு பயன் படுத்துகின்றனர் இன்று.
பார்ப்பன ஊடகங்களுக்கு எழுதுவ தற்கென்று வரிசையில் நிற்கும் மானங்கெட்ட தமிழர்கள் மயக்கத்தில் அலைகின்றனர்; அதற்காக எதையும் எழுதத் தயாராக உள்ளனர்.பெரியாரைப் பற்றி ஒரு வரிகூட இல்லாத திராவிட வரலாற்றையே எழுதுகின்றனர்.தமிழினத் தலைவர்கள் பற்றி எழுதாத தமிழர் வரலாறு.
இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு தமிழரை விட்டு இன்னொரு தமிழரைத் தாக்க வைக்க வேண்டியது.அதைப் படித்து ரசிக்கத்தான் நம்மில் பெருங் கூட்டம் உள்ளதே! இந்தப் புகழுக்கு மயங்கும் பெரிய மனிதர்கள் காஞ்சி சங்கரனைப் பற்றியோ, பார்ப்பன அநியா யங்கள் பற்றியோ, மதத்தால் நடக்கும் மூடத்தனம் பற்றியோ எழுதச் சொல்லி வெளியிட்டுள்ளதைப் பார்த்துள்ளீர்களா?
தலைப்பு நமக்கு வேண்டியதாக, விரும்பிப் படிக்கக் கூடியதாக இருக்கும். உடனே உள்ளே சென்று படிக்க ஆவலைத் தூண்டும். உள்ளே சென்று படித்தால் இன்னொரு தமிழரை எதிர்த்து, கிண்டல் செய்து இருக்கும். ஈழத்தின் மீது திடீர்க்காதல் வந்துள்ளது சில பார்ப் பனர்களுக்கு!
பிரபாகரனை வைத்துப் பணம் சம் பாதித்தது ஒரு பார்ப்பன வெளியீடு என்றால் நம்பமுடிகின்றதா?
உலகத்திலேயே தம்மைப் பற்றியும், தமது தலைவர்களைப் பற்றியும் வாழைப் பழத்தில் நஞ்சை வைத்துத் தருவதை ஆதரித்துக் காசு போட்டு வாங்கி அவர் களை ஆதரித்து,தம்மையே இழிவுபடுத் திக் கொள்ளும் இனம் தமிழினந்தான்.
பார்ப்பனப் பத்திரிக்கைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழர்கள் தாங்கள் நடத்தும் பத்திரிகைகளிலும் இந்தக் கோமாளித்தனத்தை நடத்துவது வேடிக்கையல்ல, வேதனை !
அண்மையில் பார்த்தால் சில தமிழர்களைப் பயன் படுத்தி அவர்களை எழுத வைப்பதும், அவர்களுக்கு விழா எடுப்பதும் எதற்காக என்பதைப் "புகழுக்காக" மயங்கும் பெரிய மனிதர்கள் புரிந்து கொள்வார்களா? அப்படிப் புரிந்து கொள்ளாதவர்களைத் தமிழர்கள் ஓரங்கட்ட வேண்டும்.
பெரியார் திடல் பலருக்கும் அறிமுக மேடை. வளர்த்து விடும் பள்ளிக் கூடம்.வளர்ந்துவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டதும் அவர்கள் தங்கள் தலைகளிலேயே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது வழக்கம். எத் துணைப் பேர் இந்த மயக்கத்தில் தங் களையே அழித்துக் கொண்டுவிட் டார்கள் என்று பார்க்கும் போது வருந்துபவர்கள் பெரியார் தொண்டர்கள் தான்.
மயக்கம் தெளியட்டும் !
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவும், தன் மானமும்!
- சோம.இளங்கோவன், அமெரிக்கா
வளர முடியும்
நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)
அட்சயதிருதியை பித்தலாட்டத்தைப் புரிந்து கொள்வீர்களா?
இன்று தங்கம் (நகைகள்) வாங்கினால் அது பெருகுமாம்! காரணம் அட்சயதிருதியை என்ற ஒரு மூடநம்பிக்கையை யாரோ (ஒரு வேளை தங்கம் விற்பனையாளர்களே அவர்களது வியாபாரத்தைப் பெருக்குவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்) கிளப்பி விட்டிருக்கும் புரட்டு - மூடநம்பிக்கை. இது முற்றும் புரட்டானது.
பகுத்தறிவுள்ள எவராவது இதனை நம்ப முடியுமா?
நாட்டில் நகைகள் பறிப்பு, திருட்டுகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறதே! அதைத் தடுக்க ஏதாவது அட்சயதிருதியையினால் முடியுமா?
அட மூடத்தின் முடை நாற்றங்களே, உங் களுக்கு எப்போதுதான் புத்தி வருமோ? இன்னும் எத்தனை பெரியார்கள் தேவையோ?
அத்வானியின் ஒப்புதல் வாக்குமூலம்
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எனக்கு வியப்பை அளிக்கவில்லை. அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. அங்கு பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்தால்தான் வியப்பு அடைந்திருப்பேன்; பொது மக்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர் லால்கிஷன் அத்வானி கூறியுள்ளார்.
தென் மாநிலத்தில் கருநாடக மாநிலத்தில் 2008இல் தன் அரசியல் கணக்கைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது பி.ஜே.பி.. அந்த ஆட்சி மக்கள் வளர்ச்சிக்கு உகந்ததல்ல; சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்றதல்ல; நேர்மை என்பது கிஞ்சிற்றும் கிடையாது; ஊழல் என்பது ஒரு பொருட்டேயல்ல பி.ஜே.பி. ஆட்சியில் என்பதை யெல்லாம் முடிவு செய்து நடந்து முடிந்த தேர்தலில் பி.ஜே.பி.யை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
இதில் இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாநிலத்தில் உள்ள தனது கட்சியை ஒழுங்கு படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பாரதிய ஜனதாவின் தலைமைக்குப் போதுமான திறமையும், ஆளுமையும் கிடையாது என்பதும் தெள்ளத் தெளிவாகி விட்டது.
பி.ஜே.பி.தான் நல்லாட்சியைக் கொடுக்க முடியும் என்று சொல்லி வந்தவர்கள் கருநாடகத் தேர்தலின் முடிவு அது உண்மையல்ல; நல்லாட்சியைக் கொடுக்க பி.ஜே.பி.க்குத் திறனில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது.
மற்றொன்று; பிஜேபி இந்து மதத்தைக் காப்பாற்றக் கூடியது. இந்துக் கலாச்சாரம் பி.ஜே.பி.யால் காப்பாற்றப்பட முடியும் என்பதையும் கருநாடக மக்கள் உதறித் தள்ளி விட்டனர்.
மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் நடைபெற்றுள்ள கருநாடக மாநிலத் தேர்தல் - சில அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறது.
மதத்தை முன்னிறுத்தும் எந்த அமைப்புக்கும் இங்கு இடமில்லை. மதச் சார்பின்மை தான் இந்தியா வுக்கு உகந்தது என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.
மக்கள் வளர்ச்சிமீது அக்கறை கொண்டு செயல்படாமல், மதத்தை முன்னிறுத்திப் பேசுவ தெல்லாம் ஏமாற்று வேலையே! ஓர் ஆட்சியின் கடமை மக்கள் வளர்ச்சியே தவிர மதவாதம் அல்ல; மதம், நம்பிக்கை என்பதெல்லாம் குடி மக்களின் தனிப்பட்ட பிரச்சினை - அதனை அரசியல்படுத்தக் கூடாது என்பதும்தான் வாக்காளர்களின் எண்ண மாக இருக்கிறது.
காங்கிரஸ்மீது ஊழல் குற்றச்சாற்று எனும் குற்றப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் பிஜேபியின் யோக்கியதை என்ன? ஊழலின் ஒட்டு மொத்த குத்தகையை ஏகபோகமாக அது எடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதையும் வாக்காளர்கள் சரியாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே ஊழலை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவது போன்ற நாடகத்தை மக்கள் ரசிக்கவில்லை; வைத் தியரே! முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று பொது மக்கள் முகத்தில் அறைந்து கூறி விட்டனர்.
காங்கிரசாகட்டும், வேறு எந்தக் கட்சியாகட்டும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 65 ஆண்டு காலம் சுதந்திரத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டோம். இன்னும் வறுமைக் கோட்டைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம்.
நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் என்ற சுணக்கில் 77விழுக்காடு மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக விவசாயத்தைச் செய்து கொண்டிருந்த விவசாய நாடான இந்தியாவில் அம்மக்கள் விவசாயத் தொழிலை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
அடிப்படைத் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. சீனாவும் இந்தியாவும் ஒரே கால கட்டத்தில் சுதந்திரம் பெற்றன என்றாலும், இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்டு இருந்தபோதிலும் சீனாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் - கற்கவும் வேண்டும். மக்கள் வளர்ச்சி! மக்கள் வளர்ச்சி!! ஆட்சியின் கவனம் இதில் தானிருக்க வேண்டும். 13-5-2013
மதங்கள்
மதங்கள் பிரிவினைக்கும், பேதத் திற்கும் காரணமாய் இருப்பது மாத்திர மல்லாமல், மடமைக்கும், மூட நம்பிக் கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை மடமை என்கின்ற அஸ்தி வாரத்தின்மீதே மதங்கள் இருக்கின்றன.
(குடிஅரசு, 27.7.1946)
செய்திக்குப் பின்னால் சில சிந்தனைகள் கிரிக்கெட்(டு) எனும் போதை
கிரிக்கெட் போதையை - சூதாட்டத்தை எதிர்த்து, வரும் 24ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது.
வேறு யாரும் கிரிக்கெட்மீதான திமிரும் போதையை எதிர்த்துக் கருத்துக்களைக் கூற முன் வராத நிலையில், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் போராட்டத்தையே அறிவித்துள்ளார்.
சூதாட்டம் எப்படியெல்லாம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதற்கு அடுக்கடுக்காக ஆதாரப் பூர்வமான செய்திகள் நாளேடுகளில் வெளி வந்துள்ளன.
மூன்று முன்னணி கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கைதும் செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப் பட்டுள்ளனர்.
எத்தனையாவது ஓவரில் எந்தப் பந்தை எப்படி வீச வேண்டும் என்பதற்குத் தரகர்களுக்கும், விளையாட்டுக்காரர்களுக்கும் சில சைகைகள் காட்டப்படுமாம். அதன டிப்படையில் பந்து வீசுவார்களாம். இதற்காகப் பேசப்படும் பணம் ரூ.70 லட்சமாம்.
விளையாட்டு என்பது வீரத்தை வெளிப்படுத்தக் கூடியது - ஒழுங்கு நெறிகளை ஊட்டும் உன்னதத் துறை விளையாட்டுத்துறை என்ற எண்ணத்தின்மீது இந்தப் பாழாய்ப் போன கிரிக்கெட் வந்து மண்ணை அடித்து விட்டது.
அதுவும் அய்.பி.எல். கிரிக்கெட் (20 ஓவர்) அறிமுகமானபின் பண முதலைகள் இந்தக் களத்தில் இறங்கி (கறுப்புப் பணம்தான் மண்டிக் கிடக்கிறதே!) கிரிக்கெட் காட்டில் பண மழை கொட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள்.
வீட்டில் துருப்பிடித்துக் கிடந்த கிரிக்கெட்காரர்களுக் கெல்லாம் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது.
என்ன வெட்கக் கேடு தெரியுமா? இவர்கள் பெரு முதலாளிகளால் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.
அடிமைகளைத் தான் அல்லது பொருள்களைத்தான் ஏலம் எடுப்பார்கள்; இங்கு என்னடா என்றால் கிரிக்கெட் வீரர்களை (?) ஏலம் எடுக்கிறார்களாம்.
பணத்துக்காக தன்மானத்தை - விளையாட்டின் வீரியத்தை அடகு வைப்பவர்கள் எப்படி விளையாட்டு வீரர்களாக இருக்க முடியும்?
அதுவும் இந்தியாவில் கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களின் பல்லாங்குழி விளையாட்டாகி விட்டது. இந்திய மண்ணுக்குரிய ஹாக்கி, சடுகுடு போன்ற உழைக்கும் விளையாட்டு களில் இவர்கள் கால் பதிக்க மாட்டார்கள்.
சொகுசானதாக இருக்க வேண் டும்; பணத்தையும் இலாவகமாகச் சுண்டி இழுக்க வேண்டும் - அதற்கு பொருத்தமானது கிரிக்கெட் தானே!
பார்ப்பனர்களின் விளையாட்டாகக் கிரிக்கெட் ஆன பிறகு பார்ப்பன ஊடகங்களும் காற்றடித்து ஊதிப் பெருக்கி விளம்பர வானத்தில் வண்ண வண்ணப் பலூன்களாகப் பறக்க விடுகின்றன.
விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர்கள் வீழ்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட்டைப் பார்ப்பதற்கு டிக்கட் வாங்கிட மணிக்கணக்கில் வேகாத வெயிலில் நிற்கிறார்கள்.
சூதாட்டம் கொலை வரை சென்று விட்டது! மாணவர்கள் தேர்வுகளைக்கூடத் தூக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் மைதானத்தை நோக்கி ஓடுகிறார்கள். விளையாட்டின்போது அரைகுறை உடையணிந்த ஆரணங்குகளின் அசிங்கமான நெளிவு, சுளிவுகள் நிறைந்த ஆட்ட பாட்டம்; இளைஞர்கள் நடந்து கொள்ளும் போக்கோ அருவருப்பின் உச்சக் கட்டம்!
இவர்களைக் காப்பாற்ற வேண்டாமா?
விளையாட்டின் மூலம் விபரீதம் என்பது எவ்வளவுப் பெரிய ஆபத்து!
நாட்டு நலனில், இளைஞர்கள் நலனில், பொது ஒழுக்கத்தில் அக்கறை கொண்ட ஒவ்வோருவரும் திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க முன் வரட்டும்!
மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பதில் என்ன பயன்?
கழகத்தின் முயற்சிக்கு கை கொடுங்கள் - கைலாகு கொடுங்கள்!
கழகத் தோழர்களே களை கட்டட்டும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! 17-5-2013
இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிரீமிலேயர் அளவுகோல் ரூ.6 லட்சம் மத்திய அமைச்சரவை முடிவு
புதுடில்லி, மே.17- மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறு வதற்கான வருவாய் உச்ச வரம்பை ரூ.6 லட்சமாக மத்திய அமைச்சரவை உயர்த்தி உள்ளது.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறிய வர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண் டுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப் புறங்களில் ரூ.9 லட்ச மாகவும் உயர்த்த வேண் டும் என்று இதர பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் சிபாரிசு செய்தது. ஆனால், இது சாத்தியம் இல்லை என் றும், ஒரே மாதிரியாக ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு சிபாரிசு செய்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடை பெற்ற மத்திய அமைச் சரவை கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வரு வாய் உச்சவரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நுகர்வோர் விலை குறி யீட்டு எண்ணை கருத் தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இதர பிற் படுத்தப்பட்டோரில் இன்னும் அதிகமானோர் பலன் அடைவார்கள்.
இதுதொடர்பாக, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகமும், மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகமும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று மத் திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் சில முடிவுகள்
குடியரசு தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற தேசிய தலை வர்கள் மறையும்போது, அவர்களுக்கு டில்லியில் தனித்தனி நினைவி டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்படி கட்டுவதன் மூலம், டில் லியில் யமுனை ஆற்றங் கரையில் 245 ஏக்கர் நிலம் போய்விட்டது. இதனால் நிலத்துக்கு பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், இனிமேல் தேசிய தலை வர்கள் மறைந்தால், அவர்களுக்கு தனித்தனி நினைவிடம் கட்டுவது இல்லை என்று மத்திய அமைச்சரவை கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது.
அதற்கு பதிலாக, பொதுவான ஒரே வளா கத்தில் அத்தலைவர் களின் நினைவிடங் களுக்கு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, யமுனை ஆற் றங்கரையில், ஜெயில்சிங் நினைவிடம் அமைந் துள்ள ஏக்தா ஸ்தலத் துக்கு அருகே ராஷ்ட்ரீய ஸ்மிரிதி என்ற வளாகம் அமைக்கப்படும். வருங்காலத்தில் தேசிய தலைவர்கள் மறையும் போது, அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கும், நினை விடம் அமைப்பதற்கும், இரங்கல் கூட்டம் நடத் துவதற்கும் அங்கு இடம் ஒதுக்கப்படும்.
வறுமை கோட்டுக்கு...
வறுமைக் கோட் டுக்கு மேலே உள்ள 10 கோடியே 50 லட்சம் குடும்பங்களுக்கு மானிய விலையில் கூடுதலாக 41 லட்சத்து 80 ஆயிரம் டன் கோதுமையும், 19 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியும் ஒதுக்கு வது என்று பொருளா தார விவகாரங்களுக் கான அமைச்சரவை கமிட்டி முடிவு செய்துள் ளது. கடந்த சில ஆண்டுகளாக தானிய உற்பத்தி அதிகரித்து, கையிருப்பு உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.9 ஆயிரத்து 500 கோடி மானியம் கூடுத லாக செலவாகும்.
இந்திய மருத்துவ கவுன்சில்...
இந்திய மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க மத்திய அரசு நியமித்த ஆட்சி மன்ற குழுவின் பதவிக்காலம் முடிவ டைந்து விட்டது. எனவே, புதிய நிருவாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக, அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்தை குடியரசு தலைவர் விரைவில் பிறப்பிப்பார். காந்தியாருடன் தொடர் புடைய 2 ஆயிரம் பாரம்பரிய இடங்களை பாதுகாக்கவும், புனர மைக்கவும் ஒரு புதிய திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்
செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா?
கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மரபு. அந்த மரபை தங்களுக்குச் சாதகமான கருவியாக வைத்துக் கொண்டு, யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு - அதனால் யாரும் கேள்வி கேட்காமல் பஜனை பாடுகின்றவர்களைத் தவிர வேறு யாரும் வாய் திறக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் 110ஆவது விதியின்கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகிறார்கள்.
இதிலே விஷயம் அறிந்த - அரசியல் தெரிந்த நண்பர்கள் சட்டமன்றத்திலே இருக்கிறார்கள். அவர்கள்கூட இதுபற்றியெல்லாம் வாய் திறக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
(முரசொலி 17.5.2013 முதல் பக்கம்)
சபாஷ்!
தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கையான குணவதி என்பவருக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் பாதுகாப்புப் பணி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாதம் ரூ.4000 பெறும் தற்காலிகப் பணிதான் இது என்றாலும் விரைவில் சம்பள உயர்வும், பணி உயர்வும் கிடைக்கும் என்று மருத்துவ இணை இயக்குநர் கூறியுள்ளார். கோவை சுந்தராபுரம் புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திராவிடர் கழகம் வைத்த கோரிக்கைக்கு இது முதல் வெற்றியாகும்.
பகுத்தறிவு
பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே, பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.
(விடுதலை, 11.9.1953)
கடவுள் ஒரு பொய் நம்பிக்கை
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று பகுத்தறிவு. 1926இல் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது, அது ஒரு சமூக நீதி-சமத்துவ இயக்கமாகத்தான் உருவெடுத்தது. நீதிக்கட்சியின் வரலா றும் அத்தகையதே. ஆனால் காலப் போக்கில் தன்மான இயக்கமாகவும், அறிவியக்கமாகவும் அது மலர்ந்தது. அறிஞர் அண்ணாவின் தலைமையில், தேசிய இன இயக்க மாகவும் அது வலுப்பெற்றது.
அறிவியக்கங்கள் உலகம் முழு வதும் காணப்படுகின்றன. சாக்ரடீஸ், எபிகூரஸ் தொடங்கி, அறிஞர்கள் பலர் பகுத்தறிவுக் கருத்துகளை முன்வைத் துள்ளனர். இன்று வரை, உலகின் பல பகுதிகளிலும், பகுத்தறிவுச் சிந்தனை யாளர் களையும், அவர்களின் படைப்பு களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கூந படின னுநடரளடி என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே, கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை.
ரிச்சர்டு டாகின்ஸ், இங்கிலாந்தின் காலனி நாடாக அன்று இருந்த கென்யாவின், நைரோபி நகரில் பிறந்தவர். எனினும் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போதே இங்கி லாந்து வந்துவிட்டார். லண்டனுக்கு அருகில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், அமெரிக் காவில் உள்ள கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும் தன் படிப்பையும், ஆய்வையும் நிகழ்த்தியர். இப்போது அவருக்கு வயது 72. தன்னுடைய 65ஆம் அகவையில், 2006ஆம் ஆண்டு அவர் எழுதிய நூல்தான் கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்பது.
31 மொழிகளில் பெயர்க்கப்பட் டுள்ள இந்நூலின் ஆங்கிலப் படிகள் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகி உள்ளன. ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்நூலை, மறைந்த கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசானின் அழகிய மொழிநடை, மொழிபெயர்ப்பு நூலைப் போலன்றி, ஒரு தமிழ் நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற் படுத்துகின்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் பதிப்புரை, படிப்போரின் சிந் தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது.
நூலாசிரியர் டாகின்ஸ், ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதால், அறிவியல் சான்றுகளுடன் இந்நூலுள் பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன. வெறுமனே வாதம் செய்யும் நூலாக அல்லாமல், அரிய அறிவியல் ஆய்வு நூலாக இந்நூல் நமக்குக் கிடைத்துள்ளது. பத்து இயல் களைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்நூல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், கடவுள் மறுப்பையும் பல்வேறு கோணங் களில் முன்வைக்கின்றது.
கடவுள் என்னும் கருதுகோள் எப்படி உருவாயிற்று என்னும் வரலாற்றுச் செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை உடையவர்களின் வாதங்களும், மூன்றாவது இயலில் முழுமையாக இடம் பெற்றுள்ளன. உலக இருப்பு சார்ந்தும், தங்களின் சொந்த அனுபவங்கள் சார்ந்தும், மதங்களின் புனித நூல்கள் சார்ந்தும், மத அறிவிய லாளர்களின் கூற்றுகளைச் சார்ந்தும் கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாகக் கூறப்படும் பல்வேறு கருத்துகள், மிக நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடவுள் இல்லை என்பதற்கு நெருக்க மான நிலையாக, இன்று மேலைநாடுகள் பலவற்றில் கிட்டத்தட்டப் பெரும்பாலும் கடவுள் இல்லை என்னும் வாதம் எழுந் துள்ளது. அது குறித்தும் நூலுள், பல செய்திகள் தரப்பட்டுள்ளன.
உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்த, இருக்கின்ற கடவுள் நம்பிக்கை, மறுப்பு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையிலான, சுவையான பல வாதங்களை டாகின்ஸ் முன்வைத் துள்ளார். பொதுவாக, ஸ்டாலினும், ஹிட்லரும் நாத்திகர்கள் என்று சொல்லப் படுவதுண்டு.
இவ்விரு நாத்திகர்களும் தான், இரண்டாம் உலகப் போருக்கும், இலட்சக்கணக்கான மக்களின் அழி விற்கும் காரணமாக இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாற்று வைக்கப் படுவதுண்டு. அது குறித்த மிகச் சிறந்த வாதங்களை இந்நூலுள் காண முடிகிறது.
முதலில் இருவரும் நாத்திகர்கள் என்பதே தவறு என்று கூறும் டாகின்ஸ், நாத்திகர்கள் போருக்கும், தீமைகளுக் கும், காரணியர்களாக இருப்பார்கள் என்பது அதைவிடத் தவறு என்கிறார். சோவியத் நாட்டின் அதிபராக இருந்த ஸ்டாலின் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதில் அய்யமில்லை என்று கூறும் நூலாசிரியர், இட்லரைப் பற்றிய செய்தி உண்மையில்லை என்பதைச் சான்று களுடன் மறுக்கிறார்.
இட்லர் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஆண்டவருக்கு மண்டியிட்டு நன்றி செலுத்தினேன் என்று எழுதியுள்ள இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். 1933ஆம் ஆண்டு, அவர் பெர்லினில் நிகழ்த்திய உரையிலும், நாங்கள் நாத்திக இயக்கத்திற்கு எதிரான போரில் ஈடு பட்டோம். அதனை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று பேசியிருப் பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.
நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டதாகக் கூறும் ஒருவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும் என்று கேட்கிறார் டாகின்ஸ்.
அதனைவிட முதன்மையானது - ஒரு வேளை அவர் நாத்திகராகவே இருந் திருந்தாலும், அவருடைய தீய செயல் களுக்கும், நாத்திகச் சிந்தனைக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்னும் அவருடைய கேள்விதான்.
உலகில் இறைநம்பிக்கை உடையவர்கள் அனைவரும், ஒரு குற்றச் செயலில் கூட ஈடுபடவில்லை என்றோ, நாத்திகர்கள் அனைவரும் குற்றப்பரம்பரையினர் என்றோ கூற முடியுமா என்னும் அவர் வினாவிற்கு எங்கே விடை இருக்கிறது.
தந்தை பெரியார், குற்றம் புரிந்து, அதற்கான தண்டனையை ஏற்று, சிறைச் சாலைகளில் உள்ளவர்களில் எத்தனை பேர் நாத்திகர்கள்? என்று கேட்பார். சமூகத்தின் இன்றை நிலைதான் சிறைச்சாலைகளிலும் உள்ளது. அங்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவே. கடவுள் நம்பிக்கை கொண்ட குற்றவாளிகளே எண்ணிக் கையில் மிகுதி.
அடுத்ததாக, அறிவாளிகள் அனை வரையும் இறைநம்பிக்கை கொண்ட வர்கள் என்று எளிதில் கூறிவிடும் ஒரு போக்கும் இங்கு உள்ளது. அப்படித்தான், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான அய்ன்ஸ்டைன், மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்னும் செய்தி இங்கே பரப்பப்படு கின்றது. அதனைச் சான்றுகளுடன் தகர்த்துப் போடுகிறது, ஆசிரியர் வீரமணி அவர்களின் பதிப்புரை.
1954 சனவரி 3ஆம் நாள், அய்ன்ஸ் டைன் தன் நண்பர் எரிக் குட்கிண்ட் டிற்கு எழுதியுள்ள மடலொன்றில், மனித உள்ளத்தின் வலிமை இன்மை யின் வெளிப்பாடாகவும், விளைவாக வும் இருக்கிறது என்பதற்கு மேலாக எதையும் கடவுள் என்ற சொல் சுட்டுவதாக எனக்குப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மிகச் சிறந்த அறிவாளிகள் பலர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்துள் ளனர் என்பது தெளிவாகின்றது.
நூலாசிரியர், விலங்கியல் துறை ஆய்வாளர் என்பதால், தன் கருத்து களுக்கு அறிவியல் ஆய்வுகளையே சான்றுகளாகத் தந்துள்ளார். அதுவே இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு என்று கூறலாம்.
மதம், கடவுள் என்பனவெல்லாம், மற்றொன்றின் உடன் விளையு என்று கூறும் அவர், அதற்குப் பொருத்தமான அறிவியல் செய்தி ஒன்றைத் தருகின் றார். இரவுநேரத்தின் செயற்கை ஒளி, அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாகும். முன்பு நிலவு மற்றும் விண்மீன்களின் ஒளி மட்டுமே இரவில் இருந்தது.
அந்த ஒளியைப் பின்பற்றி விட்டில் பூச்சிகள் பறந்தன. இன்றைய கால மாற்றத்தில் நெருப்பு விளக்குகளும், மின் விளக் குகளும் வந்துவிட்டன. இம்மாற் றத்தைப் பகுத்தறிவுடைய மனிதர்கள் உணர்வது போல, விட்டில் பூச்சிகள் உணர முடிவதில்லை. அதனால்தான் அவை, நெருப்பின் ஒளியை, நிலவின் ஒளி என்று கருதி, அதனை நோக்கிப் பறந்து தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றன.
நடைமுறையில், பகுத்தறிவுடைய மனிதர்களும் கூட, தங்களின் ஆறா வது அறிவைப் பயன்படுத்திக் கால மாற்றங்களைப் புரிந்து, அதற்கேற்பத் தங்களின் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளாமல், பழைய பாதையிலேயே பயணம் செய்கின்றனர். எனவே அறிவியல் பூர்வமாக உண்மைகளை உணர்ந்து வாழ்தலே பகுத்தறிவு என்கிறது இந்நூல்.
கடவுள் என்னும் கருதுகோளைப் பல்வேறு வகைகளில் அணுகி, அத னுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், பகுத்தறிவு வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் உதவும்!
கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை
வெளியீடு: திராவிடர் கழகம்
பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை - 7
நன்கொடை: ரூ.350/
நன்றி: கருஞ்சட்டை தமிழர் இதழ்
சோதிடம் சொல்லி இராஜகுரு ஆனார்கள்!
தமிழகத்தை ஆண்ட மன்னர் களிடமும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். பார்ப்பனர்களை இராஜ குருவாக மன்னார்கள் ஏற்றிருந்தனர். இராஜகுருவின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது அவர்கள் இட்டதே கட்டளை!
இந்நிலையில் மன்னரை பயமுறுத்தி சோதிடத்தைக் காட்டி மன்னருக்கு தோஷம் இருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறி பெரும் பொருளை பார்ப்பனர்களுக்குக் கொ டுத்து பரிகாரம் செய்தனர். இவ்விதம் செய்யாவிட்டால் மன்னருக்கு ஆபத்து வரும், கேடு விளையும் என்றெல்லாம் கூறி பயம்காட்டி சுகபோக வாழ்வை அன்றைக்குப் பெற்று வந்தனர்.
700, 800 ஆண்டுகளுக்கு முன் செய்த அதே காரியத்தை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். 22.4.05 தினமணியில் காலம் உங்கள் கையில் பகுதியில் திண்டிவனத்து நண்பர் ஒருவர் திதி கொடுக்க புரோகிதர் கிடைக்க வில்லை. எப்படிச் செய்ய வேண்டு மென்று கேள்வி கேட் கிறார்! அதற்கு, புரோகி தர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு தானியம் உணவுப் பொருட்களைத் தானமாக அளிக்க வேண்டும்.
கோயிலுக்குச் சென்று அங்குள்ள அந்தணரை வணங்கி தானியப் பொருட்களை கொடுத்து வரவும் என்று பதில் அளித்திருக்கிறார். யாராவது நான்கு ஏழைகட்கு உணவுப் பொருள் கொடுத்து உதவுங்கள் என்று எழுத அவர்களுக்கு மனம் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு உதவுங்கள் என்று இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், தமிழர்களே சிந்தி யுங்கள்.
தமிழன் எக்காலமும் முட்டா ளாக இருக்க வேண்டும், அதன் மூலம் பார்ப்பன இனம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது தானே அவர்கள் எண்ணம்! அந்த சூழ்ச்சி எண்ணத்தில் ஒன்றுதான் சோதிடமும் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்களைப் பொறுத்த வரை தான் வாழ தன் இனம் சிறப்புப் பெற எதையும் செய்வார்கள் என்பதே வர லாறு! தமிழ்மொழியின் அறிவுப் பெட்ட கங்களையெல்லாம் வடமொழியில் எழுதி தனதாக்கிக் கொண்டார்கள்! அகத் தியர் திருவள்ளுவரை ஆரிய இனம் என்று கூறிப்பார்த்தார்கள்.
திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் நெல்லை மாவட்டத்தில் பிறந்து தூத்துக்குடி மாவட்டம் கீழஈராலில் அடக்கமானவர். அவர் பரம்பரை (நாடார் இனம்) இன்றும் இருக்கிறார்கள். அந்தப் பரிமேலழகரை ஆரிய இனம் என்று துணிந்து பொய்யு ரைத்தனர்.
திடீரென்று பிள்ளையாரை நடுத் தெருவில் தோன்ற வைத்துதண்ணீர் கொட்டுவதாக கதை கட்டுவார்கள். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்து லாபம் பெறுவார்கள். இவர்கள்தான் சோதிடத் திலேயும் அறிவியல் இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்து லாபம் பெறு வதற்கு வழி வகுத்து விட்டனர்.
மக்களின் பலவீனத்தை சோதி டர்கள் பிழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்!
திருமணப் பொருத்தம்!
திருமணத்திற்கு மணமக்கள் தேர்வு செய்வது முன்பெல்லாம் உள்ளூரில் சொந்த பந்தத்தில் என்றுதான் இருந்தது. காலப்போக்கில் இந்த நிலை மாறி கல்வி, வேலைவாய்ப்பு என்று நாட்டின் பல பகுதிக்கும் இளைஞர்கள் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதால் மணமக்கள் தேர்வு செய்ய அங்கங்கேயுள்ள திருமணத் தகவல் நிலையங்களை நாட வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மணமக்களின் பெற்றோர்கள் புதிதாக அறிமுகம் ஆவதால் அவர்களைப் பற்றியும் மணமகன் அல்லது மணமகள் பற்றியும் முழுமையாக தீர விசாரித்திடுவது மிகவும் முக்கியம்! முதலில் அந்தக் குடும்பம், அவர்கள் பூர்வீகம், கல்வி மற்றைய விவரம், மணமகனாக இருந்தால் நிலையான வருமானமுள்ள நிரந்தரப்பணியா, ஒழுக்க முடையவனா, அவன் பழகும் நண்பர்கள் பழக்க வழக்கங்கள், பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் திறனுடையவனா என்றும், மணமகளாய் இருந்தால் குடும்பத்திற்கு ஏற்ற குணநலம் கொண்டவளா, பண்புடையவளா, அனுசரித்துப் போகும் இயல்புடையவளா என்றெல்லாம் பார்த்து விட்டு பேச்சுவார்த்தை தொடங்குவதுதான் முறையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
இப்போது பெற்றோர்கள் எடுத்த எடுப்பில் ஜாதகப் பொருத்தம் என்று பார்க்கிறார்கள். ஜாதகம் முதலிடம் பெறுகிறது. சில நேரங்கில் நல்ல வரனைக் கூட ஜாதகம் பொருந்தவில்லை என்று கைவிட்டு விடுகிறார்கள். சிலர் நல்ல வரை எல்லாம் கழித்து விட்டு பொருந்தக் கூடிய ஜாதகத்தைத் தேடி ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு கஷ்டம் நஷ்டம் ஏற்படவில்லையா? நோய் நொடி வந்ததில்லையா? குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இல்லையா? ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் சிறப்போடு வாழத்தானே செய்கிறார்கள்! ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் வாழ்ந்து விடவில்லை! ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் தாழ்ந்து விடவும் இல்லை.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது பார்க்க வேண்டியது ஜாதகப் பொருத்தமல்ல! இரத்தப் பொருத்தம். இரத்தப் பரிசோதனை!
ஏனெனில் கணவன் இரத்த குரூப் Rh +ve ஆகவும் மனைவியின் இரத்த குரூப் Rh- ve ஆகவும் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. எனவே, மணமக்களின் இரத்தப் பொருத்தம் பார்ப்பதே சிறந்தது. அதை விட்டு விட்டு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது பயனற்றது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
போலந்தும் - லெனினும்!
நமது கல்விப்புரட்சி வேலைகளில் மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும்.
தொழிலாளருடைய ஆதிக் கத்தில் கோவிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது. பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு எதிராக செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்கவும் வேண்டும். - லெனின்
நலம் விளைய நா காக்க
- மு.வி. சோமசுந்தரம்
சிதறிய பாலை எடுக்கவா முடியும்?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
நுணலும் தன் வாயால் கெடும்
வில்லிலிருந்து வெளியேறிய அம்பு வெளியேறியதுதானே?
நாவினாற் சுட்ட வடு
பெரும் பயன் இல்லாத சொல்
இனிய உளவாக இன்னாத கூறல்
ஊமையாக இல்லாதிருப்பது ஒருவர் பெற்ற அருட்கொடை இந்த இயற்கைப் பிறவிக் கொடையைப் பெற்றதின்பலன், அவர்தம் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சொல் முத்துக்களை சமூகம் மகிழ அதன் வழிதான் மகிழ் செய்வதாக வழங்குவதில் அமையும். வாய் வழி வரும் சொற்கள், முத்தாக, மணியாக, கோமேதகமாக, தேனாக, தன்மையாக இல்லாமல், தணலாக, முள்ளாக, கள்ளியாக இருக்குமானால், நாம் சமூகக் கேடர்களாகத் தான் கருதப்படுவோம். நாமும் கசங்கிய மலராக, கைபிசைந்து, குழம்பிய மன நிலையில் குனிந்த தலையுடன் தள்ளாடி நடக்க வேண்டியிருக்கும். நிலை ஏற்படுமல்லவா? இது நல்லதல்லவே!
இந்த கருத்தை முன் வைக்கும் வகையில் கட்டுரையின் துவக்கத்தில் எட்டு வரிகள் கூறப்பட்டுள்ளன. அவை வழி காட்டும் வரிகளாகவும், எச்சரிக்கை அறிவிப்புகளாகவும், கருதப்படலாம். இந்த முறையில் மேலும் பல அறிவுரைகள் சேர்க்கப் படலாம்.
குடி குடியைக் கெடுக்கும்
தொப்பை வரும் முந்தி தொல்லை வரும் பிந்தி
இவையும் ஒரு வகை பாது காப் புக்கான முழக்கங்களை அல்லவை களைத் தள்ளி வைத்தால் நல்லவை மாலை சூடலாம்.
சொல் குற்றத்தால் சூழும் கேடுகள் பல. எடுத்துக்காட்டாக, ஜவகர்லால் நேரு அவர்கள் தமிழகத்து இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நான்சென்ஸ் என்று கூறியதையும், இராசகோபாலாச்சாரியார், 1952இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பேசியதைக் கூறலாம். யானைக்கும் அடிசருக்கும் அல்லவா?
அனைவரும் சொல்லின் செல்வ ராக விளங்குவது இயலாத ஒன்று. நாட்டில் உள்ளவரெல்லாம் நாவல ராக நாட்டம் கொள்வது நடை பெறுமா? பேசும் வழிமுறை பற்றியும், சொல்லின் வலிமை பற்றியும், பிப்ரவரி, 18, இந்து இதழில் வெளிவந்த கட்டுரையின் கருத்துத் தொகுப்பைக் காண்போம். பயன் பெறுவோம்.
பெரும்பாலான மனிதர்கள், சில நேரங்களில், சிந்தனையற்ற, சங்கடத்தை ஏற்படுத்தும், அறிவற்ற, ஆத்திரமூட்டக் கூடிய சொற்களை சிந்தி விடுகிறார்கள். இதன் காரண மாக, எதிர்வரும் பல ஆண்டுகள் தான் அப்படி பேசி இருக்கக் கூடாதே என்று ஏங்கி ஏங்கி அந்த எண்ணத்திலேயே மூழ்கி, ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்களாகி விடுகின்றனர்.
இப்படி ஏங்கி ஏங்கி கசிந்து கழிக்கும் காலத்தை எண்ணிப் பார்க்க செலவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? இப்படி சொல்வது எளிதுதான். ஆனால் செயலில் காட்டுவதில்தான் சிக்கல்.
இப்படிபட்ட நிலையில் சொற்களைக் கொட்டிவிட்டு சங்கட நிலையைச் சந்திப்பதும், மன இறுக்கம் அடைவதும் ஒரு பக்கம் இருந்தாலும் நீடித்திருக்க வேண்டிய, நட்பு, உறவு பாதிக்கப்படுகிறது.
அமெரிக்க நரம்பியல் - மனநல மருத்துவர் டாக்டர் டயேன் ஹென் ரிபவுல், நாம் மனதார ஒரு முடிவெ டுப்பதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில், பெரும்பாலான முடிவுகள், நம் ஆழ்மனதில் உருப் பெருகின்றன என்று கூறுகிறார். எனவே, சொற்களை வாயளவில் ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவதின் மூலம் முறையான பேச்சை கைக் கொண்டதாகக் கூற முடியாது. இதற்கான தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சிந் தனையை ஒழுங்கில் கொண்டு வர வேண்டும். நம் பழக்கத்துடன் ஒட்டி வந்துள்ள சுடுச் சொல், கடுஞ் சொற்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு கற்பனை எடுத்துக் காட்டு. ஒரு அலுவலகத்தில் அகிலா அலுவலராக உள்ளார். அலுவலக அதிகாரியும் அவருடைய தங்கையும், அகிலாவை சந்திக்கிறார்கள் அகி லாவைத் தங்கைக்கு அறிமுகப் படுத்தும்போது, இவர் எனக்கு என் தாயார் போன்றவர் என்று தங்கையிடம் கூறுகிறார்.
தங்கை முகம் களித்துக் கொள்கிறாள். அகிலா வருந்துகிறாள். அந்த நேரத் தில் ஏதோ பேச வேண்டும் என்பதற் காக பேசி விட்டேன். குற்றமாக எதுவும் கூறவில்லையே. என் அவசர வார்த்தை நடத்தையால் ஒரு சங்கட சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டேனே இதில் பெரிய துன்ப விளைவு ஏற்பட வில்லை. ஆனால் எடுத்த எடுப்பில் ஏதேனும் உளறிக் கொட்டிவிட்டால் விளைவு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கீழ்க்கண்டவற்றைக் கவ னத்தில் கொள்வது நல்லது.
1) திடீரென்று மனதில் தோன்று வதை சொற்களாக வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை.
2) ஒருவருக்கு பதில் கூறும்முன் சிறிது நிதானித்து கூறவும். கூற வேண்டியதை யோசித்து அதனால் ஏற்படும் விளைவையும் நினைத்து பேசவும்.
3. பதற்றப்பட்ட சூழ்நிலையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறிது நேரம் நீள் மூச்சு இழுத்து, பிறகு பேசவும்.
4. ஒன்றை மறுத்துக் கூற முனை யும்போது நயத்தக்க முறையில், மென்மைக் குரலில் பதிவை ஏற்படுத் தும் வகையில் கூறவும்.
5. விழா,பொது நிகழ்ச்சிகளில் குழுமியிருக்கும் வேளையில், உணர்ச்சி கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு ஏற்படும். எனவே எச்சரிக் கையாக பேசுவது நல்லது.
6. சில வேளைகளில், தவறுதலாக, குறைபட்ட சொற்களை கூறிவிட் டால், உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள். அது நமது கவுரவத்தைப் பாதிக்காது.
7. எழுத்து மூலம் கருத்தைக் கூறுவது பாதுகாப்பானது. சொற் களை சரியான வகையில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.
8. அமைதியான மன நிலையில், குழுப்பமான தடுமாற்றமான சொற்கள் வராது. மூச்சுப் பயிற்சி, தியானம், அமைதியான மனநிலைக்கு வழி வகுக்கும்.
9. மடத்தனமான சொற்களைக் கூறுவதைவிட, ஏதும் பேசாமல் இருப்பது சிறந்தது.
10. நம்மைப் பார்த்து கூறப்படும் ஒவ்வொரு கருத்துக்கும், மறுப்புத் தருவது தேவையில்லை.
திருடனா குருடனா?
பார்ப்பான் படைத்த புத்தகம்
புரட்டை படைத்தது
பெரியார் புகுத்திய புத்தியால்
பகுத்தறிவை பெற்றது
பார்ப்பன அறிவு பேதலித்து
தீயை உண்டாக்கியது
கை, கால், கண், இல்லா
குருடனா நீ?
கொள்கை இல்லா
திருடனா நீ?
- வணங்காமுடி
தருமபுரி
அறிவுரை
நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.
- தந்தை பெரியார்
சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
1. ஆப்பிள் : இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது
2. வாழைப்பழம்: உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும், உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப் பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.
3. ஆரஞ்சு: 3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு ஜீரண உறுப்புகளும், நோய் எதிர்ப்புச் சக்தியும் வலுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
4. பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை: இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு களைப் போக்கும்.
5. மாதுளைப் பழம்: இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.
6. பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.
7.கொய்யா: இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
8.அன்னாசி: இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற் றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.
9. உலர் திராட்சை: தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளி களுக்கு நல்ல உணவு.
10. சாத்துக்குடி: தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல் படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.
பாராட்டுரைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!
மனிதர்களை அவர்களின் அரிய சாதனைகளுக்காக பாராட்டுதல், வாழ்த்துதல் மிகவும் அவசியமாகும். அவர்களை அது ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும். மேலும் உழைக்கும் ஆர்வத்தை அவர்களுக்கிடையே தூண்டும்; அது அவர்களுக்கு மட்டு மல்ல; அவர்களது அரிய சாதனைகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் - எழுத்து, பேச்சு, செயல் எவ்வாறாயினும் - சமூகத்திற்கும்கூட அது வாய்ப்பாக அமையும்!
பாராட்ட வேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டி விடுங்கள்; தாமதியாதீர்கள் - பிறகு உங்கள் மனம்கூட மாறிவிடக் கூடும் என்பார் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள்.
முன்பு, இரண்டு மாடிகள் ஏறி வந்து, அறிஞர் அண்ணா விடுதலை ஆசிரியராக ஈரோட்டில் இருந்து எழுதிய ஓர் தலையங்கத்திற்காக தந்தை பெரியார், மூச்சிறைக்கப் பாராட்டியது கண்டு அண்ணா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இது வரலாறு.
நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள்மீது கோர்ட் அவமதிப்பு (Contempt of Court) வழக்குப் போடப்பட்டு தண்டிக்கப்பட்டதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் என்பவர்கள் ஊழல் புரிந்ததை யொட்டி எழுந்த விமர்சனங்களைத் திரட்டி, திராவிடர்கள் - நீதிபதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ இருந்தால் மட்டும் அவர்களை வலிந்து சிறுசிறு தவறுகளையோ, அல்லது தவறுகள் நடந்ததாக கற்பனையாலேயோ, எழுதி சங்கடப்படுத்தும் பல்வகை வழக்கு ஆதாரங்களுடன் எழுதினேன் அப்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் B.L. வகுப்பில் படித்து வரும் மாணவன்.
சென்னையில் அதை அய்யாவிடம் காட்டினேன். விடுதலையில் போடுவ தற்காக எழுதியுள்ளேன் அய்யா என்று கூறினேன்.
முழுவதும் படித்துப் பார்த்தார்கள்; இறுதியாக அதைப் பாராட்டி விட்டு, இந்தக் கட்டுரையை உன் பெயரில் போட வேண்டாம்; உனக்கு ஏதாவது தொல்லைகள் வரலாம்; அதோடு, அந்த மேட்டருக்கு உரிய வெயிட் உன் பெயரில் வந்தால் அவ்வளவு வராது. ஆகவேதான் என் பெயரிலேயே போடுமாறு விடுதலை அலுவலகத்திற்குக் கூறு கிறேன் என்றார்கள்.
எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆகா தாராளமாகச் செய்யுங்கள் அய்யா என்று கூறி வந்துவிட்டேன்.
மாலை விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக அது வெளி வந்தது! சென்னை மீரான் சாயபுத் தெரு, இல் லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களுக்குப் பலர் நேரில் வந்து பாராட்டுக்களைக் கூறினார்கள்.
அந்த அறிக்கைகாக!
அவர்களில் ஒரு குழுவினர் - இயக்கத்தவர்கள்தான் வேலூரிலிருந்து வந்தவர்கள் - அய்யாவின் இந்த அறிக்கை மிகப் பிரமாதம் அங்குள்ள வக்கீல்கள், நீதிக் கோர்ட் நியாயாதி பதிகள் எல்லோரும் எங்களிடத்தில் விசாரித்தார்கள்; விடுதலை பேப்பர் கிடைக்குமா என்று கேட்டு நச்சரித்தனர் என்று கூறி அய்யா ஒருவரால்தான் இப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த, தெளிவு பொதிந்த, அறிக்கைகளைத் தர முடியும் என்று சரமாரி புகழ்ந்தார்கள்!
பொறுமையாக இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அய்யா அவர்கள் கடைசியாக, உங்களுக் கெல்லாம் ஒரு சேதி தெரியுமா? அந்த அறிக்கை நான் எழுதியதில்லை; நம்ம வீரமணி இருக் கிறாரே அவர் சட்டக் கல்லூரியில் B.L. படிக்கிறார். அவர் தான் எழுதினார் - இந்தப் பாராட்டு, உண்மையில் என்னைச் சேராது அவரைத்தான் சேரும் என்றார்.
வந்தவர்களுக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி (தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கசப்பு கொண்டிருந் தவர்கள்தான் அதில் சிலர் - அய்யா வுக்கும் கூட இது தெரியும் - தெரிந்தே சொன்னார்!)
தந்தை பெரியாரின் அறிவு நாண யம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?
பிறர் பாராட்டும்போதுகூட அது யாருக்கு உரியது என்பதைக் கூறி, அதை ஏற்க மறுப்பதற்கு எத்தனை பெரிய உள்ளம் பார்த்தீர்களா?
எனவே பாராட்டில் நிதானமும் வேண்டும் - பொய்யுரைகளைத் தவிர்த் தலும் அவசியம்! நாணயத்துடன் அது அமைந்தால் பொன்மலருடன், மணமும் சேர்ந்த பெருமையாகும்!
----கி.வீரமணி- வாழ்வியல் சிந்தனைகள் -18-5-2013
மதமே...
மதமே மனிதனுடைய சுயமரியா தைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்துக்கு விரோதி. மதமே மனி தனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனிதச் சமூகச் சம தர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத் துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.
(புரட்சி, 26.11.1933
கிறித்தவ மதப் பிரசாரமா?
கிறித்தவ மதப் பிரசாரமா? என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப் பொன்றெழுதி, சென்னைக் கடற் கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரக ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத் தகைய கிறித்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிர சிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ள வில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான்.
இக்குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வழிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்? என்று எழுதி பொதுவாகக் கிறித்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்கியத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனி யுங்கள்.
மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரகங்களிலும் அடங்கிக் கிடக்க வில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறித்தவ மதமோங்கி விடாது. இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறை யனாயிருக்கும் கோவிந்தனை பக்கத் தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோச ஆகிவிட்டால் கைலாகு கொடுப் பான்.
ஆகவே கிறித்தவ மதத்தை இப்பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஆரியா ஆதரிக் கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பன னுடைய வாய் வேதாந்தத்தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.
- குடிஅரசு, கட்டுரை, 11.07.1926
டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்
டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முலீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார்.
1. இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட் டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது.
2.முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்.
3. முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது.
என்று பேசியிருக்கிறார். (இது 5.7.26ல் மித்திரன் 4-வது பக்கம் 5-வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன்னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திர மாய்ப் போய்விட்டது.
ஒன்று நிர்மாணத் திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டிலொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த செய்யப் படும் சூழ்ச்சியாகிய பார்ப்பனக் காங்கிரசோ, சுயராஜ்யக் கட்சியோ தேசத் துரோகத்திற்கும் மற்ற வகுப்புத் துரோகத்திற்கும்தான் உதவும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அதில் சேரக்கூடாது என்பதும் டாக்டர் கிச்சுலுவின் உபதேசத்தால் விளங்கி விட்டது. ஆதலால் இனியாவது மகமதியர்கள் போலிகளை நம்பி மோசம் போகாமல் கண் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926
தமிழன்
முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் பண்டிதரவர்களால் தமிழன் என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று.
மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத் திருக்கும் திரு.பி.எம். இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப் படுமென தெரிவிக் கிறோம். திரு. இராஜத் தினம் அவர் களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறு மென நம்புகி றோம்.
- குடிஅரசு - செய்தி 04.07.1926
அயோத்திதாச பண்டிதர் தாழ்த் தப்பட்டோரின் பாதுகாவலர் - பார்ப் பனர்களின் பிறவி எதிரி! ஒரு பைசாத் தமிழன் எனும் இதழ் நடத்தி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எழுச்சியூட்டியவர்! மிகச் சிறந்த சித்த மருத்துவர்! மிகச் சிறந்த கல்விமான்! மிகச் சிறந்த பட்டறிவாளர்!
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடுகாரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ராஜரிஷி பிர்மரிஷி என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினா மாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை.
எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்கு லத்தில் பொது ஜனங்கள் ராஜினா மாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுத வில்லை. ஒரு வயிற்றுச் சோத்துப் பார்ப்பனன் ஒரு உத்தி யோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பி யிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டு போய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.
இது போலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத் தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்!
பார்ப்பனரல்லாத பத்திரிகைளைப் பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும் போது பத்திரிகையை பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசி யுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணலரல்லா தாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!
- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926
இதுதான் இந்தியா
நம் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம் குழந்தைகள் உள்ளனர். இதில், 150 கோடிக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், 5 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், ஆசியக் குழந்தைகள் ஆணையம், குழந்தைகள் தகவல் தொடர்பு மய்யம் ஆகியன ஆய்வு செய்து மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் மேலே உள்ள விவரங்கள் உள்ளன.
மும்பையில் 70 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவிகிதம் பெண்கள் சிறுவயதில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கோவா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற் றுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் 2012ஆம் ஆண்டு 570 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் டில்லியிலிருந்து 105 புகார்களும், ஆந்திராவிலிருந்து 43 புகார்களும், தமிழகத்திலிருந்து 8ம் வந்துள்ளன என்று மத்திய அமைச்சர் அகமத் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள்-.
சென்ற 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் வன்முறையில் டில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டா மிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.
சர்வதேச அளவில் கணக்கெடுத்து வாட்ச் டாக் இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கொடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 33.6 சதவிகிதம் அதிகரித் துள்ளது. உலகின் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக தென்னாப் பிரிக்கா திகழ்கிறது. இங்கு, 3 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது.
11-17 வயது வரையிலான 6 குழந்தைகளில் ஒருவர் அதாவது 16.5 சதவிகிதம் பிரிட்டனில் (U.S) பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க, அய்க்கிய நாடுகளில் (U.K) 1992-2010 வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இந்தோனேஷியாவில் 2012ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது பதிவான 2,367 வன்முறை வழக்குகளில் 62 சதவிகிதம் பாலியல் வன்முறை தொடர்பானது என்றும், கனடாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 54 சதவிகிதத் தினர் தேவையில்லாத பாலியல் கவனத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
என்னை மாற்றிய புத்தகம்
இந்நூலை வாசித்தால்...!
நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒரு தருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப் பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன் - ஜெயமோகன்.
சில நாட்களாகவே நம் எழுத்தாளர் களுக்கு உள்ளொளி தரிசனம் போதவில்லை என்பது மாதிரி ஓர் எண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயமோகன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பட்டுப்புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை தானே உருவாக்கிக் கொண்டு, அதுதான் உலகம் என்று நம்புவதைப் போல நம் எழுத்தாளர்கள் ஒரு கற்பனாவாத உலகத்தை உருவாக்கிக் கொண்டு, அவ்வுலகில் அவர்கள் சிந்தனைகளாலேயே நிகழும் சம்பவங்களை உலக யதார்த்தமாக பொதுமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஜெயமோகனின் உலக அனுபவம் எவ்வளவு சிறிய வட்டத்துக்குள் நிகழ்கிறது என்பதற்கு இப்பதிவு நல்ல உதாரணம்.
பெண்களைக் குறித்து இம்மாதிரி அல்லது இதைவிட மோசமான கருத்துகளை ஒரு சாமா னியன் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களைக் குறித்த படுமோசமான, ஆபாசமான கருத்துகளையே கொண்டி ருந்தேன். என் தலையில் நாலு குட்டு குட்டி, இதைப் படிச்சிப்பார் என்றொரு சிறுநூலை வாங்கிப் பரிசளித்தார் அண்ணன் எஸ்.பாலபாரதி.
அந்நூலை வாசித்த பிறகு என் செயல்பாடுகள் பெருமள வில் மாறிவிடவில்லை. ஆனால், பெண்கள் குறித்த என்னுடைய எண்ணங்கள் தவறு என்கிற புரிதல் மட்டும் தோன்றியது. பாலபாரதியிடம் இந்த மனோபாவ மாற்றத் தைச் சொன்னேன். அது போதும், நீ மாறணும்னு அவசியமில்லை.
பெண்ணியப் போராளியா கொடி பிடிக்கணும்னும் தேவை யில்லை. நீ நம்பிக்கிட்டிருக்கிற, செஞ்சிக்கிட்டி ருக்கிற விஷயங்கள் தவறுன்னு உணர்ந்தா போதும். ஒவ்வொரு முறையும் இதே தவறை நீ செய்யும்போதும், குறைந்தபட்சம் ஒரு குற்றவுணர்வு இருக்கும். அது போதும் என்றார்.
அதுவரை கட்டமைத்து வைத்திருந்த பல பிம்பங்களை உடைத்த அந்நூலில் நம் பாட்டி, அம்மா, சகோதரி, பக்கத்து வீட்டுப் பெண், எதிர்த்த வீட்டுப்பெண் என்று உலகின் எல்லாப் பெண்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கான விடை இருக்கிறது. மிகச்சிறிய நூல். எழுதியவர் ஜெயமோகன் மாதிரி பெரிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு இலக்கியம் தெரியாது.
எழுத்துநடையும்கூட படுசுமார்தான். ஆனால் சவாலாகவே சொல்கிறேன். அந்நூலை வாசிப்பவர்களுக்கு மிகச்சிறிய அளவிலாவது மனமாற்றம் தோன்றியே தீரும். மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வாசித்தே ஆகவேண்டிய புத்தகம். தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?
ஜெயமோகனுக்கு யாராவது இப்புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம்.
- யுவகிருஷ்ணா
நடிகர் நாகேஷ்
வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணங்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு அய்யர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.
எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. காரணம், எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்ததுதான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத் தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.
ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை.
இது நெம்பர் 1.
நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.
- சிட்னி 'தமிழ் முழக்கம்'
வானொலிப் பேட்டியில் நடிகர் நாகேஷ்
முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பிரதமர், ஜனாதிபதின்னு அனைவருமே பப்ளிக் சர்வண்ட் ஆப் சிவில்தான். அவங்க மக்களுக்காக சேவை செய்ய மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் சாதாரண ஊழியர்கள். அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தில்லை. மக்கள் அவர்களுக்கு அதிக மரியாதை தரவும் அவர்கள் தங்களை ஏதோ தேவதூதர்கள் என்று நினைத்து வானில் பறப்பதும், அட்டூழியங்கள் செய்வதுமாக இருக்கிறார்கள். அந்தத் துணிச்சலில்தான் ஏகப்பட்ட தவறுகள், ஊழல்கள் பண்றாங்க.
நடிகர் கமலஹாசன்
கீதை: சில கேள்விகள்
பாபு பீ.கே.
பகவத்கீதை என்பதே நம் புழக்கத் தில் இருப்பதால் அப்படியே குறிப் பிடுகிறேன். ஏனெனில், இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.
1. முதலில் இதன் காலம் வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?
மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.
யுகங்கள் ஒரு வரிசைப் பார்வை
சத்ய யுகம் 1,728,000
திரேத யுகம் 1,296,000
துவாபர யுகம் 864,000
கலியுகம் 432,000
நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால்கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?
2. இரண்டாவது, நிகழ்விடம்.
ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படை வீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.
தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660
யானைப்படை 21,870 x 18 = 3,93,660
குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980
காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300
அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படி 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?
3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்? அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது... உபதேசனை கூட இல்லை... ஒரு கேள்வி _- பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)
4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 -_ சுலோ 13)
நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?
5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 -_ சுலோ 21)
சந்திரன் நட்சத்திரமா?
6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:| ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- _ சுலோ 70)
எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகி விட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச் சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?
7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் (அத் 9 - சுலோ 23)
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- _ சுலோ 30)
23ஆம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,
30ஆம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டுச் சொல்கிறார்? யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?
8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10-சுலோ 37)
பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்... எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?
இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிடைக்கலாம்.
இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?
கலப்புத் திருமணங்கள்
கலப்புத் திருமணம் செய்து கொள்பவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாய் பரிசுத்தொகையினை உயர்த்தி 75,000 ரூபாயாக உயர்த்தி இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்திர சிங் அறிவித்துள்ளார்.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 68.50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 25 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.
கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜாதிகள் ஒழிய வாய்ப்பு உள்ளது. 2009_2013ஆம் ஆண்டு தற்போது வரை 1,113 கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
ஜாதி என்ற தடையை மீறி இளம்பெண் களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்வதை ஊக்கப்படுத்தவே பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சமூக நீதித்துறைச் சிறப்புச் செயலர் சூட் கூறியுள்ளார்.
பிரிட்டனில் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கீகாரம்
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் 4 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டப் பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படிக் குற்றம் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு ராணியின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
2010ஆம் ஆண்டின் சமத்துவச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஜாதியையும் ஒரு பிரிவாக்கி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஜாதி வேறுபாட்டுக்கு எதிராக தெற்கு ஆசியாவிற்கு வெளியே இதுபோன்ற சட்டங்கள் இயற்றுவதில் பிரிட்டன் முதல் நாடாகும் என்ற பெருமையையும் பெறுகிறது.
வருங்காலத்தில் ஜாதியானது இனத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் பிரிட்டனில் உள்ள ஆசிரியர்களின் வாழ்க்கை இந்த ஜாதி வெறுப்பு உணர்ச்சிகளால் மங்கிப்போய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் இனி புது நம்பிக்கை ஏற்படும் என்று தேசிய ஜாதி மதமற்ற அமைப்பின் ஆணையர் கெய்த் போர்டியஸ்வுட் கூறியுள்ளார்.
பன்னாட்டுத் தலித்களின் ஒன்றிணைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரிக்கி நோர்லிண்ட், இந்த முடிவானது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஜாதி வேறுபாடு ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஃபுல்லர், இது ஒரு நேரடிப் பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவது தவறு. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு உண்டு. முடிவும் முதலுமாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
புதிய மூடநம்பிக்கையால் பொருள் இழக்கும் மக்கள்!
அட்சய திருதியை நாளில்
தங்கச் சங்கிலி
வாங்கச் சென்ற
அங்கம்மாளின்
கழுத்து நகை
களவு போனது
என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகளில் வருவது வழக்கமாகிவிட்டது. அங்கம்மாக்களின் பெயர்கள்தான் மாறுகின் றனவே அன்றி, செய்தி இன்னும் தொடரத்தான் செய்கிறது.
பழைய மூடநம்பிக்கைகள் காலாவதியாகிப் போக புதிய மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன. வளர்ந்துவிட்ட அறிவியல் ஊடகங்கள் காசு பண்ண இதனை மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றன. நாய் விற்ற காசு குரைப்பதில்லையே.
நல்ல நாளில் தங்கம் வாங்கப்போகும் ஒருவித மூடநம்பிக்கை நம் சமூகத்தில் நீண்ட நாட்களாவே உண்டு. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் நகைக்கடைகள் கூட்டமில் லாமல் இருக்கும். மக்கள் தொகை பெருகப் பெருக கடைகளும் அதிகரித்தன. அவர்கள் தமது வணிகத்தைப் பெருக்க நகைச்சீட்டு சேர்க்கும் திட்டம் போல சில கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரத் தொடங்கினார்கள்.
பின்னர் திருமண சீசன் இல்லாத காலங்களில் வணிகம் செய்ய கிராமுக்கு இவ்வளவு குறைவு என்றோ, சில அன்பளிப்புகளை அளித்தோ வாடிக்கை யாளர்களை ஈர்த்தார்கள். சென்னையில் ஒரு புகழ் பெற்ற தங்க நகை அங்காடியின் வார விடுமுறையே செவ்வாய்க் கிழமைதான்.
ஆனால், இன்று அந்தக் கடை பல கிளைகளைத் திறந்தும் கூட்டம் அலைமோத, வார விடுமுறை இல்லாமலேயே அந்தக் கடைகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர்களும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நகை வாங்குகிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் 10 ஆண்டுகளுக்கு முன் அட்சய திருதியை என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் தங்க வணிகர்கள். அந்த நாளில் நகை வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிடுவது என பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. இப்போது முன் நாட்களிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு நாள் அட்சய திருதியை என்பது கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை வாரமாகிவிட்டது. (எப்படி ஆனதோ?) அட்சய திருதியை ஆஃபரெல்லாம் வந்துவிட்டது.
இந்த மே 9 அன்று நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டது. `கடவுளின் பெயரில் ஏமா(ற்)றலாமா? என்பது அதன் தலைப்பு. ``அட்சய திருதியை நாளை முன்னிட்டு கிராமுக்கு இவ்வளவு தள்ளுபடி, இலவசப் பரிசு, அட்சய திருதியை ஆஃபர் என்பதைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்கள் கடையில் அப்படியெல்லாம் இல்லை என்கிறது அந்த விளம்பரம்.
அட்சய திருதியையைப் பயன்படுத்தி நகைக்கடைகள் செய்யும் தில்லு முல்லுகளை ஒரு நகைக்கடையே போட்டுக் கொடுத்துவிட்டது.
தங்கம் வாங்கும் போது அதன் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நல்ல நாள்,- நேரம்,-அட்சய திருதியை போன்றவற்றைப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்தானே! நகை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணா. அவர் 2013 மே 8 -10 நக்கீரனில் கூறியுள்ள தகவல்கள் இதோ:
காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு கறாராக அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என விலை குறைத்து காய்கறிகள் வாங்கும் திறமை கொண்ட பெண்கள்... பல்லாயிரங்களைக் கொடுத்து, நகை வாங்குவதில் ஏமாந்துவிடுகிறார்கள். பலரும் நகை வாங்கும்போது... அதுல இந்திய தர நிர்ணய அமைப்பான பி.அய்.எஸ். (Berua of Indian Standard) நகைகளுக்கு வழங்கும் ஹால் மார்க் (Hall Mark) முத்திரை இருந்தாலே 24 கேரட் தங்கம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
ஆனால், 24 கேரட் தங்கம் என்பது நகைகளாக வடிவமைக்கும்போது 22 கேரட்தான் இருக்கும். ஆக, ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட 22 கேரட் தங்க நகை 916 அளவு துல்லியம் இருக்கும். அதேபோல் 21 கேரட்- 875 துல்லியம். 18 கேரட் - 750 துல்லியம், 17 கேரட்-708 துல்லியம், 14 கேரட்- 585 துல்லியம் என குறைந்த க்வாலிட்டி நகைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினரால் (பிஅய்.எஸ்.) ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால், இதைப் பலரும் கவனிப்பதில்லை. லென்ஸ் மூலம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
விலை குறைய குறைய அந்த நகையின் துல்லியமும் குறைந்திருக்கும். அதனால்தான் ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்குக் கொண்டு போய் விற்கும்போது அதே ரேட்டுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் வெறும் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருக்கிறதா என்று பார்க்காமல் எவ்வளவு துல்லியம் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து நகைக்கடைக்காரர்களின் சேதாரம் என்ற சீட்டிங் என்று கூறியுள்ளார்.
பகுத்தறிவு என்பது நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் உரசிப்பார்க்கும் உரைக்கல். பகுத்தறிவு என்றவுடன் கடவுள் மறுப்பு மட்டுமே பலரது நினைவுக்கு வருகிறது. கூட்டமில்லாத நாளில் கடைவீதிக்குச் சென்று பொருள் வாங்குவதுகூட பகுத்தறிவுதான். தங்கத் தின் மதிப்பை உலகம் உயர்த்தி வைத்துள்ளதால் அது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.
அதனால், இப்போது ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவோரைவிட முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். இச்சூழலில் தான் அட்சய திருதியை போன்ற மூடநம்பிக்கை களை தங்க நகை வணிகம் செய்வோர் பயன் படுத்துகின்றனர்.
அட்சய திருதியை நாள் உருவாக்கப்பட்டதிலிருந்து நகைக் கடைக் காரர்களுக்கு வேண்டுமானால் பணம் குவியுமே தவிர நகை வாங்கியவனுக்குக் குவியுமா? கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கியோரெல்லாம் கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா? அந்த நாளில் கூடிய கூட்டத்தில், உள்ள நகையையும் பறிகொடுத்தவர்களுக்கு அட்சய திருதியை அந்த நகையைத் திருப்பிக் கொடுக்குமா?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அட்சய திருதியை மூடநம்பிக்கை என்பது இல்லை. அப்போதும் மக்கள் நகை வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு வளம் இல்லாமல் போய்விட்டதா? அல்லது வளம் பெருகாமல் போய்விட்டதா?
தமிழகத்தின் பிரபல கோவில் பட்டர் ஒருவர் ஆருடம் கூறியிருக்கிறார். அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட 3 மணிநேரத்தில் நகை வாங்கி ஆண்டவன் முன் வைத்து வணங்கி னால் வளம் பெருகுமாம். அந்த 3 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் வாங்கினால் என்னாகும் என்று ஏனோ அவர் சொல்லவில்லை.
உழைப்புதான் மனிதனை உயர்த்தும்; அறிவுதான் மனிதனைக் காக்கும் என்பதை உணரும் காலம் வரும் வரை இந்த மூடநம்பிக்கைகளால் மக்கள் தமது செல்வத்தை இழந்துகொண்டுதான் இருப்பார்கள்.
- அன்பன்
பொறுமைக்கு வலிமை உண்டு
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை
நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள் ரத்தம் சிந்தக்கூடாது. எல்லோரும் சகோதரர்கள் - சிறை யிலே அவர்கள் இருக்கவேண்டும் - அவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைத்து, அந்தத் துன்பத்திலே மகிழக்கூடியவர்கள் அல்லர். தயவு செய்து அமைதியாக யோசியுங்கள்.
நீங்கள் எடுத்த நிலைப்பாடு இருக்கிறதே, அது சரியான நிலைப்பாடு அல்ல. தவறான பாதை. சில நேரங்களிலே சில இலக்குகளை விசாரித்துக் கொண்டு ஊருக்குச் செல்லலாம். போகிற நேரத்திலே கொஞ்சதூரம் போனதும்தான் தவறான பாதை எனத் தெரிகிறது. தவறான பாதையாக இருந்தாலும், கடைசிவரைப் போவேன் என்றால், அது அறிவுடைமை அல்ல.
கொஞ்சதூரம் போய் தவறான பாதை என நினைத்தால், சரியான பாதைக்கு வரவேண்டும். எனவே, தவறான பாதைக்குப் போனவர்களையும், சரியான பாதைக்குக் கொண்டு வரவும். அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கி தமிழ்நாடு என்பதிருக்கிறதே, இது சமத்துவ பூமி, சமூகநீதிக் கொடி பறக்கக் கூடிய பெரியாரின் மண் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வாய்ப்புக்காக இந்த மாநாடு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எந்தக் காரணத்தாலும் தோழர்களே நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள்; உங்கள் பொறுமைக்கு வலிமை உண்டு. மேடையில் பேசுவதைவிட, அமைதிக்கு மிக ஆழமான சொல்வன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையிலே உங்களுடைய சகிப்புத் தன்மை வரவேற்கத்தகுந்தது. பின்பற்றத் தகுந்தது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும். எல்லோரும் கைகோர்க்க வேண்டும். யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது. காரணம், பொதுச்சொத்து நம்முடைய சொத்து. அது யாருடைய சொத்தும் அல்ல. அதற்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வரி கட்ட வேண்டியவர்கள் நாம்தான் என்கிற உணர்வைப் பெற்று ஒரு புது ஒழுங்கை உருவாக்குவோம்.
இந்த மாநாடு பொதுச் சொத்தைப் பாதுகாக்கிற மாநாடு; பொது ஒழுங்கை நிலை நிறுத்துகிற மாநாடு; பொது உறவைக் கட்டுகிற மாநாடு. எனவே, இந்த மாநாடு வாழ்க, வளர்க! அந்த நோக்கம் நிறைவேறுக!!
- சென்னை,பெரியார் திடலில் 7.5.2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...
செய்திகளை பகிர்ந்து கொள்ள
போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?
இரண்டாம் எலிசபெத்
இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது அய்.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கை.
இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்பற்றி, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது - இரண்டாம் முறையாக.
முன்பு, முதற்கூட்டத்தில் - நடுநிலை வகித்த இந்தத் தீர்மானம் குறித்து 47 நாடுகளில், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே - அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளன.
இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.
காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளாகும்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது; ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.
டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.
வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே - இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப்போல் இருந்தது!
எப்படியோ காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திடவேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துவிட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!
உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த இராஜபக்சே அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப்போல காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.
என்றாலும், இதை உணர்ந்துதான்போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார்; அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்குச் சற்று ஆறுதல் தருகிறது!
1973 ஆம் ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ் இராணியார் (அவர்தான் அதன் தலைவர்) கலந்துகொள்ளாமல் - பங்கேற்காமல் நடைபெறு வதே முதல் முறையாகும்!
ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
கி.வீரமணி,
ஆசிரியர்
அந்த வார்த்தை
அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்பு களுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.
இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.
பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.
எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.
- சந்திரன் வீராசாமி
உ.பி.யில் பார்ப்பனர் காட்டில் மழையா?
இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத் தில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது?
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள்; அவர்கள் கரங்களில்தான் அதிகாரம் வர வேண்டும் என்று ஓர் இயக்கத்தை அகில இந்திய அளவில் உருவாக்கியவர் கன்ஷிராம்!
உத்தரப்பிரதேச அரசியலில் அது கையும் கொடுத்தது. அதன் அடிப்படையில்தான் லக்னோவில் மூன்று நாட்கள் மிகப் பெரிய அளவில் பெரியார் மேளாவும் நடத்தப்பட்டது - மாயாவதி அப்பொழுது முதல் அமைச்சராகவும் இருந்தார். (1995).
மாயாவதி எந்த அளவுக்குச் சென் றார் தெரியுமா? பார்ப்பனர்களைச் செருப்பால் அடியுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது வார்த்தைகள் எகிறிப் பாய்ந்தன.
உ.பி.யைப் பொறுத்தவரை 14 விழுக்காடு வாக்காளர்கள் பார்ப் பனர்கள்; மாயாவதியின் மூளையில் குயுக்தியாக ஒரு பொறி தட்டியது. பகுஜன் என்பதைவிட வெகுஜன் என்று தலை கீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனர்களின் வாக்கு வங்கியைத் தம் பக்கம் ஈர்க்கலாம் என்று கணக் குப் போட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராகவே சதீஷ் சந்திரா மிஸ்ரா என்ற பார்ப்பனரை நியமித்தார்.
2007 சட்டப் பேரவைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு 51 இடங்களை லட்டாகத் தூக்கிக் கொடுத்தார். 2009இல் நடைபெற்ற மக்கள வைத் தேர்தலிலே பார்ப்பனர்களுக்கு 20 இடங்களைத் தாரை வார்த்தார். தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுத்த இடங்களோ வெறும் 17 தான். (வாழ்க சமூக நீதி!)
2007இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2012 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.
2014இல் மக்களவைத் தேர்தல் நடப்பதையொட்டி உத்தரப்பிரதேசத் தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2007இல் பின்பற்றிய யுக்தியை - தற்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு வியூகம் வகுத்துள்ளார். பரசுராமன் விழா என்று பெயரில் விழா ஏற்பாடு செய் யப்பட்டது.
பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பார்ப் பனர்களுக்குச் சரமாரியான சலுகை களை வாரிக் கொட்டியுள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை நாடாளு மன்றத்தில் தோற்கடித்தது சமாஜ் வாடி கட்சிதான் என்று மார் தட்டியுள்ளார்.
பிராமணர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதலிடத்தில் இருப் பது எங்கள் கட்சிதான்; கடந்த ஆட்சி யில் பிராமணர்கள்மீது போடப்பட் டுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று நாக்கில் தேன் தடவியுள்ளார்.
உ.பி.யின் இன்னொரு பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநாட்டைக் கூட்டி அதில் கட்சியின் பொதுச் செயலாளரான சதீஷ்சந்திரமிஸ்ரா பிராமணர்களுக்கு பாதுகாப்பான கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே! என்று கூறியுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்த முதல் அமைச்சரும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியும் சரி, உயர் ஜாதி பார்ப்பனர்களைத் தாஜா செய்வதற் காகக் களத்தில் குதித்து விட்டனர்! (இதில் மற்றும் ஒற்றுமைக் கூட்டு!)
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் கொழுத்த ஆதர வைப் பெற்று மஞ்சள் குளிப்பது மட்டும் பார்ப்பனர்கள்தாம்.
ஆம், உ.பி.யில் பார்ப்பனர்கள் காட்டில்தான் மழை பெய்கிறது. ஆனாலும் இதனையும் தாண்டி, கான்ஷிராம் அடித்தளம் போட்டுக் கொடுத்த - விதை ஊன்றிய அந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினரின் அந்த அழுத்தமான பெரும்பாலான மக்கள் இந்த இரு அரசியல் கட்சி களையும் தூக்கி எறிந்தால் ஆச்சரி யப்படுவதற்கில்லை.
இன்றைய நிலையில் பிற கட்சிகள் - ஏன் காங்கிரஸ்கூட இந்தக் கோணத்தில் சிந்திக்கலாமே! அறு வடை சுலபமாகக் கிடைக்குமே!
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை ஓகோ என்று வளர்ச்சி அடைந்து விட்ட மாநிலம் அல்ல.
ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்த இடத்தில் கால் ஊன்றிடவில்லை. கல்வி, பொருளாதாரம் இவற்றில் பாதாள பள்ளத்தில்தான் கிடக்கின்றனர்.
அவர்களுக்காக யார் குரலை கொடுக்க முன் வருவார்களோ அவர்கள் பக்கம் அரசியல் காற்றடிக்க வாய்ப்பு உண்டே!
- கருஞ்சட்டை
செய்தியும் சிந்தனையும்
ஞானோதயம்
செய்தி: விவசாய நாடு என்ற பெருமையை இந்தியா இழந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.
குஜராத் முதல்வர் மோடி
சிந்தனை: மோடி விரும்பும் இந்துத்துவாவில் விவசாயம்தான் பாவத் தொழில் ஆயிற்றே - இப் பொழுது என்ன திடீர் ஞானோதயம்?
கிரிக்கெட் போதை - சூதாட்டம் கழக ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (24.5.2013)
1 சூதாட்டம் சூதாட்டம்
கிரிக்கெட் சூதாட்டம்!
2. மத்திய அரசே மத்திய அரசே!
அனுமதிக்காதே, அனுமதிக்காதே
சூதாட்ட விளையாட்டை சூதாட்ட விளையாட்டை
அனுமதிக்காதே, அனுமதிக்காதே!
3. கிரிக்கெட் விளையாட்டா
சூதாட்ட விளையாட்டா
வெற்றி பெறுவது யார்?
வெற்றி பெறுவது யார்?
சூதாட்டக்காரர்களா?
விளையாட்டுக்காரர்களா?
4. அய்பிஎல் கிரிக்கெட்டா
கறுப்புப்பண சந்தையா?
கறுப்புப்பண சந்தையா?
5. வெட்கம்! வெட்கம்!
விளையாட்டின் பேராலே
விளையாட்டின் பேராலே
வர்த்தகச் சூதாட்டமா?
வர்த்தகச் சூதாட்டமா?
6. விளையாட்டின் சிறப்பை
விளையாட்டின் சிறப்பை
கொச்சைப்படுத்தும்
கொச்சைப்படுத்தும்
கிரிக்கெட்டை, கிரிக்கெட்டை
தடைசெய்! தடை செய்!
கிரிக்கெட்டைத் தடை செய்!
7. இளைஞர்களே, இளைஞர்களே,
மாணவர்களே, மாணவர்களே,
பலியாகாதீர்! பலியாகாதீர்!!
கிரிக்கெட் போதைக்கு
கிரிக்கெட் போதைக்கு
பலியாகாதீர்! பலியாகாதீர்!
8. மத்திய அரசே, மத்திய அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
கிரிக்கெட் பேராலே
கிரிக்கெட் பேராலே
மோசடி செய்யும், மோசடி செய்யும்
பெரிய மனிதர்கள் மீது
பெரிய மனிதர்கள் மீது
நடவடிக்கை எடு - நடவடிக்கை எடு!
9. மத்திய அரசே, மத்திய அரசே
ஆதரவு கொடு, ஆதரவு கொடு!
சடுகுடு ஆட்டத்துக்கு
சடுகுடு ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஹாக்கி ஆட்டத்துக்கு
ஆதரவு கொடு! ஆதரவு கொடு!
10. பிரச்சாரம் பிரச்சாரம்!
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
பிரச்சாரம் பிரச்சாரம்!
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்
விழிப்புணர்வு - விழிப்புணர்வு
ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்டம்!
11. கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
முதலாளிகளின், முதலாளிகளின்
கைக் கூலிகளா
கைக் கூலிகளா?
12. வெட்கக் கேடு, வெட்கக்கேடு
விளையாட்டுக்காரர்கள்
விளையாட்டுக்காரர்கள்
ஏலம் போவது - ஏலம் போவது
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!
13. தடை செய் - தடை செய்!
சூதாட்டக் கிரிக்கெட்டை
சூதாட்டக் கிரிக்கெட்டை
தடை செய்! தடை செய்!
- திராவிடர் கழகம் -
ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார்.
விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந் தது.
வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங் கினார். விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
விடுதலை போராட் டத்தில் உயிரிழப்பு என் பது எதிர்பாராத ஒன் றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர் களை மட்டும் படு கொலை செய்யாமல், பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளையும், பெண் களையும், முதியவர்களை யும், மாற்றுத்திறனாளி களையும் கொன்று குவித்துள்ளனர்.
விடு தலை உணர்வு உள்ள யாரும் மிஞ்சக்கூடாது என்பதற்காக பிஞ்சு குழந்தைகளைக்கூட கொன்று குவித்தது தான் இனப்படுகொலைக்கு சாட்சியாக மாறி உள்ளது. போர் நடக்கும் போது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தா லும், மனித உரிமை ஆர் வலர்களும், ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ள வர்களும் சிங்கள இன வெறியர்கள் நடத்தியது இனப்படுகொலை என் பதை உணர்ந்து வரு கிறார்கள்.
தனிஈழம் தேவை என் பதையும் உணரத் தொடங்கி உள்ளனர். அதற்கு முன்னோட்ட மாக தான் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் சிங்கள அரசுக்கு எதி ரான தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு சூழல் வளர்ந்து உள்ளது.
ஆயுதம் ஏந்தி போராடி ஈழத்தை வென் றெடுக்க முயற்சிப்பதை விட சர்வ நாடுகளின் சமுதாயத்தின் ஆதரவை திரட்டி அறவழியில் ஈழத்தை பெறவும், நீதியை பெறுவதுடன், நம் முன்னால் 3 முக்கிய கடமைகள் உள்ளன.
எஞ்சிய தமிழர்க ளுக்கு மறுவாழ்வு, இனப் படுகொலை குற்றவாளி களுக்கு தண்டனை, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற 3 சவால்களை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாமல், உலக தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
அதற்காக விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடுவ துடன், ஒருமித்த கருத்து கொண்டவர்களிடம் கைகோத்து நிற்கும். பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும் ஈழ விடுதலை போராட் டத்திற்கான ஆதரவை சர்வதேச அளவில் திரட் டுவோம். சர்வதேச நாடு களின் ஆதரவு இல்லாமல் தமிழ் ஈழ பிரச்சி னைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. எனவே நமக்கிடையே உள்ள முரண்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு ஜாதி, மத வேறுபாடு களை களைந்து தமிழர் களாக அணிதிரள் வோம். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுச்செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி யரசு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள் பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment