Search This Blog

19.1.12

பார்ப்பனர்கள் பற்றி அறிஞர்கள்

பார்ப்பனர்கள் பற்றி திரு.வி.க.

எங்களை விடுத்துத் தனியே உணவு கொள்ளச் சொல்லும் பழக்கம் எம்.கே. ஆச்சாரியாரிடத்தும் இருந்தது. தங்களுக்கு சிறையில்கூடப் பார்ப்பனர்கள் சமையல் செய்யப் பார்ப்பனர்களை நியமித்துக் கொண்டனர். இதுபோலவே ஆரணி சுப்பிரமணிய அய்யர் என்பவரைப்பற்றியும் திரு.வி.க. குறிப்பிடும் செய்தி இது. ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் வடஆர்க்காடு ஜில்லா காங்கிரஸ் தலைவராக இருந்தவர். என் உயிர்த் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர். அந்நாளில் யான் வேலூர் போதரும் போதெல்லாம் எனக்குச் சாப்பாடு வசதி பெரிதும் அவரே செய்வார். ஆனால் அவர் என்னுடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை.

--------------------நூல்: திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்

பார்ப்பனர்கள்பற்றி கம்பன்

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன. மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர்.

ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன. உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள் வேசியர்கள் புடைவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

தந்தை பெரியார் பேசுகிறார் (1925)

Speaking at a public meeting
at salem, E.V. Ramaswami
Naicker said they must settle the
Brahmin question even while the British
Supremacy lasted, otherwise they
would have to suffer under the tyranny
of what he called “Brahminocracy”
(A HUNDRED YEARS OF THE HINDU
Page No : 337)

சேலம் பொதுக்கூட்டத்தில் பெரியார் இவ்வாறு பேசினார். வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடக்கும் இக்காலக்கட்டத்திலேயே பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இல்லா விட்டால், பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பனர்களின் ஆதிக்க நுகத்தடியின் கீழ் கிடந்து உழல வேண்டியதுதான்.

ஜோதிராவ் புலே பேசுகிறார்

இன்று ஆங்கிலேயர் ஆட்சி நடந்து வருகிறது. நாளை இது இல்லாமல் போகலாம். இது நீடித் திருக்காது. இது நிலைத்திருக்கும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. ஆனால், இந்த ஆட்சி நீடித்திருக்கும் காலம் வரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற்றுக் கொள்ள முடியும். அதன் மூலம் தங்களை அறியாமை யில் முடக்கி வைத்திருந்த, தங்களது சமூக, தனிநபர் கவுரவங்களைப் பறித்துக் கொண்ட பார்ப்பனர்களின் அடிமை நுகத்தடியிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம்.
--------------(தனஞ்செய்கீர் எழுதிய மகாத்மா ஜோதிராவ் புலே பக்கம் 119)

அம்பேத்கர் பேசுகிறார்

சுதந்திர இந்தியா இந்து ராஜ்யமாகவே இருக்கும். பார்ப்பனர்களும், பனியாக்களுமே ஆதிக்கம் செலுத்துவர். நமக்குச் சுதந்திர இந்தியா மட்டும் போதாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் அது இருக்க வேண்டும்.

----------(டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்-_பக்கம்423_தொகுதி 16)

3 comments:

தமிழ் ஓவியா said...

அதிரவைத்த அண்ணா


தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுததாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.

ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.

அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டிமெண்ட்ஸ் பிகாஸ் வித் பிகாஸ் , பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No Sentiments because with because because is a conjection) என்றார் அண்ணா.

ஆச்சரியமடைந்த வெளிநாட்டினர் எ,பி,சி (a,b,c) வராத வார்த்தைகளைக் கூறுங்கள் என்றதும், ஒன்,டூ, த்ரீ.... ஹன்ரடு (One, Two, Three.... Hundred) என்றார் அண்ணா. அண்ணாவின் ஆங்கிலப் புலமையையும் அறிவாற்றலையும் பார்த்த வெளிநாட்டினர் வியந்து போற்றினர்.

பிஞ்சுகளே, நீங்களும் அறிஞர் அண்ணாவைப் போல் அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டும்
------- நன்றி:-”பெரியார் பிஞ்சு”

arulmozhi said...

please try to write correctly.dont write nonsense.
first sentence is I AM NOT A LORRY TO CARRY YOUR SORRY.
second one is NO SENTENCE ENDS WITH BECAUSE BECAUSE BECAUSE IS A CONJUNCTION.

குலவுசனப்பிரியன் said...

//dont write nonsense.//
Shouldn't that be "Don't"?

ஆனாலும்,
பிஞ்சுகளுக்கு எடுத்துச் சொல்கையில், தப்பும் தவறுமாக எழுதுவதைப் பார்த்தால் கொடுமையாகத்தான் இருக்கிறது. உங்கள் திருத்தத்தைப் பார்த்தப் பிறகுதான்
முதலில் சொல்லப்பட்ட வாசகம் என்னவென்றே புரிந்தது.