ஒரு ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா ஸ்ரீரத்தினத்தை வைப்பாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும்போது விதவா சம்பந்தம் கூடாது என்றும் அது இருவருக்கும் பாவமென்றும் மேல் லோகத்தில் நெருப்பில் காய்ச்சிய இருப்புத் தூணைக் கட்டிப் பிடிக்கச் சொல்லுவார்கள் என்றும் இன்னும் பலவிதமாக ஞானோ பதேசம் செய்தார்.
சாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார் வீட்டிற்கு வந்தவுடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர். இவ்வளவு பாவமும், தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு இதுவரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்பந்தத்தால் மோட்சம், புண்ணியம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர். போதும் எட்டிநில்லும் என்று சொல்லி விட்டாள். சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஒரு ஸ்திரீ எவ்வளவுதான் பதிவிரதையானாலும் புருஷனில்லாமல் இருக்க முடியுமா?
புருஷன் தானாகட்டும், எப்படிப் பட்டவனாகிலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா? இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா? என்று சாஸ்திரியார் வேதாந்தம் போதித்தாராம். அதுபோல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும் புராணப் பிரசங்கம் வேறு. தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு. இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள்.
-------------பெரியார் -"குடிஅரசு" 26.12.1926
0 comments:
Post a Comment