Search This Blog

19.1.12

சோ பார்வையில் பகுத்தறிவு?


கேள்வி: நேற்யை பகுத்தறிவு, இன்றைய பகுத்தறிவு, நாளைய பகுத் தறிவு - எப்படி இருக்கும்?

பதில்: நேற்றைய பகுத்தறிவு வர்த்தகம், இன்றைய பகுத்தறிவு உபத்திரவம் - நாளைய பகுத்தறிவு தமாஷ்.

----------------------(துக்ளக் 25.1.2012)

இன்று வெளிவந்துள்ள துக்ளக்கில் இப்படி ஒரு தமாஷ்!

பகுத்தறிவு என்றாலே ஓர் இயக்கத்தைச் சார்ந்ததுதான் - எங்களுக்கும் - ஆறாவது அறிவான பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒப்புக் கொண்டது ஒரு வகையில் அறிவு நாணயம் தான்.

சோ எழுதுவது பேசுவது என்று எடுத்துக் கொண்டால் அவரின் பகுத்தறிவு தமாஷ் என்பது எல்லோருக்கும் தெரிந் ததே!

இல்லா விட்டால் மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள கறுப்பு மயிரிலிருந்து பிறந்தவன் கிருஷ்ணன் என்கிற புராணக் கதைகளை நம்புவாரா? அப்படிப் பிறந்தவனால்

எழுதப்பட்டதாகக் கூறும் கீதைக்கு வக்காலத்து வாங்கிதான் எழுதுவாரா?


பகுத்தறிவைச் சொல்லி விட்டார்.

நேற்றைய ஆன்மீகம் - ரமணரிஷி (சொத்துக்களை சொந்த தம்பிக்கு எழுதி வைத்தவர்) இன் றைய ஆன்மீகம் காஞ்சி ஜெயேந்திரர் சரஸ்வதி (கொலை வழக்கில் முதல் குற்றவாளி) நாளைய ஆன்மீகம் - தேவநாதன்கள் (கோவில் கரு வறையைக் கருவை உண்டாக்கும் தெய்வ காரியத்தில் ஈடுபடுவது)

வர்த்தகம் என்கிறாரே அது என்ன? ஊருக்கு ஊர் திருப்பதி ஏழுமலை யான் கோவிலுக்குக் கிளைகள் திறந்து வசூல் செய்யப்படுகிறதே அதைச் சொல்கிறாரோ!

----------------------- "விடுதலை” 19-1-2012

0 comments: