Search This Blog

3.1.12

திணற வைக்கிறதா - திருநள்ளாறு?புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா

ஆன்மீகத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எப்பொழுதெல்லாம் நெருக்கடி - பலவீனம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் - அவர்களின் ஊட கங்கள் - அவர்களின் தொங்கு சதைகளான சில ஏடுகள் ஏதாவது ஓர் அற்புதக் கரடியை அவிழ்த்துவிடுவார்கள்.

அதே போல்தான் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பற்றி ஒரு மகாத்மியத்தைப் பரப்பி வருகிறார்கள். இதோ ஒரு பிரச்சாரம்:

இன்று பல நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு அமெ ரிக்க செயற்கைக் கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல அது வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அந்த செயற்கைக் கோளில் அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.

இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்ந்து கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைக் கோளும் பூமி யில் இந்தியாவின் தமிழ் நாடு அருகில் உள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியைக் கடக்கும் 3 வினாடிகள் மட் டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கிறதாம். விண் வெளியில் சுற்றிக் கொண் டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.

அதே நேரத்தில் செயற்கைக் கோள்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவ தில்லை. இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென் றால், இந்த கோவில்தான் இந்துக்களால் சனி பகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்துவிட்ட னர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபக வானை கையெடுத்துக் கும்பிட்டு உணர்ந்தனர் என்று ஏடுகளில் கயிறு திரிக்கப்பட்டது.

இந்தத் தகவலைப் பற்றி சந்திராயன் புகழ் விண்ணியல் விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

என் அறிவுக்கு எட்டிய வரை இந்தத் தகவல் பொய் என்று கூறி விஞ்ஞான அறிவுக்கு நாணயமுள்ளவ ராக நடந்து கொண்டு விட்டார். To the best of my knowledge it is not true என்று கூறிவிட்டாரே!

சொல்லுவது விண்ணியல் விஞ்ஞானி என்பதை மறந்துவிடக்கூடாது.

இதே போல்தான் மணியன் என்ற ஒரு பார்ப்பனர் இருந்தார். இது போன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து உலவ விடுவதில் மன்னாதி மன்னன்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சங்கரா விண்வெளி ஆய்வுக்கூடம் இருப்பதைக் கண்டு, அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது இங்குள்ள சங்கரரின் ருத்ர தாண்டவ அடிப்படை யிலேயே ஒரு பெரிய விஞ்ஞான தத்துவம் இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டதாக எழுதியிருந்தார் (மறைந்த) மணியம் அவர்கள். (இதயம் பேசுகிறது 1.11.1981)

இப்படி ஒரு செய்தியை இதயம் பேசுகிறது இதழில் மணியன் எழுதியிருந்தது குறித்து சோமனூர் வழக்குரைஞர் ப.பத்மநாபன் எம்.ஏ.,பி.எல்., அவர்கள் அமெரிக்காவில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எழுதிக்கேட்டிருந்தார். அது உண்மையல்ல என்று அவர்களுக்கு பதில் வந்துவிட்டது.

இத்தகவலை வழக் குரைஞர் மானமிகு ப.பத்ம நாபன் அவர்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 10.3.1983 நாளிட்ட கடி தத்தில் எழுதி யிருந்தார். அதனை அப்படியே உண்மை (15.4.1983 பக்கம் 23-24) இதழில் வெளியிட்டோமே!

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா, அட போக்கத்தப் பசங்களா! என்று உடுமலை நாராயணகவி எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

---------------- ---------------"விடுதலை” 3-2-2012

3 comments:

தமிழ் ஓவியா said...

உலகில் நாத்திகர்கள் 1.1 பில்லியன் (110 கோடி) உலக அளவில் மூன்றாம் இடம்!




சமீபத்திய ஆய்வுகளின்படி உலகில் உள்ள மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியல் வருமாறு:

1. கிருத்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)

2.இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)

3.நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)

4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)

5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)

6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)

7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)

8.ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)

9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)

10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)

11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)

12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)

13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)

14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)

15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)

16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)

17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)

18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)

19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)

20.யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்

21.ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்

22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்

இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள், எந்த மதங்களையும் பின் பற்றாதவர்கள், சுயசிந்தனை உடையவர்கள் 110கோடி பேர் உள்ளனர். உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்.

ஆதாரம்: மனோரமா இயர் புக் 2012 (ஆங்கிலப் பதிப்பு)

தகவல்: மருதூர் சு.செம்மொழிமணி, பி.இ.,

மாவட்ட மாணவரணி செயலாளர் தி.க.,

வேதாரண்யம்.

சிவபார்கவி said...

அப்படியா... 3 செகண்ட் உண்மையில்லையா...


http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi

நலம் விரும்பி said...

As long as people are ignorant of many things (true facts), there are people like 'maniyan' dare enough to fool around.
I am reminded of one of our proverbs " Mallakka paduthukkutu thuppuna thaan maela thaan vizhum".