Search This Blog

5.1.12

சித்திரை புத்தாண்டின் தொடக்கமா?: துக்ளக்கின் புரட்டு!


இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழில் (11.1.2012) கண்ணைத் திறப்பாரா கருணாநிதி என்ற தலைப்பில் சாமி - தியாகராசன் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டதும், அ.தி.மு.க. ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டதுமான ஒரு நிலையில், இவர் கட்டுரை வெளியாகியுள்ளது.

மறைமலையார் கருத்தை மறைப்பதோ? (முரசொலி - 31.12.2011) என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் எழுதிய கட்டுரையினைத் தொடர்ந்தும் இது வெளியிடப்பட்டு இருக்கலாம்.

500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கமலை ஞானப்பிரகாசர் சொல்லியிருக்கிறார் - நெடுநல் வாடையில் கூறப் பட்டுள்ளது என்றெல்லாம் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சான்றுகள் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று மறைப்பது மறையவர்களின் சூழ்ச்சிக்கும் பலியானதாலோ! இதோ;

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டு பிறப்பாக பல்லாண்டு காலமாகக் கொண்டாடி வந்திருக் கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் - தக்கச் சான்றுகள் பகர்கின்றனர்.

இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உண்டு.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை)

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை)

தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறநானூறு)

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலித் தொகை)

எனவரும் கழகக்கால பாடல்களின் அடிகள் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டிற்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டி யிருப்பதையும் அறிய முடிகிறது.

தைப்பிறப்பாண்டு வெறும் விழாவையோ அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்ததல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கி திரும்பும் பருவ - கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.

மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு. சுப்பிரமணியம் பிள்ளை செந்தமிழ்ச் செல்வியில் எழுதி உள்ளதாக - இன்னொருவர் கட்டுரையிலிருந்து கருத்துக் காட்டப் பட்டுள்ளது துக்ளக்கில்..

உண்மையிலேயே இ.மு.சு.பிள்ளை அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? இதோ:

ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.

அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.

சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங் களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையா னவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளிச் சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.

ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.

பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்தென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்!
(செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25)

உண்மை இவ்வாறு இருக்க இந்த உருட்டல் புரட்டல் ஏன்? இ.மு.சு. அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகப் பொய்யுரைப்பது ஏன்?
ஏதோ ஒரு சிலர் கூறியவற்றை எடுத்துக் காட்டுகிறார்களே!

1921 இல் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமயில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழ்ப் புலவர்கள் முடிவு எடுத்தார்களே!

அவர்கள் எல்லாம் இவர்களின் கண்களுக்கு மிகமிகச் சிறியவர்களோ!

மறைமலை அடிகள், திரு.வி.க., எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா.சுப்பிரமணிய பிள்ளை, நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் - இவர்கள் கருத்துகள் எல்லாம் புறந்தள்ளப்படக் கூடியவையா?


டாக்டர் மு.வ.என்ன கூறுகிறார்?

முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். - டாக்டர் மு.வ.

நாரணதுரைக்கண்ணன் என்ன கூறுகிறார்?

வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போல, தமிழ் நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புதுவருஷமாக ஆகிவிட்டது.

சூரியன் தக்ஷிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டு தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர்.
- நாரண துரைக்கண்ணன், பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988,

பேராசிரியர் கா.பொ.ரத்தினம் (இலங்கை) என்ன சொல்லியுள்ளார்?

தமிழ் அரசர்களுடைய கல்வெட்டுகளிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களி டையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக வருடம் அக் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.

இச் சாலிவாகன சகவருடம் சாலிவாகனன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப்பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர்ப் பல்லாயிர ஆண்டுகளாக நயத்தக்க நாகரி கத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழமை யையும் - பண்பையும், சிறப்பையும் - செல்வாக்கையும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது.

தொல்பொருள் ஆய்வு அறிஞர் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறவில்லையா?

கடைசியாக ஒரே ஒரு கேள்வி. பிரபவ தொடங்கி அட்சய முடியும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே - ஏன்?

இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் சொன்னதுண்டா? ஏன் வசதியாக அந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை?

ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து நீர் அறுபதாயிரம் கோபிகளுடன் கூடியிருக் கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்குக் கண்ணன் நான் இல்லா பெண்ணை வரிக்க! என்றார். அதற்கு உட்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்து வர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ணனி டம் வந்து, அவர் திருமேனியில் மையல் கொண்டு, நான் தேவரிடம் பெண்ணாக இருந்து வரிக்க எண்ணிக் கொண்டேன் என்றனன். கண்ணனும் மறுக்கவில்லை. நாரதரை ஸ்நானம் செய்ய ஏவ முனிவர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாயினர். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம்.;

(அபிதான சிந்தாமணி)

இதனை எடுத்துச் சொல்ல வெட்கமாக இருக்கிறதா?

பார்ப்பனச் சோக்கள் தொடக்க முதலே தமிழ் செம்மொழி, விளம்பரப் பலகைகளில் தமிழ் - போன்ற எந்த தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தையும் பார்ப்பனக்கண் கண்டு கொண்டு விமர்சிக்கக்கூடியவர்.

அவரிடம் சில நேரங்களில் சில வீடணர்கள் கழுத்தை நீட்டி விளம்பர மாலைகளைப் பெறுகின்றனர். அதில் துக்ளக் கட்டுரையும் ஒன்று. அவ்வளவுதான்.

இது ஏதோ கலைஞர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பது போல, அவரைத் தனிமைப்படுத்தும் பார்ப்பனீயச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

--------------------"விடுதலை” 5-1-2012 இல் தி.க. பொதுச்செயலாளர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை


3 comments:

தமிழ் ஓவியா said...

ஆரிய பண்பாட்டை முறியடிக்க தை முதல் நாளே தமிழர்களுக்கு புத்தாண்டு!


பொங்கல் விழாவை நாடு முழுக்க கொண்டாடுவீர்!

பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

தை முதல் நாள் தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு பொங்கல் விழா. சித்திரை அல்ல தமிழர் களுக்குப் புத்தாண்டு. நாடு முழுக்க கொண் டாடி ஆரிய பண்பாட் டுப் படையெடுப்பை முறியடிப்பீர் என்று திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர் கள் கூறி விளக்க உரை யாற்றினார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யச் செயலா ளர் தொகுப்பாசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று (5.1.2012) இரவு 7 மணிக்கு நடை பெற்றது.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற் றிய உரையின் முக்கிய பகுதி வருமாறு:

இந்த நாள் நமது இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய நாள் நம் முடைய இயக்க பிரச் சாரம் பெரும் புயலை நடத்தியது.

தன் வரலாறை எழுத மறந்து விட்டான்

திராவிட இயக்கத் தைப்பற்றி போதிய அள வுக்கு ஆவணப்படுத்த வில்லை. நமது பேராசிரி யர் அன்பழகன் அவர் கள் தான் சொல்லுவார் கள். தமிழனைப் போல சிறந்த அறிவாளியைக் காண முடியாது. தமிழ னைப் போல ஏமாளி யையும் காண முடியாது என்று. மற்றவர்களு டைய வரலாறுகளைத் தெரிந்த தமிழன் தன்னு டைய வரலாற்றை எழுத மறந்து விட்டான்.

இங்கே வரலாற்று அறிஞர் குழுவினர்கள். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கள் நிரம்பியிருக்கின்றீர்கள்.

நீதிக்கட்சி சாதனைகள்பற்றி போதிய நூல்கள் இல்லை

நீதிக்கட்சி ஆட்சி களைப் பற்றியும், அதன் சாதனைகளைப் பற்றி யும் நூல்களைத் தேடிப் பார்த்தோம். ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்கள்தான் சொன் னார்கள். இருப்பது இரண்டு மூன்று நூல் கள்தான் இருக்கும் அதையாவது தேடிக் கண்டுபிடித் துப் பாருங்கள். என்று சொன்னார்.

1917 - நீதிக்கட்சி இயக்கம்

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பற்றிய செய்திகள் நமக்கு முழுமை யாகக் கிடைக்கவில்லை. நீதிக்கட்சி வரலாறு 1917 பற்றிய நூலில் உள்ள ஆங்கில செய்திகளை விடுதலையில் மொழி பெயர்த்து இதுவரை 48 கட்டுரைகள் வெளியிட்டிருக்கின் றோம். ஜஸ்டீஸ் ஏட்டின் தலையங் கங்கள் தொகுக்கப்பட்டு கூந ஆசைசடிச டிக வாந லநயச என்ற நூலைக் கொண்டு வந்துள்ளோம்.
சுயமரியாதை இயக்கம் தொடங் கப்பட்டு குடிஅரசு தொகுப்புகள் நம்மிடம் ஆவணமாக உள்ளன. ஆனால் நீதிக்கட்சி காலத்திய முழு செய்திகள் நம்மிடம் இல்லை. அந்த காலத்தில் நாம் 147 ஏடுகளை நடத்தியிருக்கிறோம் என்று சொன் னார்கள். அவை எல்லாம் இருக்கின் றனவா? பாதுகாக்கப்பட்டிருக்கின் றனவா என்றால் இல்லை.

புது வாழ்வு! பேராசிரியரிடம் இருக்குமா?

ஏன் அந்தக் காலத்தில் பேரா சிரியர் அவர்கள் தொடங்கிய புது வாழ்வு இதழே அவரிடம் இருக் குமா என்பது தெரியாது.
நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் பேசிய, எழுதிய செய்தி களை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக நமக்கு வழங்கியிருக்கின்றார் முனைவர் ந.க. மங்களமுருகேசன். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (கைதட்டல்).

வருங்கால சமுதாயத்தினருக்கு ஆவணம்

இது வருங்கால சமுதாயத்தின ருக்கு ஒரு பெரிய ஆவணம். பெரி யார் இன்றைக்குத் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். பெரியார் பிறந்திருக்காவிட்டால் நம்முடைய நிலை என்ன? பெரியார் பிறந்திருக்கா விட்டால் நமக்கு முழங்காலுக்கு கீழே வேட்டி கட்ட உரிமை இல்லை. தோளிலே துண்டு போட நமக்கு உரிமை கிடைத்திருக்காது.

தமிழர்களுக்கு புத்தாண்டு தை முதல் நாள் தான் என்று கலைஞர் அவர்கள் சட்டமாகவே இயற்றினார்.

தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆட்சி

ஆனால் இன்றைக்கு தமிழர் களுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழர் களின் புத்தாண்டு சித்திரை என்று அறிவிக்கின்றது. அவர்கள் கூறுகின்ற 60 வருடங்களில் பிரபவ, விபவ என்று சொல்லுகின்ற ஆண்டுகள் அதில் ஒரு சொல்லாவது தமிழ் சொல் உண்டா? முதலில் பதில் சொல்லட்டும். சரி 60 ஆண்டு களோடு எல்லாமே முடிந்து போய் விட்டதா?

துக்ளக் அய்யர்கள் இந்த ஆட்சி யில் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள். நம்முடைய தோழர்கள் சும்மா இருக்கிறார்களே. மறுக்க வேண்டிய செய்திகளை நாம் மறுக்க வேண்டாமா?

எனது மகளை, எனது தாயை வர்ணாஸ்ரம தர்ம ஆரிய முறையில் கொச்சைப்படுத்துகின்றார்களே அவற்றை நாம் மறுக்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த ராமையா ஏன் அன்பழகனாக மாறினார்? நாராயணசாமி என்றிருந்த நாவலர் ஏன் நெடுஞ்செழியனாக மாறினார்?

ஆபத்தான பண்பாட்டுப் படையெடுப்பு

ஆபத்தான பண்பாட்டுப் படை யெடுப்பு நுழைந்தது. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார். திராவிட சமுதாயத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் பணியை மேற்போட்டுக் கொண்டு செய்து வருகின்றேன்.
இந்தப் பணியை செய்ய யாரும் முன்வராத காரணத்தினால்தான் இப்பணியை மேற்கொண்டேன் இந்தத் தகுதி ஒன்றே போதும் என்று கருதி தொண்டாற்றி வருகிறேன் என்று சொல்லி தனது இறுதி மூச்சு அடங்குகிற வரை இந்த மக்களுக்காகப் பணியாற்றினாரே!

பார்ப்பனர்கள் உள்ளே நுழையாதிருக்க...

பெரியாருக்குத் தெரியும். எதைச் சொன்னால் பார்ப்பனர்கள் உள்ளே நுழைய முடியாது என்று கருதி சொன்னார்.

திராவிடன் என்று சொன்னால் தான் அது பார்ப்பனீயத்திற்கு எதிரி. பார்ப்பனர்கள் உள்ளே நுழைய மாட்டார்கள் என்று கருதித்தான் திராவிடர் என்ற வார்த்தையைப் பெரியார் பயன்படுத்தினார்.

அது மொழிப் போராட்டமாக இருந்தாலும், அரசியல் போராட் டமாக இருந்தாலும் அதன் வேர் இங்கே இருந்துதான் கிளம்பியது.
பெரியாருக்குத் தேசபக்தி இல்லையா?

பெரியாருக்கு அறிவுப் பற்று, வளர்ச்சி பற்று ஒன்றுதான் இருந்தது. பெரியாருக்கு தேசபக்தி இல்லையா என்று கேட்டார்கள்.
பெரியார் சொன்னார். எனது பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தொட்டால் தீட்டு என்று சொல்லு கிறான். எனனைப் பார்த்தால் 7 கிலோ மீட்டர் ஓடுகிறான்.

ஆனால் பத்தாயிரம் மைல் களுக்கு அப்பால் இருந்து வந்தவன் என்னிடம் ஹலோ என்று சொல்லி கை குலுக்குகின்றானே எனக்கு அவன் அந்நியனா? இவன் அந்நியனா? என்று தந்தை பெரியார் கேட்டார்.

தமிழனுக்கு உரிய உரிமை இல்லை

எனவே ஆரியம் திராவிடம் கலந்ததா இல்லையா? என்பதை எல்லாம் 8 ஆம் தேதி நடைபெறு கின்ற கூட்டத்தில் விளக்க இருக் கின்றேன்.

ஆரியர் - திராவிடர் ரத்தப் பரி சோதனை செய்தா சொல்லப் படுகிறது?

இன்னமும் நம்முடைய தமிழ் பாஷையை நீஷ பாஷை என்று சொல்லுகின்றான்.

தமிழன் கட்டிய கோவிலுக்குள் தமிழன் நுழைய முடியவில்லை. தமிழன் இன்னமும் அர்ச்சகராக முடியவில்லை. வழக்கு போட்டு நீதி மன்றத்திலே வைத்திருக்கிறார்கள்.

எனவே இப்படிப்பட்ட பண் பாட்டு அடிமைத்தனத்தை உடைப் பதற்குத்தான் இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற நூல் தேவைப்படுகிறது.

இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல நாளைய தலைமுறையி னருக்கும் பயன்படக் கூடிய வகை யிலே பேராசிரியருடைய கருத்துக் களை தொகுத்து நமக்கு நூலாக வழங்கியிருக்கின்றார் முனைவர் மங்கள முருகேசன் அவர்கள். எப்படி போனாரோ அப்படியே வரவேண்டும்

சிறைச் சாலைக்குள் சென்ற ஒருவர் எப்படி விடுதலை பெற வேண் டும்?

எந்த கதவு வழியாக அவர் உள்ளே போனாரோ அந்த கதவு வழியாக வந்தால் தானே விடுதலை. அதை விட்டு விட்டு குறுக்கு வழியில் ஜன்னலை உடைத்துக் கொண்டு வருவதா விடுதலை?

தமிழன் என்றால் யார்?

அண்ணா சொன்னரே பார்ப்பனர் கள் தமிழை பேசினால் அவர்கள் தமிழர்களா? சீனிவாச சாஸ்திரி மிகச் சிறப்பாக வெள்ளைக் காரர்களைப் போல ஆங்கிலம் பேசக் கூடியர். அவர் ஆங்கிலத்தில் பேசுவதினாலேயே அவர் வெள்ளைக்காரர் ஆகிவிட முடியுமா? பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்று மறைமலை அடிகளாரே சொல்லியிருக்கின்றார்.

தமழன் என்றால் யார்? அண்ணா சொல்லுகிறார். மொழியால் தமிழன் வழியால் தமிழன் விழியால் தமிழன்

அவன்தான் தமிழன் என்று சொல்லியிருக்கின்றார். ஆரியர்கள் மொழியில் இலக்கியத்தில், இலக்கணத்தில் மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

ஆரியத்தின் ஊடுருவல் மனு தர்மத்தின் ஊடுருவல் நால் வகை ஜாதியை ஏற்படுத்திவிட்டனர். இசை யிலும் ஜாதியைப் புகுத்தி விட்டனர். உடைந்த எலும்பை உடைந்த எலும் புகளாக காட்டுகின்றவர்கள் தான் தந்தை பெரியார் - பேராசிரியர் ஆகியோர். தை முதல் நாள் கலைஞர் சட்டம் கொண்டு வந்தார்

தமிழர்களுக்குப் புத்தாண்டு தை முதல் நாளே என்று கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதை ஆரிய ஆதிக் கத்தார் முறியடிக்கப் பார்க்கிறார்கள்.

சித்திரை முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லுகின்ற ஆரிய பண்பாட்டை முறியடிக்க சென்னை பெரியார் திடலில் 3 நாள்கள் தை முதல்நாள் தான் தமிழர் களுக்குப் புத்தாண்டு என்பதை வலி யுறுத்தி பொங்கல் விழாவை கொண் டாட இருக்கின்றோம்.

இங்கு மட்டுமல்ல, நாடே தை முதல் நாளைத்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டாக கொண்டாட வேண் டும். இந்தத் தத்துவங்களை உங்களு டைய உள்ளத்தில் இரத்தத்தில், உணர்வில் ஏற்றிக் கொள்ளுங்கள். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப் பிட்டார் 6-1-2012

தமிழ் ஓவியா said...

எது தமிழர் திருநாள்?கலைஞர் பேட்டி


தமிழர்களுக்கு எது உண்மையான தமிழர் திருநாள் என்பது குறித் தும், நிவாரணப் பணி கள் குறித்தும் செய்தி யாளர்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டியளித்தார். புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி களில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் காரி லேயே பயணம் செய்து விட்டு, திருவாரூரிலி ருந்து புகை வண்டி மூல மாக சென்னை திரும்பிய தலைவர் கலைஞர் அவர் களை நேற்று அதிகாலை யில் எழும்பூர் புகை வண்டி நிலையத்தில் சந்தித்த செய்தியாளர் கள் கேட்ட கேள்வி களும், அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த பதில் களும் வருமாறு:-

செய்தியாளர் :- புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விட்டுதிரும்பியிருக் கிறீர்கள். தங்கள் சுற்றுப் பயணம்எவ்வாறு அமைந்தது?

ஆறுதல் இரு தரப்பிலும்

கலைஞர் :- என் னைப் பார்த்ததில் மக்க ளுக்கு ஆறுதல், பாதிக் கப்பட்ட மக்களை நேரில் பார்த்ததில் எனக்கு ஆறுதல்.

செய்தியாளர் :- அரசு நிவாரணப் பணி கள் மிகவும் மெத்தன மாக நடைபெறுகின் றன. மக்களுக்கு பால் கிடைக்கவில்லை.டீ கூட குடிப்பதற்கு அவர் களுக்கு வசதியில்லை. அரசு எந்த அளவிற்கு மெத்தனமாகச் செயல் பட்டுக் கொண்டிருக் கிறது?

கலைஞர் :- இந்த மாதிரியான காரியங் களில், இந்த மாதிரியான நேரங்களில் எந்த அர சாக இருந்தாலும், அந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று கருதுபவன் நான். எனவே அந்தப் பணியை முறையாகச் செய்திருக் கிறேன்.

செய்தியாளர்: - நிவாரணப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எப்படி செயல்பட்டிருக்கின்றன? அவர்களுக்கு நீங்கள் ஏதாவது கோரிக்கை வைக்கிறீர்களா?

கலைஞர்:- தன் னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப் போதே உதவிகளைச் செய்து தான் வருகின் றன. மேலும் அந்தப் பணிகள்தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த நிறுவனங்களையும் வேண்டுகிறேன்.
எது தமிழர் திருநாள்

செய்தியாளர் :- தமிழர் திருநாள் வரு கிறது. ஏற்கனவே நீங்கள் பொங்கல் திருநாளை யொட்டி தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழர் திருநாள் என்று சொல்லி யிருந்தீர்கள். தற்போது ஜெயலலிதா ஏப்ரல் மாதம் தான் தமிழர் திருநாள் தொடங்கு வதாக சொல்கிறாரே?

கலைஞர் :- தமி ழர்கள்தான் எந்த நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு உரிமை உடையவர்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் நாளை யொட்டி தமிழர் திருநாளாகக் கடைப் பிடித்த அதே தைத் திங்கள் முதல் நாளைத் தான் இந்த ஆண்டும் தொடர்ந்து கொண் டாடுவோம்.

செய்தியாளர் :- புயல், மழையினால் பாதிக்கப்பட்ட மக் களை முதலமைச்சர் நேரில் சந்திக்கவில்லை என்ற மனக்குமுறல் மக்களிடையே பெரு வாரியாக உள்ளது. ஒருவரைக்கூட பாதிக் கப்பட்டவர்களைச் சந் திக்காமல், ஹெலிகாப் டரிலேயே வந்து விட்டு பத்தே நிமிடங்களில் ஜெயலலிதா திரும்பி விட்டார் என்ற குறை பாடு மக்களி டையே இருக்கிறதே?
கலைஞர் :- அதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.

-இவ்வாறு செய்தியா ளர்களிடம் தலைவர் கலைஞர் அவர்கள் கூறி னார். 6-1-2012