மேல் நாட்டவர்கள் ஓடும் ரயில், பஸ், பறக்கும் ஏரோப்ளேன், நீரில் மிதந்து செல்லும் கப்பல் மற்றும் இது போன்ற எத்தனை எத்தனையோ வசதிகளை ஒலிபெருக்கி, ரேடியோ, டெலிபோன், டெலிவிஷன், மின்சார விளக்கு அதில் லட்சம், 10 லட்சம் காண் டல் பவர் என்பதாகவெல்லாம் கண்டு பிடித்துக் கொண்டு போகிறார்கள்.
மற்றும் நேற்று சொன்னார்கள், கெட்டுவிட்ட ஒரு பகுதி ஒருபுற இருதயத்தை ஆபரேஷன் செய்து எடுத்து விட்டு மனிதன் சவுக்கியமாய் இருக்கும்படி செய்கிறார்கள் என்றும், மற்றும் இதுபோன்ற எத்தனையோ அற்புதங்களையெல்லாம் செய்கிறார்கள் என்றும், இன்னும் சொல்லுகிறார்கள், மனிதனுடைய விஞ்ஞான வளர்ச்சி மனித சமுதாயத்துக்கு இறப்பே இல்லை என்கிற மாதிரியில் வந்துவிடும், என்கிற மாதிரி விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. நோய் வந்து உடல் நிலை சீர்கெட்டால் தானே மனிதன் சாகிறான். ஆதலால் நோயே வராமலோ அல்லது வந்த நோயைக் குணப்படுத்தி விட்டாலோ மனிதன் சாக வேண்டிய அவசியம் என்ன? என்கிற மாதிரியில் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஒருநாள் சாப்பாட்டுக்கு இவ்வளவு செலவும் பலவித வகையறாதிகள் என்கிற மாதிரி நிலைமையில்லாமல் எல்லா சத்துகளையும் மிளகு அளவுள்ள ஒரு மாத்திரையில் அடக்கி, அந்த மாத்திரை ஒன்று சாப்பிட்டால் போதும் என்கிற மாதிரியில் ரைட் போகிறது. இவ்வளவு தூரம் நாட்டில் விஞ்ஞானமும், அறிவும் வளர்ந்திருக் கிறது. இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறதே அதன் மூலம் பலப்பல புதுப் புதுப் பொருள்கள், வசதிகள் கண்டுபிடிக்கப்பட்டு இன்றைய தினம் நம்முடைய நடப்பிலும் உப யோகத்திலும் அனுபவிப்பிலும் வசதி யாக இருக்கிறதே. இவற்றில் ஏதாவது ஒன்றைக்கூட நாம் கண்டுபிடிக்க வில்லை. நம்மால் கண்டுபிடிக்கப் பட்டது என்று ஒன்றுகூட இல்லை. எவனோ எந்த நாட்டானோ, கண்டு பிடித்து கொடுத்ததை சும்மா நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோமே, ஒழிய நாமாகவே ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை.
நாம் கண்டுபிடித்ததெல்லாம் மேலே ஏழு லோகம் கீழே ஏழு லோகம் சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மூன்று கடவுள்கள் அவர்களுக்கு பெண்டாட்டி மார்கள், வைப்புகள், க்ஷத்திகள், கல்யாணம், குடும்பம், பிள்ளைக் குட்டிகள், குட்டிச்சாமிகள், பெரிய சாமிகள், பல லட்சம் கடவுள்கள், பல கோடி தேவர்கள் என்பதுதான். நம் முடைய அறிவு, போட்டி போட்டுக் கொண்டு இந்த காட்டுமிராண்டித்தனத் திலே சொல்கிறதே தவிர மனித வாழ்வு பற்றியோ அதன் மகத்தான பெருமை பற்றியோ அதற்கான வசதியைப் பற்றியோ சொல்லவில்லை. நீங்கள் பழைய புராணங்களையும் கடவுள் மத சாஸ்திரங்களையும் எடுத்துப் பார்த்தீர்களானால் இமயமலையோடு உலகமே முடிந்து விட்டது என்றுதான் இருக்கும் அதற்குமேலே ஒன்றும் சொல்லப்பட்டிருக்காது. இம்மலையைப் பார்த்தால் அதிலே அடர்ந்து நிற்கிற பனி சூரிய வெயிலிலே வெண்மையான காட்சி அளிக்க கண்டு அதை வெள்ளி மலையாக்கி வெள்ளியங்கிரியாக்கி சிவ கடவுள்வாசம் செய்வது அங்கேதான். கைலயங்கிரி என்று சொல்லி விட்டான் அதற்குமேலே அவன் புத்தி போகவே இல்லை. அந்த காலத்தில் புத்தி அவ்வளவுதான் என்றால் உலகத்தை பறந்து சுற்றுகிற இந்தக் காலத்திலும் அதை கைலயங்கிரி கடவுள் சேஸ்திரம் என்று கருதுகிறவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதோ தெரியவில்லை.
உலகமெல்லாம் வேகமாக வளர்ந்து வரும்போது சந்திர மண்டலத்தில் குடியேற முடியுமா? உயிர்களை உண்டாக்க முடியுமா? சாகாமல் தடுக்க முடியுமா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து அதிலே ஓரளவுக்கு வெற்றியும் அடைகிற காலத்திலா, நாம் ஒரு குழவிக் கல்லில் ஒரு டன் பாரமுள்ள விறகை அடுக்கி, அதற்கு தேர் என்று சொல்லி 400, 500 பேர் சேர்ந்து இழுத்துக் கொண்டு திரிவது கடவுளுக்கு கல்யாணமாம். தேவடியாள் வீட்டுக்கு கூட்டிச் செல்வது போன்ற திருவிழாக்களை நடத்தி கொண்டு இருப்பது இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திலே நாம் இன்னமும் இருப்பதா? இந்த இருபதாம் நூற்றாண்டிலுமா பாடுபடுகிற ஒரு ஜாதி, பாட்டாளி மக்கள் ஜாதி, முதல் ஜாதி, பஞ்சம ஜாதி பாடுபடாமல் ஊரான் உழைப்பிலே சாப்பிடுகிற ஒரு ஜாதி, பிராமணன் உயர்ந்த ஜாதி மகன்? இதுவா நமக்கில்லையா? இப்படியே தானா இருக்க வேண்டும்? இந்த மூடத் தனங்களுக்கும் காட்டுமிராண்டித்தனங் களுக்கும் நிலையாக இருப்பது பார்ப்பானுக்கு லாபமாக இருக்கலாம். அவனுடைய வாழ்வுக்கு லாபத்திற்கு வசதியாக பார்ப்பான் வேண்டுமானால் இந்த கல்லுச்சாமி கடவுளை கட்டிக் கொண்டு அழலாம்? நம் பிரகஸ்பதி களும்கூட சேர்ந்து கொண்டு ஏன் ஜே போட வேண்டும்?
வேண்டுமே! இந்த சாமிகளாலும், கடவுள்களாலும், இந்த நாடு ஒரு இஞ்ச் முன்னேறியிருக்கிறது என்று சொல்ல வேண்டுமே! ஒரு இழவும், பிரயோசன மில்லை. பணமும் புத்தியும் பறிபோவது தவிர இந்த காலத்தில் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?
--------------------------- 26.2.1953 அன்று அரக்கோணம் - திருமால்பூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை
2 comments:
எங்க சாமி சிலைய வந்து பால் குடிப்பார், படமா வந்து கண்ணில இருந்து இரத்தம் வடிப்பார், பத்து தலை பாம்பை பிறக்க வைத்து தான் வர போவதாக அறி குறி கொடுப்பார்......................... எவளவு பண்ணுறார். உங்களுக்கு தெரியாது ஏன்னு சொல்லுங்க இதை எல்லாம் யார் கண்ணு புடிச்சது ?????????? பிள்ளையார் சிலை பால் குடிச்சதை கண்டு புடிச்சது யார்? பூனை குறுக்கால போனா ,பல்லி சொன்னா பலன் பார்கிறது இப்படி எவளவோ எங்க கண்டு புடிப்பு இருக்கு........
Click here:
http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html
காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!
Post a Comment