Search This Blog

1.3.15

திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதாயிற்று?- பெரியார் விளக்கம்திராவிடர் வார்த்தை விளக்கம் - பெரியார்
தந்தை பெரியார்தலைவர் அவர்களே! மாணவர்களே!


இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டி யிருக்கிறது.

ஆனால், படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிவிட்டது.


உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல் லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர்களா கிறார்கள்.


உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வானசாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவை களில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, இராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக்கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர் களுக்கு சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாதது மான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ,பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர் களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. 


தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதி களுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கரவர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப்படிப்பாகப் போய்விட்டது.


படிப்பால் ஏற்படும் பயன்

இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள் ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவ தால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள் உங்களுக்கு உபாத்தி யாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதி னாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங் களில் விளக்கம் விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படி யாகவும் மாணவர்கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போலக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல் லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியான தும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண் பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய் யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.


திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக் குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென் றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.


இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர் களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திரா விடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத் தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவி டத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத் தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க் கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசி யல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகி யவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என் பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?
நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாத தினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப் பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்க வில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங் களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக்கில் லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானா லும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.
அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிரா மணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?


சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். 


ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான
குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டு
களும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக் கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. 


ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறைய னாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரிய ருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும்.


 உதார ணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. 


பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக் கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்து தான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின் பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக் காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப் படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்ட வைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். 


----------------------09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு- குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

19 comments:

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் பொது பட்ஜெட்:

எதிர்பார்த்தவை தராமல் ஏழை, எளிய - நடுத்தர
மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது வேதனைக்குரியது

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
மத்திய அரசின் இந்த பொது நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) எதிர்பார்த்தவற்றைத் தராமல், ஏழை, எளிய - நடுத்தர வர்க்க மக் களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது வேதனைக்குரியதாகும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி அவர்களது தலைமையில் பொறுப் பேற்று 9 மாதங்களான நிலையில், அவரது நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் மக்களவையில் இரண்டாம் முறை பட்ஜெட் நேற்று (28.2.2015) அறிவித்துள்ளார்.

முதல் முறை அறிவித்தது முழுமையான ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் அல்ல; இதுதான் முழு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் ஆகும்.

ரயில்வே துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அளித்த பட்ஜெட்டும் ஏழை, எளிய, மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே இருந்தது.

ஆனால், சில ஜிகினா வேலைகள் - அறிவிப்புகள் மூலம் - ஒப்பனை அதிகமாக செய்யப்பட்டதாக இருந்து இரயில்வே அமைச்சரால், தமிழ் நாட்டிற்குப் பட்டை நாமம் சாத்தும் வகையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டங்கள் - பாதிக் கிணறு தாண்டியதைப் போல பாதியிலேயே கைவிடப்பட்ட திட்டங்களாகின! முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எடுக்காமலேயே கைவிடப் பட்டன!

ஏமாற்றப்பட்ட பட்ஜெட்

இந்த பொது பட்ஜெட்டிலும் எதிர்பார்த்தவை தராமல் ஏமாற்றப்பட்ட பட்ஜெட்டாகவே ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கு அமைந்துள்ளது வேதனைக்குரிய தாகும். டீசல், பெட்ரோல் விலை - உலகச் சந்தையில் 145 டாலர் விலை 45 டாலராக குறைந்துள்ள நிலையில் இங்கு (ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 3 ரூபாய்க்கு மேல்) ஏற்றப்பட்டுள்ளது!

விலைவாசிகள் மேலும் ஏறும் அபாயம்

மற்ற விலைவாசிகள் இதன் மூலம் மேலும் ஏறும் அபாயமும், டீசல் பம்ப் செட் மோட்டார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்ற வர்களையும் வேறு பல தரப்பட்ட நடுத்தர மக்களையும் இது வெகுவாகப் பாதிக்கும் என்பது உறுதி.
சேவை வரிகளை மேலும் பல துறைகளுக்கு விரிவாக் கியதோடு, 2 விழுக்காடு கூடுதலாக தூக்கி உயர்த்தி யுள்ளதும் மேலே சொன்ன பல தரப்பினரையும் பாதிப்பது உறுதி.
வருமான வரி வரம்பு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாயிலிருந்து மேலும் உயர்த்தி அறிவிப்புகள் வரலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பு - ஏமாற்றத்தையே தந்துள்ளது.
அதில் மாறுதல் - கூடுதல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. முதுகுடி மக்களுக்கு அளித்துள்ள சலுகை ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.

பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சி

அதே நேரத்தில் பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சிதான் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என் பதை இந்த பட்ஜெட் உலகுக்கே பிரகடனப்படுத்தியுள்ளது!

பெரும் கம்பெனிகள் செலுத்தும் வரி 30 சதவிகிதத்தி லிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு அவர்களது மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ள பட்ஜெட்டாக உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்?

கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை அது சமுதாய முதலீடு என்ற தத்துவத்திற்கு ஆதாரமாகும். ஆனால், அது பெரும் அளவில் ஒதுக்கப்படவில்லை. 68,000 கோடி என்பதுதான் கல்வி வளர்ச்சி என்ற யானைப் பசிக்கு இது வெறும் சோளப் பொறிதான்!

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றும் தனியார் துறையில் அரசு போட்டிருந்த பங்குகளையும் விற்றும், பற்றாக்குறைகளை ஈடு கட்ட முயன்றுள்ளார்கள்! பொன் முட்டையிடும் வாத்து கதை தான் இது!

கருப்புப் பணம் பற்றி கடும் விதிகள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், செயல்பாட்டைப் பொறுத்துதான் அதன் வெற்றி - தோல்வி அமையக் கூடும்.

விரிவான விளக்கம் பிறகு.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

1.3.2015

Read more: http://viduthalai.in/e-paper/97091.html#ixzz3T8I1Kr42

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சிவன்

மார்க்கண்டேயனை - அவன் ஆயுள் முடிந்த நிலையில் எமன் பாசவலையை வீசினான். அந்த நேரத்தில் சிவனை மார்க்கண்டேயன் கட்டி அணைத்ததால் எமனைக் காலால் உதைத்து விரட்டி னான் சிவன் என்றால் இதில் எமன் செய்தது தவறா? (அவன் கட மையைத்தானே செய் தான்?) சிவன் செய்தது சரியா?

Read more: http://viduthalai.in/e-paper/97093.html#ixzz3T8IQQ5To

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம்
நிதிஷ்குமார் குறிப்பிடுகிறார்

மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான பங்கீட்டு தொகையை மிகக்குறைந்த அளவில் பெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. கடந்த 28-இல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளு மன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில், மாநிலங் களுக்கு வழங்கப்படும் பங்குத்தொகையை 10 சதவீதம் உயர்த்துவதாக ஜெட்லி அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.

ஆனால், மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை உயர்த்தியபோதும், நிதியைப்பெறும் வளர்ச்சி வீதத்தில், தழிழகம், தெலுங் கானாவைத் தொடர்ந்து, பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்ப தாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது: மத்திய வரிவருவாயிலிருந்து, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட் டில் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட மத்திய வரி வருவாய் பங்கீட்டை பெறுவதில் தமிழகத் திற்கு 25.7 சதவீத வளர்ச்சி மட்டுமே கிடைக்கும். இந்த மாநிலம், நாட்டிலேயே மிகக்குறைந்த சதவீத பங்கீட்டு உயர்வைப்பெறும். இதற்கு அடுத்தப்படியாக தெலுங் கானா, 30.9 சதவீதமும், பீகார் 37.3 சதவீத வளர்ச்சியும் பெறும். இந்த மூன்று மாநிலங்களும், நாட்டிலேயே மிகக்குறைந்த வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலம் 93.9 சதவீதமும், ஜம்மு - காஷ்மீர் 80.6 சதவீதமும் இதற்கு அடுத்தப்படியாக மத்தியபிரதேசம் 64.7, அரியானா 60.3, குஜராத், 57.7 உள்ளிட்ட மாநிலங்களும் அதிகப்படியான மத்திய வரி வருவாய் பங்கீட்டு வளர்ச்சியைப் பெறவுள்ளன. மத்திய அரசின் இந்த போக்கு ஓட்டு வங்கி அரசியலை வெளிப்படுத்து கிறது.

மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். விரை வில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/97182.html#ixzz3TK8m2Aiy

தமிழ் ஓவியா said...

புண்ணியம்

ஏகாதசி என்றும் பட்டினி விரதம் என்றும் கொட்டி அளக்கிறார் களே - அன்றாடம் கோடிக் கணக்கான மக்கள் வறு மையில் உணவின்றிப் பட்டினி கிடக் கிறார்களே

அவர்களுக்கெல்லாம் புண்ணியம் கிடைக்குமா?

Read more: http://viduthalai.in/e-paper/97184.html#ixzz3TK94MSEV

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாதுகாப்பு

செய்தி: இந்தியாவில்தான் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
- யோகி ஆதித்யநாத் எம்.பி., (பிஜேபி)

சிந்தனை: அதனைக் கெடுக்கத்தானே இவர் வன் முறையைத் தூண்டும் வார்த் தைகளை அவ்வப்போது உதிர்த்துக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97185.html#ixzz3TK9Dszud

தமிழ் ஓவியா said...

தலை தப்பாது!

உடலுறுப்புகள் மாற்றம் என்ற மருத்துவ விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வரு கிறது. இதுவரை தலை மாற்று அறுவை சிகிச்சை வரவில்லை. 2017இல் தலை மாற்று அறுவைச் சிகிச்சையும் நடை முறைக்கு வருமாம். அன் றைக்கே பிர்மாவின் தலையைக் கிள்ளினார் சிவன் என்று கூறி, தலை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட முதல் மருத்துவர் எங்கள் சிவன் தான் என்று பிரதமர் சொல்லு வாரோ என்னவோ!

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9axpBY

தமிழ் ஓவியா said...

அன்று சொன்னது

வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட வேண்டும் என்று அன்று எதிர்க்கட்சி யாக இருந்தபோது சொன்ன அருண்ஜேட்லிதான் இன் றைய நிதி அமைச்சர் - ஏன் அதனைச் செயல்படுத்தவில் லையாம்? அரசியல் பேச்சு பொழுது விடிந்தால் போச்சோ!

Read more: http://viduthalai.in/e-paper/97188.html#ixzz3TK9jsG71

தமிழ் ஓவியா said...

அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?
(குடிஅரசு, 12.5.1935)

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் முயற்சி வரவேற்கத்தக்கது


தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா அவர்கள் மாநிலங்களவையில் திருநங்கைகளின் நலன்களைப் பேணும் வகையில் தனி நபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது அவர் அவையில் தெரிவித்த கருத்துக்கள் சிறப்பானவை;-

மனித குலம் தோன்றியது முதல் பல்வேறு கலாச்சாரம், இனம் ஆகியவற்றில் திருநங்கைகள் பிரதிபலிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் அந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் மனம், உடல், பாலின ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றால் அதைப் பதிவு செய்ய அதிகாரிகள் தயங்கும் நிலைதான் நம் நாட்டில் நிலவுகிறது. சில இடங்களில் திருநங்கைகள் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுகின்றனர். இதனால் கல்வி, சட்ட உதவி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுவதுடன் சிலர் வீடற்ற நிலையில் அவதிப்படுகின்றனர். பொது இடங் களில் அவர்களுக்கென பிரத்யேக கழிவறைகள்கூட கிடையாது. அவர்களின் வாழ்வாதாரத்தையும், நிலை யையும் சீர்படுத்த பொறுப்புள்ள உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு யார் அதைச் செய்ய முற்படுவர்?

திருநங்கைகளுக்கு நாட்டில் மதிப்பையும் பாலின பிரிவினை இல்லாத வாழ்க்கையையும் உறுதிப்படுத்த இந்த மசோதாவை முன்மொழிகிறேன். அவர்களுக் கான நலத் திட்டங்களை வகுத்து அவை செயல்படுத்தப் படுவதை தேசிய, மாநில ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

திருநங்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். 2008-இல் தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது திருநங்கைகளுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டது. பாலினத்தை மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு மானியமும் வழங் கப்பட்டது. ஆனால், அவை இப்போதும் வழங்கப் படுகிறதா எனத் தெரியவில்லை! திருநங்கைகளின் நலன்களைக் காக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் இந்த மசோதாவைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கக் கூடிய இயக்கம் திராவிட இயக்கம்; அந்த வகையில் சிவா அவர்களின் முயற்சியும் பேச்சும் வரவேற்கத் தகுந்தவை.
அரவாணிகள் என்று கூறப்பட்டு, கேலிக்குரியவர் களாக சமுதாயத்தில் ஆக்கப்பட்டவர்களுக்கு திரு நங்கைகள் என்ற அழகிய பெயரை அளித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொன்னதெல்லாம் சாதாரணமானதா?

கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் புரட்சி மாநாட்டில் திருநங்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது (13.4.2013).

அம்மாநாட்டில் நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கை அழைக்கப்பட்டுச் சிறப்பு செய்யப் பட்டார். திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

ஊடகத்தில் பகுத்தறிவுப் பணியாற்றி வந்த ரோஸ் அவர்கள் அழைக்கப்பட்டு பெரியார் திடலில் பாராட்டப்பட்டார்.

திருநங்கைகள் தன்மானத்தோடும், மற்றவர்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்று நினைப்பதும், அதற்கான திட்டங்கள் தீட்டுவதும் ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்.
தி.மு.க. ஆட்சியில் மாநிலம் அளவில் மேற்கொள் ளப்பட்ட முயற்சியும் அளிக்கப்பட்ட அங்கீகாரமும், தீட்டப்பட்ட திட்டங்களும் இந்திய அளவில் மேற் கொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சிவா அவர்கள் இப்படியொரு மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்குள்ளும் தேவையில்லாமல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மாநிலங்களவையில் மூக்கை நுழைத்திருப்பது தேவையில்லாததாகும்.

இன்றைக்கும்கூட திருநங்கைகள் இரயில்களில் ஏறிப் பயணிகளிடம் பிச்சை எடுப்பது போன்ற சுய மரியாதைக்கு எதிரான செயல்பாடுகளுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது அவர்களுக்கான இழிவாகாது; இதற்குக் காரணமான சமுதாயத்தின் இழிவாகும்; இந்த நிலைக்குச் சமுதாயமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

கட்சி அரசியல்களுக்கு அப்பால் நின்று, சிவா அவர்களால் முன்மொழியப்பட்ட மசோதாவை நிறைவேற்றிக் கொடுத்து மூன்றாவது பாலினத்தை சுயமரியாதையோடு கம்பீரமாக வாழ வைத்தால், அது நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகப் பெரிய தலை நிமிர்வாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/97196.html#ixzz3TKAAadk1

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் எப்படி?

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை சிறீபெரும்புதூர் (வழி பூவிருந்தவல்லி)
2. ஆவடி- சிறீபெரும்புதூர்
3. இராமேசுவரம்-தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்-கடலூர் (வழி புதுச்சேரி)
6. மயிலாடுதுறை-திருக்கடையூர் - திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை-ஓசூர் (வழி கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்-மேட்டூர்
9. ஈரோடு-சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம்-பெங்களூரு
11. மொரப்பூர்-தருமபுரி (வழி முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்-காட்பாடி
14. திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
15. மதுரை-கோட்டயம்
16. அரக்கோணம்-திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்-ஆத்தூர் (வழி அரியலூர்)
18. திண்டுக்கல்-கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி பூவிருந்தவல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்
2. பழனி- ஈரோடு
3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை
4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. சிறீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி
6. மதுரை- போடி 7. திண்டுக்கல்- கோவை

இரு வழிப்பாதைப் பணி

1. திருச்சி- தஞ்சாவூர்
2. இருகூர்- போத்தனூர்

Read more: http://viduthalai.in/page-2/97160.html#ixzz3TKAecBIT

தமிழ் ஓவியா said...

செய்தியும்-சிந்தனையும்!

உயிருடன்...!

செய்தி: அமர்நாத் யாத் திரை முன்பதிவு தொடங் கியது!
சிந்தனை: நோய் நொடியின்றிப் பக்தர்கள் உயிருடன் திரும்ப வாழ்த்துகிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/97250.html#ixzz3TQUZMGxL

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் நாட்டில் முஸ்லீம்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? சிவசேனா பாம்பு கக்கும் நஞ்சு

மும்பை, மார்ச் 4_ இந்து நாட்டில் முஸ்லீம்களுக்கு எதற்கு சிறப்பு சலுகைகள், ஒதுக்கீடுகள் அவர்களுக்கு சிறப்பு சலுகை வேண்டு மென்றால் பாகிஸ்தானுக் குச் செல்லட்டும் என்று சிவசேனா தலைவர் உத் தவ் தாக்கரே கூறியுள் ளார். கடந்த வெள்ளியன்று நாக்பூரில் நடந்த சிறு பான்மையினர் நல அமைப்பின் கூட்டம் ஒன் றில் பேசிய மஜ்லீஸ் கட்சி யின் தலைவரும் அய்த ராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ் ஸாதீன் ஓவைசி பேசும் போது சிறுபான்மையினர் பெரும்பாலும் சமூகத்தில் மிகவும் மோசமான நிலை யில் உள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் அவர் களை வந்தடைவதில்லை. அவர்கள் பெரும்பான்மை சமூகத்தினரால் புறக் கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு என்று சிறப்புச் சலுகை கள் இட ஒதுக்கீடு வேண் டும். தற்போது சில மாநிலங் கள் இஸ்லாமியர்களுக் கான ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தியுள்ளன. இதை நாடுமுழுவதும், நடைமுறைப்படுத்தவேண் டும். இதன் மூலம் இஸ் லாமியர்களின் வாழ்க்கை யில் முன்னேற்றம் காணும் என்று பேசியிருந்தார்.

சிவசேனா ஏட்டின் தலையங்கம்

இதற்கு பதிலடி கொடுப்பதுபோல் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரி கையில் தலையங்கம் எழுதியிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த தேசம் இந்துக்களின் தேசம் இங்கு உள்ளவர் கள் அனைவரும் இந்து உணர்வுடன் இருக்க வேண்டும், முஸ்லீம்கள் தங்கள் மதத்தை நாட்டை விட முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். வந்தே மாதரம் பாடச்சொன் னால் மதவிரோதம் என் கிறார்கள். பல்வேறு நலத் திட்டங்களை முன்வைத்த போதிலும் அவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகள் நலத்திட்டங்களை ஏன் எதிர்பார்க்கிறார்கள். இந்துக்கள் பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?

அப்படி அவர்களுக்கு என்று சிறப்புச் சலுகை கள் வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக் குச் செல்லவேண்டும். தீவிரவாதிகளால் எத் தனை இந்துக்கள் கொல் லப்பட்டுள்ளனர். இந்தக் காயம் சாமானியத்தில் ஆறாது. எந்த ஒரு சலு கையும் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக் கட்டும், முஸ்லிம்களுக்கு என்று சிறப்புச் சலுகை களை யாரும் கேட்கக் கூடாது. இனிமேலும் பொது இடங்களில் இது போன்ற கோரிக்கைகளை முஸ்லீம் தலைவர்கள் வைக்கவேண்டாம் அரசி யல் நடத்த முஸ்லீம் தலைவர்களுக்கு இது போன்ற கோரிக்கைகளை வைத்து தான் பிழைப்பு நடத்தவேண்டும் போலி ருக்கிறது. இவர்கள் என் றாவது ஏழ்மை நிலையில் உள்ள இந்துக்கள் பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?

இவர்களுக்கு தேசத்தின் இதர மக்களைப் பற்றி கவலையில்லை. ஆனால், ஏழ்மையில் வாழும் முஸ் லிம்களுக்கு மட்டும் சலுகை வேண்டும் என்று பேசுகின்றனர் என சாம்னா தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/97249.html#ixzz3TQUhGfen

தமிழ் ஓவியா said...

21% முசுலிம்கள்

இந்தியா முழுமையும் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட வர்கள் 57,936. இதில் முசுலிம்கள் மட்டும் 21.30 விழுக் காடாம்.

44 லட்சம் பேர்

2013-2014 இல் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதோர் 44,07,193 பேர்கள்.

3869

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் களுக்கான இடங்கள் 3869.

அரசு செலவில் தனியார் மயமா?

20 விமான நிலையங்கள் ரூ.27,000 கோடி செலவு செய்து நவீன மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமான நிலை யங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் வேலையும் மறுபுறம் நடந்து வருகிறது. ஆக, அரசு செலவில் நவீனப்படுத்தி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஆகா, தனியார் நிறு வனங்கள்மீது பி.ஜே.பி. அரசுக்கு என்ன கரிசனம்!

Read more: http://viduthalai.in/e-paper/97251.html#ixzz3TQUrM9Ni

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி உண்ணவும் தடையா?

தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?

ஒத்த கருத்துள்ளோர் கூடி இந்துத்துவா கோட்பாட்டை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

மாட்டுக்கறி உண்பதைத் தடை செய்துள்ள மகாராட்டிர அரசின் நடவடிக்கையை ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டு அரசு இயங்குகிறது.

பா.ஜ.க. முதல் அமைச்சராக பாட்னாவிஸ் என்ற (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) பார்ப்பனர் தலைமையில் அங்கே நடைபெறும் அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாட்டிறைச்சியைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது அதற்குக் குடிஅரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதே மகாராட்டிரத்தில் முந்தைய தபோல்கர், அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீரிய பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மத வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

கோமாதா - இந்துத்துவா கொள்கைக் கோட்பாடே!

ஹிந்துத்துவா கொள்கை அடிப்படையில் கோமாதா குல மாதா, கோ. பூஜை, பசு மாட்டு வணக்கம் இந்த அடிப்படையில்தான் அங்கே மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுத் தொட்டிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு - வருவாய் - இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்!

கோதானம், கோ பூஜை என்ற பசு மாட்டு வணக்கம் என்பவை ஆரிய - சனாதன இந்து தர்மமே! இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஆதர்ச புருஷ ராக - வழிகாட்டியாகக் கொள்ளும் விவேகானந்தர்கூட ஏற்கவில்லை என்பது அவரது கடுமையான தாக்குதல் - நீங்கள் மாட்டுக்குப் பிறந்த பிள்ளைகளா? என்றும், தாயின் ஈமச் சடங்கை, பிள்ளைதானே செய்ய வேண்டும்? நீங்கள் கோமாதா என்று கொண்டாடும் பசு மாட்டுக்குச் செய்கிறீர்களா? என்று கேட்டுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க) பதில் உண்டா?

உணவுப் பழக்கம் தனி மனிதர் உரிமை

தமிழ் ஓவியா said...

உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை - பன் மதங்களும், பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டமெனும் நம் நாட்டில் ஒரு மதக்காரர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள்; தத்தம் கடவுளுக்கும் வைத்துப் படைக்கிறார்கள். இன்னொரு மதக்காரர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்; பன்றி இறைச்சி சாப்பிடுவ தில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளும் பழக்க வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க மக்கள் ஜனநாயகத்தில் இயங்கும் அரசுக்கு எவ்வகையில் உரிமை உண்டு?
வைணவர்களில் சிலர் வெங்காயத்தைக்கூட உண்ண மாட்டார்களே!

காய்கறிகளில்கூட வைணவ மதத்தவர் வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலியவற்றைத் தவிர்த்து விடுவர். அதை வெட்டினால் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் போல் காட்சியளிக்கிறதாம்! எனவே சாப்பிடக் கூடாது என்கின்றனர். அத்தகையவர்கள் சத பத பிரமாணத்தில், மாட்டிறைச்சியை பசு மாட்டின் பல பாகங்களை யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி அவிர் பாகம் என்று கூறி ருசித்துச் சாப்பிட்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!

வால்மீகி இராமாயணத்தில், காட்டிற்குச் சென்ற இராமன் இறைச்சியைத் தின்று பல வகை மது வகைகளை குடித்ததாக எழுதப்பட்டுள்ளதை, எவரே மறுப்பர்?

சுரர் என்ற பெயரே ஆரியர்களுக்கு சுரபானம், சோமபானம் குடித்ததினால் வந்த பெயர்தானே!

புத்தருக்குப்பின் வந்த மாற்றம் - பின்னணி என்ன?

புத்தரின் கொள்கையோ கொலைகளை எதிர்த்தது - உயிர்க் கொலையை எதிர்த்த பிறகு அவரது செல்வாக்கு உயருவதைத் தடுக்கவே, ஆரியப் பார்ப்பனர் பின்னாளில் இந்த புலால் - இறைச்சி மறுப்பும், காய்கறி உணவுப் பழக்கத்தையும் ஏற்றனர் என்பது வரலாறு.

(ஆதாரம்: திரு டி.எம். நாயர் எழுதிய ஜிhe Dynamic Brahmin என்ற நூல்) அம்பேத்கர் எழுதிய நூலில் Who are the untouchables, why they are untouchbles என்ற நூலில், ஆரியர்கள் ஆதி காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்டவர்கள் என்பதை சமஸ்கிருத நூலான சத பத பிராமணம் போன்ற நூலில் உள்ளதை எடுத்துக்காட்டி புத்தருக்குப் பின்பே அவர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கிடவே இந்த இறைச்சி எதிர்ப்பு கோமாதா - பசுவதைத் தடுப்பு என்ற துருப்புச் சீட்டை இறக்கினர்!

எவரே மறுக்க முடியும்? எருமை மாடு என்ன பாவம் செய்தது? பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு - காரணம் எருமை கறுப்பு, பசு வெள்ளை - இதிலும் வருணாசிரமக் கண்ணோட் டமா? பால் எல்லாம் வெள்ளைதானே! இன்னும் கேட்டால் எருமை அதிகமாக அல்லவா பால் தருகிறது?
உலகம் முழுவதும் பெரும்பாலோர் உண்ணும் சத்துணவு மாட்டிறைச்சியே! மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும் பான்மை மக்கள் தங்களது முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர்.

இங்கு -நம் நாட்டில் அது ஏழைகளுக்கு எளிய விலைக் குக் கிடைக்கும் - உணவாக இருக்கிறது, சத்துணவாகவும் உள்ளது.

இதைத் தடுக்கலாமா? மதவெறியைக் காட்டலாமா?

இந்த அடிப்படை உரிமையை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

1972இல் தந்தை பெரியார் இதை வெகு காலத்திற்கு முன்பே சொன்னார். திராவிடர் கழகமும் ஆந்திர நாத்திகர் கோராவும் சேர்ந்து ஆங்காங்கு மாட்டுக்கறி - பன்றிக் கறி விருந்தும் நடத்திப் பிரச்சாரம் செய்தோமே! (மீண்டும் தேவையானால் செய்யத் தயார்)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளேகூட இந்த உணவுப் பழக் கத்தில் தலையிடுவதற்கு விரோதமாகத்தான் வந்துள்ளன.

எனவே, மும்பையில் இந்தச் சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் போராட வேண்டும்.

அதே நேரத்தில் வீதி மன்றத்திலும், பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி, அற வழியில் போராட முன் வர வேண்டும் மகாராஷ்டிரத்தில்.

ஒத்த கருத்துள்ளவர்கள் போராட முன் வருக!

இது அங்கே வந்த தீ என்று நாமும் அலட்சியமாக இல்லாமல், இங்கும் பரவ எவ்வளவு நேரம் ஆகும் என்ற உணர்வுடன், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் - ஒத்த கருத்துள்ள அத்தனை அமைப்புகளும் (நாம் முன்பே இப்படி போராடியுள்ளோம்).கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

5.3.2015, சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/97302.html#ixzz3TVqojxfb

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

Read more: http://viduthalai.in/page-2/97291.html#ixzz3TVrgElcB

தமிழ் ஓவியா said...

இந்துத்துவா வெறி கொடி கட்டிப் பறக்கிறது
மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு தடையாம்!
மீறினால் 5 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமாம்


மும்பை, மார்ச் 5_ மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்ப னைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இம்மாநிலத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து 1976-ஆம் ஆண்டு மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. என்றாலும் எருதுகள் மற்றும் காளைகளை கொல்வதற்கு, தகுதிச் சான்றின் அடிப்படையில் அனுமதி தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1995ஆ-ம் ஆண்டு பாஜக சிவசேனா ஆட்சியின்போது, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி பசுக்கள் மட்டுமின்றி, எருதுகள் மற்றும் காளைகளைக் கொல்வதற்கும் தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்நிலையில் 19 ஆண்டு களுக்குப் பிறகு இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்கியுள்ளதாக மகாராஷ் டிர ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் மூன்றாம் தேதி தகவல் அனுப்பியது.

இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் பசுக்கள், காளைகள் மற்றும் எருதுகள் இறைச்சிக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

என்றாலும் எருமைகள் இறைச் சிக்கு இந்த சட்டம் அனுமதி வழங்கு கிறது. குறைந்த தரம் கொண்டதாக கருதப்படும் எருமை இறைச்சி, இம்மா நிலத்தில் மொத்த இறைச்சி விற்ப னையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் மகாராஷ் டிரத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும், பிற இறைச்சிகளின் விலை உயரும் என்றும் மாட்டிறைச்சி விற் பனையாளர்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மகா ராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப் புதல் அளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி. பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிதர்சனம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/97294.html#ixzz3TVrqXMwu

தமிழ் ஓவியா said...

கொஞ்சம் யோசிக்கலாமே!


வடநாட்டுத் தலைவர்களைப் போல தமிழ்நாட்டுத் தலைவர்களும் நட்புடன் பழக கற்றுக் கொள்ள வேண்டும்! என்பதற் கான ஆசிரியரின் அறிக்கை சமீபத்தில் விடுதலையில் வெளியானது. மிகவும் அரு மையான அறிக்கை. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.

கொஞ்ச காலமாகவே இதுபோன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. ஆனால் எழுதத்தூண்டியதில்லை குறிப் பாக அறிவாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் நட்புடன் நடந்து கொள்ளும் பழக்கமின்மை காரணமாக நீண்ட நாள் இருப்பில் கிடந்த முட்டை அழுகிப் போவதுபோல ஆகிவிடுகிறார்கள்.

வறட்டுக் கவுரவம் தேவையில்லை சுக, துக்க நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள். அனுபவம் மிக்க நம் ஆசிரியரின் இவ்வறிக்கையினை வயது அனுபவம் பார்க்காமல் ஒரு அறிவுரையாக எண்ணி, எல்லா தமிழ்நாட்டுத் தலைவர் களும் படித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழகுவதனால் ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும் வாக்கு மாறிப்போய் விடாது. ஏனெனில் உங்களின் மனம் விட்டுப் பேசும் தன்மையினால் இன்னும் செல்வாக்கு கூடிக்கொண்டேதான் போகும். யார் மீதும் யாருக்கும் நிரந்தர கோபம் இல்லை. கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள் கருத்துமாறுபாடு உள்ள ஒருவருடன் பழகு வதனாலோ, பேசுவதனாலோ மாறிவிடப் போவதில்லை.

சமீபத்தில் எங்கள் ஊராட்சியில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் விழாவில் நான்தான் கேக் வெட்டினேன். அதிமுக தோழர்கள் நம்மீது கொண்ட பற்றும், பாசமும் இதற்கு ஒரு சான்றாகும். இதனால் நான் என்ன அதிமுக கட்சிக்கா சென்று விட்டேன்?

கொள்கைப்பற்று ஒருவனுக்கு வந்து விட்டால் எக்காலத்திலும் எந்தச் சூழ் நிலையிலும் கருத்து மாறமாட்டான். இப்பெரியார் தொண்டர்களுக்குப் புரிந்த இந்த எளிய விளக்கம், உலகமே சுற்றிவரும் நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- கல்மடுகன்

Read more: http://viduthalai.in/page-2/97297.html#ixzz3TVrxmrIZ

தமிழ் ஓவியா said...

மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்!

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முதல் பெண் பெற்ற தாய் ஆவார். அடுத்து உறவினர்களில் சிறப்பிடம் பலருக்கும் பாட்டிகளாக இருப்பார்கள். அமெரிக்காவில் அன்னையர் நாள் மிகவும் சிறப்பானது.

என்னுடைய வாழ்க்கையில் அப்பாவின் தாயார் அப்பாயி பாப்பாத்தி அம்மாள் மிகவும் முக்கிய இடம் வகித்தவர். 13 ஆவது வயதிலேயே மணமுடித்துப், பெரிய குடும்பத்தில் பலருடன் வாழ்ந்து, சிறப்பாக வழிகாட்டி ஊருக்கே ஒரு ஆலமரமாகத் திகழ்ந்தவர். தாத்தா அய்ம்பது வயது போலவே புற்று நோயால் இறந்த போது அவர் சொன்னது, சொத்தெல்லாம் போனாலும் படிக்கவைத்துவிடு என்பதாம். அதை முடிந்த அளவு நிறைவேற்றி வைத்தவர்.

தி.க., திமுக, காங்கிரசு என்று இருந்த தனது பிள்ளைகளை அரசியல் வீட்டிற்கு வெளியே இருக்கட்டும் என்று கண்டிப்புடன் சொன்னவர்.எனக்கெல்லாம் காலையில் பணம் கொடுத்து மாலை வாங்கிய புத்தகம், வாங்கிய கட்டணத் தாளைக் காண்பித்து மீதியை ஒழுங்காகக் கொடுத்து பின்னர் அவர் தரும் சில்லறையைப் பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்புடன் வளர்த்தவர்.

இரண்டு பிள்ளைகள் மட்டுமே கல்லூரி செல்லவைக்க முடிந்த ஏக்கத்தை அத்தனைப் பேரப்பிள்ளைகளையும் கல்லூரியில் படிக்க வைத்த பெருமை அவரையே சேரும். நான் மருத்துவப் படிப்பை முடித்துப் பயிற்சி மருத்துவராக இருந்து அவரது புற்றுநோய்க்கு முடிந்ததைதைச் செய்ததைப் பெருமையாகக் கருதியவர்.

அவருடைய 45 ஆவது நினைவுநாள் மார்ச் 4. அதை நினைவு கூரவும், உலகப் பெண்கள் நாளைக் கொண்டாடவும், நமது தமிழின உடன் பிறப்புக்களை உற்சாகப்படுத்தவும் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுடன் உணவு உன்பதற்கு ஏற்பாடு செய்து மகிழ்வுடன் கலந்துகொள்கின்றோம்.

நமது ஒவ்வொருவருக்கும் உள்ள உறவுகளில் பல பெண்கள் நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்பிற்கும் உகந்தவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நம் அனபையும், ஆறுதலையும் காட்டி பெண்ணினம் வாழ வழிகாட்ட, வாழவைக்க வாழ்த்துவோம்!

- டாக்டர் சோம.இளங்கோவன்,
பிச்சாண்டார்கோவில்.

Read more: http://viduthalai.in/page-8/97309.html#ixzz3TVsfwpuW