Search This Blog

9.8.12

கடவுள் பார்ப்பன வடிவமாகவே காணப்படுகின்றதே! இதன் தத்துவமென்ன?

கிருஷ்ணன் - அர்ஜூனன் சம்பாஷணை!
கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் - இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும்

தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

அர்ஜூனன்:   ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திர னுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி வஞ்சித்து வசப்படுத்தியதாகவே காணப்படுகின்றனவே! அது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே! இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன்:   ஓ! அர்ஜூனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒரு நாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படி போடமுடியும்? அப்படியே போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும்? ஒரு சமயம் திரு. அ.இராகவன் சொல்லுவது போல் ஆண் ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படிப் பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன் னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப வனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல் லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அரு: அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்கு சற்று சொல்லு பார்ப்போம்!

கிரு: அந்த மாதிரி எழுதின தத்து வார்த்தம் என்ன வென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும், எதிரியை ஜெயிக்கப் போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப் போய் காட்டியோ, அல்லது அவனுக்குக் கூட்டிவிட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த் தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் ரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாத வன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந் திருந்தால் அதற்குப்  பொது ஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத் தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றி பெற்றான் -பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களே கூடச் சொல்லு வதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என் (விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள் . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்த தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்!

ஆதலால் வெற்றி பெறுவதற்கு வழி எனப்தைக் காட்டும் தத்துவப் பொரு ளாகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் பழக்கமும், வழக்கமும் தத்து வார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமும், அவைகளெல்லாம் சுயமரியாதைக் காரர்களுக்கல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.

அரு: சரி, சரி! இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம்! சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.

கிரு: அதென்ன சொல்லு பார்ப்போம்!

அரு: அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்னியாசி ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட்டான் என்றும், அந்தப்படியே அவன் கொடுத்தான் என்றும் சொல்லப்படுகின் றதே! அதன் ரகசியம் என்ன?

கிரு: இது தெரியவில்லையா?

அரு: தெரியவில்லையே!

கிரு: சன்னியாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ்தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்யவேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும்! அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக் கின்றது! ஆகவே அந்தப்படி சன்னியாசிக்குப் பெண்களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்னியாசி ரூபமாய் - ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்னியாசி யாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டுக்கு வந்தால் அவன் கேட்டவு டனேயே கொடுக்க வேண்டும் என்பதற் காகவே அதாவது இந்த சன்னியாசி - சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்து விடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக் காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

தவிரவும், குருசாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப்பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்து கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்தந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், சிலர் தெரி யாதது போலவே காட்டிக் கொண்டிருக் கிறாகள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும், மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

அரு: சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்கு கின்றாயா?
கிரு: என்ன அது! சொல் பார்ப்போம்!

அரு: அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான புரட்டான காரியங் கள் செய்யவேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாகக் காணப்படுகின்றதே! இதன் தத்துவ மென்ன?

கிரு: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற் காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியா தைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காகப் பார்ப்பனர்களைத் தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.

அரு: இன்னம் ஒரு சந்தேகம்?

கிரு: என்ன சொல்லு?

அரு: கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்!

கிரு: ஆம்.

அரு: அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவா கனம், கும்பாபிஷேகம் முதலியவை செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும் கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?
கிரு: அதன் ரகசியம் என்னவென்றால், மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டு விடுவான். அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால்தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்குத் தனக்கு வேண்டியதையெல்லாம் நைவேத்தியம் செய்யச் செய்து, தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசிய மும் ஏற்பட்டது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால்தான் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்துவிடும், கடவுள் மஹிமைகளும் ஒழிந்துவிடும்.

அரு: சரி, இவை எனக்கு ஒரு மாதிரி விளக்கமாயிற்று. இன்னும் சில விஷ யங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.

கிரு: சரி.

          ----------------21-12-1930 - குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

16 comments:

தமிழ் ஓவியா said...

கோகுலாஷ்டமியா?

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!

கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?

தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.

எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?

கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?

வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?

திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!

பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?

தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?

புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.

அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர்வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.

சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வதும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.

இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?

--------------------"விடுதலை” தலையங்கம் 1-9-2010

தமிழ் ஓவியா said...

கிருஷ்ண ஜெயந்தியாம்...
அவதாரமா? ஆதிக்கடவுளா?

பிரம்மவைவர்த்த புராணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராணமாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புராணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.

பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவலோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லாமலே இருந்ததாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.

விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிலிருந்தே தோன்றினவாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.

எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!

-----------------------நன்றி:- "விடுதலை" 4-8-2008

தமிழ் ஓவியா said...

இரு கிருஷ்ணர்கள்!


டில்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதனால் அது ஒரே சாமியாகத்தான் இருந்திருக்கலாமே தவிர, டில்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது.

அப்படியிருக்க டில்லி கிருஷ்ணனை "தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டிக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே கோவிலை விட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ!

ஆனால், இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும். ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்.

ஆதலால், நாம் தமிழ்நாட்டு கிருஷ்ணனைத் தூக்கிவிட்டு இனிமேல் டில்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமெயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத கிட்டப் போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

-------------"சித்திரபுத்திரன்" என்னும் புனை பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது – "குடிஅரசு" 28-08-1927.

தமிழ் ஓவியா said...

அவதாரமா? ஆதிக்கடவுளா?

பிரமவைவர்த்த புணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராண மாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புரணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.
பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப் பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவ லோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லைமலே இருந்ததாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.

விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிருந்தே தோன்றினவாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.

எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!

---------------- நன்றி: "விடுதலை" 20-8-2008

தமிழ் ஓவியா said...

இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்

தமிழ் மொழியில் இணையத்தில் வந்த முதல் நாளிதழ் விடுதலை. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒருங்குறி (Unicode) பயன்படுத்திய முதல் இதழும் விடுதலையே.

முரசொலி நாளேட்டின் ஆசிரியர் செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் அதிமுக அரசால் எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலையங்கப் பகுதி வெற்றிடமாக அச்சிடப்பட்டது. (21.09.1992) விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தேவநேயப் பாவாணருக்கு தபால்தலை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் முதல்வர் கலைஞர் அவர்களால் கத்தரித்து டெல்லிக்கு அனுப்பப்பட்டு, அதன் விளைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஆசிரியர் கி.வீரமணி பொறுப்பேற்ற பின் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படக்கதையாக விடுதலையில் வெளிவந்தது.

உலகின் ஒரே நாத்திக நாளேடான விடுதலை தனது இரண்டாம் பதிப்பை திருச்சியில் தொடங்கியது.

சென்னை ரிசர்வ் வங்கியின் பார்ப்பன அலுவலர்கள் தீட்டுக் கழிப்பது என்ற பெயரால் நடத்தவிருந்த யாகத்தைக் கண்டித்து விடுதலை எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. இதன் பலனாக வங்கி மேலாளர் ராமசந்திர ராஜூ அவர்கள் யாகம் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். (17.11.1993)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏ.மேட்டூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவுக் கூடத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டதை மக்கள் எதிர்த்ததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து விடுதலை தலையங்கம் தீட்டியது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்தார்.
1-15 2012

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசித்தால் திருப்தி


நினைவு தெரிந்த நாளில் இருந்தே தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu இதழ்களையே படித்துக் கொண்டிருந்ததால், இணையத்தில் விடுதலை நாளிதழை வாசித்த போதோ பெரும் பிரமிப்பு !

இப்படியும் ஒரு நாளிதழ் இருக்க முடியுமா? இது சாத்தியமா? அல்லது காண்பது கனவா? எனும் நினைவே வந்தது.

பிரமிப்பு

க்கு காரணம்? வேறொன்றுமில்லை, இதுகாரும் தந்தை பெரியாரை பற்றியும், தந்தை பெரியாரின் கொள்கையைப் பற்றியும் அறியாத நிலையில் இருந்திருக்கிறோம் என்பதே பிரமிப்புக்கு ( வேதனைக்கு ) காரணம்.

இவ்வளவு நாளாக வாசித்து வந்த சராசரி இதழ்களில், தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏன் பகிரவில்லை? என்ற கேள்விதான் முதலில் வந்தது. தந்தை பெரியாரின் கொள்கைகளை விடுதலை மூலம் தெரிந்து கொண்ட பின்னரே புரிந்தது, இதுகாரும் வாசித்து வந்த சராசரி இதழ்கள், தந்தை பெரியாரின் கருத்துக்களை பரப்பவும் இல்லை; அதே வேளையில் மூட நம்பிக்கை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதும் புரிந்தது. அதாவது, பெரியாரின் கருத்துக்கள் இருட்டடிப்பு; தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு எதிர்மறையான செய்திகளைப் பரப்புவது. இப்படியாகத்தான் தமிழகத்தின் இதழ்கள் இருக்கின்றன.

எவ்வளவு காலம்தான் உண்மையை மறைத்து வைக்க முடியும் ? உண்மை ஒரு நாள் உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். யாரெல்லாம் உண்மையை மறைத்தார்களோ அவர்களைப் பார்த்து காலம் கட்டாயம் கேள்வி கேட்கும்.

வலைப்பூ எழுதத் தொடங்கிய காலத்தில், செய்திகள் தேட விழைந்த போது, கூகுளில் வந்து விழுந்ததுதான் விடுதலை எனும் அறிவுச் சுரங்கம். அன்றிலிருந்து இஇன்றுவரை வாசித்து வந்த இதழ்களான தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu போன்றவற்றை வாசிக்கும் ஈடுபாடு குறைந்து, தினமும் விடுதலை வாசித்தால்தான் திருப்தி எனும் நிலை வந்துவிட்டது.

எங்கிருந்தோ, தமிழகத்தில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் உள்ள குக்கிராமத்தில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பெரும் வங்கியில் மென் பொருள் நிபுணராகப் பணி புரியும் வாய்ப்பு அமையப் பெற்றது என்றால்? அதற்கு அடித்தளம் இட்டது திராவிடர் கழகம் ! திராவிடர் கழகம் ! திராவிடர் கழகம் !

தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் அவர்களின் தன்னலமற்ற தொண்டறமே தமிழகம் கல்வி நீரோடையில் தங்கு தடையின்றி பயணிக்கக் காரணம்.

தந்தை பெரியாரின் வாக்கின் படி, நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய குணமேயன்றி; பலனை விளைவித்தவர்கள் எதிர்பார்க்கக் கூடிய குணம் அல்ல, எனும் நிலையிலேயே திராவிடர் கழகம் தன்னலம் பாராது சமுதாய வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுகிறது.

சமூக நீதியினை நிலை நாட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 31% லிருந்து 50% ஆக உயர்ந்ததும்; பின்னர், 50% லிருந்து 69% ஆக உயர்ந்ததும் திராவிடர் கழகமே என்பதை அறியாத பலன் பெற்ற பலனாளிகள் பலரும் இருக்கிறார்கள்.

அப்படிப் பலன் பெற்ற பலரும் நன்றியைக் காட்டவில்லை. ஆனாலும் மறக்காமல், அதே வேளையில் தாங்கள் பெற்ற பலனை மட்டும் லாவகமாக மறைத்துக் கொண்டு, திராவிடர் கழகத்தை குறை கூற முனைகிறார்கள்.

அப்போதுதான் புரிந்தது, குறை கூறுவோர் பலன் பெற்றவர்கள் என்றும்; அவர்கள் நன்றியை காட்டவில்லை என்றும்; பலனுக்கு காரணமான திராவிடர் கழகமோ நன்றியை எதிர்பார்க்கவும் இல்லை என்று.

சரி போகட்டும்! குறை கூறுகிறார்களே; கூறுகிற குறையிலாவது நியாயம் நேர்மை பொது நலம் இருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்படிப் பட்ட பலன் பெற்ற படித்த மேதைகள் பலரும் இருக்கிறார்கள்.

இப்படிப் பட்ட பலன் பெற்ற படித்த மேதைகள் தங்களைப் பற்றி மட்டும் கவலைப்படும் அதே வேளையில், திராவிடர் கழகமோ, ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில், பலன் பெற வேண்டிய எண்ணற்ற மக்களின் கல்வி வளர்ச்சிக்காக, சமூக நீதிக்காக, பகுத்தறிவு வளர்ச்சிக்காக, ஜாதி ஒழிப்புக்காக, சமுத்துவ சமுதாயம் அடைய உழைத்துக் கொண்டிருக்கிறது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

- திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்

தமிழ் ஓவியா said...

வரலாறு தவிர்க்க இயலாத நாளிதழ்


வரலாறு எழுதுவோர்க்கும், வரலாற்றைப் படிப்போர்க்கும் அடிப்படையான தகவல்களை அளிப்பவை நாளிதழ்கள்தான். ஒவ்வொரு நாள் உலகின் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நாளிதழ்கள் செய்திகளை செய்திகளாக மட்டுமே தருகின்றன. ஆனால், இவற்றில் வேறுபட்டு நிற்கிறது விடுதலை நாளிதழ்.எப்படித்தெரியுமா? விடுதலை ஏடு வரலாற்றைப் படைத்த ஏடு.

தமிழக வரலாற்றை மட்டுமல்ல, இந்திய வரலாற்றை எழுதும்போதும் விடுதலையைத் தவிர்த்துவிட்டு எழுதிவிடமுடியாது. 1935 ஜூன் 1 ல் விடுதலை தொடங்கியதிலிருந்து அரசியல், சமூகச் சிக்கல்களில் முக்கியக் கருத்துகளை அளித்த ஏடாக விடுதலை விளங்குகிறது. 20 நூற்றாண்டை மாற்றி அமைத்த மானுட நேயர் பெரியாரின் கொள்கைக் கருவூலமாக அவரது கருத்துக் களஞ்சியங்களைத் தாங்கி விடுதலை வாழ்ந்துள்ளது; இன்னும் வாழ்ந்து வருகிறது.அய்யாவுக்குப் பின் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலைப் பொறுப்பேற்ற பின்னர் விடுதலை படைத்த வரலாறுகளை பட்டியல் போட்டால் அது ஆய்வேட்டை விட அதிகமாகலாம். எனவே, சிலவற்றை பருந்துப் பார்வையால் பார்க்கலாம்.1976 ல் நெருக்கடி கால அடக்குமுறையை எதிர்கொண்ட ஓரிரு நாளிதழ்களில் விடுதலை முக்கியமான ஏடு.அக்காலகட்டத்தில் தமிழர்களின் ஜனநாயகக் குரலை எழுப்பி போராடி வலம் வந்தது விடுதலை. விடுதலையை முடக்க முயற்சித்த அன்றைய மத்திய அரசின் பார்ப்பனீய நிர்வாகத்தின் நேர் நின்றது. ஒருநாளும் ஓயாமல் குரலை ஓங்கி ஒலித்தது. 1977 க்குப் பிறகு இந்திய அரசியலை மாற்ற முனைந்த முக்கிய நிகழ்வு மண்டல் குழு அறிக்கை. பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக மண்டல் குழு வெளிப்பட்டது. அந்த அறிக்கை அளித்த பரிந்துரையான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிரைவேற்ற விடுதலை எழுப்பிய குரலை இந்திய வரலாறு மறக்குமா? மறுக்கத்தான் முடியுமா? மண்டல் குழு பரிந்துரைக்காக விடுதலை எழுதிய எழுத்துகள் சீனப் பெருஞ்சுவரை விட நீளும் அல்லவா.

அடுத்த காலக்கட்டம் மிக முக்கியமானது. ஆம்... நம்முடைய தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட கோர நிகழ்வு. 1983 லிருந்து தமிழர்கள் அகதிகளாக வந்த காலம். அப்போது அவர்களுக்காக இனமான முழக்கம் எழுப்பிய ஏடு விடுதலை. அதுமட்டுமல்ல அந்தப் போர்க்களத்தில் நின்ற போராளிகளின் முகவரியே விடுதலை அலுவலகம்தானே. ஊர்வலங்கள், மாநாடுகள், உரிமை முழக்கங்கள், ஈழம் தமிழர் தாயகம் என்ற ஆதாரபூர்வ தர்க்கங்கள், ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய துணிச்சல், போராளிகளின் குரலை எதிரொலித்த எழுதுகோள் அத்தனையும் கொண்டிருந்தது விடுதலை மட்டுமே அல்லவா.

1992 பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்த பின்னர் இந்தியாவின் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மையைக் காக்கும் கேடயாமாக செயல் பட்டுவரும் நாளேடு விடுதலைதானே.அன்று தொடங்கி இன்று வரை இந்திய வரலாற்றில் இந்துத்துவாக்களின் வன்முறைகள்,பார்ப்பனீய பயங்கரவாதச் செயல்கள், அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகள் என எழுதிக்குவித்த ஆதாரக்குவியல்கள் ஏராளம்... ஏராளம்.

அய்யா பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தார். அவரே தன்னுடைய விடுதலையில் அதனை நடைமுறைப்படுத்தினார். அதன் தொடர்ச்சியை ஆசிரியர் மேற்கொண்டார். அறிஞர் குழுவை உருவாக்கினார்.அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அதன் முடிவுப்படி உகர ஊகார எழுத்துகளைக் குறைக்க புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அதனை விடுதலை ஏட்டிலேயே ஒரு தனிப் பத்தியாக தினந்தோறும் வெளியிடப்பட்டது. (தற்போது புதிய கணினி மென்பொருளுக்காக ஆய்வில் உள்ளது) 2000 க்குப் பின் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட கணினியின் அறிவுச்செல்வங்களை மட்டுமல்ல, இணையம் தரும் அறிவியல் களஞ்சியங்களை பகுத்தறிவுப்பாதையில் தினந்தோறும் அள்ளி வழங்கும் ஏடாக மணம் வீசுகிறது. இப்போது சொல்லுங்கள்...

காலம் தந்த செய்திகளை வழங்கி,காலத்தை உருவாக்கும் கருத்துகளைத் தரும் விடுதலை நாளிதழை வரலாற்றால் தவிர்க்க முடியுமா? எடுத்துச் சுவைத்தது ஒரு சில துளிகளே... அள்ளிப் பருக விடுதலையில் இருக்கிறது ஒரு கடல்.

- மணிமகன்

தமிழ் ஓவியா said...

புத்தியில் "பளிச்"

என்னைப் பொறுத்தவரையில் விடுதலையில் எல்லாமே நினைவில் நின்றவைதான். காரணம் அன்றைக்கு மன்னர்கள் காலத்தில், மனுநீதியின்படி நடந்த கொடுமைகளாகட்டும், இன்றைக்கும் பார்ப்பனியத்தை தோலுரித்துக் காட்டுவதாகட்டும் மறைக்கப்பட்ட நமது வரலாற்றை நமக்கு மீட்டுக் கொடுப்பதாகட்டும் அனைத்தும் செய்து கொண்டிருப்பது விடுதலைதான். அந்தப் பணியை ஆசிரியரின் வழிகாட்டுதலில், விடுதலை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறது.

1987 என்று நினைக்கிறேன். அம்பாசமுத்திரம் அல்லது விக்கிரசிங்கபுரத்தில் ஆசிரியர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நான் அப்பொழுது மாவட்ட உதவி ஆய்வாளர். பேசுவதை கவனிப்பது எனது பணி. அப்போது, பக்தி இருந்தால்தான் தீ மிதிக்க முடியும்னு சொல்றாங்க. கடவுளே இல்லேன்னு சொல்ற எங்க தோழர்களும் தாராளமா தீ மிதிச்சுக் காட்டுவாங்க. அதனால, தீ மிதிக்கறதுக்குப் பதிலா, பக்தி இருக்குனு சொல்லறவங்க, கரண்ட் கம்பியை புடிச்சுக் காட்டட்டும் பார்க்கலாம் என்று பேசினார். எனக்கு புத்தியில் பளிச் சென்று வெளிச்சம் பாய்ச்சியது போல ஆயிற்று. அன்றிலிருந்து இன்று வரை விடுதலை வாசகன் நான். ஆசிரியரின் பணி அரும்பணி.
- சுப்புராஜ், கோவை

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள்

விடுதலை என்று சொன்னதும் எனது நினைவில் நிற்பவை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதுகின்ற, வாழ்வியல் சிந்தனைகள். காரணம், கொள்கை சாராத பொதுவான மக்களையும் நம்பக்கம் ஈர்ப்பதற்கு வாழ்வியல் சிந்தனைகள் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. பிறகு, ஒற்றைப்பத்தி, வரலாற்றுச் சுவடுகள், இளைஞர் மலர், மாணவர் மலர், மகளிர் மலர் ஆகியவற்றைச் சொல்லலாம். காரணம் மாணவர்களையும், இளைஞர்களையும் விடுதலையின் பக்கம் திருப்புவதில் இந்தப் பகுதிகள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான விடுதலை தந்தை பெரியாருக்குப் பிறகும், தொடர்ந்து வெளிவந்து, திராவிட மக்களிடையே புதிய சிந்தனைகளை ஆழமாக எழுச்சியுடன் மேலோங்கச் செய்வதில் ஆசிரியரின் 50 ஆண்டுகால மானம் பாராத உழைப்பை, அரும்பணியை உலகெங்கிலும் உள்ள திராவிட மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.
- லட்சுமிபதி, தாம்பரம்

தமிழ் ஓவியா said...

வலுவான கருத்துகள்

தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மீது முழு நம்பிக்கையோடு விடுதலையைக் கொடுத்தார். அந்த நம்பிக்கைக்கு சிறு துளியளவும் ஊனம் நேராமல் இன்று வரையிலும் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். விடுதலை, மற்ற நாளிதழ்களோடு போட்டி போடுகின்ற வகையில் வடிவமைப்பில் மாறியிருந்தாலும் கருத்துக்களில் இன்னமும் அதே வலுவோடுதான் இருக்கிறது. எனது நினைவில் நின்றவை, ஒற்றைப்பத்தி, மயிலாடன், மின்சாரம் எழுதும் பகுதிகள், ஆசிரியருடைய உரைகள், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் அ.குமரேசன் தொகுத்துத் தரும் கட்டுரைகள் ஆகியவைதான். இன்னமும் சொல்லலாம். ஆதலால், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் வீறுநடை போடும் விடுதலைக்கு வீழ்ச்சி கிடையாது. - சித்ரா, மடிப்பாக்கம்

Thamizhan said...

ஒரு தனி மனிதனாகத் தன் வேலை,குடும்பம் இதையும் பார்த்துக் கொண்டுப் பெரியார் கொள்கைகளைப் பரப்பும் தமிழ் ஓவியா சிறந்த பண் பாடுள்ள உண்மையானத் தமிழர்.நேரில் பழகுவதற்கு இனிமையானவர்,அமைதியானவர்.

இவ்வளவு எழுதியும் இன்னும் "படித்த" "பட்டம் பெற்ற"த் தமிழர்கள் மூட நம்பிக்கையிலும், புரியாத மந்திரத்தை ஓதும் கடவுளின் "மாமா"க்களிடம் பயந்து,மயங்கி இருப்பதைப் பார்த்தால் விவேக் சொன்ன 'இன்னும் நூறு பெரியார் வந்தால் கூட உங்களைத் திருத்த முடியாதுடா' தான் இணையத்திலும் தெரிகிறது.
இன்னும் நூறு தமிழ் ஓவியாக்கள் இணையத்திற்குத் துணிந்து வரட்டும். ஆம்! அது வரைத் தமிழ் ஓவியா அய்யாவைப் பாராட்டுவோம், சிலக் கூழைக்கும்பிடு பார்ப்பனர்கள் பல பெயரிலே வந்து செய்யும் அநியாயங்களுக்குப் பதில் கொடுப்போம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: ஹாங்காங்கிலிருந்து வாழ்த்து

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாது காப்பு மாநாடு வெற்றி பெற ஹாங்காங் வாழ் தமிழர்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொள்கிறேன். ஈழத் தமிழர் களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும், இப்பிரச்சினையில் உலக நாடு களின் கவனத்தைக் கவரவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என நம்புகிறேன். நன்றி! அன்புடன்ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்

குறிப்பு: விடுதலை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட செய்தி.

தமிழ் ஓவியா said...

செய்திகளும் சிந்தனைகளும்

செய்தி: கறுப்புப் பணத்தை மீட்க வலி யுறத்தி பாபாராம்தேவ் அடுத்த கட்ட உண்ணா விரதப் போராட்டத்தை டில்லியில் இன்று துவக் குகிறார்.

சிந்தனை: இவர் மீதே வரி ஏய்ப்புக் குற்றம் என்ற வாள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் ஒரு கேடா?

செய்தி: பெண்ணிடம் திருமணம் செய்து கொள் வதாகக் கூறி தவறாக நடந்து கொண்ட பாதிரி யார், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கைது!

சிந்தனை: பாவ மன்னிப்பு என்ற ஒன்று இருக்கும்வரை எந்தப் பாவத்தையும் செய்ய யார் தான் தயங்குவார்கள்?

செய்தி: குடிதண்ணீர் பிரச்சினைக்காக சென்னை - பெரம்பூரில் கத்தியால் அண்ணனைக் குத்திக் கொன்றான் தம்பி.

சிந்தனை: மூன்றாவது உலக யுத்தமே தண்ணீருக் காகத்தான் வரும் என் கின்றனர்.இது அதற்கு முன்னோடியோ!

செய்தி: அரசியல்வாதி களைத் திட்டுவதே அன்னாஹசாரே குழுவின் குறிக்கோள்.- சிவசேனா தலைவர் பால்தாக்கரே

சிந்தனை: இவர் மற்றவர்களைத் திட்டாத திட்டா? சிறுபான்மையின மக்களை என்ன பாடுபடுத் தினார்? ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை ஒன்று போதாதா?

செய்தி: நண்பர்களுக் கும், உறவினர்களுக்கும் ரக்ஷாபந்தன் நாளில் ராக் கிக் கயிறைக் கட்டுவார் கள். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரோ மரங்க ளுக்கு ராக்கி கட்டினார்.

சிந்தனை: மனிதர்கள் தான் மரங்களாகி விட் டனர்; மனிதர்களுக்கு நல்லது செய்யும் மரங் களுக்கு ராக்கிக் கட்டு வது சிறப்பானது என்று நினைத்திருக்களாம். 9-8-12

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் நலமுடன் தாயகம் திரும்பினார்


அமெரிக்கப் பயணத்தில் எதிர்பாரா வகையில் உடல் நலம் பாதிக் கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரிய மருத் துவ உதவி பெற்று இன்று விடியற்காலை நலமுடன் தாயகம் திரும்பினார். மேலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: இலங்கை அரசின் கூற்றுக்கு டெசோ தலைவர் கலைஞர் மறுப்புசென்னை, ஆக. 9- டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறி இருப்பதும் கற்பனையான குற்றச் சாட்டின் அடிப் படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங் களை உயர்த்துவதற்காகத்தான் இந்த டெசோ மாநாடு. இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர் களோ, உலகத் தமிழர்களோ யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-

இலங்கை அரசின் சார்பாக 6.8.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டினை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் தெரி வித்திருப்பதாகவும், அந்த அரசின் சார்பில் ஊடகத் துறை அமைச்சர் ஒருவர் இந்த மாநாட் டில் பங்கேற்போர் மீது அரசு கவனம் செலுத்தி யுள்ளதாகக் கூறியிருப் பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

கற்பனையான குற்றச்சாற்று

இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப் பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப் படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங் களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது. இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற் காகவே இந்த டெசோ மாநாடு நடை பெறு கிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப் பட்டுள்ள இந்தத் தவறான பிரச்சாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர் களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் தமது அறிக் கையில் தெரிவித்துள்ளார்.